Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான விமர்சனம்..ஹாய் ராஜிமா
கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கு..
கதையின் ஆரம்ப பதிவிலிருந்து இப்போதைய பதிவு வரை என்னோட ரியாக்ஷன்
மீராவிற்கு கார்த்திக் மீது உண்டாகும் அன்பு. ஆதியை கண்டதும் அது தடுமாறும் விதம் என்று உணர்வுகளின் போராட்டம் உங்கள் பாணியில் செம்ம
எங்கே கார்த்திக் ஏமாந்து விடுவானோ என்று ஏற்படக்கூடிய கவலையையும் தீர்க்கும் விதத்தில் அவனுடைய உணர்வுகளை அவனுடைய வாய்மொழியாகவே சொல்ல வைத்து ஒரு இறுகிய நட்பாகவும் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும் அமைந்த காட்சியமைப்பு அருமை.
°ஆதி°என்னவென்று சொல்வது. ஆரம்பத்திலிருந்து அவன் மீராவிடம் நடந்து கொண்டமுறைக்கு கோபம் தான் வந்திருக்க வேண்டும்..ஆனால் நீங்க கதையை கொண்டு சென்ற விதத்தில் ஐயோ இவனுக்கு அப்படி என்னதான் கஷ்டம் என்று பரிதாபபடத்தான் தோன்றியது..காரணம் அவனுடைய அப்பா என்று அறிய நேர்ந்ததும் ஆத்திரம் தான் வருகிறது..
டேய் அப்பா உன்ன கைமா பண்ணா என்ன
பணம் அந்தஸ்து ஓரு மனிதனை இப்படி மிருகமாக மாற்றுமா என்று திகைக்க வைக்கிறார்.
ஆதியின் இப்போதைய நிலை கண்ணீரை வரவைக்கிறது. அதற்கு மீராவின் மறுப்பும் ஒரு காரணமாய் அமைந்ததை என்ன சொல்ல..அதுவும் அவள் மீது தவறே இல்லாத பட்சத்தில்.
இப்படிப்பட்ட பணமுதலைகளிடம் வந்து மாட்டிக்கொண்ட மீரா எப்படி ஆதியை மீட்டு தன்னுடைம வாழ்க்கையை செவ்வைப்படுத்துவாள். அதற்கு அவள் எவ்வளவு போராட வேண்டுமோ என்று கவலையாக இருக்கிறது.
இதில் ஆதியின் மனநிலையை வேறு கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.
பத்தும்பத்தாதற்கு அந்த டாக்டர்..அவருடைய சூழ்ச்சியிலிருந்து ஆதியை மீரா எப்படி மீட்பாள்..
அந்த டாக்டரை அப்படி செய்ய சொல்வது யார்
இதில் ஜப்பானில் இந்த கல்யாணராமனின் அனுபவம் என்ன என்று ஒரு பக்கம் குழப்பம்
இந்த காவ்யா விஷயம் என்ன என்று மண்டை காயுது..
ஒருவேளை அந்த டாக்டர இப்படி செய்ய சொன்னது கார்த்திக்கோனு வேற சந்தேகம் எழும்புது...
அய்யகோ எப்படி எல்லாம் யோசிக்க வச்சிட்டீக்களே ராஜிமா. இது நியாயமா.....உங்களுக்கு தகுமா
அடுத்த அப்டேட்டுக்கு வெயிட்டிங்
அப்பாடா.. இந்த கதை யோசிக்க வைக்குது யோசிங்க யோசிங்க..