All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'நேசத்தின் வாசம் மாறுமோ' _ கதை திரி

Status
Not open for further replies.

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பட்டுஸ் புது கதையோட உங்களை சந்திக்க வந்து விட்டேன் 😍

ஆனா எபி இப்போ வராது. கொஞ்சம் பிஸி சீக்கிரம் எபியோட வரேன்.❤😍.
 
Last edited:

Vaishanika

Bronze Winner
ஹாய் பட்டும் புது கதையோட உங்களை சந்திக்க வந்து விட்டேன் 😍

ஆனா எபி இப்போ வராது. கொஞ்சம் பிஸி சீக்கிரம் எபியோட வரேன்.❤😍.
வாங்க வாங்க சுபி மேடம். ஏன் இம்பூட்டு லேட்டு?!. என்னாது எபி இல்லையா?. 34362ஐ மிஸ் யூ லாட்.😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... தோழிகளே 👋😍

கொஞ்ச நாள் சைட் பக்கம் வரலை அதுக்குள்ள கதை திரியையும் நீங்களே ஆக்கிரமிக்க பாக்குறிங்க பார்த்திங்கலா? 😂😂😍😍. அதான் நானே வந்துட்டேன்

அடுத்த வாரத்தில் இருந்து "என் தனிமையின் தாரகை" கதையின்

ஹீரோ: ஜெயதீபன்

ஹீரோயின்: செந்தூர தேவியுடன் உங்களை பார்க்க வரேன் தோழமைகளே 😍

அன்புடன்

சுபா ❤😍
 
Last edited:

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... சகிஸ்

இந்த கதையை கையில எழுந்ததுதுல இருந்து என்னமோ கதை எழுத மனசே இல்லை. சரின்னு இழுத்து பிடிச்சி எழுதுனா கதை தலைப்ப மற்றின பின்னாடி சுத்தமா இன்ட்ரஸ்ட் போய்ட்டு.

ஆனாலும் கதையில் எடுத்த கதையை பாதில விட விருப்பம் இல்லை. அதான் நம்ம ஜெயதீபன் செந்துர தேவியை புதுசா கொண்டு வந்துட்டேன்.

அதாவது கதை பெயர் வேற கதை வேற ரூட்ல போகும் ஆனா ஹீரோ ஹீரோயின் அவங்க தான் 🤭🤭.

இதையாவது சரியா எழுதனும்னு நினைக்குறேன் அதுக்கு உங்க ஆதரவு வேண்டும். கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே ❤❤.

பிகு: கதையின் பழைய அத்தியாயங்கள் நீக்கப்பட்டு புதிது தொடரப்படும்.

நன்றி ❤
 
Last edited:

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 1

கீழ் வானில் உதித்த சூரிய கதிர்கள் அந்த கார் கண்ணாடியை துளைத்து கொண்டு அவன் முகத்தில் பட, கையை நெற்றியில் பதித்து கண்களை மறைத்தபடி படுத்து இருந்தவனிடம் சிறு சலனமும் இல்லை. ஆனால் மனம் மட்டும் புயலில் சிக்கிய துரும்பேன தவித்து கொண்டிருந்தது.

நடந்ததை நம்பவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தான். அவன் அன்னை இத்தனை பெரிய துரோகத்தை அவனுக்கு அளிப்பார் என்று சிறு துளி கூட யோசித்தது இல்லை. துரோகம் என்பதை விட இரு பெண்களின் பாவத்தை அவன் தலையில் சுமத்த முயன்றார் என்றே சொல்ல வேண்டும்.

அவரும் ஒரு பெண் தானே! ஒரு வளர்ந்த ஆண் மகனின் அன்னை. நல்லது, கெட்டது அறிந்தவர். அவரால் எப்படி இப்படி செய்ய முடிந்தது? என்ற கேள்வியை தாண்டி வெளியே வர முடியவில்லை. தன் அன்னையா இப்படி?! என்ற கேள்வி அவனிடம் எத்தனை முறை எழுந்ததோ கணக்கு இல்லை. ஆனால் உண்மை அவர் செய்ததை முகத்தில் அடித்து கூறி இருக்க, அதை ஏற்க முடியவில்லை.

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்து இருந்தானோ! அவனின் போன் ஒளி எழுப்ப, கணைகளை திறந்தவன் அவன் எதிர்பார்த்த அழைப்பா என்று பார்த்தான். அழைப்பு அவன் அன்னையிடம் இருந்து என்றதும் எடுத்தாமல் விட, அது சில நொடிகளில் ஓய்ந்து போக, தவறிய அழைப்பு எழுபத்தி எட்டு என்று காட்டியது.

இன்னும் சில எண்களில் இருந்து பல தவறிய அழைப்பு வந்திருக்க அதில் ஒருத்திக்கு மட்டும் அவன் பதில் சொல்லும் கடமை இருந்தது. ஆனால் இப்போது பேசும் நிலையில் இல்லை என்பதால் மீண்டும் பழைய நிலையில் அமர்ந்து விட்டான். ஆனாலும் நீ அவளுக்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும் எவ்வளவு சீக்கிரம் சொல்கிறாயோ அவ்வளவு நல்லது என்று மூளை அறிவுறுத்தியது.

மீண்டும் அதே எண்ணம். ஏமாற்றம் தாங்காத அவன் மனம் இன்னும் தவித்து கொண்டே இருந்தது. அதுவும் பெற்ற அன்னை செய்த செயல் துளியும் ஏற்ப்புடையதாய் இல்லை.

சூரியன் உச்சிக்கு வரும் வரை அவனின் அதே நிலை தொடர, அவன் எதிர்பார்த்த அழைப்பும் வந்தது.

அதில் இதயம் வெளியே வந்து குதித்து விடுவது போல் துடிக்க அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க பெரிதும் முயன்றபடி அழைப்பை ஏற்றவன் "சொல்லுங்க சுரேஷ் கண்டு பிடிச்சிட்டிங்களா?" என்றான் தவிப்பும் ஆர்வமுமாய்.

அந்த பக்கம் என்ன சொல்ல பட்டதோ! ம் கொட்டி கேட்டு கொண்டவன் "சரி இனிமேல் நான் பார்த்துக்குறேன். உங்க பேமண்ட் இன்னும் கொஞ்ச நேரத்துல வரும். அப்பறம் நான் சொன்னதையும் செஞ்சிடுங்க, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம். நான் உங்க காலை எதிர் பார்ப்பேன்" என்று கூறி அழைப்பை துண்டித்தவன், வாய் வழி சில முறை காற்றை உள்ளிழுத்து ஊதினான்.

அப்படியும் அவன் மனம் சமன் பட மறுக்க, அடங்கா மனதுடன் வாட்ஸ் ஆப் சென்று சுரேஸ் எண்ணில் இருந்து வந்திருந்த போட்டோவை திறந்தான் ஜெயதீபன்.

அதில் ஒரு பெண் கையில் குழந்தையுடன் இருக்க. அந்த பெண்ணவளை ஆராய்ந்தது அவன் கண்கள். பச்சையும் வான கலரும் சேர்ந்த கலரில் புடவை கட்டி இருந்தாள். நன்றாக பூசிய உடல்வாகு. வட்ட முகம், சற்று சதை பற்றுடன் கொலு கொலுவென இருந்த கன்னங்களுக்கு இணையான பெருய கண்கள். அடர் புருவம் ஆனால் இந்த காலத்து பெண்கள் போல் அதை திருந்த எந்த முயற்ச்சியும் எடுத்திருக்கவில்லை. அதன் நடுவே சிறிய பொட்டு. அளவான நாசி அதில் வெள்ளை கல் மூக்குத்தி மின்னி கொண்டிருக்க, முகத்தில் அளவான புன்னகை.

அவள் உடல் எடைக்கு ஏற்ப இடை இரண்டு படிப்பாக இருக்க, அதை சிம்மாசனமாய் கொண்டு அமர்ந்து இருந்தான் அவள் மகன். அப்படியே முழுக்க அவன் அன்னையின் ஜாடை, உடல் வாகு மட்டும் தன்னை போலோ என்று நினைத்தவன் பார்வை மீண்டும் அவன் மனைவியிடம் வந்தது.

ஆம் மனைவி தான். நேற்றுவரை அப்படி ஒருத்தி இருக்கிறாள் என்று தெரியாமலேயே அடுத்த பெண்ணை திருமணம் செய்ய மண்டபம் வரை சென்றவன் கடைசி சில நிமிடங்களில் உண்மையை அறிந்து வெளியேறி இருந்தான்.

போட்டோவை விழி அசைக்காமல் பார்த்தவன் 'இவள் தன் மனைவி' என்று தனக்கு தானே சில முறை சொல்லி மனதில் பதிந்து கொண்டான். அவன் கண்களுக்கு அவள் அழகு, அழகு இல்லை என்பதை எல்லாம் தாண்டி என் மனைவி என்ற எண்ணம் தான் வந்தது.

மீண்டும் ஒரு முறை அவளை கவனித்து பார்த்தவன் ரிவர் வியூ கண்ணாடியில் அவன் முகம் பார்த்தான்.

அகன்ற நெற்றி, அதில் வில்லாய் வளைந்த புருவம், கூர்மையான நாசி, ட்ரிம் செய்யப்பட்ட தாடி அவளாய் வெட்டப்பட்ட மீசை, எனக்கு புன்னகையின் முகவரி தெரியும் என்று கூறும் இதழ்கள். ஜெல் வைத்து தூக்கி வாரிய தலைமுடி, ஜிம்மில் ஓர்க்கவுட் செய்து இறுகிய உடல் என பார்க்க ஹிந்தி பட ஹீரோ போல் இருந்தான்.

அதற்கு மேல் கண்ணாடியில் அவன் உருவம் தெரியாமல் போக குனிந்து பார்த்தான். நேற்று இன்னொரு பொண்ணுடன் திருமணத்திற்கு அணிந்த ஷெர்வாணி அவனை பார்த்து சிரித்தது.

"தீப் நாம சேம் கலர்ல் ட்ரெஸ் எடுக்கலாம்" என்று ஹரிதா சொன்னது நினைவு வர, நூல் அளவில் ஒரு பெண் வாழ்க்கையை கெடுக்காமல் விலகி இருக்றோம் என்று நினைத்தவனால் அவன் அன்னை மீதான கோபத்தை அடக்க முடியவில்லை.

எத்தனை பெரிய வேலை செய்து இருக்கிறார். எப்படி முடிந்தது? எத்தனை முறை இந்த கேள்வியை தனக்கு தானே கேட்டும் பதிலும் கிடைக்கவில்லை கேள்வியும் அடங்கிவில்லை. மாறாக கோபமும் ஆதங்கமும் தான் பெருகியது.

மீண்டும் குணிந்து தன்னை பார்த்தவன் அதற்கு மேல் அந்த உடையில் இருக்க விருப்பம் இல்லாதவனாய் காரை கிளப்பியவன் அருகில் இருந்த கடைக்கு சென்று டீ சர்ட், ஹார்ட்ஸ்க்கு மாறியவன், அணிந்திருந்த உடையை ஒரு கவரில் போட்டு எடுத்து வந்தவன் ரோட்டோரமாய் இருப்பவரிடம் கொடுத்து விட்டுதான் மீண்டும் காரில் ஏறினான்.

மீண்டும் அந்த போட்டோவை திறந்து அவன் மனைவியையும் அவனையும் பார்த்து கொண்டவன், ஜெல் வைத்திருந்த முடியை கலைத்து ஒரு பக்கமாய் அழுத்தி விட்டு மீண்டும் மனைவி மகனை பார்த்தான்.

அப்போது தான் மகனை நன்றாக கவனித்தவன் அவன் சட்டையில் இருந்த ஐடி கார்டை பார்த்தான். பெயர் ஜெ. தேவேஷ் எல்கேஜி என்று இருக்க, அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து சிறு புன்னகை ஜெயதீபன் இதழ்களில்.

"சார் இவ்வளவு வளர்ந்துட்டாரா? என் இன்ஷியல் தான் போட்டு இருங்கா, ஆனா என்னை பற்றி சொல்லி இருப்பாளா?" என்று நினைத்தவன் "இவ பெயர் என்ன? பச் அதை கேட்க மறந்துட்டோமே..!" என நினைத்தவன் மீண்டும் சுரேஷிற்கு அழைத்தான்.

அவன் அழைப்பை ஏற்கும் வரை பொறுமை இல்லாமல் அமர்ந்து இருந்தவன் அவன் எடுத்ததும் "என் வைஃப் பெயர் என்ன சுரேஷ்" என்றான்.

அதில் அழைப்பில் இருந்தவன் ஒரு நொடி திகைத்து பிறகே பதில் சொல்ல,

"ம்... செந்தூர தேவி" என்று தனக்கு தானே உச்சரித்து பார்த்து கொண்டவன், எதிர் பக்கம் ஒருவன் அழைப்பில் இருப்பதே நினைவு இல்லாதவன் போல் அழைப்பை துண்டித்த தீபன் " ஜெயதீபன் செந்தூர தேவி" என்று சொல்லி பார்த்து கொண்டான்.

ஏனோ அவள் பெயரை அவனுக்கு பிடிக்காமல் போக, "பெயரை கூடவாடி மார்டனா வைக்க மாட்ட? பச்..." என்று சலித்து கொண்டான். அதே நேரம் உடனே அவர்களை பார்க்க வேண்டும் போலும் தோன்றியது. ஆனால் நினைத்ததும் சென்று விட முடியாத நிலை.

அப்படியே சென்றாலும் எப்படி போய் நிற்பது. நான் உன் கணவன் என்றா? இல்லை இதுவரை உன்னை யார் என்றே தெரியாது நேற்று தான் நீ என் மனைவி என்று தெரிந்தது என்றா? அப்படி சென்று நின்றாள் கேவலமாய் பார்த்து துரத்தி வட மாட்டாளா? அதுவா அவனுக்கு வேண்டும்? இல்லை.

அவன் தேவை இனிமேல் மச்சம் இருக்கும் அவளுடனான வாழ்க்கை. அதற்கு இந்த அவசரம் வேலை இல்லை. முதலில் அவள் மனநிலை புரிய வேண்டும். தன்னை ஏற்கும் எண்ணம் இருக்கிறதா என்று தெரிய வேண்டும். அதை தெரியாமல் சென்று நிற்பது சரி வராது என்று நினைத்தான்.

மனைவி மகனிடம் செல்லவும் முடியாமல், அன்னையிடம் செல்லவும் பிடிக்காமல் மீண்டும் இடைநிலையில் வந்து நின்றது ஜெயதீபன் மனம்.

ஆம் மீண்டும் அவன் அன்னையிடம் செல்ல படிக்கவில்லை. எத்தனை பெரிய விஷயத்தை மறைத்து இருக்கிறார். அதிலும் செந்தூர தேவி அவன் வாழ்வில் வர அவரே முழு காரணமாய் இருந்து விட்டு, எப்படி இப்படி செய்ய முடியும்.ர? ஒரு பெண்ணின் குணங்களை அவள் கலரும், அழகும் உடல் அமைப்பும் தான் தீர்மானிக்குறதா? எப்படி இப்படி எல்லாம் சிந்திக்திறார்கள்? என்று கோபமாய் நினைத்தான்.

அவள் எண்ணத்தை கலைத்தது மீண்டும் ஹரிதாவிடம் இருந்து வந்த அழைப்பு. அதற்கு மேலும் அவள் அழைப்பை கூட தன் வாழ்வில் நுலைக்க விரும்பாதவன் அழைப்பை ஏற்று "சொல்லுங்க ஹரிதா" என்றான் இறுகிய குரலில்.

அவனுடனான நிச்சயம் நின்றதற்கான காரணம் அவன் அன்னை மூலம் நேற்றே ஹரிதா அறிந்து இருந்தாள். ஆனாலும் ஜெய தீபனிடம், தனக்கான இடம் என்ன என்று அறிய நினைத்தே அவனுக்கு பல முறை முயன்றவளுக்கு அவனின் மரியாதையான பேச்சே பதில் சொல்லி விட,

"நீங்க தான் தீபன் சொல்லலும். என்னை நீங்களும் உங்க அம்மாவும் எங்க நிப்பாட்டி இருக்கிங்க புரியுதா? எனக்கு என்ன பதில் சொல்ல போறிங்க தீபன்" என்று ஹரிதா கோபமாய் கேட்க,

"சாரி ஹரிதா. எனக்கு நடந்த எதுவும் தெரியாது. தெரிஞ்சி இருந்தா இப்படி நடந்து இருக்காது சாரி. இனிமேல் உங்க வாழ்க்கையில என்னோட பார்ட் எதுவும் இருக்காது" என்றான் தீபன்.

அதில் இன்னும் கோபம் கொண்டவள் "இவ்வளவு நாள் தெரியாதது நேற்று மட்டும் எப்படி தெரிஞ்சி தீபன்? என்ன அம்மாவும் பையனும் விளையாடுறிங்காளா? மண்டபம் வரை வந்து கல்யாணத்தை நிறுத்திட்டு சாரி கேட்டா முடிச்சி போச்சா?" என்று கேட்க,

"நிஜமாவே இந்த தப்புல என்னோட பங்கு எதுவும் இல்லை ஹரிதா. எனக்கு கல்யாணம் ஆகிட்டுனு தெரிஞ்ச பின்னாடியும் உன்னோட எப்படி அங்க இருக்க முடியும்? அது நான் என்னோட மனைவிக்கு செய்ற தூரோகம் இல்லையா?" என்ற ஜெயதீபன் அவளின் நியாயமான கோபம் புரிந்து பொறுமையாகவே கேட்டான்.

"இவ்வளவு நாள் அந்த மனைவி எங்க போனாங்க தேவ்? இப்போ வரை அவங்க யாருனே தெரியாது. சுய நினைவுல இருக்கும் போது பார்த்தே இருக்காத ஒரு பொண்ணுக்காக, பொம்மை கல்யாணம் மாதிரி நடந்த ஒரு கல்யாணத்துக்காக என்னை வேண்டாம்னு உதறிட்டு போவிங்களா தீபன்?" என்று ஷரிதா சூடாய் கேட்க

"பொம்மை கல்யாணமா? மைன்ட் யூவர் வேட்ஸ் ஷரிதா! கல்யாணத்துல என்ன பொம்மை கல்யாணம் ஹரிதா? என்னை பொறுத்த வரைக்கும் கல்யாணம்குனது இரு மனம் இணையுற புனிதம். அது என் வாழ்க்கையில ஒரு முறை நடந்துட்டு. அதுவும் என் அம்மா ஆசிர்வாதத்தோட. இதுக்கு மேல இன்னொரு பொண்ண என்னால ஏத்துக்க முடியாது. இதுவரைக்கும் வேணும்னா என் மனைவி பற்றி தெரியாம இருந்து இருக்கலாம்.... ஆனா... இப்போ இந்த நொடி அவளை தெரியும். எங்க இருக்கா என்ன பண்றாங்குறது வரை."

"அப்பறம் நீ சொன்ன பொம்மை கல்யாணத்துக்கு சாட்ச்சியா எனக்கு ஒரு பையன் இருக்கான். நான் ராமனா இருக்க நினைகவில்வை ஆனா ராவனனா இருந்துட கூடாதுனு நினைக்குறேன் ஹரிதா. ப்ளீஸ் இனிமேல் எனக்கு போன் கூட பண்ணாதிங்க" என்றவன் அவள் பேச அனுமதி கொடுக்காமல் அழைப்பை துண்டித்து இருந்தான்.

அதன் பிறகே மனதை அழுத்திய கனம் குறையை காரை எடுத்தவன் நேராக சென்று நின்றது அவனது கடையில் தான். அது ஒரு கைவினை பொருட்களின் கிஃப் ஷோ ரூம். தமிழகத்தில் உள்ள கிராமங்களில் இருந்து இயற்கை பொருட்கள் கொண்டு செய்யப்படும் பொருட்களின் விற்பனைகயம். அந்த கடை அவன் பலநாள் கனவு. இன்று அவனின் விடாமுயற்ச்சியால் கம்பீரமாய் எழுந்து நின்றது தீபன் கிஃப்ட் ஷாப்.

பருத்தியினால் ஆனா உடை, கால் மிதி, வாழை தடையில் செய்யும் பூ, கூடை, ஃநைட் லேம்ப், அழகுற வடிவமைக்கப்பட்ட பீங்கான் குவளைகள், மண்ணால் செய்யப்பட அழகிய வேலைபாடு உடைய கைவினை பொருட்கள், மூங்கினால் செய்யப்பட வீணை, கிட்டார், புல்லாங்குழல், தண்ணீர் பாட்டில், காபி கோப்பை, என பலதரப்பட்ட பொருட்கள் அணிவகுத்து நின்றது.

இங்கு கிஃப்ட் மட்டும் இன்றி மூலிகை பொருட்களும் கிடைக்கும் தேன், ஆவாரம் பூ, கீழா நெல்லி, சித்தரத்தை, பனங்கருப்பட்டி இப்படி எல்லா வகை மூலிகையும் கிடைக்கும்.

எத்தனை மோசமான மனநிலையில் வந்தாலும் இங்கே வந்ததும் ஜெயதீபனின் மனம் காற்றில் பறக்க தொடங்கி விடும். இன்றும் மனதின் வெறுமை சற்று சமன் பட உள்ளே சென்றவனை புன்னகையுடன் தலை அசைத்து கடந்தனர் கடை சிப்பந்திகள். எல்லோருக்கும் வெள்ளை நிற உடையில் சாந்தமாய் இருந்தனர்.

அவனும் புன்னகையடனே தலை அசைத்து அவன் அறைக்கு சென்றவன், மற்றதை எல்லாம் ஒதுக்கி விட்டு வேலையை பார்க்க தொடங்கினான்.

ஒரு வாரம் முன்பு ஆர்டர் கொடுத்திருந்த கொம்பு தேன் இன்னும் வரமாமல் இருக்க, தேன் கொடுப்பவருக்கு அழைத்து பேசினான்.

பேசி முடித்து அடுத்த வேலையை பார்க்க சென்றவன், மனதில் மீண்டும் மனைவியின் முகம். அதை தொடர்ந்து சிறு தவிப்பும். இன்னும் நேரில் கூட பார்க்கவில்லை ஆனாலும் இந்த உணர்வு எப்படி எழுகிறது என்று புரியவில்லை. மனைவி என்ற வார்த்தைக்கு இவ்வளவு பவரா? என்று கிண்டலாய் நினைத்தவன் சீட்டில் சாய்ந்து கண்களை மூடி கொண்டான். இதழில் இளம் நகை அழையா விருந்தாளியாக வந்து அமர்ந்து கொண்டது மகன் மனைவியை நினைத்து.

தொடரும்...
 
Last edited:

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 2

ஜெயதீபனின் வாழ்க்கை சுழற்சி கடந்த ஒரு வாரமாய் தலைகீழாய் சுற்றுவது போல் இருந்தது. அம்மா, தம்பி, தங்கை, என அழகான ஒரு குடும்பத்தில் வாழ்ந்தவனுக்கு இன்றைய தனிமை வாழ்வு அத்தனை ருசிக்கவில்லை.

அவன் அன்னையை தேடியது மனம் ஆனால் அவர் செய்த செயலை ஏற்க முடியவில்லை. அதிலும் செந்தூர தேவியை பற்றி அடிக்கடி தோன்றி கொண்டே இருந்தது.

அவன் இருந்த அந்த நிலமையிலும் ஏன் தன்னை திருமணம் செய்து கொண்டாள். குழந்தை எப்படி? என்ற கேள்வியும் எழுந்து அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது.

அதே நேரம் அந்த நிலையில் தன்னை திருமணம் செய்து தன் பிள்ளையை சுமந்தவளை ஆனந்தி ஏன் விலக்கி வைத்தார்! அப்படி என்ன நடந்து இருக்கும் என பல கேள்விகள் அலை என எழுந்து அடங்கினாலும் அனந்தி செய்ததை மட்டும் ஜெயதீபனால் அவ்வளவு எளிதில் கடந்து விட முடியவில்லை.

இவன் ஒரு பக்கம் குழப்பத்தில் தவித்து கிடக்க, திருமணம் நின்றதில் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று பலரும் அழைத்து விபரம் கேட்டனர்.

சிலரை நிராகரித்தவன், சிலரிடம் கத்தி விட்டிருந்தான். அவனும் எத்தனை பேருக்கு தான் பதில் சொல்வான். அதிலும் வம்புக்கென வந்து கேட்பவரிடம் என்ன பதில் சொல்வது.

விஷயம் தெரிந்தும் ஒவ்வொருவரும் ஒரே கேள்வியை பல விதமாய் கேட்க நொந்து போய் விட்டான். பொதுவாகவே ஜெயதீபன் அத்தனை பொறுமை கிடையாது. சட்டென கோபம் வந்து விடும். கோபம் வந்து விட்டால் எதிரில் இருப்பவர் யார் என்றெல்லாம் ஆராய மாட்டான் பதில் கொடுத்து விட்டு தான் ஓய்வான்.

ஆனால் இந்த முறை அவன் மீது தவறு இருக்க, அனைவரிடம் பனிந்து தான் போனான். அதுவே ஒருவகை இயலாமையை கொடுத்து ஜெயதீபனுக்கு.

இயலாமை கோபத்தை கொடுக்க, கடந்த மூன்று நாட்களாய் அதீத கோபம், எரிச்சல் என பார்ப்பவரிடம் எல்லாம் எரிந்து விழுந்து கொண்டிருந்தான்.

இப்போதும் கடை பணியாளர் ஒருவரிடம் கத்தி விட்டு அவன் அறையில் வந்து அமர்ந்தவனின் கோபம் உச்சத்தில் இருந்தது. அதை இன்னும் அதிகரிக்கும் விதமாக அவன் போனில் வந்த அழைப்பு கோபத்துடன் கூடிய சலிப்பை கொடுத்தது.

ஜெயதீபன் இப்போது இருக்கும் மனநிலையில் யாராக இருந்தாலும் திட்டி விடுவோம் என நினைத்த தீபன் போனை சைலன்டில் போட போக,

போன் ஸ்கிரின் "பட்டு..' என ஒளிர்ந்த பெயரை பார்த்ததும் அதுவரை அவனிடம் இருந்த கோபம் எரிச்சல் எல்லாம் சற்றே பின் செல்ல இதழில் புன்னகை வந்தமர்ந்தது.

இத்தனை நாள் எதிர்பார்த்த அழைப்பு இன்று வரவும் சின்ன சிரிப்புடன் அழைப்பை ஏற்றவன்

"சொல்லு... பட்டமா. இப்போ நீ ரொம்ப சந்தோஷமா இருப்பியே!" என்றான் குரலில் கடுமையை கொண்டு வந்து நக்கலாய்.

"என் சந்தோஷத்துக்கு என்னடா குறை. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஆனா... நீ தான் வெறிப்பிடிச்சு சுத்துறனு கேள்வி பட்டேன். உண்மையா?" என பட்டு பாட்டியும் படு எகத்தாளமாய் கேட்க,

"பட்டம்மா...!" என்று கோபத்தில் பல்லை கடித்த ஜெயதீபன் "நான் உண்டு என் வேலை உண்டுனு நிம்மதியா இருந்தேன். அதுல கல்லை தூக்கி போட்டுட்டு நீ ஏன் பேச மாட்ட! இதுவும் பேசுவ... இன்னமும் பேசுவ..." என்றான் ஜெயதீபன் கோபமாய்.

"டேய்... டேய்... நீ அனல்ல விழ இருந்த லிட்டில் பூச்சி டா. ஐயோ... பாவமேனு பையன் பொழச்சி போட்டும்னு என் பேத்தி போட்டோவை கண்ணுல காட்டுனேன். இல்லைனா இன்னேரம் நீ காணாம போய் இருப்ப டா" என்றார் பட்டம்மாளும் கோபத்துடன்.

பட்டம்மாள் ஜெயதீபனின் தந்தை வழி பாட்டி. வயது எழுபது ஆகியும் இன்னும் திடமாகவே இருக்கிறார். மகனுக்கு அடுத்து பேரன்கள் தான். அதிலும் மூத்த பேரன் ஜெயதீபன் மேல் கூடுதல் பாசம் பட்டம்மாளுக்கு.

கணவனையும் ஒரே மகனையும் ஏமனின் கையில் கொடுத்தும். தனக்கும் தனிபட்ட வாழ்க்கை உண்டு என்ற சரியான புரிதலுடன் தனிமையிலும் திடமாய் வாழ்பவர். பேரன்கள் மட்டுமே ஒரே ஆறுதல்.

அதே போல் ஜெயதீபனும் இலகுவாய் பேசுவது பட்டம்மாளிடம் மட்டும் தான். மற்றவரிடம் எல்லாம் மகா அழுத்தம்.

"காப்பாத்தி விட்ட நீயே... என் வாழ்க்கைக்கும் வழி சொல்லு பட்டு. எனக்கு அடுத்து என்ன செய்யனு தெரியலை. உன் பேத்தி இருக்க இடம் தெரியும். போகனும்னு தோனுது ஆனாலும் ஏதோ ஒன்னு தடுக்குது. நான் என்ன செய்யட்டும்?" என்ற தீபன் கவலையான குரலில் கேட்க,

"தேவியை உனக்கு பிடிக்கலையா தீபா?" என்றார் பட்டம்மாள்.

"அப்படி சொல்லிட முடியாது பட்டு. ஆனா பிடிக்குதுனும் சொல்ல முடியலை..." என்றான் ஜெயதீபன் கலவையான மனநிலையில்.

"ஏன் டா?"

"என்ன ஏன்? இதுவரை பார்த்தே இருக்காத ஒரு பொண்ணை கொண்டு வந்து இது தான் உன் பைஃனு சொன்னா... நான் என்ன செய்யட்டும்! ஓடி போய் கட்டி பிடிச்சு முத்தம் கொடுக்கவா?" என்ற ஜெயதீபன் கடுப்புடன் கேட்க,

"குடேன் டா. பதிலுக்கு அவ என்ன தந்தாலும் வாங்கிக்க. அதுக்கு ஏன் என்கிட்ட பெர்மிஷன் கேக்குற!" என்றார் பட்டம்மாள் சிரிப்புடன்.

"பட்டு...." என மீண்டும் பல்லை கடித்த ஜெயதீபன் "நான் வாழ வழி தெரியாம முழிக்குறேன். உனக்கு கிண்டலா போச்சா!" என்றவன்

"மனுஷன் இருக்க நிலமை தெரியாம காமெடி பண்ணிகிட்டு" என்றான் முணுமுணுப்பாய். தேவி விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்று சுத்தமாய் புரியவில்லை தீபனுக்கு. போனில் அழைத்து பேசலாம் என்றால் கூட என்ன பேச என்று அவன் தயங்கி தவித்து கொண்டிருக்க ஹக்காம் கிஸ்சாம் என சலித்து கொண்டது அவன் மனம்.

"இதுல முழிக்குறதுக்கு என்னடா இருக்கு. தேவி உன் பொண்டாட்டி தேவேஷ் உன் மகன். அவங்களை போய் பார்க்க என்ன தடுக்குது உன்னை" என பட்டம்மாள் பாட்டி அதட்டல் விட,

"அதான்... தெரியலை பட்டு. அவங்களை போய் அழைச்சிட்டு வரனும்னு நினைக்குறேன். ஆனா ஒரு தயக்கம். எனக்கு அந்த பொண்ணை பிடிக்குமா? நான் அவளோட சேர்ந்து வாழ்ந்துடுவேனானு? யோசனையாக இருக்க. ஒரு வேலை என்னால அந்த பொண்ணோட சேர்ந்து வாழ முடியாம போய்... அந்த பொண்ணோட இப்போ இருக்குற நிம்மதியும் போய்ட்டா!" என்றான் ஜெயதீபன் வருத்தமான குரலில்.

அவனின் வருத்தமே தீபன் இதை பற்றி அதிகமாக யோசித்து குழம்பி இருப்பது தெளிவாய் புரிந்தது பட்டம்மாவிற்கு. இல்லை என்றால் ஜெயதீபன் இப்படி எல்லாம் நீளமாய் பேசு ஆள் இல்லை. ரத்தின சுருக்கம் தான். தீபனை தெரிந்த பட்டம்மாவிற்கு இப்போது அவன் குழப்பமும் புரிய,

"செந்தூர தேவி டா. தேவினு சொல்லி பழகு. அது எந்த அந்த பொண்ணு. அவ உன் பொண்டாட்டி" என்றார் கண்டிப்புடன்.

"நான் என்ன பேசுறேன். நீ என்ன சொல்ற பட்டு!" என தீபன் எரிச்சல் பட

"உரிமை முதல்ல எங்க இருந்து வருது தெரியுமா தீபா! நாம கூப்பிடுறதுல இருந்து தான். தேவினு சொல்லி பழகு தானா உரிமை வரும்" என்றார் பட்டம்மாள்.

யோசித்து பார்த்த ஜெயதீபனுக்கும் அதுவே சரியாக பட "சரி பட்டு. இப்போ நான் செய்யட்டும்" என்றான்.

"நீ தான் போய் அழைச்சிட்டு வரனும் தீபா. ஆனா தேவி உன் மகனுக்கா மட்டும் தான் உன்னோட வர வாய்ப்பு இருக்கு" என்றவர்

"தேவேஷ்க்கு உன்னை தேடாம அந்த நாள் ஓயாது" என்று விட்டார் பேச்சிவாக்கில்.

பட்டம்மாளின் குரல்லி இருந்த வாஞ்சையும் உரிமையும் ஜெயதீபனுக்கு உண்மையை உணர்ந்த "பட்டு... தேவி உன்னோட பேசுவாளா?" என்றான் அழுத்தமாய்.

"ஆமா... டா ஏன்?" என்ற பட்டமாளின் வார்தை அதுவரை அடங்கி இருந்த தீபனின் கோபத்தை உச்சத்தில் ஏற்றி விட்டது.

இதுவரை ஆனந்தி மட்டும் தேவியை பற்றி அவனிடம் மறைத்து ஏமாற்றி விட்டதாய் நினைத்திருந்தவனுக்கு இப்போது பட்டம்மாளும் அதையே செய்திருப்பது புரிந்தது.

இத்தனை நெருக்கமாய் உணவாக இருந்தும் பட்டம்மாள் உண்மையை மறைத்தது ஜெயதீபனுக்கு கடும் கோபத்தை கொடுத்தது.

அதே நேரம் தேவி பண்றிய உண்மையை அறிய செய்ததும் பட்டம்மாள் தான். உண்மையை மறைத்தவறே இப்போது ஏன் சொல்ல வேண்டும்? இடையில் என்ன நடந்திருக்கும்? என யோசித்த தீபன் "அப்போ நீயும் சேர்ந்து தான் எங்கிட்ட இருந்து உண்மையை மறஞ்சி இருக்க! அப்படிதானே!" என்றான் சீற்றத்துடன்.

"எதுக்கு டா இத்தனை கோபம். முதல்ல இந்த கோபத்தை குறைச்சிக்க, தேவியை பத்தி உங்கிட்ட மறச்சிவச்சி நான் என்னடா செய்ய போறேன்!" என பட்டம்மாள் பாட்டி பொறுமையாக கேட்க,

"அப்பறம் ஏன் இத்தனை நாள் உண்மையை சொல்லாம இருந்துட்டு கல்யாணத்து முந்தின நாள் மட்டும் சொன்ன!" என்றான் ஜெயதீபன் இன்னும் கோபம் குறையாதவனாய்.

" உனக்கு உண்மை தெரியாது. உண்மை தெரிஞ்ச உன் பொண்டாட்டி உங்கிட்ட உண்மையை சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டா. நீ இப்போ குழம்பி தவிக்குற இல்ல! அதே குழப்பம் தான் அவளுக்கும். 'உண்மை தெரிஞ்சி இரண்டு பேருக்கும் பிடிக்காம பிரிஞ்சி வாழுறதுக்கு.. இப்படியே இருந்துக்குறேன்னு சொல்லி உங்கிட்ட உண்மையை சொல்ல கூடாதுனு உன் மகன் மேல சத்தியம் வாங்கிட்டா" என பட்டு பாட்டி வருத்தமான குரல்லி சொல்ல

"அப்பறம் இப்போ மட்டும் என்ன? அப்படியே இருக்க வேண்டியது தானே" என்றான் ஜெயதீபன் தீரா கோபத்துடன்.

அதில் சிறிதாய் புன்னகைத்த பாட்டி "உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் வேணும்னா ஒருத்தருக்கு ஒருத்தர் தேவை இல்லாம இருக்கலாம். ஆனா என் கொல்லு பேரனுக்கு அவன் அப்பா வேணுமாம். உனக்கு கல்யாணம் முடிவானது தெரிஞ்சதும் தேவி, தேவ் கிட்ட இனி உன்னை பற்றி பேச கூடாது, கேட்க கூடாதுனு சொல்லிட்டா."

"அவ்வளவு தான் உன் பையனுக்கு தான் உனக்கு மேல பிடிவாதம் இருக்கே உடனே உங்கிட்ட வரனும்னு. உன்னை பார்த்தா தான் சாப்பிடுவேன்னு அழுது அடம் பண்ணி உடம்புக்கு முடியாம போய்ட்டு."

"காய்ச்சல் தானே சரி ஆகிடும்னு நாங்க நினைக்க குழந்தை உன்னை பார்க்க முடியாம ரொம்ப ஏங்கிட்டான் போல பிள்ளைக்கு இழுப்பு வந்துட்டு. அப்பறம் நான் தான் தேவி கிட்ட பேசி புரிய வச்சேன். அப்பறம் தான் அவ உங்கிட்ட உண்மையை சொல்ல ஒத்துகிட்டா" என பட்டு பாட்டி சொல்ல,

கேட்ட ஜெயதீபனுக்கு ரத்தம் கொதித்து. தேவேஷ் தன் நினைப்பில் இந்தளவு ஏங்கி இருந்தும் தேவி தன்னிடம் இருந்து அவனை பிரித்து வைக்க நினைத்ததோடு இல்லாமல், அவளும் பிரிந்து செல்ல நினைத்தது தேவி மேலும் கோபத்தை கொடுத்தது ஜெயதீபனுக்கு.

அதிலும் என் வாழ்க்கையை யார் யாரோ முடிவு செய்து அவர்கள் நினைத்தப்படி ஆட்டி வைப்பதா என கோதித்து போனவன் "பட்டு... இப்போ நான் சொல்றதை அபப்டியே போய் நீ உன் பேத்திட்ட சொல்ற" என அழுத்தம் திருத்தமாய் சொன்ன தீபன்

"நான் என் பையனை வளர்த்துக்குறேன். உன் பேத்தியை வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லு. நான் இப்பவே போய் என் மகனை கூப்பிட்டு வர போறேன்" என்றவன் பட்டம்மாள் சொல்ல வருவதை கேட்காமலேயே அழைப்பை துண்டித்து இருந்தான்.

தேவியின் செயல் தீரா கோபத்தை கொடுத்து ஜெயதீபனுக்கு. அவன் திருமணம் ஆனது தெரிந்ததும் நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்க, இவளானால் பிரிந்து செல்ல நினைப்பாளா! அப்படி என்ன திமிர்! என நினைத்தவன் அதே கோபத்துடன் கிளம்பி திருப்பூர் சென்றான்.

ஜெயதீபன் செந்தூர தேவியை தேடி செல்ல, அவளோ மகனை அழைத்துக்கொணடு ஊட்டி வந்து கொண்டிருந்தாள்.

தேவேஷின் பள்ளியில் மூன்று முதல் ஒன்பதாய் வகுப்புவரை உள்ள பிள்ளைகளுக்கு டூர் ஏற்ப்பாடு செய்திருக்க, அதை பார்த்து ஆர்வம் கொண்ட குட்டி வாண்டு ஒன்று தங்களையும் டூர் அழைத்து செல்ல வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டது.

அவனை பார்த்து மற்ற குழந்தைகளும் டூர் போக வேண்டும் என்று அடம் செய்யவே, பள்ளியில் இருந்து அவர்கள் பெற்றோரை அழைத்து மீட்டிங் வைத்தனர்.

குழந்தைகள் ஆசையை பார்த்த அவர்கள் பெற்றவர்களும் டூர் போக சம்மதம் தெரிவித்தனர். ஆனால் எல்லோரும் ரொம்பவும் சின்ன குழந்தைகள் என்பதால் அவர்களை ஆசிரியர்கள் தனியாக சமாளிக்க முடியாது என்பதால் ஐந்து பெற்றோர் மட்டும் உடன் வர பள்ளி நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.

அதில் பெற்றவர்கள் அனைவரும் கழந்து பேசி யார் ஐந்து பேர் செல்ல வேண்டும் ஒரு மனதாய் முடிவு செய்தனர். இதெல்லாம் முடிவான பிறகே எங்கே செல்வது என்று டீச்சர் குழந்தைகளிடமே கேட்க,

"மேம்... ஊட்டி போலாம். அங்க எங்க அப்பா இருக்காங்க" என்றிருந்தான் தேவேஷ்.

டீச்சரின் கேள்விக்கு என்ன பதில் சொல்ல என்று புரியாது விழித்த மற்ற குழந்தைகளுக்கு தேவேஷ் சொன்ன பெயர் பிடித்து போக, அவர்களும் அங்கு தான் செல்ல வேண்டும் என்று கத்த அவர்கள் முடிவே இறுதி முடிவாக எடுத்து ஊட்டிக்கு கிளம்பி இருந்தனர்.

டூர் என்று முடிவான நாளில் இருந்தே ஜெயதீபனை சென்று பார்த்தே ஆக வேண்டும் என்று தேவேஷ் சொல்லி கொண்டே இருத்தான்.

செந்தூரதேவிக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் அவன் ஆசையை தடுக்க முடியாமல் அழைத்து செல்வதாய் கூறி இருந்தாள். ஆனால் முடிந்த வரை ஜெயதீபனை பார்ப்பதை தவிர்க்கும் முடிவில் தான் இருந்தாள்.

அந்த பள்ளி பேருந்து ஊட்டி மலைகளில் ஏற தொடங்க ஓங்கி உயர்ந்த மரங்களும், பச்சை வண்ண ஆடை போர்த்திய மலைகளும் அதனை தழுவி தங்கள் தாபம் தீர்த்துக்கொள்ள முயலும் மேகக்கூட்டங்களும் என அந்த இயற்கை அழகை பார்க்க தெகிட்டவில்லை தான். ஆனால் தேவி தான் அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை.

குளிர் ஒரு பக்கம் உடலை ஊசியா துளைத்தது என்றால், ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆனந்தி பேசிய சொற்களின் நினைவு உள்ளத்தில் ஊசி இறக்கியது. நம்பிக்கை துரோகம் இத்தனை பெரிய வலியை கொடுக்கும் என்று அவள் அனுபவத்தில் உணர்ந்த நொடிகள்.

ஒருவரை நம்பி ஏமாந்து நின்றதும் அதன் பிறகு அவள் பட்ட கஷ்டமும் வலியும் சொல்லில் அடங்காதவை. ஒருவரின் நாக்குக்கு பாம்பு பல்லில் இருக்கும் விஷத்தை விட அதிக விஷம் உண்டும் என்று கடந்த நான்கு வருடத்தில் பல முறை தேவி உணர்ந்து விட்டாள்.

அந்த எண்ணம் வந்ததும் அவள் வாங்கிய பேச்சுக்கள் எல்லாம் இப்போது கேட்டது போல் காதில் எதிரொலிக்க, பஸ் சீட்டில் கண் மூடி அமர்ந்து இருந்த செந்தூர தேவியின் இமையோரம் கண்ணீரின் தடம்.

'வேண்டாம்...' என்று விலகி செல்ல நினைத்தும் விதி மகன் வடிவில் இணைத்து வைக்க நினைத்தது அத்தனை உவப்பானதாய் இல்லை தேவிக்கு.

கடந்த இந்த ஐந்து வருடத்தில் எத்தனை எத்தனையோ கஷ்டங்களை கடந்து விட்டாள். இனி இதையும் கடந்தாக வேண்டும் என நினைக்கும் போதே சலிப்பாகவும், வாழ்க்கை மீது வெறுப்பாகவும் இருந்தது தேவிக்கு.

"அம்மா... அங்க யாரேன் மேகம். இந்த மேகம் எங்க புக்ல இருக்கு. அப்பதம் இந்த மலையும் இருக்கு" என்ற தேவேஷ் மலைகளின் மேல் தவழ்ந்து சென்ற மேகங்களை காட்டி உற்ச்சாகமாய் சொல்ல,

மகன் அறியாமல் கண்களை துடைத்து கொண்ட தேவி "அப்படியா!! சரி. மேகத்துக்கு இங்கிலீஷ் ல என்ன வரும்?" என்ற தேவி குளிரில் நடுங்கியபடி கைகளை மார்பில் குறுக்கே கட்டி கொள்ள,

"க்ளோவ்ட்ஸ்..." என்ற தேவேஷ்

"ம்மா குளிருதா?" என கேட்டு தேவி கன்னம் பற்ற,

"ரொம்ப... ஏன் உனக்கு குளிரலையா?" என்றாள் தேவி.

"ஆமா... எனக்கு குளிரல" என்ற தேவேஷ். "ம்மா... நான் அப்பா மாதிரி. என்ன மா?" என ஆர்வமாய் கேட்க,

"இருக்காலாம்" என்றாள் தேவி பட்டும் படாமல்.

அவள் பதில் தேவேஷிற்கு அத்தனை திருப்தியாய் இல்லை போலும் "அம்மா...." என்று சினுங்கியபடி தேவி மீது சாய்ந்தவன் "நான் அப்பா மாதிரி தான்" என்றான் பிடிவாதமாய்.

தேவேஷின் இந்த பிடிவாதம் தான் தேவிக்கும் அவன் ஜெயதீபனின் மறு குணம் என்று எப்போதும் உணர்த்தும். ஆனாலும் அதை சொல்லி மகனை ஊக்கப்படுத்த விருப்பாதவள் "அப்படி இல்லை தேவ். நீ வளர்ந்த பிறகு தான் நீ யார் மாதிரின்னு உனக்கு தெரியும். நீ வளர்ந்த பிறகு உன்னோட குணம் யார் மாதிரி இருக்குனு நீயே முடிவு பண்ணிக்க சரியா!" என தேவி பொறுமையாக கேட்க,

அந்த குட்டிக்கும் என்ன புரிந்ததோ தலையாட்டி வைத்தவன் மீண்டும். வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டான்.

புது இடம், அவன் தந்தையை பார்க்க போகும் உற்ச்சாகம் என தேவேஷிடம் கேள்விகள் முளைத்து கொண்டே இருக்க, தேவிக்கு அதன் பிறகு ஜெயதீபனை பற்றி யோசிக்க நேரம் இல்லாமல் போனது.

அவர்கள் ஊட்டி வந்து சேர்ந்த போது நேரம் மாலை ஐந்து மணியாக இருக்க, அறை புக் செய்திருந்த ஹோட்டல் அருகில் உள்ள பார்க்கில் கொஞ்ச நேரம் குழைந்தைகளை விளையாட விட்டு அறைக்கு அழைத்து வந்திருந்தனர்.

அறைக்கு வந்ததும் "ம்மா... அப்பா பார்க்க எப்போ போறோம்? பட்டு பாட்டிக்கு போன் பண்ணி அப்பாவை வர சொல்லுவோமா?" என்ற தேஷேஸ் போனை எடுத்து பட்டம்மாளுக்கு அழைக்க போக,

அவனிடம் இருந்து போனை வாங்கிய தேவி "முதல்ல டூரை முடிச்சிட்டு... இவங்களை எல்லாம் ஊருக்கு அனுப்பி வச்சிட்டு. அப்பறபா நாம பட்டு பாட்டி வீட்டுக்கு போலாம். இப்போ போய் குளி..." என சொல்லி, தேவேஷையும் மற்ற குழந்தைகளையும் குளிக்க வைத்து உடை மாற்றி சாப்பிட அழைத்து சென்றவள் முடிந்த அளவு தேவேஷ் ஜெயதீபனை தேடாத அளவு பார்த்து கொண்டாள்.

ஆனால் மறுநாளே தேவேஷ் "அப்பா..." என்ன ஜெயதீபன் முன்பு சென்று நிற்பான் என்றும், தானே அவனை அழைத்து செல்வோம் என்று தேவி துளியும் எதிர்பார்க்கவில்லை.

தொடரும்...
 
Last edited:

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... ஆல்👋.

இதோ "தேசத்தின் வாசம் மாறுமா" கதையின் இரண்டாவது அத்தியாயம் பதிவிட்டு விட்டேன். பிடித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே 😍.

கருத்து திரி

நன்றி ❤
 
Last edited:

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்: 3

"அம்மா... அப்பா பார்க்க எப்போ போறோம்?" என கேட்டபடி தேவேஷ் தேவி பின்னோடு சுத்த,

"கூட்டிட்டு போறேன்னு முன்னாடியே சொல்லி இருக்கேன் தானே டா! நீ போய் உன் ப்ரெண்ஷோட விளையாடு போ...." என்றாள் தேவி சிறு கண்டிப்புடன்.

"போறோம் சொன்ன எப்போ போறோம்னு சொல்லலை ம்மா. நீ எப்போ போறோம் சொல்லு..." என்ற தேவேஷ் பிடிவாதமாய் கேட்க,

இப்போதே இவ்வளவு தெளிவாய் பேசும் மகனை பார்த்து மிரண்டு போன தேவி "இப்படி பிடிவாதம் பிடிச்சா அப்பறம் நான் கூட்டிட்டு போக மாட்டேன் தேவ். நான் தான் டூர் முடிஞ்சதும் கூட்டிட்டு போறேன்னு சொன்னேனே அப்பறம் என்ன உனக்கு!" என்றவள் அதட்டல் போட,

"அப்போ இன்னைக்கு டூர் முடிஞ்சதும் போறோமா ம்மா?" என்ற தேவேஷ் மீண்டும் அதிலேயே நிற்க, தேவி அவனை கோபமாய் முறைத்து வைக்க, தேவேஷிடம் கெஞ்சல் பார்வை.

அப்பாவை பார்க்க தன் அம்மா அழைத்து செல்ல மாட்டாள் என்று அந்த சிறுவனுக்கு தோன்றியதோ என்னவோ! காலையில் இருந்து இத்துடன் பத்து முறைக்கு மேல் கேட்டு விட்டான். தேவியும் அவனுக்கு பதில் சொல்லி சலித்து விட்டாள்.

மீண்டும் அதையே கேட்பவனை சிறிது எரிச்சல் எட்டி பார்க்க தேவி கோபமாய் பார்க்க, அவன் பார்த்த கெஞ்சல் பார்வையில் 'இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை' என்று சலித்து கொண்ட தேவி

"ஆமா... டூர் முடிஞ்சதும் உன் அப்பாவை பார்க்க போறோம். எதுக்கு இத்தனை முறை கேட்குற தேவ்? அம்மா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?" என்றாள் தேவி.

ஆனால் எதிரில் நின்ற அவள் மகனுக்கு நம்பிக்கை என் வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை. அவன் அகராதியில் அது அன்பாகி போக

"அம்மா மேல தேவ்கு நிறைய அன்பு இருக்கே" என்றவன் தேவி கழுத்தை கட்டி கொண்டு கொஞ்ச, தேவியும் சிறு புன்னகையுடன் அவனை அணைத்துக்கொண்டாள்.

அவர்கள் ஊட்டி வந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டது. இன்று டூர் முடிந்து ஊர் செல்ல வேண்டும். குழந்தைகளை அழைத்துக்கொண்டு இரவில் பயணம் செய்வது ரிஸ்க் என்பதால் காலை பதினோரு மணிக்கெல்லாம் மதிய உணவை முடித்து கொண்டு ஊட்டியில் இருந்து கிளம்புவதாக முடிவு செய்திருந்தனர்.

ஊட்டியில் இருந்து கிளம்ப வேண்டும் என்று சொன்னதில் இருந்தே தேவேஷிடம் அதிக சந்தோஷம். அதன் வெளிப்பாடாய் 'எப்போ அப்பாவை பார்க்க போவோம்' என்று கேட்டு கொண்டே இருந்தவன், அதை அவன் நண்பர்களிடமும் அவன் அப்பாவை பார்க்க போவதாக சொல்லி மகிழ்ந்து கொண்டிருந்தான்.

அது அவனின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட நடை பழகிய கன்று குட்டியாக சுற்றி கொண்டிருந்தான்.

அதுவரை தேவேஷை ஜெயதீபனிடம் அழைத்து செல்ல வேண்டாம் என்ற முடிவில் இருந்த தேவிக்கு மகனின் இந்த சந்தோஷத்தை கலைக்க மனம் இல்லை.

அதே நேரம் ஜெயதீபனை சென்று பார்க்கவும் விருப்பம் இல்லை. என்ன தான் தேவேஷ்காக ஜெயதீபனிடம் உண்மையை சொல்லி அவன் திருமணத்தை நிறுத்தி இருந்தாலும் அவனிடம் தேவியால் எந்த வகை உரிமையை எதிர்பார்க்க முடியவில்லை.

எதிர்பார்க்கும் உரிமையும் தனக்கு இல்லை என்று தேவிக்கு தெரியும். அவர்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் முழுக்க முழுக்க தேவியின் தவறாய் இருக்க ஜெயதீபனை குற்றம் சொல்லும் உரிமையும் செந்தூர தேவிக்கு இல்லை.

ஆனாலும் ஏன் என்றே தெரியாத ஒரு கோபம் மட்டும் ஒட்டுண்ணியாக தேவியின் மனதில் ஒட்டிக்கொண்டு அதற்கு ஜெயதீபனை காரணப்படுத்துகிறது.

அதனாலேயே தேவேஷை அழைத்து செல்லவா! வேண்டாமா! என இருவேறு மனநிலையில் தேவி தத்தளித்து கொண்டிருக்க, அவள் குழப்பத்தை களைவது போல் தேவேஷூம் பல முறை கேள்வியா கேட்டு தேவியையும் தெளிவு படுத்தி அவனும் தெளிவாகி இருந்தான்.

கண்டிப்பாக இன்று தன் அப்பாவை பார்ப்போம் என்ற நன்பிக்கையுடனே அவன் நண்பர்களுடன் சுற்றி வந்தான்.

அனைவரும் ரொம்பவும் சின்ன குழந்தைகள் என்பதால் போட்டிங், நீர்நிலை, பள்ளத்தாக்கு பகுதிக்கெல்லாம் குழந்தைகளை அழைத்து செல்லவில்லை. சைன்ஸ் சென்டர், பூங்கா, நர்சரி கார்டன், ஹோட்டல் என்று தான் அழைத்து சென்றனர்.

இன்றும் காலையில் சற்று நேரம் ஹோட்டல் அருகில் இருந்த ஒரு கார்டனுக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த ஊஞ்சலில் குழந்தைகளை விளையாட விட்டு அவர்களை கவனித்து கொண்டனர்.

சற்று நேரம் சுறுசுறுப்பாய் விளையாடிய குழந்தைகள் ஒவ்வொருவராய் சோர்ந்து அமரவும், அவர்களை அழைத்துக்கொண்டு அருகில் இருந்த ஸ்வீட் ஷாப் அழைத்து சென்றனர்.

குழந்தைகள் அவர்கள் வீட்டிற்கு வாங்கி செல்ல குக்கீஸ் சாக்லேட் வகைகளை காட்டி யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு வாங்கி கொடுத்தனர்.

இனிமேல் மதிய உணவை முடித்துக்கொண்டு ஊருக்கு கிளம்ப வேண்டும் என்று தோன்றவுமே தேவியை சிறு படபடப்பு தொற்றி கொண்டது.

மனதில் இனம் புரியாத பயம் அதோடு சேர்ந்து சிறு வலியும் மனதை தாக்கியது.

ஜெயதீபனை பார்க்க வேண்டும் என நினைத்தாலே இந்த வலியும் பயமும் அவளிடம் இயல்பாகவே எழுந்து விடும்.

"அம்மா... அப்பா பார்க்க போகும் போது அப்பாக்கு சாக்லேட் வாங்கனும் தானே! அப்பா என்ன சாக்லேட் பிடிக்கும்?" என தேவேஷ் கேட்கவும் தான் நிகழ்வுக்கு வந்த தேவி

மகனை புரியாத பார்வை பார்த்தவள் என்ன தேவ் என கேட்க

"அப்பாக்கு என்ன வாங்கனும் சொல்லு மா" என்றவன் கண்ணாடியின் உள்ளே அழகுபட அடுக்கி வைத்திருந்த இனிப்பு வகைகளை பார்வையிட,

"அப்பாக்கு சாக்லேட் பிடிக்காது தேவ். வேணும்னா குக்கீஸ் கேக் வாங்கிக்கோ" என்றாள் தேவி.

"என்ன கேக் மா அப்பாக்கு பிடிக்கு?" என கேட்க,

"தெரியலை தேவ்" என்றாள் தேவி.

அதில் தேவேஷ் அவளை நிமிர்ந்து பார்க்க, தேவிக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை.

செந்தூர தேவிக்கு ஜெயதீபனை தவிர அவனை பற்றி எதுவும் தெரியாது. ஆனந்தி தான் சில விசயங்களை பொதுவாக கூறி இருந்தாரே தவிற அவர்களுக்கு பகிர்வு என்று எதுவும் இல்லை.

தீபன் பகிரும் நிலையிலும் இருக்கவில்லை. அதிலும் அவள் அறிந்த ஜெயதீபன் வேறு. இப்போது இருக்கும் தீபன் வேறு. முன்னவனை பற்றி சில விசயங்கள் ஆனந்தி சொல்லியாவது தெரியும். ஆனால் இப்போது இருக்கும் தீபனை பற்றி சிறு துளி கூட தெரியாது.

அப்படி இருக்க அவனுக்கு என்ன பிடிக்கும் என்று எப்படி தெரியும். தேவி பதில் சொல்லாமல் நிற்க

"ம்மா......" என்றான் தேவ்.

"ரெட் வெல்வேட் வாங்கு தேவ்" என்றாள் தேவி.

அதில் புன்னகையுடன் தலையாட்டிய தேவ் " இதுல எது மா அந்த கேக்?" என் கேட்டபடி மீண்டும் ஸ்வீட் வகைகளை பார்வையிட போனவன்

"ம்மா.... அப்பா" என்று வியப்பும் சந்தோஷமுமாய் கூறி

"அப்பா..." என கத்தியபடி ஓடி சென்று சற்று தள்ளி நின்று ஒருவருடன் பேசி கொண்டிருந்த ஜெயதீபன் காலை கட்டி கொண்டான்.

பட்டம்மாளிடம் பேசி விட்டு திருப்பூர் சென்ற ஜெயதீபனை பூட்டிய வீடே வரவேற்றது. பக்கத்தில் விசாரித்த போது அவர்கள் ஊருக்கு சென்றிருப்பதாக மட்டுமே தகவல் கிடைத்திருக்க, இரண்டு நாள் அங்கே காவல் இருந்து விட்டு இன்று காலை தான் ஊட்டி வந்திருந்தான்.

அவன் தொழில் கிஃப்ட் ஷாப் என்றாலும், அவன் அப்பா காலத்தில் இருந்தே சாக்லேட், குக்கீஸ், செய்வது தான் குடும்ப தொழில். ஊட்டியை தாண்டி வெளி நாடுகளுக்கும் இவர்கள் ப்ராடெக்ட் ஏற்றுமதி செய்ய படுகிறது.

அதே நேரம் பொது மக்களுக்கும் உற்பத்தி விலையில் விற்பனை செய்வதற்கு என்றே அவர்களுக்கு என்று சில கடைகளும் ஊட்டியில் இருக்கிறது. அதில் ஒன்றிற்கு தான் ஜெயதீபன் வந்திருந்தவன் தேவேஷை இங்க சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சிறியவனின் ஆர்ப்பாட்டத்தில் ஒரு நொடி தடுமாறி நின்றவன் மகனை பார்த்து உள்ளம் நெகிழ "ஹேய்... ஜூனியர்! நீ எங்க இங்க?" என்று கேட்டபடி தேவேஷை தூக்கி கொண்டான்.

"அப்பா... பார்க்க வந்தேன்" என்ற தேவேஷ் தீபனை கழுத்தைக் கட்டி கொள்ள,

"அப்படியா..." என கேட்டவன் தேவேஷ் பள்ளி சீருடையில் இருப்பதை பார்த்து "அப்பாவை பார்க்க யூனிபார்ம்லயா வருவாங்க? சரி... நீ தனியாவ வந்த?" என்ற ஜெயதீபன் சுற்றிலும் பார்த்தான்.

"இல்லை... அம்மாவோட" என தேவேஷ் சொல்லவும், தேவி தீபனின் பார்வை வட்டத்தில் படவும் சரியாக இருந்தது.

கணவன் மனைவி இருவரும் முதல் முறை நேருக்கு நேர் சந்திக்க சிறு தடுமாற்றம் இருவரிடமும்.

அதிலும் ஜெயதீபன் முதல் முறை தேவியை சந்திக்க, காதலாக இல்லை என்றாலும் அவளை பார்க்கும் ஆவலில் அவள் முகத்தில் பார்வையை பதித்தவன் அவளை ஊன்றி கவனித்தான்.

தேவி தன்னை இங்கே எதிர்பார்க்கவில்லை என அவளின் திகைப்பு சொல்ல சின்ன புன்னகை அவனிடம்.

தேவியை பார்த்த நேரம் தொட்டு அவள் தன் மனைவி என்ற எண்ணம் ஜெயதீபன் மனதில் ஆழ பதிந்து விட, அது கொடுத்த உரிமையில் அவளை ரகசியமாய் ரசித்து கவனித்து பார்த்தவனுக்கு தேவியை போட்டோ எடுத்து அனுப்பியவனை தூக்கி போட்டு மதிக்க தோன்றியது.

தேவி அத்தனை பாங்காய் சேலை கட்டி இருந்தாள். ஆனால் அவளை போட்டோ எடுத்தவன் தவறாக எடுக்கவே நேரம் பார்த்து காத்திருந்து எடுத்து இருப்பான் போலும். அதிலும் நேரில் இருக்கும் தேவிக்கும், அவன் போட்டோவில் பார்த்த தேவிக்கும் நிறைய மாற்றம்.

உடை மட்டும் இன்றி அவள் தோற்றமே வேறாக இருக்க, அவள் பின்பம் மிகவும் பிடித்த பின்பமாய் அவன் மனதில் பதிய தேவியை பார்த்து நின்றான்.

ஜெயதீபன் ரசனையில் பிடியில் நிற்க தேவியோ வேதனையில் பிடியில் நின்னாள்.

ஐந்து வருடங்கள் கடந்து கொண்டவனை கண்ணில் பார்த்து தன்னிலை மறந்து நின்றிருந்தாள்.

கலைந்த தலையும், கசங்கிய உடையும் , மெலித்த உடலும், ஜீவனை இழந்த கண்களுமாய் பார்த்து பழகியவன் இன்று மடிப்பு கலையாத உடை, திடகாந்திரமான உடல், பார்வையில் தெளிவு என அழகனாய் நின்றவனிடம் இருந்து பார்வையை அகற்ற முடியவில்லை.

அவனை இப்படி பார்க்க தானே தேவி அவள் வாழ்க்கையை அவன் கையில் கொடுத்தாள். எத்தனையோ நாட்கள் அவனை பார்த்த தவித்தும் பார்க்க முடியாமல் துடித்து போன நாட்கள் நினைவில் வந்து செல்ல கண்கள் குளம் கட்டியது.

அவன் தேடி வருவான் என்று ஏங்கி தவித்த நாட்கள் இதயத்தில் கத்தி இறக்கி சென்றது தான் மிச்சம்.

இன்றுவரை அந்த ஏக்கம் இடத்தை ரணம் ஆக்க, கடந்து சென்ற ஆண்டுகளில் அவள் அனுபவித்த வலிகளும் வேதனையும் பாலைவன சுடு மணலாய் பாதத்தில் கொதிப்பை கொடுக்க, அங்கிருந்து வெளியேறி விட்டாள் செந்தூர தேவி.

அதே நேரம் தேவியை பார்த்து நின்ற ஜெயதீபன் சிறு புன்னகையுடன் அவளிடம் வர, தேவியின் செயல் முகத்தில் அடித்தது போல் இருந்தது.

அதில் தாடை இறுக கோபத்தில் வேக எட்டுக்களுடன் அவளை நெருங்கியவன் "ஏய் நில்லு..." என்றபடி தேவி கையை பற்றி இருந்தான்.

இந்த நொடி நேர இடைவெளியில் தேவியும் தன்னிலை மீண்டிருக்க, தீபனை நேர் கொண்டு பார்த்தவள் "என்ன வேணும்?" என்றாள் கோபத்துடன்.

"கேட்டா... கேட்டதை தந்திட போறியா நீ" என்ற ஜெயதீபனும் இடக்காய் கேட்க,

"மாட்டேன். நீங்க யார் எனக்கு? நீங்க கேட்டதை தர!" என்றாள் தேவியும் குதர்க்கமாய்.

"அப்பறம் ஏன் என்ன வேணும்னு கேட்ட?" என்ற ஜெயதீபன் அவள் கையில் அழுத்தம் கொடுக்க, அப்போது தான் தன் கை தீபன் கைக்குள் இருப்பதை உணர்ந்த தேவி

தீபன் பிடியில் இருந்து கையை விலக்கி கொள்ள போக, அதை உணர்ந்தது போல் ஜெயதீபனின் பிடி இறுகியது.

அதில் அவனை முறைத்த தேவி "என்ன பண்றிங்க? கையை விடுங்க" என்றவள் பிடிவாதமாய் அவனிடம் இருந்து கையை உறுவ முயன்றாள்.

"எதுவும் பண்ணலையே! சொல்ல போனா எனக்கு உங்கிட்ட பேச கூட ஒன்னும் இல்ல. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்றேன் கேட்டுட்டு போய்ட்டே இரு...." என்றான்

அதில் அவனை நெற்றி சுருங்க பார்த்த தேவி "அதை கையை விட்டுட்டே சொல்லலாம்" என்றாள் தேவி கோபமாய்.

"இருக்கட்டும். நான் பிடிக்க வேண்டிய கை தான்" என்ற தீபன் அவளின் பிடிவாதத்தை இலகுவாய் கடந்து விட்டவன்.

ஆனால் தேவிக்கு அதுவும் கோபத்தையை கொடுத்தது. 'இத்தனை நாள் எங்கடா போன?' என கத்த தோன்றிய கோபத்தை இதழ் கடித்து அடக்கி கொண்டவள் தீபனை முறைத்து பார்க்க,

"தேவேஷை நான் பார்த்துக்குறேன். நீ உன் வாழ்க்கையை பார்த்துக்க" என்றான் ஜெயதீபன்.

அவன் சொல்ல வருவது புரியாமல் சில நொடிகள் நின்ற தேவி புரிந்த போது "தேங்க்ஸ் அ லாட்" என்றாள் போலி பணிவுடன்.

அதேநேரம் அவளின் அழுத்த மூடிய இதழ்கள் அவள் சிரிப்பை அடக்குவதை சொல்ல "மேடம் எதுக்கு சிரிக்குறிங்கனு சொன்னா நானும் சிரிச்சிப்பேன்" என்றான் ஜெயதீபன் ஏக கடுப்புடன்.

பட்டம்மாள் சொல்லும் போது அவனுக்கு கோபம் வந்ததை போல் தேவிக்கும் வரும் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றமாய் இருக்க வார்த்தைகள் அடக்கப்பட்ட சீற்றத்துடன் வந்தது.

"எனக்கு சுதந்திரம் கிடைச்சிருக்கு அதுக்கு தான். இது சந்தோஷமான விஷயம் தானே, ஐந்து வருஷமா மார்புலயும் தோள்லையும் போட்டு சுமந்த இனிமேல் இல்லை" என்று கூறிய தேவிக்கு இன்னும் சிரிப்பு வந்தது.

தாய் அறியாத சூல் உண்டோ!

அவள் புன்னகை கொடுத்த ஆத்திரத்தில் தேவி கையை உதறிய ஜெயதீபன் "உன் அம்மாக்கு பாய் சொல்லு தேவ்" என கோபம் தெரிக்க கூரியவன் மகனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

ஜெயதீபன் கார் கண்ணை விடாது மறையும் வரை பார்த்து நின்ற தேவியின் முகத்தில் அதுவரை இருந்த புன்னகையை மறைந்து விட, விழிகளை நீர் படலம் முற்றுகையிட்டது.

அதை இமை தாண்ட விடாமல் தடையிட்டவல் மீண்டும் உள்ளே சென்று பள்ளி குழந்தைகளுடன் இணைந்து கொண்டாள்.

"என்ன தேவி நீங்க போகலையா?" என உடன் வந்த பெண் விசாரிக்க,

"என் பொறுப்புல இருக்க குழந்தைங்களை பார்க்க வேண்டாமா! உங்களை எல்லாம் பத்திரமா ஊருக்கு அனுப்பிட்டு போகனும்..." என்ற தேவி குழந்தைகளுடன் ஒன்றி விட்டான்.

ஆனாலும் மனதில் ஓரம் புன்னகையுடன் கை ஆட்டி சென்ற மகனே நினைவு வர,

பிறந்ததில் இருந்து பார்த்தே இருக்காத அப்பாவின் பாசத்திற்காக இத்தனை பிடிவாதமாய் இருந்தவன் இத்தனை வருடம் அன்பும், பாசமும் ஊட்டி வளர்த்த தன்னையும் தேடி வருவான் என்று தன்னை தேற்றி கொண்ட தேவி, அதே நம்பிக்கையுடன் அடுத்து வந்த நேரங்களை கடந்து சென்றாள்.

தொடரும்....
 
Last edited:
Status
Not open for further replies.
Top