தாமரை
தாமரை
ப்பா..
உ
NPNN 9
அம்பாசிடர் காரில் திருநெல்வேலியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். நெல்லையப்பர் உறங்கும் மனைவிக்கு தன் மடியை கொடுத்தவராய் , அலுங்கலில் விழாதவாறு லேசாய் பற்றியவாறு அமர்ந்து இருக்க, கரடு முரடான சாலையில் அதிகம் குலுங்காமல் வண்டியோட்டிக் கொண்டிருந்தான் மகிழ்வேந்தன் .
மடியில் இருந்த பெட்டியில் லேசாக தட்டிய படி கார் ஜன்னலின் வழியே ஓடும் தாமிரபரணியாற்றை ரசித்தவாறு இருந்த மாமன் மகனை ஒரு முறை பார்த்தவன்,
ஏன் கார்த்தி, இந்த காரியம் எனக்குப் பிடிக்கல . நீ வேற நான் வேறையாடே.. ஏன் என் பெயர்ல இருந்த நிலத்தை வச்சு ******* நிதி நிறுவனத்தில கடன் வாங்கலாம் னா வேணாம் னு இரண்டு பேரும் சொல்றீங்க . இப்போ மூனு வருஸம் காட்டை ஒத்திக்கு விட்டாச்சின்னு சொல்றீங்க. நா வேற ஏற்பாடு பண்ணிட்டு இருந்தேன் , சத்த பொறுத்துருக்கலாம். என்றான் மெல்லிய குரலில்.
விடு மாப்ள.. அப்பா முதல்ல செய்தது சரி வராது கேட்டியா.. அத இன்னும் செல மாசம் அப்படியே விட்டா, கடன் அதுக்கு வட்டி, வட்டி போடற குட்டி ன்னு நாளபின்ன பெரிய தலவலியா போய்டும். என்னாதா மூனு காட்லயும் நல்லா வெள்ளாமை வந்தாலும், அசலை மீறிட்டு வட்டி போய்டும். எனது உத்யோக அனுபவத்தில சொல்றேன், இப்ப பண்ணிருக்கது சேஃப். ஒரு பார்ட் தோட்டத்தை ஒத்திக்கு விடறது. அதும் பாரு, நல்ல தோதா ஒரு பக்கம் எல்லாமே பழ மரங்கள், எடுக்கலாம் விக்கலாம். வெவசாய முறை ஏதும் மாத்தக் கூடாது, மண்ணை ஆர்கானிக் ஃபார்மிங் மட்டுமே பண்ணனும் ஓனரா எனது பார்வைக்கு உட்பட்டுன்னு தெளிவா பத்திரத்தில எழுதியாச்சு. இப்ப பாரு, முடியற நேரத்தில எல்லாம் திரும்ப நம்ப கைக்கு வந்திடும். மரங்களுக்கு இன்ஷ்யூரன்ஸூம் போட்டாச்சு.
அதிருப்தியாய் தலையசைத்தான் . எடுத்த ஆட்களோட தாட்டியம் தெரியாம பேசுற.
ப்ச், நீ இந்த எக்ஸாம் கவனம் வச்சு முடி. அதுக்கப்புறம் வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டா இதான் ஒனக்கு தோதாருக்கும். நீலூ மஞ்சு எல்லாம் கல்யாணம் பண்ணி குடும்பத்த பார்ப்பாங்களோ வயக்காட்ட பாப்பாங்களா.. கவனிக்க ஏலாம ஆனதுக்கு அப்புறமா விடறது விட இப்பவே பண்றது நல்லது. என்றான் வேகமாய்.
தாடை இறுக அமைதியாய் வண்டியோட்டுபவனின் தொடையில் கை வைத்தவன், என்னெயெல்லா விட பெரிய வேலைல இருக்க வேண்டியவன் டே நீ. இன்னமும் இந்த விக்கிரம சிங்கபுரத்துக்குளேளயே இருந்துறலாம்னு நினைக்காதே. அதுக்கு மாமாவும் சம்மதிக்க மாட்டாக தெரியும் தானே. என்றான்.
மறுப்பாய் தலையசைத்தவன், என்ன வேல? உலகத்துக்கே பொதுவா சொல்லி வச்சது, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்.. என்றவன் அத்துடன் நிறுத்தி, அதெல்லாம் புடிக்காம தானே நீ போய் புனேல பெரிய வேலைல இருக்க.. என்ன சொல்றது.. என்றவன் சில நொடிகள் கழித்து, ஒன்ன சொல்லி குத்தமில்ல. என்னைக்கு மாடு மேய்க்கிறது, சேத்துல வேல பாக்கது, படிப்பு வராதவன் பண்ற வேலன்னு ஏச ஆரப்பிச்சாங்களோ அன்னிக்கு ஆரம்பிச்சது கேடு காலம். உழவும் தொழிலும் இரு கண்கள் டே.. அதாவது ஒரு நாடு முன்னேறனும்னா, தராசுல உழவு ஒரு பக்கம்னா தொழில்கள் அம்புட்டு ம் மறு பக்கத்துல.. அம்புட்டு வெயிட்டு. ஆனா அது நமக்கு தெரியாது. தமிழ் மட்டுமில்ல விவசாயமும் மெல்லச் சாகும் , இந்த ஃபிக்ஷனு படங்கள்ல வாராப் போல எல்லாரும் மாத்திரைய தான் சாப்பாடா முழுங்குவானுங்களா இருக்கும். என்று சொல்லி பெருமூச்சு விட்டவன், நம்ம தலைமுறைல நம்ம கண்ணு முன்னால அது வந்துரக்கூடாது கார்த்தி. என்றவனின் அலைபேசி அடித்தது.
கொப்பரக்கா மண்டையன் காலிங் என்று வர, பார்த்த கார்த்தி, நகைத்தவாறே, ஆருடே இந்த கொப்பரக்கா மண்டையன்? என்ற அவனின் நகைப்பு இவனுக்கும் முறுவலைத் தர,
எண்ண ஆட்ட கொப்பர அனுப்ப சொல்லிருந்தே பண்ணுணானான்னு சாரிக்கனும். அதா, ரிமைண்டர்.
என்றவாறே எடுத்தவன் என்னடே, கோழி ஆடு தீவனச் சோலியெல்லா முடிச்சுட்டியா?
…………………
என்ன அவனா ? அவன் என்னாத்துக்கு, நீலுட்டையா? என்றவன் ஓரமாய் வண்டியை நிறுத்தி இருந்தான்.
******************
வழக்கம் போல மாலை வேளையில் மாட்டுக் காடியில் இருந்த மாடுகளுக்கு சாம்பிராணிப் புகை இட்டுக் கொண்டிருந்த நீலாம்பரியின் முகம் இறுகியிருந்தது. மனம் இன்று முழுவதும் நடந்த நிகழ்வுகளின் அதிர்வில் களைத்து இருந்தது. இயந்திரமாய் கைகள் சாம்பிராணி இடுவதும்.. கால்கள் எங்கு சொல்கிறோம் என்று அறியாமலேயே மாடுகளை கன்றுகளை சுற்றி வந்து புகை காட்டுவதும் ஆக வேலை நடந்து கொண்டிருந்தது. சில நாட்களுக்கு முன்பே பிறந்து இருந்த கன்றுக் குட்டி இவளது வருகை கண்டு மிரண்டு எழ.. தட்டை இடக் கைக்கு மாற்றியவளின் வலக்கரம் அக்கன்றுக் குட்டியின் கயிற்றைப் பற்றி இருந்தது. பாலில் குங்குமம் கலந்தாற் போல நிறத்தில் இருந்த அதன் உடலை மெதுவாக வருடினாள்.
சில வாரங்களிலேயே அவளின் தோழனாக ஆகிவிட்டிருந்த புங்கனூர் குட்டை காளை வந்து இடையில் முட்டியதும் அனிச்சை செயலாய் தட்டை உயர்த்தி,
ஆச்சரியமாய் திரும்பி பார்த்தாள்
.உன்னிய யார்டா அவுத்து விட்டது என்றவள், தட்டை அவசரமாய் அங்கிருந்த குட்டை சுவரில் வைத்து விட்டு திரும்ப அங்கே மகிழ் வேந்தன் நின்று கொண்டிருந்தான்.
எப்பத்தான் வந்தீங்க. போன காரியம் சுமுகமா முடிஞ்சதா? கிருஷ்ணா கோட்ஸ் பெரியவரைப் பாத்தீங்களா ? ஊர் பெரியவங்க யாரு யாரு வந்தாங்க. என்று கேள்விகளை தொடுத்தவாறு நெருங்க,
அவளிடம் ஒட்டி நின்ற காளையை இழுத்து சென்றவாறே, இவனை யாரு அந்த மூலைல கட்டினா நீலு. படுதாவில பாதி பிச்சு எடுத்துட்டான்.. என்றவாறு வளையத்தில் பொருத்தி கட்டினான்.
அது கோனாரு லட்சுமிட்ட பால் பீச்சிற நேரம், சேட்டை பண்ணி எண்ணை கிண்ணத்த கவுத்துட்டான். அதான் அவர் எடுத்து அந்த ஓரமா கட்டினாரு. நீங்க சொல்லுங்க.. என்ன நடந்தது.
பெருமூச்சு விட்டவன் , "என்ன நடக்கனும் நீலு? உங்கண்ணன்ட்டயும், பெரிய மாமாமட்டையும் படிச்சு படிச்சு சொன்னேன். பண்ணை நிலங்கள வில்லங்கப் படுத்தாதீங்கன்னு. கேட்கல. இப்போவும் ஒத்திக்கு விட்டு, கார்த்தி பத்திரத்தில எழுதிட்டா அப்படியே நடக்கும்னு கோட்டித்தனமா நம்புறான் , அந்த பாரி, காரி பயலுகளை நம்பாதேன்னா கேட்கல. பஞ்சாயத்து நடக்க எடத்தில அந்த சேதுபதி சின்ன மாமாட்ட அவ்ளோ சந்தேகம்னா பொண்ணை கொடுங்கறாரு. சின்ன மாமாட்ட இந்தப் பொண்ணு கொடுக்கற பேச்ச உடனே நிறுந்துங்கன்னா.. அதையும் கேட்கல.. என்றவன் திரும்பி அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அந்த பயட்ட பேச்சு வச்சுக்காதேன்னு ஒனக்கும் சொன்னே.. நீயும் கேட்கலை.. எனவும்..
இதயம் அழுத்தட்பட்ட உணர்வில் உடலில் நடுக்கம் ஓடத் தலை குனிந்தாள்.
ஸாரி அத்தான், தப்புதான். என சன்னமாய் முணுமுணுக்க, மனமோ காலையில் நடந்த நிகழ்வுகளின் மறு நினைவில் லேசாய் நடுங்கியது.
தெனாவட்டாய் கிணற்றுத் திண்டில் கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தவன் பேச்சும் அதே போலவே வந்தது.
இந்த கிணறு, சுத்திலும் இருக்கும் நிலம் இனிமே எங்களுக்குத்தா. இந்த மரங்களுக்கும் பயிர்களுக்கும் நாங்க கொடுக்கறது தா. என்றவன் நிறுத்தி அவளையே ஆழமாய் பார்த்தான்,
நா என்ன பண்ணனும்னு நீ சொல்றியா? மூனு வருஷம் பேப்பர்ல இருக்கது படிச்ச நீயும் வெவசாயத்தை சைடு பிஸினஸா பண்ற அவனும் என்ன செஞ்சு வச்சிருக்கீங்க, நாங்க பரம்பர பரம்பரையா இது போல பல நெலங்களக் கட்டியாண்டவங்க. இனி பாக்கப் போற நீ இந்த பாரியோட ஆட்டத்தை.. என்னையவா விரல நீட்டி பேசுற? என்றவன் குரல் என்னவோ பக்கத்தில் நின்ற அவளுக்கு மட்டும் கேட்கும் விதம் தணிவாக இருந்தது. அதிலடித்த அனலோ.. இவளின் காதுகள் சூடேறின.
அவனிட்ட "டி" வேறு முகத்தை கோபத்தில் சிவக்க வைக்க, மூச்சில் நெஞ்சு ஏறியிறங்க.. சுற்றிலும் பார்த்தவள், தூரத்தில் செந்திலின் உருவம் கண்டு, அண்ணே.. என்று உரக்க அழைத்தாள்.
அவளைச் சற்றும் கண்டு கொள்ளாதவனாய் தனது அலைபேசி எடுத்து ஏதோ செய்வதைக் கண்டவள் , கையோடு அலைபேசி எடுத்து வராத தன் மடத்தனத்தை நொந்தவாறே, அண்ணே… செந்திலண்ணே என்று உரக்க அழைத்தாள்.
அப்போது அலைபேசி அவளின் முன் நீட்டப்பட, அதில் ஏதோ பத்திரத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பியின் அடியில் அண்ணன் மற்றும் பெரிய தந்தை கையெழுத்தைக் கண்டு விதிர்த்து உற்றுப் பார்க்க முயல,
இதோட காப்பி இன்னும் செத்த நேரத்தில உன் அத்தான் கொணார்ந்து காட்டுவான். அதனால இங்கேருந்து கத்தி காது ஜவ்வக் கிழிக்காத போய் அந்த கோழி ஆட்டுப்பட்டி எப்படி காலி பண்ணலாம்னு ஒன் அடிப்பொடியோட சேர்ந்து யோசன பண்ணு. இன்னிக்கு ஒரு நாள் தான் டைம் தர்றேன். போ போ என்றவனின் குரல் மீண்டும் காதுகளில் ஒலிக்க , இந்த ராங்கிக்காரன் இருக்கும் குடும்பத்திலா தன் தங்கை? என்ற கடுப்புடன் முறைத்தவளை அதிர வைத்தன அடுத்து அவன் சொன்ன வார்த்தைகள்!!!!!!
இப்போதும் வயிறு பிசைய, நிமிர்ந்தவள்
மகிழ்வேந்தனின் முகம் பார்த்து தயக்கத்துடன்,
அப்பா பொண்ணு கொடுக்கற பேச்சுக்கு சரின்னா சொல்லிட்டாங்க அத்தான்?
காளையை கட்டி விட்டு நிமிர்ந்தவன், ஆமென்பதாய் தலையசைத்து, வீட்ல கலந்து பேசி சொல்றோம்னு சொன்னாங்கதான். ஆனா அவருக்கு தான் பாவநாசத்து முடிசூட்டா ராஜாக்கள் சேனாபதி குடும்பத்தில சம்பந்தம் கலக்குற ஆசை வந்துடுச்சே. மஞ்சுவாச்சும் ஏதாச்சும் சொல்லுவான்னு பாத்தா உங்க இஷ்டம்ப்பா அப்படிங்கறா.. கார்த்தி முகத்துல, தான் கொண்டாந்த சம்பந்த்ததை விட பெரிய இடத்துல கொடுக்கப் போற சந்தோஷம் வந்துடுச்சு. என்றான் புகை வருவது நின்று போன அனலைப் பார்த்தவாறு,
அவனின் பார்வை தொடர்ந்தவள், அவசரமாய் லேசாய் ஊதி விட்டு, தன் கையில் உள்ள டப்பாவில் இருந்து சாம்பிராணியை போட்டு இன்னமும் புகைய வைத்தவள்,
அவங்க எல்லாம் அந்த பாரிய பாத்ததில்ல அதனால சொல்றாங்களா இருக்கும். ஆனா அப்பா முன்பு அவங்க டேவிட் அண்ணாச்சி நிலம் வாங்கும் போது பண்ண போட்டி , கொடுத்த கொடச்சல் எல்லாம் மறந்துட்டாங்களோன்னு தோனுது. நீங்க கவலப்படாத இருங்கத்தான் நான் மஞ்சுட்ட அப்பாட்ட பேசறேன். என்றவாறு சாம்பிராணி கரண்டியை எடுத்தாள்.
***********
சின்னத்திரையில் ஏதோ ஒரு சீரியலின் மறு ஒளிபரப்பு ஓடிக் கொண்டிருக்க, அமர்ந்து ஏதோ விடைத்தாள்களை திருத்தம் செய்தவாறு இருந்த தங்கையின் அருகில் வழக்கத்துக்கு மாறாய் அமர்ந்து இருந்த அப்பாச்சியையும், ஏதோ பேசிக் கொண்டு இருந்த தந்தையையும் கண்டவாறு வந்த நீலாம்பரி, தங்கை தங்களுக்கு சொல்லும் அதே பதிலை அதுதான், மௌனமாக காது கேட்டும் கேட்காதது போல வேலை செய்வதை பார்த்தவளிற்கு சிரிப்பு ஒருபுறம், கோபம் மறுபுறம்.
தனியாக பேசிக் கொண்டிருந்த தொலைக்காட்சியை நிறுத்தியவள், தானும் தங்கை முன் வந்து அமர்ந்தாள்.
சிவந்தியப்பர், " அவங்க எவ்ளோ பெரிய ஆளுங்க தெரியுமா பிள்ள? அந்த பெரிய சேதுபதி , பாவநாசமே அவரு பேரு கேட்டா கையெடுத்துக் கும்பிடும்.. அவரே என்னிய கூப்பிட்டு கேட்டாரு தெரியுமாடா? உங்க பொண்ண என் தம்பி மகனுக்குத் தாறீங்களான்னு.. நீ வேல பாக்கிற காலேஜே அவுக காலேஜ் தான் தெரியும் தானே.. நாள பின்ன நீதா கரெஸ்பாண்டட்.. எம்புட்டு சந்தோஸமா இருக்கு சொல்லேயிலே.. என்று மகிழ்ந்தவரின் கையை தொட்டு அவரின் தாயார், அதெல்லா சரிதா அப்பு. ஆனா பொண்ண ரொம்ப வசதியான எடத்துல கொடுத்துப்புட்டு, நாம நாளபின்ன அவுக வூட்டு சோபா போட்ருக்க எடந்தாண்டி போய் நம்ம புள்ளைய விசாரிக்க கூட முடியாது கேட்டியா? அவுக தாத்தன், நம்ம கடை தாண்டி வில்லு வண்டீல போவாக.. உடனே அங்கன நடமாடிட்டு இருக்க ஆக்கள் எல்லாம் தோள்ல இருந்த துண்டை எடுத்து இடுப்புல வச்சிட்டு கால்ல செருப்பு போட்ருந்தா கலட்டி ஓரமா ஒளிய வச்சிடனும்.. இல்லாட்டி போற போக்குல சவுக்குல தட்டிட்டு போற கவுரத புடிச்ச குடும்பமாக்கும்..
ஆங்.. அதா அதா எம்மோ.. அந்த மாதிரி நம்ம பெரியவங்க கைகட்டி நின்ன குடும்பத்தில நம்ம வீட்டு பொண்ணு, கால் மேல காலு போட்டு ராணியா வாழப் போறது எவளோ பெரிய கவுரதை.. அதும் அவுகளா வந்து கேட்காக.. என்று தான் பிடித்த பிடியிலேயே நின்றார் சிவந்தியப்பர்.
'காலு மேல காலா.. விடுவானா அந்த பாரி?' என்று திகைத்த படி தங்கையின் முகம் கூர்ந்து கவனித்தாள் நீலாம்பரி.
" கார்த்தி கொணாந்த எடத்துல வேணா நீ சொல்லுதது நடக்கும் அப்பு.. அவக அம்மையும் அந்த மாப்பிள்ள தம்பியும் எம்புட்டு மருவாதியா பேசுனாக.. சாதகம் கூட பத்துப் பொருத்தமும் கூடி வந்திருக்கு. தொலவட்டா இருக்காகங்கறது தவிர ஒரு கொற சொல்ல முடியாது.. அவங்க மேல.." என்ற அப்பாச்சியின் பேச்சிற்கு தங்கையின் முகம் கவனித்த நீலாம்பரிக்கு ஏமாற்றமே..
அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியாமல், யாரிடமோ பேசுவது போல திருத்தம் செய்து மதிப்பெண் போட்டுக் கொண்டிருந்த தங்கையின் கையை பற்றி நிறுத்தி பேனாவை வாங்கி வைத்தவள்,
"பெரியவங்களுக்கு பதில் சொல்லு மஞ்சு. என்றாள் அழுத்தமான குரலில்.
அக்கா, மச்சான் கல்யாணம் முடியட்டும் அப்புறம் பாக்கலாம். என்றாள் தேவ மஞ்சரி அமைதியாகவே.
அதா பெரியம்மை ஆசப்படுதாளே.. உங்க கல்லாணங்கள கண்ணால பாக்கனும்னு.. என்ற அப்பாச்சியின் குரல் கம்மியது, ஒரு வேள அது அவ கடேசீ ஆசையாக் கூட இருக்கலாம் என்றார்.
மனம் குலுங்க கண்கள் கலங்க இரு பெண்களும் தந்தையைப் பெற்றவளின் முகம் பார்த்தனர்.
ஆமாங் கண்ணுகளா.. அவ ஆசை.. உங்கள தம் பொண்ணுங்க மாதிரி வளத்தவ. அவ கேட்கறது செய்யனும்.
எங்கோ பார்த்தவாறு மஞ்சரி, " நீங்க பெரியவங்க என்ன முடிவு பண்றீங்களோ அது படியே செய்யுங்க. எனக்கு.. என்றவளின் குரல் உள்ளே போக, வெட்கமோ என்று எண்ண முடியாதபடி முகம் களையிழந்து கிடத்தது. தனது நாற்காலியை பின் தள்ளியவள், எழுந்து அருகில் இருந்த அறைக்குள் நுழைய அவளைப் பார்வையால் பின்தொடர்ந்தாள் நீலாம்பரி.
சிவந்தியப்பர், அப்போ உடனே பெரிய சேதுபதி ஐயா ட்ட சொல்லிடலாம் தானே அம்மா.. என உற்சாகமாக கேட்க..
மறுப்பாக தலையசைத்த தாயின் கை பிடித்தவர்,
உறுதியான குரலில்,
ம்மா இதான் சரிவரும். வேந்தன், அத்தான் ஆசப்படி கவர்ன்மெண்ட் ஆஃபீஸராகிடுவான். நீலாம்பரி அவங்கூடவே போயிரும். இங்க நிலம் நீச்சை அவுக சேதுபதி குடும்பம் பொறுப்புல வுட்ரலாம். கடைங்க மட்டும் ரெண்டா புடிச்சு நானும் அண்ணாச்சியும் பாத்துக்கிடலாம். இதுதான் இப்போ நம்ம வீடு இருக்க நிலைமைக்கு சரிவரும்.. என.. அழுத்தமாய் பேச,
ஏதோ யோசனையுடன் தலையசைக்கும் அப்பாச்சியை பார்த்தவளிற்கு, இனி அவர் தடுத்து பேச மாட்டார் என்று புரிந்து போனது.
இல்லப்பா.. ஆச்சி சொல்றது போல அவங்க.. என்றவளை கையுயர்த்தி அடக்கியவர்,
அவுக இந்த வட்டாரத்தில பெரியாளுங்க பாப்பா.. அவுக கேட்டு நாம மறுத்தோம்னு சொல்ல நாயமா ஒரு காரணம் சொல்லனும். மாப்பிள்ளையோ குடும்பமோ ஏதாச்சும் கொணம் ஒழுக்கம் ஏதாச்சும் கொற இருக்கா? இருந்தா சொல்லலாம்.
இன்னிக்கு தோட்டத்தில என்ன நடந்துச்சு தெரியுமாப்பா.. GMO விதைகளும், செயற்கை உரங்களும் குவிச்சுப் போட்டு வச்சிருக்காங்க.. அவங்கட்டையே..
இடை நிறுத்தியவர், அதெல்லா இனி அவுக பாடு, நாம தலவிட தேவயில்ல கேட்டியா? நெலம் மொத்தமும் கேட்டா கூட எழுதித் தர நானும் அண்ணாச்சியும் தயாரா இருக்கோம். உனக்கும் வேந்தனுக்கும் அதுக்கு ஈடா மனை, நிலம்ன்னு மாத்திடலாம். அதான் அவன் உத்தியோகத்துக்கும் தோது..
என்றவரை மனம் கனக்கப் பார்த்தாள். இதற்கா இவ்வளவு பாடு அவன் பட்டான் ? பெருமூச்சு விட்டவள் , தங்கையைக் காண அறைக்குள் சென்றாள்.
இயந்திரம் போல , அமைதியாக துணிகளை மடித்துக் கொண்டிருந்தாள் தேவ மஞ்சரி. சன்னமாக மூக்குறிஞ்சும் ஒலி.
அவசரமாக அருகில் சென்றவள், மஞ்சு, அழறியா என்ன? கல்யாணத்தில விருப்பமில்லைனா அய்யாட்ட சொல்லு. ஏத்துக்கிடுவாக. அங்கே சரின்னு தலையாட்டிப்புட்டு இங்கே ஏன் அழறவ? என பதைப்புடன் கேட்க,
பதில் இல்லை. மிகுந்த தயக்கத்தின் பின், நீ.. யாரையாச்சும் விரும்புறாயா.. அப்படி ஏதும்னா சொல்லு.. நா அய்யாட்ட ம்ஹூம் பெரியய்யா பெரியம்மாட்ட சொல்றேன். அவுங்க பாத்துப்பாங்க. என மெதுவாய் சொன்னவளை ஏறிட்டுப் பார்த்த தேவ மஞ்சரி,
மறுப்பாய் தலையசைத்து, அப்படி எல்லாம் இல்லக்கா.. நீயாச்சும் ஏதாவுது நினைச்சு குழப்பிக்காத, என்ன நீ கல்யாணம் பண்ணிப் போயிடுவ, நா தனிக்காட்டு ராணியா இங்கே கொஞ்ச வருசம் அதிகாரம் பண்ணலாம் நினைச்சேன். ஒங்கூடவே என்னையும் பொட்டலம் கட்டி அனுப்பிடுவாங்கன்னு தெரியாம போச்சு. என்றவள் முகம் அமைதியாகி இருந்தது.
தயங்கிய நீலாம்பரி, அந்த பாரி குடும்பம் நமக்கு சரிவராது. நீ சொன்னாத் தா அய்யா கேட்பாங்க.
ஏறிட்டுப் பார்த்தவள், உங்கள விட்டு தூரமா மும்பைக்கு எல்லாம் என்னால போமுடியாதுக்கா.. வடாபாவ் சாப்பிட்டுகிட்டு அரபிக்கடலு காத்தை சுவாசிச்சுட்டு எல்லாம் இருக்க முடியாது..
சுசீயமும், தாமிரபரணி ஆத்துத் தண்ணியும் தா எனக்கு செட் ஆகும். கேட்டியா, அது தெய்வான அத்த சுட்டா என்ன, சேதுபதி வீட்ல சுட்டா என்ன? என்று சிறிதாய் சிரித்தவள்,
ஹூம் நீ கொடுத்து வச்சவக்கா, எப்பவும்..
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை..
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை…
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே ன்னு ஜாலியா பாடலாம்.. என்றவளின் குரலில் பெருமிதமும் மகிழ்வும்.
அப்போது ஹாலில் சிவந்தியப்பர் பேசும் ஒலி கேட்டது, " என்னய்யா இரண்டாவது பொண்ணைத் தானே தர்றதா சொன்னோம். இப்பத் திடீர்னு இப்படி சொல்றீங்க.. தலைக்கும் தலைக்கும் பொருத்தம் வராதே.. என்ன? மன்னிக்கனும்.. இரண்டு பொண்ணுமா.. அது அது.. சரி வராதுங்க அய்யா..
குடும்பத்தில கலந்துகிட்டு சொல்றேன்.. ம்.. பேசறேன்.. சரி. என்றவரின் குரலில்.. வயிற்றினுள் பயப்பந்து உருள அவசரமாய் ஹால் புறமாய் திரும்பினாள் நீலாம்பரி.
' என்னைக் கட்டிக்கிடறதுக்கு பாம்பு புத்துக்குள்ள கை விட்றலாமா? ஒன்ன்ன்… நிலத்துல போட்டது குப்பையா.. நாஆஆஆஆ அதைப் பொறுக்கனுமா? இரண்டுமே நீதான்டீ செய்யப் போற.. பாக்குறியா?' என்ற பாரியின் குரல் காதுக்குள் மறு ஒலிபரப்பானது..
நாயகன் ஆடுவான்..

Last edited: