All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி - கதை திரி(ரீரன்)

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 14



அடுத்த நாள் காலையில் பத்திரிக்கையாளர்களை அழைத்த ஆனந்த்சங்கர், வெடிக்குண்டு மிரட்டல் விசயமாக கமிஷனரிடம் புகார் அளித்துவிட்டதாகவும்… அவர்கள் எங்களுக்கு பாதுகாப்பு தருவதாக வாக்களித்திருக்கிறார்.. என்று பொய்யாக அவர்கள் பரப்பி விட்ட செய்திக்காக பேட்டியளித்தார். அன்று அனைத்து ஊடகங்களிலும் அவர்கள் பரபரப்பான செய்தியாக அடிப்பட்டார்கள். ஆனந்த்சங்கருக்கு சிறிது பெருமையாக கூட இருந்தது. ஆனால் பெண் வீட்டினர் மற்றும் உறவினர்களும்.. நண்பர்களும் துக்கம் விசாரிப்பது போல் அழைத்து விசாரிக்கவும் ஆனந்த்சங்கருக்கு மீண்டும் கோபம் தலை தூக்கியது. கூடவே பெண் வீட்டார் அடுத்த பத்து நாட்கள் கழித்து நிச்சயதார்த்ததிற்கான தேதி குறிக்கவும்.. ஆனந்த்சங்கர்.. இந்த தடங்கலால் நல்ல காரியத்தை இன்னும் சிறிது நாட்கள் தள்ளிப் போடலாம் அபச குணம் மாதிரி இருக்கிறது என்றுச் சமாளித்துவிட்டு.. அதற்குள் அவர்கள் புதிதாக போட்ட ஓப்பந்தபடி அதற்கான வேலையை ஆரம்பிக்கலாம் என்றுக் கூறவும்.. அவர் ஒத்துக் கொண்டார்.

ஆதித்யாவிற்கு நிச்சயத்த பெண் கீர்த்தி அவனை சந்திக்க வேண்டும் என்றுக் கேட்கவும்.. இந்த வெடிக்குண்டு மிரட்டல்.. அடுத்த வாரிசான ஆதித்யாவிற்கு வைத்திருக்கும் குறி என்பதால் அவனை மீண்டும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறிச் சமாளித்தார்.

இவ்வாறு திடுமென ஏற்பட்ட மாற்றத்தை தந்திரத்துடன் சமாளித்தார். தனது அறையில் பலத்த யோசனையுடன் இருந்த ஆனந்த்சங்கரின் முன் விஜய் வந்தான்.

“ஸார்..!” என்று அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே வந்தவன்.. “ஸார்! ஆதித்யா ஸார் யாரை மேரேஜ் செய்துட்டாங்க மற்றும் அவங்களைப் பற்றிய விபரங்களை கலெக்ட் செய்துட்டேன் ஸார்! அந்த பெண் பெயர் மீரா! இந்திய வம்சவளி குடும்பத்தை சேர்ந்த அவர்கள் ஜெர்மனியிலேயே செட்டில் ஆகிட்டாங்க..! மீரா கார்த்திக்குடன் வேலை செய்யறாங்க..! அடுத்த தகவல் எனக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது ஸார்! ஆதித்யா ஸார் கம்பெனிக்கு சென்ற நாள் அன்று மீரா அவங்களுக்கு பர்த்டே..! அன்னைக்கு அவங்க வீட்டில் நடந்த பார்ட்டியில் ஸாரும் கலந்துக்கிட்டாரு.. அங்கே அவங்க தன்னோட பியன்ஸியாக கார்த்திக்கை அறிவித்தாங்க..” என்றான்.

ஆனந்த்சங்கர் “வாட்..” என்றார்.

விஜய் தொடர்ந்தான். “எஸ் ஸார்! அதன் பின் அடுத்த நாட்கள் மூவரும் ஒன்றாக தான் சுற்றியிருக்கிறாங்க..! அந்த பழக்கத்திற்கிடையே இவங்க இருவருக்கும் லவ் ஏற்பட்டிருக்கலாம் என்றுத் தெரிகிறது ஸார்..” என்றான்.

ஆனந்த்சங்கர் தனது தாடையைத் தடவியவாறு தனக்கு தானே பேசிக் கொண்டார். “சோ..! ஆல்ரெடி இந்த பெண் ஆளை மாற்றித் தான் வந்திருக்கிறாள். ஆனால் நேற்று அந்த பெண் அவனை விட்டு சென்றுவிட்டால் என்றால் நான் சொல்கிறே பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றுச் சொன்ன பொழுது.. ரொம்ப கான்பிடென்ட்டா ஒத்துக்கிட்டான்.” என்கவும், விஜய் அவரது பேச்சில் இடையிட்டவன், நேற்று ஆதித்யாவுடன் பேசியதைச் சொன்னான்.

அதைக் கேட்டவர் கோபத்துடன் எழுந்தார். “உன்னை யார் இப்படியெல்லாம் அவனிடம் பேச சொன்னது..” என்று இரைந்தார்.

விஜய் நடுங்கியவனாய் “ஒருவேளை அந்த பெண்ணிடம் கொண்ட மயக்கத்தை அவர் காதல் என்று தவறாக புரிந்துக் கொண்டரோ என்றுத்தான் ஸார்! அப்படிச் சொன்னேன்.” என்று தான் அவ்வாறு பேசியதற்கு விளக்கம் கொடுத்தான்.

ஆனந்த்சங்கரின் நினைவுகள் எங்கோ என்றுச் சென்று பின் மீண்டும் வந்தது. “ஆதித்யாவை தெளிவு படுத்துவதாக நினைத்து நீ இன்னும் அந்த பெண்ணை அவன் தக்க வைத்துக் கொள்ள வெறியை ஏற்றி விட்டுட்டு வந்திருக்கிறே!” என்று உறுமினார்.

விஜய் “ஸார்..” என்றுத் திருதிருவென விழித்தான்.

ஆனந்த்சங்கர் தாழ்ந்த குரலில் “அவன் சந்தித்த முந்தைய அனுபவங்களால்.. காதல் மற்றும் கல்யாண வாழ்வின் பக்கமே அவன் போக மாட்டான். அதனால் தான் மேரேஜ் செய்து வைத்தால் கட்டுக்குள் வருவான் என்று நினைத்தேன்.” பின் தனக்கு தானே பேசுபவர் போல் சத்தமாக யோசித்தார்.

“ஆனால் போன இடத்தில் வேறு ஒருவனின் காதலியாக இருந்தவளை இவன் பக்கம் இழுத்திருக்கிறான் என்றால்.. ஒன்று இந்த நிச்சயத்தை நிறுத்தவென்று ஆதித்யா இந்த ஏற்பாட்டை செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை என்றுச் சொல்கிறான். அப்போ நிச்சயம் பொய் சொல்ல மாட்டான். அப்போ அந்த பெண்ணிற்கு இவனின் மேல் அந்தளவிற்கு காதல் இருந்திருக்க வேண்டும். இவனும் இவனது பணம் கண்டோ தோற்றத்தைக் கொண்டோ மயக்கும் பெண்ணிடம் அத்தனை நம்பிக்கை வைத்து எனது சவாலுக்கு சம்மதித்திருக்க மாட்டான். சோ.. அந்த பெண் இவனைக் காதலித்து.. அதில் மகிழ்ந்து அதை இவன் ஏற்றிருக்கிறான்.” என்று ஆணிவேரை சரியாக பிடித்துவிட்டார்.

பின் “சோ அந்த பெண்ணிடம் இவனுக்கு இருப்பது நல்ல அபிமானம் மட்டுமே..! இது தெரியாமல் அவள் அவனை விட்டு சென்று விடுவாள் என்றுச் சொல்லி நானும்.. அந்த பெண்ணை கீப்பாக வைத்துக் கொள் என்றுச் சொல்லி நீயும் மேலும் கிளப்பி விட்டிருக்கிறோம்.” என்று பெருமூச்சு விட்டவர்.. மனதிற்குள் தன்னையே திட்டிக் கொண்டார்.

பின் விஜயிடம் திரும்பி “அந்த பெண்ணை இங்கிருந்து கிளப்ப வேண்டுமென்றால்.. அந்த பெண்ணின் மேல் ஆதித்யாவிற்கு வெறுப்பு வர வேண்டும். ஆதித்யாவின் கோபமும் வெறுப்பையும் சம்பாதிப்பவர்களை அவனது ஜென்ம விரோதியாக பார்ப்பான். அவனது கோபத்தையும் வெறுப்பையும் தாங்கிக் கொண்டு எவராலும் இருந்து விட முடியாது. அந்த பெண்ணை இவனே வெளியேற்றி விடுவான்.” என்றவர்.. தொடர்ந்து “இப்போதைக்கு அந்த பெண் வரட்டும்.. அவனுடன் இருக்கட்டும். எப்படியும் ஊருக்கு தெரியாமல் அவனுடன் இருக்க மாட்டாள். அப்படியே பிரச்சினை ஆரம்பித்து வெடிக்கட்டும். அப்படி வெடிக்கவில்லை என்றால்.. நான் பற்ற வைக்கிறேன்.” என்று வன்மமாக சிரித்தார்.

விஜய் சென்றதும்.. சிறு ஏளனத்துடன் சிரித்து “ஆனால் என்னிடம் அவனது கோபம், வெறுப்பு ஒன்றும் செய்யாது..” என்றார். அப்பொழுது அவருக்கு ஆதித்யா சொல்லியது நினைவிற்கு வந்தது.

“எனது விசயத்தில் உங்களுக்கு எல்லாமே தோல்வி தான் டாட்..”

---------------------------------------------------------

மேற்கூரையாக போடப்பட்ட கண்ணாடி விட்டத்தின் வழியாக தெரிந்த நீல வானத்தைப் பார்த்தவாறு தரையில் படுத்திருந்த ஆதித்யா இன்டர்காம் ஒலித்திடும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தான். மெதுவாக எழுந்தவன்.. அதை ஆன் செய்யவும்.. அந்த பக்கம் அந்த வீட்டின் காரியதார்சி பேசினான்.

“ஸார் டாக்டர் வந்திருக்கிறார்..” என்றுத் தயக்கத்துடன் கூறினான்.

ஆதித்யா “நான் ஒகே அவர் வரத் தேவையில்லை…” என்ற பொழுதே ஆதித்யாவின் மருத்துவர் மகிழன் பேசினார்.

“ஹாப்பி டு இயர்.. ஆதித்யா! மனதில் எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவாக இருக்கீங்களா..? செய்வதைத் தெரிந்து செய்கிறீர்களா..? மற்றவங்க மனம் புண்படும்படி பேசுவதில்லையா..? எடுத்த முடிவில் ஸ்ட்ரான்ங்கா இருக்கீங்களா..? உங்க தந்தை மாதிரி எப்படி பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ளறீங்களா..?” என்று வரிசையாக கேட்டார்.

மருத்துவர் வரிசையாக கேட்க கேட்க அனைத்து கேள்விகளுக்கும் அவனது மனது இல்லை என்ற பதிலை அளித்துக் கொண்டு வந்தது. அவர் கடைசி கேள்வி கேட்டு முடித்ததும் ஆதித்யா “வாங்க..” என்றுவிட்டு இன்டர்காமை துண்டித்தான்.

மகிழன்.. ஆதித்யா மனரீதியாக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பொழுது.. அவனுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்! ஆனால் அவர் ஆதித்யாவிடம் மருத்துவரை போல் அல்லாது உற்ற தோழன் போல் பேசுவார். அவனது மனதில் அடைத்து வைத்திருப்பதை பேசியே வெளிக் கொண்டு வருவார். ஆதித்யாவும் தன் மனதின் பாரங்களை ஒருவரிடம் சொல்வதால் பாரத்தை இறக்கி வைத்த உணர்வில் நிம்மதி கொள்வான். அதனால் எப்பொழுதும்.. அவரிடம் பேச விரும்புவான். ஆனால் அவனின் தந்தை மனநலத்திற்கு வைத்தியம் என்ற பெயரில் அவரை அவனிடம் அனுப்புவதைத் தான்.. அவன் விரும்பவில்லை. அதனால் பார்க்க விருப்பமில்லை என்றவன்.. மகிழன் அவன் மீதிருந்த அக்கறையின் பெயரில் விசாரிக்கவும்.. சிறிது பேசினால் நன்றாக இருக்கும் என்று அவரை வரச் சொன்னான்.

சிறிது நேரத்திலேயே வெண்ணிற சட்டையும் அதனுடன் போட்டிப் போடும் வெண்சிரிப்புமாக மனநல மருத்துவர் மகிழன் உள்ளே வந்தார்.

ஷோபாவில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த ஆதித்யா “என்ன டாக்டர் பைத்தியக்காரனை பார்க்க பயமேயில்லாமல் வறீங்க..” என்றுச் சிரித்தான். அவரும் சிரித்தவாறு “மனநலம் பாதிக்கப்பட்டவங்களைப் பார்த்து எனக்கு பயம் இருக்காது.. அவங்களைச் சந்திக்க ரொம்ப பிடிக்கும். மேலும் அந்த சாக்கில் உன்கிட்ட பேச முடியும் பொழுது.. இன்னும் சந்தோஷமாக இருக்கும் ஆதி..” என்றார்.

அதற்கு ஆதித்யா “பிடிக்காமல் போகுமா..! உங்களுக்கு வருமானமே அவங்களால் தானே..” என்றான்.

அதற்குள் அவர் முன் வந்து அவனுக்கு நேராக அமர்ந்த மகிழன் “வாவ்! ஆதி செமையா பதிலடிக் கொடுக்கறீங்க..! பாவம் உங்களை திருமணம் செய்துக் கொண்ட பெண்..! ஆளைப் பார்த்து மயங்கிட்டாங்க என்று நினைக்கிறேன். மை ஹான்ட்நேம் பாய்..! நீங்க செம ஷார்ப் ஆச்சே! ஆனால் ஒரு பெண் உங்களைக் காதலித்தார் என்றதும் எப்படி உங்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. அந்த பெண் அவ்வளவு அழகா இருந்தாங்களா..?” என்றுக் கேட்டார்.

அதற்கு ஆதித்யா “அழகு தான்…!” என்றான்.

“அதனால் ஒத்துக்கிட்டிங்களா..?” என்றுக் கேட்டார்.

“இல்லை..! அவள் என்னை லவ் செய்தாள்..” என்று ஆதித்யா கூறினான்.

“அவங்க தான் காதலை முதலில் சொன்னாங்களா..?” என்றுக் கேட்கவும்.. ஆதித்யா ஆம் என்றுத் தலையை ஆட்டினான்.

மகிழன் “நீங்க அவளை லவ் செய்யலையா..?” என்றுக் கேட்டார்.

அதற்கு ஆதித்யா “லவ் என்றால் என்ன மீனிங்..?” என்றுக் கேட்டான்.

மகிழன் சிரித்தவாறு “நீங்க என்ன மீனிங் செய்யறீங்க..” என்று அவனிடமே கேட்டார்.

ஆதித்யா “என்ன மீனிங் என்று எனக்கு தெரியாது. ஆனால் எப்படியெல்லாம் இருந்தால்.. அதன் பெயர் காதலில்லை என்றுத் தெரியும்.” என்றான்.

மகிழன் “எப்படியெல்லாம் என்கறீங்க..” என்றுக் கேட்டார்.

ஆதித்யா தாடை இறுக “துரோகம், ஏமாற்றுதல் மட்டும் செய்ய கூடாது.” என்றான்.

மகிழன் “அப்போ இது இருந்தும் அன்பாக இருப்பாங்க என்கிறீங்களா..!” என்றார்.

ஆதித்யா “ஆமாம்..!” என்று மட்டும் சொன்னான்.

அதற்கு மகிழன் “அந்த பெண் உங்களுக்கு அன்போடு நம்பிக்கையும்.. மனபலத்தையும் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்று கையைக் குலுக்க கையை நீட்டினார்.

ஆதித்யாவும் அவரது கரத்தைப் பற்றி குலுக்கவும்.. மகிழன் “அந்த பெண் என்றுச் சொல்கிறேனே பெயர் சொல்லலாமே..” என்கவும்.. ஆதித்யா சிரித்தவாறு “மீரா..” என்றான்.

மகிழன் “நைஸ் நேம்..! வாவ்! நினைச்சுப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கு..! இனி நீ தனி ஆள் கிடையாது. இப்போ உன் லைஃப் இன்னொரு பெண்ணுடன் வாழப் போகிறே..! சங்கர் குரூப் ஆஃப் கம்பெனியின் இளைய வாரிசின் மனைவியை எல்லாரும் கொஞ்சம் பொறாமையாக பார்க்க போகிறாங்க..! ஜெர்மனியில் சந்தித்து பத்து நாளில்… மேரேஜ் செய்துக் கொள்கிற அளவிற்கு இருக்கும் உங்க லவ் ஸ்டோரி தான் டாக் ஆஃப் த டவுனாக இருக்க போகிறது.” என்று அவர் சொல்லிக் கொண்டே போக ஆதித்யாவின் தலைக் கவிழ்ந்தது.

“என் வைஃப் என்று எனக்கு தெரிந்தால் போதும்..!” என்றான்.

மகிழன் “அதெப்படி! உன் வைஃப் என்றுப் பெருமையாக சொல்லிக் கொள்ள ஆசைப்படுவாங்க தானே..! அவங்க அதைத்தான் விரும்புவாங்க..! இவ்வளவு பெரிய ரிச்மேன் என்பதை விடவும்.. இவ்வளவு ஹான்ட்சேம்மாக இருக்கும்.. உன்னுடைய வைஃப் என்றுப் பெருமையாக சொல்ல வேண்டும். அது கூட அன்பு தான்..! பெண்கள் என்றில்லை.. மனிதர்கள் எல்லாரும்.. சிறந்ததைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். மீராவின் சிறந்த தேர்வு நீ..” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

பின் “ஒகே ஆதித்யா..! மேட்டருக்கு வரலாம். நீ ரொம்ப டென்ஷனாக இருக்கிறே..! பழையபடி கத்தினே..! அதனால் அன்றைக்கு மாதிரி எதாவது நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது என்றுத்தான் என்னை அனுப்பி வைத்தார். ஆனால் எனக்கு நீ ஓகே மாதிரி தான் தோன்றுகிறது. உன் அப்பாவிடம் அதையே சொல்கிறேன். விஷ் யு எ வெரி ஹாப்பி மேரிடு லைஃப்! எப்படியும் ரிசப்ஷன் வைப்பீங்க..! அப்போ மிஸஸ் மீராவை பார்த்துக் கொள்கிறேன். பை..” என்றுவிட்டு அவர் அங்கிருந்து வெளியேறினார்.

ஆனால் ஆதித்யாவின் மனதில் மீண்டும் மீராவை பற்றிய குழப்பம் தோன்றியது.

மீரா அவனை காதலிக்கிறாள்.. உறவு என்று இல்லாமல் அவனைப் பார்த்து தன் மேல் அன்பு கொண்ட பெண்ணுடன்.. இனி தன் வாழ்நாள் கழிய போகிறது என்பதைத் தவிர ஆதித்யாவால் வேறு எதையும் யோசிக்கவில்லை. அதனால் தான் ஆனந்த்சங்கர் கேட்டதும் ஒத்துக் கொண்டான். தற்பொழுது மகிழன் சொல்லியதைக் கேட்டு மீரா அதைத்தான் விரும்புவாளோ என்றுக் குழம்பினான். மேலும் மகிழன் அழுத்தி சொன்ன மீராவின் சிறந்த தேர்வு நீ..! என்ற வார்த்தை அவனுக்கு பல்வேறு யூகங்களை தோன்றுவித்தது. எதிர்மறையாக செல்லும் எண்ணங்களை முயன்றுக் கட்டுப்படுத்தியவனுக்கு தலை வலிப்பது போல் இருந்தது.

ஆதித்யாவின் அறையில் இருந்து வெளியேறிய மகிழன் தனது செல்பேசியை எடுத்து யாரையோ அழைத்தான்.

“ஸார்! ஆதித்யாவை மீண்டும் அதே நிலையில் கொண்டு வந்தாச்சு..! மனரீதியாக சொன்னால்.. அவனுடைய எண்ணங்களைத் தேக்கி வைத்தாச்சு..! நான் சொன்னதைத் தவிர்த்து வேறு அவன் யோசிக்க மாட்டான். அப்படி யோசித்தாலும் அது சரியா என்றே குழப்பம் வரும்..! அந்த பெண் மீராவை பற்றியும் சில எண்ணங்களை மாற்றி விட்டேன். அவரிடம் இனி எதிர்மறை எண்ணங்கள் தான் இருக்கும். இனி சுற்றியிருப்பவர்கள் மற்றும் சூழ்நிலை பொருத்து அவர் அந்த நிலையில் இருப்பார். அதைப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு!” என்றார்.

அந்த பக்கம் என்ன சொன்னார்களோ.. பெருமையுடன் சிரித்த மகிழன், “வழக்கத்தை விட என் அக்கவுண்ட் இந்த முறை அதிகமாக நிரம்பும் என்று நம்புகிறேன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவர்.. ஆனந்த்சங்கரை காண சென்றார்.

---------------------------------------------

மீரா தன் கையில் இருந்த செல்பேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். இன்றோடு ஆதித்யா இந்தியாவிற்கு சென்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது.

மீரா தன் பெற்றோரிடம் தனக்கு திருமணமான விசயத்தைச் சொன்னதிற்கு பின் அவளிடம் யாரும் முகம் கொடுத்து பேசவில்லை. ஆதித்யாவிடம் அவர்கள் பேசினால் சரியாகி விடும் என்று எண்ணியவள்.. ஆதித்யா இந்தியாவை சென்றடைந்திருப்பான் என்று கணக்கிட்டு அடுத்த நாள் செல்பேசியில் அழைத்தாள். ஆனால் அது முழுவதுமாக ஒலித்து எடுக்கப்படாமலேயே நின்றது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்துப் பார்த்தும் பலன் ஒன்றுத்தான்..! பாவம் மீராவிற்கு தெரிந்திருக்கவில்லை.. அந்த நேரத்தில் தான் ஆதித்யா தன் தந்தையிடம் நிச்சயதார்த்தத்தை நிறுத்த சொல்லி அவருக்கும் அவனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துக் கொண்டிருந்தது. அவள் தேர்ந்தெடுத்த இந்த வாழ்விற்கு அவளது பெற்றோர்களின் வருத்தங்களுக்கும்.. கோபங்களுக்கும் அவள் பதில் அளிக்க வேண்டும்.. அல்லது ஆதித்யா தான் பதில் அளிக்க வேண்டும்.. என்று விரும்பினாள். ஆதித்யாவுடன் அவர்கள் பேசிய பின்பே கார்த்திக்கிடம் அவர்கள் பேசுவது சரி என்று அடம் பிடித்தாள் அந்த வீம்புகாரி..!

ஆனால் அந்த பக்கம் ஆதித்யா எடுக்காமல் போகவும் சிறிது பயம் கொண்டவள் சிறிது நேரம் கழித்து முயற்சி செய்துப் பார்த்தாள். அந்த வேளையில் ஆதித்யா மது அருந்திவிட்டு முழு போதையில் உறங்கி விட்டான். ஆனால் இதை அறியாத மீராவிற்கு தான் அழைத்தும் ஆதித்யா எடுக்கவில்லை என்பது மட்டும் மனரீதியாக தாழ்ந்து போக காரணமாக இருந்தது. கார்த்திக் அழைத்த பொழுது.. வீட்டில் நடந்ததைச் சொல்லி கவலையைப் பகிர்ந்துக் கொண்டவள்.. ஆதித்யா அழைப்பை ஏற்காததையும் சொன்னாள். கார்த்திக் ஆதித்யா என்ன மாதிரியான நிலைமையை எதிர் கொண்டிருக்கிறானோ.. என்று நண்பனுக்காக கவலைப்பட்டவன், மீராவை பொறுமையாக இருக்க சொன்னான்.

கார்த்திக்கிற்கு ஆதித்யா ஒரு முக்கியமான வேலை கொடுத்துவிட்டு சென்றிருந்தான். இந்தியாவில் ஆதித்யாவிற்கு நிச்சயதார்த்தம் நடைப்பெற்றால்.. மீராவை திருமணம் செய்த கோவிலில் பதிவு செய்த படங்கள் மற்றும் ஆதாரங்களை இந்தியாவில் உள்ள ஊடகங்களுக்கு அனுப்பி விடச் சொல்லியிருந்தான். எனவே அவனும் எந்நேரமும் ஆதித்யாவின் அழைப்பிற்காக காத்திருந்தான் கூடவே இந்தியாவில் உள்ள செய்திகளையும் ஆராய்ந்துக் கொண்டிருந்தான். அப்பொழுது ஆதித்யாவின் நிச்சயத்தார்த்த விழா மிரட்டல் காரணமாக நின்றுப் போனதைப் படித்து மகிழ்ச்சி கொண்டான். ஆனால் அந்த வெடிக்குண்டு மிரட்டல் அவனை யோசிக்க வைத்தது. அவனும் ஆதித்யாவிற்கு செல்பேசியில் அழைத்து பார்த்தான். அவனது அழைப்பும் ஏற்கப்படாமல் இருந்தது. அடுத்து அங்கிருந்து வந்த செய்தி அவனுக்கு சிறிது திருப்தி அளித்தது.

மீரா அவனை வர வேண்டாம் என்றுச் சொல்லியும் மனம் கேளாமல்.. கார்த்திக் மீராவின் வீட்டிற்கு சென்றான். அவனிடமும் அவர்கள் அதைத்தான் சொன்னார்கள்.

“சரியா உங்க மனதைப் புரிந்துக் கொள்ளாமல்.. அவசரப்பட்டு பெரியவங்களைக் குழப்பி இப்போ எத்தனை சங்கடங்கள் பார்த்தாயா..” என்று முதலில் அவனையும் திட்டினார்கள். அவர்களுக்கு தெரியாமல் மீராவும் ஆதித்யாவும் மணம் முடித்திற்கு அவனும் உடந்தையாக இருந்தது தவறு என்றுக் குற்றம் சாட்டினார்கள். அதற்கு மேல் பேசாமல் கார்த்திக் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டுச் சென்றான். ஆதித்யாவே காரணம் சொன்னால் தான் அவர்கள் சமாதானம் ஆவார்கள் என்று மீராவிடம் சொல்லவும்.. “அதைத்தான் நான் ஆரம்பித்தில் இருந்து சொல்லிட்டு இருக்கிறேன். ஆனால் நீதான் வம்படியாக வந்து திட்டு வாங்கிட்டு போயிருக்கே..” என்கவும்.. கார்த்திக் ஒத்துக் கொண்டான்.

பின் மீரா “ஆதித்யா ஏன் ஃபோன் செய்யலை, நான் செய்தால் எடுக்கவும் மாட்டேன்கிறான்?” என்று அவனிடம் கேட்டவள்.. “அங்கே என்ன நடக்கிறதோ..” என்று அவளே சமாதானம் ஆகிவிட்டாள்.

தன் பெற்றோர்களிடம் தனது திருமணத்தைப் பற்றிச் சொல்லிய அன்றைய நாள் மீராவிற்கு மனஅழுத்தமும் கோபமும் பயமுமாக சென்றது. அடுத்த நாள் தனது குடும்பத்தினருடன் மீண்டும் மன்னிப்பு கேட்டு அவர்களிடம் சொல்லாது திருமணம் செய்துக் கொண்டதிற்கான காரணத்தை விளக்கி தன்னை மன்னித்து முன்பு போல் பேசுங்கள் என்று கெஞ்சிய பொழுது அவர்களின் ஒரே பதில் ஆதித்யாவிடம் பேச வேண்டும் என்றும் அவள் இந்தியாவிற்கு செல்லும் முன் ஆதித்யாவின் குடும்பத்தினர் அவளை ஏற்றுக் கொண்டார்களா.. என்றும் தெரிந்திருக்க வேண்டும் என்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.

அன்று மதியவேளையில் அன்னையிடம் பேச முயன்றுக் கொண்டிருந்தாள்.. “அம்மா! நான்கு நாளைக்கு முன் ஒருத்தனை கூட்டிட்டு வந்து இவனைத்தான் லவ் செய்கிறேன் என்றுச் சொல்லிட்டு இப்போ இன்னொருத்தனை கூட்டிட்டு வந்து லவ்வர் என்றுக் காட்டுவதோடு மட்டுமல்லாது.. நாளைக்கே மேரேஜ் செய்துக்க போகிறோம் என்றுச் சொல்ல கஷ்டமா இருந்துச்சுமா..! அதுதான் சொல்லாமலேயே செய்துட்டேன்.” என்றாள்.

தனலட்சுமி திரும்பி “இன்னும் அந்த ஆதித்யா ஃபோன் செய்யலை தானே..” என்றுக் கேட்டார்.

ஒரு நிமிடம் திணறியவள், “அம்மா! இங்கே நீங்க கோபப்படுகிற மாதிரி.. ஆதித்யாவோட பெரெண்ட்ஸிம் கோபமாக இருப்பாங்க தானே..! அவங்களைச் சமாளிக்கணுமே..” என்று ஆதித்யாவிற்கு பரிந்துக் கொண்டு பேசினாள்.

அதற்கு தனலட்சுமி நேராக அவளைப் பார்த்து.. “நாங்க உன் கையைக் கட்டியா போட்டிருக்கிறோம். நீ எவ்வளவு தரம் ஃபோன் போட்டுட்டு முகம் வாடி உட்கார்ந்திருக்கிற என்று எனக்கு தெரியும்.” என்றார்.

அதற்கு மீரா “அங்கே ஆதித்யாவிற்கு ஃபோன் போட முடியாத அளவிற்கு சூழ்நிலை அதாவது உங்க பாஷையில் சொன்னால் கையைக் கட்டிப் போட்டிருக்கலாம்.” என்றாள்.

தனலட்சுமி கண்களை எட்டாத சிறு சிரிப்பு சிரித்து “காதலிக்கிறவங்களை கட்டிப் போட்டிருந்தாலும் உடைச்சுட்டு வருவாங்க மீரா..” என்கவும்.. மீரா பதிலளிக்க முடியாமல் திணறினாள்.

தனலட்சுமி “ஆதித்யாவிடம் பேசினால் தான் எங்களுக்கு திருப்தி கிடைக்கும் அதன் பின்பே உன் மேரேஜ்ஜை ஏற்றுக் கொள்வோம், ஆதித்யாவின் வீட்டினருடன் பேசி எங்களுக்கு ஒகே என்றால் தான்.. இந்தியாவிற்கு உன்னை அனுப்புவோம்..” என்றுத் தீர்மானமாக சொல்லிவிட்டுச் சென்றார். மீராவின் பார்வை மீண்டும் செல்பேசியிடம் சென்றது.

மீரா தனது செல்பேசியை வெறித்தவாறுப் பார்த்துக் கொண்டு நிற்கையில்.. திடுமென ஒலித்தது. ஆதித்யாவின் எண்ணை கண்டதும்.. திக்கு முக்காடியவளாய் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

ஆதித்யா “ஸாரி மீரா..! எனக்கு நிறையா தரம் ட்ரை செய்திருப்பாய் போல..! ஜெர்மனியில் இருந்து கொண்டு வந்த என்னுடைய லக்கேஜ் இன்றைக்கு தான் எடுத்து வைத்தேன். அதில் என் ஃபோன் மாட்டிக்கிச்சு.. என்ன விசயம்? கார்த்திக்கும் ஃபோன் செய்திருந்தான் அவனுக்கும் ஃபோன் போடணும்.” என்றான்.

ஆதித்யாவின் அழைப்பிற்காக காத்திருந்து ஏமாற்றம் கொண்டு தளர்ந்து போனவளுக்கு அவனது குரலை கேட்டதும்.. வாய் வார்த்தைகள் வராமல் சண்டித்தனம் செய்தது. இந்தளவிற்கா இவன் மேல் பைத்தியமாக இருக்கிறோம்.. தன்னைக் காக்க வைத்ததிற்கு கோபம் கொள்ளாமல் இப்படி திக்கி முக்காடி நிற்கிறேனே என்றுத் தன்னை செல்லமாக கடிந்துக் கொண்டாள். அதற்குள் அந்த பக்கம் ஆதித்யா பலமுறை ‘ஹலோ’ போட்டுவிட்டான்.

“ஆ..ஆதி…!” என்று அவள் திணறுவதைக் கேட்டுச் சிரித்தவன், “எப்போ வருகிறாய்?” என்றுக் கேட்டான்.

“ஜனவரி ட்டுவல்த் கிளம்பி ஃபோர்டின் அங்கே இருப்பேன் ஆதி..!” என்றாள்.

ஆதித்யா “குட்..! தென்..?” என்று அவள் அடுத்த பேசுவதற்காக நேரம் கொடுத்தான். அவளோ ஆதித்யாவை உடனே நேரில் பார்க்க மாட்டோமா.. என்ற நிலையில் இருந்தாள். அவள் பதில் அளிக்காதிருக்கவும்.. ஆதித்யா “சரி கார்த்திக் கூடப் பேசணும் பை..” என்று வைக்க போகவும் மீரா அவசரமாக “ஆதி வெயிட் ப்ளீஸ்…” என்றுத் தடுத்தாள்.

மீரா “இங்கே வீட்டில் நமக்கு மேரேஜ் ஆன விசயத்தைச் சொன்னதும்..” என்று அவள் முடிக்கும் முன்.. “என்ன கோவிச்சுட்டாங்களா..! அது நியாயம் தானே..! சேம் இயர்..” என்றான்.

பின் மீரா ஆதித்யாவிடம் “உன் பெரண்ட்ஸ் என்கிட்ட பேசணும், பார்க்கணும் என்றுச் சொன்னாங்களா..” என்றும், ஆதித்யா “அங்கே என்ன நடந்தது என்னை விட்டுவிடச் சொன்னார்களா..” என்று ஒரே நேரத்தில் கேட்டார்கள். அதிலேயே அடுத்தவர் வீட்டில் அவர்களுக்கு திருமண விசயம் கேள்விப்பட்டு என்ன சொல்லியிருப்பார்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டார்கள்.

மீரா பதட்டத்துடன் “என்ன! என்னை விட்டுவிடச் சொன்னார்களா..? நீங்க என்ன சொன்னீங்க..?” என்றுக் கேட்டாள்.

அதற்கு ஆதித்யா “நான் உன்கிட்ட எப்போ கிளம்பி வரேன்னு கேட்டேன் தானே..” என்றுச் சிரித்தவாறு சொன்னான். அதில் அவளுக்கு பதில் கிடைத்து விடவும்.. முறுவலித்தவளுக்கு ஆதித்யாவின் மேல் காதல் கூடியது.

ஆதித்யா “உன் பெரெண்ட்ஸ் கிட்ட ஃபோனை கொடு..” என்றான்.

மீரா மகிழ்ந்தவளாய்.. “எஸ்..! எஸ்..! இதோ போகிறேன் ஆதி..!” என்று நடந்தவாறுச் சொன்னவள், தொடர்ந்து “ப்ளீஸ் ஆதி! அவங்க எதாவது கோபமா திட்டினாலும் அமைதியாக பதில் சொல்..! அப்பறம் தயவுசெய்து நல்லபடியாக பேசு ஆதி! என்கிட்ட மேம்போக்கா பேசினே மாதிரி பேசி விடாதே!” என்றாள்.

அதற்கு ஆதித்யா “மேம்போக்கு என்று எதைச் சொல்கிறே மீரா! உன் மேல் இருக்கிற பிரியம் வேண்டுமென்றால் மேம்போக்கா இருக்கலாம். ஆனால் என் கூடத் தான் இருக்கணும் என்பதில் நான் ஆழமாக விரும்புகிறேன் மீரா..” என்றான்.

அவனிடம் இருந்து சிறு பிடித்தமாவது கிடைக்காத என்று ஏங்கிக் கொண்டிருந்த மீராவிற்கு செல்பேசியின் மூலம் ஆதித்யாவின் குரல் அவளது காதில் சொன்ன செய்தி.. ஏனோ அவளது நாடி நரம்பின் வழியாக பயணித்து உடல் முழுவதும் மின்சாரத்தைத் தோற்றுவித்ததை போன்று உணர்ந்தவள், அப்படியே நின்றுவிட்டாள்.

ஆதித்யா தொடர்ந்து பேசினான். “சோ..! உன் பெரெண்ட்ஸ் கிட்ட என் ஆழமான கருத்தைச் சொல்கிறேன் போதுமா…” என்றான்.

மீராவின் முகத்தில் தானாக முறுவல் மலர்ந்தது.

ஹாலில் அமர்ந்திருந்த ஹரிஹரன் காதில் செல்பேசியை வைத்தவாறு வந்த மகள் நின்றுவிடவும்.. என்ன என்பது போல் பார்த்தார். தன் தந்தை தன்னைப் பார்ப்பதைப் பார்த்த மீரா அவரிடம் செல்பேசியை நீட்டி “ஆதி லைனில் இருக்கிறார்ப்பா..” என்றாள்.

அவள் கூறியதைக் கேட்ட வெளி வராண்டாவில் அமர்ந்திருந்த தனலட்சுமியும் பரிமளமும் உள்ளே வந்தார்கள். அவர்கள் வரவும் ஹரிஹரன் அவர்களுக்கும் கேட்கும் பொருட்டு ஸ்பீக்கரில் போட்டார்.

ஹரிஹரன் ‘ஹலோ’ என்றதும்.. ஆதித்யா “பர்ஸ்ட் ஆஃப் ஆல் உங்க கிட்ட சொல்லாமல் மேரேஜ் செய்துக்கிட்டதிற்கு ஸாரி கேட்டுக்கிறேன். நான் உங்க கிட்ட சொல்கிறேன் என்றுத்தான் சொன்னேன். ஆனால் மீரா தான் அவளே சொல்லிக் கொள்கிறேன் என்றுச் சொன்னாள். மேரேஜ் செய்துக் கொள்ளலாம் என்று நான்தான் அவளிடம் கேட்டேன். ஏனென்றால் எனக்கு இங்கே என்கேஜ்மென்ட் ஏற்பாடு செய்திருந்தாங்க..! அதனால் தான் மீராவை உடனே மேரேஜ் செய்துக் கொள்ள வற்புறுத்தினேன். இன்னொரு ஸ்ட்ரான்ங்கான ரிஷனும் இருக்கு..! அவளைத் தவிர வேறு ஒருவரை என் மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாது. மறுபடியும் உங்க கிட்ட ஸாரி கேட்டுக் கொள்கிறேன். மீராவை என்கிட்ட அனுப்பி வைத்து விடுங்க..” என்றான்.

அவனும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைப்பெற இருக்கிறது என்ற செய்தி மீராவிற்கே புதிதாக இருந்தது. அவளுக்காக அவன் நிறுத்தியிருக்கிறான் என்ற செய்தி அவளுக்கு இனித்தது. கூடவே சிறு உறுத்தல் தோன்றியது. அது என்னவென்று அவள் யோசிக்கும் பொழுதே அவளது தந்தை பேச ஆரம்பித்தார்.

ஆதித்யாவின் வெளிப்படையான பேச்சில் ஹரிஹரன் சற்று இறங்கி தான் வந்தார். கூடவே மீராவை தவிர வேறு யாரையும் தன்னால் மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றுச் சொல்லியது அவரை மட்டுமல்லாது மற்றவர்களின் மனதையும் அசைத்தது. எனவே தன்மையாகவே பேசினார்.

“எங்களது ஒரே மகளின் முக்கியமான விசயம் எங்களுக்கு தெரியாமல் நடந்ததைத் தான் எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. காதல் என்ற விசயத்தில் உங்களுக்கு ஏன் இத்தனை குழப்பங்கள் என்றுத் தெரியவில்லை. இனி இந்த குழப்பங்கள் இல்லாமல் இருங்கள் நாங்கள் விரும்புவது இதுதான்..!” என்றார்.

ஹரிஹரனின் இணக்கமான பேச்சால் மீரா பெரும் நிம்மதி கொண்டாள். கடந்த நான்கு நாட்களாக மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் இறங்கியதைப் போன்று உணர்ந்தாள்.

ஹரிஹரன் தொடர்ந்து “சரி நடந்தது நடந்துவிட்டது. இனி நடப்பது நன்றாக நடக்கட்டும். உங்க பெரெண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டிங்களா..” என்றுக் கேட்டார்.

ஆதித்யா “சொல்லிட்டேன்..” என்று மட்டும் சொன்னான்.

அவனது ஒற்றை வார்த்தை பதிலேயே அவனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் என்பது ஹரிஹரனுக்கு தெரிந்து விட்டது.

எனவே ஹரிஹரன் “அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் என்றுத் தெரிகிறது. அவர்களது கோபமும் நியாயமானது தான்.! ஆனால் அங்கே வாழப் போவது என் பெண்.. அவளின் மகிழ்ச்சி எங்களுக்கு முக்கியம்! அதனால் அவர்களிடம் நாங்கள் பேச வேண்டும்.” என்றார்.

ஆதித்யா “எதற்கு..?” என்றுக் கேட்டான்.

ஹரிஹரன் இதென்ன கேள்வி என்பது போல் செல்பேசியைப் பார்த்துவிட்டு “சமாதானம் செய்ய முடிகிறதா என்றுப் பார்க்கலாம். அப்பொழுதும் அவர்களின் கோபம் குறையவில்லை என்றாலும் நடந்ததை மாற்ற முடியாது. திருமணம் தான் அவசரமாக யாருக்கும் தெரியாமல் நடந்துவிட்டது. எங்களின் திருப்திக்காகவும்.. மீராவின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ரிஷப்ன்ஸ் சிறிய அளவில் வைத்து மீரா தங்களின் வாழ்வுடன் இணைந்து விட்டால் என்பதை அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டும்.” என்றார்.

தன் மேல் குடும்பத்தினர் கோபமாக இருக்கிறார்கள் என்னுடைய உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளவில்லை.. என்று மனம் சுணங்கி இருந்த மீராவிற்கு ஹரிஹரன் ஆதித்யாவிடம் கூறியதைக் கேட்டு கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது. அவர்களின் கோபமும் தன் மேல் கொண்ட அக்கறைக்காக என்றுப் புரிந்தது. மகிழ்ச்சியும், அன்புமாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹரிஹரன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆதித்யா ஒரு நிமிடம் அமைதியானான். பின் “நான் மீராவிடம் பேச வேண்டும்.” என்றான்.

ஆதித்யாவின் இந்த பதில் ஹரிஹரனுக்கு அதிருப்தியை அளித்தது. முகத்தை சுளித்தவாறு மீராவை பார்க்கவும்.. அவசரமாக மீரா “சொல்லு ஆதி..” என்றாள். அவளது குடும்பத்தினர் இணங்கி வரும் வேளையில் ஆதித்யா ஏதேனும் தவறாக பேசி கெடுத்து விடக் கூடாது என்ற அச்சம் கொண்டாள்.

ஆதித்யா “நீ என்னை லவ் செய்கிறாயா.. மீரா?” என்றுக் கேட்டான்.

மீரா “என்ன கேள்வி இது..! அதற்கு தானே இப்படித் தவிக்கிறேன்.” என்றாள்.

ஆனால் மகிழன் குழப்பி விட்டதும்.. அவன் அதுவரை பார்த்த, சந்தித்த காதல் துரோகங்களால் இறுகியவனாய் மீராவிடம் கடுமையுடன் பேசினான்.

“அப்போ..! ஜஸ்ட் என்கிட்ட வந்திரு..! எனக்கு மற்றவங்க கிட்ட நாம் புருஷன் பொண்டாட்டி என்றுச் சொல்லிக் காட்டிக்க பிடிக்கலை. எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ வா..! நாம் ஒன்றாக வாழலாம். ஆனால் உன் பெரெண்ட்ஸ்.. என் மனைவியாக என்பதை விட.. இன்னார் வீட்டு மருமகளாக உலகத்திற்கு தெரிவிக்க தான் ஆசைப்படறாங்க போல..” என்று மீராவின் பெற்றவர்களைக் குற்றம் சாட்டிப் பேசினான்.

தன் பெற்றவர்களைக் குறைச் சொல்லவும் மீரா வெகுண்டெழுந்தாள்.

“அவங்க கேட்டதில் என்ன தப்பு ஆதி! ஊர் உலகத்திற்கு தெரியாமல் உங்க மனைவியாக என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்றுத் தெரியுமா…” என்று அவள் முடிக்கும முன்பே “ஏய்ய்..” என்று ஆத்திரத்துடன் ஆதித்யா குறுக்கிட்டான்.

“யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்னே..! எனக்கு டவுட்டாக இருக்கு மீரா..! கார்த்திக்கை விட்டு என்னை லவ் செய்ததிற்கு காரணம்.. அவனை விட நான் வெல்த்தியாகவும், பார்க்க ஆள் நன்றாக இருப்பதும் தானே காரணம்..! அப்போ என்னை விட இன்னொருத்தன் ஆள் செமையாக வந்தால்..” என்று ஆத்திர மிகுதியில் தான் நினைத்தது இதிலும் நடக்கவில்லை என்ற தோல்வி மனப்பான்மையிலும்.. கடைசியில் தனது தந்தையின் சொல்படி கேட்கும் பாவையாகி விட்டேனே.. என்ற வெதும்பலிலும், மீராவிற்கான உணர்வுடன் இன்னொரு பெண்ணிடம் எவ்வாறு வாழ்வது என்ற எதிர்கால பயத்திலும்.. மோசமான வார்த்தைகளை விட்டான்.

ஸ்பீக்கரில் இருந்ததால்.. ஆதித்யா பேசியதை அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியாக ஆதித்யா பேசியதைக் கேட்ட ஹரிஹரன் ஆத்திரத்திடன் இடையிட்டார்.

“ஸ்டாப் இட்! ஹவ் டேர் யு..! இனி மீராவை பற்றிப் பேசுவதற்கு மட்டுமில்லை, நினைப்பதற்கு கூட நீ தகுதியை இழந்துட்டே..” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

அந்த பக்கம் இருந்த ஆதித்யாவின் காதில் அவனது குரலே பலமாக ஒலித்தது.

“நான் வெற்றிப் பெற்றாலும் நான்தான் பாதிக்கப்படுகிறேன்.”

ஆம் அவன் நினைத்த மாதிரி நிச்சயத்தார்த்தத்தை நிறுத்தியாகி விட்டது. ஆனால் மீராவை இழந்து விட்டான். அதனால் அவனால் அந்த திருமணத்தில் இருந்து முழுமையாக விலக முடியவில்லை.


துளிர் விடும் முன் வாடிப் போனதோ..!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 15


ஹரிஹரன் ஆதித்யாவுடன் பேசிக் கொண்டிருந்த அழைப்பைத் துண்டித்ததும் அங்கு கண நேர அமைதி நிலவியது. ஹரிஹரன் தன் மகளின் முகத்தைப் பார்த்தார்.

ஆதித்யா அவ்வாறு பேசியதைக் கேட்டு கோபமுற்ற ஹரிஹரன்.. இவ்வாறு பேசுபவன் தனது மகளுக்கு பொருத்தமானவனாக இருக்க மாட்டான் என்று முடிவெடுத்து அவனிடம் கடுமையாக சாடிவிட்டு அழைப்பைத் துண்டித்தார். ஆனால் தான் எடுத்த முடிவை மீரா ஏற்றுக் கொள்வாளா.. என்று அவளது முகத்தைப் பார்த்தார்.

மீராவும்.. அவரது முகத்தை அடக்கப்பட்ட அழுகையுடன் பார்த்தவள்.. பின் கட்டுப்படுத்த முடியாமல் “ஐயம் ஸாரிபா நான் தப்பு பண்ணிட்டேன். எல்லாம் தப்பா போச்சு..” என்று வெடித்து அழுதவாறு முகத்தை மூடிக் கொண்டு மண்டியிட்டு அமர்ந்து விட்டாள்.

மீரா வெடித்து அழுவதைப் பார்த்த தனலட்சுமி.. விரைந்து வந்து அவளை வயிற்றோடு கட்டிக் கொண்டு அழுதார். ஹரிஹரன் மீராவின் தலையை வருடிக் கொடுத்தார். மீரா உடைந்து அழுவதைப் பார்த்த பரிமளம் அவரும் உடைந்தவராய் நிற்க முடியாமல் அருகில் இருந்த ஷோபாவில் அமர்ந்தார்.

ஹரிஹரன் மீராவின் தலையை வருடிக் கொடுத்தவாறு “மீரா! இப்படி நீ அழுவதற்கு ஆதி வொர்த்தே இல்லை. அவனுக்காக அழக் கூடச் செய்யாதே..” என்றார்.

மீரா கண்களில் கண்ணீருடன் “அப்பா..” என்று நிமிரவும்.. தனலட்சுமி அவளின் கண்ணீரை துடைத்து விட.. ஹரிஹரன் “நீ செய்த தப்பிற்காக அழுகிறாய் என்றால் அழுது அந்த தப்பைக் கரைத்து விடு மீரா..” என்றவரின் கண்களிலும் கண்ணீர் பெருகியது. அதைப் பார்த்த மீரா “அப்பா..” என்று ஓங்கி அழுதவாறு அவரது காலைக் கட்டிக் கொண்டாள். அவளது கண்ணீர் நிற்கும் வரை அவர் தலையை வருடிக் கொடுத்தார். பின் மீராவே கண்களை அழுத்த துடைத்தவாறு நிமிர்ந்துப் பார்த்தாள். அவளது பாட்டி அவளைப் பார்த்து கரங்கள் விரித்து வா என்பது போல் தலையை அசைக்கவும்.. “பாட்டி..” என்று அவரது மடியில் முகத்தை அழுத்தி வைத்துக் கொண்டு மீண்டும் அழ ஆரம்பித்தாள். பரிமளம் ஆதரவாய் அவளது தலையில் தனது கரத்தை வைத்தார். ஹரிஹரன் மகள் அழுவதைப் பார்க்க இயலாதவராய் அங்கிருந்து அகன்றார்.

தனலட்சுமி அவளது முதுகை வருடிக் கொடுத்தபடி மெல்லிய குரலில் “மீரா..! நடந்த எல்லாத்தையும் மறந்து விடு..! நீயே தப்பு என்று ஒத்துக் கொண்டாய் அழுதாய் தானே..! அத்தோடு எல்லாம் முடிந்தது. நீ அவனோடு வாழ்ந்திருந்தால் கூட.. பரவாலை ஆனால் நீங்க வாழவே தொடங்கவே இல்லை மீரா! அவன் உன்னைக் காதலித்திருந்தால்.. அவனது வாயில் இருந்து இந்த மாதிரியான வார்த்தைகள் வந்திருக்காது மீரா..! நீ தப்பு செய்துட்டே என்றே குற்றவுணர்வும் வேண்டாம். அவனோட நினைவும் வேண்டாம்.. விட்டுவிடு! நீ திடீரென்று மேரேஜ் என்றுச் சொல்லிக் கொண்டு வந்து நின்ற போதே என் அடிவயிற்றுக்குள் எதோ சரியில்லை என்று பிசைந்த மாதிரி இருந்தது. அது சரியென்று ஆகிவிட்டது. இதை ஒரு நல்லவேளையாகவும்.. உன் அதிர்ஷ்டமாகவும் நினைத்துக் கொள்..! அவனுடைய முழு கொடூரம் முதலிலேயே தெரிந்து விட்டது தானே..! அதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு நம்ம வாழ்க்கையை வாழ்ந்துட்டே போகணும். அந்த விசயத்தை இத்தோடு விட்டு மீரா!” என்றார்.

பின் தனலட்சுமி அன்னை என்ற ஸ்தானத்தில் இருந்து குடும்பத்தின் தலைவியாக அவர்களை அந்த மனநிலையில் இருந்து மாற்றும் பொறுப்பை எடுத்துக் கொண்டார்.

“இப்படியே அமர்ந்திருந்தால் நம்மால் இதில் இருந்து வெளியே வர முடியாது.” என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வெளியே சென்றிருந்த மாதவ் தன் நண்பர்களுடன் பேசியவாறு வருவது தெரிந்தது. இந்த நான்கு நாளுமே மாதவ்விடம் மீரா யாரிடம் சொல்லாமல் திருமணம் செய்துக் கொண்ட விசயத்தைத் தெரவிக்காமல் தான் இருந்தார்கள்.

அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த தனலட்சுமி “மாதவ் வருகிறான் போல..! அவனுக்கு நான்கு நாட்களில் நடந்த எந்த விசயமும் தெரியாது. அப்போ இந்த விசயமும் தெரியாதிருப்பது தான் சரி..! நான் சொல்கிறது புரிகிறது தானே..” என்கவும்.. மூவரும் மாதவ் வருவதற்குள் ஆளுக்கொரு பக்கம் அமைதியாக எழுந்துச் சென்றார்கள். அவர்களைப் பார்த்த தனலட்சுமி சிறிது சிறிதாக தான் வெளியே வர முடியும் என்றுத் தன்னையும் சமாதானப்படுத்திக் கொண்டார்.

அன்று மாலையில் அண்டை வீட்டில் நடைப்பெறும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு அழைப்பின் பெயரில் மாதவ் இந்த பக்கம் சென்றதும்.. அந்த பக்கத்தில் இருந்து கார்த்திக் அடித்து பிடித்துக் கொண்டு வந்தான். ஹரிஹரன் தான் அவனை அழைத்திருந்தார்.

கார்த்திக் வந்ததும் “வா கார்த்தி உட்காரு..” என்று முதலில் அவரை அமர சொன்னார். அங்கு இருந்த தனலட்சுமி மற்றும் உயிர் உள்ள சிலை போல் அமர்ந்திருந்த மீராவை பார்த்தவாறு அமர்ந்தான். ஏனெனில் ஹரிஹரன் மீராவிற்கும் ஆதித்யாவிற்கும் நடந்த திருமணம் முறிந்து விட்டது என்றுக் கூறி அவனை அழைத்திருந்தார்.

ஹரிஹரன் எடுத்த எடுப்பில் “ஆதித்யா எதாவது சொன்னானா?” என்றுக் கேட்டார்.

கார்த்திக் எச்சிலை மிடறு விழுங்கிவிட்டு “இன்னைக்கு மதியம் ஃபோன் போட்டு.. என் ஜெர்மன் வாழ்வும் கனவாகி போய் விட்டது. எங்கே போனாலும் என் விதி என்னை சாட்டையடியாக அடிக்கிறது. இனி என்னைத் தொடர்பு கொள்ளாதே..! என்னைப் பற்றிக் கவலையும் கொள்ளாதே..! ஏன் என்று விரைவில் தெரியும்.. என்றுவிட்டு ஃபோனை வைத்துவிட்டான்.” என்றான்.

அதைக் கேட்ட ஹரிஹரன் “கோழை! இதைத் தவிர அவனால் என்ன சொல்லி விட முடியும். விதி சாட்டையடி அடிக்கிறதா..! அவன் தான் என் மகளோட வாழ்வில் புகுந்து சாட்டையால் அடித்துவிட்டு போயிருக்கிறான்.” என்று இரைந்தார்.

கார்த்திக் “ஸார்! ஆதித்யா வீட்டில் அவனுக்கு என்கேஜ்மென்ட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தாங்க.. அங்கே சென்றுவிட்டால் மீராவை மணக்க அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றுத்தான் அவசரமாக மணந்தான். அவங்க தான் அந்தஸ்ந்து பார்த்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றால் நீங்களுமா..! நான் உங்களை முற்போக்குவாதி என்று நினைத்தேன். லவ் மேரேஜ் செய்ததிற்கு இப்படி எதிர்ப்பு தெரிவிப்பீங்க என்று நினைக்கலை.” என்றான்.

உடனே ஹரிஹரன் “நான் முற்போக்குவாதியா!” என்கவும்.. தற்பொழுது மீரா இடையிட்டாள்.

“என் பெரெண்ட்ஸ் பற்றித் தெரியாமல் பேசாதே கார்த்திக்! அவங்க எதிர்ப்பு தெரிவிப்பது மட்டும் நியாயமான காரணம் இருக்கு..! என் பெரெண்ட்ஸ் எதிர்ப்பு தெரிவித்தால் மட்டும் அது முற்போக்கு எண்ணமா..! ஆனால் இங்கே விசயம் அதில்லை..” என்றவளுக்கு கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

மீராவின் முகத்தையும்.. மற்றவர்களின் முகத்தையும் பார்த்த கார்த்திக்கிற்கு.. விசயமே வேறு என்பது மட்டுமில்லை. அது தீவிரமானது என்றும் புரிந்தது. எனவே மெல்ல “என்னவாயிற்று?” என்றுக் கேட்டான்.

ஹரிஹரன் கோபத்துடன் ஆதித்யா பேசியதைச் சொன்னார்.

அதைக் கேட்ட கார்த்திக்கிற்கே சங்கடமாக போனது. எனவே மெதுவாக “எதோ கோபத்தில் சொல்லியிருப்பான்.” என்று அவன் முடிக்க கூட இல்லை. ஹரிஹரன் ஆத்திரத்துடன் இடையிட்டார். “அதற்கு இப்படித்தான் கேவலமாக பேசுவதா..” என்றவர், பின் தொடர்ந்து “இப்பவே இப்படிச் சொல்கிறவன்.. என் பெண்ணை அவன் கூட வாழ அனுப்பினால்.. இதையே திருப்பி திருப்பி சொல்லிக் காட்ட மாட்டான் என்பது என்ன நிச்சயம்! வார்த்தைகளால் அடிப்பதை விட மோசம் எதுவும் இல்லை.” என்று வெகுண்டெழுந்தார்.

அவரது கோபத்தில் நியாயம் இருந்ததால் கார்த்திக் மீராவை திரும்பி பார்த்தான்.

“மீரா! ஆதியை பற்றி உனக்கு நல்லா தெரியும் தானே..! அவன் இந்த மாதிரி தானே பேசுவான்.” என்றவன் தொடர்ந்து அவசரமாக “ஆனால் எதையும் மனதில் இருந்து சொல்ல மாட்டான். அவனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அதனால் தான் வீட்டில் என்ன மாதிரியான எதிர்ப்பு வரும் என்றுத் தெரிந்தும்.. மேரேஜ் செய்துகிட்டான். ஏமாற்றி விடவில்லையே..” என்றதும் தனலட்சுமி கொதித்தெழுந்தார்.

“எது தப்பில்லை. ஊருக்கு தெரியாமல் மனைவியாக இரு.. என்பது தப்பில்லையா!” என்றவருக்கு அழுகை பீறிட்டு வரவும்.. அவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஹரிஹரன் தனலட்சுமியின் முதுகை தடவிக் கொடுத்தார். மீரா அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அழ ஆரம்பித்தாள்.

கார்த்திக் அவர்களின் முகத்தைப் பார்க்க இயலாதவனாய் தலைகுனிந்தமர்ந்தான். ஹரிஹரனின் ‘கார்த்திக்’ என்றழைப்பில் நிமிர்ந்துப் பார்த்தான்.

“மீராவிற்கும் அந்த ஆதித்யாவிற்கும் மேரேஜ் ஆகிவிட்டது என்பதற்கான விட்னஸ் எல்லாத்தையும் எங்களுக்காக அழிச்சுடு! கோவிலில் மேரேஜ் செய்து அங்கிருந்த சிஸ்டத்தில் ரெக்கார்ட் செய்தானாம். ப்ளீஸ் அவற்றையெல்லாம் அழித்து விடு..! நல்லவேளை சட்டப்படி பதிவு செய்யலை. இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை என்று என் பெண் அலைக்கழிக்கப் பட்டிருப்பாள்.” என்றவர்.. பின் கார்த்திக்கை நேராக பார்த்து “நீயும் இனி இங்கே வர வேண்டாம். நாங்க இப்படியே பின்வாங்கி விட்டதால் ஆதித்யாவோட பேமலிக்கு சந்தோஷமாக இருக்கும். ஆதித்யாவும் பெரிதாக என் பெண்ணை காதலித்த மாதிரி தெரியவில்லை. இல்லையென்றால் அப்படிப் பேசியிருக்க மாட்டான். என் பெண் தான் இதில் பலியாகிருக்கிறாள். ஆனால் எங்க பெண்ணை எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதனால் இத்தோடு எல்லாம் முடிந்தது.” என்றுவிட்டு எழுந்தார். அதில் நீ போகலாம் என்ற செய்தி இருந்தது.

அனைத்தும் தவறாய் முடிந்ததை நினைத்து வருத்தத்தில் நெற்றியை தடவியவாறு மெதுவாக எழுந்த கார்த்திக்.. ஹரிஹரனிடம் சிறு தலையசைப்புடன் விடைப் பெற்றான். ஆனால் அவர் அதைக் கவனியாத பாவனையில் நின்றார். பின் அழுது வடிந்த முகத்துடன் நின்றிருந்த மீராவை பார்த்தவனுக்கு சிறு கோபம் கூட வந்தது.

மீராவை பார்த்து “உன் அப்பா வார்த்தையால் சொல்லாமல் குறிப்பாக வெளியே போ என்றுச் சொல்லியதைக் கேட்டு அமைதியாக போய் விடத் தான் நினைத்தேன் மீரா! ஆனால் உன்னைப் பார்த்த பின் நல்ல நண்பனாக ஒன்றும் சொல்லாமல் போக முடியவில்லை மீரா..” என்றான். ஹரிஹரன் “ஹெ..” என்றுக் குறுக்கிட்டதைக் கவனியாது தொடர்ந்து பேசினான்.

“நீ ஆதித்யாவை லவ் செய்கிறேன்னு சொன்ன போது ரொம்ப சந்தோஷப்பட்டேன் மீரா! அவனை நீ உண்மையாக காதலித்திருந்தால்.. அவனை உன்னால் புரிந்துக் கொண்டிருக்க முடியும் மீரா! எனக்கு தெரியும் மீரா! நீ அவனை உண்மையாக காதலிக்கிறாய்..” என்று முடிக்கவும்.. ஹரிஹரன் “வெளியே போ…” என்றுக் கர்ஜீத்தார்.

கார்த்திக் ஹரிஹரனிடம் “நீங்க சொன்னதைத் செய்து விடுகிறேன் ஸார்..” என்றுவிட்டு திரும்பியும் கூடப் பாராது வெளியே சென்றான்.

வெறித்து நின்றிருந்த மீராவை தனலட்சுமி உள்ளே அழைத்துச் சென்றார்.

அதன் பின் மீராவை அவர்கள் தனித்து விடவில்லை. அவளின் அருகில் அமர்ந்துக் கொண்டு வேறு பேச்சு பேசினார்கள். கிறிஸ்துமஸிற்கு இருநாட்களே உள்ளது என்ற நிலையில் குடும்பத்துடன் அண்டை வீட்டு கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டார்கள். தீம்பார்க்கிற்கு சென்றார்கள். மகள் இந்த பத்து நாட்களில் நடந்தவற்றில் இருந்து மீண்டு மறக்க வேண்டும் என்று எண்ணினார்கள். மாதவ்விற்கு தெரியாது என்று அவன் முன் பேச்சை தவிர்த்திருத்ததால் மாதவ்வை மீராவுடனே இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள். இவை எதுவும் தெரியாத மாதவ் வழக்கம் போல் தமக்கையை வம்பிழுக்க.. மீராவும் அவனுக்கு சரியான பதில் அளித்து சிரிக்கவும் செய்தாள். அதைப் பார்த்து மற்றவர்களின் முகத்திலும் புன்னகை அரும்பியது. இன்றிரவு கிறிஸ்துமஸ் என்றிருக்க இரவிலும் விளக்குளால் ஜொலித்த நகரத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வீடு திரும்பினார்கள்.

மாடியில் இருந்த தங்களது அறைக்கு மீராவும்.. மாதவ்வும் சண்டையிட்டவாறு படியேறினார்கள். கீழே இருந்து தனலட்சுமி “ஷ்ஷ்..! பாட்டி தூங்கிட்டு இருப்பாங்க..” என்று எச்சரித்தார்.

உடனே இருவரும் சைகையில் போடா போடி என்றுத் திட்டியவாறு அவரவர் அறைக்குள் புகுந்துக் கொண்டார்கள். அவர்கள் அறைக்குள் புகுந்துக் கொண்டதும் பரிமளம் மெல்ல தன் அறையில் இருந்து வெளியே வந்தார். மீராவின் அறை கதவின் மேல் கையை வைத்து தள்ளவும்.. அது திறந்துக் கொண்டது. படுக்கையில் அமர்ந்திருந்த மீரா எதிரே இருந்த சுவற்றை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள். மெல்ல அவளது அருகில் சென்ற பரிமளம் தோளில் கையை வைக்கவும்.. திரும்பி மீரா “பாட்டி..” என்று அவரைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவளது முதுகை சிறிது நேரம் வருடிக் கொடுத்தவர்.. “சொல்லு மீரா..” என்கவும், அவளது மடியில் தலையை வைத்துக் கொண்டு மனதில் இருந்ததைக் கொட்டினாள். ஆதித்யாவை முதலில் பார்த்ததில் இருந்து.. அவளது மனதில் ஏற்பட்ட மாற்றங்களில் இருந்து அனைத்தையும் சொன்னாள். அவளது பெற்றோர்களிடம் சொல்லாமல் மறைத்தவைகளையும் கூறினாள். ஆதித்யாவை பற்றி கார்த்திக் கூறியவைகளையும் சொன்னவள்.. அவள் அளவிற்கு ஆதித்யாவிற்கு அவளிடம் காதல் இல்லாததையும் கூறினாள். திருமணம் நடந்த அன்றிரவு.. உடல் அளவில் கலந்து விட்டதையும் கூறினாள். மனதில் இருந்த அனைத்தையும் கூறியவள்.. கண்களை மூடிப் படுத்துக் கொள்ள பரிமளம்.. “அப்பறம்..” என்கவும்.. முகத்தை நிமிர்த்தி அவரைப் பார்த்தாள்.

மீரா “பாட்டி..” என்கவும், பரிமளம் “சொல்லு மீரா..! அப்பறம்..” என்றார்.

“பாட்டி..” என்று அவரது மடியில் முகத்தை வைத்து அழுத்திய மீரா பின் மெல்லிய குரலில் “அன்னைக்கு ஆதி அப்படிப் பேசிய பொழுது ரொம்ப கோபம் வந்துச்சு..! அப்பா சொன்ன மாதிரி என் காதலுக்கு தகுதியே இல்லாதவர் என்ற வெறுப்பு வந்துச்சு..! என்னை நானே திட்டிக்கிட்டேன். என் மேல் சிறிது கூட காதல் இல்லாமல் பிடித்த பொருள் மாதிரி நீ எனக்கு வேண்டும் என்று என்னை மேரேஜ் செய்துகிட்டதை நினைத்து.. எப்படி நான் இதற்கு ஒத்துக்கிட்டேன் என்று எனக்கு என்னைப் பார்த்தே அருவருப்பாக இருந்துச்சு..! அதனால் அப்பா எனக்காக பிரிவை முடிவாக எடுத்த போது.. ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் செய்த தவறில் இருந்து அப்பா என்னை காப்பாற்றி விட்டார் என்று நிம்மதியாக இருந்தேன். அதற்கு பிறகு.. இரண்டு நாட்களாக எப்படி இப்படியொரு தப்பை செய்தேன். எப்படி என்னை விரும்பதாவனிடம் இப்படி பைத்தியமானேன் என்று என் மனம் பிசிறி போனதை நினைத்து வருத்தப்பட்டேன். அம்மாவும், அப்பாவும் என்னைத் தேற்றுவதற்காக என் பின்னாலேயே சுற்றுவதைப் பார்க்க பார்க்க நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி என்றுத் தோன்றியது. இந்த மாதிரி ஆதித்யாவின் பின்னால் போயிருக்க கூடாது என்று நினைத்து அவனைப் பற்றி நினைக்க நினைக்க.. அவனின் மேல் எனக்கு எப்படி காதல் வந்தது என்பதைப் பற்றியெல்லாம் நினைக்க ஆரம்பித்தேன் பாட்டி..! அப்படியே நினைக்க நினைக்க அவனை மறுபடியும் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன் பாட்டி..! எனக்கு அவன் வேண்டும் பாட்டி…! அவன் அப்படித்தான் முட்டாள் மாதிரி பேசி எரிச்சலை கிளப்புவான். ஆனால் அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்கும் பாட்டி..! நான் ஆதி கிட்ட போகிறேன் பாட்டி..” என்று அழ ஆரம்பித்தாள்.

பேத்தியின் நெற்றியை வருடிய பரிமளம் “ஆதித்யா தான் வேண்டும் என்றால் அவனிடமே போயிரு மீரா..” என்றார்.

மீரா திகைத்து “பாட்டி..” என்று எழுந்தமர்ந்து பார்த்தாள்.

அவளது கன்னத்தை ஒரு கையால் வருடிய பரிமளம் “மீரா! நீ ஒன்றும் விவரம் தெரியாத சின்ன பெண் இல்லை. முட்டாளும் இல்லை. ஆதித்யாவிடம் தான் உனக்கு பிடிப்பு இருக்கு.. என்று பலமுறை ஆராய்ந்துட்டே..! இப்போ கூட ஆராய்ந்து அவன்தான் வேண்டும் என்றுத் தெரிந்துக் கொண்டே தானே..! அப்போ அதை நோக்கி போ மீரா! இப்படி ஆராய்ந்துட்டே உன் வாழ்வை வீணாக்கி விடாதே! அப்பறம் என்ன சொன்னே ஆதி முரடன் புதிரானவன் என்பது தானே..! உன் தாத்தா ஆதித்யாவை விட பல மடங்கு கள்ளுளிமங்கன்..” என்றார்.

பரிமளம் சொன்ன விதத்தில் மீராவிற்கு சிரிப்பு வந்தது.

அதற்கு பரிமளம் மெல்ல சிரித்து “நீயாவது ஆதித்யா இப்படித்தான் என்றுத் தெரிந்து.. அவனை திருமணம் செய்துட்டே.. அவனோட வாழ ஆசைப்படுகிறே..! ஆனால் என்னுடையது அரேன்ஞ்டு மேரேஜ்…! எண்ணற்ற கனவுகளுடன் கல்யாண வாழ்வில் அடியெடுத்து வைத்தேன். உன் தாத்தா மொத்தமாக சிதைச்சுட்டாரு..! ஆனால் நான் துவண்டு போகலை. அழுது புலம்பலை..! வாழ்க்கை என்னைப் பார்த்து சிரித்தால்.. நான் அதைப் பார்த்து சிரித்து விடுவேன். உன் தாத்தா இப்படித்தான் என்றுத் தெரிந்துவிட்டது. உடனே அவருக்கு ஏற்ற மாதிரி வாழப் பழகிட்டேன். உடனே அதற்கு சுயமரியாதை இழந்து வாழ்க்கையா..! கடைசியில் அவருக்கு அடிப்பணிஞ்சுட்டேன், அடிமையாகிட்டேன் என்று பெண்ணீயம் பேசினால் அவங்களைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வரும். அதற்கு பெயர் அடிப்பணிவதில்லை.. புத்திசாலித்தனம்! அவருக்கு ஏற்றவாறு வளைந்து.. அவருக்கே தெரியாமல் அவரை எனக்கு ஏற்றவாறு வளைத்துக் கொண்டேன். என் கல்யாண கனவு வாழ்வு தான் கடைசியில் வாழ்ந்தேன். ஆனால் அந்த கடவுளுக்கு தான் என் மேல் கோபம் போல..! என் புருஷனை சீக்கிரம் அழைச்சுட்டார். அவர் சாகும் போது என் கையைப் பிடிச்சுட்டு.. என் கூட இன்னும் வாழ ஆசைப்படுகிறேன்னு சொன்னார்..” என்னும் பொழுது பரிமளத்தின் கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது.

மீரா தனது கண்ணிலும் வழிந்த கண்ணீரை துடைத்தவாறு “ஆதி ஒன்றும் அவ்வளவு மோசமில்லை..! என் பர்த்டேக்கு கூப்பிட போன போது எனக்கு குளிரும் என்று அவனுடைய ஜெர்கினை கொடுத்தான். அப்பறம் அவனை ஹோட்டலில் பார்க்க போன போது கோபத்தில் கதவை சாத்திட்டு என் மேலே பட்டுருச்சா என்றுப் பதட்டத்தோடு கேட்டான்.” என்றான்.

அதற்கு பரிமளம் அவளது முகவாயில் ஒரு இடி இடித்து “என் வீட்டுக்காரரும் அவ்வளவு மோசமில்லையாக்கும்..” என்றார். மீரா சிரித்தபடி பரிமளத்தை கட்டிக் கொண்டாள்.

பரிமளம் மீண்டும் கேட்டார்.. “என்ன செய்ய போகிறே மீரா..! என்ன பதில் சொல்வதாக இருந்தாலும் உறுதியாக சொல்..” என்றார்.

மீரா “நான் ஆதியிடம் போகிறேன். என் கிட்ட அப்படிப் பேசினதிற்கு மன்னிப்பு கேட்க வைக்கிறேன்.” என்றாள்.

பரிமளம் சிறு பெருமூச்சை இழுத்துவிட்டு “நல்லதே நடக்கட்டும் மீரா..! ஆனால் நல்லது உனக்கு எளிதாக கிடைத்து விடாது..! நீ அதற்காக போராட வேண்டியது வரும்.” என்றார்.

மீரா மௌனமாக ஆமோதிப்பாக தலையசைத்தவாறு “அம்மா, அப்பா கிட்ட கேட்டு சம்மதிக்க வைக்கணும்.” என்றாள்.

பின் மீராவை பார்த்து “அதுமட்டுமில்லை.. நீ சொல்வதை வைத்துப் பார்க்கும் பொழுது.. ஆதித்யாவின் வீட்டில் தான் ரொம்ப பிரச்சனை போல..! அந்தஸ்த்து காட்டி அவனை அடக்கி வைப்பது தான் பிரச்சனையாக இருக்கும். அதுதான் உன்கிட்ட அப்படி யாருக்கும் தெரியாமல் வாழலாம் என்றுச் சொல்லியிருக்கிறான். அவனுக்கு நீதான் மனதைரியத்தைக் கொடுக்கணும். அவன் கூடப் பேசின வரை எப்படியோ இருக்க வேண்டிய பையன் என்கிற மாதிரி தான் எனக்கு தோன்றிச்சு..! உன் தாத்தா கிட்ட பார்த்த அதே கம்பீரம், ஆளுமை அவனிடம் பார்த்தேன்.. ஆனால் ஏதோ இல்லாத மாதிரி இருக்கிறது..” என்று யோசித்தார்.

அதற்கு மீரா “சின்ன மனத்தடுமாற்றம் இருக்கு..! நீங்க சொன்ன மாதிரி மனதைரியம் இல்லை.” என்றாள்.

பரிமளம் “அதை நீ மீட்டெடு மீரா..! போராடு மீரா..! ஆனால் அப்பொழுதும் உன்னால் போராட முடியலைன்னா என்கிட்ட திரும்ப வந்திட வேண்டும்.” என்று கையை நீட்டினார். அதில் தன் கரத்தை வைத்து அழுத்திய மீரா.. தன் மனதில் இருந்த சஞ்சலங்களை அகற்றியவளாய்.. அதற்கு வழிவகை செய்த.. பாட்டியை இறுக கட்டியணைத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் தன் பெற்றோர்களிடம் ஆதித்யாவிடம் செல்கிறேன் என்றுச் சொல்லியதும்.. அவர்கள் அவ்வளவு எளிதாக ஒத்துக் கொள்ளவில்லை. இத்தனைப் பட்டும் புரியவில்லையா என்று அவளைத் திட்டினார்கள். அவளுக்கு மீண்டும் வந்திருப்பது சிறு சலனமே.. அங்கு சென்றால் அவளுக்கு அது அகன்று விடும்.. ஆனால் அவள் வெளி வர முடியாத புதைக்குழியில் மாட்டிக் கொள்வாள் என்று அவளுக்கு எடுத்துக் கூறினார்கள். ஆதித்யாவின் வீட்டினரும் இந்த திருமணத்தை விரும்பாததால் அங்கு அவள் வாழ்வது கடினமாக இருக்கும் எச்சரித்தனர். ஆனால் இம்முறை மீரா உறுதியாக நிற்கவும்.. அவன் பேசியதைச் சுட்டிக் காட்டித் தனது மகள் அவ்வாறு மானம் கெட்டு வாழ நான் அனுமதிக்க மாட்டேன்.. என்று அவளிடம் கடுமைக் காட்டிப் பேசினார்கள். ஆனால் மீரா தன் மனதை எடுத்து உரைத்துப் பார்த்தாள், அழுது பார்த்தாள், போராடிப் பார்த்தாள், எதற்கும் அவர்கள் மசியவில்லை. அவர்களின் முடிவில் அவர்கள் உறுதியாக இருக்கவும், மீராவும் அவளது முடிவில் உறுதியாக இருந்தாள். எனவே வீடே போர்களமாக காட்சியளித்தது. தனது பெற்றவர்கள் தனக்காக தான் இவ்வாறு பேசுகிறார்கள், தற்பொழுது மேலும் கவலைப்படுகிறார்கள் என்று மீராவிற்கு புரிந்தாலும்.. இரட்டை வாழ்வு வாழ்வதற்கு பதில் தன் வாழ்விற்காக போராட வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தாள்.

நடுவில் கார்த்திக்கை சந்தித்த மீரா.. ஆதித்யாவிடம் செல்ல போவதாக சொல்லவும் மகிழ்ச்சியுற்றவன், “நல்லவேளை நான் டிக்கெட்டை கேன்சல் செய்யலை..” என்றவன்.. சிறிது தயக்கத்திற்கு பின் “உன் வீட்டில் ஒகே சொல்லிட்டாங்களா..” என்றுக் கேட்டான்.

மீரா சிறு கசந்த சிரிப்பைச் சிந்தி மறுப்பாக தலையசைத்தாள்.

அதைக் கேட்டு அதிர்ந்த கார்த்திக் சிறு பெருமூச்சு விட்டு “ஒகே நீ எப்படியோ ஆதியை புரிஞ்சுகிட்டியே..” என்றவன், தொடர்ந்து ஆதித்யா அவனது நிச்சயதார்த்தத்தை நிறுத்த அவர்களது திருமணத்தைத் தான் கையில் எடுத்தான் என்பதை சொன்னவன்.. அவனது நிச்சயதார்த்தம் நின்றுவிட்டதையும் சொன்னான்.

பின் கார்த்திக் “என்கேஜ்மென்ட் நின்றுவிட்டதால் அவங்க வீட்டில் கோபமாக இருந்திருப்பாங்க.. அவங்க தான் ஆதித்யாவிடம் அந்த மாதிரி கண்டிஷன் போட்டிருப்பாங்க என்றுத் தெரிகிறது.” என்றான்.

மீரா “ம்ம்ம்..! இப்போ யோசிக்கும் பொழுது புரிகிறது. ஆனால் அதற்கு சரியென்று எப்படிச் சொன்னார்? என்னைப் பற்றி ஏன் யோசிக்கலை என்பது தான் புரியலை.” என்றுச் சற்று வருத்தத்துடன் சொன்னாள்.

அதற்கு கார்த்திக் “நான்தான் முதலிலேயே சொன்னேனே..! அவனை அந்த வீட்டில் ஏதோ ஒரு கட்டுப்பாட்டில் இருக்கிறான். முயற்சி செய்தால் அவனால் அதில் இருந்து வெளி வர முடியும். ஆனால் அவன் முயற்சி செய்ய மாட்டேன் என்கிறான். அதுதான் ஏன் என்றுத் தெரியலை.” என்றான்.

அப்பொழுது மீராவின் செல்பேசி அழைத்தது.. எடுத்து காதில் வைத்தவள்.. “அப்பா..” என்று அதிர்ந்தாள். அதிர்ந்த கார்த்திக் காரணம் கேட்கவும்.. ஹரிஹரன் விபத்தில் சிக்கி தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டியிருக்கிறார் என்றுச் சொல்லிவிட்டு அழவும்.. அவனே காரை ஓட்டிக் கொண்டு மீராவுடன் மருத்துவமனையில் . மீராவை பார்த்ததும் தனலட்சுமி “எனக்கு பயமாக இருக்கு மீரா..! தலையில் அடிப்பட்டு சுயநினைவு இல்லாமல் இருக்கிறார்.” என்கவும்.. தனது அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு “அப்பாவிற்கு ஒன்றும் ஆகாதும்மா..! சரியாகிருவார்.” என்று ஆறுதலாய் கட்டிக் கொண்டாள். பரிமளத்தைப் பற்றி விசாரிக்கவும் அவரை அண்டை வீட்டினரிடம் விட்டு வந்திப்பதாக சொன்னார். மாதவ்வும் கட்டிக் கொள்ளவும், அவனையும் சேர்த்துப் பாதுகாப்பாக கட்டிக் கொண்டாள்.

-------------------------------------------------------------

தனது வீட்டின் வராண்டாவில் மனைவியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மகிழனின் செல்பேசி அழைத்தது.. யார் என்று எடுத்துப் பார்த்தவர், அதில் இருந்த எண்ணை பார்த்ததும்.. மனைவியிடம் சொல்லிவிட்டு தனியாக சென்றார்.

மகிழன் “சொல்லுங்க..” என்கவும், அந்த பக்கத்தில் இருந்து என்ன சொன்னார்களோ.. “எஸ் ஸார்..! ஆதித்யாவின் மனதில் தோல்வியையும், நினைத்தது நடப்பதில்லை என்ற ஏமாற்றத்தையும் நன்றாக உருவேற்றி விட்டேன். அதனால் மருத்துவ பாஷையில் சொல்வது என்றால் ரொம்ப டிப்ரேஷனாக இருக்கிறார். பேச்சு வழக்கில் சொல்வது என்றால்.. பைத்தியமாக இருக்கிறார்.” என்றுச் சிரித்தார்.

அந்த பக்கமும் சிரிப்பு குரல் கேட்டது. பின் மகிழன் தொடர்ந்து “ஆனந்த்சங்கர் ஸார் நிலைமை அதை விட ஆப்பில் மாட்டிக் கொண்ட குரங்கின் நிலைப் போன்றது. ஆதித்யா கேட்டான் என்றுப் பெரியதாக பிளன் போடுவதாய் நினைத்து என்கேஜ்மென்ட்டை நிறுத்திவிட்டு பின் அதை நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.” என்றுச் சிரித்தான்.

அந்த பக்கம் இருந்த குரல் வன்மத்துடன் “திணறட்டும், புலம்பட்டும்..! கொஞ்ச நாட்கள் கழித்து அவங்க மானத்தை கப்பல் ஏற்றலாம்.” என்றுச் சிரித்தது.

---------------------------------------------------------------------

இருபது நாட்களுக்கு பின்…

ஆனந்த்சங்கரின் அறைக்குள் வந்த ராஜ்சங்கரும், வித்யாவின் கணவர் ஸ்ரீதரும் வந்தார்கள். அவர்களிடம் ஆனந்த்சங்கர் “நேற்று தந்த டிடெய்ல்ஸ் எல்லாம் பார்த்தீங்களா?” என்றுக் கேட்டார்.

“பார்த்தோம்..” என்றனர்.

அதற்கு அவர் இளக்காரத்துடன் “அப்போ படிக்கலையா..” என்கவும், “படித்தோம், படித்தோம்..” என்றுத் திணறினார்கள். அவர் முகத்தில் வெறுப்பு பரவியது. பின் வேண்டா வெறுப்புடன்.. “இந்த ஒப்பந்தத்தில் ஆதித்யாவும் தான் சைன் போடணும். ஆனால் அவன் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறான் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அதனால் அவனை அங்கே அழைச்சுட்டு போக முடியாது. அதனால் அவன் இன்னும் வெளிநாட்டில் இருந்து வரவில்லை என்ற பொய்யை மெயின்டெயின் செய்யணும்.” என்றார்.

அதற்கு சரியென்பது போல் தலையை உருட்டினார்கள்.

பின் ராஜ்சேகர் “அப்பா..” என்றுத் தயக்கத்துடன் அழைத்தான். அவர் சொல் என்பது போல் பார்க்கவும்.. “எத்தனை நாட்கள் இந்த பொய்யைச் சொல்லிட்டு இருக்க முடியும். அவனின் நிலைமையும் நாளுக்கு நாள் மோசமாகிட்டு வருகிற மாதிரி இருக்கு..! குழந்தைகளை வைச்சுட்டு இங்கே இருக்க பயமாயிருக்கு என்று என் வைஃப் சொல்கிறாள். டாக்டர் மகிழன் இல்லாமல் அவனுக்கு வேற டாக்டரை பார்க்கலாமா..! ட்ரீட்மென்ட்ம் வேற எங்காவது தனியா ஒரு வீட்டில்.. நம்ம எஸ்டேட் பங்களாவில் வைத்து செய்யலாமா..?” என்றுக் கேட்டான்.

அதற்கு ஆனந்த்சங்கர் “இந்த வீட்டை விட்டு வெளியேவா..! எதற்கு சங்கர் குரூப் ஆஃப் கம்பெனியின் இளைய வாரிசிற்கு மனநிலை சரியில்லை என்று ஊர் உலகத்திற்கு அறிவிக்கவா..! உருப்படியாக எதாவது சொல்ல முடிந்தால் சொல்.. இல்லை என்றால் அமைதியாக இரு..! வெளியே எனக்காக காத்திருங்கள். இப்போ நாம் மீட்டிங்கிற்கு போக வேண்டும்.” என்று அவர்களை வெளியே அனுப்பியவர், பலத்த யோசனையில் இருந்தார்.

பின் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த விஜயிடம் “முதலில் மகிழன் தானே சரிச் செய்துக் கொண்டு வந்தார். இப்பவும் சரிச் செய்வார் என்று நினைத்தேன். அதை விட முக்கியமான விசயம்.. நம் இரகசியத்தைக் காத்தார். ஆனால் எனக்கே இப்போ அவர் மேல் நம்பிக்கை போய் விட்டது. ஆதித்யா மேரேஜ் செய்துக் கொண்ட பெண் வர மாட்டாள் என்று ஜெர்மனியில் நாம் வைத்த ஆள் சொல்லிட்டான். அந்த பெண் அப்படி வந்து வாழ மாட்டேன் என்றுச் சொல்லியிருப்பாள் என்று நினைக்கிறேன். அந்த காரணமும் சேர்ந்து தான் ஆதித்யாவிற்கு இப்படியாகி விட்டது.. என்றுத் தெரிகிறது. சம்பந்தி வேற தை மாதத்தில் நிச்சயதார்த்தத்திற்கு நாள் பார்க்கட்டுமா என்றுக் கேட்கிறார். ஆதித்யா சரியாகி விட்டால் அவன் கொடுத்த வாக்கை சுட்டிக்காட்டி மேரேஜ் செய்து வைத்து விடலாம். அவன் கொடுத்த வாக்கைத் தவற மாட்டான். ஆனால் அவன் சரியாகணுமே..! திடீரென்று மூர்க்கமாக பேசுகிறான், திடீரென்று சொல்லியதையே திருப்பி சொல்கிறான். ஒரு சமயம் நாம் சொல்லியதை அவன் கவனிப்பது மாதிரியே தெரியவில்லை. தனியாக அவன் ஒரு உலகத்தில் இருக்கிறான். ஒரு மாதம் எப்படியாவது தள்ளிப் போடுகிறேன். அதற்குள் சரியாவில்லை.. என்றால் அவனுக்கு மனநிலை சரியில்லை என்பதை மறைத்து திருமணத்தை முடித்து வைத்து விட வேண்டியது தான்..” என்றுத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்பொழுது இன்டர்காம் ஒலித்தது.

“ஸார்! மீரா என்கிற பெண் ஆதித்யா ஸாரை பார்க்க வேண்டும் என்று வந்திருக்கிறார். நான் அவர் இல்லை என்றுச் சொன்னால் நம்பாமல் அவரது .போனில் சில படங்கள்..” என்று அவன் முடிப்பதற்குள் ஆனந்த்சங்கர் “அவளை உள்ளே அனுப்பு..” என்றுக் கட்டளையிட்டார்.

அவரது புருவம் சுருங்கி விரிந்தது. இத்தனை நேரம் இறுகி கிடந்த அவரது முகத்தில் வன்மசிரிப்பு பரவியது.


வஞ்சகங்கள் சூழ் உலகமிது..! இதில்
வஞ்சியவளுக்கு வாழ்வு உண்டோ..!

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 16


இரு நாட்களுக்கு முன்..

தலையில் கட்டுடன் படுத்திருந்த தன் தந்தையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவளுக்கு லேசாக கண்கள் சொருகியது. இமைகள் தானாய் மூட தலையை ஆட்டி அதைத் திறக்க வைத்தாள்.

“கொஞ்ச நேரம் தூங்கு மீரா..” என்ற ஹரிஹரனின் கரகரப்பான குரலில் மீரா முற்றிலும் உறக்கம் கலைந்தவளாய்… “எதாவது வேண்டுமாப்பா..” என்றுக் கேட்டாள்.

அதற்கு ஹரிஹரன் மெதுவாக முறுவலித்து “நான் உன்னை ரெஸ்ட் எடுக்க சொன்னேன்.” என்றார்.

அதற்கு மீரா “நான் ஒகேபா..” என்றுப் புன்னகைத்தாள்.

ஹரிஹரனுக்கு தலையில் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பொழுது.. மருத்துவர்கள், தலையில் அடிப்பட்டதால் மூளையில் ஆபத்தான இடத்தில் இரத்தக்கட்டு ஏற்பட்டு இருக்கிறது என்றும்.. அது கரைந்து விட்டால் பிரச்சனையில்லை என்றும் ஆனால் கரையாவிடில் கோமாவிற்கு சென்று விடுவார் என்றுப் பயமுறுத்தினார்கள். கரைவதற்காக மருந்து கொடுத்திருப்பாதாக சொன்னார்கள். அந்த விசயத்தை அன்னை மற்றும் பாட்டியிடம் மறைத்த மீரா அவர்களுக்கு தைரியம் சொல்லி அந்த நான்கு நாட்கள் மனதில் திகிலுடன் நடமாடி வந்தாள். மருந்தின் காரணமாக ஐந்தாம் நாள் இரத்தம் கரைந்த பின்பே மீரா நிம்மதியாக மூச்சு விட்டாள். அதன் பின் ஹரிஹரனின் அருகில் இருந்து அவளே பார்த்துக் கொண்டாள். அதன் பின் வெளிக்காயங்கள் மட்டுமே என்பதால் மருந்து மற்றும் கவனிப்பின் உதவியால் விரைவிலேயே குணமடைந்தவர், இருபது நாட்களுக்கு பின் இன்றுத்தான் வீடு திரும்பியுள்ளார்.

ஹரிஹரனுக்கு பயப்படும்படியாக இனி ஒன்றும் இல்லை என்றாலும்.. அந்த நான்கு நாட்கள் குடும்பத்தினருக்கு யாருக்கும் சொல்லாமல் அவளுக்குள்ளேயே மருகியது. மற்றவர்களுக்கு தைரியம் சொல்லித் தேற்றியது.. என்று பல மனவுளைச்சலுக்கு ஆளான மீராவிற்கு இன்னும் தன் தந்தையின் உடல்நிலை கண்டு பயம்! எனவே இதோ அவரை விட்டு நகராமல் அமர்ந்திருக்கிறாள்.

ஹரிஹரன் “ஏன் மீரா ரொம்ப பயந்துட்டியா..?” என்றுக் கேட்கவும், ஆம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

பின் ஹரிஹரன் “உன் அம்மா எங்கே?” என்று மனைவியைத் தேடினார்.

மீரா “இத்தனை நேரம் இங்கே தான் இருந்தாங்க, பாட்டிக்கு பத்திய சாப்பாடு நேரத்திற்கு கொடுக்கணும் என்று சமைக்க போயிருக்காங்க..” என்றாள்.

ஹரிஹரன் “ஒ.. ஓகே..” என்றவர், கண நேர அமைதிக்கு பின் “என்ன முடிவு செய்திருக்கிறே..?” என்று மீராவை பார்த்து கேட்டார்.

திடுமென கேட்கவும் எதற்கு என்று புரியாது புருவத்தைச் சுருக்கி.. தந்தையைப் பார்த்தவளுக்கு, அவர் எந்த முடிவை கேட்கிறார்.. என்பது புரிந்தது. எனவே நிதானத்துடன் தனது கைவிரல்களை ஆராய்ந்தவாறு “நீங்க புல் ரிக்கவரி ஆகிட்டிங்க, இனி பயமில்லை என்று என் மனதிற்கு தோன்றியதும், உங்க கிட்ட கேட்டுட்டு ஆதித்யாவை பார்க்க போவேன்பா..” என்றாள்.

அதற்கு ஹரிஹரன் சிறு சிரிப்பு சிரித்து “உன் அப்பா ஆபாயக் கட்டத்தில் இருந்த பொழுது.. உலகம் இன்னும் தெரியாத மாதவ், குடும்பத்தை மட்டுமே உலகம் என்று நம்பியிருக்கும் தனா அப்பறம் என் அம்மாவிற்கும் எல்லாமாக நீ இருப்பாய்..! அவர்களைப் பார்த்துக் கொள்வதற்காக உன் முடிவை மாற்றியிருப்பாய் என்று நினைத்தேன்.” என்றார்.

அதற்கு மீரா “கண்டிப்பாக அவங்களுக்கு எல்லாமுமாக நான் இருப்பேன்பா..! அதில் நான் மாற மாட்டேன். ஆனால் அந்த முடிவில் இருந்தும் மாறவில்லைப்பா..” என்றாள்.

ஹரிஹரன் “எடுத்த முடிவில் உறுதியாக நிற்கும் மனபக்குவம் என் பெண்ணிற்கு எப்பொழுது வந்தது. உன் மனம் ஒரே முடிவில் இல்லாமல் மற்றவர்கள் என்ன சொல்கிறார்களோ அதற்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே தானே இருந்தது.” என்றுக் கேட்கவும் மீரா தலைகுனிந்தாள். கார்த்திக்கிடம் இருந்து ஆதித்யா பின் ஆதித்யாவிற்காக குடும்பத்தைத் துறந்தது, பின் குடும்பத்திற்காக ஆதித்யாவை துறந்தது என்று அவளின் மனமாற்றங்களைக் குறிப்பிடுகிறார் என்றுப் புரிந்தது. எனவே “இனி அந்த தப்பு செய்ய மாட்டேன்ப்பா..! இனி ஒரே முடிவு தான்..! ஆதித்யா தான் என் வாழ்வு..” என்றாள்.

அதற்கு அவர் “நான் ஒகே சொன்ன பிறகு தானே..! அதற்குள் அவன் வேற மேரேஜ் செய்துட்டா என்ன செய்வே..?” என்றுக் கேட்டார்.

அதுவரை தலையைக் குனிந்தவாறு பேசிக் கொண்டிருந்தவள், தற்பொழுது நிமிர்ந்து நேராக அவளது தந்தையைப் பார்த்து “அவர் என்னைத் தவிர வேற பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்ப்பா..” என்றாள்.

மீராவின் முகத்தை அழுத்தமாக பார்த்த ஹரிஹரன் “அன்று அவனும் இதே தான் சொன்னான்.” என்றார். மீராவின் முகத்தில் முறுவல் அரும்பியது.

ஹரிஹரன் “அந்த வார்த்தையின் மேல் இருக்கும் நம்பிக்கையினால் சொல்கிறேன் மீரா..! நீ ஆதியிடம் போகலாம்.” என்றார்.

மீராவிற்கு தன் காதலால் கேட்டதை நம்ப முடியவில்லை. “அப்பா..” என்றுத் திகைப்புடன் அழைத்தாள்.

மெல்ல சிரித்த ஹரிஹரன் “அரை மயக்கமாக இருந்த அந்த நான்கு தினங்களும் என் மனதில் உன்னைப் பற்றிய நினைவு தான் ஓடியது. ஆதித்யாவுடன் தான் உன் வாழ்வு என்ற முடிவில் மாறாமல் இருப்பது எனக்கு சந்தோஷத்தையும் தருகிறது. வருத்தத்தையும் தருகிறது. சரி எனக்கு இதற்கு பதில் சொல்..! ஆதித்யா கேட்டதிற்கும் உனக்கு ஒகேவா..!” என்றுக் கேட்டார்.

அதற்கு மீரா “அதற்கு எப்படிப்பா நான் ஒத்துக் கொள்வேன். கண்டிப்பா அவன் அப்படிக் கேட்டது எனக்கு பிடிக்கலை. ஆனால் அதற்கு அவரையே வேண்டாம் என்று விலக தான் என்னால் முடியலைப்பா..” என்றாள்.

அதைக் கேட்ட ஹரிஹரனின் முகத்தில் நன்றாகவே புன்னகை பரவியது. பின் “அதாவது.. ஆதித்யா அப்படிக் கேட்டதிற்கு நாங்க கோபப்பட்டது தப்பில்லை, ஆனால் அதற்கு அவன் வேண்டாம் என்று நாங்க முடிவெடுத்தது தான் தப்பு என்றுச் சொல்கிறாயா..” என்றார். அதற்கு மீரா உதட்டைக் கடித்தபடி குனிந்து விட்டாள்.

ஹரிஹரன் “டிக்கெட் புக் செய்திரு..!” என்றார். அதற்கு மீரா முதலிலேயே பதிவு செய்தது இன்னும் நிலுவையில் இருக்கிறது என்றாள். எப்பொழுது என்றுக் கேட்டதிற்கு நாளை என்று அவள் சொல்லவும்.. ஹரிஹரனுக்கு நாளைக்கே சென்று விடுவாளா என்றுத்தான் இருந்தது. பின் மீராவிடம் “ஒகே மீரா நாளைக்கே போ..! அங்கே உனக்கு வரவேற்பு நல்லதாக இருக்காது. அதைப் புரிஞ்சுட்டு.. அவங்க குடும்பத்து பெண்ணாக ஆதித்யாவுடன் வாழ்ந்துக் காட்டு.. ஆனால் உன்னால் முடியவில்லை என்றால்.. இரண்டு பேரும் தனியாக வந்து விடுங்க..! அவங்க உன்னை அவாய்ட் செய்ய பார்ப்பாங்க, அதையும் புரிஞ்சுக்கோ..! நீயே ஒதுங்கிட்டா இன்னும் பெட்டர்..! என்ன நான் சொல்வது புரிகிறதா..” என்றுக் கேட்டார்.

மீரா ஆம் என்று தலையை ஆட்டியவாறு “புரிகிறதுப்பா..! முடிந்தால். எல்லாருக்கும் அறிவித்து கௌரவமாக அவங்க வீட்டு மருமகளா வாழ சொல்லறீங்க..! அப்படி முடியவில்லை என்றால் தனிக்குடித்தனம் போக சொல்லறீங்க..” என்றாள். அப்பொழுது அவளது அன்னை தனலட்சுமி வேலையை முடித்துவிட்டு வரவும்.. “அம்மா..” என்று மகிழ்ச்சியுடன் ஓடிச் சென்றுக் கட்டிக் கொண்டாள். தனலட்சுமி என்ன விசயம் என்றுக் கேட்கவும், ஹரிஹரன் “வா..! நான் சொல்கிறேன் தனா..” என்று மனைவியை அழைத்தவர், மீராவிடம் “பாட்டியையும் சாப்பிட்ட பிறகு அழைத்து வா.. மீரா” என்றார்.

அதற்கு மீரா “பாட்டிக்கு எப்பவோ என் மனசு புரிஞ்சுருச்சுப்பா..! நீங்க தான் லேட்.” என்றுச் சிரித்தபடி பரிமளத்திடம் இந்தியா செல்ல போகும் விசயத்தைச் சொல்ல “பாட்டி” என்று அழைத்தபடி மகிழ்ச்சியுடன் ஓடினாள். மகளின் பழைய துள்ளலைப் பார்த்த தனலட்சுமிக்கு விசயம் சற்று புரியப்பட.. கணவரை கேள்வியுடன் பார்த்தார்.

அதற்கு ஆமோதிப்பாக தலையசைத்த ஹரிஹரன் “அவள் வாழ்ந்துப் பார்க்கட்டும் தனா! அப்பறம் அவள் என்ன முடிவு எடுத்தாலும் ஒத்துக் கொள்ளலாம்.” என்றார்.

தனலட்சுமி “அதற்குள்ள ரொம்ப கஷ்டப்படுவாளோ என்றுத்தான் பயமாக இருக்குங்க…” என்றுக் கவலையுடன் கூறினாள்.

அதற்கு ஹரிஹரன் “நம் பெண்ணை நாமளே குறைத்து மதிப்பிட கூடாது. பொதுவாகவே பெண்களுக்கு மனதைரியமும், புத்திசாலித்தனமும் அதிகமா இருக்கும். அதை அவள் யுஸ் செய்கிறாளா என்றுப் பார்க்கலாம். அப்பொழுதும் அவள் தோல்வியடைந்து வந்தால்… மகளாய் ஏற்றுக் கொள்வது நம் கடமை..! ஆனால் அவங்க வாழ்வு நன்றாக இருக்கட்டும் என்று நாம் பிராதிப்போம்.” என்று மனைவியைப் பார்த்து சிரித்தார். தனலட்சுமியும் முறுவலுடன் அவரது தோளில் சாய்ந்துக் கொண்டார்.

கார்த்திக்கிடம் ஹரிஹரன் சம்மதம் தெரிவித்ததைச் சொல்லவும் அவனும் மகிழ்ந்தான். ஆனாலும் ஆதித்யாவின் வீட்டினரைப் பற்றி எச்சரிக்க தவறவில்லை.

“மீரா! நான் அவனுக்கு அட்வைஸ் செய்தேன் என்ற காரணத்திற்காக எங்களை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்கள் என்பதை மறந்து விடாதே..! என்னிடம் எக்னாமிக்ஸ் லெவலில் மிரட்டல் விடுத்தால்.. உன்கிட்ட எமோஸனாலா பிளாக்மெயில் செய்வாங்க..! யாருக்கும் தெரியாமல் அவனது மனைவியாக இருக்க வேண்டும் என்று ஆதித்யா கேட்டதிற்கும் அவர்கள் தான் காரணமாக இருக்கலாம். இதில் எதிலும் மாட்டிக்காதே..! உன் உறுதியில் இருந்தும் மாறி விடாதே! நீ எதற்கும் பயப்படாதே! நானும் இந்தியாவிற்கு வரலாம் என்று இருக்கிறேன். இப்பவே டிக்கெட் புக் செய்கிறேன்.” என்றான்.

“தேங்க்ஸ் கார்த்தி..!” என்றவள், தொடர்ந்து மெல்லிய குரலில் “அதற்கு பிறகு ஆதி கூடப் பேசினியா?” என்றுக் கேட்டாள்.

அதற்கு கார்த்திக் “ரொம்ப ட்ரை செய்தேன் மீரா! ஆனால் பேசவே முடியலை. ஆனால் அவனது என்கேஜ்மென்ட் நிறுத்தி விட்டான் என்பது உறுதியான தகவல்! அப்பறம் ஆதித்யா வெளிநாட்டிற்கு போயிருக்கிறான் என்ற நம்பகமற்ற தகவலும் கிடைத்தது. அது எந்தளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை வந்தாலும் வந்திருப்பான். ஆனால் நீ எவ்வளவு சீக்கிரம் அவனைப் பார்க்க முடிகிறதோ! அவ்வளவு நல்லது என்றுத்தான் சொல்வேன். ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாக இரு..! அவனுடன் வாழ்வேன் என்பதில் இருந்து மட்டும் மாறி விடாதே..! அவங்க மிரட்டலுக்கு பணிந்து விடாதே..! நான் எவ்வளவு சீக்கிரம் வர முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் வருகிறேன். உன் அப்பா சொன்னதும்.. கோவில் ரிக்கார்ட்டில் இருந்த விட்டனஸை மட்டும் தான் டெலிட் செய்தேன். என்கிட்ட இருந்ததை செய்யவில்லை.” என்றான்.

மீரா “நானும் டெலிட் செய்யலை..” என்று முறுவலித்தாள். அதைக் கேட்டு சிரித்த கார்த்திக் “நல்லது! அதை அவங்க கிட்ட காட்டி மிரட்டிப் பாரு..! நீயே மீடியாவிற்கு அறிவிக்க ட்ரை செய்..! உன்னால் முடியவில்லை என்றால் நான் வந்துப் பார்த்துக் கொள்கிறேன்.” என்று மீராவிற்கு தைரியம் சொன்னவன், அவனது செல்பேசியில் இந்தியாவிற்கு செல்ல பயணசீட்டு பதிவு செய்த போது அவனுக்கு ஒரு மாதத்திற்கு பின் தான் கிடைத்தது.

மீரா “அப்பவே வா.. கார்த்திக்! நீ வரும் பொழுது நாங்க சந்தோஷமாக வாழ்க்கை ஆரம்பித்திருப்போம். அதைப் பார்க்க நீ வர வேண்டும்.” என்றுச் சிரித்துவிட்டு விடைப் பெற்றாள்.

பல கனவுகள் மற்றும் போராட்டங்களைத் தாண்டி வந்த மீராவிற்கு இன்னும் போராட்டங்களைச் சந்திக்க போகிறோம் என்றுத் தெரியும். ஆனால் அவளது கனவுகள் கனவுகளாகவே இருக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாள்.

மீராவின் இந்த நம்பிக்கை ஆதித்யாவை பார்த்த பிறகும் இருக்குமா..!

-------------------------------------------

இன்று...
ஆனந்த்சங்கர் விஜயிடம் திரும்பி “நீ போய் அந்த பெண் தானா என்று செக் செய்துட்டு இங்கே கூட்டிட்டு வா..! ஆஃப் ஹவரில் இந்த விசயத்தை முடிச்சுட்டு நான் போகணும்.” என்று வாட்ச்சை தொட்டுக் காட்டினார். தனது முதலாளி இட்ட கட்டளையை செவ்வனே முடித்துவிட்டு விஜய் மீராவை கூட்டிக் கொண்டு வந்தான்.

ஏதோ பெரிய உயர்தர ஹோட்டலுக்குள் புகுந்துவிட்டது போன்ற அனுபவத்தில் சுற்றிலும் பார்த்தவாறு வந்த மீராவிற்கு தனது கணவனை காண இன்னும் எத்தனை தடைகளைத் தாண்ட வேண்டி வரும் என்றுச் சலிப்புற்றாள். எனவே விஜயுடன் ஒரு அறைக்குள் சென்றவாறு “என் ஹஸ்பென்ட்டை பார்க்க எதற்கு இத்தனை கெடுபிடி பேசாமல்.. நான் உங்க கிட்ட காட்டிய ஃபோட்டோஸ் மற்றும் வீடியோ டாக்குமென்ட்ஸை மீடியா கிட்ட காட்டியிருந்தால்.. அடுத்த நொடியே பார்த்திருப்பேன் போல…” என்றுக் கூறியவாறு உள்ளே நுழைந்தவள்.. அந்த வயதில் ஆறடி உயரத்தில் கம்பீரமாய் நின்றபடி புருவச்சுழிப்புடன் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவரை பார்த்ததுமே அவர்தான் ஆதித்யாவின் தந்தை என்றுத் தெரிந்துவிட்டது.

கரங்களைக் குவித்து “வணக்கம் அன்கிள்!” என்றாள்.

ஆனந்த்சேகர் மாறாத புருவச்சுழிப்புடன் “இங்கே எதற்கு வந்தாய்?” என்றுக் கேட்டார்.

ஆதித்யாவின் வீட்டில் எதிர்ப்புகள் இருக்கும் என்றுத் தெரிந்திருந்தும், ஆனால் ஆதித்யா அவளைத் தவிர வேறு ஒரு பெண்ணை அவனது வாழ்வில் இணைக்க மாட்டான் என்ற அவனது வார்த்தை அளித்த பலத்தில் அவளுக்கு தைரியத்தை அளித்திருந்தது. தன்னை மீண்டும் கண்டால், அவனது வீட்டினரின் எதிர்ப்பை மீறி தன்னை ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கையுடன்.. மீரா இங்கே வந்தாள். ஆனால் ஆதித்யாவை பார்க்க வேண்டும் என்றுக் கேட்டால்.. அவனது தந்தையிடம் அழைத்து வந்திருக்கவும், அவளது உள்ளுணர்வு எச்சரித்தது. அவ்வாறு இருக்கையில் எடுத்த எடுப்பில் ஆனந்த்சங்கர் கேட்ட கேள்வியில் கோபமுற்றவளாய் “என் ஹஸ்பென்ட் கூடத் தானே நான் இருக்க வேண்டும்.” என்று அவளும் ஒரே வார்த்தையில் பதிலளித்தாள்.

ஆனால் ஆனந்த்சங்கர் இளக்காரமாக சிரித்து “நீ வர மறுத்து விட்டதாய் கேள்விப்பட்டேன்.” என்றார்.

அதைக் கேட்டு சற்று தடுமாறிய மீரா தன்னைச் சமாளித்துக் கொண்டு தன் பெற்றோரை காட்டிக் கொடுக்க விரும்பாமல் “ஸாரி அன்கிள்! அவருக்கும் எனக்கும் சின்ன மிஸ்அன்டர்ஸ்டென்டிங் ஏற்பட்டிருச்சு..! இப்போ ஒகே!” என்றாள்.

அதற்கு ஆனந்த்சங்கர் “சோ! இப்போ உனக்கு ஒகேவா..?” என்று வன்மச்சிரிப்புடன் கேட்டார். மீரா புரியாது பார்க்கவும், ஆனந்த்சங்கர் “நீ ஆதித்யாவின் மனைவியாக வாழ வேண்டுமென்றால்.. அந்த கன்டிஷனும் அப்படியே தான் இருக்கிறது.” என்றார்.

மீரா தனது முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று, “ஸாரி அன்கிள்! இது அவரும் நானும் சம்பந்தப்பட்ட விசயம்! இதைப் பற்றி நாங்கதான் பேச வேண்டும்.” என்று உறுதியான குரலில் சொன்னாள்.

மீராவின் பதிலில் கோபமுற்ற ஆனந்த்சங்கர் “முதலில் அவன் உன்னை ஏற்றுக் கொள்வான் என்ற நினைக்கிறாய்..?” என்றுச் சீற்றத்துடன் கேட்டார். அவரது சீற்றத்தில் மீரா திடுக்கிட்டவள், அதில் இருந்து அவள் மீளும் முன் ஆனந்த்சங்கர் மாறாத அதே குரலில் “அவனை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த நீ.. அவன் இருக்கும் நிலைக் கண்டு ஏற்றுக் கொள்வாயா.. என்பதும் சந்தேகம் தான்..! ஆனால் அவன் இப்படி ஆனதிற்கே நீதான் காரணம்..” என்று உச்சஸ்தாயில் கத்தினார்.

தற்பொழுது அவர் சொல்லியதைக் கேட்ட மீரா அதிர்ந்தவளாய்.. “ஆதிக்கு என்னாச்சு?” என்றுக் கேட்டாள்.

அதற்கு ஆனந்த்சங்கர் சிறு எரிச்சலுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு “அந்த இடியட்! உன் கூட வாழ ரொம்ப ஆசைப்பட்டான் போல..! அதனால் தான் ஊர் உலகத்திற்கு தெரியாமல் நீ உன் வைஃப் கூட இருக்கலாம் என்றுச் சொன்னதும்.. உடனே ஒத்துக்கிட்டான்.” என்றவர், அவளிடம் திரும்பி “ஆமாம்! நான்தான் அந்த கன்டிஷன் போட்டேன். ஆனால் உங்களுக்காக நடக்க இருந்த என்கேஜ்மென்ட்டை நிறுத்தியிருக்கிறேன். அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்! அப்படி நிறுத்தியதால்.. எத்தனை கேள்விகள் சங்கடங்கள் தெரியுமா! பொய்யாக ஒரு செய்தியை வேற பரப்பி விட்டேன்.” என்று அவரது கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டிருக்க, ஆதித்யா ஏன் இந்த மாதிரியான வாழ்விற்கு ஒத்துக் கொண்டான் என்று மீராவிற்கு புரிந்தது.

அதிகார மற்றும் கௌரவ பித்து பிடித்த தன் தந்தையிடம் வாக்குவாதம் செய்ய பிடிக்காமல்.. இவ்வாறு ஒத்துக் கொண்டிருக்கிறான். ஆதித்யாவிடம் பேசும் பொழுது அவற்றை முழுவதுமாக கேட்காமல் பதிலுக்கு அவனது மனம் புண்படும்படி பேசிவிட்ட விதியை நொந்தவளின் மனம்.. ஆனந்த்சங்கர் ‘அவன் இப்படி ஆனதிற்கே நீதான் காரணம்.’ என்றதில் மீண்டும் வந்து நின்றது.

ஆதித்யாவிற்கு என்ன ஆயிற்று?

முதலிலேயே ஒதுங்கி போகிறவன், மேலும் மனம் நொடிந்து போனானோ..! அல்லது அவள் மீதிருக்கும் கோபம் அதிகமாகி அவளை வெறுத்து ஒதுக்குவானோ..! அல்லது ஆதித்யாவின் தந்தை அவள் மீது கோபப்படுவதைப் பார்த்தால் தன்னால் ஆதித்யாவிற்கு எதாவது ஆபத்தோ! விபத்தோ! ஏற்பட்டு விட்டதோ..! என்று பலவாறு எண்ணி புலம்பியவளுக்கு ஆதித்யாவை பார்த்தால் மட்டுமே மனம் சாந்தப்படும் என்று நினைத்தாள். எனவே ஆனந்த்சங்கரிடம் “ஆதிக்கு என்னவாயிற்று? நான் ஆதித்யாவை பார்க்க வேண்டும்.” என்றாள்.

அதற்கு ஆனந்த்சங்கர் “எதற்கு? அவனோட நம்பிக்கையை நீ எப்பொழுதோ பிரேக் செய்துட்டே..! மறுபடியும் வந்திருக்கிறாய் என்றால் ஒரு ரிஷன் தான் இருக்கும். அவனது பணத்திற்காவும், ஸ்டெட்ஸ்க்காகவும் தான் அவனை லவ் செய்திருக்கிறே..” என்றார்.

மீரா “அப்படியில்லை என்று வாய் வார்த்தையாக சொல்வதை விட.. செய்துக் காட்டுகிறேன். இப்போ ப்ளீஸ் ஆதியை பார்க்க விடுங்க..” என்று மன்றாடினாள்.

ஆனந்த்சங்கர் “நீதான் விட்டனஸ் வைத்திருக்கிறாயே! அதை வைத்து நீதான் ஆதியின் வைஃப் என்று நிரூபித்து உள்ளே வா பார்க்கலாம்.” என்று அவர் ஏளனத்துடன் சொன்ன விதத்தில் அவை செல்லுபடியாகுது என்பதை சுட்டிக்காட்டி நகைத்தார்.

மீரா அமைதியாக அவரைப் பார்த்தாள். ஆனந்த்சங்கரே தொடர்ந்தார்.

“ஓகே! நீ ஆதியிடம் போகலாம். ஆனால் ஆதி உன்னை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவனுடன் இருக்கலாம். அவன் உன்னை வெறுத்து போக சொன்னால் நீ விலகி போய் விட வேண்டும். இந்த வீட்டில் இருந்து மட்டுமில்லை. அவன் கூட இருக்கிற ரிலேஷனில் இருந்தும் தான்..” என்றுவிட்டு மீராவை கூர்மையாக பார்த்தார்.

மீராவிற்கு முதலில் ஆதித்யா அவள் மீது வைத்த குற்றச்சாட்டுகள் நினைவிற்கு வந்தது. அவள் கார்த்திக்கிற்கு துரோகம் செய்து அவனை காதலிக்கிறாள் என்று அவன் கிளம்பும் வரை சொல்லிக் கொண்டிருந்தான். என்னதான் கார்த்திக் அவளை காதலிக்கவில்லை என்றாலும்.. சொன்ன சொல் ஒன்றுத்தான் என்றிருப்பவன், அவர்களுக்கு திருமணமான பின்பும் மனம் மாறி விட மாட்டாயே என்றுக் கூறிச் சிரித்தான். அவளை சீண்டும் பொருட்டு அவ்வாறு கூறியிருக்கிறான் என்று அவள் நினைத்தாள். ஆனால் அவனின் அடிமனத்தின் வெறுப்பையும் பயத்தையும் சொல்லியிருக்கிறான். ஆரம்பத்தில் இருந்தே காதலில் துரோகம் என்ற வார்த்தைகளை அவனால் பொருத்துக் கொள்ள முடியாத ஒன்று! அப்படிப்பட்டவனிடம் அவன் பேசுவதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து அவனின் ஒழுக்கத்தைப் பற்றித் தவறாக பேசியிருக்கிறாள். அதனால் கோபம் கொண்டவனின் பேச்சும் அவளது ஒழுக்கத்தைத் தான் குற்றம் சொல்லியிருக்கிறது என்று அவள் நினைத்தாள். ஆனால் அது அவனது அடிமனது பயம் என்று தற்பொழுது புரிகிறது. இக்காரணங்களால் ஆதித்யா தன்னை வெறுத்து விட்டானோ என்று அச்சமும் கொண்டாள்.

ஆதித்யாவின் தந்தை அடிக்கடி ஆதித்யாவின் நிலை என்றுக் குறிப்பிடும் பொழுது எல்லாம் மீராவின் அடிவயிற்றில் பயபந்துகள் உருண்டது. அவளது தந்தை, பரிமளம், தாய், கார்த்திக் ஆகியோர் கொடுத்த தைரியங்கள் அவளை விட்டு தொலைந்து போயிற்று. ஆதித்யாவை பார்த்தால் மட்டும் போதும் என்றிருந்தது. எனவே அவளையும் அறியாமல் சரியென்று தலையை ஆட்டினாள்.

ஆனந்த்சங்கர் விஜயை பார்க்கவும்.. அவன் முன்னே வந்து “ஃபோன் ப்ளீஸ்!” என்றான். முதலில் ஏன் கேட்கிறான் என்று மீராவிற்கு புரியவில்லை என்றாலும்.. செல்பேசியை மறுக்காது எடுத்துக் கொடுத்தாள். அதை வாங்கிய விஜய் அதில் இருந்த வீடியோ மற்றும் படங்களை அழித்தான். பின் மீராவிடம் கொடுத்தவன், ஆனந்த்சங்கரை பார்க்கவும், அவர் போ என்பது போல் தலையசைத்தார்.

விஜய் மீராவிடம் “வாங்க..” என்று அழைத்துச் சென்றான்.

அந்த வீட்டின் இல்லை..! இல்லை! மாளிகையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றான். அது முன்னிருந்ததை விட பணத்தை வாரி இறைத்து அலங்கார பொருட்களை கொண்டு அழகுற காட்சியளித்தது. ஆனால் தற்பொழுது மீராவின் கருத்தில் அவை படவில்லை. ஆதித்யாவை பார்க்க போகிறோம் என்று குறுகுறுப்பும் ஆனந்த்சங்கர் ஆதித்யாவின் நிலை என்று மறைமுகமாக தோன்றுவித்த பயமும் தான் இருந்தது.

அங்கு இருந்த ஷோபாவில் அமர்ந்திருந்த கீதா விஜய் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வருவதைப் பார்த்து “யார்” என்பது போல் பார்க்கவும், அவரிடம் சொல்வது முறையென்று விஜய் “மேம்! இவங்க தான் மீரா! ஜெர்மனியில் இருந்து வந்திருக்கிறாங்க..” என்றான்.

உடனே சடார் என்று ஷோபாவில் இருந்து எழுந்த கீதா.. மீராவை மேலும் கீழுமாக பார்த்தார். பின் மீராவிற்கு அருகில் வந்தவர், “ஏன்மா! உன் பங்கிற்கும் அவனை வாட்டுகிறே? உனக்காக தானே அன்னைக்கு அவன் அப்பா கூட எதிர்த்து பேசினான். ஆனால் அவனுக்கு நம்பிக்கை துரோகம் ஏன் செய்தே?” என்று வெடித்தார்.

இவர் யார் என்பது போல் விஜயை பார்த்தாள்.

விஜய் “ஆதித்யாவின் அம்மா!” என்கவும், மரியாதையாக கரம் குவித்தாள். ஆனால் கீதாவோ அதைப் பொருட்படுத்தாது தொடர்ந்து அவளைக் குற்றம் சாட்டினார்.

“அவனை உண்மையாக காதலித்திருந்தால்.. வர முடியாது என்றுச் சொல்லியிருப்பாயா..! இப்போ எதற்கு வந்தே? அவனுடன் இருப்பதாய் இருந்தால் இரு! இல்லையென்றால் இப்படியே போயிரு..” என்றார்.

மீரா “நான் வரலை என்றுத்தான் மாறி மாறி குற்றம் சொல்லறீங்க! ஆன்கிள் போட்ட நிபந்தனை என்னவென்று உங்களுக்கு தெரிந்திருக்கும் தானே! ஒரு மானமுள்ள பெண்ணிற்கு அதைக் கேட்டு கோபம் வந்து பேசினால் அது தப்பு..! ஆனால் ஆன்கிள் அப்படிக் கேட்டதும் தப்பில்லையா! ஆதித்யா அதற்கு ஒத்துக்கிட்டதும் தப்பில்லையா!” என்றுக் கேட்டாள்.

கீதாவிற்கு இதற்கு பதில் தெரியும். ஆனந்த்சங்கர் கேட்டது சூழ்ச்சி! ஆதித்யா ஒத்துக்கொண்டது மன்றாடல்! ஆனால் அவற்றை மீராவிடம் சொன்னால்.. அவள் அதற்கு விளக்கமளிக்க வேண்டியது வரும். இவ்விளக்கங்கள் பயங்கரமானதாக இருக்கும். எனவே அமைதியாக மீராவை பார்த்தார்.

மீரா சிறு கசந்த சிரிப்புடன் “நான் ஆதி கிட்ட போகிறேன்.” என்றுவிட்டு விஜய் முன்னே வழிக் காட்ட சென்றாள்.

அந்த பகுதியின் கதவினை ஒன்றை விஜய் திறக்கவும், அது ஆதித்யாவின் அறையாக இருக்கும் என்று மிகுந்த ஆவலுடன் எட்டிப்பார்த்தவள் திகைத்தாள். ஏனெனில் அங்கு கண்ணாடி சுவற்றால் ஆன கூண்டு போன்ற நீண்ட வழிப்பாதையாக இருந்தது. அதில் விஜய் செல்லவும் மீரா பின்னோடு சென்றாள்.

இருமருங்கிலும் பச்சை பசலென்று புல்வெளிகளும் கண்கவர் வண்ணங்களில் மலர் செடிகளும் காட்சியளித்தது. அதில் இடது பக்கம் ஒரு சிறு மாளிகை தென்பட்டது. அவளது பார்வை அங்கு சென்றதைக் கண்டு விஜய் “அது ஆதித்யா ஸாரின் அண்ணன் ராஜ்சங்கர் ஸார் தன் குடும்பத்துடன் இருக்கும் பகுதி..” என்றவன், வலது பக்கம் சற்று தொலையில் தெரிந்த அதே போன்ற சிறு மாளிகையைச் சுட்டிக்காட்டி “அது ஆதித்யா ஸாரின் அக்கா வித்யா மேம் தன் கணவருடன் இருக்கும் பகுதி..! இப்போ நாம் போயிட்டு இருப்பது ஸாரோடது..” என்றான்.

ஒரு வீட்டில் குடும்பத்தினரின் அங்கத்தினருக்கு தனித்தனியா பெரிய வீட்டையே உள்ளடங்கிய அறைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். பெரிய வீட்டின் ஒவ்வொரு தளம் ஒவ்வொருத்தருக்கு என்றுக் கூடக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் இப்படி ஒரு மாளிகையில் கிளை மாளிகை ஒவ்வொருவருக்கு என்பதைத் தற்பொழுது தான் பார்க்கிறாள்.

அதற்குள் பெரிய கதவு ஒன்றுத் தென்படவும், அவளையும் மீறி கிளர்ந்த கிளர்ச்சியுடன் உள்ளே நுழைந்தாள். அவளையும் மீறி வீட்டின் அமைப்பைப் பற்றிய பிரமிப்பில் எதிர்பார்ப்புடன் சென்றவளுக்கு உள்ளே இருட்டைந்தது போன்று இருந்தது ஏமாற்றத்தைத் தந்தது. அடுத்த கணமே… சிறு சூரிய ஒளியே புகுந்திருந்த அந்த இடத்தில் ஆதித்யாவை அவளது கண்கள் பரபரவென்று தேடியது.

அப்பொழுது அவளது பக்கவாட்டில் இருந்து வந்த சரசரக்கும் சிறு ஒலி கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

அங்கிருந்த பரந்த சுவற்றில் கையில்லா பனியனை அணிந்திருந்த ஒரு உருவம் முதுகை காட்டியவாறு பரபரவென்று எதையோ கிறுக்கிக் கொண்டிருந்தது.

அந்த உருவம் ஆதித்யா..! என்று அவளது கண்களால் நம்ப முடியாமல் இமைகளை விரித்து அவள் பார்க்கும் பொழுது.. அவனது கை அசைவில் அவன் எதை கிறுக்கிறான் என்றுப் பார்க்க இயல்பு போல் அவளது பார்வை திரும்பியது. அந்த சிறு வெளிச்சத்தில் பார்த்தவளின் கண்கள் மேலும் விரிந்தது.

அவை கிறுக்கல்கள் இல்லை! ஓவியங்கள்!

பரபரப்பாக கடைத்தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதுவது போன்ற ஓவியம் அது! அவர்களின் முகத்தோற்றம் நம் நாட்டு மக்களைப் போன்று இருந்தாலும் சீனத்து முகங்கள் போன்று இருந்தது. அவர்களது உடையும் பண்டைய சீனர்களைப் போன்று இருந்தது. நெருக்கம் நெருக்கமாக ஒவ்வொரு உருவமும் வெவ்வேறு திசையைப் பார்த்து திரும்பி நின்றுக் கொண்டு, எதாவது ஒரு செயலை செய்துக் கொண்டிருந்தது. வியாபாரிகள் போன்றும், அவற்றை வாங்கும் பல்வேறு வயதும் தோற்றமும் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் போன்று அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது. ஒரு உருவம் கையில் பெரிய பொருட்களை வைத்திருந்தது. ஒரு உருவம் ஆடிக் கொண்டிருந்தது. ஒரு உருவம் அமர்ந்திருந்தது.. என்று பல இருந்தாலும் அவை அனைத்தும் அந்த ஓவியத்தைப் பார்க்கிறவர்களை வெவ்வேறு உணர்வுகளான மகிழ்ச்சி, கோபம், கவலை, ஆகங்காரம் ஆகிய முகப்பாவனைகளுடன் பார்த்துக் கொண்டிருப்பது போன்று உயிரோட்டத்துடன் இருந்தது.

அந்த பரந்த சுவற்றில் ஆளுயரத்திற்கு இருந்த ஓவிய உருவங்களோடு உருவமாக வரைந்துக் கொண்டிருந்தவனின் மேல் அவளது பார்வை சென்றது. ஏணியுடன் கூடிய நாற்காலியில் மண்டியிட்டு அமர்ந்துக் கொண்டு அவன் இருந்த பகுதிக்கு நேர் எதிரே இருந்த திரைசீலை மிக சிறிதே விலக்கப்பட்டிருக்க.. அதன் வழியே கசிந்த வெளிச்சத்தின் உதவியுடன் வரைந்துக் கொண்டிருந்தான். வேறு விளக்குகள் எவையும் எரியவில்லை. முன்பு பார்த்ததிற்கு மெலிந்திருந்தது போல் இருந்தான். மேலும் அவனது அடர்ந்த சிகை தலையோடு ஒட்ட வெட்டப்பட்டிருந்தது.

ஒரு உருவத்தின் சிகையை வரைந்துக் கொண்டிருந்தவன்.. வரைந்தவாறு திரும்பாமல் பேசினான். “விஜய்! உன் கூட வந்திருப்பவர்களுக்கு என்மேல் ஏன் இத்தனை அக்கறை..” என்றுக் கரகரப்பான குரலில் பேசிட்டுக் கொண்டு போனவன், திடுமென நிறுத்தி இறுகிய குரலில் “உன்னுடன் வந்திருப்பது யார்..” என்றுச் சடார் என்றுத் திரும்பினான்.

திரும்பிய ஆதித்யாவை பார்த்த மீரா விக்கித்து நின்றாள். அவனும் அவளைப் பார்த்தவாறு உயரமான நாற்காலியில் இருந்து குதித்தான். அவளைப் பார்த்தபடி வந்தவன், அவர்களை நெருங்காமல் அப்படியே நின்றுவிட்டான். பின் வேகமாக அவன் வரைந்திருந்த ஓவியத்திடம் சென்றவன், எதையோ தேடினான். பின் “இதோ..” என்றுச் சுட்டிக்காட்டினான். அவன் சுட்டிக்காட்டிய உருவத்தைப் பார்த்தவள் திகைத்தாள். ஏனெனில் அது அவளைப் போன்று இருந்தது மட்டுமல்லாது காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தது. சட்டென்று இன்னொரு இடத்திற்கு சென்று “இதோ..” என்றுச் சுட்டிக்காட்டினான். அங்கே பார்த்த மீரா திகைத்தாள். ஏனெனில் அங்கேயும் மீராவின் ஓவியம் தான் இருந்தது. ஆனால் இகழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தது.

பின் அவளிடம் திரும்பியவன்.. “இது நீதானே..! ஆனால் இதில் நீ எது?” என்றுக் கேட்டான். பின் அவளுக்கு அருகே வந்தவன், சட்டென்று அவளது தோளைப் பற்றி “இந்த இரண்டில் நீ எப்படியிருந்தாலும் எனக்கு வேண்டாம் போ..” என்று அவளைப் பிடித்து தள்ளி விட்டான்.

இதை எதிர்பாராத மீரா தரையில் விழுந்தாள். ஆதித்யாவிற்கு என்னவாயிற்று என்பது போல் அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

அதைப் பார்த்து சத்தமாக சிரித்த ஆதித்யா “இங்கே இருந்து போய் விடு..! அப்பறம் ஏன் இங்கே வந்தே என்று.. வருத்தப்படுவே..” என்றான்.


நிழல் உலகில் அவனிருக்க..!

நிழலாய் அவன் தனித்திருக்க..!

நிழல் தேடாத நிஜமாகி போனாள் அவள்..!










 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 17


ஆதித்யா தள்ளி விட்டதில் தரையில் விழுந்த மீராவினால் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல்.. அப்படியே கிடந்தாள்.

ஆதித்யா அவளை விரும்பி மணக்கவில்லை. ஆனால் அவள் அவனை காதலித்ததை விரும்பியவன், அவளை கை விட மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்தவன், அவளைத் தவிர யாரும் அவனுக்கு மனைவியாக இருக்க முடியாது என்று அவளை மணந்தவன்.. அவன் அழைத்த போது, அவன் சொன்னதிற்கு ஒத்துக் கொள்ளாமல் போகவும், இவ்வாறு கோபம் கொள்வான் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.. அவனது வினோதமான நடவடிக்கை தான்!

ஆனந்த்சங்கர் எனது மகனின் இந்த நிலைக்கு நீதான் காரணம் என்று கோபம் கொண்ட போது.. ஆதித்யா அவருடன் கடுமையாக வாக்குவாதம் செய்திருப்பானோ அல்லது விபத்து ஏற்பட்டிருக்குமோ என்றுத்தான் நினைத்திருந்தாள். ஆனால் அவனது வினோதமான நடவடிக்கையும், அவனது உடல் மெலிவும் அவளுக்கு பீதியைக் கிளப்பியது.

திரும்பியும் கூடப் பார்க்காமல் அவள் வந்திருப்பதை மட்டுமல்லாது, அவள் அவளை அக்கறையுடன் பார்த்தாள் என்பதையும் துல்லியமாக கூறியவன், திரும்பிய பிறகோ அவளை அறியாதவன் போல் பார்த்தான். ஆனால் அவளை ஓவியமாக இரு வேறு பாவனைகளோடு வரைந்து வைத்திருக்கிறான். அதைக் கொண்டு அவளை அடையாளம் கண்டுக் கொண்டது தான் அவளால் அவனது மனநிலையைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அவளிடம் அவன் கேட்டதை நினைத்துப் பார்த்தாள். இரு மாறுப்பட்ட முகபாவனைகளுடன் இருந்த அந்த ஓவியத்தில். இதில் யார் நீ என்றுக் கேட்டான். அதில் ஒன்று காதலுடனும்.. மற்றொன்று இகழ்ச்சியாகவும் பார்த்துக் கொண்டிருந்தது. அவனைப் பொருத்தவரை அவளைப் பற்றிய அவனது கணிப்பைக் கூறியிருக்கிறான். அந்த கணிப்பு அவளை வெறுத்து விட வைத்து விட்டதோ..!

கண்களில் நீருடன் அவனைப் பார்த்த மீரா.. தன்னை எழுப்பி விட்ட விஜயை கேள்வியாக பார்த்தாள்.

விஜய் “அவர் மென்டல் லெவலாக ரொம்ப டிஸ்டர்ப்டாக இருக்கிறார்.” என்றான். அப்பொழுது குறுக்கிட்ட ஆதித்யா “பைத்தியம் என்றுச் சொல்..!” என்றுக் கத்தியவன், தொடர்ந்து “அவளைப் போகச் சொல்..! என்னை ஏமாற்றவே என் வாழ்வில் வந்தவள் இவள்! நான் ஏமாறவே பிறப்பு எடுத்தவன்..” என்றவன், திடுமென சிரித்தான். பின் “கெட் லாஸ்ட்..” என்றுக் கத்திவிட்டு மீண்டும் அவன் வரைந்துக் கொண்டிருந்த ஓவியத்திடம் சென்றவன், மீண்டும் வரைய ஆரம்பித்தான்.

விஜய் கூறியதைக் கேட்டும், ஆதித்யா கூறியதைக் கேட்டும் மீரா அதிர்ந்து நின்றாள்.

விஜய் மெல்ல மீராவிடம் “அவர் போக சொல்லிவிட்டார். உங்கள் முடிவு..?” என்று இழுத்தான்.

மீராவிற்கோ விஜய் கேட்டது காதில் விழவில்லை. அவளது பார்வை ஆதித்யாவை தாங்கி இருந்தது. அவளின் கணவன் அந்த நிலையிலும் அவளை வெறுக்கிறானா.. அல்லது அவன் அவ்வாறு ஆனதிற்கே தன்னை வெறுத்தது தான் காரணமா..! அவனுள் இருக்கும் பழைய ஆதித்யாவை அவளால் பார்க்க முடியாதா! ஆதித்யாவை சந்தித்ததில் இருந்து பல மனப்போராட்டங்கள், தடைகள் என்று தாண்டி வந்தது இதற்கு தானா..! முதலிலேயே அவள் மீது சற்று கோபம் கொண்டிருந்தவன், தற்பொழுது தான் அவனை ஏமாற்றி விட்டேன் என்று முழுமையாக வெறுத்து விட்டானா..! அவனுக்கு இனி நான் தேவையில்லையா..! அவனது வாழ்வில் எனக்கு இடமில்லையா.. என்று பலவாறு உழன்றவளுக்கு முதன் முதலில் அவனைப் பார்த்ததில் இருந்து நடந்த சம்பங்கள் அவளது நினைவில் வந்து சென்றது.

முதலில் சிறுப்பிள்ளை போல் கார்த்திக்கிற்கு அருகில் அமர்ந்தாள் என்று காபியை கொட்டியது. பின் காரின் அமர்ந்துக் கொண்டு அவளைப் பார்த்தது. பனிப்பொழிவை இரசித்தது. அவளின் காதலை அவளுக்கு முன்பே அவன் உணர்ந்தது. அவளிடம் கோபம் கொண்டது. அவனிடம் தன் காதலை ஒத்துக் கொண்ட அன்று.. தொலைவில் இருந்து பார்த்த பொழுது இருக்கையில் சிறுப் பிள்ளைப் போல் கால்களை மடக்கி கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தது. அவளைத் திருமணம் செய்துக் கொள்ள அவன் கொடுத்த வாக்குறுதிகள்.. என்று ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்த்தவளின் மனதில் சில்லென்று உணர்வு தோன்றியது.

ஆதித்யாவை பார்த்தாள்.. சற்று முன் அவளிடம் கத்திய நினைவு கூட இல்லாமல் சிறுப் பிள்ளையைப் போல் அந்த உயரமான நாற்காலியில் மண்டியிட்டு அமர்ந்துக் கொண்டு எம்பி வரைந்துக் கொண்டிருந்தான்.

ஆம்! ஆதித்யா மாறவில்லை. அதே சிறுப்பிள்ளை கோபம், அதே உணர்வுகளால் அவளை உணர்ந்த குணம்! ஆனால் ஆதிதமாக உள்ளது. அவளது ஆதித்யா மாறவில்லை.. என்று நினைத்தவளின் மனதில் சிறு நம்பிக்கை துளி மலர்ந்தது. கண்களில் வழிந்த நீரை அழுத்த துடைத்தவள், தன்னையே பார்த்துக் கொண்டிருந்த விஜயிடம் என்ன என்பது போல் பார்த்தவளுக்கு பின்பே அவன் கேட்டது நினைவு வரவும்.. விஜயிடம் திரும்பி “இதையே அவர் சில நாட்கள் கழித்து சொன்னால் நான் சென்றுவிடுகிறேன்.” என்றாள்.

விஜய் அப்பொழுதும் தயங்கியபடி நின்றான்.

மீரா என்ன என்பது போல் பார்த்தாள்.

விஜய் “எதாவது அவசரமான ஹெல்ப் வேண்டுமென்றால்.. நீங்க இன்டர்காமில் நம்பர் எட்டை அழுத்தலாம். உங்க கார்டனில் தான் ஹெல்பிற்கு ஒரு ரூம் கொடுத்து தங்க வைத்திருக்கிறோம். அதனால் உடனே வந்து விடுவார். அவங்க பெயர் சோமு! இங்கே முதலில் வேலை செய்தவர். ஆதித்யா ஸார் அவரைப் பார்த்தாலும் கத்துவார். ஆனால் சோமு ஆதித்யா ஸாரின் மூட் அறிந்து நடந்துக் கொள்வார். இப்போதைக்கு அவங்க தான் ஆதித்யா ஸாரை ஹான்டில் செய்யறாங்க..” என்று ஆதித்யாவை பார்த்தபடி சொன்னான். ஆதித்யா மீண்டும் முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டால் உதவிக்காக அழைக்க சொல்கிறான் என்றுத் தெரிந்தது. எனவே அமைதியாக நின்றாள். விஜய் தொடர்ந்து “மற்ற நம்பர்ஸ் எதற்கு என்ற விபரங்களைத் தெரிந்துக் கொள்ள இன்டர்காமில் நம்பர் ஒன்றை அழுத்துங்கள். நான் வருகிறேன்.” என்றுவிட்டுச் சென்றான்.

அங்கிருந்து சென்ற விஜய் நேராக ஆனந்த்சங்கரிடம் தான் சென்றான். அவரும் விஜயின் வருகைக்காக தான் காத்துக் கொண்டிருந்தார்.

அவனைக் கண்டதும் ஆனந்த்சங்கர் பரபரப்புடன் “என்னவாயிற்று! அந்த பெண்ணை அடையாளம் கண்டுக் கொண்டானா..! அந்த பெண்ணைத் தன்னுடன் வைத்துக் கொண்டானா! இனி பழையபடி மாறி விடுவான் தானே..! இந்த இரண்டும் இல்லாமல் ஆதியை பார்த்துவிட்டு அந்த பெண் ஓடிவிட்டாளா..” என்றுக் கேட்டார்.

அதற்கு விஜய் “அவங்களை பார்த்ததும் ஆதித்யா ஸாருக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை ஸார்! அப்பறம் தெரிந்துவிட்டது போல..! உடனே அவங்களை வெளியே போ என்றுக் கத்தினார். ஆனால் அந்த பெண் மறுத்துட்டாங்க..! ஆதித்யா ஸாருடன் இருக்க சம்மதிச்சுட்டாங்க..!” என்றான்.

உடனே ஆனந்த்சங்கர் “எஸ்..!” என்று மகிழ்ச்சியில் காற்றில் கை முஷ்டியால் குத்தினார். அவருடன் சில வருடங்களாக நெருக்கமாக பணியாற்றி அவரை பற்றி அனைத்தும் தெரிந்திருந்த விஜய் கூட அவரின் மகிழ்ச்சிக்கான காரணம் புரியாது விழித்தான்.

ஆனந்த்சங்கர் தனது கைகடிகாரத்தை பார்த்து “டைமாச்சு போகலாமா..?” என்றுக் கேட்டவர், விஜயின் முகத்தைப் பார்த்து சிரித்தார்.

பின் “அந்த பெண்ணை ஆதித்யா துரத்தியிருந்தாலோ, அல்லது அந்த பெண் ஆதித்யாவை பார்த்துவிட்டு அவன் வேண்டாம் என்றுச் சென்றிருந்தலோ.. ஆதித்யாவின் நிலை அதேதான்! என்னதான் என்னேரமும் என் வெறுப்பை சம்பாதித்தவன் தான் என்றாலும், என் மகனாச்சே! ஆதித்யாவை இப்படிப் பார்க்க எனக்கு மட்டும் பிடிக்குமா என்ன! அவன் என் விருப்பப்படி என்றில்லா விட்டாலும்.. முதல் மாதிரி, அதாவது நான் சொல்கிறபடி நடப்பவனாய் இருந்தால் கூடப் போதும்..”

“இப்படி மனநிலைப் பாதிக்கப்பட்டவனை வைத்துக் கொண்டு என் பல கோடி மதிப்புள்ள தொழில் ஒப்பந்தம் நடைப்பெறாது. ஆனால் அவனை நிராகரித்த பெண் அவனுக்கு மீண்டும் கிடைக்கும் பொழுது.. அவன் நிச்சயம் குணமாகுவான். அது நமக்கு லாபம் தானே..! எப்படியென்று பார்க்கிறாயா..! நம்மளோட பழைய பிளனை செயல்படுத்தலாம். அதாவது ஆதித்யா குணமான பின்.. அந்த பெண்ணை ஆதித்யா வெறுக்கும்படி செய்து விடலாம். அப்பறம் ஆதித்யா எனக்கு கொடுத்த வாக்கின்படி நான் சொன்ன பெண்ணை மணந்துக் கொள்வான். அதாவது அந்த பெண்ணின் மூலம் முற்றிலும் மனநிலைப் பாதிக்கப்பட்டவன், அந்த பெண்ணால் மூலமே குணமாகி எனக்கு என் மகன் திரும்ப கிடைப்பான். எப்படி!” என்றுச் சிரித்தார்.

விஜய் “சூப்பர் ஸார்! அப்போ முதலில் அவங்களிடம் அப்படிப் பேசியது அவங்களை உசுப்பேற்றவா..?” என்றுக் கேட்டான். ஆனந்த்சங்கரின் முகத்தில் மர்ம முறுவல் கூடியது.

“முதலில் இந்த பெண் வரவில்லை என்றதும் எனக்கு மிகுந்த ஏமாற்றமாக போய் விட்டது. ஆதித்யாவின் வாழ்வில் வந்த முதல் பெண் இவள்தான்! அந்த பிரமிப்பிற்காக சிறிது காலம் வாழ்வான்.. அப்பறம் அவனுக்கு இந்த பெண்ணின் மேல் வெறுப்பு வருகிற மாதிரி.. எதையாவது செய்து விடலாம் என்று நினைத்தால்.. இவள் வரமாட்டேன் என்றுச் சொல்லிவிட்டாள். ஆனால் ஆதித்யாவிற்கு கொடுத்த வாக்கின்படி என்கேஜ்மென்ட்டை நிறுத்தும்படி ஆகிவிட்டது. சரி அவனது மனதை மாற்றிக் கொள்வான் என்று நினைத்திருந்த வேளையில் அவனுக்கு இப்படியாகி விட்டது. சரி நானே பேசி வர வைக்கலாம் என்று நினைத்த பொழுது அங்கே அவளுடைய அப்பாவிற்கு ஆக்ஸிடென்ட் நடந்து விட்டது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிச்சுட்டு இருந்த நேரத்தில்.. நல்லவேளை அந்த பெண் தானாக வந்தாள். வந்தவளிடம் ஆதித்யாவினை விட்டு போக முடியாதபடி தன்மானத்தை உசுப்பேற்றி சவால் விடும்படி வைத்து விட்டேன். அந்த பெண்ணிற்கும் ஆதித்யாவின் மேல் காதல் உண்டு. இப்போ ஆதித்யா என்ன செய்ய போகிறான் என்றுத்தான் தெரியவில்லை..” என்று யோசனையில் ஆழ்ந்தார்.

அதற்கு விஜய் சிறு சிரிப்புடன் “ஆதித்யா ஸாருக்கும் அந்த பெண்ணை மறக்கவில்லை ஸார்!” என்று ஓவியமாக வரைந்து வைத்திருப்பதைச் சொன்னான். அதற்கு ஆனந்த்சங்கர் மகிழ்ந்தவராய்.. “அப்போ ஆட்டம் திரும்பி என் பக்கம் வந்து விட்டது.” என்றுச் சிரித்தார்.

------------------------------------------------------

மகிழன் செல்பேசியில் “ஸார்..! ஆதித்யாவின் மனைவி அவருடன் வந்துவிட்டதாக எனக்கு தகவல் வந்திருக்கு..” என்றார்.

அதற்கு அந்த பக்கத்தில் இருந்து “தெரியும்! அதனால் என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கறீங்க?” என்ற கேள்வி வந்தது.

“ஆதித்யா க்யுர் ஆகி விடுவானே..” என்றார்.

“ஆக கூடாது! ஆதித்யா சரியாகிவிட்டால் ஆதித்யா பழையபடி ஆனந்த்சங்கரின் கைப்பாவை ஆகி விடுவான். அவர்களை மீறி அவனால் ஒன்றும் செய்ய முடியாது. க்யுர் ஆகாமல் பார்த்துக் கொள்வது உங்க வேலை! தொடர்ந்து நெகட்டிவ் தாட்ஸை அவன் மைன்டில் ஏற்றி விடுங்க..!” என்றான்.

அதற்கு மகிழன் “நான் குணமாக்கிய என் பேஷன்ட்டிடம் கடந்த இருபது நாட்களாக அதை்தானே செய்துட்டு இருக்கிறேன். என்னோட வெற்றியையே என்னையே அழிக்க வைச்சுட்டிங்களே..” என்றார்.

அதற்கு அந்த பக்கம் “என்ன ஸார் செய்ய! அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரிந்து.. நீங்க தான் அவனுக்கு ட்ரீட்மென்ட் தரீங்க என்றுத் தெரிந்து உங்களைப் பிடிப்பதற்குள்ளவே எனக்கு ஒரு வருஷம் ஆகிவிட்டது. முதலிலேயே தெரிந்திருந்தால் என் கனவு எப்பொழுதோ நிறைவேறியிருக்கும், ஆதித்யா திருமணம் செய்துக் கொண்ட பெண்ணும் வீணாக வந்து மாட்டியிருக்க மாட்டாள்.” என்றான்.

மகிழன் “நடப்பதும் நன்மைக்கே..! இப்போ முன்பை விட ஆனந்த்சங்கர் ஸாரின் மானத்தை கப்பல் ஏற்றலாம். சரி சொல்லுங்க! அடுத்து என்ன செய்வது?” என்றுக் கேட்டார்.

அதற்கு “அந்த பெண் இப்பொழுது தானே வந்திருக்கு! உடனே நாம் விசயத்தை வெளிட்டால்.. அந்த பெண் நாங்க திருமணம் செய்யலை என்றுச் சொல்லிட்டு திரும்பி போய் விடப் போகிறாள். கொஞ்ச நாள் போகட்டும். நீங்க தொடர்ந்து உங்க வேலையைச் செய்யுங்கள். த க்ரேட் ஆனந்த்சங்கரின் மகனுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட விசயம், அவனுக்கு திருமணம் ஆன விசயம் எல்லாம்.. உலகத்திற்கு தானாக வெளிப்பட வேண்டும். எப்படியென்று பிறகு பேசலாம்.” என்று அழைப்பைத் துண்டித்தான்.

-------------------------------------------------------

சுவற்றில் இருந்த உருவத்தின் ஒன்றின் சிகையை கரும் வண்ண க்ரையனால் அழுத்தமாக வரைந்துக் கொண்டிருந்தவனின் கை அப்படியே நின்றது.

“நீ இன்னும் போகலையா…” என்றுக் கேட்டான்.

மீரா “ஆதி! நீங்க கூப்பிட்டிங்க தானே..! இதோ வந்துட்டேன்.” என்றாள்.

சடார் என்றுத் திரும்பியவன் அவளை உற்றுப் பார்த்தான், பின் “நான் உன்னைக் கூப்பிட்டேனா..?” என்றவன், அந்த நாற்காலியில் இருந்து குதித்து மீண்டும் அவளை நோக்கி வந்தான். ஆனால் அவனின் பார்வை எங்கோ இருந்தது. எங்கோ பார்த்தவாறு அவளிடம் வந்தவன், அங்கிருந்து பார்வை எடுக்காமலேயே “நீதான் கூப்பிட்டே..!” என்றான்.

மீரா புரியாது பார்க்கவும், சற்றுக் கோபத்துடன் அவள் புறம் திரும்பியவன், “நான் என்னோட மனநிம்மதிக்காக வந்திருந்த இடத்தில் நீதான் என்னைக் கூப்பிட்டே..! நான் அங்கே வராமலேயே இருந்திருக்கலாம்.” என்றான்.

பிறகே அவன் தற்பொழுது வந்ததையும், கூப்பிட்டதையும் சொல்லவில்லை என்று மீராவிற்கு புரிந்தது. ஆதித்யாவை முன்பு பார்த்த பொழுதே அவனைப் புரிந்துக் கொள்ள முடியாது. தற்பொழுதோ முற்றிலும் மாறியிருக்கும் இந்த ஆதித்யாவிடம் எவ்வாறு பேசுவது என்றுத் தெரியாமல் திணறினாள். அவளது மனதில் சிறு பயம் குடிக் கொண்டது. சிறு அச்சத்துடன் அவனைப் பார்த்தாள்.

அவளது கண்ணில் கண்ட பயத்தைப் பார்த்தவன்.. சத்தமாக சிரித்தான். பின் திரும்பி அவன் வரைந்தவற்றை பார்த்தான். “இதையும் வரைய வேண்டும்.” என்றுச் சொன்னான். பின் மீராவை பார்த்தவன், “என்னைப் பார்த்தால் பயமா இருக்கா..! அப்பறம் ஏன் வந்தே! போயிரு..!” என்றவன், திடுமென கண்களை இறுக்க மூடியவாறு தலையைப் பிடித்துக் கொண்டான்.

பின் “போயிரு..! போயிரு..! போயிரு..! உன்னை பார்க்க பார்க்க.. என்னோட தவறு நினைவிற்கு வருகிறது. நான் தெரிந்தே செய்த தப்பு நீ! என்னோட தவறின் முழு உருவமாய் வந்து நிற்கிற உன்னைப் பார்க்க எனக்கு பிடிக்கலை. எந்த விசயத்தில் நான் ஏமாற கூடாது, ஜெயிச்சுட்டேன் என்று நினைச்சேனோ..! அதைச் செய்ய வைத்தவள் நீ! என் கண் முன்னாடி நிற்காதே போயிரு..! போயிரு..!” என்றுக் கத்தினான்.

மீரா விக்கித்து நிற்கையிலேயே திரைச்சீலை ஒன்றை விலக்கிக் கொண்டு மத்திய வயதைத் தாண்டிய ஒருவர் பரபரப்புடன் வந்தார். ஆதித்யாவை நோக்கி வந்தவர், பின்பே அங்கு மீரா இருப்பதைக் கண்டு நின்றுவிட்டார். பின் “இப்போ தான் விஜய் ஸார் ஃபோன் போட்டார். உங்களைப் பற்றிச் சொன்னார். அதற்குள் ஸாரோட சத்தம் கேட்கவும் வந்தேன்.” என்று மீராவிடம் விளக்கினார்.

அதற்குள் நிமிர்ந்து நின்ற ஆதித்யா “சோமு! இங்கே வராதீங்க.. என்று எத்தனைத் தரம் சொல்லியிருக்கிறேன். நான் என்ன மிருகமா! எனக்கு நீங்க காவலா!” என்றுக் கத்தினான்.

அதற்கு சோமு “அப்படியில்லை ஸார்!” என்றவர், “நீங்க உட்காருங்க..!” என்றுச் சமாதானம் செய்ய முயன்றான். பின் மீராவிடம் திரும்பி “ப்ளீஸ்! நீங்க அந்த ரூமில் உட்காருங்க..! ப்ளீஸ்..” என்றான்.

மீராவுமே ஆதித்யாவை பார்த்த அதிர்ச்சியில் இருந்ததால் அவளுக்கும் சிறிது மனதை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது. மேலும் தன்னைப் பார்த்தால் ஆதித்யா இன்னும் நிதானத்தை இழப்பான் என்பதால் சிறிது நேரம் அவனது பார்வையில் இருந்து அகன்று இருக்கலாம் என்று சோமு சொன்ன அறைக்குள் சென்று கதவையடைத்துக் கொண்டாள்.

கதவைச் சாத்திவிட்டு அதன் மேல் சாய்ந்து நின்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. அவளின் ஆதித்யா முற்றிலும் வேறாக பார்த்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அவளின் ஆதித்யாவை பார்க்க காதலுடன் வந்தாள். ஆனால் அவள் பார்த்தது அவளது ஆதித்யா இல்லையோ என்பதொரு மாயை ஏற்பட்டது. சற்றுமுன் அவன் கூறியவற்றை நினைத்துப் பார்த்தாள். அவன் புரிந்த தவறு என்று அவளைக் குறிப்பிட்டான் எனில் எதைத் தவறு என்கிறான். அவளையா..! அவளின் காதலை ஏற்றதயா! அல்லது அவளை மணந்ததையா! இவை மூன்றையுமா! என்று யோசித்தாள்.

ஆதித்யா முதலில் இருந்தே காதலின் மேல் அத்தனை பெரிய அபிப்பிராயம் இல்லாதிருப்பது புரிந்தது. அவ்வாறு இருந்தும் அவளின் காதலின் அளவை கண்டு அவளை மணந்திருக்கிறான். அவனின் நிச்சயதார்த்ததை நிறுத்தினால் வீட்டில் பெரிய எதிர்ப்பு கிளம்பும் என்றுத் தெரிந்தும்.. அவளுக்காக நிறுத்தியிருக்கிறான். அப்படியிருக்கையில் அவள் இங்கு வர மறுத்தது அவனை மறுத்துவிட்டது போன்று தோன்றியிருக்கிறது. அதனால் அவனின் வெறுப்பையும் ஏமாற்றத்தையும் அதிகப்படுத்தியிருக்கிறாள். அவளை வெறுக்க செய்திருக்கிறாள் என்று மனம் கனக்க நினைத்தவள் சற்றுமுன் அவனை முதலில் பார்த்ததை நினைத்துப் பார்த்தாள். நினைக்கும் பொழுதே அவளது மனதில் சில்லிடும் உணர்வு தோன்றியது. இல்லை! இல்லை! அவன் அவளை வெறுக்கவில்லை. இவளை இருவிதமாக வரைந்து வைத்திருந்தவன், இதில் நீ யார்! என்றுக் கேட்டிருக்கிறான். அவள் காதலாய் பார்ப்பது நான் என்றுச் சொல்லியிருந்தால் அவளை ஏற்றுயிருப்பானோ..! இகழ்ச்சியாக பார்ப்பது போன்று வரைந்த ஓவியம் வரைந்து அவள் விலகி விட்டதைக் குறிப்பிட்டு இருக்கிறான். அவள் பயத்துடன் பார்த்த பொழுது கூட.. அதை வரைய வேண்டும் என்றுக் கூறியிருக்கிறான். அவளது மனம் முற்றிலும் தெளிவு பெறவும்.. கண்களை அழுத்த துடைத்தவள், கதவை திறந்துக் கொண்டு வெளியே சென்றாள்.

மீண்டும் அவளை சிறு வெளிச்சம் மட்டும் பரவிய அந்த பெரிய அறையே வரவேற்றது. ஆதித்யா எங்கே என்றுப் பார்த்தாள். இருபது அடி உயரம் கொண்ட அந்த சுவற்றின் முன் இருந்த தரையில் ஒருபக்கமாக கால் சுருக்கி வைத்துக் கொண்டு ஒருகளித்துப் படுத்திருந்தான. இரு கைகளையும் கோர்த்து கன்னத்திற்கு அடியில் வைத்து படுத்திருந்தான். அதைப் பார்த்தவளுக்கு ஏதோ பாதுகாப்புமின்மை இன்றி உறங்கும் சிறுப்பிள்ளைப் போல் இருந்தது. அந்த சோமு எங்கே என்றுப் பார்த்தாள். அங்கு இல்லாதிருப்பதைக் கண்டதும், விஜய் அருகில் இருக்கும் கார்டனில் அவன் தங்க வைக்கப்பட்டிருப்பதாக சொல்லியது நினைவு வரவும்.. அவன் ஒருபக்கத் திரையை விலகி வந்தது நினைவு வரவும்.. அவளும் சென்று திரையை விலக்கியவளை கண்ணாடிக் கதவு ஒன்று வரவேற்றது. கண்ணாடிக்கதவின் வழியாக தெரிந்த தோட்டத்தின் அழகு அவளது மனதிற்கு மேலும் நிம்மதியைத் தந்தது. மீரா வெளியே வந்ததும் அவளைப் பார்த்த சோமு வந்தான்.

தன் கணவனைப் பற்றி மற்றொருவரிடம் கேட்க சங்கடமாக மீராவிற்கு இருந்தது. ஆனால் ஆதித்யாவை பற்றி அறிந்துக் கொள்ள சோமுவிடம் கேட்பதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை. அவளுக்கு விஜயிடம் கேட்க பிடிக்கவில்லை. எனவே தன்னை நோக்கி வந்த சோமுவிடம் “நான் ரூமிற்கு போன பிறகும் ஆதித்யா சத்தம் போட்டுட்டே இருந்தானா..” என்றுக் கேட்டாள்.

சோமு “இல்லைங்க..! நீங்க போனதும் முகத்தை மூடிக் கொண்டு கீழே அமர்ந்தார். பின் அசைவேயில்லை. அப்படியே படுத்துட்டார். அதனால் தான் நான் வந்துட்டேன். அவர் இப்போ..?” என்று மீராவிடம் கேட்கவும், மீரா “இன்னும் படுத்துட்டு தான் இருக்கிறார்.” என்றாள்.

பின் மீரா சிறு தயக்கத்துடன் “ஆதி ஏன் இப்படியாகிட்டான். நான் பார்த்த ஆதிக்கும் இந்த ஆதிக்கும் ரொம்ப வித்தியாசம்! இந்த இருபது நாளில் இப்படியாகிட்டாரா..” என்றுக் கவலையுடன் கேட்டாள்.

அதற்கு சோமு “அப்படியென்று இல்லைங்க..! ஸார் எப்பொழுதுமே அப்படித்தான்! எல்லார் கூடயும் சேராமல் தனியாக தான் இருப்பார். எனக்கு பத்து வருஷமா இந்த இடத்தை பார்த்துக்கிறது தான் வேலை! அதனால் ஸார் இங்கேயே இருப்பதைத் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் இரண்டு வருஷத்திற்கு முன்னாடி.. ஒருதரம் இப்படித்தான் இருந்தார்.” என்றான்.

அந்த விசயம் மீராவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆதித்யாவின் தந்தையும் அவள் தான் காரணம் என்றுக் குற்றம் சாட்டியதாலும், ஏன் அவளுமே அவனின் இந்நிலைக்கு அவள் தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்க.. சோமு சொன்ன விசயம் மீராவிற்கு புதியதாக இருந்தது.

எனவே “என்ன சொல்லறீங்க! ஆதிக்கு முதலிலேயே இந்த மாதிரி ஆகிருக்கா..?” என்றுக் கேட்டாள். உடனே சோமு இந்த விசயத்தை இவர்களுக்கு சொல்லியிருக்க கூடாதோ என்று திருதிருவென விழித்தான். மீரா “நான் ஆதியோட வைஃப் என்றுச் சொல்லியிருப்பாங்க தானே..! அப்போ நானும் அவனுடைய அப்பா அம்மா மாதிரி மாற்ற முடியாத ரிலேட்டிவ் தானே..! எனக்கு தெரிந்தால் என்ன தப்பு?” என்றுச் சற்று காட்டத்துடன் கேட்டாள்.

விஜய் சற்றுமுன் சோமுவிற்கு செல்பேசியில் அழைப்பு விடுத்த பொழுது மொட்டையாக “ஆதித்யா ஸாரை பற்றி எல்லா விசயத்தையும் சொல்லிவிடு..” என்றுச் சொன்னான். அவன் சொன்னது ஆதித்யாவின் உடல்நிலை மற்றும் மனநிலை பற்றியது. ஆனால் அந்த எல்லாம் என்பதில் ஆதித்யாவின் மனைவிக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் என்று பொருள் கொண்ட சோமு.. அவனுக்கு தெரிந்தவற்றைச் சொன்னான்.

“இரண்டு வருஷத்திற்கு முன்… ஒருநாள் செடி கொடிகளுக்கு நீர் இறைச்சுட்டு இருந்தேன்ங்க! அப்பொழுது விஜய் ஸார் எனக்கு ஃபோன் போட்டு வரச் சொன்னார். அவரின் குரலில் இருந்த பதட்டத்தைக் கண்டு நானும் என்ன விசயமோ என்று சிறு பயத்துடன் ஓடினேன். அங்கே பொருட்கள் தாறுமாறாக கிடக்க ஹாலே அலங்கோலமாக இருந்தது. அனைவரும் அதிர்ச்சியுடன் ஒரு இடத்தில் நின்றிருந்தார்கள். சின்ன முதலாளி வெறி பிடித்தாற் போன்று கத்திக் கொண்டிருந்தார். நான் வந்ததைப் பார்த்த பெரிய முதலாளி அவரை அங்கே இருந்து கூட்டிட்டு போக சொன்னாங்க..! கிட்டத்தட்ட அவரைத் தூக்கிட்டு வந்தோம். அப்பொழுதும் அவர் சம்பந்தமே இல்லாமல் எதேதோ சொல்லிக் கத்தினார். அப்பறம் வேற வழியில்லாமல் விஜய் ஸார் சின்ன முதலாளிக்கு ட்ரீங்க்ஸ் அதிகமாக கொடுத்து படுக்க வைத்தார். அவரும் போதையில் நல்லா தூங்கிட்டார். ஆனால் அடுத்த நாள் போதை தெளிந்து எழுந்ததும் மறுபடியும் கத்த ஆரம்பித்தார். பெரிய முதலாளி கிட்ட சண்டைக்கு நின்றார். வெளியே போகிறேன் என்றுப் பிடித்த எங்களைத் திமிறிக் கொண்டு போக முயன்றார். முடிவில் தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தார். தன்னையே காயப்படுத்திக் கொண்டார். எங்களை மாதிரி இருக்கிறவங்க வீட்டில் இந்த மாதிரி விசயம் நடந்திருந்தால், அது எங்களுக்கு அதிர்ச்சியான வருத்தமான விசயம்! ஆனால் இந்த மாதிரி பெரியவங்க வீட்டில் நடந்தால் அது பரபரப்பான விசயமாச்சுங்களே! விசயம் வெளியே போகாமல் இருக்கணும் என்று இங்கிருக்கிற என்னைப் போன்ற வேலைக்காரங்களுக்கு பயங்கர கெடுபிடி செய்தாங்க..! அப்பறம் அந்த இரண்டு நாட்களுக்கு பிறகு வீட்டிற்குள் என்ன நடக்குது என்று எங்களுக்கு தெரியாது. கண்டுக்கொள்ளவும் கூடாது என்று கொடுத்த கெடுபிடிகளில் ஒன்று! டாக்டர் கூட வந்தாங்க.. அப்பறம் வீடு கொஞ்சம் அமைதியாச்சு! அப்பறம் சின்ன முதலாளியை பெரிய முதலாளி அவர் போகிற இடத்திற்கு எல்லாம் கூடக் கூட்டிட்டு போவார். அவ்வளவு அமைதியாக இருந்தார். டாக்டர் மாதத்திற்கு ஒருதரம் வந்துட்டு போயிட்டு இருந்தார். அதற்கு பிறகு இருபது நாட்களுக்கு முன்தான் ஸார் மறுபடியும்.. அந்த மாதிரி நடந்துக்கிட்டார். உடனே டாக்டர் வந்துட்டார். பழையபடி குணமாகி விடுவார் என்று நினைத்தோம். ஆனால் அவருடைய நிலையே வேற மாதிரி ஆகிருச்சு..! சம்பந்தம் இல்லாமல் பேசுவார், கத்துவார், அழுவார், தனியாக பேசுவார், ஸாரே வேற மாதிரி ஆகிட்டார்.” என்றுக் கவலையுடன் சொல்லி முடித்தான்.

சோமு கூறியதை அனைத்தையும் கேட்ட மீரா அதிர்ச்சியடைந்தாள் என்றாலும்.. நிதானமாக யோசித்தாள். இன்று நடந்ததிற்கு அவள் ஒரு காரணம் என்றுப் புரிந்தது. ஆனால் இரு வருடங்களுக்கு முன் ஆதித்யா அவ்வாறு நடந்ததிற்கு காரணம் என்னவென்று சரியாக கணிக்க முடியவில்லை. இருவருடம் என்ற கணக்கின்படி கார்த்திக்கின் தங்கையை சந்தித்த நாட்கள் என்றுத் தெரிந்தது. ஆனால் காவ்யாவை அவன் காதலிக்கவில்லை என்பதில் அவள் நிச்சயம். அவனின் வாழ்வில் வந்த முதல் பெண் அவள் தான்.. என்று அவளுக்கு நன்றாக தெரியும். எனவே இரு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்திற்கு நிச்சயம் காவ்யாவின் காதல் காரணமில்லை என்று நன்றாக புரிந்தது. ஆனால் கார்த்திக் சொன்னதன்படி ஆதித்யாவின் படிப்பு நின்றது. வீட்டை விட்டு வெளிவராமல் இருந்தது, மனநிலை பாதிக்கப்பட்டதிற்கும் காவ்யாவின் மறுப்பிற்கும் கண்டிப்பாக எதோ சம்பந்தம் உண்டு என்று நன்றாக புரிந்தது. அது என்ன என்றுப் புரியாமல் யோசித்தபடி உள்ளே வந்தவள் பார்த்த காட்சியைக் கண்டு அப்படியே நின்றுவிட்டாள்.

சுவற்றைப் பார்த்தவாறு இருகைகளையும் பின்னால் ஊன்றியவாறு ஒரு காலை மடித்தும் ஒரு காலை நீட்டியபடியும் தரையில் ஆதித்யா அமர்ந்திருந்தான்.

அவனைப் பார்த்ததும் அவன்பால் முன்பை விட மனம் உருகியது. மனதிற்குள் ‘ஆதி..! ஏன்டா! உனக்கு அப்படி என்னாச்சு? எதை மனதிற்குள் போட்டுட்டு இப்படிக் குழம்புகிறே?’ என்றாள்.

அமர்ந்திருந்தவனின் தலை மட்டும் அவள் இருக்கும் திசை பார்த்து திரும்பியது. அதைப் பார்த்த மீராவின் மனது சில்லிட்டது. தனது கேள்விகளையும், சந்தேகங்களையும் மனதின் ஒரத்திற்கு தள்ளி வைத்துவிட்டு, ஆதித்யா தன்னை வாழ்க்கைத் துணைவியாக தேர்ந்தெடுத்தது தவறு என்ற அவனது கணிப்பை சரிச் செய்ய வேண்டும் என்று நினைத்தாள். அவளின் அன்பை அவன் புரிந்துக் கொள்ள வைக்க வேண்டும். பின் அவனின் அன்பை பெற வேண்டும். அதன் பின் அவனின் புதிர்களை விடுவிக்க வேண்டும் என்று மனதிற்குள் உறுதி எடுத்தாள்.

எனவே அவனைப் பார்த்து முறுவலித்தவள், தன் பக்கத்தில் கிட்டத்தட்ட சுவர் முழுவதும் இருந்த திரைச்சீலையை அங்கிருந்த ஸ்விட்ச்சை ஆன் செய்து விலக்கி விட்டாள். சட்டென்று முழு வெளிச்சமும் அந்த அறை முழுவதும் பரவியது. ஆதித்யா கண்கள் கூச கண்ணிற்கு மேல் கையை வைத்துக் கொண்டு அவளைப் பார்த்தவாறு எழுந்தான்.

ஆதித்யாவை பார்த்து மீரா கத்தினாள்.

“ஐ லவ் யு ஆதி..! ஐ லவ் யு மேட்லி..! அப்படி என்னை என்னடா செய்தே..! இப்படி என்னை உன் பின்னால் சுற்ற வைக்கிறே? நீ வேண்டாம் போ போ என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும்.. அந்த வார்த்தை என் காதில் வா.. வா.. என்று விழுகிறது. இதோ நான் வந்துட்டேன். உனக்கு மட்டும் என்று வந்துட்டேன். இனி நாம் மட்டும் தான்..” என்றுக் கத்தியவள், அங்கிருந்து ஓடி வந்து ஆதித்யாவை கட்டிக் கொண்டாள்.

அவள் ஓடி வந்து கட்டிக் கொண்ட வேகத்தில் சிறிது தடுமாறி பின்னால் சென்றவன், தடுமாறி விழாமல் இருக்க அன்னிசை செயலாக அவளைப் பிடித்துக் கொண்டான். ஆனால் மறுநொடி அவனது இறுகிய அணைப்பில் மீரா அவனுள் அமிழ்ந்தாள்.

அவர்களின் இணைவு…!
அதற்கு ஆயிரம் காரணங்கள்..! ஆதாயங்கள்..!

அவர்களுக்கு ஒன்றுத்தான்..!
அவனுக்கு அவள்..!
அவளுக்கு அவன்..!







 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 18


தன்னை இறுக்கி கொண்ட ஆதித்யாவை விட மாட்டேன் என்பது போல் மீரா இறுக கட்டிக் கொண்டாள். அவளது அணைப்பில் அடங்கியவன், மறுநிமிடமே திமிறி தன்னை விடுவித்துக் கொண்டான்.

அவளை நம்ப முடியாதவன் போல் பார்த்தவாறு பின்னால் எட்டுக்களை எடுத்து வைத்து அவளிடம் இருந்து விலகினான். அப்பார்வை மீராவிற்கு பீதியைக் கிளப்பவும், “ஆதி..” என்று அழைத்தாள்.

ஆனால் ஆதித்யா அவளைப் பார்த்தவாறு பின்னால் சென்றான். மீரா “ப்ளீஸ் ஆதி! என்னை விட்டு விலகாதே..! லவ் யு ஆதி..” என்றாள்.

“டொன்ட் சே தட்..” என்றுக் கத்தியவாறு பின்னால் சென்றவன், அங்கே இருந்த நாற்காலியில் இடித்து நின்றான்.

பின் அவளை அதிர்ச்சியுடன் பார்த்து “இது நிஜம்..!” என்றான்.

மீராவிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பின் புரிந்த விசயமோ அவளை விழிகளை அகல விரித்து வியப்புடன் பார்க்க வைத்தது.

அவள் அணைத்ததை நிஜம் என்றுச் சொல்கிறான். அவ்வாறு எனில் அவளை கனவில் உணர்ந்தானோ..! என்று எண்ணமிடும் பொழுதே அவனது பால் அவளது மனம் பாகாய் உருகியது. கண்களில் கண்ணீர் விழத் துடிக்க.. கண்களை அழுத்த துடைத்து அதை நிறுத்தினாள்.

இது உணர்ச்சிப்படுவதற்கான நேரமில்லை. பிறகு அவனும் அதைப் பிரதிபலிப்பான். அவனது உணர்வு போராட்டம் தொடரும், கனவுகளும் தொடரும்.. அவ்வாறு விடக் கூடாது, அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வர வேண்டும்.

எனவே “எது நிஜம் ஆதி?” என்றுப் பேச்சு கொடுத்தாள்.

“நீ..!” என்று ஒரே வார்த்தையில் பதிலளித்தான்.

“அப்பறம்..?” என்றுக் கேட்டாள்.

“உன் அணைப்பு…” என்றான்.

மீரா மீண்டும் “அப்பறம்..?” என்றுக் கேட்டாள்.

ஆதித்யாவிற்கு அந்த கேள்விக்கு பதில் அளிக்க தெரியவில்லை. எனவே என்ன கேட்கிறாய் என்பது போல் பார்த்தான்.

மீரா “சொல்லு ஆதி..! அப்பறம் எது நிஜம்..?” என்றுக் கேட்டாள்.

ஆதித்யா அப்பொழுதும் பதில் தெரியாமல் விழித்தான்.

மீரா அவனை நோக்கி நடந்தவாறு “நீ? நீ நிஜமில்லையா ஆதி?” என்றுக் கேட்டாள்.

“நானா..?” என்றவனையும் அறியாது சிறு கசந்த சிரிப்பு அவனது உதட்டில் தோன்றியது. பின் எங்கோ பார்த்தபடி “நான்..” என்று இழுத்தவன், பின் மெல்லிய குரலில் “தொலைந்துப் போன நிஜம்..” என்றான்.

மீராவிற்கு அவனது கசந்த சிரிப்பும், அவன் சொல்லியதைக் கேட்டும் நெஞ்சில் சுருக்கென்று எதோ குத்தியது போல் இருந்தது. அதை மறைத்துக் கொண்டு “தொலைந்துப் போன நிஜத்தை கண்டுப்பிடித்து மீட்கலாம் ஆதி..” என்றாள்.

ஆதித்யா அவளை வினோதமாக பார்த்து “இது நிஜமில்லை..” என்றான்.

தற்பொழுது மீரா புரியாமல் “எது ஆதி?” என்றுக் கேட்டாள்.

“உன் பேச்சு..” என்கவும்.. அவன் கூறியதைக் கேட்ட மீராவிற்கு ஐய்யோ என்று இருந்தது. அன்று அவள் மறுத்தது இந்தளவிற்கு அவனைப் பாதித்திருக்கும் என்று நினைக்கவில்லை.

அதற்குள் அவனது அருகில் வந்திருந்த மீரா “சரி ஆதி! எப்போ என் பேச்சு உனக்கு நிஜம் என்றுப்படுகிறதோ அப்போ ஒத்துக்கோ..” என்று அவனுடன் ஒத்துப் பேசினாள். பின் “இப்போ நான் வந்தது நிஜம் தானே..! அதை ஏற்றுக்கொள் ஆதி..” என்று மெல்ல சொன்னாள்.

ஆதித்யா திடுமென “நீ வந்திருக்கிறாயா..!” என்று அதிர்ச்சியுடன் கேட்டான். அவனின் அதிர்ச்சி கண்டு மீராவிற்கு பீதியை கிளம்பியது. என்ன சொல்ல போகிறானோ என்றுக் கவலையுடன் பார்த்தாள்.

ஆதித்யா அவளிடம் வந்திருக்கிறாயா என்றுக் கேட்டவன், “அல்லது நான் உன்கிட்ட வந்துட்டேனா..” சுற்றிலும் பார்த்தவாறுக் குழப்பத்துடன் கேட்டான். பின் அவனது பார்வை சுவற்றில் வரைந்திருக்கும் ஒவியத்திடம் சென்றது. “நான் மறுபடியும் என்னோட உலகத்திற்கு வந்துட்டேனா..” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

பின் மீண்டும் சுற்றிலும் பார்த்தவன், “இல்லை.. இது அந்த இடம் இல்லை. இந்த இடம் எனக்கு பிடிக்கலை, என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விசயங்கள் கொண்ட இந்த இடம் எனக்கு வேண்டாம். என்னுடன் நண்பர்கள் என்று இருந்த நிரந்தமற்ற காலக்கட்டமும் எனக்கு வேண்டாம், நான் உன் இடத்திற்கு வராமல் இருந்திருந்தால் உன்னைப் பார்த்திருக்கவே மாட்டேனே..! அப்படியே இருந்திருக்கலாம். அப்படி வந்திருந்தாலும் உன் லவ்வை உணரலாமலே இருந்திருக்கலாம். உன்னை என் உறவாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம், இவர்களிடம் உங்களைப் போல இல்லாமல் நிஜமான காதலை பாருங்கள் என்று காட்டி உன் கூட வாழ ஆசைப்பட்டது தப்பா..! எனக்கு மறுபடியும் தோல்வி, ஏமாற்றம், துரோகத்தைக் காட்டியிருக்கிற..! நீயும் எனக்கு வேண்டாம். எனக்கு இங்கே இருக்க பிடிக்கலை. நான் அங்கே போகணும். அங்கே போகணும்..” என்றுத் தலையைப் பிடித்துக் கொண்டு கத்தினான்.

மீரா பதட்டத்துடன் “எங்கே போகணும் ஆதி?” என்றுக் கேட்டு அவனை வந்து பிடிக்கவும், அவளை உதறித் தள்ளியவன் “போயிரு..! நீ என்னை மறுபடியும் அங்கிருந்து கூட்டிட்டு வந்துட்டே..! நான் அங்கேயே போகிறேன்.” என்றவன், ஒரு மூலையில் இருந்த அறையிற்குள் புகுந்துக் கொண்டு கதவைத் தாளிட்டு கொண்டான். ஒரு அறைக்குள் புகுந்துத் தாளிட்டு கொள்ளவும், பயந்தவளாய் தோட்டத்தில் இருக்கும் சோமுவிடம் ஒடிப் போய் சொன்னாள்.

சோமு “பயப்படாதீங்க..! அது அவர் ரூம் தான்..! சில சமயம் இப்படித்தான் அங்கே போய் கதவைச் சாத்திக் கொள்வார். ஆனால் சீக்கிரமே வந்துவிடுவார்.” என்றான்.

மீரா நிம்மதியடைந்தவளாய்.. மீண்டும் உள்ளே சென்றாள். இன்னும் அறையின் கதவு மூடப்பட்டு தான் இருந்தது. ஓய தொடங்கிய மனதைத் திடப்படுத்திக் கொண்டவளின் பார்வை சுற்றிலும் சென்றது. முழுவதும் வெளிச்சம் பரவிய பின் அப்பொழுது தான் அந்த பகுதியை முழுவதும் பார்க்கிறாள். ஆதித்யா இருக்கும் வரை அவளது கவனம் அவனைவிட்டு அகலவில்லை.

அவள் முன்னே பார்த்த ஹாலை விட இதில் அலங்காரங்களும், வேலைப்பாடுகளும் குறைவு தான் என்றாலும்.. அந்த பகுதி அளவில் எந்தவிதத்திலும் குறைவில்லை. நிறையா இடங்களில் திரைச்சீலை மற்றும் துணிகளால் சிலவற்றை மறைத்தோ மூடியோ வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பணத்தின் செழிப்பு எங்கும் குறையவில்லை. ஆதித்யா இவ்வாறு இருப்பதால் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இல்லையென்றால் பொலிவுடன் இருந்திருக்கும் என்றுத் தெரிந்தது. அவள் நின்றுக் கொண்டிருந்தது பெரிய ஹால் போன்ற பகுதி.. ஷோபா நாற்காலிகள் போன்றவை இல்லை. பக்கவாட்டில் அவள் சென்ற அறைக்கும், அடுத்த இருந்த ஆதித்யா சென்ற அறைக்கும் நடுவில் துணியால் மூடப்பட்டிருந்தது.. ஷோபாக்களாக இருக்கலாம். அது போக இன்னொரு அறையும் இருந்தது. பின் நிமிர்ந்து பார்த்தாள். அரைவட்டமாக கிரில் கம்பிகளால் அமைந்திருக்க இருதளங்கள் இருந்தது. அதற்கு படிக்கட்டும் அவள் இந்த ஹாலுக்கு வந்த கதவில் இருந்து தொடங்கி வளைந்து சென்றது. அந்த ஹாலின் ஒரு பக்கம் அவள் வந்த கதவும், படிக்கட்டும் எனில் அதற்கு எதிர்பக்கம் அறைகளும் தளங்களும் இருந்தது. அதே போன்று பக்கவாட்டில் ஒருபக்கம் முழுவதும் கண்ணாடிச்சுவர் இருந்தது.. அதன் வழியாக கண்கவர் பச்சை புல்வெளியும், பல வண்ண மலர்களும் நடைப்பாதை வழிகளுடன் இருந்தது. அதற்கு எதிர் புறம் இருந்த பெரிய சுவற்றில் தான் ஆதித்யா ஒவியங்களை வரைந்திருந்தான்.

மாலை மயங்குகிற வேளையாக இருந்ததால் வெளிச்சம் குறைவாக இருக்கவும்.. விளக்குகளைப் போட சுவிட்சை தேடினாள். படிக்கட்டிற்கு அருகே இருந்த சுவற்றில் இருந்த தாங்கியில் சில ரிமோட்கள் இருக்கவும், அது ரிமோட் மூலம் செயல்படுத்துவது என்று புரிய.. அதை எடுத்து இயக்கினாள். அங்கிருந்த விளக்குகள் அனைத்தையும் போட்டாள். விளக்கொளியில் அந்த பகுதி மின்னுவதைக் கண்டாள். இவற்றில் எல்லாம் அவ்வளவாக ஈடுபாடு இல்லாத ஆதித்யா இருக்கும் பகுதியே இவ்வாறு இருந்தால்.. விஜய் சொன்னது போல் மற்றவர்களின் பகுதி செல்வசெழிப்புடன் எவ்வாறு இருக்கும் என்று அவளால் அனுமானிக்க முடிந்தது. இந்த வெளிச்சத்தில் ஒவியங்கள் நன்றாக தெரியவும்.. அதை நோக்கி சென்றாள்.

ஒவியத்தில் இருந்த கடைத்தெரு.. சீனத்து தேசத்தில் இருப்பது போல் கூரைகளுடன் கொண்ட கடைகளும், பொருட்களும் காணப்பட்டது. அதில் மக்கள் கூட்டமாக இருந்த உருவங்களும் அவர்கள் போன்ற பராம்பரிய ஆடைகளைத் தான் அணிந்திருந்தனர். ஆனால் நன்றாக உற்றுப் பார்த்தால்.. அவை இந்திய முக அமைப்புகளைக் கொண்டிருந்தன. அவ்வாறு தான் அவளது ஓவியமும் இருந்தது. பின் அதில் இருந்த ஒவ்வொரு உருவங்களையும் பார்த்தாள். அவர்கள் ஒவ்வொரு முக அமைப்புகளைக் கொண்டிருந்தார்கள். ஒவியத்தைப் பார்ப்பவர்களை அவை பார்ப்பது போன்று தத்ரூபமாக ஆதித்யா வரைந்திருந்தான். எனவே ஆளுயரத்திற்கு இருந்த உருவங்கள், அவளை அந்தந்த முகபாவங்களுடன் பார்ப்பது போன்று இருந்தது.

ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தவள்.. ஒரு உருவத்தைப் பார்த்து சட்டென்று நின்றுவிட்டாள். ஏனெனில் அது ஆதித்யாவின் அப்பா ஆனந்த்சங்கரை போன்று இருந்தது. சற்று முன் தான் அவரை சந்தித்துவிட்டு வந்திருந்ததால் அவரை அவளால் அடையாளம் காண முடிந்தது. அவரது முகத்தில் தந்திரத்தை தத்ரூபமாக வரைந்திருந்தான். அதைப் பார்த்த மீரா பெருமூச்செடுத்து விட்டாள். உண்மை தானே..! அவனிடமும் ஊருக்கு தெரியாமல் திருமண வாழ்வை வாழ வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டது மட்டுமல்லாது.. அவளிடமும் தந்திரமாக வாக்குறுதியை அவளது வாயாலேயே பெற்றுக் கொண்டாரே..! ஆனால் ஆதித்யா வெறுத்தால் தானே அவள் சென்று விட வேண்டும். ஆனால் அவளது ஆதித்யாவிற்கு அவளை மிகவும் பிடிக்கும் என்று மனதிற்குள் சொல்லி மனதை உறுதிப்படுத்திக் கொண்டாள்.

பின் அடுத்த உருவத்தைப் பார்த்தவளின் மூளையில் ஒரு மின்னல் மின்னியது. அவளைப் போல் அவனது தந்தையைப் போல்.. அவனது வாழ்வோடு பின்னியவர்களை வரைந்திருக்கிறானோ..! அதுவும் அவர்கள் அவனது வாழ்வில் எவ்வாறு இருந்தார்கள் என்று முகப்பாவனையுடன் வரைந்திருக்கிறானோ..! என்று பரபரப்புடன் மற்ற உருவங்களை உற்றுப் பார்த்தாள். ஆனால் அங்கு கிட்டத்தட்ட நூற்றிற்கும் மேல் இருந்த ஒவியங்களில் பல உருவங்கள் அவளுக்கு அறிமுகமற்றதாக இருந்தது. ஆனாலும் சலிக்காது தேடினாள். ஆனந்த்சங்கரின் உருவத்தை மீண்டும் பார்த்தாள். ஆனால் இம்முறை அது வேறு முகப்பாவத்தைக் காட்டியிருந்தது. அது என்னவென்று அவளால் சரியாக கணிக்க முடியவில்லை. அச்சம், அதிர்ச்சி, குற்றவுணர்வு இவற்றில் எது என்று அவளால் கணிக்க முடியவில்லை. கம்பீரமாக.. அவர்களது வாழ்விற்கே சவால் விட்டவரை ஏன் அவ்வாறு வரைந்திருக்கிறான் என்றுத்தான் மீராவிற்கு குழப்பமாக இருந்தது.

அடுத்த ஒவியத்திடம் சென்றாள்.. அவளுக்கு அவர்கள் யார் என்றுத் தெரியவில்லை. சீனத்து ஆடை மற்றும் அலங்காரத்தில் அவளுக்கு தெரிந்த முகமான ஆனந்த்சங்கரையே அவளுக்கு தெரிந்துக் கொள்ள சிரமமாக இருந்தது. ஆனாலும் விடாது ஒவ்வொன்றாய் பார்த்தவாறு சென்றாள். அப்பொழுது “எல்லாரும் ரொம்ப பிஸியாக இருக்கிறாங்க..” என்ற குரலில் மீரா திரும்பினாள். அவளது பின்னால் சற்று தள்ளி ஆதித்யா நின்றிருந்தான். அவனது பார்வை ஒவியத்தின் மேல் இருந்தது.

ஆதித்யா தொடர்ந்து அதைப் பார்த்தவாறு பேசினான்.

“அதோ அவர்தான்..! முதன் முதலில் என்னைப் பார்த்து கையை ஆட்டிப் பேசினார்.” என்று சுவற்றில் இருந்த ஒவியத்தில் யாரையோ சுட்டிக் காட்டினான். மீரா யாரைச் சுட்டிக் காட்டுகிறான் என்றும் புரியவில்லை, அவன் திடுமென சொன்னதும் புரியவில்லை. என்னவென்று அவனிடமே கேட்கலாம் என்று நினைக்கும் பொழுது.. இன்னொரு பக்கம் சுட்டிக்காட்டி.. “இவர் திருடியதை நான் பார்த்தேன்.” என்றுச் சொன்னான்.

தற்பொழுது மீரா வேகமாக “யார் ஆதி..? எப்பொழுது?” என்றுக் கேட்டாள். ஆனால் ஆதித்யா அவள் கேட்டது காதில் விழாதது போன்று தொடர்ந்து இன்னொரு பக்கம் சுட்டிக்காட்டி “இவங்க..! இ...இவங்க…” என்றவனின் முகம் மாறியது. கண்களில் அருவருப்பு தோன்றியது. பின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. கண்களை இறுக்க மூடினான். அதைப் பார்த்த மீராவிற்கு அவன் மீண்டும் மனம் குலைந்து போவான் என்றுத் தெரிந்து விடவும்.. அவனுக்கு அருகில் சென்று “ஆதி..” என்று அவனது கன்னங்களைத் தாங்கியவள்.. முகத்தை உலுக்கி “ஆதி..” என்று அவனை மோசமான நினைவுகளுக்குள் போக விடாமல் தடுத்தாள்.

அவளது குரல் அவனது செவிக்குள் இறங்கியது, அவளது முயற்சி பலித்தது. இமைகளைத் திறந்தவன்.. அவளை அறியாதவன் போல் பார்த்தான். மீராவிற்கு திக்கென்று இருந்தது.

அவளிடம் இருந்து விலகியவன்.. மீண்டும் சுவற்றில் இருந்த ஒவியத்திடம் சென்றான். “இதில் நீ யார்..?” என்றுக் கேட்டான். இம்முறை சுதாரித்துக் கொண்ட மீரா “இதுதான் நான் ஆதி..” என்று அவள் காதலுடன் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உருவத்தைக் காட்டினாள்.

ஆதித்யா அதற்கு அருகில் சென்று உற்றுப் பார்த்தான்.

மீரா அவனுக்கு அருகே வந்து.. “நீங்க வரைந்த ட்ரையிங் தானே..!” என்றாள்.

அதற்கு ஆதித்யா மறுப்பாக தலையசைத்து “வரைந்ததா.. என்னுடன் வாழ்ந்தவள்..” என்று அதன் ஒவியத்தின் கன்னத்தை வருடினான். மீராவிற்கு கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் பெருகி வழிந்தது. அவசரமாக கண்ணீரைத் துடைத்துவிட்டு சுவற்றில் அந்த ஒவியத்திற்கு அருகில் சாய்ந்து நின்றாள். அந்த ஒவியத்தை வருடியவாறு கையை இறங்கியவனின் விரல்கள் மீராவின் தோளில் பட்டது. அந்த தோளைப் பார்வையால் முதலில் வருடியவன்.. பின் விரலால் வருடினான். அவனது விரல்கள் தோளில் இருந்து பயணித்து கழுத்து வளைவை அடைந்து பின் கன்னத்தை அடைந்தது. அவனது விரலின் வருடலில் கண்களை மூடி நின்றிருந்தவள்.. மெல்ல கண்களைத் திறந்தாள். அவனது பார்வையும் அவளது பார்வையோடு சிக்குண்டது. அவனது உதடுகள் மெல்ல முணுமுணுத்தது.

“மீரா..”

அவளும் மெல்லிய குரலில் “ஆதி..” என்றாள். அவனோ சற்று குழப்பமான பார்வையுடன் விலகியவாறு “மீரா..?” என்று அவளது பெயரை முதன் முதலில் உச்சரிப்பவன் போல் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தான். பின் “இன்னொரு மீராவும் இருக்கு..” என்று மீரா இகழ்ச்சியாக பார்ப்பது போன்று வரைந்து வைத்திருந்த ஒவியத்தை தேட முற்பட்டான். உடனே மீரா சட்டென்று அவனது கரத்தைப் பற்றி தன் பக்கம் இழுத்து அவனை நிறுத்தினாள்.

பின் மீரா “இந்த ட்ரையிங் தான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு..! உங்களுக்கு..?” என்று அவனிடம் கேட்டாள்.

ஆதித்யாவின் பார்வை அவள் பற்றியிருந்த கரத்தின் மேல் இருந்தது. பின் நிமிர்ந்து அவளைப் பார்த்து “விட்டு விட மாட்டியே..?” என்றுக் கேட்டான்.

தற்பொழுது மீராவிற்கு அவனது மனநிலை சற்று புரிந்தது. அவனின் வாழ்க்கையில் நடந்த நல்லது மற்றும் கெட்ட சம்பவங்கள் அவனது நினைவில் மாறி மாறி வந்துச் சென்றுக் கொண்டிருக்கிறது. அவன் பார்க்கும் நபர்கள் கொண்டோ அல்லது பொருட்களைக் கொண்டோ அவனது வாழ்வில் நடந்த சம்பவங்கள் வந்துச் செல்கிறது. அந்த நினைவோடு அந்த காலக்கட்டத்திற்கே சென்று விடுகிறான்.

அவளைப் பற்றி சரியாக கணித்ததோடு மட்டுமல்லாது, அவளை ஒற்றைப் பார்வையாலும், வார்த்தைகளாலும் அடங்கியவன் இந்த ஆதித்யா, காதல் மொழி பேசாமல் அவளது மனதை நொடியில் ஆட்கொண்டவன் இந்த ஆதித்யா..! அவனை இம்மாதிரி பார்க்கவும், மீராவிற்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. தன்னை முயன்றுக் கட்டுப்படுத்திக் கொண்டவள், மறுகரத்தாலும் அவனது கரத்தை இறுக பற்றிக் கொண்டு அவனைப் பார்த்து முறுவலித்தாள். அவனது பார்வை அவளது முகத்தில் இருந்து அந்த ஒவியத்திற்கு சென்றது.

“காதலிப்பதை விட காதலிக்கப்படுவது.. எவ்வளவு சுகமானது தெரியுமா..! ஆனால் நான் அதையும் அவஸ்தையாக உணர்ந்தேன். சரியாக அந்த அனுபவத்தை அனுபவிக்க முடியலை..” என்றுக் கசந்த சிரிப்பு சிரித்தான்.

கார்த்திக்கிற்கு அவள் துரோகம் செய்கிறாள் என்று எண்ணி அவளை வெறுத்ததைச் சொல்கிறான் என்று மீராவிற்கு புரிந்தது. அதற்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாமல் அவனை இறுக்க அணைத்துக் கொண்டாள். அவளது அணைப்பு அவனை எங்கோ கூட்டிச் செல்லும் வேளையில் இன்டர்காம் ஒலித்தது.

சட்டென்று விலகி “சாப்பிடணுமா! ஆனால் எனக்கு சாப்பிட தோன்றவில்லையே..” என்றான்.

மீரா சென்று இன்டர்காமில் ஒலித்த எண்ணை அழுத்தவும், “மே ஐ கம் இன்..” என்று ஒரு குரல் அனுமதி கேட்டது. மீரா அவர்களை வரச் சொல்லவும், ஒரு பணிப்பெண் ட்ராலி வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தாள். சிறு அச்சத்துடன் வந்தவளுக்கு வெகுநாட்களுக்கு பின் அந்த பகுதி வெளிச்சத்துடன் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமல்லாது மீராவை கண்டு இன்னும் வியப்பாக இருந்தது. அவளையும் மீறி சிறு இளக்காரம் தோன்றியது. மீராவிற்கு அந்த பெண்ணின் இளக்காரத்திற்கு அர்த்தம் புரிந்தது. மீராவை ஆதித்யாவுடன் பழக தங்க வைத்திருக்கிறார்கள் என்றுத்தான் அவளைப் பற்றி அவர்களுக்கு தெரிந்திருக்கும். அவர்களுக்கு திருமணம் ஆன விசயம் யாருக்கும் தெரிவிக்கவில்லை என்றால் அதற்கு அர்த்தம் அதுதானே..! சட்டென்று அவளது மனதில் பாரம் ஏறியது. அவளும் சாதாரண பெண் தானே..! எனவே அவமானத்தில் தலையைத் தாழ்த்தினாள்.

அவளும் அன்று ஆதித்யாவிடம் இதைச் சொல்லித் தானே மறுத்தாள். அதனால் தானே அவன் கோபமாக வார்த்தைகளை விட்டு அவளது தந்தைக்கு கோபம் வந்தது.. என்று அவளது எண்ணங்கள் ஒடும் பொழுது.. அவன் முதலில் பேசியதை நினைத்துப் பார்த்தவளின் தலை விருக்கென்று நிமிர்ந்தது.

இவ்வாறு இருப்பதற்கு என்ன அர்த்தம் என்றுத் தெரியுமா.. என்று அவள் கேட்டதிற்கு ஆதித்யா சீற்றத்துடன் “யாரைப் பார்த்து என்ன சொல்கிறாய்..?” என்றுத் தான் கேட்டான். அவ்வாறு எனில் அவனுமே வருந்தியிருக்கிறான், அவனுக்கும் உடன்பாடியில்லை என்பதைப் புரிந்துக் கொண்ட மீராவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவன் அவ்வாறு வாழ்வதற்கு ஏன் ஒத்துக் கொண்டான்.. என்று மீண்டும் அவனின் புதிர்களில் ஒன்றில் வந்து நின்றாள்.

அந்த பெண் சென்றுவிடவும், இன்டர்காமில் எட்டாம் எண் ஒளிர்த்தது. அதை அழுத்தவும், சோமு “நான் வரட்டுங்களா..! ஸாருக்கு மாத்திரை எடுத்து தர வேண்டும்.” என்றான்.

மீராவிற்கு வியப்பாகவும், அதே சமயம் கோபமாகவும் இருந்தது. இத்தனை பணக்காரர்களாக இருக்கிறார்கள். பார்த்த இடத்தில் எல்லாம் செல்வம் கொட்டிக் கிடக்கு..! ஆனால் மனநிலை முழுமையாக இல்லாதவருக்கு உரிய வைத்தியம் செய்தார்களா..! அவரைப் பார்த்துக் கொள்ள அந்த படிப்பை படித்தவரை தான் வைத்தார்களா..! இரண்டும் இல்லை.. என்றுப் பொருமினாள். அதற்குள் சோமு வந்திருந்தான். ஆதித்யா எங்கே என்றுப் பார்த்தாள். ஆதித்யா கண்ணாடிச்சுவற்றில் கரத்தைப் பதித்துக் கொண்டு இரவின் வெளிச்சத்தில் தெரிந்த மலர் தோட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சோமு “ஸார்!” என்று அழைக்கவும், ஆதித்யா திரும்பியும் பார்க்காமல் “நான் வருகிறேன், நீங்கள் போங்க..” என்றான்.

சோமுவும் “எஸ் ஸார்..” என்றுவிட்டு சில ஹாட்கேஸ்களை அருகில் இருந்த மேசையில் எடுத்து வைத்தான். பின் அந்த ட்ராலியை தள்ளிக் கொண்டு ஆதித்யாவின் அறைக்குள் செல்லவும்.. சிறிது நேரம் நின்றிருந்த ஆதித்யாவும் அவள் அங்கு நிற்பதைக் கண்டுக் கொள்ளாதவனாய் அறைக்குள் சென்றான்.

மீராவிற்கு திகைப்பாக இருந்தது. உள்ளே சென்றுப் பார்த்து விடலாமா என்று அவளுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டு இருக்கையிலேயே.. அறையில் இருந்து சோமு வெளியே வந்தான்.

மீரா அவனைக் கேள்வியாக பார்க்கவும், அவன் மீராவிடம் “நீங்க சாப்பிடலையா மேம்?” என்று அவளிடம் கேள்விக் கேட்டான். மீரா என்ன என்பது போல் பார்க்கவும்.. மேசையில் இருந்ததைச் சுட்டிக்காட்டி “இது உங்களுக்கு தான் மேம்..” என்றான்.

மீரா “ப்ச்! நான் அப்பறம் சாப்பிட்டுக்கிறேன். ஆதி..” என்று இழுத்தாள்.

சோமு “அவர் இனித் தூங்கிருவார், ப்ளீஸ் தொந்திரவு செய்திராதீங்க..! அவருடைய தூக்கம் கலைந்துவிட்டால்.. நைட் புல்லா தூங்கமாட்டார்.. அப்பறம் இன்னும் டிஸ்டர்ப்பாக இருப்பார்.” என்றான்.

மீரா “அவருக்கு ஸ்லிப்பிங் பில்ஸ் கொடுத்திருக்கீங்களா..?” என்றுக் கேட்டாள்.

சற்றுத் தடுமாறியவன், “ஆ..ஆமாங்க..” என்றான்.

மீரா சரி என்கவும், சோமு அவன் தங்கும் இடத்திற்கு சென்றுவிட்டான். மனதில் நிம்மதியில்லாதவர்களுக்கு உறக்கமே சிறந்த மருந்து என்றுக் கேள்விப்பட்டிருக்கிறாள். எனவே உறக்கம் அவனுக்கு நிம்மதியைத் தரட்டும் என்றுப் பெருமூச்சு விட்டாள்.

மீராவிற்கும் பசியில்லை. ஆதித்யாவை பார்க்க வேண்டும் என்று அவனிடம் ஓடத் துடிக்கும் மனதை அடக்கியபடி.. மீண்டும் அவன் வரைந்து வைத்திருந்த ஒவியத்திடம் சென்றாள்.

ஏனோ அதில் இருப்பவைகள் ஆதித்யாவின் வாழ்வோடு சம்பந்தப்பட்டிருப்பதால் அதில் இருப்பவர்களைப் பற்றி அறிய விரும்பினாள். அவர்கள் அவனது வாழ்வில் என்னென்ன நிகழ்ந்திருப்பார்கள் என்பதையும் அறிய விரும்பினாள். யாரையாவது அடையாளம் காண முடிகிறதா.. என்று உற்றுப் பார்க்கலானாள்.

சீனத்து பாராம்பரிய உடையில் இந்திய முகங்களைப் பார்க்க மீராவிற்கு சிரிப்பு தான் வந்தது. ஆதித்யாவின் கற்பனை ஏன் இவ்வாறு சென்றது.. என்று யோசித்தாள். அவனுக்கு சீனாவிற்கும் என்ன சம்பந்தம் என்று எண்ணமிடுகையில் அவளது மூளையில் மின்னல் வெட்டியது. கார்த்திக் கூறியது நினைவிற்கு வந்தது. சில வருடங்கள் அவன் ஜப்பானில் இருந்ததாக சொன்னான். சீனா மற்றும் ஜப்பானின் பாராம்பரியத்தில் அவ்வளவு வித்தியாசம் இருக்காது. சிறு சிறு விசயங்களில் தான் மாற்றம் இருக்கும். நமக்கும் நம் அண்டை மாநிலங்களும் இருக்கும் வித்தியாத்தைப் போன்றது தான். அதனால் தான் மீராவினால் சரியாக சொல்ல முடியவில்லை.

ஆதித்யா அங்கே போகிறேன் என்றுச் சொன்னது.. அவனது சிறு வயதில் கழித்த இந்த இடத்திற்கு தான்..! சுற்றியிருப்பவர்களின் சூதுவாது அறியாத காலக்கட்டம் அது! அதனால் தான் மீண்டும் அங்கே நினைவுகளால் சென்றுக் கொண்டிருக்கிறான் என்றுப் புரிந்தது. அவன் இரசித்து வாழ்ந்த இடத்தில் இதுவரை அவனது வாழ்வில் சந்தித்தவர்களை வரைந்திருக்கிறான் என்றும் புரிந்தது. அவளது முகத்தில் சிறிதாக புன்முறுவல் மலர்ந்தது. ஆனால் ஏன் பழமைக் கொண்டு வரைந்திருக்கிறான் என்றுப் புரியவில்லை.

மீண்டும் அவளுக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று ஆராய்ந்தாள். ஒரு உருவம் பார்வையை அவள் புறம் வைத்திருக்க, அதன் கை பொருட்களை சட்டை மறைவில் வைப்பது போன்று இருந்தது. அதன் பார்வையில் அப்பட்டமாக திருட்டுத்தனம் தெரியவும்.. ஆதித்யா சற்றுமுன் சொன்னது இதைத்தான் என்றுத் தெரிந்தது. அவ்வாறு எனில் திடுமென ‘இவங்க..’ என்றுத் திணறிவிட்டு நிலைக்குலைந்தது யாரைப் பார்த்து சொன்னான் என்றுத் தேட முயன்றாள். நெருக்கம் நெருக்கமாக இருந்த உருவங்களில் அப்பொழுது அவனது அன்னையின் தோற்றம் கொண்ட ஒவியத்தைப் பார்த்தாள். கண்களில் கண்ணீரை தேக்கி வைத்துக் கொண்டு கெஞ்சும் பாவனையில் ஆதித்யா அவரை வரைந்திருப்பதைப் பார்த்த மீராவிற்கு பாவமாக இருந்தது.

அவரைப் பார்த்து பேசினால்.. ஆதித்யாவை குணமாக்க தனக்கு உதவுவார் என்றுத் தோன்றவும்.. உடனே செல்ல கிளம்பினாள். கிளம்பும் முன் ஆதித்யா உறங்கி விட்டானா என்றுப் பார்க்க திறந்திருந்த கதவில் மெல்ல எட்டிப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

ஏனெனில் அலையகுலைய அவன் படுக்கையில் படுத்திருந்தான். அவளுக்கு தோன்றிய சந்தேகத்தில் நன்றாக உள்ளே வந்துப் பார்த்தவள் திடுக்கிட்டாள். அவனுக்காக எடுத்து வைக்கபட்ட உணவை சிறிதே கொரித்திருந்தான். ஆனால் அதன் பக்கத்தில் முழு மது பாட்டில் சாய்ந்து நானும் காலி என்றவாறு படுத்திருந்தது. முதலிலேயே மனநிலைச் சரியில்லாதவனுக்கு மேலும் மனதைத் தடுமாற செய்யும் மதுவை ஏன் தருகிறார்கள்.. என்று ஆத்திரம் கொண்டவள், முதலில் சோமுவிடம் சென்றாள்.

ஆத்திரத்துடன் மீரா திட்டவும், சோமு “அவர் முதலிலேயே டெய்லி நைட் ட்ரீங் குடிச்சுட்டு தான் தூங்குவாங்க மேம்!” என்றுப் பணிவுடன் சொன்னான். அதைக் கேட்டு இன்னும் கோபம் பொங்கவும் மீரா “அப்போ ட்ரீங்க்ஸ் குடிப்பதே கெடுதல்..! இப்போ இன்னும் உடம்பிற்கும் மனதிற்கு கெடுதல் விளைவிக்கும் என்ற லாஜீக் கூடத் தெரியாதா..” என்றுக் கத்தினாள்.

சோமு “இப்போ இன்னும் மோசம்ங்க..! நைட் குடிக்கலைன்னா அவருக்கு தூக்கம் வராது.. அதனால் இன்னும் அதிகமாக அதையும் இதையும் மனதில் போட்டு குழப்பி.. இன்னும் மோசமாகி விடுவார் என்றுத்தான் டாக்டரே கொடுக்க சொன்னாங்க..” என்று மீராவின் கோபத்தைக் கண்டு பயந்தவாறுச் சொன்னான்.

அதைக் கேட்ட மீரா மேலும் அதிர்ந்தாள்.

“என்ன டாக்டரே கொடுக்க சொன்னாரா..! அவருக்கு ஸ்லிப்பிங் பில்ஸ் கொடுக்க தெரியாதா..” என்று வெடித்தாள்.

சோமு “அதெல்லாம் வேலைக்கு ஆகலைங்க..! மூன்று மாத்திரை வரை கொடுத்துப் பார்த்துட்டார். அதற்கு மேல் கொடுத்தால் ஆபத்தாம்.. அதுதான் ட்ரீங்க்ஸ் கொடுக்க சொல்லிட்டார்.” என்றான்.

சோமு சொன்னதை மீராவால் சரியென்று ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை, வேண்டாம் என்று மறுக்கவும் முடியில்லை. சோர்வுற்றவளாய்.. திரும்பி வீட்டினுள் சென்றாள். ஓய்ந்து அமரப் போனவளுக்கு ஆதித்யாவின் அன்னையை பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தது நினைவு வரவும், கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தாள்.

மீரா நான்கடி தான் வைத்திருப்பாள், அதற்குள் எங்கிருந்தோ ஒருத்தன் வந்து “எதாவது வேண்டுங்களா மேம்..! உங்களுக்கு சிரமம் வேண்டாம். நீங்க அறையில் இருங்க.. ஃபோன் செய்திருந்தாலே நான் வந்திருப்பேன்.” என்று பணிவுடன் சொன்னான்.

அவனது பணிவையும், மரியாதையான பேச்சையும் விசித்திரமாக பார்த்த மீராவிற்கு சிரிப்பு தான் வந்தது. “நான் ஆதித்யாவோட மதரை பார்க்கணும். அவங்க இப்போ ப்ரீயா இருப்பாங்களா..! அவங்க ரூம் எது?” என்றுக் கேட்டாள்.

அதைக் கேட்டவன் திகைத்துவிட்டு “ஸாரி மேம்! நீங்க என்ன கேட்டாலும் வாங்கி தரத் தான் உத்திரவு! ஆனால் இங்கிருந்து வெளியேறவோ..! மற்றவர்களைச் சந்திக்கோ கூடாது.” என்றான்.

அதைக் கேட்டு மேலும் அவனை விசித்திரமாக பார்த்த மீரா “உத்திரவா..! ரப்பீஷ்..” என்றுவிட்டு அவனைத் தாண்டிச் செல்ல முற்பட்ட போது “ப்ளீஸ் மேம்..” என்று அவன் குறுக்கு வந்து நின்றதில் தாண்டிச் சென்றுவிடாதே என்ற எச்சரிக்கை இருந்தது.

மீராவிற்கே சற்று திகில் ஏற்பட்டது. அப்பொழுது “இங்கே என்ன நடக்கிறது?” என்றுக் கேட்டவாறு வித்யாவின் கணவர் ஸ்ரீதர் வந்தான்.

அந்த பணியாள் அவனைப் பார்த்து தலைவணங்கி “மேம்! பெரிய மேடத்தை பார்க்க வேண்டும் என்றுச் சொன்னாங்க..” என்றான்.

அதற்கு ஸ்ரீதர் முகசுளிப்புடன் “வந்த வேலை என்னவோ அதைப் பார்த்துவிட்டு போ..! வீட்டு மருமகள் ஆக முயற்சிக்காதே..! நீயெல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டும்.” என்றுவிட்டுச் சொன்னான்.

அவன் கூறியதில் இருந்த அர்த்தத்தைக் கேட்டு கண்களில் குளம் கட்ட கூனிகுறுகி நின்ற மீரா.. அதற்கு மேல் நிற்க முடியாமல் அந்த நீண்ட கண்ணாடிக்கூண்டு பாதையில் நடந்தாள்.

மன்னவனின் மர்மங்கள் ஒருபக்கம் இறுக்க..!

மானம் அவளது கழுத்தை நெறிக்க..!

மனம் திடம் பெற மன்னவன் துணை நிற்பானோ..!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 19



அங்கிருந்த ஷோபாவில் காலைக் குறுக்கி வைத்துக் கொண்டு படுத்திருந்த மீராவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. ஏனோ அவள் சபிக்கப்பட்டவள் போல் உணர்ந்தாள். அனைவருக்கும் காதல், திருமணம் என்று மகிழ்வான வாழ்க்கை அமைந்திருக்க தனக்கு மட்டும்.. காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் இத்தனை சிக்கல்களா என்று கடவுளை நிந்தித்தாள். அவளது தம்பி கூட அவளைப் பார்த்து பொறாமைப்படுவானே..! உனக்கு மட்டும் பெற்றவர்களும் பாட்டியும் மிகுந்த சலுகையும் செல்லமும் கொடுப்பதாக குறைப்படுவானே..! ஆம் இதுவரை அவளது வாழ்வு எந்தவித தடைகள் இன்றி.. அவள் விரும்பியபடி தானே சென்றிருக்கிறது. எப்பொழுது சற்று சிக்கலான வழியைத் தான் தேர்ந்தெடுத்து அதில் வெற்றி பெறுவது அவளது இயல்பு..! தனது காதல் மற்றும் திருமண வாழ்வும் அதுபோன்று தான் என்றுத் தானே நினைத்திருந்தாள். ஆனால் அது இத்தனை வேதனைகளையும், வலிகளையும் அவள் எதிர்பார்க்கவில்லை.

அவளது குடும்பத்தினரைப் பற்றி நினைத்ததும்.. அவர்கள் அவளுக்கு தைரியமூட்டி அனுப்பியதை நினைத்துப் பார்த்தாள். ஆம்.. அவளது தந்தையாகட்டும், பாட்டியாகட்டும் இருவரும் போராட வேண்டும் என்று உற்சாகப்படுத்தி தான் அனுப்பினார்கள். தான் இவ்வாறு போராடிப் பார்க்காமல் மனம் தளரக் கூடாது என்று தன்னையே திடப்படுத்திக் கொண்டாள். பரிமளம் எப்பொழுதும் சொல்வது நினைவிற்கு வந்தது.

“பெண்களுக்கு முக்கியமான தேவை என்ன தெரியுமா, மனதைரியம், உடல்நலம், புத்திசாலித்தனம்! இந்த மூன்றும் இருந்தால் எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் கடந்து வந்துவிடுவாள்.”

கண்களை மூடி அதை நினைத்துப் பார்த்தவளுக்கு பரிமளம் அவளது முன்னால் அமர்ந்துக் கொண்டு சொல்வது போன்று இருந்தது. மீண்டும் தோய்வுற்ற மனதைத் திடப்படுத்திக் கொண்டாள். ஆதித்யாவிடம் சொன்னது போல்.. அவள் வாழ்ந்து அவளைப் பற்றிய அவர்களது கருத்தைப் பொய்த்து போக செய்ய வேண்டும்.!

அப்பொழுது இன்டர்காம் ஒலிக்கவும், அதை அழுத்தினாள். அப்பொழுது ஆனந்த்சங்கர் அங்கு வருவதாக தகவல் சொல்லினார்கள். அவரின் முன் தான் கண்களில் கண்ணீருடன் இருக்க கூடாது என்று அவசரமாக கண்களைத் துடைத்தவள், தனக்கென்று ஒதுக்கிய அறைக்குள் புகுந்து முகங்களைக் கழுவிக் கொண்டு அழுத சுவடை மறைத்துக் கொண்டு அவரை எதிர்கொள்ள தயாராக இருந்தாள்.

ஆனால் அவர் அரைமணி நேரம் அவளைக் காக்க வைத்த பின்பு தான் ஆனந்த்சங்கர் வந்தார். அவருடன் விஜயும் வந்தான்.

வந்ததும் எடுத்த எடுப்பிலேயே “என்ன ஆதிக்கு உன்னை அடையாளம் தெரிந்ததா..? உன்னைப் பார்த்து சந்தோஷப்பட்டானா..?” என்றுக் கேட்டார்.

மீரா “ம்ம்ம்..” என்றுத் தலையை மட்டும் ஆட்டினாள். அதைப் பார்த்த ஆனந்த்சங்கருக்கு எரிச்சல் தான் வந்தது. தனது கோபத்தை அடக்கிக் கொண்டு “ஆதி எதாவது சொன்னானா..?” என்று அடுத்துக் கேட்டார்.

மீராவிற்கு என்ன பதில் சொல்வது என்றுத் தெரியவில்லை. ஆதித்யாவின் மனநிலை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கவும், அவரிடம் “என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை. பென்டுலம் மாதிரி அவரோட மனநிலை ஆடிட்டே இருக்கு..! அவருடைய மனநிலையை ஒரு இடத்தில் பிடித்து வைக்க வேண்டும். அப்போ தான் மனம் அலைக்கழிக்காமல் இருப்பார். இப்போ இருப்பதைப் பற்றி நினைப்பார்.” என்று ஆதித்யாவை சரிச் செய்யும் நோக்குடன் அவருக்கு பதிலளித்தாள்.

ஆனந்த்சங்கர் அவருடைய புத்தியைக் காட்டினார்.

“அதற்கு தானே..! அவனுடன் உன்னை இருக்க அனுமதித்தேன்.” என்றுச் சிரித்தார். ஆதித்யாவின் மனைவியான அவள் அவரின் அனுமதி பெற்று ஆதித்யாவை பார்க்க வந்ததை ஆனந்த்சங்கர் சுட்டிக்காட்டிப் பேசவும், மீராவிற்கு கோபம் வந்தது.

எனவே சற்று காட்டத்துடன் “ஏன் ஆன்கிள்! நீங்க அவருடைய அப்பா தானே! பெரிய ரிச்மேன் தானே..! நீங்க நினைத்தால் உலகில் இருக்கிற பெஸ்ட் டாக்டரை வரவழைத்துப் பார்க்கலாம் தானே..! அவரை இப்படி அடைத்து வைத்திருந்தால் எல்லாம் சரியாகி விடுவாரா..?” என்றுக் கேள்விக் கேட்டாள்.

தன் முன் நின்று பேசவே தகுதியில்லை என்று நினைக்கும் பெண் தன்னைப் பார்த்து கேள்விக் கேட்கவும், “யாரைப் பார்த்து கேள்விக் கேட்கிறே! அவன் என் மகன்! எனக்கு அக்கறை இல்லாமலா..! அவனை இராஜ மாதிரி வாழ வைக்க முதலில் இருந்து ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.” என்றுச் சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசியவர், பின்பே அதை உணர்ந்து தொண்டைக் கமறலைச் சரிச் செய்கிறவர் போல் கனைத்து.. தன்னை நிதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்து “எங்க ஸ்டெடஸ் என்னவென்று தெரியுமா..? ஆதியை என்ன பைத்தியக்கார ஹாஸ்பெட்டலில் சேர்க்க சொல்றயா..” என்று கோபத்துடன் இரைந்தவர், பின் தொடர்ந்து “உன்னால் அவனுக்கு இப்படியானதிற்கு.. அவன் பக்கத்திலேயே உன்னைச் சேர்க்க விட்டுருக்க கூடாது.” என்று நக்கலாக முடித்தார்.

அதைக் கேட்ட மீரா உடனே “இப்போ என்னால் இப்படி ஆனார் அப்படித்தானே அப்போ இரு வருடங்களுக்கு முன் ஆதித்யா இவ்வாறு இருந்ததிற்கு யார் காரணம் ஆன்கிள்?” என்றுக் கேட்டாள்.

ஆனந்த்சங்கர் சட்டென்று விஜய் புறம் திரும்பி முறைக்கவும், அவன் அவசரமாக “நான் சொல்லலை ஸார்..” என்றவன், சட்டென்று யோசித்து “சோமு சொல்லியிருக்கலாம் ஸார்..!” என்றான். அப்பொழுதும் ஆனந்த்சங்கர் அவனை முறைக்கவும், விஜய் சற்று குரலைத் தாழ்த்தி “அவனுக்கு தெரிந்த வரைச் சொல்லியிருப்பான் ஸார்..” என்றான்.

“ம்ம்ம்..” என்று மீராவிடம் திரும்பியவர், “நான் சரிச் செய்துக் கொண்டு வந்தவனை.. நீ மறுபடியும் பழைய நிலைக்கு தள்ளியிருக்கிறே..! அதனால் உன் குற்றம் அப்படியே தானிருக்கு..” என்று தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தினார்.

கண்களை மூடித் தன்னை சரிச் செய்துக் கொண்ட மீரா மனதை நிதானப்படுத்தினாள். ஆதித்யாவை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டுமென்றால் வீட்டில் இருப்பவர்களின் உதவி தேவை.. என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.

பின் ஆனந்த்சங்கரிடம் “ஸாரி ஆன்கிள்!” என்று மன்னிப்பு கேட்டவள், “டூ இயர்ஸ்க்கு முன்னாடியும் ஆதித்யா இப்படித்தான் பிஹேவ் செய்தாரா..?” என்றுக் கேட்டாள்.

அதற்கு ஆனந்த்சங்கர் “டூ இயர்ஸ்க்கு முன்னாடி ஆதித்யா மென்டல் டிஸ்டர்ப் ஆன விசயத்தைச் சொன்னவன், அதையும் சொல்லியிருப்பானே…” என்றவர்.. சோமு என்ன சொல்லியிருப்பான் என்றுத் தெரிந்துக் கொள்ள ஆழம் பார்த்தார்.

மீரா “அவர் கத்துவதை சொல்லறீங்களா..! அதை விடுங்க ஆன்கிள்! மனிதன் கத்தினால் அதற்கு பைத்தியம் என்றுப் பெயர் என்றால்.. எல்லாருமே பைத்தியம் தான்..! நான் கேட்பது.. இந்த மாதிரி ட்ரையிங் செய்வாரா.. என்றுத்தான்..!” என்றாள்.

ஆனந்த்சங்கர் என்ன என்பது போல் புரியாமல் விஜயை பார்த்தார். அவன் “ஆதித்யா ஸார்! சுவற்றில் வரைந்து வைத்திருக்கிறார். அதைச் சொல்றாங்க..” என்று விளக்கம் அளித்தான்.

ஆனந்த்சங்கர் மீராவை பார்த்து சிறு எரிச்சலுடன் “உன்னைப் பார்த்ததும் கொஞ்சம் இம்புர்மென்ட் வந்திருக்கா என்றுக் கேட்டால்.. அவன் சுவற்றில் கிறுக்கி வைத்ததைப் பற்றிக் கேட்டுட்டு இருக்கிறாயா..! எனக்கு நீ இப்போ உண்மையிலேயே நீ ஆதித்யாவை லவ் செய்துத்தான் மேரேஜ் செய்துட்டியா என்றுச் சந்தேகம் வருது..” என்றார்.

அதற்கு மீரா உதட்டைக் கடித்து தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டாள். ஆனாலும் மெல்ல “ஸாரி ஆன்கிள்! நீங்கள் உங்க மகனைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பீர்கள் என்று நினைத்து தெரியாதனமாக கேட்டுவிட்டேன். நீங்க கேட்டதிற்கு பதில் சொல்கிறேன். என்னைப் பார்த்ததில் இம்புர்மென்ட் வந்திருக்கா என்றால் அது எனக்கு தெரியாது. ஆனால் முதலில் என்னை போ என்றுத் துரத்தியவர் மெதுவாக சகஜமாக பேச ஆரம்பித்தார். அதற்குள் சோமு கூட்டிட்டு போய்.. மனநிலைச் சரியில்லாமல் இருந்தவருக்கு ட்ரீங்ஸ் கொடுத்து.. சுயநிலை இழக்க வைத்துவிட்டான்.” என்றாள்.

பணிவாக பேசினாலும் அதில் இருந்த குத்தல் ஆனந்த்சங்கருக்கு புரிந்துத்தான் இருந்தது. அதைச் சுட்டிக்காட்டித் திட்டினால்.. அவள் மறைமுகமாக குற்றம் சாட்டியதை ஏற்றுக் கொண்டது போல் ஆகிவிடும் என்று அமைதியாக அவளை சீற்றத்துடன் பார்த்தார்.

மீரா விஜயிடம் திரும்பி “ஆதித்யாவை செக் செய்யும் டாக்டர் நாளைக்கு வருவாரா..?” என்றுக் கேட்டாள்.

விஜய் ஆமாம் என்கவும், “நல்லது…” என்றுவிட்டு அமைதியாக நின்றாள். மீரா மௌனமாக நின்றுத் தங்களைப் போக சொல்கிறாள் என்றுப் புரிந்துக் கொண்ட ஆனந்த்சங்கருக்கு கோபம் தலைக்கேறியது.

எனவே செல்லும் முன்.. சுற்றிலும் பார்த்தவர், மீராவிடம் திரும்பி “உன்னால் அவனுக்கு இன்னும் மனஅழுத்தம் அதிகமாகியது என்றால்.. அதற்கான பலனை நீ அனுபவித்தாக வேண்டும் நினைவில் வைத்துக் கொள்..! பழைய ஆதித்யாவாக எனக்கு அவன் வேண்டும்..” என்றார். அதைக் கேட்ட மீராவிற்கு கார்த்திக் ஆதித்யாவை பற்றிச் சொல்லியது தான் நினைவு வந்தது. மனதிற்குள் “பழைய கைப்பாவையாக வேண்டும் என்று நினைக்கிறாரா..” என்று கோபத்துடன் நினைத்துக் கொண்டாள். பின் ஆனந்த்சங்கர் விஜயிடம் சொல்வது போல்.. மீராவின் காதில் விழுவது போல் சொல்லிக் கொண்டுப் போனார்.

“அந்த பக்கம் இதே மாதிரி இல்லை.. இல்லை இதைவிட பெட்டராக ஒரு போர்ஷன் கட்ட வேண்டும். இது இந்த பெண்ணிற்கு என்றே கடைசி வரை இருக்கட்டும். அங்கே ஆதித்யாவிற்கு அரேன்ஜ் செய்தரலாம். ஆதித்யா இதற்கு எப்பவோ ஒகே சொல்லிட்டான் என்பதால்.. அவன் கிட்ட மறுபடியும் பர்மிஷன் கேட்க வேண்டும் என்று இல்லை..!” என்றவாறுச் சென்றார்.

அவர் பேசியதின் அர்த்தம் புரிந்தாலும் அது தன்னை வருத்துவதற்காக சொல்லப்பட்டவை எனவே அதை மனதில் ஏற்றிக் கொள்ள கூடாது என்றுத் தனக்கு தனக்கே சொல்லித் தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள்.

ஆனந்த்சங்கர் சென்றுவிடவும், மீரா அமைதியாக அமர்ந்துவிட்டாள். அவளது மூளையில் பல எண்ணங்கள் வந்துச் சென்றது.

முதலில் ஆனந்த்சங்கர் தான் நினைவிற்கு வந்தார். அவர் பேசியதைப் பொருத்தவரைப் பார்த்தால்.. மகன் என்று ஆதித்யாவின் மேல் பாசம் என்றில்லை. ஆனால் உரிமை வெறி இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது. அவனது தந்தை இவ்வாறு இருப்பார் எனில் அவரில் சிறு பங்குவாது ஆதித்யாவிடம் இருப்பதில்லை ஆச்சரியமில்லை. ஆதித்யாவிற்கு அவளிடம் காதலில்லை என்றாலும் பிடிப்பு இருந்தது. அவனுடையவள் என்ற உரிமைக் கொண்டிருந்தான். ஆனால் ஆனந்த்சங்கரிடம் இருப்பது போல் வஞ்சம் இல்லை.

இரு வருடங்களுக்கு முன் ஆதித்யாவிற்கு என்னவாயிற்று என்று அவள் கேட்டத்திற்கு பதிலளிக்காமல் மலுப்பியதை நினைத்துப் பார்த்தாள். சோமு சொன்னதைப் போல் கத்தினான் என்று மொட்டையாக தான் சொன்னார்களே தவிர ஏன் கத்தினான் என்பதற்கான சரியான காரணத்தைச் சொல்லவில்லை. அது தெரிந்தால் ஆதித்யாவை அணுகவது எளிதாக இருந்திருக்கும் என்று எண்ணியவள், எப்படியும் நாளை மருத்துவர் வருவார் என்று விஜய் சொன்னான் எனவே அவருக்கு தெரிந்திருக்கலாம், எனவே அவரிடம் கலந்தாலோசிக்கலாம் என்று முடிவு செய்தாள்.

ஆனாலும் ஆதித்யா இவ்வாறு மனம் குலையும் அளவிற்கு என்ன நடந்ததிற்கும் என்று மனம் குழம்பினாள். ஆனந்த்சங்கரிடம் சிறிது நேரம் பேசியதிற்கே அவரின் சுயநலத்தையும் எதிரே நின்றிருப்பவர்களை காயப்படுத்தும் நோக்கில் அவர் பேசிய விதத்திலும் அவளுக்கே கோபம் வந்தது எனில் ஆதித்யா போன்றவன் கோபம் கொண்டு கத்தி ரகளை செய்ததில் தவறில்லை என்றுத் தான் தோன்றியது.

ஆனால் கோபம் மட்டும் கொண்ட ஒருவனின் மனஅழுத்தம் இவ்வாறு வெளிப்படுமா.. என்று அவன் வரைந்து வைத்திருந்த ஒவியத்தைப் பார்த்தாள். அவனின் மனக்குமறல்களும், அவனின் மனதை அழுத்திக் கொண்டிருப்பவை ஒவியமாக வெளிப்பட்டிருப்பதைக் கண்டாள். ஒருவேளை வேதனைத் தாங்காமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தானோ..! என்று நினைத்ததும் என்ன வேதனைப்பட்டானோ என்று அவன் பால் மனமுருகியது. ஆதித்யாவின் அறைக்கு சென்று ஒருதரம் எட்டிப் பார்த்தவள்.. மீண்டும் வந்து ஷோபாவில் அமர்ந்து அப்படியே உறங்கி விட்டாள்.

புதிய இடம் என்பதாலும் ஆதித்யாவை அவ்வாறு பார்த்ததாலும் சரியான உறக்கம் கொள்ளாமல் அரை உறக்கம் கொண்டவள், காலையில் விரைவிலேயே எழுந்துவிட்டாள். புதிதாக ஒரு உலகத்திற்குள் மட்டுமல்லாது புதிதாக வாழ்க்கையை தொடங்கிய உணர்வுடன் தனது அறைக்கு சென்று தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டவள், ஆதித்யாவின் அறையை எட்டிப் பார்த்தாள். அவன் படுக்கையில் இல்லாததைப் பார்த்து திகைத்தாள். குளியலறையில் இருந்து சத்தம் கேட்கவும், நிம்மதியுடன் அறையில் இருந்து வெளியே வந்தவள், வெளியே அமைந்திருந்த மலர் தோட்டத்தில் பல வண்ண மலர்களைப் பார்த்தவாறு நடந்தாள். அவளது மனதிற்கு நன்றாக உணர்ந்தாள்.

அப்பொழுது சோமு உள்ளே நின்றுக் கொண்டு திரைச்சீலைகளை இழுத்து சூரியஒளியை உள்ளே வர விடாமல் மறைத்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த மீரா பதட்டத்துடன் ஒடிச் சென்று “எதற்கு மறைக்கறீங்க..? வேண்டாம் திறந்து விடுங்க..” என்றாள்.

சோமு “டாக்டர் ஸார் தான் மூடி வைக்க சொன்னாங்க..” என்றான்.

மீரா “வாட்! டாக்டரே அப்படிச் சொன்னாரா?” என்றுத் திகைப்புடன் கேட்டாள்.

சோமு “ஆமாம்..! ஒருதரம் ஆதித்யா ஸார்! கண்ணாடிச்சுவற்றை இந்த உலகம் வேண்டான்னு ஷேர் வைத்து உடைக்க போனார். நானும் அவரும் தான் பிடித்து நிறுத்தினோம். அதில் இருந்து அப்படித்தான் இருக்கிறது.” என்றான்.

அதற்கு மீரா “ஐய்யோ..! அவர் தனியாக வாழ்ந்துட்டு இருக்கிற உலகத்தில் இருந்து.. வெளிக் கொண்டு வரணும் என்று நினைக்கிறேன். நீங்க இந்த கர்ட்டன்ஸை போட்டு, அவனுக்கு ட்ரீங்ஸ் கொடுத்து அதற்குள்ளவே இருக்க வைக்கறீங்களா..” என்றுத் திட்டினாள்.

சோமுவிற்கு மருத்துவர் சொல்வது போல் செய்வதா..! அல்லது மீரா சொல்வதைச் செய்வதா என்றுத் திணறியவன், மருத்துவர் சொல்வதைச் செய்வதுதான் சரி “ஸாரி மேம்! டாக்டர் சொல்வதைச் செய்ய வேண்டும் என்பதுத்தான் எனக்கு முதலில் கொடுத்த ஆர்டர் மேம்! அதனால் அதைத்தான் செய்வேன்.” என்று அதற்கு அடுத்த இருந்த திரைச்சீலைகளை இழுத்து விட்டுக் கொண்டிருந்தான்.

மீராவிற்கு சோமு தன்னை அவமானப்படுத்தி விட்டது போல் இருந்தது.

அப்பொழுது “மீரா சொன்னதைச் செய்..” என்ற கணீர் என்ற குரல் கேட்டது.

அதில் திடுக்கிட்டவனாய் சோமு திரும்பினான். ஆதித்யாவின் பழைய மாதிரியான குரல் கேட்டு மீராவும் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். ஆதித்யாவோ அவர்களைப் பார்க்காமல் சுவற்றில் வெளிச்சத்தில் நன்றாக தெரிந்த ஒவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆதித்யாவே கட்டளையிடவும், சோமு அதைத் தட்ட முடியாதவனாய் மீண்டும் அனைத்து திரைச்சீலைகளையும் விலகி விட்டவன், பின் வெளியேறி விட்டான்.

மீரா இன்னும் ஆதித்யாவின் பழைய மாதிரியான குரலில் இருந்து மீளா முடியாமல் இருந்தாள். ஒருவேளை நடிக்கிறானோ என்ற ஐயம் கூட ஏற்பட்டது. ஆதித்யாவோ க்ரையானை எடுத்துக் கொண்டு புதிதாக ஒரு உருவத்தை வரைந்துக் கொண்டிருந்தான். மீரா மெல்ல ஆதித்யாவின் பின்னால் சென்று “ஆதி..” என்று அழைத்தாள்.

ஆதித்யா அவளது குரல் காதில் வாங்காதவனாய் வரைந்துக் கொண்டிருந்தான். சட்டென்று அவனுக்கும் சுவற்றிற்கும் நடுவில் வந்து சுவற்றில் சாய்ந்து நின்றவள்.. “ஆதி..! சோமுவிடம் ஏன் அப்படிச் சொன்னீங்க?” என்று சிறு ஐயத்துடனேயே கேட்டாள்.

வரைவது இடைஞ்சலாக மீரா வந்து நிற்கவும். ஆதித்யா “தள்ளு மீரா..” என்றான்.

மீரா “நான் கேட்டதிற்கு பதில் சொல்லுங்க..! அப்போ எனக்கு சப்போர்ட்டா பேசிருக்கீங்க..! நீங்க இப்போ இயல்பாக தான் பேசனீங்க..! எனக்கு ஒரு டவுட் நீங்க எப்பவுமே இயல்பாக தான் இருக்கீங்களா..! வேண்டுமென்றே தான் மென்டலி அப்பெஃக்ட்டர்டு மாதிரி காட்டிக்கறீங்களா..?” என்றுக் கேட்டாள்.

அவனோ அவள் கூறுவதை காதில் வாங்காதவனாய்.. “தள்ளு மீரா..” என்றுக் கத்தியவன், அவளது கையைப் பற்றி இழுத்துவிட்டவன், தன்போக்கில் சொல்லியவாறு வரைந்துக் கொண்டிருந்தான்.

“நான் இப்போ பார்த்தேன்..! அவங்க இதில் இல்லையென்றால் தப்பாகி விடும்.” என்றான்.

மீரா கோபத்துடன் “ஓ ஸ்டாப் திஸ் ஆதி! உங்க அப்பா மேல் கோபம் இருந்தால் காட்டுங்க..! எதற்கு கோழை மாதிரி.. உங்க கோபத்தைக் காட்டி இப்படி பைத்தியம் என்ற பெயரில் வரைச்சுட்டு இருக்கீங்க…” என்று நேரடியாக கேட்டாள்.

ஆனால் ஆதித்யாவிடம் இருந்து பதிலில்லை. சிறு சிரிப்பு தான் வந்தது. பின் தன் வேலையைத் தொடர்ந்தவாறு “என்னை பைத்தியம் என்றுச் சொன்னாங்க…” என்றான்.

மீரா “அவங்க சொன்னால் நீயும் ஆமாம் நான் பைத்தியம் என்பது மாதிரி பிஹேவ் செய்வியா..” என்றுக் கேட்டாள்.

அதற்கு ஆதித்யா “என்னுடைய பெயர் இதுதான் என்றுச் சொன்னாங்க..! நான் ஒத்துக்கிட்டேன். அதே மாதிரி என்னை பைத்தியம் என்றுச் சொன்னாங்க… அதையும் ஒத்துக்கிறேன். ஆனால் என்னை பணக்காரன் என்றுச் சொல்றாங்க.. அதை மட்டும் ஏன்னு தெரிலை என்னால் ஒத்துக்க முடியலை. அப்படி நடிக்கவும் தெரியலை. அதுதான் நான் செய்த மிகப் பெரிய பைத்தியக்காரத்தனம்..! அப்போ காலம் முழுவதற்கும் நான் பைத்தியக்காரன் தான்..!” என்றுத் தன்போக்கில் வரைந்தவாறு சத்தமாக சிரித்தான்.

பின் நிமிர்ந்து இடுப்பில் கரங்களை வைத்தபடி அவன் வரைந்த மொத்த ஒவியத்தையும் பார்த்தான்.

“இவங்க எல்லாருமே என் கூடத்தான் இருக்கிறாங்க..! ஆனால் நீதான் இவங்களில் நிஜமாக இருக்கிறாய்..” என்றான். பின் தொடர்ந்து அதே மாதிரி “எனக்கு அவங்களும் நிஜமாக வேண்டும். அப்பறம் அவங்க..” என்று யாரையோ சுட்டிக்காட்டினான்.

மீரா அதற்கு மேல் பொறுக்க முடியாமல் “ஆதி..” என்று அவனை வந்துக் கட்டிக் கொண்டாள். தன் மார்பில் முகம் வைத்து கட்டிக் கொண்டவளைத் தன்னிடம் இருந்து பிரித்து தள்ளியவன்.. கண்கள் கலங்க “நீ நிஜமாக திரும்ப கிடைத்ததால்.. நான் ஆசைப்பட்டவங்களும் நிஜமாக கிடைப்பாங்களா என்று ஆசையாக இருக்கு மீரா..! நீ நிஜமாக தெரிவதால்.. இத்தனை நாட்கள் இவங்க கூட வாழ்ந்தது நிழலாக தெரிகிறது மீரா..! சுற்றியிருக்கிறது தான் நிஜமாக தெரிகிறது. அது எனக்கு பிடிக்காத ஒன்று! என்னால் அப்படியிருக்க முடியாது. நான் அங்கேயே போய் விடுகிறேன். என்னை மீண்டும் அங்கிருந்து இழுக்காதே..” என்றுக் கண்களில் கண்ணீருடன் கத்தினான்.

மீராவிற்கு அவள் தெரிந்துக் கொண்ட விசயம் மகிழ்ச்சியைத் தருகிறதா அல்லது வருத்தத்தைத் தருகிறதா என்று அவளுக்கே தெரியவில்லை. அவளைப் பார்த்த பின் அவனையும் அறியாது.. இயல்பிற்கு திரும்பியதை எண்ணி மகிழ்வதா..! அல்லது அவ்வாறு இயல்பிற்கு திரும்பும் பொழுது அவன் தாண்டி வந்த கஷ்டங்கள் நினைவு வருகிறதை நினைத்து அவன் வருந்துவதும்.. அவளைப் போல் அவன் நெசிப்பவர்களும் வர வேண்டும் என்று அவன் ஏங்குவதும் என்று அவனது உணர்வுகளைக் கண்டு அழுவதா என்று மீராவிற்கு தெரியவில்லை.

“ஆதி..” என்று ஒரு அடி எடுத்து வைத்தவள்.. அவன் வரைந்து வைத்திருந்த ஒவியத்தின் வரிவடிவத்தைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.

ஏனெனில் கார்த்திக்கின் ஒவியம் அது..! அதை அவன் வரைந்திருந்த விதம் தான் அவளைத் திடுக்கிட வைத்தது. நெற்றியில் இரத்தம் வழிய கார்த்திக் இருப்பது போல் நின்றிருந்தான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 20


மீரா அதிர்ந்தவளாய் “ஆதி கார்த்திக்கை ஏன் இப்படி வரைந்து வைத்திருக்கிறாய்..?” என்று அதிர்ச்சி மாறமாலேயே கேட்டாள்.

அதற்கு ஆதித்யா.. அந்த உருவத்தை இன்னும் திருத்தி சரிச் செய்தவாறு “இது நிஜம் நிழலாக மாறிவிட்ட நிகழ்வு..” என்றுச் சிறு கசந்த சிரிப்பு சிரித்தான்.

மீரா மீண்டும் அந்த ஒவியத்தைப் பார்த்தாள். நெற்றியில் இருந்து குருதி வழிய கார்த்திக் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருப்பது போன்று இருந்தது. பின் ஆதித்யாவிடம் “எனக்கு புரியலை..” என்றாள்.

ஆதித்யாவோ சிரித்தவாறு “புரியாமல் போகட்டும்..” என்றான்.

மீரா “என்ன ஆதி சொல்கிறே? கார்த்திக் உன்னைப் பற்றி என்னிடம் சொன்ன பொழுது.. நீதான் ஒருதரம் நெற்றியில் காயத்துடன் அவனது வீட்டிற்கு வந்தாய் என்றுச் சொல்லியிருக்கிறான். ஆனால் இதில் இப்படியிருக்கு..! இதில் நீ வரைந்திருக்கும் ஒவியங்கள் அனைத்தும் உன் லைஃப்பில் சந்தித்தவை. அப்போ இதுவும் நடந்ததா..? யார் கார்த்திக்கை அடித்தார்கள். கார்த்திக் இதைப் பற்றி என்னிடம் சொல்லவேயில்லை. இது எப்போ நடந்தது?” என்றுச் சரமாரியாக கேள்விகளைக் கேட்டாள்.

ஆனால் ஆதித்யாவோ “கார்த்திக் சொல்லவில்லையா..! அப்போ நானும் சொல்ல மாட்டேன். சிலவை உனக்கு தெரியாமலேயே இருக்கட்டும்.” என்றான்.

மீரா பெருமூச்சு விட்டவளாய் “நீயே போட்டிருக்கிற கட்டுக்குள் இருந்து வெளி வர மாட்டேன் என்று என்ன அப்படி ஒரு பிடிவாதம்! சரி எனக்கு தெரிந்ததைப் பேசலாமா..” என்றுக் கேட்டாள்.

அதற்கு தன் வேலையைத் தொடர்ந்தவாறு மறுப்பாக தலையசைத்தான். பின் “நீ என்னை நிஜத்திற்குள் இழுக்க பார்க்கிறாய், எனக்கு அது பிடிக்கவில்லை மீரா! என் கண் முன்னாடி நின்றுட்டு.. நீ நிழல் அல்ல நிஜம் என்றுக் காட்டிட்டே இருக்கிறே! எனக்கு சந்தோஷம் வருவதற்கு பதில்.. அந்த நிஜவுலகத்திற்கு வர பயமாக இருக்கு..! நீ போயிரு..” என்றான்.

இன்னும் தன்நிலையில் இருந்து வர மாட்டேன் என்று வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்கும் ஆதித்யாவை பார்த்து மீராவிற்கு கோபம் வந்தது. எனவே ஆவேசத்துடன் “முடியாது..! என்னால் உன்னை விட்டுப் போக முடியாது. எப்பவும் என் நிலை மாறாது.” என்றவள், சட்டென்று அவனைப் பற்றித் திருப்பி.. “நான் நிஜம் தானே..! என் காதலும் நிஜம் தானே..! அப்போ நான் காதலிக்கும் நீயும் நிஜம் ஆதி..! எனக்கு நீ வேண்டும் ஆதி! நான் உன்னை விட மாட்டேன்..” என்றவள், சட்டென்று அவனின் முகத்தைப் பற்றி இழுத்து அவனது இதழில் அழுத்த முத்தமிட்டாள்.

இதை எதிர்பாராத ஆதித்யா அவளிடம் இருந்து திமிறி விடுப்பட்டான். அதைக் கண்டு மீராவின் கடைசி நம்பிக்கையும் போனது.

தனது காதலில் இருந்தும், தனது அணைப்பில் இருந்தும் விடுப்பட்டான் எனில் அவனது மனதில் சிறிதளவிற்கு கூட இடமில்லையோ என்று அச்சத்துடன் அவளது எண்ணங்கள் செல்லுகையிலேயே.. எவ்வாறு சட்டென்று விடுப்பட்டானோ அதே வேகத்தில் அவளைப் பற்றி அழுத்த முத்தமிட்டான்.

அவனது இதழணைப்பில் மீரா திளைத்திருக்க.. அவனின் வேகமும், அழுத்தமும் கூடிக் கொண்டே போனது. மீராவிற்கு மூச்சுக்கு திணறுகையில் அவளை விட்டு பிரிந்து நின்றவனின் கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. நம்பிக்கை இழந்த நிலையில் இருந்த அவளுக்கு அவனது இதழ் முத்தம் திடத்தை அளிக்கவும், தெம்பு பிறக்க அவனைப் பார்த்தவள், அவனது கண்ணீரைக் கண்டதும் திகைத்தாள்.

அவனோ “மீரா! இது தப்பு என்கிற மாதிரி ஃபீல்! ப்ளீஸ் போயிரு..” என்றான்.

அவன் கூறியதைக் கேட்டு முற்றிலும் திகைத்த மீரா “ஆதி! நீ என் ஹஸ்பென்ட்! நான் உன்னை லவ் செய்கிறேன். பின்னே இது எப்படித் தப்பாகும்?” என்றுக் கேட்டாள்.

ஆதித்யா “ஆனால் எனக்கு தப்பாக படுகிறதே..! ஆனால் என்னால் உன்னை விடவும் முடியலை..” என்றவாறு மண்டியிட்டு தலைகுனிந்து அமர்ந்தான். பின் திடுமென நிமிர்ந்தவன், “ஆமா மீரா! ரியலி ஸாரி! நான் உன்னை மேரேஜ் செய்துக் கொண்டதற்கான காரணம் ரொம்ப தப்பு! ஐயம் ஸாரி..” என்று மீண்டும் மன்னிப்பு கேட்டான்.

அப்பொழுதே.. அன்று ஏன் தன்னைத் திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்தீர்கள் என்று மீரா கேட்டதிற்கு காதல் தவிர்த்து மற்ற காரணங்களை அவளது வாயிலேயே வரவழைத்ததைச் சொல்கிறான் என்றுப் புரிந்தது. அவன் புரிந்துக் கொண்டான் என்றுச் சந்தோஷப்படுவதா..! அல்லது தற்பொழுது அதை நினைத்து வருத்தி அவளைத் தவிர்ப்பதை நினைத்து வருந்துவதா என்று அவளுக்கு புரியவில்லை.

எனவே அவனைச் சமாதானம் செய்யும் பொருட்டு “நாம் மேரேஜ் செய்துக் கொண்டதை மாற்ற முடியாது ஆதி..” என்றவள்.. மேலும் சொல்ல போகும் முன் “மேரேஜ் நிர்பந்தமா மீரா? அவர்களுக்கு மாதிரி..” என்று சுவற்றில் யாரையோ சுட்டிக் காட்டினான்.

மீராவிற்கு சலித்துப் போயிற்று..!

மீரா “ஏன் ஆதி! உன் லைஃப்பை மற்றவங்க கூட கம்பேர் செய்கிறே? மற்றவர்கள் மாதிரி நீ இல்லை, உன்னை மாதிரி மற்றவர்கள் இருக்க மாட்டாங்க..! ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு லைஃப்..!” என்றாள்.

ஆதித்யா “மற்றவங்க மாதிரி எனக்கு இருக்க கூடாது..” என்றான்.

மீராவிற்கு தற்பொழுதும் அவன் பேசுவது புரியவில்லை. ஆனால் துளிர் விட்ட நம்பிக்கையையும் விடவில்லை. எனவே "ஆதி! உனக்கு இந்த பேர் கொடுத்தாங்க அதனால் வச்சுட்டே என்றுச் சொன்னே..! அதே மாதிரி.. நீ என் ஹஸ்பென்ட் அதையும் ஒத்துக்கிறே தானே.." என்றுக் கேட்டாள்.

மண்டியிட்டு அமர்ந்திருந்தவன் நிமிர்ந்து பார்த்தான்.

மீரா தொடர்ந்து பேசினாள். "நான் உன் மனைவி என்பதையும் உன்னால் மறுக்க முடியாது ஆதி..! உன் மனைவியாக எனக்கு உன் மேல் உரிமை இருக்கு..! உன் மனைவியை நீ போக சொல்வியா.. ஆதி! என்னை கை விட மாட்டேன் என்றுச் சொல்லியிருக்க தானே..! அதை நம்பி உன்னைப் பார்க்க வந்த என்னைப் போக சொல்வியா ஆதி?" என்றுக் கேட்டாள்.

மெல்லிய குரலில் ஆனால் அழுத்தமாக மீரா சொல்லியவை மெல்ல மெல்ல ஆதித்யாவின் மனதில் இறங்கியது.

ஆனாலும் அதுவரை நிம்மதியாக வாழ்ந்திருந்த நிழல் உலகை விட்டு அவனால் வெளி வர விருப்பமில்லை. “நான் இப்படியே இருந்துட்டு வாழ்ந்து முடித்து விடுகிறேனே..!” என்று அவளிடம் கெஞ்சும் குரலில் சொன்னவன், திடுமென குரலை உயர்த்தி கத்தினான்.

“இதற்கு தான் என் லைஃப்பில் குறுக்கிடாதே.. போ! போ! என்று அவ்வளவு தரம் சொன்னேன். நீ கேட்கவில்லை..! இப்போ பார்த்தாயா என்னவாகிற்று என்று! எனக்கு காதலும் சரிப்பட்டு வராது. மேரேஜ் லைஃப்பும் சரிப்பட்டு வராது. இது எனக்கு என்று விதிக்கப்பட்டிருக்கும் விதி..!”

மீராவோ சிறிதும் பின்வாங்காமல் பதிலளித்தாள். ஏனெனில் முதலில் அவள் வந்ததைக் கூட நம்ப இயலாதவனாய் அவள் நிழலா! நிஜமா! என்றுக் கேட்டவன், இந்தியாவிற்கு வருமாறு அழைத்த பொழுது அவள் வர மறுத்ததைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தவன், தற்பொழுது அவளுடன் ஜெர்மனியில் இருந்ததை நினைப்படுத்தி பேசுவதும்.. கணவனாய் உணர்வதையும் முன்னேற்றமாக கருதினாள். எனவே அவனுக்கு சலிக்காது பதிலளித்தாள்.

“நாம் அந்த விதியை சரிச் செய்யலாம் ஆதி..!” என்றாள்.

ஆதித்யா “எப்படி?” என்கவும், மீரா அவனது அருகில் வந்து அவன் முன் மண்டியிட்டு அமர்ந்து அவனது விரல்களோடு தனது விரல்களைக் கோர்த்துக் கொண்டு “இப்படி!” என்றாள்.

அவனோ அவர்களது கோர்த்த விரல்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். மீரா அவனது முகத்தைப் பார்த்து தொடர்ந்து பேசினாள்.

“நீங்க என் கூடவே இருக்கணும். என்னை விட்டுக் போகக் கூடாது. என்னை கைவிடவும் கூடாது. நானும் உங்களை விட்டு போக மாட்டேன். உங்களை லவ் செய்துட்டே இருப்பேன். நீங்க எப்படியிருந்தாலும் என்னால் உங்களை வெறுக்க முடியாது, விலகவும் முடியாது. நாம் இப்படி இருப்பது தான் விதி ஆதி..!” என்றவள், திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்ததால் தெரிந்த அவனது கன்னத்தில் எம்பி முத்தமிட்டாள்.

அவளது முகத்தைத் திரும்பிப் பார்த்தவன், “என்னுடைய பலவீனத்தை உபயோகித்துக் கொள்கிறாயா..?” என்றுக் கேட்டான்.

அதைக் கேட்ட மீரா “வாவ்! இப்போ தான் ஜெர்மனியில் பார்த்த ஆதி மாதிரி இருக்கிறாய்! அதே திமிரான பேச்சு!” என்றாள். அதற்கு ஆதித்யா குழப்பான பார்வையுடன் “உன்னைப் பார்ப்பதற்கு மட்டுமில்லை, நினைக்க கூடத் தகுதியிழந்த ஆதி தானே அவன்..” என்றவனின் முகத்தில் சிறு பதட்டம் தெரிந்தது.

ஹரிஹரன் அவனைத் திட்டியதைச் சொல்கிறான் என்பதைப் புரிய.. அவன் மீண்டும் பிரிவு ஏற்பட்ட காலக்கட்டத்திற்கு செல்வது புரியவும், அவசரமாக பேச்சை மாற்றினாள்.

“ஆனால் என்னைக் காதலிக்க வைத்ததும் இந்த ஆதி தானே..” என்று அவனது முகத்தை கையில் ஏந்தினாள்.

அதற்கு ஆதித்யா “என்னை எதற்கு லவ் செய்தாய்..?” என்றுக் கேட்டான். அவனது பார்வை அவளது முகத்தில் தான் இருந்தது. அவளது முகவடிவை அளந்தவன்.. திடுமென எழுந்தான். அவளையும் பற்றி எழுப்பினான். பற்றிய கையை விடாது.. படிக்கட்டினை நோக்கி சென்றான்.

மேல் தளத்தை கீழே இருந்து அண்ணாந்து தான் பார்த்திருக்கிறாளே தவிர மீரா மேலே சென்றதில்லை. தற்பொழுது ஆதித்யா அழைத்துச் செல்லவும்.. ஆர்வத்துடன் சென்றாள். பாதி படிக்கட்டு ஏறிக் கொண்டிருக்கையிலேயே இன்டர்காம் ஒலிக்கவும்.. அப்படியே இருவரும் நின்றுவிட்டார்கள். அது முழுவதுமாக ஒலித்து நிற்கவும்.. சோமு உள்ளே வந்தான். கதவைத் திறந்துக் கொண்டு ஒரு பெண் அவர்களின் காலை உணவுகளைத் தாங்கிய ட்ராலியை தள்ளிக் கொண்டு வந்தாள். உள்ளே வந்த இருவரும் பாதிப் படிக்கட்டில் ஆதித்யா மீராவுடன் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்தனர்.

சோமு ட்ராலியில் இருந்த உணவுகளை எடுத்து வைத்துவிட்டு விரைவாக அந்த பணிப்பெண்ணை செல்ல சொல்லவும், அவளும் வேகமாக எடுத்து வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

பின் சோமு மீராவை பார்த்து “ஸாரை ஏன் மாடிக்கு கூட்டிட்டு போறீங்க.? அங்கேல்லாம் போக கூடாது.” எ்ன்றான்.

மீரா “ஏன் கூடாது?” என்று ஒற்றை வார்த்தையில் கேட்டாள்.

சோமு “அச்சோ! ஸார் மாடிக்கு போனால் வெறித்தனமாக கத்த ஆரம்பித்து விடுவார். அங்கிருந்த பொருட்களை எல்லாம் ஒருதரம் போட்டு உடைத்தார். அதில் இருந்து.. டாக்டர் அவரை மேலே போக கூடாது என்றுச் சொல்லி விட்டார்.” என்றான்.

அதைக் கேட்ட ஆதித்யாவிற்கு அன்றைய நாளின் நினைவுகள் வந்தனவோ என்னவோ.. மெல்ல இரு படிக்கட்டை முதல் தளத்தை பார்த்தவாறு இறங்கியவன், பின் மீராவை தாண்டி இறங்க முற்பட்டான். சட்டென்று அவனது கையைப் பற்றி ஆதித்யா இறங்குவதை மீரா தடுத்தாள்.

அப்பொழுது சோமு “மேலே போக வேண்டாம் ஸார்! கீழே வாங்க! டாக்டர் உங்களை மேலே போக வேண்டாம் என்றுச் சொல்லியிருக்கிறார். உங்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை என் கிட்டக் கொடுத்திருக்கிறார்.” என்றான்.

அதைக் கேட்டு ஆதித்யா இறங்க முற்படவும், அவனை இழுத்து நிறுத்தி.. “ஆதி! மாடிக்கு எதற்கு என்னைக் கூட்டிட்டு போக நினைத்தீங்க..? நினைத்ததைச் செய்திடுங்க.. உங்களுக்கு இயல்பாக தோன்றியதைச் செய்யுங்க..! கட்டுப்படுத்தி நீங்களே ஒரு உலகத்தை உருவாக்கிக் கொள்ளாதீங்க..” என்று வேண்டினாள்.

அதற்குள் படி ஏறியவாறு சோமு “வாங்க ஸார்! அவங்களுக்கு ஒன்றும் தெரியாது. டாக்டர் சொல்லியபடி கேட்டதால் தலைவலி குறைகிறது என்று நீங்களே சொன்னீங்க தானே..” என்று ஆதித்யாவை அழைத்துப் போக முற்பட்டான்.

மீரா “நான் ஆதித்யாவின் வைஃப்! நான் அவரை பார்த்துக் கொள்கிறேன். நீங்க வர வேண்டாம்.” என்று அழுத்தமான குரலில் சோமுவிடம் சொல்வது போல் ஆதித்யாவினை பார்த்தாள். அவன் சோமுவுடன் சென்று அவனது கட்டுக்குள் மீண்டும் புகுந்துக் கொள்வானோ.. என்றுச் சிறு அச்சமும் தவிப்புமாக பார்த்தாள்.

ஆதித்யாவிற்கு ஏனோ அந்த அழுத்தமான குரல் அவனது மனதில் அழுத்தமாக பதிந்தது. அதனைத் தொடர்ந்து ஏதேதோ நினைவுகள் அவனுக்குள் வந்துச் சென்றது. அதற்குள் அருகில் வந்த சோமு “வாங்க ஸார்..” என்று மீண்டும் அழைத்தான். அவனிடம் திரும்பிய ஆதித்யா.. “என் வைஃப் உன்னை வேண்டாம் என்று சொன்ன பிறகும்.. வந்திருக்கிறாயே..! இது உன்னோட கான்பிடன்ட்டா.. இல்லை என் வீக்னஸா..” என்றுக் கேட்கவும்.. திருதிருவென விழித்த சோமு வந்த வழியே திரும்பினான். ஆதித்யா பேசியிருக்க கூடத் தேவையில்லை. அவன் பார்த்ததே சோமுவிற்கு கிலி ஏற்பட இறங்கி வந்துவிட்டான்.

மீராவோ வாயை பிளந்துக் கொண்டு நின்றாள். ஆதித்யா சொல்லிய இரு சொற்களில் எதிராளியை திணறிடிக்கும் வலிமையை கண்டாள்.

கீழே வந்து நின்றுக் கொண்ட சோமுவிற்கு மிகுந்த கவலையாக இருந்தது. ‘டாக்டர் சொல்லியும் கேளாமல் மேலே செல்கிறாரே..! எதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? அவருடைய பழைய குரலும், பார்வையும் கூட வந்துவிட்டது மாதிரி இருக்கிறது..’ என்று நினைத்துக் கொண்டு போனவனின் எண்ணப்போக்கு நின்றது. ஆதித்யா ஸார் பழைய மாதிரி ஆகிறாரா..! இது மகிழ்ச்சி தரக் கூடிய விசயம் அல்லவா..! என்று சிறு மகிழ்ச்சியும் நிம்மதியுமாக தற்பொழுது மேலே பார்த்தான்.

மீராவிற்கோ வானத்தில் பறப்பது போன்ற உணர்வில் இருந்தாள். அவனது வாயில் இருந்து அவனது வாழ்க்கைத் துணைவி என்ற வார்த்தையைக் கேட்க அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அவனின் பழைய மிடுக்கும் கூட எட்டிப் பார்த்தது.

அவளுக்கு தெரிந்திருக்குமா என்றுத் தெரிந்திருக்கவில்லை. அவள் ஆதித்யாவை காதலிக்கிறேன் என்று எத்தனை முறைச் சொன்னாளோ அதை விட அதிகமாக ஆதித்யா அவளை மணந்த பின் மீராவை தனது வாழ்க்கை துணைவி என்று மனதிற்குள்ளும், மற்றவர்களிடமும் சொல்லியிருக்கிறான். அது இல்லாமல் போகவுமே அவன் அவ்வாறு தவித்து மனம் மிகுந்து பாதிக்கப்பட்டிருக்கிறான்.

மகிழ்ச்சியுடன் அவனது கரத்தைப் பற்றியவள்.. அவனை அழைத்துச் சென்றாள்.

முதல் தளத்தை அடைந்ததும்.. மீரா “எதற்கு என்னைக் கூட்டிட்டு வந்தே ஆதி! இதுவும் உன் போர்ஷனா..?” என்றுச் சுற்றிலும் பார்த்தபடி கேட்டாள்.

ஆதித்யா ஆம் என்றுத் தலையை ஆட்டினாலும்.. அவனும் அந்த இடத்தைப் புதிதாக பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான். சுவற்றில் இருந்த ஒரு தாங்கியில் ரிமொட் இருக்கவும், அதை எடுத்து அழுத்தினாள். அங்கு விளக்குகள் எரியவும்.. அதன் அழகிலும் மீரா அசந்து தான் போனாள்.

ஒரு பக்கம் தனியாக அறை என்று இல்லாது சமையல் மேடையுடன் கூடிய சமையல் செய்யும் இடம், அதற்கு அருகேவே சிறு சாப்பிடும் மேசை..! பின் இரு அறைகள்! கீழே இருப்பது போல் இங்கேயும்.. மேசை, நாற்காலி, அலங்கார தூண், மலர் ஜாடிகள் போன்றவற்றை துணிகள் கொண்டு மறைத்திருந்தார்கள். திரும்பி ஆதித்யாவை பார்த்தாள். அவனோ “இங்கே இல்லை..” என்று அவளது கரத்தைப் பற்றி அடுத்த மேல் தளத்திற்கு இழுத்துச் சென்றான். அங்கே சென்றதும் மீராவின் விழிகள் வியப்பில் விரிந்தது. அங்கும் உபயோகிக்கப் படதாதலால் அனைத்தையும் பாதுகாத்து வைத்திருந்தார்கள் என்றாலும்.. அவை என்னென்ன என்றுத் தெரிந்தது. கீழ்தளத்தில் ஒருபக்க சுவற்றில் முழுக்க கண்ணாடிப் பதித்திருந்தது என்றால்.. இங்கு கூரை அவ்வாறு இருந்தது. அந்த தளம் பிரிவுகளாக பிரிக்கப்படாமல் அடுத்தடுத்து இருந்தது. மூடப்பட்டிருந்த நீச்சல் குளம், உடற்பயிற்சி செய்யும் இடம், பெரிய நூலகம், அடுத்து துணிகளால் மூடப்பட்ட சட்டங்கள் நிறைந்த பகுதி..!

மீரா கேள்வியாக ஆதித்யாவை பார்க்கவும், அவளது பற்றிய கரத்தை விடாமல் தாங்கிகளை துணிகளால் மூடப்பட்டிருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

“இதெல்லாம் என்ன ஆதி..?” என்று அவள் கேட்டு முடிப்பதற்குள்.. ஒரு தாங்கியின் அருகில் சென்ற ஆதித்யா அதன் மேல் மூடப்பட்டிருந்த துணியை அகற்றினான்.

மீராவின் கண்கள் மேலும் விரிந்தது. ஜப்பானின் புகழ்பெற்ற கோவிலை வரைந்திருந்தான். அப்பொழுதே ஆங்காங்கே இருந்த தாங்கிகள் படம் வரைய உதவும் தாங்கிகள் என்றுத் தெரிந்தது.

“இது இல்லை..” என்றுத் தலையை ஆட்டியவாறு முணுமுணுத்தவன், அடுத்த சட்டத்தில் இருந்த துணியை அகற்றினான். அதில் அழகிய மலைத்தொடர்களை வெண்பஞ்சு மேகங்களும், பச்சைபசலென்ற மலைகளும், காற்றில் ஆடும் மரங்களும் என்றுப் பார்த்தாலே அந்த குளுமையை அனுபவித்து விடலாம் போன்று வரைந்திருந்தான். அதைப் பார்த்தும் மறுப்பாக தலையசைத்து விட்டு அடுத்து இருந்ததைத் திறந்தான். அதில் என்ன இருக்கும் என்பதைப் பார்க்க ஆவலுடன் இருந்த மீராவின் கண்கள் அதைப் பார்த்ததும் இனிமையாக அதிர்ந்தாள்.

ஏனெனில் மீராவை தான் வரைந்திருந்தான்.

அன்று காபி ஷாப்பிற்கு பின்னால் இருந்த மலைச்சரிவில் ஆதித்யா சென்ற பொழுது மீராவும் பின் தொடர்ந்தாள். அப்பொழுது.. மலைச்சரிவில் மேல் நின்று ஆதித்யா நின்றிருக்க.. அவள் கீழே நின்று தன் காதலைச் சொன்ன பொழுது இருந்த அவளது தோற்றத்தைத் தத்ரூபமாக வரைந்திருந்தான். இதில் இருந்து அவள் மீளாதிருக்கும் பொழுதே “மீரா..” என்றழைத்து அடுத்த சட்டத்தினை காட்டிய பொழுது அவள் மேலும் இனிமையாக அதிர்ந்தாள்.

ஏனெனில் மீரா.. ஆதித்யாவிற்கு தன் மீது எந்த விதத்திலாவது ஈர்ப்புண்டா என்பதை அறிந்துக் கொள்ள காரின் ஓட்டுனர் போன்று முகத்தை மறைத்துக் கொண்டு முன் இருக்கையில் இருக்க.. ஆனால் அவனோ அவள்தான் என்று கண்டுப்பிடித்த பொழுது மகிழ்ச்சியுடன் தலையில் போட்டிருந்த தொப்பியைக் கழற்றியவாறு திரும்பியதை வரைந்திருந்தான். அவளின் கண்களில் காதலும் மகிழ்ச்சியும் போட்டிப் போட்டுக் கொண்டு வழிந்ததை உயிர்ப்புடன் வரைந்திருந்தான்.

மீரா மகிழ்ச்சியில் கண்கள் கலங்க அவனைத் திரும்பி பார்த்தாள். அவனோ அவளைப் பார்த்த மாதிரியே பின் வைத்து எட்டுக்களால் நடந்து சென்று காலியாக இருந்த சட்டத்திற்கு அருகே இருந்த பிரஷை கொண்டு வரைய ஆரம்பித்தான்.

அவன் எதை வரைய போகிறான் என்றுத் தெரிந்துக் கொண்ட மீரா சட்டென்று அவனுக்கு அருகே சென்று அவனது கையில் இருந்த பிரஷை பறித்தாள்.

“இப்போ இருக்கிற.. என்னை வரைய போகிறீங்களா..?” என்றுக் கேட்டாள்.

அவன் ஆம் என்றுத் தலையை ஆட்டினான்.

மீரா தனது இருகைகளையும் பின்பக்கமாக கட்டிக் கொண்டு “டூ இட்..” என்று தன் முகத்தை நிமிர்த்தி காட்டி கண்களை மூடிக் கொண்டாள்.

செய்யுங்கள் என்று கண்களை மூடிக் கொண்டு முகத்தைக் காட்டிய மீராவை மென்மையான பார்வையால் வருடியவனின் கை தானே எழுந்து அவளது முகவடிவை அளந்தது. கண், மூக்கு என்று பயணித்த அவனது விரல் அவளது இதழை அடைந்தது.

கண்களை மூடி நின்றிருந்தவளும்.. ஆதித்யாவின் விரல்கள் செய்த இம்சையை தாங்க முடியாதவளாய் உணர்ச்சி பிழம்பாய் நின்றிருந்தாள். அப்பொழுது “மீரா..” என்ற கரகரப்பான குரல் அவளைத் தட்டியெழுப்பியது. அந்த குரலை ஒரிரவு முழுவதும் அவள் கேட்டிருக்கிறாள். “மீரா! மீரா!” என்று பிண்ணனி இசையுடன் அவன் அவளுடன் சங்கமித்திருக்கிறான். அந்த நினைவுகளில் சட்டென்று இமைகளைத் திறந்தாள். இமைகளைத் திறந்ததும் அவளது இதழ்கள் அவனது வலிய உதடுகளால் மூடப்பட்டது. சற்றுமுன் போல் அவசரமாய் தன் தேவைத் தீர்த்துக் கொண்டது போல் அல்லாது, அவளின் ஒவ்வொரு செல் முதல் கொண்டு அவளை முழுமையாக இரசிப்பவனாய் அம்முத்தசங்கமம் நிகழ்ந்தது.

பின் மெதுவாக தனது உதடுகளைப் பிரித்தவன், அவளது முகமெங்கும் முத்திரைகளைப் பதித்து விட்டே நிமிர்ந்தான்.

“மீரா..!” என்று அழைத்தவன், அதற்கு மேல் வாய் வார்த்தை இல்லாமல் தவித்தான். அவனது தவிப்பு புரிந்து.. அவனது மார்பில் சாய்ந்தவள், அவனை இறுக கட்டிக் கொண்டாள். தன் மார்பில் சாய்ந்தவளை அவனும் இறுக கட்டிக் கொண்டான்.

மீராவின் இறுகிய அணைப்பில் அவனும் அவனது மனதை ஆசுவேசப்படுத்திக் கொண்டான். பின் மெல்ல “மீரா!” என்று அழைத்தான்.

மீரா “சொல்லுங்க ஆதி..” என்றான்.

ஆதித்யா “மீரா! நீ என்னை விட்டுப் போக மாட்டாய் என்று கான்பிடன்ட்டாக சொன்னேன். அந்த கான்பிடன்ட் திரும்பி என்கிட்ட வந்த மாதிரி இருக்கு..!” என்றான்.

அதைக் கேட்ட மீராவிற்கு குழப்பமாக இருந்தது. அவள் ஆதித்யாவை விட்டு சென்றுவிடுவாள் என்று யார் சொல்லியிருப்பார்கள் என்பது அவளுக்கு தெரியும். நிச்சயம் ஆதித்யாவின் தந்தை தான் சொல்லியிருப்பார் என்றுத் தெரியும். ஆனால் அவளிடம் சொன்னது இவனுக்கு எப்படித் தெரியும், ஆதித்யாவின் தந்தையை அவள் முதலில் சந்தித்த பின் நேற்றிரவு வந்த பொழுது தான் பார்த்தாள். அவர் வந்த பொழுது ஆதித்யா உறக்கத்தில் இருந்தான். அவ்வாறு இருக்கையில் அவர் எப்பொழுது ஆதித்யாவிடம் அவள் விட்டு விலகி சென்று விடுவதாக கூறினார். ஒருவேளை முதலிலேயே அவ்வாறு சொல்லியிருப்பாரோ..! என்ற ஐயம் ஏற்பட்டது. ஆதித்யா அவரிடம் போராடி மீரா அவனுடன் யாருக்கும் தெரியாமல் இருப்பாள் என்று வாக்கு பெற்றுக் கொண்டிருப்பான் என்று மீராவிற்கு தெரிந்தது. ஆனால் அவள் விலகி சென்று விடுவாள் என்று எப்பொழுது கூறினார் என்று குழப்பத்துடன் நிமிர்ந்து ஆதித்யாவை பார்த்தவள்.. “ஆதி! உன் அப்பா உன்கிட்டயும் இப்படிச் சொன்னாரா..!” என்றுக் கேட்டாள்.

ஆதித்யாவின் விழிகள் கூர்பெற்றது. புருவங்களைச் சுருக்கியவன் “என்னைப் பார்க்க வரும் முன் அவரைப் பார்த்துட்டு வந்திருக்கிறாய் அப்படித்தானே..! அப்போ உன்கிட்ட நீயே விலகி விடுவாய்.. என்று உன்னிடம் சவால் விட்டாரா..! நீ அதற்கு ஒத்துக் கொண்ட பின் தான் உன்னை இங்கே வர விட்டாரா..” என்று நடந்ததைச் சரியாக கணித்தான்.

மீராவின் விழிகள் வியப்பில் விரிந்தது. ஆதித்யா சரியாக கணித்து விட்டதிற்காக அல்ல..! பழைய ஆதித்யாவை அவனிடம் கண்டதில் விரிந்தது.

அப்பொழுது “ஆதித்யா..” என்றழைப்பில் இருவரும் திரும்பி பார்த்தார்கள். அங்கு மகிழன் நின்றிருந்தார்.

மகிழன் “ஆதி! ஆர் யு ஓகே..! இங்கே எதையும் பார்த்து கோபம் வரவில்லை தானே..! அப்படி வரவில்லை என்றால் நீங்க ஒகே என்று அர்த்தம்! ஒருவேளை நீங்க இன்னும் பார்க்கவில்லையோ! அப்படிப் பார்க்கவில்லை என்றால் நல்லது. அவற்றைப் பார்க்காமலேயே என்னுடன் வந்து விடுங்கள்..” என்றார்.

மகிழன் திடுமென சொன்னதும் சிறிது தெளிவு பெற்ற மனது மீண்டும் குழப்பமுற்றது. தன்னை கோபப்படுத்தும் பொருள் என்னவென்றுச் சுற்றியும் பார்த்தான். மீராவை விட்டு அகன்றவனின் விழிகள் பரபரப்புடன் சுற்றிலும் பார்த்தது. தற்பொழுது ஆதித்யாவை பார்ப்பதற்கு அவள் முதன் முதலில் வந்த பொழுது.. பார்த்த ஆதித்யாவை போல் இருந்தான். அதைக் கண்டு கவலையுற்று மீரா அவனுக்கு அருகில் அவனைப் பிடிக்க நினைக்கையில் ஆதித்யா அவனிடம் இருந்து திணறி.. மகிழனிடம் சென்று “என்னைக் கோபப்படுத்தும் விசயம்.. இங்கே எங்கே இருக்கிறது டாக்டர்?” என்றுக் கேட்டான்.

அதற்கு மகிழன் “ஈஸி ஆதி! ஹலோ மிஸ் சீக்கிரம் ஆதித்யாவை அழைச்சுட்டு போங்க..” என்றவர், திரும்பி சோமுவை பார்த்து “வேடிக்கை பார்க்கவா.. கூட்டிட்டு வந்தேன். ஸாரை கூட்டிட்டு போ..” என்றுக் கத்தினான். அவனும் மேலும் இருவரும் முன்னே வந்து கூட்டிக் கொண்டுப் போகவும்.. ஆதித்யாவின் மாற்றத்தைக் கண்டு திகைத்து நின்ற மீராவும் வேறு வழியின்றி பின்னே சென்றாள்.

அவர்கள் கீழ்தளத்தை அடைந்ததை மேலேயே நின்று எட்டிப் பார்த்த மகிழன் தனது செல்பேசியை எடுத்து.. “ஹலோ ஸார்! அந்த பெண்ணுடைய ஃபோட்டோ பார்த்தால் இன்னும் கத்துவார். அதனால் இருக்கட்டும் என்றுவிட்டு வைத்தது தப்பாக போயிற்று என்று நினைக்கிறேன். சீக்கிரம் இதையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும். ஏனெனில் நான் வரும் போது இருவரும் அணைத்துக் கொண்டு இணக்கமாக நிற்பதைப் பார்த்தேன். ஒகே நான் பிறகு பேசுகிறேன்.” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு கீழே சென்றார்.


உன் இதழமுதத்தில் என்னைத் தொலைக்கவில்லை..!

உன் இதழமுதத்தில் என்னைக் கண்டறிந்தேன்..!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 21


கீழே வந்த ஆதித்யா தலையைப் பிடித்துக் கொண்டு தரையில் அமர்ந்துவிட்டான். சற்றுமுன் வரை தன்னிடம் நன்றாக பேசிக் கொண்டிருந்த ஆதித்யா திடுமென தனக்குள் சுருங்கி விட்டதைப் பார்த்த மீரா.. விக்கித்தவளாய் நின்றாள்.

மீராவின் அதிர்ந்த முகத்தைப் பார்த்த சோமுவிற்கு பாவமாக இருந்தது. எனவே “நான்தான் சொன்னேனே..! ஸார் மாடிக்கு போய் அங்கிருக்கிறதைப் பார்த்தால்.. இப்படியாகிடுவார். அதனால் தான் நான் தடுத்தேன்.” என்றான்.

அவன் புறம் நிதானமாக திரும்பிய மீரா.. “அப்படியா..! உங்க ஸார்.. அங்கே இருப்பதைப் பார்த்துட்டு கத்திட்டே கீழே வந்தாரா? இல்லை டாக்டர் நீ கோபப்படுவாய் என்றுச் சொன்ன பிறகு வந்தாரா..?” என்றுக் கேட்டு முறைத்தாள். அதைக் கேட்ட சோமு பதிலளிக்க முடியாமல் திணறினான்.

ஏனெனில் ஆதித்யா மீராவுடன்.. படி ஏறிப் போன போதும் சரி, டாக்டர் மகிழன் வந்து ஆதித்யா எங்கே என்று விசாரித்த பொழுது மேல்தளத்தில் இருப்பதாய் சொன்னதும்.. இன்னும் இரு ஆட்களை அழைத்துக் கொண்டு ஆதித்யாவை அழைக்க சென்ற போதும் சரி.. ஆதித்யா நன்றாக தான் இருந்த மாதிரி தெரிந்தது. அவர்கள் நெருக்கமாக வேறு நின்றிருந்தார்கள். இருவரின் தனிமையில் நடுவில் இவர்கள் தான் தொந்திரவு செய்த மாதிரிதான் இருந்தது. மகிழன் ஆதித்யாவிடம் பேசிய பிறகே ஆதித்யா மீண்டும் பழைய மாதிரி நடந்துக் கொண்டான். எனவே அவர்கள் மீதுதான் தவறு இருப்பது போல் தோன்றவும்.. மற்றவர்களைப் போக சொல்லிவிட்டு.. அவனும் தலைகுனிந்தபடி அங்கிருந்து வெளியேறினான்.

மீரா டாக்டர் மகிழனின் மேல் கோபத்தில் இருந்தாள். முதலிலேயே மகிழன் மீது மீராவிற்கு அவ்வளவாக திருப்தியில்லை. இரு வருடங்களுக்கு முன் எவ்வாறு என்றுத் தெரியவில்லை. ஆனால் தற்பொழுது மனஅழுத்தத்தில் இருப்பவனை வெளியுலகம் தெரியாமல் வெளிச்சத்தை மறைத்து.. திரைச்சீலைகளை மூடி ஆதித்யாவை இன்னும் இருட்டறையில் வைத்து அவனது மனக்குமறல்களை அவனுள்ளேயே அழுத்திக் கொள்ள இந்த டாக்டர் வழி வகை செய்துக் கொடுத்ததைப் போல் இருந்தது. அதனாலேயே ஆதித்யா தனது மனக்குமறல்களை ஒவியமாக வரைந்திருக்கிறான் என்றும் புரிந்தது. மேலும்.. சோமுவிடம் சொன்னது போல்.. மகிழன் மெனக்கெட்டு வந்து.. ‘போன முறை வந்த பொழுது நீ கோபப்பட்டாய்.’ என்று ஆதித்யாவிடம் சொல்லவில்லை என்றால் ஆதித்யா இயல்பாக தான் இருந்திருப்பான். இவ்வாறு அந்த டாக்டரின் மீது மீரா கடும் கோபத்தில் இருந்தாள். ஆனால் ஒரு மருத்துவருக்கு தான் சிகிச்சையை பற்றித் தெரியும். கேள்வி ஞானத்தால் செய்வதெல்லாம் மருத்துவம் ஆகிவிட முடியாது. எனவே அமைதியாக பொறுமைக் காத்தாள்.

சோமு வெளியேறியதும்.. மீரா ஆதித்யாவிடம் சென்றாள். தலைக் கவிழ்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் முன் சென்றவள், தலையைத் தாங்கிய அவனது இருகரங்களையும் பிடித்து தன் மார்பில் வைத்து அழுத்தி.. அவனை அவளது முகம் பார்க்க வைத்தாள். தனது கரங்களை மீரா இழுக்கவும் ஆதித்யா நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

மீரா “ஆதி.. ப்ளீஸ்! தேவையில்லாததை யோசிக்காதீங்க..! சற்றுமுன் வரை நாம் நன்றாக தானே இருந்தோம். அந்த ஃப்ளோரில் இருந்த எல்லாவற்றையும் தானே பார்த்தீங்க..! அப்போ நன்றாக தானே இருந்தீங்க..! நீங்க கோபத்தில் கத்தவில்லையே..! டாக்டர் சொன்ன பிறகு தானே தேடினீங்க..! அதற்கு முன் நீங்க வரைந்த இன்னொன்றை எனக்கு காட்டத் தான் ஆசையா தேடினீங்க தானே..! இரண்டிற்கு எவ்வளவு டிப்ரன்ஸ் பார்த்தீங்களா..! ப்ளீஸ் நல்லதைத் தேடுங்க..” என்றாள்.

மீரா பேசியதைக் கேட்ட ஆதித்யாவின் முகம் யோசனையைத் தத்தெடுத்தது.

பின் “ஆமாம்..! உன்கிட்ட எதையோ காட்ட நினைத்தேன்.” என்று அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். ஆனால் அவனால் யோசிக்க முடியாது.. மீராவின் மார்பில் வைத்த அவனது கரத்தின் மூலம் உணர்ந்த அவளது இதயத்துடிப்பு அவனைத் தடைச் செய்தது. தன் முன் அமர்ந்து தன்னை இழுப்பவளிடம் அவனது யோசனை சென்றது. தான் எத்தனை முறை விரட்டிய பொழுதும்.. உன்னை என்னால் விட முடியாது என்பதை மந்திரம் போல் சொல்லித் தன்னை அவளிடம் தக்க வைத்துக் கொண்ட தருணங்கள் நினைவு வந்தது. சற்றுமுன் அவர்கள் நடத்திய முத்தசஞ்சாரம் மட்டுமல்லாது.. அவர்களது சங்கமமும் நினைவு வந்தது. அவனது பார்வை மாறியது. அப்பொழுது தொண்டைக் கனைக்கும் சத்தத்தில் இருவரும் திரும்பினார்கள்.

டாக்டர் மகிழன் “இரண்டு பேரும் சாப்பிடலையா..” என்றுக் கேட்டு சற்றுத் தள்ளியிருந்த மேசையில் எடுத்து வைக்கப்பட்ட உணவுகளைப் பார்த்தவாறு வந்தார்.

மீரா மெதுவாக ஆதித்யாவின் கரங்களை விடுவித்தாள். ஆனால் ஆதித்யா தனது கரத்தை எடுக்காது.. மெல்ல அவற்றை உயர்த்தி மீராவின் வதனத்தை விரல்களால் ஏந்தினான். பின் குறுஞ்சிரிப்புடன் கரங்களை அகற்றிக் கொண்டான்.

அந்த சிறு சிரிப்பிலேயே மீராவின் இதயம் பலமாக துடித்தது. முறுவலுடன் எழுந்து நின்றாள்.

மகிழன் “சாப்பிடலையா ஆதி! சரியான நேரத்திற்கு சாப்பிட சொல்லியிருக்கிறேன் தானே..! அதற்குள் எதற்கு மேலே சென்றீங்க..? நான் வந்தததால் நல்லதாகி போயிற்று..! இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்..” என்று வருத்தப்பட்டார்.

ஆதித்யா மகிழனை யோசனையுடன் பார்த்து “என்ன நடந்திருக்கும் என்று நினைக்கறீங்க?” என்றுப் புரியாமல் கேட்டான்.

இந்த பதினெட்டு நாட்களாக அவர் என்ன சொன்னாலும்.. அப்படியா என்றுக் கேட்கும்.. ஆதித்யா! அன்று அவரிடம் திருப்பிக் கேள்விக் கேட்டதைக் குறித்து வைத்துக் கொண்டார். ஆனால் ஆதித்யாவின் கேள்விக்கு சட்டென்று பதில் அளிக்க முடியாமல் சிரித்து மலுப்பி நேரம் எடுத்துக் கொண்டவர், “கெட்டது எதுவும் நடக்காதது நல்லது ஆதி! அதைப் பற்றி எதற்கு பேசிட்டு..! எப்படியோ என் ட்ரீட்மென்ட் மேல் எனக்கு நம்பிக்கை வந்திருக்கு..” என்று ஆதித்யாவின் மனநிலை முன்னேற்றத்தின் பலனை தன் மேல் எடுத்துப் போட்டுக் கொண்டார்.

ஆனால் ஆதித்யா “எஸ் டாக்டர்!” என்றவன், மீராவிடம் திரும்பி “இவர் டாக்டர் மகிழன்! இவர் ட்ரீட்மென்ட் செய்கிறவர் என்ற பெயரில் எனக்கு கிடைத்த காம்பெனியன், இவர் அருமையாக பேசுவார். நாங்க நிறையா பேசுவோம். இங்கே எல்லாரும் என்னை வேறாக பார்க்கும் பொழுது.. என் கூட ஒத்து பேச ஒருவர் கிடைத்தால் எப்படியிருக்கும் தெரியுமா..! இவர் இல்லை என்றால் என்னை சங்கலி போட்டு கட்டியிருப்பார்கள்…” என்றுச் சிரித்தான்.

மகிழனும் பெருமையுடன் சிரித்தார். பின் ஆதித்யா தொடர்ந்து “ஆனால் இப்போ ஏன் என்றுத் தெரியலை. சம்திங் டிப்ரென்ட்டாக பேசுகிறார். முதல் இருந்ததை விட எனக்கு ரொம்ப டிப்ரெஷனாக இருந்தது. ஆனால் இவர் கூடப் பேசும் பொழுது.. அது டிப்ரெஷன் இல்லை.. நான் சரியாக தான் யோசிக்கிறேன் என்றுத் தோன்றும். எனக்கும் அவ்வாறு இருந்தது பிடித்தது. ஆனால் மீரா நீ வந்து.. அப்படியிருக்க கூடாது என்றுச் சொல்கிறே! அப்போ எது சரி..” என்று அவர்களிடமே கேட்கவும், மகிழனுக்கு குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கவும் எச்சிலை விழுங்கினார்.

மீரா சட்டென்று பதிலளித்தாள்.

“நாம்தான் சரி..!” என்றாள்.

அவள் கூறியதைக் கேட்டு ஆதித்யாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. மனதை மறையாது.. மார்பில் கை வைத்தவன், மகிழனிடம் “பட் எஸ்.. மீரா வந்ததிற்கு பிறகு இன்னும் நான் பெட்டராக ஃபீல் செய்கிறேன்.” என்றான்.

மகிழனின் பார்வை மீராவிடம் சென்றது. பின் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு “இங்கு வந்ததிற்கு மிக்க நன்றி மிஸ் மீரா..” என்று அந்த மிஸ் என்பதில் சிறு அழுத்தம் கொடுத்து சொல்லவும், மீரா நிதானமாக “ஐயம் மிஸஸ் மீராஹரிஹரன் ஆதித்யா! மாடியில் பார்த்த போது கூட மிஸ் மீரா என்றுத்தான் கூப்பிட்டிங்க..! ப்ளீஸ் திருத்திக்கோங்க டாக்டர்..” என்றாள்.

அவரும் இந்த பதிலுக்காக தான் எதிர்பார்த்திருப்பார் போல.. சிறு புன்னகையுடன் “எஸ்! ஸாரி மிஸஸ் மீரா! ஆனால் அதுவும் ஆதித்யா மனதிற்குள் அழுத்த பதிந்து.. அது இல்லை என்று ஆனால் இன்னும் பாதிப்பப்படுவான் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். அதனால் என்னையும் அறியாமல் வாய் வழியாக வந்துவிட்டது. ப்ளீஸ்! இட்ஸ் மை ஹம்பிள் ரெக்வஸ்ட்! ஆதித்யாவை விட்டுச் சென்று விடாதீங்க..!” என்றுவிட்டு ஆதித்யாவின் முகத்தில் குழப்பத்துடன் கூடிய யோசிக்கும் பாவனைக்காக காத்திருந்தார். கூடவே அடுத்து ஆதித்யா மீராவிடம் என்ன கேட்க போகிறான் என்று கணித்து அவர்களின் குழப்பமான வாக்குவாதத்திற்காகவும் காத்திருந்தார்.

ஆனால் ஆதித்யா மகிழனிடம் திரும்பி “மீரா என்னை விட்டு சென்றுவிடுவாள் என்றுச் சொல்லறீங்களா..?” என்றுக் கூர்பார்வையுடன் கேட்டான்.

ஆதித்யா மீராவிடம் கேட்பான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், ஆதித்யா அவரிடம் அந்த கேள்வியைக் கேட்கவும், பதில் சொல்ல முடியாமல் சற்றுத் திணறினார்.

‘விலக மாட்டாள்’ என்றுப் பதிலளித்தால்.. அவரே அவனுக்கு நம்பிக்கை அளித்தது போல் ஆகிவிடும். அந்த நம்பிக்கை இருந்தால்.. ஆதித்யாவின் மனநிலை சீராகிவிடும். அவரது வங்கி கணக்கில் போடப்பட்ட பணத்திற்காக அவர் விசுவாசமாக இருந்தாக வேண்டும். அதற்காக மீராவை அருகில் வைத்துக் கொண்டு ‘விலகி விடுவாள்’ என்றுச் சொன்னால்.. அவர்தான் ஆதித்யாவிற்கு வருத்தம் தரும் விசயத்தைச் சொல்லி தளர வைக்கிறார் என்று ஆகிவிடும்.. எனவே மகிழன் சற்று திணறினார்.

பின் திணறலை சிரிப்பாக சமாளித்தவர்.. “உங்கள் விருப்படியே நடக்கட்டும் ஆதித்யா” என்றார்.

அதற்கு சிறு புன்னகையை உதட்டில் தவழ விட்ட ஆதித்யா “என் விருப்பமா..! அதற்கெல்லாம் இந்த வீட்டில் இடமுண்டோ..” என்றுத் தோளைக் குலுக்கிவிட்டு.. அவனது பார்வை திரைச்சீலைகளை அகற்றிவிட நன்றாக தெரிந்த வண்ண மலர் தோட்டத்தைப் பார்த்தான். அதன் அழகில் ஈர்க்கப்பட்டவனாய்.. அதைப் பார்த்தவாறு எழுந்தவன், “இத்தனை நாட்கள் இவை எங்கே போயிருந்தது?” என்றுக் கேட்டான்.

கண்களில் வியப்பும் இரசனையுமாக எழுந்த ஆதித்யாவை மகிழ்ச்சியுடன் மீரா பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது நாரசமாக மகிழனின் குரல் கேட்டது.

“அது எங்கும் போகவில்லை..! நீ உனக்கு என்று உருவாக்கிக் கொண்ட உலகத்திற்குள் இருந்தாய் ஆதித்யா!” என்றுச் சிரித்தார்.

அதைக் கேட்ட மீராவிற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவள் நினைத்தது போல் ஆதித்யா அவனே உருவாக்கிக் கொண்ட உலகத்திற்குள் இருந்து சிறிது சிறிதாக வெளிக் கொண்டு வர முயன்றுக் கொண்டிருக்கையில்.. மகிழன் அவற்றைப் பற்றி மீண்டும் பேசி.. அதற்குள் ஆதித்யாவை மீண்டும் தள்ள பார்க்கிறாரோ என்று மீரா ஐயம் கொண்டாள்.

மகிழன் ஒரு மருத்துவர், ஆதித்யாவின் மதிப்பைப் பெற்றவர், அதனால் அவருக்கு நல்லதாக தான் செய்வார், ஏனோ அவள்தான் அவர் பேசுவதிற்கு தவறாக அர்த்தம் எடுத்துக் கொள்கிறேன்.. என்றுத் தன் மனதிற்குள்ளே பலமுறைச் சொல்லிக் கொண்டாலும்.. அவளால் மனதிற்குள் பதிய வைக்க முடியவில்லை. ஆதித்யாவே சொன்னானே மகிழன் தற்பொழுது வித்தியாசமாக பேசுவதாக..! அவ்வாறு எனில் அவளது ஐயம் சரியே என்று மீண்டும் மகிழனின் மேல் கொண்ட கோபம் தீராமல் அவரைப் பார்த்தாள்.

அவளது கோபம் சரியே என்பது போல்.. ஆதித்யாவின் பார்வை மலர் தோட்டத்தில் இருந்து விலகியது. எங்கோ பார்த்தவாறு “எனக்கு பிடித்த மாதிரியான உலகம்..” என்கையில் மீரா இடைப் புகுந்தாள்.

“அதில் இருக்கும் பொழுது நான் டிஸ்டர்ப் செய்துட்டேனா..!” என்றுக் கேட்ட தோணியிலேயே காதல் ததும்பி வழிந்தது. தனது காதலை ஆதித்யா உணர்வானா என்றுத் தவிப்புடன் பார்த்தாள். அவள் கேட்ட மறுநொடி ஆதித்யாவின் விழிகள் சிறு பளபளப்புடன் அவளைப் பார்த்தது.

அதைக் கவனித்த மகிழன் பேச்சை மாற்ற விரும்பினார்.

“ஒகே சாப்பிடுங்க…” என்றார். மீரா “நீங்களும் சாப்பிடுங்க..” என்று அழைத்தாள். அதற்கு மகிழன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தான் வந்தேன் என்று மறுப்பு தெரிவித்தார்.

மீரா சாப்பிட என்ன கொண்டு வைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்தாள். ஏனெனில் நேற்று இரவு உணவோடு பால் வைத்திருந்தார்கள். அது போல் தற்பொழுது காபி அல்லது தேநீர் இருந்தால் மகிழனுக்கு பரிமாறலாம் என்று நினைத்தாள். அவள் நினைத்தது போல்.. காலை உணவுடன் காபி இருந்தது. மகிழனுக்கு அதைத் தரலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது ஆதித்யா வந்து மூடி வைத்திருந்த கண்ணாடி டம்ளரில் இருந்தவற்றை எடுத்து ஆதித்யா கடகடவென குடித்துவிட்டு வைத்தான். மீரா “அவ்வளவுத்தானா..!” என்றாள்.

மகிழன் “டொன்ட் வெர்ரி மா..! அது சத்துமாவு கூழ்..” என்றார்.

அதற்கும் மீரா “அவ்வளவுத்தானா..” என்றாள்.

அதற்கு ஆதித்யா “எனக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு பொறுமை கிடையாது மீரா! தொண்டை விட்டு உணவு கீழே இறங்க மறுக்கும். அதனால் இதுதான் என் புட்..” என்றுத் தோளைக் குலுக்கினான்.

புன்னகையுடன் எழுந்த மகிழன் “ஒகே மிஸஸ் மீரா! நீங்க சாப்பிட்டு இருங்க..! நாங்க இப்பொழுது வந்து விடுகிறோம்.” என்று அவளிடம் சொன்னவர், ஆதித்யாவிடம் திரும்பி “போகலாமா..” என்றுக் கேட்டார்.

ஆதித்யாவின் முகம் சுருங்கியது.. பின் நிமிர்ந்து “எஸ் நான் ஃபுல்லி ரிக்கவர் ஆகணும். மீரா சில சமயம் என்னை வருத்தமாக பார்க்கிறா..” என்றுவிட்டு அவருடன் செல்ல முற்பட்டான்.

மீரா திகைப்புடன் எழுந்து “எங்கே?” என்றுக் கேட்டாள்.

மகிழன் சிரித்தவாறு “நான் டாக்டர் என்று நினைவிருக்கா..! சிஸ்டர்” என்றுச் சிரித்தார்.

மீரா சற்று தயக்கத்துடன் “நானும் வரலாமா..” என்றுக் கேட்டாள்.

மகிழன் மறுப்பு தெரிவிக்க வாயைத் திறக்கையில் ஆதித்யா அதைக் கவனியாது “வா மீரா..” என்றான்.

மகிழன் ஆதித்யாவிடம் “ஆதி..!” என்று இழுக்கவும், ஆதித்யா மகிழனிடம் திரும்பி “ஏன் வரக் கூடாதா..! நீங்க ஒன்றும் என் வயிற்றைக் கிழித்து ஆப்ரெஷன் ஒன்றும் செய்யலையே..” என்றான்.

ஆதித்யா மகிழனிடம் சொன்னது முற்றிலும் உண்மை..! மீராவுடன் இருக்கும் பொழுது ஆதித்யா நன்றாக உணர்கிறான். மகிழன் மனரீதியான சிகிச்சைக்கு அழைக்கவும், மீராவை விட்டு வரத் தயங்கினான். ஆனால் மீராவே வருகிறேன் என்றுச் சொல்லவும், மகிழ்ச்சியுடன் அழைத்தான்.

ஆனால் மகிழன் மறுத்தார்.

“ஸாரி ஆதி! ஆப்ரெஷனுக்கு கூட அனுமதியளித்து விடலாம். ஆனால் உன் ஆழ்மனதிற்குள் சென்று உன்னுடன் நான் பேசும் பொழுது இன்னொருத்தர் இருக்க கூடாது. அதனால்...” என்று இழுத்தார்.

மீராவே “ஒகே டாக்டர் ஐ அன்டர்ஸ்டென்ட்! நான் வரவில்லை..!” என்றுவிட்டு அமர்ந்துவிட்டாள். ஆனால் அவளது பார்வை ஆதித்யா ஒரு அறைக்குள் சென்று மறையும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த சிறு அறைக்குள் சென்று நடுவில் இருந்த நாற்காலியில் ஆதித்யாவை அமர வைத்த மகிழன்.. அவனுக்கு மேல் இருந்த சிறு விளக்கை மட்டும் போட்டார்.

மகிழன் அழுத்தமான ஆனால் மெல்லிய குரலில் “ஆதி இந்த விரலையே பாருங்க..! உங்களுடைய மொத்த நினைவையும் ஒரு நிலைப்படுத்துங்க..” என்றுச் சொன்னார்.

ஆனால் ஆதித்யா திடுமென கடகடவென சிரித்தான்.

மகிழன் திகைப்புடன் பார்க்கவும்.. ஆதித்யா அவரை நிமிர்ந்துப் பார்த்து “யு னோ ஒன் தின்க் டாக்டர்! மீராவிற்கு உங்களை சுத்தமாக பிடிக்கலை. ஏன் என்று கெஸ் செய்ய முடிகிறதா..? நீங்க எனக்கு தருகிற ட்ரீட்மென்ட் அவளுக்கு பிடிக்கலை அதுதான் ரிஷன்! ஆனால் எனக்கு அவளைப் பிடிச்சுருக்கு..! அவள் கூடப் பேசும் போது ஃபீல் குட்! ஆனால் நீங்க என் கூடப் பேசும் போது தான்.. சம்திங் மனதிற்குள் அழுத்துகிற மாதிரி இருக்கு..! முதலில் அந்த அழுத்ததிற்குள் போனேன். இப்போ போக பிடிக்கலை. போன திரும்பி வருவேனான்னு தான் மீரா கவலையோட உட்கார்ந்திருக்கிறாள். நான் அவள் கிட்ட போக விரும்புகிறேன். நான் அவளிடம் சென்றுவிட்டாள் அவளுக்கு என்மேல் இருக்கிற கொஞ்ச வருத்தத்தையும் குறைத்துவிடும். அதனால் இந்த ட்ரீட்மென்ட் வேண்டாம் என்றுப் பார்க்கிறேன்.” என்றவன், மகிழனின் முகத்தைப் பார்த்து மெல்லிய சிரிப்பு சிரித்து, “ஆனால் டாக்டர் எல்லாவற்றையும் விட நீங்க ஏன் இப்படி ஷாக் ஆகறீங்க..! உங்களைப் பார்த்தால் எப்படியிருக்கு தெரியுமா..! கஷ்டப்பட்டு எதையோ பிடித்து வைத்திருக்கும் பொழுது.. அது உங்கள் கையை விட்டு அகலும் போது.. அதை நிறுத்த முடியாமல் ஒரு ஷாக் அடிக்குமே அப்படியிருக்கு..! அப்போ உங்க கையை விட்டு நலுவது நானா..! இல்லை என் மனநிலையா..!” என்றுக் கேட்டு சிரித்தான்.

எதிரே இருப்பவரின் முகத்தைப் பார்த்து அவரது ஆழ்மன எண்ணங்களைத் தெளிவாக உரைக்கும் பழைய ஆதித்யாவை பார்த்து மகிழன் திடுக்கிட்டு நின்றார்.


என்னை இழந்து நிற்றேன்..
என்னை ஒப்படைக்க வேண்டியவள் வந்து விட..
என்னை இழக்க சம்மதிப்பேனோ..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 22


மகிழன் திகைத்து நிற்கையிலேயே நாற்காலியில் இருந்து எழுந்த ஆதித்யா “டாக்டர்! எனக்கு பைத்தியம் பிடித்திருந்ததா..! அது இப்போ சரியாகி விட்டதா என்றெல்லாம் எனக்கு தெரியாது. பட் நவ் ஃபீல் குட்! சோ அப்படியே இருக்கட்டும். மீராவிற்கு பிடிக்காததிற்குள் சென்று என்னை மீண்டும் இழக்க விரும்பவில்லை. அதற்கு உங்களைக் குற்றம் சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீங்க..! ரோட்டில் சட்டையைக் கிழிச்சுட்டு கத்தாமல் இருப்பதிற்கு நீங்க தான் காரணம்..! எனது வடிகலாய் என்னை இன்னொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றீர்கள். ஆனால் இப்போ எனக்காக மீரா வந்திருக்கிறாள். அவளுடன் இருக்க விரும்புகிறேன்.” என்றவன் முறுவலித்துவிட்டு கதவை நோக்கி சென்றான்.

கதவிடம் சென்றவன்.. திரும்பி நின்று மகிழனை பார்த்து “இரு வருடங்களுக்கு முன் என்னை கன்வின்ஸ் செய்ததை.. நீங்க ட்ரீட்மென்ட் கொடுத்து சரிச் செய்துட்டேன் என்றுச் சொல்லிக் கொண்டது போல்.. இப்போவும் என்னை கன்வின்ஸ் செய்வீங்க என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீங்க எனக்கு வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்றீங்க! அஃப்கோர்ஸ் என்னோட டிப்ரேஷனுக்கு அவை வடிகலாய் அமைந்தது. அதற்கு ரொம்ப தேங்க்ஸ்!” என்றுவிட்டு கதவை திறந்துக் கொண்டு சென்றான்.

ஆதித்யா கூறியதைக் கேட்ட மகிழனின் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

இரு வருடங்களுக்கு முன் ஒரு இரவன்று மனநல மருத்துவரான மகிழன் தனது வீட்டில் இருக்கும் பொழுது.. அவரது தனிப்பட்ட எண்ணிற்கு அழைப்பு வந்தது. எடுத்து பேசியவர்.. அதிசயத்து போனார். ஏனெனில் இந்தியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்த ஆனந்த்சங்கரின் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரை அழைத்து செல்ல ஓட்டுனருடன் கார் வந்தது. பெரிய இடத்தில் இருந்து அழைப்பு வரவும்.. மகிழன் உடனே சென்றார்.

வீட்டின் பிரமாண்டத்தையும் மீறி.. அங்கிருந்தவர்களின் உணர்ச்சியற்ற முகமும் அமைதியும் தான் அவரது கருத்தில் பட்டது. விஜய் என்பவன் முன்னே வந்து.. “எங்க முதலாளியோட சின்ன மகன் ஆதித்யா.. திடுமென இரு நாட்களுக்கு முன் கத்தி ரகளையில் ஈடுப்பட்டார். கோபத்தில் கத்துகிறார் அதனால் கொஞ்ச நேரத்தில் அமைதியாகி விடுவார் என்று நாங்கள் விட்டுட்டோம். ஆனால் அவர் அமைதியாகவில்லை. அத்தோடு ஏதேதோ சம்பந்தமற்று பேசுகிறார். அவரோட குடும்பத்தினர் அனைவரையும் விரோதியைப் போல் பார்க்கிறார். திடுமென அழுகிறார். திடுமென வீட்டை விட்டு போகிறேன் என்று ரகளைச் செய்கிறார். ஒருவேளை நடிக்கிறாரோ என்றுக் கூடப் பரிசோதித்து விட்டோம். ஆனால் அவர் அவரையே வருத்திக் கொள்கிறார். எங்களிடம் கோபமாக கத்திவிட்டு அவர் தனக்கு தானே ஏன் என்று ஏதோ கேள்விகளைக் கேட்டுக் கொள்கிறார். சில சமயம் அவரது அண்ணன் மற்றும் அக்கா கணவரை அடிக்க கூட போகிறார். மோசமாக பேசுகிறார். எங்களால் சமாளிக்க முடியவில்லை. ஒருவேளை மனரீதியாக பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்றுத்தான் உங்களை வரவழைத்திருக்கிறோம். அதைச் சரிச் செய்ய வேண்டியது உங்க பொறுப்பு! அப்பறம் முக்கியமான விசயம்.. நீங்க ஆதித்யா ஸாருக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கறீங்க.. என்ற விசயம் வெளியே கசிய கூடாது.” என்றான்.

பெரிய வீட்டில் இருந்து அழைப்பு வந்ததும்.. இதை மகிழன் எதிர்பார்த்தார் தான்.. கெடுபிடியையும் எதிர்பார்த்தார். அதனால் அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைக் கொள்ளவில்லை. அவருக்கு அவரது தொழிலை சரியாக செய்ய வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருந்தது. இந்நாட்டில் அதிக எண்ணிக்கையில் பல மனநல மருத்துவர்கள் இருக்கையில் அவரை அழைத்ததையே பெரிய பெருமையாக நினைத்தார். எனவே சிகிச்சை அளிக்க ஒத்துக் கொண்டவர், அவர்களது கெடுபிடிக்கும் ஒத்துக் கொண்டார்.

எனவே விஜயிடம் “விசயம் எதுவும் இல்லாமல்.. இந்தளவிற்கு பாதிப்பு ஏற்படாது. அதனால் அவர் எதற்காக கோபப்படுகிறார், அழுகிறார். என்ன சொல்லி திட்டுகிறார்.. போன்ற விபரங்களை என்னிடம் ஓப்பனாக சொன்னால் தான் என்னால் அவரை குணப்படுத்த முடியும். கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும். அதைத் தயவுசெய்து என்னிடம் சொல்லுங்க..! அப்பொழுது தான் அதற்கு தகுந்தாற் போன்று அவருக்கு ட்ரீட்மென்ட் தர முடியும்.” என்றார்.

விஜயின் பார்வை ஒரு திசையைப் பார்க்கவும், மகிழனும் பார்த்தார். அங்கே இருந்த ஷோபாவில் ஆனந்த்சங்கர் கம்பீரமாக அமர்ந்துக் கொண்டு மகிழனை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்ததும் தானாக மகிழனின் கரம் மரியாதையுடன் குவிந்தது.

ஆனந்த்சங்கர் தனது கம்பீரம் குறையாமலேயே “உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டியிருக்கிறேன். திறமையான டாக்டர் என்றுப் பெயர் வாங்கியிருக்கீங்க..! அதனால் தான் உன்னை அழைத்திருக்கிறோம். உன் திறமைக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். சற்றுமுன் நீ கேட்ட விபரங்கள் தராமலேயே உன்னால் ஆதித்யாவை சரிச் செய்ய முடியுமா..?” என்றுக் கேட்டார்.

மகிழன் ஒரு நிமிடம் திகைத்தார்.

ஆனந்த்சங்கர் “ஓ! சேலன்ஜ்ல் தோற்றுவிடுவோமோ என்றுப் பயப்படுகிறீர்களா..! ஒகே விஜய்.. டாக்டர் கேட்ட டிட்டெயில்ஸ் கொடுத்திரு..” என்றுக் கூறி முடித்ததும்.. மகிழன் “ஒகே ஸார்..! நான் அவரைச் சரி செய்துக் காட்டுகிறேன்.” என்றார்.

ஆனந்த்சங்கர் “பெஸ்ட் ஆஃப் லக்..” என்றுவிட்டு எழுந்து உள்ளே சென்றுவிடவும் விஜய் ஒரு அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கிருந்த பெரிய வெண்ணிற படுக்கையில் முகத்தைப் புதைத்தபடி ஒருவன் படுத்திருந்தான். மகிழன் அவனை சந்தேகத்துடன் பார்க்கவும், மகிழனின் பார்வைக்கு பதிலாக விஜய் “அவர் ட்ரீங்ஸ் போதையில் இருக்கிறார்.” என்றான்.

மகிழன் “ஒ அந்த பழக்கம் இருக்கிறதா..! அப்போ அவர் பேசுவது, கத்துவது எதுவும்.. அவரது சுயசிந்தனையில் இருந்து வந்திருக்காதே..!” என்றார்.

அதற்கு விஜய் மறுப்பாக தலையசைத்தான். பின் “அவருக்கு அந்த பழக்கம் கிடையாது.” என்றான்.

மகிழன் சிறு திடுக்கிடலுடன் பார்க்கவும், விஜய் தோள்களைக் குலுக்கிவிட்டு “எங்களுக்கு வேறு வழித் தெரியவில்லை. அவர் ஏதேதோ பேசி மற்றவர்களுக்கு தொந்திரவு தருவது மட்டுமின்றி அவரையும் வருத்திக்கிறார். அதனால் அவரை அமைதியாக்க இதைத் தவிர எங்களுக்கு வேறு வழித் தெரியவில்லை.” என்று சர்வசாதாரணமாக சொன்னான்.

மகிழன் சற்று எரிச்சலுடன் “அவர் இப்படிக் கிடக்கும் பொழுது.. என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நாளை இவர் சுயவுணர்வுடன் இருக்கும் பொழுது.. வந்து பார்க்கிறேன்.” என்றுவிட்டுச் சென்றார்.

சொன்னது போல் அடுத்த நாள் வந்த மகிழனை அந்த வீட்டில் இருந்த ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு சில ஆட்கள் தள்ளித் தள்ளி நின்றுக் கொண்டிருக்க.. நடுவில் இருந்த நாற்காலியில் தலையைத் தாங்கியவாறு ஆதித்யா அமர்ந்திருந்தான்.

மகிழன் சிறு புன்னகையுடன் “குட்மார்னிங் ஆதித்யா ஸார்..” என்று அழைத்து முடிப்பதற்குள் நிமிர்ந்த ஆதித்யா, மகிழனை யார் நீ என்பது போல் கேள்வியாக பார்த்தான்.

மகிழன் முன்னே வந்து “ஐயம் மகிழன்..” என்று பெயரை மட்டும் சொன்னான்.

ஆதித்யா தனது பார்வை மாறாமலேயே “என் அப்பா எதற்கு உங்களை என்னிடம் அனுப்பியிருக்கிறார் என்றுத் தெரிந்துக் கொள்ளலாமா..?” என்றுக் கேட்டான்.

ஆதித்யாவின் கூர்மையான கேள்வியில் மகிழன் திகைத்துத்தான் போனார். நீங்க யார் என்றுக் கேட்பது ஒரு ரகம்! அப்பா அனுப்பியவரா என்று கணிப்பது ஒரு ரகம்! எதற்கு வந்திருக்கீங்க என்றுக் கேட்பது ஒரு ரகம்! ஆனால் இந்த மூன்றையும் ஒரே கேள்வியில் கேட்ட ஆதித்யாவின் அறிவுத்திறனைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

மகிழன் “நீங்க கொஞ்ச நாளாக ரொம்ப டிப்ரெஷனாக இருக்கீங்க.. என்று அவர் கவலைப்படுகிறார். அதனால் உங்களுக்கு சின்ன கவுன்சிலீங்கிற்காக வந்திருக்கிறேன். தட்ஸ் ஆல்..!” என்றார். அவருக்கு ஆதித்யா நன்றாக இருப்பது போல் இருந்தது.

ஆனால் அவர் கூறியதற்கு ஆதித்யாவிடம் இருந்து வந்த பிரதிபலிப்பு அவரைத் திடுக்கிடச் செய்தது.

சட்டென்று அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்தவன், ஒரு கையால் அந்த நாற்காலியைப் பற்றி எறிந்தான். பின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறு அவனுக்கே சொல்லிக் கொள்ளவது போல்.. யார் முகத்தையும் பாராது.. “ஓ..! அவங்க மேல் தப்பை வைத்துக் கொண்டு என் மேல் குற்றம் சுமற்றுவார்கள்..! அதை நான் சுட்டிக்காட்டி கேட்கிற கேள்விகளுக்கு பதில் அவர்களால் தர முடியாது! என்னை அடக்கிட்டே இருப்பாங்க..! என் லைஃப்பை அவங்க இஷ்டத்திற்கு மாற்றுவாங்க, நான் ஏன் என்றுக் கேட்டால் எனக்கு பைத்தியக்காரப்பட்டம் கட்டுவார்களா..! உண்மையை நான் சொல்கிறேன் என்று அதை மறைக்க.. நான் சொல்வதை உளறல் என்றுச் சொல்லி என்னை பைத்தியமாக்குகிறார்களா..!” என்றவன், மகிழனிடம் திரும்பி “நீங்க சைக்கலாஜீக்கல் டாக்டர் தானே! நான் கேட்கிறதிற்கு பதில் சொல்லுங்க..” என்று அவரது அருகில் சென்றான்.

“பைத்தியக்காரர்கள் உருவாகிறார்களா..? உருவாக்கப்படுகிறார்களா..?” என்றுக் கேட்டான்.

மகிழன் ஒரளவிற்கு ஆதித்யாவின் மனநிலையைப் புரிந்துக் கொண்டார். எனவே ஆதித்யாவிடம் “ஆதித்யா ஸார்.. ப்ளீஸ்! ரிலேக்ஸ்!” என்றவர், “உங்களுக்காக இன்னொரு விசயத்தையும் சொல்கிறேன். சைன்டிஷ்ட்டிற்கு முதலில் வைக்கும் பெயர் மென்டல் தான்..! ரொம்ப டிப்ரெஷனில் இருக்கிறவங்க மட்டுமில்லை. அதிபுத்திசாலிகளும் மென்டல் அஃப்ட்டர்டாக தான் இருப்பாங்க..! இதில் நீங்க எந்த ரகம் என்று எனக்கு தெரிந்துவிட்டது.” என்றுப் புன்னகைத்தார்.

அதற்கு ஆதித்யா “நீங்களும் என்ன ரகம் என்றுத் தெரிந்துவிட்டது. ஐஸ் வைப்பதில் வல்லவர்..! டாக்டருக்கு முதலில் நல்லா பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற கோர்ஸில் டிஸ்டின்க்க்ஷன் வாங்கியிருப்பீங்க போல..” என்றுச் சிரித்தான்.

அதற்கு மகிழன் “ஹா..! ஹா..! அப்படியில்லை. நீங்க நல்லதாக யோசிப்பதற்கு நான் உதவுகிறேன் என்கிறேன்.” என்றான்.

ஆதித்யா அவரை ஒரு மாதிரி பார்க்கவும்.. மகிழன் “ஸார்! எனக்கும் ஏன் நீங்க இவ்வளவு மனஅழுத்தத்தில் ரெஸ்ட்லஸ்ஸா இருக்கீங்க என்றுத் தெரியாது. அவர்களும் என்னிடம் சொல்லவில்லை. உங்களுக்கு பதில்கள் தேவைப்படுகிறது. ஆனால் அவர்களிடம் இருந்து அது கிடைக்கவில்லை எனும் பொழுது.. கேள்வி கேட்டு என்ன பயன்..! பதில் இல்லாத கேள்விகளைக் கேட்பதை விட்டு நாம் நல்லா இருக்கிற வேலையைப் பார்ப்போமே..” என்றார்.

அதற்கு கசந்த சிரிப்பைச் சிந்திய ஆதித்யா “யு னோ ஒன் தின்க்! மற்றவங்க மாதிரி இல்லாமல் நீங்க வேற மாதிரி பேசவும் தான்..! நான் ஒழுங்கா பேசிட்டு இருக்கிறேன்.” என்றுவிட்டு தொடர்ந்து “அவர்களுக்கு வேண்டுவது எனது அமைதி என்றால்.. எனக்கு வேண்டுவதையும் நான் கேட்கலாம் தானே..” என்றான்.

மகிழன் “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றுக் கேட்டார்.

“சுதந்திரம்..” என்றான்.

மகிழன் திகைத்தவராய் பார்த்துக் கொண்டிருக்கவும், ஆதித்யா தொடர்ந்து சம்பந்தமற்றுப் பேசினான்.

“அவங்க அப்படியிருந்தால் நானும் அப்படியிருக்கணுமா..! அவர்களில் ஒருவனாக நான் விரும்பவில்லை, எனக்கு வேண்டாமும் வேண்டாம். ஆனால் விதியும், அவங்களும் என்னை விட மாட்டேன்கிறாங்க..! காவ்யாவை நான் காதலிக்கவேயில்லை. ஆனால் அவளை நான் காதலிக்கிறேன் என்று அவளைக் கூப்பிட்டு மிரட்டியிருக்கிறாங்க..! அதனால் எனக்கு கோபம் வந்தது. அவர்கள் கூடாது என்றுச் சொன்னதைச் செய்ய வேண்டும் என்றுத் தோன்றியது. அதனால் காவ்யாவிடம் நாம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்றுக் கேட்டேன்.” என்றுக் கூறிக் கொண்டே வந்தவன், திடுமென சிரித்தான்.

பின் எதிரே தெரிந்த தோட்டத்தைப் பார்த்தவாறு “அதற்கு என்னை லவ் செய்கிறேன் என்று என் பின்னாலேயே சுற்றியவள் என்ன சொன்னாள் என்றுத் தெரியுமா..! லவ் செய்யலை என்று ஓடிட்டாள். என் வாழ்விலும் ஒரு ஏமாற்றம்..!” என்றுச் சத்தமாக சிரித்தவன், பின் “பெருசா அப்பா கிட்ட காவ்யா நம்பி சவால் விட்டால்.. அவள் பின் வாங்கிட்டா..” என்று மீண்டும் சிரித்தான்.

“இன்னொரு காமெடியும் நடந்தது கேளுங்க..! இப்படியே விட்டால் நான்.. வீம்பிற்கு இன்னொருத்தியைக் கூட்டிட்டு வந்து விடுவேனாம். அதனால் என் படிப்பை நிறுத்த சொல்கிறாங்க..! ஆபிஸிற்கு வந்து வேலையைக் கற்றுக் கொள்ள சொல்கிறாங்க..! என் அப்பா கீ கொடுக்க மற்றவங்க ஆடுகிற மாதிரி.. என்னையும் ஆடச் சொல்கிறாங்க..!” என்றுச் சிரித்தவன் முடிவில் “என்னால் முடியாது..” என்றுக் கத்தினான்.

மகிழனுக்கு ஒரளவிற்கு விசயம் புரிந்தது. ஆனால் இது பெரிய இடத்து விசயம்.. இதில் தலையீடாமல் கொடுத்த வேலையைச் செய்ய வேண்டும். அதே போல்.. மனஅழுத்தத்தின் முற்றிய நிலைக்கு இன்னும் ஆதித்யா செல்லவில்லை. கோபம் மற்றும் இயலாமையினால் இயல்பில் இருந்து தவறித் தடுமாறுகிறார். அது ஆவேசம், கோபம், மாறும் மனநிலையாக வெளிப்படுகிறது.. என்றும் புரிந்தது. எனவே ஆதித்யாவிடம் மெதுவாக பேசலானார்.

“ஓகே ஆதித்யா ரிலேக்ஸ்..!” என்றவர்.. தொடர்ந்து “உங்க மனநிலை எனக்கு இப்போ தெளிவாக புரிகிறது. ஆனால் நான் முன்பே சொன்னது தான்..! பதில் இல்லாத இடத்தில் கேள்விகளுக்கும் இடமில்லை. அப்படியிருக்கும் பொழுது நீங்களே ஏன் உங்களைப் பலவீனப்படுத்திக்கறீங்க..! இப்போ நான் வந்ததும் என்னைப் பார்த்ததும் ஒரு கேள்விக் கேட்டிங்க பாருங்க..! அதைக் கேட்டு நான் பிரமிச்சுட்டேன் என்றுச் சொன்னால் நம்புவீங்களா..!” என்று மகிழன் சொல்லவும், ஆதித்யா கசந்த சிரிப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

மகிழன் விடாது “எஸ் ஆதித்யா ஸார்! நான் பொய்யாக புகழவில்லை. அதிபுத்திசாலியையும், வித்தியாசமாக யோசிப்பவர்களையும்.. இந்த உலகம் முட்டாள் என்றுத்தான் சொல்வாங்க..! புதிதாக எதாவது சொன்னால் லூசு மாதிரி பேசாதே.. போய் வேலையைப் பாரு..! என்று பெற்றோர்களும் முதலாளிகளும் திட்டுவதைப் பார்த்திருக்கீர்களா..! அது இப்படித்தான்..! நீங்கள் அந்த மாதிரிதான்! சோ ப்ளீஸ்.. கத்தி ரகளைச் செய்து உங்களோட மதிப்பை கெடுத்துக்காதீங்க..! நான் சொல்வது புரிகிறது தானே..! இந்த கோபம், பிடிவாதம், நம்மை ஏமாற்றுகிறார்கள், நம்மை அடக்குகிறார்கள் என்றெல்லாம் நினைக்காதீங்க..! மைன்ட்டை ப்ரீயாக வைத்துக்கோங்க..! நீங்க என்னை அடக்கவில்லை, நான் அடங்கி போகிறேன். இல்லை என்றால் என்னை அடக்க முடியாது என்ற மைன்ட் செட்டிற்கு வாங்க..! கோபத்தை எல்லாம் விடுங்க..! நெகட்டிவ் தாட்ஸ்க்கு விடை கொடுங்க..! உங்களுக்கு என்று வரும் வாழ்வு எவ்வளவு மோசமானதாக இருந்தாலும்.. அதை என்சாய் செய்ய கற்றுக்கோங்க..!” என்றார்.

அதற்கு ஆதித்யா “இப்போ மட்டும் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் டாக்டர்.. நான் பர்மிஷன் கொடுக்கவில்லை என்றால் நீங்கள் என்னிடம் பேசியிருக்க முடியாது.” என்றான்.

மகிழன் அவன் கூறிய உண்மையில் பேச்சிழந்து போனான். பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டு “எஸ் இந்த மாதிரி தான்.. மற்றவர்களையும் அனுசரித்து போக சொல்கிறேன். இது மற்றவர்களுக்காக இல்லை. உங்களுக்காக..” என்று நயமாக பேசினார்.

ஆதித்யா சரி என்றுச் சொல்லவில்லை என்றாலும்.. அமைதியாக இருந்தான். இவ்வாறு தினமும் வந்த மகிழன் ஆதித்யாவிடம் இயல்பாக பேசினார். ஆதித்யாவிற்கு அதுதான் தேவையாக இருந்தது. ஆதித்யாவின் மனதில் இருந்த அழுத்தங்கள் அகலவும், மகிழன் சொன்னது போல்.. அவர்கள் என்ன அடக்குவது அவனே அடங்கிப் போய் விடலாம் என்றுத் தோன்றியது. கசந்து வந்த புன்னகையுடன் அவனது இயல்பிற்கு ஒற்றாத வாழ்க்கை வாழ ஆரம்பித்தான். ஆட்டிவிக்கும் பொம்மை போல்.. தந்தையுடன் அலுவலகம் சென்றான், கேளிக்கை விருந்துகளுக்கு சென்றான். பெரிய மனித தோரணையுடன் வெளியிடங்களில் சுற்றினான். இரண்டு சென்டிமீட்டர் அளவிற்கு போலி சிரிப்பு சிந்தினான். இரவில் மது அருந்திவிட்டு சுயநிலை இழந்து உறங்கினான்.

ஆதித்யா ஆனந்த்சங்கர் பொருத்தவரை இயல்பானதும்.. ஆனந்த்சங்கர் இட்ட சவாலில் தான் வெற்றிப் பெற்று விட்ட பெருமையுடன் மகிழன் அவர் முன் நின்றான். அவரிடம் எவ்வாறு சொல்லி பெருமைப்பட்டு கொள்வது என்ற சங்கோஜத்துடன் மகிழன் நின்றுக் கொண்டிருக்கையில்.. ஆனந்த்சங்கர் “குட் ஜாப்! உன் சம்பளம் உன் அக்கவுண்ட்டில் வந்துவிடும்.” என்று கம்பீரம் குறையாமலேயே சொன்னார்.

“தேங்க்ஸ் ஸார்!” என்றுச் சொன்ன மகிழன் அங்கிருந்து செல்லாமல் நிற்கவும்.. ஆனந்த்சங்கர் தனது கம்பீரம் குறையாமல் “நீ யாருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறே என்றுத் தெரியுமா..! த க்ரேட் ஆனந்த்சங்கரின் மகன் ஆதித்யாசங்கர்! எமன் கூட எங்க கிட்ட கேட்டுட்டு தான் வருவார். அதனால் அவனது பர்மிஷன் இல்லாமல் அவனது ஒத்தழைப்பு இல்லாமல்.. உன்னால் அவனைச் சரிச் செய்திருக்க முடியாது. அதனால் அவனோட பங்களிப்பு தான் அதிகம். சோ உன் முழு திறமையால் ஆதித்யாவை குணப்படுத்தியிருக்க முடியாது.” என்றுச் சிரித்தார். தன் வாழ்நாளில் தோல்வியை ஒத்துக் கொள்ளாத ஆனந்த்சங்கர்!

மகிழனுக்கு முகத்தில் அறை வாங்கியது போல் இருந்தது. அவர் கூறியது ஒரளவிற்கு உண்மைத்தான் என்றாலும்.. ஆதித்யாவை ஒத்துழைக்க வைத்ததே வெற்றியாக கருதினார். ஆனால் ஆனந்த்சங்கர் அதை ஒத்துக்கொள்ளாதது மட்டுமில்லாது, சற்று கேலியாக பேசியது போல் இருந்தது. ஆனால் பெரிய மனிதரான அவரிடம் மறுவார்த்தை பேசாது நின்றான். அவரே தொடர்ந்து “பட் உன் ஜாப்பை குற்றம் சொல்ல முடியாது. வெல்டன்! இனி மாதத்திற்கு ஒரு முறை வந்து ஆதித்யாவை செக் செய்ய வேண்டும். ஒகே!” என்று கட்டளையிட்டார்.

மகிழனும் சரி என்று தலையை ஆட்டினார்.

அவருக்கும் ஆதித்யாவுடன் சிகிச்சை என்ற பெயரில் நேரம் கழித்தது நன்றாக தான் இருந்தது. ஆதித்யா மகிழனுடன் இயல்பாக பேசினாலும் அளவோடு தான் பேசினான். அன்றைக்கு பின் தவறிக் கூட அவனது அந்தரங்கம் மற்றும் குடும்பத்தைப் பற்றிப் பேச மாட்டான். இறுக்கத்துடன் இருந்து அவற்றை இறுக்கி பிடித்து வைத்திருக்கிறான் என்று அவருக்கு தெரிந்தது. எனவே அவர் தான் படித்த வித விதமாக மனநல மருத்துவங்களைப் பற்றி அவனுடன் விவாதிப்பார். ஆதித்யாவும் ஆர்வத்துடன் கேட்பான். எனவே ஆதித்யாவுடன் நேரம் கழிப்பதில் அவருக்கு விருப்பமே! மேலும் அதற்கு கூடுதலாக சம்பளம் வரும் எனும் பொழுது அதை மறுக்க அவர் முட்டாளில்லை எனவே ஒத்துக் கொண்டார்.

எனவே மாதத்திற்கு ஒருமுறை வந்து ஆதித்யாவை பார்த்துவிட்டு சிறிது நேரம் பேசியிருந்து விட்டுச் செல்வார். அது சிகிச்சை என்ற பெயரால் மற்றவர்களால் பார்க்கப்பட்டது. இவ்வாறு இரு வருடங்கள் கடந்தது. ஆதித்யா அவரின் வருகையை புன்னகையுடன் வரவேற்று பேசினாலும்.. மாறாமல் சிறு இறுக்கத்துடனேயே பேசினான். இவ்வாறு இருக்கையில் ஒருநாள் மகிழனுக்கு ஆதித்யாவின் வீட்டில் இருந்து அவசர அழைப்பு வந்தது. இவரும் விரைவாக சென்றார். அங்கு சென்ற பொழுது மீண்டும் ஆதித்யா அன்று போல் நடந்துக் கொள்வதாக சொன்னார்கள். மகிழனும் ஆதித்யாவின் பகுதி சென்றார். கீழ்தளத்தில் ஆதித்யாவை காணதிருக்கவும்.. மேல்தளத்திற்கு சென்றுப் பார்த்தார்.

அங்கு ஆதித்யா ஒரு பெண்ணின் உருவத்தை வரைந்துக் கொண்டிருந்தான். மகிழனை பார்த்தும் புன்னகையுடன் வரவேற்றான். மகிழனின் குழப்பமான பார்வையைப் பார்த்த ஆதித்யா சத்தமாக சிரித்தான்.

பின் வரைந்தவாறு “என்ன டாக்டர்! எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று உங்களை அவசரமாக வரவழைத்தார்களா..?” என்றுச் சிரித்தவன், “அவர்களைப் பொருத்தவரை அவங்க சொல்கிற பேச்சை கேட்காமல் கத்தினால்.. அதற்கு பெயர் பைத்தியம்!” என்றுச் சிரித்தான்.

மகிழனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பின் “ஆதித்யா! அவர்கள் சொல்கிறேபடி தான் கேளுங்களேன்.” என்றான்.

அதற்கு ஆதித்யா “இந்த விசயத்தில் என்னால் அவர்கள் சொல்படி கேட்க முடியாது. என் வாழ்வில் மீண்டும் ஒரு ஏமாற்றம் தான், துரோகம் தான்..! ஆனால் இம்முறை ரொம்ப வலிக்கிறது டாக்டர்..” என்றவனின் கையில் இருந்த பிரஷ் நழுவி விழுந்தது. திடுமென “ஐ ஹெட் ஹெர்..! அப்படியில்லை என்றுச் சொல்லியே என்னை ஏமாற்றி விட்டாள். கடைசியில் நான் சொல்லியது தான் உண்மையாகி விட்டது. நான் சொன்னது பொய்யாவே இருந்திருக்கலாம்.” என்று வரைந்திருந்த பெண்ணிடம் படத்தைப் பார்த்து கத்தினான்.

பின் ஆத்திரம் அடங்காமல்.. அருகில் இருந்த மலர்ஜாடியை எடுத்து வரைந்த பெண்ணின் படத்தின் மேல் ஏறிய போனவனின் கை ஏறியாமல் அந்தரத்தில் நின்றது. பின் ஆத்திரத்துடன் முன்பை விட.. ஆவேசத்துடன் கத்தியவாறு அந்த மலர்ஜாடியை தரையில் போட்டு உடைத்தான். அதற்குள் ஆதித்யாவின் கத்தல் சத்தம் கேட்டு மேலே வந்த பணியாட்கள் அவனை பிடித்து அடக்கி படுக்க வைத்தனர். மகிழன் வேண்டாம் என்றுச் சொல்வதைக் கவனியாமல்.. ஆதித்யாவின் முன் மதுபாட்டிலை வைக்கவும்.. அதை ஒரே மூச்சில் குடித்தவன், சுயநிலை இழந்து படுத்துவிட்டான்.

மகிழன் எரிச்சலுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறினான். ஆதித்யாவின் மேல்.. அந்த வீட்டின் மேல், அந்த வீட்டு பெரியவரின் மேல் என்று ஏனோ அனைவரின் மேலும் ஆத்திரம் பொங்கியது. அப்பொழுது தான் அந்த அழைப்பு வந்தது. எடுத்த எடுப்பில் ஆதித்யாவை பற்றிக் கேட்கவும், ஆதித்யாவின் நிலையைப் பற்றி ஊடகத்துறையினர் மறைமுகமாக விசாரிக்கிறார்கள் என்று நினைத்து அழைப்பைத் துண்டிக்க போனார். ஆனால் அந்த பக்கம் இருந்து சொன்ன விசயத்தில் அவர் சொல்வதைக் கேட்கலானார். அவர்களின் எதிரி ஆனந்த்சங்கர் என்ற புள்ளியில் இருவரும் இணைந்தனர். மகிழனின் அடிமனதில் ஆனந்த்சங்கரின் மேல் இருந்த வெறுப்பும் கோபமும் மூட்டி விடப்படவும்.. அந்த பக்கம் சொன்ன விசயத்திற்கு ஒத்துக் கொண்டார்.

“ஆதித்யாவை நீங்க குணப்படுத்த கூடாது. அப்படியே இருக்கட்டும்.” என்கவும், மகிழன் “ஆதித்யாவிற்கு பைத்தியமே இல்லை. இப்போ மட்டுமில்லை.. அன்றைக்கும் தான்..! விட்டால் அவன் மற்றவர்களை பைத்தியமாக்குவான். ஆனால் அடங்கி இருக்கிறான். அவனோட மனநிம்மதிக்காக..!” என்றுச் சிரித்தார்.

அந்த பக்கம் இருந்து உடனே பதில் வந்தது.

“அப்போ பைத்தியம் ஆக்கிருங்க..”

“.....”

“எஸ்! மகிழன் ஸார்! அதுதான் சரியான பதிலடி..” என்கவும், மகிழன் “டன்..” என்றார். அந்த பக்கம் இருந்தவன்.. ஆதித்யாவை பற்றிய மேலும் சில விபரங்களைச் சொன்னான். தற்பொழுது ஆதித்யா வரைந்துக் கொண்டிருந்த பெண் யார் என்று மகிழனுக்கு புரிந்தது. பின் அந்த பக்கம் இருந்தவன் அழைப்பைத் துண்டித்தான்.

அதன்படி அடுத்த நாள் ஆதித்யாவின் வீட்டிற்கு சென்றவர்.. ஹிப்னாடிஷம் செய்யலாம் என்று ஆதித்யாவிடம் சொல்லவும், அவன் சந்தேகமாக பார்த்த பார்வையில், தொண்டையில் அடைத்து நின்ற எச்சிலை விழுங்கினார்.

பின் தன்னைச் சமாளித்துக் கொண்டு.. “ஆதித்யா நீங்க தானே உங்களைச் சுற்றி ஏமாற்றங்களும், துரோகங்களும் இருக்கு என்றுச் சொல்வீங்க..! ஆனால் உங்க வாழ்வில் அதை மட்டும் சந்திச்சுருக்க மாட்டிங்க.. நல்ல தருணங்களையும் சந்திச்சுருப்பீங்க.. அதையெல்லாம் நினைத்துப் பார்க்கலாம்.” என்று அழைத்தார்.

கண நேரம் யோசித்த ஆதித்யா “ஓகே..” என்று எழுந்து வந்தான்.

நாற்காலியில் அமரும் முன்.. “டாக்டர்! நீங்க ஹிப்னாடிஷத்தை ஏதோ கள்ளக்கடத்தல் செய்ய போகிற மாதிரி எதற்கு சொன்னீங்க?” என்றுச் சிரித்தான். மகிழனுக்கு பக்கென்று இருந்தது.

கண்களை மூடி அமர்ந்திருந்த ஆதித்யா அவரது முகத்தைப் பார்க்காமலேயே “மீண்டும் அதே ஷாக்..” என்றுச் சிரித்தான். மகிழன் கைக்குட்டையில் தனது முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

பின் மகிழன் “ஓகே ஆதித்யா! இப்போ எதையும் நினைக்காதீங்க..! உங்க மனதை ஒரு நிலைப்படுத்துங்க..! இந்த விரலை பாருங்க..” என்றார். அவனும் அதைச் செய்தான்.

மகிழன் ஆழ்ந்த குரலில் “தற்பொழுது நான் சொல்வதை உங்க நினைவில் கொண்டு வாங்க..! பெரிய பச்சை பசலென்ற புல்வெளியை நினைவில் கொண்டு வாங்க..! வானம் நீல நிறமாக மேகங்களே இல்லாமல் இருக்கிறதா..! தொலைவில் ஒற்றை மரம் மட்டும் தெரிகிறது. காற்றுக்கு அது ஆடுவது கூட.. சங்கீதத்திற்கு தலையசைப்பது போல் இருக்கிறது தானே..! உங்களுக்கு நாய் என்றால் பிடிக்குமா..! அப்போ குட்டியாய் அந்த ஓடி வருவது தெரிகிறதா..! அது உங்களை நோக்கி வருகிறதா..! அதைப் பிடிங்க..! அட அந்த நாய் உங்களை விடப் பெரியதாக இருக்கிறது. அப்போ உங்களின் வயது என்ன! ஒரு மூன்று வயதிருக்குமா..! நீங்க நாயுடன் விளையாடுவதை யாரோ பார்த்து இரசிக்கறாங்க..! யார் அது உங்க அம்மாவா..! இப்போ உங்க அப்பா உங்களின் விரலைப் பிடித்துக் கொண்டு அந்த புல்வெளிக்குள் நடந்துச் செல்கிறாரா..!” என்றார்.

முதலில் மகிழனின் விரலைப் பார்த்தவாறு அவர் சொல்லியதை நினைவில் கொண்டு வந்துக் கொண்டிருந்த ஆதித்யா.. அவர் சொல்ல கண்களை மூடியபடியே நினைத்துக் கொண்டிருந்தான். முடிவில் மகிழன் சொல்லியதைக் கேட்டு.. இமை மூடியிருக்க அதில் இருந்து கண்ணீர் வழிந்தது.

மகிழன் சற்று குனிந்து “உங்களது நினைவுகள் தொடர்கிறதா..?” என்றுக் கேட்டான். ஆதித்யா ஆம் என்பது போல் தலையை மட்டும் சிறிது ஆட்டினான்.

மகிழன் “குட்! அதனுடனே போங்க..!” என்றான்.

அதற்கும் ஆதித்யா தலையை ஆட்டினான். உங்க நினைவில் வருவதோடு மீண்டும் வாழுங்கள்..! மகிழ்ச்சியாக சிரிச்சுட்டே இருக்கீங்களா..?” என்றுக் கேட்டான். ஆதித்யாவின் முகத்தில் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது.

பின் சிறிது நேரம் அமைதியாக இருந்த மகிழன் “எதற்கோ அழறீங்களா..?” என்றுக் கேட்டார். பின் மகிழன் “எதற்கு அழறீங்க?” என்றுக் கேட்ட போது அவனிடம் இருந்து பதிலில்லை. தற்போது ஆதித்யாவின் முகத்தில் பயமும், குழப்பமும் குடிக் கொண்டது. பின் வலியை உணர்ந்ததிற்கு அறிகுறியாக முகத்தைச் சுளித்தான். பின் அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. பின் அவனது முகம் நிர்மலமானது. பின் தற்பொழுது நன்றாகவே சிரித்தான். உடனே மகிழன் குரலை உயர்த்தி “ஆதித்யா” என்று அழைத்து அவனை சுயநிலைக்கு வரவழைத்தான்.

திடுமென அழைத்ததில் இமைகளைத் திறந்த ஆதித்யா அவ்வளவு நேரம் நினைவு உலகத்தில் இருந்தவன்.. காணாமல் போன சிறுவனைப் போல் திருதிருவென விழித்தான். மகிழனின் முகத்தில் திருப்தியாய் சிறு புன்னகை மலர்ந்தது. ஆதித்யா அந்நிலையில் இருக்கும் பொழுதே “நாளை சந்திக்கலாம்..” என்றுவிட்டு மகிழன் சென்றுவிட்டார். ஆதித்யா இன்னும் அந்த உலகத்தில் இருந்து வர வெளி வரமுடியாமல் தன் முன் இருப்பது நிஜமா..! அல்லது தனது நினைவில் தோன்றும் பிம்பங்கள் நிஜமா என்றுப் புரியாது விழித்தான். குழப்பத்தில் அவனுக்கு தலைவலி வருவது போல் இருக்கவும்.. தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.

அடுத்த நாளும் வந்த மகிழன் ஆதித்யா ஹிப்னாடிஷ முறை சிகிச்சைக்கு அழைக்கவும், ஒரு நிமிடம் தயங்கிய ஆதித்யா பின் ஒத்துக் கொண்டான். அப்பொழுதும் அதே போல் ஆதித்யா கடந்து வந்த வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றவர், மெதுவாக அவனை அதில் இருந்து வெளியே கொண்டு வராது.. திடுமென கலைந்து அவனை குழப்பமுற செய்தார். கடந்து வந்து வாழ்க்கைக்காக ஏக்கம் கொள்ள செய்தான். அடுத்த நாளும் அதுவே நடக்க.. ஆதித்யா அதை விரும்ப ஆரம்பித்தான். அதைக் கண்டுக் கொண்ட மகிழன் அடுத்த நாள் வரவில்லை. திரைச்சீலைகளை இழுத்து மூடச் சொன்னார். மேல்தளத்திற்கு ஆதித்யாவை விட வேண்டாம் என்று அங்கு வேலைப் பார்க்கும் சோமுவிற்கு உத்தரவிட்டார்.

அடுத்த நாள் மகிழனுக்காக காத்திருந்த ஆதித்யா தவித்துப் போனான். அடுத்த நாளும் மகிழன் வராதிருக்கவும், அன்றைய நாளை அவனால் கடத்த முடியவில்லை. கத்தலும், அழுகையுமாக இருந்தான். விஜய் மகிழனை அழைத்துக் கேட்கவும்.. அவருக்கு இதுவும் ஒரு சிகிச்சை என்றுக் கூறிச் சமாளித்தார். பின் அடுத்த நாளும் வராமல் இருந்தவர்.. அதற்கு அடுத்த நாளே வந்தார்.

ஆதித்யாவின் பகுதிக்குள் வந்தவர்.. ஆதித்யாவின் பேசும் சத்தம் அந்த பக்கம் திரும்பியவர் திகைத்துத்தான் போனார்.

அங்கிருந்த பெரிய அகன்ற சுவற்றில் பல உருவங்களை வரைந்து வைத்திருந்ததோடு மட்டுமில்லாது அவற்றுடன் பேசிக் கொண்டிருந்தான்.

அதைக் கண்டு மகிழனின் திருப்திக்கரமாய் புன்னகை மலர்ந்தது.

மேலும் ஆதித்யாவிடம் ஹிப்னாடிஷம் செய்யும் பொழுது.. அவனது வாழ்வில் சந்தித்த ஏமாற்றங்கள், துரோகங்கள், குழப்பங்கள் ஆகியவற்றைப் பற்றிக் கேட்டு அந்த வடுகளையும் அவனது மனதில் ஆழ பதிய வைத்தார்.

மகிழனால் ஆதித்யாவின் வலிகள் சந்தோஷங்கள் மாறி மாறி நினைவில் ஓடினாலும்.. அதற்கு ஏற்றவாறு அவனது முகத்தில் பாவனைகள் மாறுமே தவிர.. என்றும் அதை அவன் வாய் திறந்து சொன்னானில்லை.

அவர்கள் திட்டமிட்டது நடந்தது. ஆதித்யா நிஜவுலகை விட்டு நிழலகில் அடைக்கலம் அடைந்தான். ஆனந்த்சங்கர் தலையைப் பிய்த்துக் கொண்டார்.

இவ்வாறு ஆதித்யாவை பதினைந்து நாட்களிலே மனநிலைப் பாதிப்படைய செய்துவிட்டார். ஆம் இதுவும் உண்மைத்தான்..! அவனது அனுமதியுடன் தான் அதைச் செய்தார்.

தலையை உலுக்கி நினைவில் இருந்து வெளியே வந்த மகிழனுக்கு ஆதித்யா குணமாகிக் கொண்டு வருவது தெரிந்தது. மீராவினால் தனது பேச்சில் ஆதித்யா அடங்குவது தடைப்பெற்றது புரிந்தது. எவ்வாறு ஆதித்யாவை மீண்டும் நிஜத்தில் இருந்து பிரித்து நிழலுக்குள் அடைப்பது என்று யோசித்தார்.

கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்த ஆதித்யா அப்படியே நின்றுவிட்டான். ஏனெனில் தான் உள்ளே செல்லும் பொழுது.. எவ்வாறு மீரா அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தாளோ.. தற்பொழுதும் பார்வையை மாற்றாது அங்கே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆதித்யாவை கண்டதும்.. அவளது கண்கள் மகிழ்ச்சியில் மலர்ந்தது.

ஷோபாவில் அமர்ந்திருந்த.. மீரா அவனைக் கண்டதும் துள்ளி எழுந்து ஓடி வந்தாள். தன்னை நோக்கி ஓடி வந்தவளை கண்களில் மென்னகையுடன் அவன் பார்த்திருந்தான்.

அவனுக்கு அருகில் வந்த மீரா “ஆதி! ட்ரீட்மென்ட் அதுக்குல்ல முடிஞ்சுருச்சா..” என்றுக் கேட்டாள்.

அதற்கு ஆதித்யா “நான் வேண்டாம் என்றுச் சொல்லிட்டேன்..” என்றான்.

மீராவின் கண்கள் மகிழ்ச்சியில் பெரிதாக மலர்ந்தது.

“ஏன்?”

ஆதித்யா சிரித்தவாறு “ஏனென்றால்..! உனக்கு பிடிக்கலை..” என்றவனின் பார்வை.. மீராவிற்காக வைத்திருந்த உணவு உண்ணப்படாமல் அப்படியே இருப்பதிடம் சென்றது.

“முதலில் சாப்பிடு வா..” என்று அழைத்துச் சென்றான். ஆனால் மீராவோ மனம் நிறைந்தாற் போன்ற உணர்வில் பசி மரத்தவளாய் அவனைப் பார்த்தவாறு அவனுடன் வந்தாள்.

அதற்குள் வெளியே மகிழன் “ஓகே ஆதித்யா ஸார்! நான் கிளம்புகிறேன். உங்களை இப்படிப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நன்றி மிஸஸ் மீரா! இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!” என்றார்.

ஆதித்யா “ரொம்ப வருத்தத்துடன் வாழ்த்தறீங்களே..” என்றுச் சிரிக்கவும், அதற்கு மேல் அங்கு நின்று மனதை ஸ்கேன் செய்தது போல் சொல்லும் ஆதித்யாவிடம் மாட்டிக் கொள்ள பயந்து அங்கிருந்து வெளியேறினார். ஆனால் அவர் வீட்டிற்கு செல்லும் வரை அவரது மூளையில் ஆதித்யாவிற்கு தற்பொழுது பலம் சேர்க்கும் மீராவை எவ்வாறு அகற்றுவது என்பது தான் ஓடிக் கொண்டிருந்தது.

மகிழன் சென்றதும்.. சாப்பிட அமர்ந்த மீரா ஆதித்யாவை அமர வைத்து உணவருந்த சொன்னாள்.

ஆதித்யா “என் பிரெக்பார்ஸ்ட் முடிஞ்சுருச்சு மீரா..” என்றான்.

மீரா “என்னது அந்த ஒரு கப் கூழா! உடம்பிற்கு சத்து தான் என்றாலும்..! அதை மட்டுமே சாப்பிட்டு இருந்தால்.. நாக்கு மட்டுமில்லை மனமும் மரத்து போகும். என் பாட்டி சொல்வாங்க..! சாப்பாடு என்பது நாக்கு, உடலுடன் முடிந்து போவதில்லை. மனதுடனும் அதற்கு சம்பந்தமிருக்கு..! பிடித்ததை சாப்பிடும் பொழுது சந்தோஷமா இருக்கும் தெரியுமா..!” என்றாள்.

அவள் பேசியதைச் சிரித்தவாறு கேட்ட ஆதித்யா “நான் அந்த அனுபவத்தை அனுபவித்தது இல்லை..” என்றுச் சிரித்தவன், அவளுக்கு வைத்திருந்த இட்லியை சிறிது பிய்த்து வாயில் வைத்து.. “சீ நத்திங் ஹெப்பனிங்..” என்றான்.

அதைப் பார்த்து சிரித்த மீரா அவளே பிய்த்து அவனது வாயிற்கருகே கொண்டு போகவும், அவளையும் கையில் இருந்ததையும் மாறி மாறி பார்த்தவன்.. அவளைப் பார்த்தவாறு.. அவள் கொடுத்ததை வாயில் வாங்கிக் கொண்டான். அவளது முகத்தில் இருந்த புன்னகை மேலும் விரிந்தது. ஆதித்யாவின் கரம் தானே உயர்ந்து அவனது மார்பை தடவியது. பின் வாய்மொழியாக சொன்னான்.

“நவ் ஐ ஃபீல் இட்..”

பின் இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

ஆதித்யாவின் மாற்றங்களை எண்ணியவாறு மகிழ்வுடன் சாப்பிட்டு முடித்ததை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மீராவின் பார்வை தோட்டத்தில் நின்றிருந்த.. ஆதித்யாவிடம் சென்றது. ஆதித்யாவின் மனநிலை நல்லதை நோக்கி எட்டு வைப்பது நன்றாக தெரிந்தாலும்.. அவளுடன் சாப்பிடும் பொழுது திடுமென குழப்பப்பார்வையுடன் சுற்றியும் பார்ப்பான்.. பின் அவளைப் பார்த்ததும் புன்னகைத்து விட்டு சாப்பிடுவான். அதைக் கவனியாது போல பார்த்த மீராவிற்கு அவன் இன்னும் முற்றிலும் வெளி வராதது புரிந்தது. அதுவும் சீக்கிரம் சரியாகி விடும் என்று நிம்மதி கொண்டவள், இங்கு வந்ததில் இருந்து பெற்றோர்களிடம் பேசவில்லை. எனவே பேச வேண்டும் என்று நினைத்தவள்.. செல்பேசியை எடுக்க திரும்பிய பொழுது.. ஆதித்யா சுவர் முழுக்க வரைந்த ஓவியத்திடம் பார்வை சென்றது. மெதுவாக அதனருகே சென்றாள்.

அவனது மனக்குமறல்களைக் கொட்டிய வெறித்த ஓவியத்தை பார்த்தவள், பெருமூச்சுடன் திரும்பிய பொழுது அவளுக்கு பின்னால் நின்றுக் கொண்டு ஆதித்யாவும்.. அவற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

தற்பொழுது தான் சற்று நன்றாக உணர்ந்திருக்கிறான். இவற்றைப் பார்த்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடுவானோ என்றுப் பயந்து “வா.. ஆதி..” என்று அவனது தோளைப் பற்றி திருப்ப முயன்றாள். ஆனால் அவன் “இவர்கள் யார் என்றுத் தெரியுமா.. மீரா?” என்றுக் கேட்டான்.

மீரா அமைதியாக அவனைப் பார்க்கவும்.. ஒவியத்திடம் இருந்து பார்வை எடுக்காது ஆதித்யா “இவர்கள் என் வாழ்வின் அங்கங்கள்..! எனது துயரங்கள், மகிழ்ச்சிகள், துரோகங்கள், ஏமாற்றங்கள்.. என்று அனைத்தும் இவற்றில் அடங்கும்.” என்றான்.

மீரா “உங்க மனதிற்குள் அடக்கியவை என்றுச் சொல்லுங்க..!” என்றாள்.

தற்பொழுது ஆதித்யா மீராவை திரும்பிப் பார்த்தான்.

மீரா “உங்க மனதிற்குள் அடக்கியதை ட்ராயிங்காக கொட்டியிருக்கீங்க..! அதை வாய் வார்த்தையா என்கிட்ட சொல்லி விடுங்களேன்.” என்றாள்.

ஆதித்யா அவளது முகத்தில் இருந்து பார்வை எடுக்காது “நீ தாங்க மாட்டாய் மீரா..” என்றான்.

அதற்கு மறுப்பாக தலையசைத்த மீரா “இத்தனை விசயங்களை மனதிற்குள் அடக்கிக் கொண்டு.. என்னிடம் காதலைச் சொல்லாத உங்களையே மனதிற்குள் அடக்கிக் கொண்டவள் நான்.. ஆதி..” என்றாள்.

அதைக் கேட்டவனின் கண்கள் கலங்கி விழிநீர் வழிந்தது.


புதிராவனின் கண்ணீர் சொல்லும் கதை என்னவோ..!

 
Status
Not open for further replies.
Top