Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சின்னக் கண்ணனின் அவதாரம், மண்ணில் மாந்தர்க்கு மணிமகுடம்!
அவன் பிறந்த நாளில் அவனுக்கு ஒரு கவிதை...!
கார்மேக வண்ணனவன் பிறந்த நாளாம்…- இந்த
நாடெல்லாம் கொண்டாடும் அஷ்டமி நன்னாளாம்…
கோகுலா…. அஷ்டமி நன்னாளாம்…!
யசோதையின் பாலன் அவன் யாதவ கிருஷ்ணன் – அவன்
குழல் இசையால் அனைவரையும் மயக்கிடும் கிருஷ்ணன்…!
எங்கள் பால கிருஷ்ணன்(2)
வெண்ணை திருடும் கண்ணனவன் மாயக்காரன்..!
குழல் ஊதும் அழகில் அவன் வசியக்காரன்…!
குறும்புச் சேட்டை செய்வதிலே விஷமக்காரன்…! - அவன்
பால் பசுவை மேய்க்கின்ற நந்த கோபாலன்…! – ஆம், அவனே
பிருந்தாவனக் கண்ணன் எங்கள் ஸ்ரீ கிருஷ்ணன். (2) (கார்)
வசுதேவர் பிள்ளை அவன் வாசுதேவன்…!
மலையைத் தூக்கி குடை ஆக்கிய கோவர்த்தனன்..!
கம்ஷனையே வதம் செய்து தாயை மீட்டவன்…! - அவன்
துவாரகையை உருவாக்கிய துவார பாலகன் …! – ஆம், அவனே

அவல் கொடுத்த குசேலனின் நண்பனானவன்…!
முறுக்கு, சீடை, அவலுக்கெல்லாம் பிரியக்காரன்…!
காதல் மகள் ராதையின் ராதாக் கிருஷ்ணன்…! - அவன்
பாமாவோடு ருக்மணியை கைப் பிடித்தவன்…! – ஆம், அவனே

மஹாபாரதத்தில் கீதை சொன்ன பார்த்தசாரதி…!
அனைத்தையுமே காக்கின்ற சர்வபாலகன்…!
அவதார புருஷன் அவன் ஆனந்த சாகரன்…! - அவன்
பாற்கடலில் பள்ளி கொண்ட மகாவிஷ்ணு…! – ஆம், அவனே

உலகை அளந்த கிருஷ்ணபாதம் வீட்டில் வரைந்து;
தட்டை, முறுக்கு, சீடையுடன் அவலும் படைத்து;
வெண்ணை, பால், தயிருடனே கனிகளும் வைத்து;
ராதா கிருஷ்ண வேஷமிட்டு குழந்தைகளெல்லாம்
கீதை சொன்ன கண்ணன் அவனைக் கூவி அழைத்து;
சின்னக் கண்ணன் பிறந்த நாளை கொண்டாடுவோமே…! – எங்கள்
ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த நாளை கொண்டாடுவோமே…! (3)
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் தோழிகளே!

கண்ணன் பாட்டு

Last edited: