Ramyasridhar
Bronze Winner
தாத்தா பாட்டி இவர்களோடு பயணப்படாததால் தப்பித்தார்கள். ஆனால் அவர்கள் வாரிசுகளை இழந்தது கொடுமையிலும் கொடுமை. ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி கோழைகள் போல் முகத்தை மூடி அவர்கள் உயிர்களை பறித்த அந்த கயவர்களை என்ன செய்தாலும் தகும். பெண்களை கூட விட்டு வைக்கவில்லை. தன் கண்ணெதிரிலேயே தன் அன்பானவர்களை காக்க முடியாமல் இழந்து, அவர்களோடு போராடவும் முடியாமல்.... தன் அண்ணனுக்கு தகவல் சொல்லுவதற்காகவேணும் தான் உயிரோடு இருக்க வேண்டும் என உயிர் காக்க ஓடி அவர்களிடம் இருந்து தப்பிக்க பள்ளத்தில் விழுந்து பின் உயிர் மீண்டு ஒளிந்து, மறைந்து என இடர்களுடன் வாழ்ந்து, தனக்கு துணையாக அன்னையை போல் ஒருத்தியை மணந்து அந்த மாலை வாடும் முன்னரே அவன் வாழ்க்கையே முடிந்து விட்டது மூன்று வருடங்களுக்கு பின் தமையனை கண்டும் வாழ கொடுத்து வைக்காத நிலை.ஜெயவாமனின் நிலையை பார்க்கையில் கண்களில் கண்ணீர் வருகிறது ( சிவா மா மிக கனமான பதிவு ) ஜெயன், ஏகனிடம் அலரை மணந்து கொள்ள சொல்லும்போது ஏகனின் நிலையோ..... இப்போது, அவன் விரும்பியவள் அலர் என்பதை மறந்து, தம்பி எப்படியேனும் உயிர்பெற்று வந்து அவன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்திடமாட்டானா.... என்கிற ஏக்கம் கொண்ட நிலை தான். அனைவரையும் கலங்க வைக்கும் பதிவு இது