All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின்"கண்ணில் வைத்து காத்திடுவேன்"-கதைத் திரி

Status
Not open for further replies.

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே!!
நம்ம கதை ஹீரோ அண்ட் ஹீரோயின்..
11316

11317

நல்லா இருக்காங்களா செல்லோஸ்..
உங்க கருத்துக்களுக்காக ஆவலாய் மீ வெய்டிங்....
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே!!!
தனுஷ் மேல் என்ன கோபம் செல்லோஸ்.. வேண்டவே வேண்டாம்னு சொல்லிட்டிங்க..
ஓகே.. சோ ஹீரோ மாற்றம்...
11363

இவரு தாங்க ஹீரோ...
இதுக்கு மேல மாத்திடாதீங்கோ ப்ளீஸ் செல்லோஸ்....
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே!!
உங்களுக்காக "கண்ணில் வைத்து காத்திடுவேன்" கதையிலிருந்து ஒரு குட்டி டீசர்...
படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க செல்லோஸ்..
இந்த மொமண்ட் உங்க வாழ்க்கை யிலும் வந்திருக்கா சொல்லுங்கோ...
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர் 2:

"நீங்க 'ஐ லவ் யூ' ன்னு என்கிட்ட சொல்லி எத்தனை மாசமாச்சு தெரியுமா?" ஏக்கம் இழையோடினாலும் ஆத்திரம் தெறிக்க கேட்டாள்.
"அது..அது மா ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட..." எப்படி சமாளிப்பது என புரியாமல் தத்தளிக்க,அதற்காக சும்மாவேணும் எதையாவது கூறி சமாளித்து விடமுடியாது.. நாள் கிழமை நேரத்தோடு மிகச் சரியாக கூறி அவனை கதிகலங்க செய்து விடுவாள்.
"ம்ம்..சொல்லுங்க" என மீண்டும் உந்த
அவன் முகம் காட்டிய நவரசத்திலேயே அவன் பதிலை புரிந்து கொண்டவள்,
"எனக்கு தெரியும் உங்களுக்கு இப்பல்லாம் என் மேல லவ்வே இல்லை" என எப்போது வேணாலும் வெடித்துவிடுவேன் என்பது போன்ற குரலில் பேச,
அவன் தான் "ஙே?!" என நின்றான்.

********************
அதிர்ச்சியில் கைப்பேசி நழுவி கீழே விழுந்தது.
அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்த கார்த்திக்,"என்ன ஆச்சு ?" என்றான் அவள் அதிர்ந்த தோற்றம் கண்டு..
"அது நாம அந்த ஃபினான்ஸ் கம்பெனில இன்வெஸ்ட் பண்ண பணம் லாக் ஆயிடுச்சாம்..திரும்ப வரது கஷ்டம்னு சொல்றாங்க.."
வார்த்தை தந்தியடித்தது அவளுக்கு...
அவனுக்குமே அதிர்ச்சி தான்..
"நீங்க எவ்வளவோ சொன்னீங்க வேணாம்னு, நான் தான் கேட்கவேயில்ல..உங்க பிஃப்(pf) பணத்த எடுத்து அதுல போட்டு..அய்யய்யோ.." என முகத்தை மூடிக்கொண்டு அழ,
அவள் கையை பிடித்து தடுத்து,"மாலு அழாத.." என்றான்.
அவள் மேலும் குலுங்கி அழவும்,"ம்ப்ச்.. அழாத எல்லாம் சரியாயிடும்" என சமாதானப்படுத்த அவள் நிமிரவேயில்லை..
"இங்க பாரு"
"....."
"அம்லு" என அழுத்தமாய் அழைக்க,
அவள் எப்போதும் கேட்க ஏங்கும் அழைப்பு இப்போதும் அவளை நிமிரவைத்தது.
"பயப்படாத நாம இத சேர்ந்து ஃபேஸ் பண்ணலாம்,நான் உன்ன நம்புறேன்" என அவள் கைகளை தன் கைகளுக்குள் பொத்தி உலகத்தின் நம்பிக்கை எல்லாம் குரலில் ஏத்தி மனைவியின் கண்களை பார்த்து கூறினான்.
'இந்த ஒர் வார்த்தைக்கு இணையாகுமா ஆயிரம் ஐ லவ் யூ கள்'
திகைப்பு மாறாமல் கணவனை நோக்கினாள்..
 
Status
Not open for further replies.
Top