All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நறுமுகையின் "இதயத்தை திருடி சென்றவளே " கதைத் திரி

Status
Not open for further replies.

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" இதயத்தை திருடி சென்றவளே "

இந்த கதை எப்போ தொடங்குவேன்னு எனக்கே தெரியல... ஜஸ்ட் டீஸர் மட்டும் தான் இப்போதைக்கு... முடிஞ்சது...

டீஸர் :

ஏன் இப்படி என்னை இங்க அடைச்சு வச்சிருக்கீங்கோ...நேக்கு உங்களை பிடிக்கல...பிடிக்கல... பிடிக்கல.... போதுமா... என்னை விட்டுடுங்கோ... ப்ளீஸ் உங்களாண்ட கொஞ்சி கேட்கிறேன்.... ஆத்துல அம்மாவும் தோப்பனாரும் ரொம்ப பயந்து போய் இருப்பாள் ... இப்படி எல்லாம் கொடுமை பண்ணினா.. அவாள் கண்டிப்பா நரகத்துக்கு தான் போவாளாம்.. என்னை வீட்டுக்கு அனுப்பிடுங்கோ... நீங்க சொர்க்கத்துக்கு போக பகவானை வேண்டிக்கிறேன் என்றாள் அழகம்பையாள்...

அவள் பேசியதை கேட்டுவிட்டு அமைதியாக எழுந்து அங்கே அவளுக்காக செட் பண்ணியிருந்த மர அலமாரி அருகே சென்றான்...

அவன் தனது புஜை அறை அருகே செல்வதை பார்த்ததும்... என்ன பண்றேள்... நீங்க எல்லாம் அங்கே செல்லப்படாது... கருமம் என்னத்தை சாப்பிடேளோ.. அதுவும் காலம்பர குளிச்சளோ என்னமோ.. என்று அவள் கத்தினாள்

அவள் கத்தியதை காதில் வாங்காமல்.. சுவாதீனமாக புஜை அறை கதவை மூடி பூட்டு போட்டுக்கொண்டிருந்தான்...

அச்ச்சோ.. என்ன பண்றேள்.. நான் கிட்டையே போகப்படாதுன்னு சொல்றேன்.. நீங்கோ என்ன என்றால் புஜை அறையையே பூட்டிட்டு இருக்கேளே... விடுங்கோ விடுங்கோ.. உங்களுக்கு புண்ணியமா போகும்... அது மட்டும் தான் எனக்கு இருக்க ஒரே சந்தோஷம் இங்கே.. அதுவும் பொறுக்கலையோ உங்களுக்கு.. என்று குமுறிக்கொண்டே அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள்...

அவனோ அவள் தடுப்பதை கண்டுகொள்ளாமல்.. பூஜை அறையை பூட்டிவிட்டு.. சாவியை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்ட பிறகுதான் அவளை ஏறிட்டு பார்த்தது அந்த பிரவுன் நிற விழிகள் ....

பின் நிதானமாக... அவள் கைகள் தன் கைகளை பிடித்திருப்பதை பார்த்தான்... நொடியில் மின்னல் தோன்றியது அந்த பிரவுன் நிற கண்களில்...

அந்த மின்னலை பார்த்ததும்... மனதில் பயப்பந்து உருண்டது அவளுக்கு ... சட்ரென்று தன் கைகளை பின்னுக்கு இழுக்க பார்த்தாள்.. அந்தோ பரிதாபம்... அவனின் கைகள் ஆக்டோபஸ்சை போல அவளை சுற்றி வளைத்திருந்தது... அக்காட்சியை சிங்கத்தின் கைகளில் மாட்டிய மானைப் போலிருந்து...

அந்த மின்னல் அவனிடம் தோன்றினால் ரொமான்டிக் ஹீரோவாக மாறிடுவதாக அர்த்தமாகும் அவனின் நினைப்பு... அவளுக்கோ அவன் ராட்சசனாக உருமாறும் அறிகுறியாக தோன்றுவது விந்தையோ??

அவளின் கண்களில் தோன்றிய பயத்தை பார்த்ததும்... கைகளை விட்டவன்.. அமைதியாக அந்த அறையை விட்டு வெளியே செல்லப் பார்த்தான்...

அவன் வெளியேறுவதை பார்த்ததும்... ஓடிவந்து அவன் கைகளை மீண்டும் பிடித்துக்கொண்டு...ஒரு நாள் கூட பகவானை செவிக்காமல் என்னால் இருக்கமுடியாது.. நீங்க என்ன கொடுமையை வேணும்னாலும் செய்துக்கோங்கோ.. நீங்க சொல்றபடி நடக்குறேன்.. ஆனா தயவுசெய்து புஜை அறையை மட்டும் திறந்துவிடுங்கோ... ப்ளீஸ் என்றாள் கண்களில் கண்ணீருடன்..

அவள் கைகளை நீக்கி விட்டு... அவளை பார்த்தவாறு நடந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக்கொண்டு... "அப்போ இன்னொரு முறை உன் வாயிலிருந்து... என்னை பிடிக்கலன்னு வார்த்தை வரக்கூடாது... மீறி வந்தா... உன் மொத்த குடும்பமும் ஜெயில்ல கம்பி எண்ணும்... நெஸ்ட்... என்று சொல்லும் போது அவன் கண்களில் மீண்டும் மின்னல் தோன்ற ... கைகள் தாடையை தடவியது... நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கணும்..." என்றான் காந்தக்குரலில் ஜேக்கப் நிக்கோலஸ்...

அவன் கூறியதை கெட்டதும்... கால்கள் வெடவெடுக்க... கைகளால் வாயை பொத்திக்கொண்டு... தலையை இடமும் வலமுமாக அசைத்துகொண்டே...தரையில் ஒடுங்கி போய் உட்கார்ந்தவளின் .. மனமோ அபச்சாரம்... அபச்சாரம்... ஈஸ்வரா.. ஈஸ்வரா என்று கூப்பாடுப்போட்டது...
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்கள் கருத்துக்களை கருத்துத் திரியில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.. தோழிகளே.... 😍😍

 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதயத்தை திருடி சென்றவளே... !


அத்தியாயம் -1




12799 12801

ஜேக்கப் அழகம்பையாள்



அந்த அடர்ந்த காட்டில்.. இப்படி ஒரு அழகான மாளிகையா என்று வியக்கும் அளவுக்கு... நவீன மாளிகையாக இருந்தது... இரண்டடுக்கு மாடி... பழைய கேரளா வீடுகளை போல அமைத்திருந்தார்கள்... சுற்றியும் முக்கனி மா, பலா, வாழையோடு கொய்யா மரம், சில பல காட்டுப்பழ வகை மரங்களும், நடுவில் ஜாதிமல்லி, கொடி சம்பங்கி, செண்பகம், மல்லி, செண்டு மல்லி, முல்லை, பலவண்ண ரோஜாகள், பவளமல்லி, மரிக்கொழுந்து, முகடம் பூ, அடுக்கு மல்லி, இருவாச்சி, பல வகை செம்பருத்திகள் , அதில் நடுவில் ஒரு அழகிய குளம் அதில் அல்லி, தாமரை நிறைந்திருந்தது... சில வாத்துகளும், முயல்களும், காட்டு குருவிகள், கிளிகள் என்று அந்த இடமே இயற்க்கை அன்னையின் அருளால் செழித்து பசுமையான சொர்கலோகமாக காட்சியளித்தது...


அந்த சொர்க்கபுரியில்... அழகிய வேலைபாடுடன் இருந்த ஜன்னல் கம்பிகளில் தலையை சாய்த்து.. அசோகவனத்து.. சீதையை போல எங்கோ இலக்கற்று வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.. அம்பை..


திடிரென்று காலடி சத்தம் பின்னால் கேட்க... கனவு கலைந்து உடல் தூக்கிப்போட திரும்பி பார்த்தாள்...


அவன் தான் அவனே தான் அந்த வெள்ளை பன்னி.. வந்துவிட்டான்.. டஸ்ஸு புஸ்ஸுன்னு பேசட்டும்... மண்டையிலையே நாலு போடு போடுறேன்... மனசாட்சி... எது நீ அவனை அடிக்க போற... சும்மா காமெடி பண்ணாத அவன் ஒரு அடி அடிச்சா நீ தாங்குவியா... இந்நேரம் சிவலோகம் போய் சிவனை பார்த்திருப்பாய்... என்று கேவலமாக சிரித்தது...


அவன் அருகியில் வரவர பூச்சாண்டி வரான் பூச்சாண்டி வரான்ன்னு மனசுக்குள்ளையே சொல்லிக்கொண்டிருந்தாள்...


அவள் அருகில் வந்ததும் " பேபி சாப்டியா என்று அவள் கன்னத்தில் கைவைத்துக்கொண்டே கேட்டான் " அவன் அவளிடம் தமிழில் பேசியதை ஆச்சரியத்தோடு பார்த்தாள்...


"என்ன பேபி அப்படி பார்க்குற... நான் அழகுன்னு தெரியும்.. பட் உன்னை விட இல்லை டா " என்று காதல் வசனம் பேச..


நொடியில் மறந்திருந்த நிகழ்வுகள் எல்லாம் மூளையில் படையெடுக்க... படீரென்று அவன் கையை தட்டிவிட்டாள்..


சோ உங்களுக்கு தமிழ் நன்னா தெரியும்... பேசவும் செய்வேள்... இருந்தும்... எங்களாண்ட பொய் சொல்லிருக்கேள்... இன்னும் எவ்வளவு பொய் இருக்கோ அத்தனையும் சொல்லிடுங்கோ... அது எல்லாத்தையும் விட எதுக்கு என்னை கடத்திண்டு வந்திங்கோ.. அதை முதலில் சொல்லுங்கோ...


இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு பேபி நான் உன்னை கடத்திட்டு வந்திருக்கிறது தெரியும் போதும்... இதுவும் புரியனுமே... எஸ் ஐ... லவ்... யூ.... கண்களில் காதல் வழிய நிறுத்தி நிதானமாக சொன்னான்.... அவள் விழிகளை பார்த்துக்கொண்டே...


அதை கேட்டதும் மனத்தில் பயப்பந்து உருண்டாலும்... அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் .... கண்களால் மட்டும் அடேய் கிராதகா இதை சொல்லவாடா.. என்னை இங்க கடத்திட்டு வந்த... என்று அவனிடம் கேள்வி கேட்டாள்...


அவள் கண்களின் செய்தியை அறிந்துக்கொண்ட... ஜேக்கப் இதழ்களில் மர்மப்புன்னகை ஒன்று உதயமானது...


அப்புன்னகையில் பாவையின் மனம் ஜெர்க்காகி... ஜெர்மனி வரைக்கும் ஓடியது... ஒன்றும் பேசாமல் வெளியேற போனவனை..


ஏன் இப்படி என்னை இங்க அடைச்சு வச்சிருக்கீங்கோ...நேக்கு உங்களை பிடிக்கல...பிடிக்கல... பிடிக்கல.... போதுமா... என்னை விட்டுடுங்கோ... ப்ளீஸ் உங்களாண்ட கொஞ்சி கேட்கிறேன்.... ஆத்துல அம்மாவும் தோப்பனாரும் ரொம்ப பயந்து போய் இருப்பாள் ... இப்படி எல்லாம் கொடுமை பண்ணினா.. அவாள் கண்டிப்பா நரகத்துக்கு தான் போவாளாம்.. என்னை வீட்டுக்கு அனுப்பிடுங்கோ... நீங்க சொர்க்கத்துக்கு போக பகவானை வேண்டிக்கிறேன் என்றாள்.. அழகம்பையாள்....


அவள் பேசியதை கேட்டுவிட்டு அமைதியாக எழுந்து அங்கே அவளுக்காக செட் பண்ணியிருந்த மர அலமாரி அருகே சென்றான்...


அவன் தனது புஜை அறை அருகே செல்வதை பார்த்ததும்... என்ன பண்றேள்... நீங்க எல்லாம் அங்கே செல்லப்படாது... கருமம் என்னத்தை சாப்பிடேளோ.. அதுவும் காலம்பர குளிச்சளோ என்னமோ..


அவள் சொல்வதை காதில் வாங்காமல்.. சுவாதீனமாக புஜை அறை கதவை மூடி பூட்டு போட்டுக்கொண்டிருந்தான்...


அச்ச்சோ.. என்ன பண்றேள்.. நான் கிட்டையே போகப்படாதுன்னு சொல்றேன்.. நீங்கோ என்ன என்றால் புஜை அறையையே பூட்டிட்டு இருக்கேளே... விடுங்கோ விடுங்கோ.. உங்களுக்கு புண்ணியமா போகும்... அது மட்டும் தான் எனக்கு இருக்க ஒரே சந்தோஷம் இங்கே.. அதுவும் பொறுக்கலையோ உங்களுக்கு.. என்று குமுறிக்கொண்டே அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள்...


அவனோ அவள் தடுப்பதை கண்டுகொள்ளாமல்.. பூஜை அறையை போட்டுவிட்டு.. சாவியை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்ட பிறகுதான் அவளை ஏறிட்டு பார்த்தது அந்த பிரவுன் நிற விழிகள் ....


பின் நிதானமாக... அவள் கைகள் தன் கைகளை பிடித்திருப்பதை பார்த்தான்... நொடியில் மின்னல் தோன்றியது அந்த பிரவுன் நிற கண்களில்...


அந்த மின்னலை பார்த்ததும்... மனதில் பயப்பந்து உருண்டது அவளுக்கு ... சட்ரென்று தன் கைகளை பின்னுக்கு இழுக்க பார்த்தாள்.. அந்தோ பரிதாபம்... அவனின் கைகள் அனகோண்டாவை போல அவளை சுற்றி வளைத்திருந்தது... அதை பார்க்கும் போதும் சிங்கத்தின் கைகளில் மாட்டிய மானைப் போலிருந்து


அந்த மின்னல் அவனிடம் தோன்றினால் ரொமான்டிக் ஹீரோவாக மாறிடுவதாக அர்த்தமாகும் அவனின் நினைப்பு அவளுக்கோ அவன் ராட்சசனாக உருமாறும் அறிகுறியாக தோன்றுவது விந்தையோ??


அவளின் கண்களில் தோன்றிய பயத்தை பார்த்ததும்... கைகளை விட்டவன்.. அமைதியாக அந்த அறையை விட்டு வெளியே செல்லப் பார்த்தான்...


அவன் வெளியேறுவதை பார்த்ததும்... ஓடிவந்து அவன் கைகளை மீண்டும் பிடித்துக்கொண்டு...ஒரு நாள் கூட பகவானை சேவிக்காமல் என்னால் இருக்கமுடியாது.. நீங்க என்ன கொடுமையை வேணும்னாலும் செய்துக்கோங்கோ.. நீங்க சொல்றபடி நடக்குறேன்.. ஆனா தயவுசெய்து புஜை அறையை மட்டும் திறந்துவிடுங்கோ... ப்ளீஸ் என்றாள் கண்களில் கண்ணீருடன்..


அவளை பார்த்தவாறு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கால்மேல் கால் போட்டுக்கொண்டு... அப்போ இன்னொரு முறை உன் வாயிலிருந்து..


என்னை பிடிக்கலன்னு வார்த்தை வரக்கூடாது... மீறி வந்தா... உன் மொத்த குடும்பமும் ஜெயில்ல கம்பி எண்ணும்... நெஸ்ட்... என்று சொல்லும் போது அவன் கண்களில் மீண்டும் மின்னல் தோன்ற ... கைகள் தாடையை தடவியது... நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கணும்... என்றான் காந்தக்குரலில் ஜேக்கப் நிக்கோலஸ்...


அவன் கூறியதை கெட்டதும்... கால்கள் வெடவெடுக்க... கைகளால் வாயை பொத்திக்கொண்டு... தலையை இடமும் வலமுமாக அசைத்துகொண்டே...தரையில் ஒடுங்கி போய் உட்கார்ந்தவளின் .. மனோ அபச்சாரம்... அபச்சாரம்... ஈஸ்வரா.. ஈஸ்வரா என்று கூப்பாடுப்போட்டது...


இதுக்கே இப்படி சொன்ன எப்படி மாமி.. கல்யாணத்துக்கு முன்னாடி காதல் ஒன்னு இருக்கே என்றான் சிறு சிரிப்புடன்...


உன்னையும் என்னை காதலிக்கவச்சி கல்யாணம் பண்ணனும் மாமி... உன்னோட காதல்ல நான் முழுசா அனுபவிக்கனும்..உன்னோட அன்பை நான் யாரு கூடவும் பங்கு போடக்கூட எனக்கு பிடிக்கல அது எனக்கே எனக்கு சொந்தமானது... அது உன் அப்பா அம்மாவா இருந்தாலும்... சரி... அதான் உன்னை என்கிட்ட கூட்டிட்டு வந்துட்டேன்... இங்க நாம நம்ம அன்பு மட்டும் தான் இருக்கும்... இருக்கனும்... என்றான் ஒரு விதமான அழுத்தத்துடன்..


என்னது நானும் உங்களை கா....... ல்.....ஹ்ம்ம் ஹ்ம்ம் முடியது... முடியாது...


அச்சோ இது எவ்ளோ பெரிய அபச்சாரம்...அதுவும் கல்யாணம்மா... பகவானே எனக்கு நரகத்துல கூட இடம் இருக்காது போலவே... என்னை மன்னிச்சிடுங்கோ... அந்த வார்த்தையை சொல்லிட்டேன்... என்று படீரென்று வாயில் அடித்து கொண்டாள்... அவன் சொன்ன வேறு எதுவும் காதில் ஏறாமல்...


அவள் கைகளை அடிக்காமல் பிடித்துக்கொண்டவனின்... கோவம்... டன் கணக்கில் ஏறியது... இருந்தும் அவள் முகத்தை பார்த்ததும் தண்ணீர் பட்ட புஸ்வானம் போல நொடியில் அணைந்துவிட்டது... அது தான் காதலின் விந்தையோ...


பேபி இங்க பாரு... நான் உன்மேல அவ்ளோ லவ், பியார், பிரேமம், காதல், சாராங்கே வச்சிருக்கேன்டா.. பட் நீ என்னை புரிஞ்சிக்க முயற்சி பண்ணலே போதும்டா... நீ இப்படியே காலம் முழுக்க என்னோடவே இருந்தால்.. போதும் பேபி... வேற எதுவும் வேண்டாம்.. அப்படியெல்லாம் வசனம் பேச எனக்கு தெரியாது... பிடிக்கவும் பிடிக்காது... புரியுதா.. ஜஸ்ட் நீ என்னை லவ் பண்ற... கல்யாணமும் பண்ற... லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சேன் நீ தான் காதல் சொன்னா ஏதோ கொலை குற்றம் போல பார்க்கிறியே... சொ.. ஸ்ட்ரேயிட்டா கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்... அதுவும் என்னோட ஆசையெல்லாம் விட்டுக்கொடுத்துட்டு உனக்காகத்தான்... அதுக்கு நான் உனக்கு 3 டேஸ் டைம் தரேன்... சீக்கிரமா யோசிச்சி சொல்லு... என்று விறுவிறுவென... வெளியேற சென்றவன் வாசல் கதவில் கைவைத்து.. கல்யாணம் உங்க முறை படியா.. இல்ல எங்க முறைபடி செய்யலாமா பேபி...


அவன் சொன்னதே உள்வாங்கி கொள்ளவே கடினப்பட்டுக்கொண்டிருந்த பாவையவளுக்கு... கல்யாணத்தின் முறை கேட்டால்... என்ன சொல்வாள்... பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தாள்...


அவள் முழியில் சிரிப்பு வந்தாலும்... அடக்கிக்கொண்டு.. "கெட் ரெடி போர் அவர் மேரேஜ் பேபி " என்றுவிட்டு சென்றான்...


*****************************


பலமுறை சாகலாம் என்று முடிவெடுத்த பிறகும் கூட சாகவிடாமால் அவளையே கண்கொத்தி பாம்பாக பார்த்துக்கொண்டிருந்தவன் மேல் கோபம் பலமடங்காக பெருகியபோதும்... ஒரு பயனுமில்லையே... அவனின்றி அணுவும் அசையாது போல அவன் பார்வையிலிருந்து சிறு துரும்பு கூட மறையாது...


வேறு வழியின்றி அங்கே இருந்த கண்ணனிடம் சரண்ணடைந்தால் அந்த மூன்று நாட்களும் அழகம்பையாள்...


வேறு வழியில்லையே... திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்று கண்ணனை நாடினாள் ... அந்த மாயகண்ணனோ..மர்மமாக புன்னகைத்துக் கொண்டிருந்தான் ... சிலைவடிவில்...


கல்யாண நாளும் விடிந்தது... அவளின் கலங்கிய குரலுடன்...

மன மோகனா.... என் உயிர் கண்ணா

கார்முகில் வண்ணா வாராயோ

கோதையின் குரலை கேளாயோ

விடை பெற்று வாராய் - காசி மனமுத....

விடை சொல்ல வரையோ - வாழ்க்கை புதிதாய்

நீ இன்றி சுயம்வரமா....

கார்முகில் வண்ணா வாராயோ கண்ணா

கோதையின் குரலை கேளாயோ

துவரகனே....

இருளும் ஒளியும் இருவிழி அருகே துரத்திடுதே....

இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா....!

இரு வழிகள் சந்திக்கும் இடத்தில்

கால்கள் இரண்டும் குழம்பிடுதே

என் பாதை சொல்வாயோ - தேவகியின் நந்தலாலா

திசை எது சொல்வாயா

பிருந்தாவன நந்தகுமார....

சகியின் வேண்டுதல் அறிவாயா

நீங்காமல் வருவாயா நகம் போலே பிரிவாயா.....!

நவநீதா முரளி மனோகரா...

நங்கையின் மனதை புரிவாயா

புறகனித்தே செல்வாயா - என் சோகங்கள் தீர்ப்பாயா

என் தாகங்கள் தீர்ப்பாயா................!

( மனமோகனா )

புருசோத்தமனே....

உன் உதட்டில் புல்லாங்குழலாய் தவழ்வேனா

உன் சுவாசக் காற்றாலே.. உயிர் பெற்று வாழ்வேனா ...

பார்த்திபனே...

உன் பார்வையில் பாற்கடல் அமுதம் பெறுவேனா

பசி தாகம் மறப்பேனா -உன் கோகுல

தோட்டத்திலே கோபியர் ஆவேனோ...........!

வாழ்க்கையென்னும் கடலில் தினமும்

அலையின் மேலே அலை அடிக்க

இதயம் என்னும் படகு அதில்

தடுமாறி மோதிடுதே

துயவனே...

துடுப்புகள் போட்டு கரையினில் ஏற்றி விடுவாயா

நடுகடலில் விடுவாயா....!

வசீகர மன்னவனே - என்

வேதனை தீராய் நீ.....



இதயத்தை திருடி செல்வாள்...


தோழிகளே... உங்களின் விருப்பத்திற்கு இணங்க... " "இதயத்தை திருடி சென்றவளே... "கதையை ஆரம்பித்து விட்டேன்.... அத்தியாயம்... அடிக்கடி கொடுக்க முடியாது... இரண்டு கதையும் எழுத நேரம் வேண்டும்... அதனால் தாமதமாக வரலாம்....


" முதல் கதையை போலவே இந்த கதைக்கும் உங்களின் ஆதரவை வேண்டுகின்றேன் .... " நன்றி
என்றும் உங்கள் " நறுமுகை "
 
Status
Not open for further replies.
Top