வைஷுவிற்க்கு இன்று கோபம் தலைக்கேறியது. அந்த ஆகாஷ் என்ன அவ்வளவு பெரிய இவனா?? இன்னைக்கு காலேஜ் வந்தா நான் பேசணும், அவன் கூட வெளிய போகணும்.....அம்மாவே இப்படி சொல்றாங்க, வர வர அம்மா சொல்றது செய்யறது எதுவும் பிடிக்கல.....மனதிற்குள் புலம்பியவாறே காலேஜ் கிளம்பி கொண்டு இருந்தாள். பின்னே நேரில் சிவகாமியிடம் பேச முடியுமா??
வைஷுவிற்க்கு ஆகாஷ் மீது கோபம் தான், ஆனாலும் அம்மா சொல்படி நடக்கும் கிளிபிள்ளை, இப்போது அம்மா அவனோடு பேசு என்பதால் பேசுகிறாள், இல்லையென்றால் பேசமாட்டாள். ராதாவை விட ஒரு வயது பெரியவளாக இருந்தாலும் அவளது தெளிவு இவள் கிடையாது, அதுவே சிவகாமிக்கு பெரிய குறை. இந்த ஆத்திரத்தின் வெளிப்பாடே ராதாவின் மேல் விழுந்தது, எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் அசராமல் வாயை திறக்காமல் சாதிக்கும் ராதா ஒரு புறம், எதையும் ஆராயாமல் அந்த நேரத்திற்கு தன் உணர்வுகளை குழந்தை போல வெளிபடுத்தும் தன் மகள் என அவரது ஒப்பிடே அவரின் கோபத்திற்கு காரணம்.
ஆகாஷ் மரத்தடியில் நின்று கொண்டு தன் காதலிக்கு தாலி கட்டிய நிகழ்வை எண்ணி மனதிற்குள் சந்தோஷபட்டு கொண்டிருந்தான். நிச்சய புடவை எடுத்த பிறகு அவளை காணாது ஏங்கிய மனதை அடக்கவே இன்றைய சந்திப்பு. வைஷுவை நினைப்பதே அவனுக்கு அவ்வளவு சுகமாக இருந்தது, அவளது குழந்தைத்தனம் அவனை மிகவும் கவர்ந்தது.
தன் நினைவுகளின் நாயகி அருகில் நிற்பது கூட தெரியாமல் அவளை நினைத்து கொண்டு இருந்தவன் பக்கத்தில் அரவம் கேட்டு திரும்பினான்.
ஹாய் வைஷு எப்படி இருக்க???
ம்ம் நல்லா இருக்கேன்...
காலேஜ் முடிஞ்சுதா???
அதனாலதான் இங்க நிற்கிறேன்....
மேடம் ரொம்ப கோபமா இருக்காங்க போல இருக்கே.....உள்ளுக்குள் நினைத்தவன், இவளை எப்படி சரி செய்வது.....””எதாவது சாப்பிடலாமா??””
ம்ம் என்றவளை, அருகில் இருக்கும் காபி ஷாப் அழைத்து சென்று பிடித்தமானதை வாங்கி கொடுத்து சரி கட்டினான்.
வைஷுவின் இந்த குணம் ஆகாஷை வெகுவாக கவர்ந்தது.
வைஷு உனக்கு என் மேல கோபம் இல்லையா???
நிறைய இருந்தது......
இருந்தது னா இப்போ இல்லையா???
அம்மா உங்க கிட்ட கோப பட கூடாதுன்னு சொன்னாங்க....
அம்மா எது சொன்னாலும் செய்வியா???
ம்ம்ம்.....
இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னா???
அம்மா சொல்றபடி கேட்பேன்.
ஆகாஷ் அவளது நாடியை பிடித்து விட்டான். அவளது பலம் பலகீனம் அனைத்தும் அவளது தாய். குட்டி பாப்பா, கல்யாணத்துக்கு முன்னாடி ஓகே இனிமே இந்த ஆகாஷ் இருக்கான் உனக்கு என்று மனதிற்குள் சொல்லி கொண்டான்.
சரி நம்ம நிச்சயத்திற்கு உனக்கு என்ன பரிசு வேண்டும்....
எதுவும் வேண்டாம்....
வைர மோதிரம்
வேண்டாம்....
அவ்ளோ நல்லவளா நீ??? மனதில் நினைத்தவன் வெளியில் சொல்லவில்லை.
சரி நீ எதுவும் சொல்ல வேண்டாம் நானே உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தரேன்...
பத்திரமாக அவளை வீட்டில் விட்டு அவன் வீடு திரும்பினான்.
*************
ஆகாஷ் வீட்டின் முன் தங்கள் வசதியை காட்ட சிவகாமியும் ஸ்ரீனிவாசனும் நிச்சயத்தை வெகு விமரிசையாக ஏற்பாடு செய்து இருந்தனர். தங்கள் சம்பந்தியின் வசதியை காட்ட சொந்தம் பந்தம் அனைவரையும் அழைத்தனர்.
நிச்சயதார்த்தம், மாலை ஒரு பெரிய ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது. மாப்பிள்ளைக்கு மோதிரம், செயின், விலையுயர்ந்த ஆடை, இருபத்தியொரு தட்டு வரிசை என ஏற்பாடுகள் தயாராக இருந்தது. முன்றைய தினமே வந்து தனம் பாட்டி, லஷ்மி சுமித்ரா சொந்த பந்தம் அனைவரும் சிவகாமிக்கு உதவினர்.
கவுசல்யா ராதாவை பார்க்கும் ஆசையில் நிச்சயதன்று காலையே ராதா வீட்டிற்க்கு வந்து விட்டாள். ராதாவும் அவளை ஆசையாய் வரவேற்று குழந்தையுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ந்தாள்.
மாலை நிச்சயத்திற்கு அனைவரும் கிளம்பினர். ராதா கவுசல்யாவை மிகவும் அழகாக அலங்கரித்தாள். அவள் கட்டும் புடவையை மிகவும் அழகாக கட்டி விட்டு மிதமான மேக்கப் போட்டு, அழகிய சிகை அலங்காரத்துடன் தயாராக அவளை பார்த்த பலராம்....கௌசி, கண்டிப்பா பங்க்ஷன் போகனுமா???
உதை....என்று கை விரலால் பத்திரம் காட்ட....
“பிள்ளை இல்லாத ஊரில் கிழவன் துள்ளி விளையாடின கதையா, நான் இங்க இருக்கும் போது உங்க ஆட்டம் தாங்கவில்லை பா”.....நொடித்தபடி கிருஷ்ணா வர.....
கவுசல்யா வெட்கப்பட, “உனக்கு ஏன்டா வயத்தெரிச்சல்....நான் என் வைப் கூட ஆட்டம் போடுறேன், நீ முடிஞ்சா உன் வைப் கூட ஆட்டம் போடு நான் எதுவும் கேட்க மாட்டேன்.” பலராம் கிண்டல் செய்ய அவர்களை செல்லமாக முறைத்தபடி அறைக்குள் சென்றான் கிருஷ்ணா.
பப்ளிமாஸ் ரெடியா??? குரல் கொடுத்தபடி கிருஷ்ணா நுழைய, தயாராகி இருந்தவள் இவன் குரல் கேட்டு அப்படியே நிற்க, கிருஷ்ணா வெகு நிதானமாக அவள் அருகில் வந்தான்.
வெங்காய நிற புடவையில் மரூன் கலர் மெல்லிய சரிகையிட்ட பட்டு புடவையை தனக்கு ஏற்றார் போல உடுத்தி, பாப் கட் போன்ற சிகை அலங்காரத்தில் அசத்தலாக இருந்தாள்.
பாப்பு கலக்கலா இருக்குற.....
சீக்கிரம் ரெடி ஆகுங்க.... நான் வெளிய வெயிட் பண்றேன் என்று ஓடியவளை பிடித்து நிறுத்தியவன்.....”நீ ஒரு மக்கு, வெளிய பூஜை வேலை கரடியா போய்டாதே ”
அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்து உதட்டை கடித்து நிற்க, இப்படியெல்லாம் நின்னா நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்லை என்று கிருஷ்ணா அருகில் வர, மாமா டைம் ஆச்சு என்று அவனை குளியலறைக்கு தள்ளி விட்டாள் அவனது செல்ல மனையாட்டி.
அனைவருடனும் ராதா மிகுந்த சந்தோஷ மனநிலையில் விழாவிற்கு கிளம்பினாள்....திரும்பி வரும் போது அவளது சந்தோஷம் நிலைத்திருக்குமா?????
தொடரும்.........