sandyvenkat
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயத்தை திருடி சென்றவளே...!
அத்தியாயம்.. 3...
சட்ரென்று முகத்தில் நீர் பட... கைகள் இரண்டும் ஏதோ இரும்புசங்கிலியில் சிறைப்பட்டதை போல் இருக்க... கண்ணை திறந்து பார்த்தாள்.... கண்ணெதிரில் ஜேக்கப்பின் முகம்...
"அய்யையோ பேய்... பேய்..." என்று அலறி அடித்துக்கொண்டு எழுந்தாள்...
"ஏய் லூசு மாமி... எதுக்கு டி தள்ளிவிட்ட..." என்று எழுந்து அவளருகே சென்றான்...
"அய்யையோ கிட்ட வராதேள்.. நான் உங்கள் மண்டையை உடைச்சது தப்பு தான்... ஆஹா மகா தப்பு தப்பு என்று இரு கன்னத்திலும் அடித்துக்கொண்டு மன்னிச்சிடுங்கோ.. ஆசையோடு செத்தவாள் எல்லாம் ஆவியா திரிவங்கோன்னு தோப்பனார் சொல்லிருக்கார்... நீங்க என் கிட்டவரச்சே தான் நான் என்ன பண்ணணும்ன்னு தெரியாம தான் உங்க மண்டையை உடைச்சேன்.. அதுக்காக என்னையை கொன்னுடாதேள் வெள்ளை பேய் சார்.. " என்று பயந்துகொண்டே கட்டிலின் ஓரத்துக்கு சென்றாள்...
அவள் சொல்வதை முதலில் புரிந்துகொள்ளாத ஜாக்கப் பின் தான் புரிந்துகொண்டான்... அவள் கனவு கண்டிருக்கிறாள்... அதில் தான் எதோ அவளிடம் தவறாக செய்யப்போய் அவள் அதற்கு தன்னை அடித்திருக்கிறாள் என்று புரிந்ததும்... அவன் தன் உதட்டில் ஏற்பட்ட சிரிப்பை அடக்கி அவளை அவள் போக்கிலே சென்று சீண்ட எண்ணினான்...
"உன் தோப்பனார் சொன்னது உண்மை தான் எனக்கு உன் மேல இருந்த ஆசை அடங்காமலே என்னை கொன்னுட்ட நீ... அப்போ என்னோட ஆத்மா எப்படி சாந்தி அடையும் என்னை கொன்ன உன்னை பழிவாங்க தான் செய்யும்..." என்றான் கண்ணகளில் எட்டி பார்க்க துடித்த சிரிப்பை அடக்கி...
"அச்ச்சோ அது அபச்சாரம் பேய் சார்... அப்புறம் நீங்க சொர்க்கரத்துக்கு போக மாட்டேள் நரகத்துக்கு தான் போவேள்... ஆல்ரெடி என்னை இங்க கடத்திட்டு வேற வந்திருக்கேள்.. இதுக்கே உங்களை அவாள் எண்ணெய் சட்டில போட்டு வரப்பாள்.. இப்படி தப்பு தப்பா பேசத்தேள்... "
அவளின் அபச்சாரத்தில் இப்பொது ஒரு கிக்கே வந்துவிட்டது ஜாக்கப்க்கு.. "அப்போ என்னை கொன்னதுக்கு உன்னை என்ன பாராட்ட செய்வாளா அவாள் " என்றான் தன் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி...
"தவறு செய்த அரக்கனை வதம் செய்தாள் அந்த மகாகாளி... சண்ட முண்டர்களை வதம் செய்து அவர்களின் ரத்தத்தையே பருகினாள்.. அந்த சாமுண்டி.. அதனால் என்னை அவாள் தடிக்க மாட்டாள்.. என்றாள் அவன் கண்களை நேராக பார்த்து...
ஒரு நிமிடம் அசந்து போய்விட்டான்...என்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்... அவன் ஜாக்கப் அல்லவா அவனை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மயக்கிவிட முடியுமா என்ன ஆனாலும் இவளிடம் மயங்கி தான் விட்டான் அந்த ஒரு நிமிடத்தில்.. அவனை வசியம் செய்யவே இவளை படைத்துவிட்டான் போல இறைவன்...
உடனே தன்னை சுதாரித்துக்கொண்டு அவளிடமானாலும் மயங்கிய தன் மடத்தனத்தை என்ன சொல்வது... அது கோவமாக உருப்பெற்று அவளிடமே சென்றது... " அப்போ என்னை அரக்கன்னு சொல்ற " என்றான் குரலில் ஏறி இருந்த காரத்தோடு...
"அச்சச்சோ இல்லை பேய் சார்.. சாமியே அப்படி பண்ணும் போதும்.. நானும் தெரியாம பண்ணா மன்னிச்சிடுவாள்ன்னு சொன்னேன்.. "என்றாள்... சிறிது வெளியே தள்ளிய நாக்கை கடித்துக்கொண்டு...
அவளின் செய்கையில் எப்போவும் போலவே இப்போதும் அவனின் கோவம் ஆவியாக பறந்து அவள் காலடியில் சென்றுவிட்டது...
ஜாக்கப்பின் மனமோ இவளிடம் என் கோவம் ஒரு நொடி கூட நிற்கமாட்டேன் என்கிறதே... கொஞ்சம் ஜாக்கரதையாகவே இருக்க வேண்டும்.. இல்லை என்றால் என் தலையிலேயே மிளகாய் அரைத்துவிடுவாள் என்றெண்ணினான் ...
சட்ரென்று அவளின் அருகே முகத்தை கொண்டு சென்று.. அவளின் நெற்றியில் விழுந்த முடியை உதி தள்ளி... மேலும் பறந்த முடிகளை காதோரம் சொருகிவிட்டான்...
அவனின் செயலில் அவளின் நெஞ்சம் நிஜமாகவே நின்று விட்டது போல் ஆகிவிட்டது...
அவளின் அசையா தன்மையை பார்த்துவிட்டு... மேலும் அவளின் முகத்தின் அருகே உதடுகள் மூச்சி விட்டாள் ஒட்டிவிடும் நினைக்கு சென்று அவளின் மான்விழியை பார்த்துக்கொண்டே அவள் இதழை நெருங்கினான்...
அவனின் நெருக்கத்தில் இதயம் வாய்வழியே குதித்துவிடும் போல் பயத்தில் கண்களை மூடிக்கொண்டாள்... அவன் இதழ் முத்தத்தை எதிர் பார்த்த நேரத்தில் அவள் தலையில் நீர் வழிந்தது... அதில் உணர்வு பெற்று... கண்களை திறந்தவளின் கண்களிலும் தண்ணீர் சாரல் வீசியது...
ஜாக்கப் கட்டிலை வீட்டு அருகே இருந்த தண்ணீர் ஜக்கை அவளின் தலையில் கவிழ்த்திருந்தான்.. அவள் கண்விழித்ததும் மிச்சம் இருந்த நீர் சொட்டுகளை அவள் கண்களில் தெரித்தான்...
அவள் கண்ணை துடைத்து அவனை பார்க்கும் போதும்.. அவளின் நடுமண்டையிலே ஒரு கொட்டு கொட்டி.. " போய் குளிச்சிட்டு வா... கனவு கண்டது போதும்... கனவுல செஞ்சதை எல்லாம் நேர்ல செய்யலாம் என்றுவிட்டு சென்றான்...
அவனின் கொட்டில் சுயநினைவு வந்தவள்... அப்போது தான் புரிந்தது... தான் கண்டது எல்லாமே கனவு என்று... கனவு என்றாலும் மனம் அதை நினைத்து பயந்தது... அதிலும் அவன் கடைசியாக கூறிவிட்டு சென்றது மனதில் திகிலை பரப்பியது...
*******************************
அம்பை ஜாக்கப்பின் அறையில் அலங்கார சிலை போல் ஜன்னல் கம்பியில் கை பதித்து நின்று நிலவை பார்த்திருந்தாள்...
கண்களிரண்டும் வெறிக்க மனமோ அவளின் கனவையும் ஜேக்கப்பின் வார்த்தையிலேயே உழன்று கொண்டிருந்தது.
அவன் அவளை கடத்தி வந்த ஒரு வாரமும் அவள் தனியறையில் இருந்தாள்... இன்று காலையில் அவன் தாலி காட்டியதும்... மதியமே அவள் பொருட்கள் அவன் அறைக்கு மாற்றிவிட்டான்... கூடவே அவளையும்...
அம்பை எவ்வளவு நேரம் நின்றிருந்தாளோ... கால் வலிக்க தான் சுயஉணர்வு அடைந்தாள்...
மெல்ல சுற்றிலும் அந்த அறையை பார்த்தாள் அவன் வருகை இல்லை என்றதும்.. மனம் நிம்மதிக் கொண்டதால்.. உறங்க சென்றாள்...
அவனின் மெத்தையில் படுக்க விருப்பமில்லாமல்... அவளின் புடவை ஒன்றை தரையில் விரித்து தூங்கினாள்...
காலை கண்முழித்தும் அவளின் மேலே ஒரு போர்வை ஒரு இருந்தது... அதை நீக்கிவிட்டு.. கட்டிலை பார்த்தாள் அவன் இல்லை என்றதும் இரவு இருந்த நிம்மதி உணர்வு காணாமல் போய் தவிப்பு வந்து அமர்ந்துக்கொண்டது என்னென்று தெரியாமல்....
குளித்து முடித்து.. கடவுளை வணங்கி வீட்டு... கீழே இறங்கி சமையல் கட்டிற்கு சென்றாள்... அங்கே யாரோ ஒரு வயதான பெண்மணி சமைத்துக் கொண்டிருந்தாள்... அவள் சமைத்து அசைவம் என்றதும் அவன் வருவான் என்று டின்னிங் டேபிளில் காத்திருந்தாள்... அவன் வரவில்லை என்றதும் உணவு உண்ணாமல் சென்றுவிட்டாள்..
இரண்டு நாள் இதே போல சென்றதும்.. மூன்றாவது நாள் தான் அவன் அவளை சந்தித்தான்...
" என்னாச்சி மாமி எதுக்கு ரெண்டு நாளா சாப்பிடாம இருக்க... ஒரு வேளை நீ உண்ணாவிரதம் இருந்தா உன்னை விட்டுடுவேன்னு பிளான் பண்றியா... அப்படி கனவுல கூட நினைச்சிடாத... கண்டிப்பா நடக்காது... என்னை விட்டு நீ போறதா இருந்தா பொணமா தான் போகணும்.. அதனால ஓழுங்க போய் சாப்பிட்டு உடம்பை தேத்திக்கோ என்னை சமாளிக்க உனக்கு சத்து வேணாமா... " என்றான் கிண்டலுடன்..
அவன் பேசியதற்கு ஒன்றும் சொல்லாமலே முட்டியில் தன் தலையை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தாள்...
ஏய் உன் கிட்டத்தான் பேசுறேன்.. பதிலே பேசாம இருந்தா என்ன அர்த்தம்... முதல்ல என்னை நிமிர்ந்து பாரு மாமி... என்றான் ஏற துடித்த கோவத்தை அடக்கிய குரலில்...
அவன் சொன்ன ஒரு சொல்லை கூட காதில் வாங்காதவள் போல் அதே நிலையிலே இருந்தாள் அம்பை...
அடக்கி வைத்த கோவத்தை அவளின் மதிக்காத செயல் வெளியே கொண்டுவந்ததும் " ஏய் நான் சொல்லிட்டே இருக்கேன்... மதிக்காம அப்படியே இருக்க... அவ்ளோ நெஞ்சழுத்தமா உனக்கு... சொல்ல சொல்ல கேக்காம.. உன்னை... என்று அவளின் அருகே சென்று முரட்டு தனமாக கையை பிடித்து இழுத்து தூக்கினான்...
அவன் தூக்கியதும் அவன் கையோடு விழுந்தாள்... முகம் முழுவதும் அவள் முடிகள் நிரம்பி இருந்தது.. என்னவென்று பதறி அவள் முகத்திலிருந்த முடிகளை அகற்றினான்... அந்த மதிமுகத்தழகி மயங்கி விட்டிருந்தாள்...
அவள் மயங்கி இருந்ததை பார்த்ததும் ஜாக்கப்பின் மனம் ஒன்றும் துடித்து விடவில்லை... அவளின் அமைதியான அழகு முகம் ஈர்த்ததில் தான் துடித்தது ..
பிறை நெற்றி... நீள முகம்.. அதில் இரு மான்விழி... செப்பு உதடுகள்... கூர்மையான மூக்கில் ஒற்றை வைரமாய் மூக்குத்தி தான் அவனை மிகவும் ஈர்த்தது...
மென்மையாய் நிமிட்டினான்... மேலும் மேலும் அவனை ஈர்த்த மூக்குத்தியில் ஒற்றை முத்தமிட்டான் மனதை அடக்கமுடியாமல்... அதிலிருந்து மீண்டும் வர விருப்பம் இல்லாதவன் போல் அங்கேயே குடிருந்தது அவன் உதடுகள்...
இவனின் இலகுத்தன்மையில் இலகுவான கைப்பிடிப்பில் அவள் உடல் கட்டிலில் சாரிந்ததும் தான்... அவள் நிலையை உணர்ந்தான்...
தன் மடத்தனத்தை நினைத்து தலையில் தட்டிக்கொண்டே டாக்டரை கூப்பிட்டான்...
டாக்டர் அவளுக்கு ட்ரிப்ஸ் போட்டுவிட்டு அவனிடம் " ரெண்டு நாள் சாப்பிடாததால் மயங்கிட்டாங்க... மேலும் அவங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு நல்ல ஹெல்த்தியான உணவா குடுங்க... இப்போ எடுத்ததும் சாலிட்டான உணவு குடுக்காதிங்க...லீக்யூட் உணவா குடுங்க... "
என்று விட்டு சென்றார்...
அன்று மாலை தான் விழித்தாள்... விழித்ததும் அந்த கடன்காரனின் முகமே அவளுக்கு முதல் தரிசனம்... அவனை பார்த்ததும் அந்த மதிமுகம் சுருங்கித்தான் போய்விட்டது...
எதுவும் பேசாமல் அவள் உட்கார உதவி செய்தான்... அவள் அவன் கையை தட்டிவிட முயற்சித்தும் அதை ஒதுக்கி விட்டு ... சிறிது நேரத்தில் கையில் ஆரஞ்சு ஜூஸ் போட்டு எடுத்து வந்தான்...
அவளியிடம் நெருங்கி அவள் முகத்தை தூக்கி அவள் உதட்டில் டம்ளரை வைத்தான்... அவனின் செய்கையில் அவள் கண்கள் விரிய... உதடோ இறுக்கமாக இருந்தது...
அவளின் பிடிவாதத்தால் நெற்றி சுருங்கி.. டம்ளரை எடுத்தான்...
"சரி சொல்லு ஏன் சாப்பிடாம இருந்த... ஒரு வேளை என்னை பார்க்கலைன்னா " என்றான் கிண்டலுடன்...
அவனின் கேள்விக்கு அவளின் பதிலில் அவன் உதடுகள் "வாட் ஆர் யூ மேட்?? " என்ற பதில் தாங்கி வந்தது...
"ஆமாம் நான் ஒன்னும் நீங்க வரலன்னு சாப்பிடாம இருக்களை.. அந்த சமையல்காரம்மா அசைவம் சமைச்ச அதே கையோட நேக்கு சைவம் சமைக்குறாள்...ச்ச்சீ அபச்சாரம் மாச்சே அதை நான் உண்பேனா... " என்றாள்..
"அடி லூசு அப்போ அவங்க ஹாண்ட் வாஷ் பண்ணிட்டு தானே சமைக்குறாங்க அப்பறம் என்ன.." என்றான் எரிச்சலோடு...
"அப்போகூட அதே கைதானே சமைக்குது" என்றாள் முகத்தில் அருவருப்பை காட்டி...
ஓ அப்போ அசைவம் சமைச்ச அதே கைல சாப்பிட மாட்ட தான... அசைவம் சாப்பிட உதட்டால உன்னை சாப்பிடுறேன் இரு அப்போ சரியாகிடும் என்று அவள் கனி இதழை கவ்விக் கொண்டான்...
இதயத்தை திருடி செல்வாள்...
இதோ இதயத்தை திருடி சென்றவள் அத்தியாயம் 3 பதித்து விட்டேன் தோழிகளே... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் போட்டவர்களுக்கு நன்றி பிரெண்ட்ஸ்

Last edited: