All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"கல் நெஞ்சே கசிந்துருகு " கதைப் பகுதி

Status
Not open for further replies.

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"சாரி.... சாரி... நீங்க நினைக்குற மாதிரி தப்பலாம் பாக்கல"

அவன் திணறி திணறி பதில் சொல்ல அதில் அவளுக்கு இன்னும் கோபம் வந்தது. "அந்த ஐடியா வேற இருக்கா. ஒழுங்கு வேலய மட்டும் பாருங்க. இல்ல ராம் சார் கிட்ட மாட்டி விட்டுடுவேன். இந்தாங்க என் நம்பர். ராம் சார் தர சொன்னார். " தனது அலை பேசி இலக்கத்தை கொடுத்தவள் கோகுலை முறைத்து கொண்டே செல்ல "எல்லாம் என் நேரம்டா. புள்ள பூச்சிகெல்லாம் கொடுக்கு முளைச்சு என்ன கொட்டுது. ஒருவேள ராம் சார் ரூம்குள்ள போனதால இவளுக்கும் பைத்தியம் பிடிச்சிட்டா" என ஆராய்ந்து கொண்டிருந்தவனின் முன்பு ராம் நின்றிருந்தான்.

பதறி போய் எழுந்து நின்றவன் "சார்.. சார்..." என தந்தியடிக்க "பகல்ல தூக்கமா கோகுல். என்னோட ரூமுக்கு வாங்க" என்ற படி முன்னே செல்ல பலியாடு போல பின்னே சென்றான்.


மதியின் கோபம் இன்னமும் தணியவில்லை. திருமண நாளன்று மதியின் அறைக்குள் ஆதி நுழைந்த பின்பு நடந்தவைகள் இன்னமும் அவளது கண் முன்னே வந்து கொண்டிருந்தன. அவளது கண்களில் தெரிந்த அருவருப்பு தனக்கானது என நினைத்து கொண்ட ஆதி அவளை விட்டு இரண்டு அடிகள் தள்ளி சென்றான். மனதளவிலும் அவளை விட்டு விலகி செல்வதை போல அவனுள் ஒரு பிம்பம் எழுந்தது.

தன்னை கண்டு அருவருக்கும் காதல் மனைவியை என்ன செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை. அவளுக்கு வலித்தால் அவளை விட இவனல்லவா அதிகம் துன்புறுவான். மதியின் உயிரை காப்பாற்றிய அந்த ஒரு நாளில் நடந்த நிகழ்வுகள் தன்னுடைய வாழ்வினை இப்படி மாற்றி விடும் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை.

அதுவரை மதியின் மீது அவனுக்கு காதல் இருந்ததில்லை. சின்ன சின்ன சந்தோஷத்திற்காக அவளை சீண்டிக் கொண்டிருந்தவனுக்கு அவனது வாழ்வின் மொத்த சந்தோஷமும் அவள் தான் என்று தெரிய வந்த நாளல்லவா.

இப்பொழுது மதியிடம் சென்று அன்றைய நிகழ்வுகளை எடுத்து சொன்னால் அடுத்த நொடியே அவனை விட மதி தான் மிகவும் மகிழ்வுருவாள். அவனை ஏற்று கொள்ளவும் செய்வாள். ஆனால் ஏனோ அவ்வாறு செய்ய அவனது மனம் விரும்பவில்லை.


ஏனென்றால் அந்த நினைவுகளோடு வேறு சில நினைவுகளும் அவளுக்கு வரும் என்பதை அறியாதவன் அல்ல அவன். அவள் மறக்க வேண்டிய நிகழ்வுகளோடு அந்த இனிமையான நிகழ்வும் மறைந்திட வேண்டி அவனது காதல் மனம் இறைவனை வேண்டிக் கொண்டது.

அவளாக மனம் மாறும் வரையில் அவளை துன்புறுத்த வேண்டாம் என நினைத்தவன் அவ்வறையை விட்டு வெளியேறினான். அதன்பின்பு அவன் அந்த அறைக்கு வரவே இல்லை. ஏன் அவளது கண்முன்னே கூட வரவில்லை.

ஒருவகையில் அவளது மனம் சந்தோஷித்தாலும் சிறு வலியும் இருக்க தான் செய்தது. ஒரு வாரம் முடிந்த நிலையில் இவர்களது கண்ணாம்பூச்சி ஆட்டத்திற்கு முடிவை வேண்டி செந்தாமரை சில முயற்சிகளை செய்தார்.

அன்று ஆதி வெளியே கிளம்பி சென்ற பின்பு மதியிடம் பேசியவர் ஒருவாறாக அவளை சம்மதிக்க வைத்து ஆதியின் அறையில் அவளை தங்க வைத்தார். விருப்பமே இல்லை என்றாலும் இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து தன்னை பெற்ற பெண்ணை போல நடத்துபவரை துன்புறுத்த விரும்பாமல் ஆதியின் அறைக்கு சென்றாள்.

இதுவரை ஆதியை தவிர வேறு யாருமே அந்த அறைக்குள் நுழைந்தது இல்லை. இன்று அவனின் சரி பாதியான மதி அவ்வறைக்குள் நுழைந்தாள்.


அறையை பார்த்தவளுக்கு அவனது அறை இருந்த நேர்த்தியை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அனைத்தும் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த அறையின் நடுவே பெரிய கிங் சைஸ் பெட் இருந்தது. அதன் இடது புறத்தில் இரு சிறிய அறைகள் இருந்தன. ஒன்றில் மட்டும் லாக் செய்யப்பட்டிருந்தது. மற்றொன்றில் அவனது புத்தகங்களும் , விளையாட்டு பொருட்களும் , அவன் வாங்கிய கோப்பைகளும் இருந்தன.

வலது புறமும் இரு அறைகள் இருந்தன. ஒன்று குளியல் அறை. மற்றொன்று உடை மாற்றும் அறை. அறையின் பின்புறம் இருந்த கதவை திறந்தவள் வியந்து தான் போனாள். அவனது அறையின் பால்கெனி கொஞ்சம் பெரியதாகவே இருந்தது. அதில் பாதி இடத்தில் மனனண்ணைக் கொட்டி சிறு தோட்டமே அமைத்திருந்தான். நிறைய பூச்செடிகளும் , சில காய்கறி வகை செடிகளும் இருந்தன. அதோடு மட்டுமின்றி புற்களையும் வளர்த்திருந்தான்.

வெளியே செல்லும் முன்பு தான் தண்ணீர் ஊற்றியிருந்திருப்பான் போல அந்த புற்களின் நுனியில் காலை கதிரவனின் ஒலியில் அவை வைரத் துண்டுகளாக மின்னின. அதை கண்டவளுக்கு ஏனோ மனதில் இனம் புரியா அமைதி வந்தது. புற்களின் நுனியிலிருந்து அந்த துளிகளை தனது கரங்களால் ஏந்திக் கொண்டாள்.

சற்று நேரம் அதையே பார்த்திருந்தவள் வெயிலின் தாக்கம் கூடிடவே அவ்விடத்தை விட்டு எழுந்து அறைக்கு சென்றாள். தொலைக் காட்சியை உயிர்பித்தவளுக்கு எதுவும் பிடிக்காமல் போக மீண்டும் தனது அத்தையோடு சென்று அமர்ந்து கொண்டாள்.

அந்த வீட்டிற்கு வந்து ஒரு வாரமாகியும் அவளது இதழ்கள் இதுவரை ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்க வில்லை.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செந்தாமரையோ, கார்த்திகேயனோ பேசினால் தலையாட்டல் மட்டுமே பதில். இன்று அவளாக தன்னை நெருங்கி அமர்ந்திருப்பதில் மகிழ்வுற்ற அந்த தாய் ஆறுதலாக அவளது கரம் பற்றிட அவரை ஏறிட்டு பார்த்தவள் அவரது மடி சாய்ந்தாள்.

மாலை வீடு திரும்பிய ஆதி வரவேற்பறையில் தனது மனைவியும் தாயும் அமர்ந்திருப்பதை கண்டான். தாயின் மடியில் தலை வைத்திருக்கும் மனைவியை கண்டவனுக்கு மனதில் சிறு இன்ப சாரல் வீசியது.


எதையுமே தனது முகத்தில் காட்டிக் கொள்ளாது தனது அறையை அடைந்தவனுக்கு ஆச்சர்யமாயிருந்தது. அங்கே அவனது படுக்கையின் விரிப்புகள் கசங்கியிருந்தன. அதுமட்டுமின்றி ஆங்காங்கே மல்லிகை மலர்களும் சிதறிக் கிடந்தன. அவனது உள் மனம் அவனவள் அவனது அறைக்கு வந்திருக்கிறாள் என்பதை சொல்ல அவனுக்கு மகிழ்ச்சியாயிருந்தது.

இரவு உணவு முடிந்து பின்பு தான் மதிக்கு பயம் வந்தது. அதுவரை அத்தையின் பின்பு திரிந்தவள் கணவது அறைக்கு செல்ல வேண்டுமே என தயங்க அதை புரிந்த கொண்ட தாமரையோ அவளது கரத்தில் பால் டம்ளரை கொடுத்து ஆதியிடம் கொடுக்கும் படி சொன்னார்.

ஆதி மதியின் கழுத்தில் அதிரடியாக தாலி கட்டிய அன்றிலிருந்து இன்றுவரை தனது பெற்றோர்களிடம் பேசுவது இல்லை. செந்தாமரை எவ்வளவு முயன்றும் அவனிடமிருந்து மௌனம் மட்டுமே விடையாக கிடைத்தது. அதனால் தான் அவர் மதியிடம் சென்று பேசியது.

பாலை எடுத்துக் கொண்டு ஆதி யின் அறைக்கு சென்றவள் அவன் அவனது ரீடிங் ரூமில் எதையோ செய்து கொண்டிருப்பது தெரிய அவ்விடம் சென்றாள். அவளது வரவை உணர்ந்து அவன் திரும்பி பார்க்க பாலை அவனருகில் வைத்தவள் அவனிடம் எதுவும் பேசாமல் போய் படுத்துக் கொள்ள அவளை பார்த்திருந்த ஆதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.


என்றுமில்லா திருநாளாய் படுத்த சிறிது நேரத்திலேயே மதி உறங்கிட ஆதி தனது வேலையை தொடர்ந்து கொண்டிருந்தான். இரண்டு மணி நேரங்கள் கழித்து மதியின் அலறல் அவ்வீடெங்கும் எதிரொலித்தது.

அந்த சத்தத்தில் கார்த்திகேயனும் செந்தாமரையும் ஆதியின் அறைக் கதவை தட்ட ரெஸ்ட் ரூமிலிருந்து ஆதி பதறியடித்து ஓடி வந்தான். மதியையும் அறைக் கதவையும் பார்த்தவன் கதவை திறந்து விட மதியோ இன்னமும் கண்களை திறக்காமல் அலறிக் கொண்டிருந்தாள்.

அவனை முறைத்தபடி கார்த்திகேயன் மதியை நெருங்கி "மதி.... இங்கப் பாருடா.... மாமா வந்துருக்கேன். உனக்கும் ஒண்ணுமில்ல. கண்ண தொறந்து பாருமா" என்று அவளை உலுக்கிட தாமரையும் புலம்பிக் கொண்டு மதியினை எழுப்ப முயற்சித்தார். ஆதியோ அவளை நெருங்கிட முடியாமல் தவிக்கும் தன் நிலையை அறவே வெறுத்த படி நின்றிருந்தான்.


சிறிது நேரத்தில் அவள் கண்களை விழித்தாலும் கட்டிலின் மூலைக்கு சென்று அமர்ந்து கொண்டாள். ஆதி யின் பெற்றோர்களது எந்த சமாதானமும் அவளை அமைதி அடைய செய்யவில்லை.

மதி இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து தினமும் நடக்கும் நிகழ்வு தான் இது. தினமும் நடு இரவில் அலறி துடிப்பவளை சமாதானம் செய்ய முடியாமல் ஆதியின் பெற்றோர்கள் திணறுவார்கள். மறந்தும் ஆதியை மதியின் அறைக்குள் வர கார்த்திகேயன் அனுமதி அளித்தது இல்லை.

இன்றோ தாயினால் தன்னவள் தன்னறைக்கு வந்தாலும் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டு தான் நின்றான். மதியின் அலறல் அதிகமாகிக் கொண்டே போனது. கார்த்திகேயனையும் , செந்தாமரையையும் தன்னை நெருங்க விடாமல் தள்ளி விட்டவள் கட்டிலின் முனையிலிருந்து கீழே இறங்கி அறையின் மூலைக்கு போக பொறுமையிழந்து ஆதி ஓடிவந்து அவளை இழுத்து அணைத்து கொண்டான். "ஒண்ணுமில்ல மனுமா.... நா உங்கூட தான் இருக்கேன். உன்ன விட்டு எங்கயும் போக மாட்டேன். நம்புடா" என்றான். ஒரு நிமிடம் அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் என்ன நினைத்தாளோ அவனை இறுக்கமாக அனைத்துக் கொண்டு அவனது மார்பினில் தலையை புதைத்துக் கொண்டாள். அவளது அலறலும் நின்று போனது.

அதைப் பார்த்து ஆதியின் பெற்றோர்கள் ஆச்சரியப்பட அவனோ அவளை தேற்றவதிலேயே குறியாக இருந்தான். அதற்கு மேல் அங்கிருக்க வேண்டாம் என தாமரை கணவனிடம் கண் காட்ட ஆதியை சந்தேகப் பார்வை பார்த்துக் கொண்டே அவர் வெளியேறினார்.

அவளை குழந்தை போல அனைத்தவாறு கட்டிலுக்கு தூக்கி வந்தவன் அவளை தூங்க வைக்க முயற்சித்தான். அவனது மடி மீது தலையை வைத்து அவனது இடுப்பை சுற்றிக் கரத்தினை கோர்த்தவாறு அவள் உறங்கிக் போக அவனது தூக்கமோ தூரம் போனது.

விடியல் அழகாக விடிந்திட ஆதி மதியறியா வண்ணம் அவளிடமிருந்து தன்னை பிரித்து கொண்டு குளியலறைக்கு சென்று விட்டான். உறங்கி எழுந்த மதிக்கோ இரவில் நடந்த எதுவும் நினைவில் இல்லை.

அன்றிலிருந்து மதி உறங்கிய பின்பு அவளை அனைத்துக் கொண்டு படுப்பவன் அவள் எழுந்திடும் முன்பு சென்றிடுவான். எந்த மாற்றமும் இல்லாமல் சென்று கொண்டிருந்த வாழ்வினில் மதியே பிரச்சனையைக் கொண்டு வந்தாள்.


அவளது செயலால் கணவனாய் இருந்தவன் மீண்டும் முரடனாய் மாறிடுவானா???
 
Last edited:

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புது வருடம் எனக்கு மிக சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது ப்ரண்டஸ். நல்ல காய்ச்சல் 🤒🤒🤕🤕🤕. புது வருடத்தை கொண்டாட முடியவில்லை 😔😔😔. எழுதவும் முடியவில்லை ☹☹☹.

கதையின் அடுத்த பதிவுகளை காய்ச்சல் சரியானதும் பதிவு செய்கிறேன்.

மன்னித்து கொள்ளுங்கள்....

அன்புடன்,
பூவினி
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 22:

தன்னைப் பற்றிய எல்லா உண்மைகளும் தெரியும் என்று ராஜன் சொல்லியவுடன் அத்துவின் தலை ஒரு நிமிடம் தாழ்ந்து பின் நிமர்ந்தது.

அதனை கவனித்த ராஜன் "தம்பி என் பொண்ணோட சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம் . இதுவரைக்கும் அவ என் கிட்ட கேட்டு எதையும் நா இல்லனு சொன்னது இல்ல. அவ என்கிட்ட சொல்ல தயங்குன முதல் விஷயம் நீங்க தான்.

எங்கள கஷ்டப்படுத்த கூடாதுனு நினச்சு அவளே அவ மனசுக்குள்ள எல்லாத்தையும் மூடி மறச்சிட்டா. ஆனா அவ உங்கள விரும்ப ஆரம்பிச்ச அடுத்த நாளே எனக்கு எல்லாமும் தெரியும். " என அவர் சொல்ல அத்துவிற்கும் ஹரிணிக்கும் அதிர்ச்சியாயிருந்தது.

அதனை கவனித்தவாறே அவர் தனது பேச்சினை தொடர்ந்தார்.
"அவ எங்க பொண்ணு. அவளோட ஒவ்வொரு அசைவும் எங்களுக்கு அத்துப்படி. அப்படி இருக்கும் போது அவ மனசுல இருக்குறத எப்படி தெரிஞ்சுக்காம போவோம். எங்க கிட்ட மட்டும் இல்ல உங்ககிட்டயும் அவ தன்னோட மனசுல இருக்கறத சொல்லலனு எங்களுக்கு அப்றமா தான் தெரிஞ்சுது.


அப்ப தான் உங்களப் பத்தி விசாரிச்சேன். தப்பா நினைக்காதீங்க தம்பி."

"இல்ல அங்கிள். நீங்க என்ன பத்தி விசாரிச்சதுல எனக்கு எந்த கோபமும் வருத்தமும் இல்ல. உங்க பொண்ணு சந்தோஷத்துக்காக நீங்க என்ன ஏத்துகிட்டதே எனக்கு போதும் அங்கிள். ரொம்ப சந்தோஷமா இருக்கு. வார்த்தையே இல்ல நா எவ்ளோ சந்தோஷமா இருக்கேனு சொல்றதுக்கு.

உங்க பொண்ண எப்பவும் பத்திரமா பாத்துப்பேன் அங்கிள்" கரகரப்பான குரலில் அவன் சொல்லவும் அவனது நெகிழ்ச்சியை மட்டுமின்றி தன் மகளின் மீதான காதலையும் அவர்கள் உணர்ந்தனர்.

அதையும் மீறி அவனது முகத்தில் இருந்த வருத்ததையும் அதன் காரணத்தையும் உணர்ந்தவர் "அம்மு.... தம்பிய கூட்டிட்டு போய் வீட்ட சுத்திக் காட்டுடா" என்றார்.


வந்ததிலிருந்து அத்து அங்கிருந்த அனைவரிடமும் பேசினாலும் ஏனோ ஹரிணியை மட்டும் நிமிர்ந்துப் பார்க்கவில்லை. அவளும் அவனது முகத்தை நேராகப் பார்க்காமல் ஓரக்கண்களால் அவனது நடவடிக்கைகளையே கவனித்துக் கொண்டிருந்தாள். இருப்பினும் மனதின் ஓரத்தில் அவனை வருத்தெடுக்கவும் தவறவில்லை .

" என்ன நிமிந்து பாக்குறாங்களா பாரு. காலைல எழுந்து எவ்ளோ கஷ்டப்பட்டு எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு நானும் ரெடியாகி இவங்களுக்காக வைட் பண்ணா இவங்க நம்மளே கண்டுக்கவே இல்லை. இருக்கு இவங்களுக்கு இன்னைக்கு" என மனதினுள் அவனை தாளித்தபடியே எழுந்து நின்று அவனது வருகைக்காக காத்திருக்க அவனோ அவளது முகம் பாராமல் எழுந்து நின்றான்.

அதில் அவளுக்கு இன்னமும் கோபம் எழ விறுவிறுவென முன்னே நடந்தாள். அவளின் அந்த கோபத்தையும் அத்து ரசித்துக் கொண்டிருந்தான். அவனும் வந்ததிலிருந்து அவள் தன் முகத்தை ஓரக் கண்ணால் பார்ப்பதை பார்த்துக் கொண்டிருந்தானே.

அவளை சீண்டி விளையாட தோன்றியது அவனுக்கு. முன்னால் சென்றவள் எதுவும் பேசாமல் அவனுக்கு வீட்டை சுற்றி காண்பிக்க ஆரம்பித்தாள். அவன் மீது அத்தனை கோபம் இருந்தாலும் அவனது அருகாமை அவளை பதட்டமடைய செய்தது.

அன்று அவன் உரிமையாய் பார்த்த பார்வையும், உரிமையாய் சொன்ன 'டி' யும் ஏனோ காரணமின்றி அவள் நினைவில் தோன்றி அவளை இம்சிக்க இப்போது அவளது கோபம் எங்கே போனது என்று அவளுக்கே தெரியவில்லை.

இருப்பினும் அவனிடம் அதை காட்டிக் கொள்ள விரும்பாது அவள் இயல்பாய் இருப்பதைப் போல காட்டிக் கொள்ள அவளது கள்வனோ அதை கண்டு கொண்டான். அவளது அறைக்கு அவனை அழைத்து சென்றவள் ஒன்றும் பேசாமல் அமைதியாய் நிற்க அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது பார்வையின் வீரியம் தாங்காது அவளது மதி முகம் சட்டென்று நிலம் காண அவனுக்கோ மனதினுள் ஆழிப்பேரலையாய் பொங்கியது அவள் தன்னவள் என்ற கர்வம்.

இதற்கு மேல் அங்கு நிற்பது நல்லதல்ல என அவளது உள்ளம் கூச்சலிட அங்கிருந்த வெளியேறப் போனவளின் கரங்களை பிடித்து சுவற்றோடு சாய்த்திருந்தான் அவளது மன்னவன். அவனது நெருக்கத்தில் அவளது இதயம் பந்தயக்குதிரை போல ஓடத் தொடங்கியது.

எந்நேரமும் அது வெளியே வந்து விடுமோ என்ற அச்சம் அவளும் தோன்றிட தன் தலை நிமிர்த்தி அத்துவை பார்க்க அவளது பார்வைக்காக காத்திருந்தவன் அவளை மெல்ல நெருங்கிட அவளது இதயத்துடிப்பின் ஓசை அங்கிருந்த கடிகார முட்களின் ஓசைக்கு இணையாக கேட்டது.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தன்னவன் தன்னை நெருங்க நெருங்க ஹரிணிக்கு பதட்டம் கூடிக் கொண்ட இருந்தது. அங்கிருந்த செல்லவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் அவள் திணற அவளது திணறலை ரசித்தவன் அவள் மீது தன் தேகம் படாதவாறு அன்று போலவே ஒரு நூலிழை இடைவெளி விட்டு நிற்க அவளது செவ்விதழ்களோ நடுங்கத் தொடங்கின.


அதைக் கண்டு அவன் மயக்கும் புன்னகை புரிய எப்பொழுதும் அவனின் புன்னகையில் மயங்குவதைப் போல இன்றும் மயங்கி அவனது முகத்தையே இமை மூடாமல் காண சற்று குனிந்து அவனது முகத்தை மட்டும் அவள் புறம் சாய்த்து அவளது கன்னத்திற்கு அருகே தனது கன்னம் இருக்குமாறு சென்றவன் அவளது காதில் மென்மையாய் , குழைவாய் "ஹனி" என்றிட அவளது உதடுகள் அவளது அனுமதி இல்லாமலே "ம்ம்ம்...." என்று பதில் அளித்தன.

அவளது பதிலில் புன்னகை பெரிதாக தன் முகத்தை திருப்ப அவனது மூச்சுக் காற்று அவளது முகத்தில் பட அதன் வெப்பம் அவளை தாக்கியதும் அவளையுமறியாமல் அவளது கண்கள் மூடின.

இன்னும் சிறிது நகர்ந்தால் அவள் மீது அவன் முழுதாய் சாய்ந்து விடுவான் என்கையில் விழி மூடி நின்ற அவளது நிலை அவனுள்ளும் மாற்றத்தை தூண்ட அவளது முகம் நோக்கி குனிந்தான்.

பட்.. பட்… பட்.. கதவு தட்டப்படும் ஓசையில் தன்னிலை அடைந்தான் அத்து. தன்னை நிலைப்படுத்த முடியாமல் அவன் வாசலைக் காண அங்கே அவனை முறைத்தபடி நின்றிருந்தான் அவனது தோழன் சுரேன்.

அவனைக் கண்டதும் அத்துவின் தலை தானாக குனிய அதை பார்த்த படியே உள்ளே நுழைந்த சுரேன் "இன்னும் எவ்ளோ நாளுக்கு தான் இப்படி பைத்தியம் மாதிரி இருக்க போற. அவ தான் உயிரோட இல்லைல. அவளயே நினச்சு ஏன்டா உன்ன கெடுத்துக்குற.

பழைய நினப்பெல்லாம் தூக்கி குப்பையில் போட்டுட்டு ஆக வேண்டியத பாருடா. உன்ன இந்த மாதிரி பாக்க முடியலடா.

காலேஜ்ல நீ உன் மனசுல ஒருத்திக்கு மட்டும் தான் இடம்னு சொன்னப்ப உன்ன ஆச்சர்யமா பார்த்தேன். ஆனா இப்ப வேதனையா பாக்குறேன்டா.

நீ எப்படா பழைய மாதிரி மாறுவ. இன்னமும் இப்படி பழச நினச்சு வாழுறதுல அர்த்தமே இல்லடா. அதுவும் உயிரோட இல்லாதவளுக்காக நீ உன்ன கஷ்டப்படுத்திக்குற."

"அவ உயிரோட தான் இருக்கா"

"அடிச்சேனா பாரேன். எந்த நம்பிக்கைல அவ உயிரோட இருக்கா சொல்ற. அவங்க அப்பாவே அவ உயிரோட இல்லனு உங்கிட்ட சொல்லிடாங்க. இன்னமும் லூசு மாதிரி ஏன்டா உளறிகிட்டு இருக்க"

"யார் என்ன சொன்னாலும் சரி அவ உயிரோட தான் இருக்கா.... இருக்கா...."

"டேய்.... சொல்லிகிட்டே இருக்கேன். மறுபடியும் அதயே சொல்ற. சரி அவ உயிரோட இருக்கா அப்படினே வச்சுப்போம். ஆனா ஏன் உன் கிட்ட செத்துடேனு நாடகம் ஆடனும். அதனால அவளுக்கு என்ன லாபம். உண்மைய புரிஞ்சுக்க முயற்சி பண்ணு மச்சான்.

உன்னோட வாழ்க்கைய நீ வாழனும்டா. இப்படி பைத்தியம் மாதிரியே இருந்தா எப்படிடா. "

அவன் சொல்வதை கேட்ட அத்துவிற்கு விரக்தி புன்னகை தோன்றியது. "ஆமாம்டா... நா பைத்தியம் தான். பாக்குற பொண்ணுங்க கூடலாம் சுத்தாம கட்டிக்கப் போறவள மட்டும் தான் காதலிப்பேனு சொன்னேன் பாரு நா பைத்தியம் தான்.

அவ மேல உயிரையே வந்திருந்தேன் பாரு நா பைத்தியந்தான். என்ன ஏமாத்தி பொய் சொல்லிட்டு அவ போர்ப் பிறகும் இப்படி அவள நினச்சு சுத்துறேன் பாரு நா பைத்தியம் தான். " அத்து கோபமாய் கத்தவும் சுரேன் அதிர்ந்து விட்டான் அவன் கண்களில் இருந்த வலியைக் கண்டு.

அதன் பிறகு தாமதியாமல் ஓடிவந்து தனது நண்பனை அனைத்துக் கொள்ள அத்துவின் முதுகோ அழுகையில் குலுங்கியது. அவனது அழுகையை கண்ட சுரேனுக்கு ஹரிணியின் மீது கொலை வெறியே எழுந்தது. ஆறு மாதக் காதலில் உலக அன்பு மொத்தத்தையும் அவனுக்கு காட்டி மாயமாய் மறைந்தவளை என்ன செய்வது.

உலகில் இல்லாத ஒருத்தியை என்ன செய்வது எனத் தெரியாதவன் தன் நண்பனை சமாதனப்படுத்தும் வழியில் இறங்கினான். "ப்ளீஸ்டா மச்சான். எல்லாத்தையும் மறந்துடுடா. போதும்டா உன்ன நீயே கஷ்டப்படுத்தாதடா. " என்ற படி அத்துவின் முதுகில் தட்டிக் கொடுக்க

"முடியல சுரேன். ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் அவ வந்துட மாட்டாளானு ஏங்கி ஏங்கி தவிக்கிறேன்டா. அவள மறக்க முடியலடா. மனசு புல்லா அவ தான்டா இருக்கா. அவள மறக்கவும் முடியாம வாழவும் முடியாம.... அய்யோ.... எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்குடா. காதல் இவ்வளவு கொடுமையானதாடா." என்ற படி கத்திக் கொண்டே அங்கிருந்த மேஜையில் இருந்த பொருட்களை தள்ள கீழே விழுந்தது அவனும் அவளும் முதன்முதலாக எடுத்துக் கொண்ட புகைப்படம்.


அதை கையில் எடுத்துக் கொண்டவன் நடுங்கும் கரங்களால் அவளது புகைப்படத்தை வருடியபடி மனதோடு பேசினான் "ஹனி.... நீ எங்கடி போன. என்னால முடியலடி. கொஞ்ச கொஞ்சமா நா செத்துகிட்டே இருக்கேன்டி. தயவு செஞ்சு வந்துடுடி. என் உயிர் போறதுக்குள்ள" .
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்....

ரொம்ப நாள் கழித்து வந்துருக்கேன். மன்னிச்சுகோங்க.......

வீட்ல திருமண நிச்சயம் ஆகிருக்கு பிரெண்ட்ஸ்.... அதிகமான வேலை.... எழுத முடியல....

இல்லனா மட்டும் எழுதிடுவியானு பல பேருக்கு தோணும்.... ப்ளீஸ் மன்னிச்சு....

இரண்டு மாதங்களில் திருமணம்... அதுவரைக்கும் எழுதுறது கஷ்டம்..

கொஞ்சம் பொறுத்துகோங்க....

எனக்கு கமெண்ட்ஸ் , லைக்ஸ் போட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி....

அடுத்த அத்தியாயம் கேட்ட தோழமைகளுக்காக முடிந்த அளவு டைப் செய்து பதிவிட்டுள்ளேன்...

அன்புடன்,
பூவினி
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 23:

அத்தனை நாட்கள் கடந்து அன்று தான் பிரியாவின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. கிட்டதட்ட இரண்டு மாதங்களுக்கு பின்னர் அவள் தனது தாய்வீடான ஆசிரமத்தை காணப் போகிறாள் . வேலையும் அவளது உடல் நலமும் சேர்ந்து அவளை அங்கு செல்ல விடாமல் இரண்டு மாதங்கள் தடுத்துவிட இன்று தான் அங்கே செல்கிறாள்.

ஆசிரமத்தை அடைந்ததும் தான் அவளுக்கு வாழ்க்கையே அழகாக தெரிந்தது. காற்றினை மெல்ல இழுத்து சுவாசித்தவள் இதழ்களில் தேங்கிய புன்னகையோடு அங்கிருந்த வாட்ச்மேன் தாத்தாவிற்கு ஒரு வணக்கத்தைச் சொல்ல அவரும் புன்னகையோடு அவளை நலம் விசாரித்ததோடு இரண்டு மாதங்கள் வராததற்கான காரணத்தையும் கேட்டார்.

அவரிடம் இன்முகமாய் தன் நிலையை விளக்கியவள் அவருக்காக வாங்கி வந்த இனிப்புகளை கொடுத்தாள். சிறு வயதில் அவர் அவளுக்கு தினமும் மிட்டாய் வாங்கி கொடுப்பார். அதனால் இப்போது அவள் வரும்போதெல்லாம் அவருக்கு இனிப்புகள் வாங்கி தருவதை வழக்கமாக வைத்திருந்தாள்.

ஆசிரமத்தின் அலுவலக அறையை அடைந்தவள் அங்கே சோகமே உருவாய் அமர்ந்திருந்த சீதாவைக் கண்டாள். தாயைக் கண்ட சிறு குழந்தையாய் அவளும் மாறிட கண்களில் சிறு துளி நீர் வழிய "ம்ம்மா" என்றாள்.

அவளது குரல் கேட்டு எழுந்த சீதாவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. இரண்டு மாதங்களாய் யாரை காண தவமிருக்கிறாரோ அவளே வந்ததும் ஓடிச் சென்று அவளை அனைத்துக் கொண்டவரின் கண்களிலும் கண்ணீர்.

ஏனோ அவருக்கு ப்ரியாவின் மீது மட்டும் தனிப்பட்ட வகையில் பாசம் இருந்தது. திருமணமே செய்திடாமல் சேவைக்காக தன்னை அர்பணித்தவருக்கு ப்ரியாவை தனது வளர்ப்பு மகளாக தத்தெடுக்க வேண்டும் என ஆசை. ஆனால் ப்ரியாவின் பின்புலம் மிகப் பெரியது எனவும் தவிர்க்க இயலாத காரணங்களுக்காக அவள் இப்படி வளர்கிறாள் எனவும் அறிந்தவர் தன்னால் முடிந்த அளவு அவள் மீது அன்பை செலுத்தினார்.

அவள் அந்த ஆசிரமத்திற்கு வந்ததிலிருந்து அவளின் பாதுகாப்புக்காக அவள் அவளுடன் கூடுதல் நேரம் செலவழித்தவர் அவளது கள்ளமில்லா மழலையில் மயங்கிட அவளும் தாயாக அவரை எண்ணி அவரோடு ஒன்றிட்டாள்.

ப்ரியா சமத்தான பிள்ளை . குறும்பானவள் , கலகலப்பானவள். தன்னோடு பேசும் நபரை இரண்டு நிமிடங்களிலேயே தன் மீது அன்பு கொள்ள வைக்குமளவிற்கு பேச்சு திறன் கொண்டவள். எல்லாரிடமும் அன்பாக இருந்தாலும் அவளது தனிப்பட்ட உணர்வுகளை சீதாவிடம் மட்டுமே வெளிக்காட்டுவாள்.

இதுவரை அவரது சொற்படி தான் அவளது வாழ்க்கை நடந்தி வருகிறாள்.
இந்த பாசப் பிணைப்பு அவள் ஆசிரமத்தை விட்டு வெளியேறிய பின்பும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.


பத்து மாதம் வயிற்றில் சுமந்து பெற்றால் தான் அன்னையா???? மனதோடு சுமப்பவர்களும் தாய் தானே. சீதா தன் மனதில் ப்ரியாவை தன் மகளாக பத்தொன்பது வருடங்கள் சுமந்துள்ளார். கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உறவு அவர்களுடையது.

ஒருவரை ஒருவர் அனைத்துக் கொண்டு கண்ணீர் விட முதலில் தன் நிலை மீண்டவர் சீதா தான். ப்ரியிவிற்கு எதுவும் ஆகி விட கூடாது என்று அவரது மனம் இந்த இரண்டு மாதங்களில் துடித்த துடிப்பை எல்லாம் இன்று அவளை பார்த்து கொள்வதன் மூலம் தீர்த்துக் கொண்டார்.

இனி அவளை அவரால் காண இயலாதே.. இதன்பிறகு அவள் ஆசிரமம் வருவது அவளது உயிருக்கு ஆபத்து என்று அவர் நன்கறிவார். ஆகையால் தான் தனது மனதினை கட்டுப்படுத்திக் கொண்டு சில முடிவுகளை எடுத்திருந்தார்.


"ப்ரியா மா.... சாப்டியாடா?" அவரது ஒற்றைக் கேள்வி அவளுள் எந்த மாதிரியான உணர்வை தோற்றுவித்தது என அவளால் அறிந்திட இயலவில்லை. வறண்ட பாலைவனமாய் இருக்கும் அவளது மனதில் அவரது வார்த்தைகள் பனித்துளிகளாய் இறங்கின.


இத்தனை நாட்கள் இதை கேட்க கூட தன்னுடன் யாருமில்லை என நினைத்தவள் தன்னை மறந்து பெரும் கேவலுடன் கருவறையில் தன்னை சுமந்திடாமல் உயிரில் சுமந்த தாயின் மடியில் தஞ்சமடைந்தாள்.


அவளது அழுகை அவரையும் உலுக்கியது. இருப்பினும் தான் பேச வேண்டிய விஷயங்களை நினைத்தவர் மீண்டும் அவள் உணவருந்தி விட்டாளா என வினவ, அவளது தலையோ இல்லை என்பதை போல ஆடியது. எதையும் பேசாமல் ஒரு தட்டில் உணவை கொண்டு வந்து அவளுக்கு ஊட்டத் தொடங்கினார்.


வெகு நாள் கழித்து தாயின் கரங்களால் தரப்பட்ட உணவு அமிர்தமாய் உள்ளிறங்க அமர்ந்தபடியே அவரது இடையை கட்டிக் கொண்டிருந்தாள் அவள். உணவூட்டி முடிந்ததும் அவரது கண்ணத்தில் மென்மையாக முத்தமிட்டவள் "எப்பவுமே என் அம்மா ஸ்வீட் அம்மா தான்.... ஜ ரியலி மிஸ் யூ மா.... இனிமேல் என்ன ஆனாலும் சரி, வாரம் ஒரு முறை கண்டிப்பா உங்கள பாக்க வந்துடுவேன். " கரகரப்பான குரலில் அவள் கூறிட பதிலலிக்காமல் அவரது கைகள் மட்டும் அவளது கூந்தலில் அலைந்திட அன்னையின் தடுமாற்றமதை சில நொடிகளில் உணர்ந்தவள் "என்னமா..... என்னாச்சு... ஏன் எதுவுமே பேச மாட்டேன்குறீங்க... "
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அதெல்லாம் ஒண்ணுமில்லடா..... எப்பவும் இங்க வந்தோன ஒண்ணு கேட்பியே இன்னைக்கு கேக்கலயா"

"என்ன கேப்பேன்.... எனக்கு புரியலமா"

அவளது கரத்தினை பிடித்து அதில் இரு கடிதங்களை வைக்கவும் அவளும் ஒரு ஆர்வம் தோன்றி மறைந்தது. கடைசி முறை தான் வந்த போது கடிதம் வரவில்லை என அழுதது அவளது நினைவிற்கு வர புன்சிரிப்போடு அந்த கடிதங்களை பார்த்தாள்.

அவளது சிரிப்பு அடுத்த சில நொடிகளில் காணாமல் போய்விட போகிறதென்று அவளிடம் உரைத்திட முடியாமல் சீதா தவித்து நிற்க இரண்டு கடிதங்களையும் பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவிற்கு அதிர்ச்சி. ஏனெனில் அதில் ஒரு கடிதத்தில் அனுப்புநர் சீதா என்றிருந்தது.

அதை பார்த்தவுடன் மனதில் இனம் புரியாத தடுமாற்றத்துடன்
இதெல்லாம் எதுக்கு....... " என்றிட சீதா அவளிடம் பிரித்து பார்க்கும் படி சைகை காட்ட அவளோ மறுப்பாய் தலையசைத்தாள். அவளது ஆழ்மனதிற்கு ஏதோ தவறாக நடப்பதாக தோன்றியது.

அவளையுமறியாமல் அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதனை துடைக்கும் மனமின்றி அவள் கடிதத்தை வெறித்தாள். சீதாவின் மனமோ இவையெல்லாம் வேண்டாம் என தூக்கி எறிந்து விட்டு எங்காவது ப்ரியாவோடு சென்றிடலாமா என யோசித்தது. ஆனால் அது சாத்தியமில்லையே....

"சில சமயத்துல நமக்கு நல்லது நடக்கணும்னா நாம சில கஷ்டங்கள அனுபவிக்க தான் வேணும். படி மா"

விருப்பமேயில்லாமல் தனது அன்னையின் கடிதத்தை முதலில் பிரித்து பார்த்தவளது இதயம் துடிக்க மறந்து நின்றது.

"முடியாது..... என்னால முடியாது..... அம்மா ப்ளீஸ் மா.... இப்படி பண்ணாதீங்க... நீங்க வேற என்ன சொன்னாலும் கேக்குறேன் மா" அனலில் இட்ட புழுவாய் அவள் துடிக்க , அவளை விட உள்ளுக்குள் துடித்துக் கொண்டிருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தார்.

"ம்மா.... ம்மா" இதை தவிர அவளது வாயிலிருந்து வேறு வார்த்தைகள் வரவில்லை. ஆறுதல் தேடி அவள் தனது அன்னையைக் கட்டிக் கொள்ள, அவள் தலை கோதி ஆறுதல் படுத்த நினைத்தாலும் தனது முடிவை எண்ணி அவர் ஊமையாகினார். தன்னுடைய உலகமே தன் கண் முன்னால் அழிவை போன்று அவளுக்கு தோன்றியது.

"அடுத்தத படி ப்ரியாமா" அவர் அவளை ஊக்கப்படுத்த, முதல் கடிதத்தின் வாயிலாய் கிடைத்த அதிர்வையே தாங்காதவள் அடுத்து கடிதத்தை படிக்காமலே தூக்கி எறிந்திட மீண்டும் அதனை அவளிடம் கொடுத்தவர் தனது கண்டிப்பான குரலில் "படினு சொன்னேன்" என்றிட வெகு நாட்களுக்கு பிறகு அவரது கோபக்குரலை கேட்டவள் மறுபேச்சின்றி அடுத்ததை விசும்பலோடு படிக்க ஆரம்பித்தாள்.


முதல் கடிதத்தை விட இதில் தான் அவளுக்கு பெரிய அதிர்ச்சி இருந்தது. படித்து கொண்டிருந்தவளது விழிகளின் வழியே அவளது உணர்வுகளை புரிந்து கொண்டவர் ஆறுதலாய் அவளின் தோள் மேல் கை வைக்க அதில் தனது முகத்தைை சாய்த்தவள் கீழே மடங்கி அமர்ந்து கதறி அழத் தொடங்கினாள்.

கடிதத்தை முழுவதுமாக படித்தவளுக்கு என்ன உணருகிறோம் என தெரியவில்லை. இயல்பிலேயே புத்திசாலி தனமும், தைரியமும் கொண்டவள் என்பதாலும் , உணர்வுகளை வெளிக்காட்டாதவள் என்பதாலும் உடனேயே தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

சீதாவை ஒரு பார்வை பார்த்தவள் அமைதியாக இருக்க அவளது அமைதி சீதாவை பயமுறுத்தியது.

"ப்ரியா..... இங்கப் பாரு மா.... நா சொல்றத கே...." அவர் முடிப்பதற்குள் கை நீட்டித் தடுத்தவள் அந்த அறையின் மூலையில் இறைவனின் படத்திற்கு முன்னால் இருந்த தீப்பெட்டியை எடுத்து அந்த கடிதங்களை எறித்தாள். பதறி நெருங்கி வந்த சீதாவை பார்வையாலே தடுத்து நிறுத்தி விட்டு கீழே சிதறிக் கிடந்த தனது பொருட்களை எடுத்தவள் எதுவும் பேசாமல் வெளியேறினாள்.


சீதா பின்னால் ஓடிவந்தது , அழைத்தது எல்லாம் காதினுள் விழுந்தாலும் அவளது இதழ்கள் இடைவிடாது முணுமுணுத்தது இதைத்தான்

"கனி நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட. உன்ன சும்மா விட மாட்டேன். இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும். உன்ன தேடி வரேன்"
 
Last edited:

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே....


எல்லோரும் என்னை மன்னிக்கவும். வெகு மாதங்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். உங்களுக்கு என் மீது இருக்கும் கோபம் உங்களது மெஸேஜில் தெரிகிறது.

ஆரம்பித்த கதையை முடிக்காமல் இருப்பதற்கு என்னை மன்னிக்கவும். உடல் நலப்பிரச்சனை , திருமண வாழ்க்கை , வேலை என என்னால் எழுத முடியவில்லை.

எனக்கு மெஸேஜ் செய்த யாருக்கும் நான் பதில் அளிக்கவில்லை. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.

கண்டிப்பாக கதையை முடித்து விடுவேன்.

பூவினி.
 
Status
Not open for further replies.
Top