Ramyasridhar
Bronze Winner
ஈஸ்வர் இவர்கள் அவன் இல்லத்தில் இருப்பது அறிந்தவுடன் சீரஞ்ஜீவ் வெளியே வரும் தருணத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறான். அதற்குள் அவர்களை கண்காணிக்க ஆட்களை நியமித்து விட்டான். கல்பனா வேண்டா வெறுப்பாக வெங்கட்டிடம் ஈஸ்வருக்காக எடுத்த உடையை கொடுக்கிறாள். பதிலுக்கு இவன் ஈஸ்வரை குறித்து முணுமுணுப்பது எங்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே தெரிந்தது. மான்வியின் உதவியில்லாமல் சிரஞ்ஜீவ் எழ நினைப்பது, அவளிடம் சண்டையிடுவது என தன்னால் முடியாத நிலையிலும் கூட அவன் அவனாக இருப்பது அருமை. அந்த காட்சி அமைப்புகள் ஜீவின் குணநலன்களை மாற்றா வண்ணம் அவனை மிடுக்குடனே காட்டிய விதம் சிறப்பு. மான்வியின் தாலி அருந்த நிலையில் பரமேஸ்வரி அம்மா சிரஞ்சீவை கொண்டே திரும்ப புது மஞ்சள் கயிறை கட்ட சொல்கிறார்கள். இதில் அதிர்வது மான்வி மட்டுமே, அவன் வெகு இயல்பாகவே தாலியையும் கட்டிவிட்டு, குங்குமத்தையும் இட்டுவிட்டான்.ஈஸ்வர் சிந்துஜாவிடம் காட்டிய உரிமையில் அவன் மேல் ஏற்பட்ட கோபமா, இல்லை மான்வியின் மீது கொண்ட கோபமா, இரண்டும் சேர்த்தோ... ஈஸ்வர் தனிமையில் அவனுக்கு நிச்சயித்த பெண்ணின் மீது எடுத்து கொண்ட உரிமையை இவன் அவன் மனைவிடயிடம் அவனின் குடும்பத்தை சாட்சியாக வைத்து எடுத்து கொண்டான்.அதை வெறும் மஞ்சள் கயிறாக தான் இருவரும் நினைத்தனரோ என்னவோவிடை நீங்களே அறிவீர். செம பதிவு.