துரையின் வரு டீஸர் 2
பொண்ணு பார்க்க வந்து காபி கொடுத்த பெண்ணை ஏறெடுத்தும் பாராமல் உட்கார்ந்திருந்த பாண்டித்துரை பக்கத்தில் அமர்ந்திருந்த பிரதீப்பிடம் பொரிந்து கொட்டிக்கொண்டிருந்தான்.பேர பாருடா...ஒரு லொஸ்லியா...ரைசா, அங்கிதானு இல்லாம வரலட்சுமி ...வறட்டு லச்சுமினு ...என்னடா பேரு இது ...
டேய் நீ பெரிய ஹ்ரித்திக் ரோஷன்னு பேரு வச்சிருக்க மாதிரியும் ..அந்த புள்ள பேருதான் மோசம்குற மாதிரியும் எதுக்குடா இந்த அலப்பறை....உன் பேர சொல்லி பாருடா மச்சான்...பாண்டி துரை...அதுக்கு அந்த புள்ள பேரு வரலட்சுமி எந்த வித்ததுலடா குறைவா போச்சு...அடங்குடா
டேய் ஏன்டா சொல்ல மாட்டே ...இந்த மசையன் என்னை உடாம புடுச்சு இழுத்துட்டு வந்து உசுர எடுக்கான்...இந்த மயிலாவது ஏதாச்சு மறுத்து பேசனும்னு பார்த்தா...அதுவும் கம்முனு இருக்கு...அந்த கெழவி வேற பொண்ணு லட்சுமி மாறி இருக்குடா, சரஸ்வதி மாறி இருக்குடானு.... கடுப்பை கிளப்பிட்டு ..ஏண்டா எத காமிச்சாலும் என் நந்திதா மாறி வருவாளாடா ...என் நேரம் என் காதல் பூக்கு முன்ன கருகி போகணும்னு....எங்கப்பன் என் கைல தனியா மாடட்டும்..அப்பறம் இருக்குடி சேதி... ரெண்டு நாளா வீடு பக்கம் கூட வராம டிம்மிக்கி குடுக்கான்...வாடி மச்சக்காளை..உனக்கு இருக்குடி...என துரை என்கிற பாண்டிதுரை அவன் நண்பன் பிரதீப்பிடம் புலம்பிக்கொண்டிருக்க ..
உள்ளே வரலட்சுமியோ அவள் அக்கா சஹானாவிடம் எம்.காம் படிச்ச எனக்கு என்னவோ ரவுடி மாதிரி ஒரு மாப்பிள்ளை..அவனும் அவன் மூஞ்சியும் பெரிய மைனர் னு நினைப்புதே அவனுக்கு நாய் சங்கிலி மாதிரி ஒரு சங்கிலிய போட்டுட்டு ...பெரிய வேலைக்கு போற மாப்பிளை வேணும்னு கனவு கண்டேன்..எனக்கு வார கோவத்துக்கு...அந்த சுந்தரத்தை போயி ஒரே போடு...
என்னடி இப்படி பேசிக்கிட்டு..அவங்க எல்லாரும் ரொம்ப நல்ல மாதிரி டீ ..அப்பா சொன்னாங்க...அத்தானும் நல்ல விசாரிச்சுட்டாங்க...நல்ல வசதி...ஒரு பொண்ணு தான்..அவங்க தங்கச்சி இப்போ ரெண்டு மாசமாம்...ட்ராவல் பண்ண கூடாதுன்னு அவங்க வரலயாம், அந்த பொண்ணும் நல்ல குணமாம் ..அவங்க குடும்பத்துலயும் நல்ல வசதி வாய்ப்பு எல்லாம் இருக்காம் டீ ... நீ ஏன் உன்ன போட்டு குழப்பிக்கற.. சந்தோசமா இருடீ.மாப்பிள்ளையும் நல்ல போலத்தான்..என்ன.. பார்க்க கொஞ்சம் முரடா தெரியுறாங்க...
உன்ன அவங்க வீட்டுல நல்ல வச்சு பார்த்துப்பாங்கடி ..என அக்கா வலியுறுத்த
என்னோவோ போடி எனக்கு என்னவோ கண்ணை தெறந்துட்டே குழிக்குள்ள விழற மாதிரி இருக்கு...
please post your comments in the link below
Story threadlaye comments 5pages poiduchu ☹️
www.srikalatamilnovel.com