Spicy Kannamma
Well-known member
ஹாய் செல்லம்ஸ்...
நம்ம தள எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு நல்ல செய்தியோட வந்திருக்கிறேன். செய்தி என்னவென்று சொல்வதற்க்கு முன்னால் கேட்டவுடன் ஒப்புதல் அளித்த நம்ம ஸ்ரீமா -வுக்கு மிக மிக நன்றிகள் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.. Thank you so much srima
இதோ விஷயத்துக்கு வந்துட்டேன்..
நம் தளம் சார்பாக அனைவருக்கும் அட்வான்ஸ் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மக்களே...
சிறிது நாட்களுக்கு முன் நம் தளத்தில் நடத்திய விவாத போட்டியில் பெரும்பாலானோர் ஆர்வமாக பங்கெடுத்து அசத்திவிட்டீர்கள்.. அதனை தொடர்ந்து இப்பொழுது நான் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்,
சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இரவு 10 மணிக்கு வரை ஒரு அழகிய கலந்துரையாடல் நிகழ்வினை நடந்த ஆசைப்படுகிறோம்..
தலைப்பு என்னவென்றால் "எல்லாம் சுதந்திரம் பற்றி தாங்க.." அதாவது
நாம் மனதார விரும்பிய ஒன்று (அது பொருளாகவோ, உரிமையாகவோ, ஏதேனும் சம்மதமாகவோ எதுவாயினும்) நம் கையில் வந்தடையும் தருணம் மிகவும் அலாதியானது. அதை நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவித்திருப்போம்.. அந்த சுதந்திர புன்னகை பற்றிதான் கலந்துரையாடப் போகிறோம்..
சமீபத்தில் நான் மிகவும் விரும்பிய ஒரு ஆடை மற்றும் நான் பல வருடங்களாக படிக்க எண்ணிய நான் மலாலா புத்தகம் இவை இரண்டும் ஒரே நாளில் என் கைசேர்ந்தது. அவற்றிற்க்கு பின்னால் உள்ள என்னுடைய பைத்தியக்காரதனாமான, குழந்தைத்தனமான காதல் எந்த அளவு இருந்திருக்கிறது என்பது அவை என் கையில் வந்தடைந்த பின்னர்தான் எனக்கே தெரிகிறது..
பெரிதாய் எதையோ சாதித்து விட்ட சந்தோஷம்..!
உச்சி குளிர்ந்து உள்ளங்கால் உறைந்து நிற்கும் ஆனந்தம்..!
கஷ்டப்பட்டு அடக்கினாலும் அடங்கமறுக்கும் அதீத புத்துயிர் என் முகத்தில் அப்பிக் கொண்டது..
அந்த ஆடை 3 வாரங்களுக்கு முன்பு ஒரு கடையில் பார்த்தேன்.. அன்றிலிருந்து என்னை வா வா என அழைத்துக் கொண்டே இருந்தது..
நோட்டானந்தா(காசு) லொல்லு செய்வதால் என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு நித்தமும் காலேஜ் போகும் போதும் வரும்போதும் அதை பார்த்து ஒரு ஹாய் பாய் மட்டும் சொல்லிட்டு கடந்திடுவேன்..
2 வாரங்களாக அந்த ஆடையும் அங்கிருந்து நகன்ற பாடில்லை.. அது என்னை ஏக்கத்துடன் பார்த்து " உன்னுடன் அழைத்துச் செல்ல மாட்டாயா ..? " என்று கேட்பது போலவே இருந்தது..
அட கொக்கமக்கா.. உனக்கும் என் மேல் லவ்ஸா... நான் கூட one side -ஆ போய்டுமோனு நினைச்சேன் என்று அடக்கி வைத்த என் காதல் ஆசையை அம்மாவிடம் கட்டவிழ்த்தேன்..
எந்த ஒரு மறுப்பும் வெறுப்பும் இன்றி வாங்கிக்கோ மா.. என்றாள் என் அம்மா.
வெற்றிகரமாக 3-ஆம் வாரமான இன்று எங்கள் காதல் இணையுண்டது..
இதை வாங்கி வந்து என் அம்மா அவளிடம் நான் காட்டி மகிழ்கையில் என் புன்னகை கண்டு வானில் பறந்தாள்.
இன்றைய இளைஞர்களின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் தன் சிறுவயதில் வறுமைப் பிடியில் சிக்கி, ஆசைப்பட்ட எதுவும் கிடைக்கப் பெறாமல் வளர்ந்தவர்களே.. தான் பெறாத இன்பம் தன் பிள்ளைகள் பெறவேண்டுமென எண்ணி நம் வெற்று முகத்தில் ஒற்றை புன்னகையை காண எத்தனை எத்தனையோ தியாகங்கள் செய்யும் நம் பெற்றோர்கள் வாழும் தெய்வங்களே...
Love your Parents..
இது அந்த dress -க்கு பின்னால் உள்ள கதை. அந்த Book யாரை பத்தின கதை தெரியுமா..? பாக்கிஸ்தான் போராளி மலாலா யூசப்சாய் அவர்களது வாழ்க்கை வரலாறு தான் அப்புத்தகம்.
அந்த நாட்டில் பெண்கள் கல்வி பயில அனுமதி இல்லை. பெண் கல்விக்கு தடை விதித்த தாலீபான் தீவிரவாதிகளை எதிர்த்து போராடி குண்டடிப்பட்டு மரணத்தின் உச்சி வரை சென்றுவந்து இன்னமும் பெண்கல்விக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் 21 அகவை வீராங்கனை அவள்.
2011-ஆம் ஆண்டு பாக்கிஸ்தானின் தேசிய அமைதி பரிசும், 2013-ஆம் ஆண்டு சர்வதேச குழந்தைகள் அமைதிப் பரிசும், 2014-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றார். அவரது வாக்குகளில் என்னை புல்லரிக்க வைத்தது " நான் போராடுவது என்னை எதிர்க்கும் தாலீபான் வீட்டு பெண் குழந்தைகளுக்குமான கல்விக்கும் தான்" என்பது.
இவ்வாறு உங்கள் ஆசை நிறைவேறிய அழகிய தருணங்களையோ, வாழ்வில் நீங்கள் போராடி வெற்றி கண்ட உத்வேகமூட்டும் தருணங்களையோ சுதந்திர பெரு மூச்சுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை பாதை பலருக்கு Motivation ஆக இருக்க கூடும். உங்கள் அனுபவம் பலருக்கு தைரியத்தை பரிந்துரைக்கக் கூடும்..
பெண் சக்தியை நிலை நாட்டுவோம்.. பலருக்கு உந்து சக்தியாக விளங்குவோம்..!
விதிமுறைகள்:
1. பொதுவான உங்கள் வாழ்வியல் அனுபவங்களையும் கருத்துக்களையும் மட்டுமே பேச வேண்டும். அரசியல் பேசுதலோ மற்றவர் மனதை புண்படுத்தும் பேச்சுகளோ இருத்தல் கூடாது.
2. ஏதேனும் கதை மற்றும் புத்தகங்கள் குறித்து பேச எண்ணுபவர்கள் பொது அறிவு புத்தகங்கள் மற்றும் நம் தள புத்தகங்கள் & கதைகளை குறித்தே பேச வேண்டும்.
கலந்துக் கொள்ள விரும்புவோர் உங்களது உரையை இப்பொழுதில் இருந்து ஆகஸ்டு 15 இரவு 10 மணி வரை பதியலாம் மக்களே...

Last edited: