தாமரை
தாமரை
எத்தனை முறை படித்தாலும், மிண்டும் மிண்டும் படிக்க தூண்டும் அழகிய கதை களம் சிஸ்டர்.
கொடிய கொரோனா காலகட்டத்தில் மன அழுத்தில் இருந்த போது தான் நான் இந்த கதையை படித்தேன் ,உண்மையாக நான் மிகவும் ரசித்து ஒன்றிய கதை இது,
என்டோ வலிகளை மறந்து வாய்விட்டு சிரித்தேன்.
எப்போவும் மறக்க முடியாது கொடைக்கானல் இயற்கையை நீங்கள் வர்ணித்து எழுதிய விதம், வாசர்களை கொடைமலைக்கே இழுத்து சென்று தஞ்சம் அடைய செய்திருக்கும் வேற லெவல் .
எங்கள் நாயகி மதுவர்ஷினி அல்டிமேட் சூப்பர் ஸ்டார்,
கருண் சாகர் கருணை கடல் தான், இயற்கையோடு ஒன்றி, இயற்கையை மதித்து அதன் பலன்களை பெற்று பலதரபட்ட மக்களுக்கு பயன்பட செய்தது, ராஜவம்சத்திற்க்கே உரிய குண இயல்புகள் .
விஷ்ணு -மது தூய நட்பு ஆத்மாத்தமானவை. ❤❤❤.
கலகலப்பு, நகைச்சுவை, காதல், நட்பு, அன்பு, இயற்கை அழகு என அனைத்தும் நிறைந்த மிகவும் அழகிய கதை.
எப்போவும் போல உங்க எழுத்து நடை வேற லெவல் ❤❤❤❤❤.
கதை வெளி வந்து போதே நான் என் கருத்தை பதிவு செய்ய நினைத்தது, காலம் கடந்த தாமதத்திற்கு மன்னிக்கவும் .
மிக்க நன்றி நர்மதா மா
உண்மை தான் டா. கொரோனா தாங்க இயலாத மன அழுத்தங்கள் தந்த நேரத்திலே.. வாசிக்க கூட மனம் ஒத்துழைக்கவில்லை. அதிலிரந்து மீளக் கையில் எடுத்தது இந்தக் கதைக் களம். பிடித்த விஷயங்களாக நிறைத்து எழுதுவோம் என்று சும்மா ஜாலியா எழுதிய கதை.. உங்களையும சிரித்து ரசிக்க வைத்தது மிக்க மகிழ்ச்சி.
உலகில் மிக உயரிய இரு உறவுகள்... படைப்பால் அல்லாது உணர்வால் கிடைப்பவை ... நட்பும் காதலும்.. அதனை படிக்க படைக்க எப்போதும் மகிழ்ச்சி தானே..
எப்போதும் அமைதியாக தந்து வந்த அளப்பரிய அன்பு இப்போது வெளிப்படையாக ..
நன்றி நன்றி டா