புதையல் 3
தான் எதற்காக யாரால் கடத்தபட்டோம் என்பதனை தெரியாமல்? அந்த அறையின் இருளை பயத்துடன் வெரித்து பார்த்து கொண்டு இருந்தாள் அமிர்தா!
தீடீரென அந்த அறையில் விளக்குகள் எல்லாம் ஒளிர்ந்து அந்த அறையின் பிரம்மாண்டத்தை அமிர்தாவிற்கு எடுத்து கூறியது!. ஏற்கனவே பயத்தில் இருந்தவள் இந்த பிரம்மாண்டத்தை பார்த்ததும் இன்னும் தனக்குள் ஒடுங்கிக் கொண்டாள்.
அப்போது அந்த அறையை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அமரஜீவன்.
இத்தனை நேரம் பயத்துடன் இருந்த அமிர்தா தன்னவனை கண்டதும் அவனை அனைத்து கொண்டு ஓவென்று அழ.....
ஆனால் அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் ஓங்கி அவள் கண்ணத்திலே அடிக்க...."அவன் அடித்ததில் கீழே விழுந்தவள் தன் சிவந்த கண்ணத்தை பிடித்து கண்ணீருடன் அவனை பார்க்க....
ஆனால் கல்நெஞ்சகாரனவன் அவள் அழுவதை சிறிதும் கண்டுகொள்ளாதவன்,கோபமேறிய கண்களுடன் எவ்வளவு தைரியம் இருந்தால் என்னையே அனைத்து இருப்ப பிளேடிஇடியட் என்று சொன்னவன், தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அவளது மாமன் மகளுக்கு கால் செய்தான்.
ஹலோ ஆதர்ஷினி என்ன உன்னோட அத்தை பொண்ணு அமிர்தா காணோமா?என்று கேட்டவன் சிரிக்க.....
அந்த பக்கம் இருந்தவளோ காதில் கேட்கமுடியாது படி திட்ட*********
ஹே...... கோபப்படத ஆதர்ஷினி நான் சொன்னப்பவே நீ ஓகே சொல்லி இருந்தா நான் எதுக்கு உன்னோட அத்தை பொண்ணை கடத்தி இருக்க போறேன்.
"என்னோட அத்தை பொண்ணு அமிர்தாவ நீ தான் கடத்தி வெச்சு இருக்கறனு உன் கிட்ட என்ன ஆதாரம் இருக்கு" என்று அந்த நிலையிலும் ஆதர்ஷினி தைரியமாக கேட்க!
உடனே விடியோ கால் போட்டவன் அமிர்தாவை காட்டிவிட்டு கால்லை கட்செய்துவிட்டு ஆதர்ஷினிக்கு அழைத்தவன் நான் சொன்ன மாதிரி அக்ரிமெண்ட்ல சையின் போட்டுட்டு,எங்களோட ஆட்கள் வருவாங்க அவங்க கூட நீயும் உன்னோட அல்லக்கையும் வந்துடுங்க என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு அமிர்தாவை பார்க்க!
அவளோ விடாமல் இவனை பார்த்து கொண்டு இருந்தவள், நீ ஆதுவ சீட் பண்ண, என்னை எதுக்குடா லவ்னு என்கிட்ட திரிஞ்ச இடியட் என்று கோபத்துடன் அவனை அறையை வர... ஆனால் அதற்குள் அவளை பிடித்த ஆங்குள்ள அடியாட்கள் அவளுக்கு மயக்க ஊசி போட....
அவன்,அமரஜீவன் இவள் பேசியதை ஆச்சரியம் கலந்த நக்கலான ஒரு மர்ம புண்ணகையுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
அமிர்தா தான் இவனை காதலித்த காலத்தை நினைத்து கொண்டே மயக்கத்திற்கு செல்ல....அதே நேரம் தான் அந்த மலையில் கல்வெட்டை பற்றி தெரிந்து கொண்ட நாளை ஆதர்ஷினியும் அவரவர் இடத்தில் இருந்து எண்ணி பார்க்க ஆரம்பித்திருந்தனர்.
அந்த அரசு கவின் கலை கல்லூரியில் அங்காங்கே சில மாணவர்கள் பேக்கும் கையுமாக அழைந்து கொண்டு இருக்க,சில மாணவர்கள் மொபைல், செல்பி ஸ்டிக் மற்றும் திண்பண்டங்களுடன் தங்கள் பஸ்ஸில் ஏறுவதற்கு நின்று கொண்டு இருந்தனர்.
மச்சான் இது நம்மளோட பைனல் யேர் டா,அதனால இந்த டிரிப்ப சும்மா ஒரு கலக்கு கலக்கணும்டா....."வீரா".
ஆமாம் டா வீரா நாமோ இந்த டிரிப்ல எடுக்குற ஃபோட்டோவ எடுத்து நம்ம ஃபேஸ் புக் குரூப்ல போட்டு சும்மா தெரிக்க விடுறோம் ஹான்.... என்று அந்த ஃபேஸ்புக் பைதியமான "யுவன்" சொல்ல...
தருதலைங்கலா புத்தி போகுது பாரு புல்லு மேய.... இந்த வினா போன வீரா பையன் சொன்னதை கூட ஓரளவுக்கு நான் ஒத்துப்பேன்டா,ஆனால் நீ சொன்ன பாரு இது தான் என்னால் தாங்க முடியலை டா யுவா!,"சிவனேஷ்வர்".
என்ன சார் இப்படி சொல்லுறிங்க!"ஐயா யாரு தெரியுமா நம்ம ஃபேஸ்புக் குருப்போட லீடர் சார், இவனோட அனுமதி இருந்தா தான் எவனா இருந்தாலும்..... உள்ளேயே நுழைய முடியும்னா பார்த்துக் கோங்களேன் என்ற "வீரா" யுவா புராணம் பாட"......
இதனை வேறு வழி இல்லாமல் தன் தலை எழுத்தை நொந்தபடி கேட்டு கொண்டு இருந்தான் "சிவனேஷ்வர்" மாணவர்களின் கைப்புள்ள, ஆதர்ஷினியின் உற்ற நண்பன், அந்த காலேஜின் உதவி பேராசிரியர்.
ஆமாம் இவங்க எங்க போறாங்கனு சொல்ல மறந்துட்டேன் சாரி மக்காஸ்
இவங்க இண்டியாவை கல்வி சுற்றுப்பயணத்தில் சிற்பங்கள் மற்றும் அதன் வரலாற்றை படிக்க அரசால் அழைத்து செல்ல படுகின்றனர்.
மாணவர்களை ஐந்து குழுவாக பிரித்த hod சாமிநாதன் ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களை பிரித்தவர்,அவரவர் குழு மாணவர்களின் வருகையை பதிவு எடுக்க சொல்லியவர் சற்று தள்ளி போய் நிற்க...
அப்போது எதையோ பார்த்து அதிர்ச்சியில் பயந்த இரண்டு ஆசிரியர்கள் தாங்கள் கல்வி சுற்றுலாவிற்கு வரவில்லை என்று அந்த இடத்தில் இருந்து ஓட.......
மாணவர்களும் என்னவென்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க.....
அந்த ஆசிரியர்களின் பின்னே போன மற்ற ஆசிரியர்களும் hodயும் அந்த ஆசிரியர்களான சாந்தலஷ்மியும், அஞ்சனாவும் சொன்ன காரணத்தில் மற்ற ஆசிரியர்கள் பயந்தனர் என்றால் hod சாமிநாதன் பல்லைக் கடித்தார்.
அவர்கள் இருவரும் எதற்கு பயந்தாங்கன்னு நான் சொல்லுறேன் மக்களே கேளுங்கள்..... அதற்கு காரணம் வீராவும்,யுவாவும் என்றால் மிகையில்லை பயபிள்ளைகளுக்கு கிளாஸ் எடுக்கும் போது சேட்டை செஞ்சு ஆசிரியர்களை கோபப்படுத்துவதில் அலாதி பிரியம் இதற்காகவே டிபார்ட்மெண்டில் அடிக்கடி அட்டடேன்ஸ் போடும் நல்லவர்கள்.
இப்போது எங்கே நம் டூர் புரோகிராம் தடை பட்டுவிடுமோ! என்று அப்பாவியாக hodயை கடவுளை போல் பார்த்து கொண்டு நின்றிருந்தனர் இருவரும்.
"இவர்கள் இருவரையும் இப்படி பார்த்த சாமிநாதனுக்கோ கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அப்படி ஒரு குஷி", ஆனால் முகத்தை சீரியஸ்ஸாக வைத்து அவர்களை முறைத்து கொண்டு இருந்தார்.
சாமி சார் எங்களை நம்புங்க சார் நாங்க எதுவும் பண்ணமாட்டோம் அப்படியே உங்களுக்கு எங்க மேல சந்தேகமா இருந்தா? எங்களை சிவனேஷ் சார் குருப்ல போட்டுடுங்க என்று இலவசமாக hodக்கு அறிவுரை வழங்க....
இவனுங்க கிட்ட மாட்டுன சிவனேஷை நினைத்து கவலை பட்ட சாமிநாதன் கேட் லாஸ்ட் என்று சொல்ல...
இதற்காகவே காத்திருந்த இருவருமே மகிழ்வுடன் அந்த பேருந்தில் போய் அமர்ந்து கொண்டனர்.
டேய் நீங்க எங்கடா இங்கே என்று சிவனேஷ் கேட்க!
அய்யகோ!சாமியிடம் மன்றாடி உங்கள் குழுவில் வரும் எங்களை பார்த்து என்ன வார்த்தை கேட்டுட்டிங்களே...... வானம் பொழிகிறது பூமி விளைகிறது என்று யுவா ஆரம்பித்த வேலையில்.....
ஓ......... வென்று மாணவர்களின் சத்தத்தில் அந்த கல்லுரி பேருந்து புறப்பட்டது.
என்னடா மச்சான் நீ முழுசாக சொல்லி முடிக்குறதுகுள்ள பஸ் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க என்று வீரா கேட்க...
விடுமச்சி அதான் ஒரு மாதம் இருக்கே பார்த்துகளாம் என்று யுவா சொல்லியவன்
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும் பாட்டிற்கு மாணவர்களுடன் நடனம் ஆட ஆரம்பித்திருந்தான்.
சிறிது நேரத்தில் அவர்களுடன் ஆதர்ஷினியும் அந்த பயணத்தில் இனைந்தாள்.
25 நாட்கள் பிறகு
அஜந்தா எல்லோரா குகைகள், கர்லா குகைகள்,அவுரங்காபாத் குகைகள்,எலிபண்டா குகைகள், தாஜ் மஹால் & விக்டோரியா மெமோரியல் எல்லாவற்றையும் மாணவர்கள் பார்வையிட்டு அதனைப் பற்றிய ஆய்வு கட்டுரைகள் எல்லாவற்றையும் முடித்து சுற்றுலாவின் கடைசி பயணமான தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரிய கோயிலைப் பார்வையிட வந்துள்ளனர்.
அந்த மதிய நேரத்தில் தஞ்சை பெரிய கோயிலைப் பார்த்து விட்டு மாணவர்கள் அனைவரும் உணவு அருந்த ஹோட்டலில் குழுமி அவர் அவர்களுக்கும தேவையானதை ஆர்டர் செய்து உணவு உண்டு கொண்டு இருந்தனர்.
வீரா யுவா இன்னும் சில மாணவ மாணவிகளுடன் ஆதர்ஷினி,சிவனேஷ் இருவரும் உணவு உண்டு கொண்டு இருக்க...
ஆதர்ஷினி அக்கா!நார்த் சைடில் இருக்குற அஜந்தா எல்லோரா குகைகள், கர்லா குகைகள்,அவுரங்காபாத் குகைகள்,எலிபண்டா குகைகள், தாஜ் மஹால் & விக்டோரியா மெமோரியல் எல்லாவற்றையும் காட்டுனிங்களே, இந்த வாட்டர் பால்ஸ் அது மாதிரி கண்ணுக்கு குளிர்ச்சியான ஒரு இடத்திற்கு கூட்டிட்டு போனிங்கனா!அதுல ஜாலியா நினைஞ்சுட்டு அப்படியே சொந்த ஊருக்கு போகலாம்ல என்று குதுகலத்துடன் யுவா கேட்க!
மற்ற மாணவர்களும் ஆமாம் மேம் என்று ஏலம் போட....
இவர்கள் ஏலம் போட்டதில் மற்ற மாணவர்கள் பார்த்தனர் என்றால் சாந்தியும், அஞ்சனாவும் கடுப்புடன் முறைத்திருந்தனர்.
உஷ்....... என்று அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லியவள் , "மேம்" என்று சொல்லு யுவா என்ற ஆதர்ஷினி கண்டிப்புடன் மற்ற அனைவரையும் பார்த்து நாம் போனது எஜுகேஷ்னல் டிரிப் அதுவும் இல்லாமல் நாம் பார்த்த எல்லாமே உங்க பியூசர்க்கு ரோம்பவே ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் என்றவள் இன்னும் ஏதோ சொல்ல வர.....
அதற்குள் ஒரு அழகான யுவதி தாவனியில் வந்தவள்
"ஆது" என்று சந்தோஷத்துடன் கட்டிக் கொள்ள...
மாணவர்கள் அனைவரும் ஆ....... வென்று அவளைபார்த்து கொண்டு இருந்தனர் என்றால் அதில் ஒருவனின் மனமோ அவனிடமிருந்து குதித்து
ஏ…… இருட்டு ரூமுல எல்இடி லைட்ட போட்டுட்டா
தத்தத்த்த தள்ளித்தள்ளி ஓட்டும் என்னோட வண்டில
பெட்ரோல ஊத்திட்டா……
பொண்ணுங்கல பார்த்ததும் பம்மி போய்
பதுங்கன என்னத்தான் பப்பப்பப் பப்பார
பானு பல்லக்காட்ட வச்சி பக்காவா மாத்திட்டா
எனக்குன்னு இறங்குன தேவதை
உனக்குன்னு ஒனக்குன்னு பொறந்தவன் நான்
இருவது வருஷமா இதுக்குன்னு
தெருவெல்லாம் திரிஞ்சவன் தான்
என்னை செஞ்சிட்டா.செஞ்சிட்டா..வச்சி செஞ்சிட்டாளே. என்று சிவனேஷின் மனம் பாட....
அமிர்தா,
கவிதயாய் கதை பேசும் கண்கள்,அப்பாவி பேச்சினால் அனைவரது மனதையும் தன் வசப்படவைக்கும் பேச்சுகாரி வெள்ளைநிற தேகம் 5தடி உயரம் நீண்ட கூந்தல் அழகிய கிராமத்து பெண் முகம் என்று இருப்பவள்
ஆனால் இதை எதையும் அரியாத பாவை அவளோ, பல நாட்கள் கழித்து பார்க்கும் தனது ஆதுவிடம் பேச ஆரம்பித்திருந்தாள்,"என்ன ஆது! நீ இங்கே வரது எங்க யாருகிட்டயும் சொல்ல மாட்டியா? ஆமாம் உன் கூட இருக்குற இவங்க எல்லாரும் யாரு என்று அமிர்தா கேட்க!".
நீயே இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தா!நான் எங்கே பதில் சொல்லுறது என்ற ஆதர்ஷினி இவங்க எல்லாரும் என்னோட ஸ்டூடண்ஸ், எஜுகேஷ்ணல் டூர்க்காக இங்கே வந்துருக்கோம், ஆமாம் நீ எப்படி இங்க!
நல்லா கேட்ட போ.... நான் இல்லை நாங்கள்! கிருஷ்ணா தாத்தா பேரனுக்கு கல்யாணத்துக்கு போயிட்டு வர வழியில் அம்மாவுக்கு கொஞ்சம் மயக்கம் வந்திடிச்சு அதான் அத்தை ஜூஸ் குடிச்சிட்டு போகலாம்னு சொல்லி இங்கு வந்தா நீ இருக்குற! அதான் அம்மாட்டையும் அத்தை கிட்டயும் சொல்லிட்டு, உன்னை பார்க்க இங்க வந்துட்டேன் என்ற அம்மு வெள்ளந்தியாக சிரிக்க.
இதை கேட்ட ஆதர்ஷினியோ அந்த மூலையில் சுவரை ஒட்டி இருந்த டேபிளில் தன்னை முறைத்து கொண்டு அமர்ந்திருந்த அன்னை வைதேகியை கண்டு எச்சில் விழுங்க....
இவர்கள் இருவரும் பேசுவதை வீரா யுவா மற்றும் மற்ற மாணவர்கள் அனைவரும் கேட்டவர்கள், தங்களின் மேமின் தாயிடம் பேச! அனைவரும் அந்த டேபிளிற்கு படை எடுத்தனர்.
ஹாய் மாத்தாஜீ என்று வீரா சொல்ல.... எப்படி இருங்கிங்க மம்மிஜீ என்று யுவா சொல்ல மற்ற அனைவரும் நலம் விசாரிக்க அவர்கள் அனைவரிடமும் வைதேகி சிரித்த முகத்துடன் பேசி கொண்டு இருந்தவர் தன் மகளை கண்டதும் வைய ஆரம்பிக்க....
அஞ்சனா அங்கிருந்த மாணவர்களை அப்புற படுத்த....
கலைய தொடங்கிய மாணவர்களை பார்த்து வைதேகி "டேய் பிள்ளைகளா இந்த துறை படிச்சா நீங்க ஒன்னும் கொம்பேங்க கிடையாது, இந்த துறையே கதியேன்னு இருக்காம வேலை கிடைச்ச பிறகு கல்யாணம் குழந்தை குட்டின்னு சந்தோஷமாக இருக்க பாருங்க பசங்களா,உங்க டீச்சர் மாதிரி இருக்காதிங்க என்றார் தன் மகளை ஏகத்துக்கும் முறைத்து".
"அப்கோர்ஸ் மாத்த்தாஜீ" என்ற வீரா தன்னை கோபமாக முறைத்து கொண்டு இருந்த ஆதர்ஷினியை பார்த்து அப்படியே பம்யபடியே அங்கிருந்து நகர்ந்து செல்ல... மற்றவர்களும் அவனுடன் அவ்வாறே செல்ல....
அந்த ஹோட்டலே நிசப்தமாக இருக்க! தன் அன்னையிடம் பேச ஆதர்ஷினி வாய் எடுக்க!
ஹெ ... வீட்டுக்கு வரும்போது எல்லாப் பிள்ளைகளையும் அழைச்சுட்டு வா... என்ற வைதேகி அம்முவையும் வேணியையும் அழைத்து கொண்டு வெளியேறினார்.
ஆதர்ஷினி என்னது இவங்க எல்லாரையுமா அம்மா என்று கத்தி கூப்பிட
அதனை காதில் வாங்காமல் வைதேகி கிருஷ்ணவேணியை அழைத்து முன்னே செல்ல,அம்மு சரி சரி எல்லாறையும் அழைச்சுட்டு வந்துடு ஆது....
ஏய் இவங்க எல்லாரும் சொந்தக்காரங்க மாதிரி அழைச்சுட்டு வந்துட சொல்லுறிங்க நான் காலேஜ்ல பர்மிஷன் வாங்கனும் தெரியுமா!
ஆமா இன்னும் எத்தனை நாள் இங்கே இருக்கனும் "அம்மு"
இரண்டு நாள்,இப்போ சாப்பிட்டு முடித்து சரஸ்வதி மகால் நூலகத்திற்கு போயிட்டு ஹோட்டல் பொகிற மாதிரி!
ஓகே சரஸ்வதி மகால் போயிட்டு நேரா நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடு ஆது,அங்கே பாரு நான் உன்கிட்ட பேசுறத பார்த்து எப்படி முறைக்குறாங்க பாரு அத்தை சரி நான் கிளம்புறேன் டாட்டா என்று அம்மு விடைபேற!
ம்.... இந்த பசங்களை வீட்டுக்கு அழைச்சுட்டு போறது பிரச்சினை இல்லை, ஆனால் இவங்க ஏதாவது வாலுத்தனம் பன்ன அதற்கு இந்த அம்மா நம்மைய சத்தம்போடுவாங்களே!என்ன செய்வது என்று யோசித்த ஆதர்ஷினி ஒரு முடிவுக்கு வந்தவள் (hod)ஹெச்.ஓ.டி. சாமிநாதனுக்கு அழைத்தவள் அவரிடம் பேசி மாணவர்களை தங்கள் வீட்டில் இரண்டு நாட்கள் இருப்பதற்கு அனுமதி வாங்கியவள் அழைப்பை துண்டித்து, மற்ற ஆசிரியர்களுடன் சேர்ந்து மாணவர்களை அழைத்துக்கொண்டு சரஸ்வதி மகாலுக்கு சென்றனர்.
சரஸ்வதி மகால் நூலகம்
சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்றாகும். இந்நூலகம், நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களின் முந்நூறு ஆண்டுகால சேகரிப்பின் விளைவாகும். இந்த நூலகம், கி.பி.1531-1675 வரை ஆண்ட தஞ்சை நாயக்க மன்னா்களின் அரசாங்க நூலகமாக ஆரம்பிக்கப்பட்டது. கி.பி.1675-ம் ஆண்டு தஞ்சையை கைப்பற்றிய மராத்திய மன்னர்களும் இந்நூலகத்தை பேணிப்போற்றி வளர்த்தனர். மராத்திய மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர் சரபோஜி மன்னர் ஆவார் (கி.பி.1798-1832). இம்மன்னரின் சேவையை நினைவுகூறும் விதமாக இந்நூலகத்திற்கு சரபோஜிசரஸ்வதி மகால் நினைவு நூலகம் என பெயா் சூட்டப்பட்டது.
இந்த நூலகத்தில் அரியவகை ஓலைச்சுவடிகள் காணப்படுகின்றன. இங்கு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, ஆங்கிலம் மற்றும் இந்தியாவை சார்ந்த பிறமொழி காகித குறிப்புகளும் உள்ளன. இங்கு 30, 433 சமஸ்கிருத மற்றும் பிறமொழி ஓலைச்சுவடிகளும் 6, 426 புத்தகங்கள் மற்றும் சஞ்சிகைகளும் உள்ளன. தமிழில் சங்ககால இலக்கிய உரைகளும், மருத்துவ குறிப்புகளும் அடங்கும். நூலகத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு அருங்காட்சியகமும் நூலக கட்டிடத்தில் உள்ளது.
மாணவர்கள் ஒவ்வொருவரும் அங்கிருந்த பழைய புத்தகங்கள் , ஓலைச்சுவடிகள், ஓலைச்சுவடியுலுள்ள மருத்துவ குறிப்புகளை ஆர்வமாக பார்த்தபடியும் அதிலுள்ளவற்றை படித்தபடியும் வந்தவர்கள் தங்கள் முன்னோர்களை வியக்காமல் இருக்க முடியவில்லை எந்த அறிவியல் சாதனங்களும் இல்லாத காலத்தில் மருத்துவத்தை பற்றி வருங்கால சந்ததியினருக்கு குறிப்பு கொடுத்து சென்றதை பார்க்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது.
இதில் ஆங்கில மருத்துவம் பற்றிய தகவல்களும் அதனைப் பற்றி விரிவாக சொல்ல படுவதை பார்த்து விரா,யுவா, ஜேக்கப், ஜெகன், தங்களுக்குள் விமர்சித்தபடி நூலகத்தை விட்டு வெளியேறினர்.
ஓகே எல்லாரும் டக்டக்குன்னு அவங்க அவங்க பஸ்ல ஏறுங்க இன்னிக்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு ஆதர்ஷினி மேம் வீட்டில் தான் ஸ்டே பண்ண போறோம் ஆதனால எல்லாரும் நல்ல பசங்களா எந்த சேட்டையும் வாலுதனத்தையும் பண்ணாம இருங்க,முக்கியமா இந்த வீரா,யுவாஅப்புறம் அவனுங்க கூட திரியுர கூட்டம் எல்லாருக்கும் சொல்லிடுறேன் என்று சிவனேஷ் கூறிக்கொண்டு இருந்தான் இல்லை கத்திக்கொண்டு இருந்தான்.
என்னது ஆதர்ஷினி மேம் வீட்டிற்கா என்று மாணவர்கள் கூட்டம் ஒரு பக்கம் சத்தமிட!
அப்ப நமக்கு ஒரு பண் காத்துகிடக்கு என்று விராவும், யுவாவும் ஹைபை கொடுத்து விளையாட!
மாணவிகளோ மேம் உங்க சின்ன வயசு போட்டோவ எங்களுக்கு காமிக்கனும் பிளிஸ் என்க!
ஆதர்ஷினி நாம எல்லாரும் தங்க உங்க வீட்டிலே இடம் இருக்குமா ஏனா 170பேர்கிட்ட இருக்கோமே என்று சாந்தலஷ்மி(சாந்தி) சந்தேகமாக கேட்க!
ஹான்..... இருக்கு சாந்தி! டோண்ட் வொர்ரி என்றவள், இருட்டுறதுகுல்ல வீட்டிற்கு போயிடலாம் வா என்றவள், அனைத்து மாணவமாணவிகளும் பஸ்ஸினுள் அமர்ந்து விட்டனரா என்று ஒரு தடவைக்கு இருதடவை ஆசிரியர் அனைவரும் செக் செய்தவர்கள் தஞ்சையில் உள்ள அணைக்கரை கிராமத்திற்கு பயனபட்டனர்.
,