All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சௌந்தர்யாசெழியனின் 'பேசாத வார்த்தை எல்லாம் பேரின்பத்தின் தேடல்'' - கதை திரி

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே
தேடலின் அடுத்த பதிவுடன் வந்து விட்டேன். படித்து விட்டு உங்களது கருத்துக்களை கூறுங்கள்.பிரண்ட்ச்


இதய துடிப்பு 11

அன்று தான் சௌமியின் பரிட்சை ஆரம்பமாகியது. காலையில் இருந்தே ஒரு வித டென்ஷனில் சுத்தி கொண்டிருந்தாள். அவ்வப்பொழுது போனை பார்ப்பதும் பின் நகத்தை கடிப்பதுமாக இருந்தவளை கண்ட அவளின் அம்மா..,

"ஏண்டி….‌ இப்புடி நகத்தை போட்டு குடிச்சுட்டு இருக்க.., டென்ஷன் ஆகாம அமைதியா இரு…" என‌ அவளை அதட்டி…,

"ம்மா…, கதிர் பாவா கிட்ட இருந்து இன்னும் போன் எதுவும் வரல அம்மா…" அதான் பாத்துட்டு இருந்தேன் என்றாள்.

"செளமி மா கதிர் என்ன இன்னும் சின்ன‌ புள்ளையா…, அவனுக்கு ‌வேல இருக்கும் பாத்தாதுக்கு டாக்டர் வேற.., நீ வா வந்து சாப்பிடு..‌.." என்றவர் டைனிங் டேபிளுக்கு சென்று விட்டார்.

தாயின் பேச்சில் சுருங்கிய முகத்துடன் செளமி‌ அங்கிருந்து நகர்ந்த நொடி…..,‌ சொல்லி வைத்தார்ப் போல் கதிர் அழைத்தான். அதை எடுத்தவள்…,
"கதிர் பாவா உங்க போனுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..….," என்றாள்.

அவளின் பேச்சில் சிரித்தான்…,"செளமி மா நல்லபடியாக எக்ஸாம் எழுது…, டென்ஷன் ஆகாம மனச அமைதியா வச்சுக்கோ…., ஆல் த பெஸ்ட்….," என்றவன் வேலை இருப்பதாக சொல்லி வைத்து விட, இவளும் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு கிளம்பி சென்று விட்டாள்.

இரு நாட்கள் சென்ற நிலையில் அன்று தான் கடைக்கு வந்திருந்தான் வினோத். அவனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் குரூமூர்த்தி. அன்று செல்வமணி வந்து சென்ற நாள் கிளம்பி சென்றவன் தான் அதன் பின் இரு நாட்களும் கடைக்கு வரவில்லை.

இதற்கு வெளியில் எங்கும் செல்லவில்லை. வீட்டில் தான் இருந்தான். எப்பொழுதும் ஏதோ ஒரு யோசனையில் இருந்தான்.அவனை கண்ட அவனின் அப்பா கூட என்னவென்று விசாரிக்க…."ஒன்னும் இல்லப்பா…., கடைக்கு மட்டும் ஒரு ரெண்டு நாளுக்கு அப்பறம் வரேன்…"என்று விட்டான்.

இருந்தும் குருமூர்த்தியின் முகம் தெளியவில்லை. எங்கே மகன் நடந்ததையே நினைத்துக் கொண்டிருக்கிறானோ…., என்ற அச்சம் அவருள் தலை தூக்கியது.

அவரின் எண்ணத்தை புரிந்துக் கொண்டவன்,"ப்பா...‌ ஏதும் நினைச்சு மனச போட்டு வருத்திக்காதிங்க…. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல……."என்றான் மெல்லிய புன்னகையுடன்.

அவனின் சிரிப்பில் சிறிது சமாதானம் அடைந்தவர்…., கிளம்பி சென்றார்.. செல்லும் முன் விரைவில் வினோத்திற்கு திருமணம் முடித்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

இன்று அதைப் பற்றி பேச தான் அவனுக்காக காத்திருந்தார். வினோத் கடைக்கு வந்தவன் நேராக வேலை செய்யும் இடத்திற்கு சென்று விட்டான்.அவன் வந்த தகவலை அறிந்த குரூமூர்த்தி அவனிடம் வந்தார்.

"தம்பி உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்…"என்றவாறு அவன் அருகில் சென்று நின்றார்.

"ம்ம்ம் அப்பா இதோ ரெண்டு நிமிஷம் வந்துடுறேன் நீங்க ஆபிஸ் ரூம்ல போய் இருங்க…,"என்க, அவரும் சரி என்று விட்டு சென்றுவிட்டார்.

அவர் சென்ற இரண்டு நிமிடங்களில் இவனும் வேலையை முடித்து விட்டு இவனும் பின்னோடு சென்றான்.

"சொல்லுங்கப்பா….. என்ன விஷயம்.." என்றவாறே அவரின் முன் அமர்ந்தான்.அவரோ," தம்பி அன்னைக்கு பொண்ணு பாக்க போக சம்மதம் சொன்னியே.. நாளைக்கு மறு‌ நாள் நல்ல நாளா இருக்கு…., பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு தாக்கல் சொல்லி விட்டுடலாமா…?????"எனக் கேட்டார்.

அவர் பேசுவதை அமைதியாக கேட்டவன் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் பின்,"சரிப்பா…. பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு தாக்கல் சொல்லிடுங்க…. ஆனா ப்பா நீங்க சொல்ற பொண்ணு வீட்டுக்கு இல்லிங்கப்பா…..,!!!! நான் சொல்ற பொண்ணு வீட்டுக்கு.." என தனது முடிவை தெளிவாக கூறினான்.

அவனின் பேச்சை கேட்டவர் திகைத்தவர்,"என்ன வினோத் சொல்ற நீ சொல்ற வீடுன்னா புரியலையே…." என அவன் சொல்வது புரிந்தாலும் புரியாதது போல் கேட்டார். அவரின் நோக்கத்தை புரிந்துக் கொண்டவன்,"வேதாவ பொண்ணுக் கேளுங்கப்பா…" என‌ ஒரு வரியில் தனது உள்ளத்தை உரைத்து விட்டான்.

"இது நடக்காது தம்பி விட்டுடு.., நீ பண்ணி வச்சிருக்கிற காரியத்துக்கு எப்புடி நான் செல்வா கிட்ட பேசுறது…, அவன்‌ ஏற்கனவே உன்‌ மேல கோபத்துல இருக்கான்…,கண்டிப்பா இதுக்கு அவன் ஒத்துக்க மாட்டான்…, எந்த தைரியத்துல தம்பி இந்த பேச்சை திரும்ப எடுக்குற.., இது நமக்கு சரிப்பட்டு வராது…,விட்டுடு.." என‌ முடித்து விட்டார் குரூமூர்த்தி. அதைக் கேட்டவனோ எழுந்து அவரின் அருகில் சென்று அவரின் கைகளை தன் கைக்குள் அடக்கிக் கொண்டவன் பேச தொடங்கினான்,"ப்பா அவர் கோபம் நியாயமானது தான் ப்பா.. ஏன்னா??? நான்‌ பண்ண காரியம்‌ அப்புடி ஆனா…., ஆனா எனக்கு வேதாவ ரொம்ப ரொம்ப பிடிக்கும் அப்பா.., சத்தியமா அன்னைக்கு அவங்க கடைக்கு வர்றதுக்கு முன்னாடி வரைக்கும் நான் அவள் மறந்துட்டேன் தான்ப்பா நெனச்சுட்டு இருந்தேன்…, ஆனா கடையில அந்த பொண்ண பாத்த அப்பறம் என்னையும் அறியாம நான்‌ அவளத்தான் தேடுனேன் அப்ப தான் எனக்கே என் மனசு புரிஞ்சிச்சு பா…."

"நான் ஒத்துக்கிறேன் நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு தான் ஆனா அதுக்காக அவள விட்டுட்டு வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ண சத்தியமா என்னால நிம்மதியா சந்தோஷமா வாழ முடியுமான்னு தோணலப்பா…, என்னோட சுயநலத்துக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கைய…. வீணாக்க நான் விரும்பலப்பா…."
"நான் சொல்றத‌ எல்லாம் சொல்லிட்டேன் ப்பா இதுக்கு மேல உங்க இஷ்டம்.." என்றவன் அமைதியாகி‌ விட்டான்.

அவனின் பேச்சை கேட்டவரின் முகம் யோசனையை பிரதிபலித்தது. வினோத்தின் மனதில் உள்ளவற்றை அவன் தெளிவாக எடுத்து கூறிய‌ பிறகும் அவனை வற்புறுத்த விரும்பவில்லை, அது நியாயமும் இல்லை. ஆனாலும் வேதாவை பெண் கேட்பது குறித்து அவருக்கு சிறு சங்கடம் இருக்கத்தான் செய்தது.அதனையே காரணமாக கொண்டு தமையனின் உணர்வுகளை காயப்படுத்த அவர் தயாராக இல்லை.

மகனுக்காக யோசிப்பதா அல்லது அவரின் சங்கடத்தை ஒதுக்கி பெண் கேட்பது என தெளிவாக ஒரு முடிவை எடுக்க முடியவில்லை.., மேலும் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் இதை பற்றி கலந்தாலோசிக்க‌ வேண்டுமே….,எடுத்தோம் கவிழ்த்தோம் என‌ இவ் விஷயத்தில் செயல்பட முடியாதல்லவா???? அவருக்கு யோசிக்க அவகாசம் வேணாடியிருந்தது. எனவே அவனிடம்,"வினோத் ‌எனக்கு கொஞ்சம் யோசிக்கணும் ஒரு‌ வாரம் போகட்டும் இப்போதைக்கு கொஞ்சம் இந்த விஷயத்த ஆறப் போடலாம்…, அப்பறமா இதப் பத்தி பேசிக்கலாம்..,"என்று விட்டார்.மேலும் தரகர் சொன்ன‌ இடமும் வேண்டாம் என்று விட்டார்.

தந்தையிடம் பேசிய பிறகு சிறிது நிம்மதி அடைந்தவன், தனது வேலைகளை‌ கவனிக்க சென்றான்.இருந்தும் ஏதோ ஒரு உறுத்தல் அவன் மனதில் நெருட வேலையாளை அழைத்தான்,"கோபால் அண்ணா நான் கொஞ்சம் வெளி வேலையா போறேன் அப்பா கேட்ட சொல்லிடுங்க..,"என்றவன் தன் மனதில் உள்ள‌ நெருடலை மொத்தமாக களைத்து எறிய செல்வமணியை காணச் சென்றான்.

அவன் சென்று நின்ற இடம் செல்வமணியின் கடை. இதற்கு முன் அவன் இங்கு வந்ததில்லை, வேலை விஷயமாக செல்லும் பொழுது அவனின் தந்தை ஒரு முறை இந்த கடையை காண்பித்து உள்ளார். அதை வைத்து தான் இவன் இங்கு‌ வந்து நின்றிருந்தான்.

'கடையின் வெளியே நின்றிருந்தவனுக்கு உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது,‌ ஒரு வேகத்தில் வந்து விட்டானே ஒழிய, அவர் இருக்கிறார இல்லையா..??, தன்னைக் கண்டால் உள்ளே விடுவாறா?? இல்லை கோபப்படுவாறா?? அப்படி கோபப்பட்டால் என்ன செய்வது..?? என எந்த விதமான முன் யோசனையும்‌ இன்றி வந்து விட்டான்.'
'இப்பொழுது அதனை நினைத்து‌ ஒன்றும் ஆவதற்கில்லை என மனதில் நினைத்தவன் இருந்த சிறிது தயக்கத்தையும் உதறி தள்ளி விட்டு கடையினுள் நுழைந்தான்.'

அவன் தேடுவதற்கு அவசியம் இன்றி கல்லா பெட்டியின்‌ அருகில் நின்றிருந்தார் செல்வமணி. இவனைக் கண்டவுடன் முதலில் திகைத்தவர் பின் கோபம் கொண்டு முறைத்தார்.

அவரின் முறைப்பை உள் வாங்கியவன்,"நான் உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்….,"என நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக அவரை நோக்கி உச்சரித்தான்.அவனின் நிதானத்தில் சற்றே தானும் சிறிது நிதானத்தை எடுத்துக் கொண்டவர்,"ம்ம்ம் பேசுங்க.."என்றார்.அவனோ‌ தாங்கள் நின்றிருந்த இடத்தை கண்களால் அலசியவன்,'இங்கயா..' என்பது போல் பார்த்தான்.அவனின் கேள்வியை புரிந்துக் கொண்டவர் மதிய வேளை என்பதால் இனி‌ ஆட்கள் வருவது குறைவு தான் என எண்ணியவர்,"வாங்க.." என அவனை அழைத்துக் கொண்டு கடையின் பின்புறம் சென்றார்.
அங்கே அவர் உணவு உண்பதற்காக சிறிய டேபிளும் இரண்டு நாற்காலிகளும் இருந்தன. அதில் ஒன்றை காட்டி அவனை அமர செய்தவர் மற்றொன்றில் தானும் அமர்ந்துக் கொண்டார்.

சிறிது நேரம் மௌனத்தில் கழிய செல்வமணி வினோத்தை‌ தான் பார்த்துக் கொண்டிருந்தார்.பின் அவரே அந்த மௌனத்தை உடைத்து,"சொல்லுங்க என்ன விஷயம்"எனக் கேட்டார்.அவரின் வார்த்தைகளுக்காக காத்துக் கொண்டிருந்தவன் போல்,"நான்‌ முதல்ல உங்க கிட்ட ‌மன்னிப்பு கேட்டுகிறேன் அன்னைக்கு கடையில அப்படி நடந்ததுக்கு எனக்கு புரியுது நீங்க என் மேல கோபமா இருக்கிங்கன்னு, அது நியாயமும் கூட.., நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு தான் ஆனா சத்தியமா சொல்லுறேன் நான் வேதாக் கிட்ட நடந்துக்கிட்ட விதம் வேணும்னா தப்பா இருக்கலாம் ஆனா என் மனசுல எந்த விதமான தப்பான அபிப்ராயமும் இல்லை…,"
"உண்மைய சொல்லணும்னா…,எனக்கு வேதாவ‌ ரொம்ப பிடிச்சிருந்தது அவ என் வாழ்க்கை துணையா வந்தா நல்லா இருக்கும்ன்ற எண்ணத்துல தான் நான் அவங்க கிட்ட பேச போனேன்…,ஆனா என்னோட கெட்ட நேரமோ என்னமோ தெரியல நான் நெனச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு…,"என வருத்தமான குரலில் பேசியவர் தொடர்ந்து,"இனி அதைப் பத்தி பேசி ஒரு பிரயோஜனமும் இல்ல முடிஞ்சா என்ன மன்னிச்சிடுங்க நான் வரேன்.."என்றவன் எழுந்து வெளியேற முயன்றவன் கடைசி‌ நொடியில் அவரை திரும்பி பார்த்தவன்,"நான் ஒண்ணும் மோசமான ஆள் இல்லைங்க என் அப்பாவ ரொம்ப வருஷமா உங்களுக்கு தெரியும் அவர் பையன் நான் எப்புடிங்க தப்பானவான‌ இருப்பேன்…"என்றவன் வலி நிறைந்த பார்வை ஒன்றை அவரை நோக்கி வீசி விட்டு சென்று விட்டான்.

அவன் சென்ற பின்னும் திகைத்துப் போய் அமர்ந்திருந்தார் செல்வமணி.நிச்சயமாக அவன் மன்னிப்பு கேட்பான் என்று அவர் நினைக்கவில்லை. எதையோ பேச போகிறான் அல்லது அவன் செய்த செயலுக்கு நியாயம் சொல்ல போகிறானோ என்று தான் நினைத்திருந்தார்.
ஏனோ அவன் பேசி சென்ற பின் அவனை தவறாக நினைக்க மனம் வரவில்லை அவருக்கு அதிலும் இறுதியில் அவன் வீசி சென்ற பார்வை!!!!குழந்தை‌ ஒன்று தவறு என்று தெரியாது அதை செய்து விட்டு தன்‌ அன்னையிடம் அதை நிருபிக்க போராடும் பாவனை தான் தெரிந்தது.அவன் உணர்வுகளை மதித்து பதிலுக்கு இரண்டு வார்த்தைகள் பேசி இருக்கலாமோ..,என காலம் கடந்த சிந்தனை‌ அவருள் உதயமானது.

செல்வமணியிடம் பேசி விட்டு வந்ததில் இருந்து வினோத்தின் மனம் லேசாகி விட்டது.எந்த வித குற்ற உணர்வும் இன்றி மனம்‌ இறக்கையை போல் பறப்பதை உணர்ந்தான்.இன்னும் அவன் பேச வேண்டியது இரு நபர்களிடம் மட்டும் தான் ஒன்று செளமியாவிடம் மற்றொன்று அவன் மனம் கவர்ந்தவளிடம்.ஆனால் தற்போதைக்கு அவர்களை சந்திக்காமல் இருப்பது தான் நல்லது என அவன் நினைத்தான்.

அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.ஒன்று அவர்களை எப்படி சந்திப்பது என தெரியவில்லை. மற்றது அவர்களை சந்திப்பதன் மூலம் மேலும் எந்த விதமான பிரச்சனைகள் வருவதையும் அவன் விரும்ப வில்லை என்பது தான் அவனின் எண்ணமாக இருந்தது.

இங்கே காரைக்குடியில் வேதாவிற்க்கும் செமஸ்டர் தேர்வுகள் ஆரம்பாகி விட்டது. தேர்வுக்கு படிப்பதிலேயே அவள் நேரம் முழுவதும் சென்று விட்டது. இடை இடையில் தாயிடம் ஏதாவது செய்து வாங்கிக் கட்டி கொள்வது…,தந்தையிடம் கொஞ்சுவது..,உடன் பிறந்தவனிடம் வம்பு இழுப்பது…, இரண்டு நாள்களுக்கு ஒரு முறை செளமியிடம் போனில்‌ உரையாடுவது.., என அவள் நாட்கள் எந்த வித இடையூறுகள் இன்றியும் அழகாக நகர்ந்துக் கொண்டிருந்தன.


துடிக்கும்.......
 
Last edited:
Top