All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி தில்லையின் “மாயாவி” - கதைத் திரி

Status
Not open for further replies.

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 19





திவி தயங்கி தயங்கி தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தேக படுவதாக சொன்னதை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.அப்பொழுதும் அவள் தோளை சுற்றி போட்டிருந்த கையை விலக்காமல் , அதில் சிறிது அழுத்தம் மட்டுமே கொடுத்து முகத்தில் வலியை தேக்கியபடி,





“அந்த பொறுக்கி ராஸ்கல் தான் காரணமா” என்ற மனோவை குற்ற உணர்ச்சி மேலிட பார்த்த திவி ஆமாம் என்பதை போல தலையை அசைத்தாள். அதில் ஆத்திரம் அதிகரிக்க கண்களை இருக்க மூடியவர் பின்பு,





“ஏண்டா... அன்னைக்கு அவன் உன்னையும் என்னையும் பொறுக்கின்னு சொன்னான் ... இன்னைக்கு அவன் பண்ணிய காரியத்துக்கு பேறு என்ன சொல்லுடா... அவன் கிளம்பரத்துக்கு முன்னாடியே நீ இதையெல்லாம் எங்க கிட்ட சொல்லிருந்தா... இந்நேரம் அந்த ராஸ்கல் பொதைச்ச இடத்துல மரமே முளைச்சிருக்கும்” என்றவரின் வாயை பொத்தியபடி , தலையாய வேண்டாம் என்பதை போல அசைத்தவள், கண்களில் கண்ணீர் அருவியாய் வழிய,





“வேணாம்ப்பா... அப்படி சொல்லாதீங்க... அவன் எனக்கு வேணும்... உயிரோடு வேணும்... ப்ளீஸ் தேடி தருவீங்களா” என்று தேம்பியவளை பார்த்து ஆத்திரம் அதிகரிக்க, கேவலமாக அவனை சொல்ல வந்தவரை தடுத்தவள் ,





“அப்பா ... ப்ளீஸ்பா... அவனுக்கு... அவனுக்கு... இந்த மாதிரி...ந...நடந்ததே தெரியாதுப்பா... நான்... நான்...தான்... அவன்...போ...தலை இருக்கும்...போது...” என்று தயங்கி நிறுத்தியவள் தலையை குனிந்து கொள்ள, அவள் என்ன கூற வருகிறாள் என்பதை அறிந்த மனோவும் பானுமதியும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர், தேவாக்கோ கை கால்கள் எல்லாம் ஆட்டம் காண ஆரம்பித்தது, அப்பொழுதுதான் வந்த பார்த்திக்கும் இது அதிர்ச்சியே ,





“இம்ம்...சொல்லு போதையில இருக்கும் போது ...என்ன பண்ண” என்று அழுத்தத்துடன் கேட்ட மனோவின் கோபத்தில் அரண்டு போனாள் திவி , மனோவிற்கு கோபம் வந்தால் எதிரில் இருப்பது யார் என்பதை எல்லாம் கணக்கில் கொள்ளமாட்டார் , அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் மட்டும் போதும் எதிராளியின் இதயத்தை குத்தி கிழிப்பதற்கு. சிறிது நேரம் வரை பொறுமை காத்தவர்,





“திவி... உன்னைத்தான் கேட்குறேன்... என்ன நடந்துச்சு” என்றவரின் குரலில் அவரை ஏறிட்டு பார்த்தவள்,





“அது... அது... அவன்...இல்ல...நான் அவனை... அவன்கிட்ட... தப்... தப்... தப்பா... நடந்து... கிட்டேன்” என்றதும் தாமதம், வேகமாக பானுமதியின் அருகில் சென்றவர்,அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் மனோ,








ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த பானுமதி இதை சற்றும் எதிர் பார்க்காததால் , தடுமாறி கீழே விழுந்தார், மனோவின் கோபத்தில் அரண்டு இருந்தனர் அனைவரும், சடுதியில் சுதாரித்த பார்த்தி ,


“மாமா...” என்று கோபத்தில் கத்தியபடி பானுமதியை நோக்கி சென்றவன் அவரை தூக்கிவிட்டிருந்தான். பானுமதியை உறுத்து விழித்த மனோ,ஆத்திரத்துடன்,





“ஏண்டி... நீ எல்லாம் என்ன தாய்டி... பசங்க என்ன பண்ணுறாங்க ...எங்க போறாங்கன்னு எதுவும் தெரியாம என்ன அப்படி கிழிச்சுகிட்டு இருந்த... தேவாவை நல்லா வளர்க்க தெரிஞ்ச உனக்கு இவளை ஏண்டி கோட்டவிட்ட... ஏன்.. இவளும் உன் பொண்ணுதானே... நான் செல்லம் கொடுத்து தலைல தூக்கி வச்சு சுத்துனா... நீ இதான் சாக்குன்னு கழட்டி விட்டுடுவியா...”





“ஆம்பள புள்ள இல்லன்னு சொந்தக்காரங்க எவ்வளவு அசிங்கமா கிண்டல் பண்ணிருப்பாங்க ... நான் என்னடி பண்ணேன் ..பையன் இல்லனா என்னடா பாருங்கடா என் பொண்ண எப்படி வளர்கிறேன்னு மார்தட்டி எல்லார்கிட்டயும் பெருமை அடிச்சேனே ... அப்போ நீ என்ன பண்ணிருக்குனும் ... நல்ல தாயா இல்லங்க பொம்பள புள்ளய அடக்கி வளர்க்கணும் ... இல்லனா தலைகுனிவாகிடுணும்னு ஏண்டி சொல்லாம விட்ட ...” என்றவர் மீண்டும் அடிக்க கையை ஓங்கவும் பார்த்தி அவர் கையை தடுத்து பிடிக்கவும் , அவரோடைய கோபம் இப்பொழுது அவன்புறம் திரும்பியது,





“ இது எல்லாத்துக்கும் மூல காரணம் நீதாண்டா” என்று கோபமாக கூறியவரை அதிர்ச்சியுடுன் பார்த்தவன்,





“மாமா” என்று அதிர்ச்சியுடுன் அழைத்தவனை வெறுப்புடன் பார்த்தவர்,





“என்னடா மாமா... மனசுல ஒருத்திய உயிரா நினைச்சிருந்தினா... சாகுற வரைக்கும் உன்னோட உள்ளுணர்வு சொல்லுமடா ... இவதான் உன்னுடையவளுனு அவளை தொடாமலே தெரியும் ... ஆனா நீ லவ் பண்ணும் போது தேவாவை காதலிச்சுட்டு... அவ கிட்ட லவ்வை சொல்லிட்டு .. யாரு தேவா யாரு திவின்னு தெரியாம ரெண்டு பேர்கிட்டயும் உன்காதலை வளர்த்துருக்க... பாவம் அவ ,தேவான்னு நினைச்சு நீ கொஞ்சுறதை எல்லாம் பார்த்து நீ அவளை லவ் பண்ணுறேன்னு நினைச்சு மனசுல ஆசையை வளர்த்துக்கிட்ட...” என்றவரை பார்த்து குற்ற உணர்ச்சியில் தலையை குனிந்து கொண்டான் பார்த்தி, அவனுமே இதை அறிவான் , திவிகிட்ட அப்பவே இதை தெளிவு படுத்தாம விட்டுட்டோமே என்று கடந்த சில வாரங்களாய் அவன் தவிச்சது தேவாக்கு மட்டும்தான் தெரியும்.





மனோ பேசி முடித்ததும், “அப்பா“ என்ற கேவலுடன் ஓடிவந்து அவரை கட்டி கொண்டு கதற ஆரம்பித்தாள் திவி.





“அப்பா...சாரிபா...அம் எஸ்ட்ரிமிளி சார்பா...நான் தப்பு பன்னலபா...” என்றவள் கல்யாணம் எப்படி நடந்தது என்பதில் இருந்து , ஸ்ரீயின் மனநிலை அவனுடைய ரகசியம் எல்லாத்தையும் சொல்லிமுடித்தவள் அவர் முகத்தையே பார்த்திருந்தாள்.


ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும் அளவிற்கு அங்கே அமைதி, அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இதுவரை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு இப்போ திவி சொன்னதுதான் வாழ்நாளிலேயே பேரதிர்ச்சியா தோன்றியது,





“ஆம்பள பசங்க பண்ண தயங்குற காரியத்தை பண்ணிட்டு வந்து நிக்கிற... ரொம்ப பெருமையா இருக்கு திவிக்குட்டி... ஊருல இருக்கிறவன் எல்லாம் என் பொண்ணை பார்த்து மூக்குமேல விரல் வைக்க போறாங்க... அந்த பொறுக்கி ராஸ்கல் என் மூஞ்சு மேல காரி துப்பினது தப்பே இல்ல...நீ என்ன ரீசன் வேண்ணா சொல்லு ,அவன் உன் கழுத்துல உன்ன கேட்காம தாலி கட்டுனது தப்பு...ஒரு பொம்பளை பிள்ளைன்னு பார்க்காம அவ எதிர்காலத்தை நினைக்காம அவன் காரியத்துக்கு யூஸ் பண்ணிருக்கான் அயோக்கிய ராஸ்கல்... எப்படி அவன் உன்கூட ஒரே ரூம்ல தங்கலாம்... பொறுக்கி...பொறுக்கி ... நல்லவனா இருந்திருந்தா உன்னை பார்த்த அன்னைக்கே தகவல் சொல்லிருக்குனும் ...அவனுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் அவன் காதலிச்ச பொண்ணு நல்லா இருக்கணும்னு என் பொண்ணு வாழ்க்கையை பாழாக்கிட்டான்... அன்னைக்கு போதையில் எல்லாம் தெரிஞ்சே அவன் நடிச்சுருப்பான் சந்தேகமா இருக்கு” என்ற மனோவை கையால் ஆகாத தனத்தோடு பார்த்த திவி,





“இல்லப்பா...” என்று ஆரம்பிக்கும் போதே ,ஆவேசத்துடன் அருகில் வந்த பானுமதி,





“ஏண்டி... ஏன் இப்படி பண்ண ..ஏன் உன் புத்தி இப்படி மாறிப்போச்சு…உன் தலையில நீயே மண்ணை அள்ளி போட்டுக்கிட்டேயே ஏண்டா ... முடியாது...நீ கிளம்பு ... இது உனக்கு வேணாம் அபார்ட் பண்ணிடலாம்“ என்றவரை நம்பாத பார்வை பார்த்த திவி ,





“நீ ஒரு டாக்டர் ...இப்படி சொல்ல உனக்கு வெட்கமா இல்ல” என்று சீரியவளை மனோவின் குரல் தடுத்தது,





“திவி..அம்மா சொல்லுறதுதான் கரெக்ட்.. இது உனக்கு வேணாம் திவி“ என்றவரை கண்ணீர் வழிய பார்த்தவள், முடியாது என்பதை போல தலையசைத்தாள்.





“திவி... நீ... பரிதாபத்துல எடுத்த முடிவு வாழ்க்கை முழுதும் உனக்கு வலியை கொடுத்துக்கிட்டு இருக்கும் திவி...அப்பா சொல்லுறதை கேளுடா” என்று மனோ கூறியதற்கு, திரும்பவும் மறுத்து தலையசைப்பையே பதிலாக தந்தாள் .





அவள் மறுக்க மறுக்க அவள் மேல் ஆத்திரம் வருவதற்கு பதில் மனோவிற்கு நெஞ்சைதான் அடைத்தது, அவர் கண் முன்னே பட்டாம்பூச்சியாய் துள்ளி திரிந்த திவி வந்து போனாள், என்ன ஆனாலும் அவள் வாழ்க்கை பாழாக விடக்கூடாதுன்னு முடிவு பண்ணியவர்,





“திவிக்குட்டி... கொஞ்சம் நினைச்சு பாருடா... நாளைக்கு இந்த குழந்தை பொறந்து வளரும் போதே எவ்வளவு அவமானம் தாங்கணும் கழுத்துல தாலி இல்லாம ... ஊர் அறிய கல்யாணம் பண்ணாம குழந்தை பெத்துக்கிட்ட ... எல்லாரும் உன் பேபியை தப்பா பேசுவாங்க ...உன்னால அத தாங்க முடியுமா நிலை இல்லாத வாழ்க்கை டா இது ...வேணாம் ப்ளீஸ் அப்பா சொல்லுறதை கேளுமா”





அதற்கும் வாய் திறக்காமல் அமைதியாக இருந்தவளை பார்த்து பானுமதிக்கு ஆத்திரம் வர,


“அழுத்தக்காரி...ஏதாவது வாயை திறந்து சொல்லுடி” என்றவரை முறைத்தபடி கை நீட்டி தடுத்த மனோ,





“திவி... நீ சொன்னதை வச்சு பாக்கும் போது...அந்த ராஸ்கல் வரமாட்டான்தான் தோணுது... வீணா உன்னோட வாழ்க்கையும் குழந்தையோட வாழ்க்கையும் அழிச்சிடாத” என்றவரை பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தவள்,





“வருவான்பா...கண்டிப்பா அவன் என்னை தேடி வருவான்... எனக்கு முருக்ஸ் மேல நம்பிக்கை இருக்கு... அவர்தான் எனக்கு இவனை கை காட்டினார்... அப்போ என்ன அர்த்தம் என் வாழ்க்கை அவன் கூடத்தானே...கண்டிப்பா வருவான்” என்றவளை பார்த்து அங்கே இருந்தவர்கள் மானசீகமாக தலையில் அடித்து கொண்டனர், பானுமதியோ மனோவை தீ பார்வை பார்த்து வைத்தார், திவியின் முருகன் பக்திக்கு காரணம் மனோவின் தாயார் தான்.





“அப்படி அவன் வரலைனா என்ன பண்ணுறதா இருக்க சொல்லு” என்ற மனோவிற்கு,





“கண்டிப்பா வருவன்பா ...இல்லனாலும் நாம கொஞ்சம் தேடினா சீக்கிரம் கிடைச்சுடுவான்” என்றதிற்கு மறுத்து தலையசைத்த மனோ,





“நோ...நாம யாரும் அந்த ராஸ்கல்லை தேடபோறது இல்ல ...உன்னோட முருக்ஸ் கொண்டு வந்து உன் முன்னாடி நிறுத்துறாரான்னு பாப்போம்... அப்படி இல்லனா...” என்று இழுத்து நிறுத்தியவரை கலகத்துடுன் பார்த்தவள் ,சிறிது தடுமாற்றத்துடனே ,





“இல்ல ...வருவான்...இல்லனா நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன்” என்று திவி கூறியதை கேட்டதும்தான் மனோவிற்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.





“சரி... இந்த குழந்தையை நீ பெத்துக்கோ ” என்றவரை இடைமறித்த பானுமதி ,





“மனோ” என்று கூற, கை நீட்டி தடுத்தவர்





“இங்கபாருடா... உனக்கு மூணு மாசம் டைம் கொடுக்கிறேன் அதுக்குள்ள அவன் உன்ன தேடி வரணும் ..இல்ல ... உனக்கு கெளதம் தெரியும்தானே அவன் கூட அதுக்கும் அடுத்த மாசத்துல கல்யாணம்... புரியுதா” என்று சர்வசாதாரணமாக மனோ கூறியதை கேட்டு திவியின் உடல் நடுங்கியது. அவள் மனோமோ ‘இல்ல ஸ்ரீயை தவிரவேற யாரையும் நான் தாலி கட்ட விடமாட்டேன்... எங்கடா இருக்க சீக்கிரம் என்கிட்ட வந்துடுடா’ என்று புலம்ப ஆரம்பித்தது .





அதன்பிறகு திவியை பானுமதியே முழு பரிசோதனை செய்து குழந்தை உருவானதை உறுதி படுத்தினார். நடுவே தேவாவும் பார்த்தியும் அவளிடம் பேச முற்படும் போது எல்லாம் அவர்களை தள்ளியே நிறுத்தினாள் திவி.





தன் சிந்தனையில் இருந்து கலைந்தவள், சிறிதாக மேடிட்டு இருந்த தன் வயிற்றை ஆசையுடன் வருடி கொடுத்தவளின் முகத்தில் புன்னகை, கூடவே ஸ்ரீயின் நியாபகமும் , அவளுக்கே அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் ஸ்ரீ தன் ஆழ் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்ததை நினைத்து. இது காதலா , இல்ல மஞ்சள் கையிரு மேஜிக்கா... இல்ல ஒரு நாள் வாழ்ந்த வாழ்க்கையா .... இல்ல அவன் உயிர் தனக்குள்ளே வளர்வதா ...இல்ல மஞ்சு மேல உள்ள அவனோட ஆழமான காதலா ... எதோ ஒன்று அவளை அவன்பால் சாய்த்தது, இதனால் ஒரு நாளின் முக்கால்வாசி நேரமும் ஸ்ரீயை பத்தியே நினைவு சுத்திக்கொண்டே இருக்கும் திவிக்கு , அவனோடய மஞ்சு மீதான காதலை நினைத்தால் திவிக்கு பொறாமையும் ஏக்கமும் கலந்து வரும் அதே நேரம் மஞ்சுவை நினைத்து பரிதாபமும் வரும், இந்த நொடி கூட அவன் நினைப்பு மஞ்சுவை சுத்தியே இருக்கும் என்பதில் அவளுக்கு கொஞ்சம் கூட சந்தேகம் கிடையாது, அதனால் அவளுக்கு வருத்தமும் கிடையாது , உண்மை காதலை தூசி தட்டுவதை போல தள்ளி விட முடியாது என்று திவியும் உணர்ந்திருந்தாள். அந்த அன்பை காதலை தானும் அனுபவிக்கனும் அது நடிப்பா இருந்தாலும் பரவாயில்லை என்ற வெறியே அவள் மனதில் வேர் விட்டு மரமாய் வளர்ந்திருந்தது.





அவன் இன்று வருவான் நாளை வருவான் என்று ஒவ்வொரு நாளும் எதிர் பார்த்து காத்திருந்தவளுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது , இன்னும் சில நாட்களில் தந்தை கொடுத்த கெடுவும் முடிந்து விடும் என்பதை அறிந்தவளுக்கு கண்ணீர் முட்டி கொண்டு வந்தது,


தன் வயிற்றை தடவியபடி,





“குட்டி... அப்பாவுக்கு நம்ம நியாபகமே இல்ல போல ...இன்னும் எக்ஸ் லவர்ர நினைச்சுகிட்டு .. சுத்திகிட்டு இருக்கான் போல...அவனை எப்படி குட்டிஸ் இங்க வர வைக்கிறது அம்மாக்கு ஐடியா சொல்லுங்க பார்க்கலாம்” என்று வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசியவள், மேஜையில் இருந்த முருகர் படத்தை கையில் எடுத்து,





“முருக்ஸ்... என்னோட இந்த நிலைக்கு நீதான் காரணம்...ஒழுங்கா ...அவனுக்கு எங்களை நியாபக படுத்து இல்ல... மூணு உசுருக்கு நீ பதில் சொல்லணும்” என்று மிரட்டியவள் தூக்கம் வராததால் அந்த இரவு வேளையில் தோட்டத்தில் நடக்க ஆரம்பித்தாள்.





“நான் போறேன்...நீங்கதான் என்ன வேணாம்னு சொல்லிடீங்கள...நான் போறேன்” என்றவள் அழுதபடி மறைய ஆரம்பித்தாள்.





“திமிர் எடுத்து போறதுன்னா போடி...ஐ டோன்ட் கேர்” திமிராக கூறியவனுக்கு , சிறு குழந்தையின் அழு குரலே பதிலாக கிடைத்தது,





“அப்பா...பயமா இருக்குப்பா ...அம்மா என்ன இருட்டுக்கு கூட்டிட்டு போறாப்பா... வாங்கப்பா... சீக்கிரம் வாங்கப்பா” என்ற மழலையின் குரல் திரும்ப திரும்ப அவன் காதுகளில் ஒலித்து இம்சை பண்ணியது, சற்றென்று தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண் விழித்தான் ஸ்ரீ.





தான் விழித்ததில் மேல் படுத்திருந்த பூந்தளிர் தலையை மட்டும் எக்கி தன்னை மிரட்சியுடன் பார்ப்பதை கண்டு தன்னையே நொந்தவன்,





“ஒன்னும் இல்ல நிம்மி பேபி ... மாமாவை பூச்சு கடிச்சுடுச்சு ...நீ தூங்கு” என்றவன் தட்டி கொடுக்க மீண்டும் உறக்கத்திற்கு சென்றாள் நிம்மி.





நிம்மி நல்ல உறக்கத்திற்கு சென்றதும் படுக்கையில் இருந்து எழுந்த ஸ்ரீ, பால்கனியில் நின்று சிறிது நேரம் வானத்தை வெறித்தவன் , ஏன் இந்த மாதிரி கணவு வந்துச்சு, யாருக்கு என்னவா இருக்கும், ஒருவேளை மஞ்... என்று ஆரம்பித்தவன், இல்ல இது மஞ்சு கிடையாது அப்போ யாரா இருக்கும், என்று சிந்தித்தவன் மனதில் தோன்றினாள் திவி.





மனம் நிம்மதி இல்லாமல் அடித்துக்கொள்ளவும் பொறுக்கமாட்டாமல் , தான் இதுநாள் வரை அனைத்து வைத்திருந்த போனை எடுத்து உயிர்பித்தவன் தயங்கியவாறே பானுமதிக்கு அழைத்தான்.





ரிங் அடித்தும் எடுக்க படாததால் விட்டுடலாமா என்று யோசித்தவன் , கடைசி முயற்சியாக திடும்பவும் அழைக்க,மறுமுனையில் கால் எடுக்கப்பட்டு பானுமதியின் ஹலோ என்ற குரலை கேட்டு சிறிது தயங்கிய ஸ்ரீ,





“ஹலோ...நான் ஸ்ரீ பேசுறேன் ...திவி எப்படி இருக்கானு பார்த்து சொல்லுங்க” என்று கூறியதை கேட்டதும் கோபம் தலைக்கு ஏற ,பதில் சொல்ல முடியாத நிலையில் தன் அருகில் மனோ உறங்குவதை கண்டு மெல்ல எழுந்து வெளியே வந்தவர், கோபத்துடன்,





“இப்போ எது....” என்று ஆரம்பித்தவர் “திவிஈஈஈ” என்று அலறியவரின் கையில் இருந்து போன் நழுவி விழுந்து நொறுங்கியது.





அவர் போட்ட சத்தத்தில் ஸ்ரீயின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது, பின்அலட்சியமாக





“போடி...திமிர் எடுத்து சாக போனின்னா ... உன்ன பாக்க நான் வரணுமா ...முடியாது... நீ எனக்கு யாரோதான்... செத்துத்தொலை ...உங்க வீட்டுலயாவது நிம்மதியா இருப்பாங்க” என்றவன் திரும்பவும் தன் தூக்கத்தை தொடர்ந்தான்.

 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 20





“அண்ணா...எனக்கு சத்தியம் பண்ணி கொடுத்துருக்கீங்க...ஏமாத்த மாட்டிங்கள”


“சொல்லுங்கண்னா...ஏமாத்த மாட்டிங்கள” திரும்ப திரும்ப காதில் ஒலித்த அழு குரலில் திடுக்கிட்டு கண் விழித்தான் ஸ்ரீ.





சில நேரம் திக்பிரம்மை பிடித்ததை போல அமர்ந்து இருந்தவன், மெல்ல மெல்ல சுயநிலைக்கு திரும்பினான் ,





“அம்மு...என்னடா சொல்லுற...” என்று வாய்விட்டு புலம்பிய ஸ்ரீ, அருகில் படுத்திருந்த அருள் அமுதாவின் குட்டி தேவதை நிம்மியை துக்கத்துடன் பார்த்தவனின் கண்கள் கலங்க ஆரம்பிக்கவும் அந்த இடத்தை விட்டு வெளியேறி வாசலில் சென்று அமர்ந்து கொண்டவனின் மனம் அந்த துக்ககரமான தினத்தை நோக்கி சென்றது .





ஸ்ரீயின் ஆசை மற்றும் பிடிவாதத்தால் சென்னையில் அமுதாவிற்கு பிரசவம் பார்க்கப்பட்டது. குட்டி தேவதையின் வரவை ஆர்பாட்டத்துடன் வரவேற்ற ஸ்ரீ , ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கியிருந்த அமுதாவையும் அருளையும் அழைத்து செல்ல வந்தான். அருள் குடும்பம் தனி காரிலும் ஸ்ரீ தன் காரில் அவர்களை தொடர்வதாக இருந்தது , கடைசி நிமிடத்தில் ஸ்ரீயின் காரில் பிரச்சனை ஏற்பட்டதால் அருளின் காரை ஸ்ரீ ஓட்ட அவர்களின் பயணம் கேலி கிண்டல் சந்தோசம் என்ற கலவையில் ஆரம்பித்தது.





ஸ்ரீ அருளை ஓட்ட... அருள் ஸ்ரீயை ஓட்ட என்று சந்தோசமாக கதை அடித்தபடி வந்தவர்களின் பேச்சு ஸ்ரீயிடம் திரும்பியது,





“அண்ணா...நான் உங்களுக்கு மருமகளை பெத்து கொடுத்துட்டேன் நீங்க எப்போ எங்க மருமகனை கண்ணுல காட்டுவீங்க” என்ற அமுதாவை ‘உண்மை தெரிஞ்சுக்கிட்டே கேட்கிறா பாரு’ என்று மனதில் அவளை திட்டியபடி முறைத்த அருள்,





“ஆங்...நேரம் வரும் போது காட்டுவான்...கொஞ்சம் வாயை மூடிட்டு வரியா” என்று சுள்ளென்று விழுந்தவனை கண்டு முறைத்த ஸ்ரீ,





“இப்போ ஏண்டா அது கிட்ட கத்துற ...” என்றவன், அமுதாவை திரும்பி பார்த்து சிரித்தவன்,





“அம்மு.. மருமகனைத்தானே...” என்று இழுத்தவனின் முகத்தில் டன் கணக்கில் வழிசலோடு கலந்த வெட்க புன்னகை உதித்துருக்க, ,





“அதுக்கு முதல உனக்கு அண்ணி ரெடி பண்ணனும்...” என்று ஆரம்பித்தவனை முடிக்க விடாமல் ,





“இம்மன்னு..ஒரு வார்த்தை சொல்லுங்கனா... ஊருக்கு போனதும் முதல் வேலையா உங்களுக்கு ஏத்ததை போல அண்ணி பார்த்துடுறேன்“ என்று சீரியஸ்ஸாக பேசியவளை ,





“அமுதா...” என்று இருவேறு அழுத்த குரல்கள் அவளை நோக்கி பாய்ந்ததை சிறிதும் கொண்டு கொள்ளாதவள், என்ன என்பதை போல அவர்களை ஏறிட்டு பார்த்தாள், அருளின் முகம் கோபத்தை தத்து எடுத்திருந்தது , ஸ்ரீயின் முகமோ அதிர்ச்சியில் இருந்தது





“அம்மு...உனக்கு நல்லாவே தெரியும் மஞ்சுதான் என்னோட உயிருனு... தெரிஞ்சே நீ இப்படி பேசறது நல்லாயில்ல சொல்லிட்டேன்...என்னக்கி இருந்தாலும் மஞ்சுதான் உனக்கு அண்ணி... புரிஞ்சுதா.. விளையாட்டுக்கு கூட இனி இப்படி பேசாத” என்ற ஸ்ரீ ஓரமாக நிறுத்திருந்த வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.





“அவ கிடக்கிற ஸ்ரீ நேத்து வந்தவளுக்கு உன்னை பத்தியும் மஞ்சுமாவை பத்தியும் என்ன தெரியும்..” என்று ஸ்ரீயை சமாதானம் படுத்திய அருள் , திரும்பி அமுதாவை பார்த்து விரல் நீட்டி,


இதுக்கு மேல வாயை திறந்த வாயை உடைச்சுடுவேன் புரிஞ்சுச்சா...” என்றவனை முறைத்துக்கொண்டே வந்தாள் அமுதா





சிறிது தூரம் அமைதியில் கழிந்தது அவர்களின் பயணம், அருள் மட்டும் திரும்பி திரும்பி அமுதாவை பார்த்து அடிக்கடி முறைத்து கொண்டிருந்தான், சற்றென்று சத்தம் போட்டு சிரித்த ஸ்ரீ,





“டேய் நான் வேணா காரை ஸ்டாப் பண்ணவா ... நீ போய் பின்னாடி உட்கார்ந்துக்கோ..கழுத்து சுளுக்கிக்க போகுது..” என்று நக்கல் அடித்தவனை முறைத்த அருள்,





“வேணாம்டா.. நானே அவ மேல கொலை காண்டுல இருக்கேன்...பின்னாடி போனேன்.. கழுத்தை நெறிச்சாலும் நெரிச்சுடுவேன்” என்று எரிந்து விழுந்த அருளை பார்த்து முறைத்த அமுதா சத்தம் வராமல் கேவலமாக திட்டிக்கொண்டிருந்தாள். அதேயே பார்த்து கொண்டிருந்த அருளுக்கு அவளின் கோப இதழ்களை அந்த தருணமே சிறை பிடிக்கவேண்டும் என்ற வெறியே எழுந்தது, திரும்பி ஸ்ரீயை ஒரு பார்வை பார்த்தவன், அமுதாவை பார்க்க அவன் என்ன செய்ய போகிறான் என்பதை அறிந்த அமுதா வேண்டுமென்றே அவனை பார்க்காமல் வெளியே வேடிக்கை பார்ப்பது போல பார்த்து கொண்டிருந்தவளை,





“அம்முஉஉ... பாப்பா சினுங்குது பாரு” என்ற அருளை முறைத்தபடி தூங்கும் குழந்தையை பார்த்தவள் மீண்டும் அவனை முறைத்தாள், அவளின் பார்வை தன் மீது பட்டதும் காண கிடைக்காததை கிடைத்தது போல முகம் விகாசிக்க அவளை பார்த்து கண் அடித்தவன் உதட்டை குவித்து காற்றில் முத்தம் ஒன்றும் கொடுத்தவனை கண்டு வெட்கம் வந்தாலும் கெத்தை விடாமல் உதட்டை சுழித்து பழிப்பு காட்டியவளின் செயலில் மயக்கம் வருவதை போல தன் இருக்கையில் விழுந்த அருளை பார்த்து வாயில் கை வைத்து சிரித்த அமுதாவை தொடர்ந்து,





“டேய் அருளு...இதுக்கு பேருதான் கொலைவெறியாடா...இவ்வளவு நாள் தெரியாமா போச்சே”


என்ற ஸ்ரீயின் நக்கல் குரலில் , அசடு வழிந்த அருளு,





“அது வந்துடா மச்சான்...” என்று இழுத்தவனை பார்த்து





“டேய்..டேய்.. இதயெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்... கல்யாணம் ஆகாத ஒன்னும் தெரியாத சின்ன பையன் இருக்கானே... அவன் மனசு பாதிக்கப்படும்னு கொஞ்சமாச்சும் யோசிச்சியாடா” என்ற ஸ்ரீயை இடைமறித்த அருள்,





“ஒன்னும் தெரியாத பையனா ...யாருடா அது, அம்மு...உனக்கு தெரியுமா” என்று தன் மனைவியையும் ஆதரவுக்கு இழுத்தான் அருள் , மீண்டும் அவனை முறைத்துக்கொண்டே,





“எங்க அண்ணனுக்கு எதுவும் தெரியாது நீங்கதான் அவங்களை கெடுக்கிறீங்க...அவங்க மூஞ்சை பாருங்க பால் வடியிது” என்றவளை நக்கல் பார்வை பார்த்தவன்,





“ஓஹோ...அப்போ இதுதான் பால் வடியிற மூஞ்சா“ என்றவாறே அவன் மூஞ்சை உத்து பார்க்க , மூஞ்சை பாவமாக வைத்தபடி காரை ஓட்டிக்கொண்டிருந்தவனை பார்த்து மூவருமே சிரித்து விட்டனர். கண்ணாடி வழியே அமுதாவை பார்த்த ஸ்ரீ,





“அம்மு...ஏன்டா உனக்கு மஞ்சுவை புடிக்கல...” பட்டென்று கேட்டவனை கண்டு அதிர்ந்தாலும் சுதாரித்து,





“நான் புடிக்கலன்னு எப்போன்னா சொன்னேன்...அவங்க அழகா அம்சமா இருகாங்க ஆனா எப்பவும் மூஞ்சை உர்ருன்னு வச்சுக்கிட்டு இருகாங்க...உங்ககிட்ட இவங்க பேசினா...மஞ்சுக்கு சுத்தமா புடிக்கமாட்டுது...அவங்க என்னமோ உச்சில இருக்கிறது போலவும்...நாங்க எல்லாம் சாக்கடைல கிடக்கிறது போலவும் ட்ரீட் பண்ணுறாங்கன்னா..” என்று தன் மனதில் இருந்த அத்தனையும் ஸ்ரீயிடும் கொட்டினாள் அமுதா.





“கல்யாணம் முடியட்டும் அம்மு...அவளை உன் கிட்டயும் அருள் கிட்டயும் மன்னிப்பு கேட்க வைக்கிறேன்...ஊருல செல்லமா வளர்ந்தவ ...அதான் இப்படி நடந்துகிறா...ஆனா அவ ரொம்ப நல்லவடா..அவ மேல வெறுப்பை வளர்த்துக்காத” என்ற ஸ்ரீயை தொடர்ந்து ,





“ஏய்... இதுயெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதானே கல்யாணம் பண்ணிக்கிட்ட...” என்று அமுதாவிடம் எகிறிய அருள் ஸ்ரீயிடம் ,





“ஸ்ரீ...அவக்கிடக்கிறா லூசு... குழந்தை பெத்துக்கிட்டா இப்படித்தான் ஹார்மோன்ஸ் மாற்றம் நடக்குமாம் ...கண்டுக்காத அவ எப்படி சண்டை போடலாம்னு டிசைன் டிசைனா யோசிக்கிறா” என்றவனை முறைத்த அமுதா,





“அண்ணா...கல்யாணம் முடிஞ்ச பிறகு நீங்க மஞ்சு கால்லயும் அவங்க உங்க கால்லயும் விழுந்து கிடக்க போறீங்க...ஆனா ஒன்னு மட்டும் கன்பார்மா சொல்லுவேன் உங்களுக்குள்ள சண்டை வரவே வராதுன்னா” என்றவளை சந்தேகமா பார்த்தனர் இருவரும்.





“பின்ன... உன்ன மாதிரி வாயடியை கட்டிக்கிட்டு நாள் புல்லா அவஸ்தை படணும்னு அவனுக்கு என்ன தலையெழுத்தா...டேய் ஸ்ரீ வீட்டுக்கு வந்தோமா நிம்மதியா தூங்கணுமான்னு இருக்கனும்டா... அதாண்டா லைப்” என்ற அருளை பார்த்து சிரித்தான் ஸ்ரீ.





மூவரும் அவரவர் சிந்தனைகளில் மூழ்கியிருந்தனர் , இதில் அமுதா மட்டும் ஸ்ரீயை பார்ப்பதும் ஏதோ சொல்ல வருவதும் அதை கண்டு கொண்டு அருள் கண்களால் மிரட்டுவதையும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீயின் மனதில் ஏதோ சரி இல்லை என்ற அபாய சங்கு ஒலிக்க ஆரம்பித்தது. பொறுக்கமாட்டாமல்,





“அமுதா...ஏதோ சொல்லணும்னு நினைக்கிற இந்த பய உன்ன சொல்லவிடாம மிரட்டுறான், என்ன உன்னோட கூடப்பிறந்தவனா நினைச்சா மறைக்காம சொல்லடா” என்ற ஸ்ரீயிடம் ஏதோ சொல்ல முயன்ற அருளை தடுத்த ஸ்ரீ , அமுதாவை தீர்க்கமாக பார்த்திருந்தான். சிறிது தயங்கிய அமுதா,





“அண்ணா...உங்க வீட்டுல சொல்லி மஞ்சுவை சீக்கிரம் கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணுங்க... மஞ்சு வீட்டுல உங்க கல்யாணத்தை இப்போதைக்கு நடத்த மாட்டாங்கனா“ தயங்கி தயங்கி கூறியவளை புருவம் சுருக்க பார்த்தவன்,





“ஏன்...” என்று கேட்டவாறே காரை ஓரமாக நிறுத்திருந்தான்.





“அது...அதுவந்து...ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நாங்க பெரிய கோவிலுக்கு போயிருந்தப்போ... அங்கே மஞ்சுவோட அம்மா அப்பா அப்புறம் அவங்க ஜோசியரும் இருந்தாங்க, அவங்க எங்களை கவனிக்கலைனா ... அந்த ஜோசியர்..” என்று தயங்கியவளை , தலையை ஆட்டி மேலே சொல்லு என்று ஊக்குவித்தான் ஸ்ரீ.





“அது... உங்க ரெண்டு பேருக்கும் ... கல்யாணம் பண்ணா ... மஞ்சு கொஞ்ச நாள்ல அவங்க வீட்டுக்கு நிரந்திரமா திரும்ப வந்துடுவாள்ன்னு சொன்னார்னா” எச்சி முழுங்கியபடி பதட்டத்துடன் கூறிய அமுதாவை புரியாமல் பார்த்த ஸ்ரீ,





“ஏன் அம்மு... என்ன பார்த்தா அவ்வளவு கொடூரமா தெரியிறேன்... மஞ்சுவை கொடுமை படுத்தி அவங்க வீட்டுக்கு அனுப்ப” என்று சிறு சிரிப்புடன் கூறியவனை பார்த்து, கண்கள் கலங்க அவனையே பார்த்தவளுக்கு அய்யோ என்றிருந்தது.





அமுதாவின் கண்கள் கலங்கியதை கண்டு திடுக்கிட்ட ஸ்ரீ , திரும்பி அருளை பார்க்க அங்கே கண்கள் கலங்க கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருள் திணறுவதை கண்டு யோசனையுடன் நெற்றியை தட்டியவனுக்கு சத்தியமாக ஒன்னும் புரியவில்லை.





“அம்மு...எனக்கு ஒன்னும் புரியல என்னன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுறியா , ஆமா இப்போ எதுக்கு ரெண்டுபேரும் ஓவர் பீலிங்ஸ் காட்டுறீங்க” என்றவனை கோபத்துடன் முறைத்தவள்,





“என்ன புரியல ...இம்ம்... என்ன புரியல ... உங்களை கட்டிக்கிட்டா நீங்க அல்பாயுசுல போய்டுவீங்களாம்...அவங்க வாழாவெட்டியா அவ வீட்டுல இருக்கணுமாம்...போதுமா” என்று வெறிகொண்டவள் போல கத்தியவள்,





“நீ எங்களை விட்டு போய்டுவியானா... சொல்லு எங்களை விட்டு போய்டுவியா...ஓஓஓஓஓ...” என்று பெருங்குரலெடுத்து அழுதவளை கண்டு திகைத்த ஸ்ரீ , அவள் கூறிய விசையத்தை மூளையில் ஏற்றவே சற்று நேரம் பிடித்தது அவனுக்கு.





அதற்குள் அங்கே அமர்ந்திருக்க முடியாமல் கார் கதவை திறந்து கொண்டு வெளியேறிருந்தான் அருள் , அவனையே பார்த்திருந்த ஸ்ரீக்கு தெரிந்தது அவன் அழுகிறான் என்று , அவனிடம் செல்ல கால்கள் பரபரத்தாலும் குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆனா அமுதா தேம்பி தேம்பி அழுவதை காண சகிக்காமல் , தன் இருக்கையில் இருந்து வெளியே வந்தவன் பின்புறம் அமுதாவின் அருகில் சென்று அமர்ந்துகொண்டவன் அவள் கைகளை மெல்ல பற்றி,





“அம்மு...இங்கபாரு...அண்ணனை பாருடா...சொல்லுறேன்ல...” என்றவன் வலுக்கட்டாயமாக அவள் முகத்தை தன்புறம் திருப்பிய ஸ்ரீ,





“லூசாடா நீங்க ரெண்டு பேரும் .. ஏதோ ஒரு பிராடு ஜோசியகாரன் சொல்லிட்டான்னு பீல் பண்ணிட்டு இருக்கீங்க... பாரு நீ இந்தமாறி சமயத்துல அழகூடாதுடா ..அவன் சொன்ன நடந்துடுமா... இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ.... கண்டிப்பா எனக்கு பையன் பொறப்பான்... இல்லனாலும் உன் அண்ணியை பையன் பெத்துகிற வரைக்கும் விட மாட்டேன்... என் பையன் ரெண்டு வருஷம் இல்ல பத்து வருஷம் கழிச்சு பொறந்தாலும் அவன்தான் இந்த அழகு தேவதையோட புருஷன்...இப்போ ஹாப்பியா..அண்ணனுக்கு ஒன்னும் ஆகாதுடா” என்ற ஸ்ரீ அமுதாவின் கையில் அடித்து சத்தியம் பண்ணியிருந்தான்.





அவன் கூறியதை எதையும் காதில் வாங்காதவள் அவன் முகத்தையே வெறித்து பார்த்தவள்,


“அண்ணா..நீ எங்களை விட்டு போக மாட்டத்தானே..சொல்லுனா ...எங்களுக்கு இருக்கிற ஒரே சொந்தம் நீந்தான் ..எங்களை ஏமாத்த மாட்டேல்ல...எனக்கு முன்னாடி நீ போக கூடாது நான் சொல்லிட்டேன்” என்று திரும்ப திரும்ப புலம்பியவளை பார்த்தவனுக்கு அந்த ஜோசியரை காலில் போட்டு பந்தாடும் வெறி வந்தது ஸ்ரீக்கு.





“அம்மு... என்னதிது சின்ன புள்ளையாட்டம்...என் அம்மு அடாவடி வாயாடி சொர்ணாக்கா ஆச்சே இந்த அழுமூஞ்சை எனக்கு புடிக்கல... பாரு அவனை ஒரமபோய் ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்கான்.. அவனை....” என்று பல்லை கடித்தவன் திரும்பி அமுதாவை பார்த்து சிரித்த ஸ்ரீ,





“அண்ணனுக்கு ஒன்னும் ஆகாதுடா... அழக்கூடாது..நான் போய் அவனை இழுத்துட்டு வரேன் ” என்று அவளை சமாதானம் படுத்திய ஸ்ரீ அருள் அருகில் சென்று ஓங்கி ஒரு அடி அடித்திருந்தான் அவன் முதுகில்.





அப்பொழுதும் திரும்பாமல் இலக்கற்று வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவன் முன்னாள் சென்று நின்ற ஸ்ரீ , அவன் முகத்தை பார்த்து திகைத்து போனான் அழுது அழுது முகம் அதற்குள் வீங்கி இருந்தது அருளுக்கு , அதை பார்த்ததும் ஸ்ரீயின் கண்களும் கலங்கியதை கண்ட அருள் அவனை இழுத்து இருக்க அணைத்து,





“நான் உன்ன விட மாட்டேண்டா..யாரும் என்கிட்ட இருந்து உன்ன பிரிக்க முடியாது...நான் இருக்கிற வரைக்கும் எவனுக்கு உன் பக்கத்துல வர தையிரியும் இருக்காது ... அந்த ஜோசியக்காரனை அன்னைக்கு நைட் மூஞ்சு மொகரையெல்லாம் பேத்துட்டேன்” என்றவனின் முதுகை வருடி கொடுத்த ஸ்ரீ,





“டேய் அருளு எப்போதாலருந்து இதையெல்லாம் நம்ப ஆரம்பிச்ச..வாடா வாடா அடுத்த மாசம் நடக்க போற என்னோட கல்யாண வேலை எல்லாம் நீதான் பாக்க போற..” என்ற ஸ்ரீயை திரும்பவும் அணைத்த அருள் அவன் கன்னத்தில் சந்தோசம் மிகுதியில் முத்தம் ஒன்றும் வைத்தான். அதை காரில் இருந்து பார்த்த அமுதாவிற்கு கண்களில் புதிதாக கண்ணீர் பெருக்கெடுத்தது சந்தோஷத்தில்.





மூன்று பேரும் மனநிலையும் உணர்ச்சியின் பிடியில் இருந்ததால் சுற்றுப்புறத்தை கவனிக்க தவறினர் , நீண்ட நேரமாய் தங்களை சுற்றி அணிவகுத்து வந்த வாகனங்களை கண்டும் மனதில் எந்த சந்தேகமும் இல்லாததால் திரும்பவும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.





அதற்கு மேல் நினைக்க பிடிக்காமல் எழுந்த ஸ்ரீ தன் போனை பார்க்க அதில் பல மிஸ்ட் கால்களை பார்த்தவனுக்கு அதை பார்க்காமலே தெரிந்தது அழைத்தது யார் என்று , திரும்பவும் தன் தூக்கத்தை தொடர போனவனை கதவு தட்டும் ஓசை தடுத்தது, யாராக இருக்கும் என்று ஊகித்திருந்தவன் முகத்தில் சிறு புன்னகையும் தோன்றியது , சிறிது நேரம் பொறுத்தவன் கதவை திறக்கவும் , அவனை பாய்ந்து வந்து கட்டிக்கொண்டான் ஹரி.





ஸ்ரீயின் முகம் கை தலை ஆகியவற்றை ஆசையுடன் தடவிய ஹரி , அவனை தலை முதல் பாதம் வரை ஆராய்ச்சி பார்வை பார்த்தவன் , பின் அவனை ஓங்கி அறைந்திருந்தான் ஹரி.


எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் ஹரியையே பார்த்திருந்த ஸ்ரீயை திரும்பவும் கட்டிக்கொண்டவன்,


“ஏண்டா இப்படி பண்ண ... நீ எங்க இருக்கன்னு தெரியாம இவ்வளவு நாள் நான் நிம்மதி இல்லாம தவிச்சு போயிருக்கேண்டா...ஏன் ஸ்ரீ சரியா சாப்பிடலையா..இப்படி இளைத்து போயிருக்க.. ஆளும் தலையும் பார்க்கவே பரதேசி போல இருக்குடா” என்றவன் மீண்டும்,





“நான் கோவத்துல உன் நல்லதுக்கு சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு ஏன்டா என்ன கொள்ளுற...பேசு ஸ்ரீ ..ஏன் இப்படி இருக்க” கண்கள் பணிக்க நின்றிருந்த ஹரியை பார்க்கவே ஸ்ரீக்கு தன் மேலயே கோபம் வந்தது, பெருமூச்சை விட்டவன்,





“நீயேன் இளைச்சு போயிருக்க..ஊருல எல்லாரும் நல்லா இருக்காங்களா” தன் தோள் மீது கைபோட்டு பேசும் ஸ்ரீயை பார்த்து வார்தைவராமல் , இம்ம் என்று தலையாட்டினான் ஹரி.


சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஹரி, பின்





“நேத்து நைட் உன்னோட போன் ஆன்ல வந்தவுடனே கிளம்பிட்டேண்டா...ஏன்டா இப்படி பண்ண..ஆமா நிம்மியை ஏன் தூக்கிட்டு வந்த” என்றவன் உள்ளே படுத்திருந்த நிம்மியை எட்டி ஒரு பார்வை பார்த்தவன்,





“என்ன திடிர்னு..ஆன் பன்னிருக்க ..பிரச்சனை ஒன்னும் இல்லையே” என்றதும்தான் ஸ்ரீக்கு திவியின் நியாபகம் வந்தது,





“ஹரி உன் போன்ல இருந்து திவி வீட்டுக்கு போன் பண்ணி பாடிய எப்போ எடுப்பாங்கனு கேளு” என்ற ஸ்ரீயை புரியாமல் பார்த்த ஹரியை கண்டு தலையை இடதும்வலதுமாக அசைத்தவன், விரக்தி புன்னகையை சிந்தி,





“நேத்து அந்த கிறுக்கி சுசைடு பண்ணிக்கிட்டா போல ஹரி” என்று அசால்டாக கூறியவனை கண்களில் அனல் பறக்க பார்த்த ஹரியிடம் நேற்று நடந்ததை கூறினான் ஸ்ரீ.





“ஸ்ரீஇஇஇ... ஏண்டா இப்படி மனசுல ஈரமே இல்லாதவன் போல பேசுற ...கொஞ்சம் கூட திவி மேல உனக்கு பாசம் ஒரு உரிமை உணர்வு எதுவும் இல்லையா ..எப்படிடா உனக்கு மனசு வந்துச்சு தூங்கறதுக்கு” ஆற்றமாட்டாமல் கேட்ட ஹரியை நக்கலாக சிரித்த ஸ்ரீ,





“ உரிமை உணர்வா...ஹாஹா... அவ எனக்கு யாரோதான்..அப்புறம் இந்த ஈரம் மனசு இதுயெல்லாம் என்னைவிட்டு போய் ரொம்ப நாள் ஆச்சு” வேதனையுடன் கூறியவனை முகசுளிப்புடன் பார்த்த ஹரி திவியின் வீட்டிற்கு அழைத்திருந்தான்.





போனை எடுத்த திவியின் அம்மா திவி ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருப்பதாக கூறியவர் மறக்காமல் ஹாஸ்பிடல் பெயரையும் கூறிய பின்னர் இணைப்பை துண்டித்திருந்தார்.





அதன்பிறகு சிறிதும் தாமதிக்காமல் , ஸ்ரீயின் விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக அவனை அழைத்து கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டான் ஹரி. பதட்டத்துடன் காரை ஓட்டி கொண்டிருந்த ஹரிக்கு ஸ்ரீயை பார்க்க அவனோ சிறிதும் அலட்டி கொள்ளாமல் நிம்மியுடன் விளையாடி கொண்டிருந்ததை பார்க்க பார்க்க கொலைவெறியே வந்தது.








விரைவாக மருத்துவமனையை அடைந்து உள்ளே சென்றவர்கள் , திவி எங்கே இருக்கிறாள் என்பதை அறிந்து கொள்ள ஹரி வரவேற்பை நோக்கி சொல்ல , ஸ்ரீ நிம்மியுடன் லிப்ட் அருகில் சென்று நின்றுகொண்டான்.





ஹரி திவியை பத்தி விசாரிப்பதை பார்த்திருந்த செவிலிப்பெண் ஒருவர் , அவன்தான் திவியின் கணவன் என்று முடிவு கட்டியவர் வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறி லிப்ட்ஐ நோக்கி சென்றார்.ஏன் என்றல் பானுமதி முன்பே இவரிடமும் மற்றும் சில பேரிடமும் திவியை கேட்டு யார் வந்ததும் தன்னிடம் முதலில் சொல்ல வேண்டும் என்று கட்டளை இட்டிருந்தார்.அவர் அவசரம் புரியாத மற்றொரு செவிலிப்பெண்னோ





“லக்ஷ்மிகா...எங்க வேகமா போறீங்க” என்றவளுக்கு,





“நம்ம பானு டாக்டர் பொண்ணு திவிமா வீட்டுக்காரர் வந்துருக்கார் ..ரிசப்சன்ல இருக்கார் ... நான் அவங்க கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்” என்றவரை குழப்பமாக பார்த்தவள்





“ஏன்கா.. அவர் போனா தெரிஞ்சிட போகுது” என்று தொடங்கியவளை பொறுமை இன்றி தடுத்தவர்,





“ஏய்...சும்மா கேள்வி கேட்காத... பானு மேடம் திவிமாவை விசாரிச்சா ... உடனே சொல்ல சொல்லிருக்காங்க ...இப்போதான் குமாரு பணியாரம் வாங்கிட்டு வேற போயிருக்கான்...இரு வந்து உனக்கு சொல்லுறேன்” என்றவர் லிஃப்டை நோக்கி வேகமா சென்றவர் லிப்ட் வருவதற்காக காத்திருந்தார். அப்போது தன் அருகில் குழந்தையுடன் நின்றியிருந்த ஸ்ரீயை பார்த்து





“உங்க பொண்ண” என்றவருக்கு ஆமாம் என்று தலையாட்டியவனையும் குழந்தையும் பார்த்து சிரித்தவர் லிப்ட்டில் நுழைந்துகொண்டார், ஸ்ரீ திரும்பி ஹரியை ஒரு பார்வை பார்த்தவன் தானும் லிப்ட்டில் உள்ளே நுழைந்து கொண்டான்.





ஐந்தாம் தளத்தை அடைந்தவர் அவசர அவசரமாக ஓர் அறைக்குள் நுழைவதை பார்த்த ஸ்ரீயின் உள்ளம் எரிமலையின் சீற்றத்தோடு கொதித்து கொண்டிருந்தது, ‘அடிய்யே கிறுக்கி உன்னோட கிறுக்கு தனத்தை என்கிட்ட காட்டணும்னு நினைச்சிருந்தீன்னா இன்னைக்குத்தான் டீ உனக்கு கடைசி நாள்‘ என்று மனதில் கருவியவன், அந்த அறையின் வெளியே நின்று கொண்டான்.


அவசரமாக உள்ளே நுழைந்த லக்ஷ்மியை பார்த்த பானுமதி,





“என்ன லட்சுமி ஏதாவது எமெர்ஜென்சியா...” என்றவருக்கு திவி அருகில் சென்றபடி,





“திவிமா வீட்டுக்காரர் வந்துருக்கார் மேடம் ... ரிசப்சன்ல விசாரிச்சுக்கிட்டு இருக்கார்...திவிமா பணியாரத்தை அப்புறம் சாப்பிடலாம் முதல்ல வாயில இருக்கிற பணியாரத்தை துப்பு ” என்ற லக்ஷ்மியை பார்த்து முடியாது என்று தலையசைத்த திவி ,





“நோ...எனக்கு பணியாரத்தான் முக்கியம் ..அவங்களை கொஞ்சம் நேரம் ரிசப்சனில் புடிச்சு வைக்க சொல்லுங்க... அக்கா என் ஆளு எப்படி இருக்கார் சொல்லவே இல்ல” வாயில் பணியாரத்தை அதக்கியபடி கேட்ட திவியின் கையில் இருந்த பணியாரத்தை பிடுங்கியவர்,





“சும்மா ராஜா கனக்க போலீஸ் கட் வச்சு காக்க காக்க சூர்யா மாதிரியே இருக்கார்” என்ற லட்சுமியிடம்,





“என்னது சூர்யா மாதிரியா...அய்யோ அக்கா அவங்க இல்ல ..இவர் முடிக்குள்ள மூஞ்சை வச்சுக்கிட்டு...நான் டெரர் பீஸ் கிட்டவராத ரேஞ்சுக்கு மூஞ்சை வச்சுக்கிட்டு இருப்பார்” என்றவள் வாசலில் நிழல் ஆட திரும்பி பார்த்தவளுக்கு சகலமும் ஒடுங்கியது ,அங்கே ருத்திர மூர்த்தியாக அவதாரம் எடுத்து இருந்தவனை பார்த்து அதிர்ச்சியில் தன் மேல் போர்த்தியிருந்த பெட்ஷீட்டை கொண்டு முகத்தை மூடிகொண்டவள் மனமோ போச்சு இன்னைக்கு செத்தேன் என்று மனதில் புலம்ப ஆரம்பித்தாள்.





தானும் வாசல் பக்கம் திரும்பி பார்த்த பானுமதி ஸ்ரீயை கண்டு திகைத்து போனார் ,





‘அய்யோ மனோ எங்க இருக்கீங்க சீக்கிரம் வாங்க ..என்னால இவரை தனியா ஹாண்டில் பண்ண முடியாது போல’ என்று மனதில் மனோவிற்கு வேண்டுதல் ஒன்றை வைத்தார். நேராக பானுமதி அருகில் வந்த ஸ்ரீ,





“எதுக்கு...நேத்து...போன்ல கத்துனீங்க...” கோவத்தை கட்டுப்படுத்தி நிதானமாக கேட்டவனை பார்த்து பயம் எடுத்தாலும், துணிவை வரவைத்து கொண்டு,





“அது...திவி பணில நடந்துகிட்டு இருந்தா.. அவ உடம்புக்கு ஒத்துக்காதுனு சத்தமா அவளை கூப்பிட்டேன்.. அதுல போன் பேலன்ஸ் தவறி கீழே விழுந்துடுச்சு” என்றவரை நம்பாத பார்வை பார்த்தவன் மேலும் ஏதோ கேட்கவரவும் , நர்ஸ் ஒருவர் கையில் ரிப்போர்ட் அடங்கிய பைலை எடுத்துக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.





“மேடம் திவி மேடம் ஸ்கேன் ரிப்போர்ட் வந்துருச்சு“ என்று பைலை பானுமதியிடம் நீட்டினார் , அதை வாங்கிய பானுமதி திவியை பார்த்து,





“திவி ரிப்போர்ட் வந்துருச்சு... நான் பார்த்துட்டு வரேன் ..டென்ஷன் ஆகாத..ரிலாக்ஸ்சா இருடா” என்றதற்கு முகத்தை மட்டும் வெளியே நீட்டி





“இம்ம்..” என்று தலையாட்டினாள் திவி.





திவியின் ஸ்கேன் ரிப்போர்ட் என்ற வார்த்தையே ஸ்ரீயின் மண்டைக்குள் சுத்தி கொண்டிருந்தது , என்ன பிரச்சனையா இருக்கும் என்று தீவிர யோசனையில் மூழ்கினான் ,அப்பொழுது அவன் அருகில் வந்த பானுமதி சிறிது தயங்கி, பின்





“ஸ்ரீதர்...நான் வந்து எல்லாம் விளக்கம் சொல்லுறேன் அவளுக்கு உண்மையிலேயே உடம்பு சரி இல்லை..எதுவும் ஹார்ஷா பேசிடாதீங்க ப்ளீஸ் இதோ வந்துடுறேன்” என்றவர் பின் தயங்கி,





“இந்த பாப்பா...” என்று இழுத்தவருக்கு





“என் பிரென்ட் பேபி” என்றவன் நிம்மியை இறுக்க அணைத்து கொண்டான். அவர் சென்ற பிறகு , கண்களில் அனல் பறக்க திவியை பார்த்தவனை சிறிதும் கண்டுகொள்ளாமல் குழந்தையை பார்த்து சிரித்தவள்,





“அருள் அண்ணா பேபியா...” என்ற வார்த்தையில் ஸ்ரீயின் கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது, இவளுக்கு எப்படி தெரியும் என்ற யோசனையோடு, ஆமாம் என்று தலை அசைத்தான் ஸ்ரீ.





“குட்டிமா...அத்தைகிட்ட வாங்க...உங்க பேரு என்ன” என்றவளின் அருகில் நிம்மியை அமர வைத்தான் ஸ்ரீ.





“நிம்மீ...” என்று மழலையில் பிழற்றியவளின் அழகில் முகம் மலர்ந்த திவி, அருகில் இருந்த பணியாரத்தில் ஒன்றை எடுத்து நிம்மிக்கு கொடுத்துவிட்டு , மாற்றத்தை எடுத்து ஸ்ரீயிடம் நீட்டியபடி,





“நிம்மி பேபி அத்தை மாமாவோட பையனை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா” என்ற திவியின் கேள்வி புரியாத மழலை இருந்தும் சரி என்று தலையை ஆட்டியது, அதில் குஷியான திவி,





“வாடி என் மருமகளே இனி நீதான் அத்தைக்கு துணை“ என்றவளுக்கு தலை முதல் கால் வரை புது ரத்தம் பாய்வதை போல ஒரு உணர்வு , நிமிர்ந்து ஸ்ரீயை பார்த்தவளின் கண்கள் ஆச்சிரயத்தில் விரிந்தது, அவள் கையை பிடித்தபடி அவள் நீட்டிய பணியாரத்தை முழுவதுமாக காலி செய்திருந்தான் ஸ்ரீ.





திவி உதிர்த்த வார்த்தையில் ஸ்ரீயின் மனம் திவியின் பக்கம் சாய்ந்தது அந்த தடுமாற்றத்தில் தான் அவள் நீட்டிய பணியாரத்தை முழுவதும் தின்று முடித்திருந்தான், அவள் முகத்தில் வந்து போன உணர்ச்சியில் தான் தான் செய்தது அவனுக்கே உரைத்தது , மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டவன் அவளை முறைத்துப்பார்க்க அவளோ அவள் கையில் அமிர்தம் இருப்பதை போலவும் அதை ருசித்து பார்க்க துடித்து கொண்டிருப்பதை போல அவள் விரல்களையே கண்களில் ஒருவித ஒளியுடன் பார்த்து கொண்டிருந்தாள், எதை அப்படி பார்க்கிறாள் என்று யோசித்த ஸ்ரீக்கு தன் பண்ணிய தவறு புரிந்தது .





எப்பொழுதும் சாப்பிட்டவுடன் தன் விரல்களை நக்கும் பழக்கம் ஸ்ரீக்கு உண்டு , இன்றும் ஏதோ சிந்தனையில் அவள் விரலை நக்கியது ஞாபகத்திற்கு வரவும் அவள் சிந்தனை எங்கே செல்கிறது என்று யூகித்த ஸ்ரீ எழுந்து அருகில் இருந்த மேஜை அருகில் சென்றான்.





இதையெல்லாம் வெளியே இருந்தபடி பார்த்திருந்த ஹரி நிம்மியை தன்னிடம் அழைத்து கொண்டான்.





ஸ்ரீ மேஜை அருகில் சென்ற அடுத்த நொடியே தன் விரல்களை வாயருகில் கொண்டுவந்த திவி உள்ளம் படபடக்க , அதை தன் வாயிற்குள் நுழைக்கும் வேலையில் தடுத்து பிடித்தான் ஸ்ரீ,





“என்னடி அத்தான் பைத்தியம் போய் ...இப்போ மாமா கிறுக்கு வந்துருக்கா ..அடஅடஅட மூஞ்சுல செத்த நேரத்துல எவ்வளவு ரியாக்ஷன் காட்டிட்டே... என்ன யாருன்னு நினைச்ச ஸ்ரீதர்டி ... என் அனுமதி இல்லமா என்ன நீ தூக்கத்துல கூட தொட முடியாது புரிஞ்சுதா.. வரட்டும் உங்க அம்மா வரட்டும் ... வந்து என்ன விளக்கம் கொடுக்கிறாங்கனு நானும் பார்க்கீறேன்” அவள் விரல்களை டெட்டால் கொண்டு துடைத்தபடி பேசியவனை பார்க்க பார்க்க ஆத்திரம் பொங்க , அவன் தாடியை வலிக்கும் மட்டும் பிடித்து இழுத்தவள் , அவன் முகம் தன் அருகில் வந்ததும் , எச்சில் பட்ட விரலை சுவைக்க விடாமல் செய்தவனின் முரட்டு இதழ்களை வன்மையாக சிறைபிடித்தாள் திவி, தன் ஆசைத்தீர அவன் இதழ்களை சுவைத்தவள், விடும் தருவாயில் நறுக்கென்று அவன் இதழை கடித்திருந்தாள் .





வலியில் ஆஆஆ என்று அலறியவனை பிடித்து ஆத்திரத்துடன் கட்டிலில் தள்ளியவள் தன் மீது போர்த்தியிருந்த பெட்ஷீட்டை விலக்கி விட்டு கோபத்துடனும் எழுந்து அவனை முறைத்தபடி தன் உதடுகளை புறங்கையால் துடைத்துக்கொண்டே ரூமை விட்டு வெளியேறினாள்.





வெளியேறியவளையே திகைப்புடன் பார்த்தவன் பின் தன் உதட்டை தொட்டு பார்க்க அதில் ரத்தம் கசிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியில் இருந்தவனின் மூளையில் அவள் கோபமாக சென்ற காட்சியும் அவளின் மெலிதாக வீங்கி இருந்த வயிறும் பளிச் என்று மின்னவும் ,





“வாட்...” என்று சத்தம் போட்டு தலையில் இடி விழுந்ததை போல அதிர்ந்து கத்தினான்.




 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி -21


.





திவியின் சிறிதாக மேடிட்டு இருந்த வயிற்றை பார்த்தவனுக்கு எண்ணங்கள் எங்கெங்கோ பயணிக்க, ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுத்தி பார்த்தவனுக்கு கட்டுக்கடங்காத கோபம் தலைக்கு ஏறவும் சற்றென்று ரூமை விட்டு வெளியேறியவன் கண்களுக்கு அவசர அவசரமாக லிப்ட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த திவி கண்களில் பட்டாள். அதை பார்த்து வெறியானவன் ,தன் ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் குரலில் காட்டி





“ஏய் ...நில்லுடி...” என்று அந்த தளமே அதிரும் வண்ணம் கத்தியவனை கண்டு அரண்டுபோனான் ஹரி.அவன் போட்ட சத்தத்தில் திரும்பி அவனை பார்த்த திவிக்கு அவன் பார்வை சென்ற இடத்தை பார்த்ததும் பயம் தொற்றிக்கொள்ள, வேகமாக லிஃப்டை நோக்கி சென்றாள்.தான் கூப்பிட்டும் நிற்காமல் செல்பவளை கண்டு ஆத்திரம் பொங்க, அவளை நோக்கி நடந்தபடி,





“இதுக்குமேல நீ ஒரு அடி எடுத்து வச்சாலும்... இந்த ஜென்மத்துல என்ன கடைசியா பார்க்கிறது இதுதான்” என்று கூறியவனை திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தவள் எதுவும் சொல்லாமல் அதே இடத்தில் அசையாமல் நிற்கவும், அவள் அருகில் வந்தவன் பெரும் கோபத்துடுன்ஒரு கையால் அவள் கையை சற்றென்று பற்றி இழுக்கவும்தான் அவளின் நிலை உணர்ந்தவன் மற்றொரு கையால் அவளை வளைத்து பிடித்தான்.அவளை பிடித்தபடி நடந்து கொண்டே,





“எங்க...ஓட பாக்கிற...” கோபத்துடன் கூறியபடி அவளை அழைத்து கொண்டு முன்பு இருந்த அறைக்கே நுழைத்தவனை படபடக்கும் இதயத்தோடு பார்த்திருந்தாள் திவி.


உள்ளே நுழைந்து எதுவும் பேசாமல் கோபத்தை அடக்கியபடி மேடிட்டு இருந்த அவள் வயிற்றியே பார்த்திருந்தவனை பார்த்து திவிக்கு மெல்ல மெல்ல உதறல் எடுக்க ஆரம்பித்தது. அவளையே சிறிது நேரம் பார்த்தவன்,





“திவி...என்ன பாரு...” தலை குனிந்து இருந்தவளை பார்த்து உருமலாக வந்தது ஸ்ரீயின் வார்த்தைகள். அப்பொழுதும் தலை நிமிராமல் இருந்தவளின் கன்னத்தை வலுக்கட்டாயமாக பிடித்து முகத்தை நிமிர்த்தியவன்,





“கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி உதட்டை கடிச்சு வச்ச ...இப்போ என்னடி பம்முற...சொல்லு என்ன இதெல்லாம்...அன்னைக்கு நான் சந்தேக பட்டது உண்மைதானே” கன்னத்தை பலம் கொண்டுமட்டும் உலுக்கியவன் ,





“சொல்லுடீஈஈ...என்ன வெறி ஏத்தாத” காத்து கத்தலாய் கத்தியவனை கண்டு கண்களில் கண்ணீர் துளிர்க்க பயத்தில் மூச்சு விட சிரம பட்டவளை பார்த்தவன் , தன் கோபத்தை பெரும்பாடு பட்டு அடக்கியவன் அவளை பார்க்கவும் , அவள் மூச்சு விட திணறுவதை கண்டவன் சற்றென்று அவளை அணைத்து பிடித்து ஒரு கையால் அவள் முதுகை வருடி விட்டவாறே,





“ஏய் திவி..ரிலாக்ஸ் ...ரிலாக்ஸ் ...நான் ஒன்னும் கேட்க மாட்டேன் சரியா...” என்றவன் அவளை கட்டிலில் அமர வைத்தான். அதற்குள் இதையெல்லாம் பார்த்த ஹரி ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்து ஸ்ரீயிடம் கொடுக்கவும் அதை வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவனே அவளுக்கு தண்ணீர் புகட்டினான்.





தண்ணீர் கொடுத்தபின் அவள் முதுகை வருடி விட்டவன், அவள் அசுவாசப்படுத்திக்கொள்ள சிறிது நேரம் கொடுத்தான். திவிக்கு என்ன ஆச்சு என்று தெரியாதா ஹரி குழப்பத்துடன் ஸ்ரீயை பார்த்து,





“என்னடா...திவிக்கு உடம்பு முடியலையா...” என்றவனை திவி’அய்யோ இவன் வேற அவனே அமைதியா இருக்கான் இப்போ கிளப்பி விட்டுட்டானே’ என்ற ரீதியில் அவனை முறைத்து கொண்டிருந்தாள், அதை பார்த்ததும் மட்டு பட்டுயிருந்த ஸ்ரீயின் கோபம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.





“அவ வயித்தை பாரு எல்லாம் தெரியும்” என்றவனை முறைத்து பார்த்தாள் திவி, ஹரியோ மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு,





“ஸ்ரீஇஇஇ” என்று பல்லைக்கடித்தான்.





“அட சும்மா பாருடா அவ எதுவும் சொல்லமாட்டா ...அவ பெண்களிலேயே தனிச்சு நிக்கிறவ... பாரு பாரு எல்லாம் புரியும்” கோபத்துடன் கூறியவனை பார்த்த திவி அவன் கண்களில் தெரிந்த வெறியில் சற்றென்று தலையை குனிந்துகொண்டாள்.





“ஸ்ரீஇஇ...என்ன பேசுற...என்னன்னு நீயே சொல்லு” என்றவன் திவியிடம் திரும்பி,


“என்னாச்சும்மா” என்ற ஹரியை பிடித்து தள்ளியவன் திவியின் கை பிடித்து எழுப்பி நிற்கவைத்தான். பின்பு அவனே அவள் மேடிட்டு இருந்த வயிற்றை தன் கைகளால் நன்கு தடவி ஹரியை பார்த்தவன்,





“இப்போ ஏதாவது புரியுதா” என்ற ஸ்ரீயை ஒரு தினுசாக பார்த்த ஹரி திவியின் வயிற்றை பார்த்து அதிர்ந்து,





“என்ன திவி..அப்பெண்டிஸ்சா...இல்ல வயித்துல ஏதாவது கட்டி வளருதா...அதுக்குதான் டிரீட்மென்ட் போய்கிட்டு இருக்கா...ஒன்னும் பிரச்னை இல்லைதானே” என்றவனை பார்த்து சத்தம்போட்டு சிரித்த ஸ்ரீ, திவியுடம்





“கேட்கிறான்ல...பதில் சொல்லு” என்றதை காதில் வாங்கும் நிலையில் திவி இல்லை அவள் சிந்தனை முழுவதும் அவன் தன் வயிற்றை தடவிய நொடியிலேயே இருந்தது , அவன் கை தன் வயிற்றில் பட்டதும் ஜில் என்று உணர்ந்தாள் திவி, மனதிலோ புதுவிதமான உணர்வுகளை உணர்ந்தவள் அதில் இருந்து வெளியே வர விருப்பம் இல்லாமல் அந்த சுகத்திலேயே மூழ்கி இருந்தாள்.





அவள் சிந்தனை இங்கே இல்லை என்பதை உணர்ந்த ஸ்ரீ , அதற்கான காரணத்தை சற்றென்று புரிந்து கொண்டவன் ஒரு முறைப்புடனே தன் கையை அவள் வயிற்றில் இருந்து எடுத்து கொண்டு,





“ஏன் ஹரி...அவ வயிற்றை பாத்து வேற எதுவும் உனக்கு தோனலயா ...லைக் நீ கூடிய சீக்கிரம் சித்தப்பாவா ஆகப்போறேன்னு” என்ற ஸ்ரீயை பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்த ஹரி,





“சித்தப்பாவா...ஹாஹா... அந்த பேராசை எல்லாம் எனக்கு இல்ல ...அப்படி ஒரு அதிசயம் நடந்தா முதல்ல சந்தோச படறது நானாத்தான் இருப்பேன்” என்றவனை வேதனை கலந்த கசந்த புன்னகையை சிந்தியவன் ,





“சரியா சொல்லம்னுனா...இன்னும் அஞ்சு இல்லனா ஆறு மாசத்துல நீ சித்தப்பாவா ஆகாபோற ...அப்படிதானேடி” என்று பெரும் கோபத்துடன் திரும்பியவனை பார்த்து மீண்டும் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது திவிக்கு.





“ஏய்...விதம் விதமா மூஞ்சுல படம் காட்டுறதை முதல நிறுத்துடி... என்ன அப்போ அப்போ மூஞ்சுல நவரசத்தை காட்டி ஏய்க்க பாக்கிறியா” என்ற ஸ்ரீயை,





“ஸ்ரீ...நீ சொல்லுறது உண்மையா” என்று அதிர்ச்சியுடன் கேட்ட ஹரியை பார்த்து கோபமாக,





“எனக்கு எப்படிடா தெரியும் ... ஏற்கனவே இருந்த சந்தேகம் ...வந்த கனவு...இங்க நடக்கிறத பார்த்து நானா அப்படித்தான்ன்னு முடிவு பண்ணிக்கிட்டேன்...உனக்கு ஒன்னு தெரியுமா ஹரி அப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்கு ஞாபகத்துல இல்லடா...போதையில இருக்கும் போது என்ன எதுவோ பண்ணிருக்கா ஹரி” என்ற ஸ்ரீயை பார்த்து,





“அது...அ...” என்று தொடங்கிய திவியின் கன்னத்தை பிடித்து அழுந்த பற்றியவன்,





“ஏய்...ஒரு வார்த்தை...ஒரே ஒரு வார்தை கூட உன் வாயில இருந்து வரக்கூடாது... மீறி வந்துச்சு நான் கேட்கிற கேள்வியில் ...இங்க இருந்து குதிச்சு தற்கொலை பன்னிப்ப...புரியுதா” என்றவனை திகிலுடன் பார்த்தவள் மனதில் ,’அப்பா எங்க இருக்கீங்க சீக்கிரம் என் கிட்ட வாங்கப்பா’ என்று மந்திரம்போல சொல்லாரம்பித்தாள்.





ஸ்ரீ கூறியதை ஜீரணிக்க முடியாத ஹரி பொறுத்துக்கொள்ள முடியாமல், திவியிடம்,





“திவி...அவன் சொல்லுறது உண்மையா..” என்றதற்கு திவியின் தலைகுனிவே பதிலாக கிடைத்தது. அதிலேயே உண்மையை அறிந்த ஸ்ரீக்கும் ஹரிக்கும் திவி மேல் கோபம் எழ,





“எப்படிங்க இந்த மாதிரியான காரியத்தை பண்ண உங்களுக்கு மனசு வந்துச்சு...அவனுக்கே தெரியமா..ச்சை” என்ற ஹரிக்கு,





“அப்போ இவர் என்னோட பொண்ணு கழுத்துல அவளுக்கே தெரியாம தாலி கட்டுனது மட்டும் உங்களால ஒத்துக்க முடியுதா மிஸ்டர்...” என்றபடி திவி அருகில் வந்து அவளை ஸ்ரீயின் பிடியில் இருந்து விலக்கி தன் அருகில் நிற்க வைத்துக்கொண்டார் மனோ.





தன் தந்தையை பார்த்ததும் நிம்மதி அடைந்த திவி அவரை கட்டியணைத்து கொண்டு,





“அப்பா...” என்று தேம்பியவளின் தலையை வருடி கொடுத்தவர் , நிதானமாக ஸ்ரீயையும் ஹரியும் பார்த்தபடி,





“சொல்லுங்க வக்கீல் சார்...நீங்க நிக்க வச்சு கேள்வி கேட்கிற அளவுக்கு நீங்க பண்ணதை விட என் பொண்ணு பெருசா எதுவும் பண்ணல...அப்புறம் மிஸ்டர்...” என்று ஹரியை கேள்வியோடு பார்க்கவும் , திவியின் அழைப்பில் அவர் தான் திவியின் தந்தை என்பதை உணர்ந்த ஹரி,தானாகவே முன்வந்து,





“ஐ அம் ஹரி...ஸ்ரீ தம்பி” என்று தன்னை பற்றி அறிமுகம் படுத்திக்கொண்டான் ஹரி.


ஏற்கனவே ஸ்ரீக்கு மனோவை பிடிக்காது இதில் அவரை கண்டதும் அப்பா என்று அழும் திவியை பார்த்ததும் இதுவரை அவன் கட்டி காத்த பொறுமை காற்றில் பறக்க,





“டேய் ஹரி... சார் யாருன்னு தெரியுமா ...இவர்தான் பாரதி கண்ட புதுமை பெண்களை எல்லாம் தூக்கி சாப்பிடுட்டு...யாருமே செய்ய துணியாத காரியத்தை பண்ணிருக்க திவ்யதர்ஷினி பெற்று எடுத்தவர்தான் இவர்...ஒரு பழமொழி கேட்டுருக்கியா நூலை போல சேலை தாயை போல பிள்ளை ...இங்க தந்தையை போல பொண்ணு” என்று படு நக்கலாக கூறியவனை பார்த்து பதிலுக்கு நக்கலாக சிரித்தவர் ,





“கண்டிப்பா...என் பொண்ணு பாரதி கண்ட புதுமை பெண்தான் அதில சந்தேகமே வேணாம்...” என்று ஸ்ரீயை பார்த்து கூறியவர் , ஹரியிடம்,





“சொல்லுங்க ஹரி உங்க அண்ணன் பண்ணது ரைட்டா...அப்புறம் எந்த உரிமையில் நீங்க ரெண்டு பேரும் என்னோட பொண்ண கேள்வி கேட்கிறீங்க”


“அவன் பண்ணது தப்புதான்...ஆனா இவங்க இப்படி பண்ணுவாங்கனு கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல...அவங்க கர்ப்பமா இருக்காங்க பட் இதை பத்தி எதுவும் அவனுக்கு தெரில ...அவனை மிஸ்யூஸ் பண்ணிருக்காங்கா ...ஒரு பொண்ணு இப்படி பண்ணதை என்னால ஏத்துக்க முடில” இன்னும் அவன் கேட்ட விசையத்தை ஜீரணிக்கமுடியாமல் மனோவிடம் கொட்டினான் ஹரி.


அவன் கூறியதை கேட்டு பலமாக சிரித்த மனோ,பின் ,





“அதானே உங்க அண்ணனை விட்டு கொடுப்பீங்களா...உங்க அண்ணன் பண்ண தப்பை ஜீரணிக்க முடிஞ்ச உங்களால என் பொண்ணு தப்பே பண்ணாத ஒரு விசயத்தை ஏத்துக்க முடில...அப்படித்தானே...என்ன பாக்கிறீங்க...உங்க அண்ணன் எல்லார் முன்னாடிதானே தாலி காட்டினார்...தன்னோட சுயநலத்துக்காக முன்ன பின்ன தெரியாத பொண்ண மனைவின்னு தாலி கட்டி ஏத்துக்கிட்டது தப்பு இல்லை ...ஆனா அந்த பொண்ணு தாலி கட்டியவன் துக்கத்துல இருக்கிறதை காண சகிக்காம பண்ண செயலை உங்களால ஜீரணிக்க முடில அப்படித்தானே ஹரிசார்” என்று நிதானமாக அதே சமயம் அழுத்தமாகும் கேட்ட மனோவை கண்களால் எரித்து கொண்டிருந்தான் ஸ்ரீ, ஹரியோ





“அது...” என்று ஏதோ சொல்ல தொடங்கியவனை கை நீட்டி தடுத்த ஸ்ரீ,





“உனக்கு என்னடா கண்டவங்ககிட்ட திட்டு வாங்கணும்னு தலையெழுத்தா... இந்தமாரி பொண்ண பெத்துக்கிட்டே இன்னும் உயிரை வச்சுக்கிட்டு நடமாடிகிட்டு இருக்கும் போதே தெரியலையா அவங்க எல்லாம் எல்லாத்துக்கும் துணிச்சவங்கனு...இவங்ககிட்ட விளக்கம் சொல்லணும்னு அவசியம் கிடையாது” என்று படு கேவலமாய் பேசியவனை உருத்து விழித்த திவி, ஏதோ சொல்ல முயலகையில் அதை தடுத்த மனோ,





“இருடா... ஒழுக்கத்தின் மொத்த உருவம் நம்ம முன்னாடி நின்னுகிட்டு இருக்கார் ... அவர் என்ன சொல்லவரார்னு பார்க்கலாம்... சொல்லுங்க வக்கீல் சார் நான் ஏன் சார் உயிரை விடணும் ... அப்படி என் பொண்ணு என்ன பண்ணக்கூடாது செயலை பண்ணிட்டா...சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கிறேன்” என்று படுநிதானமாக கேட்டவரை எப்படியாவது காயப்படுத்தும் நோக்கத்துடன்





“ஏன் சார் எப்படி சார் ஒண்ணுமே நடக்காத மாதிரியே பேசுறீங்க...எப்படி எப்படி உங்க பொண்ணு தப்பே பண்ணலயா..ஹாஹா ...இந்தமாதிரி பேச கேவலமா இல்ல..வெளில போய் சொல்லி பாருங்க அவனவன் மூஞ்சுல காரி துப்பிட்டு போவாங்க...உங்க பொண்ணு கன்சீவ்வா இருக்காளே அதுக்கு யாரு காரணம்ன்னு சொல்லிருப்பாளே ... ஆனா கொடுமையை பாருங்க அப்படி ஒரு விஷயம் நடந்ததே என் ஞாபகத்துல இல்ல..ஊருல இதுபோல எங்கயாவது நடந்து கேள்வி பட்டுறீக்கிங்களா...ச்சை...கேட்கவே அசிங்கமா இருக்கு” என்றவனை சிறிது நேரம் அமைதியாக பார்த்தவர் பின் தலையை மேலும் கீழுமாக ஆட்டியவர்,





“இம்ம்ம்... கரெக்ட் நீங்க சொன்னது எல்லாமே கரெக்ட்...கண்டிப்பா வெளில இந்தமாதிரி நடந்திருக்க வாய்ப்பு இல்லன்னுதான் நினைக்கிறன்...அப்புறம் எஸ் காரி துப்புவங்கதான் எங்க மூஞ்சுல இல்ல உங்க மூஞ்சுல” என்ற மனோ ஸ்ரீயை பார்க்க, அவன் முகம் கோபத்தில் அக்கினியாய் கொதித்து கொண்டிருந்தது.பின்,





“ ஆமா நீங்க என்ன ஒன்னும் தெரியாத சின்ன புள்ளையா...ஆங்...முக்கியமான விஷயத்தை கேட்க மறந்துட்டேன்...என் பொண்ணு உங்களை ரேப் பன்னால...இல்ல எதையாவது காட்டி மிரட்டினாளா....இல்ல உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து இந்த காரியத்தை பண்ணாளா... சொல்லுங்க ஸ்ரீதர்...நீங்க போய் வெளில இப்படி எதுவும் நடக்கல ஆனாலும் நான் அப்பா ஆகிட்டேன்னு சொல்லுங்க..அப்போ யாரு மூஞ்சுல துப்புறாங்கனு நானும் பார்க்கிறேன்” என்று மனோ தன்னை நோக்கி கேள்வி கேட்டதில் ஸ்ரீயின் முகம் அவமானத்தில் கன்றி சிறுத்தது, அவனோடய ஒட்டுமொத்தம் கோபம் எல்லாம் திவியின் மேல் திரும்பியது,





“ஏய்... இந்த அவமானத்துக்கு எல்லாம் காரணம் நீதாண்டி...அன்னைக்கே உன்ன மலைல இருந்து உருட்டி விட்டுருக்குனும்...தப்பு பண்ணிட்டேன்...உனக்கு பாவம் பார்த்தேன் பாரு உன்னை....” என்றபடி அவள் கழுத்தை பிடிக்க முயன்றவனை பிடித்து தள்ளிய மனோ,





“எந்த உரிமையில் அவளை அடிக்க வரீங்க ஸ்ரீதர்...அன்னைக்கு குப்பையை தெருவுல கொட்டுறத போல என் பொண்ண வீட்டுல தள்ளிட்டு தாலியையும் பறிச்சுட்டு போயிருக்கீங்க … இப்போ நீங்க அவளுக்கு தாலி கட்டின புருஷன் கிடையாது யாரோ தேர்ட் பெர்சொன்தான்...” என்றவரை,





“யோவ்...என்னயா விட்டா பேசிக்கிட்டே போற...வயசுக்கு மரியாதை கொடுத்தா அத காப்பாத்திக்கணும்...கழுத்துல தாலி இல்லாம வயித்தை தள்ளிக்கிட்டு நிக்கிறா...இது உனக்கு அவமானமா இல்ல..அதானே அது எங்க இருக்க போகுது...அவ எப்போ அவ சிஸ்டர் புருஷன் கூட தப்பா நடக்க நினைச்சாலோ அப்பவே நீ அவ கழுத்தை புடிச்சு திருகி போட்டிருந்தா நீ மானஸ்தான் அதான் இல்லையே ...இந்த மாதிரி ஒரு தறுதலை பொண்ணை பெத்துக்கிட்டு பெருமை பேசிகிட்டு நிக்கிற ....” என்று வெறுப்பை உமிழ்தவனை, பொங்கிய கோபத்தை அடக்கியபடி திவியின் கைகளை ஆறுதலாக பற்றியபடி சிறிது நேரம் கண்மூடி திறந்தார் மனோ. ஸ்ரீ அவரை மரியாதை இல்லாமல் பேசியதை கண்டு ஹரி பதட்டம் அடைந்தவனாய்,





“ஸ்ரீ....” என்று ஆரம்பித்த ஹரியை கை நீட்டி தடுத்த மனோ,





“அவ அத்தான் கிட்ட தப்பா நடக்க முயன்றதா உங்களுக்கு யாரு சொன்னது” என்ற மனோவை, இது என்ன கேள்வி என்பதை போல பார்த்த ஸ்ரீ,





“உங்க அருமை பெருமை பொண்ணுதான் சொன்னா”





“ஹாஹா...இதுல இருந்தே தெரில என் பொண்ணு எப்படி பட்டவன்னு...அவளை நேர்மையானவளா வளர்த்துருக்கேன்னு பெருமைதான் எனக்கு...உங்ககிட்ட உண்மையை மறைக்காம சொன்னதுல இருந்தே தெரியவேணாம் என் பொண்ணு எப்படி பட்டவன்னு .. இதுவரைக்கும் அவ பொய் சொல்லி நான் பார்த்தது இல்லை..தப்பு செஞ்சாலும் தையிரியமா ஒத்துகிறவ அவ..கொஞ்சநாள் மன அழுத்தத்துல இருந்தா அதனால சரியா யோசிக்கமுடில கூடவே எங்க வீட்டுல இருந்த ஒரு தருதலையும் இதுக்கு காரணம்...அது தப்புன்னு புரிஞ்சதும்.. அதை ஏத்துக்கிட்டா ..சிலபேர் போல தன்னோட சுயநலத்துக்காக மத்தவங்களை யூஸ் பண்ணிக்கல” என்ற மனோவை பார்த்து,





“அது எப்படியா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம தப்பு பண்ணதை பெருமையா பேசிக்கிற... உன் பொண்ணு பொய்யே சொன்னது இல்ல...ஏண்டி...அன்னைக்கு எவ்வளவு தூரம் நான் கேட்டேன் உண்மையை சொல்லாம அமைதியா இருந்து என் கழுத்த அறுத்துட்டு அப்பனும் பொன்னுமா சேர்ந்து ஷோ காட்டுறீங்களா..து...சரியான மானங்கெட்ட குடும்பம்”


என்றவனை பார்த்து இதுவரை தன் தந்தை சொல்லுக்காக கட்டுப்பட்டு நின்ற திவி,





“வாயை மூடுங்க ..இதுக்கு மேல ஒரு வார்த்த பேசுன நடக்கிறதே வேற” என்று மிரட்டியவளை,





“அடிங்...ஒன்னு உட்டேன் வச்சுக்கோ சுருண்டு விழுந்துடுவா..என்ன உங்க அப்பா இருக்கிற தையிரியமா” என்றவனை வெறிபிடித்தவள் போல நெருங்கியவள்,





“ எனக்கு யார் தயவும் தேவ இல்ல...ஆமா நான் வேணும்ன்னு தான் செஞ்சேன் இப்போ என்ன பண்ண போற...உன் மஞ்சு வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நீ என்ன கேட்காம யூஸ் பண்ணிக்கிட்ட... நான் என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு உன்னை கேட்கமா உன்ன யூஸ் பண்ணிக்கிட்டேன் அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...என்ன கேள்வி கேட்க உனக்கு எந்த ரைட்ஸும் கிடையாது..வேணும்னா என் கழுத்துல தாலி கட்டு அப்போ பதில் சொல்லுறேன்..இப்போ இங்க இருந்து கிளம்புங்க” என்றவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்,





“அட்ராசக்க...கடைசில அங்க சுத்தி இங்க சுத்தி அப்பனும் பொன்னும் போட்ட ட்ராமா தாலி கட்டுறதுக்குத்தானா...ஹாஹா...ஏய் இங்க பாருடி இந்த ஜென்மத்துல அந்த தப்ப நான் திரும்ப பண்ண மாட்டேன் புரியுதா...குழந்தை செண்டிமெண்ட் வச்சு என்ன வளைச்சு போடலாம்னு கனவுல கூட நினைக்காத...அது மேல ஒரு பெர்ஸன்ட் கூட எனக்கு பாசம் வரல...வரவும் வராது...” என்று ஸ்ரீ கூறியதை கேட்டதும் திவிக்கு தான் இத்தனைநாள் அவனை நினைச்சு அவன் எப்போ வருவான் , குழந்தை உண்டானதை நினைத்து முதலில் கோப பட்டாலும் பின் தன் குழந்தையை விட மாட்டான் என்று நினைத்து இருந்தவளுக்கு அவன் பேச்சு பெரும் அடியாக இருந்தது. அந்த கோபத்தை எல்லாம்,





“ச்சி...உன்ன பார்க்கவே எனக்கு புடிக்கல...என் மூஞ்சுலயே முழிக்காத...உன்ன போய்...” சொல்ல முடியாமல் தவித்தவள்,





“அப்பா வாங்கப்பா போலாம் இவன் வாழ்க்கை சூனியமா போனதால மத்தவங்களை ஹர்ட் பண்ணி சந்தோச பட்டுகிறான்...” என்றவள் விறுவிறு என்று அந்த இடத்தை விட்டு அகன்றாள்.


காரில் அமைதியாக இருந்தவளை பார்த்த மனோ மனசுகேட்காமல்,





“திவிக்குட்டி...” என்றவரை திரும்பி பார்த்து முறைத்த திவி,





“ஏன்பா..அவன் கோபத்துல எதுவோ சொல்லிட்டு போறான் நீங்க ஏன் கூட கூட பேசி பிரச்சனையை வளர்த்தீங்க...அவன்தான் சரியான முசுடுன்னு தெரியாதா ” என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தவர்,





“என்னடா...சொல்லுற...அவன் உன்னை கேவல படுத்தி பேசுவான் அத பார்த்துகிட்டு நான் சும்மா இருக்கணுமா...அதோடு உன் அப்பாவும் பெரிய முசுடுன்னு மறந்துட்டு பேசுற ” என்றவரை திரும்பவும் முறைத்தவள்,





“அப்பா...நான் பண்ணது தப்புதானே...என் மேல நம்பிக்கை வச்சுதான் கூட வச்சுக்கிட்டான்.. நான் அவனை ஏமாத்திட்டேன்...நான் கெட்ட பொண்ணப்பா” என்று கண் கலங்கியவளை, தோளோடு சேர்த்து அனைத்தவர்,





“அவன் ஒரு மடையன்...நீ அவனுக்காகத்தான் இத பண்ணிருக்க தெரிஞ்சும் ...வீம்புக்காக பேசிகிட்டு இருக்கான்..எங்க போய்ட போறான்..இங்கதான் உன்ன கண்காணிச்சுக்கிட்டே இருப்பான் பாரு” என்ற தந்தையை பார்த்து சிரித்தவள்,





“ஆமாப்பா...அவன் இனிமே இங்கதான் இருப்பான் எனக்கு தெரியும் ...ஆனா என்ன தேடி வரமாட்டானேபா..தூரத்துல இருந்தே இருந்தே என்ன கண்காணிப்பான்...எனக்கு அவன் கூட முடிஞ்ச அளவுக்கு டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசையா இருக்குப்பா” என்றவளை துக்கம் தொண்டையை அடைக்க பார்த்தவர் தன் கண் கலங்குவதை வெளிக்காட்டி கொள்ளாமல்,





“அவன்தானே வரமாட்டான்...” என்றவரை துள்ளலுடன் பார்த்தவள்,





“அப்பா...” என்று சந்தோசத்துடன் கட்டிக்கொண்டாள்.





ஸ்ரீயின் முகத்தில் இருந்து எதையும் ஹரியால் கண்டு கொள்ளவே முடியவில்லை, ஹாஸ்பிடலில் இருந்து நேராக ஸ்ரீ சில வருடங்களுக்கு முன்பு வாங்கியிருந்த வீட்டிற்கு வந்தனர். பழங்காலத்து வீடு அது , சில மாதங்களுக்கு முன்புதான் அங்கே வாடகைக்கு தங்கி இருந்தவர்கள் காலி செய்திருந்தனர், வாரம் வாரம் சுத்தம் செய்வதற்கு மட்டும் ஆட்கள் வருவார்கள் மற்றபடி பூட்டியே இருந்த அந்த வீடு. வீட்டிற்குள் நுழைந்த ஸ்ரீயை இருக்க கட்டி பிடித்த ஹரி,





“ஸ்ரீ ரொம்ப சந்தோசமா இருக்குடா...நான் இன்னும் கொஞ்சநாள்ல சித்தப்பாவா ஆகப்போறேன்” என்றவனை முறைத்த ஸ்ரீ,





“ஹரி டயர்ட்டா இருக்குடா நான் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்துகிறேன்.. நீ நிம்மிய பார்த்துக்கோ என்ன நடுவுல எழுப்பாத” என்றவன் ஹரி பதிலுக்கு காத்திராமல் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டான்.





ஸ்ரீக்கு தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை அவன் மனம் கண்ணில் திவியின் மேட்டிட வயிறே வலம் வந்தது, அவன் குழந்தை அந்த நினைப்பே அவன் உள்ளத்தில் கலவையான உணர்வுகளை உண்டாக்கியது, அதை யோசிக்க யோசிக்க தலை வலிப்பதை போல உணர்ந்தவன், தூக்கத்திற்கு மாத்திரை போட்டால்தான் தூங்க முடியும் என்று நினைத்தவன் , மாத்திரையை முழுங்கி நல்ல உறக்கத்திற்கு சென்றான்.





போன் பேசியபடி பால்கனிக்கு வந்த திவி பேச்சு சுவாரஸ்யத்தில் கீழே சிந்தி இருந்த தண்ணீரை கவனிக்காமல் கால் வைக்க , கால் வழுக்கி மல்லாக்க ,’அம்மா’ என்ற அலறலுடன் விழுந்தால் திவ. உடல் தூக்கிப்போட சற்றென்று கண் விழித்த ஸ்ரீ சுற்றுமுற்றியும் பார்க்க தான் கண்டது கனவு என்பது புலப்பட , தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டான்.





அவனுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை பயத்தில் வேர்த்து வழிந்தது , கண்டது கனவு என்று புரிந்தாலும் அவன் மனது சமாதானம் அடைய மறுத்தது.





“யோவ் முருக்ஸ் உன்னோட பக்தைக்கா மாஞ்சு மாஞ்சு சிக்னல் கொடுத்து என்னை ஏன்யா கொடும படுத்துற ...இப்போ என்ன நான் போய் அந்த கிறுக்கிய பார்க்கணும் அதானே...இதோ கிளம்பிட்டேன்” என்று மேலே நோக்கி புலம்பியவன் உடை மாற்றிக்கொண்டு மணியை பார்க்க அது இரவு 9.45 என்று காட்டியது.





வேகமாக அறை கதவை திறந்தவன் கண்களுக்கு அந்த இருட்டில் இரண்டு உருவங்கள் சற்று இடைவெளி விட்டு படுத்திருப்பது தெரிந்தது, யோசனையோடு நைட் லாம்பை போட்டவன் அங்கே படுத்திருந்தவளை பார்த்து அதிர்ந்தே போனான்.





அங்கே பாயில் ஒரு கையை தன் வயிற்றில் வைத்தபடி சுருக்கி படுத்திருந்த திவியை பார்த்து தானாகவே அவன் உதட்டில் புன்னகை உதித்தது. லைட் வெளிச்சத்தில் முழித்த ஹரி, ஸ்ரீ அருகில் வந்து,





“ஸ்ரீ...திவி ஏழு மணிகிட்ட இங்க வந்தாங்க ...நான் உள்ள படுக்க சொன்னேன்டா..நிம்மி கால போட்டுடுவான்னு இங்கயே திவி படுத்துட்டாங்க...அவங்களை தனியா விட மனசு இல்ல அதான் ஓரமா நான் படுத்துகிட்டேன் ஸ்ரீ...சரி எனக்கு தூக்கம் வருது உள்ள போய் படுக்கறேன்” கொட்டாவியை விட்டபடி உள்ளே மறைந்தான் ஹரி.





திவியின் அருகில் சென்று சிறிது நேரம் அவளையே பார்த்தபடி நின்றிருந்தவன், அவளை கஷ்டப்பட்டு தன் கைகளில் அள்ளியவன், அவள் தூக்கம் கலையாத வண்ணம் தான் உறங்கிய கட்டிலில் மெதுவாக கிடத்தினான். அவன் திவியை கட்டிலில் விட்ட நொடி உதட்டில் சிறு சிரிப்புடன் நன்றாக நகர்ந்து சுவற்றை ஒட்டி படுத்துகொண்டாள் திவி.அவளின் செயல்களை பார்த்த ஸ்ரீ அதிர்ந்தாலும்,





“ஏய் பிராடு...தூங்கிற மாதிரி நடிச்சியா..நல்லா திம்சுக்கட்டை மாதிரி இருக்க தூக்க கஷ்டப்படுறேனு தெரியுதுல..நீயே நடந்து வந்துருக்கலாம்ல” என்றவனை பார்த்து சிரித்தவள்,





“நானா உங்களை தூக்க சொன்னேன்..தூக்க முடிலனா எழுப்பி விடுறது” என்றவளுக்கு,





“ஏண்டி காலைல அவ்வளவு திட்டினேன் கொஞ்சம் கூட சொரணையே இல்லையா” என்றவனுக்கு,





“ப்ச்..ப்ச்.. இல்லையே நாமல்லேம் உப்புமா பேமிலி போல ரோசங்கெட்ட பேமிலி...நீங்க என்ன பார்த்தவுடனே தூக்கிட்டு போய் வெளில போடுவீங்கன்னு பார்த்தா ....பூ மாதிரி தூக்கிட்டு வந்து பெட்ல போடுறீங்க ....இதுல இருந்து என்ன தெரியுது நீங்கதான் சீனியர் மெம்பெர் என்ன சைலன்ட் மெம்பெர்ஆ இருந்திருக்கீங்க .... இப்போதான் நான் என் பையன் பொண்ணு மூணு பேரும் சேர்ந்திருக்கோம் .” என்று சிரித்தவள்





“மிஸ்டர் ஸ்ரீதர்... வெல்லம் டு ரோசங்கெட்ட பேமிலி” என்று சிரித்தபடி கூறியவள் தன் கண்களை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.





அவள் கூறியதை கேட்ட ஸ்ரீக்கு சிரிப்பு வந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் ரூமை விட்டு வெளியேறியவன் அவள் படுத்திருந்த இடத்தில் படுத்து கொண்டு கண்களை முடியவனின் முகத்தில் புன்னகை டன் டன்னாக வழிந்தது.





ஸ்ரீ அறையை விட்டு சென்றதும் கண் திருந்த திவி தன் வயிற்றில் கை வைத்து தடவியவள்,





“டேய் செல்ல குட்டிங்களா...உங்க அப்பா முசுடு மட்டும் இல்ல சரியான மமாங்காமடையான் கூட நான் விம் போட்டு விளக்கிற மாதிரி உங்களை பத்தி சொல்லிருக்கேன் அவன் மண்டையிலேயே அது ஏறுல செல்லங்களா...இவன் என்ன கிரிமினல் லாயார் தெரியல..ஆனா அவன் நினைச்சு பார்ப்பான் ..அப்போ நான் சொன்னது அவன் மைண்ட்ல வந்து நாம தூங்கறதை பொருட்படுத்தாம எழுப்பி கேட்டா நமக்கு ஒரு அடிமை சிக்கிடுச்சு , அப்படி இல்லமாகாலைல சந்தேகமா நம்ம முகத்தையே உத்து உத்து பார்த்தா , நம்ம பாடு கஷ்டம்தான்...இம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம் அடிமை சிக்குதா இல்லையான்னு” என்று வயிற்றில் உள்ள சிசுவிடம் பேசியவள் நிம்மதியான உறக்கத்திற்கு சென்றாள்.





கண்மூடி படுத்திருந்த ஸ்ரீக்கு காலையில் இருந்து நடந்ததை ஒன்னொன்னா நினைத்து பார்த்தவன், சற்றுமுன் அவள் கூறிய ரோசங்கெட்ட பேமிலி என்றும் கூடவே அப்பொழுது கவனிக்காமல் விட்ட நான் என் பையன் என் பொண்ணு என்று கூரியதை நினைத்து பார்த்தவனின் கண்கள் தானாகவே அதிர்ச்சியில் திறந்து விரிந்தது.

 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 22





நல்ல உறக்கத்தில் இருந்த திவி நடுவில் வழக்கம் போல உறக்கம் கலைந்தவள் தான் இருக்கும் இடம் புரியாமல் விழித்தவளுக்கு , தான் எங்கே இருக்கிறோம் என்பது மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது , கூடவே தன் பிள்ளைகளிடம் கூறியதும் நினைவு வர ஏமாற்றத்துடன் மூஞ்சை சுருக்கியவளின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. சிறிது நேரம் இருட்டை வெறித்தவள்,





“திவி...அவனை பத்திதான் தெரியுமே...அவன் வரமாட்டான் நீதான் போகணும்...போ போ” என்று தனக்குள் சொல்லிக்கொண்டவள், அவனை தேடி வெளியே சென்றாள்.





வெளியே வந்தவள் நாலாபுறமும் கண்களை அலைபாய விட எங்கும் அவன் தென்படவில்லை, அய்யோ திரும்பவும் விட்டுட்டு போய்ட்டானா என்று மனதில் நினைத்தவளின் கண்களில் திரும்பவும் கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது.ஹரி படுத்திருந்த அறைக்கு சென்றவள் அங்கும் தேட ஏமாற்றமே மிஞ்சியது , வீடு முழுவதும் அலசி பார்த்தவளின் கண்களுக்கு அவன் தென்படவே இல்லை. இந்த இருட்டு வேலையில் வெளியே சென்று தேடவும் பயமாக இருந்தது அவளுக்கு , ஹரியை எழுப்பவும் மனமில்லை , சோர்வுடன் சோபாவில் அமர்ந்தவளின் கன்னத்தில் அருவியாய் கொட்ட ஆரம்பித்தது கண்ணீர்.





சோகத்தில் அமர்ந்து இருந்தவளின் நாசியை துளைத்தது அந்த சிகரெட் நெடி , கண்கள் மின்ன அந்த நெடி வந்த திசையை பார்த்த திவி சிறிதும் தாமதிக்காமல் பயம் இருந்தாலும் பின்வாசல் கதவை திறந்து கொண்டு அந்த இருட்டில் அவனை தேடினாள்.








அங்கே கிணற்று திண்டில் அமர்ந்துகொண்டு புகை பிடித்தபடி எங்கயோ வெறித்து கொண்டிருந்தவனை பார்க்க பார்க்க நெஞ்சம் வெடித்து விடும் அளவு விம்மியவளுக்கு,


அவன் மனநிலையை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது , மெல்ல நடந்து அவன் அருகில் சென்றவள் கீழே சிதறி கிடந்த சிகரெட் துண்டுகளை கண்டு அதிர்ந்து போனாள். அவள் வந்தது கூட தெரியாமல் புகை பிடித்து கொண்டிருந்த ஸ்ரீக்கு இருமல் சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தவன் அங்கே நின்றிருந்தவளை கண்டதும் கோபம் கிடுகிடு என்று தலைக்கு ஏறவும்,





“ஏண்டி...என்ன சீக்கிரம் மேல அனுப்புனும் முடிவுல இருக்கியா...எங்க போனாலும் பின்னாடியே வால் புடிச்சுகிட்டு வர...” என்று பொரிந்தவன் மேலும்





“ உன்ன பார்க்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் வாழ்க்கை வெறுத்தாலும் , நிம்மதியாதான் இருந்தேன்...என்னைக்கு உன்ன பார்த்து தொலைச்சேனோ...அன்னைக்கு போச்சு என்னோட நிம்மதி” கழிவிரக்கத்தில் தோன்றிய மொத்த கோபத்தையும் அவள் மேல் வார்த்தைகளாய் கக்கினான் ஸ்ரீ.





இதை சற்றும் எதிர் பார்க்காத திவி கலங்கித்தான் போனாள், தான் குழந்தை உண்டாகியிருப்பதை கேட்டால் , கோபப்படுவான் என்று நினைத்தவள் மறந்தும் அவன் தன்னை வெறுத்து பேசுவான் என்று கனவிலும் எதிர்பார்க்காத திவிக்கு கோபம் சிறிது சிறிதாக கூட, இருந்தும் கோபத்தை கட்டுப்படுத்தியபடி,





“உங்க...உங்களுக்கு...ப..பசங்க மேல பாசமே வரலையா...பொண்ணு ஒன்னு பையன் ஒன்னுன்னு சொன்னனே... அப்போ கூட அவங்களை பத்தி கேட்கணும்னு உங்களுக்கு ஆசையே வர...வரலையா...” என்று தொண்டை அடைக்க கேட்டவளை, வெறித்து பார்த்தவன், தலையை இடமும் வலமும் ஆகா ஆட்டி,





“இல்ல...கண்டிப்பா இல்ல ..இதுவரைக்கும் அப்படி ஒரு எண்ணமே வரல...குற்ற உணர்ச்சிதான் மனசு முழுசா இருக்கு” என்ற ஸ்ரீயை தவிப்புடன் பார்த்த திவி, ஏதோ சொல்ல வருவதும் பின் சொல்ல வார்த்தை வராமல் உதடு துடிக்க நின்றவளை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ,





“நான் ஆசை பட்டவங்களும் பாசம் வச்சவங்களும், என் கூட நிரந்தரமா இல்லாம பாதில போயிடுறாங்க இல்ல நான் போக வைக்கிறேன்... இனிமே அந்த ரிஸ்க் எடுக்க எனக்கு விருப்பம் இல்லை... எனக்கு யாரோட பாசமும் அன்பும் வேணா, நானும் யார் மேலயும் ஆசை வைக்கவும் விருப்பம் இல்ல” என்றவன் மேலும்,





“ப்ளீஸ் நான் நிம்மதியா இருக்கணும் நினைச்சினா..என் கண்ணு முன்னாடி நிக்காம போய் தொலை ... அதுவும் இரண்டுன்னு தெரிஞ்சதுல இருந்து...நிம்மதி இல்லாம தவிக்கிறேன்... இங்கிருந்து போடி...” என்றவன் அவளுக்கு முதுகு காட்டியபடி திரும்பி நின்று கொண்டான்.


சிறுது நேரம் அவன் முதுகையே வெறித்து பார்த்தவள், பின் சோர்வுடன் மெல்ல திரும்பி நடந்தாள் .





திவியிடம் தன் கோபத்தை காட்டியதாலோ என்னவோ இதுவரை மனதை அழுத்தி இருந்த பாரம் இறங்கியதை போல உணர்ந்தவன் , வெகுநேரம் குளிரில் அமர்ந்திருந்தால் குளிர் பொறுக்காமல் உள்ளே சென்றான்.





உள்ளே சென்ற ஸ்ரீ படுப்பதற்கு முன்பு திவி தூங்கி விட்டாளா என்று பார்க்க நினைத்து அவள் படுத்திருந்த அறைக்கு சென்றவன் அவள் இல்லாமல் போகவும் , பாத்ரூமில் இருப்பாள் என்று எண்ணியவன் சில நொடிகள் காத்திருந்தவன் பின் ஏதோ நினைத்தவனாக பாத்ரூம் கதவில் கை வைக்க அது திறந்து கொண்டது , அதுவே சொல்லாமல் சொல்லியது அவள் அங்கே இல்லை என்று. சிறிது பதற்றம் தொற்றிக்கொள்ள வீடு முழுவதும் தேடி பார்த்தவன் , அவள் அங்கே இருக்கமாட்டாள் என்று தெரிந்தும் ஹரி படுத்திருந்த அறைக்கு சென்றும் பார்த்தான் ஸ்ரீ.





பதட்டம் நன்றாக தொற்றிக்கொள்ள கார் சாவியை எடுத்தவன் வீட்டிற்கு வெளியே சென்று ஒருமுறை பார்வையை சுழல விட்டவன் அவசர அவசரமாக காரை கிளப்பி கொண்டு அவள் வீடு நோக்கி செல்லும் பாதையில் இருபுறமும் பார்வையை படரவிட்டவாறே மெதுவாக காரை செலுத்தியவனின் மனமோ,





“திவி...எங்கடி இருக்க ... எங்கயாவது போய் மாட்டிக்காதடி...கடவுளே அவளை என் கண்ணுல காட்டுப்பா” என்று விடாமல் புலம்பியது.





பைத்தியக்காரன் போல புலம்பியபடி இரண்டு பக்கமும் பார்த்துக்கொண்டே அரைமணி நேரமாக காரை ஓட்டியவனின் கண்களில் அவள் தென்படவே இல்லை. இந்த அரைமணி நேரத்தில் ஒவ்வொரு நொடியும் நரக வேதனையை அனுபவித்தான் ஸ்ரீ. பேசாமல் திவி வீட்டிற்கு அழைத்து பேசலாமா என்று எண்ணி போனை கையில் எடுத்தவன் அதில் வரிசையாக இருந்த மிஸ்ட் காலை பார்த்து சற்றும் யோசிக்காமல் அந்த நம்பரை அழைத்தான்.





போன் சைலென்டில் இருந்ததால் அதில் வந்த அழைப்பு அவனுக்கு தெரியாமல் போனது. சில ரிங் சென்றபின் அழைப்பை ஏற்றும் எதுவும் பேசாமல் இருந்ததை வைத்தே கண்டுகொண்டான் அது திவி என்று. சற்று பொறுத்து பார்த்தவன் பொறுமை இழந்தவனாக,





“திவி...” என்றதற்கு





“ வீட்டுக்கு வாங்க...” என்றவள் போனை கட் செய்திருந்தாள்.





கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஆத்திரம் வந்தது ஸ்ரீக்கு, ஸ்டேரிங் வீலை இறுக்கி பிடித்து தன் கோபத்தை வெளியேற்றியவன் சிறிது நேரம் கழித்தே அங்கிருந்து கிளம்பினான். வழி நெடுகிலும் அவள் கழுத்தை திருகி போடும் எண்ணம் வந்ததால் முடிந்தமட்டும் மெதுவாக காரை செலுத்தியவன் ஒருமணி நேரம் கழித்தே வீட்டிற்கு சென்றான்.





வீட்டிற்குள் நுழையும் போதே அவள் அமர்ந்திருந்த இடத்தை கண்டுகொண்டவன் , அங்கே பார்க்காமல் சென்ற தன் மடத்தனத்தை எண்ணி மானசீகமாக தலையில் கொட்டிக்கொண்டான்.


அவன் காரை நிறுத்தியதும் அமைதியாக வந்து கார் அருகில் நின்றவளை கண்டு பல்லை கடித்த ஸ்ரீ, ஆத்திரத்துடன் அவளை பார்த்து,





“நான் கார் எடுத்துட்டு போனதை பார்த்தியா” என்றதுற்கு , ஆமாம் என்பதாய் தலையசைத்தாள் திவி. அதில் கோபம் அதிகரிக்க ,





“உன்னதான் தேடி போனேன் தெரியுமா” என்ற ஸ்ரீயை பார்த்து மீண்டும் தெரியும் என்று தலையசைத்தவளை பார்த்து கண்ணை மூடி திறந்தவன்,





“ அத ஏன் முன்னாடியே போன் பண்ணி சொல்லல” என்றவனுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தவளை பார்த்து,





“கேட்கிறேன்ல...வாயை திறந்து சொல்லு ஏன் முன்னாடியே போன் பண்ணி சொல்லல” ஆத்திரத்தில் கத்தியவனை திமிராய் பார்த்தவள்,





“என்ன தொலைஞ்சு போன்னு சொன்னல...அதான் நான் தொலைஞ்சால் என்ன ஆகும்ன்னு ட்ரையல் காட்டினேன்... ஆனா இன்னொரு தடவை இப்படி சொன்ன உண்மையிலேயே யாருக்கும் தெரியாமல் தொலைஞ்சுடுவேன்... புரியுதா” என்று கையை நீட்டி எச்சரித்தவள்,





“இது...என்...” என்று தன் தலையை நோக்கி கையை எடுத்து சென்று பின் தலையை மறுப்பாக ஆட்டியவள்,





“உன்மேல...சத்தியம்” என்று ஸ்ரீயின் தலையில் அடித்து சத்தியம் செய்திருந்தாள்.


திவியை எதுவும் பண்ண முடியாமல் பல்லை கடித்தவன், சற்றென்று மொட்டை மாடியை பார்த்து, கையை ஆட்டியபடி,





“ஒன்னும் இல்ல அங்கிலு...சும்மாதான் பேசிகிட்டு இருக்கோம்” சிரித்தபடி கூறியவனை கண்டு தானும் மொட்டைமாடியை அன்னாந்து பார்த்தாள் திவி. அங்கே யாரும் இல்லாததை கண்டு குழப்பத்துடன் ஸ்ரீயை பார்க்க, மீண்டும் அவன்,மேலே பார்த்தவாறே,





“இது...என் வைப்” என்றவனை பார்த்து முப்பத்திரண்டு பல்லும் தெரியும் அளவுக்கு சிரித்த திவி அவனை நெருங்கி நின்றுகொண்டாள். அவளை முறைத்தவன் பின்,





“வயசுல பெரியவர் நம்மள பார்த்துகிட்டு இருக்கார்...ஒட்டிக்கிட்டு நிக்கிற...தள்ளி நில்லுடி” வல் என்று விழுந்தவனை சிறிதும் சட்டை செய்யாமல்,





“இம்ம்...நீங்க பொய் சொல்றீங்க அங்க யாரும் இல்ல..என்ன பயமுறுத்தத்தான் இப்படியெல்லாம் சொல்றீங்க” என்று கொஞ்சியவளை நக்கலாக பார்த்தவன்,





“யாரு உனக்கு பயம் ...நான் பயமுறுத்துன நீ பயந்துடுவ ...அத நாங்க நம்பனும்...உன்ன பார்த்துத்தாண்டி எனக்கு பயமா இருக்கு” என்றவன் மேலும்





“ஏய் அவர்தாண்டி இந்த வீட்டோட முன்னாள் ஓனர் இந்த வீட்டை காட்டியதே அவர்தான்... அவர் சின்ன வயசுலயே இறந்துட்டாரு ...அவர் வைப் விட்டுட்டு அவரால இருக்க முடில அதான் இந்த வீட்டைவிட்டு போகாம இங்கயே சுத்திகிட்டு இருக்கார்...நம்புனா நம்புஇல்ல நம்பாட்டி போ “ என்று தோலை குலுக்கியவன் விடுவிடு வீட்டிற்குள் சென்று மறைந்தான்.





திவி சற்று பயத்துடனே மேலே எட்டி பார்க்கவும் யாரோ இருட்டில் மறைந்ததை போல உணர்ந்தவளின் தொண்டையில் பயப்பந்து வந்து அடைத்தது. பயம் தொற்றிக்கொள்ள திரும்பி ஸ்ரீயை பார்த்தவள் அங்கே அவன் இல்லாததை கண்டு அதிர்ந்து போனவள் வேகமாக வீட்டிற்குள் சென்று மறைந்துகொண்டாள்.





வீட்டிற்குள் நுழைந்த திவி ஸ்ரீ ஹாலில் முன்பு படுத்திருந்த இடத்தில் படுத்திருப்பதை கண்டு வேகமாக தான் படுத்திருந்த அறைக்குள் நுழைந்துகொண்டாள், அவள் அறைக்குள் சென்று மறைந்ததும் கண்ணை திறந்த ஸ்ரீ சத்தம் வராமல் சிரித்தவன்,





“என்னையே கொஞ்ச நேரம் பயம்காட்டினிலே...நைட் புல்லா பயத்துலயே கிட” என்று கருவியபடி புன்னகையுடன் கண்ணை மூடியவனின் அருகில் டொம் என்ற சத்தம் கேட்க கண் திறந்த ஸ்ரீ அங்கே தலைகாணியை கீழே போட்டுவிட்டு கையில் பெட்ஷீட் உடன் நின்றிருந்த திவியை பார்த்து புருவம் சுருக்கி பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவனை ஒட்டியவாறே அருகில் படுத்துகொண்டாள் திவி. துள்ளி குதித்து எழுந்த ஸ்ரீ,





“ஏய் இங்க என்ன பண்ணுற ...போய் ரூம்ல படு” கோபத்தில் கத்தியவனின் கத்தலை சிறிதும் கண்டுக்காதவள், பெட்ஷீட்டை எடுத்து மூஞ்சை மூடியபடி,





“இம்ம்..அந்த அங்கிளு அவரோட வைப் ரூம்ல நான் படுக்க கூடாதுன்னு என்ன பயம் காட்டி ரூமைவிட்டு தொரத்திட்டாரு... நீ நம்புனா நம்பு இல்ல நம்பாட்டி போ” அவனை போல பேசிக்காட்டியவள் கண்களை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 23





ஸ்ரீயை கிண்டல் செய்த திவி பெட்ஷீட்டை இழுத்து போர்த்திக்கொண்டு தூங்க முற்பட்டவள் , நேரம் சென்றும் தன்னை சீண்டாமல் இருப்பவனை கண்டு வியந்து பெதுவாக பெட்ஷீட்டை முகத்தில் இருந்து விலக்கி பார்க்கவும் , அவளையே பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீ கண்ணில் பட ,திவியின் குறும்பு தலைதூக்கவும் சற்றென்று அவனை பார்த்து கண்ணடித்தவள் மீண்டும் அவசரமாக பெட்ஷீட்டால் முகத்தை மூடிக்கொண்டாள்.





சில நொடிகள் போகவும் எந்த எதிர்வினையும் இல்லாமல் இருக்கவும் மீண்டும் பெட்ஷீட்டில் இருந்து முகத்தை எட்டி பார்த்தவளின் முகம் வெட்கத்தில் சிவந்து போனது ஸ்ரீயின் பதில் கண்ணடிப்பால் .





ஸ்ரீயிடம் இருந்து இதை எதிர் பார்க்காத திவிக்கு வெட்கமும் சந்தோஷமும் சேர்ந்து ஒருவிதமான பொலிவை அவள் முகத்தில் காட்டியது. இதுவரை திவியை இப்படி பார்த்திராத ஸ்ரீக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வர அடக்கமுடியாமல் சத்தம் போட்டு சிரித்தவன்,





“ஏய் உனக்கு வெட்க படக்கூட தெரியுமா...ஹாஹா...அது பொண்ணுகளுக்குத்தானே வரும் உனக்கு எப்படி ...” என்று தாடையை தடவி யோசித்தவனை முறைத்தவள்,





“ஏ...ன்ன்ன் ...என்ன பார்த்தா உங்க கண்ணுக்கு பொண்ணா தெரியலையா...” என்று நொடித்தவளை பார்த்து இல்லை என்பது போல தலையசைத்தவன்,





“பொண்ணா தெரில...என்ன புடிச்ச குட்டி சாத்தனாதான் தெரியற” என்றவனை நெருங்கி அமர்ந்த திவி, கிசுகிசுப்பான குரலில்,





“ நான் வேணா பொண்ணுதான்னு நிரூபிக்கவா...” என்றவளை பார்த்து பெரிய கும்பிடாக போட்டவன்,





“ஒரு ஆணியும் நீ புடுங்க வேணாம்... எழுந்திரு தூங்கபோலாம்” என்றவனிடம் ,





“நீயும் எங்க கூட தூங்க வரியா...” என்ற திவியை புருவம் சுருக்கி பார்த்தவன் ,





“எங்ககூடயா...” என்று யோசித்தவன் பின் அவள் வயிற்றை ஒரு பார்வை பார்த்து எதுவும் கூறாமல் அறைக்குள் நுழைந்து கொண்டான். அவன் போவதையே பார்த்தவள் பின் தன் தோளை குலுக்கியபடி,





“ரொம்ப ஓவர்ராத்தான் போறான்... போடா...புதர்மூஞ்சா...செல்லகுட்டிங்களா... உங்களுக்கு நான் இருக்கேன்... இனி அவனா கேட்கிற வரைக்கும் உங்களை பத்தி நான் சொல்லமாட்டேன்... ஓகேவா” என்றவள் அறைக்குள் நுழைந்தாள்.





உறக்கத்தில் இருந்தவளுக்கு புது இடம் என்பதால் சற்றென்று முழிப்பு வந்துவிட , கீழே ஸ்ரீ படுத்திருந்த இடத்தை பார்த்தவளுக்கு அங்கே ஸ்ரீ இல்லாததை கண்டு புருவம் சுருகியவள் மணியை பார்க்க நேரம் விடியற்காலை ஐந்து என்று காட்டியது.





நல்ல உறக்கம் இல்லாததால் சோர்வாக உணர்ந்தவளுக்கு மீண்டும் படுக்கும் எண்ணம் வந்தாலும், ஸ்ரீக்கும் நல்ல உறக்கம் கிடையாது என்று எண்ணியவள், அவனை தேடி வெளியே வந்தாள் திவி.





அங்கே ஹாலில் ஸோபாவில் அமர்ந்து கொண்டு எதையோ குடித்து கொண்டிருந்தான் ஸ்ரீ, அருகில் செல்லாமலே திவிக்கு புரிந்தது அவன் தண்ணி அடிக்கிறான் என்று. அதை பார்த்து மனதில் வருந்தீனாலும் , ஒரு முடிவுடன் அவன் அருகில் சென்றாள் திவி.





தன் அருகில் அரவம் கேட்டு நிமிர்ந்த ஸ்ரீ , அங்கே நின்றிருந்தவளை பார்த்துக்கொண்டே ஒரு மிடுறு குடித்தவன்,





“என்ன தூக்கம் வரலையா...போ..போ .... போய் தூங்கு” என்றவன் மீண்டும் வாயருகில் கிளாசை கொண்டு சென்றதை பார்த்து திவிக்கு கோபம் தலைக்கு ஏற , அவன் கையில் இருந்த கிளாசை பிடுங்கியவள்





“இப்போ எதுக்கு குடிக்கிறீங்க ...ஏன்...நான் இங்க வந்தது புடிக்கலயா...” என்ற திவியை பார்த்து விரக்தியாக சிரித்தவன்,





“புடிக்கலயா...உள்ளுக்குள்ள குற்ற உணர்வுள்ள செத்துக்கிட்டு இருக்கேன்...முடில திவி...ரொம்ப வலிக்குது... தினமும் தண்ணி அடிக்காம எனக்கு தூக்கம் வராது” என்று வேதனையுடன் கூறியவனை பார்த்து உள்ளுக்குள் கலங்கினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல்,





“சரி...இப்போ என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க சொல்லுங்க நான் கேட்டுக்கிறேன்” என்றவளை பார்த்து ,





“நான்...போறேன்...இங்கிருந்து யார் கண்ணுலயும் படாத தூரத்துக்கு போகணும்...என்னால இந்த கொடுமை எல்லாம் பார்த்துகிட்டு இருக்க முடில...ப்ளீஸ் என்ன போக விடு திவி” என்ற ஸ்ரீயை தீர்க்கமாக பார்த்தவள்,





“ஓகே...நீங்க உங்க இஷ்டப்படி போங்க ... ஆனா இப்போ இல்ல.. .குழந்தை பிறந்த பிறகு நீங்க தாராளமா போலாம் ...நான் தடுக்க மாட்டேன்” என்றவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்,





“கு...ழந்ததை...பொறக்கிற வரைக்குமா... அவ்வளவு...நாள்...நான்...” என்று தொடங்கியவனை கை நீட்டி தடுத்தவள்,





“வெட்டிப்பேச்சு எல்லாம் வேணா..இதுக்கு ஓகேனா சொல்லுங்க...” என்றவளை ஆழுந்து பார்த்தவன் , பின் தலையை மேலும் கிழுமாக ஆட்டி,





“இம்ம்... அப்போ நான் உன்னை விட்டு போகும்போது அழுது ஆர்பாட்டம் பண்ணமாட்டா... அப்படித்தானே... சரி இத நான் ஒத்துகிறேன்...பட் ஒரு கண்டிஷன்...நான் உன்னைவிட்டு போகும் போது என்ன ....நிம்மதியா...வழி அனுப்பனும்..நோ அழுகை...பிராமிஸ் பண்ணு....” கையை அவளை நோக்கி நீட்டியபடி கூறியவனை கண்டு நெஞ்சுக்கூட்டில் பாரம் ஏறியதை போல உணர்ந்தாள் திவி , இருந்தும் தன் கலக்கத்தை ஒதுக்கி வைத்தவள் அவன் கையில் தன் கையை வைத்து சத்தியம் செய்தாள்.





“இம்ம்...இத தண்ணியடிச்சு செலிப்ரட் பண்ணனும்...வா வா திவிக்குட்டி...உனக்கு ஒரு கிளாஸ் எடுத்துட்டு வா... நீயும் நானும் சேர்ந்து இருக்கப்போற இந்த கொஞ்ச நாளுக்காக ...” என்றவன் அவள் பிடுங்கி வைத்திருந்த கிளாசை நோக்கி கையை நீட்டவும், அவன் கையில் ஒரு அடி கொடுத்தவள், நோ என்பதாய் தலையசைத்தாள். புருவம் சுருக்கி, ஏன் என்று பார்த்த ஸ்ரீயிடம்,





“உங்க விருப்பத்துக்கு நான் ஒத்துக்கிட்டேன் தானே...எனக்கும் சில ஆசைகளும் கண்டிஷன்னும் இருக்கு செய்வீங்களா..” என்று ஏக்கமாய் கேட்டவளை பார்த்து,





“சரி...சொல்லு...” என்ற ஸ்ரீயிடம்





“நீங்க ட்ரிங்க்ஸ், ஸ்மோக் பண்ண கூடாது...இது கண்டிஷன்” என்றவளிடம்,





“என்ன...” என்று கோபத்துடன் கத்தியவன் ,





“நீ சொல்றதை எல்லாம் நான் கேட்பேன்னு நினைச்சியா...முடியாது ...உன்வேலையை பார்த்துட்டு போடி...நான் என்ன பண்ணனும் ஏது பண்ணனும்னு ஆர்டர் போடாதா... கடுப்பாரதுக்குள்ள இங்க இருந்து முதல கிளம்பு” என்றவனை உறுத்து விழித்தவள், பின் அவன் அருகில் இருந்த சிகரட் பாக்கெட்டில் இருந்து ஒன்றை எடுத்தவள் , அவனை பார்த்தவாறே தன் வாயில் வைக்கவும் அதை கண்டு,





“என்ன மிரட்டுறியா...இந்தா லைட்டர்...” என்று அவளிடம் லைட்டரை தூக்கி போட்டவன் பின்





“பத்தவச்சுக்க தெரியுமா... இல்ல...” என்று இழுக்கும் போதே அதை பத்தவைத்து ஒரு இழுப்பு இழுத்திருந்தாள் திவி, அதை பார்த்து பதறியவன்,





“ஏய்...கிறுக்கி ...கிறுக்கி ...என்னடி பண்ணுற ...வயித்துல புள்ளைங்களை வச்சுக்கிட்டு ... நீயெல்லாம் ஒரு பொண்ணாடி” என்றவன் அவசரமாக அவள் கையில் இருந்து சிகரெட்டை பிடுங்க நினைத்தான், அதை அவனிடம் தர மறுத்தவள்,





“முடியாது...லொக்கு ...நீ...லொக்கு...லொக்கு ...நீ..புடிச்சாலும்...லொக்கு ...எங்களுக்கும்தான் புகை வருது ...லொக்கு ...லொக்கு” பல இருமல்களுக்கு இடை இடையே அவள் கூறியதை கேட்டவன்,





“சரி...சரி...கொஞ்சம் கொஞ்சமா நிப்பாடிருறேன்...ப்ளீஸ் கொடுடி...பாரு பாரு எப்படி மூச்சு வாங்குது...இங்க இப்படி உட்கார்” அவள் புகையால் மூச்சு விட சிரமப்படுவதை கண்டு ஸோபாவில் அமரவைத்தவன் , மறக்காமல் அவள் கையில் இருந்த சிகரெட்டை பிடுங்கி அதை அணைத்தான் .





“திவி...என்னால சட்டுன்னு விட முடியாதுடி...அது இல்லனா பைத்தியம் புடிச்சது போல ஆகிடும்... ப்ளீஸ் கொஞ்சம் கொஞ்சமா ஸ்டாப் பண்ணிக்கிறேன் ஓகேவா...இப்போ முதல இந்த தண்ணியை குடி... இப்படி பட்டு பட்டுன்னு ரியாக்ட் பண்ணாத திவி ... அது நல்லதுக்கில்ல...” என்றவன் அவள் முதுகை மெல்ல நீவிவிட்டான்.





“இக்கும்...முடியாது ...நீ சிகரெட்டை முழுசா நிப்பாட்டனும்” என்று பிடிவாதம் பிடித்தவளை,


ஏதும் செய்யமுடியாமல் பாவமாக பார்த்தவனை கண்டு மனம் இறங்கியவள்,





“சரி சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணா ... நைட்ல ஒரு கிளாஸ் தண்ணி அதுவும் என் கையால...அப்புறம் சிகரெட் என் விருப்பப்படி தான் பிடிக்கணும்...ஓகேவா” என்றவளை பார்த்து இதுக்கும் முரண்டு பிடித்தால் முழு பாட்டலையும் குடிச்சுடுவா என்று மனதில் நினைத்தவன் வேகமாக தலையை ஆட்டினான்.





“சரி இப்போ என்னோட ஆசையை சொல்லவா...” என்றவளை பார்த்து தலையசைத்தான் ஸ்ரீ. சிறிது நேரம் தயங்கியவள் பின் தொண்டையை செறுமியபடி,





“அது...வந்து...” என்று ஆரம்பித்தவள் பின் சொல்லவந்ததை சொல்லாமல் நிறுத்தவும்,,





“சொல்லு என்ன வேணும் உனக்கு” என்று கூறியவனை ஒரு நிமிடம் உருத்து விழித்தவள் பின் தன கண்களை இருக்க மூடிக்கொண்டாள். சிறிது நேரம் பொறுத்து பார்த்தவன் பின் அவளை உலுக்கியபடி,





“உன்னைத்தான் கேட்கிறேன்... கண்டிப்பா செய்யுறேன் என்ன வேணும்” என்று திரும்ப அழுத்தி கூறவும் , கண்களை திறந்தவள்,





“ நீங்க என்கூட இருக்கிற வரைக்கும் ” என்று தன்னை சுட்டி காட்டியவள் தொடர்ந்து,





“நீங்க மஞ்சுவை ஒரு நொடி கூட நினைக்க கூடாது... அப்புறம்... அதுவந்து” என்று தயங்கியவள் பின் ஒரு முடிவு எடுத்தவளாக





“வந்து ...என் கிட்ட பாசமான ஹஸ்பாண்டா உங்களால இருக்க முடியாதுஉஉஉ... ஆனா இன்னைல இருந்து இந்த நொடில இருந்து ஆசை உள்ள ஹஸ்பாண்டா என்ன தவிர வேற சிந்தனையே இல்லாம இருக்குற மாதிரி நடிக்கயாவது செய்யுங்கா ப்ளீஸ்... செய்வீங்களா” என்றவளை கோபத்துடன் உறுத்து விழித்தவன்,





“முடியாது...என்னால நடிக்கவும் முடியாது ...உண்மையாவும் அப்படி இருக்க முடியாது...வேற எதுவும் இல்லல போய் தூங்கு ” என்றவனை ஏக்கத்துடன் பார்த்தவளை கண்டு கடுப்பானவன்,





“திவி...” என்று அதட்டி அழைத்து,





“இந்தமாதிரி லுக்கு விடுறது..பக்கத்துல உரசுறது...எமோஷனலா பிளாக்மெயில் பண்ணுறதை இன்னையோட நிறுத்திக்கோ...நான் எப்பவும் ஒரே போல இருக்க மாட்டேன்...பண்ண சத்தியத்தையும் மதிக்க மாட்டேன் புரியுதா...போய் தூங்கு போ” என்று அவளை விரட்டியவன் கண்களை மூடிக்கொண்டான்.





திவியோ அவனிடம் இருந்து பிடுங்கிய கிளாசை மற்றும் டேபிள்லில் பரப்பி இருந்த மது பாட்டலையும் எடுத்து கொண்டு சமையல் அறைக்கு சென்றவள் அதை அங்கே வைத்துவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.





அவள் தன் அறைக்குள் நுழைந்ததுமே, கண்களை திறந்த ஸ்ரீ சத்தம் வராமல் சமையல் அறைக்குள் நுழைந்தவன் அங்கே அவள் வைத்திருந்த கிளாசை எடுத்து அதை நுகர்ந்து கண்களை மூடி ரசித்தவன் , கண்களை திறந்து அதை தன் வாயருகில் கொண்டு செல்லும் போது படக் என்று திவியால் பிடுங்கப்பட்டது. அதை கண்டு திகைத்து விழித்த ஸ்ரீ சடுதியில் சமாளித்தவன்,





“தண்ணி குடிக்க வந்தேன் திவிக்குட்டி... க்ளாஸ்ல இது இருந்துதா .... வேஸ்ட் பண்ண வேணாமேன்னு...” என்று இழுத்தவனை முறைத்தவள் கையில் இருந்ததை சிங்கில் கொட்டினாள், அதைக்கண்டு பதறிப்போன ஸ்ரீ,





“அடப்பாவி...ஏண்டி இப்படி வேஸ்டா கொட்டின...எவ்வளவு பேர் இதுகூட கிடைக்காம கஷ்டப்படுறாங்க...அங்க கொட்டினதை இங்க ஊத்திருக்கலாமே” என்று தன் வாயை காட்டியவனை பார்த்து முறைத்தவள்,





“இன்னையோட கோட்ட இன்னைக்கு நைட்தான் வரும் ...எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்” கூறியபடி மது பாட்டலை கையில் எடுத்தவளை கண்டு, பதறிப்போன ஸ்ரீ ,





“நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் திவிக்குட்டி... இந்த ஒருதடவை மட்டும் ப்ளீஸ் ப்ளீஸ்...” என்று கெஞ்சியவனை விஷமத்துடன் பார்த்த திவி,





“என்ன....ன...சொன்னாலும் செய்வியா” என்றவளுக்கு, எதையும் யோசிக்காமல் வேகமாக தலை ஆட்டினான் ஸ்ரீ, குறும்பு கூத்தாட கண்கள் மின்ன





“அப்போ..இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடு” என்றபடி தன் உதடுகளை குவித்து அவனை விஷமத்துடன் பார்த்தவளை கண்டு மனதில் வறுத்து எடுத்த ஸ்ரீ மெல்ல மெல்ல அவளை நெருங்கினான், அவன் அருகில் வர வர திவியின் குவிந்திருந்த உதடுகள் புன்னகையால் நன்றாக விரிந்தது.





அவளை நெருங்கிய ஸ்ரீ சந்தோஷத்தில் விரிந்திருந்த திவியின் தாவாங்கட்டையை பற்றி நிமிர்த்தியவன் , அவள் முகத்தை நோக்கி குனிந்தான்.





திவிக்கு நன்றாக தெரியும் தான் கேட்டதை அவன் செய்ய போவதில்லை என்று இருந்தும் என்னதான் செய்யப்போகிறான் என்று ஆர்வம் மேலோங்க கன்னங்கள் நன்கு விரியும் அளவுக்கு சிரித்தவளின் கன்னங்களை பல் தடம் தெரியும் அளவுக்கு நன்றாக கடித்திருந்தான் ஸ்ரீ, வலியில் திவியின்





“அம்மா...” என்ற அலறலோடு “அய்யோ...” என்ற ஹரியின் சத்தத்தை கேட்டு நிமிர்ந்து பார்த்த ஸ்ரீயின் கண்களுக்கு அங்கே பார்த்ததை நம்ப முடியாத பாவனையுடன் நின்றியிருந்த ஹரி கண்ணில் பட்டான் . ஹரியை பார்த்து





“ஹாஹா...என்னடா இப்படி ஷாக் ஆகி நிக்கிற” என்ற ஸ்ரீயிடம்





“என்னடா பண்ண ஏன் திவி கத்துனாங்க” என்ற ஹரிக்கு, அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்ட ஸ்ரீ,





“எனக்கு நல்ல பசி ...சாப்பிட ஒன்னும் கிடைக்கல ... அப்போ திவிக்குட்டி வேற அங்க வந்தாளா ... அவ கன்னம் வேற காஷ்மீர் ஆப்பிள் போல இருந்ததா ... அதான் பசி மயக்கத்துல ஆப்பிள் நினைச்சு கடிச்சுட்டேன் ஹரி“ என்றவனை நம்பாத பார்வை பார்த்த ஹரி ஸோபாவில் சென்று அமர்ந்துகொண்டான் , ஹரி சென்றதும் திவியின் அருகில் சென்று அவள் கன்னத்தை சிறிது நேரம் ஆராய்ச்சி பண்ணிய ஸ்ரீ,





“இன்னும்...நல்லா கடிச்சுருக்கணும் போல திவிக்குட்டி... மேல நாலு பல்லு ...கிழ நாலு பல்லுதான் தெரியுது..” என்றவாறே அவள் கன்னத்தில் பதிந்து இருந்த பல் தடத்தை வருடி கொடுத்தவன் ,





“திவி...திரும்பவும் சொல்லுறேன் ...ஒருநேரம் போல நான் இருக்க மாட்டேன் ...இதோடு என்ன சீண்டுற வேலையை விட்டுடு” என்றவனின் கையை பட்டென்று தட்டி விட்டவள் வேகமாக தன் அறைக்குள் சென்று நுழைந்து கொண்டவள் , உடல் அசதியினால் தூக்கம் வரவும் கண்களை மூடி கொண்டவளின் உதட்டில் மெல்லிய புன்னகை அவள் விரல்கள் மயில் இறகை வருடுவது போல பல் தடத்தை மெல்ல வருடியது.





ஸ்ரீயும் ஹரியும் விடிந்து விட்டதால் தூங்க செல்லாமல் சோபாவில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள். நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தவர்களை கலைத்தது வீட்டின் அழைப்புமணி, ஸ்ரீ யோசனையோடு நேரத்தை பார்க்க 6.45 என்று காட்டியது, யாராக இருக்கும் என்று எண்ணியபடி கதவை திறந்தவன் எதிரில் நின்றிருந்தவர்களை சிறிதும் எதிர்பார்க்கவில்லை ஸ்ரீ.





வந்தவர்களை சிறு தலையசைப்புடன் உள்ளே வர வழியை விட்டு ஒதுங்கி நின்றான் ஸ்ரீ, யார் என்று எட்டி பார்த்த ஹரி அங்கே நின்றியிருந்த மனோ மற்றும் பானுமதியை கண்டு புன்னகையுடன்,





“வாங்க மாமா ...வாங்க அத்தை” என்று வரவேற்று சோபாவில் அமரவைத்தான். சிறிது நேரம் அமைதியாக இருந்து மனோ ஹரியிடம்,





“ஹரி...திவிக்கு இப்போ எப்படி இருக்கு... தூங்குறாளா” என்றவரை அவளுக்கு என்ன ஆச்சு என்ற யோசனையாக ஸ்ரீயும் ஹரியும் பார்க்க,





“திவி மெசேஜ் பண்ணிருந்தா... அவளை கன்னத்துல நாய் கடிச்ச விசயத்தை சொன்னா... ” என்ற மனோவை இடைமறித்த பானுமதி,





“வீட்டுல வளர்கிற நாய்தான் சொல்லிருந்தா...இருந்தாலும் ஒரு டெட்டனஸ் போட்டுகிறது நல்லது ” என்றவரை தொடர்ந்து மனோ ,





“டாக்ஸ் உள்ள விடாதீங்க ஹரி ... அதுசரி திவி ஏன் நாய்கிட்ட போய் கன்னத்தை கொடுத்தா...” என்ற மனோவின் கேள்விக்கு ஸ்ரீயின் முகத்தில் தோன்றிய பாவனையை கண்டு அடக்க


முடியாமல் சிரித்தான் ஹரி.

 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 24





மனோவின் கேள்வியால் வாய்விட்டு சிரித்த ஹரியின் சத்தத்தாலும் ஹாலில் கேட்ட பேச்சு குரலாலும் தூக்கம் கலைந்த திவி வெளியே வரவும் அங்கே தன் பெற்றோரை கண்டதும் மகிழ்ச்சிஆனவள் ,





“அப்பா...” என்று துள்ளி குதித்து சென்றவளை , ரெண்டே எட்டில் அடைந்திருந்தார் மனோ.





“என்னடா திவி...இப்படி வேகமா ஓடி வர...” என்றவர் அவளை தன் முன் நிறுத்தி, அவள் கன்னத்தை பார்வை இட்டவாறே ,





“இந்த பல் தடத்தை பார்த்தா நாலுகால் நாய் கடிச்சது போல இல்ல ...வெறிகொண்ட ரெண்டுகால் நாய் குதறி வச்சது போல இருக்கு” என்றபடி கோபமாக திரும்பி,





“ஹரி... என்னதிது...இதைப்பார்த்தா ஆசைல கடிச்சது போல இல்ல ... வலிக்கனும்னு வேணும்னே கடிச்சது போல இருக்கு” என்றவரை ஏற்கனவே தன்னை நாய் என்று குறிப்பிட்டதால் கோபத்தில் இருந்தவன் , ஹரியிடம் புகார் சொல்லவும் பொறுமை இழந்த ஸ்ரீ,





“ஆமா...நல்லா வலிக்கட்டும் தான் கடிச்சேன்...பின்ன வெட்கமே இல்லாம என்கிட்ட உம்மா கொடுன்னு கேட்டா இப்படித்தான் பண்ணுவேன் ...இதுக்கும் மேலயும் பண்ணுவேன்...அப்புறம் என்ன சொன்னீங்க...ஆசையில் கடிக்கிறதா...யாரு நான் ...உங்க பொண்ண...ஹாஹா..


ஹாஹா... இவளை போல ஒருத்தியை திரும்பி கூட பார்த்திருக்க மாட்டேன்...இந்நேரம் அவ உயிரோடு இருக்கிறதுக்கு காரணமே வயித்துல இருக்கிற குழந்தையால் தான் ...புரியுதா...” என்ற ஸ்ரீயின் வார்த்தைகளை கேட்ட திவிக்கு அவமானத்தில் முகம் கன்றி போனது என்றால் மனோவிற்கு கோபம் தாறுமாறாக எகிற ஆரம்பித்தது,திவியின் தோளை சுற்றி கை போட்டு அணைத்த மனோ,





“உங்க கிட்டத்தானே முத்தம் கேட்டா,பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட இல்லையே...ஒரு மனைவி தன்னோடைய ஆசைகளை தன் புருஷன்கிட்ட சொல்லுறதுல என்ன தப்பு இருக்கு ஸ்ரீதர்...” என்றவர் திவியை பார்த்து





“நீ ஏன்டா பீல் பண்ணுற ...போ போய் அம்மாகிட்ட இன்ஜெக்ஷன் போட்டுக்கோ” என்ற மனோவை காயம் படுத்தும் நோக்கத்துடன்





“புருஷனா...யாரு...நானா...உங்க பொண்ணு கழுத்துல நான் தாலி கட்டியதை நீங்க பார்த்தீங்களா ... இல்ல மந்திரம் ஓதி முறைப்படி கல்யாணம் பண்ணிகிட்டேனா... இப்படி வெறும் கழுத்தோடு தாலி இல்லாம , காலுல மெட்டி இல்லாம...என் கூட ஒரே வீட்டுல இருந்தா மட்டும் என் பொண்டாட்டியா ஆகிட முடியாது , அவளுக்கு இந்த சமூகத்துல பல பெயர் இருக்கு... லைக் சின்னவீடு ... எக்ஸ்ட்ரா ...எக்ஸ்ட்ரா ...அதுல உங்க பொண்ணுக்கு எந்த பேர் செட் ஆகும்னு நீங்களே சூஸ் பண்ணிக்கோங்க” திமிராக பதில் கூறியவனை பார்த்து அதிர்ந்த ஹரி,





“ஸ்ரீ...என்ன பேச்சு பேசுற” என்றவனை கை நீட்டி தடுத்த ஸ்ரீ,





“நீ டூட்டில ஜாயின் பண்ணனும்னு சொன்னில ...கிளம்பு” என்ற ஸ்ரீயிடம் எதுவோ சொல்ல வந்த ஹரியை மீண்டும் தடுத்தவனை தொடர்ந்து மனோ திவியிடம்,





“ஏன்டா இவ்வளவு அசிங்க பட்டு இங்க நீ இருக்கணுமா...உனக்கு என்ன தலையெழுத்தா... இப்படி அசிங்க படணும்னு… ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்க கூடாது கிளம்பு” என்றவரை நக்கலாக பார்த்த ஸ்ரீ,





“கூட்டிட்டு போங்க...அவ வந்து ஒருநாள் தான் ஆகுது , ஆனா பத்து வருஷத்து கஷ்டத்தை நேத்து ஒரே நைட்ல அனுபவிச்சுட்டேன்...சீக்கிரம் கூட்டிட்டு போங்க நானாவது நிம்மதியா இருப்பேன்” என்றவனை கொலைவெறியுடன் பார்த்தவர்,





“திவி...கிளம்புடா...ஏய் என்ன வாய் பார்த்துகிட்டு இருக்க...வா போலாம்” பானுமதியுடம் தன் கோபத்தை காட்டிய மனோவிடம்,





“அப்பா...ப்ளீஸ்பா...கோப படாதீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க...” என்ற திவியை உறுத்து விழித்தவர்,





“திவிஈஈஈ....உன்கிட்ட இருந்து இத எதிர்பார்க்கள ...அவன் பேசினதை கேட்டு உனக்கு கொஞ்சம் கூட கோபம் வரலையா...கொஞ்சமாச்சும் சொரணை இருக்கணும் திவி...இல்லனா பொணத்துக்கு சமம்” என்று கோபத்தில் கத்தியவரை,





“மனோ...என்ன பேச்சு பேசுறீங்க...கன்சிவ்வா இருக்கிறவளை பொணம் கிணம்ன்னு என்ன உளறல்” என்ற பானுமதியை முறைத்த மனோ திவியை நோக்கி கை நீட்டியபடி,





“வாடா போலாம்” என்றவரை பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள்,





“எனக்கும் சூடு சொரணை நிறையா இருக்குப்பா...அவன் ஒவ்வொரு தடவையும் அசிங்க படுத்தும்போது எல்லாம் ... சீ...போடான்னு கோபப்பட்டு அவனை விட்டு போகணும் ... நல்லா துடிக்கவிடனும் இப்பவும் அந்த ஆசை கொழுந்துவிட்டு எரியுதுப்பா...பட் ......”என்று நிறுத்தியவள் பின் தொண்டையை செருமிக்கொண்டு,





“அதுக்கு எல்லாம் நேரம் இல்லைப்பா... நான் திரும்பி பார்க்கும் போது ... எல்லாம்.. மு .. மு.. முடி...” என்று தொடங்கியவளின் பேச்சை தடுத்தது அவள் அருகில் வந்து விழுந்த குட்டி டீ டேபிள், அதில் திடுக்கிட்டு போய் நிமிர்ந்து பார்த்தவள் அங்கே ஸ்ரீ நின்றிருந்த கோலத்தை கண்டு அதிர்ந்தாள்.





கண்கள் சிவக்க உதடுகள் துடிக்க பேச வார்த்தை வராமல் சிறிது தடுமாறியவன் , பின்பு தன் ஆட்காட்டி விரலை நீட்டி எச்சரித்து “ச்சை“ என்றபடி வேகமாக தன் அறைக்குள் சென்று கதவை வேகமாக அறைந்து சாத்தினான்.





அறைக்குள் சென்றதும் நேராக பாத்ரூம்க்குள் நுழைந்து ஷாவெரை திறந்து அதில் நின்றவனின் மனமும் ஊமையாக அழுதது அவனை போல.





‘ஏன் இப்படி நடத்துகிறேன் ...இச்சை.... பாவம் அவளை போய் இப்படி பேசிட்டேன் .... என் மேல இருக்கிற கோபத்தை எல்லாம் அவ கிட்ட ஏன் காட்டிகிட்டே இருக்கேன்...’ தனக்குள்ளே கேள்வி கேட்டவனின் தலை வெடிப்பதை போல வலிக்கவும், மெல்ல ஷவரில் இருந்து வெளியே வந்தவன் உடை மாற்றிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். வேகமாக சென்றவனை பின் தொடர்ந்து ஹரியும் வெளியே ஓடினான். அவர்கள் சென்றதும் தன் தந்தையின் கையை பிடித்த திவி,





“அப்பா... நீங்க இனிமே இங்க வராதீங்கப்பா...அவன் எப்போ என் கழுத்துல தாலி கட்டி மனைவின்னு ஒத்துகிறானோ அன்னைக்கு வாங்கப்பா” என்ற திவியை வேதனையுடன் பார்த்த மனோ,





“அதில்லடா...” என்றவரை இடைமறித்த திவி,





“ப்ளீஸ்பா ...அவன் உங்களையும் என்னையும் உங்க முன்னாடி அசிங்க படுத்தினா கண்டிப்பா அவனை நான் வெறுத்துடுவேன்...பிலீஸ்ப்பா...எனக்காக” கண்கள் கலங்க கெஞ்சியவளை பார்க்க பார்க்க துக்கம் தொண்டையை அடைக்கவும் , வெறும் தலையை மட்டும் அசைத்தவர் பானுமதியை பார்க்க, அவர் திவிக்கு இன்ஜெக்ஷண் போட்டு விட்டு அவளுக்கு பல அறிவுரைகள் வழங்கினார், பின் பிரிய மனசு இல்லமால் சென்றனர் திவியின் பெற்றோர்.





சிறிது நேரம் சென்று வீட்டிற்க்கு வந்த ஹரி ஹாலில் திவி மட்டும் அமர்ந்து இருப்பதை கண்டு அவள் அருகில் சென்றவன்,





“திவி...” என்று அழைத்தவனை புன்னகை முகத்துடன் எதிர்கொண்டவள்,





“ இம்ம்...சொல்லுங்க ” என்ற திவியை சிறுது நேரம் பார்த்தவன் பின்,





“திவி...ஸ்ரீ பேசுறதை மனசுல வச்சுக்காத...அவன் எப்பவும் இப்படித்தான் சட்டுன்னு கோபத்துல வார்த்தையை விட்டுடுவான் ஆனா மனசுல எதையும் வச்சுக்க மாட்டான்... அவன் கோபத்தை காட்டாத ரெண்டு பேர் ஒன்னு மஞ்சு அடுத்து அமுதா...” என்றவனை திடுக்கிட்டு பார்த்தவள்,





“ஹரிமாமா...மஞ்சு...எப்படி இருக்காங்க” என்றவளை பார்த்து மெலிதாக சிரித்தவன்,





“இப்போ பரவால்ல... திவி நான் ஒரு விஷயம் சொல்லுறேன் ஸ்ரீ கிட்ட சொல்லாத ... கல்யாணம் நடந்த அன்னைக்கு மஞ்சு சுசைடு அட்டெம்ப்ட் பண்ண பார்த்தா ... நல்ல வேலையா நான் பார்த்துட்டேன்... அந்த கடுப்புலதான் ஸ்ரீயை திட்டிட்டேன்... இப்போ ஓரளவு இதுதான் நிரந்தரம்ன்னு ஏத்துக்க ஆரம்பிச்சுட்டா” என்றவனை கலங்கிய கண்களுடன் பார்த்த திவி,





“சாரி மாமா ... எல்லாம் சரி ஆகும்” என்றவள் பின் தயங்கியவாறே ,





“மாமா...நீங்க நான் கன்சீவ்வா இருக்கிறதை யார்கிட்டயும் சொல்லாதீங்க...முக்கியமா மஞ்சுகிட்ட” என்ற திவியை பார்த்து சிரித்த ஹரி,





“நான் சொல்ல மாட்டேன்..தானா தெரியும் போது தெரிஞ்சிக்கிட்டும்... சரி திவி நான் குளிச்சுட்டு கிளம்புறேன்...ஸ்ரீ என்ன சொன்னாலும் மனசுல வச்சுக்காத திவி” என்றவன் ஊருக்கு கிளம்ப தயாரானான்.





ஸ்ரீ வீட்டிற்குள் நுழையும் போதே நிம்மியின் மழலை குரலும் அதற்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்த திவியின் குரலும் வரவேற்றது. முகத்தில் தழுவவிட்ட சிறு


புன்னகையுடன் சத்தம் வந்த திசை நோக்கி சென்றவன், அங்கே கிட்சன்னில் வெறும் தரையில் காய்களை வைத்து விளையாடி கொண்டிருந்த நிம்மியும், தோசை ஊற்றி கொண்டிருந்த திவியும் கண்ணில் பட்டனர்.





“நிம்மிசெல்லம் சாப்பிடலாமா... அத்தை தோசை தருவனாம்...நீங்க அழகா சாப்பிடுவீங்களாம்... வாங்க வாங்க.. இந்த மேடையில உட்கார்ந்து சாப்பிடலாம்” என்றவள் நிம்மி அருகில் சென்று அவளை தூக்கும் முன் ஸ்ரீ தூக்கி மேடையில் உட்கார வைத்திருந்தான்.





அவன் இருப்பதையே கண்டு கொள்ளாதவள், நிம்மிக்கு தோசையை ஊட்ட ஆரம்பித்தாள். சிறுது நேரம் பொறுமையாக அவர்களையே ரசித்த ஸ்ரீ,





“நிம்மி...மாமாக்கு பசிக்குதுடா...தோசை கிடைக்குமா ” என்றவனின் பார்வை திவியை வட்டம் இட்டது.





அவன் பார்வை குறுகுறுப்பை பொறுக்க முடியாதவள் திரும்பி பார்த்து அவனை முறைக்கவும் , தன் முப்பத்திரண்டு பற்களை காட்டி சிரித்தான் ஸ்ரீ. அவன் சிரிப்பில் உள்ளே குளிர்ந்தாலும் வெளியே முறைத்தபடி,





“தோசை வேணும்னா போய் உங்க பெரியவீட்டுல கேளுங்க ...சின்னவீடு டூட்டி ஓன்லி பெட்ரூம்ல மட்டும்தான்” என்று சுள் என்று விழுந்தவளை பார்த்து சத்தம் போட்டு சிரித்தவன், பின்





“அது கஷ்டம் திவிக்குட்டி... பெரியவீடு இருக்காளே அவ சரியான கிறுக்கி...தெரியாம அவ கழுத்துல தாலி கட்டி அவளை கழட்டி விடுறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே...” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு பேசியதை கேட்டவளுக்கு உள்ளுக்குள் மேலே பறப்பதை போல உணர்ந்தாள்.இருந்தாலும் வேண்டும் என்றே தன் தந்தையை காய படுத்தியதை நினைத்து பார்த்தவளுக்கு மீண்டும் கோபம் வர, கோபத்தை எல்லாம் தோசை சுடுவதில் காட்டினாள் திவி.


திவி வேகமாக தோசை ஊற்றுவதை பார்த்து பதறிய ஸ்ரீ,





“ஏய் என்னடி பண்ணுற நீ மாவ கல்லுல சுத்துற சுத்துல என் புள்ளைங்க வெளில வந்துடுவாங்க போல... பார்த்து மெதுவா” என்றவனின் பதறலை சிறிதும் சட்டை செய்யாதவள் தன் வேலையை தொடர்ந்து செய்தாள். சொல்வதை கேட்கமாட்டாள் என்பதை புரிந்துகொண்ட ஸ்ரீ அவள் வயிற்றின் அருகில் தன் கைகளை எடுத்து சென்று பாதுகாப்பு கவசம்போல வயிற்றை தாங்கி பிடித்தான். அவன் கை பட்டதும் திவிக்கு உடல் மனம் இரண்டும் சிலிர்த்து எழுந்தது, இருந்தும் வெளிக்காட்டி கொள்ளாமல் அவனை முறைக்கவும்,





“ஒரு சேப்க்கு தான் புடிச்சேன் ...” என்றவன் தன் கைகளை விலக்கி கொண்டான். அவள் சுட்டு தந்த தோசைகளை ஆசைதீர உண்டவன் , அவள் அடுப்பை அணைத்துவிட்டு செல்வதை பார்த்து,





“நீ சாப்பிடலையா ...அதுக்குள்ள ஏன் ஆப் பண்ணிட்ட” என்றவனுக்கு பதில் சொல்லாமல் நிம்மியை அழைத்து கொண்டு சென்றவளை பல்லை கடித்தபடி பார்த்தவன்,





“போயேன் ...எனக்கு என்ன வந்துச்சு ...” சத்தம்போட்டு கத்திய ஸ்ரீ ஹாலில் அமர்ந்து செல்லை நோண்ட ஆரம்பித்தான்.





அரைமணி நேரம் சென்றும் திவி வராததால் பொறுமை இழந்தவன் கிட்சன்குள் நுழைந்து அடுப்பை பற்றவைத்து தோசை வார்க்க ஆரம்பித்தான் .





கோணல் மானலாக மூன்று தோசைகளை ஊற்றியவன் அதை எடுத்துக்கொண்டு திவியிடம் சென்று அவள் கையில் தட்டை வைத்தவனை திரும்பியும் பார்க்காத திவி நிம்மியிடம் தன் விளையாட்டை தொடர்ந்தாள். சில நொடிகள் கழித்து தன் வாயருகில் தோசையுடன் நீண்ட கரத்தை ஓரக்கண்ணால் பார்த்தவள் எதுவும் சொல்லமால் திரும்பியும் பார்க்காமல் வாயை திறந்து அதை வாங்கி கொண்டாள்.

 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவி - 25





திவி அந்த வீட்டிற்கு வந்து இதோடு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது, வழக்கம் போல காலை ஐந்தரைக்கு கண் விழித்த திவி , பாலை காய்ச்சி குடித்து வீட்டை சுத்தம்படுத்தி காலை டிபன்க்கு தேவையானதை எடுத்து வைத்தவள் பின்பு குளிக்க சென்றாள். குளித்து அழுக்கு துணிகளை எல்லாம் வாஷிங் மெஷினில் போட்ட பின் காலை டிபன்க்கு இட்லி சாம்பார் செய்வதற்கு காய்களை நறுக்கியவளின் உதடுகளின் மெல்லிய புன்னகை உதித்தது, மனமோ இரண்டு வாரங்களுக்கு முன் நடந்ததை நினைத்து பார்த்தது.





தோசையை ஒரு வாய் ஊட்டிய ஸ்ரீ , அவள் கைகளில் திரும்பவும் தட்டை வைத்துவிட்டு விலகும் முன்னே தன் கையில் இருந்த தட்டை அருகில் வைத்துவிட்டு திரும்பவும் தன் விளையாட்டை தொடர்ந்தாள். அதை பார்த்து ஸ்ரீக்கு கட்டுக்கடங்காத கோபம் வர,





“ஏய்...என்ன கொஞ்சம் விட்டா ஓவரா போற... அடிச்சு பல்லெல்லாம் தட்டிடுவேன்...என்ன என்ன சில பேரு போல பொண்டாட்டி முந்தானைய புடிச்சுகிட்டு அலையிற பொண்டாட்டி தாசன் நினைச்சியா... சிங்கம்டி...”என்றவனை முறைத்தபடி ரூமைவிட்டு வெளியே சென்றாள் .





“ஏய்...நில்லுடி...பேசிக்கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்க...நில்லுடி...


நில்லுன்னு சொல்லுறேன்ல...” தொண்டை அடைக்க கத்தியவனை கண்டு அரண்டுபோன நிம்மி பயப்பார்வை பார்க்கவும், துணுக்குற்ற ஸ்ரீ,





“நிம்மிபேபி...மாமா செல்ல கேம் வச்சுத்தறேன் பாக்குறீங்களா” என்றவன் கார்ட்டூன்விடியோவை போட்டு நிம்மியிடம் கொடுத்துவிட்டு திவியை தேடி சென்றான். அங்கே அழுக்கு துணிகளை பொறுக்கி எடுத்து வாஷிங் மெஷின்னில் போட்டவளை பார்த்து,





“என்னடி நினைச்சுக்கிட்டி இருக்க இந்த கிரிப் காட்டுற வேலை எல்லாம் உங்க அப்பன் வீட்டுல வச்சுக்கோ ...என் பொறுமையை சோதிக்காம ஒழுங்கு மரியாதையா போய்சாப்பிடு” என்று பல்லை கடித்தவனை கண்டுகொள்ளாமல் தன் வேலையை செய்து கொண்டிருந்தவளை கண்டு ஆத்திரம் பொங்க , அவள் கைகளை வேகமாக பிடித்து இழுக்க அதில் நிலை தடுமாறியவளை சடுதியில் தாங்கி பிடித்தவன் அருகில் இருந்த சோபாவில் அமர வைத்தான்.





உதடுகள் துடிக்க ஆத்திரத்தை அடக்கியபடி அமர்ந்து இருந்தவளை கண்டு என்ன நினைத்தானோ, அவள் அருகில் அமர்ந்து அவள் கைகளை பற்றி ,





“திவி...என்னைப்பாரு...சொல்லுறேன்ல...இங்க பாரு” என்று அவள் கன்னத்தை வலுக்கட்டாயமாக பிடித்து நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்த ஸ்ரீ, தட்டில் இருந்த தோசையை ஊட்டியபடி,





“திவி ...உங்க அப்பா என்ன நாய்ன்னு சொன்னது சரியா...சொல்லு” என்றதற்கு எதுவும் கூறாமல் உட்கார்ந்து இருந்தவளை பார்த்து,





“அப்போ நீயும் அவர் சொன்னதை ஒத்துகிற ...” என்றவனை பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள்





“எங்க அப்பா பாவம்... எனக்காகத்தான் இங்க வந்தாங்க...இங்க பாருங்க” என்று கூறியபடி தன் கால்களை தூக்கி ஸ்ரீயின் தொடை மேல் வைத்தவளை பார்த்து அரண்டுபோன ஸ்ரீ,





“ஏய்..என்ன பண்ணுற ...மரியாதையா கால எடு” என்றவனின் பேச்சை கண்டுகொள்ளாதவள்,





“நல்லா பாருங்க காலு எப்படி வீங்கியிருக்கு...டெய்லி எங்க அப்பத்தான் என் காலை பிடிச்சு விடுவாங்க...இன்னைக்கும் அதுக்குதான் வந்திருந்தாங்க...நீங்க பேசி அசிங்க படுத்தி அனுப்பிடீங்க... இப்போ காலு வலிக்குது வேற யார் என் காலை பிடிச்சு விடுவா” என்றவள் அவள் காலையும் அவன் முகத்தையும் மாறிமாறி பார்த்தாள்.





“தோடா...கொஞ்சம் விட்டா தலைக்குமேலே ஏறுற...கால எடுடி...இந்த வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத” என்றவன் வலுக்கட்டாயமாக அவள் கால்களை எடுத்து கீழே வைத்தான்.


திவியின் முகம் சுருங்கியதை கண்டதும்,





“திவி...உன்கிட்ட சில விஷயத்தை சொல்லிடுறேன்...அன்னைக்கு போதையில என்ன சொன்னேன் எனக்கு ஞாபகம் இல்ல...பட்....” என்று ஆரம்பித்தவன் அரைமணி நேரம் அவள் காதில் ரத்தம் வரும் அளவுக்கு பேசினான் பேசினான் பேசிக்கிட்டே இருந்தான்.





அவன் பேச பேச அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் ஊற்ற ஆரம்பித்தது , ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல்,





“போதும்...நிறுத்துங்க ... இத தான் அன்னைக்கும் சொன்னீங்க...திரும்ப திரும்ப...என்..என்னால கேட்க முடில ...ப்ளீஸ்” என்று தேம்பியவளை பார்த்து கண் மூடி திறந்தவன்,





“உனக்கு புடிக்கலைனாலும் இதுதான் உண்மை...இதுக்குதான் நான் குழந்தை பொறந்த பிறகு கிளம்பிடுவேன் சொன்னது...புரியுதா” என்றவன் மேலும்





“அதனாலதான் சொல்லுறேன் என்கிட்ட இருந்து எதையும் எதிர் பார்க்காத...” என்ற ஸ்ரீக்கு கண்கள் கலங்க தலையசைத்தவளை கண்டு உள்ளுக்குள் வருந்தினாலும் வெளியே முகத்தில் எதையும் காட்டாமல்,





“முக்கியமானது” என்றபடி அவள் ஒரு கையை எடுத்து தன் தலை மீது வைத்தவன்,








“என்ன பத்தி நீ கேர் பன்னிக்கக்கூடாது... முக்கியமா நான் எங்க போறேன் என்ன பண்ணுறேன்னு கேள்வி கேட்க கூடாது...வெளில போக தெரிஞ்ச எனக்கு வீட்டுக்கு வர தெரியும்...புரியுதா...இம்ம் சத்தியம் பண்ணு” என்றவனை தவிப்புடன் பார்த்தவள் பின் கேட்கமாட்டேன் என்பதாக தலையை ஆட்டினாள்.





அவன் பேசி முடிக்கவும் வாஷிங் மெஷின் துணி துவைத்ததுக்கான அறிகுறியாக சத்தத்தை எழுப்பவும், அதை நோக்கி சென்றவள் துவைத்த துணிகளை ஒரு வாளியில் எடுத்துக்கொண்டு வெளியே செல்வதை பார்த்த ஸ்ரீ,





“ஹேய்...எங்க போற தோட்டத்துல கொடி இருக்கு பாரு அதில காயவை” என்றவனை தொடர்ந்து தோட்டத்தை எட்டி பார்த்த திவி, பின் எதுவும் சொல்லாமல் திரும்பவும் வெளிவாசலை நோக்கி சென்றவளை கண்டு கடுப்பானவன்,





“திவி.....நான் சொல்லுறத எதுவும் கேட்கிறதா இல்ல அப்படித்தானே” என்று கத்தியவனை பார்த்து முகம் சுளித்தவள்,





“அங்க வெயில் இல்ல...ஒரே நிழலா இருக்கு...இன்னர்ஸ் எல்லாத்தையும் வெய்யில்ல காய வைக்கணும் ...அதான் மொட்டைமாடில காயவைக்க போறேன்” என்றவளை பல்லை கடித்து பார்த்தவன்





“என்கிட்ட அந்த வாலியை கொடு மேல வச்சுட்டு வரேன்” என்ற ஸ்ரீ அவளிடம் இருந்து வாலியை வாங்கி கொண்டு மாடி நோக்கி சென்றான்.





மேலே வாலியை வைத்த ஸ்ரீ சிறிது நேரம் பொறுத்து பார்த்தும் அவள் வரவில்லை என்றதும் கீழே இறங்க நினைத்தவனின் கண்களில் நிம்மியின் கை பிடித்தபடி படி ஏறி கொண்டிருந்த திவி பட்டாள்.வேகமாக சென்று திவியை முறைத்தபடி நிம்மியை தூக்கி கொண்டவன், மேலே சென்று நிழலாக இருந்த இடத்தில் நிம்மியுடன் நின்று கொண்டான்.





மேலே வந்த திவி துணியை எடுத்து இரண்டு கைகளால் வேகமாக உதறியதை கண்டு ஸ்ரீ திடுக்கிட்டு போனான் , மேலும் அவள் எக்கி துணியை கொடியில் போடுவதை கண்டு மேலும் அதிர்ந்து போனவன்





“ஏய்...என்ன பண்ணுற அறிவு இருக்க ...வயித்துல குழந்தைங்க இருக்கிறது தெரியுமா தெரியாதா“ பதறி கேட்டுக்கொண்டிருக்கும் போதே அடுத்த துணியை எடுத்து உதற ஆரம்பித்தாள் திவி, அவளிடம் இருந்தது வெடுக் என்று அதை பிடுங்கியவன், அவனே எல்லா துணிகளையும் கொடியில் காயவைக்க ஆரம்பித்தான்.





மனதில் அவளை திட்டி கொண்டே காயவைத்தவன் திரும்பி பார்க்க அவளும் நிம்மியும் அங்கே இல்லாததை கண்டு பல்லை கடித்த ஸ்ரீ ,





“கிறுக்கி வேணும்னே பழி வாங்கிற”. என்று வாய் விட்டு புலம்பிய படி பக்கெட்டை எடுக்க திரும்பியவன் அங்கே தன்னையே முறைத்து கொண்டு நின்றிருந்த பக்கத்துக்கு வீட்டு மாமியை கண்டு அசடு வழிந்தான்.





“மாமி எப்படி இருக்கேள்...மாமா நல்லா இருக்காளா” என்ற ஸ்ரீயை முறைத்த மாமி,





“என்னடா ஸ்ரீ இது பொம்மனாட்டி பண்ணுற வேலையை நீ பாக்குற...ஆமா கீழே வயித்தை தள்ளிக்கிட்டி போனாலே அவதான் உன் பொண்டாட்டியா...மஞ்சு என்னடா ஆனா” என்ற மாமியின் கேள்வியில் ஸ்ரீயின் முகம் ஒரு நொடி வேதனையை தத்தெடுத்தது பின் சுதாரித்தவன்,





“அது ஒரு பெரிய சோக கதை மாமி...இவ இருக்காளே எங்க வீட்டுல வீட்டு வேலை செஞ்சுட்டு இருந்தா...எங்க அம்மாவை மயக்கி அவங்களை கைக்குள்ள போட்டுக்கிட்டு என்ன கல்யாணம் பண்ணுற போல செஞ்சுட்டா மாமி....நானும் எவ்வளவோ போராடி பார்த்துட்டேன் எங்கம்மா பிடிவாதமா இருந்துடங்கா மாமி “ என்று வேதனையுடன் கூறியவனை கண்டு





“என்னடா ஸ்ரீ இப்படி சொல்ற... அப்போ மஞ்சு” என்ற மாமியை பார்த்து, சிறிது தயங்கியவன்,





“ஹரி கூட கல்யாணம் நடந்துருச்சு” என்றவன் அவரிடம் ஒரு கட்டுக்கதையும் சுத்திவிட்டான், அவன் கதையை முடித்ததும் பரிதாபமாக பார்த்தவர்,





“இவ பார்க்கவே திமிர் பிடிச்சவ போல இருக்காளேடா” என்றவருக்கு,





“ரொம்ப மாமி என்ன எல்லா வேலையும் பண்ண சொல்லி மிரட்டுறா இல்லனா எதையாவது பண்ணிப்பேன் பயமுறுத்துறா மாமி ...அதான் குழந்தை பிறக்கிற வரைக்கும் பல்ல கடிச்சுட்டு சமாளிச்சுட்டு இருக்கேன் ...குழந்தை பொறந்த பிறகு அவளை துரத்தி விடலாம்னு இருக்கேன் மாமி” என்றவனை மெச்சுதலாக பார்த்தவர்,





“முதல அதை செய் நானும் பகவான் கிட்ட சீக்கிரம் அவ கிட்ட இருந்து உனக்கு விடுதலை கிடைக்கணும்னு வேண்டிக்கிறேன் ” என்றவரை திடுக்கிட்டு பார்த்தவன் திரும்பி மாடி படியும் ஒரு பார்வை பார்த்து மனதில்,





‘அட கிறுக்கு மாமி அவ மட்டும் இத கேட்டுருந்தா உன் மண்டை உடையறது கன்போர்ம்’ என்று நினைத்தவன் அவரை பார்த்து அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு வரேன் மாமி என்று தலையசைத்தவன் கீழே இறங்கி சென்றான்.





மதியம் சமையலுக்கு காய்களை எடுத்துவைத்த திவி, குழம்புக்கு தேவையான காய்களை நறுக்க ஆரம்பித்திருந்தவள் சற்றென்று வாயை பொத்தி கொண்டு கிட்சனில் இருந்து பாத்ரூமுக்கு அவசரமாக சென்றாள், அவள் செல்வதை பார்த்து பின்னே சென்ற ஸ்ரீ அங்கே திவி வாஷ்பேசினில் வாய் கொப்பளிப்பதை கண்டு,





“என்ன ஆச்சு திவி ...வாமிட் வருதா” என்றதற்கு சோர்வாக முகத்தை வைத்துக்கொண்டு ஆமாம் என்பதாக தலையை ஆட்டிக்கொண்டே சமையல் அறைக்குள் நுழைத்த திவி , மீண்டும் காய்களை வெட்டுவதை தொடரவும் திரும்பவும் அவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது அதை மீறி தொடர்ந்து காய்களை நறுக்கியவளை கண்டு,





“தள்ளு...திரும்பவும் வாந்தி எடுத்து வச்சிடாத...நாளைக்கு சமைக்க ஆளு ஏற்பாடு பண்ணிக்கலாம்...இப்போ ஹோட்டல்ல வாங்கிட்டு வரேன்” என்ற ஸ்ரீயை பார்த்து மறுப்பாக தலையசைத்தவள்,





“ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காது...நானே சமைச்சிடுறேன்” என்றவளை முறைத்த ஸ்ரீ,





“ஒரு வேளை சாப்பிட்டா ஒன்னும் ஆகாது” என்று முனகியவன் மீண்டும்,





“நீ போய் ஹால்ல உட்கார்...இன்னைக்கு நான் சமைக்கிறேன்” என்றவனை விழி விரித்து பார்த்தவள்,





“நீங்களா உங்களுக்கு சமைக்க தெரியுமா” என்று ஆச்சிரியமாக கேட்டவளை பார்த்து நக்கலாக சிரித்த ஸ்ரீ,





“ஆமா...இது பெரிய கம்ப சூத்திரம்...யுடியுப்ல தட்டுனா வர போகுது...போடி..சாப்பிட மட்டும் வா கடுப்ப கிளப்பாம பேசமா இங்கிருந்து போய்டு” என்றவனை கண்களில் காதல் மின்ன பார்த்த திவி புன்சிரிப்புடன் ‘





“எனக்கு புளிக்குழம்பு வேணும்” என்றவளை கொலைவெறியுடன் பார்த்தவன் எதுவும் சொல்லாமல் போனை நோண்ட ஆரம்பித்தான் , ஹாலிற்கு வந்த திவியோ மனதில்,





‘என்னையா சின்னவீடுன்னு சொன்ன ... எனக்காக எதுவும் செய்ய மாட்டியா..ஸ்ரீ மாமா நீ ரொம்ப ரொம்ப நல்லவன்டா..’ என்று நினைத்தவள் பின் தன் வயிற்றில் கையை வைத்து,





“ செல்லங்களா ...லேட்டா ஆனாலும் அடிமை சிக்கிடுச்சு டோய்ய்” சிறு சிரிப்புடன் கூறியவளின் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி தெரிந்தது.





“புளி குழம்பு” என்று யுடியூப்யில் டைப் செய்தவன் கண்களுக்கு தொடர் வண்டி போல லைன் கட்டி நின்ற விடியோவை பார்த்து எதை பார்ப்பது என்ற மலைப்பு வந்தது.





“அடப்பாவீங்களா... முழு நேரமும் இதே வேலையாதான் இருக்கீங்களா...உங்களை இங்க உலாத்த விட்டுட்டு வேடிக்கை பாக்கிற உங்க புருஷன்களை சொல்லணும்” கோபமாக பல்லை கடித்தவனின் முன் மனசாட்சி குதித்து ,





“அடேய் மானகெட்டவனே...மத்தவங்களாவது தன்ன தொந்தரவு பண்ணாம எப்படியாது இருந்தா போதும்னு விட்டுட்டாங்க... நீ என் பொண்டாட்டி கிடையாது... சின்ன வீடு ...உன் இஷ்டப்படி இருக்கமாட்டேனு சொல்லிட்டு புளி குழம்பு செய்வது எப்படினு யுடியுப்ல பாக்கிறேயே ...நீயெல்லாம் என்ன ஜென்மம்டா” என்று காறித்துப்பிய மனசாட்சியை சட்டை செய்யாதவனின் கண்களுக்கு ‘சுவையான புளி குழம்பு செய்வது எப்படி’ என்ற வாசகத்துடன் கையில் சட்டியை வைத்துக்கொண்டு அழகாக சிரித்த இளம்பெண் கண்ணில் பட்டாள்.








“அய்ய்...பாப்பா அழகா இருக்கு அப்போ புளி குழம்பும் அழகா இருக்கும்” குதூகலமாக சொன்னவன் அதை கிளிக் செய்தான்.





அழகான பாப்பா செய்து காட்டிய புளிக்குழம்பு கண்டு அரண்டு போன ஸ்ரீ மற்றொரு விடியோவை பார்க்க அது அதற்குமேல் இருக்கவும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தவனை கண்டு பரிதாபப்பட்டு அவன் உதவிற்கு வந்தாள் திவி. அவள் சொல்ல சொல்ல அமைதியாக செய்தவன் சாதத்தையும் வைத்துவிட்டு அவள் அருகில் வந்து,





“இப்போ வாமிட் எங்க போச்சு” என்றவனுக்கு எதுவும் சொல்லாமல் திருதிரு என்று விழித்துக்கொண்டு நின்றிருந்த திவியை பார்த்தவனுக்கு அவள் வாந்தி வருவதை போல நடித்திருக்கிறாள் என்று புரிந்தது.





எதுவும் சொல்லாமல் அவளை முறைத்துக்கொண்டு வெளியேறியவனை கண்டு அவளுக்குத்தான் கஷ்டமாக போனது, அப்பளம் பொரிப்பதற்காக எண்ணையை கொதிக்க விட்டவளுக்கு அந்த எண்ணெய் வாசம் குமட்டிக்கொண்டு வர அவள் பாத்ரூமிற்கு செல்வதற்குள் சமையல் அறையிலேயே வாந்தி எடுத்திருந்தாள், சத்தம் கேட்டு எட்டி பார்த்த ஸ்ரீ பயத்துடன் தன்னையே பார்த்தபடி ,





“நான் வேணும்னே எடுக்கல அதுவாத்தான் வந்துச்சு” என்ற திவியை பார்த்து,





“நீ போய் வாயை கொப்பிளிச்சுட்டு வா” என்று அவளை பாத்ரூமிற்கு அனுப்பி வைத்தவன், வாந்தியை சுத்தம் படுத்த ஆரம்பித்தான்.





இவ்வாறே முடியாது மாட்டேன் என்று முறுக்கி கொண்டே எல்லாத்தையும் இந்த இரண்டு வாரங்களாக செய்து கொண்டிருந்தான் ஸ்ரீ.





தன் சிந்தனையில் இருந்து கலைந்தவள் காலை டிபன்னை முடித்துவிட்டு வெளியே வர ,ரூமை எட்டி பார்க்க அங்கே ஸ்ரீயும் நிம்மியும் தூங்குவதை புன்னகையுடன் பார்த்தவள் , பேப்பர் எடுப்பதற்காக வெளியே சென்றாள் , அங்கே பக்கத்துக்கு வீட்டு மாமா பேப்பர் படித்து கொண்டிருப்பதை பார்த்து,





“குட் மோர்னிங் மாமா ” என்றவளுக்கு பதிலுக்கு குட் மோர்னிங் சொன்னவர் மீண்டும் பேப்பரில் முழ்கினார். திவியும் பேப்பரை எடுத்துக்கொண்டு திரும்பும் வேளையில் மாமி முல்லை கொடியில் பூ பறிக்க கஷ்டப்படுவதை கண்ட திவி,





“மாமா மாமி பூ பறிக்க கஷ்ட படுறாங்களே நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்தானே” என்றதும் தான் தாமோதம் , இதற்காகவே காத்திருந்தார் போல,





“ஏய்...உன்னாண்ட யாராச்சும் ஐடியா கேட்டாளா...ஆம்புடையானை வேலை வாங்கிறதாலம் உன்னோடயே வச்சுக்கோ அடுத்த வீட்டுல நாட்டாமை பண்ணாத..ஸ்ரீயை அடிமை மாறி எல்லா வேலையும் செய்ய சொல்லுறியே நோக்கு வெட்கமா இல்லை” கோபத்துடன் பொரிந்த மாமியை பார்த்து சிரித்த திவி,





“ ஏன் மாமி இதுக்கு இவ்வளவு கோபப்படுறீங்க... எல்லா பொண்டாட்டியும் தன்னோட புருஷன் தன்னை மட்டும் சுத்திவரும் நாய்க்குட்டியா இருக்கணும்னு ஆசை படுறதுல என்ன தப்பு இருக்கு...அதுவும் ஸ்ரீ மாமா எனக்கு வாய்ச்ச அடிமை சும்மா விட்டுடுவனா” என்று கூறி கண்ணடித்தவளை கண்டு ஆத்திரம்பொங்க,





“தினமும் நேக்கு பகவான் கிட்ட முழு கோரிக்கையும் என்ன தெரியுமா...எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஸ்ரீ உன்னைவிட்டு பிரிஞ்சு போகணும்..அதுமட்டும் தான் என்னோட இப்போதைக்கு கோரிக்கை” என்ற மாமியை வெறித்து பார்த்த திவி, பின் நிதானமாக,





“என்ன சொன்னீங்க...” என்றவளின் குரல் பேதமையை உணராதா மாமி





“நானும் நீங்க இங்க வந்ததுல இருந்து பார்த்துண்டே தான் இருக்கேன் நீ ஸ்ரீயை படுத்தி எடுக்கிறதை...அந்தப்பிள்ளை முகத்துல கொஞ்சூண்டு கூட சந்தோசம் இல்லை..முன்ன வரும் போது எல்லாம் ராஜா கணக்கா இருப்பான் இப்போ பாக்கவே சகிகளை ...இதுக்கு காரணம் நீதாண்டி..அவன் உன்ன விட்டு போனா நன்னா இருப்பான்...” என்று பொரிந்து கொண்டிருந்த மாமி சற்றென்று “அய்யோ அம்மா” அலற ஆரம்பித்தாள் அவள் நெற்றியை பதம் பார்த்த கல்லினால் , அங்கே திவி கண்ணீர் சிந்திய சிவந்த கண்களுடன் கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, மற்றொரு கல்லை கையில் வைத்துக்கொண்டு ,





“என்ன சொன்ன என் மாமா என்ன விட்டு போகணுமா உன்ன..உன்ன” என்று மீண்டும் தாக்க கையை ஓங்கியவளை ஸ்ரீ தடுத்திருந்தான்.





அப்பொழுதுதான் கண் விழித்த ஸ்ரீக்கு மாமியின் அலறல் சத்தம் கேட்டதும் வெளியே வந்து பார்த்தவன் , திவி நின்றிருந்த கோலத்தை கண்டு அதிர்ந்து போனான். அவள் என்ன செய்ய போகிறாள் என்று சரியாக ஊகித்தவன் அவள் கைகளை கெட்டியாக பிடித்து கொண்டான்.


ஸ்ரீயை பார்த்ததும் அந்த மாமி,





“டேய் அம்பி...எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவளை விட்டு போய்டு ...சரியான கிறுக்கு புடிச்சவ பேசிகிட்டு இருக்கும் போதே கல்லால அடிச்சுட்டாடா” என்ற மாமியை பார்த்து பல்லை கடித்த ஸ்ரீ,





“மாமி உங்க மண்டை முழுசா உடையாம இருக்கணும்னு நினைசீங்கனா ..எதுவும் பேசாம உள்ள போயிடுங்கோ” என்ற ஸ்ரீயை வசைபாடி கொண்டே அவர் வீட்டிற்குள் நுழைந்துகொண்டார் மாமி. திக்பிரமை பிடித்ததை போல நின்றிருந்த திவியின் தோளை தொட்ட ஸ்ரீ,





“திவிக்குட்டு...” என்றதும்தான் தாமதம், அவனை பிடித்து பலம்கொண்டு மட்டும் தள்ளியவள் அப்படியே கீழே மடிந்து அமர்ந்து ,





“இல்ல...நீ என்ன விட்டு போய்டுவ....போயிடுவதானே” என்று புலம்பிய திவி மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருந்தாள்.





“இல்லடா...போக மாட்டேன் உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன்” என்ற ஸ்ரீயின் சமாதானம் எடுபடாமல் போனது. பைத்தியக்காரி போல சொன்னதையே சொல்லிக்கொண்டு எங்கயோ வெறித்து பார்த்தவளை எப்படி சமாளிப்பது என்று திணறிய ஸ்ரீ, சுற்றி பார்க்க சில பேர் இவர்களை வேடிக்கை பார்ப்பது தெரிந்ததும், அவள் அருகில் சென்று,





“திவி...எழுத்துரு உள்ளே போலாம் எல்லாரும் நம்மளையே பார்கிறங்கா..வாடா உள்ள போலாம்” என்று கை பிடித்து தூக்கியவனின் கையை தட்டிவிட்டாள் திவி.





ஸ்ரீக்கு அங்கு நடப்பதை கண்டு தன் தலையை யாரோ சுத்தியால் உடைப்பது போல வலியை உணர்ந்தான், தன் கைகளை கொண்டு தலையை தாங்கியவன் பின் சுதாரித்து, அவள் அருகில் சென்று மிகவும் கஷ்டப்பட்டு அவளை கைகளில் அள்ளியவனின் நடை தள்ளாடியது, சிரமப்பட்டு உள்ளே வந்தவன் அவளை சோபாவில் உட்காரவைத்து தானும் அருகில் அமர்ந்து அவள் தோளை சுற்றி கையை போட்ட ஸ்ரீ,





“திவிக்குட்டி...உன்னையும் குழந்தைகளையும் விட்டுட்டு நான் எங்கயும் போக மாட்டேன்டா.. சும்மா உன்ன வெறுப்பு ஏத்த தான் அப்படி சொன்னது ” என்று ஸ்ரீயை பார்த்து மறுப்பாக தலை அசைத்தவள்,





“இல்ல நீ பொய் சொல்லற..நீ என்னையும் என் குழந்தைகளையயும் விட்டுட்டு போய்டுவ...எனக்கு தெரியும் நீ போய்டுவா... நான் நம்ப மாட்டேன்” என்று விடாமல் புலம்பியவளை பார்த்த ஸ்ரீக்கு முதல் முதலில் பார்த்த திவியை இவள் நினைவூட்டினாள்.





ஸ்ரீக்கு அவள் நிலையை பார்த்து அய்யோ என்று இருந்தது, பின் ஒருமுடிவு எடுத்தவனாக, அவள் புறம் திரும்பி அவள் கன்னத்தை தன் கைகளால் ஏந்தியவன், அவள் கண்களை பார்த்து,





“நான் சொல்லுறதை நம்ப மாட்டத்தானே..சரி என்னோட ஆக்ஷன்ல காட்டிடுறேன்” என்றவன் அவள் முகம் நோக்கி குனித்தவன் கண்களுக்கு கோபத்திலும் ஆற்றாமையிலும் துடித்து கொண்டிருந்த அவளுடையசிவந்த இதழ்கள் கண்ணில் பட்டது கூடவே ‘ எனக்கு ஆரஞ்சு ஜூஸ் குடிக்கணும் போல இருக்கு மஞ்சு’ என்று முன்பு கூறியதும் நியாபகத்திற்கு வரவும் , அதில் திடுக்கிட்டவன் தீச்சுட்டதை போல தன் கைகளை எடுத்தவன் கையாலாகாத தனத்துடன் திவியை பார்க்க அவள் முகத்தில், கோபம் துக்கம் இயலாமை , ஆசை ஏக்கம் என்று அணைத்து உணர்வுகளும் கலந்து கட்டி நர்த்தனம் ஆடியது. பின் தன் தலையை வலமும் இடமும் ஆகா ஆட்டியவன் , சற்றென்று அங்கிருந்து விலகி வெளியே சென்றான்.





அவன் செல்வதையே வெறித்து பார்த்தவளுக்கு கண்களில் புதிதாக கண்ணீர் சுரந்தது, ஸ்ரீ காரை கிளப்பி கொண்டு செல்லும் ஓசை கேட்டதும், அவள் முகத்தில் ஏமாற்றம் பரவியது ஏற்கனவே அழுத்தத்தில் இருந்தவளுக்கு ஸ்ரீயின் இந்த செயலும் மேலும் அழுத்தத்தை கொடுக்க அதை தாங்கி கொள்ளமுடியாமல் மயக்கத்திற்கு சென்றாள் திவி.













 
Status
Not open for further replies.
Top