எனக்கொரு காதலி இருக்கின்றாள் by கவிக்கா
இந்த கதையை பற்றி எப்படி சொல்ல நிஜமாவே எனக்கு தெரியலை...
தலைப்பே சொல்லும் காதல் கதை என்று... ஒருவனின் காதலிக்காக பலபேர் போராடிய கதை... தலைப்பில் சொல்லப்பட்ட காதலி யார் என கண்டுபிடிக்க முதல் ப்ப்ப்பா ரொம்ப கஷ்டம்...
முதலில் வாழ்த்துகள் ரைட்டர் மேம்
கதையை முடித்ததற்கு மட்டும் அல்ல இப்படி ஒரு கான்செப்ட்(வழமையான கரு தான் ஆனால் கொடுத்த விதம், ரொம்ப அழ வச்சாச்சு) எடுத்து எத்தனை எதிர்ப்பு, எதிர்பார்ப்பு எல்லாம் கடந்து நீங்க நினைத்ததை நினைத்தது போல கொடுத்துட்டீங்க அதுக்கும் சேர்த்து சொல்றேன் வாழ்த்துகள்
#கதையை பற்றிய எனது #எண்ணங்கள்
சரவணகுமார்/சரோ/சைக்கோ சரோ இன்னும் பிற அடைமொழிகள் எல்லாம் உண்டு... அடைமொழிகள் அல்லாது இவனை எந்த ஒரு இடத்திலும் யாரும் அழைத்தது இல்லை அப்படி ஒரு பெருமைக்கு சொந்தக்காரர்... பலரின் இல்லை அனைவரின் bp யை ஒவ்வொருமுறை வரும் போது உச்சத்து கொண்டுபோகும் வல்லமை படைத்தவர்... அமைதியான ஆட்களையும் பொங்க வைத்த புண்ணியவான்.... திட்டுவதில் இத்தனை ரகம் உண்டு என காட்டி கொடுத்த கொடைவள்ளல்... #பலபல வார்த்தைகளையும், திட்டுவதன் முறையையும் நான் கற்றுக்கொள்ளவும், என்னையும் கொஞ்சம் கோபமாக பேச வைத்த பெருமையும் இவருக்கும் இவரை படைத்த இவரின் மம்மி ரைட்டர் மேடம் அவர்களுக்கும் மட்டுமே உண்டு...
#படிக்கும் வயதில் வரும் காதல் எல்லாருக்கும் நிலைப்பதில்லை... அதுவும் அது எல்லை தாண்டும் ஆகின் அது தோல்வி அடையும் பட்சத்தில் எதிர்கால வாழ்வு சிலருக்கு சிறக்கும், சிலருக்கு வெறுக்கும்... இவர்களை நம்பி எதிர்காலத்தில் வரும் ஆட்கள் அவர்கள் நிலை எல்லாம் வெகு அழகா வந்து இருக்கு இந்த முரடனின் செயல்களில்... இவனுக்கு உண்டான வலிக்கும், இவன் கனவு தகர்ந்ததுக்கும் இவன் மட்டுமே காரணம், பின்னும் இவன் வாழ்வில் வரும் தேவதையை புரிந்து கொள்ளாது(???) இவனின் வலி பெருசு என(!!) வெளியிலும் சொல்லாது துணையின் வாழ்வை, நிம்மதியை இவனின் செயலால் குழைக்கும் இவனுக்கு துணை சேர்க்க வராங்க இவனின் காதலி மகனுடன்... யார் அந்த குழந்தை... ஏன் அவள் இங்க வரணும்... இவனின் பிடிப்பு இல்லா சந்தோசம் இல்லா வாழ்வு என்ன ஆகும் எதுவும் நாம் கற்பனைக்கு கொஞ்சம் அதிகம் தான் இங்கு நடக்குது... அப்படி ஒரு கேரக்டர் இவன்... மனைவியின் நிலை என்ன ? நிம்மதியான வாழ்வின் நிம்மதி ஹோஹையாவா?
மஹா மக்கு பாப்பா தான் பல இடங்களில்... தோற்றத்தில் ஈர்ப்பு கொண்டு எல்லாம் தெரிந்து கட்டிக்கொண்டு அதனாலேயே அமைதியாகி போன ஊமை... இவளுக்கு கிடைத்தது எல்லாம் ஓரகத்திகளின் நக்கல், கிண்டல், வீட்டுவேலை எல்லாம் செய்யும் மெஷின், இவளின் மகள் சாரு(எனக்கு பிடிக்காத பேரு), பாசம் எனும் முகமூடியோடு மாமியார், உண்மையில் ஆதரிக்கும் மாமனார், முதுகெலும்பு இல்லாத, நியாயத்துக்கு நிற்க தெரியாத மச்சினர்கள்... இதையும் தாண்டி காதில் கேட்ட கணவனின் காதலி, கண் முன் வந்து இன்னும் கொஞ்சம் குத்தி கிழித்து எங்கோ தொங்கி கொண்டு இருந்த உயிர்ப்பை அறுக்க, அதை மொத்தமாக முடக்கி போடும் மாமியார் n பிசாசுகளின் பேச்சுகள், சுகமான சுமையாக வேண்டிய குழந்தை சுமக்க இயலா பாரமாக, உடலே பாராமாய் போகும் வாழ்வில் அவளை இழுத்து பிடிக்கும் மகன்(!??) சித், எதையோ மறக்க, எதையோ பிடிக்க வெளிநாடு ஓடிய கணவனின் வரவை எதிர்நோக்கி இருக்கும் நால்வரின் எதிர்பார்ப்பை அவன் பூர்த்தி செய்தானா? உயிர்ப்பை தொலைத்த மனைவியின் மனதை மரக்க செய்தானா? இல்லை மூன்றாம் முறையாக கனவு கலையும் பொழுது அதன் காரணம் அவள் என்று மரிக்க செய்தானா? இல்லை மறக்கடித்து துளிர்க்க செய்தானா? எல்லாம் ரொம்ப ரொம்ப அழுத்தமா பதிவு செய்து இருக்காங்க...
கொஞ்சம் பெரிய கதை.... மக்கு பாப்பாவால் நான் பல முறை அழுதுவிட்டேன்... கணவனும் வேண்டாம், தாயும் வேண்டாம் எனும் பொழுதுகளில் அவளின் மனநிலை, பிசாசுகள் பேசும் பொழுது அவளின் உணர்வுகள், சுகம் சுமையாகும் போது அவள் உணர்வுகள் மரத்து போகும் போதும், அவளை மீட்டெடுக்கும் பொழுது அவளும்/அவள் உணர்வுகளும் ஊமையாகி போவதும், இன்பமான் ஒன்று அவளுக்கு மட்டும் துன்பமாகி உடல் இறுக, உணர்வு மரக்க, எதையும் செய்ய முடியாது துளிக்கும் அவள் கண்ணீரில் நான் ரொம்ப அதிகமா அழுதிட்டேன்.....
#ரொம்ப ரொம்ப அழ வச்சுட்டீங்க என்னை
எல்லாத்துக்கும் சேர்த்து கடைசியில் வச்ச அறை பத்தலை தான் ஆனாலும் என்ன பண்ண போங்க... தேவதை தான் மஹா n சித்... அதுவும் அவள் மறக்கும் மன்னிக்கும் இடங்கள்
கடைசியில் இந்த மக்குவின் மஹான் பண்ணும் அட்வைஸ் அடேய் இதை நீ சொல்றியா மோமென்ட் எனக்கு... அட்வைஸ் விட அவனின் செயல் கொஞ்சம் ஓகே...
இடம் தேர்ந்து எடுத்தீங்க பாருங்க அவன் அவனை விளக்க(??) ப்பா யாருமே தேர்ந்து எடுத்தது இல்லை இதுவரை... செம்ம பிளேஸ் போங்க அக்கா...
சைக்கோவின் கனவை நனவாக்க உதவிய தேவதையின் வளர்ச்சியை சொல்லல..
I loved சித்... சித் வந்ததன் பிறகு தான் மஹா கொஞ்சம் சந்தோஷமா இருந்தா... பல இடங்களின் சின்ன பையன் எனினும் தாங்கி பிடித்தான்.. இவனை அவள் ஏற்று கொண்டதில் அவள் நம்பிக்கையையும், காதலையும், நல்ல மனதையும், தாய்மையையும் மொத்தமாக நிரூபித்த இடம்... யசோதாவின் கண்ணன்
அந்த பிரதீப் நல்ல நண்பன் என்றாலும் அவன் நிறைய(90%) இடங்களில் நண்பன் ரோல் மட்டுமே செய்து, மஹாவிடம் நல்ல நண்பன் ரோல் செய்ய முயன்றதில் அவனுக்கும் ரெண்டு அடி கொடுத்து இருக்கணும்... பட் அதுவும் ஒரு நல்ல மாற்றத்துக்கு வழி அதுனால போய் தொலையரான்... அதுவும் கடைசியில் கொடுத்த ஐடியா சரியான லூசு பையன்...
சாருலதா எனக்கு பிடிக்காத ஒரு கேரக்டர்... அப்பாவிற்கு நல்ல மகளாக இல்லை, மகனுக்கு நல்ல அம்மா என்றாலும் வேறு எதிலும் அவளை எனக்கு பிடிக்கலை... அதுவும் கடைசியாக அவள் செய்தது அவள் மேல் பரிதாபம் கூட வரவிடாமல் பண்ணிடுச்சு...
வசு, சித்ரா, தனம் மனித பிறவியில் சேர்த்து இல்லை... தனம், அதுவும் சாரோவின் சீரழிந்த நிலைக்கு பாதி இவர் காரணம்... நல்லவர் போன்று இருந்து கேட்பார் பேச்சு கேட்டு பேசிய வார்த்தைகள் என்றும் மறக்க முடியாது... மன்னிக்க முடியாத ஜந்துக்கள் இவர்கள்... முத்து, அசோக் no comments...
சீனி ராஜி தெய்வங்கள்... கொஞ்சமாவது அவனை திட்டினாங்க அதுக்கு தான்...
Congratulations Akka
waiting for next story