Ramyasridhar
Bronze Winner
சிவா மா அருமையான பதிவுகள் . சோகம் கூட இத்தனை அழகா, மரணம் கூட அழகா என்று மிகவும் அற்புதமாக சொல்லியிருக்கீங்க. அலர் - வாழ்க்கையில் இதுவரை சோகத்தை தவிர வேறெதுவும் அறிந்ததில்லை. முதன்முறையாக தனக்கென்று ஒருவன் வந்துவிட்டான் இனி வாழ்வில் வசந்தம் தான் என்றிருக்கையில் அந்த சந்தோஷதிற்கும் ஆயுள் குறைவு தான் என்பது போல் அந்த விபத்து. விபத்து நேரும் போது உற்றவன் அவளை காத்து தான் கோமா நிலைக்கு சென்று விடுகிறான். தந்தையும் சித்தியும் திருமணம் முடிந்தவுடன் தங்கள் கடமை முடிந்து விட்டது என்று அவளை கைகழுவி விட்டு சென்றுவிட்டார்கள். அந்நிலையிலும் தன்னால் முடிந்த மட்டும் அவனை காத்து வருகிறாள். கயவர்களிடம் இருந்தும் தன் பெண்மையை காக்க தினமும் ஒரு போராட்டம். நம் சமுதாயத்தில் ஒரு பெண் ஆண் துணை இல்லையென்றால் என்னென்ன அவலங்களை சந்திக்க நேரிடுமென்று சரியாக சொல்லியிருக்கீங்க (இங்கே ஆண் துணை இருந்தும் இல்லா நிலை ) இதுவரை தனக்கு துணையாக ஒருவன் இருந்தான், இப்போதோ அதுவும் இல்லை எனும் போது அது கொடுமை தான். அவனின் உடலை கூட காண முடியாமல் அண்ணன் என்று ஒருவன் அழைத்து சென்றுவிட்டதை கேட்டதும் அவள் நிலை சொல்வதற்கில்லை. மருத்துவரிடம் வந்து முறையிட்டால், அவர் கூறும் தகவல்கள் அனைத்தும் புதிதாக உள்ளது. மேலும் அவருக்கு பணமே பிரதானமாக உள்ளது. இவளுக்கு விலாசத்தை தரவே மறுக்கிறார். (நம் நாயகனை பற்றிய பில்ட் அப்பும் அவரே கொடுத்து விட்டார்) ஒன்றும் செய்ய இயலாமல் பேருந்து நிலையம் வரும் அவளுக்கு "சேதுபதி கிராமத்திற்கு செல்பவர்கள் ஏறுங்கள் " என்னும் சொல்லின் மூலம் ஒரு வழி கிடைக்கிறது. பேருந்தில் ஏறிவிட்டாள், இனி இந்த பயணம் அவளுக்கு என்ன தர காத்திருக்கிறது என்பதை அறிய ஆவல்