All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

புதிய முன்னோட்டம் & புத்தகம்

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிகளே...

நான் தான் காருராம் இது புதிய முன்னோட்டம் மற்றும் புத்தகமாக வெளிவந்த கதையை பற்றிய அறிவிப்புகள்...
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிகளே....

என் முதல் கதையான "இவள் காதல் தீவிரவாதி" மற்றும் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ இப்போது புத்தகமாக கிடைக்கும்.



புத்தகம் கிடைக்கும் இடங்கள்:

Srikala madam website,
Marina books
Udumalai.com
We can shopping online Trichy
Cbe Vijaya pathippagam
MDU malligai
Salem om Muruga
Trichy Revathi
Erode Indhu book park


IMG-20200116-WA0071.jpgIMG-20190918-WA0040.jpg
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே...

"மெய் தீண்டாயோ மென் தூறலே!" இவன் புதுசு கதம்ப சாதம் ரகம் படிச்சுட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்கோ தோழிஸ்...

*********************************
தன் எதிரில் இருந்தவளை கூர்மையான விழிகளில் துளைத்துக் கொண்டிருந்தான்... அவளோ 'அட கிராதகா!' என்பது போன்ற பார்வையை அவன்மேல் படிய வைத்து கொண்டிருந்தாள்... அவன் மேல் அவளுக்கு வெடித்துச்சிதற காத்திருக்கும் எரிமலை போன்று கோபம் வியாபித்திருந்த போதிலும் நடந்து முடிந்து விட்ட செயலில் மாற்றியமைக்க முடியாத நிஜம் நெற்றி பொட்டில் ஆணி அடித்தது போன்று உரைத்ததில் மௌனியாக அமர்ந்திருந்தாள்!

அவனுக்கு அவளின் நிலை பெரிதாக இல்லை போல்... அவளை அசாதாரணமாக பார்த்தவாறு அமர்ந்திருந்தவன். மௌனமாய் கடந்த நிமிடங்களை உடைத்தெறிய எண்ணி அருகில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்தவன் குளிர்பானம் ஒன்றை திறந்து அவளிடம் நீட்டினான்...

"இந்தா இதை குடி கொஞ்சம் தெம்பாக இருக்கும்" என்று இயல்பாக கூறியவனை கண்டு அத்தனை நேர பொறுமையை கைவிட்டவள் கண்கள் கோபத்தில் விரிய வெறிகொண்டவளாக சீறினாள்...

"அப்பப்பா! என்ன ஒரு கரிசனம்... இதுக்கு பதிலா ஒரு பாட்டில் விஷம் கொடுங்க குடிச்சுட்டு செத்து போறேன்... இனி நான் வாழ என்ன தகுதி இருக்கு" என்றவளின் குரல் கம்மியது... துணிச்சலாக ஆரம்பவித்தவளின் குரல் இறுதியில் நலிவடைய மனம் உடைந்து அழுகையில் கேவ ஆரம்பித்திருந்தாள்... அவளின் கோபமும், அழுகையும் அவனுக்கு பரிதாபத்தை வரவழைக்காது எரிச்சலை மூட்டியது...

"வாயை மூடுடி சும்மா வாய் இருக்குன்னு என்ன வேணா பேசிக்கிட்டே போவியா? நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்கமாட்டேன்... ஜாக்கிரதை!" என்று சுட்டுவிரலை நீட்டி கடுமையாக எச்சரித்தான்... அவனின் கடுமை பூமனம் கொண்டவளை நடுநடுங்க செய்தது...

"ப்ளீஸ்! என்னை விட்ருங்க நான் போகணும்" என்று கெஞ்சுதலாக கேட்டவளை கண்டு உதட்டை வளைத்து கேலி புன்னகை உதிர்த்தான்... அவனை புரியாது அப்பாவியாக பார்த்து கொண்டிருந்தவளை நோக்கி...

"இதுக்கு மேல நான் உன்னை வெளிய அனுப்புவேன்னு நினைக்கரியா என்ன? அப்படி ஒரு நினைப்பிருந்தா இனி மாற்றிக்க... இனி இதுதான் உன் இடம், இது தானே உன் வீடு..." என்றவன்...

"......." சற்றே இடைவெளி விட்டு... "நான் தான் உன் புருஷன்" என்று நிதானமாக கூறினான்... இப்போது கேலி புன்னகை உதிர்ப்பது அவளின் முறை ஆனது.

"என் உடம்பை தொட்டுட்டா நீங்க புருஷனா ஆகிற முடியுமா?" என்றவள் எழுந்து நிற்க... அவளை சலனமற்று பார்த்துக் கொண்டே...

"உண்மை தான்! ஆனா தாலி கட்டிட்டா புருசன் தானே? புருஷன் பொண்டாட்டி உடம்பை உரிமை கொண்டாடலாமே..." என்றவனை புரியாது பார்வை பார்த்துக்கொண்டிருக்க... அவளின் பார்வையை லட்சியம் செய்யாமல் மேலும் பேசலானான்...

"உன் கழுத்தில் பாரு" என்றதும் வேகமாக பார்த்தவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்! அவன் கட்டிய பொன்மங்கல்ய மஞ்சள் சரடு அவள் மார்பில் உரசிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து நோக்கியவளை வெற்றி பார்வை பார்த்திருந்தான்.

*******************************

"மதி!" என்ற அழைப்பில் திரும்பியவள் கண்களில் மின்னல் தோன்ற அவனை நோக்கி சென்றாள்...

"எப்படி இருக்கீங்க யுகேன்? அம்மா எப்படி இருக்காங்க?" என்று அன்னையை பிரிந்திருந்த ஆதங்கத்தில் மனம் நிறைந்த எதிர்பார்ப்புடன் அவனிடம் படபடத்தாள்...

அவளின் பேச்சில் அவன் மனம் துணுக்குற்றது அவள் அன்னை இருக்கும் இடம் அவளுக்கு தெரியாமல் இருப்பது என்பது அவன் மனதில் பெரும் சந்தேகம் ஊற்றை தோற்றுவித்தது... அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவனின் பதிலுக்காக காத்திருப்பதற்கான எதிர்பார்ப்பு அவளிடம் தெரியவர தன் சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு அவன் பேசலானான்...

"உங்க அம்மா இப்போ அங்க இல்லை மதி... அவங்க வேலையை விட்டுட்டு வெளியே போய்ட்டாங்க இப்போ அவங்க இருக்கிற இடம் கூட தெரியலை நானும் விசாரிச்சு பார்த்துட்டேன்" என்றதில் அவள் திடுக்கிட்டாள்!!

"அம்..மாக்..கு.. வெளியே யாரையும் தெரியாதே யுகேன்... எங்க போயிருப்பாங்க?" என்று யோசனையுடன் கேள்வியெழுப்பியவாறு தரையில் பார்வை பதித்தவளை கண்டு பரிதாபம் மேலோங்கியது... ஆனாலும் அவனின் ஊர்ஜிதத்தை கூறலானான்.

"எனக்கு தெரியாம இருக்கலாம்... ஆனா அவனுக்கு தெரியாம இருக்காது" என்றதும் சரேலென்று நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் அச்சம் இருந்ததை கண்டு புருவம் சுருக்கியவன் மேலும் பேசலானான்...

"மதி எதுக்கு இப்படி பயப்படுற..? நான் ஃபாரின் போயிருந்த சமயத்துல என்னென்னமோ நடந்திருச்சு ஆனா அதை பற்றி பேசி எந்த பயனும் இல்லை... அதனால, இனி என்னன்னு தான் பார்க்கணும் உனக்கு என்ன நடந்ததுன்னு முதல்ல சொல்லு அபராஜிதனை கண்டு ஊரே பயப்படலாம் ஆனா நான் பயப்படமாட்டேன்... ஏன்னா எனக்கு நீ முக்கியம் உன் சந்தோசம் முக்கியம் நான் உன்னை காப்பாத்துறேன் இந்த நிமிஷமே அந்த தாலியை கழட்டி எறிஞ்சுட்டு வா மற்றத்தை நான் பார்த்துக்கறேன்" என்றதில் அவள் அதிர்ந்து நிமிர...

"சார் தான் சொல்லுறாருல்ல தாலியை கழட்டி கொடுத்துட்டு போம்மா அவர் உனக்கு மறுவாழ்க்கை தருவாரு என்ன யுகேந்திரன் அப்படித்தானே?" என்று வார்த்தைகளை அம்பாக செலுத்தியவாறு சிவந்த கண்களுடன் இறுகிய முகத்துடனும் நெருங்கினான் அபராஜிதவர்தன்!! அவனின் பேச்சில் இருந்த கோபத்தை கண்டு உடல் அதிர நின்றிருந்தாள் பாவை!!

நட்புடன்
காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே...


"என் நினைவில் உறையும் பனிமலரே" என் மூன்றாவது கதையை முதன்முறையாக அமேசானில் பதிவிறக்கம் செய்துள்ளேன் அனைவரும் ஆதரவு கொடுங்கள் தோழிகளே படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை ரெவியூ பதிவு செய்யவும்.




நட்புடன்
காருராம்


IMG-20200122-WA0193.jpg
 
Top