All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் " இனி எல்லாமே நீ தானே " கதை திரி....

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Abi kum Bharathi thaan friend nu வெற்றி ku theriyala.... இந்த mythili தேவை இல்லாமால் ava mela ஏன் வன்மம் paaraatura.....abi ah என்ன பேச்சி pesuthu அப்படியே plate ah maathita பாருங்க
ஆமாம் சகி நன்றி
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
8 இனி எல்லாமே நீ தானே
அறைக்கு ஓடிய அபி இன்னும் பயத்திலேயை இருந்தான். ஏன்னென்றால் இதுவரை அவனிடம் யாருமே கடுமையாக பேசியது இல்லை தற்போது மைதிலி அவனிடம் கடுமையாக பேசியது அவனின் மனதிலேயே இருந்தது..
அபி சென்றவுடன் ம்ம் வழக்கம்போல தன் ஆஃபிஸ் சுற்றி பார்க்க வெற்றி கிளம்ப அவன் அறைக்குள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு பாரதி அங்கு சென்றாள்...
அவளுக்குமே அபி வெற்றியின் மகன் என்பது தற்போது தான் தெரிந்தது எனினும் அபி சற்று சோகத்துடன் இருப்பதை கண்டு அவள் அவனிடம் விளையாட எண்ணி
" மே ஐ கம்இன் சார் "
என அவனின் அறை கதவை தட்டி கேட்டாள்..
அபி " பாரதி "
என்று ஆசையுடன் எழுந்தவனை..
பாரதி " பாஸ் பாஸ் நீங்க உட்காருங்க எவ்வளவு பெரிய ஆள் நீங்க என்ன பாத்து எழுலாமா உட்காருங்க உட்காருங்க "
அவளின் விளையாட்டை கண்டு கொண்ட அபியும் சகஜமாக
" ஆங் வாங்க சொல்லுங்க சொல்லுங்க நான் எங்க செயன் போடனும் "
பாரதி " அட வாலு மொளச்சு மூணு இல விடல அதுக்குள பெரிய பாஸ் ஆகி சையன் போட போறியா "
என அவனை பிடிக்க போனால் அபியும் அவள் கையில் அகபடாமல் அந்த அறையை சுற்றியே ஓடினான்...
இருவரும் களைத்து மூச்சு வாங்கி நிற்கும் போது அங்கு வந்த வெற்றி
" என்னச்சு ஏன் இரண்டு பேரும் இப்படி இருக்கிங்க "
அபி " டாடி " என ஒடியவன்
" டாடி நான் சொன்னன்ல என் பிரண்டு அன்பு இல்லத்துல இருக்கறவங்க அது பாரதி தான் நம்ம ஆபிஸ்ல தான் வொர்க் பண்ணுறாங்க "
அப்போது தான் வெற்றி உணர்ந்தான் அபியின் பிரண்ட அவனின் வயது ஒத்தவர் அல்ல பாரதி என்று.
வெற்றி " நீங்க அன்பு இல்லத்துல தான் இருக்கிங்கலா "
பாரதி " ம்ம் ஆமாம் சார் "
என்று அத்துடன் பேச்சை முடித்து கொண்டவள் அபியிடம் சொல்லி கொண்டு நகர்ந்து விட்டாள்..
உணவு உண்ண அபியை அந்த ஆபிஸின் கேண்டின் அழைத்து வந்தான் வெற்றி அங்கு பாரதியை கண்ட அபி
" டாடி நான் பாரதி கிட்ட போகட்டா பிளிஸ் "
இதுவரை தனக்கென எதும் கேட்காதவன்
இன்று கேட்கிறான் என்றாள் அது பாரதியிடம் செல்ல....
அவனுக்கு தெரியவில்லை இதுபோலவே ஒரு நாள் பாரதியே தனக்கு வேண்டும் என கேட்பான் என்று.......
அபி " பாரதி "
பாரதி " அபி கண்ணா "
வெற்றி " பாரதி இவன் உங்கூட சாப்பிடுறனு சொன்னான் பாத்துக்கோங்க அப்புறம் என் கேபின்ல கொண்டு வந்து விடுங்க "
பாரதி " ஓகே சார் நான் பாத்துகுறேன் "
வெற்றி " சாரி ஒங்கள டிஸ்டெப் பண்ணுறனு நினைக்குறேன் "
பாரதி " அதலாம் ஒன்னும் இல்ல சார் நான் பாத்துகுறேன் "
இவர்கள் பேசி கொண்டு இருந்தை அடுத்த டேபிளில் உட்கார்ந்து கேட்ட மைதிலி அவளது தோழி தேவிக்கு வயிறு எரிந்தது..
தேவி " பாருடி நீ புதுசு ஆனா நான் இந்த ஆபிஸ் இரண்டு வருசமா வேல பாக்குறேன் ஆனா அந்த பையன் ஒரு நாள் கூட யாரு கூடயும் நின்னு பேசுனதுல இன்னைக்கு அந்த பாரதி கிட்ட மட்டும் இப்படி பேசுறான் "
மைதிலி " பாத்துட்டு தான் டி இருக்கேன் அந்த பையன் மூலமா தான் நான் வெற்றிய அடைய போறன் "
இவர்களை பார்த்த அபி திரும்பவும் பயந்த நிலைக்கு சென்றான்...
பாரதி " அபி என்னச்சு "
அபி " ஒன்னும் இல்ல பாரதி "
சொல்ல போறியா இல்லையா என கண்டிப்புடன் அழுத்தமாக கேட்கவும்
அபி " அந்த ஆண்டிய பாக்கவே எனக்கு பயமா இருக்கு "
அப்போது தான் திரும்பி அடுத்த டேபிளில் உட்கார்ந்து இருந்த மைதிலியை கண்டவள்
" அவங்கள பாத்து உனக்கு என்ன பயம் "
அபி " இல்ல அவங்க என்ன திட்டுனாங்கல அதான் "
பாரதி " நீ தெரியாம அவங்க மேல இடிச்சுட்ட அவங்க கோபமா பேசுனாங்க அவ்வளவு தான் இதுக்கு ஏன் பயப்புடுற "
அபி " இல்ல பாரதி என்ன இதுலா பாத்தாலே பயமா இருக்கு "
சரி அப்ப நான் சொல்லுற மாதிரி செய் என்றவள் அவனிடம் ஏதோ சொல்ல
அபியும் சற்று தெளிந்து ஒரு காஃபி கப்பை வாங்கி கொண்டு மைதிலிடம் சென்றான்..
அபி " ஆண்டி "
முன்னர் அவனை பற்றி தெரியாததால் அவ்வாறு பேசினாள் ஆனால் இப்போது அவனை பற்றி நன்கு தெரியும் அதனால் பொறுமையாக இருந்தாள்..
" ஆண்டி நான் உங்க மேல காஃபி கொட்டுனது தெரியாம நடந்துச்சு சாரி இந்த காஃபி குடிச்சு சமாதானம் ஆகிடலாம் "
அழுத்துடன் அவன் கூறியதால் மைதிலியும் எதும் பேசாமல் அமைதியாக அவன் சொன்னதை செய்தாள்...
திரும்ப தன்னிடம் வந்தவனை
" அபி இப்ப எப்படி ஃபீல் பண்ணுற "
" நாம தெரியாம பண்ணிட்டோம் அதபத்தி அவங்க கிட்ட பேசி சாரி கேட்டுடோம் இனி அவங்கள பாத்து நீ பயப்பட வேணாம் சாரி கேக்கறது ஒன்னும் கேவலமான விஷயம் இல்ல யார் பாத்தும் பயப்பட கூடாது ஓகே "
தெளிந்த முகத்துடன் சரி என்றான் அபி......
தொடரும்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
9 இனி எல்லாமே நீ தானே
அபி அப்போது எல்லாம் சற்று மாறி இருப்பதாக வெற்றியின் மனதிற்கு பட்டது.
முன்பு அபி பயந்த சுபாவம் உள்ளவனாகவும் யாரிடமும் அதிகம் ஒட்டாமலும் இருப்பான் இப்போது தானாக எல்லோரிடமும் பேசுவது அன்பாக பழகுவது என இருந்தான்.. அதற்கு எல்லாம் காரணம் பாரதி என தெரிந்தும் அவளிடம் எதும் கேட்க முடியாமல் அமைதி காத்தான்...
விடிந்து கண்விழிக்கும் போதே
வெற்றி " ஹாப்பி பர்த்டே அபி "
என்று அபியை அணைத்து கொண்டான் வெற்றி..
அபி " தேங்க் யூ டாடி "
வெ
அபி " டாடி என் பர்த்டேக்கு பாரதி கூப்பிடுவீங்களா "
வெற்றி " உனக்கு வேணும்னா கண்டிப்பாக கூப்பிடலாம் அபி ஆனா அவங்கள மட்டும் கூப்பிட்டா மத்தவங்க கோச்சிப்பாங்க ல சோ ஆபிஸ் அப்புறம் அன்பு இல்லத்துல உள்ளவங்க எல்லோரையும் கூப்பிடுவோம் "
அபி " தேங்க் யூ டாடி "
என்று கழுத்தை கட்டிக் கொண்டவனை வினோதமாக பார்த்தான்....
மறுநாள் காலை அபியின் பிறந்தநாள் வீட்டே சற்று கூடுதலான சுறுசுறுப்புடன் இருந்தது..
வெறுத்த இந்நாளை கொண்டாடுவது அபி என்கிற ஒற்றை குழந்தைக்காக தான்...
அன்பு இல்லம்
பாரதி " ஹாப்பி பர்த்டே டியர் "
அபி " தேங்க் யூ டியர் "
என அவளை போலவே கூறி கேலி செய்தான்..
அபி " பாரதி இன்னைக்கு என் பர்த்டே இன்னைக்கு முழுக்க என்கூட தான் இருக்கனும் அப்புறம் பங்ஷன் நீ கண்டிப்பா வரனும் "
பாரதி " நானா நான் ஏன்டா அங்கெல்லாம் உன் பிரண்ட்ஸ்ல வருவாங்க நீ என்ஜாஜ் பண்ணு "
அபி " நோ நீ வரனும் "
" பாருங்க பாட்டி நீங்க சொல்லுங்க அப்பதான் வருவாங்க "
என்று அங்கிருந்த தனத்தை உதவிக்கு அழைத்தான்..
தனம் " போயிட்டு வாயேன் டா நீயும் எங்கயும் போனது இல்ல போய்டு வாடா "
பாரதி " மா அவன்தா குழந்தை உனக்கு தெரியாதா மா எனக்கு இதலாம் பிடிக்காதுனு "
தன் மகளை எண்ணி கவலை கொண்ட அந்த தாயின் கவலையை போக்குவதற்காக அங்கு வந்தான் வெற்றி..
வெற்றி " வாங்க பாரதி அபி தான் ஆசபடுறான்ல வாங்க "
பாரதி " இல்ல சார் இதலாம் சரி வராது "
அபி " பாரதி நான் பாவம்ல எனக்காக இது கூட பண்ண மாட்டியா "
என்று சோகமாக முகத்தை வைத்து கொண்டு கேட்டான்...
அவனே வெற்றி பெற அவர்களுடன் வருவதாக சம்மதம் தெரிவித்தால்...
பெங்களூரில் உள்ள பிரமாண்டமான ஷாப்பிங் மாலில் நுழைந்தனர் மூவரும்..
அபி ஷாப்பிங் செய்ய என பாரதியை இழுத்து கொண்டு அங்கும் இங்கும் என சென்றான்..
பாரதி " டேய் மெதுவாடா "
என அவன் பின்னேயை அலைந்து கொண்டு இருந்தாள்..
அங்கு ஏதேர்ச்சையாக வந்த அபியின் நண்பண் ஒருவன்..
அபி " ஹாய் டா முகேஷ் "
முகேஷ் " ஹாய் டா அபி "
அபியுடன் முகேஷ் குடும்பத்தினர் பேசி கொண்டு இருக்கும் போதே அங்கு வந்தாள் பாரதி வெற்றி..
முகேஷ் அம்மா " ஹாய் சார் நீங்கதான அபி அப்பா ஸ்குல் பங்ஷனல பாத்துறுக்கேன் "
" ஹேய் இவங்க தான் உங்க வொய்ப் ஆ ரொம்ப அழகாக இருக்காங்க "
அவர் மாட்டும் இருவரின் நிலை தெரியாமல் பேசி கொண்டே இருந்தார்....
பாரதி வெற்றி இருவரும் ஒரு மாதிரியான சங்கட நிலையிலேயே இருந்தனர்...
அவரிடம் எதும் கூறும் முன்னரே அவர் தன் குழந்தையை கூட்டி கொண்டு சென்று விட்டார்...
பாரதி மனதிற்குள்
" ச்ச வந்ததே தப்பா போச்சு அவங்கமாட்டும் அவங்க இஷ்டத்துக்கு ஏதோ நினைச்சுட்டு இருக்காங்க "
என நினைத்தே கொண்டே வெற்றியை பார்க்க அவன் மிக சாதாரணமாக நடந்து கொண்டான்..
" இவரு அதபத்தி எதும் நினைக்கலயே நாம தான் தேவயில்லாம நினைக்குறோமோ பாரதி குழப்பிக்காத வந்தது அபிக்காக அத மட்டும் பாரு "
அதன்பிறகு ஷாப்பிங் என தேவையான தேவை இல்லாத என பல பொருட்களை வாங்கி கொண்டு வந்து சேர்ந்தனர்.....
தொடரும்.....

வணக்கம் நட்புகளே தாமதத்திற்கு மன்னிக்கவும் நிறைய வேலைகளின் இடையே பதிவிடுவதால் சற்று தாமதம் ஆகிறது இனி தொடர்ந்து பதிபிக்கிறேன்...
நன்றி
 
Top