All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எஸ்எம்எஸ் பொங்கல் விழா பரிசுகள் - ஶ்ரீகலா

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்புள்ள ஶ்ரீஷா,

உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களைத் தளத்தில் எழுதும் ஒரு எழுத்தாளராகத் தெரியும். அவ்வளவே... போன தீபாவளி அன்று போட்டி வைப்பது தொடர்பாக என்னை அணுகினீர்கள். அப்போது காலம் கடந்து இருந்ததால் அடுத்து பொங்கலுக்குப் பார்க்கலாம் என்று கூறியிருந்தேன். சொன்ன நான் இதை மறந்துவிட்டேன். ஆனால் தாங்கள் இதை மறக்காது மறுபடியும் வந்து ஞாபகப்படுத்தினீர்கள். நான் எனது வேலைகளில் பிசியாக இருந்தேன். அதற்கடுத்து வந்த பிரச்சனைகள் என்று எனக்கு இதைச் சமாளிக்கவே நேரம் இல்லை. இதை உங்களிடம் சொல்லவும் செய்தேன். நீங்கள் அதைப் புரிந்து கொண்டு இந்தப் போட்டியை தனியாகச் செய்தீர்கள். இது ஒரு குழுவாகச் செய்திருக்கலாம். ஆனால் விதை நீங்கள் போட்டது. இது சம்பந்தமாக ஒவ்வொரு பதிவு போடும் போதும் என்னை டேக் பண்ணி போடுவீங்க. சிலது கண்ணில் படும். சிலது விழாது. அப்படி இருந்தும் என்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காது தாங்கள் ஆற்றிய பணி மகத்தானது. இதனால் உங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. யாரோ தளத்திற்கு நான் ஏன் உழைக்க வேண்டும் என்று நீங்க நினைக்கவில்லை. உங்கள் தளமாகக் கருதினீர்கள். இந்த எண்ணத்திற்காகவே நான் உங்களுக்குத் தலை வணங்குகிறேன். இன்னும் இது போல் பல போட்டியை நடத்த வேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன்.

இந்தப் போட்டி நடத்திய குழுவில இடம் பெற்றவர்கள், நடுவர்கள், பங்கு பெற்ற தோழமைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ஶ்ரீஷா, ஒரு சின்ன உதவி... இதில் பங்கு பெற்ற தோழமைகள், நடுவர்கள், வெற்றி பெற்றவர்கள் அனைவரது வீட்டு முகவரி வாங்கிக் கொடுக்க முடியுமா? என்னாலான சிறு பரிசு கொடுக்க விரும்புகிறேன். அடுத்து ஶ்ரீஷாவாகிய உங்களுக்கு என்ன பரிசு கொடுப்பது? தன்னலமற்ற உங்களது செயலுக்கு என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாம். கொடுத்துட்டா போயிற்று. ஆம், உங்களது புத்தகத்தை எனது பதிப்பகத்தில் போடலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். நடந்த பிரச்சனைகளில் கதையை இன்னும் படிக்கவில்லை. போட்டியை நேர்த்தியாக நடத்தும் உங்களது கதையும் நேர்த்தியாக இருக்கும் என்று நம்புகின்றேன். திருத்தப்பட்ட உங்களது கதையைத் திரும்ப மின்னஞ்சல் செய்யுங்கள். மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி கொள்கிறேன். மிக்க நன்றி மா 🙏🏻🙏🏻🙏🏻

அன்புடன்,
ஶ்ரீகலா 😊

View attachment 11771


நன்றி தோழி, வாழ்த்துகள் ஸ்ரீஷா


இனிய தோழி,

புதுமைகள் படைக்க தளம் உண்டு தோழி - அதன்

பெருமைகள் அனைத்தும் உனைச் சேரும் வாழி!

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 
Top