Gomathi Nandhini
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
5 ...
கிழக்கே உதித்த ஆதவன் தன் கதிர்களால் மக்களை ரட்சிக்கத் தொடங்கிய காலை நேரம்.
திருமண மஹால் முழுதும் நிரம்பி இருந்த பேச்சுக் குரல்களும், சிரிப்பு சத்தமும், மேள, நாதஸ்வர ஓசையும் அங்கிருந்த எல்லோர் மனதிலும் இதம் பரப்பி இருந்தது.
மனையின் நடுவே அக்கினி குண்டமும்,அதன் ஒரு பக்கம் மணமக்கள் அமர ஜமுக்காலம் விரித்திருக்க மற்றொரு பக்கம் அய்யர் அமர்ந்து "மஞ்சள் எடுத்து வாங்கோ, ஒரு டம்ளரில் தண்ணீர் தாங்கோ "
என தாரணி, வைஷுவிடம் தேவையானதை எடுத்துவர சொல்லிக் கொண்டிருந்தார்.
மணப்பெண்ணை அழைத்து அவளின் நாத்தி முறைப் பெண்களிடம் இருந்து அரிசி, தேங்காய், வெற்றிலை பாக்கை முந்தானையில் வாங்கிக்க சொல்லிய ப்ரோஹிதர் ;
தாராணியை நிச்சயப் பட்டுப் புடவையை தாம்பளத்தில் வைத்து சவிதாவிடம் குடுக்க சொன்னார்.
அதை அவள் வாங்கியவுடன் மணமகள் அறைக்கு அழைத்து சென்றனர் தாரணியும், வைஷ்ணவியும்.
அடுத்ததாக மனைக்கு வந்த மதிநந்தன் தன் பெற்றோருக்கு பாத பூஜை செய்தான். பின்பு அவனின் தாய்மாமன் மதி கையில் காப்பு அணிவித்து, முஹூர்த்த ஆடையை அவனிடம் குடுத்தார்.
அதை மாற்றி வரும்படி அவனை அனுப்பிய ப்ரோஹிதர் சவிதா மேடைக்கு வந்ததும் அவள் பெற்றோருக்கு பாத பூஜை செய்வித்து, காப்பு கட்ட தாய் மாமனை அழைத்தார்.
அய்யர், "பொண்ணோட தாய் மாமா வாங்கோ "என்றதும் தனது மீசையை முறுக்கிவிட்டு மனைக்கு வந்தார் முத்தரசியின் அண்ணனும், ஹரியின் தந்தையுமான ரத்தினவேல்.
தன் தங்கை மகள் கையில் அவர் காப்பு அணிவித்து, முஹூர்த்த பட்டுப் புடவை இருந்த தாம்பளத்தை குடுத்தார்.
அதை வாங்கிக்கொண்டு தன் நாத்திகளின் (தாரு, வைஷு) கைகளை பிடித்து அவர்கள் பின்னோடு சென்றாள்.
பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீர அழகுடன் விஷாலின் கைபிடித்து மேடையை அடைந்தான் விழா நாயகன் மதிநந்தன்.
அவன் கையில் பூ செண்டை கொடுத்து மனையில் அமரவைக்க அய்யர் மந்திரங்களை கூறத் தொடங்கினார்.
மணமகள் அறையில்....
அரக்கு நிறத்து சேலை அதற்கு பொருத்தமாய் ஆரி ஒர்க் செய்திருந்த அதே வண்ண சட்டை, கழுத்தில் ஆன்ட்டிக் வகையை சேர்ந்த ஆரம், நெக்லஸ்... காதில் குடை ஜிமிக்கி... கைக்கு தங்க வளையல்கள்.... இன்னும் நெற்றிசுட்டி, ஒட்டியாணம், வங்கி என தலை முதல் கால் வரை நகைகளை இழைத்து தங்க சிலையென பார்ப்போர் வியக்கும் வகையில் நின்றிருந்தாள் சவிதா.
தம் கைகளால் அவள் முகத்தை சுற்றி அதை நெற்றியில் வைத்து சுடக்கெடுத்து திருஷ்டி கழித்தாள் வைஷ்ணவி.
"சவிதா .. ரொம்ப அழகா இருக்க..ஒரு திரிஷ்டி பொட்டு மட்டும் வச்சுடுவோம்."என தாரணி கண்மையை எடுத்து அவளின் ஒரு கன்னத்தில் சிறு புள்ளியை வைத்தாள்.
தன் நாத்திகளின் செய்கையில் அவள் சிரிக்க அந்நேரம் சுந்தரம் உள்ளே வந்தார்.
தந்தைகளுக்கு மகள்கள் என்றாலே தனி பிரியம் தானே. அவர்கள் என்றுமே தம் மடி தவழும் சிறுபிள்ளைகளாய் எண்ணிக் கொண்டிருக்கும் தந்தை மார்களுக்கு மகவுகளின் திருமண கோலமே அவர்கள் வளர்ந்து விட்டதை உணர்த்தும்.
இங்கேயும் கண்கள் கலங்க தம் மகளின் திருமண கோலத்தை கண்டு கழித்தவர்.."என் மகள் தான் எவ்வளவு வளர்ந்து விட்டாள்."என எண்ணி சவிதாவை உச்சி முகர்ந்தார் சுந்தரம்.
"இன்றுதான் இவளை டவலில் சுற்றிய பூக் குவியலென டாக்டர் தம் கைகளில் தந்தது போல் இருக்க.. இதோ இன்னும் சிறிது நேரத்தில் அவள் இன்னோரு வீட்டு மருமகள்.."என மனதுள் நினைத்திருக்க அதை கலைத்தது
ப்ரோஹிதரின் "பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ "என்ற வாக்கியம்.
வைஷுவும், தாருவும் ஆளுக்கு ஒரு பக்கமாய் சவியின் இரு கைகளையும் பிடித்து அவளை மனைக்கு அழைத்து வந்தனர்.
அன்னமென நடந்து வந்த தன் ஜின்னுக் குட்டியை கண்கொட்டாமல் பார்த்தான் மதிநந்தன்.
சவிதா அவனின் வலப்பக்கம் வந்து அமர தன் கழுத்தை அவள் புறம் திருப்பி அவளின் அழகை அவன் ரசித்துக் கொண்டிருக்க; அதில் "மச்சான்! நேரா உட்காரு எல்லாரும் உன்ன பாத்து தான் சிரிச்சிட்டு இருக்காங்க" என்றான் விஷால்.
"தாலி கட்ட முன்னயே பையன் விழுந்துட்டானே... ஏ..
மகா இனி உன் பையன் உன்னலாம் கண்டுக்க மாட்டான் டி... அவன் ஞாபகத்துல பொண்டாட்டி மட்டும் தான் இருப்பா போலயே..."என மதியின் சொந்தக்கார பாட்டி மகாலட்சுமியிடம் கூற
"அதுக்கென்ன சித்தி.. என் பையன் மருமக கூட சந்தோஷமா இருந்தா போதும்."என்ற மகாலட்சுமியின் பதிலில் பெண்ணை பெற்றவர்கள் திருப்தியானார்கள்.
ஏனெனில் எந்த ஒரு தாயும் தன் மகன் தனக்கே முன்னுரிமை குடுக்க வேண்டும் என எண்ணுவாள்.
பெரும்பாலும் மாமியார், மருமகள் சண்டை வர காரணமும் இதுவாகத்தான் இருக்கும்.
அப்பாட்டியின் கேலியும் மதியின் மனதில் இனி சவிதாவிற்கே முதல் இடம் என்பதாய் இருந்தும் இலகுவாய் அதை ஏற்றுக்கொண்டு சவிதா எங்கள் வீட்டு பெண் என உணர்த்திய மகாவின் பதிலில் இனி தன் மகள் பற்றிய கவலை இல்லை.
நம்மை போலவே அவளை இவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நிம்மதி சுந்தரம், முத்தரசியின் மனதில் பிறந்தது.
மதியின் தன்னை மறந்த செய்கையில் சுற்றி இருந்த உறவுகளின் கிண்டல் சவியின் மனதில் கோபத்தைத் தூண்டியது.
மதியை நோக்கி அனல் கக்கும் பார்வையை வீசினாள். அதில் இத்துனை நேரம் மனதில் பரவி இருந்த இதம் மறைய தனது காதல் பார்வையை மாற்றி நேராக அமர்ந்து கொண்டான்.
"அய்யயோ... நம்ம கண்ணகி கண்ணாலயே எரிச்சுருவா...இனி அடக்க ஒடுக்கமா இருக்க வேண்டிதான்...இவுங்க குதுகலத்துல என் வாழ்கைல கும்மி அடிச்சிடுவாங்க போலயே "என மனதுள் புலம்பியவன் நல்ல பிள்ளையாய் முகத்தை வைத்துக் கொள்ள
அதே நேரம் "கெட்டிமேளம்... கெட்டிமேளம் "என்ற அய்யர் மஞ்சள் கயிற்றில் பொன் சரடு கோர்த்த மாங்கல்யத்தை மதிநந்தன் கையில் தர.. அதை தன் மனங் கவர்ந்தவளின் மணிக் கழுத்தில் பூட்டினான்.
தலை தாழ்த்தி இருந்த சவிதாவின் மனதில்
இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டது சரியா? ஆதி, என்ன மன்னிச்சுரு இதைத் தடுக்க நான் முயற்சி செஞ்சும் நடந்துடுச்சு. உனக்கு நான் துரோகம் செய்ய நினைக்கல. எவ்ளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த பந்தத்துல இருந்து வெளிய வந்துடுவேன்."என்பன ஓடிக் கொண்டிருக்க
அவளின் தலையை நிமிர்த்தி நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து விட்டான் புது மாப்பிள்ளை.
தனக்கு நேர் எதிரே நின்றிருந்த தந்தையின் கண்களில் ஆனந்த கண்ணீரும் ,இதழில் தவழ்ந்த புன்னகையும் சவிதாவின் மனக்கிலேசத்தை போக்கி சிறிது தெளிய வைத்தது.
அவளின் ஒரு மனம் "என் அப்பாவின் நிம்மதிக்காவும், சந்தோஷத்திற்காகவும் எதையும் செய்யலாம்"என எண்ண
இன்னோரு மனமோ அதற்கு நேர் எதிராய் "இது தவறு.. ஆதிக்கு செய்யும் துரோகம்."என வாதிட்டது.
அவளின் மன போராட்டங்கள் எதையும் அறியாமல் தான் முதன் முதலில் பார்த்து காதல் வயப்பட்ட பெண்ணையே மணந்து கொண்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்தான் சவியின் மதி.
-தொடரும்.