All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல் கொண்(ட)ற தேவதை

Mathijagadheesh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis... But seekram podunga sis... Long gap iruntha interestae poidum
Nice ud sis... But seekram podunga sis... Long gap iruntha interestae poidum
ஹாய் ma புரியிது ஆனால் இப்போ lockdown ல குடும்பம் மொத்தம் இருக்கதால வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு,நேரம் இல்லாம தான் எழுத முடியலை,ஆனால் முடிஞ்ச வரை try பண்றேன் மா,hope u understand
 

Shiny judith

Well-known member
ஹாய் ma புரியிது ஆனால் இப்போ lockdown ல குடும்பம் மொத்தம் இருக்கதால வேலை கொஞ்சம் அதிகமா இருக்கு,நேரம் இல்லாம தான் எழுத முடியலை,ஆனால் முடிஞ்ச வரை try பண்றேன் மா,hope u understand
Ok sis take care
 

Mathijagadheesh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi intha week ud illai pa rendu kannulaum mari mari kan katti varuthu one word kuda typala sry innum 3 udla story mudinjurum onna kudutharalanu neanachen but epo next week aachum kuduka try panren intha pachcha pillaiyai mannichu
 

Sounndara

New member
பகுதி 20


அபியின் வாழ்க்கை அலுவலகம்,வீடு என அமைதியாக சென்றுகொண்டிருந்தது,பல நாள் இரவுகளில் தூக்கத்தை தொலைத்து இருளை வெறித்தபடி அமர்ந்திருப்பவள் விடியலில் கண்ணயர்ந்து காலை அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பி செல்வாள்…



அபியின் அமைதியை கவனித்த சார்லி,”அபி டார்லிங் உனக்கு என்ன ஆச்சு ?ஏன் ஒரு மாதிரியா இருக்க!”

அபி,ஒன்னும் இல்லை சார்லி,நான் நல்லா தான் இருக்கேன்,

அபியின் வார்த்தையை சார்லி நம்பவில்லை,ஆனாலும் மீண்டும் எந்த கேள்வியும் கேட்காது அவளின் மன நிலையை மாற்றும் பொருட்டு,”நாளைக்கு டின்னர் போகலாமா அபி?கொஞ்சம் ஒர்க் ப்ரெஷர் ரிலாக்ஸ்ச போயிட்டு வரலாம்,”என கேட்டவனிடம் மறுக்க தோன்றாது வருவதாக கூறி சென்றாள்..

அன்று வேலை முடிந்ததும் அபியை அழைத்து கொண்டு பிரபலமான உணவு விடுதிக்கு சென்றவன்,கல்லூரி கதைகளை பேசிய படி இருவருக்குமான உணவை ஆர்டர் செய்து உண்ட பின்,”அபி டார்லிங் நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்,எனக்கு காலேஜ் டேஸ்லயே உன் மேல ஒரு க்ரஷ் இருந்தது,பட் உனக்கு அப்புடி என்கிட்ட இருந்த மாதிரி நான் பீல் பண்ணாததால,நான் உங்கிட்ட அதை சொல்லல,ஆனா இப்போ கேக்குறேன்,வில் யூ மேரி மீ பேபி! “என கேட்டவனிடம் மறுப்பாக தலையசைத்து,அல்ரெடி அம் காட் மேரீட் சார்லி,என்றவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்,அவனது பேபி என்ற அழைப்பு தன்னவனை நினைவு படுத்த எதிலிருந்தோ தப்பித்து செல்வதை போல வேகமாக சென்றாள்…

*********************************************************

மறுநாள் காலை கண்விழித்த விக்ரம்,முந்தைய நாள் நினைவு வந்ததும் வேகமாக எழுந்து குளித்து,அபி வழக்கமாக நடனமாடி நன்கொடை வழங்கும் காப்பகத்திற்கு சென்று அவளை தேடினான்,அங்கும் அவள் இல்லை என அறிந்து சென்னையின் மூலை முடுக்கு எல்லாம் அலைந்து திரிந்து,சாப்பாடு,உறக்கம் ஏதுமின்றி தேடியவன்,கடைசியில் 10 நாட்களுக்கு பிறகு இனியும் தாமதிக்க கூடாது என உணர்ந்து துப்பறியும் நிறுவனத்தை அணுகினான்,நாளுக்கு நாள் தன்னவளின் நினைவும்,குற்றவுணர்வும் அதிகரிக்க வேலையில் கூட கவனம் செல்லாது தவித்திருந்தான்…

அன்றுடன் அபி சென்று மூன்று மாதம் கடந்திருந்தது,ஊரிலிருந்து விக்ரமின் பாட்டி கலைவாணி கோபத்துடன் தனது மகனையும் அழைத்து கொண்டு பேரனின் வீட்டிற்கு வந்தார்,முன்பகல் வேளையில் வந்தவர் விக்ரமிற்கு அழைத்து உடனே வீட்டிற்கு வரும் படி கூறியவரின் வார்த்தையில் தென்பட்ட கடுமையில் அவருக்கு அனைத்தும் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்து வீட்டிற்கு கிளம்பி சென்றான்…

விக்ரம் வீட்டை அடைந்த போது,ஹாலிலேயே தனக்காக கோபத்துடன் காத்திருந்தவர்,”அபி எங்க?,”

விக்ரம் தடுமாற்றத்துடன்,அது...அது..ஆயாம்மா அபி...என பதில் கூற தடுமாறியவனிடம்,

பாட்டி,என்ன பிரச்சனை உங்களுக்குள்ள ?ஏன் அவ வீட்டை விட்டு போனா ?என கடுமையாக கேட்க

பாட்டியிடம் எவ்வாறு நடந்ததை கூறுவது என தடுமாறியவன் பின் நடந்த அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடிக்க,கடைசியில் விக்ரம் அபியிடம் பேசியதையும் அதனால் தான் அவள் வீட்டை விட்டு சென்றதையும் கூற,அதுவரை அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தவர் கடைசியாக தன் பேரன் பேசியதை கேட்டு கோபத்துடன் ஓங்கி அரைந்திருந்தார்,பிறந்ததிலிருந்து இதுவரை எதற்கும் அடிக்காது பொறுமையுடன் எடுத்து கூறியே வளர்த்தவர் இன்று தனது பொறுமை இழந்து தனது செல்ல பேரனை அடித்திருந்தார்,”நான் உன்னை இப்படியா டா வளர்த்தேன்!ஒரு பொண்ணை பார்த்து என்ன பேச்சு பேசியிருக்க !உன் கூட பிறந்த தங்கை,அக்கா அல்லது உன் அம்மாவை பார்த்து இப்படி அவர் கணவர்கள் பேசியிருந்தால் அதை பார்த்துட்டு சும்மா இருந்துருப்பியா?எங்க இருந்து உனக்கு இவ்வளவு தைரியம் வந்தது!கட்டின மனைவியை பற்றி இப்படி தர குறைவாக பேச!அவள் வீட்டை விட்டு போனதுல தப்பே இல்ல என கோபமாக பேசியவர்,இனி நீ என் முகத்திலேயே முழிக்காத!எப்போ ஒரு பொண்ணு கிட்ட அதுவும் கட்டின மனைவிக்கு மரியாதை கொடுக்காம இப்படி கேவலமா பேசினியோ அப்போவே என் வளர்ப்பு பொய்த்து போச்சு!

விக்ரம்,ஆயாம்மா….ப்ளீஸ் ஆயாம்மா,என்மேல கோபபடுங்க,உங்க ஆத்திரம் தீரும் வரைக்கும் அடிங்க ஆனா என்கிட்ட பேசாம மட்டும் இருக்காதிங்க ஆயாம்மா!என அவரின் கைகளை பிடித்து அதில் முகம் புதைத்து அழுத்தவனை கண்டு கண் கலங்கினாலும்,தன்னை சமாளித்து கொண்டு,ஏன் விக்ரம் அவ செஞ்சா தப்பு,நீ செஞ்சா அது தப்பு இல்லையா?உங்க அப்பாவை ஏமாத்தினத்துக்காக நீ அவங்க அப்பாவை பழி வாங்கலாம்,அதை போல அவங்க அப்பாவை நீ ஏமாத்தினதா அவங்க அப்பா சொன்னதை நம்பி அவ உன்னை ஏமாத்தினா அது தப்பா !நீ செஞ்சது எப்படி சரினு நீ நினைக்கிறியோ,அதை போல அவ செஞ்சதும் சரி தான்!உண்மை தெரிஞ்சும் அவ தப்பு செய்யலையே!தன் தவறை திருத்திகிட்டு உங்கிட்ட மன்னிப்பு தான கேட்டா ?ஆனால் நீ என்ன செஞ்ச அவ செஞ்ச தப்புக்கு தண்டனை குடுக்கிற விதமா அவளை ஏமாத்தி அடைஞ்சு அவ பெண்மையையே கலங்க படுத்திட்டியே!இப்போ நீ செஞ்சுருக்கது தான் தப்பு விக்ரம் தப்பை விட அது பெரிய பாவம்,ஒரு பொண்ணோட கண்ணீருக்கு நீ காரணம் அய்டியே டா!நீ செஞ்சதை என்னால ஏத்துக்க முடியாது,என்னால உன்னை பார்க்க முடியாது!உங்கிட்ட பேச முடியாது!என் முகத்துலயே முழிக்காத!என தனது கையை உருவி கொண்டு அங்கிருந்து தனதறைக்கு சென்று விட்டார்…

பாட்டி சென்றதும் கலங்கிய கண்களை துடைத்து கொண்டவன் தன் மாமனை பார்க்க,அவர் ஆறுதலாக விக்ரமின் தோள்களில் தட்டி விட்டு அன்னையை காண சென்றுவிட்டார்….

அறைக்கு வந்ததும் ஓய்வாக அமர்ந்தவர் தன் மகனை கண்டதும்,பார்த்தியா இவன் என்ன பண்ணிவச்சுருக்கான்னு,நம்ம ஐஸ்க்கு மட்டும் சந்தேகம் வந்து நம்ம கிட்ட சொல்லலைனா இன்னும் இவன் நமக்கு உண்மைய சொல்லிருக்க மாட்டான்!நம்ம மாப்பிள்ளையும் இவனோட சேர்ந்து எல்லாத்தையும் மறைச்சுட்டாரு,அவரும் என்ன பண்ணுவாரு!இவன் தான் இவன் பிரச்சனைய சொல்லிருக்கணும்!

அம்மா...விடுங்க ம்மா, சின்ன பையன் ஏதோ தப்பு பண்ணிட்டான்,நாம தான் அதை சரி பண்ணனும்,எடுத்து சொன்னா புரிஞ்சுப்பான்,இனி இப்படி பண்ணமாட்டான்,ஏதோ கோபத்துல பண்ணிட்டான்,அவன்கிட்ட பேசுங்க ம்மா…

கலைவாணி,இல்ல ப்பா,முதல்ல அபி கிடைக்கட்டும் அப்பறம் அதை பத்தி யோசிக்கலாம்,ஆமா அவங்க இங்க வந்துட்டாங்களா?இல்ல குன்னூர்ல தான் இருக்காங்கலா?

அது தெரியலையே ம்மா,நான் நம்ம மாப்பிள்ளைக்கிட்ட கேக்குறேன் என்றவர்,பாலுவிற்கு அழைத்து விபரம் கேட்க,அவர்கள் சென்னைக்கு வந்துவிட்டதாக கூறிய பாலுவிடம்,அவர்கள் வவீட்டு முகவரி கேட்டு வாங்கியவர்,தனது அன்னையிடம் கூற,அன்று மாலையே அபியின் வீட்டிற்கு அன்னையும்,மகனும் கிளம்பி சென்றனர்…

வீட்டில் தனித்திருந்த விக்ரம் தன்னவள் நினைவில் மூழ்கியிருக்க,பொள்ளாச்சியில் இருந்து சென்னை வந்த அன்று நடந்தது அனைத்தும் மீண்டும் நினைவில் தோன்ற அன்றைய நிகழ்வுகளை அசை போட்டவாறு அமர்ந்து விட்டான்…

அபியும் இங்கிலாந்தில்,அலுவலகத்திலிருந்து விரைவாக வீடு திரும்பியவள்,வழக்கத்தை விட அன்று மிகவும் பலகினமாக உணர்ந்தவள் தன் மன கட்டுப்பாட்டையும் மீறி அன்றைய நினைவுகளில் மனம் உளற மனதின் போக்கிலேயே கடந்த காலத்தில் ஆழ்ந்துவிட்டாள்…



**********************************************************************************


விக்ரம்,என்ன ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி இருக்கு?



அபி,ஆமாம் விக்ரம்,நீங்க என்னை இவ்வளவு சீக்கிரம் மன்னிச்சு ஏத்துப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை!அதான் ரொம்ப சந்தோசமா இருக்கு மாமு,இந்த நிமிஷமே இந்த உயிர் போன கூட நான் சந்தோசமா செத்துப்போவேன் மாமு!என விக்ரமின் தோளில் சாய்ந்து வெட்கத்துடன் கூறியவளை,விளக்கி நிறுத்தியவன்,அபியிடம் கத்தையாக சில பண கட்டுகளை கொடுத்தான்,அபி புரியாது விக்ரமின் முகம் பார்க்க…”என்ன பணம் பத்தாதுன்னு பார்க்கிறியா?இன்னும் எவ்வளவு வேணும்னாலும் கேளு ! உனக்கு கொடுக்கலாம்,அன்னைக்கு நைட் என்னை அவ்வளவு சந்தோச படுத்துன!



அபி தான் கேட்பது சரி தானா!இதை கூறியது தனது விக்ரம் தானா!என விளங்காது,வி...விக்ரம் நீங்க என்ன சொல்றிங்க ?எனக்கு புரியலை !என கலங்கிய கண்களை கட்டுப்படுத்தியபடி உயிரை இறுக பிடித்துக்கொண்டு கேட்க…



விக்ரம்,என்ன இன்னும் உனக்கு புரியலையா?நீ எனக்கு நல்லா கம்பெனி கொடுத்த,அதுக்கு தான் இந்த பணம்,இப்போவாச்சும் புரிஞ்சுதா!என்றவன் அபியின் கைகளில் பணத்தை வைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டான்




விக்ரம் சென்றதை கூட உணராது அபி பிரம்மை பிடித்ததை போல் கைகளில் இருந்த பணத்தையே வெறித்தவள் சில நிமிடங்கள் கடக்க தீ சுட்டார் போல் கையில் இருந்த பணத்தை வீசியெறிந்தால்,கனவில் நடப்பதை போல நடந்து தனது அறைக்கு வந்தவள்,என்ன சொல்லிவிட்டான்!காதலாக அணுகினான் என தான் நினைத்திருக்க,பணத்திற்காக வருபவள் என்றல்லவா கூறிவிட்டான்!எத்தனை மரியாதை வைத்திருந்தேன் !தனது உயிரே அவன் என்றல்லவா வாழ்கிறேன் ! ஒரு தவறு செய்தேன் தான்!அதற்காக எத்தனை முறை மன்னிப்பு கேட்டிருப்பேன்!எவ்வளவு வருந்தியிருப்பேன் !அவனை நினைத்து நாளுக்கு நாள் உருகி கரைந்தேனே !அவனது மகிழ்ச்சி ஒன்றே முக்கியம் என்று அவனின் அத்தனை கோபத்தையும் தண்டனையாக ஏற்றுக்கொண்டேனே!மனதில் ஆயிரம் ஆசையிருந்தும் அவனின் ஒற்றை வார்த்தைக்காக அத்தனையும் புதைத்துக்கொண்டு பொய்யாக நடித்தேனே!அவையனைத்தும் இப்படி ஒரு சொல்லை கேட்பதற்கா!தன்னை எந்த நிலையில் வைத்துவிட்டான்!வேசி என்று சொல்லாது சொல்லிவிட்டானே!இனியும் இந்த உயிர் ஏன் இருக்கிறது!அய்யோ நான் என்ன செய்வேன்!இதற்கு தான் அன்று உன்னை என்ன செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லாத அனாதை என்றானா!இதை செய்ய திட்டமிட்டு தான் தன்னை அழைத்து வந்தானா!என் விக்ரமா இப்படி!என் காதலுக்காக காத்திருந்த விக்ரமா இப்படி செய்தான்!என் செயலால் பெண்ணின் கற்ப்பை களவாடும் கள்வனாக்கி விட்டேனே!எத்தனை அழகாக மலர்ந்த இல்லறம்!அதை இப்படி அசிங்கமாக என்னும் அளவிற்கு செய்துவிட்டானே! இனியும் இங்கிருக்க முடியுமா!இல்லை...முடியாது!இனியும் முட்டாள் தனமாக அவனின் மன்னிப்பை வேண்டி காதலை யாசிக்க முடியாது!நான் காதலித்த என் மாமு இவன் இல்லை!இவன் எனக்கு வேண்டாம்,ஆனால் எங்கு செல்வது!அவன் கூறியதை போல் இப்போது நான் சொந்தம் இருந்தும் அனாதை தானே!கடவுளே இங்கிருந்து எங்கயாவது என்னை அழைத்து செல்ல மாட்டாயா!இந்த உலகத்தை விட்டே கூட்டி சென்றாலும் அது நிம்மதி தான்,இங்கிருப்பதை காட்டிலும் நிம்மதியாக வந்துவிடுவேன்!என தனக்குள் வேதனையுற்றவள்,அந்த நாள் முழுதும் பலவாறாக சிந்தித்து கண்ணீரில் கரைந்தாள்…



ஒருவாறு தன்னை நிலைப்படுத்தி கொண்டு சிந்தித்தவள்,இங்கு தனக்கென்று பெரிதாக நண்பர்களும் இல்லை,எந்த சூழ்நிலையிலும் விக்ரமை காண கூடாது என நினைத்தவள்,தனது வெளிநாட்டு தோழனான சார்லியை தொடர்பு கொண்டவள்,தனது இப்போதைய நிலையை பற்றி எதுவும் கூறாது தான் அங்கு வர விரும்புவதாக கூற அதன் படி...





அபியின் பயணத்திற்கான ஏற்பாட்டை செய்தவன்,அபிக்கு தெரிவிக்க,உடனே அபி கிளம்பி விட்டாள்,வெளிநாடு சென்ற கணவன் தனது வேலையை முடித்து வருவதற்குள் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என நினைத்தவள் அதன்படி கிளம்பியும் விட்டாள்,விக்ரம் இங்கிருந்தால் நிச்சயம் தன்னை அனுப்ப மாட்டான்,அது நிச்சயம் காதலால் இல்லை,தன்னை வார்த்தையால் கொத்தி, குதறி அவனது கோபத்தை தீர்த்து கொல்வதற்க்கே,முன் அதற்கு அவளும் சம்மதித்து தான் அமைதியாக இருந்தாள், ஆனால் என்று தன்னை விக்ரம் அப்படி பேசினானோ இனியும் அவள் இங்கிருப்பற்கு அவள் ஒன்றும் தன் மானம் இல்லாத பெண் இல்லையே...




ஆனால் இந்த பாழா போன மனது தான் இன்னும் அந்த நாளின் தாக்கத்தில் இருந்து மீள மறுத்தது,கடந்த நிகழ்வுகளை கடந்து வர முடியாது தவித்தவள்,பல நினைவுகளுடன் விழித்திருந்தவள் எப்போது உறங்கினால் என்றே அறியாது உறங்கி போனாள்…



தேவதை வருவாள்….


தங்களது கருத்துக்களை கீழே உள்ள லிங்க்கில் பதிவிடுங்கள்

https://www.srikalatamilnovel.com/community/threads/காதல்-கொண்-ட-ற-தேவதை-கருத்து-திரி.1163/
 

rajinrm

Member
hai mathi, very nice story. arumai. please vathaikathe ennai story konjam epi 16 vudan padithuirkiren . please rerun one ro two days ku open seiyavum. thank you. with regards from rajinrm
 
Top