All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மீசைக்கும் பூவாசம் தந்தாயடி...!" கதை திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
16

“லெட்ஸ் செலப்ரேட்” என்று சொல்லி தொண்டமான் பல்லவியை பார்த்தான். அவளுக்கு சம்மதம் சொல்வதை தவிர வேறு வழி இல்லை என்பதால் “ம்ம்ம்” என்று அவனுக்கு இசைந்தாள்.
அவள் ம்ம் என்று சொல்லும் முன்பே அவளின் இடையை பிடித்து தன்னிடம் இழுத்துக் கொண்டான் அவளை. அவனது அதிரடியில் அவளது தேகம் அதிர்ந்தது. ஆனால் இதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்று புரிந்து தன் பயத்தை ஓரம் கட்டி விட்டு அவனின் மார்போடு தன் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
அவளின் இதழ்கள் அவனது மார்பில் பதிய தொண்டமானுக்குள் மெல்லிய சிலிர்ப்பு ஓடியது.
“இங்க முத்தம் வை” என்று அவனின் நெற்றியை காட்டினான். நெற்றி தானே என்று இவளும் முத்தம் வைத்தாள். பெரும் கூச்சம் தான் பெண்ணவளுக்கு. இருந்தாலும் அவன் சொன்னதை செய்தாள்.
“அடுத்து” என்று சொல்லி அவனது கன்னத்தை காட்டினான். அதன் பிறகு கொஞ்சமும் தாமதிக்காமல் அவனின் முரட்டு இதழ்களை காட்டினான்.
பக்கென்று இருந்தது... “ப்ளீஸ்” என்று அவள்,
“ம்ஹும்... இங்க குடுத்தே ஆகணும்” என்று நின்றான் வம்படியாய்.
அவனது பிடிவாதத்தில் சிணுங்கினாலும் அவனின் இதழ்களோடு தன் இதழ்களை வைத்து உரசி மிக மெலிதாக அழுத்தி முத்தம் குடுத்தவள் விலகிக் கொண்டாள்.
“ப்ச் இப்படி இல்லடி” என்று சொல்லி அவளின் இதழ்களை கவ்விக் கொண்டான். அடிவயிற்றில் அவளுக்கு பட்டாம்பூச்சி பறந்தது.
வன்மையாய் அவளை முத்தம் வைத்தவன், அவளின் கழுத்தில் முகம் புதைத்து அவளின் வாசத்தை நுகர்ந்தான்...
அதில் அவளுக்கு பெரிதும் கூச்சம் எழுந்தது. உடலை லேசாக குறுகிக்கொள்ள அவளிடம் இன்னும் ஒன்டினான். அவளது யாக்கையின் திணறலை மிகவும் ரசித்தான். தோட்டா சிணுங்கியாய் சுருங்கும் பெண்ணவளை தன்னோடு சேர்த்து இறுக்கினான்.
தன் தொடுகையில் சிவனது கன்னி போகும் பெண்ணவளை இன்னும் சிவக்க வைத்து ரசிக்க பேராசை எழுந்தது. அதன் முதல் படியாக அவளின் கழுத்தை மிக மிருதுவாக கடித்து வைத்தான் உணர்வின் வேகத்தில்.
அவனது உணர்வின் வேகத்தை தாங்க முடியாமல் பல்லவி சரிய, தன்னோடு தூக்கி இருக்கியவன் சுவற்றில் அவளை சாய்த்து அவளின் மீது வன்மையாக சாய்ந்துக் கொண்டான்.
தன் முழு எடையையும் அவளின் மீது போட்டு அவளின் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தான். அவளின் முகம் பக்கவாட்டில் திரும்பி இருந்தது. ஆனாலும் அவளின் கன்னம் சிவந்துப் போய் இருப்பதை பார்த்து,
“நான் உன் கன்னத்தை கடிக்கலையே... பிறகு எப்படி இவ்வளவு சிவப்பா இருக்கு?” கேட்டவன் அவளின் கன்னத்தோடு தன் கன்னத்தை வைத்து அழுத்தி தேய்த்தான். தாடி அடர்ந்த அவனது கன்னம் பெண்ணவளின் மிக மிருதுவான கன்னத்தை குத்தி கிழித்து காயம் செய்தது. அதில் அவளது கன்னம் இன்னும் சிவந்துப் போனது.
அதையும் விழி எடுக்காமல் இரசித்தவன், “எங்க தொட்டாலும் இப்படி தான் சிவந்துப் போவியாடி” என்று கண்கள் சிவக்க அவன் கேட்டான். அவளால் என்ன பதில் சொல்ல முடியும். அமைதியாக அவனது தொடுகையை உள்வாங்கிக் கொண்டாள்.
அவளது பதிலை அவன் கேட்கும் நிலையில் கூட இல்லை. கன்னத்தில் இருந்து மீண்டும் அவனது முகம் கழுத்தில் இறங்கியது. கூசி சிலிர்த்தாள். ஏனோ அவனது தொடுகை அவளுக்கு அருவெருப்பை குடுக்கவில்லை. அவனது இரசனையான அணுகுமுறையோ, இல்லை அவளை கொண்டாடும் விதமோ, இல்லை அவனை தவிர்க்க முடியாதா சூழலோ என்னவோ பல்லவியும் அவனது தொடுகைக்கு பழகினாள் மெல்ல மெல்ல.
மீண்டும் அவளின் இதழ்களை சிறை செய்ய கண்களை மூடினாள். ஆனால் அவன் காட்டும் வன்மையில் சட்டென்று அவளின் கைகள் ஆணவனின் பிடரிக்குள் நுழைந்து அவனது தலை முடியை இறுக்கிப் பிடித்தது.
அவளிடம் இன்னும் ஒன்டியவன் மெல்ல மெல்ல அவளின் சேலைக்கு விடுதலை கொடுக்க வெட்கத்திலும் படபடப்பிலும் தயங்கினாள். தன் சேலையை இறுகப் பற்றிக் கொண்டாள் மார்போடு.
“ம்ம்” என்று அழுத்தமாக அவளின் கன்னத்தில் முத்தம் வைத்தவன் அவளின் கை மீது தன் கையை வைத்து அவளின் கையேடு சேர்த்து சேலையை எடுத்து கீழே போட சுவர் புறம் திரும்பிக் கொண்டாள் பட்டென்று.
அவளின் வெட்கம் அவனை இன்னும் கிழறச்செய்ய அவளின் முதுகோடு அழுத்தமாக ஒட்டி நின்றவன் பெண்ணவளின் உடை மறக்காத முதுகில் மீசையால் ஊர்வலம் போனான்.
“ப்ளீஸ்” என்று அவள் உணர்வு மிகுதியில் அவனை தடுக்கப் பார்க்க அதற்கு மேல் முடியாமல் அவளை கைகளில் தூக்கிக் கொண்டவன் அவனின் படுக்கையில் பெண்ணவளை கிடத்தி வன்மையாக கையாள ஆரம்பித்தான். அவனது முரட்டு பிடியில் மிரண்டுப் போனவள், அவனுக்கு இப்படி பிடிக்க வேண்டும் அழுத்தி பிடிக்கக் கூடாது வலிக்கும் என்பதை புரியவைப்பதர்க்குள்ளே அவளின் மேனியில் இருந்த மொத்த உடைகளும் கலைந்துப் போனது.
போர்வையை எடுத்து உடுத்திக் கொண்டவள் அவனிடம்,
“செப்டி ப்ளான்” என்று அவள் கேட்க அப்பொழுது தான் அவன் எதுவும் ப்ளான் பண்ணவில்லை, வாங்கவில்லை என்பதே உணர்ந்தான்.
ஆனால் உணர்வுகளின் உச்ச நிலையில் எங்கிருந்து அவளை விடுத்து செல்ல, கண்களில் சிவப்புடன் அவளை பார்த்தான்.
அவன் பார்த்த பார்வையிலே நிலைமையை புரிந்துக் கொண்டவள் கைக்கொண்டு ஆடையை எடுத்து போட்டுக் கொள்ளப் பார்க்க அதை தடுத்தவன் அவளின் காதோடு எதையோ சொல்ல அவள் மறுக்க சில தள்ளு முள்ளு நடந்தது இருவரிடையே.
இறுதியில் தொண்டமானே வெற்றி பெற்றவன் அவளை அவள் சொன்ன படியே கையாண்டான். ஆனால் அது அவனுக்கு கொஞ்சம் கூட திருப்தியை தரவில்லை.
“என்னவோ பூவை தொடுற மாதிரி பார்த்து பார்த்து தொட வேண்டியதா இருக்கு. எனக்கு இது செட் ஆகலடி. எனக்கு பிடிச்ச மாதிரி தான் நான் தொடுவேன். எனக்கு அந்த முரட்டு பிடி தான் வருது” என்றவன் எப்பொழுதும் போல அவளை வன்மையாகவே முரட்டு தனமாகவே தீண்டினான்.
அவனது தீண்டலில் அவளுக்கு வலி உயிர் போனது. சும்மா பிடித்தாலே அவனது பிடி வலியை கொடுக்கும். இதில் உணர்வுகளின் உச்சத்தில் இருக்கும் சமயம் அவளை பிடித்தால் அவளின் நிலை என்னவோ...? ஆனாலதை புரிந்துக் கொள்ளாமல் தொண்டைமான் அவளிடம் முரட்டு தனமாகவே நடந்துக் கொண்டான்.
அவனால் அவனை கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. துப்பாக்கி, கத்தி, கர்லாக்கட்டை என பார்த்த கைகள் அவனுடையது. அந்த முரட்டு தனம் அப்படியே அவனது கையில் தெரிந்தது.
அவளது முகம் வலியில் கசங்க, “சாரிடி” என்று மன்னிப்பு கேட்டவன் தன் முரட்டுத் தனத்தை கைவிடவில்லை. முதல் கூடல் உடல்களின் இச்சையில் மிக சிறப்பாக நடை பெற்றது. உணர்வுகள் இளமை தேவையை சரியாக பூர்த்தி செய்துக் கொள்ள, மனமோ ஒன்று கூடாமல் தனித்து நின்றது.
அதுவும் பல்லவியின் மனம் என்னவோ எதையோ இழந்ததை போல தவித்தது. கண்ணோரம் நீர் துளி கசிந்தது. தன் வாழ்க்கையையே வீணடித்து விட்டோம் என்று மறுகிப் போனாள்.
கண்ணீர் விடக்கூட இனி அவளுக்கு உரிமையில்லை. அது கூட தொண்டைமானை கேட்டு தான் விடணும். பெருமூச்சு வந்தது. “தான் சீக்கிரம் இவனுக்கு சலித்துப் போகணும் கடவுளே...” என்று வேண்டிக் கொண்டவளை அடுத்த கட்ட கூடலுக்கு நாடினான்.
அவனை அவள் மறுக்கவே இல்லை. உடலெல்லாம் ஒரே வலி.. கால்களை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை. ஆனால் பணம் கொடுத்து வாங்கி வந்த பொருள் தன் வேதனையை காட்டிக்கொள்ள உரிமை உண்டா என்ன? விரக்தியாக எண்ணியவள் கண்களை மூடிக் கொண்டாள்.
அவளிடம் அத்து மீறியவன் அவளிடம் தெரிந்த வித்தியாசத்தில் விலகி அமர்ந்தான். நீண்ட நேரத்துக்கு பிறகே தன் மீது பாரம் இல்லாததை உணர்ந்தவள் கண்களை திறந்து பார்த்தாள்.
வைத்த கண் வாங்காமல் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான் தொண்டைமான். அவனது பார்வையில் பக்கென்று ஆனது அவளுக்கு.
“ஏன் என்ன ஆச்சு? எழுந்துட்டீங்க?” என்று கேட்டாள்.
“அதை நான் கேட்கணும்” என்று முறைத்தவன், “என்ன ஆச்சு?” என்று கேட்டான்.
“அது..” என்று அவள் தடுமாற,
“ஒழுங்கா சொல்லு... முதல் முறை பண்ணப்ப ரொம்ப இன்வால்வாகி இருந்த... இப்ப என்ன ஆச்சு?” கூர்மையாய் அவளை ஆராய்ந்த படியே கேட்டான்.
அவனது முகத்தை ஏறிட முடியாமல்,
“கால் ரொம்ப வலிக்கிது... என்னால முடியல” என்றாள்.
“அதை சொல்ல வேண்டியது தானே”
“இல்ல நீங்க காசு குடுத்து வாங்கிட்டு வந்த பொருள் நானு. அப்படி இருக்கும் பொழுது அந்த பொருள் தன் மறுப்பை காட்டக் கூடாதுல்ல அது தான்” அவளது பேச்சில் எரிச்சல் ஆனவன்,
“ஓவரா பேசாதடி.. மூடே ஸ்பாயில் ஆயிடுச்சு” என்று சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு வெளியே போய் விட்டான்.
அவன் வெளியே போன பிறகு அவசரமாய் தன் புடவையை எடுத்துக் கட்டிக் கொண்டவள் அசதியில் அப்படியே படுத்து கண்ணயர்ந்து விட்டாள்.
வெளியே போனவனுக்கு இப்பொழுதும் பல்லவி வேண்டும் என்று ஒரே அடமாய் இருந்தது. அவளின் உடல் குழைந்து அவனின் திண்மையான உடலோடு ஒட்டிக் கொண்டு இருந்த காட்சி கண்முன் வர அவனுள் பெரும் காமம் சூழ்ந்தது.
“இப்பவே அவ வேண்டும்” என்று உணர்வுகள் வெடிக்க மீண்டும் வீட்டுக்கு திரும்பினான். அவன் சென்று இரண்டு மணி நேரம் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் பல்லவி. முதல் கூடல் பெண்ணவளை மிகுந்த சோர்விற்கு ஆளாக்கியது. தொண்டைமானுக்கு சோர்வு தான். ஆனால் அவளோடு இங்க இருந்தால் தன் கட்டுப்பாட்டை மீறி விடுவோம் என்றே வெளியே சென்றான்.
வெளியே சென்ற பொழுதும் அவளின் நினைவுகள் நீங்காமல் அவனை சுழட்டி அடிக்க கிளம்பி வந்து விட்டான். வந்த உடனே படுக்கையில் இருந்த பல்லவியின் மீது படர்ந்துக் கொண்டான். தன் மீது பாரம் உணர்ந்து திகைத்து கண்ணை விழித்தாள்.
அதன் பிறகு அவள் ஏதோ சொல்ல வர அவளின் வாயை தன் இதழ்களால் அடைத்தவன் அவளை முழுமையாக தனக்குள் சுழற்றி எடுத்துக் கொண்டான். விடியும்வரை அவனின் ஆளுகையில் தான் சென்றது பல்லவியின் நேரம் அனைத்தும்.
விடிந்த பிறகும் அவளை விட்டு அவன் நகரவே இல்லை. பல்லவிக்கு உடல் முழுவதும் ஏகப்பட்ட காயங்கள். தொண்டைமானுக்கும் காயங்கள் தான். பல்லவியின் நகங்களும் பற்களும் பட்டு அவனது தேகத்தில் காயமிருந்தது. ஆனால் இவளின் அளவுக்கு இல்லை.
பெண்ணவளின் யாக்கையில் தான் அதிகம் இருந்தது. அவனை விலக்கி விட்டு குளிக்க சென்றாள். கண்ணாடி முன்பு தன் கோலத்தை பார்த்து கண்ணீர் துளிர்த்தது. ஆனால் அழக்கூடாது என்று தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டவளின் கால்கள் நடுநடுவென்று நடுங்கியது.
நிற்கக்கூட அவளால் முடியவில்லை. மிக்கவும் கடினப்பட்டு குளித்து வெளியே வந்தவள் இலகுவான உடையை அணிந்து சோபாவில் போய் படுத்துக் கொண்டாள். அவனோடு மீண்டும் கட்டிலில் படுக்க மனம் இடம் கொடுக்கவில்லை.
தொண்டைமான் தூக்கத்திலே அருகே கை விட்டு அவளை தேடினான். அவள் சிக்காமல் போக தலையை தூக்கி பார்த்தான். அவள் சோபாவில் சுருண்டு படுத்து இருப்பதை பார்த்து சட்டென்று கோவம் வந்து விட்டது.
“ஏன் உன் பின்னாடியே நான் வரணுமா? உன்னை என் கூட படுக்க தான் தூக்கிட்டு வந்து இருக்கேன். உன் பின்னாடி நாய் மாதிரி அலைய இல்ல... ஒழுங்கா நீயே வந்து என் கூட பாடு..” என்று காலையிலையே எரிச்சலில் கத்தினான்.
பல்லவிக்கு அவனது வார்த்தைகள் இதயத்தில் ஊசி குத்துவது போல இருக்க அடைத்த நெஞ்சை நீவி விட்டுக் கொண்டு தடுமாறி அவனது அருகில் வந்து படுத்தாள்.
--
S.Rami
 
Status
Not open for further replies.
Top