All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் கவிதை சிறுகதை திரி

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே ,

கவிதை தான் என் எழுத்து பயணத்தின் ஆரம்பம். கவிதை மட்டுமே எழுதிட்டு இருந்த எனக்கு, டயலாக் இல்லாம கவிதையா கதை சொல்லலாமேனு ஐடியா வரவும் நான் எழுதிய முதல் கவிதை சிறுகதை இது..

இது ஒரு காதல் கதை.. கவிதை நடைல நான் எழுதிய முதல் கதை.

காதல் என்பது யாதெனில்???

படிச்சிட்டு மறக்காம உங்கள் கருத்துக்களை என் சிறுகதை கருத்துத் திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே.

அன்புடன்,
நர்மதா சுப்பிரமணியம்
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் என்பது யாதெனில்????
பதறியது நெஞ்சம் அவனுக்கு
அவள் அங்கில்லை
என்று அறிந்த போது....


மனதில் கலக்கத்துடன்
நடையில் தளர்ச்சியுடன்
கிளம்பினான்
அவள் வீட்டிலிருந்து
அவளைத் தேடி....


பின்னோக்கி பயணித்தது
அவனின் எண்ணங்கள்.....


அன்று அவன் திருமணம்...


அவனுக்காய் தேர்வு செய்தப் பெண்
தன் காதலனோடு கைகோர்க்க...
விதி வசத்தால்
அவன் மனைவியானாள் அவள்...


பெருத்த இடை
கரிய நிறம் என
அவன் விருப்பத்திற்கு மாறான
அம்சம் அவள்....


எரிச்சலின் உச்சத்திலும்
கழிவிறக்கத்தின் விளிம்பிலும்
இருந்தான் அவன்....


சிதைந்தக் கனவுகளுடன்
காத்திருந்தான் அவளுக்காக
அவனறையில்....


"உங்களுக்கு
பொறுத்தமற்றவள் நான்..
கேலிப்பேச்சுக்கள் கேட்டு
தனிமைப் படுத்தப்பட்டு
பழகிப் போனவள் நான்...
வாழலாம் உங்கள் விருப்பம் போல்
தடை சொல்ல மாட்டேன் நான் "
என்றுக் கூறி
அவன் உறக்கத்தை விழுங்கி
நிம்மதியாய் உறங்கிவிட்டாள்
அவள் அன்றிரவு....


கோபமும் வெறுப்பும் மட்டுமே
அவனுக்கு
அவள் மேல் இருந்த உணர்வு..
துளியளவும் காதலும் இல்லை
ஆசையும் இல்லை அவள் மேல்...


மஞ்சள் கயிறு மகிமையோ
தன்னவன் என்கின்ற எண்ணமோ
ஏதோ ஒன்று
அவளின் மனதின் சிம்மாசனத்தில்
அவளின் உயிராய்
அவனை இருத்தியது
சிறிது நாட்களில்.....


அதன் பிரதிபலிப்பாய்
அவன் தேவைகள் அனைத்தையும்
சிரமேற்கொண்டு செய்தாள் அவள்..
அதை அறிந்து கொள்ளவில்லை அவன்....


அவன் கண்முன் வரமாட்டாள் அவள்...
அவளை கண்டால் கோபம் கொண்டு
அவன் நிம்மதியற்று போவான் என்று...
அதையும் உணரவில்லை அவன்....


அவளுக்கு ஆரம்பித்தது சனி
அவன் தங்கையின் பிரசவத்திற்காய்
சென்றிருந்த அவன் தாயின் வருகையில்....


பொறுத்தாள்
சகித்தால் அவள்
அவன் தாயின்
தூற்றும் பேச்சை....


அவன் தாயின் மலடி என்கின்ற
ஒற்றை வார்த்தை
அவளை வீட்டை விட்டு
வெளியேற செய்தது
இரண்டு மாத
திருமண வாழ்வின் முடிவில்...


அவள் தொலைந்தால் போதுமென்று
அவனும் அவளுக்காய்
பேசவில்லை அவன் தாயிடம்....


இரு வாரங்கள் கழித்து
அவன் தாய் மீண்டும்
தங்கை வீட்டிற்கு செல்ல...


உணர்ந்திருந்தான் அவனும்
அவளின் பிரிவை..


சென்றான் அவள் வீட்டிற்கு
அவளை அழைத்துவர...


அவள் அங்கு இல்லை
என்பதை அறிந்து
இன்று நிற்கிறான் நடுவீதியில்
மனதில் கனத்துடன்
திக்குத்தெரியாத காட்டில் விட்ட
குழந்தையை போல்...


ஓடினான்
தேடினான்
தோழிகளிடம் விசாரித்தான்
எங்கும் இல்லை அவள்....


எங்கோ கேட்ட
கொலைச் செய்திகளும்
சீரழிவு நிகழ்வுகளும்
நினைவுக்கு வந்து
எகிறுகிறது இதயதுடிப்பு
தாறுமாறாய் அவனுக்கு...


ரணமாய் வலிக்கிறது மனம்
அவனின் செயலை எண்ணி....


என்னவாகிற்றோ அவளுக்கென்று
பதறுகிறது நெஞ்சம்....
ஏதும் வேண்டாம் எனக்கு
அவளை தவிற என
அவளுக்காய் ஏங்குகிறது
அவன் மனம் இப்பொழுது...


துவண்ட மனதும்
சோர்ந்த உடலுமாய்
சென்றான் அவன் வீட்டிற்கு...
துப்பு கிடைக்குமென
அவளறையை
அவன் அலச
கிடைத்தது அவனுக்கு
அவள் மனைவியின்
கவிதை காகிதங்கள்.....


"என்னவனே
என் மன்னவனே
உனை காணும் நேரம்
பேரலையாய்
என் மனதில் பெருகும் காதலை
உணர முடியவில்லையா
என் பார்வையில் உன்னால்??
காதலும் வலியும்
உடன்பிறப்போ??
வலியில் பிறந்ததல்லவா என் காதல்....
இவ்வாழ்வில்
இறைவன் அளித்த வரம் நீ எனக்கு...
உன்னை பார்த்துக்கொண்டே
வாழ்ந்திடுவேன் இப்பிறவியில்....
ஆனால் வரம் ஒன்று
கேட்பேன் கடவுளிடம்...
இனி ஒரு பிறவி இருந்தால்
உனக்கானவளாய்
உனக்கேற்றவளாய் பிறந்து
காதல் என்னும் கடலில் மூழ்கி
உன்னுடன் ஆசைதீர வாழ்ந்து
களித்திட வேண்டுமென"


அவளின் அளபறியா
காதலை உணர்ந்தான்
அவளின் கவிதைகளில்....


வெறுத்தான் தன்னையே
வெட்கினான் தன்னை எண்ணி
உணர்ந்தான் தன் தவறை....


அவளுக்கான காதல்
சிறு ஊற்றாய்
பொங்கி எழுந்திருந்தது
அவன் இதயத்தில்.....
அதன் கனம் தாளாமல்
அழுது உருண்டு
கிழிந்த காகிதமாய்
கிடந்தான் அவளறையில்...


கண்ணில் பட்டது
அவள் அலுவலக முகவரிச்சீட்டு...
பதட்டத்தில் மழுங்கி
இருந்த அவன் மூளை
அவள் மேல் கொண்ட
காதலால்
உற்சாகமாய்
இயங்கியது இப்பொழுது.....


சென்றான் அவள் அலுவலகத்திற்கு
கண்டான் அவளை....


மனதில் ஆழ்ந்த நிம்மதி
பிரவாகமாய் படர...
காதில் இளையராஜாவின்
இன்னிசை ரீங்காரமிட..
கண்ணில் கோடி மின்னலின்
பிம்பமாய் அவள் பளிச்சிட...
இடம் பொருள் பாராது
ஓடோடிச் சென்று
அணைத்துக் கொண்டான் அவளை...


கதறி அழுதான் மன்னவன்
பொதுஇடம் என்றும்பாராது....


தன் நெடுநேர பரிதவிப்பிற்க்கும்
மனதில் பிரவாகித்த காதலுக்கும்
தன்னுணர்வுகளை
கட்டுப்படுத்தும் வடிகாலாய்
பற்றிக்கொண்டான் அவளை..


கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின்
வாய்ச்சொற்களுக்கு ஏது பயன்....
அவளும் உணர்ந்துக்கொண்டாள்
அவனின் ஆழ்மனதின் காதலை
அவனின் பார்வையிலும்
இறுகிய அணைப்பினிலும்.....


மன்னவனின்
காதல் பார்வையில்
அவனுக்கு அழகோவியமாய்
தெரிந்தால் அவள்....


உடல் இளைத்திருந்தால்
அவளும் தன்னவனுக்காக..
கண்டுகொண்டான் அவனும்
அவளணைப்பில்....


எடுத்தான் ஓர் சபதம்
தன் நேசத்தால்
மீண்டும் அவளை
பழையவளாய்
பெருத்த வடிவாளாய்
மாற்றுவேன் என...


தன்னலமற்ற
அன்பு மட்டுமே போதும்
மெய்க்காதலுக்கு...


புற அழகு மாறும்
மன அழகு மாறாது
என உணர்ந்தான் நம் நாயகனும்..


இனி எல்லாம் சுகமே என
காதலில் திளைத்து
இன்பமாய் வாழட்டும்
மங்கையவள்
தன் மணாளனுடன்
என வாழ்த்துவோம் நாமும்......


--நர்மதா சுப்ரமணியம்
 

Attachments

  • IMG_20180621_224711.jpg
    IMG_20180621_224711.jpg
    169.1 KB · Views: 4
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

நான் இப்ப வந்திருப்பது என் "சப்ரைஸ் கதைகளுடன்".
அதென்ன சப்ரைஸ் கதைகள்னு தானே யோசிக்கறீங்க மக்களே.

சப்ரைஸ் பிடிக்காத ஆட்கள் யாரும் இருக்க மாட்டாங்க.

நான் எனக்கு நெருக்கமான தோழிகளுக்கு அவர்களின் விஷேசமான நாட்களில் சப்ரைஸ் இருப்பதுப் போல் கவிதைக் கதை எழுதுவேன். அதை தான் இங்கு ஒவ்வொன்றாக பதிப்பிக்க உள்ளேன். நீங்களும் படித்து மகிழுங்கள் மக்களே.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்ப அதிர்ச்சிக் கதைகள் #1:
மலர்கள் செய்த மாயம்

வெண்பனிப் புகையில்
வெள்ளை மனிதர்கள் உலாவரும்
மேற்கத்திய தேசம் அது....

விடியற்காலைப் பொழுதில்
அமைதியின் திருவுருவாய்
நுழைந்தாள் அவள்
மனிதர்களின் மூளை
இயந்திரமாய் உழைக்கும்
மென்பொருள் நிறுவனத்திற்குள்...

தன் மேஜையின் கணிணியை
ஒளிரவிட்டுத் திரும்பியநொடி
கண்டாள் ஓர் பூங்கொத்து
தன் இருக்கையில்...

"சிரிப்பை மறந்தச் சித்திரமே
மனம் விட்டுச் சிரிப்பாயா எனக்காக,
இப்படிக்கு, N "
என்றிருந்தது அக்குறிப்பேட்டில்...

ஒளிர்ந்தது அவள் கண்கள்
N என்றதும்...
மென்நகைப் புரிந்தாள் மாயவளும்...

தொடர்ந்த நாட்களில்
பூங்கொத்தின் குறிப்பேட்டில்

"உன் மென் சிரிப்பு
பெருச்சிரிப்பாய் மாறிட
வரம் வேண்டும் எனக்கு
தருவாயா இன்று" என்றிருக்க
இதழ் விரியச் சிரித்தாளன்று...

"இதழ் சிரிப்பால்
உன் விழி நீர் சிந்த
ஆசைக் கொண்டேன் நான்
தருவாயா அச்சிரிப்பை எனக்கு"
என்றிருக்க,

வரவிருக்கும் பிறந்தநாளிற்காய்
ஆச்சரியப் பரிசனுப்புவிக்கும்
தன் தோழியின் நினைவில்
விழி வழிய சிரித்தாளவள்...

ராம் லட்சுமணனின்
பெண் பாலாய்
சகோதரியாய் உருமாறி
தன் இன்பத்தை
மட்டுமே எண்ணும்
தோழியின் நினைவில்
உருகித்தான் போனது
அவளின் மனம்...

பணிக்கான வேலை
அத்தேசத்தில் முடிவடைய..
பயணிக்க தீர்மானித்தால்
அவள் நாட்டிற்கு...

மேகத்தினூடே பறவையாய்
பறந்த விமானம்
தரை இறங்கிய நேரம்
அவளின் பிறந்தநாளின்
துவக்க மணித்துளிகள்
அவள் நாட்டு நேரப்படி..

வானிலைய பணியாளர்கள்
ஒவ்வோர் பூங்கொத்தாய்
அளித்து வரவேற்றனர் அவளை..

முழங்காலில் மண்டியிட்டு
கையில் ஒற்றை ரோஜாவுடன்
தன் இரு கைகளையும் விரித்து
அவளை நோக்கி
பார்த்திருத்தான் அவன்...

திகைத்து விழித்து
இமை மூட மறந்த
நிலையில் அவள்...

அச்செந்நிற ரோஜாவை நீட்டி
விளித்தான் அவளிடம்
"என்னை உன்னவனாய்
ஏற்பாயா கண்மணியே"

தனக்காய் பார்த்திருக்கும்
மாப்பிள்ளையென
இவள் பெற்றோர்
அனுப்பிய புகைப்படம் விரிகிறது
அவளின் மனத்திரையில்....

அக்கணம் அவள் நினைவில்
மணி அடிக்கிறது
அந்த N இவன் தானென்று...
பூங்கொத்தில்
அன்பை விதைத்து
புத்துணர்வளித்த
அன்பாளன் இவன் தானென்று...

N நிலாபெண் என
இவள் நினைத்திருக்க
N நிலவன் என
நிருப்பித்தான் அவன் இன்று...

"நீ நீயாய் இருக்க
ஆசை உனக்கு
உன்னை அப்படியே
ஏற்றுக் கொள்ள
ஆசையுண்டு எனக்கு....

என்னையே
என் காதலையே
உன் பிறந்தநாள் பரிசாய்
அளிக்கிறேன் இனியவளே..

உன் புன்னகை இப்படியே
இதழில் உறைந்திட
வாழ்த்துகிறேன் கண்ணம்மா

இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சாருலதா!!!!!"
அவனுரைக்க....

மெய் மறந்து சிலையென
நின்றாள் அவள்...

தனக்காய் தன்
பெற்றவர்கள்
நிச்சயித்த ஒருவன்..

தனக்காய் தன்னை
நேசிக்கும் ஒருவன்...

தன் இன்பம் மட்டுமே
முதன்மையாய்
எண்ணும் ஒருவன்...

இதயம் படபடக்க
தாறுமாறாய் துடிதுடிக்க
நாடி நரம்பெல்லாம்
மகிழ்ச்சியில் திளைத்திருக்க
பெற்றுக் கொண்டாள்
அவ்வொற்றை ரோஜாவை
அவன் காதலின் அச்சாரமாய்
அவள் பிறந்தநாளின் பரிசாய்....

இருவரும் திருமண பந்தத்தில்
இணைந்து மகிழ்வுடன் வாழ
வாழ்த்துவோம் நாமும்....

-- நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்ப அதிர்ச்சிக் கதைகள்#2:

ஆனந்த அதிர்ச்சி:

காதலர் தினத்திற்கு முன்தினம் அன்று....

உறங்கும் விழிகளால்
ஆர்வமாய் கவனித்திருந்தாள்
பேராசிரியரின் உறையை
அவளின் கல்லூரி வகுப்பறையில்....

திடுமென இருவர்
வகுப்பிற்குள் நுழைந்து
விளித்தனர் அவளின் பெயரை...

யாரோ எவரோ
ஏது செய்தியென
குழம்பினாள் கன்னிகையும்..

அழகிய பூங்கொத்தும்
இனிப்பான மிட்டாயும்
குளுமையான பனிக்கூழும்
சுவையான அப்பமுமென
விரைவு அஞ்சலாய் வந்த
காதலர் தினப் பரிசை
வழங்கினர் அவளிடத்தில்...

ஒருபுறம் பேராசிரியர் முறைக்க
மறுபுறம் அஞ்சலவர்கள்
கையில் பரிசினை ஏந்தி நிற்க
அஞ்சலில் காதலை
தூதாய் அனுப்புவித்த
அஞ்சான் எவனோவென
சிந்திந்து தன் சிந்தையை
சீண்டிக்கொண்டிருந்தால்
காரிகையும்...

கௌதம புத்திரனோ
காக்கிச்சட்டை மச்சானோ
அத்தை மகனான அத்தானோ
அம்மாவின் தம்பியான
இளைய மாமனோவென
மூளை அக்கேள்விக்கு
பதிலுரைக்க
அப்படியேதும் உறவினர்
உன் சொந்தத்திலேயே
இல்லை மகளே என
மனசாட்சி ஓர் மார்க்கமாய்
அவளின் மூளையை சாடியது....

நிமிடத்தில் மூளைக்கும்
மனசாட்சிக்குமிடையே நடந்த
வாக்குவாத தருணத்தில்
அதிரடியாய் வகுப்பிற்குள்
நுழைந்தனர் மூவர்...

விழி விரிய திகைத்து
நின்றாள் பெண்ணவள்
அம்மூவரை கண்டு....
உற்சாகமாய் கூவினர் மூவரும்
" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி"

முகத்தில் புன்னகை கூத்தாட
ஈ யென அனைத்து
பற்களும் பளிச்சிட
கன்னங்கள் கூச்சத்திலும்
வெட்கத்திலும் சிவக்க
ஏற்றுக்கொண்டாள்
பிறந்தநாள் பரிசை....

கண்டுக்கொண்டாள் பெண்ணவள்
தனக்கு இரண்டு நாளில்
வரப்போகும் பிறந்தநாளிற்க்காய்
தன் உற்ற தோழிகள் செய்த
குறும்பு(Prank) இதுவென்று.....

-நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:
இன்ப அதிர்ச்சிக் கதைகள்#2:

ஆனந்த அதிர்ச்சி:

காதலர் தினத்திற்கு முன்தினம் அன்று....

உறங்கும் விழிகளால்
ஆர்வமாய் கவனித்திருந்தாள்
பேராசிரியரின் உறையை
அவளின் கல்லூரி வகுப்பறையில்....


திடுமென இருவர்
வகுப்பிற்குள் நுழைந்து
விளித்தனர் அவளின் பெயரை...


யாரோ எவரோ
ஏது செய்தியென
குழம்பினாள் கன்னிகையும்..


அழகிய பூங்கொத்தும்
இனிப்பான மிட்டாயும்
குளுமையான பனிக்கூழும்
சுவையான அப்பமுமென
விரைவு அஞ்சலாய் வந்த
காதலர் தினப் பரிசை
வழங்கினர் அவளிடத்தில்...


ஒருபுறம் பேராசிரியர் முறைக்க
மறுபுறம் அஞ்சலவர்கள்
கையில் பரிசினை ஏந்தி நிற்க
அஞ்சலில் காதலை
தூதாய் அனுப்புவித்த
அஞ்சான் எவனோவென
சிந்திந்து தன் சிந்தையை
சீண்டிக்கொண்டிருந்தால்
காரிகையும்...


கௌதம புத்திரனோ
காக்கிச்சட்டை மச்சானோ
அத்தை மகனான அத்தானோ
அம்மாவின் தம்பியான
இளைய மாமனோவென
மூளை அக்கேள்விக்கு
பதிலுரைக்க
அப்படியேதும் உறவினர்
உன் சொந்தத்திலேயே
இல்லை மகளே என
மனசாட்சி ஓர் மார்க்கமாய்
அவளின் மூளையை சாடியது....


நிமிடத்தில் மூளைக்கும்
மனசாட்சிக்குமிடையே நடந்த
வாக்குவாத தருணத்தில்
அதிரடியாய் வகுப்பிற்குள்
நுழைந்தனர் மூவர்...


விழி விரிய திகைத்து
நின்றாள் பெண்ணவள்
அம்மூவரை கண்டு....
உற்சாகமாய் கூவினர் மூவரும்
" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாணி"


முகத்தில் புன்னகை கூத்தாட
ஈ யென அனைத்து
பற்களும் பளிச்சிட
கன்னங்கள் கூச்சத்திலும்
வெட்கத்திலும் சிவக்க
ஏற்றுக்கொண்டாள்
பிறந்தநாள் பரிசை....


கண்டுக்கொண்டாள் பெண்ணவள்
தனக்கு இரண்டு நாளில்
வரப்போகும் பிறந்தநாளிற்க்காய்
தன் உற்ற தோழிகள் செய்த
குறும்பு(Prank) இதுவென்று.....


-நர்மதா சுப்ரமணியம்
Super prank ... I loved it... I love ur words and also u too sister... all the poems are superb... Love u so much
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌரவ மணம்
அனல் தெறிக்கும்
கோபப்பார்வையுடன்
அவனை முறைத்திருந்தார்
அவனின் தந்தை.....

அயல்நாட்டின் பொருளாதார
பின்னடைவினால்
வேலை பறிப்போய்
மனம் நொந்த நிலையில்
சோக முகத்துடன் அவன்...

தங்களின் கௌரவத்திற்கேற்ற
குடும்பமாய்....
தங்களுக்கு இணையான
பெரும் பணக்கார குடும்பமாய்
பார்த்திருந்தார் அவனின் தந்தை
அவனின் திருமணத்திற்கு...

அவனுக்கு பெண்ணையல்லாது
பணத்தை மணம் செய்விப்பதே
தந்தையான
அக்கௌரவத்தாரின் எண்ணம்...

அவ்வெண்ணத்திற்கு
தீ வைத்தாற் போல்
வந்து நின்றான் அவன்
வேலை பறிப்போன நிலையில்....

வேலை இல்லை..
வேலை கொடுத்த பணம் இல்லை..
பணம் கொடுத்த கௌரவமுமில்லை..

எங்ஙனம் போய் பெண் கேட்பேன்
பெரிய இடத்திலென
சீறிக்கொண்டிருத்தார்
அப்பெருந்தகையார்....
பணம் மட்டுமே கௌரவமாய்
எண்ணிக் கொண்டிருக்கும்
சிறுமை எண்ணம் கொண்ட
அப்பெருந்தகையார்....

பணத்தையல்லாது,
அன்பே பிரதானமாய்
சகலரையும் மனிதனாய்
மதிக்கும் மனிதமும்...
நேர்மையான சுயநலமற்ற
சிந்தையின் நல்லெண்ணமுமே
கௌரவமாய் எண்ணி
வாழும் அவன்

இடித்துரைத்தான் தந்தையிடம்,
பணம் என்கின்ற கௌரவத்தை
சுட்டிக்காட்டி பெரும்
குடும்ப பகையாக்கி
தன் தந்தை ஒதுக்கி வைத்த
அத்தையின் மகளை மணமகளாக்க
அவ்வீட்டின் மருமகளாக்க....

அதுவே தன் இறுதி முடிவுமென
உறுமலாய் உரைத்து
நகர்ந்தான் அவ்விடத்தை விட்டு...

அவ்வண்ணமே
தன் எண்ணமுமென
மகனை வழிமொழிந்தார்
அவனின் அன்னையும்...

வேலையில்லா நிலையில்
பணமில்லா நிலையில்
பெருத்த செல்வந்தர்கள்
அவர்களின் பெண்ணை
இனி தன் மகனுக்கு
மணம் செய்விக்க
வழியில்லை என்கின்ற ஆற்றாமையாலும்.....

தாயும் மகனுமாய் கூட்டிணைந்த
பெரும்பான்மையாலும்...

தனிமைவாதியாய்
தன் எண்ணம்
வலிமையற்று போனதை
உணர்ந்த தந்தையும்
சம்மதித்தார் அத்திருமணத்திற்கு....

பகைமை அறுத்து
ஆணிவேராய்
தன் சொந்தத்துடன் இணைய
கிடைத்த வாய்ப்பை
பற்றிக்கொண்டார்
அவனின் அத்தையும்....

இனிதே திருமணம் நிறைவுபெற...

மீண்டும் வேலை தேடி
அங்கேயே பிழைப்பு தேடுவதாய்
கூறி பறந்தார் மாப்பிள்ளையும்
தன் மனையாளுடன்
அயல்நாட்டிற்கு....

அங்ஙணம் தங்களின் வீட்டிற்கு
வந்தடைந்த நிலையில்...
தன்னவளை கையில்
அள்ளிக்கொண்டு
தம்பதியராய் இல்லத்தில்
முதலடியை வைத்தான் அவனும்....

அவனின் கழுத்தில்
அவள் கைகள் மாலையாய்
கோர்த்திருக்க
அவள் காதில் உரைத்தான் அக்கள்வன்..

"நம் காதலில் ஜெயித்து விட்டோம்..
வாழ்நாள் முழுவதும்
என் இதய சிறையில் அரசியாய் நீ வீற்றிருக்க
கவர்ந்து வந்துவிட்டேன் உன்னை
என் மனைவியாய் பத்திரம் எழுதி"

அவனின் காதலில்
முகம் விகசிக்க
இதழ் விரிய சிரித்தாள்
பெண்ணவளும்
தன்னை மணப்பதற்காய்
தன் வேலை பறிபோனதாய்
கூறி நாடகமாடிய
அவளவனை எண்ணி...

அவளின் தாய்மாமன்
கௌரவத்திற்காய்
இவள் குடும்பத்திடம்
பகைமை பாராட்ட...

ஊரறியா தங்கள் காதலை..

தான் உரைத்த பொய்யால்
காதல் மணமாய் அல்லாது
பெரியவர்கள் பார்த்து
செய்வித்த திருமணமாய்
மாற்றினான் அக்கள்வன்...

அவளின் மனதை மட்டுமே
கொள்ளையிட்ட
அவளின் கள்வன்....

-- நர்மதா சுப்ரமணியம்

FB_IMG_1523727812244.jpg
 
Last edited:
Top