All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி தில்லையின் “காமதேவன் அம்பு” - கதை திரி

Status
Not open for further replies.

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 20:





சொர்க்கம் எப்படி இருக்கும் என்று அவளுக்கு தெரியாது, ஆனால் இந்த நொடி தன் கண் முன் படர்ந்திருந்த ஓங்கி உயர்ந்த மலைகளையும் திரும்பிய பக்கமெல்லாம் பச்சை பசேல் என்று கண்ணை குளிர்வித்த சுற்றுப்புறத்தையும் கண்டு சொர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்திருந்தாள் சங்கீதா.





க்ரிண்டல்வால்ட் சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள அழகிய கிராமம். அங்கே தான் சங்கீதாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தான் குணா. இருவரும் தங்குவதற்காக மலை சரிவில் புல்வெளியின் நடுவே கீழ் தளம் மட்டும் கொண்டுள்ள சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தான்.





மதியம் இரண்டு மணிக்கு தான் இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். வரும் வழி நெடுகிலும் கொட்டி கிடந்த இயற்கை அற்புதங்களை கண் குளிர பார்த்து மகிழ்ந்தபடி வந்தாள் சங்கீதா. சரியான தூக்கம் இல்லாததால் வீட்டிற்கு வந்ததும் தூங்க சென்றுவிட்டான் குணா.





நீண்ட தூர பயணம் அலுப்பை கொடுத்தாலும், குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தவளை கதகதப்பான மெத்தை தூங்க சொல்லி அழைத்தாலும் கண் முன்னே கண்ட சொர்க்கத்தை உதறித்தள்ளிவிட்டு வர மனமில்லாததால் இயற்கையை ரசித்தபடி வீட்டை சுற்றி வந்தாள்.





இவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்கும் நல்ல தூரம். சுற்றுலா பயணிகள் வந்து தங்கவே கட்டப்பட்ட வீடுகள் நிறைந்த இடம் அது. யார் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக, இருக்கின்ற நாட்களை கழிக்கவே பல லட்சங்களை செலவு செய்து இந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தான்.





சில்லென்ற குளிர் காற்று உடல் முழுவதும் ஊசியாய் குத்தினாலும், அதை கருத்தில் கொள்ளாமல் புல் தரையில் படுத்து எதிரே தெரிந்த மலையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள் சங்கீதா.


அன்று சாப்பிடாமல் சோக கீதம் வசித்தவனை கண்டு மனம் பொறுக்காமல், மதியத்திற்கு மேல் பார்லரில் விடுப்பு சொல்லிவிட்டு குணாவுடன் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள். வீட்டிற்கு வந்தும் பசியில்லை என்று சாப்பிட மறுத்தவனை, வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்திருந்தாள்.





சாப்பிட்டு முடித்தபின், சோபாவில் சாய்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தவன் நீண்ட யோசனையில் இருந்தான். பாத்திரங்களை கழுவி வீட்டை பெருக்கி ஒதுக்கி தள்ளியபின் வேர்வை வடிய கூடத்தில் மின்விசிறிக்கு கீழ் உட்கார்ந்த சங்கீதாவை கண்டு, எழுந்து உட்கார்ந்தான் குணா. சில நொடிகள் அவளையே பார்த்தவன் பின் தொண்டையை கனைத்து,





“கன்டினியூஸா வேலைக்கு போய்கிட்டு இருக்கியே கடைசியா எப்போ லாங் பிரேக் எடுத்த ..." என்றவனின் திடீர் கேள்வியில், ஏன் என்ற பார்வை பார்த்தவள்,



"லாங் பிரேக்கலாம் எடுத்தது கிடையாது ... ஆக்சுவலா அந்த பார்லர்ல நானும் ஒன் ஆப் த பார்ட்னர் ... நா கஷ்டப்பட்ட காலங்கள்ல என்ன உயிர்ப்போடு வச்சுருந்தது அந்த பார்லர் தான் ... எப்போவாவது லீவ் எடுப்பேன் ... ரெண்டு மாசத்துக்கு ஒரு நாள் இல்ல ரெண்டு நாள்னு எடுப்பேன் ..." என்று பதிலளித்திருந்தாள். சிறிது நேரம் அமைதி காத்தவன்,


"வரியா ஒரு லாங் ட்ரிப் போய்ட்டு வரலாம் ... நம்ம கவலைகளை மறந்து கஷ்டத்தை மறந்து, இந்த உலகமே நமக்கு சொந்தம்,யார் என்ன நினைச்சாலும் ஐ டோண்ட் கேர் அப்படின்ற மைண்ட் செட்ல ஊர் சுத்தி பார்த்துட்டு வரலாமா ..." என்றவனை யோசனையுடன் புருவம் சுருக்கி பார்த்தாள்.


அவளுக்கு அவன் கூறிய தோரணையில் போய் பார்த்தால் என்ன என்று தோன்றினாலும், ஏதோ ஒன்று அவளை சம்மதம் சொல்ல விடாமல் தடுத்தது. அவள் மனதை சரியாக படித்தவன் போல, அவள் அருகில் சென்று மண்டியிட்டு உட்கார்ந்துக் கொண்டு கைகளை பற்றியவன்,


"ப்ளீஸ் நோ சொல்லாத ... எனக்கு தெரியும் என்கூட வர சொல்லி உன்ன கூப்புடுற தகுதி எனக்கு இல்லைனு பட் நீ வந்தா மட்டும் தான் என்னால இப்போ போய்கிட்டு இருக்க பிரஷர்ல இருந்து வெளில வர முடியும்னு என் மனசு அடிச்சு சொல்லுது ... ப்ளீஸ் ..." என்றவனுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை.


இதற்கு முன் யாரிடமும் இப்படி பேசி பழக்கமில்லாதவனுக்கு இதை பேசி முடிப்பதற்குள் கண்கள் இரண்டும் நீரால் பூத்து போயின. அதை கண்டுக் கொண்டவள் உள்ளுக்குள் துடித்துப் போனாள்.


“நோ சொல்லணும்தான் ஆச பட் பெரிய ஸ்டார் என் கால புடிச்சுகிட்டு கெஞ்சுறத பாக்க பாவமா இருக்கு ... பொழைச்சு போங்க, வந்து தொலைக்கிறேன் ... ஆனா நா சொல்ற பிளேஸ்க்கு தான் போகணும் ..." என்று கண்டிஷனுடன் சம்மதம் சொல்ல, அகமழிந்து போனவன், டக்கென்று காலை பற்றி


"ஏன் உன் ஆசையை கெடுப்பானே ... காலையும் புடிச்சுட்டேன் ..." என்று சிரிக்க,


"என்னங்க குணா இவ்வளவு கீழ இறங்கி போயிட்டிங்க ..." என்று நக்கலடித்தவளை கண்டு புன்னகை புரிந்தவன்,


"புடிச்சுருக்கே என்ன பண்ண ... அதுவும் உன்கிட்ட தானே ..." என்று கண்ணை சிமிட்டியவனை கண்டு போலியாக முறைத்தவள்,


"ஹலோ இப்படியெல்லாம் பேசி மயக்கலாம் பாக்காதீங்க ... தப்பான எண்ணத்துல கிட்ட வந்தாலே நறுக்கிடுவேன் நறுக்கி ..." என்று கத்திரிப்பதை போல கைகளால் சைகை செய்ய, சத்தம் போட்டு சிரித்தவன்,


"அப்போ நல்ல எண்ணத்துல கிட்ட வந்தா நோ ப்ரோப்ளேமா ..." என்று சிரித்தவனுக்கு முறைப்பையே பதிலாக தந்தவள்,


"எனக்கு ரொம்ப நாளா அமெரிக்கால இருக்க டிஸ்னி வேர்ல்ட் போகணும் ஆசை, யூஎஸ் போலாமா ..." என்று ஆர்வமாய் கேட்டவளை கண்டு முகம் சுருக்கி யோசித்தவன்,


"யூஎஸ் கச்சகச்சனு இருக்கும் ... இப்போ இருக்க மைண்ட் செட்டுக்கு செட் ஆகாது ... நாம சுவிஸ் போலாம் செம்ம பிளேஸ் ... சம்மருக்கு கிளைமேட் நல்லாயிருக்கும் ..." என்று கண்கள் மின்ன பேசியவனை முகத்தை சுருக்கி பார்த்தவள்,


"நாம என்ன ஹனிமூனுக்கா போறம் ... சுத்தி பாக்கத்தானே யூஎஸுக்கு போகலாம் ..." என்று வீம்பு பிடித்தவளின் கைகளை மீண்டும் பற்றிக் கொண்டவன்,


"ப்ளீஸ் இந்த ஒருதடவ மட்டும் என் சாய்ஸ்க்கு விட்டுடு ... அடுத்து நீ சொல்ற பிளேஸ்க்கு போகலாம் ... என்ன நம்பி அங்க வந்து பாரு ..." என்று கெஞ்சி கொஞ்சி என்று ஒருவழியாக சுவிஸ் செல்வதற்கு சம்மதம் வாங்கியிருந்தான்.


புல்தரையில் படுத்துக் கொண்டு அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு சினிமாவில் வருவதை போல ஸ்லோப்பில் உருண்டு பிரள ஆசை எழ, எதை பற்றியும் யோசிக்காமல் உருண்டவள் சருவலான நிலப்பரப்பில் நன்றாகவே சருக்கிக் கொண்டு கீழே சென்றாள்.


இவர்களின் வீட்டை சுற்றி மரக்கட்டையால் ஆன வேலி போடப்பட்டிருக்க, மெயின் ரோட்டிலிருந்து கிளை பாதை பிரிந்து கார் செல்வதற்கு ஏதுவாக தனி ரோடும் போடப்பட்டிருந்தது. ஆகையால் வெளி ஆட்கள் இவர்கள் இடத்திற்கு வரும் வாய்ப்பு குறைவு. இவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து பார்த்தால் நான்கு பக்கமும் மலைகள்


ஓங்கி உயர்ந்து, மெயின் ரோட்டின் அந்த பக்கமாக சீரிக் பாய்ந்துக் ஓடிக் கொண்டிருந்த ஆறும் கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாதளவிற்கு கண்ணுக்கு விருந்தை படைக்க தன்னிலை இழந்தாள் சங்கீதா.


மரவேலியை தொட்டதும் சிரித்தபடி எழுந்தவள் மீண்டும் சறுக்கி உருளுவதற்காக மேடான இடத்தை நோக்கி ஓடினாள்.


அப்பொழுதுதான் தூங்கி எழுந்து வந்த குணா, வேகவேகமாக ஓடி வந்தவளை கண்டு பதறி போய்,



"ஏய் என்னாச்சு ... எதுக்கு ஓடி வர ..." என்று வழிமறித்து கேட்டவனை கண்டுக் கொள்ளாமல்,



"ம்ப்ச் ... தள்ளி நில்லுங்க குணா ... வழியை மறைச்சுக்கிட்டு ..." என்று சலித்துக் கொண்டவள், மேலிருந்து கீழே படுத்தபடி உருளவும்,



"அட லூசே ..." சத்தம்போட்டு சிரித்தவன்,





"சங்கீ பாத்து ... புல்லுல பூச்சு முள்ளு இருக்க போகுது ..." என்று எச்சரிக்கை செய்தவனை கண்டுக் கொள்ளாதவள்,



"ஊஊஊ .... ஹாஆஆ ..." என்று கத்தியபடி உருண்டவள்,



"குணா ... நீங்களும் வாங்கா ஜாலியா இருக்கு ..." என்று அவனை நோக்கி கத்தியவள், வேலியை தொட்டிருந்தாள்.

"நானா ... நோ நோ ... இதெல்லாம் ஸ்கூல் பசங்க பண்றது ... அதுவும் பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் செகண்ட் ஸ்டாண்டர்ட் பசங்க விளையாடுற விளையாட்டு ..." என்று நக்கல் அடித்தவனை நோக்கி நடந்தபடி,



"ஓஹோ ... அப்போ பெரிய ஸ்டார்னு கெத்த காட்டுறீங்களா குணா சார் ..." வேண்டுமென்றே வம்பிழுத்தவளை கண்டு பே என்று விழித்தவன்,



"நா அப்படி சொன்னேனா ..." என்று கோபம் போல கேட்டவனிடம்,



"அப்போ வாங்க ... நீங்க தானே யாரையும் பத்தியும் கவலை படாம நம்ம இஷ்டத்துக்கு இருக்கலாம் சொன்னீங்க ... அப்புறம் நா யூஎஸ் போலாம் சொன்னதுக்கு நீங்க தான் இங்க கூட்டிட்டு வந்தீங்க ... இந்த ஊர்ல இதான் பண்ண முடியும் ... இது கூட எனக்காக பண்ண மாட்டிங்களா ..." என்று பேசியே அவனை ஒருவழி பண்ணியவள் அவனை நெருங்கியிருந்தாள்.



தலைக்கு மேல் இரு கைகளையும் குவித்து கும்பிடு போட்டவன்,



"அம்மா தாயே ... இனிமே நீ என்ன சொன்னாலும் வாயவே திறக்க மாட்டேன் ... இப்போ என்ன உன் கூட சேர்ந்து நானும் உருளுமா ..." என்றவன் மேட்டிலிருந்து சறுக்கி உருள, கலகலத்து சிரித்தபடி கூட சேர்ந்து உருண்டாள். வேலியே தொட்டிருந்தவனை இடித்துக் கொண்டு நின்றாள் சங்கீதா.



இருவருக்கும் அப்படியொரு சிரிப்பு மனம் லேசானதை போல உணர்ந்தவன், தலையை மட்டும் திருப்பி தன்னருகில் படுத்திருந்தவளை பார்த்து



"ஹாப்பி ..." என்றான் புன்சிரிப்புடன். முகம் முழுவதும் சிரிப்பில் மலர்ந்திருக்க ம்ம்ம் என்று தலையசைத்தவள், அவன் பக்கமாக திரும்பி ஒற்றைக்கையால் தலையை முட்டுக் கொடுத்து ஒருக்களித்து படுத்தவள்,



"என்னங்க குணா சார் இப்படி பம்முறீங்க ... முடியாது உன்னால உன்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோன்னு சொல்லுவீங்கன்னு நினைச்சேன் ... ஆளே டோட்டலா மாறியிருக்கீங்க என்னங்க சார் மேட்டர் ..." என்று நக்கலாக கேட்டவளை திரும்பியும் பார்க்காமல் எதிரே தெரிந்த மலையின் அழகை ரசித்தபடி,



"தெரியலையே ... மனசு செய்ய சொல்லுது நா என்ன பண்ண ..." என்று அவளிடமே திருப்பிவிட, சற்று நேரம் அமைதிகாத்தவள்,



"லவ் பண்றீங்களா குணா சார் ..." என்றவளின் கேள்வியில் பக்கென்று சிரித்தவன், அவள் முகம் பார்த்தபடி படுத்தவன்,



"லவ்வா ..." என்று அவள் நெற்றியில் சிலுப்பிக் கிடந்த முடியையை ஒதுக்கி தள்ளியவாறே,



"லவ் ... கண்டிப்பா இல்ல ... பட் உன் கூட பழக பிடிச்சுருக்கு ... யார்கிட்டயும் நெருங்க பிடிக்காத எனக்கு உன் பக்கத்துலயே இருக்கனும் தோணுது ... இப்போ மட்டுமில்ல நா இருக்கிற வரைக்கும் இந்த பாண்டிங் வேணும் ... கிடைக்குமா சங்கீ ... லவ் மேரேஜ் பேமிலி புள்ளகுட்டி, இதுல எல்லாம் எனக்கு பெரிசா நம்பிக்கையில்ல ... லைப் லாங் நீயும் நானும் வாழ்க்கை சலிக்கும் போதெல்லாம் இப்படியே பக்கத்துல பக்கத்துல படுத்துகிட்டு இயற்கையை ரசிச்சுகிட்டு சின்ன பிள்ளைங்க போல துள்ளி குதிச்சுட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா இருக்கிற வரம் கிடைச்சாலே போதும் ... கிடைக்குமா ..." என்று அவள் உச்சியில் இதழ் பதித்து விலக, கண்ணை மூடிக் கொண்டவள் அவன் கூறியதை உள்ளுக்குள் அசைபோட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் பதிலுக்காக காத்திருப்பவன் போல அவள் முகத்தையே பார்த்திருக்க, மெல்ல கண்ணை திறந்தவள், தன்னையே பார்த்தபடி படுத்திருந்தவனை பிடித்து மல்லாக்க தள்ளியவள் அவன் கையை உரிமையாய் விரித்து அதில் தன் தலையை வைத்துக் கொள்ள, நெகிழ்ந்துப் போனவன் இறுக்கம் கொடுக்காமல் அவளை தன்னுடன் மென்மையாக அணைத்துக் கொண்டான்.



"ரொம்ப ஆச படாத என்னாலலாம் உன் வாழ்க்கை முழுக்க வர முடியாது ... வேணும்னா என் உயிர் இருக்கிற வரைக்கும் வரேன் ..." என்ற நொடி அவனின் அணைப்பு இறுகியது.

'என் உயிர் இருக்கிற வரைக்கும் வரேன் ...' இந்த வார்த்தைகளே அவன் காதில் எதிரொலித்து கொண்டிருந்தது. சற்றென்று மனம் பாரமாகி போன உணர்வு. இந்த நொடி வரை அவள் மேல் காதல் எல்லாம் இல்லை, யாரிடமும் கிடைக்காத நிம்மதி இவள் அருகில் கிடைத்ததால் தான் வலுக்கட்டாயமாக இங்கே அழைத்துக் கொண்டு வந்தான். ஆனால் அவள் இந்த உலகத்தில் இல்லாத நொடிகளை கற்பனையாக கூட அவனால் நினைத்து பார்க்க முடியவில்லை அந்தளவிற்கு மனம் வலித்தது. மெல்லிய நீர் படலம் கண்களில் படர இமைகளை படபடத்து விரட்டினான்.





சற்று நேரம் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை, அமைதியாக படுத்தபடி கண்ணெதிரே கொட்டி கிடந்த அழகை ரசித்தனர். சூரியன் மறைந்து மெல்ல இருள் சூழவும், அந்த இடமே பார்ப்பதற்கு அவ்வளவு அச்சம் கொடுத்தது. தெருவிளக்கும் வீட்டில் ஒளித்த வெளிச்சமும் எந்த மூலைக்கு ஓங்கி உயர்ந்திருந்த மலைகளின் இருட்டை போக்க. சுற்றிலும் இருட்டு இரவு பூச்சிகளின் ரீங்காரம், பகலில் சொர்க்கமாய் தெரிந்தது இரவில் பயத்தை கொடுத்தது சங்கீதாவிற்கு.



"குணா பசிக்கலையா ..." என்று திடீரென்று ஒலித்த சங்கீதாவின் குரலில் கண்ணை விழித்தவன்,



"ம்ம்ம் இல்ல ... உனக்கு ..." என்கவும்,



"பயங்கரமா பசிக்குது ..." என்று திரும்பி பார்த்து சிரித்தவளை கண்டு சத்தம் போட்டு சிரித்தவன், எழுந்துக் கொண்டு அவள் எழவும் கை கொடுத்து உதவினான்.



"லூசு பசிக்குதுனா சொல்ல வேண்டியது தானே எதுக்கு சுத்தி வளைக்கிற ..." என்று செல்லமாய் கடிந்து கொண்டவனை அசட்டு சிரிப்புடன் பாத்தவள்,



"அவ்வளவா ஒன்னும் பசிக்கல ... பட் இந்த இடத்துல படுத்துருக்கவே பயமா இருக்கு ... அதுவும் அந்த மலைய பாக்க பாக்க பயந்து பயந்தா வருது ..." என்று கண்ணை உருட்டியவளை கண்டு வந்த பீறிட்டு வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கியபடி,



"நைட் ட்ரெக்கிங் போலாமா ... செம்மயா இருக்கு ... எங்க பாத்தாலும் ஒரே இருட்டா இருக்கும் சின்ன வெளிச்சம் கூட இருக்காது போக போக பைன் பாரஸ்ட் வரும், தூரத்துல மல உச்சில இருந்து தண்ணி கொட்டுற சத்தம், தொடர்ந்து கேக்கும் பூச்சி சத்தம் நடுநடுவே நரி ஊளையிடுற சத்தம் பயங்கர த்ரில்லிங் அட்வெண்ட்சரசா இருக்கும் போய் பாப்போமா ..." வேண்டுமென்றே பயமுறுத்தியவனை இழுத்துக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தவள்,



"போலாமே ... வீட்டுக்கு போனதும் யூஎஸ்க்கு டிக்கெட் மாத்தி போடுங்க அங்க போய் த்ரில்லிங் அட்வான்ச்சூர டிஸ்னி வேர்ல்ட்ல பாக்கலாம் ..." என்ற பதிலில்,



"அதெல்லாம் மேன்மேட் அட்வென்ச்சர் ... பட் இது நேச்சுரல் அட்வென்ச்சூர் என்ன சொல்ற சாப்ட்டு போலாமா ..." விடாமல் கிண்டல் செய்தவனை முறைத்து பார்த்தவள்,



"இப்படியே டீஸ் பண்ணிக்கிட்டு இருந்தா நாளைக்கே சிங்கப்பூர்கு ஓடிடுவேன் பாத்துக்கோங்க ..." என்று மிரட்டவும் தான் அமைதியானான். ஆனால் அடிக்கடி அவளை பார்த்து நக்கலாக சிரிக்கவும், கடுப்பானவள்,



"ஹலோ இன்னைக்கு டின்னர் உங்க டர்ன் ... போங்க போய் என்ன இருக்கோ அத வச்சு எதையாச்சும் செஞ்சு எடுத்துட்டு வாங்க ..." என்று விரட்டியவளை முறைத்து பார்த்தபடி கிச்சன்குள் நுழைந்தவன்,



"வீடு புக் பண்ணும் போது புட்டும் சேர்த்து ஆர்டர் போடுறேன் சொன்னேன்ல, பெருசா நா சமைக்கிறேன் வெளி சாப்பாடு ஒத்துக்காதுனு சொல்லிட்டு இப்போ டின்னர் எடுத்துட்டு வானு அதிகாரம் பண்ற ... நல்லா வருவ ..." என்று குணா புலம்பியது அவள் காதுகளில் விழுந்தாலும் கேட்காததை போல எழுந்து சென்று ஸ்பீக்கரை ஆன் செய்து அதில் பாட்டை கனெக்ட் செய்தாள்.





இங்கே தங்கும் வரை மூன்று வேளை சாப்படையும் சேர்த்து புக் செய்வோம் என்ற குணாவின் யோசனைக்கு மறுப்பு தெரிவித்த சங்கீதா, அங்கே இருக்கும் வரை தானே சமைப்பதாக கூறியிருந்தாள். கிட்சனில் இருந்த மாகி பாக்கெட்டை கண்டு நூடுல்ஸ் செய்ய முடிவெடுத்தான். பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் நூடுல்ஸை போட்டவனின் செவியை தீண்டிய இசையை கேட்டு அவன் இதழ்கள் புன்னகையில் விரிந்தது.


பொறுமையாக நூடுல்ஸை போட்டுவிட்டு ஹாலுக்கு வந்தவன், அங்கே,



"அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா ..." பாடலுக்கு ஏற்றவாறே கையை காலை அசைத்து இடுப்பை வளைத்து ஆடியவளை, கையை கட்டிக் கொண்டு கிட்சன் சுவற்றில் சாய்ந்து நின்று பார்த்திருந்தான் குணா.



அவனை கண்டதும் குஷியானவள் அவன் அருகில் சென்று இரு கைகளையும் பின்தலைக்கு கொடுத்து உடலை முன்னும் பின்னும் வளைத்து ஆட, ஒருகட்டத்திற்கு மேல் அடக்க முடியாமல் அவனும் கூட சேர்ந்து ஆடினான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் பயங்கர குத்தாட்டம் போட, பாடல் முடியும் வேளையில் சிரித்துக் கொண்டே ஷோபாவில் விழுந்தனர்.


ஆடிய களைப்பில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க சோபாவில் எழுந்து உட்கார்ந்த சங்கீதா,



"எனக்கு பசிக்குது ..." என்க,



"எனக்கும் தான் ..." என்றான் குணா. மூச்சு வாங்கியபடி அவனை திரும்பி பார்த்தவள்,



"ஆஅ ... ஊட்டி விடுங்க குணா ..." என்று வாயை திறந்து காட்டியவளை கண்டு அதிர்ந்து போய் பார்த்தவனிடம்,



"என்ன ... ஊட்டி விடமாடீங்களா ... நா ஆசப்பட்ட ஊருக்கு வராம நீங்க ஆசப்பட்ட ஊருக்கு வந்துருக்கேன், எனக்காக இது கூட செய்ய மாட்டிங்களா ..." என்று முகம் சுருக்கியவளை கண்டு பதறி போய் எழுந்தவன்,



"எம்மா தாயே வாய தொறக்காத ... இப்போ என்ன ஊட்டி விடணும் அவ்வளவு தானே இரு வரேன் ..." என்றவன் சமையலறை நோக்கி சென்றான். ஐந்து நிமிடங்கள் கழித்து கையில் நூடுல்ஸுடன் வந்தவன், சூடாக இருந்ததை வாயால் ஊதி ஊதி ஊட்டிவிட முகம் மலர வாங்கிக் கொண்டாள். அவளுக்கு ஊட்டி தானும் சாப்பிட்டு முடித்தவன்,



"அடுத்து என்னங்க செய்யணும் மேடம் ..." என்று பவ்யமாக கையை கட்டிக் கொண்டு கெட்டவனை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவள்,



"அது ... இப்படித்தான் ... எள்ளுன்னா எண்ணையா நிக்கணும் ..." என்று மிதபாய் கூறியவள்,



"வாங்க வெளில அப்படியே ஒரு வாக் போய்ட்டு வருவோம் ..." என்கவும்,



"உத்தரவு மஹாராணி ..." என்றவன் வீட்டை பூட்டிக் கொண்டு சங்கீதாவுடன் கிளம்பினான்.


பகலிலே குளுகுளு தேசம், இரவில் கேட்கவும் வேண்டுமா ஊசியாய் குத்திய கடுங்குளிரை பொருட்படுத்தாமல் கையை கோர்த்துக் கொண்டு அந்த இரவு வேளையில் சாலையில் இறங்கி நடந்தனர் குணாவும் சங்கீதாவும்.

ரோட்டின் அந்த பக்கமாக ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் கரையோரமாக போடப்பட்டிருந்த தடுப்பு கட்டையில் ஏறிக் குணாவின் கையை பற்றிக் கொண்டு தடுமாற்றத்துடன் அந்த கட்டையில் நடந்து வந்தாள் சங்கீதா.



"சங்கீ சொன்னா கேளு விழுந்துட போற ... இந்த பக்கம் விழுந்தா பரவலா அந்த சைடு தடுமாறி விழுந்தா தண்ணில தான் விழணும் ... ரிஸ்க் எடுக்க வேணாம் சொன்ன கேளு ... " என்ற குணாவின் கெஞ்சலை கண்டுக் கொள்ளாமல் அவன் கையை பற்றிக் கொண்டு நடந்தவளை கண்டு பொறுமையிழந்தவன் இடுப்பில் கை கொடுத்து கீழே இறக்கிவிட்டான்.

"ம்ப்ச் என்ன குணா நீங்க ... அதான் உங்க கையை பிடிச்சுக்கிட்டு தானே நடக்குறேன் ... அப்புறம் என்ன ... " என்று அலுத்துக் கொண்டவளிடம்,



"நா புடிச்சுருந்தாலும், ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது ... ஆத்துல ஓடுற தண்ணியோட போர்ஸ் பயங்கரமா இருக்கு ... எதுக்கு ரிஸ்க் எடுக்கணும் ..." என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, இவர்களை நெருங்கினர் வயதான தம்பதியினர்.





இருவரை பற்றியும் விசாரித்து கொண்டவர்கள்,விடை பெரும் முன்,



"நைட் ரிவர்ல தப்பி தவறி கூட இறங்கிடாதீங்க ... அடிக்கடி திடீர் வெள்ளம் வர சான்ஸஸ் இருக்கு ..." என்று எச்சரிக்கை செய்த பின்னே அங்கிருந்து கிளம்பினர். நான் சொன்னேன் பாத்தியா என்ற பார்வை பார்த்த குணாவை நோக்கி உதட்டை சுழித்தாள்.

அங்கிருந்த வரை குணா வாய் வார்த்தையாக கூறிய யாரை பற்றியும் கவலையில்லாமல் நாம் நாமாக இருப்போம் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, சிறு பிள்ளை போல ஓடி பாடி ஆடி குதித்து என்று மனதில் தோன்றியதை எல்லாம் செய்து தான் சந்தோசப்பட்டும் குணாவை படுத்தியெடுத்தும் வெற்றிகரமாக சுவிஸ் டூரை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் வந்து சேர்ந்தாள் சங்கீதா.



சங்கீதாவின் அருகாமையில் சற்று தெளிந்திருந்த குணா நேராக சென்னைக்கு சென்றுவிட்டான். இன்னும் அவன் மேல் எழுந்த பிரச்சனை முடியவில்லை என்றாலும் முன்பு போல பயந்து ஒதுங்காமல், தைரியமாக வெளியே நடமாடினான். தன்னை நோக்கி வந்த விமர்சனத்தை அமைதியாய் கடக்க பழகியிருந்தான்.


இன்னும் சினிமாவில் நடிக்கவில்லை, ஆனால் முன்பை விட அவனை தேடி நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள அழைப்புகள் வர, ஒன்றையும் தட்டிக்கழிக்காமல் தன்னை மக்களிடம் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தான். பாலியல் குற்றசாட்டை பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு எல்லாம் வெறும் புன்னகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு கடந்துவிடுவான்.





ஆறு மாதம் கழித்து மீண்டும் படத்தில் நடிக்க தொடங்கினான். நிறைய படங்கள் அவன் மேல் எழுந்த குற்றச்சாட்டால் கைவிட்டு போயிருக்க, எதற்கும் அலட்டிக் கொள்ளாதவன் முழு படத்தையும் நடித்து முடித்துக் கொடுத்தபின் சங்கீதாவை அழைத்துக் கொண்டு மீண்டும் சுவிட்சர்லாந்துக்கு சென்றுவிட்டான்.





என்ன பிரச்சனைகள் வந்தாலும் மனக்குழப்பம் வந்தாலும் சங்கீதாவை தேடி தான் செல்வான். அந்தளவிற்கு அவன் வாழ்க்கையில் இன்றியமையாதவளாக மாறிப் போனாள்.





சங்கீதா குணாவின் உடல்நிலை மற்றும் அவன் சுகதுக்கங்களில் பங்கு எடுப்பவள் மறந்தும் அவனின் அந்தரங்க விஷயத்தை பற்றி இன்றுவரை ஒரு வார்த்தை கேட்டதில்லை. இன்றளவும் சில நடிகைகளுடன் கூட சேர்ந்து கிசுகிசுக்க பட்டாலும் அதைப்பற்றி தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காதவளின் மேல் அவனின் அன்பு பெருகியது.





இவர்களின் அழகான உறவு மேலும் நான்கு ஆண்டுகளை கடந்திருக்க, நீண்ட நாட்களுக்கு பிறகு பெரிய ஹிட் படம் கொடுத்ததால் அந்த மகிழ்ச்சியை கொண்டாட இதோ சங்கீதாவை அழைத்துக் கொண்டு, நடக்க போகும் விபரீதத்தை அறியாமல் நான்காம் முறையாக சுவிஸ்ஸிற்கு வந்திருந்தான் குணா.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 21:





ஒவ்வொரு முறை சுவிஸ் வரும் பொழுதும், அவர்களின் நெருக்கம் ஒவ்வொரு கட்டமாக தாண்டிக் கொண்டிருந்தது. முதல் தடவை மற்றவரின் அருகாமை மட்டுமே போதும் என்ற நிலையில் இருந்தவர்கள் அடுத்தமுறை வந்த பொழுது, ஒன்றாக படுத்து உறங்க பழகியிருந்தனர்.

இரவு நேரத்தில் கூடத்தில் பெட்டை விரித்து அதில் அருகருகில் படுத்துக் கொண்டு, அங்கே உள்ள டிவியில் ஏதோ ஒரு படத்தை பார்த்தபடி உறங்க பழகியிருந்தனர். அடுத்த தடவை வந்த பொழுது, குணா சங்கீயிடம் நன்றாகவே நெருங்கி பழகினான்.



எந்நேரமும் அவளை தன் கை வளைவுக்குள் பொத்தி வைத்தே ஊரை சுற்றினான். அவனின் தொடுகையில் நட்பை தாண்டிய நெருக்கத்தை அவளால் உணர முடிந்தது. இருவரும் விரும்பியே மனதளவில் நெருங்கியிருந்தனர், ஆனால் அதை வெளிபடியாக மற்றவர்களுக்கு காட்டிக் கொண்டதில்லை.



சுவிஸ் வந்து ஒரு வாரம் ஓடிவிட்டது, இங்கே வந்ததிலிருந்து குணாவை முறைத்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருந்தாள் சங்கீதா.



"மனசு கஷ்டபட்டப்ப கூப்ட்டா சரினு வந்தேன் ... படம் நல்லா ஓடுனதுக்கு கூடவா என்ன இழுத்துட்டு வருவ, ரெண்டு மூணு கல்யாண அப்பொய்ண்ட்மென்ட் என்ன நம்பி கொடுத்தாங்க ... கடைசில அவங்க நம்பிக்கைய உடைக்க வச்சு இங்க இழுத்துட்டு வந்துட்ட ..." என்று புலம்பியபடி இரவு உணவை தயாரித்து கொண்டிருந்தவளை பின் புறமாக அணைத்துக் கொண்ட குணா, அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தான்.


"சாரி ... நா என்ன செய்ய சந்தோஷமோ துக்கமோ உன் கூட மட்டும் தான் ஷேர் பண்ண புடிக்குது ..." என்றவாறே அவளை மேலும் இறுக்கிக் கொள்ள, செய்யும் வேலையை விட்டுவிட்டு அவனை திரும்பி பார்த்தாள்.

"என்னதிது புது பழக்கம் ..." என்று கண்களால் அவன் நெருக்கத்தை சுட்டி காட்டியவளை கண்டு உதட்டை பிதுக்கியவன்,



"தெர்ல ... ஆனா மைண்ட் குள்ள என்னனமோ பண்ண சொல்லி ஓடிக்கிட்டே இருக்கு ..." என்றவனை அழுத்தமாக பார்த்தவள்,



"ஏன் இந்த மைண்ட் ஊர்ல இருக்கும் போது இதெல்லாம் பண்ண சொல்லி ஓடலையா ..." என்றாள் நக்கலாக. இதழ்களில் மென் புன்னகை குடிக் கொண்டிருக்க,



"ஓடிச்சே ... அதான் உன்ன இங்க தள்ளிட்டு வந்துருக்கேன் ..." என்று கண்ணை சிமிட்டி சிரித்தவனிடம்,



"வெரி சாரி குணா … தப்பான ஆள தள்ளிட்டு வந்துட்டிங்க ..." என்றவள்,



"இப்பவும் ஒன்னும் கெட்டு போகல, உங்ககிட்ட இருந்து ஒரு போன் கால் போதும், உங்க மைண்ட்ல ஓடுறத செய்ய நீ நானு போட்டி போட்டுக்கிட்டு வருவாங்க ..." முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டாமல் பேசியவளை ஆழ்ந்து பார்த்து,



"இப்போ என்ன சொல்ல வர ..." என்று புருவங்கள் இடுங்க கேட்டவனை, நேர்பார்வை பார்த்தவள்,



"ம்ம்ம் உங்க பாஷைல சொல்லனும்னா, மூடிட்டு போய் உட்காருங்கனு சொன்னேன் ..." என்று அழுத்தம் திருத்தமாய் கூறியவளை சில நொடிகள் கண்கள் இடுங்க பார்த்தவன், "சர்தான் போடி ..." என்ற பார்வை பார்த்து முறைத்துவிட்டு சோபாவில் சென்று உட்கார்ந்துக் கொண்டான்.

"இப்போ எதுக்கு குணா உங்களுக்கு கோபம் வருது ... நாலு வருசத்துக்கு முன்ன என்ன சொல்லி இங்க கூப்டுட்டு வந்தீங்க ஞாபகம் இருக்கா ... லைப் லாங் உன் கூடவே ட்ராவல் பண்ணா போதும் சொல்லிட்டு இப்போ மைண்ட் சொல்லுது மயிறு சொல்லுதுனு கத விட்டுட்டு இருக்கீங்க ..." அவன் கோபமா சென்றதைக் கண்டு சமையலறையில் இருந்து கத்தினாள்.



அவள் குற்றச்சாட்டிற்கு பதில் கூறாமல் அமைதி காத்தவனை கண்டு கோபம் வர, சப்பாத்திக்கு மாவு பிசைந்துக் கொண்டிருந்தவள் கையை கழுவிக் கொண்டு அவனை தேடி சென்றாள்.


சோபாவில் உட்கார்ந்திருந்தவனை நோக்கி கோபமாக வந்தவள் திட்டுவதற்காக வாயை திறப்பதற்குள், மொபைலில் வந்திருந்த அழைப்பை ஏற்றிருந்தான் குணா. அழைப்பை ஏற்ற அடுத்த நொடி,



"இப்போ எங்க இருக்கீங்க ... எப்போ வருவீங்க ..." என்று படிப்படத்தான் செழியன். அவன் கேள்வியில் சுர்ரென்று ஏறிய கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு,



"இத கேட்கத்தான் கால் பண்ணியா ..." என்றான் அமைதியாக.



"ஆமா ..." என்ற பதில் செழியனிடமிருந்து உடனே வர, பல்லை கடித்த குணா பொறுமையை இழுத்து பிடித்து,



"அத கேட்க உனக்கு எந்த ரைட்ஸும் இல்ல செழியா … இப்ப டிஸ்டர்ப் பண்ணாம போன வச்சுடு ..." என்ற பதிலில் செழியனின் முகம் கருத்தலும், கோபம் கொண்டால் வேளைக்கு ஆகாது என்று புரிந்தவன்,


"ஏன் இல்ல ... உங்க மேனேஜரா எனக்கு எல்லா ரைட்ஸும் இருக்கு ... உங்ககிட்ட கத சொல்ல டேட் கேட்டுருக்கார் டைரக்டர் லோகேஷ் ..." என்றான் சற்று காட்டமாக. அவன் பதிலில் குணாவின் இதழ்களில் சிறு புன்னகை உதிக்க,


"ஒஹ் அதுக்காக மட்டும் தான் கால் பண்ணியா ... அவர்கிட்ட சொல்லு, ரெஸ்ட் எடுக்க சுவிஸ் போயிருக்கார் சென்னை வந்த பின்ன கதைய கேட்பாருன்னு சொல்லுடா ... இத கூடவா நா சொல்லி தரணும் ..." என்று போலியாக அலுத்துக் கொண்டான்.


"ஸ்விஸ்ஸுக்கா ... உங்களுக்கு தானே ரெஸ்ட் தேவ எதுக்கு அவளையும் கூட சேர்த்துக்கிட்டு சுத்துறீங்க ... அவ என்ன உங்க பொண்டாட்டியா ... எப்ப பாரு அவள இழுத்துகிட்டு சுத்திகிட்டு இருக்கீங்க ..." என்றான் கோபமாக.

"இத கேட்கவும் உனக்கு ரைட்ஸ் இல்ல ... என்ன கேட்கணுமோ அத உன் அக்காகிட்டையே கேட்டுக்கோ ... என்ன இனி டிஸ்டர்ப் பண்ணாத புரியுதா ..." என்று அழுத்தமாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே,



"அவகிட்ட கேட்க முடிஞ்சுருந்தா நா ஏன் உங்ககிட்ட கேட்க போறேன் ... எங்கக்காவா விட்டுடுங்க. உங்ககிட்ட மேனேஜரா சேர்ந்ததுல இருந்து பார்த்துகிட்டு தான் இருக்கேன், நீங்க ஒன்னும் அவளுக்காக உருகிட்டு மத்த பொண்ணுங்கள தொடாத உத்தமர் இல்ல ... உங்ககிட்ட உண்மையான லவ் இல்ல, அப்பிடியிருந்திருந்தா மனசுல அவள வச்சுக்கிட்டு வேற ஒரு ஒடம்ப தொட முடிஞ்சுருக்குமா ..." என்றவனின் குற்றச்சாட்டில் முகம் இறுகி போனவன்,



"ரொம்ப அதிகமா பேசுற செழியா ... என்கிட்ட கேட்ட கேள்வியை எல்லாம் அவகிட்ட கேளு ..." என்று வார்த்தையை கடித்து துப்பியவன் அவன் பதிலுக்காக கூட காத்திராமல் அழைப்பை துண்டித்திருந்தான்.


சோபாவில் தலை சாய்த்து கண்ணை மூடி உட்கார்ந்திருந்தவனின் மனம் எல்லாம் ரணமாய் வலித்தது. செழியன் கூறியது அனைத்தும் உண்மை தானே. பல வருடங்களாக சுகம் கண்ட உடலை திடீரென்று கட்டுப்படுத்த முடியாமல் ஒருகாலத்தில் திணறினான் குணா. முன்பு தினமும் என்று இருந்தது, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இன்று, பலநாள் உணவின்றி இருந்தவன் அடுத்த வேளை உணவை உட்கொள்ளவில்லை என்றால் மரணம் என்ற நிலையில் உயிர் வாழ சாப்பிடுவதை போலவே, தன்னால் முடியாத கட்டத்தில் மட்டுமே பெண்களை நாடினான்.



திடீரென்று ஒரு வெறுமை அவன் மனதை சூழ்ந்துக் கொள்ள, சற்று முன்னர் சங்கீதாவின் நிராகரிப்பும் சேர்ந்துக் கொண்டது. தனக்கு யாரும் இல்லை தானும் யாருக்கும் உண்மையாக இல்லை என்ற உணர்வே அவனிடம் மேலோங்கியிருக்க, இவ்வளவு நாட்களாக தனிக்காட்டு ராஜாவாக சுத்திக் கொண்டிருந்தவனுக்கு முதல் முறையாக வாழ்க்கை மீதே வெறுப்பு வந்தது. அவன் முகத்தையே பார்த்திருந்த சங்கீதாவிற்கு, குணா மனதில் எதையோ வைத்துக் கொண்டு தடுமாறுவது புரிய மெல்ல அவனை நெருங்கினாள்.



தான் வந்தது கூட தெரியாமல் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தவனின் மடியில் தானாகவே சென்று உட்கார்ந்துக் கொண்டவள், தான் உட்கார்ந்தும் கண்ணை திறக்காமல் அமைதிகாத்தவனின் செய்கை நெருட செய்ய, மெல்ல அவன் புருவத்தை நீவிவிட்டாள்.



"குணா …” என்று மென்மையாக அழைத்தவளை மெல்ல கண் திறந்து பார்த்தான்குணா. தன்னை கண்டு புன்னகை சிந்திய இதழ்களை கண்டவனுக்கு அதை இழுத்து வைத்து ஆசைதீர சுவைத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்ற பயந்து போனான்.



சற்று முன்னர் ஆசையாக அணைத்ததற்கே தன்னை தள்ளிவிட்டவளின் முகம் கண் முன்னே வந்து போக எதையும் யோசிக்காமல் தன் மடி மீது அமர்ந்திருந்தவளை தூக்கி நிறுத்தியவன், அவள் முகம் பாக்க அஞ்சியவனாக தனது அறைக்குள் சென்று நுழைந்துக் கதவை சாற்றிக் கொண்டான்.



குணாவின் இந்த ஒதுக்கத்தில் விக்கித்துப் போய் அதே இடத்தில் அசையாமல் நின்றுவிட்டாள் சங்கீதா. தானாக நெருங்கியம் தன்னை சற்றும் மதிக்காமல் முகத்தில் அறைந்ததை போல விலக்கி விட்டு சென்றவனின் செய்கை மனதில் கத்தியை வைத்து சொருகியதை போல வலியை தர, முதன்முறை அவன் உதாசீனத்தை நினைத்து துடித்து போனாள்.



அவன் பின்னே சென்று கெஞ்ச மனமில்லாததால் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டுக் கொண்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள்.


அங்கே தனது அறையில் கண்ணை மூடி படுத்திருந்தவனின் மனம் நிலையில்லாமல் துடித்துக் கொண்டிருந்தது. இவ்வளவு வருடங்களில் அவன் பழகிய பெண்களில் மனம் தடுமாறி நின்றது இவளிடம் மட்டுமே. அவன் தடுமாறி நிற்கும் வேளைகளில் எல்லாம் அவள் கைகளை பற்றிக் கொண்டு ஊரை சுற்றிக் கொண்டு வந்தாலே முழுதாக குழப்பத்தில் இருந்து தெளிந்துவிடுவான்.



ஆனால் இப்பொழுது எல்லாம் இது மட்டும் போதாது, அவளின் மொத்தமும் தனக்கே வேண்டும் என்று சண்டித்தனம் பண்ணிய மனதை எவ்வளவு முயன்றும் அடக்கி வைக்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீற தொடங்கியிருந்தான்.


இப்படி சங்கீதாவை சுற்றியே அவன் எண்ணம் முழுதும் இருக்க, சப்பாத்தியை போட்டு முடித்தவள் சிறு தயக்கத்துடன் அவனை அழைக்க சென்றாள். அவன் அறை கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றவள் கண்ணை மூடி படுத்திருந்தவனின் கையை தொட்டு,



"குணா ... சாப்பிட வாங்க பசிக்குது ..." என்று சாப்பிட அழைத்தவளிடம்,



"எனக்கு பசிக்கல நீ போய் சாப்பிடு ..." என்று கண்ணை கூட திறக்காமல் பதிலளித்தவனை ஒருநொடி புருவம் சுருக்கி பார்த்தவள் பதில் பேசாமல் அமைதியாக வெளியே சென்றுவிட்டாள்.

எங்கே கண்ணை திறந்தால் தன் உணர்வுகள் அவளுக்கு தெரிந்து விடுமோ என்ற பயத்தில் அவன் இருக்க, சாப்பிட அழைத்தும் வராமல் வீம்பு பிடித்தவன் மேல் கொண்ட கோபத்தால் அவளும் சாப்பிடவில்லை.

மேலும் ஒருமணி நேரம் சென்ற பின்னர், கூடத்தில் படுக்கையை விரித்து ஹீட்டரை போட்டுவிட்டு, தூங்குவதற்கு வர சொல்லி கூப்பிடுவதற்காக மீண்டும் அவன் அறைக்கு சென்றாள்.



ஒருமணி நேரத்திற்கு முன் இருந்த அதே நிலையில் இருந்தவனை கண்டு கோபம் தலைக்கு ஏற பல்லை கடித்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள்,



"டைம் ஆகிடுச்சு தூங்க வாங்க குணா ..." என்றழைத்தவளைக் கண்டு சிறு கோபம் எட்டு பார்க்க,





“ம்ப்ச் ... கொஞ்ச நேரம் தனியா விடு சங்கீ ... தூக்கம் வந்தா தூங்க வரேன் ..." என்று சிடுசிடுத்தவன் கண்ணை திறந்து பார்க்க, அவள் அங்கே நின்றதற்கான சுவடே இல்லாமல் இருந்தது அந்த இடம்.





அவள் கோபப்பட்டு சென்றது தெரிந்தாலும், அவள் பின்னையே சென்று சமாதானம் படுத்தும் மனநிலையில் அவன் இல்லாததால் பெருமூச்சை விட்டு மீண்டும் கண்ணை மூடி கொண்டான்.





கூடத்திற்கு வந்த சங்கீதாவிற்கு என்ன முயன்றும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தளவிற்கு குணாவால் காயப்பட்டு போனாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவளின் வாழ்க்கையில் மீண்டும் நுழைந்து அவன் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்க முயல்கின்றவன் மேல் கோபம் வர அங்கே இருக்க பிடிக்காமல் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தவள் ரோட்டில் நடக்க தொடங்கினாள்.



பத்து நிமிடங்கள் கூட கடந்திருக்காது, சங்கீதாவின் சோர்ந்த முகம் கண் முன் வந்து இம்சை செய்ய படுக்கையில் இருந்து எழுந்தவன் அவளை தேடி சென்றான்.


கூடத்திலும் சமையல் அறையிலும் அவளை காணும் என்றதும், அங்கிருந்த அறைகளுக்கு சென்று தேடியவனின் கண்களில் வீட்டில் அவள் எங்கும் தென்படாமல் போகவும், இடுப்பில் கையை வைத்து வாயால் காற்றை இழுத்து வெளியே விட்டவன் அவள் மொபைலுக்கு அழைத்தான்.



முழு அழைப்பு சென்று அழைப்பு நிற்கவும், மீண்டும் வாயால் காற்றை இழுத்து வெளியேற்றியவன் நெற்றியை தேய்த்தபடி ஜிபிஎஸ் ட்ராக்கர் மூலமாக அவள் சென்ற இடத்தை கண்டு அதிருப்தியில் தலையை இடமும் வலமுமாக ஆட்டியவன் ஒருநொடி கூட தாமதிக்காமல் வீட்டை பூட்டிக் கொண்டு அவளை தேடி சென்றான்.



ரோட்டில் இறங்கி நடந்தவனுக்கு, ஆள் அரவமற்ற அந்த இரவு வேளை ஒருவித கிலியை கொடுத்தது. மனம் காரணமே இல்லாமல் அடித்துக் கொள்ள, நடையின் வேகத்தை அதிகப்படுத்தியவன் அடுத்த பத்து நிமிடங்களில் சங்கீதா இருந்த இடத்திற்கு சென்றுவிட்டான்.



இரவு வேளையில் மறைந்து மறைந்து கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டிருந்த நிலவின் வெளிச்சத்தில் அங்கங்கே வைரங்களாய் ஜொலித்துக் கொண்டு ஆர்ப்பரித்து ஓடிய நதியின் நடுவில் உள்ள பாறையில் தூரத்தில் தெரிந்த மலையை வெறித்து பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் சங்கீதா.


அவளின் அநாதரவான தோற்றம் மனதை பிசைய, சத்தம் எழுப்பாமல் படிக்கட்டுகளாய் இருந்த சிறு சிறு பாறைகளில் நடந்து சென்று அவள் அருகில் சென்று உட்கார்ந்துக் கொண்டான்.


திரும்பி பார்க்காமலே தன்னருகில் உட்கார்ந்தது குணா என்று தெரிந்தும் சிறிதும் அசையாமல் மலையே வெறித்துக் கொண்டிருந்தவளின் தோளை சுற்றி கை போட்டு அணைத்துக் கொண்டான் குணா.

சில நொடிகள் அமைதி காத்தவன் பின் அவள் தலையில் மென் முத்தம் பதித்து சாரி என்கவும், மெல்ல தலையை திரும்பி பார்த்தாள். அழுததற்கான கண்ணீர் தடம் அவள் கன்னத்தில் கோடாய் காய்ந்து இருக்க, தன்னால் ஏற்பட்ட கண்ணீருக்காக வருத்தத்திற்கு பதில் மகிழ்ந்து போனான் குணா. தன் இதழ் கொண்டு கண்ணீரை துடைப்பவன் போல அதில் அழுத்தமாக முத்தம் பதித்து விலகியவன்,



"ஆச்சிரயமா இருக்கு ... நீ அழுதியா ..." என்ற நக்கலான கேள்வியில் முறைத்து பார்த்தவள்,



"இல்ல சிரிச்சுக்கிட்டு இருந்தேன் ..." என்று பதில் கொடுத்தாள். அதில் வாய்விட்டு சிரித்தவனின் தோளில் பட்பட் என்று தன் கைகளால் அடித்தவள்,



"என்ன அழ வச்சுட்டு உனக்கு சிரிப்பு வருதா ..." என்று சொல்லி சொல்லி மனம் ஆறும் வரை அவனை மொத்தி எடுத்தாள். சிரித்துக் கொண்டே அவள் கைகளை பற்றிக் கொண்டவன்,



"ஏன் சங்கீ, பாரிஸ் இன்சிடெண்ட் அப்போ கூட நீ இவ்வளவு கோபப்படல ... இப்போ ஏன் ..." அவள் பதிலை தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் கேட்டவனின் தோளில் தலைசாய்த்துக் கொண்டவள்,



"தெரியலையே ... ஒருவேள, அப்போ என் தப்பும் இருந்ததால என்னால கோபப்பட முடியலையா என்னவோ ..." என்று நிறுத்தியவள்,



"பட் இப்போ என் தப்பு என்ன இருக்கு குணா ... உனக்கு நா பால்ஸ் ஹோப் கொடுக்கல ... உன் மனசுல என்ன ஓடுதுனு எனக்கு தெரியாதா ... என்னால செய்ய முடியாதத நீ கேட்டு


என் மேல கோபப்படுறது எந்த விதத்துல நியாயம் குணா ..." என்றவளை புருவம் சுருக்கி புரியாமல் பார்த்தவனின் புருவத்தை நீவிவிட்டே,



"எனக்கு செக்ஸ்ல இன்டெரெஸ்ட் இல்ல ... உனக்கு என்ன மனசுல நீ மட்டும் தான் காமதேவதனின் செல்ல பிள்ளைன்னு நினைப்போ ... என் எக்ஸ் ஹஸ்பண்ட் அரவிந்த் இந்த விஷயத்துல உனக்கே க்ளாஸ் எடுப்பான், அப்படிப்பட்டவனாலே என்னோட உணர்ச்சிகள தட்டி எழுப்ப முடில ... அவனும் பண்ணாத சேட்டைகள் இல்ல ... ஒன்னும் வேலைக்கு ஆகல ... மரக்கட்ட போல படுத்துருப்பேன் ...” என்றவள் பெருமூச்சை விட்டு,





“ஒன்னு எனக்கு செக்ஸ் ஹார்மோன் கம்மியா இருக்கனும், இல்ல என்னோட உணர்ச்சிகளை நீ கொன்றுக்கனும் ... ரெண்டுத்துல எதுவோ ஒன்னு ..." என்று தன்னை பற்றி நீண்ட விளக்கம் கொடுக்க, உடல் இறுகி அசையாமல் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான் குணா.


இருவரிடத்திலும் பெரும் மௌனம். நிமிடங்கள் கடந்தது ஒழிய அமைதி களைய படாமல் இருக்க, அந்த கனமான சூழலை கடக்க எண்ணி,



"குணா ..." என்று அழைத்தவாறே அவன் கையை பற்றிய அடுத்த நொடி, அவள் முகத்தை வேகமாக கைகளில் தாங்கி முகம் முழுவதும் முத்தமிட்டவன், கடைசியில் அவள் இதழை ஆவேசத்துடன் கவ்விக் கொண்டான்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
KA - 22:





ஏற்கனவே மனதளவில் குழம்பி போயிருந்த குணா, சங்கீதாவின் வார்த்தைகளால் பெரிதும் அடிபட்டு போனான். என்னால் தானோ அவள் எந்த வித சந்தோஷமும் இல்லாமல் வெறுமையான வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றாள் என்ற எண்ணமே அவன் சிந்தனையை ஆக்கிரமித்திருக்க, அவள் நினைப்பை எப்படியாவது பொய்யாக்கிட வேண்டும் என்ற முனைப்பில் தான் அவள் இதழ்களை ஆவேசத்துடன் பற்றிக் கொண்டான்.


தேனூறும் இதழ்களை பற்றிய அடுத்த நொடி அது தந்த போதையில் தன்னை மறந்தான், சுற்றுப்புறத்தை மறந்தான் சங்கீதாவையும் மறந்தான். மீண்டும் மீண்டும் அந்த போதை வேண்டும் என்ற பேராவல் எழ ஒற்றைக்கையால் அவள் தலையை அசையாமல் பிடித்துக் கொண்டவன் ஆழமான முத்தத்தில் மூழ்கி போனான். அவனுடைய மற்றையகை அவளின் வரி வடிவங்களை வருட கூச்சத்தில் நெளிந்தாள் சங்கீதா.

அவன் முத்தமிடுவான் என்று எதிர்பார்க்காதவள், இந்த திடீர் முத்தத்தில் நிலை தடுமாறி போனாலும் உடனே சமாளித்துக் கொண்டு அவன் பிடியில் இருந்த தன் இதழ்களை பிரிக்க முயல, அவளால் இம்மியளவு கூட அவள் இதழ்களை அசைக்க முடியவில்லை அந்தளவிற்கு ஆழமாக பற்றியிருந்தான்.


அவன் தலைமுடியை இருகைகளாலும் பற்றி தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து இழுத்தவள்,



"குணா குணா வெய்ட் வெய்ட் ... பாருங்க நீங்க கிஸ் பண்ணதும் என் கை கால்ல இருக்க முடிலாம் சிலிர்த்துக்கிட்டு நிக்குது பாருங்க ... என்னால அந்த பீலிங்ஸ்ச பீல் பண்ண முடியுது ..." என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க படபடப்புடன் பேசியவளை மோகம் அப்பிய விழிகளோடு பார்த்தவன் பின் சற்றென்று தலைசாய்த்து,



"ஹாஹா ஹாஹா ... பொய் சொல்ற பொய்க்காரி ... நீ உண்மையா டெம்ப்ட் ஆகிற வரைக்கும் உன்ன விட போறதில்ல ..." என்று சிரித்தபடி அவள் மேல் பாய்ந்து பாறையின் மேல் சரித்தான். அடுத்து என்ன செய்ய போகிறான் என்று உணர்ந்தவள் அவசரமாக விலகி எழ முயல, அவளை விட வேகமாக தன் கால்களால் எழ விடாமல் கிடுக்கு பிடி போட்டு தன்னுடன் அழுத்திக் கொண்டவன்,



"எங்க ஓட பாக்குற ... லிப்ஸ்ல கிஸ் பண்ணதுக்கு தானே முடிலாம் எழுந்து டான்ஸ் ஆடிச்சு ... மத்த இடமெல்லாம் ஒர்க் ஆகுதான்னு பார்க்க வேணாமா ..." என்று கேட்டவன் அவள் மறுத்து கத்த கத்த காதில் வாங்கிக் கொள்ளாமல் முகம் முழுவதும் எச்சில் முத்தம் வைத்தான்.





அவள் படும் அவஸ்தையை கண்ட காமதேவன் காம அம்பை சங்கீதாவை நோக்கி எய்தினான். முகம் முழுவதும் முத்தமிட்ட குணா மீண்டும் இதழை சிறை செய்து உயிரை உறிஞ்சு எடுப்பதை போல இதழமுதை பருக, உட்சபட்ச உணர்ச்சிகளின் பெருக்கில் சங்கீதாவின் கண்கள் சொருகியது.


குணாவின் இடக்கை சங்கீயின் இடையை வன்மையாக பற்றியிருக்க, வலக்கை அவளின் மென்மையை அறிவதில் ஆர்வம் கொண்டது. நீண்ட முத்தத்தால் மூச்சு விட சிரமப்பட்டவளை கண்டு பெரிய மனது பண்ணி இதழை விட்டவன் கழுத்து வளைவில் வன்கடி கடித்து உணர்ச்சிகளை கூட்டினான்.



"குணா ..." என்று உணர்ச்சி பிழம்பாய் துள்ளியவளை கண்டு கன்னம் விரிய சிரித்தவன்,



"ஹேய் இந்த இடத்துல வெறும் குணா மட்டும் சொல்லாம ப்ளீஸ் சேர்த்து சொல்லணும், எங்க ப்ளீஸ் குணானு சொல்லு ..." என்று சரச குரலில் கிண்டலடித்தபடி போட்டிருந்த டீஷர்ட்டை தலை வழியாக கழட்ட, அவன் நக்கலில் தெளிந்திருந்தவள்,


"எதுக்கு டீஷர்ட்டை கழட்டுறீங்க ... வாங்க வீட்டுக்கு போலாம் பசிக்குது குணா ..." என்று அவன் கவனத்தை திசை திருப்ப முயன்றவளை கண்டு மயக்கம் புன்னகை சிந்தியவன்,



"எனக்கும் தான் பயங்கரமா பசிக்குது, அதுவும் ரொம்ப வருஷமா கொலை பசில இருக்கேன் ... இன்னைக்கு ஒருபுடி புடிக்காம விடமாட்டேன் ..." என்றவன்,



"டீஷர்ட்டை எதுக்கு கழட்டுறேன்னு தெரியாதா ... எல்லாம் அப்பா அம்மா விளையாட்டு விளையாடதான் ..." என்று அவள் மேல் படர்ந்து நெற்றி முட்டி உச்சியில் இதழ் பதித்து விலகி அவள் விழிகளை பார்த்துக் கொண்டே,



"பாஸ்ட்ட விட்டுடு ... இந்த நொடி என்ன நம்பினா, என் லிப்ஸ்ல கிஸ் பண்ணி என்ன ஹக் பண்ணிக்கோ ..." நிதானமாய் பேசியவனின் விழிகளை சில நொடிகள் ஆழமாய் பார்த்தவள் அடுத்த நொடி தலையை எக்கி அவன் இதழ்களை தன் இதழ்களால் சிறை செய்து அவனை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.



அடுத்த ஒருமணி நேரமும் நீரோடை சத்தத்துடன் கூட சேர்ந்து முத்த சத்தமும் கொஞ்சல் கெஞ்சலுமாக அந்த இடம் நிரம்பியிருந்தது.



கைகளை மடக்கி தலைக்கு கொடுத்து கரு மேகத்தை பார்த்தபடி படுத்திருந்தான் குணா. அவன் வலக்கையில் தலைவைத்து கண்ணை மூடி படுத்திருந்தாள் சங்கீதா. தலையை மட்டும் திரும்பி, அவள் நெற்றியில் முத்தம் பதித்த குணா, தன்னுடன் மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டவன்,



"சங்கீ ..." என்று அழைத்தவன், அவள் கண்கள் திறந்து பார்த்ததும், தொண்டையை செருமி,



"எப்படி இருந்துச்சு ... இதுவும் டென் செகென்ட்ஸ் போல என்ன நடந்துச்சுனு பீல் பண்ண முடியலையா ..." பதிலை தெரிந்துக் கொண்டே வேண்டுமென்றே கேட்கவும், ஒருநொடி தன்னை குனிந்து பார்த்தவள் பின் அவனை முறைத்து பார்க்க,



"ஹாஹா ஹாஹா ..." என்று சிரித்தவன், "ஐ க்நோவ் ... பட் உன் வாயால சொல்றத கேட்டா அது தனி பீல்ல ..." என்று சிரித்தவனின் தவங்கட்டையை எக்கி சிறு கடி கடித்தவள்,



"ஆனாலும் நீங்க கேடி குணா ... நானே உங்கள முத்தம் கொடுத்து கட்டிபுடிச்சு ஆரம்பிச்சு வைக்கணும் ... ரொம்ப உஷார் தான் ..." என்கவும் மீண்டும் சத்தம் போட்டு சிரித்தவன்,



"பின்ன நாள பின்ன, நீங்க என்ன போர்ஸ் பண்ணி எடுத்துக்கிட்டிங்க ... நா சம்மதிக்கலைன்னு பேச்சு வர கூடாதுல ..." என்று சிரித்தவனை நோக்கி பழிப்பு காட்டியவள்,





"ரொம்ப உஷார் தான் ..." என்றவள் அவன் கையை விலக்கிவிட்டு எழ முயல,



"எங்க போற ..." என்று கையை பற்றி,



"யாராவது வந்துட போறாங்க ... ட்ரெஸ்ஸ போட்டுக்குறேன் ..." என்றவள் சற்று தள்ளியிருந்த உடையை எடுத்து அணிந்துக் கொள்ள, அதுவரை அமைதியாக பார்த்திருந்தவன் அவள் கைகளை பற்றி இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.



"இங்க யாரும் இந்த நேரத்துல வர மாட்டாங்க ... அப்படியே வந்தாலும் இந்த இருட்டுல நம்மள தெரியாது ... கொஞ்சம் நேரம் இப்படியே இருந்துட்டு போகலாம் ..." என்று தன்னுடன் இறுக்கி கொண்டான். அவன் அணைப்பில் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள், அவன் நெஞ்சில் நாடியை குற்றி அவன் முகத்தை பார்த்தவள்,



"எதுக்கு குணா கோப பட்டீங்க ..." திடீரென்று கேட்கவும், தனக்குள் சிரித்துக் கொண்டவன், கலைந்திருந்த சங்கீயின் தலைமுடியை ஒதுக்கி தள்ளியவாறே, நடந்ததை முழுதும் கூறி முடித்தான். அவன் கூறியதை அமைதியாக கேட்டுக் கொண்டவள், அவன் கன்னத்தை இடக்கையால் வருடியபடி,



"கல்யாணம் பண்ணிக்கோங்கோ குணா ... நீங்க தனிமையை உணர தொடங்கிட்டிங்க ... எல்லா டிசீஸ்ஸ விட பயங்கர கொடுமையானது ... உங்களுக்கே உங்களுக்கு மட்டும் சொந்தமா இருக்கிற உங்க வொய்ப், ரெண்டு மூணு குழந்தைங்க லைப் சொர்க்கமா இருக்கும் ..." உண்மையான அக்கரையில் கூறியவளைக் கண்டு சிறு சிரிப்பை உதிர்த்தவன்,



"கல்யாணமா … இப்போ வரைக்கும் கல்யாணத்துல நோ இனட்ரெஸ்ட் ... பொண்டாட்டியா வர்றவளை கூட ஒருவிதத்துல ஏத்துக்கலாம் ... அவகிட்ட என் தேவைகள் நிறைய இருக்கு ..." என்று கண்ணை சிமிட்டியவன்,



"பட் ரெண்டு மூணு குழந்தைகளா ... மை காட் பைத்தியம் பிடிச்சுக்கிட்டு ஓட வேண்டியது தான் ..." என்று சிரித்தான்.

"உனக்கு ஒன்னு தெரியுமா தயாவ அவன் வீட்டுல எப்போ பார்த்தாலும் அவன் பொண்ணு தோளுல தொங்கிட்டே இருப்பா ... தூக்கி வச்சுக்கிட்டே சுத்திகிட்டு இருப்பான் ... நானே அலுத்துப் போய் இறக்கி விடுடானு சண்ட போட்டுருக்கேன் ... அவ்வ் ... எப்போ பாரு கத்திகிட்டே ஒரு இடத்துல நிக்காம ஓடிக்கிட்டே நம்மள டார்ச்சர் பண்ணி ஒருவழி பண்ணிடுவாங்க ... அது மட்டுமில்ல அவங்க பொறுப்பு நம்ம தலைல வந்து விழும், இதவிட முக்கியமான விஷயம் அவங்களுக்காக நம்ம இயல்ப விட்டுட்டு மாறனும், அக்மார்க் நல்லவனா அவங்க கண்ணு முன்ன நடமாடலாம் என்னால முடியாது ..." என்று சலித்துக் கொண்டே சிரித்தான்.


தன் அண்ணனை பற்றியும் அண்ணன் பெண்ணை பற்றியும் பேசும் பொழுது அவன் முகத்தில் வந்து போன மென்மையை கண்டவள், அவன் முகத்தையே சில நொடிகள் விடாமல் பார்த்திருக்க, புருவம் உயர்த்தி,



"ஹேண்ட்ஸம்மா இருக்கேனா ..." என்று சிரிக்க, அவன் புருவத்தை நீவிவிட்டவாறே,



"நீங்க எப்பவும் ஹேண்ட்ஸம் அண்ட் மேன்லி ... இப்போ ஹாட் அண்ட் செக்சி கூட ..." என்று வெட்க புன்னகை சிந்த, அவள் கூற்றில் வாய்விட்டு சிரித்தவன்,



"நானும் பதிலுக்கு உன்ன பத்தி சொல்லனுமா ..." என்று கேலி பேச, மௌனமாய் சிரித்தவள்,



"குணா ... செழி உங்ககிட்ட அப்படி பேசியது அவனோட தாட்ஸ் மட்டுமே ... என்னோடது இல்ல ..." என்று திடீரென்று சீரியசாக பேசியவளை புருவம் சுருக்கி பார்த்தவன்,



"அதான் ஏன் கேட்குறேன் ... ஏன் என்கிட்ட அத பத்தி ஒரு வார்த்தை கூட நீ கேட்கல ... உன் கூட நாலு வருஷமா பழகிட்டு இருக்கேன் என்ன கஷ்டமானாலும் உன்கிட்ட ஷேர் பண்றேன் , ஒரு வார்த்தை உங்கள பத்தி ரூமர்ஸ் வருது உண்மையா பொய்யான்னு ஏன் கேட்கல ..." நீண்ட நாட்களாய் மனதில் உருத்தியதை சற்று ஆதங்கமாவே கேட்டிருந்தான்.



"இதுல கேட்க என்ன இருக்கு ... எனக்கு உங்களை பத்தி நல்லாவே தெரியும் குணா ... மொத மொத உங்ககிட்ட வேலைக்கு சேர்ந்தப்பவே எனக்காக மத்த பொண்ணுங்களை தள்ளி வச்சிருந்தீங்க ... ஒருவேள நா உங்க கூடவே இருந்திருந்தா இந்த கேள்வியே அர்த்தமில்லாததா போயிருக்கும் ... நா இப்படி நினைக்கிறது கூட தப்புதான், பிகாஸ் ஐ அம் நாட் யுவர் வொய்ப், இவ்வளவு ஏன் நா உங்க லவரும் இல்ல நமக்குள்ள எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்ல ... நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கிறது, நட்பை தாண்டிய உறவு நீங்க நல்லவங்களா கெட்டவங்களா எந்த ஆராய்ச்சியும் இல்லாம உங்கள அப்படியே ஏத்துகிட்டு கடைசி வர உங்க கூட பயணப்பட விரும்புற உறவு ... இந்த உறவு உங்கள எதுக்கும் கட்டுப்படுத்தாத ..." என்று நீண்ட விளக்கம் கொடுத்தவள், அவன் முகத்தை ஏறிட்டு பார்த்து,



"நா அப்படி நினைச்சுகிட்டு தான் பழகுறேன் ... உங்களுக்கு வேற ஒப்பீனியன் இருக்கா ..." என்ற அடுத்த நொடி, அவள் இதழ்களை ஆவேசமாக பற்றிக் கொண்டான்.


சில நிமிடங்கள் நீடித்த முத்தத்தை முடித்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக அவள் நெஞ்சில் தலைவைத்து படுத்துக் கொள்ள, தலை முடியை கோதி அவனை அமைதிப்படுத்தினாள் சங்கீதா. சில நிமிடங்கள் கழித்து மௌனத்தை கலைத்த சங்கீ,



"குணா ... உங்ககிட்ட ரொம்பநாளா ஒன்னு கேட்கணும் ... கேட்கவா ..." என்று தயங்கியவளை தலை நிமிர்த்தி பார்த்து கேளு என்றுவிட்டு பாறையில் தலைசாய்த்தவன், அவளையும் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.



"கடைசிவரைக்கும் நீங்க உங்க அம்மாகிட்ட பேசலையா குணா ..." என்றவளின் கேள்வியில், அவளை பிடித்திருந்த கைகளின் அழுத்தத்தை வைத்தே அவன் மனதின் விலியை உணர்ந்தவள், உடனே



"கஷ்டமா இருந்தா சொல்ல வேணாம் ..." என்றாள்.

"கஷ்டம்லாம் இல்ல ..." என்று பெருமூச்சை விட்டவன்,



"பேசல ... நானும் பேச முயற்சி செய்யல அவங்களும் என்ன கண்டுக்கல ... ஒருவேள முன்னமே அவங்களுக்கு தூக்கத்திலையே அவங்க உயிர் போயிடும்னு தெரிஞ்சிருந்தா பேசியிருக்கலாம் ... அதுவும் ஸ்யூரா சொல்ல முடியாது ... பட் அவங்க கோபத்த தப்புனு சொல்ல முடியாது ... அவங்க பட்ட அடி அப்படி ... " என்றான் விரக்தியாக சிரித்துக் கொண்டே.



"எங்கப்பா யாருனு தெரியுமா ..." என்றவனுக்கு தெரியாது என்று தலையசைத்தவளின் நுனி மூக்கில் மென்முத்தம் பதித்தவன்,



"எங்கப்பா தான் கமல் சார் நடிச்ச குணா படத்த தயாரிச்சவர் ..." என்றதும் அப்படியா என்ற ஆச்சிரிய பார்வை பார்த்தாள்.


"ம்ம்ம் ... ஆமா சந்தான பாரதி அங்கிள் எங்க அப்பாவோட ப்ரெண்ட் தான் ... அவர் சொல்லி தான் எங்கப்பா அந்த படத்த தயாரிச்சார். எங்கப்பாவுக்கு என்ன ரொம்ப புடிக்கும், நா பொறந்த நேரம் நீண்டநாளா இழுத்துகிட்டு இருந்த சொத்து அவர் கைக்கு வந்துடுச்சாம் என்ன லக்கினு தூக்கி வச்சுக்கிட்டு சுத்துவார் ... எந்தளவுக்குனா அவர் தயாரிச்ச படத்துக்கு என் பேர வைக்கிற அளவுக்கு என் மேல வெறியா இருந்தார் ... எனக்கும் எங்கப்பாவ ரொம்ப புடிக்கும் ..." என்று கடந்த காலத்தை நினைத்து பார்த்து சிரித்தவனின் முகத்தை ஆறுதலாக வருடிக் கொடுத்தாள்.



"அப்பா மிராசு குடும்பத்தை சேர்ந்தவர், ஒரே பையன் நல்ல வசதியா வாழ்ந்தவர் ... எல்லாரையும் சட்டுனு நம்பிடுவார் ... உதவின்னு போய் நின்னா வாரி வாரி கொடுத்தவர் ... அந்த வெள்ளந்தியான மனசுக்கு வெளில ஊர்க்காரங்க கொடுத்த பேர் ஏமாளி, அரை மெண்டல் இப்படி நிறைய பேர் ... இதெல்லாம் அவர் கண்டுக்கறதில்ல, எப்பவும் போல கணக்கில்லாமல் அள்ளி அள்ளி கொடுத்து நிறைய சொத்தை அழிச்சுருக்கார் ..." என்று நிறுத்தினான்,



"எங்கம்மாவும் இதையெல்லாம் பெருசா கண்டுக்கல்ல ... உதவின்னு தேடி வரவங்களுக்கு புருஷன் அள்ளிக் கொடுக்குறது அவங்களுக்கும் பெருமையா இருந்துச்சு ... எல்லாம் நல்லா தான் போச்சு ... எப்போ எங்கப்பா பார்வை சினிமா பக்கம் போச்சோ அப்பவே குடும்பத்தோட சந்தோசம் மொத்தமும் போச்சு ..." என்றவனின் குரல் கமறி ஒலித்தது.

தன் பெற்றவர்களை நினைத்து வருந்துகிறான் என்று புரியவும், "குணா ..." என்று மென்மையாக அழைத்துக் கொண்டே தலையை தூக்கி பார்த்தவள், லேசாக கலங்கியிருந்த விழிகளைக் கண்டு உள்ளுக்குள் துடித்து போனவள்,


தன் இதழ்க் கொண்டு கலங்கிய விழிகளுக்கு ஆறுதல் கூறினாள். அவள் செய்கையில் குறுநகை பூத்தவன், மீண்டும் அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து நெற்றியில் இதழ் பதித்தான்.



"முதல்ல சினிமா தயாரிக்க அம்மா எதிர்ப்பு தெரிவிச்சாலும், அப்பா மேல இருந்த நம்பிக்கையால அமைதியா போய்ட்டாங்க ... குணா படம் ரிலீஸ் ஆன சமையம் ஊருக்கே கறி விருந்து போட்டார் அப்பா ... ஊரே அப்பாவ பார்த்து அசந்து போய்ட்டாங்க ... எங்க பாத்தாலும் அவர் பத்திய பேச்சு தான் ... அதுதான் எங்கப்பா கடைசியா சந்தோசமா இருந்தது. படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடல, பயங்கர லாஸ் ... அந்த லாஸ் எல்லாம் அப்பாக்கு தூசு போல தான் ... அதுல இருந்து சீக்கிரம் மீண்டு வந்துட்டார், ஆனா எந்த ஊர் தூக்கி வச்சு கொண்டாடுச்சோ, எந்த ஊருக்கு அள்ளி அள்ளி கொடுத்தாரோ அந்த ஊரும் சொந்தமும், அவருக்கு கட்டிய பட்டம் பைத்தியக்காரன், குடும்ப சொத்த காக்க தெரியாத கையாலாகாத பொட்ட, பணத்தோட அருமை தெரியாத முட்டாள். இதெல்லாம் கேட்டு எங்கம்மா துடிச்சு போய்ட்டாங்க ... அதுக்கு அப்புறம் அவங்க சும்மா இருப்பாங்களா ... எந்நேரமும் வீட்டுல சண்ட தான் ... அப்பாவுக்கு இந்த படத்துல விட்டத அடுத்த படத்துல பிடிச்சே ஆகணும்னு பிடிவாதம், அவருக்கு அது கௌரவ பிரச்சனையா போய்டுச்சு ..."என்று பெருமூச்சை விட்டான்.


"அதுக்கு அப்புறம் அப்பாவோட பிஹேவியர் ரொம்ப மாறிடுச்சு ... கத கேட்குறேன்னு சொல்லி சென்னைல தங்க ஆரம்பிச்சார் ... கொஞ்ச கொஞ்சமா ஊருக்கு வர்றதையும் குறைச்சுக்க ஆரம்பிச்சார் ... நடுவுல குடி பழக்கத்தையும் கத்துக்கிட்டார் போல, வீட்டுக்கு வந்தாலே அம்மாவோட அழுகையும் சண்டையும் தொடர, சுத்தமா வர்றத நிறுத்துகிட்டார் ... அம்மா காதுக்கு ஏதோ துணை நடிகை கூட ஒண்ணா வாழ்ந்துகிட்டு இருக்கார்னு செய்தி வரவும், துடிச்சு போனவங்க மாமாவ கூட்டிட்டு அப்பாவ பாக்க போனாங்க ..."



"ஆளே உருக்கொலைஞ்சு இருந்தவர் அம்மாவ நேர்ல எதிர்பார்க்கள போல, அவங்க கால கட்டிக்கிட்டு ஒரே அழுகையாம், அழுதுக்கிட்டே, அவருக்கு தெரியாம போத மாத்திரை கலந்த ட்ரிங்க்ஸ் கொடுத்து அந்த நடிகை கூட தப்பா இருக்க வச்சுருக்காங்க போல, அத போட்டோ எடுத்து வச்சு பணத்துக்காக அப்பாவ மிரட்டிக்கிட்டு இருக்காங்கனு சொல்லி அழுத்துருக்கார் ... இதெயெல்லாம் கேட்ட எங்கம்மா ஒருவார்த்தை கூட பேசாம கிளம்பி வந்துட்டாங்க ... அடுத்த ரெண்டு நாள்ல அப்பா தூக்குல தொங்கிட்டார்னு நியூஸ் வருது ..." என்று சொல்லவும், அவன் கையிடுக்கில் தலைவைத்து படுத்திருந்தவள் மெல்ல நகர்ந்து கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டாள்.

தன் கன்னத்தை அவள் உச்சந்தலையில் மெல்ல தேய்த்தவன்,



"என்னால அப்பாவோட இழப்ப ஏத்துக்கவே முடில ... எங்கம்மா உள்ளுக்குள்ள எப்படியோ தெரியாது பட் வெளில சாதாரணமா நடமாடினாங்க ... அவங்ககிட்ட இருந்த மென்மை எல்லாம் சுத்தமா மறைஞ்சு போய்டுச்சு ... ஊர்காரங்கள கேட்கவே வேணாம், கண்டபடி பேசி வெளிப்படையா கேலி பேசினாங்க ... நா எங்க போனாலும் என்கிட்ட எங்கப்பா சினிமால தோத்து போனதை பேசி பேசியே நோகடிச்சாங்க ... சின்ன வயசுல எவ்வளவு அழுதுருக்கேன் தெரியுமா, அப்போல்லாம் என்ன தாங்கி ஆறுதல் தந்து என்ன தெளிய வச்சது தயா தான் ..." என்று சொல்லும் போதே அவன் குரல் கலங்கி ஒலித்தது.



"எங்கம்மாகிட்ட இருந்து வர வேண்டிய எல்லாத்தையும் எனக்கு தயா தந்தான் ... அவனுக்கு நானா உயிர் ..." என்று புன்னகைத்தவன்,



"அந்த வயசுல என்னோட எய்ம் என்ன தெரியுமா,சினிமாவால அசிங்கப்பட்டுப் போன எங்கப்பாவுடைய பெயர அதே சினிமால சாதிச்சு ஊர் மக்கள் முன்னாடி பெருமையா பேச வைக்கணும்னு ... அதுக்கு அப்புறம் என்ன நடந்துருக்கும்னு உனக்கே புரிஞ்சுருக்கும் ... என்னோட பிடிவாதத்துக்கு முன்ன எங்கம்மாவோட வீம்பு காணாம போச்சு ... அதோட அவுட்கம் தான் அவங்க சாகுற வரைக்கும் என் கூட பேசாம தண்டனை கொடுத்துட்டு போய்ட்டாங்க ... கஷ்டமா இருந்தாலும் எங்கப்பாவ பெருமைப்படுத்திட்டேன்னு நிறைவு இருக்கு ..." என்றவன்,





“நா சாதாரண டான்ஸரா டிவில வர்றத பாத்தே பிரமிச்ச ஊர், நடிகனா ஆன பின்ன கொண்டாடம இருக்குமா ... ஊர் பக்கம் போனாலே அவன் அவன் ஆட்டோகிராப் கேட்டு என் முன்ன நிக்கும் போது அவ்வளவு கர்வமா இருந்துச்சு ..." என்றவன் வானத்தை பார்த்து,



"ப்ப்பா, எல்லாத்தையும் பார்த்துகிட்டு தானே இருக்க ... ஹாப்பியாப்பா ..." என்று சிரித்தவனை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தவள்,



"குணா ஒன்னு சொல்லவா ... நீங்க உங்க பசங்களுக்கு நல்ல அப்பாவ இருப்பீங்க ... கல்யாணம் பண்ணிக்கோங்க குணா ..." என்றவளின் வார்த்தைகளில் அத்தனை மென்மை . அவளையே பார்த்திருந்தவன் சிறுசிரிப்புடன்,



"நீ பண்ணிக்கிறியா சொல்லு ..." என்று கேலி போல கேட்கவும்,



"நானா ... நோ சான்ஸ் ... எனக்கு எந்த கமிட்டிமெண்டும் இல்லாம இப்படியே இருக்கிறதுதான் புடிச்சிருக்கு ..." என்றவளின் பதிலில்,



"அப்போஎன்ன மட்டும் கமிட்மெண்ட்ல சிக்க சொல்ற ... எவ்வளவு கெட்ட எண்ணம் ... பொறாமை பிடிச்சவ ..." என்று சிரித்தான். அதன் பின் நீண்ட நேரமாக மனம்விட்டு பேசிக் கொண்டிருந்தனர். நேரம் செல்ல செல்ல குளிரில் உடல் நடுங்கவும், எழுந்து உட்கார்ந்த குணா,



"குளிர் எடுக்க ஆரம்பிச்சுருச்சு ... பசிக்குது வேற வீட்டுக்கு போலாமா ..." என்றவாறே தன் உடைகளை கைகளில் எடுக்க, அவசரமாக அதை பிடுங்கியவள்,



"ட்ரெஸ்ஸலாம் கொடுக்க முடியாது ... நல்லா குளிரட்டும் ... பாரீஸ்ல டென் செகென்ட்ஸ் சம்பவத்துக்கும், அப்புறம் உங்க அம்மாகிட்ட பேசாம இருந்து தண்டிச்சதுக்கு தண்டனை ..." என்று சிரித்தவள், மின்னல் வேகத்தில் அவன் உடைகளை கையில் எடுத்துக் கொண்டு குட்டி குட்டி பாறைகளில் தாவி குதித்து கரையை நோக்கி ஓடியவளைக் கண்டு சில நொடிகள் அதிர்ந்து போய் நின்றுவிட்டான்.


"சங்கீ கொரங்கே ட்ரெஸ்ஸ கொடுடி ... யாராவது பாத்தா மானம் போயிடும் ... ப்ளீஸ்டி செல்லமே ..." என்று உரிமையாய் அழைத்து கெஞ்சியவனை மீறி செல்ல அவள் மனம் இடம் கொடுக்காததால், மீண்டும் அவன் நின்றிருந்த இடம் நோக்கி சென்றாள்.



அவனை நெருங்கியவள் உடைகளை பாறையின் மேல் வைப்பதற்காக கையை நீட்ட, நீட்டிய கையை பற்றி இழுக்க முயன்றவனின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல், கலகலத்து சிரித்து எட்டி நின்றுக் கொண்டவள்,



"பிராடு குணா ... இதுக்கு பனிஷ்மெண்ட், இதுமட்டும் போட்டுக்கிட்டு தான் வீடு வரைக்கும் வரணும் ..." என்று உள்ளாடையை அவனை நோக்கி வீசிவிட்டு கரையை நோக்கி துள்ளிக் குதித்து சென்றாள்.



"ஏய் ஏய் ... எல்லாத்தையும் கொடுத்துட்டு போ ... தெரியாம பண்ணிட்டேன் ... மன்னிச்சு ..." என்று கெஞ்சியவனின் கெஞ்சலை கண்டுக் கொள்ளாமல் கரையேறியவள், பதில் சொல்வதற்காக அவனை நோக்கி திரும்பியவளின் பார்வையில், சற்று தொலைவில் ஆர்ப்பரித்து ஆங்காரமாய் பாய்ந்து வந்த வெள்ளத்தை கண்டு பதறிப் போனவளாக,



"அய்யோ குணா, சீக்கிரம் கரைக்கு வாங்க சீக்கிரம் ..." என்று பதட்டத்துடன் கத்தவும், ஏன் என்று புரியாமல் அவள் பார்வை சென்ற திசையை திரும்பி பார்க்க, அதிர்ச்சியில் மூளை மரத்து போய் அசைவற்று நின்றுவிட்டான்.



"குணா குணா ... அப்படியே நிக்காதீங்க சீக்கிரம் வாங்க ..." என்ற கத்தலில் தெளிந்தவன், அம்மணமாய் ஓட பிடிக்காமல் உள்ளாடையை போட்டுக் கொண்டே பாறையில் தாவி தாவி குதித்து ஓட முயன்றவனை வாரி சுருட்டி தன்னுடன் இழுத்துக் கொண்டு சென்றது காட்டாற்று வெள்ளம்
 
Status
Not open for further replies.
Top