mekha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே.....
ஒரு பெண்ணினது ஒருதலைக்காதலின் நினைவுகளை தலையாயமாய் கொண்டு தன்னவனிடம் காதல் செய்யும் நினைவு நிழற்படமே " மயக்கும் அழியா ஆழி புயல் ".
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தவறாமல் கடந்து வருகின்ற பாதை "காதல் " . அது வருகின்ற வழிதான் விசித்திர வித்தியாசமாய் இருக்கும். அவ்வாறுதான் கதைநாயகியின் கதாபாத்திரமும். எந்த நிலையிலும் நம்மை தூக்கி கிடாசி விட்டாலும் தன்னவன் தந்த இனிய நினைவுகள் அவளை வாழ வைக்கும்.
நன்றியுடன்
மேகாராஜன்
மயக்கும் அழியா ஆழி புயல்:
காலையில் சுப்ரபாதம் வானொலியில் பாட, வீடே சாம்பிராணி புகை மணக்க திருப்பாவையை உதடுகள் முணுமுணுக்க தண்ணீர் சொட்டும் கேசநுனியில் முடிச்சிட்டு மஞ்சள் முகத்தில் சிவப்பு பொட்டிட்டு மேலே சந்தனக்கீற்றும் அவரது முகத்தில் சாந்தரரேகையோட சமையலறையில் கணவருக்கு காபி கலந்து கொண்டிருந்தார் ஜானகி. வாக்கிங் போய்விட்டு வந்த கணவர் ராஜனின் கைகளில் காபியைக் கொடுக்க தன் மனையாளிள் தினசரி லட்சுமி கடாட்சய தரிசனத்தை உள்ளுள் ரசித்தவர் காளியின் சுவையில் மனைவியின் வதனம் மறந்தூபோனது. அவருக்கு எதிர்த்தாற்போல் சோபாவில் தனக்கான காபியை உறிஞ்சியவாறு தினசரி நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தார் ஜானகி. அப்போது ராஜன் நினைவு வந்தவராய் செல்லமகள் எங்கே என வினவ, " இன்னும் தூங்குது கழுத.... எல்லாம் உங்களாலதான் இப்படி பண்றா நீங்க கொடுக்கும் இடம் " என்று தாயாய் மகளை சாடினார். ஆரம்பித்து விட்டாள் என நினைத்தவாறு குளிக்கச் சென்றார். அங்கே ஜானகி, ராஜன் தம்பதியனரின் ஒரே செல்லமகள் விஷாலா கனவில் தன் காதல் ராட்சசனுடன் டூயட் பாட நிஜத்தில் அவளது இதழ்கள் தன்னவனின் நினைவில் அழகாய் மல்லிமொட்டுபோல் விரிந்தது. 7.30 மணி போல் வெகுசாவகாசமாய் எழுந்தவள் முந்தைய நாளில் தன்னவனான மிருத்யுஞ்ஜெயன் கறுப்பு நிற சட்டையில் அலைந்த கேசத்தை இயல்பாய் விட்டு தேன் நிற கண்களில் மையல் காட்டி மென் இதழ் புன்னகையுடன் எடுத்த சுயமியை தன் முகநூலில் பதிவேற்றியதை அவனறியாது புகைப்படத்தை சுட்டுவிட்டாள் விருஷாலா. தன் தொலைபேசி முகப்பு படத்தில் சிரித்த தன் ராட்சசனை கண்களால் பருகி இதழால் முத்தமிட்டு, " குட்மார்னிங் டா ராட்சசா....." மானசீகமாய் தன்னவனை அணைத்து விட்டு படுக்கையை விட்டு எழுந்தாள் விஷாலா.
விஷாலா ஒரு பிரபல நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றுகிறாள். அன்பு தாய் தந்தையரின் செல்லமகள். ஏனோ இவர்களின் பாசத்தை விட காதல் என்னும் அன்பு வலையில் அந்த மான் தானாகவே வலிய சென்று அகப்பட்டுக் கொண்டாள். ஆம்..... முகநூலில் கிடைத்த பொக்கிஷம் தான் அவளது கண்ணாளன் மிருத்யுஞ்ஜெயன். அவனை இதுவரை விஷாலா நேரில் சந்திக்கவில்லை . ஆனாலும், மனதுள் மானசீகமாய் நாள்தோறும் அவனுடன் உறவாடுவாள் அம்மாது . அவனது, "ம்ம்க்க்கும்ம்...." என்ற அலட்சிய முக்கல் கூட அவளிடத்தில் மிருத்யுஞ்ஜெயனை அதிகம் ரசிக்க வைக்கும். விஷாலாவின் காதலை அவளது ராட்சசன் நன்கு அறிவான். ஆனாலும் அவளை ஏற்றுக்கொள்ள அவன் மனம் மறுக்கிறது. ஏனென்றால் அவனுக்காக வேண்டி அவனது முறைப்பெண் காத்திருக்கிறாளே. அவர்களது சம்பிரதாயப்படி முறைப்பெண் இருந்தால் கட்டாயம் பெண்ணெடுக்க வேண்டும் இல்லையேல் அந்தப்பெண்ணை நல்லதொரு இடத்தில் தங்களது செலவில் நிரம்ப சீர் செய்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும். ஆனால், அவனது முறைப்பெண் தன் கல்லூரி பருவத்திலிருந்தே மிருத்யுஞ்ஜெயனை நினைத்துக் கொண்டு வருகின்ற நல்ல வரன்களை புறந்தள்ளி வருகிறாள். மிருத்யுஞ்ஜெயன் அத்தை மகளையே மணம் முடிக்க வேண்டும் என ஆசை கொண்டான். ஆனால், விதி அதன் நிலையிலிருந்து மாறுமோ?....மாறாதே காலன் கூட பாவம், புண்ணியக் கணக்கு பார்த்து இரக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், விதிக்கு அதெல்லாம் முக்கியமல்லாது தன் தர்மத்தை தானே நிலையாக்கும்.
விஷாலா தன்னவனின் இனிய நினைவுகளுடனே குளித்து பணிக்கு செல்ல வந்தாள். எப்போதும் போல் காபி மட்டும் குடித்துவிட்டு உணவு உண்ணாமல் ஜானகியிடம் அர்ச்சனை வாங்கிக் கொண்டே தன் பின்னாடியே துடைப்பத்துடன் வந்த ஜானகிக்கு பழிப்பு காட்டிவிட்டு , " ஜானு செல்லம்..... சிறுத்தை சிக்கும் சில்வண்டு சிக்காது .... ஓடிரு விஷா.....வரட்டுமாடி என் செல்ல ஜானுக்குட்டி " என்று கஞ்சா கறுப்பு டயலாக்கை கூறிவிட்டு தன் ஸ்கூட்டரில் சிட்டாய் பறந்துவிட்டாள். அவளை துரத்திவந்த ஜானகி "பேர் சொல்றது மட்டுமில்லாம டி வேறயா சொல்ற. வாடி... சாயங்காலம் விளக்கமாத்தால மந்திரிக்கிறேன்...." என்று அர்ச்சித்தார். மனைவி, மகள் அலப்பறைகளை கண்ட வள்ளியப்பன் ஏதேனும் சொல்லப்போய் மனைவியிடம் யார் வாங்கிக் கட்டிக்கொள்வது என நைசாக நழுவிவிட்டார். சிறிது தூரம் சென்றவள் வண்டியை சாலையோரமாக நிறுத்தி விட்டு மிருத்யுஞ்ஜெயனுக்கு கால் செய்தாள். இது அவளது அன்றாட வழமையாயிற்று. அன்றாட நிகழ்வுகளை ஒளிவுமறைவின்றி அவனுடன் பகிர்ந்து கொள்வதில் விஷாலாவிற்கு ஒரு ஆத்மதிருப்தி. மூன்றாவது ரிங்கில் கால் அட்டெண்ட் செய்தவன்,"சொல்லுங்க மேடம்....ஆபீசுக்கு கிளம்பியாச்சா?..."
"ம்ம்.....கிளம்பிட்டேன்டா....தெரு தாண்டி வந்துதான் உனக்கு கால் பண்றேன்....என்ன பண்ற"
" நான் படிச்சிட்டு இருக்கேன்"
"ம்ம்ம்....ஓகேடா "
"சாப்பிடாடியாடி...."
அய்யய்யோ திட்டப்போறானே என்ன செய்வது என நாக்கை கடித்துக் கொண்டிருந்தவளிடத்தில் அமைதியே அவனுக்கு பதிலாக வர கடுப்பாகி விட்டான் மிருத்யு.
" அப்போ மேடம் சாப்பிடல....அப்படித்தானே.... ஏன்டி அறிவேயில்லையா....உன் உடம்ப நீதான் பாத்துக்கனும். அப்புறம் அங்க வலிக்கிது இங்க நொட்டுதுனு அழ வேண்டியது.....உன்னையே ஒழுங்கா பாத்துக்க முடியாதவ எப்படி உன்கூட இருக்கிற மத்தவங்களை நல்லா பாத்துக்க முடியும்" என மடமடவென பொரிந்து தள்ளிவிட்டான். அதில் இலேசாக கோபம் வர,
"நான் அதெல்லாம் நல்லா பாத்துப்பேன் "
என்று முறிக்கக் கொள்ள,
" ம்ம்க்க்கும்ம்.....கிழிப்பீக. வாயில ஏதாச்சும் வந்துறப்போது காலையில் கடுப்பு ஏத்திக்கிட்டு..இப்போ நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது போய் சாப்பிட்டு போட்டோ அனுப்புற " கடிந்துக் கொண்டே காலை கட் செய்தான்.
தன்னவனின் அக்கறையானப்பேச்சு தனக்குள் பனிமழை பொழிய செய்தது. அவளது பெற்றோர் காட்டும் அக்கறையில் இந்த உணர்வு ஏனோ அவளுக்கு ஏற்படவில்லை. பெற்றோரிடத்திலும் கண்டிப்பு தான் இவனிடத்திலும் கண்டிப்பு தான். ஆனாலும், அவனது கோபம் கூட அவளுக்கு அப்படியொரு இன்பபோதையை தந்தது என்பது என்னவோ உண்மைதான்.
அலுவலகம் சென்று முதல் வேளையாக கேண்டீன் சென்று இரண்டு இட்லி வாங்கி தான் உண்பதுபோல் ஒரு சுயமி எடுத்து அனுப்பியபிறகே அவளுக்கு சற்று நிம்மதியாயிற்று. அதற்கு ரிப்ளேயாக
"இப்போது தான் நீ குட் கேர்ள் "
என்றவனுக்கு லவ்லி எமோஜியை அனுப்பிவிட்டு வேலையை கவனித்தாள் விஷாலா .
இப்படியே நாட்கள் சிறுசிறு செல்லக்கோபங்களும் சமாதானங்களுமாய் ஆனந்தமாக சென்றது. ஒருநாள் விஷாலா மிருத்யுவிடம் ," மித்துக்கண்ணா....நான் லவ் பண்ணலாம்னு இருக்கேன். நீ என்ன நினைக்கிற...."
" உன் வாழ்க்கை நீ தான் முடிவு பண்ணனும் என்கிட்ட என்ன ஓபினீயன் கேக்குற மெண்டல் " அவனது பட்டும் படாத பேச்சு அவளிடத்தில் வலிக்க செய்தது.
" ஓகேடா "
என்று சொல்லிவிட்டு மொபைலை அணைத்து விட்டாள். அந்த நேரத்தில் விஷாலா அலுவலகத்தில் முதலாளியின் மருமகனால் பல பெண்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளானார்கள். எப்போதும் விஷாலாவிடம் ஒரு சகோதரி என்றே எண்ணி மரியாதையாக நடந்து கொள்பவன் அன்று குடித்துவிட்டு விஷாலாவிடம் எல்லைமீறி நடக்க பயத்தில் நடுங்கிப்போனாலும் எப்படியோ ஒருவழியாக அவனிடமிருந்து தப்பியவள் வீடுவந்து சேர்ந்தாள். வந்ததும் மிருத்யுவிடம் எப்படி சொல்வதென்று தெரியாது இருந்தவள் மாலைமாலையாக கண்ணீர் கொட்ட அவனுக்கு குறுஞ்செய்தி வழியாக சொல்லிவிட்டு இரவு உண்ணாமல் அழுதே கரைந்தாள். அவள் எப்படியும் சாப்பிடாமல் அழுவாள் என தெரிந்தவன் இரவு கால் செய்தான். அவனிடம் பேசவே சங்கோஜமாக இருந்தது. படிக்கும் போது ஒருத்தன் கூட அவளை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தது கிடையாது என்பதால் இது அவளுக்கு பெருத்த அடியாக போக உள்ளுக்குள் கூனிக்குறுகிப் போனாள். தன்னிடம் சகோதரனாக பழகியவன் இப்படி நடந்தது ஆண்களிடத்து இருந்த மரியாதை சற்று சரியத் துவங்கியது. அந்த மனநிலையில் மிருத்யுஞ்ஜெயனிடம் தாம் பேசினால் ஏதாவது காயப்படுத்தி தானும் காயப்பட்டு விடுவோம் என அஞ்சினாள். ஆனால், அவனோ விடாது அழைக்க வேறுவழியில்லாது அட்டெண்ட் செய்து,
"ஹலோ....."
" சாப்பிடாடியாடி "
"ம்ம்ம் "
"கிச்சன் போடி"
"ஏன்டா "
"போ சொல்றேன் "
இருக்கும் நிலையில இவன் வேற படுத்துறானே என தன்னைத்தானே நொந்துக் கொண்டவள் மறுக்காமல் தன் கால்கள் அவன் பேச்சைக் கேட்டு சமையலறை சென்றது.
" சமையக்கார அம்மா என்ன சமைச்சிருக்காங்க?..."
நம்மை சாப்பிட வைக்க தான் கேட்கிறான் என்பது புரிய "இப்போ நான் சாப்பிட்டே ஆகணுமா மித்து "
"ஆமா...அந்த எச்சை நாய்க்காக நீ ஏன்டி சாப்பிடாம இருக்கனும்....நான் வீடியோ கால்ல வர்றேன்...நீ சாப்பிடு....நான் உன்கூட தான்டி இருக்கேன். பயப்படாத"
அவர்கள் இருவருக்கும் இடையே பல மைல் தூரம் இருப்பினும் அவனது நானிருக்கிறேன் சொல் பலமடங்கு தைரியத்தை தந்தது விஷாலாக்கு. சொன்னபடி வீடியோ காலில் வந்து அவளை சாப்பிட வைத்து ஆறுதல் கூறி தேற்றினான் மிருத்யுஞ்ஜெயன். அவளது நலனில் இவ்வளவு அக்கறை கொண்டவன் தன்னருகில் இல்லையே என்ற ஏக்கம் விஷாலாவை வாட்டியது.
விஷாலாவை வேலைக்குச் செல்ல வேண்டாம். வேற வேலை பாரு என கூறினான் மிருத்யு. அதற்குள் அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் முதலாளியிடம் புகார் செய்தனர். விஷாலா சொந்தக்காரப் பெண் அதுலயும் சகோதரி முறை வேண்டியவளிடம் இப்படி நடந்துக் கொண்டதை எண்ணி முதலாளி என் முகத்தில் விழிக்காதே அவனை திட்டி வெளியேற்றினார். தான் இப்போது வேலையை விட்டால் நல்ல குணம் கொண்ட முதலாளி மனம் நோககூடும் என்றெண்ணிய மிருத்யுவின் பேச்சை கேட்காது தொடர்ந்து வேலை செய்தாள்.
இவள் எல்லாம் பட்டால்தான் திருந்துவாள் என்று எண்ணியவன் அவள் போக்கிலேயே விட்டுவிட்டான்.
தொலைத்தூர காதல் செய்யும் நண்பர்களை "போனிலே குடும்பம் நடத்தினால் நிஜத்தில் என்னடி பண்ணுவீங்க?...." என்று பரிகாசம் செய்தவள் தானும் அதைத்தான் செய்கிறோம் என்பதை ஏனோ மறந்துப்போனாள்.
இப்படியே நாட்கள் அழகாக நகர விஷாலாவின் காதல் மட்டும் செம்மையுற்று செழிப்பாய் வளர்ந்தது. ஒருதரம் போனில் உரையாடும் வேளையில்,
"என்னடா பண்ற"
"பாஸ்ட்புட் கடைல நண்டு சூப் குடிக்கிறேன்டி.....உனக்கு வேணுமா?....."
அதைக் கேட்டதும் நமட்டுச் சிரிப்பு சிரித்தவளை குழப்பத்துடன் என்னவென்று கேட்க அவளிடமிருந்து சிரிப்பே பதிலாக வர ஆடியோ காலை கட் செய்து விட்டு வீடியோ காலில்,
"எதுக்குடி சிரிக்கிற"
"ஒண்ணுமில்ல ப்ரெண்ட்ஸ் சொன்னது ஞாபகம் வந்துருச்சு "
"அப்படி என்ன சொன்னாங்க உன் ப்ரெண்ட்ஸ் "
"நண்டு சூப் பத்தி "
"ஓஓஓஓஓஓ"
மேலும் விஷாலா கமுக்கமாய் சிரிக்க மிருத்யு கடுப்பாகி,
"அடியேய்.....என்னனு சொல்லிட்டு சிரியேன்டி "
அவனது கோபத்தை உள்ளுள் ரசித்தவள்,
"நண்டு சூப் சாப்பிட்டா.....ஏதோ ஒண்ணு சொல்வாக...."
"என்னனு "
".................. இந்த திரைப்படத்தில் வரும் காமெடி சீன் பாரு.....உனக்கு புரியும் "
"ஏன் மேடம் சொல்ல மாட்டீகளா "
"போடா.....வெட்கமா இருக்கு "
"பார்ரா.....வெட்கமெலாம் வருமாடி உனக்கு "
"அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் எங்களுக்கும் இருக்கு பிரதர் "
"பிரதரா......???"
"தெரியாம சொல்லிட்டேன் "
"ம்ம்க்க்கும்ம் ஆமா அதெல்லாம் பொம்பளப்புள்ளக்குல இருக்கும் உனக்கு இருக்காதே "
"டேய் நானும் பொம்பளப்புள்ள தான்டா "
"ஓ.....நீ பொம்பளப்புள்ளயா அப்பப்போ சொல்லு....இல்லனா தெரியாது "
என்று கூறியவன் விஷாலா கோபத்தில் முறுக்கிக் கொள்வதை கண்டு மேலும் சத்தமாய் நகைத்தவன்
" சரி சரி ஆங்கிரிமோடுக்குபோய்டாத....நண்டு சூப் சாப்பிட்டா என்னனு சொல்லு "
" போடா சொல்ல மாட்டேன் "
சிரித்தபடி நாணத்துடன் காலை கட் செய்தவளின் முகத்தில் சந்தோஷம் அப்பிக்கிடந்தது.அதே சந்தோஷம் மிருத்யுஞ்ஜெயனிடமும் இருந்ததா என்பது ஆண்டவனுக்கே தெரியும். நாளடைவில் மிருத்யுஞ்ஜெயனுக்கு விஷாலாவிற்கு தன்மீது உண்டான காதலை கண்டுக் கொண்டான். விஷாலாவின் தீவிரக்காதல் அவனுக்கு பயத்தை தர மெல்ல அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் குறைந்துபோக தவித்துப் போனாள் விஷாலா. ஏன்
பேச மாட்டேன்கிறாய் என்று ஏதேனும் காரணம் கூறி அவளை முற்றிலும் தவிர்த்து விட்டாள்.
நாளடைவில் அவன் வேலைக்குச் செல்ல வெளிநாடு செல்ல விசா வர தன் அத்தை மகளிடம் சொல்லிவிட்டு பயணம் மேற்கொண்டான். ஏனோ விஷாலா நினைவு அச்சமயத்தில் அவனுக்கு வரவில்லை. எப்படியோ அதை தெரிந்து கொண்டவள் அவனுக்கு சீக்கிரம் வேலை கிடைச்சு வெளிநாடு போகனும்னு எத்தனை தெய்வங்களிடம் வேண்டியிருப்பாள் .ஆனால் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றுவிட்டானே என்ற சோக தவிப்பில் மூழ்கி ஏக்கத்தில் முடிந்தது. எத்தனையோ முறை அவனிடம் பேச முயற்சிக்க அவனோ அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனது புறக்கணிப்பை அவளால் தாங்க இயலாது துவண்டாள் அந்த மங்கை. அதற்கும் ஒரு காரணம் கூறினான்," என்னிடம் நெறைய பெண்கள் ப்ரபோஸ் செய்துள்ளனர். நான் அத்தை மகளைத் தான் கட்டிக கொள்வேன். நீ என்னை காதலித்த பெண் உன்னிடம் திரும்பவும் தோழியாக எண்ணி பேச முடியவில்லை. ஆதலால், வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள். அதுதான் அனைவருக்குமே நன்மை. "
"காதல் இல்லை....நட்பு இல்லை.....ஆனால் இலவசமாக அக்கறையான ஆலோசனை மட்டும் தாராளமாக வழங்கலாமாக்கும் " என உள்ளுள் கடுகடுத்தவள்,
"இதுதான் உன் முடிவா "
"ஆமாம் "
" சரி "
அத்தோடு அவளுடனான பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் அந்த நல்லவன். ஆனால் விஷாலாவின் காதலுக்கு முடிவிலாது அவனை இன்னும் அதிகமாகவே காதலித்து வருகிறாள். யாரேனும் என்ன நம்பிக்கையில் இன்னும் காதலிக்கிறாய் என கேட்டாள்,
" என்னை மயக்கும் ராட்சசன் அவன்..... வருவான் ஒருநாள் எனைத்தேடி.....நம்பிக்கை இருக்கு " அழகாய் புன்முறுவலுடன் பதிலளித்துவிட்டு கடந்து செல்வாள்.
அவளது பதிலில் சிலர் பைத்தியம் என்று முணுமுணுத்து விட்டு செல்வர். அவளது காதுபட கேட்டாலும் உள்ளூர முள் தைத்ததுபோல முணுக்கென்ற வலி ஏற்பட்டாலும் வலியின் வேதனையை முகம் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வாள்.
என்றைக்கு இருந்தாலும் தன்னவன் தன்னிடம் வந்து சேருவான் இல்லையேல் அவனது அமிர்த நினைவுகளுடனே இனிமையாக வாழ எண்ணி வாழுகிறாள் விஷாலா என்னும் நங்கை. அவளது வாழ்வில் காதல் ஆழியில் சுழலும் புயல் போல் அழியா நினைவுகள் தந்துவிட்டே சென்றது.

Last edited: