All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)" - கதைத் திரி

Status
Not open for further replies.

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்பூக்களே...

"அன்புக்கு நீ அரிச்சுவடி" (பாகம் - 2 ) கதையின் பதிவுகள் இங்கே பதிவிடப்படும்... படித்துவிட்டு உங்கள் அபிமான கருத்துக்களை பகிரவும் மக்களே.

நட்புடன்

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-21

ரஞ்சனின் நிச்சயதார்த்த வைபவம் திருவிழா கோலம் போல் திமிலோகப்பட்டது... எளிமையாக வைக்க திட்டமிட்ட ரஞ்சன் குடும்பத்தின் முடிவை பெண் வீட்டார் ஏற்காது, அவர்களின் செலவிலேயே மிகவும் ஆடம்பாரமாக ஏற்பாடு செய்திருந்ததை, ஏதோ அவர்கள் தான் மெனக்கெட்டு செலவு செய்ததை போல் பீற்றிக் கொண்டு மிடுக்காக வளைய வந்தனர்.

பெண் வீட்டினரை காட்டிலும் இருமடங்கு குறைவாகவே ரஞ்சன் குடும்பத்து உறவுகள் அழைக்கப்பட்டிருந்ததால் அவர்களிடம் வலிய சென்று வரவேற்று ஆடம்பரத்தை சுட்டி வெகுவாக அலட்டிக் கொண்டனர்... சம்யுக்தாவை கேட்டு வினவியவர்களுக்கு அவள் வேலை விஷயமாக வெளிநாடு சென்றுவிட்டதாக கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.

மிகவும் அதீத பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மாப்பிள்ளை அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டு நின்றிருந்தான் ரஞ்சன்... நிச்சய விழா தொடக்கமாக பெண்ணுக்கும், மாப்பிளைக்கும் நலுங்கு வைத்து முடித்தவர்கள், மோதிரம் மாற்ற ஆயத்தமான நேரம் அகஸ்மாத்தாக திடுதிப்பென நுழைந்த நான்கைந்து காவலர்கள் தன் கையில் இருந்த மெகாபோனின் வாயிலாக...

“பங்சனை நிறுத்துங்க” என்று உரைத்திருக்க, மண்டப அரங்கமே எதிரொலித்தில் கூட்டத்தின் பார்வை அவர்களிடம் நிலைபெற்றது.

அவர்களுடன் வந்திருந்த வாணி, அர்ஜுன், கலாதரன், அரசி என அனைவரையும் கண்ட ரஞ்சன் குடும்பத்தினருக்கு அடிவயிற்றில் கிலி பரவ முதுகுத்தண்டு சில்லிட்டது... ரஞ்சனின் முகமோ வாணியை கண்டதுடன் அன்று அவர்களை வழி மறித்த காவல் ஆணையருடன் கண்டு முகம் பேயறைந்தது போல் ஆகிப் போக, இனி தான் தப்பிக்கும் மார்க்கம் மிக மிகக் குறைவு என்று புரிய வந்ததில் அவன் கால்களுக்கு கீழ் பூமி நழுவியது.

பாஸ்கரன் முதலில் சுதாரித்து கொண்டு காவலரை சமீபித்தவர்... “என்ன சார் நிச்சயதார்த்தம் நடக்கப் போகிற நேரத்தில் அபச குணமா நிறுத்த சொல்றீங்க?” என்றவரின் பேச்சில் யமுனா, யசோதா இருவருமே குருட்டு தைரியத்தை திரட்டி கொண்டவர்கள்...

“எதுவா இருந்தாலும் நிச்சயதார்த்தம் நடந்து முடிஞ்சதும் பேசிக்கலாம், ஓரமா ஒதுங்கி நில்லுங்க” என்று நக்கல் தொனியில் உரைத்த யசோதா மற்றும் யமுனாவின் வார்த்தையில் முகத்தை கடினமாக்கிக் கொண்ட காவலர்...

“இந்த பாருங்கம்மா நாங்க டிபார்ட்மென்ட் ஆளுங்க, கொஞ்சம் அதை மனசில் வச்சிட்டு பேசுங்க” சற்றே உரத்த குரலில் உறுமியவரை கண்டு திகிலடைந்து போயினர், இருந்தாலும் அதை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு திண்ணக்கதுடன் நின்றிருந்தவர்களை நோக்கியப்படி காவலர் பேசலானார்.

“இங்கே நிற்கிற இந்த வாணிங்கிற பெண்ணை உங்க வீட்டு பையன் மனோரஞ்சன் காதலிச்சு, அந்த பெண் கூட உல்லாசமா இருந்துட்டு, கையில் குழந்தையையும் கொடுத்துட்டு, ஏதோ புது மாப்பிள்ளை மாதிரி மேடை ஏறி இருக்கிறாரு... இந்த பெண்ணுக்கு அவர் பதில் சொல்லாம நிச்சயம் நடக்கக் கூடாது” காவலர் சற்றே கடின குரலில் கூறியதும், பெண் வீட்டு ஆட்கள் சரசரவென்று நிச்சய மேடையிலிருந்து இறங்க ஆரம்பித்தனர்... அதை கண்ட பாஸ்கரனுக்கு மனம் துணுக்குற, பெண்ணின் தந்தையை நெருங்கியவர்...

“இங்க பாருங்க சம்மந்தி அவங்க ஏதோ தப்பா புரிஞ்சுட்டு வந்திருக்காங்க நீங்க மேடையிலேயே இருங்க நாங்க பார்த்துக்கிறோம்”

“என்ன சொல்றீங்க நீங்க? போலீஸ் தனியா வந்திருந்தா நிதானமா விசாரிக்கலாம் ஆனால், போலிஸ் சொல்லுறதை போல அந்த பெண்ணும் குடும்பமும் இருக்காங்க, இதை எப்படி சாதாரணமா எடுத்துக்க சொல்றீங்க?” என்றவரின் பேச்சில் வாயடைத்து போன பாஸ்கரன் மற்ற இருவரும் வாணியையும் அவளுடன் இருந்த மற்றவர்களையும் குரோதத்துடன் பார்வையால் சுட்டு எரித்துக் கொண்டிருந்தார். அதை மிகவும் கவனமாக குறிபெடுத்துக் கொண்டார் பெண்ணின் பெரிய தந்தையான நீதிபதி குமரகுரு.

மணமகள் கோலத்தில் மேடையில் நின்றிருந்த மணப்பெண்... “வாட் இஸ் திஸ் ரஞ்சன்?” என்று வினவி ரஞ்சனை கேள்வியாக பார்க்க...

அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாது வேறு புறம் பார்வையை திருப்பிக் கொண்டிருந்தான்... அவனின் பாராமுகமும், அச்சத்தில் உடல் வியர்வையில் முக்குளித்திருந்ததும் அவனிடம் ஏதோ தவறிருப்பதை உணர்த்த, அவன் பதிலையும் எதிர்பாராமல் தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி இருந்தாள். அவளின் செயலை அடிக்கண்ணால் நோட்டமிட்டு கொண்டிருந்த ரஞ்சனுக்கு பக்கென்று ஆகிப் போனது!

நீதிபதியாக பணியாற்றி ஓய்ந்திருந்த பெண்ணின் பெரியப்பா குமரகுரு காவலரை நெருங்கியவர்... “எக்ஸ்க்யூஸ் மீ! அம் ரிடைர்ட் ஜட்ஜ் குமரகுரு... என்னிடம் சொல்லுங்க என்ன பிரச்சனைன்னு” என்று சிறிதும் பதட்டமில்லாமல் கம்பீரமாக வினவியிருந்தார்.

“இந்த பொண்ணு பேர் வாணி... ஊர் தேனி... இவங்க காலேஜ் படிக்கும் போது ரஞ்சன் இந்த பெண்ணை விரும்பியிருக்காரு... ரெண்டு பேரும் இளமை வேகத்தில் தவறும் செய்ததில் வாணி கர்ப்பமாகியிருக்காங்க... ரஞ்சன் அதுக்கப்புறம் இவங்களை திருமணம் செய்ய மறுத்திருக்காங்க... குழந்தையை கலைக்க முடியாத காரணத்தால் அவங்க பெண்ணை பெற்றுவிட்டு இப்போ தனியா தவிச்சிட்டு இருக்கிறாங்க” என்றவரின் கூற்றை நிதானமாக கேட்டறிந்தவர்...

“ஒகே! பட், நீங்க சொல்லுறதை வச்சு உண்மைன்னு நம்ப முடியாதே... அதுக்கு ஆதாரம் இருக்கா?” என்று வினவி தான் ஒரு நீதிபதி என்பதை நிரூபித்தார்.

“அவருடைய குழந்தை என் கையில் இருக்கு... இதுக்கு மேல என்ன மாதிரி ஆதாரத்தை கேட்கறீங்க சார்?” என்று வாணி பிசிர்தட்டாத வார்த்தைகளில் துணிச்சலாக கேட்டிருக்க... அவளின் பேச்சில் அர்ஜுன், தரன், அரசி மூவரும் மலைத்து பார்த்திருந்தனர்.

அவர்கள் மண்டபத்தை அடைந்து உள்ளே வந்த வரையிலும் வாணியின் துடிப்பும், நடுக்கமும் அறிந்தவர்கள் அவளுக்கு பக்கபலமாக நின்று பேச தயார் நிலையில் இருந்தனர்... ஆனால் அவளின் அந்த பிசிரில்லாத துணிச்சலான குரல் அவர்களை அசத்தியிருந்தது... இனி தாங்களும் அவளுக்கு ஈடாக பேச தயாராகினர்.

“ரெண்டு பேரும் ஊர் சுற்றிய போது எடுத்த போட்டோஸை அந்த ஃபிராடு அழிச்சுட்டான் சார்” கடிந்த பற்களுக்கிடையே வார்த்தையை துப்பினான் தரன்.

“இப்படி சொன்னா எப்படி? நீங்க வந்த நோக்கம் வேறையா இருந்தா எங்க பெண்ணும் பாதிக்கப்படுவா தானே” என்று நிறுத்த...

“என் பெண்ணுடைய ஜாடை அதோ நிற்கிறாரே ரஞ்சன், அவரை போலவே இருக்கிறதை விடவா ஆதாரம் வேணும்?” வாணி திடசித்தமாக கூறியதும், ரஞ்சன் தன்னை திடப்படுத்திக் கொண்டவன்...

“என்ன எல்லாரும் சேர்ந்து பணக்கார சம்மதத்தை வளைச்சு போட பிளான் போடுறீங்களா? ஏற்கனவே என் தங்கையை உன் அண்ணன் ஏமாத்தி தான் கல்யாணம் பண்ணியிருக்கிறான், அதை வசதியா மறந்துடீங்க போல?” ஆவேசமாக ஆரம்பித்தவன் இறுதியில் எள்ளலாக முடித்திருந்தான்.

“உன் தங்கையை நான் ஏமாற்றினேனா? எங்கே அதை உன் தங்கையை சொல்ல சொல்லு பார்ப்போம்”

“அவ எப்படி சொல்லுவா? அதான் மிரட்டி வச்சுருக்கியே?” என்றவனின் பேச்சில் “ஹாஹாஹா” என்று அரங்கமே அதிர சிரித்தவனை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஏன் டா கொஞ்சமாச்சும் பொருந்துர மாதிரி பொய் சொல்லி மாட்டிவிட பாரு டா... உன் தங்கையை நான் மிரட்டுறேனா? ஒரு கம்பெனியை நிர்வாகம் பண்ணுறவளை மிரட்டி ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்க, உன் தங்கச்சி என்ன இதோ ஏமாந்து நிற்கிறாளே, இந்த வாணியா?”

“இதே இடத்தில் உன் தங்கச்சி இருந்திருந்தான்னா இந்நேரம் நீ உயிரோடவே இருந்திருக்கமாட்டே... உன் தங்கச்சி இப்போ என் பொண்டாட்டி அதனால், அனாவிஷயமா அவளை இழுக்கதே ஒழுங்கா என் தங்கை வாழ்க்கைக்கு மட்டும் பதில் சொல்லு”

“என்னத்தை பதில் சொல்ல சொல்லுற? படிக்க வந்தோமா, படிச்சதுக்கு அடையாளமா பட்டம் வாங்கிட்டு போனோமான்னு இல்லாம, நல்ல வசதியான இடத்து பையனா பார்த்து வளைச்சு போட்டு வயித்துல வாங்கிட்டு வந்து நின்ன கேடு கெட்ட பொண்ணு என் வீட்டு மருமகளா?” என்று வாணியை தூஷணை செய்த யமுனாவை அர்ஜுன், தரன் இருவரும் ஒரு சேர கொலை வெறியுடன் பார்த்தனர்.

“வார்த்தையை பார்த்து பேசுறது நல்லது அப்புறம் நான் பேச ஆரம்பிச்சா நல்லா இருக்காது” என்றவன் உதடுகள் ரௌத்திரத்தில் துடிக்க, அவன் கரங்களை அழுத்தி கொடுத்து அமைதியாக இருக்கும்படி ஜாடையாக கூறினான் அர்ஜுன்.

“நீங்க ரெண்டு பேரும் வார்த்தையை வளர்த்துகிட்டு போறதால் ஒரு பயனும் இல்லை... ரஞ்சனை பற்றி விசாரித்த போது எங்களுக்கு எந்த எதிர்மறையான தகவலும் வரலை, அதனால் சரியான ஆதாரம் இருந்தா காட்டுங்க இல்லன்னா கிளம்புங்க” என்ற பெண்ணின் தந்தையை...

“அவசரப்படாதே சுந்தர்... கோர்ட் வேற, குடும்பம் வேற, இந்த பெண்ணையும் அவங்க குடும்பத்தையும் பார்த்தா அப்படி ஒன்னும் பொய் சொல்றவங்களா தெரியலை கொஞ்சம் நிதானமா விசாரிப்போம்” என்றார் நீதிபதி குமரகுரு.

“அதை தான் சொல்றேன் அண்ணா, அவங்க சரியான ஆதாரத்தை நிரூபிச்சு காட்டட்டும் என்ன இருந்தாலும் நம்ம பெண்ணை அந்த பையனுக்கு கொடுக்க நினைச்சு நிச்சயம் வரைக்கும் வந்தாச்சு, இப்போ நிச்சயம் நின்னா நம்ம பெண்ணுடைய பேரும் கெட்டுப் போகும்”

“சார் இப்போ ஆதாரத்தை காட்டினா மட்டும் நம்புவீங்களா?” என்ற வாணியை கண்கள் இடுங்க பார்த்தவர்...

“அதை எல்லாம் அழிச்சுட்டுதா உங்க அண்ணன் சொல்லுறானே, அப்போ அது பொய்யா?”

“அது உண்மை தான் சார்... அவர்கிட்டே இருந்த ஆதாரம் தானே அழிஞ்சுப் போச்சு, என்கிட்டே ரெண்டு ஆதாரம் இருக்கு என்றவள் புகைப்பட கோப்புரையை காண்பிக்க, அதில் ரஞ்சனும், வாணியும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வரிசைகட்டி இருந்தன... அதனை தொடர்ந்து இதையும் கேளுங்க என்று அவள் கையிலிருந்து அலைபேசி ஆடியோவை இயக்க அதில்...

“இங்கே பாரு உன்னை அப்போவே குழந்தையை கலைக்க சொல்லிட்டேன், என் பேச்சை கேட்காமல் பெற்றுகிட்டது நீ... இதுக்கு மேல திரும்பத் திரும்ப என்னை தொந்தரவு பண்ணின அப்புறம் நான் சும்மா இருக்கமாட்டேன், உங்க குடும்பத்தையே அழிச்சிருவேன்?” என்றதும் முடிந்திருக்க...

“இது அவர் பேசின ஆடியோ ரெகார்டிங்... எனக்கு குழந்தை பிறந்ததும் ஹாஸ்பிடலில் பேசினது” என்றவளின் விழிகள் ரஞ்சன் மேல் விரோதத்துடன் பாய்த்திருந்தன. அதுவரை பல்லை கடித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன்...

“ஏய் ஒழுங்கா இங்கிருந்து போயிரு... இல்லை, உன்னை எவ்ளோ கேவலமா பேசி அசிங்கப்படுத்த முடியுமோ அவளோ அசிங்கப்படுத்துவேன்” அவளுக்கு மட்டும் கேட்கும் படியாக அடிக்குரலில் மிரட்டல் விடுத்திருந்தான்.

“அடப் போடா... என்னைக்கு உன்னை காதலிச்சனோ அன்னைக்கே என் மானத்தை நானே விற்று கப்பல் ஏத்திகிட்டேன்... எனக்கு நானே சூனியம் வச்சுக்கிட்ட கதை தான், இதுக்கு மேல நீ பேசுற பேச்சுக்கெல்லாம் நான் அடங்கிருவேன்னு மட்டும் நினைக்காத எனக்கு தேவை என் பெண்ணுக்கு அப்பா நீ தான்னு உறுதி ஆகணும்” என்றவளை வன்மத்துடன் பார்த்தவன் கண்களில் செவ்வரி ஓடியது...

“இதெல்லாம் நம்பாதீங்க... இவ என்னை மாதிரி நிறைய பேர் கூட சுத்தியிருக்கா, அதையெல்லாம் மறைச்சுகிட்டு குழந்தைக்கு என்னை அப்பான்னு கை காட்டுறா?” என்று விகாரத்துடன் நிஷ்டூரமாக மொழிந்திருந்தான்.

இவர்களின் வாக்குவாதத்தை கேட்டுக் கொண்டிருந்த பெண் வீட்டினர் மகளை அவர்கள் பக்கம் அழைத்து கொண்டனர். அதில் அவர்கள் ஐம்பது சதவீதம் ரஞ்சன் மேல் சந்தேகம் கொண்டுவிட்டார்கள் என்று உறுதியாக தெரிந்து விட எங்கே மகனின் நிச்சயம் நின்றுவிடுமோ என்ற கொதிப்பில் பொறுமையிழந்தவர்.

“இங்கே பாருங்க இந்த பொண்ணு சொல்ற எதையும் நம்பாதீங்க, இப்போ எல்லாம் இவளை மாதிரி பொண்ணுங்க எத்தனையோ பேர் ஏமாத்துறாங்க... அதே மாதிரி இவளே ஒரு கதையை திரிச்சுட்டு வந்து பையன் நிச்சயத்தை கெடுக்கப் பார்க்கிறா”

“அபாண்டமா பேசாதீங்கம்மா... நான் நீதிபதியா இருந்தவன் யார் குற்றம் செய்தவங்க, யார் நிருபராதின்னு எல்லாம் என்னால் சுலபமா கண்டுபிடிக்க முடியும்? இந்த பொண்ணு பக்கம் ஏதோ நியாயம் இருக்கு”

“என்ன சார் நீங்க ஊரெல்லாம் விசாரிச்சு பல லட்சம் செலவு பண்ணி நிச்சயத்தை ஏற்பாடு செய்திருக்கோம், இந்த மாதிரி சில்லறை பிரச்சனையை எல்லாம் கழுத்தை பிடிச்சு வெளியே தாள்ளாம நிற்க வச்சு பேசிட்டு இருக்கீங்க?”

“பக்கத்துல போலீஸ் நிற்கிறதை மறந்துட்டு பேச வேண்டாம் பாஸ்கரன்” என்று எச்சரித்தவரின் மொழியை சிறிதும் சட்டை செய்யாமல்...

“என்ன சார் பெரிய போலீஸ்... இதோ நிற்கிறானே அந்த பொண்ணுக்கு அண்ணன்னு அவன் எங்க வீட்டு பெண்ணை இதுக்காக பழி வாங்கி ஏமாற்றி கல்யாணம் பண்ணியிருக்கான், முதல்ல அவன் மேல கேஸ் போடுங்க” லபோதிபோ என்று குதித்தார் பாஸ்கரன்.

“ஏய்ய்!” என்று ஆவேசத்துடன் எகிறிக் கொண்டு வந்த தரனை, அர்ஜுன் கை பிடித்து தடுத்து நிறுத்தினான்.

“கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருங்க சார்” என்ற குமரகுரு, வாணியை நோக்கி...

“ஒரு பொண்ணா உன்னுடைய இந்த நிலைமைக்கு நான் வருத்தப்படுறேன்... ஆனால் அதே சமயம் நீ சொல்ற எதையும் அவங்க ஒத்துக்கலை... அப்போ யார் பக்கம் இருக்கிறது உண்மைன்னு தெரியணும், அதுக்கு உறுதியான ஆதாரம் வேணும்... உனக்கு அஞ்சு நாள் டைம் தரேன் அதுக்குள்ள அந்த குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துட்டு வந்து ப்ரூப் பண்ணு, அப்போ தான் உனக்கான நியாயத்தை நானா வாங்கி தர முடியும்” என்று முடிக்க, தரன் அதை எதிர்த்து ஏதோ கூற சென்ற சமயம்...

“அஞ்சு நாள் எதுக்கு சார்? இப்போவே அதுக்கான ஆதாரத்தை கொடுக்கிறேன்... இந்த அபலை பெண்ணுக்கு இப்போவே ஒரு நியாயத்தை சொல்லுங்க?” என்று கூறிக் கொண்டே குரல் வந்த திசை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்ப, அங்கே நின்ற சம்யுக்தாவை கண்டு திகைப்பூண்டை மிதித்தது போல் மேலும் அதிர்ந்தனர்!

தரன் மட்டிலுமாக மனைவியின் குரலை அடையாளம் கண்டு உணர்ச்சித் துடைத்த முகத்துடன் நின்றுக் கொண்டான்.

“எனக்கு தெரியாம நிச்சயதார்த்தமா? அதுக்கு நான் தான் விட்டு விடுவேனா?” என்று உதட்டை இகழ்ச்சியாக வளைத்து கூறியவள்...

“இந்தாங்க நீங்க கேட்ட டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்” என்று கூறி குமரகுருவிடம் நீட்டியிருந்தாள். அதில் வாணிக்கே ஆச்சர்யம் டன் கணக்காய் ததும்பியது. அப்போது தான் இது எப்படி சாத்தியம் என்று சிந்தித்தவளை கண்டு கொண்ட சம்யுக்தா வாணிக்கு விளக்கம் அளிக்க முயன்றாள்.

“ஒருநாள் கோவிலுக்கு கூட்டிட்டு போறதா சொல்லி உன் குழந்தையை கூட்டிட்டு போனேனே, அது இதுக்காக தான்... நீ யோசிக்கலாம் தேனியில் இருந்து எப்படி சாத்தியம்ன்னு?” என்றவளின் பார்வை தமையன் ரஞ்சன் மேல் விரோதத்துடன் பதிந்தது.

“எங்க பேமிலி டாக்டர் வருஷம் ஒரு தடவை தவறாம மாஸ்டர் செக்கப் பண்ணிருவாங்க, அப்படி தான் ரஞ்சன் அண்ணா செக்கப் பண்ண வந்த போது டாக்டர்கிட்டே உன் விஷயத்தை சொல்லி உதவி கேட்டேன், அவரும் ஒத்துக்கிட்டாரு... உன் குழந்தையுடைய சாம்பிளை அவங்க ஹாஸ்பிடல் மூலமாவே கொடுக்க ஆள் ஏற்பாடு பண்ணி வாங்கிட்டு போனாரு” அவளின் விளக்கம் வாணிக்காக இருந்த போதும் பார்வை என்னவோ ரஞ்சனை தான் கூறுபோட்டுக் கொண்டிருந்தது.

அவளின் செயலை கண்டு அர்ஜுனுக்கு திகைப்பும், ஆச்சர்யமும் ஒரு சேர எழ, தரன் அப்போதும் அவளை பற்றி அறிந்தவனாக உணர்ச்சியற்று பார்த்திருந்தான்.

சம்யுக்தா பேச்சை கேட்டதிலேயே அவளின் சாதுர்யமான திட்டத்தை எண்ணிய ரஞ்சனுக்கு அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது என்றால், அவள் நீட்டிய டிஎன்ஏ சோதனை அறிக்கை அதற்கு இணை நின்று இருமடங்கு அதிகமாக கலக்கம் சூழ்ந்து உடல் வியர்த்துப் போனது.

குமரகுரு கண்டறிந்த அறிக்கையின் வாயிலாக வாணியின் குழந்தைக்கு ரஞ்சன் தான் தந்தை என்று உறுதியானது. அதிலேயே வாணி கூறிய அனைத்தும் மெய் என்று நிரூபித்திருக்க, ரஞ்சன் மற்றும் அவனின் குடும்பத்தை அர்ப்பமாக பார்த்திருந்தார்.

“இதுல உங்க பையன் தான் இந்த பெண்ணுடைய குழந்தைக்கு அப்பான்னு ப்ரூவ் ஆகி இருக்கு, இப்போ இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க” என்று ஆவேசமாக குரலை உயர்த்தி பேசியவரின் வார்த்தையில் முகம் கருத்து விழுந்தது... அந்த கண் கொள்ளா காட்சியை காணவே வாணி, அரசி இருவரும் பனிக்கட்டியில் முக்குளித்தது போன்று குளிர்ந்து போனார்கள்.

“நல்ல வேலை நம்ம பொண்ணு வாழ்க்கை தப்பிச்சது” என்று நிம்மதி பெருமூச்சு விட்டார் அன்றைய வைபவத்தில் மணப்பெண்ணாக இருந்த பெண்ணுடைய தந்தை.

“நாங்க நிச்சயத்தை நிறுத்துறோம்... அதுக்கு பதிலா இப்போ ரஞ்சனுக்கும், அந்த பொண்ணு வாணிக்கும் கல்யாணம் நடக்கப் போகுது” என்று குமரகுரு அறிவிக்க கொதித்துப் போன ரஞ்சன் வீட்டினர்...

“இங்கே பாருங்க சார், யாரோ ஒரு மூணாவது ஆள் சொல் பேச்சை கேட்டு கல்யாணத்தை நிறுத்துறதே எங்களுக்கு இஷ்டம் இல்லை... இதில் எங்க சம்மதம் இல்லாமல் எங்க வீட்டு பையன் கல்யாணத்தை முடிவு செய்ய நீங்க யாரு?” என்று யமுனா கொதிக்க...

“உங்க பெண்ணை நீங்க என் பையனுக்கு கொடுக்க விருப்பமில்லைன்னா இங்கிருந்து நகர்ந்திருங்க, அதை விட்டுட்டு எங்க குடும்பத்தில் தலையிட்டா பிரச்சனை சிக்கல் ஆகிரும்” என்று பாஸ்கரன் தன் கடினக் குரலில் பிரஸ்தாபித்திருந்தார்.

“இப்போ உங்க மகன் இந்த பொண்ணு கழுத்தில் தாலி கட்டலைன்னாலும் பெரிய சிக்கல் தான்... இந்த பொண்ணு கொடுத்த கம்பளைண்டை நான் மேலிடதுக்கு அனுப்பி ஆக்ஷன் எடுக்க வேண்டியதா இருக்கு எப்படி வசதி?” என்று இமையை உயர்த்தி நிதானமாக வினவ, அனைவரும் முகத்தில் ஈயாடும் அசைவின்றி பேஸ்தடித்து நின்றனர்.

சம்யுக்தா முன்னேற்பாடாக தன் கையில் கொண்டு வந்திருந்த தாலியை ரஞ்சனிடம் நீட்ட, அவனோ வாங்க மறுத்து தர்க்கம் செய்தான்...

“இங்கே பாரு டி... யாரு ஒருத்திக்காக உன் அண்ணனையே பாழுங்கிணற்றில் தள்ளப் பார்க்கிறயே, இதுக்காக தான் அவன் தங்கச்சின்னு இத்தனை வருஷமா பாசம் காட்டினானா சம்மு?” கோபமாக ஆரம்பித்தவரின் குரல் இறுதியில் பாசத்தில் பசப்பினார்... அப்படியாவது மகளின் முடிவை மாற்றலாம் என்ற எண்ணம் கொண்டிருந்த யசோதா தந்திரமாக பேச, சம்யுக்தாவா அதற்கெல்லாம் அசருவாள் என்பது போல் பக்கவாட்டில் பார்வையை உயர்த்தி ஒருமாதிரியாக அவரை பார்த்தவள் தன் தமையனின் பார்வையை நேரிடையாக சந்தித்தாள்.

“இப்போ மட்டும் நீ வாணி கழுத்தில் தாலி கட்டலைன்னா, என்னுடைய தங்கை என்கிற உறவு அறுந்து, ஜெயிலுக்கு போய் கம்பி எண்ணனும் எப்படி வசதி?” என்றதும்...

“சம்மு நீயுமா?” என்று விழிகள் தெறிக்க வினவியதும்...

“நானே தான்!” என்று கூறியவள் முகத்தை கடினமாக்கிக் கொண்டு அழுத்தமாக நிற்க, அவளையே வெறித்தவனின் விழிகளில் கலவரம் சூழ்ந்துவிட்டிருந்தது.

“வாங்குறியா இல்லை...” என்று உச்சஸ்தாயில் குரலை உயர்த்தி அதட்ட, கணினி நிரல் செய்யப்பட்டது போல் இயந்திரத்தனமாக பெற்றுக் கொண்டிருந்தான்.

“அண்ணா அவங்க குடும்ப விவகாரம் நமக்கெதற்கு வாங்க நாம போவோம்” என்று மணப்பெண்ணின் தந்தை சுந்தர் கூற...

“இரு சுந்தர் ஒரு வகையில் நாம அந்த பொண்ணுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கோம்... அந்த பொண்ணு மட்டும் சரியான நேரத்தில் வந்து தடுக்கலைன்னா, இந்நேரம் நம்ம பொண்ணு வாழ்க்கை கேள்வி குறி ஆகியிருக்கும், அதனால் அவங்க கல்யாணத்தை நடத்தி வச்சு ஆசீர்வாதம் பண்ணிட்டு போவோம்” என்றவர் சொன்னது போல் செய்தார்.

“என்ன அமைதியாவே நிற்கறீங்க ரஞ்சன்? ரெண்டு பேரும் மாலையை மாத்திக்கிட்டு தாலியை கட்டுங்க” என்று கட்டளையிட கைதியின் நிலையில் நின்ற ரஞ்சனுக்கு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதை தவிர வேறு வழியின்றி நிச்சயத்திற்காக அமைத்த மேடையில் வைத்து, நிச்சயத்திற்கு வந்திருந்த சொந்த பந்தகளான உறவுகளின் முன்பே வாணியின் கழுத்தில் மஞ்சள் கயிற்றிலான தாலியை மூன்று முடிச்சிட்டு வாணி ரஞ்சனின் மனைவியாகவும், அவளின் மகளுக்கு தந்தையாகவும் உரிமையாளன் ஆனான்.

கடும் போராட்டத்திற்கு பின் தன் கழுத்தில் விழுந்த மஞ்சள் கயிற்றை பார்த்து உணர்ச்சி வசப்பட்ட வாணிக்கு கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் சொட்டு சொட்டாய் வெளியேறியது. தன் கழுத்தில் தாலி ஏறியதுமே மாலையை தடாலடியாக கழட்டி வீசியவள், சம்யுக்தாவை அணைத்துக் கொண்டு கதறலானாள். சம்யுக்தா அவளை புரிந்து மௌனமாக நின்றிருக்க...

“வாணி அழாதே” என்று தரன் தங்கையின் செவியில் அதட்டி கூறினான்.

“எனக்கு இது போதும்! வாங்க ண்ணா, வாங்க அண்ணி போகலாம்” என்று திரும்ப, ரஞ்சன் குடும்பத்தினர் வெகுண்டனர்.

“என்னடா விளையாடுறீங்களா? என்னென்னவோ நாடகம் நடத்தி எங்களுடைய குடும்ப கௌரவத்தையும், மானத்தையும் வாங்கி, கல்யாணம் பண்ணிக்கிட்டு, இப்போ எதுவுமே நடக்காத மாதிரி இங்கிருந்து போகறீங்களா?” என்ற பாஸ்கரனின் பேச்சு மற்றவர்களை சுட்டாலும், சம்யுக்தாவை எதுவும் செய்ய இயலாத இயலாமையில் பல்லை கடித்தனர்.

அவர்கள் அறிவார்கள் சம்யுக்தாவை மேலும் சீண்டினாள், இனி என்ன வேண்டுமானாலும் நேரலாம், வாணியின் குடும்பத்தை காட்டிலும் சம்யுக்தாவை அவர்கள் கண்டிப்பது, அவர்கள் குடும்பத்துக்கு மேலும் சிக்கல் என்பதை நன்கு உணர்ந்தவர் வாணியிடம் சீறினார் யமுனா.

“என் பையனுக்கு தான் பொண்டாட்டி ஆகிட்டாளே, இதுக்கு மேல எங்க போக பார்க்கிற ஒழுங்கா இங்கேயே இரு” என்று கட்டளையிட்டதும் இகழ்ச்சியாக இதழ்களை வளைத்தவள்...

“என்ன! அது தான் மருமகள் ஆகிட்டாளே, இனி நாம என்ன வேணா பண்ணலாம்னு நினைச்சுட்டீங்களா? நான் உங்க மகன் கையால் தாலி வாங்கணும்னு வைராக்கியத்துடன் தான் இருந்தேன், அது என் குழந்தைக்கு அப்பா உங்க மகன் தான்னு ஊர் உலகத்துக்கு காட்டிக்கத் தான், அதை தான் நடத்தி காட்டிட்டேன்” என்றவள் பார்வை ரஞ்சன் மேல் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்க...

“உங்க மகன் மாதிரி ஒரு கேடு கெட்டவன் கூட குடும்பம் எல்லாம் நடத்த முடியாது” என்று அழுத்தமாக கூற கொதிகலனாகிப் போனார்கள்.

இவற்றை எல்லாம் பார்வையாளரை போன்று பார்த்துக் கொண்டிருந்த குமரகுரு... “சரி இனி அது அவங்க குடும்ப பிரச்சனை, இனி அவங்க பார்த்துக்கட்டும் நாம கிளம்புவோம்” என்று நடையை கட்ட ஆவேசத்துடன் அவரை வழி மறைத்த பாஸ்கரன்...

“அவங்களுக்கு அட்சதை தூவி வாழ்த்து சொல்லி கல்யாணத்தை நடத்த காரணமா இருந்துட்டு, இப்போ பாதியில் போனா என்ன அர்த்தம்?” என்று ஆத்திரத்தில் கொதித்தார்.

“உங்க குடும்ப பிரச்சனை இனி நீங்க தான் பார்த்துக்கணும்னு அர்த்தம்” என்று சாதாரணமாக கூறியவர், நொடியும் நிற்காமல் அவர் சொந்ததை அழைத்துக் கண்டு விறுவிறுவென்று நகர்ந்திருந்தார்.

அவர்களின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்றைய சம்பவம் முக்கிய திருப்புமுனை செய்தியாக ஆகிப் போக அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் சுவாரஸ்யமாக பேசி சலசலத்தபடி நகர்ந்தனர். அதில் ரஞ்சன் குடும்பத்தினருக்கும் பெருத்த அவமானமாக ஆகிப் போக செய்வதறியாது சிரம் தாழ்த்தி நின்றனர்.

ரஞ்சனை நெருங்கிய வாணி... “இனி நீ எவளையும் கல்யாணம் பண்ணிக்கோ, அதை பத்தி எனக்கொன்னும் இல்லை... ஆனால் எத்தனை பேரை கல்யாணம் பண்ணினாலும் நான் தான் உன் முதல் பொண்டாட்டி... என் வயிற்றில் பிறந்த குழந்தை தான் உனக்கு மூத்த மகள்” என்று உரைத்தவளை சீற்றத்துடன் நோக்கியவன்...

“நீ தப்பு பண்ணுற வாணி! இதுக்கெல்லாம் ஒரு நாள் நல்லா அனுபவிப்பே? ஏன்டா இவனை கல்யாணம் பண்ணினோம்னு வருத்தப்படுவே” அவனின் பேச்சுக்கு அலட்டிக் கொள்ளாமல்...

“ஆல் த பெஸ்ட்!” என்று அலட்சியமாக கூறிவிட்டு குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டிருந்தாள்.

**********************

அர்ஜுன், தரன் தீவிரமான சிந்தனையில் அமர்ந்திருக்க... அரசி, வாணியை வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வாணி நீ எவ்ளோ துணிச்சலா தைரியமா பேசுறா, இத்தனை நாள் இதையெல்லாம் எங்கே மறைச்சு வச்சிருந்த?” என்று மாட்சிமையுடன் வினவிக் கொண்டிருந்தாள் அரசி.

“என்ன செய்யுறது அரசிக்கா? எத்தனை நாளைக்கு பயந்து ஓடி ஒழிஞ்சுக்கிட்டே இருக்க முடியும்? என் விதி இப்படித்தான்னு ஆகிப் போச்சு, அதுக்கு ஏத்த மாதிரி வாழப் பழகிக்க வேண்டாமா? என் மகளை தனியே நின்னு காப்பாற்ற எனக்கு திடம் வேண்டாமா?”

“இந்த துணிச்சல் கடைசி வரைக்கும் இருக்கணும் வாணி... அவன் ஆம்பளைன்னு திமிரா இருக்கிறான், நாம அவனுக்கு எந்த விதத்திலேயும் சளைச்சவங்க இல்லை”

“காதலிக்கும் போது இனிக்கிற சில விஷயம் கல்யாணத்துக்கு அப்புறம் கசப்பா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன் ஆனால், இப்போ தான் அதை அனுபவத்தில் உணருறேன்”

“அந்த ரஞ்சனை எந்தளவுக்கு காதலிச்சேனோ, அதை விட ரெண்டு மடங்கு வெறுக்குறேன்”

“வாணி இனி மேல் தான் நீ நிதானமா இருக்கணும்... உன் காயப்பட்ட மனசு எனக்கு நல்லா புரியுது, இருந்தாலும் சில விஷயத்தை நாம பொறுமையா தான் கையாளணும்” என்று அவளை திடப்படுத்த வேண்டிய சில ஆலோசனைகளை கூறியிருந்தாள்.

அரசி, வாணியின் பேச்சு இருவரின் செவிகளை எட்டிய போதிலும் அதை கவனியாதது போல் அசைவற்று அமர்ந்திருந்தனர். அவர்களின் உரையாடலை இடையூறில்லாமல் சிலைப் போல் அமர்ந்திருந்தவர்களை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த போது தான் அர்ஜுனின் பேச்சு குரல் ஒலித்தது.

“சம்யுக்தாவை அப்படி ஒரு பிரசன்னத்தில் நான் எதிர்பார்க்கவே இல்லைடா” மார்பின் குறுக்கே கரங்களை கட்டிக் கொண்டு விழிகள் தீவிர சிந்தனையில் இருந்தபடியே அர்ஜுன் கூறியதை கேட்ட தரன்...

“நானும் தான் எதிர்பார்கலை” என்றவன் முகம் கல்லை போன்ற கடினத்துடன் இறுகி இருந்தது.

“என்னடா சொல்ற?” என்று வினவியவனின் பார்வையை ஆராய்ச்சியாக அவன் மேல் படிந்தது.

“அவளுக்கு விஷயம் தெரியாம போக வாய்ப்பில்லை தான்... ஆனால் அதை இந்தளவுக்கு எடுத்துட்டு வருவான்னு நானும் எதிர்பார்க்கலை?”

“அப்போ நீ சம்யுக்தாகிட்டே விஷயத்தை சொல்லலையா?” என்றவனின் கூர்மையான கேள்விக்கு பதில் கூற இயலாது முகத்தை திருப்பிக் கொண்டிருந்தான்... அவன் கேள்விக்கு பதில் கூற வேண்டுமென்றால் அவர்களுக்குள் நடந்த அந்தரங்க போரை பற்றி கூற வேண்டியதாக இருக்கும், அது அவர்களின் உறவுக்கு அத்தனை உவப்பானதல்ல என்றே அதை மறைக்க எண்ணியவன்...

“அதை விடு, இப்போ அது அவ்ளோ முக்கியமான விஷயம் இல்லை, இப்போ வாணிக்கு அடுத்து என்ன செய்யணும்னு தான் யோசிக்கணும்” அவன் தன்னிடம் எதையோ மறைக்க எண்ணுகிறான் என்று பட்டவர்த்தனமாக புரிந்தாலும், அவனோ அழுத்தக்காரன் அவன் அடிமனதை தோண்டி விசயத்தை பெறுவது என்பது கடினம் என்பதை உணர்ந்தவன் உதடுகளை அழுந்த மூடிக் கொண்டான்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அர்ஜுனுக்கு தரனை காட்டிலும் இரண்டு மடங்கு சந்தேக கேள்விகள் சம்யுக்தாவின் மேல் தான் எழுந்தன... அவளுக்கு அவன் மேல் மரியாதையும், நட்பும் மலையளவு இருக்கிறது என்பதை அவளின் செயல்களால் உணர்ந்து தெரிந்துக் கொண்டவன், தரனிடம் கேளாத சில சகாயங்களை கூட அர்ஜுனிடம் இருந்து தயங்காது பெற்றுக் கொண்டவளுக்கு வாணியின் விஷயத்தில் இம்மியளவும் அவனிடம் பகிர்ந்து கொள்ளாதது எண்ணி எங்கோ இடித்தது. இவர்கள் இருவருக்கும் இடையில் என்ன நடந்திருந்தாலும் கணவன், மனைவிக்கு மத்தியில் இடைப்புகுவது நாகரிகமாற்றது என கருதியவன் தரன் கூறியது போல் வாணியின் விஷயத்தை பற்றி யோசிக்கலானான்.


“நீ என்னம்மா முடிவு செய்திருக்க வாணி?” என்ற அர்ஜுனின் கேள்விக்கு வெறுமையாக பார்த்தவள்...

“தெரியலை அண்ணா! இப்போதைக்கு நான் உங்களுடனே வரேன்” என்றவள் தன் தமையனான தரனை நோக்கி...

“அண்ணா நான்... நான்... உங்க கூட வரலாம் தானே?” என்று தயங்கித் தயங்கி வினவியவளின் கேள்விக்கு பார்வையால் வெட்டியவன்...

“என்ன அபத்தமா கேட்கிற?” என்று சிடுசிடுத்தவன்...

“ஓஹ்! கழுத்தில் தாலி ஏறியதும் நீங்க பெரிய மனுஷி ஆகிட்டீங்களா?” ஒரு மாதிரியாக வினவியவனின் பதிலில் பதறிப் போக...

“அச்சோ! நிஜமா... அப்படி ஏதும் இல்லை ண்ணா, ஏற்கனவே என்னால் நீங்க நிறைய அவமானமும், வேதனையும் பட்டுட்டு இருக்கீங்க? இப்போ புதுசா இப்படி ஒரு நிலைமையில் நின்னா இன்னும் கேள்வியும், சந்தேகமும் ஜாஸ்தி ஆகும்... முக்கியமா அம்மாப்பா, பெரியப்பா எப்படி எடுத்துக்குவாங்கன்னு தெரியலை” என்று நிறுத்தியவளின் வேதனை புரிந்திருக்க...

“இங்கே பாரு வாணி நீயோ, உன் குழந்தையோ எனக்கு எப்பவுமே பாரமில்லை... அது உன் வீடு, உன் பிறப்பிடம், அங்கே வராம நீ வேறெங்கே போக முடியும்? ஊருல ஆளுக்கொரு விதமா பேசினாலும் சரி, நினைச்சாலும் சரி, அதை பற்றி நமக்கென்ன? நம்ம வாழ்க்கையை நாம தான் வாழணும் அடுத்தவங்களுக்காக பார்த்தா நம்ம வாழ்க்கையை வாழ முடியாது”

“நீ அங்கே வா, அந்த ரஞ்சன் திருந்தி வரட்டும், அதுக்கப்புறமா என்ன செய்யலாம்ன்னு யோசிச்சுக்கலாம்” என்றவனின் வார்த்தையில் அவளுக்கு பேரமைதி கிடைத்தது.

அவளின் விஷயத்தை சிந்தித்து தற்காலிக முடிவு மேற்கொண்ட பிறகு தான், அங்கே எதிர்பாராமல் வந்திருந்த சம்யுக்தா நினைவுக்கு வரவே அதை பற்றி விசாரிக்கலானாள்.

“ஆமாம் அண்ணா, அண்ணி எப்படி அங்கே திடிர்னு வந்தாங்க?” என்ற வாணியின் கேள்வியை தொடர்ந்து...

“மண்டபதிலிருந்து நாம வரும் போது கூட அவசரத்தில் அண்ணியை பற்றி கவனிக்கலையே அண்ணா, அவங்க இப்போ எங்க இருக்காங்க?” என்று அரசியின் கேள்வியும் தொடர்ந்தது தான் தாமதம்...

“இப்போவாச்சும் நான் ஒருத்தி இருக்கிறது, உங்களுக்கு நியாபகம் வந்ததே” என்று குரல் வந்த திசையில் அனைவரும் திரும்பிப் பார்க்க, சம்யுக்தா கணவனை கூர்மையாக பார்த்தபடி குழந்தையுடன் நின்றிருப்பதை கண்டனர். அவளின் பார்வை கணவனை கடுமையாக குற்றம் சாட்டியது.

“இப்போ தான் உங்களுக்கு நான் அண்ணிங்கிறது நியாபகம் வருதா?” என்று வாணிக்கும், அரசிக்கும் நேரடி கேள்வி பாய்ந்தாலும், மறைமுகமாக கணவனுக்கான தாக்குதலும் பொதிந்திருந்தது. அவளின் கேள்விக்கு திகைத்து பதில் கூற திணறியவர்களை கண்ட அர்ஜுனுக்கு அங்கே என்ன பேசுவது என்றறியாது சங்கடமாகிப் போனது.

“என் அண்ணனுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போகுதுன்னு எனக்கு தெரியாமல் போகுமா? உனக்கு என்னை பார்த்து இந்த விஷயத்தை சொல்லணும்னு ஏன் தோணலை?” என்று வாணியை பார்த்து கேட்ட கேள்வி மட்டுமே அவளிடம் பாய, பார்வையோ ஆயிரம் வேல்கம்புகளை சொருகி கணவனை கூறு போட்டுக் கொண்டிருந்தது. அவளின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று அறியாது வாணி கையை பிசைந்து கொண்டிருந்தாள்.

தங்கையின் தவிப்பையும், மிரட்சியையும் அறிந்தவனுக்கு இனி தான் பேசாமல் இருப்பது உசிதம் அல்ல என்பதை புரிந்தவன்... “மூணு பேரும் கொஞ்சம் வெளியே இருக்கீங்களா?” என்று மற்றவர்களிடம் கோரிக்கை வைக்க அதை மறுத்த சம்யுக்தா...

“நீங்க எல்லாம் போக வேண்டாம் இங்கேயே இருங்க” வீண் விதண்டாவாதம் உருவாக்க கூறியிருக்க, தரன் அவளை கடுமையாக முறைக்க ஆரம்பித்தான்... அவர்களின் பேச்சும், பார்வையும் எதுவோ கூற சுதாரித்து கொண்ட அர்ஜுன்...

“அரசி ஆபிஸ் வொர்க் அசைன் பண்ணனும் சொல்லியிருந்தேன்ல, நாம முடிச்சுட்டு வந்திரலாம் வா” என்று அவள் மறுத்து பேச இடம் அளிக்காத வகையில் கூறியிருக்க, அரசி எழுந்தவள் வாணிக்கும் கண்சமிக்ஞை காட்டி அழைக்க, அவளோ அசைய மறுத்து அங்கேயே அமர்ந்துவிட்டிருந்தாள்... சம்யுக்தா அவளை வினவியது எதற்காக வேண்டி இருப்பினும், அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் அங்கிருந்து நகர அவள் மேல் கொண்ட மாட்சிமை தடையிட்டிருந்தது.

“வாணி நீயும் கொஞ்ச நேரம் வியனி, நிலாவை கூட்டிட்டு போய் வேடிக்கை காட்டிட்டு இரு... உன் அண்ணி கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டு வரேன்” என்று அதிகாரமாக அதட்டி கூறியதில், அதற்கு மேல் அங்கே தேங்கி நிற்க இயலாமல் குழந்தைகளை கூட்டி கொண்டு நகர எத்தனிக்க, சம்யுக்தா மகளை தராமல் இறுக பற்றியிருந்தாள்.

தரன் பொறுமையிழந்து தானே எழுந்தவன் அவள் கையிலிருந்த குழந்தையை வலுக்கட்டாயமாக பெற்றுக் கொண்டு தங்கை வாணியின் கரத்தில் திணித்தவன்... “நான் பேசி முடிச்சுட்டு கூப்பிடுறேன் அதுவரை நீங்க யாரும் இடையிடாதீங்க” என்று ஆக்கினையிட...

“டேய் தரன் எதுனாலும் ஊருக்கு போய் பேசிக்கலாம் டா, இப்போதைக்கு வாக்குவாதம் வேண்டாம் ப்ளீஸ் சொல்லுறதை கேளு” என்ற அர்ஜுனின் கெஞ்சலை கண்டு சிறிதும் அசைந்து கொடுக்காமல்...

“சில விஷயங்களை ஆறப் போட்டு பேசலாம், சிலதை அப்போதே பேசி முடிச்சிரனும்” என்று திரும்பியவனின் மணிக்கட்டை அழுந்த பிடித்துக் கொண்ட அர்ஜுனை, முகத்தை திருப்பி புருவம் இடுங்க என்னவென்று வினவியவனிடம்...

“டேய் இதை நான் உன்கிட்டே சொல்லக்கூடாது தான் ஏன்னா நான் சொல்லுற அளவுக்கு நீ நடந்துக்கிற ஆள் இல்லை... இருந்தாலும் மனசு கேட்கலை தப்பா எடுத்துக்காதே... சம்முக்கும், உனக்கும் என்ன நடந்திருந்தாலும் அவளை நோகடிக்கிற மாதிரி பேசிற வேண்டாம் ப்ளீஸ்டா” என்று கெஞ்சியவனை கண்டு கசப்பாக புன்னகைத்தவன்...

“எனக்கு யாரையும் நோகடிச்சு பழக்கம் இல்லை” அவன் கைகளில் இருந்து தன் கரத்தை உருவியபடியே உரைத்தவன் மனைவியை நோக்கி சென்றிருந்தான்.

“சொல்லு இப்போ உனக்கு என்ன தெரிஞ்சுக்கணும்? எதுனாலும் என்கிட்டே நேரடியா பேசாம எதுக்காக வாணியை அரட்டிகிட்டு இருக்கிற?”

“உங்களுக்கு நான் யாருன்னு தான் தெரிஞ்சாகணும்” என்றதும், சடாரென்று அவளை தொட்டு புடவைக்குள் மறைந்திருந்த தாலிச் சரடை வெளியே எடுத்தவன் தங்கத்தாலியை மூவிரல்களுக்கு நடுவில் தாங்கி அவள் கண்களை ஊடுருவி கூறியவன்...

“இதுக்கு அர்த்தம் என்னன்னு கூகுளில் தேடிப் பாரு அப்போ புரியும்” என்று இயம்பியவன், பிடித்த வேகத்தை விட வேகமாக விடுவித்து விட்டு எங்கே அதற்கு மேல் அங்கிருந்தால் சச்சரவு நீடித்துவிடுமோ என்று கருதி அவ்விடத்தை விட்டு அகன்றவனை உறுத்தும் விழிகளால் தொடர்ந்தாள்.

வாணியின் முடிவை ஆதரித்த கலாதரன் அடுத்த தினமே தேனிக்கு புறப்பட முடிவு செய்திருக்க, அது சம்மதமாக மனைவியிடம் தானே சென்று ஆலோசனை மேற்கொள்ள எண்ணியதும் சிந்தையில் ஏதோ உறுத்தல் தோன்றி கிலேசம் கொண்டவன் அரசியை அணுகி அவளிடம் விசாரிக்க ஏவினான்.

“அரசி போய் உன் அண்ணிகிட்டே ஊருக்கு நம்மளோட வராளா இல்லை, என்ன முடிவு செய்திருக்கான்னு கேட்டு சொல்லு” என்றவனை எதிர்த்து கூற முடியாமல் கணவனிடம் சம்மதம் கேட்க அவனை நோக்கியவளுக்கு... ‘நீ போ’ என்று சம்மதம் தெரிவித்த அர்ஜுனின் பரிபாசைக்கு இசைந்து சம்யுக்தாவை அணுகினாள்.

“அண்ணி, அண்ணன் நாளைக்கு ஊருக்கு கிளம்பலாம்னு சொன்னாங்க நீங்களும் வாங்க சேர்ந்தே போயிறலாம்” என்றதும்...

“அங்கிருந்து தனியா வந்தவளுக்கு திரும்பவும் தனியாவே போயிக்க தெரியும்ன்னு உன் அண்ணன்கிட்டே சொல்லு” முகத்திலறைந்தது போல் விட்டேறியாக கூறியதை அப்படியே அரசியும், தரனிடம் கூறியிருக்க, ஆவேசத்துடன் மனைவியை நெருங்கியவன்...

“ஏய் என்ன நினைச்சுட்டு இருக்கிற உன் மனசுல? உன் இஷ்டத்துக்கு ஆடிட்டு இருக்கிற?” என்று எரிந்து விழுந்துக் கொண்டிருந்த கணவனை அமைதியாக ஏறிட்டவள்...

“நான் தான் உங்களுக்கு ஆகாத பொண்டாட்டி ஆச்சே, நான் எங்கே எப்படி போனா என்ன, வந்தா என்ன? உங்க வேலையை பார்த்துட்டு போங்க” சுள்ளென்று கூறியவளின் வார்த்தையில் நாசி விடைக்க சினந்தவனுக்கு அவளை அடித்து துவாசம் செய்யும் வெறி எழுந்தாலும் அதை செயல்படுத்த முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க தன் கரங்களை ஆவேசத்துடன் காற்றில் குத்திவிட்டு, இயலாமையில் தன் நெற்றியில் தானே அறைந்துக் கொண்டவன் வேக பெருமூச்சுகளை விடுத்து சற்று ஆசுவாசமடைந்ததும் பேசலானான்.

“இங்கே பாரு நம்ம பிரச்சனை எல்லாம் நம்ம வீட்டோட வச்சுக்கோ... அங்கிருந்து நீ எப்படி வந்தேன்னு முக்கியமில்லை... இங்கே உன்னை எக்கேடே கேட்டுப் போன்னு விட்டுட்டு போக முடியாது”

“உங்க வீட்டில் தான் நானும் இருக்கிறேன்னு மதிக்காமல், என்கிட்டே ஒரு வார்த்தையும் சொல்லாமல் எக்கேடோ கெட்டுப் போன்னு தானே விட்டுட்டு வந்தீங்க? இப்போ மட்டும் என்ன பொல்லாத அக்கறை?”

“உன் தலை! அங்க உன்னை விட்டுட்டு வந்ததும் இங்கே உன்னை விட்டுட்டு போறதும் ஒன்னாகிருமாடி? அது நம்ம வாழுற வீடு, அதுக்கும் இதுக்கும் வித்தியாசமில்லை? கொஞ்சமாச்சு தொழிலை நிர்வாகம் செய்கிற பொண்ணு மாதிரி புத்தியோட பேசு... வந்துட்டா பெருசா குடை பிடிச்சு நியாயம் கேட்டுட்டு” என்றவனின் வார்த்தையில் இருந்த முகாந்தரத்தில் மூக்கி நுனி சிவந்து விடைத்துக் கொண்டது.

“...........” இருவருக்கும் இடையில் சில வினாடிகள் நிசப்தம் நிலவ அதை கலைத்தது சம்யுக்தாவின் குரல்.

“எனக்கு ரெண்டு நாள் வேலை இருக்கு அதை முடிச்சுட்டு தான் வர முடியும்” என்றவளின் பதில் பேச்சுக்கு என்ன பேச எண்ணினானோ, அதற்குள் அர்ஜுன் அங்கே பிரசன்னமானவன்...

“தரன், வாணி கூப்பிட்டா உன்கிட்டே ஏதோ முக்கியமா பேசணுமா, நீ போ... நான் சம்முகிட்டே பேசிணும்” என்றவனின் பேச்சை தட்ட முடியாமல் மனைவியை பார்வையால் கண்டித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

அர்ஜுனும் தரனை போன்று கேட்ட கேள்விக்கு அதே பதிலை எதிரொலித்த போதிலும் அவனிடம் வெளி வந்த குரலில் நிதானம் இருந்தது...

“அப்போ நீ கோவையில் தான் இருந்தாகணும் இல்லையா?”

“ம்ம்ம்... ஆமாம் அர்ஜு” என்றவளை யோசனையுடன் பார்த்தவன்...

“சரி நீ வேலையை முடிச்சுட்டு வாம்மா நாங்க கிளம்பறோம்” என்று விட்டு வந்தவன் தரனிடம் ஆலோசனை மேற்கொண்டிருக்க...

“அப்போ நீங்கெல்லாம் கிளம்புங்க, நான் இங்கேயே இருக்கிறேன்”

“சரிடா அப்போ நீ காரை எடுத்துக்கோ, ஏன்னா சம்முவுக்கு என்ன வேலையோ, முடிஞ்சதும் அழைச்சுட்டு வா” என்றவனின் பேச்சுக்கு ‘அவளுக்கு என்ன வேலைன்னு புருஷன் எனக்கு தெரியாதா’ என்று மானசீகமாக கூறிக் கொண்டவன் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“நான் அரசி, வாணியை கூட்டிட்டு பிரைவேட் பஸ் புக் பண்ணி போறேன்... வாணி ரெண்டு நாளைக்கு எங்க வீட்டிலேயே இருக்கட்டும், இப்போவே உங்க வீட்டுக்கு போனா நீ இல்லாம அவளுக்கு அங்கே சமாளிக்கிறது கஷ்டம் ஆகிரும்”

“ம்ம்ம்.... சரிடா நானே அதை தான் சொல்ல நினைச்சேன்” என்று விட்டு அவர்களை பத்திரமாக வழியனுப்பி வைத்துவிட்டு மனைவியை கண்காணித்தப்படி தரன் அங்கேயே தேங்கி நின்றுவிட்டான்.

**********************

“பார்த்துப் பார்த்து ஒவ்வொரு விஷயத்தை செய்தும் கடைசியில் இப்படி ஆகிப் போச்சே!” என்று பிரலாபித்து கொண்டிருந்தார் பாஸ்கரன். அவரின் புலம்பலை கேட்டப்படி உக்கிரத்துடன் அமர்ந்திருந்தனர் யமுனா, யசோதா இருவரும்.

“அப்பா நடந்து முடிஞ்சது முடிஞ்சது தான், இனி நடக்கப் போறதை பற்றி மட்டும் பேசுங்க” என்று கூறிய ரஞ்சனை தழலென முறைத்தனர்.

“எல்லாம் உன்னால் வந்தது ரஞ்சன், நீ மட்டும் தராதரம் பார்த்து பழகியிருந்தா, இந்நேரம் இப்படிப்பட்ட அவமானத்திற்கு பலி ஆகியிருப்போமா?” என்று மகனின் தவறை கண்டித்து கடித்து துப்பிய பாஸ்கரனை இடையிட்டார் யமுனா.

“சும்மா நம்ம மகன் மேலேயே தப்பு சொல்லாதீங்க... அவன் தப்பு பண்ணிட்டான் தான் இல்லைன்னு சொல்லலை, ஆனா இந்த வீட்டில் இருக்கிற பெண்ணே இவனை காட்டிக் கொடுத்து அவமானப்படுத்தலாமா?” என்று சம்யுக்தாவை கரித்துக் கொட்டினார் யமுனா.

யசோதாவுக்கு யமுனாவின் பேச்சில் எதிர்மறை கருத்து எழுந்தாலும் அவருக்கும் ஆண்மகன் ஆண்மகன் தான் என்ற கருத்தில் உடன்பட்டு தன் மகள் என்றும் பாராமல் அவருக்கு ஒத்து ஊதினார்...

“நீங்க சொல்றது தான் சரி க்கா... அவனுங்க தான் மூணாவது ஆளுங்க நம்ம வீட்டு பையனை எதிர்த்து நின்னாங்க, ஆனால் இந்த வீட்டு பெண்ணுக்கு புத்தி இருந்திருக்க வேண்டாம்” என்று தான் பெற்ற மகளையே சாடினார். அவரின் பேச்சில் ரஞ்சனே ஆட்சேபத்தில் முகம் சுளித்திருந்தான்... வாணி தான் அடுத்த வீட்டு பெண், சம்யுக்தா அந்த இல்லத்து இளவரசி, அவனுடன் உடன் பிறக்காவிடினும் தமையன் பற்றும் பாசமும் வைத்திருந்த பெண்ணவள் என்ற எண்ணத்தில்...

“பாருங்க சித்தி சம்மு தான் ஏதோ தெரியாம பண்ணிட்டானா... நீங்களும் அவளை விட்டுக் கொடுத்து பேச வேண்டாம்” என்று எதிர்ப்பு தெரிவிக்க, அவன் பேச்சில் சீறிக் கொண்டு வந்த சினத்தை அவன் மேல் பாரபட்சமின்றி காட்டினார்.

“வாய மூடுடா... அவளால் தான் இந்த குடும்பத்தோட மானமே கப்பல் ஏறியிருக்கு, நீ அவளுக்கு வக்காளத்து வாங்கிட்டு வரியா? எல்லார் வீட்டிலேயும் பொம்பளப் பிள்ளைகளை அடக்கி ஒடுக்கி வளர்க்கிறதை போல நாமளும் அப்படி வளர்த்திருக்கணும்... நம்ம வீட்டு பொண்ணு தைரியமா, துணிச்சலா வரணும்னு வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வச்சு அவளுக்குன்னு தனியா தொழில் பண்ண ஏற்பாடு செய்து கொடுத்ததுக்கு நம்மளையே ஏறக்கட்டி தண்ணி காட்டிட்டா” என்று கூறியவரின் பார்வை யசோதாவை கூறு போட்டது... தன் தமக்கையின் பார்வை மகளை வளர்த்ததற்கு என்று புரிந்தவருக்கு அவமானத்தில் முகம் கருத்து விழ, சம்யுக்தா மேல் வஞ்சம் ஏறிக் கொண்டே போனது... யசோதாவின் ஒற்றை குறிக்கோள் அவருக்கு சமூகத்தில் வேண்டிய வசதியும், யாருக்கும் தலை வணங்காத கௌரவமும் தான் எனும் போது அதுவே இன்று பாதிக்கப்பட்டதில் மகளையே பகையாளி ஆக்கியிருந்தார்.

“இதுக்கு தான் அவகிட்டே படிச்சுப் படிச்சு சொன்னேன் ஒருத்தர் சொல்லுறது போல் நடந்துக்காதேன்னு, கடைசியில் கூடப் பிறந்த உங்க முன்னாடியே என் வயிற்றில் பிறந்த மகள் என்னை கூனிக்குறுகி நிற்க வச்சுட்டா” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தார்.

“இங்கே பாரு ரஞ்சன் நடந்தது என்னமோ நடந்து போச்சு... அந்த ஜட்ஜ் நம்மளை மிரட்டி உன்னை அந்த கூலிக்காரன் வீட்டு பொண்ணு கழுத்தில் தாலி கட்ட வச்சுட்டான்... அதுக்காக அவளை எல்லாம் இந்த வீட்டு மருமகளா ஏத்துக்க முடியாது... அதனால் சீக்கிரமா விவாகரதத்துக்கு முயற்சி பண்ணு... அவகிட்டே இருந்து சீக்கிரமா விவாகரத்து வாங்கினா தான் இந்த குடும்பத்துக்கு பிடிச்ச சனியம் ஒழியும்”

“நீங்க நினைக்கிற மாதிரி இதெல்லாம் அவ்ளோ சுலபமான விஷயம் இல்லைம்மா... விவாகரத்து வாகணும்னா பலமான காரணம் இருக்கணும்... நம்ம தகுதிக்கு குறைஞ்சவங்கன்னு விவாகரத்து கேட்டா நான் தான் கம்பி எண்ணனும்”

“இதுக்கெல்லாம் கூடவா நீ இவ்ளோ சீரியஸா யோசிப்ப... அவளுக்கு வெளியில் தப்பான தொடர்பிருக்குன்னு பழியை போடு ஒரே நாளில் டிவோர்ஸ் கிடைச்சிரும்” என்று அன்னையாக நல்வார்த்தை மொழியாமல், சிறிதும் முகாந்தரம் நாராசமாக கூறியதை கேட்டு ரஞ்சனே திகைத்துப் பார்த்திருந்த வேளை, பலத்த கரகோஷமும் ஒழித்ததில் சப்தம் கேட்ட திசை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியது.

தன் பெரியன்னையின் பேச்சை கேட்டு கோபத்தில் சிவந்த வதனத்துடன் உக்கிரமாக நின்றிருந்தாள் சம்யுக்தா.

“சபாஷ்...! பெரியம்மா சபாஷ்! ஒரு பொண்ணுன்னு கூட பார்க்காம, அவ வாழ வேண்டிய வயசில் வாழவே விருப்பமில்லாம, எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம்ன்னு விரக்தியா இருக்கிற பொண்ணு மேல அபாண்டமா பழி சுமத்த சொல்லி பையனுக்கு அறிவுரை சொல்லுற உங்களை நினைக்கும் போது... நாம எப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருகிறோம்ன்னு ரொம்ப....” என்று நிறுத்தியவளின் முகம் விகாரமாக மாறியிருக்க,

“ரொம்ப கேவலமா, அவமானமா, அருவெறுப்பா இருக்கு” என்று தூஷணையாக நிந்தித்தவளின் மொழியில் யசோதா அவளை அடிக்க கரத்தை உயர்த்தி கொண்டு வர, அவள் தடுக்க முனையும் முன் இரு வலிய கரங்கள் சடாரென்று அவளை மறித்திருந்தன.


சுவடுகள் தொடரும்....


**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்-21 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.


தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்
காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-22
கலாதரனின் அகஸ்மாத்தானா வரவை கண்டு திகைத்து பார்த்திருந்த யசோதாவிடம்... “என் பொண்டாட்டி மேல ஒரு அடி பட்டுச்சுன்னாலும் இங்கிருக்கிறவங்களை பொலி போடாம போகமாட்டேன் ஜாக்கிரதை” முகத்தை கடுமையாக்கிக் கொண்டு கூறியவன் சுட்டுவிரல் நீட்டி எச்சரித்திருந்தான்.

“என்னமோ உன் பொண்டாட்டி வானத்தில் இருந்து குதிச்சி வந்தவ மாதிரி பேசுற? உனக்கு இப்போ தான் பொண்டாட்டி, அதுக்கு முன்னாடி என் மகள்... அவளை அடிக்கவோ திட்டவோ எனக்கு எல்லா உரிமையும் இருக்கு” கர்வத்துடன் கூறியவரை அமர்த்தலாக நோக்கியவன்...

“உங்க மகள் கடந்த காலம், இது நிகழ்காலம்! இப்போ அவ என் பொண்டாட்டி எனக்கு மட்டும் உரிமையானவள்” என்று அழுத்தி கூறியவனின் வார்த்தையில் யமுனா உலைகலனாக கொதித்தவர் தரனிடம் பாய்ந்தார்...

“டேய் நீ யாருடா இந்த வீட்டுக்குள்ள வர? கண்டவனெல்லாம் கால் வைக்கிற அளவுக்கு இந்த வீடு சாவடி சத்திரமா மாறிப் போச்சு” முகஸ்துதி என்பது இம்மியளவும் இல்லாமல் கூறியவரின் பேச்சை கேட்டு சம்யுக்தா முகம் சுளித்தவள்...

“வார்த்தையை பார்த்து பேசுங்க பெரியம்மா... இவர் கண்டவர் இல்லை எனக்கு தாலி கட்டின புருஷன்! உங்களுக்கு என்னை பேசத் தான் உரிமை இருக்கே தவிர, இவரை பேச உங்களுக்கு உரிமையும் இல்லை, அதுக்கான தகுதியும் இல்லை” கடிந்த பற்களுக்கிடையே வார்த்தைகளை துப்பினாள்.

“என்ன திமிர் இருந்தா உன் அண்ணன் நிச்சயத்தை நிறுத்திட்டு இங்கே வந்து திமிரா பேசிட்டு இருப்ப, முதலில் உன்னை இங்கே விட்டதே தப்பு”

“பெரியம்மா வேண்டாம் வார்த்தையை வீசாதீங்க... கொஞ்சம் நிதானமா பேசுங்க, நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் நீங்க போன்னு சொன்னதும், நான் உடனே போயிற முடியாது... ஏன்னா நான் இந்த வீட்டு பொண்ணு, எனக்கு இன்னமும் சில கடமைகள் இருக்கு, அதை முடிக்காம நான் போகமாட்டேன்”

“நீயா போறியா... இல்லை, கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளவா?” இதை கூறியது யசோதாவாக இருக்க, ரஞ்சன் பொறுக்கமாட்டாமல்...

“சித்திஈஈஈ...” என்று உச்சஸ்தாயில் உரக்க கத்தினான்.

அங்கே சில கணங்கள் குண்டூசி விழுந்தால் கூட நிசப்தம் நிலவ, அதை கலைத்தது ரஞ்சனின் குரல்... “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல? சம்மு நம்ம வீட்டு பொண்ணு... அவளுக்கு இந்த வீட்டில் இடம் இல்லைன்னு சொல்ல நீங்க யாரு?”

“நாங்க யாரா? ஏன் அவ செஞ்சது உனக்கு மறந்து போச்சா? அவளுக்கு தான் பைத்தியம் பிடிச்சதுன்னு பார்த்தா, உனக்கும் மண்டையில நட்டு கழண்டுருச்சா?”

“அவ தானேடா உன் நிச்சயத்தை நிறுத்தினா, அதையே மறந்து அவளுக்கு வக்காளத்து வாங்கிட்டு இருக்கிற?” பாஸ்கரனும் தன் பங்கிற்கு செயலாற்ற, சம்யுக்தா அனைவரையும் புழுவை போல் பார்த்திருந்தாள்.

“என் நிச்சயம் நின்னு போச்சு அவ்ளோ தான்... இனி அதை யாராலும் மாற்ற முடியாது, அதுக்காக நம்ம வீட்டு பெண்னையே பழி வாங்க சொல்றீங்களா?” என்றவனின் பேச்சை கேட்ட தரனுக்கு... ‘இவனுக்கு அவன் தங்கை தான் தங்கரதம் போல, என் தங்கை தான் தகர கம்பி’ என்று மனதின் ஓட்டத்தில் அன்று மருத்துவமனையில் தங்கைக்காக அவனை தேடி அலைந்தது கண் முன் நிழலாடியது.

சம்யுக்தாவுக்கு பரிந்துரைத்து கொண்டு வரும் மகனை எண்ணி யமுனாவுக்கு மனம் தாளவில்லை, எப்படியேனும் அவனுக்கு வெறுப்பை வளர்த்து அவளிடம் பகைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட எண்ணியவர்...

“அன்னைக்கு அவ வீட்டுக்கு போன போது உன்னை கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளாத குறையா அனுப்பியது உன் பாசமலர் தான் அதை மறந்துட்டியா?” என்று அவனுக்கு பகைமை உருவாக்க உருவேற்றிக் கொண்டிருந்தார். அதை உணர்ந்துக் கொண்ட சம்யுக்தா தற்சமயம் இருக்கும் சிறு நூலிழை பயன்படுத்தி தன் பக்கமே சாய வைத்திட வேண்டும் என்று எண்ணியவள்...

“அண்ணா அவங்க சொன்ன மாதிரி நான் தான் அன்னைக்கு வீட்டை விட்டு வெளியே அனுப்பினேன்... ஏன்னா நான் உன் தங்கச்சி... இதுவே அங்கிருந்த மத்தவங்க உன்னை அனுப்பினாங்கன்னா அது உனக்கு எவ்ளோ அவமானம்னு தெரிஞ்சு தான் அப்படி செய்தேன், அதில் தப்பிருந்தா என்னை மன்னிச்சிரு” அவன் பலவீனத்தை நன்கு அறிந்து வைத்து அடித்திருக்க அந்த முயற்சியில் வெற்றியடைந்ததன் எதிரொலியாக...

“விடு சம்மு எனக்கு உன்னை பற்றி தெரியாதா? நானே உன்னை அந்த வீட்டிலிருந்து வெளியேற்ற அதிகமாவே பேசிட்டேன், நான் வந்தப்புறம் உனக்கு அங்க என்ன மாதிரி சூழ்நிலை ஆனதோ அதை விடு” என்றவனை யமுனா, யசோதா, பாஸ்கரன் மூவரும் திகைத்துப் பார்த்திருந்தனர்.

“அன்னைக்கு நீ போனப்புறம் நான் ரொம்ப வருத்தப்பட்டேன் ரஞ்சன் அண்ணா” என்று வராத கண்ணீரை துடைத்து அங்கே பாசமலர் சாவித்திரி நடிப்பையே சம்யுக்தா மிஞ்சி கொண்டிருக்க, அதை எல்லாம் காணச் சகியாத தரனுக்கு தான் அடிவயிற்றில் பற்றிக் கொண்டு வரவே மனைவியின் செவியோரம் தன் இதழ்களை நெருக்கியவன்...

“இங்கே பாருடி! உங்க பாசமலர் படலத்தை எல்லாம் பார்த்துட்டு நிற்கிற எனக்கு சகிக்கலை, பற்றிக்கிட்டு வருது... உனக்கு பத்து நிமிஷம் டைம் தரேன், உன் நொண்ணகிட்டே என்ன பேசணுமோ பேசி முடிச்சுட்டு காருக்கு வர, இல்லை... இங்கேயே இருந்து நான் அதை பார்க்கணும், இதை பார்க்கணும், கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு எல்லாம் பேசின மகளே பொண்டாட்டின்னு பார்க்கமாட்டேன் பொலி போட்டிருவேன்” என்று கையில் கோலில்லாமல் அரட்டிவிட்டு சென்றவனை கண்டு, அலட்டிக் கொள்ளாமல் அலட்சியமாக நின்றுருந்தவளை கண்ட யசோதா...

“அதான் கணவனே கண் கண்ட தெய்வம் போறானே, அவன் பின்னாடி போகாம இன்னும் எதுக்காக இங்கே நின்னுட்டு இருக்கிற?”

“நானும் போகத் தான் போறேன் இங்கிருந்து விருந்தாடப் போறதில்லை, அதுக்கு முன்னே ரஞ்சன் அண்ணாகிட்டே பேசிட்டு போயிடுறேன்” என்றவள் ரஞ்சன் புறம் திரும்பி...

“உனக்கு என் மேல உண்மையான பாசம் இருக்கா என்ன தெரியலை ரஞ்சன் அண்ணா? ஏன்னா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் வாணியோட சந்திப்புக்கு அப்புறம் நீ நிறைய மாறிட்ட... ஆனால் எனக்கு உன் மேல் உண்மையான பாசமும் அக்கறையும் இருக்கப் போய்தான் நான் எல்லாத்தையும் செய்றேன்” என்றவளின் பேச்சை கேட்டு வந்த யமுனா...

“என்ன பண்றதெல்லாம் பண்ணிட்டு அதுக்கு சப்பைகட்டு கட்டுற கதை எல்லாம் கட்டிட்டு இருக்கிறயா?” என்று குதித்தார்.

“அம்மா அவ என் கூட தானே பேசிட்டு இருக்கிறா? நீங்க ஏன் இடையில வரீங்க?” என்று அன்னையை அதட்டி ஓரம் கட்டினான்.

“அண்ணா ப்ளீஸ் உங்கிட்ட கொஞ்ச நேரம் தனியா பேசணும்” என்றவளை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றிருந்தான்.

“சொல்லு சம்மு” என்றதும் அவன் முகத்தின் உணர்ச்சி பிரவாகங்களை ஆராய்ந்தப்படி பேசலைனாள்.

“சின்ன வயசிலிருந்தது நான் எது ஆசைப்பட்டாலும், நீ எனக்கு கொடுத்திருவ ரஞ்சன் அண்ணா... அதே சமயம் உனக்கு ரொம்ப பிடிச்ச விஷயத்தை நான் ஆதரிச்சிருக்கேன்... நீ என்கிட்ட சொல்லாம எதுவும் செய்ததில்லை... இதெல்லாம் உனக்கு நியாபகம் இருக்கா என்னன்னு எனக்கு தெரியலை, ஆனா எனக்கு நல்லா நியாபகம் இருக்கு”

“இப்படி எல்லாத்தையும் என்கிட்ட பகிர்ந்து பாசத்தோட இருந்த உனக்கு எப்படி ஒரு பொண்ணை ஏமாற்ற தோணிச்சுன்னு தெரியலை” என்றவளின் வார்த்தையில் இருந்த உண்மை சுட்டதில் மெளனமானான்.

“எனக்கு தெரிஞ்சு உனக்கு அப்படி ஒரு எண்ணம் வர காரணம், இப்போ வீட்டில் இருக்கிறவங்க விஷத்தை கக்கிட்டு இருந்தாங்களே, அந்த மாதிரி ஸ்டேட்டஸ் என்கிற விஷத்தை தூவி தூவி விதைச்சதில நீ உன் குணத்தில் பிசகிட்ட, இதில் உன்னை விட அவங்க மேல தான் ஜாஸ்தி தப்பு சொல்வேன்”

“இல்லை சம்மு, நீ தப்பா யோசிக்கிற... அவங்க யாரு நம்ம பேரண்ட்ஸ் நம்ம நல்லதுக்கு தானே யோசிப்பாங்க”

“சரி தான் அண்ணா! ஆனா நீ இப்படி யோசியேன், இதே நீ பண்ணின காரியத்தை கவின் எனக்கு பண்ணியிருந்தா, இந்நேரம் உன் எதிரொலி என்னவா இருந்திருக்கும்”

“அவனை கண்டதுண்டமா வெட்டி போட்டிருப்பேன்... யார் தங்கச்சியை ஏமாற்றிவிட்டு போறது?” என்று உண்மையான ஆவேசத்துடன் துள்ளி குதித்தவனிடம்...

“அப்போ கவின் ஏன் உன்னை உயிரோட விடணும்?” என்றதும் தானே வாய் விட்டு வலிய சென்று எலிப் பொறியில் சிக்கியவனை போன்று அவன் நிலை ஆகிப் போக அவளை அதிர்ந்து பார்த்திருந்தவனின் நிலையை பொருட்படுத்தாமல்...

“உனக்கு நான் எப்படியோ, அதே மாதிரி அவருக்கும் தானே வாணியின் உறவும்... நாம கூட அக்கேசனல் பாசப் பறவைகள், நாம ஒட்டி உறவாடி தான் பாசத்தை நிரூபிக்கணும்னு இருக்கிற ரகம் இல்லை... ஆனால் அவங்களுக்கு அவங்க அண்ணன் தான் எல்லாமே, அப்படி இருக்ககுள்ள அவருக்கு எந்தளவுக்கு கோபம் வந்திருக்கணும்?”

“இப்போ நீ எனக்கு சப்போர்ட் பண்ணுறியா? இல்லை; உன் புருஷனுக்கு பேசுறியா?” அதுவரை தங்கையின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ரஞ்சன் தன்னை திடப்படுத்திக் கொண்டவனாக சிந்தனையில் முகம் சுருங்க கேட்டிருந்தான்.

“நான் யாருக்கும் சப்போர்ட்டா பேச இங்கே நிற்கலை, சில உண்மைகளை உனக்கு புரிய வச்சு, எனக்கு தேவையான உண்மையையும் வாங்கிட்டு போக வந்திருக்கேன்”

“என்ன உண்மை தெரியணும் உனக்கு, அதை முதலில் சொல்லு?”

“நீ வாணியை ஒரு நிமிஷம் கூட, ஒரு நொடி கூட, உண்மையா காதலிக்கலைன்னு என் தலையில் அடிச்சு சத்தியம் பண்ணி சொல்லு” என்று அவள் தலையில் கரத்தை வைத்திருக்க, உண்மை கூற வேண்டிய தடுமாற்றத்தில் உடல் நடுங்கிப் போனான்.

“ஏன் ரஞ்சன் அண்ணா உடம்பு உதறுது?”

“அது... அது... வந்து...” என்று தட்டு தடுமாறியவனை இடையிட்டவள்...

“உன்னை பற்றி எனக்கு தெரியும் ரஞ்சன் அண்ணா... நானே சொல்றேன் கேளு”

“நீ வாணியை அவ பின்புலம் தெரியாத வரைக்கும் உண்மையா தான் காதலிச்ச, அப்புறம் அவ ஸ்டேட்டஸ் தெரிஞ்சதும் அவ்ளோ சுலபமா அவளை விட்டுக் கொடுக்க முடியலை... அவளை அனுபவிக்க வச்சுதும் இதே உனக்குள்ள இருந்த உண்மையான காதல் தான்... ஆனால் தகுதிங்கிற எடை தராசு அதை ஒத்துக்கவிடலை, அதனால் வாணியை நீ டைம்பாஸ்க்குன்னு உனக்குள்ள உருவேற்றிகிட்டு யூஸ் பண்ணிருக்க... அவளுடைய பின்னணி உன்னை ரொம்ப சுலபமா தூக்கி எறிய வச்சு காதல்ங்கிற பேரை பொசுக்கி சாம்பளாக்கிருச்சு” அவன் மனவோட்டத்திலேயே சென்று மனதை படிப்பித்து கூறியிருந்த போது தான், தன்னை விட வயதில் சிறந்தவள் எத்தனை ஆழமாக தன்னை கணித்திருக்கிறாள் என்று எண்ணி வெட்கம் கொண்டான்.

நான் அவளுக்கு புத்தி சொல்ல வேண்டியதல்லாமல் அவள் எனக்கு சொல்கிறாளே என்ற அவமானத்தில் அவன் முகம் கருத்து விழுந்தது... “இப்போ வாணி இருக்கிற இடத்தில் என்னை வைத்து யோசித்து பாரு நீ செய்தால் தப்போட வீரியம் புரியும்”

“...........”

“இன்னொன்னு என்னை நீ அந்த வீட்டில் இருந்து வெளியேற வைக்க இருந்த காரணமும் இதே தான் சரியா?” என்றதும் அதிர்ச்சியில் கண்கள் அகல பார்த்திருந்தவன்...

“என்ன காரணம்?” என்று வினவியவனின் சித்தம் அவள் அதை அறிந்திருக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் போதே...

“நான் கவின் கூட வாழுறதை நிரந்தரமாக்கிட்டேனா வாணியை உன்னுடன் சேர்த்து வைக்க தான் முயற்சி பண்ணுவேன் என்கிற சஞ்சலம் சரியா” என்றுரைத்திருக்க, எதை கூறிவிடக் கூடாது என்று மன்றாட்டிக் கொண்டிருந்தானோ அதை கூறியதில் பனிக்கட்டி சூழ்ந்தது போல் உறைந்து நின்றுவிட்டான்.

“நான் பிடிவாதக்காரி தான், ஆனால் நான் விரும்பியதை எக்காரணம் கொண்டும், எதுக்காகவும் அத்தனை சீக்கிரத்தில் விட்டுக் கொடுக்கமாட்டேன்னு நீ புரிஞ்சுக்கோ ரஞ்சன் அண்ணா”

“எனக்கு தெரியும் என்ன தான் நீ என் கூட காரியமா அணுகினாலும், எனக்காகன்னு என் நலனையும் நீ பார்ப்பேன்னு தெரியும்... அது இனி மேல் நீடிக்குமா தெரியலை? அதே சமயம் நம்ம உறவும் நீடிக்குமா தெரியலை” என்ற தங்கையை...

“ஏன்...! ஏன்... அப்படி சொல்லுற? நம்ம உறவுக்கு என்ன...? அம்மா அப்பாவுக்கு அப்புறம் எனக்கு இருக்கிற ஒரே உறவு நீ தானே” பதட்டத்துடன் அவசர அவசரமாக கூறியதில் சம்யுக்தாவுக்கு கண்களில் வெளிச்சம் வந்தது.

“எப்படி நீடிக்கும்? நீ தங்கச்சிக்கு மட்டும் நல்ல அண்ணனா இருந்தா போதுமா, உன் பொண்டாட்டிக்கு நல்ல புருஷனா, பெண்ணுக்கு நல்ல அப்பாவா இருக்க வேண்டாமா? என் அண்ணன் ஒரு பெண்ணை காதலிச்சு அவன் தேவைக்கு பயன்படுத்திக்கிட்டு தூக்கி எறிஞ்சுட்டான், இப்போ அவனால் கைவிடப்பட்ட அந்த பெண் குழந்தையோட அவமானச் சின்னமா சமுதாயத்தில் நிற்கிறான்னு சொல்லி ஒரு பொண்ணா என்னையே அசிங்கப்படுதிக்க சொல்லுறியா?” என்று மூச்சிரைக்க ஆவேசமாக பேச ரஞ்சனின் முகம் பேயரைந்தார் போல் ஆகிப் போயிருந்தது.

“எப்போ நீ இன்னொரு பொண்ணுக்கு துரோகம் பண்ண துணிஞ்சியோ, அப்போவே நீ எனக்கு அண்ணன்ங்கிற உறவில் இருந்து தூக்கி எறிஞ்சுட்டேன்... இப்போ நான் பேச வந்தது வாணிங்கிற பொண்ணுக்காக மட்டும் தான்... இனி எப்போ திருந்தி உன் தப்பை திருத்திக்க பார்க்கிறாயோ, அப்போ தான் நம்ம உறவு புதுப்பிக்கப்படுறதா, வேண்டாமான்னு நான் யோசிக்கணும்” என்று ஒரு வித தீவிரத்துடன் விளம்பிவிட்டு விருட்டென்று நகர்ந்திருந்தவளை திக்பிரமை பிடித்தது போல் பார்த்திருந்தான்!

அவள் அவனுடன் பேச்சை ஆரம்பித்த கணமே அவனுடன் கோபப்பட்டு சண்டையிட்டிருந்தால் ரஞ்சன் அவளின் பேச்சை பட்டு கத்தரித்து விட்டு சென்றிருப்பான்... ஆனால் தன் தமையனை நன்கு அறிந்து வைத்திருந்த சம்யுக்தா தன்மையாக ஆரம்பித்து, சாதுரியமாக பேசி, அவனை தன் வழியில் முதலில் நிறுத்திக் கொண்டு, தன் புத்தி கூர்மையால் அவனின் தவறை சுட்டிவிட்டு அவள் முடிவை தெரிவித்து விட்டு சென்றிருந்தாள்.

வாணியுடன் வாழ்ந்தால் தான் உன் உறவு நிலைக்க வேண்டுமென்றால் அப்படி ஒரு உறவு தேவையில்லை போ என்றுரைத்து விடலாம் தான், அதற்கு நிமிடமும் கொள்ளாது தான்... அப்படி உறவை அறுத்துக் கொள்ள எண்ணியிருந்தால் சம்யுக்தா இல்லம் சென்றிருக்கவும் மாட்டான், இந்த நிமிட பேச்சை தொடர்ந்தாருக்கவும் மாட்டானே... சம்யுக்தா பழிப் படலம் எடுக்கிறேன் என்று கிளம்பிவிட்டால் அவளை சமாளிக்கவே தான் வாழ்நாள் முற்றிலும் கழிந்துவிடுமே என்றெண்ணியவன் முகத்தில் டன் கணக்காய் அச்சம் அப்பிக் கிடந்தது... ரஞ்சனுக்கு தகுதி தராதாரம் முக்கியம் தானே தவிர, மற்றபடி போராட்டம் என்பது ஒவ்வாத விஷயம். சம்யுக்தா உறவு ஒரு புறம், தான் வேண்டாமென்று ஒதுக்கிய வாணி ஒரு புறம், என மண்டையில் பரமபதம் விளையாடி கொண்டிருந்தனர்.

*******************

“என்ன உன் பாசமலர் அண்ணன்கிட்டே செல்லம் கொஞ்சி முடிச்சாச்சா இல்லை, இன்னும் மிச்சம் மீதி எதுவும் இருக்க?” என்று காரில் தன் ஊருக்கு சென்றுக் கொண்டிருந்த சமயத்தில் வேடிக்கையாக என்றாலும், அவன் குரலில் இருந்த பொறாமையை கவனமாக கண்டு கொண்டவளுக்கு குறும்புத்தனம் தலைதூக்க...

“ம்ஹும் இல்லையே! எங்களுடைய பாச பரிவர்த்தனையை அவ்வளவு சுலபமா முடிவுக்கு கொண்டு வந்திர முடியுமா என்ன? அதான் டைம் கிடைக்கும் போது என் புருஷன் வீட்டுக்கு வா நாம கொஞ்சிகிட்டே இருக்கலாம்ன்னு சொல்லியிருக்கேன்” அவனை உள்ளார்ந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு வெறுப்பேற்றியதில் கடுமையாக முறைத்தவன்...

“கொழுப்பு டி உனக்கு...! நான் ஆக்கிப் போட்ட சோத்துக்கு அகராதி பேச வேண்டாம், அந்த திமிரு!”

“ஹாங்... ஆமாம் அப்படித் தான் வச்சுக்கோங்க, இப்போ அதுக்கென்ன?”

“எனக்கொன்னும் இல்லை நீ நடிச்ச நடிப்பை என்னாலையே கண்டுபிடிக்க முடியுது, ஆனால் உன் அம்மாஞ்சி அண்ணனுக்கு அது புரியலையே” என்றவனை அடிகண் பார்வையால் கூர்மையாக அளவெடுத்துக் கொண்டிருக்கும் போதே...

“சும்மா சொல்லக் கூடாது நடிகை திலகமா இருக்கியே, உன் அண்ணன்கிட்டே நீ பேசுற பேச்சை கேட்க வைக்க நீ நடிச்ச வேகத்தை கண்டு வியந்து போயிட்டேன்” என்றதும் பார்வையை உயர்த்தி நேரிடைய அவனை சந்தித்தவள்...

“எல்லாம் என் புருஷன் உபயம் தான்... ஆரம்பத்தில் உங்க நடிப்பை நம்பி நான் ஏமாந்தனே அதோட பிரதிபலிப்பு தான்” என்றிருக்க, சுளீர் என தாக்கி அடி மனதை தைத்ததில் சடாரென்று வாகனத்தை நிறுத்தியவன், அவளையே உறுத்து விழித்தான்... அவளிடம் அந்த காரணத்தை கூறி விட கந்தழி துடித்தாலும், பூர்வோத்திரத்தை கிளறாமல் அது முடியாது, அதை தோண்டி துருவி விளக்க வேண்டிய தருணமும் இப்போதல்ல என்று அந்தராத்மா அதட்டி அடக்கியதில் மௌனத்தின் திரையில் பதுங்கிக் கொண்டு வாகனத்தை உயிர்ப்பித்திருந்தான்.

“ஆமாம் அது என்ன என்னாலையே புரிஞ்சுக்க முடியுது? அப்படின்னா நீங்க முட்டாள்ன்னு ஒத்துக்கறீங்க போல” கண்கள் சிரிக்க வினவியவளின் பேச்சுக்கு...

“ஆமாம் டி அதனால் தானே உன்னை கல்யாணம் பண்ணியிருக்கேன்” சிறிதும் சிரியாமல் எறிவளைதடு போல் அவள் போட்ட தட்டை அவளுக்கே திருப்பி அடித்த வல்லமை உணர்ந்தாலும், அவளை முட்டாளாக்கி விட்ட கோபத்தில் பற்களை நெரித்தவள்...

“என்ன ஏத்தமா?” என்று சிடுசிடுத்தவளை மெளனமாக புறக்கணித்து விட்டு தன் போக்கில் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தான்.

‘மகனே உனக்கும் எனக்கும் நடக்குற போர் மட்டும் முடியட்டும், இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு கொடுக்கலை என் பேர் சம்யுக்தா இல்லைடா’ என்று கணவனை எண்ணி மனதிற்குள் கருவிக் கொண்டிருந்தாள்.

வாணியின் விஷயத்தை பக்குவமாக தன் குடும்பத்தினருக்கும் எடுத்துரைத்து புரிய வைத்தவன், அவளின் தனிப்பட்ட முடிவையும் ஆதரித்தான்... தரனின் அந்த ஆதரவு வாணிக்கு மிகுந்த நிம்மதியளித்திருந்தது.

**********************

அரசி, அர்ஜுனின் வாழ்க்கை தாம்பத்திய உறவுகளுக்கான எந்த வித அறிகுறியுமின்றி கடந்து கொண்டிருந்ததை எண்ணி அரசிக்கு கரையானாய் வேதனை அரித்துக் கொண்டிருந்தது. நாளுக்கு நாள் அவள் வதனம் வாடி வதங்கி கொண்டிருக்க, திருமணமான பெண்ணுக்கு உண்டான சோபை இல்லாமல் இருந்ததை கண்ட மல்லிகாவுக்கு எதுவோ இடித்தது... ‘இதை இப்படியே விடக்கூடாது இன்னைக்கு பேச்சு கொடுத்து என்னன்னு நூல் போட்டு பார்த்திர வேண்டியது தான்’ என்று தனக்குள் உருப்பேற்றுக் கொண்டவர், அன்று இரவே அதை செயலாக்கம் செய்திருந்தார்.

அர்ஜுன், தர்சன் இருவரும் நிறுவனத்தில் இருந்து வந்ததும் அன்றைய இரவு உணவிற்கு அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர்... அரசியின் செயல்பாடுகளை கண்ணோட்டம் செய்தபடியே உணவை உண்ட மல்லிகா...

“ஏன்மா அரசி வர வர உன் முகம் ரொம்ப வாடிப் போயிட்டே இருக்கே... என்னாச்சு இங்கே எதாவது அசௌகர்யமா இருக்கா?” என்றதும் உணவு உண்பதை சட்டென்று நிறுத்தியிருந்தாள்.

தன் அன்னை கூறியதை கேட்ட தர்சனுக்கு வாய் துறுதுறுக்க அரசி பேசும் முன் இடையிட்டவன்... “வர வர வாடியிருந்துச்சுன்னா, போகப் போக தண்ணி தெளிச்சு பாருங்கம்மா” என்று வேடிக்கையாக சிரியாமல் கூறியவனை கண்டு மற்றவர்கள் பக்கென்று சிரித்துவிட்டிருக்க, மல்லிகா அவனை செல்லக் கண்டிப்புடன் முறைத்தார்.

“உன்னை கேள்வி கேட்டேனா டா? நான் கேட்டது அரசியை”

“ம்ச்... யாரை கேள்வி கேட்டா என்னம்மா நம்ம வேலையை நாம சரியா பார்க்கணும் இல்லையா?”

“சும்மா இருடா... வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுங்க நல்லா இருக்காங்களா இல்லையான்னு கவனிக்க வேண்டியது நம்ம கடமை, சொல்லு அரசிமா, உனக்கு இங்கே ஏதாவது குறை இருக்கா?” என்று உண்மையான அக்கறையுடன் விசாரித்ததில் அவள் மனம் நெகிழ்ந்தாள். இருந்த போதும் உண்மை காரணமான கணவனின் பாராமுகம் அவளை வாட்டி வதைத்து கொண்டிருப்பதை கூற அந்தரங்கம் இடம் தராது போக...

“இங்கே எனக்கென்ன குறை இருக்கு அத்தை? என் மாமா வீட்டில் இருந்ததை விட ரொம்ப சந்தோசமா தான் இருக்கேன்” தனக்கும் கணவனுக்கும் இடையில் நடக்கும் பூசலை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு கூறியிருந்தாள். அவள் கூற்றை முழுமையாக நம்பாதவர் தர்சனும், கணவரும் அருகில் இருப்பதை கவனத்தில் கொண்டு அப்போதைக்கு பேச்சை கத்தரித்திருந்தார்.

“ஏன் அர்ஜுன் அண்ணா எனக்கொரு டவுட்டு”

“என்னடா டவுட்டு?”

“கல்யாணத்துக்கு அப்புறம் உன் முகம் வெளியில் போனா பிரைட்டா இருக்கு, உள்ளே இருந்தா சோர்ந்து தெரியுது, என்ன எதாவது புது பிகாரா வெளியில் செட் பண்ணிட்டியா?” என்று கூறி குட்டையை குழப்பியவன்...

“அரசிக்கா அவனை எதுக்கும் கவனிச்சுக்கோங்க” என்று அவளிடமும் பற்ற வைத்திருந்தான், ஏதோ முக்கியமாக கேட்கிறான் என்று தீவிரமாக கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனுக்கு அவன் பேச்சில் தூக்கிவாரிப் போட...

“ஏண்டா ஏன்? பத்து பைசா வக்கீல் செலவில்லாம, கோர்ட் படியேறாம டிவோர்ஸ் வாங்கிக் கொடுக்க ஐடியா பண்றியா?” என்று அப்பாவியாக கேட்டவனை கண்டு பகபகவென்று கலகலத்து சிரித்திருந்தனர்.

“ஆனாலும் இவனுக்கு இந்த வாய் ஆகாதுங்க?” என்று மல்லிகா தர்சனை செல்லமாக கடிய...

“வேணும்னா வேற வாய் ஆர்டர் பண்ணவா?” என்று சிரியாமல் கேட்டவனை, கண்டு அரசி களுக்கென்று சிரித்துவிட்டிருந்தாள்.

மல்லிகா போலி கோபத்துடன் அவனை தாக்க, அதில் இணைந்த அர்ஜுன்... “அவனை கையாள போடாதீங்கம்மா, இந்தாங்க இந்த சப்பாத்தி உருளையால போடுங்க, அப்போ கூட வாய் அடங்கமாட்டான் போல” என்று தன் பங்கிற்கு முதுகில் இரண்டு போட்டவனை...

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

“டேய் அர்ஜுன் நீ உன் பொண்டாட்டிகிட்டே வாங்குறதை எல்லாம் எனக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டு இருக்கறியா?” என்றவன் காதை திருகினான்... மல்லிகா கேட்ட கேள்வியை மறந்த அரசி அவர்களின் சம்பாஷணை கண்டு மனம் திறந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

“தர்சனை அடிச்சா அரசி முகம் என்னமா மின்னுது... பேசாம தினம் அவனுக்கு ரெண்டு போடு அரசி சந்தோசமா இருக்கும்” நடராஜனும் தன் பங்கிற்கு கொளுத்தி போட, தர்சன் அவரை போலியாக முறைத்துப் பார்த்தவன்...

“ஆஹா! எல்லாரும் சேர்ந்து என்னை வச்சு செய்யணும்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்க, இனி மேல் ரூட்டை மாத்திருடா தர்சா... இல்லைன்னா, பொண்டாட்டிகிட்டே அடி வாங்க உனக்கு தெம்பு இருக்காது” என்று அவனுக்கு அவனே எச்சரிக்கை விடுத்து கொண்ட பிறகே, அவ்விடம் விட்டு நகர்ந்திருக்க மல்லிகா புரையேற சிரித்தார்... தர்சன் தந்தையிடம் வாயாடிக் கொண்டே அவருடன் சேர்ந்து நகர்ந்திருக்க, மல்லிகாவுக்கு தக்க சமயம் வாய்த்து விட, அறைக்கு செல்ல இருந்த இருவரையும் தடுத்துவிட்டிருந்தார்.

“அர்ஜுன் ஒரு நிமிஷம் இங்கே இரு நான் பேசணும்” என்று கூற, அன்னையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தேங்கி நின்றான்... அரசியோ அம்மா மகனுக்கு இடையில் தான் எதற்கு என்று எண்ணியபடி நகர முற்பட்டதை கவனித்து...

“அரசி நீயும் இங்கே இரு, கையலம்பிட்டு வந்துடறேன்” என்று கூறிவிட்டு திரும்பினார்.

“சொல்லுங்கம்மா என்ன பேசணும்? அடுத்து நம்ம தர்சனுக்கு எப்போ கால் கட்டு போடலாம்னு ஆலோசனை பண்ணப் போறீங்களா?” என்று சிரித்துக் கொண்டே வினவியிருக்க...

“அவனுக்கு கால் கட்டு போட இன்னும் டைம் இருக்கு... அதுக்கு முன்னாடி எனக்கு உங்க ரெண்டு பேர்கிட்டேயும் ஒரு கேள்வி இருக்கு” என்றதுமே இருவரின் முகத்திலும் வினாடி நேரத்தில் கலவரம் வந்து சென்றதை அவர் கண்கள் கவனமாக குறித்துக் கொண்டது.

நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கீங்களா?” என்றதும் இருவருக்குமே தூக்கிவாரிப் போட்டது... அவரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்களின் முகமும் பிரதிபலிக்க, மல்லிகாவின் கண்களுக்கு எதுவோ சரியில்லை என்பது மட்டும் வெட்ட வெளிச்சமாகியது.

“எதுக்கு இப்போ இவ்ளோ ஷாக் ஆகுறீங்க?” அரசி கையை பிசைந்துக் கொண்டு சங்கடத்துடன் நெளிய, சுதாரித்துக் கொண்ட அர்ஜுன் தான் அன்னையின் கேள்விக்கு பதிலளித்தான்.

“இதென்னமா திடிர்னு இப்படி கேட்குறீங்க... நாங்க சந்தோசமா தான் இருக்கிறோம்... அதுக்காக நெற்றியில் எழுதியா ஓட்டிக்க முடியும்?” என்று செயற்கை புன்னகையுடன் கூறி சமாளித்தவனை தொடர்ந்து...

“இது கேட்கிறது நாகரிகம் இல்லைன்னு தெரிஞ்சும் கேட்கிறேன்னா... அப்போவே நீ தெரிஞ்சுருக்கணும், உங்க ரெண்டு பேர் முகத்துலயும் ஏதோ ஒண்ணு குறையுறது பட்டவார்த்தனமா தெரியுதுன்னு”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை, நீங்களா எதையும் நினைச்சு குழப்பிக்காதீங்க... அவளுக்கும், எனக்கும் என்ன பிரச்சனை இருக்கப் போகுது? நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்கோம் அதை மறந்துராதீங்க”

“பெத்தவங்க பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறதில் காதலிச்சு கல்யாணம் பண்ணின மாதிரி பேரன்பு பெருக்கெடுக்க அன்னியோனியமா வாழவும் செய்றாங்க, காதலிச்சு கல்யாணம் பண்ணினவங்க உடம்பளவில் சேர்ந்து, மனசளவில் பிரிஞ்சு வாழுறதும் உண்டு... வெளித்தோற்றம் எப்போதுமே வேஷம் தான், அது மனுஷன் முகமா இருந்தாலும் சரி, வாழ்க்கையா இருந்தாலும் சரி, ஆடம்பரமான வீடா இருந்தாலும் சரி, எல்லாத்துக்குமே உண்மைன்னு ஒண்ணு இருக்கு”

“நான் அனுபவசாலி... உங்க ரெண்டு பேர் முகமும் சம்பிரதாய சந்தோசத்தை தான் காட்டுது, காதலிச்சு கல்யாணம் பண்ணின பூரிப்பையும், நெருக்கத்தையும் காட்டலை” என்றிருக்க, இருவரும் செய்வதறியாது மௌனமாக பார்த்திருந்தனர்.

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனை? அதுக்கு என்ன தீர்வுன்னு எல்லாம் நான் உங்ககிட்டே கேட்கமாட்டேன்... ஏன்னா, நீங்க அறியாத பிள்ளைங்க இல்லை... படிச்சு பட்டம் வாங்கி வெளியுலகத்தை நல்லா தெரிஞ்சுகிட்டவங்க, உங்களுக்கும் சில விஷயத்தோட நுணுக்கங்கள் தெரியும்... அதனால், எதுவா இருந்தாலும் நீங்களே பேசி தீர்த்துக்க பாருங்க... பெத்தவங்க நாங்க உயிரோட இருக்கிறதே நீங்க சந்தோசமா வாழுறதை கண் குளிர பார்க்கத் தான்... இனி மேல் இதை பற்றி நானா கேட்கமாட்டேன்... நீங்களும் கேட்க வேண்டிய சூழ்நிலை உருவாகாம பார்த்துக்கோங்க” என்று கூறிவிட்டு நிமிடமும் நிற்காமல் நகர்ந்திருந்தார்.

தன் மட்களின் மனதில் இருந்த மனஸ்தாபத்தை அறிந்தாலும், நாகரீகமற்று பளிச்சென்று கேட்டு அவர்களை சங்கடப்படுத்தாமல், இங்கிதத்துடன் தெளிவாக உரைத்து புரிய வைத்திருந்தார். அவர் நகர்ந்ததும் அரசி வேகமாக சென்று அறைக்குள் புகுந்திருக்க, அவரின் பேச்சை மனதுக்குள் அசைப்போட்ட படி வந்த அர்ஜுன் கதவை தாழிட்டு விட்டு திரும்பியவனுக்கு வெற்று படுக்கையே வரவேற்க, அரசியை காணாது தேடியவன் பால்கனி கதவு திறந்திருப்பதை கண்டு அங்கே சென்றான்.

கொட்டும் பனியும், வாடைக் காற்றும் உடலை ஊசியாய் துளைத்து குளிரை பரப்ப, அதை உணராது வானத்தை வெறுமையாக நோக்கியப்படி அமர்ந்திருந்தவளை நோக்கி சித்தம் சலனமடைய நெருங்கியவன்...

“அரசி!” என்று அவள் விலாவை தொட்டு திருப்பியவன் திகைத்துப் போனான்...! அவள் விழிகள் சொட்டு சொட்டாய் கண்ணீர் முத்துக்களை சிதறிக் கொண்டிருந்ததை கண்டவனுக்கு மனதை பிசைந்தது.

“ஏய் எதுக்கு இப்போ அழற? அம்மா பேசியதுக்கா? அவங்க பெரியவங்க அவங்க பக்கம் ஏதோ பேசுறாங்க இதுக்கெல்லாம பீல் பண்ணுவ... அவங்க நம்மகிட்ட குடைஞ்சு கேட்டு சங்கடபடுத்தவும் இல்லையே, அவங்க கண்ணோட்டைத்தை நம்மகிட்ட சொன்னாங்க அதுக்காக இப்படி வருத்தப்படுறியா?” என்றவனுக்கும் இல்லை என்பதாக தலையை இடம் வலம் அசைத்தவள்...

“நான் அதுக்காக அழுகலை” என்றதும்...

“பின்னே வேற என்ன சொல்லு”

“எனக்கும் அம்மா இருந்திருந்தா, நானும் என் மனசை வெளிப்படையா சொல்லி இருந்திருப்பேன்... அன்னைக்கு அப்படி ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உங்க மனசை காயப்படுத்தி கோபத்தை சம்பாரிச்சு இருந்திருக்கவும் மாட்டேன்” என்றவளால் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் எங்கே இதயம் எம்பி எகிறி குதித்து விடுமோ என்று அச்சம் கொள்ளுமளவிற்கு தேம்பினாள்.

“ஏய்!” என்றவனுக்கு நெஞ்சில் சூட்டு கோளை வைத்து இழுத்தது போன்று தாங்காது போக, அவளை சடாரென்று மார்போடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டவனின் காதல் மனம் அவளுக்காக சிந்தையில் ரத்தக் கண்ணீர் வடித்தது.

“இதுக்கு முன்னாடி எப்படியோ, ஆனால் இனி மேல் நீ இந்த மாதிரி வார்த்தையை சொல்லி வருத்தப்படக்கூடாது அரசிமா... அப்படி நீ சொன்னா நான் கையாலாகாதவன்னு அர்த்தம்” என்றவன் அவள் முகத்தை உயர்த்தி கண்களை உற்று நோக்க செய்தவன்...

“உனக்காக நான் இருக்கேன் டா... எனக்கு உன் மேல இருக்கிறது கோபம் தான், உண்மையான வெறுப்பில்ல, முதலில் அதை தெளிவா புரிஞ்சுக்கோ”

“நான் வெறுத்திருந்தா, நீ வருத்தப்படுறது ஒரு நியாயம் இருக்கு... ஆனால் என்னால் உங்கிட்ட கோபத்தையே கட்டுப்படுத்த முடியலை, இதில் வெறுக்கிறது எப்படி முடியும்?”

“என்னை பார்த்தாலே முகத்தை திருப்பிக்கிட்டு போறீங்க... அதையும் மீறி பேசினா, எதுவும் பண்ணினா, எரிஞ்சு விழுகறீங்க... இதெல்லாம் நான் என்னன்னு நினைக்கிறது”

“அடியேய் பொண்டாட்டி! ஆணாகப்பட்ட விசுவாமித்திர முனிவரே மேனகைக்கு மயங்கினவரு, நானெல்லாம் எம்மாத்திரம்... நான் உன்னை காதலிக்கிறேன் டி, நீ என்னை தொட்டா எனக்கு உள்ளக்குள்ள ஏதேதோ நடக்குது, எங்கே என் கோபம் பஸ்பம் ஆகிருமோன்னு பயந்தேன், அதான் உன்னை விலக்கி வைக்க சும்மா நான் அப்பாப்போ கடிச்சு துப்பினேன்”

“நிஜமாவா சொல்றீங்க?” கண்கள் சாசர் போல் அகல விரித்து வெகுளியாக வினவியவளின் இமைசிமிட்டலில் காந்தமில்லாமல் கவர்ந்திழுக்க...

“இதோ இப்போ கூட ஒரு எக்ஸ்பிரஷன் கொடுக்குற பாரு, என்னால் முடியலைடி”

“ஆமாம் இப்படி சொல்லுறவரு எதுக்காக விலகி நின்னீங்க?”

“நீ பண்ணினதை அவ்ளோ சுலபமா மறக்கவும் முடியலை டி... நம்ம கல்யாணத்தை எப்படி எல்லாம் சந்தோசமா அனுபவிக்கணும்னு நினைச்சேன் அதையெல்லாம் கெடுத்துட்டியேன்னு ஒரு கோபம்”

“சப்போஸ் அன்னைக்கு சம்யுக்தா மட்டும் எனக்கு தகவல் சொல்லலைன்னா, உனக்கு நிச்சயம் முடிஞ்சிருக்கும் அப்புறம் என்ன நடக்கும்ன்னு நானா சொல்லியா தெரியணும் உனக்கு?” என்றவனுக்கு அன்றைய நாளின் நிகழ்வுகளில் உடல் இறுக, அதை உணர்ந்தவள் அவனையே நிலைக்குத்தி பார்வையால் துளைத்தப்படி...

“இதுக்கு தான் அன்னைக்கே பதில் சொன்னேனே” என்றிருந்தாள்...

“என்னது ஒரேடியா போயிருப்பேன்னு சொன்னியே அதுவா” என்று கூறி கடுமையாக முறைத்திருந்தான்.

“வேறென்ன பண்ண முடியும்...? சொல்லுங்க”

“எவ்வளவோ பண்ணலாம்... படிச்சிருக்க உன்னால் வெளியில் போய் பிழைக்க முடியாதா? சாவை பத்தி பேச வேண்டிய வயசாடி இது?” என்று சினந்தவனின் வார்த்தை அவன் கூறியதையும் நினைவுறுத்த...

“அன்னைக்கு நீங்க கூட இதை தான் சொன்னதா நியாபகம்”

“எதை?” என்றதும்...

“காரில் ஆக்சிடெண்ட் ஆனப் போதே உயிரை விட்டிருப்பேன்னு நீங்களும் சொன்னீங்க தானே”

“ஆமாம் தேவை இல்லாததெல்லாம் நியாபகம் வச்சுக்கோ... என் காதலையும், நான் சொன்னதை மட்டும் நியாபகம் வச்சுக்காத” என்று வெய்துறலுடன் முனகினான்.

அவன் மார்பில் சாய்ந்து அணைத்துக் கொண்டவள்... “இப்போவாச்சு கோபம் போச்சா?”

“ம்ஹும் இல்லை!” என்றதும் விசுக்கென்று விழி உயர்த்தி பார்க்க, அவன் உதடுகள் சிரிப்பை அடக்க பிரயத்தனம் பட்டு துடித்துக் கொண்டிருப்பதை கண்டு...

“பிராடு! அப்போ என்னை தொடாதீங்க” என்று அவன் மார்பை தன் பலம் கொண்ட மட்டும் பிடித்து தள்ளி விட்டு நகர எத்தனித்தவளை, நகர விடாமல் அழுந்த பிடித்துக் கொண்டவன்...

“என் கோபம் போகாது... போக விடமாட்டேன்... கோபம் வரும் போதெல்லாம் நீ தண்டனை அனுபவிப்ப இப்படி” என்றவன் அவள் என்னவென்று கிரகிக்கும் முன் இதழை முற்றுகையிட்டிருந்தான்... ஆணவனின் முதல் இதழ்கள் முத்தத்தில் பெண்ணவளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வில் மூச்சுக்கு திணறினாலும் அவன் தண்டனையை சுகமாக ஏற்றுக் கொண்டாள்.

நீண்ட நேரம் நீடித்த இதழ் யுத்தம் சாசுவாதம் இன்றி தொடர்ந்த இரவின் ஏகாந்த வேளையில் அவர்களின் மோன நிலையை கலைக்க யாருமில்லை என்றே கருதினர்... ஆனால் நான் இருக்கிறேனே என்பது போல் சில்வண்டுகளின் ரீங்கார சப்தம் அவர்களின் செவியை எட்டி தன்னிலைக்கு இழுத்துவிட்டிருந்தது.

தன்னவளை மெல்ல விடுவித்த அர்ஜுன், அவளின் சிவந்த முகத்தை பார்த்து கிறக்கம் கூடிக் கொண்டே சென்றது... இதழ்களில் மந்தகாசம் மலர மையலுடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் ஆகர்ஷனம் அவளை கட்டி இழுத்ததில், மோகனப் புன்னகை சிந்தியவள் நாணத்தை மறைக்க அவன் மார்பிலேயே முகம் புதைத்து கொண்டாள்.

அவளின் செயலில் பூம்புனலென புன்னகை பொங்கியெழ “ஹஹஹா” என்று சிரித்துக் கொண்டே தன் கைவளைவிலேயே சாய்த்துக் கொண்டு படுக்கையில் வீழ்ந்தவன், அவள் நெற்றியில் அச்சாரம் பதித்துவிட்டு...

“குட் நைட்! நிம்மதியா தூங்கு” என்றவனை கேள்வியாக பார்த்திருக்க...

“என்னடா இவ்ளோ நேரம் நல்லாத் தானே இருந்தான் திடிர்னு எதுவுமே நடக்காத மாதிரி தூங்க சொல்றானேன்னு யோசிக்கிறியா?” என்றவனிடம் ‘ஆம்’ என்பதாக வெட்கச் சிவப்புடன் பார்வையிலேயே பதிலை அறிந்தவன்...

“அதில்லை நான் குடுக்க போற தண்டனையில் சேதாரம் அதிகமா போச்சுன்னா, நாளைக்கு நீ யாரையும் பார்க்க முடியாம போயிரும்... அதுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்” என்றவனின் சூசகத்தை புரிந்துக் கொண்டவளுக்கு... “ச்சீ...” என்று வெட்கத்தில் மயிரிழைகள் சிலிர்த்துக் கொண்டிருந்தது.

“இதுக்கு நான் வேற ஒரு ஏற்பாடு செய்திருக்கேன்... அதை நான் நாளைக்கு சொல்லி நம்ம போரை நிறுத்திக்கலாம்ன்னு தான் நினைச்சிருந்தான்... ஆனால், அதுக்குள்ள வசமா அம்மாகிட்டே மாட்டிகிட்டோம், அதனால் இன்னைக்கே ரிவியல் பண்ண வேண்டியதா போச்சு” என்று விளக்கம் கொடுத்ததில்... தன் கணவன் அவன் அன்னையின் பேச்சிற்கு பிறகு கடமையாக தன்னை ஆட்கொள்ளவில்லை என்றதில் பேரின்பம் அடைந்தாள்.

“நான் கூட உங்க அம்மா சொன்னதால தான் என்கிட்டே கோபத்தை விட்டு நெருங்கிடிங்களோன்னு நினைச்சு வருத்தப்பட்டுட்டேன்” என்றவளை பாசாங்காக முறைத்தவன்...

“அதானே பார்த்தேன்... என்னடா மூளை குழம்பாம என் பொண்டாட்டி தெளிவா இருக்காளேன்னு... இந்த யோசனை எல்லாம் தூக்கி போட்டுட்டு நல்லா தூங்கு, நாளை மறுநாள் நாம மூணார் போகப் போறோம்”

**********************

அர்ஜுன் சொன்னது போல் மூணார் செல்ல ஏற்பாடுகள் செய்திருந்ததை வீட்டினரிடம் தெரிவித்திருந்தான்.

“தர்சன் ஒன் வீக் நீ தான் எல்லாமே மேனேஜ் பண்ணனும் பண்ணிருவ தானே?”

“பண்ண முடியாதுன்னு சொன்னா, ஹனிமூன் ட்ரிப்பை கேன்சல் பண்ணிருவியாடா?” என்று பொய் கோபத்துடன் கேட்க, அவன் கோபம் எதற்காக வென்று புரிந்தவன்...

“டேய் போதும் டா! மிளகாயை கடிச்சுட்டு பேசாத... சும்மா பேச்சுக்கு கேட்டேன்”

“பேச்சுக்கு பேசாதத்துக்குன்னு பேத்தாதடா என்னால் முடியலை” என்றவனை ஆதுரத்துடன் பார்த்தான்.

“சரி நாளைக்கு தானே கிளம்புறீங்க”

“ஆமாம்டா!”

“மதியம் நான் வந்துடுறேன், அப்புறம் கிளம்பிரு”

“அர்ஜுன் நீ எதை பத்தியும் கவலைப்படாதே, பொண்டாட்டி கூட முதல் முதலா வெளியே போகிற பத்திரமா போயிட்டு வாங்க, இங்கே தர்சன் இருக்கான், நானும் இருக்கேன் எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம்” என்று நடராஜனும் கூறியிருந்தார்.

மகனின் இந்த முடிவில் மல்லிகாவுக்கு கவலை மேகங்கள் விலகி உற்சாகம் தொனித்தது... ‘அப்பாடா நான் நினைச்ச மாதிரி பெரிய பிரச்சனை எதுவும் இல்லை நன்றி கடவுளே’ என்று மானசீகமாக கடவுளுக்கு நன்றியும் கூறிக் கொண்டார்.

அர்ஜுன் கிளம்ப ஆயத்தமான வேளையில் சம்யுக்தா பிரசன்னமாக... “நானே போன் பண்ணலாம்னு நினைச்சேன் நீயே வந்துட்ட” என்று கூறிய அர்ஜுனை நோக்கி...

“எங்கே ஹனிமூன் ட்ரிப் கிளம்பறதை சொல்லத் தானே, உங்களை வழியனுப்பி வைக்கத் தான் வந்தேன்” என்றவளை ஆச்சர்யமாக பார்த்தான்.

“இந்தாங்க இது என்னோட கிப்ட்” என்று நீட்டியிருக்க, அவளுடன் இணைந்து கொண்ட தர்சன்...

“என்ன அர்ஜுன் யோசிக்கிற? சம்முக்கா கொடுக்குறாங்கள்ள வாங்கிக்கோ இது அவங்களோட கிப்ட் மட்டுமில்லை என்னுடைய கிஃப்ட்டும் சேர்ந்து இருக்கு” என்றிருக்க அர்ஜுன் அன்னையையும், தந்தையும் ஒரு சேர்ந்த பார்வையை பகிர்ந்து கொண்டிருந்தான்.

“என்னடா இதெல்லாம்” என்று வினவியவனை...

“நீங்க மூணார் போயிட்டு அங்கிருந்து வயநாடு போக வேண்டிய டிக்கெட், அப்புறம் அங்கே தங்க வேண்டிய ஹோட்டல் பேக்கேஜ்... சம்மு க்கா தான் முதலில் உனக்கு அரேஞ் பண்ணாங்க, அப்புறம் நானும் அதையே பண்ண இருந்த நேரத்தில் தான் தெரிஞ்சுது அவங்க பண்ணிட்டாங்கன்னு... சோ, எங்க ரெண்டு பேருடைய ஷேர் மொத்தம் பதினைஞ்சு நாள் நீங்க ஸ்பெண்ட் பண்ணப் போறீங்க எப்படி” என்று மகிழ்ச்சியுடன் கேட்க...

“என்ன ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணியிருக்கீங்க, அதுவும் இந்த மாதிரி ஒரே நேரத்தில்” என்று பூடகமாக கூறிய அர்ஜுனின் வார்த்தை விளங்கியதில் ஆமோதிப்பாக கண்ணிமைத்தான் தர்சன்.

“நீங்க ரெண்டு பேரும் பதினைஞ்சு நாளைக்கு நல்லா என்ஜோய் பண்ணிட்டு வாங்க” என்று வாழ்த்தினாள் சம்யுக்தா... அனைவரும் மகிழ்ச்சியுடன் அர்ஜுன், அரசியை வழியனுப்பி வைத்திருந்தனர்.


சுவடுகள் தொடரும்....


**************************************

வணக்கம் நட்பூக்களே...

“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்-22 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்,

காருராம்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-23
யமுனா, யசோதா, பாஸ்கரன் மூவரும் நெருங்கிய நண்பரின் மகன் திருமணத்திற்கு சேலம் வரை சென்றுவிட்டிருந்தனர்... அவர்கள் ஐந்து நாட்கள் தங்கிவிட்டு வருவதாக கூறியிருக்க, ரஞ்சனே தொழிலையும், வீட்டையும் கவனித்து கொள்ள வேண்டியதாகிப் போனது.

அன்று வணிக வளாகத்தை மூடிவிட்டு இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் தான் வீட்டிற்கு புறப்பட்டிருக்க, வழியிலேயே காரில் கோளாறு ஏற்பட்டு வாகனம் நின்றுவிட்டிருந்தது.

“ச்சே... இப்போ தானே சர்வீஸ் பண்ணினோம், அதுக்குள்ள என்ன ஆச்சு?” என்று புலம்பிக் கொண்டு அவனாக முடிந்தவரை ஆராய்ந்து பார்த்தவனுக்கு என்ன கோளாறு என்பது புரியாமல் போகவே, மெக்கானிக்கு அழைத்து கூற அலைபேசியில் முயன்றான்... அலைபேசி அணைந்து கிடைப்பதாக கூறியதில் தலையை பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.

சில நிமிடங்களில் சாலையில் சென்ற இருசக்கர வாகன சப்தத்தில் சுதாரித்து, அவர்களிடம் உதவி கோரலாம் என்று அருகில் நெருங்கியதும் அகஸ்மாத்தாக அவனை சமீபித்திருந்த மற்றொரு இரண்டு வாகனம் சடுதியில் அவனை சுற்றி வளைத்திருக்க மிரட்சியுடன் அரண்டு போனான்.

“நீங்க... நீங்கெல்லாம்... யாரு...?” என்று தலைக்கவசம் மாட்டியிருந்தவர்களிடம் பதட்டத்துடன் வினவியவனை கண்டு கண்களால் ஜாடை காட்டிவிட்டு...

“ம்ம்ம்... உன் மச்சான்!” என்று எள்ளலாக உரைத்தவர்களை கண்டு சுதாரிப்பதற்குள், அவன் முகத்தை மறைத்துப் போல் கச்சிதமாக தலைமேல் கவிழ்த்து கருப்பு ஆடையை போர்த்தி, அவனை சுற்றி வளைத்து நின்று முகம், கை, கால் என அங்கம் அங்கமாக பெயர்த்தெடுப்பது போல் பலமாக தாக்கிக் கொண்டிருந்தனர்.

“டேய்.. டேய்.. விடுங்க டா......” என்று மன்றாடியவனின் குரலை கிஞ்சித்தும் சட்டை செய்யாமல்...

“ஒரு பொண்ண காதலிச்சு அவ கூட உல்லாசமா இருந்துட்டு, கையில பிள்ளையையும் கொடுத்துட்டு, உன் ஸ்டேட்டஸ் காரணம் காட்டி இப்போ வேறொருத்தியையா கல்யாணம் பண்ணிக்க பார்க்கிற?”

“எல்லாம் இவன் ஆம்பளைங்கிற திமிருடா, அந்த திமிரு பிடிச்ச ஆங்காரத்தை தட்டினா சரியா போயிரும்” என்றவர்கள் அவனின் அந்தரங்கத்தை தாக்க காலை தூக்கியதும்....

“ஆஆஆ... காப்பாத்துங்க! வேண்டாம்...! வேண்டாம்...! விட்டிருங்க” என்று அச்சத்தில் அலறினான்.

“எதுக்குடா காப்பாத்த சொல்ற, போய் வேற யாராவது பணக்காரியா பார்த்து கல்யாணம் பண்ணிக்கவா?”

“இல்லை! இல்லை! பண்ணமாட்டேன்... நான் வேற யாரையும் கல்யாண பண்ணமாட்டேன்... என்னை விட்டிருங்க” என்று கெஞ்சியவனை சிறிதும் சட்டை செய்யாதவர்கள் மேலும்...

“இவனுக்கு நம்ம கை கால் பலத்தை காட்டினா மட்டும் போதாது, அந்த உருட்டு கட்டையை எடுங்கடா பொளந்திரலாம்” என்றவர்களின் மிரட்டலில் சர்வாங்கமும் ஆட்டம் கண்ட ரஞ்சனுக்கு அவர்களிடம் சரணடைவதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்து...

“ஐயோ...! தயவு செய்து அப்படி எதுவும் செய்திராதீங்க... நான் கலைவாணியை கூட்டிட்டு வந்து அவளோட வாழ முயற்சி பண்றேன்... வாணி தான் என் பொண்டாட்டி, அவ வயிற்றில் பிறந்த மகள் தான் என் வாரிசு, என்னை விட்டிருங்களேன் ப்ளீஸ்!” என்று மன்றாடியவனை தொடர்ந்து, அவர்கள் சாதித்துவிட்ட மெத்தனத்துடன் பார்வை பரிமாறிக் கொண்டவர்கள், அங்கே மற்றொரு நான்கு சக்கர வாகனம் பாதையை கடப்பதை அறிந்து...

“டேய் மச்சான் கார்ல யாரோ வராங்க, நாம சீக்கிரம் கிளம்பலாம் வாங்க!” என்று ஒருவன் கூற...

“இவனை இப்படியே விட்டுட்டு போறதா? அதுவும் எந்த நம்பிக்கையில் அப்படியே விட்டுட்டு போறது?” என்றதும் அந்த கூட்டத்தில் இருந்த மற்றொருவன்...

“அதான் சொல்லிட்டான்ல, இப்போதைக்கு விட்டு வைப்போம், சொன்னதை செய்யலைன்னா திரும்ப இதே மாதிரி செஞ்சிருவோம்” என்றவர்கள்...

“அடுத்த தடவை எங்க கை கால் எல்லாம் பேசாது, கத்தி தான் டா பேசும்” அவன் தலையை போர்த்தியிருந்த கருநிற துணியை விலக்காமலே மிரட்டல் விடுத்து விட்டு விருட்டென்று வாகனத்தை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டிருந்தனர். தூரத்தில் வந்துக் கொண்டிருந்த வாகனம் அருகே சமீபித்திருக்க, ரஞ்சன் உடல் பலமின்றி துவண்டு விழுந்திருந்தவனை அந்த வாகனத்தில் இருந்து இறங்கிய அன்பழகன் கைப்பற்றி தாங்கிக் கொண்டிருந்தார்.

**********************

அவரின் பிடியில் சற்றே அசைந்து எழுந்தவன், சிரமத்துடன் விழிகளை பிரித்தவனுக்கு எதிரில் அன்பழகனை அடையாளம் கண்டு கண்களில் வெளிச்சம் வந்திருந்தது.

“அன்பழகன் அங்கிள்! யாருன்னே தெரியலை கும்பலா வந்தாங்க, அடிச்சாங்க போறாங்க, உடனே போலீசுக்கு சொல்லுங்க அங்கிள்” என்று குரல் நடுங்க கூறியவனின் நிலையை கண்டு பெரிதும் அலட்டிக் கொள்ளாமல்...

“முதலில் நம்ம வீட்டுக்கு போயிறலாம் ரஞ்சன் வா” என்றழைக்க...

“போலாம் அங்கிள்... அவங்க வந்து அடிச்சுட்டு போயிருக்காங்க சும்மா விடலாமா, போலிஸ் ஸ்டேசனில் கம்பளைண்ட் கொடுத்துட்டு போகலாம்” என்று பிடிவாதமாக நின்றவனை கூர்ந்து பார்த்தவர்...

“போலீஸ் ஸ்டேஷன் போகலாம், அவங்க அடிச்சுட்டு போனதா கேஸ் கூட பைல் பண்ணலாம், எனக்கு பிரச்சனை இல்லை... ஆனால் அவங்க என்ன சொல்லி அடிச்சாங்க, எதுக்காக அடிச்சாங்க, பிரச்சனையோட ஆணிவேர் என்ன எல்லாம் தோண்டி துருவி அலசி ஆதியோட அந்தம்மா நீ வாணியை ஏமாற்றினதை பற்றி சொல்ல வேண்டியதா இருக்கும் பரவாயில்லையா” என்று கிடுக்குபிடி போட்டதில் பகீர் என ஆகிப் போக... உள்ளுக்குள் உதறல் எடுத்துக் கொண்டது.

ஆனால் அவர்கள் கூறியதை அவர் எப்படி அறிவார் என்று சிறிதும் சிந்திக்கவில்லை, மாறாக அப்போதைய அவனின் நிலை வாணிக்கு செய்த துரோகம் தான் கர்மவினை என தாக்குவதாக அணங்கு ஏற்பட்டு உடல் நடுக்கமுற, கலக்கத்தில் கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.

அதன் பிறகு அவருக்கு எதிர் பேச்சு பேசாமல் அவருடன் சென்றுவிட்டிருந்தான். அவரின் இல்லத்திற்கே வந்திறங்கியவன் அவரை கேள்வியாக பார்த்திருந்தவனை...

“உனக்கு அடிப்பட்டிருக்கே டாக்டருக்கு சொல்லி வர சொல்லியிருக்கேன்... அவர் ட்ரீட்மெண்ட் கொடுத்ததும் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம் மனோ... இப்போ நீ அங்கே போனாலும் உன்னை யார் பார்த்துக்குவா?” என்றதும் சூழ்நிலை புரிய வர மௌனமானான்.

அவர் கூறியது போல் அரை மணி நேரத்தில் மருத்துவர் அங்கே வந்திருக்க மனோரஞ்சனுக்கு வேண்டிய மருத்துவ பரிசோதனைகளை செய்து மருந்து, மாத்திரைகளை கொடுத்து விட்டு சென்றிருந்தார்... அன்பழகனின் மனைவி ரமாமணி மனோரஞ்சனை கவனமாக பார்த்துக் கொண்டார். ஆனாலும் அவன் உடலில் இருந்த ரத்தக்கட்டு காயங்களும் அவன் விழிகளில் தென்பட்ட மறுட்கையும் அவருள் சந்தேக விதையை தூவியதில் தன் கணவரிடம் அதை பற்றி விசாரித்திருந்தார்.

“ஆமாம்! இந்த பையனுக்கு ஆக்சிடென்ட்ன்னு தானே சொன்னீங்க, ஆனா அவனுக்கு அடிபட்டிருக்கிறதை பார்த்தா யாரோ பத்து பேர் அடிச்சு போட்ட மாதிரி இருக்கே” என்று சரியாக கண்டுப்பிடித்து விட ரஞ்சன் அன்பழகனை கவலையாக நோக்கிவிட்டு, முகத்தை தொங்க போட்டுக் கொண்டான்.

“அந்த பக்கம் வா ரமா நான் சொல்லுறேன்” என்று காதை கடித்தவரின் சொல்லில் அவர் பின்னே செல்ல, அவனுக்கு நடந்ததை கூறியதும் அவர் முகம் விகாரமாக மாறிப் போனது.

“ஒஹ்! அப்படியா சங்கதி? என்கிட்டே ஏன் இதை முன்னாடியே சொல்லலை, சொல்லியிருந்தா அவங்க வீட்டுல இருக்கிற மத்தவங்களுக்கும் நானே சிகிச்சை கொடுத்திருப்பேனே” என்று முகத்தை செறிவுடன் வைத்துக் கொண்டு கூறியிருந்தார்.

“அதெல்லாம் வேண்டாம் ரமா... எப்படி நாய் வாலை நிமிர்த்த முடியாதோ, அப்படி தான் அவங்க குணத்தையும் மாத்த முடியாது... முடிஞ்சா இவன் தலையை நல்லா கழுவி வை, அப்படியாச்சும் அந்த வாணி பொண்ணை கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்தட்டும்” என்றவரை நிஷ்டூரமாக முறைத்தவர்...

“நீங்களும் அந்த பையன் இனம் தானே, அதனால் இப்படி தான் சொல்வீங்க?”

“எப்படி சொன்னேன்”

“இவன் காதலிப்பானாம், அந்த பிள்ளையை மயக்கி கூட படுத்து குடும்பம் நடத்துவானாம்... அப்புறம் அவ வயிறு நிறைஞ்சதும் வயத்தை கழுவிட்டு, வாயை கழுவிட்டு போய் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்வானாம்... எனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவனுக்கு கொடுத்த பாலுல பால்டாயில கலந்திருப்பேன்” என்று அவனை வார்த்தையாலேயே கடித்து துப்பிக் கொண்டிருந்தார்.

“பெண்ணுக்கு பெண்ணா சப்போர்ட் பண்ணுற சரி தான், நான் தப்பு சொல்லலை... நான் ஆணுக்கு ஆனா அந்த ரஞ்சனுக்குன்னு நான் பேசலை ஒரு பொண்ணுக்கு அப்பாவா பேசுறேன்” என்றதும் கணவரின் பேச்சை கேட்க காதை கூர்மையாக தீட்டி வைத்துக் கொண்டு கேட்கலானார்.

“நமக்கு பெண் குழந்தை இல்லாம இருக்கலாம்... ஆனால், நமக்கு மகள் இருந்திருந்தா எப்படி யோசிப்பேனோ அப்படி தான் வாணியோட வாழ்க்கையையும் யோசிக்கிறேன்”

“என்னங்க சொல்றீங்க?”

“அவன் செய்தது மன்னிக்க முடியாத தப்புத் தான் நான் மறுக்கமாட்டேன்... ஆனால் யோசித்து பாரு அந்த பெண்ணுக்கும் பெண் குழந்தை தான் பிறந்திருக்கிறா... அவ வளர வளர அந்த பொண்ணு வாணிபட்ட அவமானங்கள் அவளுக்கு திரும்ப வாய்ப்பிருக்கு, ஏன்னா இந்த சமுதாயம் அப்படி இருக்கு”

“அதெல்லாம் இருகட்டும்ங்க இப்போ இவனை அடிச்சு திருத்தி அந்த பொண்ணு கூட வாழ சொல்லி கட்டாயப்படுத்தினா அந்த பொண்ணை கொடுமைப்படுத்த மாட்டான்னு என்ன நிச்சயம்? அந்த பொண்ணோட உயிருக்கே ஆபத்து வந்திராதா?”

“வராது, நிச்சயம் வராது... ஏன்னா, அவனோட தங்கச்சி அந்த பொண்ணோட அண்ணனை தான் காதலிச்சு கல்யாணம் செய்திருக்கா, அவ இவனை மாதிரி தன் குடும்பத்துக்கு ஒரு நியாயம், அடுத்தவங்கன்னா ஒரு நியாயம் பேசுற ஆள் இல்லை... இது தப்புன்னா தப்புன்னு அடிச்சு பேசுற பொண்ணு, அதில் அப்படியே அவங்க அப்பா மாதிரி... இப்போவும் அவ அந்த பொண்ணுக்கு நியாயம் கிடைக்க தன் பிறந்த வீட்டு மனுஷங்கலையே எதிர்த்து தான் நிற்கிறா”

“சரி தாங்க அப்போ நிச்சயம் அந்த பொண்ணுக்கு, அங்கே ஒரு ஆதரவு இருக்கு... அதை தானே சொல்ல வரீங்க”

“அது மட்டுமில்லை ரமா... இந்த மனோரஞ்சன் பார்க்கத் தான் லபோதிபோன்னு குதிப்பான், ஆனா கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவன்... நான் அப்படிதான் டா தப்பு செய்வேன்னு தெனாவட்டா பேசி எதிர்த்து நிற்கிற ரகம் இல்லை” என்றவர் ஆட்கள் அடித்த போது இறுதியாக அவன் கூறியதை கூறியிருக்க...

“இவனை நம்பி அந்த பொண்ணு வாழ முடியுமா?”

“ம்ஹும்... அப்படி இல்லை ரமா, அவன் பயப்படுறது எல்லா விஷயத்துக்கும் இல்லை, தன் உயிர் போகிற பயமும், எங்கே வாழ்க்கை சீக்கிரமே முடிவுக்கு வந்திருமோன்னு தான் அந்த பயம் தென்படுது, இந்த மாதிரி மிரட்ட ஆள் இல்லை, அதான் துணிஞ்சு தப்பு பண்ணிட்டான்... இன்னொன்னு எல்லாம் மேல் தட்டு சகவாசம், அப்புறம் என்ன செய்யும் ஆட்டு மந்தைங்க மாதிரி அவனும் நம்மளை யார் கேள்வி கேட்க முடியும்ன்னு பணத்தை வச்சு ஆட்டம் காட்டிட்டான்... இப்போ அதுக்கு தான் அதெல்லாம் சாதாரணம் டா மகனே நீ அவ கூட வாழலைன்னா உன் வாழ்க்கையையே முடிச்சிருவோம்னு மிரட்டியதும் மிரண்டு போயிருக்கான்”

“அப்புறம் அவன் மகளும் பொண்டாட்டியும் பக்கத்தில் இருந்தா கால போக்கில் அந்த சூழ்நிலை இவனை மாத்தலாமே” என்று கூறியிருக்க, அவருக்கும் அதில் உடன்பாடு இருக்கவே...

“நீங்க கவலைபடாதீங்க அந்த பையன் இந்த வீட்டை விட்டு போகும் போது, அவன் பொண்டாட்டியை கூட்டிட்டு வர நாள் பார்க்கத்தான் போறான் அந்த மாதிரி நான் பார்த்துக்குறேன்” என்று கூறியவர் வாக்குறுதியை நிறைவேற்ற சித்தமானார்.

**********************

“உன்னை ஆள் வச்சு அடிச்சது யாரா இருக்கும்ன்னு நீ நினைக்கிற மனோ?”

“வேற யாரா இருக்கும், எல்லாம் அவளுடைய அண்ணன் வேலையா இருக்கும்” என்று கூறி பல்லை கடித்தான்.

“சரி நீ சொல்ற மாதிரியே வச்சுப்போமே இப்போ அதுக்காக நீ சண்டை போட ஆரம்பிச்சா, அதுக்கு ஒரு தீர்வு கிடைச்சிருமா?” என்றதும் அவன் நெற்றியில் முடிச்சு விழுந்தது.

“என்ன இருந்தாலும் உன் நிச்சயத்துக்கு வந்த சொந்ததுக்கு முன்னிலையிலேயே நீ வாணி கழுத்தில் தாலி கட்டிட்ட, இனி அதை நிராகரிக்கவோ... இல்லை, அவளுக்காக பரிந்துரை பண்ணிட்டு வரவங்களை நீ எதிர்கொண்டு சமாளிக்கிறதோ எதுனாலும் போராட வேண்டி இருக்கும், இப்படியே போனா உன் வாழ்நாளில் பாதி கரைஞ்சிரும், அதுக்கப்புறம் நடுத்தர வயசுல நீ கேட்கிற மாதிரி ஒரு வாழ்க்கை அமையறதும் சிரமம் ஆகிரும்” என்று அவன் முகத்தின் உணர்ச்சிகளை அவதானித்தபடியே கூறிக் கொண்டு வந்தவர் தொடர்ந்து...

“அப்போ உனக்குன்னு யார் வருவாங்க சொல்லுப்பா” என்றதும் தீவிரமாக சிந்திக்கலானான், அதற்கு அத்தாட்சியாக அவன் பார்வையும் நெற்றி ரேகையும் அசைந்து கொண்டிருந்தது.

“நாம உயிரோட இருக்கும் போது ரெண்டு கை இருக்கு, ரெண்டு கால் இருக்கு... எனக்கு யார் உதவியும் தேவை இல்லைன்னு சொல்லிக்கிட்டு தனிச்சு நின்னு வாழ்ந்திரலாம்... ஆனா, இதுவே உயிர் பிரிஞ்சு போனா நம்ம உடலை சுமக்க நாலு பேர் வேணும், அப்போ உனக்காக யாரு வருவா?” அவர் பேசப் பேச அவனின் முகத்தையே ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.

“உனக்கு இருக்கிறதோ ஒரே ஒரு தங்கை, அவளும் கூட பிறந்தவ இல்லை, உன் சித்தி பொண்ணு தான்... கூட பிறந்தவங்களே இந்த காலத்தில் ஏன்னு கேட்கமாட்டாங்க, உன் சித்தி பொண்ணு உன் மேல பாசமா இருக்கிறான்னு சொல்லுற, உனக்கு அவ உறவு கூடவா வேண்டாம் அவ ஒருத்தி இருந்தாளே உன் குடும்பத்து ஆளுங்க அத்தனை பேரும் இருக்கிறதுக்கு சமம்ன்னு நீ அங்கிள்கிட்டே சொன்னயாமே?” என்றதும் மேலும் கீழும் தலையசைத்து ஆம் என்று ஆமோதித்தான்.

“நீ செய்தது தப்பு... ஆனா அதில் ஒரு அதிர்ஷ்டமா உனக்கு பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்க... மகனை பெற்றா கூட மருமகள் வர வரைக்கும்ன்னு சொல்லலாம், ஆனா பெண்ணை பெற்றவன் தான் கடைசி வரை ராஜா... மகனுங்க கூட பொண்டாட்டி பேச்சை கேட்கிறதா... இல்லை, அம்மா பேச்சை கேட்கிறதான்னு அல்லாடுவாங்க... ஆனா பொண்ணுங்க எனக்கு என் அப்பா, அம்மா தான் முதல்ல முக்கியம்ன்னு யோசிக்காம சொல்லுவாங்க... உன் மகளும் அந்த பாசத்தை கொட்டினா நீ வேண்டாம்னு சொல்லிருவியா?”

‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்பதற்கேற்ப ரமா ரஞ்சனுக்கு பக்குவமாக எடுத்து கூறியவர், வாழ்க்கையின் பிடிமானமான அடித்தளங்களை சுட்டி மிகவும் தன்மையாகவும் நிதர்சனமான உண்மைகளை சற்று கடினமாகவும் என மாற்றி மாற்றி இடித்துரைத்திருந்தார். அவரால் ஆனா உபதேசங்கள் அனைத்தையும் பொழிந்தவர் அவனை தனியாக சிந்திக்கும் படி கூறி தனிமையில் ஆட்படுத்தினார்.

ரஞ்சன் உடல் நிலை சற்று சீரானதும், அங்கிருந்து செல்லும் தருணமும் வரவே அன்பாக, அனுசரணையாக உபசரித்தார்.

“ஏன்ப்பா மனோ நான் சொன்ன மாதிரி இனி மேல் புது மனோரஞ்சனா மாறி வாழுவியா?” என்றிருக்க, அவரை பார்த்து இள முறுவல் பூத்தவன்...

“ம்ம்ம்... கண்டிப்பா செய்வேன் ஆண்டி! அதுக்கான முயற்சிகளை அது எவ்ளோ கஷ்டமா இருந்தாலும் என்னால் ஆன வரை எடுப்பேன்”

“நிஜமா தானே சொல்ற? கடைசியில் திருத்தராடிரனுக்கு விதுரன் நீதி சொன்ன கதையா ஆகிறாதே?” என்றதும் அவர் கூறியதற்கு அர்த்தம் தெரியாமல் திருதிருவென விழித்தான்.

“இல்லை புரியலை ஆண்டி” என்றவனின் அறியாமை அவருக்கு புரிய வர அவரே அதற்கு விளக்கமும் அளிக்கலானார்.

“மகாபாரதத்தில் அறிவுக்கும், விவேகத்துக்கும் இலக்கணமா இருந்தவன் விதுரன்... திருதராட்டிரன் அவனோட குழப்பத்தை எல்லாம் விதுரன்கிட்டே தான் சொல்லுவானாம்... அதுக்கு விதுரனும் நல்ல போதனைகளும், நீதிகளும் சொல்வானாம்... ஆனால், உண்மை என்னன்னா அவன் சொன்ன எதையும் திருதிராட்டிரன் கேட்டு நடந்ததில்லையாம்”

“அந்த மாதிரி நான் சொன்னதை கேட்டுட்டு உன் வீட்டுக்கு போனதும் மறந்து விட மாட்டியே?” என்றதும்...

“நிச்சயமா மறக்கமாட்டேன் ஆண்டி... அன்பழகன் அங்கிள் மட்டும் அன்னைக்கு ராத்திரி அங்கே வரலைன்னா இந்நேரம் என் கதி என்ன ஆகியிருக்குமோ நினைக்கவே குலை நடுங்குது”

“அங்கிள்கிட்ட தான் நான் அடிக்கடி பேசியிருக்கேன், பழகியிருக்கேன்... ஆனால், உங்களை இப்போ தான் நேரில் பார்க்கிறேன்... என்னை உங்க மகனுக்கு சமமா பார்த்துக்கிட்டீங்க, அதை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன் ஆண்டி”

“அப்போ நீ அந்த வாணி பொண்ணு கூட வாழ்ந்து விடுவ தானே?” என்றதும் கசப்பான முறுவலை உதிர்த்தவன்...

“வாழ முடியுமான்னு தெரியலை, அதுக்கு வழியில்லைன்னு நிச்சயமா தெரியும்... ஆனால் என் மனைவியும், மகளும் என் கூட தான் இனி இருப்பாங்க”

“இங்கே பாருப்பா அந்த பொண்ணு இந்த இடைப்பட்ட காலத்தில் என்னென்னா கஷ்டப்பட்டாளோ, யார்கிட்டே எல்லாம் என்ன பேச்சு வாங்கி அவமானப்பட்டாளோ, அதெல்லாம் அவ மறக்க நாளாகலாம் அதுவரைக்கும் பொறுமையா இரு” என்று கூறியிருக்க, ரஞ்சனுக்கு ஏனோ அதற்கு பதில் கூற மனம் சிறிதும் அசையவில்லை.

அவன் மனம் மட்டும் உடனே மாறிவிடுமா என்றுணர்ந்தவர்... “இனிமே எனக்கு நீயும் ஒரு மகன் தான் எப்போ என்ன உதவினாலும் கேட்கலாம்” என்றவர் அவனை ஆசிர்வதித்து அனுப்பி வைத்திருந்தார்.

**********************

அரசி, அர்ஜுன் இருவரும் தேன்நிலவில் தங்கள் வாழ்வை தொடங்க சித்தமாகியிருந்தனர்... அந்திசாயும் மாலைப் பொழுதில் தான் மூணாரை அடைந்திருந்தனர். தன் தோளில் தலை வைத்து சாய்ந்தபடி இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளை...

“என்ன டையர்டா இருக்கா?” பரிகாசத்துடன் வினவியவனை நேச பார்வையை வீசியவள்...

“ம்ஹும்... இல்லை புதுசா இருக்கு”

“எது நானா?”

“ஆமாம் நீங்க, இந்த சூழல், இந்த இடம் எல்லாமும் தான்”

“இன்னும் போகப் போக புதுசா தெரியுவேன்” என்று அவள் செவியில் கூறி முத்தமிட்டிருக்க, உள்ளுக்குள் புது வித உணர்ச்சி அலைகள் பிரவாகம் எடுத்ததில் கிளர்ந்தாள்.

“ச்ச்சீ... போங்க” என்று வெட்கத்தில் தடுமாறியவளை ஒரு மாதிரியாக பார்த்தவன்...

“எங்கேயும் போக முடியாது” என்றவனின் கிறக்க குரல் அவளை ஏதோ செய்தது... அவனிடம் பேசவே முடியாமல் பெண்மையின் நாணம் முட்டி மோதி அவளை தடுத்திருக்க கணவனை பாராமல், கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாய் நழுவிக் கொண்டிருந்தவளை அப்போதைக்கு விட்டு வைத்தவன், இரவில் அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த அறையில் அவன் வசம் சிறைபடுத்தியிருந்தான்.

“நானும் பார்க்கிறேன் அப்போ இருந்து நழுவிகிட்டே இருக்கிற?” என்றவன் அவளை தன் கைவளைவுக்குள் வைத்தபடியே தன் வலிமையான விரல்களால் அவள் மேனியில் கோலம் போட்டுக் கொண்டிருந்தான்.

“ப்ளீஸ் அர்ஜு...!” என்று சிணுங்கியவளின் மோக ராகத்துக்கு ரசிகன் ஆகியவன், மேலும் அவளை சீண்டி வெட்கத்தின் அழகை ரசனையுடன் ரசித்துக் கொண்டிருந்தவனை மோகனப் புன்னகையால் வசீகரித்தாள் அவன் மனையாட்டி.

“அரசிஇஈ...” தாபம் மேலோங்க கிறக்கமாக கூறியவன், வேட்கையுடன் அவளை தழுவிக் கொண்டிருந்தான். அவள் மேனியில் ஊறிய விரல்களின் பிரவேசத்தை அத்து மீற செய்து தேடலை அதிகரிக்க, உடலில் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தில் தானும் கிறங்கியவளாக மூர்ச்சையாகிப் போனாள்.

அவனின் ஈர முத்தங்களில் சுகமாக நனைந்து கொண்டிருந்தவளின் வெட்கச் சிணுங்கல்கள் மோக முனகல்களாக மாறியிருக்க, ஆணவன் பெண்ணவளின் சித்தத்தை கலங்கடித்து மயங்குற செய்ததில் மகுடிக்கு கட்டுப்பட்ட சர்ப்பம் போல் கட்டுண்டிருந்தாள்... அவர்கள் வாழ்க்கையின் தொடக்கமான ஓர் இனிய தாம்பத்ய உறவு அங்கே அரங்கேறியிருந்தது!!

விடிந்து வெகுநேரம் கடந்த பின்பே எழுந்தவர்களின் உள்ளங்கள் என்றுமல்லாத அளவிற்கு ஆனந்த கூத்தாடியது...

“எழ வேண்டாமா?” என்றவளின் கேள்விக்கு தன் முத்து பற்கள் தெரிய சிரித்தவன்...

“இப்படியே இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை” என்றவனை தலையணையால் போலியாக தாக்கிவிட்டு...

“மச்சானுக்கு ஆசை தான்” என்று நாவை ஆட்டி பலிப்பு காட்டிவிட்டு சென்றவளை

“ஏய்...” என்று கூறியபடி நெருங்கியவனின் கைகளில் அகப்படாமல் சடுதியில் குளியலறைக்குள் புகுந்து கொண்டிருந்தாள். அரசி, அர்ஜுன் இருவரும் பொங்கி வரும் காதலின் எல்லையான தாம்பத்யத்தை கடல் அலைகள் போல் தொட்டு காரை சேர்ந்து மீண்டனர்.

அர்ஜுன் தன் மனைவிக்கு அந்த மலை பிரதேசத்தின் அழகை கண்டு களிக்க செய்து ஆனந்தம் அடைய வைத்திருந்தான்... உணவிலிருந்து அனைத்தையுமே அவளுக்காக பார்த்துப் பார்த்து செய்ததில் தாயின் அரவணைப்பை மீட்டெடுத்து கொடுத்திருந்தவனை எண்ணி உணர்ச்சி வசத்துக்குள்ளானாள்.

அறையில் அவன் மார்பில் சாய்ந்து தன் சந்தோசத்தையும், அதை அளித்த அவனின் செயல்பாட்டுக்கும் தன் கண்ணீரால் நன்றி கூற...

“ஏய் அழாதே!” என்று அதட்டி அடக்கியவன், அவள் கண்ணீரை தன் விரல்களால் சுண்டிவிட்டான்.

“தேங்க்ஸ், அண்ட் லவ் யூ சோ மச்!” என்றவளின் தாடையை பற்றி தீவிரமாக பார்த்தவனின் பார்வையில் ஏதேனும் தவறு இழைத்துவிட்டோமா என்ற அச்சத்தில்...

“என்னாச்சு எதுவும் தப்பு பண்ணிட்டேன்னா?” என்று வார்த்தையாலும் அவனிடமே வினவ...

“ஆமாம்... தேங்க்ஸ் இப்படியா சொல்லணும்? லவ்வை சொல்ல இப்படியா உனக்கு கற்று கொடுத்தேன்... நீ சரியான மக்கு?” என்று முகத்தின் தீவிரம் மாறாமல் கூறியவனின் வார்த்தையில் போலி கோபத்துடன் தாக்கியவள்...

“நான் பயந்தே போயிட்டேன்”

“என்கிட்டே என்ன டி பயம்?”

“ம்ம்ம்... ஆமாம் உங்ககிட்டே நான் ஏன் பயப்படனும்” என்றவள் அவன் இதழ்களை முற்றுகையிட்டவள், அவன் கற்றுத் தந்த பாடங்களை அவனுக்கே படிப்பித்து காட்டி தான் அவனுக்கு சளைத்தவள் அல்ல என்பதை நிரூபித்திருந்தாள்.

அவர்களின் தேன்நிலவு நாட்கள் எதிர்பார்த்ததை காட்டிலும் இருமடங்கு திருப்தியுடன் களித்த பூரிப்பில் ஊர் திரும்பி அன்றாட வாழ்க்கைக்குள் பொருந்திப் போயினர்.

**********************

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அர்ஜுனுக்கு தொழிலில் புதிய வாடிக்கையாளர் வரவுகள் அதிகமாக வேலையும் நெட்டி முறித்தது... இதன் காரணமாக அரசியை சரி வர காண இயலாது போக அவனுடன் மனச்சுணக்கம் ஏற்பட்டது.

அன்றும் இரவு வெகுநேரம் கழித்து வந்தவனிடம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வரவேற்றிருந்தாள்.

“என்னடி ஒரு மாதிரி இருக்க, உடம்புக்கு ஏதும் முடியலையா?” என்று அக்கறையாக கேட்டிருக்க...

“ம்ச்... ஆமாம் ரொம்பத் தான் அக்கறை” என்று சலிப்புடன் கூறி அலுத்துக் கொண்டாள். கட்டிலின் மத்தியில் அமர்ந்து அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டவன்...

“என்ன டி ஆச்சு? எதுக்கு இப்போ இவ்ளோ சலிச்சுக்குற?”

“ஆமாம் வர வர என்னை கண்டுக்கிறதே இல்லை, உங்களுக்கு வேலை தான் முக்கியமா போச்சு... நான் ஒருத்தி எதுக்காக இங்கிருக்கிறேன்னு தெரியலை”

“வேற எதுக்காக என்னை பார்த்துக்க தான்... இந்த மாமாவை கவனிக்கத் தான்” என்று கூறி கன்னத்தில் அச்சாரம் பதிக்க, அவன் முகத்தை தன் கரங்களால் தள்ளிவிட்டவள்...

“இந்த அரைகுறை கம்ப்யூட்டரைஸ்ட் கொஞ்சல் எல்லாம் வேண்டாம் பேசாம தூங்குங்க” என்றவள் முகத்தை திருப்பிக் கொண்டு படுக்கையில் சாய்ந்துவிட்டிருந்தவளின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது... அவ்வப்போது அவள் உதடுகளும் முனக, அவளின் ஏக்கம் அவனுக்கு அப்பட்டமாக புரிந்ததும் தானும் அவளுக்காக வருந்தினான்.

“ஏய் ஏன் டி என்னை கஷ்டப்படுத்துற? நான் என்ன செய்ய முடியும், முன்னாடி விட ரெண்டு மடங்கு ஆர்டர் வருது, அதெல்லாம் முடிக்கிறது அவ்ளோ சுலபம் இல்லைன்னு உனக்கே தெரியும்” அர்ஜுன் எவ்வளவோ எடுத்து கூறியும் பேச்சை சிறிதும் சட்டை செய்யாது கண்களை மூடிய வண்ணம் மௌனத்தின் பிடியில் இருந்தவளை கண்டு அவனுக்கு ஆயாசமாகிப் போனது.

அன்றைய களைப்பில் அவன் கண்களும் தூக்கத்திற்கு கெஞ்ச ஒரு கட்டத்திற்கு மேல் அவளை சமாளிக்க முடியாமல் தன்னையுமறியாமல் உறங்கிப் போனான்... அதில் மேலும் கடுப்புற்றவள், அன்று இரவு முழுக்க சரியாக உறங்காமல் காலையில் கண்களும், முகமும் உப்பிப் போயிருந்தது. அர்ஜுன் அதை பற்றி விசாரித்தும், அவனுக்கு பதில் கூறாமல் அலட்சியப்படுத்தி விட்டு நகர்ந்தவளை இனி இப்படியே விடக்கூடாது என்று கருதயவன் ஒரு சிந்தாந்தம் மேற்கொண்டவனாக அவளிடம் பிரஸ்தாபித்தான்.

“நீயும் இனி மேல் ஆபிஸ் வா, என்னுடைய வேலையில் பாதி நீயும் பாரு” என்றதும், துணிகளை மடித்து வைத்து கொண்டிருந்தவள்...

“என்ன திடீர்ன்னு ஞானோதயம் வந்திருக்கு” தன் வேலையை தொடர்ந்தபடியே சாதாரணமாக வினவினாள்.

“வீட்டில் உட்கார்ந்துட்டு இருந்தா தானே என் கூட சண்டை போட காரணம் தேடிட்டு இருப்ப, என் கூட வந்து வேலை பார்த்தா அந்த குட்டி மூளை கண்டதையும் யோசிக்காது பாரு அதான்” என்றவனை புருவம் உயர்த்தி ஒயிலாக பார்த்தவள்...

“ஓஹ்...! இப்போவும் என் கூட இருக்கணும்னு வர சொல்லலை... என் தொல்லை தாங்க முடியாம என்னை வேலையில் தள்ளப் பார்க்குறீங்க?” என்று அதற்கும் குதர்க்கமாக பேசியவளை கண்டு முறைத்து பார்த்தவன்...

“இங்கே பாரு சும்மா தொட்டது தொன்னூருக்கும் குத்தம் கண்டுபிடிக்காதே... ஆபிஸ்ல என் கூட வேலை செய்யத் தானே கூப்பிடுறேன், அது நம்ம கம்பெனி, நீயும் அதில் ஒரு முதலாளி அதை நல்லா மண்டையில் ஏத்திகிட்டு வா” என்றதில் மறுப்பு கூற முடியாமல், அவனுடன் சென்று தொழிலில் தன்னை ஆட்படுத்திக் கொண்டாள்.

**********************

மனோரஞ்சன் சில நாட்கள் சுய சித்தனையில் ஆழ்ந்து விட்டிருந்தான்... தரன் ஆட்கள் வைத்து தான் தன்னை தாக்கியிருந்திருப்பான் என்று அன்பழகனிடம் கூறினாலும், அதிலும் ஏதோ ஓர் இடர்பாடு இடித்து கொண்டே இருந்தது. அவனால் அத்தனை சுலபமாக அதை கண்டுப்பிடிக்கவும் இயலாமல் போக, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தவன் இறுதியில் ரமா கூறிய அறிவுரையையும், ஆலோசனையையும் கருத்தில் கொண்டு வாணியையும், குழந்தையையும் அழைத்து வர முடிவு செய்திருந்தான்.

இதை பற்றி அவர்களிடம் அவன் வீட்டினரிடம் பேச தக்க சமயம் பார்த்து காத்திருந்தவன், அன்றே அதற்கு சமயமும் வாய்த்த விட அவர்களிடம் தன் சங்கல்பத்தை பிரஸ்தாபித்திருந்தான்.

“நான் தேனி போகப் போறேன்” என்றதும் மூவரும் ஒரு சேர அதிர்ந்தனர். அவன் கூறிய சில வினாடிகள் அங்கே குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவிற்கு நிசப்தம் நிலவ அதை கலைத்தார் யமுனா...

“என்ன உனக்கும் அவளை போல பைத்தியம் பிடிச்சிருச்சா? அங்கே எதுக்காக நீ போகணும்?”

“வாணியை கைவிட்டேனா, சம்முவோட உறவும் எனக்கு இல்லாமல் போயிருமோன்னு பயமா இருக்கு?” என்று கூறியவனின் அச்சம் மெய் என்பதை அவன் முகம் காட்டியது.

“நீ எதுக்காக பயப்படுற ரஞ்சன்? உன் உறவு வேணும்னு அவ நினைக்க வேண்டாமா? போயும் போயும் அவளை எல்லாம் ஒரு பொருட்டா நினைச்சு இப்படி பயப்படுற?”

“அவளை பத்தி தெரிஞ்ச நீங்களே இப்படி சொல்லலாமா சித்தி? அவ பிடிவாதக்காரி! சொன்னா சொன்னதை செய்து காட்டுவா”

“இருக்கட்டும் ரஞ்சன்... அவ பொண்ணு, நீ பையன் அவளை எதிர்த்து நிற்க வேண்டாமா?” சிறியவர்களின் ஊடல்களை பெரியவர்கள் தீர்க்க தான் வழி சொல்வார்கள் ஆனால், இங்கோ தழைந்து சென்றாவது தன் உடன் பிறவாத சகோதரியாய் நிலைக்க வைக்க வேண்டும் என்பவனை, ஆண் பெண் என்கிற தாரதம்மியத்தால் உருச்சிதைத்து கொண்டிருந்தார் யசோதா.

“ம்ச்... என்னத்தை எதிர்த்து நிற்கிறது ஏற்கனவே எதிர்த்து நின்னு பட்டதெல்லாம் போதாதா... அவளை மீறி என் நிச்சயத்தை நடத்த நினைச்சே நிறுத்திட்டா... இனி கல்யாணம்ங்கிற பேச்சுக்கே இடமில்லாம செய்துட்டா... இன்னும் நான் எதுக்காக போராடணும்?”

“அதுக்கு நீ தான் அவ மேல கோபப்படணும்”

“ம்ச்... சம்மு என்ன செய்திருந்தாலும் அவளை வெறுக்கவோ, என் கோபத்தை காட்டி அவளாவே என்னை வெறுக்க வைக்கிற காரியத்தையோ எல்லாம் என்னால் செய்ய முடியாது” என்றவன் அவன் நடுரோட்டில் அடையாளம் தெரியாத நபர்களிடம் அடி வாங்கிய கதையை கூறியிருக்க உலைக்கலனாக கொதித்தனர்.

“என்னடா ரஞ்சன் சொல்லுற?”

“ஏன் இதை பற்றி எங்கிட்ட முன்னாடியே சொல்லலை”

“அந்த கூலிக்கார பையனை சும்மா விடக் கூடாதுங்க, இப்போவே போலீஸ் ஸ்டேஷன் போகலாம் வாங்க” என்று ஆவேசப்பட்டனர்.

“ரொம்ப ஆத்திரப்படாதீங்கம்மா... இப்போ போலீஸ் ஸ்டேஷன் போனா மட்டும் என்ன நடந்திரும்? அந்த தரனை கை வச்சா பாதிக்கப் படப் போறது நம்ம சம்மு வாழ்க்கை தான்”

“ஆமாம் சம்மு... உன் வாழ்க்கையையே சீரழிச்ச உன் தங்கிச்சி உறவு இன்னும் உனக்கு வேணுமா?”

“இன்னும் அவ சீரழிக்க ஆரம்பிக்கலை, என்னை வாழ வைக்கத் தான் பார்க்கிறா, அவளை அந்த முடிவை எடுக்கறதுக்கு முன்னாடி நான் என் வாழ்க்கையை சீர் படுத்திக்க முந்திக்கிறேன்”

“டேய் உளராதே! பெருச்சாலிக்கு பயந்து வீட்டை இடிச்ச கதையா இருக்குது நீ பேசுறது?”

“நீ அங்க போகக் கூடாது அவளை கூட்டிட்டு வரக்கூடாது” என்று ஆவேசமாக கூற, அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு பொறுமை சிறிது சிறிதாக விடுதலையாகிக் கொண்டிருந்தது.

“கொஞ்சம் எல்லாரும் நிறுத்தறீங்களா” என்று உச்சஸ்தாயில் அலறி கத்தியவனின் குரலில், அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, அங்கே சில வினாடிகள் மயான அமைதி நிலவியது.

“சும்மா ஆளாளுக்கு கண்டபடி பேசிகிட்டு இருக்காதீங்க... என்னை ஆள் வச்சு அடிச்சது அவன் தான்னு நாம நினைச்சாலும், அவனுக்கு பின்னாடி யாரோ இருக்காங்க, அது யாருன்னு தெரியலை... இப்போ அதை எல்லாம் அலசிகிட்டு இருந்தேன்னா வாழ வேண்டிய வாழ்க்கை வீணாகிப் போயிரும்”

“அப்புறம் அரைக் கிழவன் ஆனவன்னு சொல்லி பெண் தரமாட்டாங்க... அப்புறம் நான் வாழ்க்கை வாழ்ந்தா என்ன இல்லைன்னா என்ன... நான் ஜாலியா இருக்கணும்னு நினைச்சேன் தான், அதுக்காக ஒண்ணுக்கு ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிட்டு ஜெயில்ல போய் களி திங்க நான் தயாரா இல்லை... என் சந்தோஷம் எல்லாம் எனக்கு சந்தோஷம் தரக் கூடியதா மட்டுமா தான் இருக்கணும்... அதை விட்டுட்டு போராட்டம், வன்முறை, சண்டை நீயா நானான்னு போர் செய்றதெல்லாம் எனக்கு விருப்பமில்லை”

“என் வாழ்க்கை இப்படி தான் அமையும்ன்னு இருந்தா, யார் என்ன செய்ய முடியும்? சும்மா நான் பிடிவாதமா இருந்து விபரீதமா ஆகப் போய் என் வாழ்க்கை தொலைக்க முடியாது” சற்று அழுத்தமாக தெளிவாக பேசினான். அவனின் பேச்சை கேட்ட குடும்பத்தினர் கோந்து வைத்து ஒட்டியது போல் வாயை இறுக மூடிக் கொண்டனர்.

“நான் நாளைக்கு தேனி கிளம்பப் போறேன் பெரியவங்களா நீங்க கூட வந்தீங்கன்னா கூட்டிட்டு போறேன்”

“வர முடியாதுன்னா என்ன டா செய்வ?”

“நானே போயிக்கிறேன்” என்று கூறிவிட்டு விருட்டென்று அந்த இடத்தில் இருந்து நகர்ந்தவனை விரோதத்துடன் பார்த்திருந்தனர்.

“என்ன அவன் இப்படி பேசிட்டு போறான்” என்று பாஸ்கரன் மனைவியிடம் கேட்க...

“விடுங்க நாளைக்கு அவன் கூட நாம கிளம்பலாம்”

“நாம ஏன் க்கா கௌரவத்தை விட்டுட்டு அந்த வீட்டுக்கு போகணும்?”

“இங்கிருந்து மட்டும் என்ன செய்திற முடியும்? நாம அங்க போறது அவன் பொண்டாட்டியையும், பிள்ளையையும் அழைச்சுட்டு வரதுக்கு இல்லை... அவங்க வீட்டை அவமானப்படுத்திட்டு நம்ம வீட்டு பெண்ணையும் அழைச்சுட்டு வரதுக்கு தான்” என்றவரின் கண்களில் குரோதம் மின்னியது.

அந்தோ பரிதாபம்! அவர்களுக்கு அங்கே பெருத்த ஏமாற்றம் தான் கிடைக்கப் போகிறது என்பதை உணரவேயில்லை.

**********************

அரசி கணவனுடன் அழுவலகம் செல்வது அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரித்திருந்தது... தனக்கென பார்த்துப் பார்த்து செய்யும் கணவனை எண்ணி அவள் பெருமையில் திளைக்காத நாளே இல்லை என்றே சொல்லலாம்... உலகிலேயே மிகுந்த ஆனந்தத்துடன், அமைதியுடன் வாழ்க்கை இருப்பதாக சற்று கர்வம் மிக எண்ணிக் கொண்டிருந்தாள் என்று கூட சொல்லலாம். ஆனால் அப்படி எல்லாம் செல்ல நான் விட்டுவிடுவேனா என்று விதி நினைத்திருக்க, அவளின் வாழ்வில் புயல் வீச வைக்க விதி அவள் தோழியின் ரூபத்தில் வந்திருந்தது.

அர்ஜுன் தொழில் சம்மந்தமாக மதுரை வரை செல்ல வேண்டிய வேலை இருக்க, தன் மனைவியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றான். தன் கணவனுடனான பயணத்தை விரும்பி தொடர்ந்தாள் அரசி. பணி சம்மந்தமாக அனைத்தும் முடிந்திருக்க இருவரும் ஒன்றாக சேர்ந்து துணிக் கடைக்குள் சென்றனர்.

“அரசி நீ பார்த்துட்டு இரு நான் ஒரு முக்கியமான கால் பேசணும் பேசிட்டு வந்திடறேன்” என்று விட்டு சென்றிருந்தான். குழந்தைகள் பிரிவிற்கு சென்றவள் நிலா, வியனி இருவருக்கும் ஆடை தேர்வு செய்துக் கொண்டிருந்த சமயம்...

“ஹேய் அரசி!” என்ற உற்சாக குரலில் திரும்பியவள் அங்கே நின்றிருந்த, அவள் நெருங்கிய தோழியை கண்டு தானும் மகிழ்ந்தாள்.

“ஹேமா எப்படி இருக்கிற? எங்கே உன் ஹஸ்பண்ட் வரலை?” என்றதும் அவள் முகம் கூம்பிப் போக, மூன்று வயதான அவளின் மகள்...

“டேடி எங்க கூட இல்லை ஆண்டி” என்று சோகமே உருவாக கூறியிருந்தவளை கண்டு அவளிடம் அதை பற்றி விசாரித்தாள்.

“ஏய் என்னாச்சு டி, ஏன் குழந்தை இப்படி சொல்லுறா?”

“என்ன டி சொல்ல சொல்லுற? என் கூட குடும்பம் நடத்திகிட்டே அவருடைய உறவுக்கார பொண்ணு ஒருத்தர் கூட தொடர்பும் வச்சிருந்திருக்காரு, என்னால் எப்படி அதை ஏற்றுக்க முடியும்? அப்படியும் மன்னிச்சு ஏற்றுகிறேன் சொன்னேன்... ஆனால், அவருக்கு தொடர்பை விட முடியாதுன்னு பிடிவாதமா சொல்லிட்டாரு” என்று இறுகிய முகத்துடன் வறண்ட குரலில் கூறியவளின் பேச்சில் அரசி திகைத்து நோக்கினாள்.

“என்ன டி இப்படி சொல்ற? நீங்க ரெண்டு பேரும் எவ்ளோ லவ் பண்ணினீங்க அதுவும் உன் ஹஸ்பண்ட் உன்னை தங்கத் தட்டில் வச்சு தாங்காத குறையா பார்த்துகிட்டாரே?”

“ஆமாம் ஆரம்பத்தில் என்னமோ அப்படி தான் இருந்தாரு... ஆனால் ரொம்ப நாள் பிரிஞ்சிருந்த உறவுக்காரங்க ஒண்ணு சேர்ந்துட்டாங்கன்னு எல்லாரும் சந்தோசம் தான் பட்டோம், ஆனா அந்த சந்தோசமே எங்க வாழ்க்கையை குறி வச்சு அழிக்கும்னு நினைக்கலை”

“நீ எப்படி இதை கண்டுக்காம இருந்தா? ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கலையா?”

“ம்ஹும்... முடியலை டி, ஏன்னா அவர் அவ்ளோ நல்லா என்கிட்டே நடிச்சுட்டு இருந்திருக்கிறார்”

“சரி கடைசியில் எப்படித் தான் தெரிய வந்தது... உறவுக்கார பெண்ணோட புருஷன் மூலமா தெரிய வந்தது” என்றதும் அரசி ஷாக் அடித்தது போல் அதிர்ந்தாள்.

“என்ன...?!”

“ஆமாம் அரசி அவளுக்கும் கல்யாணம் ஆகி ஒரு மகன் இருக்கான்... அவ புருஷன் குடிகாரன், அதனால் அவளால அங்கிருக்கிற சூழ்நிலை சமாளிக்க முடியாம இவர்கிட்டே உதவி கேட்க போய் ரெண்டு பேருக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கு”

“ச்சீ... நான் அவர் மேல எவ்ளோ நல்ல மதிப்பை வச்சிருந்தேன்... ஆனால் இவ்ளோ சீப் மெண்டாலிட்டியா”

“இது மட்டுமில்லை எல்லாம் தெரிஞ்சு விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததும் அவளும் நம்ம கூட இருந்துட்டு போகட்டும், அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சொன்னாரு பாரு, நான் அந்த நிமிஷமே முடியாது போடான்னு சொல்லிட்டு வந்துட்டேன்... ரீசெண்டாதான் டிவோர்ஸ் சாங்க்சன் ஆச்சு”

“அந்த மாதிரி ஆள் கூட வாழுறதுக்கு நீ தனியாவே வாழலாம்”

“சாரி டி என் கதையை சொல்லி உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன், உன் கல்யாணத்துக்கு கூட இதனால தான் வர முடியலை”

“அதனால் என்ன விடு, இனி மேல் நீ எப்போவேணா வீட்டுக்கு வாடி”

“என்னுடைய சோக கதையை சொல்லி உன்னை பத்தி கேட்க மறந்துட்டேன் பாரு, ஆமாம் உன் ஹஸ்பண்ட் யாரு? எப்படி பார்த்துக்கிறாரு?” என்றதும் அவளின் கதை அனைத்தையும் சுருக்கமாக கூறியிருந்தாள்.

“நீ லவ் மேரேஜ் சொன்ன என்னால் நம்பவே முடியலை, எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ஆனால், அர்ஜுன் நீ சொல்லுவியே உங்க பேமிலிக்கு நிறைய ஹெல்ப் பண்ணுவாருன்னு அவரா?”

“அவரே தான்” என்றதும் அவளை கவலையுடன் பார்த்திருக்க அரசி என்னவென்று விசாரித்தாள்.

“என்ன டி ஆச்சு திடிர்னு இப்படி அமைதியாகிட்ட?”

“இல்லை சொல்றேனேன்னு தப்பா நினைக்க வேண்டாம், நீ என் க்ளோஸ் பிரெண்ட் அதான் சொல்லாமையும் இருக்க முடியலை” என்று பீடிகை போட்டவளை...

“ஏய் எதுனாலும் தாராளமா சொல்லு என்கிட்டே என்ன தயக்கம்?”

“இல்ல டி உன் ஸ்டேட்டஸ் வேற, உன் ஹஸ்பண்ட் ஸ்டேட்ட்ஸ் வேற எதுக்கும் நீ சேஃபா இரு... யார் எப்போ எப்படி மாறுவாங்கன்னு தெரியாது”

“அதெல்லாம் அர்ஜுன் அப்படிப்பட்ட தப்பான ஆள் கிடையாது... ஹி இஸ் ஜென்டில்மேன்” என்றவளின் எண்ணம் கூட பின்னாளில் மாறப் போவதை ஏனோ அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.

தன் தோழியுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு, கணவனிடமும் அவளை அறிமுகப்படுத்திவிட்டு, மூவரும் அன்று இரவு உணவை சேர்ந்து முடித்துவிட்டே கிளம்பியிருந்தனர்.

அன்றிரவு தன் தோழியின் விவகாரத்தை கணவனிடம் அரசி பகிர்ந்து கொண்டிருக்க... “அவ பாவம் தானே அர்ஜு... ஒரு பிள்ளையை வச்சுட்டு அந்த மனுஷனுக்கு எதுக்கு இப்படி ஒரு குறுக்குபுத்தியோ?”

“அதை பத்தி இப்போ நாம பேசி ஆகப் போகிறதென்ன அங்கத்து சூழ்நிலை தெரியாம நாம அதை பற்றி டிஸ்கஸ் பண்ணுறதே வேஸ்ட்” என்று முடித்திருந்தான்... அர்ஜுனை பொறுத்த வரையில் மூன்றாம் மனிதரின் வாழ்க்கை அவர்களுக்கானது... அதில் நாம் கருத்து சொல்ல என்ன இருக்கிறது என்ற எண்ணம்... ஆனால், அதை புரிந்திராத அரசிக்கோ கணவன் மேல் சிறு ஏமாற்றம் எழுந்தது... அப்போதே ஏமாற்றத்தை கணவனிடம் பேசி தீர்த்துக் கொண்டிருந்தாள் பின்னாளில் அவள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சிக்கலை தவிர்த்திருக்கலாமோ.

அப்போதைக்கு அந்த பேச்சை விடுவித்தவள் வேறு பேச்சுக்கு தாவினாள்... “அவளுடைய பாப்பா செம க்யூட் நமக்கு பாப்பா பிறந்தா யாரு மாதிரி இருக்கும்?” என்று கற்பனையில் கனவு கண்டவளை போலியாக முறைத்தவன்...

“என்ன இப்போவே பாப்பாவா? முதல்ல நீ என்னை கவனி, அப்புறமா குழந்தையை பற்றி யோசிக்கலாம்” என்று எதார்த்தமாக கூறியிருக்க, அவளுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றலும் கணவனுக்காக உடன்பட்டிருந்தாள்.



சுவடுகள் தொடரும்....



**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்-23 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்பு-24

மனோரஞ்சன் தன் குடும்பத்தினருடன் எதிர்பாராமல் தரனின் இல்லம் வந்திறங்கியிருக்க அனைவருக்கும் பெரும் வியப்பாகிப் போனது... சம்யுக்தா வெகு இயல்பாக அவர்களை வரவேற்றதில் தரனின் முகம் மிளகாயை அரிது பூசியது போன்று சினத்தில் சிவந்து விட்டிருந்தது... என்ன இருந்தாலும் தன் மகளுக்கு வாழ்க்கை அமைந்த இடம் அது மட்டுமின்றி மருமகளும் அந்த வீட்டை சேர்ந்தவள் தான் என்பதை கருத்தில் கொண்டு குழலி, குரு, கேசவன் மூவரும் மரியாதையுடன் வரவேற்றிருந்தனர்.

பாஸ்கரன், யமுனா, யசோதா மூவரும் அந்த இடத்தில் அமர்ந்திருப்பதே அதிகபட்சமாக எண்ணிக் கொண்டவர்கள் தண்ணீரை தவிர வேறெதுவும் உட்கொள்ளவில்லை.

சில கணங்களுக்கு நிசப்தமே நிலவ வெளியே சென்றிருந்த வாணியும், அரசியும் அப்போது தான் உள்ளே நுழைந்திருக்க, ரஞ்சனையும் அவனுடன் வந்திருந்த குடும்பத்தினரின் வரவையும் கண்டு திகைத்தவர்கள் நொடிக்குள் மாறி சம்பிரதாயமாக...

“வாங்க!” என்று வரவேற்று விட்டு வாணி வேகமாக உள்ளே சென்றுவிட்டாள். அவளுடன் சேர்ந்து அரசியும் செல்லாமல் அங்கேயே தேங்கி நின்றாள். அனைவரும் எப்படி பேசுவது, எதில் ஆரம்பிப்பது என்று விழித்துக் கொண்டிருக்கும் சமயம் சம்யுக்தா தானே பேச்சை ஆரம்பித்து வைத்திருந்தாள்.

“என்ன ரஞ்சன் அண்ணா இங்கே திடீர் வரவு... அதுவும் இந்த இடத்திற்கு பொருந்தாத சிலர் எல்லாம் வந்திருக்காங்க” ரஞ்சனிடம் உரிமை வைத்து பேசியவள், அவள் குடும்பத்தினரை ஒதுக்கியே பேசினாள்... அவளின் பேச்சில் யமுனா, யசோதா இருவருக்கும் ஆத்திரம் வந்து விட்டிருந்தது.

“என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு”

“நீங்களும் விசித்திரமா இங்கே வந்திருக்கீங்களே அதனால தான்” சிறிதும் யோசிக்காமல் பதில் கூறியவளை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஏன் சம்மு நம்ம வீட்டு ஹால் அளவு தான் இந்த வீடே இருக்கு, இதுலையா நீ குடும்பம் நடத்துற?” என்றதும் தரனுக்கு சுள்ளென்று ஏறியிருக்க, அவன் பேச வாயெடுக்கும் முன் சம்யுக்தா முந்தி கொண்டவள்...

“வீடு தான் சின்னது... ஆனால் இங்கிருக்கவங்க மனசு ரொம்ப பெருசு பெரியப்பா” என்றதும் யசோதா பொறுமையிழந்தவர்...

“இதுக்கு தான் இங்கே வர வேண்டாம்னு சொன்னேன் கேட்டியா?” என்று சச்சரவை ஆரம்பித்து வைக்கும் நோக்கத்துடன் கொளுத்திப் போட, அவரை தொடர்ந்த யமுனா...

“நம்ம ஸ்டேட்டசில் கல்யாணம் பண்ணியிருந்தா இங்கிதம் தெரிஞ்சு நடந்திருப்பா, தராதரம் தெரியாத இடம்ன்னா இப்படித் தான்” என்று முகத்தை சுளித்து தூஷணையுடன் நிந்திக்க, அதுவரை மருமகளின் பேச்சில் அமைதியாக இருந்த கேசவன், குரு இருவருக்கும் தர்ம சங்கடத்துடன் அவர்களை நோக்கினர்.

“இங்கே பாருங்கம்மா நீங்க சொல்ற மாதிரி இங்கே வசதி இல்லாமல் இருக்கலாம்... ஆனால் மானமும், மரியாதையும் நிறைய இருக்கு, அதனால் எங்களை குறைவா பேசாம இருக்கிறது நல்லது” என்றதும்...

“ஏன் பேசினா என்ன செய்வீங்க?” பாஸ்கரன் சற்று திமிராகவே வினவியிருக்க,

“கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளவும் தயங்கமாட்டோம்” துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டு போல் தரனிடமிருந்து காட்டத்துடன் பாய்ந்து வந்த பதிலில் பாஸ்கரன் உக்கிர மூர்த்தியானார் வெடுக்கென்று எழுந்தவர்...

“எங்கே கழுத்தை பிடிச்சு தள்ளு டா பார்ப்போம்... நீயெல்லாம் ஒரு ஆளுன்னு உன்னை போய் எங்க வீட்டு பொண்ணு கல்யாணம் பண்ணியிருக்கிறா பாரு, அதை சொல்லணும்... நீ வா மா போகலாம் இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவன் கூட குடும்பம் நடத்திட்டு... ச்சேய் இது நீ இருக்க வேண்டிய இடமே இல்லை சம்மு” என்று அவதூறாக மொழிந்து அவமானப்படுத்தியதில் அனைவருக்குமே சினம் சீறிக் கொண்டு எழ...

“பெரியப்பாஆஆ... அவ்ளோ தான் உங்களுக்கு மரியாதை! இப்போ நீங்க கிளம்பலை, அப்புறம் நடக்கிறதே வேற” என்று சம்யுக்தா காரமாக கூறினாள். ரஞ்சனுக்கு இனி பொறுமையாக இருந்தால் அவன் வாழ்க்கை அதோகதி தான் என்று உணர்ந்தவன்...

“நீங்க எதுக்காக என் கூட வந்தீங்க? என் பொண்டாட்டி, பிள்ளையை சமாதானப்படுத்தி கூட்டிட்டு போகவா... இல்லை, எங்க வாழ்க்கையில் சிக்கல் உண்டாக்கவா?” ரஞ்சனும் கிடந்துக் கொண்டிருக்க கொதித்துப் போன யமுனா தானும் சீறினார்.

“டேய் வாயை மூடு டா இதுக்குத் தான் சொன்னேன் இங்கெல்லாம் வர வேண்டாம்ன்னு கேட்டியா? இப்போ பாரு நம்மளையே வெளியே போக சொல்றாங்க, நீ வா நாம போகலாம் இதுக்கு மேல இங்கிருந்தா நம்ம கௌரவம் தான் பாதிக்கும்”

“நான் வர முடியாது... முதலில் நீங்க இங்கிருந்து கிளம்புங்க... இல்லன்னா, அவங்களுக்கு முன்னாடி நான் உங்களை விரட்டி அனுப்ப வேண்டியதா இருக்கும்” என்று கறாராக கூறியதும்... ரோஷத்தில் நாசி விடைத்துக் கொள்ள...

“எங்களையே எதிர்த்து பேசுறியா? நீயெல்லாம் பட்டாத் தான் திருந்துவ, இவங்க உன்னையும் அடிச்சு தான் விரட்டுவாங்க பாரு” என்ற பாஸ்கரன் மனைவி, மைத்துனியுடன் கிளம்பிவிட்டிருந்தார்.

அங்கிருந்து கிளம்பும் முன்... “இவனை நம்பி உங்க பொண்ணை அனுப்பி வச்சா நாங்க பொறுப்பில்லை, அப்புறம் என்ன வேணாலும் நடக்கலாம்” என்று வஞ்சினத்துடன் அபாய மணியை அடித்து விட்டு சென்றிருக்க, அனைவருக்குமே கிலி பிடித்துக் கொண்டது... அவர்களின் நிலையை அறியாத ரஞ்சன் தான் வந்த நோக்கத்தை பற்றி பேசலானான்.

“என் வீட்டில் இருக்கிறவங்க பேச்சை பெருசா எடுத்துக்க வேண்டாம்... நான் வாணியையும், குழந்தையையும் கூட்டிட்டு போகலாம்னு வந்திருக்கேன்... ப்ளீஸ், என்னோட அனுப்பி வையுங்க” என்றதும் அதுவரை அறையிலேயே இருந்து அவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த வாணிக்கு எங்கிருந்து தான் அத்தனை ஆவேசம் வந்ததோ காற்றை கிழிப்பது போல் அசுர வேகத்தில் ரஞ்சன் இருந்த முன்னறைக்கு வந்தவள்...

“எந்த நோக்கத்தில் என்னை கூப்பிடுறீங்க? இனி எவளையும் கல்யாணம் பண்ண முடியாது போனா போகட்டும் இவளோடவே வாழ்ந்திரலாம்னு வந்திருக்கீங்களா?” என்று ஆவேசத்துடன் சிடுசிடுத்தவளை பார்த்திருந்தவர்களுக்கு, அவள் கோபத்தின் நியாயம் புரிய மௌனமாக புரிந்தனர். அவளின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ரஞ்சனின் முகம் கருத்து விழுந்தது.

“சொல்லுங்க...! உங்க அம்மா ப்பா நினைச்சா பொண்ணுங்களை வரிசையில் நிப்பாட்டுவாங்களே, போய் அந்த வரிசையில் இருக்கிறவங்கள்ள யாரையாச்சும் பார்த்துக்கோங்க” என்று வெறுப்புடன் மொழிந்து விட்டு விருட்டென்று திரும்பி நகர்ந்திருக்க, ரஞ்சன் கால்கள் ஆணியடித்து போல் அங்கேயே வேரூன்றி நின்றுவிட்டான்.

தன் தங்கையின் முடிவை ஆதரித்த தரன் ரஞ்சனை நெருங்கி... “அதான் அவ வர விருப்பம் இல்லைன்னு சொல்லுறாளே கிளம்பு” என்று கூறியதும், கணவனை முறைத்தப்படி கண்களால் கண்டித்தாள் சம்யுக்தா.

“அவ தான் கோபத்தில் பேசுறான்னா... நீங்க நிதனமா பேச வேண்டாமா? அவளுக்கு நாம தான் புரிய வைக்க முயற்சி பண்ணனும்?” என்றவள், குழலியை நோக்கி...

“உங்க பொண்ணு கடைசி வரைக்கும் இப்படியே இருந்தா, உங்களுக்கு மனசு நிறைஞ்சு போயிருமா?” என்க... இல்லை என்பது போல் இடமும் வலமும் தலையசைத்தார்.

“அப்போ உங்க மகனை பொறுமையா இருக்க சொல்லுங்க”

“உங்க வீட்டாளுங்க பேசினதை நீ கேட்டுட்டு தானே மா இருந்த... எந்த நம்பிக்கையில் அவளை அவ புருஷன் கூட அனுப்புறது? நாளைக்கு அவளுக்கு ஒண்ணுன்னா நாங்க என்ன பண்ணுவோம்” என்று கேசவனும்...

“என் பொண்ணு தப்பு பண்ணிட்டா தான், அவளால் அவமானம் ஏற்பட்டிருச்சு தான், அதுக்காக அவளை எக்கேடோ கெட்டுப் போன்னு விட்டிற முடியுமா? இல்லை; உங்க வீட்டில் சொல்லுற மாதிரி ஏதும் விபரீதமா நடந்துருச்சுன்னா, நாங்க காலனுக்கு தூக்கி கொடுக்க முடியுமா? அதுக்கு அவ எங்க பொண்ணா இப்படியே இருந்துட்டு போறது நல்லதும்மா” என்று குருவின் பேச்சில் மகள் மேல் உள்ள பாசம் புரிந்தவளாக சம்யுக்தா தமையனிடம் பார்வை சமிஞ்ஞையால் நீ பேசு என்று குறிப்பு காட்டியதை புரிந்துக் கொண்டவனாக தான் பேசலானான்.

“நீங்க ஏன் இப்படி பேசுறீங்கன்னு எனக்கு புரியுது, எங்க வீட்டில் பேசினதை மறந்துருங்க... வாணி என் பொறுப்பு, அவளை நல்ல படியா வாழ வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்று கூறிய ரஞ்சனை நம்பாத பார்வை பார்த்தனர்.

“வேண்டாம் வேண்டாம்ன்னு சொன்னவன் திடிர்னு வேணும்னு சொல்லுறதையே எங்களால் நம்ப முடியலை... இதுல உங்க வீட்டில் உள்ளவங்க எங்க பெண்ணுக்கு என்ன ஆனாலும் பொறுப்பில்லைன்னு சொல்றாங்க... அவங்க சொல்ற மாதிரி எதுவும் ஆகிட்டா, பொண்டாட்டியை கை கழுவின கையோட நீ புது மாப்பிள்ளை ஆகியிருவ, நாங்க தான் எங்க பெண்ணை இழந்துட்டு நிற்கணும்” இறுகிய குரலில் அவனுடன் வாணியை அனுப்ப இயலாது என்று பிரஸ்தாபித்தவனை வாடிய முகத்துடன் பார்த்தவன்...

“எங்க வீட்டை சமாளிக்க வேண்டியது என் பொறுப்பு... அவங்க சொன்ன மாதிரி வாணிக்கு எதுவும் நடக்காது... நீங்க என்னை நம்ப வேண்டாம் பரவாயில்லை, ஆனால் எங்க வீட்டு பெண் சம்யுக்தா இங்கே தானே வாழ்ந்துட்டு இருக்கிறா, எனக்கு எங்க குடும்பத்திலேயே சம்மு மேல தான் பாசம் அதிகம் இது எங்க வீட்டுக்கும் தெரியும், உங்களுக்கே தெரியும் சம்மு உங்க வீட்டு பெண் வாணிக்கு தான் ஆதரவுன்னு அப்படி இருக்கும் போது அவ பேச்சை தட்டாமல் போகமாட்டேனே அவளையாச்சும் நம்புங்க” என்று முடித்தவன் தங்கையை கெஞ்சுதலாக பார்க்க, அவனின் மனைவியின் மேல் கொண்ட சகோதர பாசம், அவனுக்கே உரித்தான மனைவி என்னும் தனிப்பட்ட உடைமையின் உரிமை தன்மையினால் ஏற்பட்ட பொறாமையுணர்வில் உள்ளம் புகைந்தவன்...

“இங்கே பாரு உன் தங்கச்சியை நான் காதலிச்சு கல்யாணம் பண்ணிருக்கேன் தான், அதுக்காக என் தங்கச்சி வாழ்க்கையோட அதை முடிச்சு போடாதே, ஆனால் அது வேற, இது வேற” என்று கறாராக கூறியவன் அடிக்கண்ணால் மனைவியை துளைத்துக் கொண்டிருக்க, அவளோ ‘பசப்பாதே’ என்பது போல் அவன் மட்டும் அறியும் படியாக உதட்டை வளைத்து காண்பித்து விட்டு, தன் தமையனுக்காக வீட்டினரிடம் பேசலானாள்.

“மாமா ரஞ்சன் அண்ணன் சொல்லுற மாதிரி வாணிக்கு எதுவும் நடக்காது, அதுக்கு நான் உத்திரவாதம் தரேன், உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இருந்தா என் பொறுப்பில் வாணியை அனுப்பி வையுங்க” என்றதும் அவர்கள் சிந்திக்க ஆரம்பிக்க, தரன் மனைவியின் மேல் கனல் வீச முறைத்தான், சம்யுக்தா அதை உணர்ந்தாலும் அவனின் பார்வையை கண்டு அலட்டிக் கொள்ளாமல் தன் வாதத்தை தொடர்ந்தாள்.

“வாணி நான் பிறந்த வீட்டில் தான் வாழப் போகிறா, அவளுக்கு அங்கே ஏதாவது பிரச்சனைன்னா வேடிக்கை பார்த்துட்டு இருக்கமாட்டேன், நான் நிச்சயம் தலையிடுவேன், சப்போஸ் உங்களுக்கும் அதில் கருத்து வேறுபாடு வந்தால், நீங்க என்னை தாராளமா கேள்வி கேட்கலாம்” என்று கூறியிருக்க மருமகளின் பேச்சில் அவர்களுக்கு உடன்பாடு தொக்கி நின்றது.

“நீ அந்த வீட்டு பெண் தான்ம்மா அதுக்காக நீ இங்கிருந்து முழு நேரமும் கண்காணிக்க முடியாதே, இன்னைக்கு நடக்கிற எத்தனையோ பிரச்சனைகளை பார்த்துகிட்டு தானே இருக்கிறோம், எங்களுக்கு இப்போவும் முழுசா திருப்தி இல்லை தான்... ஆனாலும், நீ சொன்ன வார்த்தைகாக நாங்க கட்டுப்படுறோம்... எங்களுக்கு உன் மேலயும், எங்க வீட்டு பையன் தேர்வு என்னைக்கும் தப்பா போனதில்லை, அந்த நம்பிக்கையில் நாங்க சம்மதிக்கிறோம்” என்று கேசவன், தன் தம்பி மற்றும் தம்பி மனைவியின் ஒப்புதலான பார்வையை ஏற்று தங்களின் சம்மதத்தை கூறியிருந்தார்.

தன் மனைவியின் சகோதரனுக்கான பரிந்துரையும் அதற்கு அவள் அளித்த உத்திரவாதமும் சிறிதும் உவபளிக்கவில்லை என்பதை தரனின் இறுகிய முகம் ஸ்பஷ்டமாக உணர்த்தியிருந்தது.

“உன் கூட கொஞ்சம் பேசணும் உள்ளே வா” என்று மனைவியின் காதை கடித்த தரனை அனைவரும் சிந்தனையுடன் பார்த்துக் கொண்டிருக்க, ரஞ்சனுக்கு அடி வயிற்றில் புளியை கரைத்தது... ‘அடுத்து என்ன சொல்லி தடுக்கப் போகிறானோ?’ என்று கிலி பரவிய சித்தத்துடன் சம்யுக்தாவை நோக்க, அவள் பார்வையால் தமையனுக்கு ஆறுதல் அளித்தபடி கணவனை தொடர்ந்து சென்றிருந்தாள்.

“உன் அண்ணனுக்காக நீ ஏன் பொறுப்பேற்கணும்? சப்போஸ், எங்க வீட்டில் சொல்லுற மாதிரி உன்னால் அங்கிருக்கிற சூழ்நிலையை கட்டுபடுத்த முடியாம எதுவும் விபரீதம் நேர்ந்தா என்ன பண்ணுறதா உத்தேசம்? உன் அண்ணன் மேல அவ்ளோ பாசமா?” என்று முகத்தை சுளித்து வெடுக்கென்று கேட்க...

“ஆமாம் பாசம் தான், இப்போ அதுக்கென்னா? உங்க தங்கச்சிக்கு உங்க மேல பாசம் இருக்கப் போய் தானே உங்களால் விட்டுக் கொடுக்க முடியலை? எனக்கும் என் அண்ணன் உறவு வேணும்... ம்ம்ம்... அப்புறம் என்ன கேட்டீங்க அங்கிருக்கிற சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாமல் போனா என்ன செய்வேன்னு தானே கேட்குறீங்க?” அவன் முக மாறுதல்களை சிறிதும் லட்சியம் செய்யாமல் மேலும் தொடர்ந்தவள்...

“நல்லா கேட்டுக்கோங்க சப்போஸ் நீங்க சொல்லுற மாதிரி ஏதாவது ஆச்சுன்னா, அப்படியே உங்களை நட்டாத்துல விட்டுட்டு போகமாட்டேன் உங்களுக்குன்னு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிவச்சுட்டே போறேன், இந்த உத்திரவாதம் போதுமா இல்லை...” என்றவளை மேலும் தொடர முடியாத படி அவள் குரல் வளையை அவனின் விரல்கள் அழுந்த பிடித்துக் கொண்டிருந்த செய்கையில் பேச முடியாமல் திணறிப் போனாள்.

“கொன்னுருவேண்டி உன்னை... கொன்னே போட்டிருவேன்...! அப்போ என்னன்னா தங்கச்சி வாழ்க்கைக்காக உன்னை படுக்கையில சுகிக்கிறேன் சொல்லுற, இப்போ என்னன்னா எனக்கு வேறொரு பொண்ணு கூட கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லுற? என்ன பேசினாலும் இவன் கேட்டுகிட்டு வாயை மூடிகிட்டு இருந்திருவான் இவன் கேனையன்னு நினைக்கிறயா?” ஆவேசத்துடன் வார்த்தைகளை கடித்து துப்பிக் கொண்டிருந்தவனின் விழிகள் தீப்பிழம்பென ஜொலித்துக் கொண்டிருந்தது.

அவளோ அவன் பிடியில் இருந்து விலக திமிராமல் சற்றும் திமிறாமல் வாகாக கழுத்தை கொடுத்து கொண்டிருந்தவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சுக்கு திணறி இருமியதும் தான் தன் தவறான செயலை உணர்ந்து வெடுக்கென்று கரங்களை விடுவித்துக் கொண்டான்... அவன் செயலை எண்ணி அவன் மேலேயே ஆத்திரம் தன் கரங்களை கொண்டு தானே சுவற்றில் குத்திக் கொண்டான். தன் கணவனின் செயலில் அவள் மன ரணங்கள் ஆறுவதை உணர்ந்தாள்.

“எனக்கு நீ செய்யுறது எல்லாம் பார்த்தா என் தங்கச்சியை பாரமா நினைச்சு வீட்டை விட்டு கிளப்புற மாதிரி இருக்கு” எப்படியேனும் அவள் தமையனுக்காக அவள் வக்காளத்து வாங்குவதை தடுக்க முணைந்து வார்த்தைகளை வீசியவனின் கூற்றை, தெளிவாக புரிந்துக் கொண்டவளுக்கு அப்போது எதிர்க்க முடியாத குறை தீர்ந்தது போல் கோபாவேசம் கொண்டு கரகோஷம் எழுப்பச் செய்தவள்...

“அருமை உங்களை காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டதை நினைச்சாலே......” என்று பீடிகையுடன் நிறுத்தியவளின் முகம் ஜிவிஜிவு என சிவந்தது.

“இதுக்கு நான் பதில் சொல்லணும்னோ... இல்லை, விளக்கம் கொடுக்கணும்னோ எனக்கு எந்தவொரு அவசியமும் இல்லை” என்றுவிட்டு சென்றவளை கண்டு தான் அதிகமாகத்தான் பேசிவிட்டோமோ என்று விசாரம் கொண்டான்.

சம்யுக்தா தரனை விடுத்து மற்ற அனைவரிடமும் தன் தமையனை பற்றி எடுத்துக் கூறி, அவளும் வாணிக்கு ஆதரவாக இருப்பதை தெரிவித்து மூளைச் சலவை செய்திருக்க, அவர்களும் அவள் மேல் கொண்டிருந்த சிறு சிறு சந்தேகத்தையும் விலக்கி விட்டு வாணியை ரஞ்சனுடன் வாழ அனுப்பி வைக்க முடிவு செய்திருந்தனர்.

ஆனால் வாணியோ நிர்தாட்சண்யமாக மறுத்தாள்... “ஏன் எல்லாரும் என்னை வற்புறுத்தறீங்க? நான் தப்பு பண்ணிட்டேன் தான் அதுக்காக என்னை ஒரேடியா தலை முழுகப் பார்க்கறீங்களா?”

“என்ன வாணி புரியாம பேசுற?” என்று குருவும்...

“அப்படி ஒன்னும் நாங்க உன்னை நினைக்கலை” என்று கேசவனும் கூறியிருக்க, வாணி அதை ஏற்றுக் கொள்ள மறுத்திருந்தாள்.

“அப்புறம் ஏன் என்னை வேண்டாம்ன்னு சொன்னவனோட வாழ சொல்லுறீங்க? அப்படி நான் அவன் கூட வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுச்சுன்னா நான் என் உயிரை விட்டிருவேன்” என்றவளின் பார்வை ரஞ்சன் மேல் வெறுப்பாக படிந்திருந்தது. அவளின் வார்த்தையை கேட்ட அனைவருக்கும் சர்வாங்கமும் ஆட பதறிப் போனார்கள்.

“ஏய் அறிவில்லை! உனக்கு எத்தனை தடவை சொல்லுறது இப்படி எல்லாம் பேசதேன்னு” என்று கடுங்கோபத்துடன் அதட்டினான் தரன்.

அவளின் பேச்சை கேட்ட ரஞ்சனுக்கும் அடி மனதில் ஈட்டியை சொருகியது போல் வலிக்கச் செய்தது. ஆனாலும் அவனால் சரி விட்டு விடு உன்னை இனி நான் தொந்தரவு செய்யமாட்டேன் என்று கூற முடியாது ஏதோ ஒன்று தடுத்துவிட்டிருந்தது.

“இங்கே பாரு அரசி என் அண்ணன் செய்தது தப்பு தான் நான் இல்லைன்னு சொல்லலை... அதுக்காக அவன் கூட வாழுறதும் ஒண்ணு, சாகுறதும் ஒண்ணுன்னு சொல்லாதே... ஏன்னா அப்படி பார்த்தா நானே உன் அண்ணனுடன் வாழக் கூடாது கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாரு, அது ஏன்னு உனக்கே புரியும்” என்று கூறியிருக்க மற்றவர்களுக்கு அவளின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், அதை பற்றி தோண்டி துருவாமல் விட்டு விட்டு வாணியை பற்றி மட்டுமே சிந்தித்தனர்.

அவள் கூறிய காரணம் எதற்காக என்று வாணிக்கும், அரசிக்கும் புரிந்திருக்க ஒருவரை ஒருவர் கேள்வியாக பார்த்திருக்க, மனைவியின் பேச்சில் தரனுக்கு முகம் பாறை போல் இறுகிப் போனது. ரஞ்சன் இவை அனைத்தும் தன்னால் தானே என்று காலம் கடந்து உணர்ந்திருந்தான்.

கொட்டிய பாலை அள்ளவும் முடியாது, பேசிய வார்த்தையை அழிக்கவும் முடியாது, அதே போல் கடந்த காலத்தையும் மீட்ட முடியாது. இருக்கின்ற சொற்ப காலத்தில் நம் வாழ்வை யாரையும் கெடுக்க எண்ணாமல், தீங்கிழைக்காமல் சீரும் சிறப்புமாக வாழ வேண்டும் என்பதற்கு ரஞ்சன் உதாரணமாக ஆகிப் போனான்.

“அண்ணா! வாணி பேசினதை எல்லாம் பெருசா எடுத்துக்காதே, இது இங்க இப்போ பேசின பேச்சுக்கு மட்டும் இல்லை... இனி வரும் காலத்திலேயும் அவ ஏதாவது மனசு கோண பேசினா நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கோ... இல்லையா, அவளுக்கு தன்மையா எடுத்துச் சொல்லி புரிய வைக்க பாரு” என்று தமையனுக்கு எடுத்துக் கூறியவள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்... அவன் முகமோ மந்தார முகிலினமாய் இருளடைந்து கிடைக்க, அதன் காரணம் விளங்கியவளுக்கு சிந்தை அசைந்தது.

“அண்ணா போனதெல்லாம் போகட்டும், அதையெல்லாம் நினைச்சு வருத்தபடுறதால எதுவும் மாறப் போறதில்லை... இனி நடக்கப் போறதை மட்டும் யோசி”

“இல்லை சம்முமா எனக்கு நிஜமாவே மனசெல்லாம் வலிக்குது... எனக்காக யாரிருக்காங்கன்னு இப்போ நினைச்சதை அப்போவே நினைச்சிருந்தா, நான் அந்த மாதிரி ஒரு தப்பை செய்திருக்கவேமாட்டேன்” என்று ஆழ்ந்த வருத்தத்துடன் கூறியவனின் குரல் உடைந்து சிதறியது.

“அண்ணா இன்னொருவாட்டி இப்படி எல்லாம் சொல்லாதே உனக்காக நானிருக்கிறேன்” என்றவளின் கண்களும் கலங்கியிருக்க, தரனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

‘ஆமாம் ரெண்டு பேருக்கும் பாசமலர், சிவாஜிகனேசன் சாவித்திரின்னு நினைப்பு, நேத்து முளைச்ச காளான் மாதிரி திடிர்னு முளைத்த பாசத்தில் இவ பண்ற அட்டூழியம் தாங்க முடியலை’ என்று மானசீகமாக மனைவியை கரித்து கொட்டிக் கொண்டிருந்தான்.

“உன் கூட வாணி கண்டிப்பா வருவா அது என் பொறுப்பு... நீ போகும் போது உன் பொண்டாட்டி பிள்ளை கூட குடும்பஸ்தனா தான் போவ, வெயிட் பண்ணு உனக்கு நான் டிபன் ரெடி பண்ணுறேன் சாப்பிடுட்டு கிளம்பு” என்றவள் தன் மகளை அவனிடம் ஒப்படைத்து விட்டு, அவனுக்கு சமைக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்வதில் ஆயத்தமானாள்.

வாணியின் அறையில் இருந்த பெரியவர்கள் அவளுக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும் அசைய மறுத்தாள். அதை கண்ட அனைவருக்கும் பெருத்த கவலையாகிப் போக, சம்யுக்தா அங்கே பிரசன்னமானவள்... “மாமா, அத்தை வாணிகிட்டே நான் தனியா பேசி பார்க்கிறேன்?” என்றவளின் வார்த்தையை ஏற்று நோக்கியவர்களின் முகத்தில் மின்னிய கவலையை போக்க வேண்டி...

“என் அண்ணனை உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ? இனி அவர் தானே இந்த வீட்டுக்கு மருமகன், அதுக்காகவாவது அவரை நல்லா கவனிச்சு உபசரிக்க வேண்டியது நம்ம கடமை தானே” என்றதும் மருகளின் வார்த்தை சரியாகப் பட்டிருக்க...

“குழலி மருமக பொண்ணு சொல்லுறதும் சரி தான்... இனி என்ன இருந்தாலும் அவர் நம்ம மருமகன் அவரை கவனிக்க வேண்டியது நம்ம பொறுப்பு, நீ போய் அவருக்கு சாப்பிட ரெடி பண்ணு” என்றதும் அவர் சமைக்க சென்றிருக்க, மற்றவர்களும் அவ்விடம் விட்டு நகர்ந்திருக்க, அங்கேயே தேங்கி நின்ற அரசியிடம்...

“அரசி, வாணிகிட்டே நான் பேசிகிட்டு இருக்கிறேன் நீ வாணியோட குழந்தையை பார்த்துக்கோ” என்றவளின் பேச்சை தட்ட முடியாமல் குழந்தையுடன் வெளியேறினாள்.
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சம்யுக்தாவுக்கு வாணியுடன் பேச வேண்டிய சுழல் கிட்டி விட அவளிடம் பேச்சை தொடங்கினாள்.

“வாணி நான் உன்னை ஒரு தங்கையா நினைச்சு தான் பேசப் போறேன், நீயும் என்னை அக்காவா நினைக்கணுமே தவிர... உன் புருஷனோட தங்கச்சியா, உனக்கு நாத்தனாரா நினைக்க வேண்டாம்... நான் இப்போ என் அண்ணனுக்காக பேசப் போறதில்லை உனக்காக மட்டும் தான் பேசப் போறேன்... என்ன நான் பேசலாம் தானே?” என்று தன்மையாக எடுத்துக் கூறியதும்...

“நான் உங்களை ஒரு முறைக்காக தான் அண்ணின்னு கூப்பிடுறேனே தவிர, மனசளவில் என் கூட பிறக்காத சகோதரியா தான் நினைக்கிறேன்” என்றவளின் பேச்சில் மனகிலேசங்கள் அனைத்தும் மறைந்தவளாக பேசலானாள்.

“தேங்க்ஸ்...! உன் அண்ணன் மாதிரி அவசரப்படாம, என்னை புரிஞ்சுகிட்டு பேசுறதுக்கு” அவள் எப்படிப்பட்ட சுய கௌரவம் மிக்கவள் என்றுணர்ந்த வாணிக்கு அவளின் நன்றி நவிழல் பிரமிப்பாகவும், சங்கடமாகவும் இருக்கவே...

“தேங்கஸ் எல்லாம் வேண்டாம் அண்ணி, நீங்க என்ன பேசணுமோ பேசுங்க?” என்றதும் நேரடியாக விசயத்திற்கே வந்திருந்தாள்.

“இதுக்கு முன்னாடி நீ இங்கே எப்படி இருந்தியோ எனக்கு தெரியாது... ஆனால், இப்போ உனக்கு கல்யாணம் ஆகி குழந்தையோட தனியா இருக்கிறது மற்றவங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும்” என்றவள் அவள் முகம் பார்த்து தொடரவா என்பது போல் கேள்வியாக நிறுத்த, கசப்பாக புன்னகைத்த வாணி...

“எந்த விஷயமா இருந்தாலும் தயக்கம் வேண்டாம் அண்ணி... நான் கஷ்டப்படுவேன், ஏங்குவேன் எல்லாம் நினைக்க வேண்டாம்... ஏன்னா எனக்கு மனசு மரத்து போச்சு... சந்தோஷமோ, துக்கமோ எதுவும் என்னை பாதிக்காது” என்றவளை கதனத்துடன் நோக்கினாள்.

“அதில்லை நீ தனியா உன் குழந்தையோட நம்ம வீட்டில் இருக்கிறதால எங்களுக்கு நீ இடைஞ்சலாவோ, பாரமாவோ இருக்கமாட்டே தான்... ஆனால் காலப் போக்கில் உனக்கு எங்களை பார்த்து நிச்சயம் ஒரு ஏக்கம் வரும்”

“அதெல்லாம்......” என்று ஆரம்பித்தவளை முடிக்க விடாது இடையிட்டவள்...

“இரு... இரு... நான் சொல்லி முடிச்சுடுறேன்” என்றவள் தன் பேச்சை தொடர்ந்தாள்...

“எனக்கு ஏக்கம் வராது, நான் அப்படி எல்லாம் நினைக்கமாட்டேன், மனசு வெறுத்துப் போச்சு, இந்த கதையெல்லாம் வேண்டாம். இதெல்லாம் இப்போ இருக்கிற விரக்தியான சூழல் பேச வைக்கிறது... ஆனால் நிதர்சனம்ன்னு ஒன்னு இருக்கு”

“இங்கே நாம எல்லாருமே கடவுளால் படைக்கப்பட்ட மனுஷங்க தான்... யாரும் இரும்பால் செய்யப்பட்ட இயந்திரம் இல்லை... அப்படி இருக்கேன்னு சொல்லிகிறவங்களுக்கும் அது நிரந்தரம் இல்லாத ஒரு விஷயம்”

“இப்போ உனக்கு எங்களை போல வாழ்க்கை அமையலைன்னு நீ கவலைப்படாமல் இருக்கலாம், ஆனால் உன் பெண்ணுக்கு விவரம் தெரிய வரப் போ அவளும் அப்பாவை கேட்க ஆரம்பிப்பா... அவளை நீ ஒரு நாள் சமாளிக்கலாம், ரெண்டு நாள் சமாளிக்கலாம்... ஆனால் காலம் முழுக்க சமாளிக்க முடியாது, அப்போ உனக்கே உன் மேல கோபமும், வெறுப்பும் அதிகமா வரும்... அதை நீ உன் பொண்ணுகிட்ட காட்டுவ”

“அப்புறம் எங்க மேலயும் அதே இலக்கு பாயும்... எல்லாரும் நம்ம முன்னாடி குடும்பமா இருக்காங்க நமக்கு ஏன் இந்த நிலைமைன்னு ஒரு வெறுப்பு வரும், அது நம்ம உறவுக்கு பாதமாக ஆகிருமே தவிர சாதகமா இருக்காது”

“...........”

“யோசி வாணி... உனக்காக இல்லைனாலும் உன் மகளுக்காக யோசி” என்று அவள் மனதை தட்டி புத்திக்கு பாடம் புகட்டி இருந்தவளை கலங்கிய கண்களுடன் நோக்கியவள்...

“என்னால் ஏற்றுக்க முடியலையே அண்ணி!” என்று கரகரத்த குரலில் கூறினாள்.

“நான் ஒண்ணு கேட்பேன் மறைக்காம, பொய் சொல்லாம, ஒரு பதில் சொல்லணும்”

“ம்ம்ம்”

“நீ என் அண்ணன் மனோரஞ்சனை காதலிச்ச தானே? அவர் இல்லாம நீ இல்லன்னு நினைச்சதால தானே அவர்கிட்டே உன்னை இழந்த” என்று அவள் அடி மனதின் காதலை தூசி தட்டி உயிர்த்து எழுப்பியவளின் வார்த்தை பலிதம் ஆகியிருக்க, வார்த்தையால் கூற முடியாத உண்மையை ஓங்கரித்து கொண்டு வந்த அழுகை வெளிச்சமிட்டு காட்டியது. அவளின் துக்கத்தை கண்ணீரில் சில நிமிடங்கள் ஆற்றவிட்டவள்...

“நீ அழறது இதுவே கடைசியா இருக்கட்டும்... இனி நீ எதுக்காகவும் அழக்கூடாது... உன் பெண்ணை தைரியமா வளர்க்கணும், அதுக்கு இந்த அழுகை தான் முதல் தடை அதை தூக்கிப்போடு... உன் மகளோட சேர்ந்து உன் புருஷன் கூட வாழ்ந்து தான் பாரு வாணி, அப்போ தான் உனக்கு நடந்த சில தவறுகள் அவ வாழ்க்கையிலும் நடக்காமல் பார்த்துக்கலாம்” எப்படி சாதாரண கருங்கல்லை சிற்பி உளியை கொண்டு செதுக்கி அழகான சிலை வடிவமைப்பானோ, அப்படியே வாணியின் புத்தியை அவளின் அறிவுரை என்னும் உளியால் தீட்டி செதுக்கியிருக்க, அதுவரை அனைவரிடமும் ரஞ்சனுடன் செல்லவே முடியாது என்று நிர்தாட்சண்யமாக மறுத்த வாணி, தன் அண்ணியின் பேச்சில் மனம் மாறியவள்...

“நான் அவர் கூட போறேன் அண்ணி... அதாவது விதியேன்னு என்னை கல்யாணம் பண்ணின என் புருசன் கூட போறேன்... ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி என்னால் உடனே எல்லாத்தையும் மறந்து இயல்பா வாழ முடியாது... எனக்குன்னு சில கோட்பாடுகள் இருக்கு அதை தாண்டி வரமாட்டேன்” என்றவள் அவளின் அந்த முடிவை கூறியிருக்க...

“நான் உன்னை என் அண்ணன் கூட வாழச் சொல்லுறது உங்களுடைய நல்ல எதிர்காலத்துக்காக தான், மற்றபடி உங்களுடைய அந்தரங்கம் உங்களுக்கானது, அதில் எக்காரணம் கொண்டும் நான் தலையிடமாட்டேன்... அதே சமயம் ரஞ்சன் அண்ணன்னும் அவ்வளவு மோசமான ஆள் இல்லை வாணி, ஏதோ எங்க வீட்டில் இருக்கிறவங்க உருவேற்றியத்தில் தவறான சில விஷயங்களை செய்து அதுக்கான பலனா தண்டனையும் அனுபவிச்சுட்டாரு”

“ம்ம்ம்” என்று மட்டும் கூறியவளின் தாடையை பற்றியவள்...

“இப்போவும் சொல்றேன் நான் அவர் தப்பே பண்ணலைன்னு சப்போர்ட் பண்ணலை, இனி தப்பு பண்ணமாட்டாருன்னு தான் சொல்றேன்... அப்படி தப்பு நடந்தா உனக்கு ஆதரவா தான் நான் பேசுவேன்” என்று கூறியதும் வாத்சல்யத்துடன் முறுவலித்தாள் வாணி.

இவளின் பேச்சை அறையின் சாளரத்தின் வழியாக எதர்ச்சியாக கேட்டிருந்த தரனுக்கு மனைவிக்கு தன் குடும்ப உறுப்பினர்கள் மேல் கொண்ட அக்கறையை எண்ணி நெகிழ்ந்து போயிருந்தான்... இதை தான் பெரியோர்கள் பெண்புத்தி பின்புத்தி என்று கூறியிருக்கிறார்களோ... பின்னாளில் நடக்கப் போவதை சரியாக வியூகம் செய்து எத்தனை அழகாக எடுத்துரைக்கிறாள் என்று எண்ணி மனைவியின் மேல் வாஞ்சை பெருகியது.

தன் போக்கில் யோசித்துக் கொண்டே கிணற்று அருகில் இருந்த கட்டிலில் அமர்ந்துவிட்டிருக்க, அவன் மனைவி அவனை தேடி வருவதை கண்டதும், சடுதியில் தன் உணர்ச்சியலைகளை மாற்றிக் கொண்டு முகத்தை இறுக்கத்துடன் வைத்துக் கொண்டான்.

“சாப்பிட வாங்க” என்றழைத்தவளை...

“எனக்கு வேண்டாம் நீ உன் பாசமலருக்கு பரிமாறு” என்று விட்டேரியாக கூறியவனை கூர்மையாக பார்த்தவள்...

“அதுக்காக தான் உங்களை கூப்பிடுறேன்... அவர் தனியா சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டாரு” அவனை விழிகளால் அவதானித்தப்படி கூறினாள்.

“ஒஹ்! உன் அண்ணனுகாக தான் என்னை இப்போ கூப்பிடுற?”

“ஆமாம் அப்படி தான்...!” என்றவளை பார்வையால் வெட்டினான்.

“என்ன இருந்தாலும் என் அண்ணன் தான் இனி உங்க தங்கச்சிக்கு புருஷன், உங்களுக்கு மச்சா,ன் அதை மனதில் வச்சுகிட்டு தர்க்கம் பண்ணாம வாங்க” என்றதும் சுள்ளென்று சினம் ஏறியிருக்க...

“நான் உன்கிட்டே தர்க்கம் பண்ணுறேன்னா டி?” என்று சிடுசிடுத்திருந்தான்.

“பின்னே இல்லையா? அப்படின்னா, பேசாம சாப்பிட வாங்க இல்லைன்னா, நானும் என் பெண்ணும் என் அண்ணன் கூடவே கிளம்பிப் போயிருவோம்” அவன் பலியாக கோபப்படுவான் என்று தெரிந்தே கூறியவளை சடுதியில் விழிகள் சிவந்தவன்...

“இந்த வீட்டு வாசற்படியை விட்டு ஒரு அடி எடுத்து வச்சாலும் காலை உடைச்சு அடுப்பில் வச்சுருவேன்” கடிந்த பற்களுகிடையே வார்த்தைகளை துப்பியவனை கண்டு பெரிதும் அலட்டிக் கொள்ளாமல்...

“ம்ஹும்... இந்த கோவத்துக்கு ஒன்னும் குறைச்சல்” என்று சலித்துக் கொண்டாள்.

“ஆமாம் டி ஆத்திரமா வருது? என்னவோ பாச மலரை போல நீயும், உன் அண்ணனும் பண்ணுற அலப்பறையை எல்லாம் பார்த்து சகிச்சுக்க முடியாமல் தான் வரமாட்டேன்னு சொல்றேன், ஆனா நீ கேட்க மாட்டேங்குற” என்று எரிச்சலில் முனகிவிட்டு விறுவிறுவென்று உணவருந்த நகரந்திருந்தான்.

கணவனின் பேச்சை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அவள் தமையனை கவனித்து குடும்பம் சகிதமாக வழியனுப்பி வைப்பதே ஒரே வேலையென கருத்தில் கொண்டு சிரத்தையாக ஆழ்ந்திருந்தாள்.

சம்யுக்தா பரிமாறிக் கொண்டிருக்க வேண்டா வெறுப்பாக ரஞ்சனின் அருகில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தான் தரன்... அவ்வ போது அவள் தமையனிடம் பாசமழை பொழிந்து வழிந்து கொண்டிருந்ததை கண்டு அவன் அடிவயறு காந்தியது... ‘என் கிரகம் இதையெல்லாம் பார்க்கணும்னு என் தலையில் எழுதியிருக்கு’ என்ற பிரலாபத்துடன் அவள் மேல் முறைப்பையும் செலுத்திக் கொண்டிருந்தவளை கண்டவளுக்கு அவனின் உணர்வுகள் ஸ்பஷ்டமாக விளங்கியதில், அவனை சீண்டி பார்க்கும் ஆவல் பிறக்க... சம்யுக்தா கடைவாயில் நாக்கை அடக்கி புன்னகைத்தவளுக்கு விஷமம் வழிந்தோடியது.

‘இருடி மச்சான் இன்னைக்கு உன்னை எப்படி வெறுப்பேத்துறேன்னு பாரு’ என்று சபதத்தை மேற்கொண்டாள்.

“அடடே ரஞ்சன் அண்ணா நீ இப்படி சாப்பிட்டா எப்படி? இதெல்லாம் உனக்காக ஸ்பெஷலா செஞ்சது நல்லா சாப்பிடு அண்ணா... இது உன் தங்கச்சி வீடு, இங்கெல்லாம் நான் வச்சது தான் சட்டம்... ஏதோ இங்க நான் வந்ததுக்கு அப்புறம் தான் காக்கா கூட கிளியா மாறியிருக்கு” என்று கணவனை அடிக்கண்ணால் துளைத்தப்படி கூறியவளின் வார்த்தையில் அனல் பொசுக்கும் பார்வையால் முறைத்தவன்...

“உன் அண்ணனுக்கு கிளி கூட காக்கையா தான் தெரியும் போல” என்றவனின் பேச்சில் அவன் செயலுக்கான குத்தல் இருக்கவே, ரஞ்சனுக்கு புரை ஏறிக் கொண்டிருக்கவும் தான் தரனுக்கு மனைவியால் சுட்ட இதயம் வெந்து தணிந்திருந்தது. ஆனால் உன்னை அப்படியெல்லாம் விட்டுவிடுவேனா என்பது போல் கங்கணம் கட்டிக் கொண்ட அவனின் மனையாட்டி அவனை வெறுப்பேற்றும் செயல்களை செவ்வனே தொடரலானாள்.

“அச்சோ பார்த்து ண்ணா தண்ணி குடிங்க” என்று கூறி அவன் உச்சந்தலையை தட்டிவிட்டு பருக தண்ணீர் கொடுத்து தணிந்த அவனை மேலும் சூடேற்றியிருந்தாள்.

“உன் அண்ணனுக்கு சாப்பிட கஷ்டமா இருக்கு போல ஊட்டிவிடேன்” என்று நக்கலாக கூறியவனின் பேச்சை கேட்டு மேலும் பிடி கிடைத்திருக்க...

“அட என்னங்க நீங்க இதை இவ்ளோ லேட்டா சொல்றீங்க, சரி தான் என் அண்ணனுக்கு நான் ஊட்டிவிடாம வேற யார் ஊட்டிவிடுவாங்க” என்று உணவை தொடப் போனவளை...

“மகளே அவனுக்கு மட்டும் ஊட்டிவிட்ட உன் கையை கைமா பண்ணிருவேன்” அவளுக்கு மட்டும் கேட்குமாறு அடிக்குரலில் மிரட்டியவன், சடுதியில் முகத்தை இயல்பாக்கி கொண்டுவிட்டு...

“உன் அண்ணன் தங்கச்சி உரிமை எல்லாம் இன்னையிலிருந்து அளவா வச்சுகிறது நல்லது... ஏன்னா இனி உன் அண்ணனுக்கு வேண்டிய பணி விடையெல்லாம் அவன் பொண்டாட்டி பார்த்துப்பா... நீ உன் புருஷனை மட்டும் உருப்படியா கவனிச்சா போதும்” என்று கடிந்த பற்களுக்கிடையே கூறியவனின் கூற்றை கேட்டு புன்னகை ததும்பியது.

“என்ன இருந்தாலும் என் அண்ணனுக்கு நான் செய்கிறதை போல வருமா என்ன ண்ணா” என்று விடா கொண்டியாக வம்பிழுக்க...

“ஆமாம் சம்முமா! நீ என்னைக்குமே எனக்கு சம்திங் ஸ்பெஷல் தன்” என்றவன் இடது கையால் சிகையை தடவிக் கொடுத்தபடியே சாப்பிட்டு முடித்துவிட்டு கையலம்ப எழும்பிச் சென்றவனை பொறாமையால் புகைந்தவன்...

“என்ன டி என்னை வெறுபேத்துறதுக்குன்னே எல்லாம் பண்ணுறியா?”

“அட எப்படி இவ்ளோ சரியா சொல்றீங்க?”

“ம்ம்ம்... உன் தலை! உன் அண்ணன் போனதும் என் கூடத்தான் இருந்தாகணும்” என்றவனின் கையிலிருந்த சொம்பை வெடுக்கென்று உருவிக் கொண்டவள்... “ஸ்ஹ்ஹா” என்று சூடப்பட்டது போல் அலறியவளை நிஜம் என்று நம்பி...

“என்னாச்சு! என்னாச்சு!” என்று பதறியவனைக் கண்டு “ஹஹஹா” என்று நகைத்தவள்...

“இல்லை உங்க கண்ணுல இருந்த பொறாமை கனலை பார்த்து எங்கே கையில் இருக்கிற தண்ணி சூடாகி உங்க கையை சுட்டுருமோன்னு அக்கறையில் வாங்கினேனா, கடைசியில் அது என் கையை சுட்டுருச்சு, எப்பா ஹீட்டர் கூட இவ்ளோ பாஸ்டா சூடு பண்ணியிருக்காது உங்க கண்ணோட ஃபையர் பவர் அப்படி இருக்கு” என்று அவனின் பதட்டத்தை வைத்து வேடிக்கையாக கூறியவளின் பேச்சில் எழும்பிய முறுவலை உதடுக்குள் மென்று விழுங்கியவன்...

“உன் அண்ணனுக்கு இருக்கிறதை விட ரெண்டு மடங்கு கொழுப்பு உனக்கிருக்கு டி... இருக்கட்டும் இன்னைக்கு ராத்திரியே இதுக்கெல்லாம் முடிவுகட்ட கச்சேரி வைக்கிறேன்” என்று சீறிவிட்டு எழுந்தவனை புன்னகை தெறிக்க பார்த்திருந்தாள்.

“ஆமாம் கச்சேரி தான் ரோஷத்துல ரோஸ்ட் ஆகி கிடப்புல போட்டு கிடக்கே, இப்போதைக்கு உன்னால் என்கிட்டே கச்சேரி வைக்க முடியாது மச்சான்” விஷமம் வழிந்த பார்வையால் தூரத்தில் நின்ற கணவனின் முதுகை துளைத்திருந்தாள்.

அன்று மாலையே வாணியை, ரஞ்சனுடன் அனுப்பி வைக்க ஆயத்தமாகி இருக்க பள்ளி முடித்துவிட்டு வந்த கலைமலர் தமக்கையின் பிரிவை எண்ணி வருந்தி கேவி கேவி அழலானாள்... அவளை கண்டு வாணியும் அழுகையில் கரைய அதை கண்ட ரஞ்சன்...

“அழாதே மலர், நீ எப்போ வேணா அங்கே வரலாம்... நீ வரேன்னு சொன்னா நானே வந்து கூட கூட்டிட்டு போறேன்” என்று விகல்பமில்லாமல் பரிகாசத்துடன் மொழிந்தவனை அனைவருக்கும் தோன்றும் உரிமை கோபத்துடன் பார்வையால் வெட்டிய மனைவியை கண்டு திகைத்து பார்த்தவன் பயந்து போனான்... எங்கே தன்னை தவறாக எண்ணுகிறாளோ என்று வியாகூலம் அடைந்தவன்...

“இல்லை.. நான்.. நான்.. எதார்த்தமா தான்... சொன்னேன்... சாரி! தப்பா எடுக்காதே” என்று குரல் நடுங்க வார்த்தைகள் தந்தியடித்ததை கண்ட சம்யுக்தாவுக்கு புன்னகை எழுந்த சமயமே, தன் தமையன் இனி எந்த வித குறுக்கு புத்திக்கும் இடம் கொடாமல் பிழைத்துவிடுவான் என்று நிம்மதியாக உணர்ந்தவள் கணவனிடமும் பார்வையால் அதை பகிர்ந்து கொண்டாள். தரனுக்கும் அதுவரை இருந்த எதிர்மறை எண்ணம் பாதியாக குறைந்துவிட்டிருந்தது.

மனோரஞ்சன் தன் காரில் வாணிக்கும் குழந்தைக்குமான பொருளை வைத்து அடுக்கிக் கொண்டிருந்தவனை நெருங்கிய அர்ஜுன்... “இதுவரைக்கும் நீ எப்படி இருந்தியோ ரஞ்சன் அதெல்லாம் கடந்த காலம்... நீ புதுசா பிறந்தேன்னு நினைச்சு வேறொரு புது வாழ்க்கையை நல்லா புத்துணர்வோட ஆரம்பி... உன்னுடைய வாரிசை இந்த உலகத்துக்கு கொண்டு வந்த பொண்டாட்டியை உன் கண்ணை போல் பாதுகாத்துக்கோ... இங்கே நிறைய பேர் கல்யாணம் ஆகியும் குழந்தை இல்லாம ஹாஸ்பிட்டலுக்கும், கோவிலுக்கும் நடந்துட்டு இருக்காங்க... அதனால் உனக்கு ரொம்ப எளிதா கிடைச்சிருக்கிற உன் பொண்ணை சாதாரணமா நினைக்காம பொக்கிஷமா பாரு... உன் வாழ்க்கை சிறப்பா அமையும்... சீக்கிரமே வாணி மனசு மாறுவான்னு நம்பு செத்துப் போயிருக்க அவ மனசை மீண்டும் உன் காதலால் உயிர்பிக்கப்பாரு” அவனை அவதானித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று தன் பேச்சை நிறுத்தியதும்...

“அதெல்லாம் நடக்குமான்னு தெரியலை... ஊர் உலகத்துக்கு முன்னாடி நானும், என் பொண்டாட்டி பிள்ளையோட இருப்பேன், அது மட்டும் என்னால் உறுதியா சொல்ல முடியும்” என்றவனின் குரலில் உச்சகட்ட விரக்தி தெரிந்தது...

“காலம் கடந்து வருந்துற எதுவும் விழலுக்கு நீர் பாய்க்கிறது சமம் தான்... அதனால் அதெல்லாம் விட்டுட்டு இனி நடக்கப் போறதை எதிர்மறையா யோசிக்காம நேர்மறையா யோசி நிச்சயம் நல்லதே நடக்கும்” என்று கூறி, அவனை அணைத்து ஆறதலாக தழுவிக் கொடுக்க ரஞ்சன் உடல் இறுகி நின்றிருந்தான். அவனின் உணர்வுகளை புரிந்துக் கொண்டவன் அதற்கு மேல் அவனை பேசி நோகடிக்க விரும்பாமல் இன்முகத்துடன் விடைபெற்றுக் கொண்டான்.

அனைவரும் தங்களின் வருத்தம், துயரம் அனைத்தையும் மறந்து வாணியின் வாழ்க்கைக்காக தங்களை திடப்படுத்திக் கொண்டு வாணியை ரஞ்சனுடன் வழியனுப்பி வைத்திருந்தனர்.



சுவடுகள் தொடரும்....


**************************************

வணக்கம் நட்பூக்களே...


“அன்புக்கு நீ அரிச்சுவடி (பாகம்-2)” அத்தியாயம்-24 பதிந்துள்ளேன் படித்துவிட்டு கருத்துகளை பகிரவும் மக்களே.

தளத்தின் இணைப்புக்கு கீழுள்ள இணைப்பை அழுத்தி குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்:

Whatsapp Channel Link:

KaruRam Tamizh Novels✍📝 | WhatsApp-Kanal

Telegram Channel Link:

KaruRam Tamizh Novels📖🖋📚

நட்புடன்

காருராம்
 
Status
Not open for further replies.
Top