All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நான் குறுநாவல் எழுதலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.. அதுக்கான டீஸர் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நீங்க சொல்றதை வச்சுத்தான் கதை எழுதலாமா வேண்டாமான்னு முடிவு செய்யணும்...
காரில் சென்று கொண்டிருந்த விஷ்வநாத் அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.. ஒரு மணிநேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள் அவன் நண்பர்களிடமிருந்து வந்திருந்தது. அவர்களை சந்திக்கத்தான் சென்று கொண்டிருக்கிறான்.
ஆறு மாதங்களுக்கு முன் அவர்களை சந்தித்தது நினைவில் எழ அவனது முகம் மென்மையை தத்தெடுத்தது. ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள் கொண்ட அவர்களது நட்பு பட்டாளம்..
பள்ளியில் தொடங்கிய அவர்களது நட்பு இதோ வருடங்கள் கடந்தும் அவர்களது நட்பு இறுகியதே தவிர சிறிதும் குறையவில்லை. பள்ளி படிப்பை முடித்தவர்கள் அடுத்ததாக கல்லூரியில் விருப்பமான படிப்பை தேர்ந்தெடுத்து வெவ்வேறு திசைகளில் சென்றாலும்… ஆறு மாதத்திற்கு ஒரு முறை அனைவரும் சந்தித்துக் கொள்ளவேண்டும் என்ற விஷ்வநாத்தின் கட்டளை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதோடு இடைப்பட்ட நாட்களில் அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் சேர்ந்து நினைவில் எழ கோபம், இயலாமை, வலி என்ற மாறி மாறி அவன் முகத்தில் தோன்றி ஸ்டேரிங்கை பிடித்திருந்த கைகளில் அழுத்தம் கூடியது.
அந்த நட்சத்திர விடுதிக்குள் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே சென்ற விஷ்வநாத் தங்களுக்காக முன்பதிவு செய்திருந்த மேஜையை தேடிச் சென்றான். தூரத்தில் அவன் வருவதைப் பார்த்த மோனிஷா “விச்சு” என்றவாறு அவனை நோக்கி ஓடிவந்தவள் அவனை கட்டிக்கொண்டாள்.
விஷ்வாவும் புன்னகையுடன் தோழியை அணைத்த நொடி நண்பர்கள் பட்டாளம் அவனை சூழ்ந்துகொண்டு அணைத்துக் கொண்டனர். அவர்களது அன்பில் இன்றும் கரைந்தவனாக அத்தனை நேரம் இருந்த கடுமை மறைந்து மனம் இளக கைகளை விரிக்க இரண்டு கை போதவில்லை அவனுக்கு.
விஷ்வநாத் நடுவில் நிற்க இரண்டு வட்டமாக அவனை அணைத்து நின்றவர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர்.
“போதும் போதும் நிறுத்துங்கடா..” என்று அவர்களை அமைதிப்படுத்தி அவர்களை இருக்கையில் அமர வைப்பதற்கு ஒருவழியாகிவிட்டான்.
********
“விச்சு சட்டுன்னு திருப்பாதே.. லெப்ட் சைட்ல இரண்டு டேபிள் தள்ளி உன்னையே ஒரு பொண்ணு உத்து உத்து பார்க்கிறாடா..” என்று ஜனனி கூறிக்கொண்டிருக்கையிலே வேகமாக அவள் சொன்ன திசையில் பார்த்தான்.
“சட்டுன்னு பாக்காதேன்னு சொன்னேன்ல..” என்று ஜன்னி சொன்னது அவன் காதில் விழவில்லை.. அவன் சற்று தொலைவில் இருந்த பெண்ணையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் இருந்தது கோபம் கோபம் கோபம் மட்டுமே…
அவன் பார்த்துவிட்டான் என்று தெரிந்தவுடன் வேகமாக எழுந்து வந்தவள், வருகிற வழியில் இருந்த டேபிளில் இருந்து எடுத்து வந்த பீர் பாட்டிலை விஷ்வாவின் தலையில் ஓங்கி அடித்தாள்.
நண்பர்கள் அதிர்ந்து ‘ஏய்’ என்று எழ, அதற்குள் விஷ்வாவின் வலிமையானகரம் அவளது கன்னத்தை பதம் பார்த்தது. நொடியில் சிவப்பு கோடுகளாக தடம் பதித்துவிட்ட கன்னத்தை கையால் தாங்கியவாறு விழிகளில் நீர்கோர்க்க அவனை முறைத்துப் பார்த்தாள் நாயகி.
***********
“இப்ப என்ன சொல்ல வர்ற என்னை லவ் பண்ணலை அதானே.. தோ பார் உன் பின்னாடி சுத்தி லவ் பண்ண சொல்லி கெஞ்சுற அளவுக்கெல்லாம் நீ ஒர்த் கிடையாது… டைம் வேஸ்ட் பண்ணாம இப்ப நீ என்கிட்ட ஜ லவ் யூ சொல்லணும்.. நீயா சொல்றியா இல்ல நான் சொல்ல வைக்கவா?” என்று மிரட்டலாக கேட்ட ஜனனியை பார்த்து உள்ளுக்குள் சற்று பயந்துதான் போனான் வினித்.
சிறு வயதிலிருந்தே அவளது அடாவடியை நன்கு அறிந்தவனால் இந்த மிரட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
“அ..அது.. வந்து..”
“வந்து போயின்னு இழுக்காம சொல்லித்தொலைடா..”
“இல்ல ஜன்னி…..”
கடவுளே இவகிட்ட இருந்து என்னை காப்பாத்துங்களேன் அவன் கடவுளை துணைக்கு அழைக்க…
சட்டென அவனருகில் வந்த ஜனனி அவனது கைகளை பற்றிக்கொண்டு “வினு உன்னை உயிரா விரும்புகிறேன்டா.. அது உனக்கு புரியலையா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா?” என்று உணர்வுப்பூர்வமாக கேட்க,
‘ஆங் அந்நியன் மாதிரி என்னா நடிப்புடா சாமி.. விக்ரம் கூட உன்முன்னாடி தோத்துவார்டி’ கலவரமாக அவளைப் பார்த்தான்.
அவனை விட்டு இரண்டடி பின்னே சென்றவள், “ஓகே நீ என்னை காதலிக்கலை.. பைன்.. நான் போறேன்.. திரும்ப வரமுடியாத இடத்துக்குப் போறேன்..” என்றவள் திரும்பி வேகமாக ஓடினாள்.
சில நொடிகள் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. என்ன சொன்னாள்? ஏனு ஓடுகிறாள்..? என்று புரியாமல் பார்த்தவன் மண்டையில் மணி அடிக்க…
“ஏய் ஜனனி நில்லு..” என்று பதறி அவளின் பின்னால் ஓடினான். ஏனெனில் அவள் மொட்டைமாடியிலிருந்து குதிப்பதற்காக ஓடினாள். ஓடியவள் சட்டென்று நிற்க.. பின்னால் வந்தவன் அவள்மீது மோதி நின்றான்.
யோசனையாக அவனை திரும்பி பார்த்த ஜனனி, “நான் எதுக்காகடா சாகணும்.. நீ தானே என்னை லவ் பண்ணலைன்னு சொன்ன.. அப்ப நீயே..” என்றவள் அவன் சுதாரிப்பதற்குள், அவன் கால்களை இடறிவிட்டு மாடியிலிருந்து தள்ளிவிட்டாள்.
குளியலறையில் இருந்து தலையைத் துவட்டியவாறு அறைக்குள் நுழைந்த விஷ்வநாத், தனது படுக்கையில் கழுத்து வரை போர்வையை இழுத்துப் போர்த்திய படி புரண்டு படுத்தவளைக் கண்டு எப்போதும் போலவே கடலளவு கோபம் எழுந்தது. இருந்தும் அதை வெளிக்காட்டாதவனாகத் துவட்டிக் கொண்டிருந்த ஈரமான துண்டை அவள் முகத்தில் வீசிவிட்டு உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தான்.
தன் முகத்தில் படிந்த ஈரத்தில் அடித்துப் பிடித்து எழுந்துமர்ந்தவள் மடியில் கிடந்து துண்டைப் பார்த்ததும் யார் வேலை என்று புரிந்து போனது.
“காலைலயே என் தூக்கத்தைக் கெடுத்துட்டான்.. ஆஃபிஸ் போகிறதுக்குள்ள உனக்குத் திருப்பிக் கொடுக்கலை! என் பேரு நாயகி இல்லைடா..” என்று கருவிக்கொண்டு எழுந்து முகம் கழுவி வர, இன்னும் அவன் உடைமாற்றும் அறையிலிருந்து வெளியே வரவில்லை என்றதும்... வேகமான குளியலறையிலிருந்து தண்ணீர் பிடித்து வந்து அவன் இருந்த கதவருகே ஊற்றிவிட்டு நல்ல பிள்ளையாகச் சென்று தூங்குவது போல் தலைவரைப் போர்வையால் மூடிக்கொண்டு படுத்துவிட்டாள்.
பேண்ட்டில் பெல்ட்டை மாட்டியபடி வேகமாக அறைக்குள் காலை வைத்தவன் அடுத்த நொடி தரையில் மல்லாந்து கிடந்தான்.
“அம்மாஆ…” இடுப்பைப் பிடித்துக்கொண்டு அலறியவன், தரை முழுவதும் ஈரமாக இருப்பதைக் கவனித்துச் சுற்றிலும் பார்வை செலுத்திவிட்டு கட்டிலைப் பார்க்க… போர்வைக்குள் இருந்தவள் உடல் சிரிப்பில் குலுங்கியது.
“பிசாசே உன்னை…” என்று பல்லைக் கடித்தபடி சுவரைப் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றவன், இரண்டு கைகளையும் உயர்த்திப் பேலன்ஸ் பண்ணிக்கொண்டே கட்டிலை நெருங்கி, போர்வையை மொத்தமாகச் சுருட்டி அவள் வெளியே வராதவாறு பிடித்துக் கொண்டவன், கையில் பொருள் எதுவும் அகப்படாமல் அருகில் கிடந்த தலையணையை எடுத்து மொத்தினான்.
“ஆ…. விடுடா… அய்யோ விடுன்னு சொல்றேன்ல மூச்சுவிடமுடியலை விடு விஷ்வா…” அவனிடமிருந்து விலகப் போராடினாள்.. கோபமெல்லாம் சேர்த்து தலையணையால் மொத்தி விட்டுச் சற்றுநேரம் கழித்தே அவளை விட்டவன் சுவரில் இருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு,
“லேட் ஆச்சுன்னு உன்னை விடுறேன்… இல்லை கொன்றுவேன் ஜாக்கிரதை..” என்று எச்சரித்துவிட்டுக் கவனமாக நடந்து சென்று வேறு உடை மாற்றி வந்தான். கட்டிலில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருந்தவள்,
“விஷ்வா..” என்று புன்னகையுடன் கூப்பிட… ‘அவ்வளவு சீக்கிரம் இவ கன்வின்ஸ் ஆகமாட்டாளே..’ அவன் மனதில் எச்சரிக்கை மணி அடிக்க..
“கூப்பிட்டாயா பௌபௌ..?” என்று அவனும் சிரித்த முகத்துடன் கேட்டான்.
அவனது அழைப்பில் கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு கட்டிலைவிட்டு இறங்கி, “அப்படிக் கூப்பிடாதன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன்… இன்னொரு முறை கூப்பிட்ட நான் மனுஷியா இருக்க மாட்டேன்..” என்று சண்டைக்குத் தாயாரானாள்.
“அதைத் தான் நானும் சொல்கிறேன் பௌபெள..” என்றான் நமட்டுச்சிரிப்புடன்.
“யாரைப் பார்த்துடா நாய்ன்னு சொன்ன..?” எனக் கோபத்துடன் ட்ரஸிங் டேபில் இருந்த பொருட்களை எல்லாம் அவன் மீது எரிந்தாள்.
“ஹேய் மெண்டல்… அதெல்லாம் காஸ்ட்லி பெர்ப்ஃயூம் கீழே வை..” என்று அவள் கையிலிருந்த பொருட்களை வாங்கிப் பத்திரமாக வைத்தவன்,
“என் பொருளை டச் பண்ணக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையாடி.. உன்னை என்ன செய்யறேன்னு பார்…?” என்றவன் அவளை நெருங்கி இரண்டு கரங்களைப் பின்னால் திருப்பி முறுக்க..
“டேய் விடுடா எருமை… அய்யோ அம்மா யாராவது காப்பாற்றுங்களேன்… இந்தத் தடியன் என் கையை உடைக்கப் போகிறான்..” என்று உரக்கக் கத்தினாள்.
“எதுக்குடி இப்போ கத்துற? உன்னால் நான் தினமும் வீட்டில் திட்டு வாங்குறேன்… பிறக்கும்போது ஸ்பீக்கரை முழுங்கிட்டு பிறந்தியா… ஹப்பா காதுக்குள்ள கொய்ங்குது…” என்று அவளைக் கட்டிலில் தள்ளிவிட்டான்.
“ஆமா நான் ஸ்பீக்கரை முழிங்கிட்டு பிறந்தேன்… நீ..” என்றவளை பாய்ந்து சென்று அவள் வாயைப் பொத்தினான்.
இவர்களின் அட்டகாசத்தில் யாரும் அறைக்கதவைத் தட்டவும் இல்லை, என்னவென்று கேட்கவும் இல்லை… தினமும் நடப்பதுதான் என்பதால் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவளை முறைத்தவன், “இப்ப எதற்காகக் கூப்பிட்ட..” என்று கேட்டான்.
“சாரி ஐ‘ம் பிஸி…” என்றவன் சீப்பை எடுத்து விரல்களால் தடவிப் பார்த்துவிட்டுத் தலைவாரினான். அவள் எதையாவது செய்து வைத்திப்பாள் என்பதால் எந்தப் பொருளையும் சரிபார்த்துத்தான் உபயோகிப்பான்.
“உனக்கு அப்படி வெட்டி முறிக்கிற வேலை எதுவும் இல்லைன்னு எனக்குத் தெரியும்.. ரொம்பப் பில்டப் பண்ணாமல் சீக்கிரம் வர்ற..” என்று உதட்டைச் சுழித்தவளைக் கண்ணாடி வழியாக முறைத்தவன், இவளிடம் பேசிக்கொண்டிருந்தால் இன்றைய நாள் இப்படியே முடிந்துவிடும் என்று எதுவும் கூறாமல் பேக்கை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
“ஈவ்னிங் சீக்கிரம் வந்திடு விஷ்வா..” என்று பின்னாலிருந்து கத்தியவளின் பேச்சைக் காதில் வாங்காமல் கீழே சென்றான்.
நேரே உணவு மேஜை இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்த விஷ்வா சமையலறை நோக்கி குரல் கொடுத்தான்.
“ம்மா… சீக்கிரம் நேரம் ஆச்சு…” மீண்டும் குரல் கொடுக்க..
“வர்றேன் வர்றேன் எதுக்காகக் கத்துற?” என்றவாறு அங்கு வந்த பொன்மலர் கையோடு கொண்டுவந்த தோசையை மகனது தட்டில் பரிமாறியவாறு,
“உன்னால் காலைல நான் உங்க அப்பாட்ட திட்டு வாங்கிட்டு இருக்கேன்… ஏன்டா விஷ்வா இப்படி இருக்க? இன்னும் சின்னக்குழந்தையா நீங்க ரெண்டுபேரும்.. அவகிட்ட வம்பு செய்யாதேன்னு சொன்னேனா இல்லையா… அவ கத்துற சத்தத்தில் வீடே இடிந்து தலையில் விழுந்திருமோன்னு பயமா இருக்கு.. நீயும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துத் தான் போயேன்.. உன்கிட்ட தினமும் சொல்லிச் சொல்லி என் எனர்ஜிதான் வேஸ்ட் ஆகுது..” என்று அவரும் இந்த ஒரு மாத காலமாக நாள் தவறாமல் பாடும் பல்லவியைப் பாட, ஏதோ முதன்முறையாகக் கேட்பவன் போல் தீவிரமான முகபாவத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவன்,
“ம்மா… நானும் டெய்லி சொல்றதைத்தான் சொல்றேன்.. இவளை டிவோர்ஸ் பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணி வைங்கன்னு… கேட்கிறீங்களா..” என்று சலிப்புடன் தோசையைப் பிய்த்து வாயில் வைக்க.. சற்றே கோபத்துடன் அவன் தலையில் கொட்டினார்.
“விஷ்வா இப்படிப் பேசாதேன்னு எத்தனை முறை சொல்றது… அவதான் உன் மனைவி… டிவோர்ஸ் பத்தி பேசறது இதுதான் கடைசி முறையாக இருக்கட்டும்..” என்று கண்டிப்புடன் கூறினார்.
“எனக்கு அவளைப் பிடிக்கலைம்மா… பெண்ணா அவ, தயவுசெய்து அவளை இங்கிருந்து போகச்சொல்லுங்க.. என்னால் அவகூட வாழ முடியாது…” என்று சிணுங்கியவாறு எழுந்து தாயை அணைத்துக் கொண்டு தோளில் தலையைச் சாய்த்துக் கொண்டான். கனிவுடன் அவனது முதுகை வருடியவர்… தன்னிடமிருந்து விலக்கி,
“இன்னும் சின்னப்பையன்னு நினைப்பா உனக்கு… ஒரு கம்பெனிக்கு மேனேஜர் மாதிரியா பேசற.. நேரம் ஆச்சு சாப்பிட்டுக் கிளம்பு…” பேச்சை மாற்றும் விதமாக அவனை மீண்டும் இருக்கையில் அமர வைத்துச் சாப்பிடச் சொன்னார்.
அதற்கும் ஏதோ சொல்ல வாய்திறந்தவன், அங்கு வந்த அவனது தந்தையைக் கண்டதும் திறந்த வாய்க்குள் தோசையை தினித்துக் கொண்டு தலையை குனிந்து கொண்டான்.
“குட்மார்னிங் விஷ்வா..” அவனது எதிர் இருக்கையில் அமர்ந்த தமிழரசனை நிமிர்ந்து பார்த்தவன்,
“குட்மார்னிங்ப்பா..” என்று முனங்கிவிட்டு வேகமாக சாப்பிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
“இப்ப எதுக்காக என்னைக் கண்டதும் ஓடுறான்..?” என்று மனைவியைப் பார்த்தார்.
“ம்.. பார்க்கிற நேரமெல்லாம் அதை செய்யாதே இதை செய்யாதேன்னு அட்வைஸ் பண்ணிட்டு இருந்தா ஓடத்தான் செய்வான்.. அவன் விருப்பத்துக்கு விட்டால் தான் என்ன..? அவன் சொல்றதை என்றைக்காவது சரின்னு ஏத்துக்கிட்டிங்களா..? பேச வந்திட்டார் பெருசா..” என்று அவருக்கு பரிமாறிவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட… யோசனையுடன் வெளியே சென்று கொண்டிருந்த விஷ்வாவை பார்த்தார்.
விஷ்வநாத்… இருபத்தி எட்டு வயது இளைஞன். தனியார் ஸ்போர்ட்ஸ் பைக் ஷோருமில் மேனேஜராக பணிபுரிகிறான். திருமணம் முடிந்து ஒருமாதம் தான் ஆகிறது. பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திட்டு அனைவரது காலை வாழ்த்துக்களையும் புன்னகையுடன் தலையசைத்து பெற்றுக் கொண்டவன் தனது அறைக்குச் சென்றான்.
புதிதாக அறிமுகப்படுத்த இருக்கும் பைக்கின் மாடலை கணினித் திரையில் பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவனின் அலைபேசி ஒலித்தது. அவனது நண்பன் வினித் தான் அழைத்திருந்தான். எதற்காக அழைக்கிறான் என்று தெரிந்தும் கம்பெனியில் வேலைநேரத்தில் அலைபேசியை பயன்படுத்தக்கூடாது என்பதால் அவனுக்கு தான் வந்துவிடுவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தான்.
மாலை வேலைநேரம் முடிந்து வீட்டிற்கு வந்தவன் நேராக அறைக்குச் செல்ல நாயகி அங்கு இல்லை… கட்டிலில் அவனுக்கான உடை அயன் செய்து மடித்து வைக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் நியாபகம் வந்தவனாக,
“ஓ.. மேடம் எல்லாம் ரெடியா எடுத்து வச்சிட்டு போயிருக்காங்க போல… தேங்க் யூ பௌபெள…” என்று விசில் அடித்தபடி வேகமாக குளித்துவிட்டு நாயகி எடுத்து வைத்திருந்த உடையை அணிந்து கொண்டு கீழே வந்தவன், பொன்மலரிடம் வெளியில் செல்வதாகக் கூறிவிட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
நாயகி தனது தோழிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டு அவனது வரவிற்காக நீண்ட நேரமாக காத்திருந்தாள். நேரம் தான் சென்று கொண்டிருந்ததே தவிர அவன் வரவேயில்லை. தோழிகளும் மற்றொரு நாள் சந்திக்கலாம் என்று ஒவ்வொருத்தராக விடைபெற்று சென்றுவிட்டனர். தனித்து அமர்ந்திருந்தவளுக்கு தோழிகளின் முன் விஷ்வா தன்னை அவமானப் படுத்திவிட்டதாக எண்ணி கோபத்துடன் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள்.
காரில் சென்று கொண்டிருந்த விஷ்வநாத் அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.. ஒரு மணிநேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள் அவன் நண்பர்களிடமிருந்து வந்திருந்தது. அவர்களை சந்திக்கத்தான் சென்று கொண்டிருக்கிறான்.
ஆறு மாதங்களுக்கு முன் அவர்களை சந்தித்தது நினைவில் எழ அவனது முகம் மென்மையை தத்தெடுத்தது. ஐந்து ஆண்கள், நான்கு பெண்கள் கொண்டது அவர்களது நட்புப் பட்டாளம்.
பள்ளியில் தொடங்கிய அவர்களது நட்பு இதோ வருடங்கள் கடந்தும் அவர்களது நட்பு இறுகியதே தவிர சிறிதும் குறையவில்லை. பள்ளி படிப்பை முடித்தவர்கள் அடுத்ததாக கல்லூரியில் விருப்பமான படிப்பை தேர்ந்தெடுத்து வெவ்வேறு திசைகளில் சென்றாலும்… ஆறு மாதத்திற்கு ஒரு முறை அனைவரும் சந்தித்துக் கொள்ளவேண்டும் என்ற விஷ்வநாத்தின் கட்டளை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அதோடு இடைப்பட்ட நாட்களில் அவன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் சேர்ந்து நினைவில் எழ கோபம், இயலாமை, வலி என்ற மாறி மாறி அவன் முகத்தில் தோன்றி ஸ்டேரிங்கை பிடித்திருந்த கைகளில் அழுத்தம் கூடியது.
அந்த நட்சத்திர விடுதிக்குள் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே சென்ற விஷ்வநாத் தங்களுக்காக முன்பதிவு செய்திருந்த மேஜையை தேடிச் சென்றான். தூரத்தில் அவன் வருவதைப் பார்த்த மோனிஷா “விச்சு” என்றவாறு அவனை நோக்கி ஓடிவந்தவள் அவனை கட்டிக்கொண்டாள்.
விஷ்வாவும் புன்னகையுடன் தோழியை அணைத்த நொடி நண்பர்கள் பட்டாளம் அவனை சூழ்ந்துகொண்டு அணைத்துக் கொண்டனர். அவர்களது அன்பில் இன்றும் கரைந்தவனாக அத்தனை நேரம் இருந்த கடுமை மறைந்து மனம் இளக கைகளை விரிக்க இரண்டு கை போதவில்லை அவனுக்கு.
விஷ்வநாத் நடுவில் நிற்க இரண்டு வட்டமாக அவனை அணைத்து நின்றவர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர்.
“போதும் போதும் நிறுத்துங்கடா..” என்று அவர்களை அமைதிப்படுத்தி அவர்களை இருக்கையில் அமர வைப்பதற்குள் ஒருவழியாகிவிட்டான்.
பேசிக்கொண்டே அவர்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்து கொண்டிருக்கும் பொழுது,
“விச்சு சட்டுன்னு திருப்பாதே.. லெப்ட் சைட்ல இரண்டு டேபிள் தள்ளி உன்னையே ஒரு பொண்ணு உத்து உத்து பார்க்கிறாடா..” என்று ஜனனி கூறிக் கொண்டிருக்கையிலே வேகமாக அவள் சொன்ன திசையில் பார்த்தான்.
“சட்டுன்னு பாக்காதேன்னு சொன்னேன்ல..” என்று ஜனனி சொன்னது அவன் காதில் விழவில்லை.. அவன் சற்று தொலைவில் இருந்த நாயகியை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் இருந்தது கோபம் கோபம் கோபம் மட்டுமே.
‘இவ எதுக்காக இங்கே வந்தாள்…’ மனதில் பல்லைக் கடித்தவன் அவளைப் பார்த்து முறைத்தான்.
அவன் பார்த்துவிட்டான் என்று தெரிந்தவுடன் வேகமாக எழுந்து வந்தவள், வருகிற வழியில் இருந்த டேபிளில் இருந்து எடுத்து வந்த பீர் பாட்டிலை விஷ்வாவின் தலையில் ஓங்கி அடித்தாள்.
நண்பர்கள் அதிர்ந்து ‘ஏய்’ என்று எழ, அதற்குள் விஷ்வாவின் வலிமையான கரம் அவளது கன்னத்தை பதம் பார்த்தது. நொடியில் சிவப்பு கோடுகளாக தடம் பதித்துவிட்ட கன்னத்தை கையால் தாங்கியவாறு விழிகளில் நீர்கோர்க்க அவனை முறைத்துப் பார்த்தாள் நாயகி.
“ஆர் யூ ஓகேடா..” முன்நெற்றியில் கீரிய கண்ணாடித் துகளை அகற்றி டிஸ்யூவை வைத்து கசிந்து கொண்டிருந்த ரத்தத்தை சுத்தம் செய்தான் வினித். மற்றவர்கள் அவளைத் திட்டிக்கொண்டிருக்க அது எதுவும் அவள் காதில் விழவில்லை. விஷ்வாவின் பார்வை நாயகியை சீற்றத்துடன் பார்க்க.. அதற்கு சற்றும் தயங்காத பதில் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
(கலவரம் தொடரும்...)
**************
ஹாய் ப்ரண்ட்ஸ்…
சர்ப்ரைஸ்.. மற்றுமொரு புதிய கதையுடன் உங்களை சந்திக்கிறேன்.. “காதல் கலவரம்..!!” இதற்கு முன் ஒரு டீஸர் போட்டிருந்தேன் நியாபகம் இருக்கா..? இதில் நோ சஸ்பென்ஸ்.. நோ பெய்ன்.. படிச்சு ஜாலியா என்ஜாய் பண்ணுங்க..
UVUK கதை கொஞ்சம் அழுத்தமாக செல்வதால் ரிலாக்ஷேசனுக்காக இந்த குறுநாவலை வாரம் ஒரு பதிவு தருலாம் என்று நினைக்கிறேன்…
முதல் அத்தியாயம் பதிந்து விட்டேன் டியர்ஸ்.. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். மற்ற கதைகளுக்கு தரும் ஆதரவை இந்த கதைக்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
“எவ்வளவு தைரியம் இருந்தால் எங்க விச்சுவை பாட்டிலால் அடித்திருப்ப..?” என்று மோனிஷா நாயகியைப் பார்த்து எகிறினாள்.
விஷ்வாவை முறைத்துக் கொண்டிருந்தவள் பார்வையை விலக்கி, அவளை விழிகளை சுருக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் அவனைப் பார்க்க…
“சரியான திமிர் பிடிச்சவளாக இருக்கா..? ஏய் நாங்க கேட்கிறது காதில் விழலை..? அங்கே என்ன லுக்கு விட்டுட்டு இருக்க…?” வித்யா குரலை உயர்த்த.
விஷ்வாவிற்கு லேசாக காட்சிகள் மங்குவதுபோல் தெரிய, தலையை உலுக்கி அங்கு கிடந்த நாற்காலியில் அமர்ந்தான்.
“உனக்காக என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் இவ்ளோநேரம் வெயிட் பண்ணிட்டு இப்போதான் போனாங்க… வேணும்னே என்னை அவங்க முன்னாடி அவமானப்படுத்திட்டு, இந்த கூட்டத்தை பார்க்க கிளம்பி வந்திருக்க..” என்று விஷ்வாவைப் பார்த்து கத்தியவளைக் கண்டு, திகைத்து அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
“ஏய் என் ப்ரண்ட்ஸை எதாவது சொன்ன அரைஞ்சு பல்லை பேத்துடுவேன் ஜாக்கிரதை… நான் காலையிலேயே சொல்லிவிட்டேன் வரமுடியாதுன்னு… அதையும் மீறி உன் ப்ரண்ட்ஸை இன்வைட் பண்ணது உன்னோட தவறு… இவ்வளவு பெரிய ஊர்ல உனக்கு வேற இடமே கிடக்கலையா.. எங்கே போனாலும் என் உயிரை எடுக்கவே பாலோ பண்ணி வருகிற…” என்று பதிலுக்கு கத்தியவனை உறுத்துவிழித்தாள்.
“நான் எங்க போனாலும் சார்கிட்ட சொல்லி பர்மிஷன் கேட்டுட்டு தான் போகனுமோ..? அதற்கு வேற ஆளைப் பாரு” என்று நக்கலாகப் பார்த்தாள்.
“அதற்கு தான் விடமாட்டேங்கிறியே..! ராட்சஷி.. எதற்காக என்னை பிடித்துக் கொண்டு தொங்குற..? உனக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா..?” கோபத்துடன் சீறினான். அதில் அவளது முகம் மாறியது.
“ஹேய் வெய்ட் வெய்ட்.. என்ன நடக்குது இங்க யாராச்சும் சொல்லுங்கப்பா..?” அவர்களின் உரையாடலில் குழம்பியவனாக இருவருக்கும் இடையில் புகுந்தான் நந்தன்.
“விச்சு யார் இது..?” ஜனனி கேட்க.. மற்றவர்களும் அதே கேள்வியை விழிகளில் தேக்கி அவனைப் பார்த்தனர்.
“இவள் நாயகி.. எங்கவீட்டில் என் வொய்ப்பா வொர்க் பண்றா..” என்று சலிப்புடன் கூறியவனைக் கண்டு, “வாட்?” மற்றவர்கள் அதிர்வுடன் இருவரையும் பார்த்தனர்.
அவர்களின் அதிர்ச்சிக்குக் காரணம் அவனுக்கு திருமணம் ஆனதைவிட அதை தங்களிடம் மறைத்துவிட்டான் என்பது தான்.
விஷ்வா தன்னை அறிமுகப்படுத்திய அழகில் கடுப்புடன் அவன் தலையில் கொட்டினாள் நாயகி.
ஏற்கனவே அடிப்பட்டிருந்த இடத்தில் கொட்டவும், “ஆ..” வலியில் சன்னமாக முனகியவன், “ராட்சஷி…” என்று அவளைப் பார்த்துக் கத்தினான்.
நண்பர்கள் ஒருவாறு அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவர்களைப் பார்க்க.. ஜன்னியின் பார்வை வினித்தை துளைத்தது. மற்றவர்களிடம் தெரிந்த அதிர்வில் பாதிகூட அவனிடம் இல்லாததைக் கண்டு துணுக்குற்றவள், அவனைப் பார்த்தவாறே அருகில் நின்ற கீதாவின் காதில் ஏதோ கூற, அதைக் கண்டுவிட்ட வினித் பதற்றத்துடன் ‘ஐயோ பார்த்துட்டா.. பார்த்துட்டா..’ என்று மனதில் அலறியவனாக தனது முகத்தை கவலையாக மாற்றிக்கொண்டு நின்றான்.
“வினித் விச்சுக்கு கல்யாணம் நடந்த விசயம் உனக்குத் தெரியும் தானே..” என்று கீதா சத்தமாகக் கேட்டுவிட, அனைவரது கவனமும் கொலைவெறியும் அவனிடம் திரும்பியது.
‘மொத்த கும்பலையும் என் பக்கம் திருப்பி விட்டாளே.. சரி சமாளிப்போம்..’ என்று அவர்களைப் பார்க்க அவனது திருட்டு முழியில் அவனை மொத்த ஆரம்பித்தனர்.
“டேய் டேய் விடுங்கடா டேய் கல்யாணம் பண்ணது அவன்.. என்னை எதுக்காகடா அடிக்கிறிங்க..” என்று அலறியவனை மேலும் மொத்தியவர்கள்…
“அவன் கல்யாணம் பண்ணிதை மறச்சல்ல அதுக்குத்தான்… இன்னும் ரெண்டு போடுங்கடா..” என்று யுவன் சொல்லவும்,
“டேய் விச்சு என்னைக் காப்பாத்துடா…” என்று அலறினான் வினித்.
அவனை வெளுத்துக் களைத்தவர்கள் கவனம் விஸ்வாவிடம் சென்றது… நாயகி ரத்தம் கசிந்து கொண்டிருந்த இடத்தை ஆராய.. தன் கேசத்தில் இருந்த அவள் கரத்தை பட்டென்று தட்டிவிட்டு நாயகியை முறைத்துக் கொண்டிருந்தான்.
“வா.. ஹாஸ்பிடல் போகலாம்..” என்று கையைப் பிடித்தவளை வெடுக்கெடுத்து கையை இழுத்துக் கொண்டவன்,
“போடி எனக்கு என்னை பார்த்துக் கொள்ளத் தெரியும்..“ என்றவன், ‘வந்துட்டா பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதற்கு..’ என்று முனுமுனுக்க…
“நமக்குத்தான் இன்னும் பாப்பாவே வரலையே விஸ்வா.. பின்னே எப்படி பிள்ளையை கிள்ளவிட்டு, தொட்டிலை ஆட்ட முடியும்…” என்று கேட்க…
`இவள் தெரிந்துதான் சொல்றாளா..’ ஒரு கணம் திகைத்தவன் தலையில் அடித்துக் கொள்ள…
“ஒருவேளை பக்கத்துவிட்டு மல்லிகா அக்கா குழந்தையை சொல்றியோ… அந்த பாப்பா கியூட் சமத்து.. அதை எதுக்காக நான் கிள்ளப் போகிறேன்.. அதோடு அந்தப் பாப்பா இப்போ வளர்ந்துட்டதால பெட்ல தான் தூக்குவா தொட்டில் எல்லாம் இல்லை விஷ்வா…” என்று பேசிக்கொண்டே போனாள்.
தலையில் கைவைத்து அமர்ந்திருந்தவனையும், எதிரே நின்று அவனது பிபியை எகிற வைத்துக் கொண்டிருந்தவளையும் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர் நண்பர்கள்.
சற்று நேரத்தில் நிமிர்ந்தவன் அவர்கள் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து, “என்ன..?” என்று கேட்டான் சற்றுமுன் எதுவுமே நடவாதது போல.
“எங்களை யாரையும் மேரேஜ்க்கு இன்வைட் பண்ணலை. இந்த அளவிற்கு நாங்க வேண்டாதவங்களாக போயிட்டோம்ல..” எப்போதும் சோக கீதம் வாசிக்கும் ஹரி ஆரம்பிக்க.. அவன் கூற்றை ஏற்பது போல் மற்றவர்களும் பார்த்து வைத்தனர்.
“டேய் என்ன நடந்ததுன்னு சொல்லுடா இவங்ககிட்ட..” என்று வினித்தை பார்த்தான்.
“உன் மேரேஜ் தானே நீயே சொல்லிக்கோ… இவ்வளவு நேரம் என்னை இந்த கும்பல் சுத்தி நின்னு மொத்துச்சு.. அப்போ என்னை காப்பாத்தினியா இல்லைல்ல.. நான் சொல்லமாட்டேன் நீயே சொல்லிக்கோ..” என்று முறுக்கிக்கொண்டு நாற்காலியில் அமர்ந்தான்.
அவர்கள் இருந்த மேஜை கடைசியில் மூலையில் இருந்ததால் அங்கு நடந்ததை யாரும் கவனத்திற்குச் செல்லவில்லை.. ஏதோ நண்பர்கள் கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டனர்.
“முதல்ல எங்களை உன் வொய்ப்க்கு இன்டர்டியூஸ் பண்ணுவியா.. இல்ல அதுவும் நாங்கதான் பண்ணிக்கனுமா..” என்று நந்தன் கடுமையுடன் கேட்கவும்,
“வினித், நந்தன், ஹரி, யுவன், கீதா, வித்யா, மோனிஷா, ஜனனி..” என்று அவர்களை வரிசையாக அறிமுகப்படுத்தினான்.
“ஹாய்..” அவர்களைப் பார்த்து கையை அசைத்து புன்னகைத்தாள்.
“என்ன நடந்ததுன்னா..” விஷ்வா ஆரம்பிக்க.. “ப்ச்.. ரத்தம் வந்துட்டே இருக்கு… முதல்ல உனக்கு பஸ்ட்எய்ட் பண்ணனும் வா ஹாஸ்பிடல் போகலாம்… ப்ரண்ட்ஸ் எங்கேயும் போக மாட்டாங்க..” என்று அவன் தோளைப் பற்றி எழுப்ப முயன்றாள்.
மறுக்காமல் எழுந்து கொண்டவன், “சீ யூ ஹாய்ஸ்.. இன்னொரு நாள் டேட் பிக்ஸ் பண்ணுங்க மீட் பண்ணலாம்.. சாரி என்னால் இன்றைய நாள் வீணாகிருச்சு..” என்று வருத்ததுடன் கூறவும்… அவனை முறைத்தனர்.
“உன்னைவிட கெட்டுகெதர் பெரிதில்லை.. நாங்களும் வரட்டுமா விச்சு..?” என்று கவலையுடன் கேட்க.. மறுப்பாக தலையசைத்தவன், செல்லும் முன் சற்று தயங்கி அவர்களைப் பார்த்தவன், “என்றையும் உங்களை நான் குறைவா நினைச்சதில்லைடா.. உங்க மனசை காயப்படுத்தி இருந்தால் ஐ’ம் சாரி..” என்றவனை சூழ்ந்து கொண்டு அணைத்துக் கொண்டனர்.
“நீ பீல் பண்ற அளவுக்கு எல்லாம் இல்லை.. கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு.. அதுவும் இப்போ இல்லை. உனக்கு ஒரு சந்தோஷம் என்றால் அது எங்களுக்கும் சந்தோஷமே..” என்று சொல்லிக்கொண்டு வந்த நந்தன் சட்டென நிறுத்தி நாயகியைப் பார்த்தான்.
அவளோ எதற்காக தன்னைப் பார்க்கிறான் என்று புரியாமல் நிற்க, மற்றவர்கள் நமட்டுச் சிரிப்புடன் தலைகுனிந்து கொண்டனர்.
விஸ்வாவிற்கும் சிரிப்பு வர, “அந்த அளவு மோசம் இல்லைன்னு நினைக்கிறேன்…” என்று அவன் தோளைத் தட்டியவள், நண்பர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.
விஷ்வாவும், நாயகியும் ஹோட்டலைவிட்டு வெளியேறிய நொடி அனைவரும் ஒருசேர வினித்திடம் திரும்ப… “நான் இல்லை..” என்று ஓட முயன்றவனை பிடித்து மடக்கி அமர வைத்து அவனை சுற்றி நின்று கொண்டனர்.
“எனக்கு எதுவும் தெரியாது..” பயத்துடன் முகத்தில் பூத்த வியர்வையை துடைத்துக் கொண்டான்.
*************
“எழுகழுதை வயசாகுது இன்னும் சின்னப்பிள்ளைன்னு நினைப்பா உங்களுக்கு… இதுவரைக்கும் சின்ன சின்ன சண்டையோடு இருந்தது… இன்னைக்கு ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுகிட்டு ரத்தம் வரும் அளவுக்குப் போயிருக்கு... காலைல வரைக்கும் வீட்டுக்குள்ள காலை வைக்கக் கூடாது இங்கேயே நில்லுங்க அப்பவாவது புத்தி வருதான்னு பார்க்கிறேன்..” என்று கோபத்துடன் திட்டிக்கொண்டிருந்தார் பொன்மலர்.
விஷ்வாவின் தலையில் கட்டுப்போட்டிருக்க… நாயகியின் இடது கன்னத்தில் வரிவரியாய் விஷ்வாவின் விரல் அச்சு பதிந்திருக்க கலிம்பு தடவியிருந்தது. தலைகுனிந்து நின்றிருந்தவர்கள் ஓரக்கண்ணால் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நின்றனர்.
“மலர் அவங்களை உள்ளே விடு.. இப்பவே நேரம் ஆச்சு.. விஷ்வா காலையில் ஆஃபிஸ் போகணும்.. இனி இப்படி செய்யமாட்டாங்கன்னு நினைக்கிறேன்..” என்று அவர்களை அழுத்தமாக பார்த்தவாறு மனைவியிடம் கூறினார் தமிழரசன்.
அவர் குரலில் மறைந்திருந்த பொருளை உணர்ந்தவன் சட்டென தந்தையை நிமிர்ந்து பார்த்தவன், மீண்டும் தலைகுனிந்து கொண்டான்.
“யாரு இவங்களா? இது மாதிரி எத்தனை சண்டை.. இந்த ஒரு மாதத்தில் ஓராயிரம் பஞ்சாயத்து பண்ணியாச்சு..” என்று கணவனின் கூறிவிட்டு,
“விஷ்வா நீதானே இவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன..” என்று கேட்க, “எஸ் மா..” என்றான் மெல்லிய குரலில்,
“நாயகிமா நீ விஷ்வாவை பிடித்துதானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட..” என்று அவளிடம் கேட்க… அருகில் நின்றவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு ஆமென தலையசைத்தாள்.
“பின்னே எதற்காக உங்களுக்குள்ள இந்த சண்டை.. மாத்தி மாத்தி ஒருத்தரை ஒருத்தர் வேண்டான்னு சொல்றதுக்கு இது என்ன சின்னப் பிள்ளை விளையாட்டா..? எனக்கு இன்றைக்கு காரணம் தெரிந்தாகனும்..” என்று கண்டிப்புடன் கேட்டவருக்கு மறுநோடியே ஒருசேர பதில் கூறினர்.
விஷ்வா “எனக்கு இவளை பிடிக்கலைம்மா..”
நாயகி “எனக்கு இவனைப் பிடிக்கலை அத்தை..”
அவர்களின் பதிலில் தமிழசனின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“என்னை முட்டாளாக்கப் பார்க்குறிங்களா ரெண்டு பேரும்… ம்..” என்று கோபத்துடன் அவர்களிடம் சென்றார் பொன்மலர்.
“மலர்…” மனைவியை தடுத்துவிட்டு, “ரெண்டு பேரும் உள்ளே போங்க..” என்றதும், அடுத்தநொடி இருவரும் அறைக்குள் சென்று மறைந்தனர்.
“என்னங்க இதெல்லாம்.. இரண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைத்தது தவறோன்னு எனக்கு பயமா இருக்குங்க..” கவலையுடன் அவர் அருகில் சென்று அமர்ந்தார்.
“அவர்கள் கொஞ்சம் ப்ரீயா விடு.. அவர்கள் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் நாள் சீக்கிரம் வரத்தான் போகுது..” என்றார் மறைமுகமாக.
அறைக்குள் வந்தவுடன் உடைகூட மாற்றத்தோன்றாமல் பால்கனிக்குச் சென்றவன், தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்து கொண்டான். சிறிது நேரத்திலேயே உடைமாற்றி கையில் ப்ரூட் சாலட்டுடன் அவன் அருகில் வந்து அமர்ந்தாள் நாயகி.
விஷ்வா “எனக்கு இதிலிருந்து விடுதலைவேண்டும்.. சந்தோஷமா, சுதந்திரமாக இந்த லைப்பை வாழணும்..”
நாயகி “எனக்கும்”
விஷ்வா “டிவொர்ஸ்க்கு அப்ளை பண்ணட்டுமா..?”
நாயகி “நம்ம பேரண்ட்ஸ் ஒத்துக்கணுமே..!”
விஷ்வா “வேற வழியே இல்லையா?”
நாயகி “இருக்கே..!”
சட்டென அவளைப் பார்த்தான். பழக்கின்னத்திலிருந்து பார்வை விலக்காமல், “நான் முன்ன வேலை பார்த்த கம்பெனி மூலமாக சிங்கப்பூரில் ஒரு நல்ல கம்பெனியில் இருந்து ஆஃபர் வந்திருக்கு.. குட் சாலரி.. இன்னும் கொஞ்ச நாளில் நான் இங்கிருந்து விடுதலை ஆகிடுவேன்..” என்றவளை முகம் மலரப் பார்த்தான்.
“உண்மையாகவா..? இதை ஏன்டி முன்னாடியே சொல்லலை ராட்சஷி..” என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தவன், அவளை தோளோடு இறுக்க அணைத்து விடுவித்தான்.
“ஐ’ம் சோ ஹாப்பி பௌபௌ..” எதோ பெரிய தடை அகன்றவனாக குதூகலித்தான்.
“முன்னாடியே சொல்லியிருந்தால் இப்படி ஹாப்பியா இருந்திருப்பியே அதான்..” என்று முகத்தை சுளித்தாள்.
அவளை முறைத்தவன், “இப்போ மட்டும் எதுக்காக சொன்னியாம்..?”
“எப்படியோ இவ்வளவு சந்தோஷமான விசயத்தை சொன்ன உனக்கு உடனே கொடுக்க ஒன்னுமில்லையே..” என்றவன் பழக்கின்னத்திலிருந்து பழத்துண்டை எடுத்து அவள் வாயில் தினித்தான்.
“இது உனக்கு..” என்று அவளும் நீட்ட வாய் திறந்து வாங்கிக்கொண்டான்.
“சாரிடா கோபத்தில் பாட்டிலால் அடித்துவிட்டேன்..” என்று மன்னிப்புக் கேட்கவும், “நானும் சாரிடி பலமா அறைஞ்சிட்டேன். நல்ல சிவந்து போயிருக்கு..” என்று அவளது கன்னத்தை மென்மையாக வடினான்.
எதுவும் கூறாமல் அவனுக்கு பழத்தை ஊட்ட, அவனும் அவளுக்கு ஊட்டிவிட்டான்.
ஒருவரை ஒருவர் பிரியப்போவதை நினைத்து மகிழ்ச்சியுடன் அந்த தருணத்தை கொண்டாடிக் கொண்டிருந்தனர். நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்..? வாழ்க்கையில் ஏது சுவாரஸ்யம்…!!
மறுநாள் தாமதமாக எழுந்த விஷ்வா, கடிகாரத்தில் மணியைப் பார்த்தவன் எட்டு மணி ஆகியிருக்க.. பதறி எழுந்து குளியலறைக்குள் ஓடினான். போன வேகத்தில் குளித்துவிட்டு வந்து உடைமாற்றி ட்ரெஸிங் டேபிள் அருகே நின்று டையை சரிசெய்து கொண்டிருந்தவன்.. படுக்கையில் புரண்டு கொண்டிருந்த நாயகியை கண்ணாடி வழியாகப் பார்த்துவிட்டு இடவலமாக தலையசைத்தவன் சீப்பை எடுத்து தலைவாரினான்.
தலைமுடிக்கும் சீப்பிற்கும் இடையே நூல் போல் திரள்வதைப் பார்த்து சீப்பை தடவிப் பார்த்தவள், “அடியேய்..” கோபத்தில் பல்லைக் கடித்தபடி திரும்ப.. வெடித்துச் சிரித்தவள் எழுந்து வெளியே ஓடிவிட்டாள்.
சீப்பை அவளை நோக்கி வீசியவன் கண்ணாடியில் தலையைப் பார்க்க… வயலில் நாற்று நட்டதுபோல் முடிகள் குத்தீட்டியாய் வானைநோக்கி உயர்ந்து நின்றது.
(கலவரம் தொடரும்...)
**************
ஹாய் ப்ரண்ட்ஸ்..
“காதல் கலவரம்..!!” அத்தியாயம் – 2 பதிந்துவிட்டேன்.. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. சென்ற அத்தியாயத்திற்கு லைக் கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் டியர்ஸ்
மதிய உணவு இடைவேளையில் தனது அறையிலேயே சுவர் ஓரமாக போடப்பட்டிருந்த மேஜையில் வைத்து உணவைத் திறந்தான் விஷ்வநாத். அவனுக்குப் பிடித்த வெஜிடெபிள் புலாவ்வும், உருளைக்கிழங்கு வறுவலும் பொன்மலர் செய்து கொடுத்திருந்தார். சாப்பிட ஆரம்பித்தவன் தனது அலுவலக மேஜையில் இருந்த அலைபேசி ஒலிக்கவும் எழுந்து சென்று எடுத்துப் பார்த்தான். அவனது அருமை மனைவி நாயகிதான் அழைத்திருந்தாள்.
“கரெக்டா சாப்பிடும் போது மூக்கு வேர்த்திடுமே.. சொல்லு, எதுக்காக கால் செய்தாய்..?” என்று எரிச்சலுடன் கேட்டான்.
“ஷாப்பிங் வந்தேன் விஷ்வா.. என்னோட கார்ட்ல பணம் இல்லை… ஒரு பைவ் தவ்சன்ட் என் அக்கவுன்ட்ல போட்டு என்ன..? நான் டிஸ்டர்ப் பண்ணாம போனை வைக்கிறேன்.. ஓகே பை..” என்று அவனைப் பேசவிடாமல் வைத்துவிட்டாள்.
“பதிலைக் கூட கேட்காம வச்சிருச்சு..” என முனுமுனுத்துக்கொண்டே தனது வங்கிக் கணக்கிலிருந்து அவளது வங்கிக் கணக்கில் பணத்தை பரிமாற்றம் செய்துவிட்டு சாப்பிட அமர்ந்தான்.
மீண்டும் அவளது எண்ணிலிருந்து அழைப்பு வரவும்,
“இப்போ என்ன..?” சற்று கோபத்துடன் அவனது குரல் ஒலிக்க..
“நான் கேட்டதை விட அதிகமாக மணி டிரான்பர் பண்ணிருக்க…?”
“அதுக்கு என்ன இப்போ..? இப்படி திரும்ப திரும்ப போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணிட்டே இருப்பேன்னுதான் பண்ணினேன்..” அவனது குரல் சலிப்பாக வெளிவந்தது.
“நம்பிட்டேன்..” என்று சிரித்தவள், “தேங்க் யூ விஷ்வா.. ஒகே நீ உன் லன்ச்சை கண்டினியூ பண்ணு.. பை” என்று அழைப்பை துண்டிக்கப் போக,
“ஹே லூசு, சாப்பிட்டியா..?”
“ம், மெக்டோனல்ல இன்னைக்கு சிக்கன் பர்கர் செம்மையா இருந்ததுடா… வந்ததும் முதல் வேலையே அதுதான்..” என்று சப்புக்கொட்டி சொன்னாள்.
“அடிப்பாவி நல்ல மொக்கிட்டுதான் ஷாப்பிங்கிற்கு காசு இல்லைன்னு என்கிட்ட கேட்டியா..?”
அலைபேசியை மேஜையில் வைத்துவிட்டு புலாவைப் பார்த்தவனுக்கு சாப்பிட்டும் ஆர்வமே போய்விட்டது. உழைக்கிற எனக்கு புலாவ், ஊர் சுத்துறவளுக்கு வகைவகையான சாப்பாடு..” என்று பொருமியபடி லன்ச் பாக்சை மூடிவைத்துவிட்டு கைகழுவ எழுந்து சென்றான்.
**************
பெசன்ட்நகர் பீச் வாரநாளிலும் சற்று கூட்டமாகத்தான் இருந்தது. லேசாக இருள் சூழ ஆரம்பிக்க, அதிக கூட்டம் இல்லாத இடமாகப் பார்த்து கடற்கரை மணலில் தலைக்குக் கீழ் கைகளை வைத்து படுத்திருந்தான் விஷ்வநாத். விழிகள் வானை நோக்கியவாறு இருந்தாலும் அவனது கவனம் அங்கு இல்லை. அதை என்பதை அறிந்த வினித்,
“என்ன மச்சி..?” என்று கேட்க, தன் சிந்தனையிலிருந்து கலைந்தவன் நண்பனின் முகம் பாறாமல் சலிப்பான குரலில் கூறினான்.
“லைப் மூச்சு முட்டுற பீல்டா.. எதையும் என் விருப்பத்திற்கு செய்யாமல் மத்தவங்க கட்டயத்திற்காக வாழுற மாதிரி இருக்கு.. பேசாம யாரும் கண்டுபிடிக்க முடியாத தூரத்திற்கு போயிடத்தோணுது மச்சி..” என்றவனை கவலையாகப் பார்த்தான் வினித்.
விஷ்வநாத் இப்படி பேசுபவனே கிடையாது. எதையும் பாசிட்டிவா எடுத்துக்கொள்ளும் குணமுடையவன்.. பொறுப்பானவன், திருமணமான இந்த ஒருமாதமாகத் தான் கண்டதையும் யோசித்து மனதையும், மூளையும் குழப்பிக் கொள்கிறான். அப்படி இருவருக்குள்ளும் என்னதான் நடந்தது..? என்று வினித்திற்கும் தெரியவில்லை. அவனை சகஜமாக்கும் பொருட்டு,
“நீ போனாலும் நாயகி விட்டுவிடுவாளா..? பின்னாடி உன்னை வால் பிடிச்சிட்டு வந்துவிடமாட்டா..?” என்று கேட்க, மனைவியின் நினைவில் விஷ்வாவின் முகம் மென்மையாக இதழ்கள் மலர்ந்தது.
“அது என்னவோ உண்மைதான்..” என்று அவனும் ஒத்துக்கொண்டான்.
“கணவன், மனைவி உறவிற்குள் நான் வரக்கூடாது தான். ஆனா உன்நலனின் அக்கரை உள்ளவனாக அப்படி என்னால் ஒதுங்கிப் போக மனசு வரலைடா.. உங்களுக்குள்ள அப்படி என்னதான் பிரச்சனை விச்சு… என்கிட்ட சொல்லக்கூடிய விசயமாக இருந்தால் சொல்லு..” என்று விஷ்வாவின் முகம் நோக்கினான்.
எழுந்து அமர்ந்து கால்களில் கரங்களை வைத்து கோர்த்துக்கொண்டு அலைகளை வெறித்தவன், “அது தான் எனக்கும் தெரியலை வினித்.. எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை.. அதேசமயம் இருவரும் ஒன்றாக வாழமுடியாதுன்னு தோணுது.. அதோடு…” என எதையோ சொல்ல வந்தவன் சட்டென அமைதியானான்.
“என்ன விளையாடுறியா..? உன்னைவிட யாரும் அவளை அக்கரையாக பார்த்துக்கொள்ள முடியாது.. அதேமாதிரி தான் அவளும், என்னதான் சண்டை போட்டாலும் உன்னை இதுவரை யாருகிட்டயும் விட்டுக் கொடுத்ததில்லை.. இதைவிட வேற என்ன வேணும் நீங்க சேர்ந்து வாழ..? மச்சி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு மாதம் தான்டா ஆகுது.. ஏதோ பலவருஷம் வாழ்ந்துட்ட மாதிரி பீல் பன்ற.. இன்னும் நீங்க போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கு. அதைவிட்டு இனிமேல் இப்படியெல்லாம் லூசுத்தனமா பேசிட்டு இருக்காதே விச்சு..” என்று கண்டித்தான்.
பின் தலையை அழுந்தக் கொதிக்கொண்டவன் சிறு பெருமூச்சை வெளியிட்டான். சற்று நிமிடங்கள் இருவரிடையே அமைதி நிலவியது.
“ஒருவேளை நாயகியை டிவோர்ஸ் பண்ணிட்டு, இரண்டாவது கல்யாணம் செய்துக்கிற ஐடியால இருக்கிறியா விச்சு..” என்று அவனை ஆழம் பார்த்தான் வினித்.
அதைக் கேட்டு முகத்தை சுளித்தவன், “இங்கே ஒரு கல்யாணத்துகே படாதபாடு படுகிறேன்.. இதில் இன்னொன்னா.. லைப்ல ஒரு பிசாசு போதும்…” என்று சிறுஎரிச்சலுடன் பதிலளித்தான் விஷ்வா.
வினித்தின் முகம் மலர அதை வித்தியாசமாக பார்த்தவன், “இப்போ எதுக்காக பல்லைக் காட்டுற..?”
“ஒன்றுமில்லையே.. ஒன்றுமே இல்லை..” என்ற வினித், நாயகியிடமும் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
வினித்தின் அலைபேசி ஒலிக்க எடுத்துப்பார்த்தவள், “ப்ச் இவ வேற நேரம் காலம் தெரியாமல்..” என்று முனங்கிக் கொண்டு அழைப்பை சைலன்டில் போட்டான்.
“யாருடா கால் பன்னது..?”
“வேற யாரு ஜனனி தான்..” என்றான் அசிரத்தையாக.
“பேச வேண்டியது தானே..”
“இப்ப காலை அட்டென்ட் பன்னோம்.. எப்போ ஓகே சொல்லுவன்னு காதுல இருந்து ரத்தம் வருகிற அளவு பேசுவ.. தேவையா எனக்கு.. அதனாலையே சிலநேரம் சைலன்ட்ல போட்டுருவேன்..”
“நீ இப்படி அவகிட்ட இருந்து நலுவிட்டே இரு.. ஒரு நான் உன்னை பிடிச்சு வச்சு பேயோட்டப் போறா..” என்று சிரித்தான் விஷ்வா.. அவன் கூறியதை நினைத்தப் பார்த்தவன் ஜெர்க்கானான். அவள் செய்யக்கூடியவள் தான்..!
*************
தங்கள் அறையில் சோபாவில் அமர்ந்து பாப்ஃகார்னை வாயில் போட்டு மென்றுகொண்டே தொலைக்காட்சியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டிருந்தான் விஷ்வா. அப்போது துள்ளலுடன் அறைக்குள் வந்த நாயகி கைப்பை தூக்கிப்போட்டவள், அவனை இடித்துக்கொண்டு அமர்ந்து அவன் கையில் இருந்த பாப்ஃகார்னை பறித்து சாப்பிட்டுக்கொண்டு ரிமோட்டையும் பிடுங்கினாள்.
“ஏய், நான் பார்த்திட்டு இருக்கேன்ல குடுடி..” என்று இரண்டையும் பறிக்க.. அவனைக் கேலியாக பார்த்தவள்,
“சரி வச்சுக்கோ நான் முக்கியமான விசயம் உன்கிட்ட சொல்ல வந்தேன் வேண்டான்னா போ..” என்று எழப்போனவனின் கையைப்பிடித்து அமர வைத்தவன்,
“என்ன சொல்ல வந்த..? சொல்லு”
“நீதான் பாப்ஃகார்னையும், ரிமோட்டையும் பறிச்சிட்டல்ல நான் சொல்லமாட்டேன்..” என்று முறுக்கிக் கொண்டாள்.
“ப்ச், இந்த நீயே முழுங்கு.. இப்போ சொல்லித்தொலை..” என்றான்.
“அடியோய்..” என்று பல்லைக் கடித்தவன், “ஓகே, என் செல்ல பௌபௌ இல்ல சொல்லுடி..” என்றவனை போனா போகட்டும் என்று கைப்பையிலிருந்து கவரை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
அதை வாங்கிப் பிரித்தவன் முகம் மலர, “ஹே கன்கிராட்ஸ்..” என்று தோளோடு அணைத்துக் கொண்டான். அது நாயகி வேலையில் சேர்வதற்கான கடிதமும், மற்றும் வேலை விபரங்கள் சம்பளம் மற்றும் விசாவும் கம்பெனியே ஏற்பாடு செய்திருந்தனர்.
“பர்ஸ்ட் ஒன் வீக் மட்டும் கம்பெனியே ஹோட்டல்ல தங்க ஏற்பாடு செய்து தருவாங்க.. அதற்குள் நாம தங்குவதற்கு அரேஞ்ச் பண்ணிக்கலாம்.. அது ஒன்னும் பெரிய காரியம் இல்லை.. என்கூட ஒர்க் பன்றவங்ககூட ரூமை சேர் பண்ணிக்கலாம். இல்லைன்னா வேறு வீடு பார்த்துக்கலாம்..” என்று அசால்டாக சொன்னவளை யோசனையாகப் பார்த்தான்.
“அங்கே எல்லாம் ஷேப் தானே.. தனியா இருந்துக்குவியா நாயகி..?”
“நான் என்ன சின்ன பாப்பாவா..? என்னை பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும்..”
“பின்னே உன் இஷ்டம்..” என்று தோளைகுலுக்கியவன் கவரை அவளிடம் கொடுத்துவிட்டு தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்தான்.
“விஷ்வா சாலரி எவ்ளோன்னு பார்த்தியா..?”
“எவ்வளவாக இருந்தால் எனக்கென்ன..?
“உன்னை விட டபிள் மடங்கு சாலரி ஒன்னறை லட்சம்..” என்று குதூகலித்தவளை திரும்பிப் பார்த்தான்.
“என்ன லுக்கு..? நாங்க சாப்ட்வேர் இன்ஜினியர்மா.. உன்னை மாதிரி டப்பா கம்பெனியில் மேனேஜர்ன்னு வேலை இல்லை..? வெறும் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்க..” என்று சீண்டலாக நாயகியின் ஒலித்த குரலில்.
“ஏய்… மைன்ட் யுவர் வேர்ட்ஸ்..” தன் வேலையையும், சம்பாத்தியத்தையும் பழித்ததில் அவன் தன்மானம் சீண்டப்பட கோபத்துடன் அவளைப் பார்த்து சீறினான்.
“ஹ.. என்ன சவுன்ட் ரைஸ் பண்ணா நாங்க பயந்திருவோமா..?” என்று மேலும் தன்னை சீண்டியவளைக் கண்டு கைகள் பரபரக்க.. எங்கே தன்னை மீறி எதையும் செய்துவிடுவோமோ என்று விருட்டென மடியில் இருந்த பாப்ஃகார்ன் கின்னத்தை தூக்கி எரிந்தவன் அறையைவிட்டு வெளியேறினான்.
அவனது கோபத்தை அலட்சியம் செய்துவிட்டு கையில் இருந்த கடித்ததை பெருமை பொங்க பார்த்தாள் நாயகி.
************
இரவு உணவின் போது நாயகி கணவனைப் பார்க்க அவன் உணவில் கவனமாக இருந்தான். மாலையில் அவனை சீண்டி விட்டதை எப்போதும் போல விளையாட்டாக அப்போதே மறந்துவிட்டாள். ஆனால் அவனோ மனைவி மீதான கோபத்தை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அவனை எதிர்பார்ப்புடன் பார்த்தவள் நிமிராமல் போகவே, “அத்தை மாமா உங்ககிட்ட முக்கியமான விசயம் பேசணும்…” என்று தொடங்கினாள்.
“என்னம்மா..?”
“அது.. எனக்கு சிங்கப்பூரில் பெரிய கம்பெனியில் வேலை கிடைத்திருக்கு அடுத்தவாரம் ப்ளைட்..” என்று அறிவிப்பாக உரைத்தவளை திகைப்புடன் பார்த்தனர் இருவரும். விஷ்வா அதற்கு கூட நிமிரவில்லை.
“என்னம்மா இப்போ யார் உன்னை வேலைக்கு போகச் சொன்னது..? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..” தீவிரமான குரலில் மறுத்தார் பொன்மலர்.
“பாரும்மா என்னோடதும், விஷ்வோட சம்பாத்தியமுமே இந்த வீட்டிற்கு தாராளமாக போதும்.. நீ ஏன் வெளியில் எல்லாம் போய் கஷ்டப்படனும்…?” தமிழரசனும் மறுத்தார்.
“இல்லை மாமா எனக்கு இந்த வேலை பிடித்திருக்கு.. பணத்திற்காக இல்லைன்னாலும் என் ஆசைக்காக கொஞ்சநாள் வேலைக்கு போறேனே..” என்று நயமாக பேசினாள்.
“நீ என்ன சொல்ற விஷ்வா..?” பொன்மலர் மகனின் விருப்பத்தைக் கேட்டார்.
“எனக்கு போதும்மா..” என்று சாப்பிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
நாயகி அவனது முதுகையே வெறித்துப் பார்க்க, “என்னாச்சு? மறுபடி ஆரம்பிச்சிட்டிங்களா உங்க சண்டையை..” என்று தலையை இடவலமாக அசைத்தபடி பொன்மலரும் சாப்பிட்டு எழுந்து செல்ல…
“உன் விருப்பம் போல செய்மா..” தமிழரசன் தன் சம்மதத்தை தெரிவித்தார்.
இருவருக்கும் இந்த பிரிவு அவசியம்.. அவருக்குத் தெரியும் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு ஒருநாள் கூட இருக்க முடியாது என்று. இது அவர்களின் உறவையும், ஒருவர் மற்றவர் மீது கொண்ட அன்பையும் அறிந்துகொள்ள ஒரு சந்தப்பமாக எண்ணினார். ஆனால் அவர்களின் மனதில் இருப்பதோ வேறாயிற்றே. அதை அவர் அறிய வாய்ப்பில்லை தான்.
“விஷ்வா இப்போ எதுக்காக முகத்தை இப்படி வச்சிட்டு இருக்க.. பார்க்க சகிக்கல..” என்று கட்டிலில் அவனருகே அமர்ந்தாள்.
“ப்ச், விலகு நான் படுக்கணும்..”
“இன்னைக்கு என்ன அதுக்குள்ள படுத்துட்ட..?”
“தூக்கம் வருது..” என்று எரிச்சலுடன் கூறினான்.
சற்றுநேரம் நின்று அவனைப் பார்த்தவள் பேசாமல் அவனுக்கு மறுபுறம் வந்து படுத்து அவனை திரும்பி பார்த்தாள். நேராகப் படுத்து விழிகளை மறைத்தவாறு இடக்கையை வைத்து படுத்திருந்தான்.
“விஷ்வா தூங்கிட்டியா..?” என்று கேட்க, அவனிடம் பதிலிலில்லை.
புரண்டு புரண்டு படுத்தவள் உரக்கம் வர நீண்ட நேரம் ஆனாது. அவள் தூங்கியதை உணர்ந்து மெல்ல கையை விலக்கி அவளைப் பார்த்தான். அவன்புறமாக ஒருக்களித்து படுத்திருந்தவள் முகம் தூக்கத்தில் சற்று வாடியிருந்தது.
அவனது விழிகள் நாயகியின் முகத்தில் நிலைத்திருக்க எதையோ நினைத்தவனாக மெல்ல கண்ணயர்ந்தான். காலையில் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தவன் நாயகியின் அலறளில் வேகமாக திரும்பினான்.
“விஷ்வா எல்லாம் போச்சு..” அவளது கையில் தண்ணீரில் ஊறிப்போய் பரிதாபமான நிலையில் இருந்தது கடவுச்சீட்டு மற்றும் அயல்நாட்டு நுழைவுச்சீட்டு.
“எப்படி ஆச்சு..?” வேகமாக அதை வாங்கிப் பார்த்தான். சாதாரண காகிதம் என்பதால் நீண்ட நேரம் ஈரமாக இருந்ததில் கைபட்டதும் கிழிந்தது.
கடவுச்சீட்டும் பரிதாபமான நிலையில் தான் இருந்தது.
“டேபிளில் ஹேன்பேக்கில் வைத்திருந்தேன்.. பக்கத்தில் வாட்டர் இருந்திருக்கு அது கொட்டி ஹோன்பேக்கில் இருந்த எல்லா திங்சும் போச்சு.. அதுகூட பரவாயில்லை… பா..பாஸ்போர்ட்.. எப்படி.. வேற பாஸ்போர்ட் அப்ளை பண்ண டைமும் இல்லை..” கண்கள் கலங்க புலம்பியவளைக் கண்டு வருந்தியவனாக தன்னோடு அணைத்துக் கொண்டான்.
“பலமுறை செல்லியிருக்கிறேன் முக்கியமானதை எல்லாம் கவனமாக ஹேன்டில் பண்ணுன்னு.. பார் உன்னோட அஜாக்கிரதையால என்ன நடந்திருக்குன்னு..” என்று அவனை கடிந்து கொண்டான்.
“விஷ்வா இப்போ என்னடா பன்றது..?” என்று அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்.
“உன் கம்பெனில டைம் கேட்டுப்பார் நாயகி.. அதற்குள் வேறு பாஸ்போட்டிற்கு ரெடி பண்ணிடலாம்..” என்றான்.. சரியென தலையாட்டியவளை சமாதானம் செய்துவிட்டு,
“ஆபிஸ்க்கு வேற டைம் ஆச்சு.. ஈவ்னிங் வந்ததும் என்ன பன்றதுன்னு முடிவு பண்ணலாம். ஒன்னும் பிரச்சனையில்லை.. நீ கம்பெனியில் பேசு..” என்றவன், வேகமாக தயாராகி அறையைவிட்டு வெளியேறியவன் தாயிடம் விசயத்தைக் கூறிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான்.
பொன்மலர் வேகமாக அவர்களின் அறைக்கு சென்றவர், நாயகியைக் கண்டு திகைத்தவராய் வாசலிலேயே நின்றுவிட்டார்.
(கலவரம் தொடரும்...)
*************
ஹாய் ப்ரண்ட்ஸ்..
“காதல் கலவரம்..!!” அத்தியாயம் – 3 பதிந்து விட்டேன்.. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமென்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.