All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'நேசத்தின் வாசம் மாறுமோ' _ கதை திரி

Status
Not open for further replies.

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 4

ஊட்டியின் இரவு நேர குளிரை இளையராஜாவின் இசையோடு அனுபவித்தபடி மகனுக்கு பால் சுட வைத்து கொண்டிருந்த ஜெயதீபன் "ப்பா..." என்று அவன் இடையை சுரண்டிய மகனின் அழைப்பில் குனிந்தவன் ,

"சொல்லு தேவ்... பசிக்குதா! ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்ல சாப்பிடலாம் ஓகே" என்றான் ஜெயதீபன்.

அதற்கு மறுப்பாய் தலை அசைத்த தேவ் "சாப்பாடு வேணாம். அம்மாட்ட போனும்..." என்று சோகமாய் சொல்ல,

"ஏன் தேவ் குட்டிக்கு அப்பாவை பிடிக்கலையா?" என்ற ஜெயதீபன் தேவேஷ் முன்பு முட்டி போட்டு போதி உக்கார்ந்த நிலையில் கேட்க,

"பிடிக்கும்... ஆனா அம்மாட்ட போனும்" என்ற தேவேஷ் இதழ் கடித்து அழுகைக்கு அச்சாரமிட,

"ஓகே ஓகே.... இப்போ ரொம்ப பனியா இருக்கு மார்னிங் ஆனாதும் போலாம். இப்போ தேவ் குட் பாயா சாப்பிடுவானாம்..." என்று சமாதானம் செய்தபடி தேவேஷை தூக்கி சமையல் மேடையில் அமர வைத்தவன்

"உனக்கு முயல் தோசை சுடுவோமா?" என்று கேட்க,

"வேண்டாம். அம்மாட்டா போனும்..." என்றான் மீண்டும். இப்போது குரலில் பிடிவாதமும் சேர்ந்து இருந்தது.

தேவேஷின் பிடிவாதம் ஜெயதீபனுக்கு அவனை பார்த்து போல் இருக்க, வாஞ்சையுடன் அவன் தலை வருடியவன் "இன்னைக்கு ஒரு நாள் அப்பாவோட இரு தேவ். நாளைக்கு கண்டிப்பா அம்மாட்ட போலாம். அப்பா சொன்னா தேவ் கேட்பான் தானே!" என்று கேட்க,

ஜெயதீபனின் பாசமான கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தேவேஷ் முதலில் ஆமா... என்று தலையசைத்து பின்னை இல்லை என மறுத்து தலை அசைத்தவன், ஜெயதீபன் கெஞ்சலாய் பார்க்கவும் எல்லா பக்கமும் ஆட்டி வைத்தான்.

அதில் ஹாஹா.... என சத்தமாய் வாய்விட்டு சிரித்த ஜெயதீபன் "இத்தனை நாள் உன் அம்மா உன்னை எப்படி சமாளிச்சா?" என்று புன்னகையுடன் கேட்டவன்

"கொஞ்சம் கஷ்டம் தான் இல்ல" என்றான் பாவமாய்.

ஜெயதீபனின் பேச்சிலும் அவன் சிரிப்பிலும் லயித்த தேவேஷையும் சிரிப்பு தொற்றி கொள்ள கவலை மறந்து சிரித்தான்.

ஆனால் அப்போதும் அவன் தெளிவில்லாமல் இருக்க "குளிர் அதிகமா இருக்கு தேவ். நாம நாளைக்கு மார்னிங் கண்டிப்பா அம்மாட்ட போலாம். இப்போ அம்மாக்கு போன் போட்டு பேசுவோம். தேவ் குட்டி அம்மாட்ட பேசிட்டே சாப்பிடுவியாம்" என்று மகனை சமாதானம் செய்தவன்,

தேவேஷுடன் பேசி சிரித்தபடியே அவனுக்கு பிடித்த வகையில் நெய் ஊற்றி முறுகலாய் தோசை சுட்டு எடுத்துக்கொண்டவன் மகனையும் தூக்கிக்கொண்டு டைனிங் டேபிலுக்கு வந்தான்.

அவனை அமர வைத்து விட்டு "அம்மா நம்பர் சொல்லு தேவ்..." என்று கேட்க,

அவனை ஒரு மாதிரி பார்த்த தேவேஷ் ஒவ்வொரு நம்பராய் அழகாய் சொல்ல, அதை கேட்டு தேவியின் நம்பரை போனில் பதிவு செய்தவன் அவளுக்கு அழைக்க , அழைப்பு செல்லவில்லை.

தேவியின் எண் நெட்வோர்க் கவரேஜ் ஏரியாவிற்கு வெளியே உள்ளது என்று கம்யூட்டர் பதில் குரல் வர,

"அம்மாக்கு கால் ரீச் ஆகலை தேவ்" என ஜெயதீபன் சொல்ல,

அதில் தேவேஷ் மீண்டும் "அம்மாட்ட போனும்..." என்று கூற, ஜெயதீபனுக்கு தேவியின் மேல் கோபம் பெருகிய.

நேற்றைய அவளின் அடக்கப்பட்ட சிரிப்பு எதனால் என்று தேவேஷை அழைத்து வந்த சற்று நேரத்திலேயே ஜெயதீபனுக்கு புரிந்துவிட்டது.

தேவியிடம் சண்டை போட்டு மகனை அழைத்து வந்த ஜெயதீபன் தேவேஷிற்கு பிடித்ததை வாங்கி தர நினைத்து குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் உள்ள கடைக்கு அழைத்து சென்று... அவனுக்கு பிடித்த விளையாட்டு பொருளை வாங்கி கொடுத்தவன், அடுத்ததாய் அருகில் இருந்த ஐஸ்கீரீஸ் பார்லருக்கு அழைத்து சென்றான்.

முதலில் அவனுக்கு பிடித்த ஐஸ்க்ரீமை வாங்கி சாப்பிட்டவன், "இது அம்மாக்கு.." என்று கூறி தேவிக்கும் ஒரு பேமிலி பேக் ஐஸ்க்ரீமை வாங்கி கொண்டே கடையில் இருந்து வெளியே வந்தான்.

முதலில் தேவிக்கு என்று சொல்லி அவனுக்கு வாங்கி கொண்டதாக நினைத்த ஜெயதீபனும் அவன் புத்திசாலித்தனத்தை மெச்சி கொண்டான்.

காரில் வரும் போதே ஐஸ்கிரீமை தூக்கி காட்டியவன் "ப்பா... அம்மா ஐஸ்" என்று சொல்ல,

அப்போது அவன் சாப்பிட தான் கேட்கிறான் என்று நினைத்தவன் "நீ சாப்பிடு தேவ். அம்மாவுக்கு வேற வாங்கி தரலாம்" என்றான் ஜெயதீபன்.

அதற்கு மறுத்து தலையசைத்த தேவேஷ் "அம்மாக்கு இருக்கட்டும்" என்று விட,

தேவியின் மீதான் அவனின் பாசதைத்து பார்த்து பூரித்து போனவன் "அம்மா ஊருக்கு போய்ருப்பா தேவ். நீ சாப்பிடு..." என்று சொல்லி விட,

அப்போது ஆரம்பித்தது தேவேஷின் அம்மா புராணம். இன்னும் ஓயவில்லை.

என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் 'அம்மாவிடம் போக வேண்டும்' என்பதே அவன் சொல்லாக இருக்க, ஜெயதீபனுக்கு அவனை சமாதானம் செய்யவும் தெரியவில்லை.

அதே நேரம் அவனை அதட்டி அமைதிப்படுத்தவும் அவன் மனம் இடம் தரவில்லை. இத்தனை வருடங்கள் கடந்து இன்று தான் அவனை பார்த்திருக்க பார்த்த அன்றே கடிந்து கொள்ள மணம் வரவில்லை அதே நேரம் முதல் காயம் மனதில் ஆழ பதிந்து விடும் என்பதால் பொறுமையாகவே பேசி அமைதி படுத்தினான்.

ஜெயதீபனும் வித விதமாய் பேசி சமாதானம் செய்து பார்க்கிறான் ஆனால் அவன் மகனுக்கு அந்த வார்த்தைகள் போதவில்லை போலும்.

தேவேஷ் தொடர்ந்து அடம் பிடிக்கவும் அவனை முறைத்த தீபன், "அம்மா ஊருக்கு போய்ருப்பாங்க தேவ். வெளிய பனி அதிகமா இருக்கு. இந்த நேரம் வெளிய போனா ஃபீவர் வரும். அப்பறம் உனக்கு ஊசி போடனும். நாம காலையில கண்டிப்பா அம்மாகிட்ட போலாம்" என்றான் ஜெயதீபன் இப்போது கண்டிப்புடன்.

அதில் தேவேஷின் முகம் நொடியில் வாடி விட, தேவியை மனதில் திட்டியபடி மகன் தலையை தடவி கொடுத்தவன்

"தேவ் குட்டிக்கு என்ன எல்லாம் பிடிக்கு சொல்லுங்க... நாளைக்கு நாம போய் வாங்கிட்டு வரலாம். அப்படியே அம்மாக்கு ஐஸ்கிரீம் வாங்கிட்டு ஊருக்கு போலாம்" என்று உற்ச்சாகமாய் பேசியபடி அவனுக்கு உணவூட்டி முடித்த ஜெயதீபன்,

கொஞ்ச நேரம் மகனுடன் இணைந்து விளையாடினான். சற்று நேரத்தில் தேவேஷ் தூக்கத்தின் பிடிக்கு செல்ல,

மின்மனி பூச்சியாய் இமை மூடி திறந்து கொட்டாவி விட்ட மகனை தூக்கி கொண்டவன், தோளில் போட்டு தட்டி கொடுத்தான்.

சற்று நேரம் அமைதியாக அவள் தோள் சாய்ந்திருந்த தேவேஷ் "ப்பா கதை..." என்றான்.

"கதையா....!" என திகைத்த ஜெயதீபன். "என்ன கதை வேணும் தேவ் குட்டிக்கு" என்று மகனிடமே கேட்க

"பிரின்சஸ் கதை" என்றான் மகன்.

"பிரின்சஸ் கதையா? உன் மம்மி எந்த பிரின்சஸ் கதை சொன்னானு தெரியலையே டா" என்ற ஜெயதீபனுக்கு கதை சொல்ல தெரியாது என்பதை விட கதை தெரியாது.

அதில் மகன் வேறு பிரின்சஸ் கதை கேட்க "அப்பா பிரின்ஸ் கதை சொல்லவா... டா" என்று கேட்டவன் மகன் சரி என்று தலையசைக்கவும்

அவன் வாழ்வில் நடந்த விஷயங்களையே கதை போல் மெல்லிய குரலில் ஜெயதீபன் சொல்ல,

சற்று நேரத்தில் "அப்பா லார்ட் கிருஷ்ணா கதை" என்றான் மகன் இன்னும் தூக்கம் பிடிக்கா விழிகளுடன்.

"அவர் லவ்வர் பாய் தானே டா அவர் கதையா வேணும்?" என்ற ஜெயதீபனுக்கு 'என் வாழ்க்கை உனக்கு அவ்வளவு சலிப்பாவாடா இருக்கு' என மனதில் நினைத்தபடி, கதையை கூகிள் சர்ச் செய்து மகனுக்கு கூறினான்.

அதன் பிறகே தேவேஷ் உறங்க, அவனுக்கு தட்டி கொடுத்த தீபனின் மனதை செந்தூரதேவி வியாபித்தாள்.

ஒரு நாளிலேயே மகன் அவனை இத்தனை படுத்தி வைக்க தேவி எப்படி சமாளித்தாள் என வியப்பாக நினைத்தவனுக்கு மனைவியின் நினைவில் மனம் கனிந்து போனது.

ஆனந்தி அவளை வேண்டாம் என ஒதுக்கி விட்டு வந்த பிறகு என்ன துன்பங்களை எல்லாம் அனுபவித்து இருப்பாள்... இந்த சமூதாயம் அவளை எப்படி எல்லாம் பழித்து பேசி இருக்கு... அதை எல்லாம் எப்படி கடந்து வந்தாள்! என ஒவ்வொன்றையும் எண்ணி பார்த்தவனுக்கு காலையில் தேவியின் மீதிருந்த கோபம் எங்கோ சென்று ஒளிந்து கொண்டது.

காலையில் கோபத்தில் பேசி சென்றவளின் முகம் கண் முன்னே விரிய "ரெட் சில்லி.." என்று புன்னகையுடன் கூறி கொண்டவன் மனதை மீண்டும் மீண்டும் தேவியே ஆக்கிரமித்தாள்.

ஸ்வெட்டர் போட்டும் குளிரில் உடல் நடுங்க மார்பின் குறுக்கே கைகளை கட்டி கொண்டு... அவனிடம் வெடித்தவளை நினைவு கூர்ந்தவன் மனம் தடம் மாறி பயணிக்க போக,

"அடங்கு டா. அவளுக்கு மட்டும் நீ இப்படி யோசிக்கிறது தெரிஞ்சி மிளகாய் கண்ணுல தேய்ச்சி விட்டுடுவா. இன்னும் சரியா பேசவே தொடங்களை அதுக்குள்ள என்ன எல்லாம் யோசிக்குற நீ" என தனக்குள் பேசி கொண்டவன் தலையில் அடித்து கொள்ள போக, அப்போது தான் கையில் இருந்த போனை பார்த்தான்.

முன்பு அழைப்பு செல்லாமல் இருக்க, இப்போது மனதின் உத்துதலில் ஜெயதீபன் அழைப்பு விடுக்க, இந்த முறை அழைப்பு சென்றது.

காலர் டியூனாக கேட்ட "உனக்காக பிறந்தேனே எனதழகா" என்ற பாடல் வரிகள் தீபனின் மனதில் காதல் கலவரத்தை மூட்ட, அதில் சுகமாய் எரிந்தவன் தேவியின் குரல் கேட்க காத்திருந்தான்.

சில நொடிகளில் "ஹலோ.." என்ற தேவியின் குரல் கரகரப்புடன் கேட்க,

"என்ன செய்து?" என்றான் ஜெயதீபன் இயல்பாய் எழுந்த அக்கறையுடன்.

'யாரோ...' என நினைத்து அழைப்பை ஏற்ற தேவி, தீபன் குரல் கேட்கவும் பயம் தனிந்தவளாய்

"என்ன என்ன செய்து?" என்றாள் அவன் கேட்க வருவது புரியாதவளாய்.

"குரல் சரி இல்லையே... ஏன்னு கேட்டேன்" என்று ஜெயதீபன் விளக்க,

"குளிர் ஒத்துக்கலை லைட்டா ப்வர் இருக்கு" என்ற தேவி "எதுக்கு இந்த நேரத்துல கால் பண்ணிங்க" என்று கேட்டாள்.

"தேவ் பேசனும்னு சொன்னான். அதான் கால் பண்ணேன். பட் அவன் இப்போ தூங்கிட்டான்" என்று ஜெயதீபன் சொல்ல,

"இனிமேல் பையனை நான் பார்த்துக்குறேன். உன் வாழ்க்கையை நீ யாருனு சொன்னிங்க! இது தான் நீங்க தந்த சுதந்திரமா?" என்றாள் தேவி சீண்டலாய்.

அவளின் சீண்டல் பேச்சில் கோபம் கொண்ட ஜெயதீபனும் "எப்போட விட்டுட்டு போலாம்னு தான் இருந்த போல!" என்றான் நக்கலாய். ஆனால் குரலில் கோபமே அதிகம் இருக்க

"இப்போ எதுக்கு இந்த ஆராய்ச்சி? எனக்கு தூக்கம் வருது" என்ற தேவி ஜெயதீபனுடனான பேச்சை துண்டிக்க பார்க்க, அதை புரிந்து கொண்ட தீபனின் முகம் கோபத்தில் கடுகடுத்தது.

"திமிரு டி உனக்கு.வேற ஒன்னும் இல்லை" என்றான் ஜெயதீபன் பல்லை கடித்து கொண்டு.

அதற்கு பதில் பேசாமல் தேவி அமைதியாக இருக்க, "என்ன அமைதி ஆகிட்ட? உனக்கு தான் நல்லா பேச வருமே... பேசு..." என்ற ஜெயதீபன் அடக்கிய கோபத்துடன் கூற

"உங்களுக்கு என்ன பிரச்சனை இப்போ? எதுக்கு தேவை இல்லாம கால் பண்ணி சண்டை இழுக்குறிங்க?" என்றாள் தேவியும் கோபமாய்.

"ஏன் உனக்கு புரியலையானா நான் எதுக்கு பேசுறேன்னு?" என்ற ஜெயதீபன் கோபத்தை விடுத்து பொறுமையாக கேட்க,

தேவியிடம் மௌனம்.

"பதில் சொல்லு டி. நான் ஏன் பேசுறேனு புரியலையா?" என்ற ஜெயதீபன் சீற,

"நீங்க நினைச்சதும் சேர்ந்து வாழ்ந்துட முடியாது. முடியாததை..." என்ற தேவியின் பேச்சை இடை வெட்டியது "என்னை கேட்டு தான் நீ என் வாழ்க்கையில வந்தியா?" என்ற ஜெயதீபனின் வார்த்தை.

மீண்டும் தேவி மௌனமாகி போக,

"பதில் சொல்லுடி..." என்றான் தீபன் ஆவேசமாய்.

அவன் கோபத்தில் சற்றே மிரண்ட செந்தூர தேவி "இல்லை.... அது.." என்றவள் அவனுக்கு என்ன பதில் சொல்ல என்று தயங்க,

"இல்லை ரைட்! அதே தான்... இப்பவும். என் வாழ்க்கையில் வரதுக்கு எப்படி நீ என்னை கேட்கலையோ! அதே மாதிரி இப்போ நாம சேர்ந்து வாழவும் உன் முடிவு தேவை இல்லை. ஏன்னா இங்க என் வாழ்க்கையை நம்ம வாழ்க்கைனு மாத்துனதே நீ தான்" என்றான் ஜெய்தீபன் அழுத்தம் திருத்தமாய்.

அவனின் தொடர் பேச்சில் தேவேஷின் தூக்கம் கலைந்து விட, இமை பிரிக்காமலேயே "ம்மா..." என்று அவன் மெல்ல சினுங்க,

"ஓகே.... ஓகே... தூங்குங்க. நாளைக்கு அம்மாட்ட போலாம்" என்று மீண்டும் தட்டி கொடுத்து தூங்க வைத்தான்.

மகன் தூக்கும் வரை இருவரும் இணைப்பில் அமைதியக இருக்க, தேவேஷ் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லவும் அவனை பெட்டில் படுக்க வைத்தவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து கார்டனில் நடந்த ஜெயதீபன்

"இப்போ பேசு..." என்றான்.

"என்ன பேச?" என்று தேவி சலிப்புடன் கேட்க,

"இவ்வளவு சலிச்சிக்காத டி. நம்ம வாழ்க்கையே இனிமேல் தான் தொடங்க போகுது" என்ற ஜெயதீபன் கோபத்தை எல்லாம் உதறி விட்டு ஒரு வித இதமான மனநிலையில் பேச,

"ப்ச் இதையே பேசாதிங்க. வேஸ்ட். வேற ஏதும் சொல்லனும்னா சொல்லிட்டு கால் கட்டு பண்ணுங்க" என்றாள் தேவி சிடுசிடுப்புடன்.

அவனுடன் வாழ எங்கி தவித்த நாட்கள் எல்லாம் அவன் எட்டா கனி என்று தலையில் அணி அடித்து உணர்த்தி இருந்தது.

அவளின் காதல் பட்ட மரமாக போய் பல வருடங்கள் ஆகி விட்டது என நினைத்திருந்தவள் இப்போது மீண்டும் புதிதாய் துளிர் விட்டதை எற்க முடியாது தவிக்கிறாள்.

"என்னை என்னடி நினைக்குற நீ. உண்மை தெரியாம நிம்மதியா இருந்தவன் கிட்ட உண்மையை சொல்லிட்டு இப்போ வந்து சேர்ந்து வாழ மாட்டேன்னா என்ன அர்த்தம்?" என்ற ஜெயதீபன்,

"என்னோட சேர்ந்த வாழ மாட்டேன்னு உறுதியா இருக்குறவ உண்மையை சொல்லியே இருக்க கூடாது...." என்றான்.

"தப்பு தான். உரிமை இல்லாம உண்மையை சொல்லி இருக்க கூடாது" என்ற தேவியும் வேதனையும் விரக்தியுமாய் சொல்ல,

அவள் சொல்ல வருவது புரியாத தீபன் "தெளிவா பேசுடி. என்ன உரிமை இல்லை உனக்கு? எங்கிட்ட உனக்கான உரிமையை யார் தரனும்? யூ ஆர் மை வைஃப்" என்று ஜெயதீபன் அழுத்தமாய் சொல்ல,

"இல்லை.... எனக்கு உங்க கிட்ட எந்த உரிமையும் இல்லை. எனக்கு மட்டும் இல்லை தேவ் கூட உங்ககிட்ட உரிமை இல்லை. ஏன்னா நமக்கு டிவோர்ஸ் ஆகிட்டு" என்றாள் செந்தூரதேவி சீற்றமாய்.

தொடரும்...
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... மக்களே 😍

இதோ "நேசத்தின் வாசம் மாறுமோ!" கதையின் 4வது அத்தியாயம் பதிவிட்டு விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே ❤

கருத்து திரி 👇
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 5

தேவி சொல்வதை நம்ப முடியாமல் அதிர்ந்த ஜெயதீபன் "வாட் கம் அகைன்..." என்றான் அதிர்வுடன்.

"எஸ் வீ காட் டிவோர்ஸ்டு. வீ ஆர் நாட் ஹஸ்பெண்ட் அன்ட் ஃவைப் நவ்" என்றாள் தேவியும் கொதிப்புடன்.

ஐந்து வருடம் முன்பு பட்ட வலிகள் எல்லாம் இப்போது இரும்பு கம்பியால் பட்ட சூட்டு காயமாய் உடலிலும் மனதில் தீரா வலியையும், எரிச்சலையும் கொடுக்க, பேச்சில் கோபத்தின் வீரியம் அதிகமாகவே இருந்தது.

"பதில் கிடைச்சிதா. போதுமா...?" என்ற தேவி கோபம் தனியாதவளாய் கேட்க,

அவள் சொன்னதை இன்னும் நம்ப முடியாமல் திகைத்து வாயடைத்து நின்ற ஜெயதீபன் "எப்படி!!!" என்றான் திகைப்பு அகலாதவனாய்.

"நமக்கு கல்யாணம் பண்ணி வச்ச உங்க அம்மாவே டிவோர்ஸும் பண்ணி வச்சிட்டாங்க. நம்ம கல்யாணம் நீங்க மனநிலை சரி இல்லாதப்போ நடந்ததுங்குற.. ஒரே காரணத்தை வஞ்சி அவங்க நினைப்பதை நடத்திக்கிட்டாங்க" என்று வலியும் வேதனையும் நிறைந்த குரலில் சொன்ன தேவியின் கண்கள் சூடான கண்ணீரை உதிர்த்தது.

"நடந்து முடிஞ்சது எல்லாத்தையும் நினைச்சி பார்க்கும் போது தான் லைஃப்ல நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்து இருக்கேன்னு புரியுது" என்ற தேவியின் முகம் நொடியில் இறுகி போய் இருந்தது.

எத்தனை எத்தனையோ... முறை இப்படி நினைத்து வருந்தி இருக்கிறாள். ஆனால் அப்போதெல்லாம் ஜெயதீபனும் நினைவு வருவான். அவனை நினைத்தும் மனம் வேறு யோசனைக்கு சென்று விடும். அதில் அவனுக்காக முட்டாள் ஆனதில் ஒன்றும் தப்பில்லை என்று தோன்றி விடும்.

ஆனந்தி வேண்டுமானால் அவளை வாழை இலையாக பயன்படுத்தி இருக்காலாம். ஆனால் ஜெயதீபனை அப்படி சொல்லி விட முடியாது.

அவள் ஜெயதீபன் மீது கொண்ட நேசம் உண்மை. அதே போல் தீபனும் அவன் மேல் அன்பு கொண்டது உண்மை. ஆம் அன்பு தான். அதனாலேயே அவன் நன்றாக இருந்தால் போதும் என்று ஆனந்தி செய்த அனைத்தையும் பொறுத்துக் கொண்டாள்.

ஆனால் அதன் பிறகு பல முறை ஜெயதீபனை விட்டு இருக்க கூடாதோ என நினைத்து வருந்தியும் இருக்கிறாள். இப்போதும் அந்த வருத்தம் இருக்க அதன் வெளிப்பாடாய் வார்தைகள் வந்து விழுந்தன,

"நீ முட்டாள் இல்லை டி. என்னை தான் எல்லாரும் முட்டாள் ஆக்கிட்டிங்க" என்றான் ஜெயதீபன் அமைதியான, ஆனால் வலி நிறைந்த குரலில்.

அந்த குரல் தேவியை என்னவோ செய்ய, அவள் கண்ணில் திரண்டு நின்ற நீர் சிப்பிக்குள் விழும் மழை நீராய் தரையில் பட்டு தெரிந்தது.

தேவியின் அமைதியில் தானும் சில நொடிகள் அமைதி காத்த ஜெயதீபன் "சொல்லு... வேற என்னலாம் செஞ்சி வச்சிருக்கிங்க? தேவ் ஏன் எனக்கு உரிமை இல்லை? நமக்கு டைவர்ஸ் ஆச்சினா... என் மகன் எனக்கு பிள்ளை இல்லைன் ஆகிட முட்டானே!" என்று ஜெயதீபன் இறுகிய குரலில் கேட்க,

அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத தேவி அழைப்பு துண்டித்து விட்டாள்.

அதில் ஆத்திரம் பெருக காலால் மண்ணை உதைத்து தள்ளியவன் அந்த இரவை யுகங்களாய் கடந்திருந்தான்.

ஊட்டியின் குளிர் அவன் இதையத்தின் அனலை தனிக்காமல் தள்ளி நின்று வேடிக்கை பார்க்க, தேவேஷ் எழும்பும் வரை காத்திருந்தவன் அவன் எழுந்ததும் அவனை அழைத்து கொண்டு கிளம்பி விட்டான்.

தேவியை கேள்வி கேட்கும் முன் அவன் வாழ்வில் நடந்த அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது அவன் கேள்விக்கு பதில் சொல்லு ஆள் பட்டம்மாள் என்பதால் அவரை பார்க்க சென்றான்.

ஆனந்தியிடமோ, தேவியிடமோ, இதை பற்றி பேசினால் சரியான பதில் வராது என்று தெரிந்து விட, அவன் விசாரனை பட்டம்மாள் பக்கம் சென்றது.

அவன் இருக்கும் இடத்தில் இருந்து பத்து கீலோ மீட்டர் தொலைவில் தான் பட்டம்மாள் இருந்தாள். அவர் இருக்கும் இடம் அதிக மாலை பாங்கான இடம். அங்கு குளிர் இதை விட அதிகம் இருக்கும் என்பதால் தேவேஷிக்கு ஸ்வேட்டரை போட்டு மகனை தூக்கி கொண்டு பட்டம்மாள் வீட்டிற்கு வந்தான்.

"வாங்க சார்... பெரியம்மாவும் சின்ன மேடமும் ஹாஸ்பிடல் போய் இருக்காங்க" என்றாள் பட்டம்மாளுடன் துணைக்கு இருக்கும் சுவாதி.

"அம்மா வந்துருக்காங்கலா?" என ஒரு மாதிரியான குரலில் ஜெயதீபன் கேட்க,

"பட்டு பாட்டி.." என அழைத்தபடி தேவேஷ் தீபனிடம் இருந்து இறங்கி வீட்டிற்குள் ஓட,

'முன்னாடியே இங்க வந்து இருக்கானா!' என்ற யோசனையுடன் தீபனின் பார்வை அவனை தொடர,

"இல்லை சார். சின்ன மேடம்" என்றாள் சுவாதி தயக்கத்துடன்.

அதில் தீபன் பார்வை சுவாமியிடம் வர 'யார்...' என்று புரியாமல் ஜெயதீபன் பார்க்க,

"உங்க வைஃப் சார்" என்றாள் சுவாதி.

'ஹோ... இங்க தான் இருக்காளா!' என நினைத்தவன் "எப்போ போனாங்க? கால் பண்ணி கிளம்பிட்டாங்களா கேளுங்க... நான் வந்துருக்கேன்னு சொல்ல வேண்டாம்" என்றான் ஜெயதீபன்.

சுவாதியும் பட்டம்மாளுக்கு போன் செய்து பேசியவள் "வந்துட்டு இருக்காங்களாம் சார்..." என்றாள்.

"சரி அவங்க வந்ததும் சொல்லுங்க நான் என் ரூம்ல இருக்கேன்" என்று அறைக்கு சென்ற ஜெயதீபன் கார் சத்தம் கேட்கவும் தான் வெளியே வந்தான்.

தேவேஷ் அதற்கு வெளியே ஓடி வந்து தேவியை கட்டி கொள்ள, மகனை அங்கு சற்று எதிர்பார்க்காமல் அவனை தூக்கி கொண்ட செந்தூர தேவியின் பார்வை வாசலை பார்க்க, ஜெயதீபன் அவளை தான் பார்த்து நின்றான்.

பட்டம்மாளும் அவனை அங்கே எதிர் பார்க்காமல் "என்னடா திடீர்னு வந்து நிக்குற?" என்று கேட்டபடி உள்ளே வர,

அவருக்கு வழி விட்டு நின்றவன் "நீங்க எல்லாரும்... எங்கிட்ட சொல்லிட்டு தான் எல்லாம் பண்றிங்க போல?" என நக்கலாய் கேட்டவன், திரும்பி "நீ ஏன் நின்னுட? இப்படியே ஊருக்கு பஸ் பிடிக்கு எண்ணமா?" என்றான் தேவிடம்.

காய்ச்சலில் சோர்ந்து இந்த தேவி அவனுக்கு பதில் சொல்லாமல் உள்ளே சென்று சோஃபாவில் அமர்ந்தாள்.

"தேவ்... சுவாதி ஆன்ட்டி கிட்ட அம்மாக்கு டேப்ளேட் போட ஹாட் வாட்டர் வைக்க சொல்லு" என்று சொல்லி மகனை அங்கிருந்து அனுப்பிய ஜெயதீபன் தேவி முன்பு வந்து நின்றான்.

"என்ன...?" என்ற தேவி அவனை ஏறிட்டு பார்க்க,

காய்ச்சலில் களைத்து முகம் வட அமர்ந்து இருந்தவளை பார்த்தவன் "இப்போ எப்படி இருக்கு?" என கேட்டபடி அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தான்.

தேவியின் உடல் சூட்டை அவன் கை உணரும் முன்பே தேவி அவன் கையை தட்டி விட, அதை பொருட்படுத்தாமல் மீண்டும் அவள் கன்னத்தில் கை பதித்தான் ஜெயதீபன்.

இந்த முறை தேவி அவன் கையை தட்டி விட முடியாதபடி அழுத்தம் கூட்டி தொட்டவன் "ஒரு பேப்பரால நம்மோட உறவை பிரிக்க முடியாது. அதுவும் நான் சுயமா எடுக்காத முடிவுக்கு நீ இவ்வளவு முக்கியத்துவம் தர தேவை இல்லை. எனக்கு நீ வேணும். விட மாட்டேன்..." என்றான் ஜெயதீபன் அதீத பிடிவாதத்துடன்.

"உண்மை தெரிஞ்ச பின்னாடியும் கூட தேடி வராம இருந்துட்டு. இப்போ என்ன பாசம் பாயாசம் எல்லாம்?" என்ற தேவி முகம் திரும்பி கொள்ள,

ஜெயதீபன் திரும்பி பட்டம்மாளை முறைக்க, அவர் புரிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

அதில் சின்ன சிரிப்புடன் தேவி பக்கம் திரும்பியவன் "அது தான் கோபமா?" என்று கேட்க,

தேவியின் இமையோரம் நீர் தேங்கி விட்டது. அவள் பட்ட வலிகள் எல்லாம் வரிசை கட்டி முன் வர, வெடிக்க இருந்த கேவலை இதழ் கடித்து அடக்கி கொண்டவள் அவனை ஆங்காரமாய் பகிர்ந்தாள்.

இப்போது அவள் கோபம் ஜெயதீபனை பாதிக்கவில்லை. அவள் கண்ணில் மின்னிய கண்ணீர் துளி அவளின் காயத்தை மட்டுமின்றி அவளின் காதலையும், பிரிவின் வலியையும் சொல்ல,

"என் மேல எப்படி இவ்வளவு காதல்? ஏன் இவ்வளவு கோபம்? இரண்டுக்குமே எனக்கு காரணம் தெரியலை. தெரிஞ்சிக்கனும்..." என்ற ஜெயதீபன் அவள் கண்ணீரை துடைக்க போக,

அவன் கையை பட்டென தட்டிவிட்டு வகட்டு எழுந்து உள்ளே சென்ற தேவி சில நிமிடங்களில் திருப்பி வந்து ஒரு பேப்பரை அவன் முன்னே விட்டெறிந்தவள் "நமக்குள்ள உறவே இல்லைனு சொல்லி.. மிரட்டி... உங்க அம்மா கையெழுத்து வாங்கிட்டு போகும் போது கூட நீங்க வருவிங்கனு நம்பிக்கை நிறையவே இருந்து. ஆனா இந்த பேப்பர்ல எல்லாம் நீங்க சுயநினைவோட தான் படிச்சி கையெழுத்து போட்டு குடுத்திங்கனும் தெரிஞ்ச அப்பறம் தான் என் பைத்தியக்கார தனம் புரிஞ்சி" என்றாள் தெவி ஆவேசமாய்.

செந்தூர தேவி கோபமாய் பேச பேச அவள் கண்ணீரும் பெருகி வழிய அதை அழுந்த துடைத்துக் கொண்டவள் "நீங்க கேட்டதுக்கு பதில் அதுல இருக்கு" என்று விட்டு உள்ளே சென்று விட்டாள்.

அந்த பேப்பரை எடுத்து படித்த ஜெயதீபனின் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் இறுக, அதை படித்து முடித்த நேரம் அவன் நெற்றி நரம்புகள் கூட புடைத்து இருந்தன.

தேவிக்கும் அவனுக்கும் எந்த வகையிலும் உறவு இல்லை என்றதுடன் தேவேஷ் அவன் மகன் இல்லை என்றும் தேவியுடன் அவன் ஃபிசிக்கல் ரிலேஷன் சிப் வைத்துக்கொள்ள என்றும் சுய நினைவுடன் எழுதி கொடுத்ததாக இருக்க அதில் தீபனின் கையெழுத்தும் இருந்தது.

ஜெயதீபனின் முக இறுக்கம் அவனின் கட்டுக்கடங்காத கோபத்தை வெளிப்படுத்த, கண்கள் ரத்தம் என சிவந்து போனது.

வெறும் வெற்று காகிதத்தை படித்த தனக்கே இப்படி இருக்கிறது என்றால் அப்போதைய தேவியின் வலி எத்தனை கொடுமையானதாய் இருந்திருக்கும் என்று நினைத்தவனின் மனம் வேதனையில் கசங்கி போனது.

கடந்த சில வருடங்களில் அவனின் வாழ்க்கைவேரில் பல சிக்கல் ஏற்ப்பட்டது சிதைத்து கிடப்பதை உணர்ந்தவன். அவற்றை சேதாரமில்லாமல் சரி செய்ய நினைத்தான்.

முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். இனிமேல் அதை நினைத்து வேதனையில் உழன்று... இருக்கும் நாட்களை சிக்கலாக்கி கொள்ள வேண்டாம் என நினைத்தான் ஜெயதீபன்.

தீர்க்கமாய் முடிவு எடுத்த பின் மனது சற்று சமன் பட, நிதானத்துடன் கையில் இருந்த பேப்பரை கிழித்து குப்பை தொட்டியில் வீசியவன் பட்டம்மாள் அறைக்கு வந்தான்.

அவன் வரவை அவரும் எதிர் பார்த்து இருப்பார் போலும் நடந்த அனைத்தையும் கூறி விட்டார்.

அவர் சொன்ன அனைத்தையும் கேட்டு நெஞ்சம் புழுங்கி போனவனுக்கு, ஜன்னல் வழி வீசிய தென்றல் காற்றாய் இதம் சேர்த்தது தேவியின் அப்பழுக்கற்ற காதல்.

அவளுடையது முழுக்க முழுக்க ஒரு தலை காதல். சொல்லாத காதலும் கூட. ஆனால் அதன் அழுத்தமும், ஆழமும் கடல் போல். வெளியே அமைதியாக இருக்கும் கடலின் உள் சுழற்ச்சியும் ஆழமும் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாது. உள்ளே இறங்கி விட்டால் உயிர் தப்ப முடியாது.

அதை புரிந்து தேவியின் காதலின் ஆழந்தை அளந்து விட இறங்க துணிந்து விட்டான் ஜெயதீபன்.

முற்று பெற்றது விட்டது என்று அவன் மனைவி சொன்ன உறவுக்கு கமாவை போட்டு அடுத்த வரிகளை எழுத முடிவு செய்து விட்டான்.

வாழ்கை பற்றிய தெளிவான முடிவு அவன் மனதையும் தெளிவாக்க எழுந்து தேவி இருந்த அறைக்கு செல்ல போக, தேவி மகனை அழைத்துக்கொண்டு பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள்.

அவன் ஒன்று சேர நினைக்க, மனைவி பிரிவின் விழிம்பிலேயே நின்று விட்டதை புரிந்து கொண்டவன் "எங்க கிளம்பிட்ட?" என்றான் நிதானமாய்.

"என் வீட்டுக்கு போறேன்" என்றாள் தேவி முடிவாய்.

"உங்க வீட்டுல யார் எல்லாம் இருக்காங்க?" என் கேட்டு மகனை வாங்கி கொண்ட ஜெயதீபன் "தேவ் அப்போவோட இருக்கியா?" என்று கேட்க,

"வேண்டாம். அம்மாட்ட..." என்று தேவியிடம் சென்ற தேவேஷ் அடுத்த நொடியே "அப்பாட்ட.." என்று மீண்டும் அவனிடமே வந்து இருந்தான்.

தேவ் முகத்தில் ஆசையும், பயமும் சரி விகிதத்தில் இருக்க, தேவியை அர்த்த பார்வை பார்த்தவன் "அம்மாவும் நம்மோட தான் இருப்பாங்க தேவ்" என்றான்.

"நாங்க மட்டும் தான். அம்மா அப்பாவோட ஓமன்ல இருக்காங்க" என்ற தேவி "தேவ் ஆசை பட்டா உங்களோடவே இருக்கட்டும்" என்றவள் அவள் முடிவில் உறுதியாக இருக்க,

"அவனுக்கு மட்டும் இல்லை எனக்கும் நீ வேணும்" என்றான் ஜெயதீபன்.

அதில் பெருமூச்செறிந்த செந்தூர தேவி "நான் துரோகத்தால வீழ்ந்தப்பட்டிருக்கேன். அதோட வலி உங்களை பார்க்கும் போதெல்லாம் அதிகமாகுது. என்னால முடியலை... நான் என்ன செய்யட்டும்?" என்றாள் தேவி மிகுந்த வலியுடன்.

"மறக்க ட்ரை பண்ணு. இதுவரைக்கும் வலியிலேயே வாழ்ந்துட்டேன் இனிமேயும் வாழ்ந்துக்குறேன்னா என்ன அர்த்தம்‌?".

"ட்ரை பண்றேன். ஆனா உடனே முடியாது" என்றாள் தேவி. சட்டென அவனுடன் உறவாட வரவில்லை. அவர்களுக்கான உறவும் அவ்வளவு ஆழமாய் இருந்தது இல்லை என்பதால் அது புதிதாகவும் தோன்றவில்லை.

கணவன் தான். ஆனாலும் அவருடனான வாழ்க்கை என்பது இரண்டு மாதங்கள் தான். அதிலும் காதலும்,பாசமுமாய் வாழ்ந்த உணர்வுபூர்வமான வாழ்க்கை இல்லை . பருவத்தில் ஏற்ப்பட்ட காதல் மயக்கம், பட்ட வலியின் பயனால் பறிபோயிருக்க இப்போது அவர்களுக்கான பந்தம் என்ன என்று தெரியவில்லை.

அவர்களின் உறவு என்றால் தேவேஷை வைத்து தான். அதுவும் உருவமில்லா பேப்பரில் ஊஞ்சலாடி கொண்டிருக்க தேவியிடம் பெரும் தயக்கமே.

தேவியின் முகத்தில் தோன்றி மறைந்த பாவனைகள், அவள் மனதை தீபனுக்கு படம் பிடித்து காட்ட,

"இது என்ன?" என்றான் அவள் கழுத்தில் தொங்கிய தாலியை காட்டி.

"ஏன் உங்களுக்கு தெரியாதா? அது என்னனு?" என்றாள் தேவி முறைப்புடன்.

"எனக்கு தெரியுது. நீ சொல்லு அது என்ன?" என்ற ஜெயதீபன் அதிலேயே நிற்க,

"தாலி.." என்றாள் தேவி கடுப்புடன்.

"இதை நான் கட்டுனேனா இல்லை நீயே கட்டிக்கிட்டியா?" என்றான் அடுத்ததாய்.

"நீங்க தான்" என்று தேவி முறைத்தபடியே பதில் தர,

"அப்பறம் எப்படி நம்மோட உறவு முடிஞ்சிட்டதா சொல்ற? எது நம்ம உறவை இணைச்சிதோ அதால மட்டும் தான் பிரிக்கவும் முடியும்? டிவோர்ஸ் பேப்பரை நீயும் வெத்து பேப்பரா தான் நினைச்சிருக்க. அதான் இது இன்னும் உன் கழுத்துல இருக்கு" என்றான்.

தேவி அவனை முறைத்தபடியே நிற்க,

சிறு புன்னகையுடன் அவளை நெருங்கிய ஜெயதீபன் இப்போது இன்னும் உரிமையுடன் அவள் கழுத்தில் கை வைத்து அவள் உடல் சூட்டை ஆராய்ந்தான்.

தொடரும்...
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Daali வருவான் நு சொன்ன எங்க காணோம்.. யுடி எப்போ 🤗🤗
 
Status
Not open for further replies.
Top