All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கீதாராஜின் "தூது போகுமோ தென்றல்" - கதைத் திரி

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

rssgeetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாயகன்_சஞ்சீவ் கிருஷ்ணா
நாயகி_அமிர்தவர்ஷினி

தென்றல் 1:
தென்னிந்தியாவின் ஜவுளி நகரம் அல்லது தெற்கின் மான்சிஸடர் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரம் கோயம்புத்தூர்.
விடியற்காலையில் சூரியன் தன் கதிர்களை ஒளி வீசிக் கொண்டிருக்க பறவைகள் தன் மென் குரலில் பாடிக் கொண்டிருக்க நிலவு மெதுவாக மறைந்து கொண்டிருந்தது.
கோயம்புத்தூரில் பெரும் பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் அதிகாலையிலேயே மிக அழகாக சுப்ரபாதம் ஒலித்துக்கண்டிருந்தது.
கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வ
என மெல்லிய குரலில் பூஜை அறையில் பாடிக்கொண்டிருந்தனர் பார்வதி அம்மாவின் மனம் அமைதியாக இருந்தது. அதற்கு காரணம் அவ்வீட்டில் மருமகள்கள். ராமநாராயணன் தம்பதிக்கு மூன்று மகன்கள் முதல் மகன் சரவணன்_தேவி இவர்களுக்கு மிருதுளா என்ற பெண்ணும் அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர். இரண்டாவது மகன் சுரேந்திரன்_கார்த்திகா இவர்களுக்கு சஞ்சீவ் கிருஷ்ணா மற்றும் ரித்விகா உள்ளனர். மூன்றாவது மகன் ரவீந்தர்_வித்யா இவர்களுக்கு அபிஷேக் ஆதவன் இரட்டை குழந்தைகள்…
இவர்களின் குடும்பத் தொழில் ஜவுளி வியாபாரம் அதுமட்டுமில்லாமல் விவசாயம் ஊட்டி மூணார் போன்ற இடங்களில் எஸ்டேட் உள்ளது.
"அத்தை பூஜை முடிந்ததா"என்று கேட்டு வந்தார் அவ்வீட்டின் மூத்த மருமகள் தேவி.
முடிந்தது மா என்ன விஷயம். அத்தை சஞ்சீவ் எப்ப வரான் ஏதாவது போன் வந்ததா
"இல்லம்மா ஏன்"
அத்தை மிருதுளாவுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சாயங்காலம் வரேன் சொல்லி இருக்காங்க அதான் கேட்டேன். எப்பம்மா சொன்னாங்க
இப்பதான் அத்தை ரவீந்தர் சொன்னாரு சரி மா நான் உங்க மாமாகிட்ட சொல்றேன்மா. சரிங்க அத்தை
மிருதுளா அவ்வீட்டின் இளவரசி சரவணன் தேவிக்கு நீண்ட நாள்கள் குழந்தை இல்லாமல் பிறந்தவள் அதனால் அவ்வீட்டின் அனைவருக்கும் செல்லம்.
தேவி கிச்சன் போறாங்க அங்க அந்த வீட்டின் இரண்டாவது மருமகள் கார்த்திகா சமைச்சுட்டு இருக்காங்க
"கார்த்திகா டிபன் வேலை முடிந்ததா"
"முடிந்தது அக்கா நான் குழந்தைகளே எழுப்பிவிட்டு வரேன் அக்கா மாமா வந்தா திட்டுவாரு.
"சரி மா வித்யா எங்க"
வித்யா கோவிலுக்கு போயிரக்கா
சரி நீ போ
கார்த்திகா முதல்ல மிருதுளா வா
எழுப்ப போறாங்க
மிருதுளா எழுந்திருமா நேரமாச்சி தாத்தா வந்தா திட்டுவாரு. சித்தி கொஞ்சம் நேரம் ப்ளீஸ். நீ எழுந்தா தான் மத்தவங்க எல்லாம் எழுவாங்க.

சரி ஓகே
போய் fresh up ஆயிட்டு வந்து காபி எல்லாருக்கும் குடுத்துட்டு கீழே வா
அந்த வீட்டின் பசங்களுக்கு மிருதுளா வந்து காபி கொடுத்தா தான் எழு வாங்க
மிருதுளா எல்லாருக்கும் எழு பிட்டு கீழே வரா. அப்போ பாட்டி வேலைக்காரர்களுக்கு வேலையெல்லாம் சொல்லிட்டு இருக்காங்க"பாட்டி வீட்டில ஏதாவது விசேஷமா கிளீன் பண்ண சொல்லிட்டு இருக்கீங்க"
என் ராசாத்தி உன்ன பார்க்கத்தான் வராங்க தங்கம்
என்ன பாக்கவா'யார் வராங்க
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க நீ பியூட்டி பார்லர் போயிட்டு வந்துரு கூட அபியை கூட்டிட்டு போ
மிருதுளா வுக்கு ஒன்னுமே புரியல கோவமா அம்மாகட்ட"அம்மா"ஏண்டி கத்துற இங்க தானே இருக்கேன் என்ன இப்போ; பாட்டி என்னவோ சொல்றாங்க உண்மையா: ஆமா அதற்கென்ன இப்போ, சஞ்சீவ் அண்ணா இல்லாம எப்படி மா
அவன் வந்துடுவான்னு தாத்தா சொன்னாரு நீ போய் இன்னைக்கு போடவேண்டிய டிரஸ்சாn எடுத்து வை நான் வந்து பாக்குறேன்
மிருதுளாவுக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. அவளுக்கு சின்ன சின்ன விஷயத்துக்கும் அண்ணன் வேணும். இப்போ அண்ணன் இல்லாம இருக்கிறது கவலையா இருக்கு


அதே நேரத்தில கோயம்புத்தூர் ஏர்போர்ட்ல ஆறடி உயரம் அழகான கண்கள் கோதுமை நிறம் எல்லாருக்கும் கண்ணத்துல குழி விழுந்தா இவனுக்கு தாடையில் குழி விழும்.
அங்க இருக்கவங்க எல்லாரும் ஒரு நிமிஷம் அவன நின்னு பார்த்துட்டு தான் போவாங்க அவ்வளவு கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான் (அப்ப ஹீரோ வந்தாச்சு பா இதுக்கு மேல எனக்கு வர்ணிக்க முடியல இதுவே அதிகமோ மீதிய சனிக்கிழமை பார்க்கலாம் )
தென்றல் வரும்.
,
 
Last edited:
Top