All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புதிய முன்னோட்டம் & புத்தகம்

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே...


எல்லாரும் எப்படி இருக்கீங்க...? முதலில் மன்னிச்சு... எல்லாருக்குமே ongoing கதை நிறுத்தப்பட்ட கோபம் இருக்கும் இல்லை என்று சொல்வதற்கில்லை... இந்த லாக்டவுன் பிரச்சனையால் அனைத்தும் சொதப்பலாகி விட்டது... ஆனால் நிச்சயம் புத்தகமும், சைடிலும் கதை பதிவிட படும் அதுவரை பொறுமை காக்கவும்.


உடல் நிலை மேல் கவனம் செலுத்த வேண்டியதுதான் இந்த இடைவேளைக்கான காரணமாக போயின... தலைவலி இப்போது சற்று மட்டுப்பட்டிருக்கிறது... இனி அடுத்த கதையை தொடங்க இருக்கிறேன் இது முழுக்க சைடில் இடற்பாடில்லாமல் முழுதாக பதிவிடபடும். உங்கள் ஆதரவை தரவேண்டும் மக்களே. அடுத்த புது கதைக்கான டீஸர் பதிவிடுகிறேன் படித்துவிட்டு கருத்துக்களை பகிருங்கள்.


கண்ணிலே காதல் கனா!!

முன்னோட்டம் 1:

“நீ இல்லைன்னா என் வாழ்க்கை வெறும் பூஜ்யம் தீப்தி” என்று மனதில் இருந்த காதலை கண்கள் பிரதிபலிக்க உணர்ச்சிகள் தத்தளிக்கும் உடல் பரிபாஷையில் எப்படியேனும் அவளிற்கு தன் காதலை உணர்த்தி விடும் வேகத்தில் பேசினான்.

அவனின் உணர்வுகளை உயிரை ஊடுருவி தாக்கினாலும் குடும்பம் என்னும் கட்டுக்காவலில் அவள் சிக்குண்டுவிட்டிருப்பதை அவனிடம் எப்படி எடுத்துரைப்பது என்று தெரியாத கையாலாகாதனத்துடன் நின்றிருந்தாள்.

“என்னை மன்னிச்சிருங்க தீபன் எனக்கு வேற வழியில்லை நிச்சயம் உங்களுக்கு நல்லா பொண்ணு பொண்டாட்டியா கிடைப்....” என்று பேசிக்கொண்டே சென்றவளின் தொண்டையில் வார்த்தைகள் சிக்குண்டு தடைப்பட்டது அவள் கண்கள் கூட லேசாக கலங்கியதோ ... ஆனால் அவன் முன்பு அதை காண்பிக்கும் விருப்பமில்லாது தன்னை தானே தேற்றிகொண்டு தொடர்ந்து பேச முயற்சித்தாள்... முயற்சிக்க முடிந்ததே தவிர செயலாற்ற முடியவில்லை மொழி அறியா மழலை போன்று வார்த்தை தெரியாது திண்டாடியவள்...

“நான் கிளம்பறேன் என்னை மறந்துவிடுங்க” என்று அவள் அமர்ந்திருந்த மேஜையில் இருந்த தன் கைப்பையை எடுத்துக் கொண்டு நகர முற்பட... அவள் கைகளை அவன் இறுக்கி பிடித்திருந்ததில் அடுத்த அடியை தொடர முடியாது போனதில் அவள் விழிகள் அவன் விழிகளுடன் மோதி இருவரின் பார்வையும் காதலுடன் உரசி நின்றதும்....

“சூப்பர் ஷாட்!” என்ற குரலுடன் கரகோசமும் சேர்ந்து ஒலித்தது...
இயக்குனரின் குரலில் அவன் அவளின் கைகளை வெடுக்கென்று இழுத்துக் கொண்டவன் அத்தனை நேரம் முகத்தில் தேங்கியிருந்த காதல் உணர்ச்சிகள் துணி கொண்டு துடைத்தார் போன்று மறைந்திருக்க அவன் விழிகள் அவளை நோக்கி வெறுப்பை உமிழ்ந்தது. அதில் அவளின் மனம் அடிபட்ட பறவையை போன்று சுருண்டு விண்டது.

“வாவ் சேனா சும்மா பின்னிட்டீங்க... நான் நினைச்சதையும் விட நல்லா வந்திருக்கு... யூ டூ மயூரன்... அப்படியே இயல்பா இருக்கு உங்க உணர்ச்சிகளும் வார்த்தைகளும்” என்று பாராட்டு பாத்திரம் வாசித்தார் இயக்குனர் செல்வபிரகாஷ்.
ஆனால் இருவரின் முகத்தில் மகிழ்ச்சி இல்லாமல் வேறு இரு உணர்ச்சிகளை தான் பிரதிபலித்தது!
அவளிற்கோ இந்த கற்பனைகாட்சி நிஜமாக இருந்திருக்ககூடாதா என்று ஏங்கியது... அவளுடன் இப்படி ஒரு காதல் காட்சி அமைந்திருக்க வேண்டாமே என்றது அவன் மனம்.
அவனின் பார்வை அவளை குத்தீட்டியாய் மனதை தாக்கி கொன்றதில் மனதில் துணிச்சலை திரட்டி எடுத்தவள்...

“ரஜு...” என்று அவனுக்கே உண்டான பிரத்யேக அழைப்பை அவள் அழைக்க அதில் அவனுக்கு மனதில் நினைவலைகள் தாக்கப்பட்டது... அதை அவனுக்கு அப்போதைய ஏற்றுக்கொள்ள முடியாது போக அவளிடம் தீயாய் காய்ந்தான்...


“இன்னொருவாட்டி அப்படி கூப்பிடாதே அதற்கு உனக்கு தகுதி இல்லை... உன் பக்கத்தில் இருக்கிறதே அருவெறுப்பா இருக்கு” கூர்மையாக தீட்டப்பட்ட வாளை விட அவனின் சொல்லின் வீரியம் அவள் பூஞ்சை மனதை குத்தி கிழித்து ரணமாக்கி செந்நிற குருதி வழிந்தது.
மேலும் அவளை யாரோஎவரோ என்பது போன்ற பார்வையும் செலுத்தியதில் மனமுடைந்தவள் கோவிலில் செதுக்கிய துண்சிலையென உறைந்து நின்றிருந்தாள்.


முன்னோட்டம் 2:

“என்னை காயப்படுத்துகிறதா நினைத்து உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக்க வேண்டாம் ரஜூ” என்றவளை அசட்டையாக பார்த்தவன்...

“இன்னுமா என்னை யோக்கியன்னு நம்புற?” என்று ஏளனமாக வினவியவனின் பார்வை அவள் விழிகளை ஊடுருவி துளைத்தது.

“நிச்சயமா நம்புவேன் ரஜூ... உங்க இதயத்தில் நான் குடியிருக்கிறேன்... அப்படி இல்லைன்னா;... நீங்க பிணம்ன்னு அர்த்தம்” என்று உதட்டில் இழையோடிய ஆணவச்சிரிப்பில் ஆரம்பித்து இறுதியில் கர்வத்துடன் கூறி உனக்கு சலைத்தவள் நான் அல்ல என்பது போல் பார்த்திருந்தாள்.

அவளின் அந்த அசாத்திய பேச்சு மனதை தென்றலாய் வருடியது ஆனால் மறுநொடியே அவனுள் இருந்த ஆணின் செருக்கு எழும்பியிருந்தது அத்தனை நேரம் இவன் சுற்றி வந்த அழகியை தவிர்த்து வந்தவன் சமயசந்தர்பத்திற்க்கு பயன்படுத்திக்க நினைத்தவன் அவளே எதிர்பாராமல் இழுத்து அணைத்தவன் அவள் சாயம் பூசிய இதழ்களில் நச்சென்று இதழ்பதித்து அவளை தன் வளைக்கரங்களுக்குள் நிறுத்திக் கொண்டு...

“வில் யூ ஸ்பென்ட் சம் டைம் வித் மீ ஹனி?”

“சூயர் டார்லிங் அம் அல்வேய்ஸ் வைட்டிங் ஃபார் யூ” என்றவளின் குரலில் அத்தனை தாபம் இருந்தது... அவளை வெறுபெற்றிவிட்ட தோரணையில் வெற்றி பெற்ற பார்வையை அவளை நோக்கி செலுத்த... அவனின் செயலில் திக்பிரமை பிடித்து நின்றுவிட்டாள்.



முன்னோட்டம் 3:


“ரஜூ... போதும் இதுக்கு மேலே எதுவும் பேசவேண்டாம்... இனி உங்க தேவைக்கு நீங்க இவ்ளோ சிரமப்பட வேண்டாம் அதுக்கு நானே சுலபமா ஒரு வழி சொல்கிறேன்” என்றவளை நோக்கி ஏளனமாக உதட்டை வளைத்தவன்...


“ஹோ...! அப்படி என்ன உன்னால் செய்துவிடமுடியும்?” என்றதும் அவள் அந்த வழியை கூறி முடித்ததும் தான் தாமதம்... அவனின் இரும்பு போன்ற கரங்கள் அவள் கன்னங்களில் செவ்வரி கோடுகளை பதிந்திருந்தது.


“கொன்னுருவேண்டி...! என்னை கொலைகாரனா மாற்றாத” என்றவன் விரல்கள் அவள் கழுத்தில் பதிய அதில் மூச்சுக்கு திணறினாலும் என் உயிரை எடுத்துக்கொள் என்பது போல் வலியை பொறுத்துக்கொண்டு நின்றிருந்தாள்... ஆனால் என்ன செய்தும் அவள் கண்கள் வலியை பிரதிபலித்து எட்டப்பனாய் காட்டிக்கொடுக்க அதை அவன் கண்டுகொண்டுவிட்டிருந்தான்.


அப்போதுதான் தன்னிலை உணர்ந்து கரங்களை விடுவித்தவன்... “ச்சே...!” என்று புறந்தலையில் அடித்துக் கொண்டான்... ஏனோ அவளின் வார்த்தையில் அவன் மனதின் கொதிப்பு அடங்கமறுத்து சண்டித்தனம் செய்தது. அவளோ அவன் அழுந்த பிடித்ததால் உருவான வலியில் இருமிக்கொண்டிருந்தவளுக்கு அவன் வார்த்தையால் சொல்லாத காதலை அந்த ஒற்றை செயல் உணர்த்தியதில் ஆயிரம் கூடை பூக்களை ஒன்றாக கொட்டியது போல் உணர்ந்தாள்.



***********************

“உனக்கு ஒருதடவை சொன்னா புரியாது உனக்கு என்னடி அவன் கூட பேச்சு வேண்டி கிடக்கு”


“நான் யாருடனும் பேசுவேன் மயூரத்வஜன் அதில் உங்களுக்கு என்ன நஷ்டம்? உங்களுக்கு தான் என்னை கண்டாலே பிடிக்காதே பின் நான் அவனுடன் பேசினால் உங்களுக்கு என்ன” என்றதும் அவனுக்கு வெறியேறியிருக்க அவளை சட்டென்று தன் கைவளைவிற்க்குள் கொண்டு வந்தவன் அவள் தாடையை அழுந்த பிடித்துக் கொண்டு விழிகளை ஊடுருவியவன்...


“நான் யாருன்னா கேட்கிற...? அதை சொல்லவா இல்லை செயலால் நிருபிக்கவா?” என்றவன் அவள் பதிலையும் எதிர்பாராது அவள் இதழ்களை அவன் இதழ்களால் அழுத்தமாக சிறை பிடித்திருந்தான்.



************************


“பேபி... அழக்கூடாது மாமா சொல்கிறேன்... உனக்காக நான் இருக்கிறேன்” எதிர்முனையில் என்ன பதில் வந்ததோ...


“நிச்சயம்... நான் பார்த்துக்கிறேன் உனக்கு ஒண்ணுன்னா நான் வேடிக்கை பார்த்துட்டு நின்றுவிடுவேனா என்ன... ஒகே டா பேபி சூர்... உம்மாமாஆஆ....” என்று இதழ்பதித்து அணைத்துவிட்டு திரும்ப அங்கே காளி அவதாரம் எடுத்தது போல் நின்றிருந்தாள் அவள்.


அவனோ மெல்லிய குரலில் ஏதோ பாடலை முனுமுனுத்தபடி நின்றவனை கண்டு ஆத்திரம் மேலோங்க அருகிலிருந்த பூஜாடியை எடுத்து அவன் மண்டையில் உடைத்தால் தான் என்னவென்று தோன்றியது ஆனால் அதை செய்ய முடியாதபடி அவள் காதல் தடுத்திருந்தது.



“என்கிட்டே சொல்லாம எங்கேயும் போகக்கூடாதுன்னு சொல்லியும் எப்படிடி நீ தனியா போகலாம்?” என்று அவளிடம் எரிந்து விழுந்தான்... அவனின் வார்த்தையில் கோபம் தலைகேற பார்த்திருந்தவள்...


“நீங்க உங்களோட ஆசை நாயகி கூட பேசிகிட்டு இருந்தீங்க அதனால் தொந்தரவு பண்ண வேண்டாமேன்னு தான் நானே போயிட்டேன்” அவனின் பேச்சிற்கு அசராது பதில் கூறினாள்... அவளின் பேச்சில் புருவங்களை மெச்சுதலாக உயர்த்தியவன்...


“பார்ரா...! அவ்ளோ தாராளமான மனசா உனக்கு”



“ச்சேச்சே... அப்படி எல்லாம் தப்பா நினைக்காதீங்க... நீங்க கூட வந்தா மதி மாமா வந்திருக்க முடியாதே இதில் எனக்கும் ஆதாயம் தான்” என்றதில் அத்தனை நேர இளக்கம் மறைந்து இறுக்கம் மேலேறியது. அதை பார்க்க அவளுக்கு அத்தனை உவப்பாக இருந்ததோ அதை பார்த்து புன்சிரிப்பை தவளவிட்டாள்.


“அவன் யாருடி என் பொண்டாட்டி கூட வர நீயும் வெட்கமே இல்லாம இதை சொல்கிற”


“என்னது பொண்டாட்டியா...?” என்றவள் களுக்கென்று சிரித்துக் கொண்டே... அவள் கழுத்தை தடவியவள்... “ஒருமுழம் கயிற்றை என் கழுத்தில் தொங்கவிட்டது போல் பேசுறீங்க?”



“அதை விடவும் ஒரு பெரிய அடையாளமே இருக்கு பொண்டாட்டி” என்றவன் அவளின் மேடிட்ட வயிற்றில் அழுந்த முத்தமிட்டத்தில் துள்ளி விலகியவள் “ச்சீ...” என்று முகம் சுளித்து...


“இது உங்......” என்றவளுக்கு வார்த்தை தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது அவனின் கனல் கக்கிய பார்வையில்....


“சொல்லுடி இது என் குழந்தை இல்லைன்னு சொல்ல வந்தே அப்படிதானே... முடிந்தால் சொல்லிப்பாரேன்” என்றவனின் சவாலில் அவள் அவசரமாக... “இல்லை...” என்று முடித்துக் கொண்டு நகர எத்தனிக்க...
அவளே எதிர்பாராத நேரத்தில் அலேக்காக தூக்கியவன் அறையில் இருந்த படுக்கையில் கிடத்தி அவள் மேல் படர்ந்தவன்...



“எங்கே இன்னொருதடவை சொல்லேன் இதே வார்த்தையை” என்று கூறிக்கொண்டே அவளை ஆக்கிரமிக்க அவளோ அவனிடமிருந்து விடுபட பிரம்மபிரயாதனப்பட்டாள் முடிந்தால் அல்லவே... அவனின் உடல் வலிமை முன் அவளின் தாய்மையால் உண்டான பலவீனமும் ஒன்று சேர்ந்ததில் அவனிடமிருந்து தானாக விடுபடமுடியாமல் போனது... அவனுடன் போராடி சோர்ந்தவள் பின்பு நேரம் கடக்க அவனின் செயலுக்கு அவள் உடல் உருகிக்குழைந்தது... என்ன செய்தும் இறுதியில் அவள் காதல் செய்துவிடுகிறதே என்று வருந்தினாள்... அவளுடனான கூடல் முடிந்து விலகியவனின் சட்டையை கொத்தாக பற்றியவள்...



“ஏன் அதுதான் நீங்க கொஞ்சம் முன்னாடி கொஞ்சிட்டு இருந்தீங்களே அவள்கிட்டே போக வேண்டியதுதானே இதுக்கு மட்டும் நான் தேவையா?”



“ஆமாம்...! நீ தான் நீ மட்டுமே தேவை” என்று பிசிறில்லாது கூறியவனை கண்டு சினம் பொங்க...


“ஏன்...?” என்று வினவினாள்...


“ஏன்னா........” என்று கூறியவன் பதிலில் ஒருகூடை தணலை கொட்டியது போல் துடிதுடித்து போனாள்!


 

Stella mary

Bronze Winner
Sis டீசெர் செம செம சீக்கிரம் அப்டேட் போடுங்க and உங்க ஹெல்த்தை நல்லா பார்த்துக்கோங்க sis உங்க ஸ்டோரியை romba romba மிஸ் pandren
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis டீசெர் செம செம சீக்கிரம் அப்டேட் போடுங்க and உங்க ஹெல்த்தை நல்லா பார்த்துக்கோங்க sis உங்க ஸ்டோரியை romba romba மிஸ் pandren

கண்டிப்பா சீக்கிரம் போடுறேன் டியர் மிக்க நன்றி மா என்னை புரிந்து கொண்டதற்கு
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே...


உடல் நிலை சரியில்லை அதுதான் இத்தனை பெரிய இடைவெளி இனி தொடர் கதையை பதிவிட இருக்கிறேன் அதில் எந்த கதையை பதிவிடுவது என்பது உங்கள் விருப்பமாக இருக்கட்டும் மூன்று கதைகள் அதற்கான முன்னோட்டமும் பதிவிடுகிறேன் படித்துவிட்டு வோட் போடவும்.


மலரே உந்தன் மடியில் வாழ்ந்தால் மரணமில்லை!!


அந்திவானம் இருளை பூசிக் கொண்டு இரவை நெருங்கும் வேளை... மேகங்கள் ஒன்றன் பின் நகர்ந்துக் கொண்டிருந்தது. மழைக்கான அறிகுறிகள் தென்பட்டுக்கொண்டிருக்க அந்த பிரதான சாலையில் சொகுசு வாகனமான ஜாகுவார் காற்றை கிழிக்கும் அசுர வேகத்தில் பறந்துக் கொண்டிருந்தது... அதை வேகமாக இயக்கிக்கொண்டே பயணித்து கொண்டிருந்தவன் முகம் கோபத்தில் இறுகியிருந்தது... நிமிடத்திற்கு ஒருமுறை அருகில் இருந்தவளின் மீது தீப்பார்வை வீசிக் கொண்டே வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தான், அவளோ நடப்பதை எதுவும் அறியாதவளாக மயக்கத்தில் இமைமூடி இருக்கையில் சாய்ந்தபடியே அமர்ந்திருந்தாள்...! அவளின் இமைமூடிய நிலாமுகம் அவளின் வெகுளித்தனத்தை மறைக்காமல் வெளிச்சமிட அதன் அழகு ஸ்பரிசம் அவனுக்கு அப்பொழுதும் தெவிட்டாமல் விருந்தளித்தது... ஆனால் அவள் செய்யவிருந்த காரியமும் அதனால் அவள் பேசிய வார்த்தைகளும் அவன் மனதில் வன்மையை தூண்டிவிட்டது அவன் பற்கள் கோபத்தில் ஒன்றுடன்ஒன்று மோதி நரணரத்துக் கொண்டது. அவனின் கோபத்தையும் அருகில் மயங்கியிருப்பவளையும் கண்டுகொள்ளாது அவன் கைபேசி இசைமெட்டி அழைத்தது வாகனத்தை சீராக இயக்கிக்கொண்டவன் கைபேசியை உயிர்பித்து செவிமடுத்தவன்...

“செங்கல்பட்டை நெருங்கிட்டேன் இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்... ஏற்பாடு எல்லாம் ஆரம்பிச்சுருங்க பிப்டீன் மின்ட்ஸ்ல எல்லாம் முடிஞ்சு கிளம்பனும்” என்று அதிகாரமாக உத்தரவிட்டவன் கைபேசியை அணைத்து காரின் டாஷ்போர்டில் போட்டுவிட்டு காரின் வேகத்தை கூடியிருந்தான்.

திருக்கழுக்குன்றம் சிவன் கோவில் முன்பு வாகனத்தை நிறுத்தியவன் காரில் இருந்தபடியே வேகமாக உடையை மாற்றி இருந்தான் தங்கக் கலரில் இருந்த பட்டுவேட்டி சட்டை அவனின் முறுக்கேறிய கட்டுமஸ்தான உடலில் பாந்தமாக பொருந்தியது உடையை சரி செய்துவிட்டு அவள் இருக்கையின் புறம் திரும்பியவன் அவளை இருகரங்களில் ஏந்தியவாறு கோவில் பிரகாரத்தின் உள்ளே நுழைந்தான்.

அங்கு அவன் கூறியிருந்த அனைத்து ஏற்பாடுகளும் கச்சிதமாக செய்து முடித்திருக்க அவளை அருகில் அமர்த்திக் தோலில் சாய்த்துக் கொண்டான்...
அவன் வலதுகை மற்றும் அவனின் அந்தரங்க செயலாளர் விவேக் அவனருகில் நெருங்கியவன்... “சார் ஐயரை கூப்பிடவா?” என்று பவ்யமாக வினவினான்.

“ஹ்ம்ம்” என்றவனின் ஒற்றை மொழியியலில் அத்தனை விரக்தி இருந்தது இவளுடனான திருமணத்தை எப்படி எல்லாம் நடத்த வேண்டும் என்ற கற்பனையில் இருந்தான் கடைசியில் அத்தனையும் காற்றில் வரைந்த கோலமாய் கலைந்துப் போனதே அதற்க்கு காரணமும் அவளாக ஆகிப் போனாளே என்றதில் அவன் மனமும் உடலும் இறுகியதில் கண்மூடி கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டிருந்தான்

அவன் கொடுத்த மயக்கமருந்தின் வீரியம் குறையதவலாக அயங்கிக் கிடந்தவளை மேயந்தது அவனின் பார்வை... ஆகாய நீலவண்ணத்தில் சிப்போன் புடவையில் ஓவியப் பாவையை அமர்ந்துக் கொண்டிருந்தாள் அவன் அவளை பார்வையை சிமிட்டது ரசித்துக் கொண்டிருக்கும் வேளை

“என்னது பொண்ணு தூங்கிட்டுயிருக்கா அவாளா எழுப்புங்கோ” என்று அய்யர் கூற... அவரை முறைத்தவன்,
“அவ இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்திரிப்பா நீங்க உட்கார்ந்தது மந்திரத்தை சொல்லுங்க!”

“என்ன இது அபஸ்த்து! அபஸ்த்து! பொண்ணு தூங்கின்றிருந்தா வாழ்க்கை நன்னாயிருக்குமோ?” என்க... இப்போது அவரை முறைப்பதை விட்டு அவனின் செயலாளரை முறைக்க அவனை புரிந்துகொண்டவனாக விவேக் ஐயரிடம் பேசினான்...

“ஐயரே நீங்க மந்திரத்தை சொல்லி தாலி மட்டும் எடுத்துக் கொடுங்கோ மற்றதை சார் பார்த்துக்குவார்” என்றான்.

“வாழ்க்கையை தீர்மானிக்கிறது கடவுள் தான் அதனால் சாஸ்திரத்தை மதிக்கணும்... இல்லன்னா வாழ்கையே சூனியமாகும் முதல்ல பெரியவாள் எல்லாரையும் கூப்பிடுங்கோ அவா கூட யாருமே இல்லை” என்று அவர் வழக்கங்களையும், சம்ப்ரிதயங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே போக அதற்கு மேல் அவரின் பேச்சை சகித்துக் கொள்ளமுடியாமல் எரிச்சல் அடைந்தவன் விவேக்கை எரிக்கும் பார்வை பார்த்தான்.

அவன் பார்வைக்கு அர்த்தம் புரிந்த அடுத்த நொடி அய்யர் புறம் திரும்பியவன்... “ஐயரே அவங்க தூங்கல மயக்கமருந்து கொடுத்ததால மயக்கத்தில் இருக்காங்க இன்னும் கொஞ்சநேரத்துல மயக்கம் தெளிஞ்சு எழுந்துருவாங்க” என்றதும் அவர் அதிர்ந்துப் போனார்!

“என்ன கடத்தலா? பெண்ணை கடத்திட்டு வந்து பண்ற கல்யாணத்துக்கு எல்லாம் நான் புரோகிதம் பண்ணமாட்டேன் அப்படி செஞ்சா பகவான் என்னை தண்டிச்சிடுவார் நான் போறேன் நீங்க வேற ஏற்பாடு பண்ணிகோங்கோ” என்று வேகமாகவும், கோபமாகவும் கூறிவிட்டிருக்க அதற்குமேல் பொறுமை காத்தால் வேளைக்கு ஆகாது என்றுணர்ந்து விவேக்...

“ஐயரே இனி நீங்க காரியம் முடியாம போகமுடியாது... அங்க பாருங்க” என்று அவன் சுற்றியுள்ள திசைகளில் கையை காட்ட அங்கே கருப்பு உடையணிந்த ஆட்கள் சிலர் ஆயுதங்களை ஏந்தியபடி காவல் காத்துக் கொண்டிருந்தனர்.

ஐயரின் மூளைக்கு ஏதோ விபரீதம் என்றுணர்த்த... “இவர் யாரு?” என்று அச்சத்துடனே வினவினார்...

“இவர் ‘அபியுக்தன்’” என்றதும் அவர் உச்சபட்சமாக அதிர்ந்துவிட்டார்! அவர் கைகால் இரண்டும் வெடவெடுக்க ஆரம்பித்தது... ‘இவர் தாதாவாச்சே பெருமாளே நான் இங்க இருந்து தப்பிகனுமே முதல்ல’ என்று மனதுக்குள் கூறிக் கொண்டவர் அங்கிருந்து தப்பிக்க முயல, அவனின் ஆட்கள் ஆயுதம் ஏந்தியபடி அவரை வழிமறித்தனர்... அதில் இன்னும் அதிகமாக பயந்துப் போனவர் வேறுவழிஇல்லாதவராக சென்று அமர்ந்தார். தந்தியடிக்க ஆரம்பித்த உடலுடன் மந்திரங்களும் ஆட்டம் காண ஆரம்பித்தன ஆனால் அபியுக்தன் அதை எல்லாம் பொருட்டாக எண்ணவில்லை அவள் எப்போது கண்விழிக்க வேண்டி அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்... விவேக்கின் உந்துதலில் அய்யர் சாஸ்திரங்களைச் சொல்லி அபியுக்தனை செய்யவைத்தார் எரிந்துக் கொண்டிருந்த ஹோமவேள்வியில் அவன் மந்திரத்தை சொல்லிக்கொண்டே நெய்யில் தோய்த்த சமித்துகளை போட்டுக் கொண்டிருந்தான். மந்திரங்கள் ஓதிக் கொண்டிருக்கும் போதே அவள் இமைகளை சிரமத்துடன் பிரிர்தேடுத்து கண்விழிதிருக்க, அவளை உணர்ந்துக் கொண்டவன் இமைக்கும் நொடிக்குள் அவள் கழுத்தில் மணமாலையை அணிவித்தான்... அவள் அவனை புரியாது பார்த்துக்கொண்டே இடத்தை அறிய முற்ப்பட அவனோ ஐயரிடம் வலிக்கட்டாயமாக மந்திரத்தை நிறுத்தி தாலியை கொடுக்க உத்தரவிட்டான்.

“மந்திரம் சொன்னது போதும் தாலி எடுத்துக் கொடுங்க” என்றவனின் குரலில் தெரிந்த அழுத்தத்தில் ஐயரின் சாஸ்திரம் சம்பிரதாயங்களும் மறந்திருக்க மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த வாயும் சுவிட்ச் தட்டினர் போல் நின்றிருந்தது. நடுங்கிய கரங்களுடன் வேகமாக தாலியை எடுத்துக் கொடுத்தார்...

தாலியை கைகளில் பெற்றுக் கொண்டவன்... “ஹ்ம்ம் மந்திரத்தை சொல்லுங்க” என்றவன் விவேக் புறம் திரும்பி கன்சமிக்க்னை செய்ய அங்கேயிருந்த மின்சாரமத்தள கருவுகளை ஒழிக்கவிட்டான்...

சர்வ மங்கள மாங்கல்யே சிவா சர்வார்த்த சாதிக்கே
சரண்யே டிரயம்பகே கௌரி நாராயணி நமஸ்துதே

மத்தளங்கள் வாசிக்க மந்திரம் முழங்க அவளின் விழியோடு விழி கலக்க விட்டவன் அவளின் சங்கு கழுத்தில் மங்கலநானை சூடி மூன்று முடிச்சிட்டான்.
“பெ..ண்.. பெ..ய..ரை.. சொல்..லுங்..கோ..” என்றவரின் வார்த்தைகள் தந்தியடித்து.

“ஐஸ்வர்யா அபியுக்தன்” என்று அவளை பார்த்தபடியே தீர்க்கமாக கூறியிருக்க அட்சதை தூவி ஆசிர்வதித்து விட்டு குங்குமத்தை அவனிடம் நீட்டினார்... அதை அவள் தோல்வலைவில் சுற்றிய அவன் கரங்கள் நெற்றியிலும் வாக்கிலும் குங்கும திலகமிட அவளையும் குங்குமத்த்தை நெற்றியில் இட ஐயர் உத்தரவிட நடப்பதை நம்பமுடியது அவள் கரங்கள் பொம்மை போல் அவர் சொன்னதை செய்ய விளைய கரங்களோ நடுங்கிக் கொண்டிருந்தது அவனே அவளின் கரங்களை பிடித்து நெற்றியில் திலகம் இட்டுக் கொண்டிருந்தான் அதுவரை பொறுமை காத்தவள்

“யுதி” என்று அவனை அழைத்ததும் அவளை அடுத்து உணரவிடாது அவனின் மயக்கமருந்து கைக்குட்டை வைத்து அவள் முகத்தில் ஒத்தியிருந்தான் அத்துடன் அவள் இப்போதும் மயங்கி சரிந்திருந்தாள்!


***********************


தீயிலே தென்றலா வாழ்கிறேன் மன்னவா!!


தன் எதிரில் இருந்தவளை கூர்மையான விழிகளில் துளைத்துக் கொண்டிருந்தான்... அவளோ 'அட கிராதகா!' என்பது போன்ற பார்வையை அவன்மேல் படிய வைத்து கொண்டிருந்தாள்... அவன் மேல் அவளுக்கு வெடித்துச்சிதற காத்திருக்கும் எரிமலை போன்று கோபம் வியாபித்திருந்த போதிலும் நடந்து முடிந்து விட்ட செயலில் மாற்றியமைக்க முடியாத நிஜம் நெற்றி பொட்டில் ஆணி அடித்தது போன்று உரைத்ததில் மௌனியாக அமர்ந்திருந்தாள்!


அவனுக்கு அவளின் நிலை பெரிதாக இல்லை போல்... அவளை அசாதாரணமாக பார்த்தவாறு அமர்ந்திருந்தவன். மௌனமாய் கடந்த நிமிடங்களை உடைத்தெறிய எண்ணி அருகில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்தவன் குளிர்பானம் ஒன்றை திறந்து அவளிடம் நீட்டினான்...


"இந்தா இதை குடி கொஞ்சம் தெம்பாக இருக்கும்" என்று இயல்பாக கூறியவனை கண்டு அத்தனை நேர பொறுமையை கைவிட்டவள் கண்கள் கோபத்தில் விரிய வெறிகொண்டவளாக சீறினாள்...


"அப்பப்பா! என்ன ஒரு கரிசனம்... இதுக்கு பதிலா ஒரு பாட்டில் விஷம் கொடுங்க குடிச்சுட்டு செத்து போறேன்... இனி நான் வாழ என்ன தகுதி இருக்கு" என்றவளின் குரல் கம்மியது... துணிச்சலாக ஆரம்பவித்தவளின் குரல் இறுதியில் நலிவடைய மனம் உடைந்து அழுகையில் கேவ ஆரம்பித்திருந்தாள்... அவளின் கோபமும், அழுகையும் அவனுக்கு பரிதாபத்தை வரவழைக்காது எரிச்சலை மூட்டியது...


"வாயை மூடுடி சும்மா வாய் இருக்குன்னு என்ன வேணா பேசிக்கிட்டே போவியா? நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்கமாட்டேன்... ஜாக்கிரதை!" என்று சுட்டுவிரலை நீட்டி கடுமையாக எச்சரித்தான்... அவனின் கடுமை பூமனம் கொண்டவளை நடுநடுங்க செய்தது...


"ப்ளீஸ்! என்னை விட்ருங்க நான் போகணும்" என்று கெஞ்சுதலாக கேட்டவளை கண்டு உதட்டை வளைத்து கேலி புன்னகை உதிர்த்தான்... அவனை புரியாது அப்பாவியாக பார்த்து கொண்டிருந்தவளை நோக்கி...


"இதுக்கு மேல நான் உன்னை வெளிய அனுப்புவேன்னு நினைக்கரியா என்ன? அப்படி ஒரு நினைப்பிருந்தா இனி மாற்றிக்க... இனி இதுதான் உன் இடம், இது தானே உன் வீடு..." என்றவன்...


"......." சற்றே இடைவெளி விட்டு... "நான் தான் உன் புருஷன்" என்று நிதானமாக கூறினான்... இப்போது கேலி புன்னகை உதிர்ப்பது அவளின் முறை ஆனது.


"என் உடம்பை தொட்டுட்டா நீங்க புருஷனா ஆகிற முடியுமா?" என்றவள் எழுந்து நிற்க... அவளை சலனமற்று பார்த்துக் கொண்டே...


"உண்மை தான்! ஆனா தாலி கட்டிட்டா புருசன் தானே? புருஷன் பொண்டாட்டி உடம்பை உரிமை கொண்டாடலாமே..." என்றவனை புரியாது பார்வை பார்த்துக்கொண்டிருக்க... அவளின் பார்வையை லட்சியம் செய்யாமல் மேலும் பேசலானான்...


"உன் கழுத்தில் பாரு" என்றதும் வேகமாக பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்! அவன் கட்டிய பொன்மங்கல்ய மஞ்சள் சரடு அவள் மார்பில் உரசிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து நோக்கியவளை வெற்றி பார்வை பார்த்திருந்தான்.






 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரணடைந்தேன் சர்வமும் நீயென!!


“சொல்லு எதுக்காக கூப்பிட்ட?” கடுமை மாறாமல் வினவியிருந்தான்.

அவனின் கடுமையில் மணப்பெண்ணான பிரணவியின் உடல் அச்சத்தில் வியர்த்தது! நாளை திருமணம் என்ற நிலைமையில் ஆசையாக அல்லாமல் சொற்களை முள்ளாக வீசி பேசும் மணாளனை கண்டு பெண்ணவளுக்கு அச்சம் தோன்றாதா என்ன? இருந்தும் என்ன செய்ய...? அவன் தான் இனி கணவன் ஆகப் போகிறவன் அதை இனி மாற்ற முடியாது... மேலும் அவனுக்கு அவள் மேல் விருப்பமின்மை இருக்கலாம்... ஆனால் அவளுக்கு அப்படி இல்லையே? அவனை பார்த்த கணத்திலிருந்தே நெஞ்சில் நீங்காமல் குடிபெயர்ந்துவிட்டவன் அவனின் பாராமுகத்திற்கே மனமொடிந்தால் அவனுடன் இனி காலம் முழுவதும் சேர்ந்து வாழ்ந்துவிட முடியுமா என்றெண்ணியே வரவழைத்துக் கொண்ட துணிச்சலுடன் பேச ஆரம்பித்தாள்...

“நீங்க பிரெண்ட்ஸ் கூட ஒகேனக்கல் போகப் போறீங்களா...?” என்றவளின் வினா அவனுக்கு அவள் எப்படி அதற்குள் அறிந்தாள்... என்ற கேள்வியெழுப்பியது...

“ஏன் அதற்குள் வேவு பார்க்க ஆரம்பிச்சாச்சா?” என்று காரமாக வந்த சிடுசிடுப்பில் அவள் பதறி போனவளாக...

“அச்சோ அப்படி எதுவும் இல்லை என் பிரெண்ட்ஸ் அந்த பக்கமா வந்தபோது எதார்த்தமா காதில் விழுந்ததா சொன்னாங்க” என்றதில் அவன் உண்மை பொய் ஆராயமுடியாமல் ஆத்திரம் தான் மேலோங்கியது...

“என்ன என்கிட்டயே கதை விட பார்க்கறியா?”

“நிச்சயம் இல்லை மாமா... நாளைக்கு கல்யாணம் இன்னைக்கு வேண்டாமே அதுவும் அங்கே முக்கியமா வேண்டாமே... பேச்சுலர் பார்ட்டி இங்க மண்டபதிலையே கொடுக்கலாமே நான் வேண்டும் என்றா என் அண்ணன் கிட்டே சொல்லவா?” என்று முடித்தவளின் பேச்சில் இவன் முகம் கிலோ கணக்காய் மிளகாயை பூசியது போன்று சினத்தில் சிவந்தது...!

“என்ன எனக்கே ஆர்டர் போடுறியா?” கேள்வியில் அனல் தெறித்தது... அதில் அவள் உடல் நடுக்கமுற்று வியர்க்க ஆரம்பித்தது அச்சத்தில்... சிலநொடிகள் இடைவெளி எடுத்தும் அவன் கோபம் குறையாமல் போக அதே காரத்தன்மையுடன் பேசலானான்...

“இன்னும் தாலி கூட கட்டவில்லை அதற்குள் பொண்டாட்டி உரிமையை காட்டுகிறாயா? இங்கே பார் நான் முன்பே சொன்னதுதான் நெருப்பு என்று தெரிந்தும் நீ அதில் விழுக சம்மதித்துவிட்டாய் இனி நீ பொசுங்கபோவது உறுதி...” அவளிடம் தீயாக காய்ந்தவன்... இறுதியில் அவன் மூலையில் மின்னலிட்ட யோசனையில் இகழ்ச்சியாக உதட்டை மடித்தவன்...

“நான் நிச்சயம் ஒகேனக்கல் போகத்தான் போகிறேன்... என் நண்பர்கள் கேட்டது போல் பேச்சிலர் பார்ட்டியை புட்டி பிளஸ் குட்டியோட கொண்டாடத்தான் போகிறேன் முடிந்தால் தடுத்துப்பார்... இல்லை என்றால் கல்யாணத்தை நிறுத்து எதுனாலும் எனக்கு சவுகரியம் தான்” என்று கூறியவன் பட்டென்று இணைப்பை துண்டித்திருக்க... செந்தணல் அருவியாய் கொட்டியது போன்ற அவன் வார்த்தைகளில் மனம் அடிபட்ட பறவையென துடிதுடித்து போனவள் தன் எதிரில் இருந்த சுவற்றையே வெறிக்க ஆரம்பித்தாள்...

********************************************

“என்னடி இந்த குடிகாரனை பிடிக்கலையா தள்ளி போகிற வேணும் என்றால் ஒன்று செய் இப்போதே என்னை பற்றி சொல்லி கல்யாணத்தை நிறுத்திவிடு” என்றதெல்லாம் அவள் காதில் ஏறவில்லையோ அவனையே உணர்வற்று பார்த்திருந்தாள்... அவன் வார்த்தைகளில் அவள் மனம் அடிபட்டு இருந்தது.

“நீங்க எப்படியும் என்கிட்டே இருந்து தப்பிக்க பார்க்க நினைக்கறீங்க நான் விடமாட்டேன் இந்த ஜென்மத்தில் நான்தான் உங்க பொண்டாட்டி மாமா” அவனின் வார்த்தையை கண்டு சற்றும் அசராமல் பிசிறில்லாது வார்த்தைகளை கோர்த்து கூறியவளை வெட்டவாகுத்தவா என்பது போல் பார்த்திருந்தான்...

“என்னடி அவ்ளோ தைரியமா உனக்கு... தாலி கட்டின பிறகு நீ முழுக்கமுழுக்க எனக்கே உரிமையானவள்... அப்போ நான் என்ன செய்தாலும் ஒரு பையன் என்னை ஏன்னு கேட்க முடியாது அதுக்காக பாவம் பார்த்து உனக்கு தப்பிக்க சந்தர்ப்பம் கொடுத்தா எனக்கே சவால் விடுற... இருக்குடி உனக்கு” என்று பேசிக்கொண்டே செல்ல அவள் மதுவாடை பொறுக்க இயலாது இப்போது வெளிப்படையாகவே.... “உவ்வே...” என்று குமட்டும் ஒவ்வாமை சப்தத்தை எழுப்ப அவன் வெறியாகிப்போனான்...

“ஹோ... இது வேறையா...?” என்றவன் அவள் தாடையை அழுந்த பிடித்துக்கொண்டு பார்வையை அவளின் செந்தூர இதழ்களில் நிலைபெற செய்ய அவன் பார்வை சொன்ன செய்தியை உணர்ந்து சுதாரிக்கும் முன் அவன் அவள் இதழ்களை அழுத்தமாக சிறைபிடித்திருந்தான்.


********************************************



“நான் நிதானமா இல்லாத போதுதானே குட்டி தேவைப்படுது” என்றவனின் வார்த்தைகள் அவள் மனதில் கூரிய வாள்முனை தாக்கியது போல் இறங்கியது.


“வேண்டாம் மாமா ப்ளீஸ் இப்படி எல்லாம் சொல்லாதீங்க... நீங்க அப்படி செய்யமாட்டீங்க...” என்ற அவளின் பேச்சிற்கு...

“ஹஹஹஹ” என்று பலமாக சிரித்தவன்...

“ஐயோ... பாவம்!” என்று பரிதாபத்துடன் கூறிவிட்டு... அவள் கைபேசியை எடுத்து அவள் முன் எறிந்தவன்...

“இதில் உன் வாட்ஸ்அப் ஓபன் பண்ணி என் ப்ரொபைல் பாரு” என்றதும்... அவள் கரங்கள் நடுங்க எடுத்து அதை பார்த்துவள் உயரழுத்த மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்து போனாள்!

********************************************

“யாருகிட்டே டி பேசிகிட்டு இருக்க?” என்ற தன் கணவனின் சூடான கேள்வியில் அவள் கைபேசி பிடித்திருந்த கரம் உதறல் எடுக்க ஆரம்பித்தது... மனைவியின் நடுக்கத்தை கண்டுகொண்டதாகவே காட்டிக் கொள்ளாமல் அவள் அருகில் நெருங்கி பேசியின் ஒலிப்பானை உயிர்பித்தான் அந்நேரம் பார்த்து திவாகரன் தன் தங்கையிடம்...

“உன் கணவர் மேல எனக்கு ஏனோ நல்ல அபிப்ராயமே இல்லை... அங்க எதுவும் பிரச்சனைனா அது எந்த நேரமா இருந்தாலும் நீ அண்ணாகிட்டே உடனே சொல்லுடா வச்சிரவா...?” என்று முடிக்க பிரணவிக்கோ கதி கலங்கியதில் அப்போதே பூமி இரண்டாக பிளந்து உள்ளே சென்று விடமாட்டோமா என்று இருந்தது...

“ரொம்ப நன்றி அண்ணா எதுவானாலும் நான் பார்த்துக்கிறேன் இப்போ போன் கட் பண்ணு” கடிந்த பற்களுக்கிடையே வார்த்தைகளை துப்பியவள் படாரென்று பேசியை உயிரிழக்க செய்துவிட்டு கணவனை பார்த்தவள் நெஞ்சம் பதைபதைத்துக் கொண்டிருந்தது... அவன் பார்வையில் தெரிந்த கோபவெப்பம் அவளை தீயாய் சுட்டெரித்துக் கொண்டிருந்தது... அவள் கையிலிருந்த பேசியை பறித்தவன் சுவற்றில் விசிறியடிக்க அது சுக்குநூறாய் உடைந்தது..

அவளை முறைத்துக் கொண்டே அவன் அறை நோக்கி சென்றுவிட்டிருந்தான்... பிரணவிக்கு தன் கணவனின் கோபத்திற்கு இன்று என்ன கதி ஆகபோகிறோமோ என்ற அச்சம் மேலோங்கியத்தில் உடல் தளர்ந்தவளாக அங்கிருந்த சோபாவில் தொப்பென அமர்ந்தாள்... எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ எங்கோ ஒலித்த சப்தத்தில் தன்னினைவு அடைந்தவள் தன்னை தேற்றிக் கொண்டு கணவனை தேடிச் சென்றாள்... அவனோ வேட்டையாட காத்திருக்கும் வேங்கையின் சீற்றத்துடன் அமர்ந்தபடி மதுவை புத்தியோடு சரித்துக் கொண்டிருந்தான்.

கணவனின் கண்கள் சிவந்து தெரிந்ததில் அவன் ஆத்திரத்தின் அளவும் புரிபட மெல்ல அவனை நெருங்கி அவனை புரியவைக்கும் நோக்கத்தோடு பேசலானாள்...

“மாமா…” என்றதும் அவளை கனல் கக்கும் விழிகளுடன் நோக்கினான்... அதை கண்டு அவளுக்கு தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கிக்கொண்டாலும் அவனிடம் பேசியே ஆகவேண்டிய சூழ்நிலையை உணர்ந்து தன்னை திடபடுத்திக் கொண்டு பேசலானாள்...

“மாமு என்னை மன்னிச்சிருங்க அண்ணன் அப்படி பேசினது தப்புதான் அவருக்கு என்மேல் பாசம் அதிகம் அ....” மேலும் என்ன தொடர்ச்சியாக பேசினாலோ அவனின் செயலில் அவள் வார்த்தைகள் பிரேக் அடித்தது போல் நின்றிருக்க அவன் செயலில் துவண்டவளாக மஞ்சத்தில் சரிந்தாள்...

********************************************

ஹாய் நட்பூக்களே...

இதோ ஒரு மகிழ்ச்சியான செய்தியுடன் வந்திருக்கிறேன் “சரணடைந்தேன் சர்வமும் நீயென” கதை புத்தகமாக வெளிவந்திருக்கிறது தோழிகளே... இந்த கதை இணையத்தில் அல்லாமல் நேரடி புத்தகமாக வந்திருக்கும் கதை.

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இதற்கு முழு முதற்காரணம் ஸ்ரீகலா அக்கா தான்... உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அக்கா...

நேரடி கதையை புத்தகமா வெளியிட ஒப்புக்கொண்ட பிரியா நிலையத்திற்கும் நன்றிகள் பல.



சரணடைந்தேன் சர்வமும் நீயென!


http://srikalatamilnovel.com/product/சரணடைந்தேன்-சர்வமும்-நீய/

சரணடைந்தேன் சர்வமும் நீயென! (காருராம்) - காருராம், Buy tamil book Sarannadeinthen Servamum Neeyena online, Kaaruram Books, குடும்ப நாவல்கள்



நட்புடன்
காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தன் கைகளில் படபடத்து கொண்டிருந்த வெள்ளை காகிதத்தையே நம்பமுடியாது வெறித்துக் கொண்டிருந்தார் ஆதீசன்... மகளின் அறை வெறிச்சோடி இருந்ததிலும் கடிதத்தில் இருந்த வார்த்தை உண்மை என்று பறைசாற்றி இருந்ததில் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தார் ரேவதி ஆதீசன் மனைவி.

“இப்போ என்னங்க பண்ணுறது? மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு என்ன பதில் சொல்லுறது? நிச்சயம் முடிஞ்சு ஒருநாள் கூட முழுசா முடியலை பாவிமக இப்படி பண்ணிட்டு போயிட்டா” என்று ரேவதி அழுகையுடன் புலம்ப அவரை கண்டிக்கும் பார்வையுடன் நோக்கினார் ஆதீசன்.

“ரேவதி என்ன இது...? நீயே உன் பொண்ணு ஓடி போயிட்டன்னு தம்பட்டம் அடிச்சிருவ போல? உன் பொண்ணு வீட்டை விட்டு போயிருக்க வாய்ப்பில்லை, இதுல ஏதோ சதி நடந்திருக்கு யாருகிட்ட இருந்து நம்ம பெண்ணை அடைகாக்க நினைச்சமோ அவனே நம்ம பெண்ணை தூக்கியிருக்கான் ராஸ்கல்...”

“ஐயோ! என்னங்க சொல்றீங்க நீங்க...? நிஜமாவா...? என்னால நம்ப முடியலையே; ஆனா லெட்டரில் இருக்கிறது நம்ம பொண்ணு கையெழுத்து ஆச்சுங்களே?”
“ஹ்ம்ம்... நம்மளை ஏமாத்திட்டு போகணும்னு நினைச்சா கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க வாய்ப்பில்லை... இதுல ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்கு... எனக்கு தெரிஞ்சு இது அவன் வேலையா தான் இருக்கனும்... நம்ம பொண்ணுக்கு நாம குறிச்ச தேதில நாம பார்த்த மாப்பிள்ளை பிரவீன் உடன் தான் கல்யாணம் நடக்கும்... நீ உடனே கல்யாணத்துக்கு போயிருக்கிற மது, சஞ்சய் ரெண்டு பேரையும் வர சொல்லு குறிப்பா மருமகளையும், மருமகனையும் ரிசப்சன் முடிச்சு வந்தா போதும் இவங்களை மட்டும் இப்போ உடனே வர சொல்லு”

கணவரின் வார்த்தைகள் அவருக்கு எதுவும் புரியாவிடினும் நெருங்கிய நண்பரின் திருமண வரவேற்பிற்கு சென்றிருந்த தன் மட்களை அழைத்திருந்தார் ரேவதி.

ஆதீசன் ரேவதி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் மூத்த மகன் சஞ்சய், அவன் மனைவி வித்யாதாரணி, அவர்களின் மகள் ரதியா... மூத்தமகள் மதுவர்ஷினி, அவள் கணவன் அகிலன் அவர்களின் ஒரே மகன் ரிஷிதரன்... ரேவதி ஆதீசனின் கடைக்குட்டி செல்லமகள் தான் ஐஸ்வர்யா அன்று காலையில் தான் நிச்சயம் முடித்திருந்தனர்.

அரைமணி நேரம் கடந்திருக்க அவரின் மூத்தமகன் சஞ்சய் மூத்தமகள் மதுவர்ஷினி இருவரும் வேகமாக வீட்டிற்குள் பிரவேசித்தனர்.

சஞ்சய், மதுவர்ஷினி இருவரும் தங்களின் இணையிடம் கூறியபோது தானும் வருவதாக கூறியிருந்தாலும் அவர்களை அழகாக தவிர்த்துவிட்டு தன் தந்தை சொன்னது போல் சொல்லிவிட்டு வந்துவிட்டிருந்தனர்... அவர்களின் இணைகளுக்கு காரணம் புரியாவிடினும் ஏதோ அவசரம் அவர்கள் முன்னே செல்லட்டும் தாம் பின்னே செல்லலாம் என்ற முடிவுடன் மேலும் அவர்களை நேரம் கடத்தாது வழியனுப்பிவிட்டு அவர்கள் பின்தங்கிவிட்டனர்.

சஞ்சய், மதுவர்ஷினி இருவரும் உள்ளே நுழைந்ததும் அன்னை தந்தை இருவரையும் பதட்டத்துடன் பார்த்தனர்... இருவரின் உடல் நலனுக்கும் ஏதுமில்லை என்று தெரிந்த பின்பே சற்று ஆசுவாச பெருமூச்செடுத்தனர். ஆனால் ரேவதியின் கலங்கிய முகம் ஏதோ விபரீதம் என்பதை உணர்த்தியது தந்தையின் விரைத்த தோற்றமும் மனதுக்குள் ஏதோ தவறாகப்பட்டிருக்க...

“அப்பா என்ன நடந்துச்சு...? எதுக்காக சீக்கிரம் வர சொன்னீங்க?” என்று படபடத்த குரலில் வினவினான் சஞ்சய்.

ஆதீசன் தன் கையிலிருந்த கடிதத்தை மகனிடம் நீட்ட மதுவர்ஷினியும் அருகில் வர இருவரும் கடிதத்தை படித்து உச்சகட்ட அதிர்ச்சி அடைந்தனர்! தன் தங்கை எழுதி வைத்த வார்த்தைகளை கிரகிக்க முடியாது கடிதத்தையே வெறித்தனர் அதில் இருந்தவையும் இதுதான்...


வணக்கம் நட்பூக்களே...
“துரந்தரா எனை ஆளும் நிரந்தரா” பாகம்-1ன் அத்தியாயங்கள் ஜனவரி 16 முதல் பதிவிடவுள்ளேன்... வாரம் இரண்டு அத்தியாயங்கள் திங்கள் மற்றும் வெள்ளியில் பதியவுள்ளேன்.
கதையின் முன்னோட்டம் தளத்தில் பதிந்துள்ளேன் படுத்துவிட்டு கருத்துகளை பகிருங்கள்.
நட்புடன்,

காருராம்.
 

Attachments

  • 7 Thurantra Enai Aalum Niranthra - Karuram Part - 1 wrapper copy (1).jpg
    7 Thurantra Enai Aalum Niranthra - Karuram Part - 1 wrapper copy (1).jpg
    639.3 KB · Views: 4
  • TEAN Teaser 1.png
    TEAN Teaser 1.png
    254 KB · Views: 3
  • TEAN Teaser 2.png
    TEAN Teaser 2.png
    193.6 KB · Views: 4
  • TEAN Teaser 3.png
    TEAN Teaser 3.png
    170.3 KB · Views: 4
  • TEAN Teaser 4.png
    TEAN Teaser 4.png
    166.1 KB · Views: 3

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே.....

“அன்புக்கு நீ அரிச்சுவடி” ஏழாவது கதை இரண்டு பாகங்கள் தற்பொழுது விற்பனையில்... இதுவரை இணையத்தில் வெளிவராத புதிய கதை புத்தக வடிவில்!


அன்புக்கு நீ அரிச்சுவடி கதையிலிருந்து சிறு முன்னோட்டம்...
“மேடம் ரொம்ப பிசியோ?” என்றவனின் குரலில் பறக்கும் பட்டச்சியாய் போல் மனம் துள்ள வெடுக்கென்று எழுந்தவளின் விழிகளில் மின்னலடிக்க, உற்சாக ஆர்ப்பரிப்புடன் அணுகியவள்...
“கவி டார்லி....” என்றவளின் முகம் ஆயிரம் விளக்கு ஜோடனை போன்று பிராகசித்தது.
“கவி வந்து ரொம்ப நேரம் ஆச்சா? ஏன் எனக்கு கால் பண்ணலை?” என்றவள் அவனின் கழுத்தை கட்டிக் கொண்டு அவன் மேல் ஈஷிக் கொண்டிருந்தாள்.
அவளின் காதல் தர்கத்தை மனதிற்குள் சிலாகித்து கொண்டவனுக்கும் எப்போதும் போல் திகைப்பும், மகிழ்ச்சியும் என இரு சேர்ந்த உணர்வுகள் ஒரு சேர எழும்பி அடங்கியது. அவளின் நெருக்கமான ஸ்பரிஷம் மற்ற எண்ணங்களையும், சிந்தனைகளையும் துரத்தி அடித்துவிட்டிருக்க, அறையின் கதவை மூடி தாழிட்டு விட்டு இடது பக்கம் இருந்த சோபாவில் அமர்ந்துவிட்டிருந்தான்.
“இது ஆபீஸ், யுகிமாக்கு அது நியாபகம் இருக்குதா?” நமட்டுச் சிரிப்புடன் வினவியவனின் கன்னத்தை தட்டி தானும் புன்னகைத்தவள்...
“அதெல்லாம் நல்லாவே நியாபகம் இருக்கு... நீங்க இருந்தா இடம், பொருள், ஏவல் எல்லாம் ரெண்டாம் பட்சம் தான்” என்றவளின் பதில் அவன் சிந்தையை ஒரு கணம் உலுக்கிப் போட்டது. அவள் முகத்தை தன் விழிகளுக்கு நேர்பார்வையில் வைத்து தாடையை பிடித்துக் கொண்டவன்...
“உனக்கு என் மேல் அந்தளவுக்கு நேசமா யுகிமா?” கண்களுக்குள் உற்று நோக்கியபடி வினவியவனை பதவிசாக நோக்கியபடி...
“எனக்கு உங்க மேல் இருக்கிற காதலை வார்த்தையால் சொல்ல முடியாது” என்றவள், அவன் மார்புச் சட்டையை கொத்தாக இழுத்துப் பிடித்து இதழ்களை முற்றுகையிட்டிருந்தாள். அவளின் எதிர்பாராத இதழ் முற்றுகையில் கிறங்கிப் போனவன் சில கணங்களில் அவளின் செயல்களை தனதாக்கி கொண்டிருந்தான்.

****************************************
அர்ஜுன் மேனேஜிங் டிரைக்டர் (நிர்வாக இயக்குனர்) என பித்தளை நியான் பலகை மின்ன, அங்கிருந்த சுழல் நாற்காலியில் காப்பிகொட்டை நிறத்தில் கோட்சூட் அணிந்து முதலாளிக்கே உண்டான தோரணையுடன் அமர்ந்திருந்தான் அர்ஜுன். வெகு தீவிரமாக கோப்பில் ஆழ்ந்திருந்தவனை...
“அண்ணா உள்ளே வரலாமா?” என்ற குரலில் விழியுயர்த்தியவன்...
“வா தர்சன்” என்றவன் கனிந்த முகத்தில் மெலிதான முறுவலுடன் நோக்கினான்.
“என்ன தர்சன் போடி போயிட்டு வந்துட்டியா? டிராவல் எப்படி இருந்தது” என்று விசாரித்தான்.
“எல்லாமே சூப்பரா இருந்தது அண்ணா அந்த ஏலக்காய் தோட்டத்து சூப்பர்வைசர் தவிர”
“என்ன இந்த தடவையும் அவன் பிரச்சனை செய்தானா? ஏன் நீ என்கிட்டே சொல்லலை, சொல்லிருந்தா அடுத்த நிமிஷமே கிளம்பி வந்திருப்பேனே தர்சன்” என்று படபடவென்று பொரிந்தவனை நிதானமாக நோக்கியவன்...
“அண்ணா முதல்ல நீங்க கூல் ஆகுங்க” என்றதும் அர்ஜுன் சில ஆசுவாச மூச்சுகளை எடுத்துவிட்டு தன்னை சமாளித்துக் கொண்டதை நன்கு அறிந்த பிறகே பேச்சை தொடங்கினான்.



அன்புக்கு நீ அரிச்சுவடி -
பாகம்-1 (சிறு முன்னோட்டம் 2)

“அப்போ எனக்கு என்ன போஸ்டிங்?”

“இனி மேல் எனக்கு எல்லாமே நீதான்” என்றவனின் வார்த்தையில் திடுக்கிட்டு...
“என்னது” என்று உச்சக்கட்ட அதிர்வில் வினவினாள். அவளின் அதிர்ச்சியில் சுதாரித்துக் கொண்டவன்...
“ம்ம்ம்... அப்படின்னா நீ தான் என் பர்சனல் செக்ரெட்ரின்னு சொன்னேன்... ஒரு எம்டிக்கு பிஏ தானே எல்லாமே... இங்கே அப்பாயின்மெண்ட் பிக்ஸ் பண்றதுல இருந்து தினமும் செடுயல் என்னன்னு சொல்ற வரைக்கும் நீ தாங்கிற அர்த்தத்தில் தான் சொன்னேன்... ஆமாம் நீ என்ன யோசிச்ச?” அவன் சமாளித்துக் கொண்ட திருப்தியில் அவளிடம் பார்வையில் குறும்பு மின்ன வினவினான்.
“நான்... நான் ஒன்னும் நினைக்கலையே” என்று திக்கித் திணறியவளை கண்டு நாவை கடைவாயில் அடக்கி விஷமமாக புன்னகைத்தான்.
“என்ன செக்ரெட்டரி மேடம் ஓகே தானே” அடிக்கண்ணால் அவளை கூர்ந்து பார்த்தபடி வினவியவனின் விழிகளில் புன்னகை தொக்கி நிற்க...

“ஒகே எம்டி சார்” அவனின் உற்சாகம் அவளையும் தொற்றியிருக்க, மலர்ந்த புன்னகையுடன் கூறியிருந்தாள். அவளின் முத்துப்பற்கள் மின்னிய சிரிப்பில் அவனுள்ளம் அவளிடத்தில் விரும்பியே தொலைந்தது.
***************************
“திடிர்னு என்மேல காதல் பொங்கி வழியுது, ஏன் என்னிடம் ராத்திரிக்கு தேவை இருக்கிறதா?” என்று இகழ்ச்சியாக உதட்டை வளைத்தபடி கூறியவளை கண்டு அவன் முகம் சடுதியில் மாறிப் போனது.
“ம்ம்ம்... இதுக்கு பதில் சொல்லிருவேன் அசிங்கமா இருக்கும் பரவாயில்லையா?” என்றவன் அவள் பேச இடம் கொடாமல்...
“அப்படி தான் அந்த தேவைன்னாலும் பொண்டாட்டி உன்கிட்ட தானே அதை எடுத்துக்க முடியும், வெளியே தேடிப் போக முடியாது?” அவளுக்கு மட்டும் கேட்கும்படியான மிக மெல்லிய குரலில் காதை கடித்தான். அவன் வார்த்தையில் புத்தகத்தை கட்டிலில் விசிறியடித்துவிட்டு கடுமையாக முறைத்தவள்...
“அதானே பார்த்தேன் ஆம்பளை புத்தி ஆம்பளை புத்தி தான்” என்று வித்தாரம் பேசியவளை கண்டு அசராதவன்...
“ஆமாம் டி ஆம்பளை புத்தி தான், அதனால் இப்போ ஒரு குறையும் இல்லை... இப்போ எழுந்து வரியா இல்லையா?”
“வர முடியாது நீங்க போகலாம்”

“நீ பரிமாறினாதான் நான் சாப்பிடுவேன்னு சொன்னது மறந்திருச்சா?” என்றவனை வெட்டும் விழிப்பார்வையால் உரசியவளை...

நட்புடன்
காருராம்
 

Attachments

  • book fair.jpg
    book fair.jpg
    52.6 KB · Views: 3
  • அன்புக்கு நீ அரிச்சுவடி - பாகம் 1.jpg
    அன்புக்கு நீ அரிச்சுவடி - பாகம் 1.jpg
    323.7 KB · Views: 3
  • அன்புக்கு நீ அரிச்சுவடி - பாகம் 2.jpg
    அன்புக்கு நீ அரிச்சுவடி - பாகம் 2.jpg
    324 KB · Views: 4
Top