நிழல் தேடிடும் நிஜம் நீயடி!!!
உணர்வுகளுக்குள் ஊடுருவி,உணர்வுகளினுள் பிரத்தியேக உணர்வாகிய அன்பை, காதலின் பரிணாமத்தில் மனதினுள் ஆழமாக பதியவைத்த, வார்த்தைகளின் கோர்வையாடலே இக்கதை..!!
கதையாசரியரின் மற்றைய கதைகளைப் போலவே இக்கதையும் அவரின் கதைச் சொல்லி பாணியில் தணித்து நிற்கிறது.
அன்பின் பரிமாற்றத்தில்
அனைத்தும் சரியே
எதுவும் சாத்தியமே!!
இவ்வாக்கியங்களின் முன்மொழிவே ஆதி மீராவின் காதல்..
தவறுகளைத் தாங்கிபிடிக்க எல்லையில்லா காதலால் மட்டுமே முடியும்,இங்கு இவர்களிருவரின் காதலும் மற்றொருவர் தவறுகளைத் தாங்கிபிடித்து சரியாக்கியுள்ளது.
மனதின் விசித்திரமான மாற்றங்களை சரியாகவும், ரசிக்கும்படியாகவும், ஏற்றுக்கொள்ளும்படியாகவும், மற்றும் கவர்ந்திழுக்கும்படியாகவும் மாற்றியதில் உங்களின் வார்த்தை உபயோகத்திற்க்கே பெரும் பங்கு..!!
கதையின் போக்கில் பல இடங்களில் இடம்பெற்ற வார்த்தைகள் வியந்து நிற்கும் படியும், ரசித்து சொக்கி நிற்கும் படியும், கணமான மனதோடு வருந்தி நிற்கும் படியும்,மென்நகையூட்டி இதமடைந்து நிற்கும் படியும்,ஆச்சரியமூண்டு வியந்து நிற்கும் படியும்,உணர்வுகளின் மிகுதியில் சிலிர்த்து நிற்கும் படியும்,மற்றும் கோபத்தோடு செக்கி நிற்கும் படியும் செய்தன!!!..
கதையினுள் செல்வோம்....
கதையின் ஆரம்பம் மீராவின் பிறந்தநாளோடு வெகு அழகாக ஆரம்பிக்கப்பட்டது,பிறந்தநாள் பரிசாக கார்த்திக்கைப் பெறுவாள் என்றெண்ணியிருந்த வேளையில்,அதிரடி நாயகனாக மீராவை காபியால் குளிப்பாட்டி, பார்வையால் குளிர்வூட்டி,வார்த்தையால் சினமூட்டி களத்தில் குதித்தான் ஆதி.அவனது காட்சிகள் இடம்பெற்ற முதல் வார்தை முதல் இறுதி வார்த்தை வரை ஈர்த்துக்கொண்டே இருந்தான்..மீராவைப் போலவே நானும்(நாமும்) அவனால் கவரப்பட்டு அவனிடம் கட்டுண்டு நின்றேன்(நின்றோம்)..
எவ்வளவு துல்லியமாக மீராவின் ஈர்ப்பைக் கணித்துவிட்டான்!!!அவன் மீராவைக் கணிக்கும் விதம் பெரும் வியப்பே!!
மீராவின் நிலையறிந்ததும் அதை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளாமல் விலக நினைத்து மீராவை விலக்கி வைத்தது,கார்த்திக்கிடம் எச்சரிக்கை செய்தது,ஹரிஹரனிடம் இவர்கள் உறவைச் சொன்னது, மீராவிடம் கோபமாக நடந்துக்கொண்டது, மீராவிற்கு அவளது உணர்வை புரியவைத்தது, பின்பு மீராவிடம் விலகி நின்றதென அனைத்து செயல்களுமே ஆதியின் குணயியல்பை வெகுவாக வெளிக்காட்டின..!!
காதலும் போராட்டமும் பிரிக்க முடியாத இரட்டைப்பிறவிகள் போல்,இங்கு இவர்களின் காதலிலும் போராட்டம் வெகுவாக வேறு வேறு ரூபத்தில் இடம்பெற்றன.காதலுக்காக காதலர்கள் இருவரும் சேர்ந்து போராடுவது நாம் கேள்விப்பட்ட விடயம்.
ஆனால்,
இங்கு தன் காதலுக்காக தன் காதலனிடமே போராடும் நிலமைக்குத் தள்ளப்படும் மீரா ஒருபுறமும் , பெற்றவரின் கைப்பாவையாக இருக்க விரும்பாமல் முடிவெடுத்து போராடி அதில் வெற்றி பெற முடியாமல் கைதியாகி நின்று,ஒருவேளை மீராவின் காதலை ஏற்றால் தன் வாழ்வோடு சேர்ந்து அவளது வாழ்வும் போராட்டமாகிவிடுமென்று தன் மனதினிடமே மீராவின் காதலை விலக்கும்படி போராடும் ஆதித்யா ஒருபுறமும் இருப்பது விதியின் வஞ்சனையோ!!!
விதியின் வஞ்சனையை காதல் வெல்லும்(வென்றது)!!
இவர்களின் காதலுக்கான போராட்டம்
இவர்களிடமிருந்தே தொடங்கியது..
ஆதியின் அன்மைக்காக போராடும் மீரா, மீராவின் அன்மையில் போராடும் ஆதி, இவர்களிடம் போராடும் காதல் என அனைத்துப் போராட்டங்களும் உணர்ச்சிக் குவியல்களே!!!
கார்த்திக்கிடம் தன்னிலையை விளக்கி சரிசெய்துவிட்டு,ஆதியின் காதலுக்காக பல சொல் அம்புகளைத் தாங்கி போராட்டத்தைத் துவங்குகிறாள் மீரா.அதற்கு கார்த்திக் உதவியது கார்த்திக்கின் மீது இவ்விடத்தில் நன்மதிப்பையே உருவாக்கியது..
ஒருவழியாக மீராவின் காதலை ஏற்றுவிட்டான் என்று நிம்மதி பெருமூச்சொன்றை விடும் வேளையில், மீராவைத் திருமணமும் முடித்து,அவளுள் புதைந்து, இந்தியாவிற்கே கிளிம்பிச்சென்றுவிட்டான் இந்த புதிரானவன்..
தன் விருப்பதிற்கு மாறாக ஒரு சொல்லைக் கூடச் சொல்லாத குடும்பத்தினரை தவிர்த்து தன் திருமணத்தை அவள் நடத்திக்கொள்ளும் தீர்க்கமான நிலைக்கு அவள் தள்ளப்பட்டது வருத்தமளித்தது.
இந்தியா வந்து தன் நிச்சயதார்த்தத்தை லாவகமாக நிறுத்தும் ஆதியின் செயல் சாமர்த்தியமே.ஆனால் தனது தந்தை மற்றும் மகிழனின் சூழ்ச்சியில் வீழ்வது, வெற்றிபெற்றும் பாதிக்கப்படும் அவனது நிலையையே பறைசாற்றுகிறது..
பெற்றோர்களை மீறிய திருமணம், திருமண உறவில் ஈடுப்பட்டது, திருமணமான அடுத்த நாளில் ஆதி சென்றது, நான்கு நாட்கள் அழைக்காமல் இருந்தது, அழைத்தும் தன்னைத் தன் குடும்பத்தினரின் முன்பு தவறாக பேசியது, தன் தேர்வு தவறானது,குடும்பத்தினரின் ஒட்டாத தன்மை,தந்தையின் விபத்து என்று எத்தனை வகையான சஞ்சலங்களில் மீரா உழன்றுகொண்டிருந்திருப்பாள் என்றெண்ணும் போது பாரம் தானாக அதிகரிக்கிறது.
இந்நிலையிலும் தன் காதலுக்காக அவள் ஆதியிடம் வர நினைப்பதும்,அதற்கு அவளது குடும்பம் சம்மதிக்கும் விதத்திலும் நிச்சயமாக தன் மகளின் மேல் பெற்றோர் வைத்திருக்கும் நம்பிக்கையே வெகுவாக வெளிப்படுகிறது..
மீரா சிறந்த பெற்றோர்களையே பெற்றிருக்கிறாள்..
ஆதியிடம் வந்து சேர்ந்ததும் அவளது வாழ்க்கைகான போராட்டமும் வலுப்பெற்றது.
நிஜ உலகத்தினுள் உள்ளவர்களின் வஞ்சகம், துரோகம்,ஏமாற்றுதல்,
தவறு,சுயநலம் என்ற பலவகை உணர்வுகளால் சுழற்றியடிக்கப்பட்டு அக்கணத்தினை மனதினால் தாங்க முடியாமல் தன்னைச் சுற்றி தானே ஒரு நிழல் உலகத்தினை உருவாக்கிக் கொண்டு சஞ்சரிக்கிறான் ஆதி..
இவ்விடத்தில் அவனது ஓவியங்கள் மீராவிடம் அவனது உரையாடல்கள் என அனைத்து ஆசிரியவரின் வார்த்தை உபயோகத்தின் மூலம் உயிர்பெற்றிருக்கும்..இந்நிலையிலும் ஆதியின் சொல்லாடல்கள் என்னை(நம்மை)கட்டிப்போடச் செய்தது என்பதே உண்மை!!
மீரா வந்தபிறகு,தொலைந்து போன நிஜமாகிய தன்னவனை தன் காதல் கொண்டு மீட்கப் போராடுகிறாள்..மர்மம் நிறைந்த ஆதியின் வாழ்க்கை, ஆதாயங்களுக்காக மட்டும் ஆதியிடம் அவளை நெருங்கச் செய்த மற்றவர்கள்,நிலையில்லா பிடிமானம்,மன உளைச்சலில் போராடும் ஆதி என்று விதி எவ்வளவு சூழ்நிலைகளை தந்து அவளை நிந்தித்தாலும், இக்கட்டத்தில் ஆதியை மீட்க போராடும் அவளது காதல் மெய்சிலிர்க்க வைத்தது! எந்த அளவு மனதைரியம் இச்சிறுப்பெண்ணுள்!!!
ஆதியின் குடும்பம்,ஒரிரு வார்த்தைகளில் கைப்பாவைகள்..ஆனந்த சங்கர் சுயநலத்தின் உச்சம்..பாவம் காதலின் ஆழம் அவருக்கு புரியவில்லை..மனமிருந்தால்தானே புரிவதற்கு!!
ஆதியின் இளமை முதல் நடந்த சம்பவங்கள் அனைத்தும்தான் அவனின் மனப்போராட்டத்திற்கான காரணிகளே.பிறர் செய்த தவறுகளுக்கான குற்றணர்வை அவன் சுமந்து கொண்டதுதான் அவனின் இந்நிலைக்கு காரணமாகியது..போராடி போராடி ஒரு கட்டத்தில் ஓய்ந்துபோய் கைப்பாவையாகவே இருந்துவிட்டேன் என அவன் கூறுமிடம் மிக்க கணமானவை..இந்நிலையும் அவன் அனுமதித்தால் மட்டுமே!! இக்காட்சிகளிலும் பல இடங்களில் வியக்க வைத்தான் ஆதி..சோமுவிடம் மகிழனிடம் அவனது உரையாடல்கள் ஆச்சரியமூட்டின..
காதலால் எந்த நிலையையும் மாற்ற முடியும்,அளவில்லா அன்பு எந்த நிலமையிலிருந்தும் மீட்டெடுக்கும் என்பது இங்கு மீராவின் காதலால் நூறு சதவீதம் நிரூபனமாகியுள்ளது..
ஆனந்தசங்கர்,மகிழன் மற்றும் கார்த்திக் இன்னும் எத்தனை பேர் வந்தாலும், எவ்வளவு சூழ்ச்சிகள் செய்தாலும், விதி எவ்வளவு போராட்டங்களை முன்வைத்தாலும் அளவில்லா காதலைக் கொண்டு மீண்டு மீட்டு வருவார்கள் இக்காதலர்கள்..!!
தன்னிலை உணராத போதும் மீராவின் காதலை உணரும் ஆதியின் காதல் மெய்சிலிர்க்க வைக்கிறதெனில்,தன்னவனின் நிலை உணர்ந்தும் அவன் மீது ஈடில்லா நேசத்தைக் காட்டும் மீராவின் காதல் பிரமிக்க வைக்கிறது!!!
ஆதி!!!!! என்ன மாதிரியான பாத்திர வடிவமைப்பு தனக்கு சரியென்றாலும், தவறென்றாலும் அவன் அனுமதித்தால் மட்டுமே...மீராவை ஆட்டிப்படைப்பதும் பின்பு அவளிடமே அடைக்கலம்புகுவதும், முகப்பாவனைகளில் மற்றவர்களை கண்டறிவதும்,தனக்கு தவறென்று தெரிந்து அணுகவிடுவதும்,மற்றவரிகளின் தவறினை இவன் சரியாக்க நினைப்பதும்,சரியாக்க முடியாமல் இவன் தனித்து நின்று தவித்துப் போவது, மீராவிற்காகவே ஊரறியா திருமணவாழ்விற்குச் சம்மத்தித்தென வெவ்வேறு பரிணாமங்களில் உள்ள உணர்வுகளின் வெளிப்பாடாக இருந்து, படிப்பவர்களை உணர்ச்சிமிகச் செய்து அவன்வசம் இழுக்கிறான்!!!
மீரா!!! வாழ்வில் இவள் போல் காதலி அமைந்துவிட்டாள் வேறென்ன வேண்டும்.. ஆதியினால் உருகுலைந்து போன நிலையிலும் ஆதியின் மீது இவள் கொண்ட காதல் திகைக்கவைத்தது..காதல் மொழிகளென எதுவுமில்லை, பார்த்த பத்து நாட்களில் பழகி புரிந்து கொள்ள வாய்ப்புமில்லை, மூன்று நாட்களில் அவளது இருப்பத்திமூன்று வருட வாழ்க்கையை மாற்றிச் சென்றுவிட்டான் என சூழ்நிலைகள் அணைத்தும் எதிராகயிருந்தாலும் அவள் அதை எதிர்கொண்டு ஆதியைக் காணச்செல்வதும், அவனது நிலைக் கண்டும் மனம் தளராமல் போராடி அவனை மீட்பது காதலின் உச்சம்!!!
காதல்!காதல்!காதலென!
ஆழ்மனதினுள் காதலை
ஆர்ப்பரித்து கொண்டாடி
படிக்கும் இதயங்களை
மகிழ்விக்கிறது இக்கதை...
(என் பார்வையில் கதை முழுவதும் காதலே காதலே காதலே!!!)
காதலில் எப்படி,காதலிக்கிறோம் என்பதை விட காதலிக்கப்படுகிறோம் என்பது எண்ணிலடங்கா சந்தோஷத்தை தருகிறதோ,அதுபோல் இங்க காதல் கதைகளை எழுதுவது காட்டிலும் அதனை ரசித்து படிக்கிறோமென்பது மென்மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது..
ஆயிரம் கதைகள் படித்தாலும் மனதோடு நெருக்கமாகும் கதைகளும் கதாபாத்திரங்களும் வெகு குறைவே..அவ்வகையில் ஆதியும் மீராவும் மனதோடு மிக மிக நெருக்கமாகிவிட்டார்கள்.. நெருக்கம் என்பதைவிட ஆழப் பதிந்துவிட்டார்கள்..அதுவும் என் மனதில் புதைந்தே விட்டார்களென கூறலாம்..!!
நிழலவனின் தேடலில் நிஜமானவள் கிடைக்கப்பெற்றுவிட்டாள்..
காதலால் நம்மை திளைத்தவர்களை வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்..!!
#காதல் செய்வோம்......❣
#நிழல் தேடிடும் நிஜம் நீயடி....❤
கதையை படிக்கும் போது இப்பாடல் என்னுள் எதிரொலித்துக்கொண்டே இருந்தது...
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்.!!!!