தாமரை
தாமரை
உ ப்பா…
NPNN 4
"மண்ணாக நினைச்சு சும்மாத்தா இருந்தா
உன் வாழ்வு எப்போதும் தேறாது ...
பொன்னாக நினைச்சு எப்போதும் உழைச்சா
ஆனந்தம் எந்நாளும் மாறாது…
இந்த பூமியே எங்க சாமியம்மா செய்யும் வேலையே எங்க பூஜையம்மா.."
வழக்கம் போல் கிராம நாயகனின் பாடல் உரக்க ஒலித்துக் கொண்டிருக்க, மண்புழு உரத்திற்கான படுகைக் குழியில் இருந்த மண்ணை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் மகிழ் வேந்தன்.
"வேந்தா! இங்கே என்னாடா பண்ற? அந்த கோயிலு நெலத்தில புழுதி ஓட்றானுங்க அது பரவால்ல.. அங்கன பாழடைஞ்சு ஒரு கெணறு இருந்ததே, அதைத் தூர் வாருறாங்கன்னு பாத்தா.. நைசா சைடுல வெட்றானுங்க டா மாப்ள. இவனுங்க குடையிற குடைல நம்ப வரப்பு மண்ணெல்லா அதிருது.." எனவும் ஆச்சரியம் மிக நிமிர்ந்து பார்த்தான்.
"என்னாது, கோயில் கெணத்தை தூர் வார்றாங்களா? கோயில் கமிட்டி அதுக்கெல்லா சம்மதிக்க மாட்டாங்களே! தர்மகர்த்தா, செயலாலரு பொருளாலருன்னு ஆயிரம் கரைச்சல் கொடுப்பானுங்களே.."
"ம்க்கும்.. இவனுங்க செல்வாக்குதா பாதாளம் வரை பாயுதே.. கெணத்துக்குள்ள பாயாதா.. ஆனா சைடுக்கா கொடையறானுங்க மாப்ளை.. என்னான்னு பாரு.. "
கையில் உதிரி உதிரியாக விழுந்த மண்ணை ஆற்றிப் பார்த்து, அதில் நெளிந்த உழவர்களின் நண்பர்களை அன்பு பொங்கப் பார்த்தவன், சிறு முறுவலுடன் மீண்டும் குழியில் இட்டான்..
"ஏலே எசக்கி, ஒரம் ரெடியாகிடுச்சு. கவனமா சலிச்சு எடுத்து மண்புழுக்கள பிரிச்சு எடுத்து அந்த தொட்டில போடனும் கேட்டியா.. " என சத்தமிட,
செந்தில், "ப்ச். நா என்னா சொல்லிட்டு இருக்கேன் நீ.. " என்று சலித்தவனை கையமர்த்தியவன் ,
"ஏம்லே, பக்கத்து காட்ல இருக்கவேங் கூட மல்லுக்கு நிண்டுகிட்டே இருந்தா, நம்ம சோலிகள எவம்லே பாக்கறது? மூனு வருசமா வெள்ளாமை எடுக்காத விட்டது , தண்ணியில்லேன்னு தானே. புதுசா வாங்குனவே தண்ணி வாரதுக்கு உண்டான வேலையத் தானே மொதல்ல செய்வான்.. செய்யட்டும்.."
"மறுக்கா மறுக்கா என்ன மாப்ள.. நாயப்படி சைடுல , அடுத்தவன் நிலம் வரை தோண்டறது தப்பு. மண்ணு சரிஞ்சு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிப் போயிட்டா!! "
" தோண்டறவன் அதெல்லா பாத்து தா பண்ணுவா.. ஒன்னு தெரிஞ்சுக்க அவனுங்க பண்றது சட்டப்படி தப்பில்ல. அதனால அதெல்லா நாம போய் கேள்வி கேட்க முடியாது. நீ ஆவுற சோலியா, தக்காளி நாத்துவிட வெத போட்டமில்ல அதுல மீனமிலம் தெளிச்சிட்டு வா.. "
ஏதூ.. என்றவாறு, மூக்கை மூடிக் கொண்டவன், "மாப்ள நீ என்ன வேல கொடு நா செய்யறே, இது மாட்டும் வேணாம் மாப்ள.. மதியம் சோறு உள்ள எறங்காது .. "
முறைத்தவன், " அப்ப அவரைல பூ பிடிச்சிருக்கு.. அதுக்கு போய் .."
இடை நிறுத்தி, "தேமோரு தானே தெளிக்கறேன்.. தெளிக்கறேன், இதுக்கு அது தேவலாம்." என்றவாறு அவசரமாக ஓடினான்.
மகிழ்வேந்தனோ,
"உடம்பில்
இங்கே வேர்வை வர
வேலை செஞ்சா
உலகம்
உன் காலடியில்
வந்து விழும்
காலம் எல்லாம் ராவு பகல்
பாடு பட்டு
வேலை செய்வோம் " என்று பாடியவாறே.. மீன் கழிவுகளில் வெல்லம் கலந்து நொதிக்க வைத்து தயாரான மீன் அமிலத்தில், நீர் கலந்து மருந்து தெளிக்கும் கலத்தில் ஊற்றலானான்.
"பூமியே எங்க சாமியம்மா…" என்ற பாடலின் தாளத்துக்கு ஏற்றவாறு தோள்களைக் குலுக்கியவாறே தலையாட்டும் இளையவனை முறைத்தான் பாரி..
இந்திரன், "நம்ம நாட்டுபுறப் பாட்டு பாட்டுதா.. என்னா அடி.. கவனிச்சியா பாரி, எப்பவும் இந்த வயல்ல பாட்டுச் சத்தம் கேட்குது. பாடியே பயிர வளக்குறானுங்களோ என்னவோ.. " என்றவாறு கடிகாரத்தைப் பார்த்தான்.
பாரி எதுவும் பேசாமல், கிணற்றின் உள்ளே உற்றுப் பார்த்தவாறு இருந்தவன், "ஏ.. அந்த இடது பக்கமா அந்த பாறைய தட்டி விடு." எனவும்
கிணற்றினை ஆழப்படுத்தும் பணியில் இருந்தவன் தன் கையில் இருந்த உளியால் தட்டத் தொடங்கினான். இவ்வளவு நேரம் தட்டியதற்கும் இப்போது தட்டும் ஒலியிலும் வித்யாசம் இருப்பதை உணர்ந்தவனாய் நன்கு ஓங்கி அடிக்க,
"ஆ, அப்படித்தான் அந்த இடத்திலே ஒரு அடிக்கு நல்லா ஒடைச்சு விடு." என்று சொல்ல,
அவன் சொல்லியவாறே தட்டிய சில நிமிடங்களில் ஈரம் தெரிய ஆரம்பித்து தண்ணீர் ஒழுக ஆரம்பித்தது.
ஹே என்ற ஆட்களின் குரலில்,
"புது ஊத்துக்கண்ணு திறந்திடுச்சா.. " என்றவாறு எட்டிப் பார்த்தான் இந்திரன்.
இறுக்கமாய் ஆமென தலையசைத்தவனைக் கண்டு, "நீ நெனச்ச மாரியே இந்த கிணத்துல தண்ணீ கொணார்ந்துட்ட, இது போலவே, நம்ம நெலத்திலே இருக்க கெணறுங்கள்ள தண்ணீர் வந்திட்டா ஆப்பரேஷன் ஏ முதல் படி சக்ஸஸ். "
"அதுல தண்ணீர் வர வைக்கிறது கஷ்டம்னு தான் நீர்மட்டம் பாக்கிறவன் சொல்லிட்டானே.. அந்த வத்தாகெணறு இருக்க நிலங்கள வரவைக்க என்னா வழின்னு தான் பாக்கனும். " என்று சொன்ன நேரத்தில் காற்றில் ஏதோ வித்யாசமான பழ வாசனை .
"என்னா இது, ஊறல் வாசனை வருது." என்று மூக்கை பொத்திக் கொண்டான் இந்திரன்.
"ஏதாச்சும் இயற்கையான ஒரம் மருந்து அடிப்பாங்க ஐயா.. பாவநாச சந்தைலேயே செவந்தி ஐயா காட்டுக் காய்களுக்கு பழங்களுக்கு கிராக்கி அதிகம். எல்லா இயற்கையா அவக பண்ணைலையே தயாரிப்பாக.. களிவு குப்பைன்னு ஏதும் கெடையாது. எல்லாம் ஒரம் தா. வேந்தனய்யா ஒரு பக்கம்னா நீலாம்மா மறுபக்கம் அப்படி கருத்தா பாத்துக்கிடுவாக.. "
வரப்பினை வெட்டிக் குறுகலாக்கி கொண்டிருந்த உள்ளூர் ஆள் சொல்லியவாறே வேலை செய்ய,
காதை தேய்த்து விட்டுக் கொண்ட இந்திரன், "ஓவரா துதி பாடறானுங்களே.. " என்றவாறு மீண்டும் கடிகாரத்தைப் பார்க்க,
பாரி, "என்ன எங்கேயும் போகனுமா என்னாத்துக்கு மணிய மணிய பாக்கறவே.."
"ப்ச் , நேத்து முந்தாநாளெல்லா இந்த நேரத்துக்கு வந்திட்டா.. " என்றவனின் கண்கள் விரிந்தன.
ஆம் நீலாம்பரி தான் , தனது வாகனத்தில் வந்து கொண்டிருந்தாள். வழக்கமான இடத்தில் வாகனத்தை நிறுத்தியவள் , இரண்டு பைகளை கைக்கொன்றாய் பற்றிக் கொண்டு களையெடுத்துக் கொண்டிருந்த பெண்களிடம் ஏதோ கேட்பதும் பின் சிறு கிளையில் பைகளை தொங்க விட்டு விட்டு இவர்கள் பக்கமாய் பார்ப்பதும் புலனாக.. இந்திரன் மெதுவாக சிரித்து, முன்னும் பின்னும் நகர்ந்து தனது இருப்பை புலப்படுத்த,
பாரி உரத்த குரலில், "வெரசா வெட்டுங்க டே.. இன்னிக்கு முழுக்க வரப்பையே வெட்டி மொறையக் கழிக்கப் பாக்காதீங்க.. இன்னிக்குள்ள இந்த காட்டுல இரண்டு ஒழவு போட்றனும்.. ஹூம்.. "
என்று உறுமலாய் சொல்லவும்,
ட்ராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ஜேசிபியின் இயந்திரக் கை கொண்டு இரண்டடி அகலமாய் இருந்த பாதையை, அரையடி வரப்பாய் மாற்றிக் கொண்டிருந்தவர்கள்.. வேகமாக செய்யலானார்கள்.
சிறு கூடை ஒன்றை எடுத்தவாறு நடந்து வந்தவள், கடந்து செல்ல வேண்டிய பாதையே இல்லாமல் ஆகுவது கண்டு ஆச்சரியத்துடன் முன்னேறி வந்தாள்.
நிமிர்ந்து தேடிய பார்வையில் தனை பார்த்தவாறு இருக்கும் இந்திரனிடம் , "இதென்னா இத்தனை வருசமில்லாத வழக்கமா பாதைல எல்லாம் கை வைக்கறீங்க.. இன்னும் இருவது நாள்ளல ஆடி அம்மாவாசைக்கு ஊரே கூடி வரும். அவங்க எப்படி இந்த ஒத்தையடிப் பாதைல கடந்து போவாங்க. ஆரு உங்களுக்கு இந்த மாதிரி ரோசனை சொல்லிக் கொடுத்தது?" என சற்றே உரத்த குரலில் கேட்க,
பதில் என்னவோ அடுத்தவனிடம் இருந்து வந்தது.
பாரி, அவள் புறமாய் திரும்பியும் பாராமல், "கோயிலுக்கு வரனுமின்னா, ஊருணி வரப்போரமா நடந்து வரட்டும். இல்ல நாங்க வந்த ரோடு வழி வரட்டும்.."
"அட , உங்களுக்கு அது வசதியா இருக்கலாம். ஆனா வீகே புரத்துக்காரவங்களுக்கு அது கஷ்டம். அஞ்சு கிலோ மீட்டர் சுத்து வழி.. எங்க பண்ணை வழியா வந்து தா அய்யனார் கோயிலுக்கு போவாங்க. இன்னிக்கு வெள்ளிக் கிழமை.. அய்யனாருக்கு பூசை கொண்டாடியே இந்த வழியாத்தான் வந்தாகனும். தெரியுமா? "
"அதுக்கு.. அதுக்கு நான் இரண்டு சென்ட் நிலம் அளவு எடத்தை பயிர் பண்ணாத வேஸ்ட்டா விட முடியாது." என்றவனை ஆழ்ந்து பார்த்தவள்,
"உங்களை யார் விடச் சொன்னா.. பயிரை பந்தோஸ்து வேணாவா.. வரப்புங்கறது வெறும் நடை பாதை இல்லீங்க. வச்ச பயிர காப்பாத்தற வேலியும் கூட.. அங்கன பாருங்க." என்று தங்களின் வயல்களின் புறமாய் சுட்டிக் காட்டினாள்.
"வரப்போரம் அகத்தி , ஆமணக்கு , சோளம் எல்லாம் அடுத்தடுத்து நட்டீங்கன்னா அதுங்களே உயிர் வேலியா நின்னு பயிர்களுக்கு பூச்சிங்களால சேதாரம் வராம பாத்துக்கிடுங்க. நீங்க வியாபாரத்தில தான் கெட்டி, வெவசாயத்தில கத்துக்குட்டி, அதால அக்கம்பக்கம் , வேளாண்மை பத்தி அறிஞ்சவங்க தெரிஞ்சவங்கட்ட கேட்டு நடந்துக்கிடுங்க. " என்றவளை.. நிதானமாய் திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் இருந்த அனலும் இறுக்கமும் கண்டு, நீலாம்பரி திகைத்து விழித்தாள்.
கோவிலுக்கு ஊரே செல்லும் பாதையை தன் இஷ்டத்திற்கு குறுக்குகிறானே என்ற ஆற்றாமையில் , அதட்டும் தொனியில் பேசிவிட்டோமோ என்று அவள் பேசிய வார்த்தைகளை யோசித்த வேளையில்,
"நீலூ.." என்ற குரலில் வேகமாக திரும்பியவள் தன் பின்னால் நின்ற அத்தானைக் கண்டு அவனை நோக்கி நடந்தாள்.
அலைபேசியை இடது கையில் நீட்டி வைத்தவாறு வந்தவன், வரப்பு குறுகி இருப்பதையும், அவளின் முகம் கசங்கி இருப்பதும் கண்டு சட்டென திரும்பி அங்கே நின்று கொண்டிருந்த சகோதரர்களை உறுத்துப் பார்த்தான் .
"என்ன நீலு ,என்ன பிரச்சனை?" எனக் கேட்வும் எச்சில் விழுங்கியவள், "அது.. அது அத்தான் , கோவிலுக்கு போலாமான்னு பாத்தா வரப்பு வெட்டி சுருக்… இல்ல திருத்திட்டு இருந்தாங்களா, அதா எப்படி போகன்னு தெரியல. சரி , பரவால்ல நா சாயங்காலமா ஊருணி சுத்தி போய் விளக்கு போட்டுக்கிடுதேன்." என்றவாறு அவனை நோக்கி நடக்க,
அலைபேசியை நீட்டி , " பெரியத்தை பேசுதாக பாரு. அங்கன பேச்சிக்கு எலுமிச்ச வெளக்கு போடுவியாம். அதைச் சொல்ல ஒன் செல்லு கூப்டாகளாம். நீ எடுக்கலைன்னு எனக்கு அடிச்சாக." என்றவன் தனது சட்டைப் பைக்குள் கைவிட்டு எலுமிச்சம் பழங்களை எடுத்து நீட்டினான்.
"இல்லத்தான். நான் வண்டில போய் , சுத்திப் போய்கிடுறேன்." என்று நடக்க ஆரம்பித்தவள்,
" ஏலே வரப்பு கொத்தறது நிறுத்துங்கலே.." என்ற குரலில் நின்றாள்.
"நீலாம்பரி." என்று அழைத்தவாறு சகோதரனைத் தாண்டி முன்னால் வந்த இந்திரன், "நீங்க கோயிலுக்கு போயிட்டு வாங்க. வரப்பு செதுக்கற வேல இப்ப வேணாம். உழவு போடுங்கடே." என்றான்.
அவள் திரும்பி வேந்தனைப் பார்க்க, "பன்னெண்டுக்குள்ள விளக்கு போடச் சொன்னாங்க. போயிட்டு வெரசா வா. நா இங்கனயே நிக்கேன்." என்றவனின் பார்வை பாரியை நோக்கி இருந்தது .
சரியென்று தலையசைத்தவள், தயங்கியவாறு அடியெடுத்து வைத்து நடந்து கோயிலை நோக்கிச் செல்ல, துணைக்கு செல்பவன் போல அவளிடம் ஏதோ பேசியவாறே நடக்கும் சகோதரனை வெறித்து விட்டு திரும்பியவனின் விழிகள் தனை பார்த்துக் கொண்டிருக்கும் மகிழ்வேந்தனின் மீது நிலைத்தன.
இரத்த சிவப்புக் கலரில் சட்டை, மஞ்சளில் இருந்த உள் பனியனை காட்டும் வண்ணமாய் மேலிருந்த இரு பொத்தான்கள் போடப் படாமல் இருக்க, பச்சை கலரில் முட்டிக்கு கீழ் வரை இருந்த அரை கால் சட்டையின் நடுவே இடுப்பில் இருந்தது பலவண்ணங்களில் இருந்த சாரம். இடப்புறம் வளைய,
அவனைப் பார்த்தவாறே , " என்றாங்கடே வேடிக்க.. சோலியப் பாருங்க.. வரப்பு மட்டும் தா இருக்கனும். பாதை கீதைன்னு ஏதும் இருக்கக் கூடாது. " என்றவன் , அலைபேசி எடுத்து " விக்ரம சிங்க புரம் அய்யனார் கோயிலுக்கு பக்கத்து நிலத்துக்கு முன்னூறு யூக்கலிப்டஸ் ஐநூறு சவுக்கங்கன்னு கேட்டேனே.. இன்னும் வந்து சேரல." எனவும் ,
அதிர்ந்து பார்த்தான் மகிழ் வேந்தன்.
" இன்னிக்கு நைட்டுக்குள்ள டெலிவரி பண்ணிடு. " என்றவன் அலைபேசியை சட்டைப் பையில் வைக்க,
கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன, " புஞ்சைக் காட்டுல போய்.. இந்த நெலம் ஒரு வருச குத்தகைக்கு தானே எடுத்திருக்கீங்க.. அதுல வெள்ளாமை பாக்கலாம். இது போல மரமெல்லா நட முடியாது. " என அடிக் குரலில் அழுத்தமாய் சொல்ல,
அலட்டலின்றி தனது குளிர்க் கண்ணாடியை கழற்றி துடைத்து சட்டையில் சொருகியவாறே, "இந்த நெலம் மட்டுமல்ல.. நீ நிக்கற நிலம்.." கண்களால் கோவிலை சுட்டியவன், "அந்த நிலம் எல்லாமே.. ஏன் ! இந்த ஊரே என் முப்பாட்டனோட பாட்டனுக்கு சொந்தம். 1952ல நில உச்ச வரம்பு சட்டம் வந்த காலத்தில என் முப்பாட்டன், 'பொறுக்கிக்கங்கடா' ன்னு விட்டெறிஞ்சுட்டு போனது தான், நீங்க இப்ப பகுமானமா கொழிச்சிட்டு இருக்கிற நிலம்.. கொடுத்த எங்களுக்கு எடுக்கவும் தெரியும்.. ஏதோ பப்ளிக் சர்வீஸ் எக்ஸாமுக்கு படிக்கறியாமே.. அதை எப்படியாவது பாஸ் பண்ணிடு, நல்ல வேலைக்கு ரெகமண்ட் பண்றேன். இந்த ஊருணி சுத்தி இருக்க எல்லா நெலமும் என்னுது.. யூக்கலிப்டஸ் நடுவேன். சவுக்கு நடுவேன் ஏன்.. கள்ளிச் செடியா கூட வச்சுவிடுவேன்.. நீ என்ன கேக்கறவே ?" என்றவன்.. கிணற்றுப் புறமாய் நகர்ந்தவாறு, "மேலே இருக்க கிணறுங்களுக்கு வெடி வைக்க ஆட்கள் கூட்டியாரேன்னு சொன்னே, எப்ப வர்றானுங்க.. " என்று கிணறு வேலை மேற்பார்வை செய்தவனிடம் கேட்பதினை பார்த்துக் கொண்டே கைகள் கட்டி நின்று கொண்ட மகிழ் வேந்தனின் பார்வை தூரத்தில் பேச்சியம்மனிற்கு விளக்கு ஏற்றும் மாமன் மகளின் மீது இருந்தது..
இந்திரன் அவளிடம் ஏதோ சொல்லியவாறு பக்கத்து மண்டபத்தில் இருந்த சிலையை காட்டுவதை கவனித்தவனின் கண்கள் சுருங்கின.
சிலையின் பின்னிருந்த வெள்ளைச் சுவற்றில் கொட்டை கொட்டையாய் செதுக்கப்பெற்று வர்ணம் பூசப் பெற்று இருந்த எழுத்துக்களும் புலப்பட்டன.
" வேட்டைக்கார சேதுபதி பாரி வேந்தன் "
நாயகன் ஆடுவான்..