RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
துண்டை போல தன் மகளை தோளில் தூக்கிக்கொண்டு போன தொண்டைமானின் செயலை கண்டு முழி பிதுங்கி போனார் ஜெயந்தி.
அதுவும் அவன் சொன்ன பொன் முட்டையிடும் வாத்து என்ற சொல் அவரை வெகுவாக பாதித்தது. யாருக்கும் தெரியாது என்று அவர் இருக்க.. அதை தெரிந்துக் கொண்டதோடு அல்லாமல் எங்கு அடித்தால் எங்கு விழும் என்பதை தெரிந்து கொண்டு தன்னை கார்னர் செய்தவனின் செயல் அவருக்கு நன்றாகவே புரிந்தது.
தனது சீக்ரட்டை தெரிந்து கொண்டவனின் மீது அளவுக்கு அதிகமாக வெஞ்சினம் பிறந்தது ஜெயந்திக்கு.
இவனிடமிருந்து எப்படி தப்பிப்பது, எப்படி தன் மகளை காப்பது என்று அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
என்ன ஆனாலும் சரி தன் மகளை அவனிடம் விட்டு வைக்க கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தார். இல்லையென்றால் முதலுக்கே நாசமாகிவிடும் என்பதை அவர் புரிந்து கொண்டார். ஆனால் என்ன செய்வது என்று தான் அவருக்கு கொஞ்சம் கூட தெரியவில்லை.
என்ன செய்தாலும் தன் மகளை மீட்டு விட வேண்டும். ஏனெனில் அவள் பணம் காய்க்கும் மரம் அல்லவா? அதை எப்படி அவர் விட்டுவிட்டு இருப்பார்.. அவரது மகள் தானே அவரது மூலதனம். அதனால பெரிதாக தவித்துப் போனார்.
எத்தனையோ பேர் பல்லவியின் அழகை பார்த்து அவளை மணம் முடிக்க கேட்டார்கள். அவளின் திறமையை பார்த்து, பழகும் விபத்துக்கான வரன் கேட்டு வந்தார்கள். ஆனால் ஒருவருக்கு கூட தலை ஆட்டவில்லை ஜெயந்தி.
பல்லவிக்கு தெரியாமலே எல்லோரையும் பேசக்கூடாத பேச்செல்லாம் பேசி விரும்பியே வராத அளவுக்கு விரட்டி அடித்து இருந்தார்.
அதனால் இவ்வளவு நாட்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்து. பல்லவியும் அம்மாவை முழுமையாக நம்பினாள். அம்மா திருமணம் செய்து வைப்பார். இந்த தொழிலுக்கு பெரிய முழுக்கு போட்டு விடலாம். கல்யாணம் செய்துக்கொண்டு நிம்மதியாக தூங்கலாம், விரும்பியதை உண்ணலாம், நல்லா ஊர் சுத்தலாம், நினைச்ச நேரத்துக்கு நினைச்ச படி வாழலாம் என்று கனவு கண்டு இருந்தாள்.
ஆனால் அவளின் கனவுகளை எல்லாம் சுட்டு எரித்துக் கொண்டு இருந்தார் ஜெயந்தி.
அவருக்கு ஆடம்பரமாக வாழ ஆசை. எல்லோரும் நிமிர்ந்து பார்த்து வணங்கும் வகையில் அவரது வாழ்க்கை மாற வேண்டும் என்று ஆசை. சின்னத்திரையில் கூட அவளுக்காக முயன்றுக் கொண்டு இருக்கிறார்.
ஆனால் வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை. அதற்காக சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கிறார். ஆனால் அதை எல்லாம் குழைக்கும் வண்ணம்
இப்போது திடீரென்று முளைத்த இந்த தொண்டைமானின் மீது அளவுக்கு அதிகமாக வெறுப்பு சூழ்ந்தது அவருக்கு.
போலீஸ் கம்ப்லைன்ட் கொடுக்கும் அளவுக்கு யோசித்தார் ஜெயந்தி.
இங்கு தொண்டைமான் கடத்தி கொண்டு வந்திருந்த பெண்ணவளுக்கு உள்ளுக்குள் பெரும் பயம் சூழ்ந்து இருந்தது. தன்னை அவன் தொடுவது அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.
தாய் தன்னை விட மாட்டார் என்று தான் அமைதியாக இருந்தாள். ஆனால் அவரை கொஞ்சமும் சட்டை செய்யாமல் தன்னை தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு வந்த தொண்டைமான்னின் மீது அச்சம் அவளின் அடி இதயம் வரை பரவியது.
அவனது முரட்டு தனமான தொடுகையை எண்ணித்தான் அதிகம் மிரண்டு போனாள் பல்லவி.
அவளின் மென்மையான தேகம் ஆணவனின் முரட்டு தனத்தை கண்டு பதறியது. எவ்வளவு தூரம் அவனை விட்டு விலகி இருக்க முடியுமோ அந்த அளவுக்கு விலகி இருக்க எண்ணினாள். ஆனால் தொண்டைமான் அதை எல்லாம் ஒரே செயலில் முறியடித்து விட்டான்.
"வர சொன்னா வரப்போறேன். எதுக்காக இப்படி தோள் மேல தூக்கி போட்டுட்டு வரீங்க? ஒரு பொம்பள பிள்ளை இப்படி தான் ஹேண்டில் பண்றதா? பெண்களை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு உங்களுக்கு கொஞ்சம் கூட தெரியல…" என்று கத்தினாள் அவனுடைய தோளில் இருந்து கீழே இறங்க பார்த்தாள். ஆனால் அதற்கு அவன் விடவே இல்லை.
"எனக்கு இப்படித்தான் ஹேண்டில் பண்ண வரும். அதோட நான் தொடும் முதல் பெண் நீ தான். உன்னை வச்சு தான் நான் ட்ரைனிங் எடுக்க போறேன்" என்றவன்,
"மரியாதையா இப்படி தோள் மேல் இருக்குறதுன்னா இரு. இல்ல உன்னை நான் ஹேண்டில் பண்ற விதமே வேற மாதிரி இருக்கும்" என்று மிரட்டினான்.
"சும்மா இவரு ஹேண்டில் பண்ணாலே வலியை கொடுக்கும். இதில் வேற மாதிரி ஹாண்டில் பண்றேன்னு சொல்றாரே எப்படி வலிக்குமோ?" என்று பயந்தவள் வேறு வழியில்லாது அமைதியாக வந்தாள்.
பல்லவியை தூக்கிக் கொண்டு வந்தவன் சிறிது நேரத்திலே வீட்டை அடைந்து விட்டான். வந்ததும் வராததுமாக அவளை நடனமாட சொல்ல அவளும் வேறு வழியின்றி ஆட தயாரானாள்.
ஆனாலும் “சார்... ரொம்ப டையர்டா இருக்கு.. அன்னைக்கு மாதிரி கொஞ்ச நேரம் தூங்கிட்டு ஆடவா?” என்று கேட்டாள்.
அப்படி கேட்டவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன்,
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை... அன்னைக்கு உன் மேல தூங்குன மாதிரி இன்னைக்கும் உன் மேல தூங்கிக்கிறேன்” என்றான்.
“ஏதே...” என்று அதிர்ந்துப் போனவள், “வேணாம் சார்... நான் அடிட்டு கிளம்பிடுறேன்” என்று தன் கற்பை பாதுகாத்துக் கொண்டாள்.
“அது...” என்று மீசையை முறுக்கினான் தொண்டைமான். பின்ன காசு குடுத்து கூட்டிட்டு வந்தா தூங்குறேன்னு சொல்றாளே சும்மாவா விடுவான்..
“இன்னைக்கு என்ன பாட்டு சார்?” என்று கேட்ட,
"வேற என்ன... நல்ல ஒரு குத்து பாட்டா பாடு.. பாடிக்கொண்டே ஆடு" என்று சொன்னான்.
அதை கேட்டவள், "எதே பாடுறதா?" அதிர்ந்தாள்.
“ஆட தான் சார் தெரியும். பாட எல்லாம் தெரியாது” என்றாள்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. இன்னைக்கு நீ பாடிக்கிட்டே தான் ஆடணும்... ஆடியோ போட்டு விட மாட்டேன்.. வாய்ஸ் நீ குடு” என்றவன்,
“சரி எலந்தப்பழம் பாட்டுக்கு ஆடு” என்று அவனே பாட்டை சொல்ல அந்த பாட்டுக்கு மறு பேச்சு பேசாமல் அவளும் நடனமாடினாள்.
அவள் ஆடும் அழகை மற்றும் முழுமையாக பார்த்து ரசித்தான். சுற்றி இருந்த அனைவரையும் போகச் செய்தவன் தனி அறைக்கு அவளை அழைத்துச் சென்று அங்கே பாடலை போட்டு விட்டு அவளோடு அவன் ஆட ஆரம்பிக்க கலவரம் ஆனாள் பல்லவி.
மருண்டு தான் போனாள் பெண்ணவள். “மறுபடியும் முதல்ல இருந்தா? நேத்து ஆடுனதையே தாங்க முடியல.. இதுல இன்னைக்குமா? என் பாடி தாங்காதுடா தடிமாடு” என்று மனதுக்குள் அவனை திட்டியவள் முற்றிலும் பயந்து தான் போனாள்.
“ப்ளீஸ் சார் இப்படி ஹேண்டில் பண்ணாதீங்க.. எனக்கு வலிக்குது” என்று அவன் பிடித்திருந்த இடத்தை சுட்டி காட்டினாள். அவனது விரல்கள் அவளின் இடையை இறுக்கி பிடித்து இருந்தது.
தொண்டைமான் அதை காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. நேற்றைக்கு போலவே அவளை தலைக்கு மேல் தூக்கி பயம் காட்டினான். பிடிக்க கூடாத இடத்தில் அவளை பிடித்து வானவில்லாய் வளைத்தான். கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
அவளின் மார்பில் அவனது கை அழுந்தி பதிந்து இருந்து. அதில் ஏற்பட்ட வலியை அவளால் குறிப்பிட்டு காட்டவே முடியவில்லை. ஆனால் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.
நீண்ட நேரத்துக்கு பிறகே அவளின் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீரை உணர்ந்தான்.
“என்னடி ஆச்சு? ஏன் அழற?” என்று கேட்டான். அவனுக்கு உண்மைக்குமே புரியவில்லை. தன் தொடுகையும் அழுத்தமும் அவளை துன்புறுத்தும்... வேதனை படுத்தும் என்று. அதனால் அவன் இயல்பாகவே இருந்தான். அவனது சொற்களும் இயல்பாக வந்தது.
“கையை எடுங்க சார்...” என்றாள் அழுகையுடன். “என்னடி என்ன ஆச்சு?” என்று புரியாமல் அவளை பார்த்தான்.
“ப்ளீஸ் முதல்ல கையை எடுங்க” என்றாள்.
அப்பொழுது தான் தான் அவளை எங்கே பிடித்து இருக்கிறோம் என்றே உணர்ந்தான். பட்டென்று கையை எடுத்துக் கொண்டான்.
“இதுக்கா அழற..?”
“நீ டேன்ஸ் ஆடும்பொழுது பல பேரோட கை இங்க பட்டு இருக்கும் தானே” என்று அசட்டையாக கேட்டான். அவனது கேள்வியில் விக்கித்து போனாள் பல்லவி.
--
S.Rami