All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிந்தியனின் " இனி எல்லாமே நீ தானே " கதை திரி....

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo.... யாரு அந்த ரெண்டு பேரு.... யாரு paathukite இருந்ததது ava office ah vittu வெளிய வரத்தை..... அவன் thappu panninaa iva அடிச்சா avalodaya தற்காப்பு kaaga அதுல என்ன thappu..... Romba payanthutaa... Enna aaga pooguthoo.... வெற்றி abi ah care panni paathukanum... Super Super maa
நன்றி நன்றி சகி
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super partthathu vettriya illa Vera yaruma
வெற்றி பெங்களூர் ல இருக்கான் பாரதி சென்னை ல இருக்க ....
நன்றி சகி
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
5 இனி எல்லாமே நீ தானே
இருவர் உள்ளே வந்ததை கண்டு பாரதி பயந்தாள் ஆனால் அவர்களில் ஒருவர் தன் கம்பெனி முதலாளி மற்றோருவர் கம்பெனியில் வேலை செய்யும் வாட்ச்மென்..
முதலாளி " பயப்படாத மா நாங்க ஒன்னும் பண்ண மாட்டோம் நீ ஆபிஸ் விட்டு வேகமா வெளியே ஓடினத நம்ம வாட்ச்மென் பாத்துட்டு உள்ள போய் பாத்தான் அப்போ தான் அந்த மனோகர் பய தலையில ரத்தத்தோடு மயக்கிட்டத பாத்துட்டு எனக்கு கால் பண்ணி சொன்னான் அதான் வந்தோம் "
சார் அவன்தான் என்கிட்ட என அதற்கு மேல் சொல்ல முடியாமல் திணறிய பாரதியிடம்
" சரிமா கவலப்படாத நான் பாத்துகுறேன் அவனுக்கு அடி கொஞ்சம் பலம் தான் உயிருக்கு ஒன்னும் இல்ல " என்றார் அவளது முதலாளி..
" ஆத்தா நீ ஒன்னும் கவலபடாத டா நானும் ஐயாவும் எல்லாம் பாத்துகுறோம் நீ தைரியமா இருக்கு தா இந்த மாதிரி நாய்கள இப்படி பண்ணது தப்பே இல்ல "
என்றார் வாட்ச்மென்..
" எனக்கு ஒன்னும் புரியல அடுத்து என்ன பண்ணுறதுனும் தெரியல " என்றாள் பாரதி.
" நீ ஒன்னு கவலபடாத நான் பாத்துகுறேன் அந்த மனோகர போலிஸ் கிட்ட போக விடாம நான் பாத்துகுறேன் ஆனா அவன்கிட்டேந்து உன்ன எந்த நேரமும் என்னால காப்பாத்த முடியாது சோ நீ வேற எங்கயாசும் போ மா "
என்றார் அவளது முதலாளி.
விரக்தியான சிரிப்புடன் " அவங்கிட்டது தப்பிக்க இங்க வந்தேன் இப்போ இவன் கிட்ட தப்பிக்க வேற இடம் போறேன் இப்படியே நான் எத்தனை நாள் தான் ஓட "
என்றாள் பாரதி...
" கவலப்படாத டி நமக்கான நேரம் கண்டிப்பா மாறும் உங்க அப்பா நம்பல அவ்வளவு சீக்கிரம் கைவிட மாட்டாறு நாம வேற ஏதாவது பண்ணலாம் " என்றார் அவளது தாய் தனம்...
" சரி இப்படியே பேசிட்டு இருந்தா அடுத்து என்ன பண்ணுறது மனோகர் பத்தி எனக்கு தெரியும் அவன் ஆளுங்களுக்கு இன்னேரம் எல்லாம் தெரிஞ்சு இருக்கும் நீங்க அதுக்குள கிளம்புங்க " என்று அவர்களை துரிதப்படுத்தினார் வாட்ச்மென்..
ஆம் மனோகர் குறிப்பிட்ட ______ சேர்ந்தவன் அவர்கள் மத்தியில் அவன் பிரபலமும் கூட அதனால் தான் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று இந்த மாதிரி தவறான செயல்களை செய்ய துணிகிறான்...
" சார் எங்களுக்கு யாரையும் தெரியாதே நாங்க எங்க போவோம் " என்றாள் பாரதி..
சிறிது யோசித்தவர் " நான் ஒரு அட்ரஸ் தரேன் நீ அங்க போய் உனக்கு அதுதான் பாதுக்காப்பு "
" முடியாது சார் நான் எங்கேயும் போகல நான் போலிஸ் கிட்ட போறேன் சரண்டர் ஆகுறேன் அப்புறம் அவங்க எல்லாம் பாத்துப்பாங்க" என்றாள் பாரதி
ஆமாம் டி நீ போலிஸ் கிட்ட போய்டா நான் என்ன டி பண்ணுறது என்று அழுகையுடனே கூறினாள் தனம்
அதுக்காக திரும்பவும் ஊர விட்டு போய்தான் ஆகனுமா என்றாள் பாரதி..
கொஞ்சம் நாள் போமா யாருக்கு தெரியும் இப்ப நீ போற இடம் உனக்கு பாதுக்காப்பு கவும் நிரந்தரமான இடமாவும் இருக்கலாம்லா என்று ஒருவராக பேசி அவளை சம்மதிக்க வைத்தனர்..
தங்களுக்கு தேவையான பொருட்கள் கொஞ்சம் பணம் என எடுத்து கொண்டு பாரதி தங்களது பயணத்தை தொடர்ந்தாள்...
இங்கு பெங்களூரில்
அபி தனக்கு வந்த ஃபோன் காலை எடுத்து பார்த்தான் அதில் ருக்மணி அம்மா
" ஆங் சொல்லுங்க மா இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கிங்க " என்று கேட்டான் வெற்றி.
" ஒன்றும் இல்ல டா உன் கிட்ட ஒரு உதவி கேட்கனும் அதான் டா தொல்லை பண்ணிடனா "
" என்ன மா பேசுறிங்க நீ கால் பண்ணா அது எனக்கு தொல்லையா இனிமே அப்படிலா பேசாதிங்க சரியா சொல்லுங்க என்ன பேசனும் " என்றான் அபி..
" எனக்கு தெரிஞ்சவங்க ஒருதவங்க சென்னைல இருக்காங்க அவங்க எனக்கு கால் பண்ணி இரண்டு பேர பெங்களூர் அனுப்பறதா சொன்னாங்க அவங்களுக்கு ஏதோ பிரச்சினை யா அதான் உன் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லானு " என்று தான் கூற வந்ததை கூறி முடித்தார் ருக்மணி அம்மா..
" இரண்டு பேருனா யாரு மா வயசானவங்களா " என்றான் வெற்றி..
" இல்ல கண்ணா ஒருதவங்க வயசானவங்க இன்னொருதவங்க வயசு பொண்ணு அதுனால தான் உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு " என்றார் ருக்மணி அம்மா..
" உங்களுக்கு எது சரின்னு படுதோ செய்ங்க ஒன்னும் பிரச்சினை இல்லை " என்றான் வெற்றி..
" சரிடா கண்ணா அவங்க வந்ததுக்கு அப்புறம் பேசி யாரு என்ன பிரச்சினை எல்லா கேட்டு சொல்றேன் " என்று வைத்து விட்டார் ருக்மணி அம்மா...
பாரதி வெற்றி இருவரும் மனத்துக்குள் தங்கள் வாழ்க்கை மாறியதை நினைத்து கொண்டே அந்த இரவை கழித்தனர்...
வெற்றி " அம்மு உனக்கு என்ன டி வேணும் "
" அப்படியே கேட்டதலா வாங்கி போட்டுட்ட பாரு "
" ஏய் லூசு இருக்கறத வைச்சு சந்தோஷமா வாழனும் டி அதான் வாழ்க்கை சரி சொல்லு உனக்கு எப்படி வாழனும் "
" பெரிய பங்களா மாதிரி வீடு நாலு ஐந்து காரு அப்புறம் அப்புறம் ரொம்ப ரொம்ப வசதியா வாழனும் டா "
" ஏய் இப்பயே நாம வசதியா தான் வாழ்றோம் அப்புறம் என்ன டி "
" இப்ப இருக்குமே இதலா ஒரு வாழ்க்கை யா "
" அப்படி சொல்லாத டி நீ நான் நாம் குழந்தை நான் உன் மேல வச்சுருக்க லவ் நீ என் மேல் வச்சுருக்க லவ் இதான் டி எனக்கு பெரிய சொத்து காசு பணம் லா தூசு மாதிரி டி "
" இப்படியே பேசி பேசி தான் டா என்ன கவுக்கற "
" ஐ லவ் யூ டி மை பொண்டாட்டி "
" லவ் யூ டூ டா செல்ல புருஷா "
என்று அவன் தோள்களில் சாய்ந்து காதல் பொங்க கூறினாள்....
திடுக்கிட்டு தூக்கத்தில் இருந்த எழுந்த வெற்றி தன்னவளின் நினைவில் முழுகினான். "ஏன்டி என்ன விட்டு போன நீ கேட்ட எல்லாம் என்கிட்ட இருக்கு இப்போ நீ மட்டும் இல்ல" என்று கண்ணீருடன் தூங்கினான்...
விடியற்காலை பாரதி தன் தாயுடன் பெங்களூர் வந்து சேர்ந்தால் அங்கு இருந்த ஆட்டோகாரரிடம் " அண்ணா இந்த அட்ரஸ் போகனும் எவ்வளவு ஆகும் "
" இதுவா போலாம் மா கொஞ்சம் தூரம் தான் "
என்று குறிப்பிட்ட தொகையை வாங்கி கொண்டு அழைத்து சென்றார்....
டிராபிக் மிகுந்த சாலையில் ஆட்டோ சென்றது சிக்னலில் நிற்கும் போது எதிர் திசையில் வெற்றி அபியுடன் தனது காரில் இவர்களை கடந்து சென்றான். இருவரும் எதிர் எதிர் திசையில் பயணம் செய்கின்றனர்......
அபி அன்பு இல்லம்
இவர்களை வரவேற்றது ஆட்டோவிற்கு பணத்தை கொடுத்து விட்டு உள்ளே காலடி எடுத்து வைத்தாள் பாரதி..
அங்கு இருப்பவர்களிடம் விசாரித்து ருக்மணி அம்மா இருக்கும் இடத்தை கேட்டு அங்கு சென்றாள்.‌
" வணக்கம் மா நான் தான் பாரதி " என்று தன்னை அறிமுக படுத்தி கொண்டாள்..
" ஓஓஓ வாங்க பாரதி சென்னை லேந்து வந்து இருக்கிங்கல "
" ஆமாம் மா இது எங்க அம்மா தனம் "
" சரி நலம் விசாரிக்கறதலா அப்புறம் வைச்சுக்கலாம் டையார்டா இருப்பிங்க வாங்க உங்க ரூம் காட்டுறேன் ஓய்வு எடுத்துகோங்க மீதியை சாய்ந்தரம் பேசிக்கலாம் "
தான் பத்திரமாக வந்து சேர்ந்ததை தனது முதலாளிக்கும் வாட்ச்மென் க்கு தகவல் தெரிவித்துவிட்டு வந்தாள் பாரதி...
அறைக்கு வந்த பாரதி அலுப்பு தீர குளியல் போட்டு விட்டு பேருக்கு சிறிது சாப்பிட்டு படுத்தாள். பயண களைப்பால் நன்றாக தூங்கினார் தனம் ஆனால் தான் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் சிந்தனையிலேயே இருந்தாள் பாரதி..
தொடரும்...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
6 இனி எல்லாமே நீ தானே
பாரதி பெங்களூர் வந்து ஒரு வாரம் கடந்தது. ருக்மணி அம்மா உதவியால் ஓரளவு மனசை சாமதானபடுத்தி அடுத்து என்ன செய்வது என யோசித்தால்....
ருக்மணி அம்மா தனம் இருவரும் நல்ல தோழிகளாக வலம் வந்தனர். பாரதி வாழ்வில் நடந்தது அனைத்தும் ஒன்று விடாமல் கூறினார் தனம்..
" இப்படி கூடவா யா பண்ணுவாங்க " என்ற ருக்மணி யிடம் " இதுக்கு மேலேயும் நடக்குது மா என பொண்ணு ஒரு நல்ல வாழ்க்கை வாழனும் ஆசபடுற இது கடைசிவரை ஆசயாவே போய்டுமோனு பயமா இருக்கு " என்றார் தனம்.
" கவலப்படாதிங்க எல்லா நல்லபடியா நடக்கும் " பாரதி வந்த நாளில் இருந்து நடப்பதை பார்த்து ருக்மணி அம்மா மனதில் யோசனை எழுந்தது.
பாரதி ஒருவாறாக அலைந்து திரிந்து வேலைக்கான இடங்களை பார்த்தால் அப்படி அவள் பார்த்ததில் வெற்றி யின் கம்பெனியும் இருந்தது . இதை கவனித்துவிட்ட ருக்மணி அம்மா
" என்னமா இண்டெர்வியூ போக ரெடி ஆகிட்டியா "
" ஆங் ரெடி ஆகிட்டேன் மா இந்த வேலையாவது கிடைக்கனும் மா " என்றாள் பாரதி
" கவலைப்படாத டா சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும் " ருக்மணி அம்மா
" எங்க மா எங்களாள உங்களுக்கும் சிரமம் அதான் கஷ்டமா இருக்கு " பாரதி
" இதுல என்ன இருக்கு உங்களுக்குனு தனியாவா எல்லா செய்ய போறோம் அதலா போட்டு மனச குழப்பிக்காம தைரியமா போ " ருக்மணி அம்மா
மறந்தும் அவளிடம் இது தனக்கு தெரிந்தவர் கம்பெனி என கூறவில்லை. ஏனென்றால் இது அவளின் திறமைக்கு கிடைக்க வேண்டும் என்றே அவர் எண்ணினார்...
வேலை தேடி வெற்றியின் கம்பெனிக்கு காலடி எடுத்து வைத்தாள் அது வெற்றியின் பிஏ க்கான நேர்முக தேர்வு..
நடந்த தேர்வில் பாரதியுடன் சேர்த்து பதினைந்து பேர் தேர்வு ஆகிறுத்தனர்.. பதினைந்து பேரும் வேலை உண்டு வேறு வேறு பிரிவில் இதில் பாரதி வெற்றியின் பிஏ வாக தேர்வாகவில்லை மாறகாக அக்கோண்ட் சேக்ஷனில் தேர்வானாள்..
வெற்றியின் பிஏ வாக தேர்வானது மைதிலி எனும் பெண் பார்க்க இன்றைய மாடர்ன் கேர்ள் ஜீன்ஸ் டீ சார்ட் என அல்ட்ரா மாடர்ன் ஆக வந்திருந்தாள்...
ஐந்து பேரும் ஒரு அறையில் அனுமதிக்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர்.
அந்த அறைக்குள் வந்தான் வெற்றி.
" ஹாய் கேய்ஸ் வெல்கம் டூ அவர் கம்பெனி இன்டடியூஸ் அவர் செல்ஃப் " என அங்கிருந்த நாற்காலியில் காலின் மேல் கால் போட்டு கொண்டு அமர்ந்தான்.
அவனின் தோற்றத்தை கண்டு பல பெண்கள் இவனின் மனைவி கொடுத்து வைத்தவள் என்று கூட பொறாமை பட்டுருக்கின்றனர்..
அவனின் கம்பிரமான அழகில் விழுந்த பல பெண்களிள் மைதிலியும் ஒருவள் முதன்முறை அவனை பார்த்ததும் காதலில் விழுந்தாள்.
ஒவ்வொரு ஆக தங்களை பற்றி ஆங்கிலத்தில் அறிமுகபடுத்தி கொண்டு இருந்தனர்.
மைதிலி அதன்பிறகு பாரதி என்று அமர்ந்து இருந்தனர்.
மைதிலி அழகாக எழுந்து ஆங்கிலத்தில் தன்னை பற்றி கம்பிரத்துடன் கூறினாள். அவள் பேசியதை பார்த்து அனைவரும் ஆச்சிரியபட்டனர்.. ஆனால் அதை பற்றி வெற்றி சிறிதும் அலட்டி கொள்ளவில்லை பத்தோடு பதினொன்று என்பது அவளை கடந்து அடுத்த இருந்த பாரதி யிடம்
" என் பெயர் பாரதி பிரியா " தமிழில் கூறினாள்
" சாரி ஒன்ஸ் அகையின் " என்றான் வெற்றி.
மறுபடியும் தமிழில் தன்னை பற்றி கூறினாள்..
அவளின் தமிழை கேட்ட வெற்றி சிறு சிரிப்புடன் குட் என்று அடுத்து பார்க்க சென்றுவிட்டான்.. இவ்வளவு அழகாக பேசிய தன்னை ஒன்றும் சொல்லாமல் தமிழில் பேசிய அவளை பார்த்து சிரிப்புடன் குட் சொல்லியதை மைதிலி யால் ஏற்று கொள்ள முடியவில்லை.. பாரதி மேல் பொறாமை ஆரம்பித்தது....
இல்லத்திற்கு வந்த பாரதி தனது தாயிடம் ருக்மணி அம்மா விடமும் தனக்கு வேலை கிடைத்ததை சந்தோஷத்துடன் கூறினாள்..
அவர்களிடம் தான் வேலை செய்ய போகும் கம்பெனி தனது வேலை எல்லாவற்றையும் சொல்லி கொண்டு இருக்கும் போது தூரத்தில் ஒரு பையன் அமைதியாக அமர்ந்து இருப்பதை எதேச்சையாக கவனித்தாள்..
பாரதி " மா அது யாரு நான் இதுவரைக்கும் இங்க பார்த்ததே இல்லையே "
ருக்மணி " ஓஓஓ அவனா‌ அவன் இங்க வந்துட்டு போற ஒருந்தவங்க பையன் இரு உனக்கு அறிமுக படுத்துறேன் "
பாரதி " வேணாம் மா நானே போய் பேசிக்குறேன் "
என்று அவ்விடம் விட்டு நகர்ந்தாள் பாரதி. ருக்மணி அம்மா புன்னகையுடன் தன் வேலையை பார்க்க சென்றாள்...
பாரதி " ஹாய் "
" ஹாய் ஆண்டி "
பாரதி " ஆண்டி யா ஏய் குட்டி பையா என்ன பார்த்தா உனக்கு ஆண்டி மாதிரி தெரியுதா "
" ஆங் ஆமா ஆண்டி மாதிரி தான் தெரியுது "
பாரதி " நான் ஒன்னும் ஆண்டி இல்ல "
என்று தனது கழுத்தை நெளித்து கொண்டு கூறினாள்..
" நானும் குட்டி பையன் இல்ல "
என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறினான்...
பாரதி " எனிவேஸ் மை நேம் ஸ் பாரதி பாரதி பிரியா "
" மை நேம் ஸ் அபி அபி சரண் "
என்று அவளை போலவே கூறினான் நமது குட்டி நாயகன்...
இருவரும் தங்கள் பேசியதை நினைத்து சிரித்து கொண்டனர்...
பாரதி " அபி என்ன படிக்கற "
அபி " நான் பர்ஸ்ட் ஸ்டாண்ட் படிக்குறேன் ஆண்டி "
ஆங் என பாரதி அவனை பார்த்து கேட்க
அபி " சாரி அப்படினா நான் உங்கள அப்புறம் எப்படி கூப்பிட "
பாரதி " பாரதி னு கூப்பிடு எனக்கு அப்படி கூப்பிட்டா தான் பிடிக்கும் "
அபி " ஓகே பாரதி "
இருவரும் தங்களைபற்றி பேசி கொண்டே இருந்தனர். அபியும் அவனது தந்தை பற்றி எதும் கூறவில்லை பாரதியும் கேட்டு கொள்ளவில்லை.
அபி தன்கேன கிடைத்த பாரதியை தோழியாக ஏற்று கொண்டான்.. பாரதியும் தனது காயத்தின் மருந்தாக அவனது சிரிப்பை பயன்படுத்தி கொண்டாள்...
இருவரும் சிறிது நேரத்திலேயே நல்ல நண்பர்கள் ஆகினர். அப்போது அங்கு வந்த ருக்மணி அம்மா
" அபி டைம் ஆகிடுச்சு டாடி வைட் பண்ணுறாங்க கிளம்மலாமா "
அபி " ஓகே பாட்டி பாரதி நான் போயிட்டு வரேன் பாய் "
பாரதி " ஓகே அபி டேக் கேர் நைஸ்ட் வீக் உனக்காக வைட் பண்ணுவேன் "
முன்னே சென்றவனின் தோளினை பிடித்து தன் பக்கம் திருப்பி அவனின் உயரத்திற்கு கீழே முட்டி யிட்டு அமர்ந்தாள் பாரதி..
அவனின் நெற்றியில் தன் முத்தத்தை பதித்து அனுப்பி வைத்தாள்..
அவளிற்கோ அது சாதாரண முத்தம் தான் ஆனால் அதனை வாங்கிய அபி முதன்முறை பரவசம் அடைந்தான். அவனிடம் யாரும் இவ்வளவு அன்பாக பேசி பழக்கியது இல்லை ருக்மணி அம்மா பழகும் விதம் சற்று வேறு மாதிரியாக இருக்கும் இவ்வளவு நெருக்கமாக பழக்கியது இல்லை...
பாரதி " ரொம்ப நல்ல பையன் மா அபி இந்த வயசுல எவ்வளவு மேசூர் ஆ இருக்கான் "
ருக்மணி " அவன் அப்படி தான் ஓவர் பொறுப்பு பழகுன ஓரே நாள உன்ன அவனுக்கு இவ்வளவு பிடிச்சு போயிறுக்கு அதான் அதிசயம் "
பாரதி " ஏன்மா இப்படி சொல்றிங்க "
ருக்மணி " அவன் யார்கிட்டேயும் அதிகமா பேசவும் மாட்டான் பழகவும் மாட்டான் அவன் அப்படி தான் "
தொடரும்.....
 

Chitra Balaji

Bronze Winner
Super maa... Nice episode... Bharathi oda owner ah avala பெங்களூர் அனுப்பி vechi taaru அங்க இருந்தா பாதுகாப்பு illanu.... ருக்மணி அம்மா பொறுப்பு la ulla ilathuke vanthutaanga அவளும் ava அம்மா yum.... வெற்றி company la. Join yum pannita... Abi kita friendum aaita...
 
Top