Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis don't take it wrongly i jzt tell my view.neenga en ipolam regular ud thara maatringa.. ok i know ur health issues family work childrens everything.... but we too had a same thing....only relaxation for us is jzt reading books like urs....thats only we all are waiting for that...... but u disappointed me more... i started reading ur book PAVITHRA...apovum neraya problems irunthuthu stop pannuveenga then u give compensation uds for us because uds not given on time.... neenga diect publish books eluthurreenga athayam naanga vangi padika dha porom..... but intha sitela freeya padikromnu ud poda maatringla...intha bookum nalaiku publish aana again vangi padika porathu naanga dha...please respect our feelings... health issue solreenga but dirct books publish aagi iruku solreenga ....3 months naan laptop eduka maatan solreenga.... then how could u publish that book inbetween that period......we guys don't get any profit for ur victory...but we enjoy and treat that as ours... so please respect our feelings and try to give proper uds (ur ud ize too becomes small)....don't take it as a negative comment last 3 years unga kuda travel panra oru sister oda review aaa eduthukonga..... i hope u answer for this comment
ஹாய் மா
வணக்கம்.. நல்லா இருக்கீங்களா.. முதலில் மூன்று வருடமாக என் கதைகளை பின் தொடர்வதற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
இப்போது நீங்கள் கேட்டு இருக்கும் கேள்விகளுக்கான என் விளக்கத்திற்கு வருகிறேன்.. கொஞ்சம் நீண்ட விளக்கம் தான் கொடுத்து அதை புரிய வைக்க முடியும்.. பொறுமையாக படிங்க..
முதலில் ஒன்றை புரிய வைக்க நினைக்கிறேன்.. நீங்கள் சொல்ல வந்ததை நான் நெகடிவ் கமெண்ட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.. அதே நேரம் உங்கள் தவறான புரிதலுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது என் கடமை..
நான் இப்போதெல்லாம் சரியாக தொடர்ந்து யூடி தருவதில்லை என்பது சரி தான்.. அதில் எந்த மாற்று கருத்தும் எனக்கும் இல்லை.. அதுவும் கூட இந்த கதை துவங்கியதில் இருந்து தானே தவிர.. அதையே நான் வழக்கமாக கொண்டு இருக்கிறேன் என நீங்கள் சொல்வதை ஏற்று கொள்ள முடியவில்லை.. அதற்கான காரணம் நீங்களே சொல்லி இருந்தது போல் உடல்நிலை சார்ந்த சில பிரெச்சனைகள் மற்றும் சில சொந்த வேலைகளின் காரணமாக அப்படி ஒரு தவிர்க்க முடியா சூழ்நிலை அமைந்து விடுகிறது..
நான் தான் என் வீட்டு வேலைகளை பார்க்க வேண்டும்.. என் கணவர் குழந்தைகளை கவனிக்க வேண்டும்.. வீட்டில் இரு செல்ல பிராணிகள் உள்ளது, அவற்றை பார்க்க வேண்டும்.. இதை தவிர உடல்நிலையில் சில பிரெச்சனைகள்.. இவற்றை எல்லாம் கடந்து எனக்கென கிடைக்கும் சிறு ஒய்வு நேரத்தையும் கூட இதற்காகவே செலவழித்து தான் எழுத வேண்டி வருகிறது.. இதை எல்லாம் தவிர வீட்டில் இருப்பவர்களுக்கு எத்தனை வேலைகள் அணி வகுக்கும் என ஒருவேளை நீங்களும் குடும்ப தலைவியாக இருந்தால் உங்களுக்கும் தெரிந்திருக்குமென நினைக்கிறேன்..
அதே போல் இப்போதிருக்கும் மாதங்களில் எத்தனை வீசேஷங்கள் வரும்.. எத்தனை வெளி இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும்.. இதையெல்லாம் தவிர.. ஊருக்கு செல்லும் போது பயண நேரங்களிலும் டைப் செய்து கொண்டும் உறவினர்களோடு பேசி மகிழுந்து கொண்டும் இருக்கும் நேரங்களிலும் கூட ஒரு சின்ன இடைவெளி கேட்டு வாங்கி கொண்டு பிக் எடிட் செய்து அங்கிருந்தே கூட நான் எத்தனை முறை எபி போட்டு இருக்கிறேன்.. இதையெல்லாம் நான் சொல்லி கொண்டு இருந்தால் தான் உங்களுக்கு தெரியும்..
நீங்களே சொல்வது போல் கதை படிப்பது பல வேலைகளில் இருந்து உங்களை நீங்கள் ஆசுவாசபடுத்திக் கொள்ள ஒரு பொழுது போக்கு.. ஆனால் எனக்கு பல வேலைகளில் இடையில் இதுவும் ஒரு வேலை.. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரிந்து இருக்குமென நினைக்கிறேன்.. அதே போல் ஒரு யூடியை படிக்க உங்களுக்கு அதிக பட்சமாக பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தான் தேவைப்படும்.. ஆனால் அதையே நான் எழுதுவதற்கு ஐந்திலிருந்து ஆறு மணிநேரம் எனக்கு தேவை.. இதிலும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரியுமென நினைக்கிறேன்..
அடுத்து 3 மாதம் லேப் தொட மாட்டேன் என எப்போது நான் எங்கு சொன்னேன் என எனக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா.. எனக்கு நினைவு உள்ள வரையில் நான் அப்படி சொன்னதாக ஞாபகமே இல்லை.. சென்ற மாதத்தில் ஒரு முறை லேப் ரிப்பேர் என்று நான் சொல்லி இருந்தேன்.. நான் எழுத வந்த இந்த ஐந்தரை ஆண்டுகளில் இப்போது தான் முதல் முறை லேப் ரிப்பேர் பற்றியே பேசினேன்.. அதுக் கூட அந்த நான்கு நாட்களும் மீண்டும் லேப் என் கை வந்து சேரும் வரை என் மனநிலை எப்படி இருந்தது என எனக்கு மட்டுமே தெரியும்.. எழுதி வைத்த கதை எழுதிக் கொண்டிருக்கும் பல கதைகள் அதில் இருக்க.. நேற்று இரவு நன்றாக வேலை செய்த லேப் அடுத்த நாள் காலை வழக்கம் போல் நீங்கள் வேலை செய்ய ஆன் செய்யும் போது வேற்று திரையாக இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என யோசித்து பாருங்க.. வைரஸ் புகுந்ததா.. வேறு ஏதேனும் பிரெச்சனையா என புரியாமல் திகைத்து ஊரெல்லாம் திரிந்து அதை மீண்டும் கொண்டு வர நான் ஏன் அவ்வளவு கஷ்டப்பட வேண்டும்..
அடுத்த நாள் அப்படி ஒரு சூழ்நிலையில் இருந்த என்னால் எப்படி உங்களுக்கு கதையை இங்கு போட முடியுமென நீங்களே யோசித்து பாருங்கள்.. அன்றைய நாள் எனக்காக விடுமுறை போடு விட்டு என் கணவர் எவ்வளவு சிரமப்பட்டார் என எனக்கு மட்டுமே தெரியும்.. இந்த லேப் இப்போது வரை பிரெச்சனையாக தான் இருக்கிறது.. இதை அதனுடைய ஒரிஜனல் பார்ட் வரவழைத்து சரி செய்ய குறைந்தது இருபது நாட்கள் ஆகுமென்றார்கள்.. சரி செய்யுங்கள் என சொல்ல எனக்கு ஒரு நிமிடம் ஆகாது.. ஆனால் அத்தனை நாட்கள் என்னால் கதை பதிவிடாமல் இருக்க முடியாது என்று சொல்லி அவசரத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சு கொடுங்க போதும் என கேட்டு எக்ஸ்டர்னல் கீ போர்ட் வாங்கி வைத்து கொண்டு அது இப்படியும் அப்படியும் ஆடும் நிலையில் லேப்பில் டைப் செய்ய இந்த இரண்டு மாதங்களா நான் படும் கஷ்டம் என்னிடம் நெருக்கமாக பேசும் வாசகர்களுக்கு மட்டுமே தெரியும்.. இதையே காரணமாக சொல்லி பெரிய இடைவெளி என்னால் அப்போதும் எடுத்திருக்க முடியும்.. ஆனால் அதை செய்ய எனக்கு மனமே வரவில்லை..
இன்னும் சொல்ல போனால் கிட்டத்தட்ட இந்த நான்கு வருடங்களாக ஒய்வோ பொழுது போக்கோ இல்லாமல் தான் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.. இதற்காக ஆரம்பத்தில் கவலைப்பட்ட வீட்டினர் கூட இப்போது நீ என்ன சொன்னாலும் கேட்க போவதுமில்லை.. அந்த வேலையை முடிக்கும் வரை நிம்மதியாக இருக்க போவதுமில்லை.. சரி முடிச்சுட்டே ரிலாக்ஸ் ஆகு என்று விட்டனர்.. எத்தனை நாள் இரவில் ஒருமணி வரை கூட உட்கார்ந்து வேலை செய்கிறேன் என எனக்கு மட்டுமே தெரியும்..அப்படியெல்லாம் செய்ய வேண்டிய எந்த நெருக்கடியும் எனக்கில்லை.. ஆனால் என்னை நம்பி செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் படிக்க வருபவர்களை ஏமாற்ற கூடாது என்பதே என் எண்ணம்..
எத்தனயோ முறை மூன்று யூடி கொடுங்க.. டெய்லி யூடி கொடுங்க என வாசகர்கள் கேட்டும் போலியாக கூட சரி என சொல்லி அவர்களை ஏமாற்ற எனக்கு மனமில்லாததால் தான் என் வேலைப்பளுவை விளக்கி என்னால் வாரத்திற்கு இரண்டு யூடி மட்டுமே கொடுக்க முடியும் என சொல்லி அதை என்னால் முடிந்த வரை தவறாமல் கொடுக்க வேண்டும் என நினைத்து அதற்காக நான் எடுக்கும் முயற்சிகள் என் வீட்டினருக்கும் என்னோடு நெருக்கமாக பழகும் நட்புகளுக்குமே தெரியும்..
அடுத்ததாக நீங்கள் சொல்லி இருப்பது தொடர்ந்து நேரடி புத்தகமாக என் கதைகள் வெளி வருகிறது என.. கடைசியாக என் கதை நேரடி புத்தகமாக வந்தது ஜனவரி 2022 ல் தான் (மெல்ல உனதாகிறேன்).. அதற்கிடையில் நான் எழுதியது எல்லாம் இங்கே ஆன் கோயிங்காக வந்தது தான்.. போட்டி கதைகளை தவிர வேறு எதுவும் இதற்கிடையில் நேரடி புத்தகமாக வரவில்லை.. அதே போல் நேரடி புத்தகம் என்பது நீங்கள் நினைப்பது போல் இன்று எழுதி நாளை வருவது இல்லை..
குறைந்தது நான் எழுதும் அளவுக்கான நாவலை நான் என் பல வேலைகளுக்கு இடையில் எழுதி முடிக்க எனக்கு ஒன்றில் இருந்து ஒன்றைரை மாதங்கள் தேவை இது அதிகபட்சமாக இரண்டு மாதத்திற்கு மேலும் செல்ல வாய்ப்பு உண்டு.. அதே போல் நான் எழுதி முடித்துக் கொடுத்தாலும் பதிப்பகத்தில் அதை புத்தகமாக கொண்டு வர அவர்களுக்கு இரண்டு மாதங்களாவது தேவைப்படும்.. ஆக மொத்தம் ஒரு கதை புத்தகமாக வெளிவர மூன்று மாதங்களுக்கு முன் அதை எழுதி முடித்து இருக்க வேண்டும்..
நான் உடல்நிலை சரியில்லை என சொல்லும் போது அதை எழுதி அடுத்த நாளே நான் வெளியிடுவதாக நீங்கள் நினைத்திருப்பது மிக பெரிய தவறு.. நான் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அந்த புத்தகம் வெளி வந்து இருக்கும்.. அதை என் வாசகர்களுக்கு தெரிவிக்கவே நான் போஸ்ட் போடுவேன்.. இதிலும் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்..
அடுத்து இங்கு வாசகர்கள் ப்ரீயாக படிப்பதால் சரியாக கதையை கொடுப்பதில்லை என நீங்கள் சொல்லி இருப்பது மாபெரும் குற்றசாட்டு.. நான் என்றுமே அப்படி நினைத்ததில்லை.. பணத்தை பற்றியும் நான் எங்கும் இதுவரை பேசியதில்லை.. அப்படி பணத்தை மட்டுமே நினைத்திருந்தால் வருடத்திற்கு மூன்று ஆன்கோயிங் ஒரு நேரடி புத்தகம் என்று கொடுத்திருக்கவே மாட்டேன்.. அதை அப்படியே மாற்றி மூன்று நேரடி புத்தகம் ஒரு ஆன் கோயிங் என கொடுத்திருப்பேன்.. இன்னும் சொல்ல போனால் இங்கிருக்கும் நம் வாசகர்களில் சிலரே காத்திருந்து ஆன் கோயிங் படிக்க சிரமமாக இருக்கிறது.. முதலில் புத்தகமாக போட்டு விட்டு பின் அதையே இங்கு பதிவிடுங்களேன் என என்னிடம் தனியே பேசும் போது சொல்லி இருக்கிறார்கள்.. ஆனால் அவர்களுக்கு நான் என்ன பதில் சொன்னேன் என அவர்களுக்கு தெரியும்..
என்னை பொறுத்தவரை நான் என் வேலைகளில் சரியாக தான் இருக்கிறேன் என நினைக்கிறேன்.. இப்போது கூட உங்களுக்கு இவ்வளவு விளக்கம் நான் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.. ஆனாலும் என்னை நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றே என் தரப்பை புரிய வைக்க முயல்கிறேன்..
ஆன்கோயிங் வாசகர்களை போலவே நேரடி புத்தகத்திற்கான வாசகர்களும் அமேசானில் படிப்பதற்கான வாசகர்களும் இருக்கிறார்கள்.. இவர்கள் அனைவரையும் நான் மனதில் நிறுத்தி யோசிக்க வேண்டும்.. என்னால் முடிந்தவரை அனைவரையும் திருப்திபடுத்த தான் நான் முயல்கிறேன்.. எனக்கு இதில் யாரும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை..அனைவரின் எதிர்பார்ப்பையும் என்னால் முடிந்த வரை முயற்சியும் செய்கிறேன்..
நீங்கள் சொல்வது போல் இப்போது ஆன்கோயிங் போட்டு கொண்டிருக்கும் கதையை தொடர்ந்து பதிவிட முடியாமல் தொடர்ந்து ஏதேனும் தடை வருவதை நானுமே மறுக்கவில்லை.. இது சில நேரங்களில் ஏதாவது ஒரு கதைக்கு அப்படி அமைந்து விடுகிறது.. அப்படி தான் இந்த கதைக்கும் ஏற்படுகிறது.. அது சில நேரங்களில் எவ்வளவு முயன்றாலும் சில தடங்கல்கள் அந்த கதை முடியும் வரை தொடரவும் செய்யும்..
நீங்களே சொல்லி இருந்தது போல் "பவித்ரா..!!" கதைக்கு இது நடந்தது.. அது அந்த கதைக்கு மட்டுமில்லாமல் அதே நேரத்தில் பதிவிட்டுக் கொண்டிருந்த "உயிரே நீ என்ன செய்கிறாய்..!!" கதைக்கும் சேர்த்தே நடந்தது.. அந்த இரு கதைகளும் ஒரே நேரத்தில் பதிவிட்டதாலும் அந்த நேரத்தில் மனதளவிலும் உடலளவிலும் எனக்கிருந்த சில பிரச்சனைகளாலும் அப்படி தொடர்ந்தது.. அதன் பின் இத்தனை தடைகள் இந்த மூன்று வருடங்களில் வேறு எந்த கதைக்கும் வரவில்லை.. இப்போதே இந்த கதைக்கு வந்திருக்கிறது..
நீங்கள் சொல்வது போல் நான் செய்ய நினைத்திருந்தால் இந்த இடைப்பட்ட மூன்று வருடங்களில் இரவு எவ்வளவு நேரமானாலும் கதையை பதிவிட்டுவிட்டு தான் உறங்க வேண்டுமென நான் உட்கார்ந்து கை வலிக்க கழுத்து வலிக்க டைப் செய்திருக்க மாட்டேன்.. அதுவே இந்த நேரத்தில் எனக்கான வேலைப்பளுவும் உடல் நிலையும் ஒத்துழைக்காததால் என்னால் இந்த முறை அப்படி செய்ய முடியவில்லை..
மூன்று வருடம் கழித்து நடக்கும் ஒன்றை ஏற்றுக் கொள்ள முடியாமல் இங்கே இன்று சுட்டி காட்டும் நீங்கள்.. இந்த இடைப்பட்ட காலங்களில் நான் சரியாக கதை போட்ட போது இவ்வளவு நேரம் விழித்திருந்து கதை போட்டதற்கு நன்றி என ஒரு வார்த்தை சொல்லி சென்று இருக்கலாமோ என மனதில் ஒரு ஓரமாக தோன்றுகிறது..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
Last edited: