All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதையின் முன்னோட்டம்

எது நம் அடுத்த கதைக்கு பொருந்தும்னு நீங்களே முடிவு பண்ணுங்கள்...

  • எ(உ)ந்தன் நெஞ்சில் சாய(வா)

    Votes: 33 78.6%
  • தீராத தித்திப்புகள்

    Votes: 7 16.7%
  • சாலையோர பனித்துளிகள்

    Votes: 2 4.8%

  • Total voters
    42
Status
Not open for further replies.

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மை லவ்லி சிஸ்டர்ஸ் அண்ட் பிரெண்ட்ஸ்,

எல்லாரும் இந்த புது மண ஜோடிகளை மறந்திருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன். என்னோட முதல் கதை ஒரு புன்னகை பூவே இப்போ போய்கிட்டு இருக்கனால என்னால இவங்களை வேகமா கூட்டிட்டு வர முடியலை. அதுனால சீக்கிரம் அதை முடிச்சுட்டு இதை தொடங்கிருவேன்.நீங்க அது வரை மறக்காம இருக்கணும்னு இதோ மீண்டும் ஒரு சிறிய முன்னோட்டம். படித்து விட்டு உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.டைட்டில் நீங்க வோட் பண்ணிட்டா நானும் வேகமா வந்துருவேன்.சோ வோட் பண்ணிடுங்க பேபிஸ் poll இருக்கும்.


***************************************************************************

முன்னோட்டம் 3

தான் இவ்வளவு நேரம் ஹாலில் அமர்ந்தும் யாரையும் காணாது மீண்டும் வீட்டினை சுற்றி தன்னுடைய பார்வையை செலுத்தியவனின் கண்களில் ஒருவரும் தென்படாததை அறிந்து எழுந்த ஆத்திரத்தில் கை முஷ்டிகள் இறுக அமர்ந்திருந்தான். அருகில் இருந்த தன்னுடைய புது மனைவியை கண்டவன் நொடி நேரத்தில் அமைதியாக இருந்து விட்டு அவளின் பயத்தினை போக்கும் பொருட்டு மிக மெல்லிய குரலில் என்னுடைய கணீர் குரலிலும் என்னால் மென்மையாக பேச முடியும் என்ற வண்ணம் "எதுக்கு பேபி இப்படி பயந்து பார்க்குற,என்ன மீறி இங்க யாரும் உன்கிட்ட நெருங்க கூட விட மாட்டேன், இன்னும் கொஞ்ச நாள் தான் பேபி, எல்லாம் சரி ஆகிடும்" என்றவன் பயத்தில் ஒரு வார்த்தை கூட பேசியது இருந்தவளின் புறம் குனிந்து முன் நெற்றியில் விலகி இருந்த அவளின் நெற்றி சுட்டியினை சரி செய்து விட்டவன், அதில் மிக மிக மென்மையாக தன்னுடைய முத்திரையை பதித்தான். முதல் முத்திரை என்றால், இல்லை, இதுவரை அவளிற்கு தான் அளித்த முத்தங்களும், அணைப்புகளும், அரவணைப்புகளும் எண்ணில் அடங்காதவை.

அவளிடமிருந்து விலகியவன் திருமணம் எப்படி முறைப்படி சடங்குகளுக்கு பஞ்சம் இல்லாது நடக்க வேண்டும் என்று எண்ணி அதை நடத்தியவன் மற்ற சடங்குகளும் முறைபடி நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவளையும் எழுப்பி விட்டவன் பூஜை அறை நோக்கி அழைத்து சென்றான்.நடுங்கும் கரங்களுடன் தன்னை பிடித்திருப்பவளை அழைத்து சென்று பூஜை அறை வாசல் சென்றவன் தன் தங்கை கூட தன்னுடைய கண்முன் வரவில்லை என்றும், தன்னுடைய அன்னையின் கண்முன் என் மனைவி இந்த வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று எண்ணியவனாக அவளின் கரத்தினை விலகி விட்டு அறை வாசலில் இருந்த அலங்கார மேஜை அடுத்தநொடி இடியென்ற சத்தத்துடன் தெறித்து கீழே விழுந்தது.

அந்த சத்தத்தில் பதறி அடித்துக்கொண்டு வேலையாட்கள் ஒரு புறம் ஓடி வந்தனர் என்றால் அண்ணனின் கோபத்தினை தன் அண்ணி கண்டு பயந்து போவார்கள் என்று அவனின் தங்கை ஒரு புறம் ஓடி வந்தால் என்றால், அவனை பெற்றவரோ பயங்கர கோபத்தில் நிதானமாக வந்தவர் "இப்போ எதுக்குடா இதை போட்டு இப்படி உடைச்சு வச்சுருக்க, இவளை தான் ஒன்னும் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து எங்க மானத்தை வாங்குனனா இப்படி ராட்ஷசன் மாதிரி எல்லாத்தையும் ஒடைச்சுட்டு இங்கேயும் ஒன்னும் இல்லாம பண்ணனுமா" என்று பொரிந்தார்.

"ஐய்யோ என்ன மாம் நீங்க,இங்கயும் ஒன்னும் இல்லாம பண்ணிட்டா நான் தான மாம் திருப்பி எல்லாம் வாங்கனும், நான் உங்களை இந்த ஸ்டைலில் கூப்பிட்டா தான பாருங்க இப்படி மூச்சு வாங்க என் கண் முன்ன வர முடியும்,எதுக்கு இப்போ கீழ கூப்பிட்டேன்னா வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு விளக்கு ஏற்றும் போது நாத்தினாரும் மாமியாரும் பக்கத்துல இல்லாம ஏத்துனா நல்லவா இருக்கும், அதுக்குன்னு ஒரு முறை இருக்கா இல்லையா அதான்" என்று தன் அன்னையிடம் சொன்னவன், தன் தங்கையின் புறம் திரும்பி "அம்மு விளக்குல எண்ணெய் ஊத்திட்டு உன்னோட அண்ணி கையில தீப்பெட்டி எடுத்து குடு" என்று சொன்னான் .

அண்ணனின் கூற்றில் தன் அன்னையை திரும்பி பார்த்தவள் வேறு வழியில்லாது அண்ணனின் பேச்சிற்கு மரியாதை அளிக்கும் விதமாக அண்ணன் சொன்னதை தட்டாது செய்தாள். நடுங்கும் கைகளுடன் விளக்கினை ஏற்றினால் அந்த பெரிய வீட்டின் மருமகள்.

-----------------------------------------------------------------------------------------------------------

"என்னங்க என்ன செஞ்சுட்டு இருக்கிங்க, இங்க அண்ணா படுத்துற பாட்ட பார்த்தா ரொம்ப பதட்டமா இருக்கு, மஹால் வேலை முடிஞ்சுட்டா கொஞ்சம் வீட்டுக்கு வாங்க" என்று சற்று முன் மஹாலில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்த தன் அண்ணன் மற்றும் புது அண்ணி வீட்டிற்கு வந்ததில் இருந்து செய்யும் அலும்புகளில் கதி கலங்கியவள் தன் மாமன் மகனும்,வருங்கால கணவனும், தன்னுடைய அண்ணனின் உயிர் தோழனிடம் புலம்பினாள்.

அதில் போனின் அந்த புறம் இருந்தவன் "ஏண்டி மனுஷன கொஞ்சம் நேரம் அமைதியா இருக்க விட மாட்டியா, அதுக்கு உன் அண்ணன் பரவாயில்லைடி, நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வீட்டுக்கு வாடா மாப்பிள்ளைன்னு ரொம்ப பக்குவமா சொன்னான், ஏற்கனவே அங்க என் மாமியார் இந்த கல்யாணம் நடக்க நான் தான் உன் அண்ணன் கூட உதவியா இருந்தேன்னு என்ன ரொம்ப பாசமா பார்த்துட்டு இருந்தாங்க,இதுல இப்போவே அங்க வர சொல்றியேடி, இந்த மாமன் மேல உனக்கு பாசமே இல்லையாடி, அப்பறம் எனக்கு எதாவது சேதாரம் ஆச்சுன்னா யாருடி எனக்கு வாழ்கை குடுப்பா " என்று அழுதுவிடுபவன் போல் கூறினாலும் அவனின் பேச்சினில் இருந்த சோர்வு தெரிந்தாலும்,தன் அண்ணன் தற்பொழுது இருக்கும் மனநிலைக்கு இவரின் ஆறுதல் தேவை என்பது போல் பேசி கெஞ்சி கொஞ்சி வரேன் என்று சொல்லும் வரை விடாது வர வைத்தாள்.

இப்படிக்கு

அன்புடன் உங்கள் தங்கை ரேவதி :love::love::love:
 
Last edited:
Status
Not open for further replies.
Top