poornima madheswaran
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஊட்டிக்கு சென்றவர்கள் ஐந்து நாட்கள் இயற்கையேடு மகிழ்ச்சியாக நாட்களை கழித்துவிட்டு வந்தனர்.
அந்த ஐந்து நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அடுத்தநாள் மாலை வீடு வந்தனர், நித்தியா அவள் வீட்டில் இறங்கிக்கொண்டள், பின் அவளை பார்த்ததும் டைகர் கால்களை பிடித்துக்கொண்டு தன் பாசத்தைக் காட்டியது(நாய்கள் நன்றி உள்ள ஜீவன் அல்லவா).
அதை சமாதானம் செய்து அனுப்பி விட்டு வீட்டுக்குள் சென்று ஒரு குளியலை பேட்டு விட்டு டைகர்க்கு உணவு வைத்துவிட்டு வெளியே அமர்ந்து அவள் பேட்ட டீயினை குடித்துக்கொண்டு இருந்தால்.
இவளை பார்த்த எதிர் வீட்டில் உள்ள காவலாளி, அம்மா நித்தியா காலையில் உனக்கு ஒரு letter வந்ததும் நீ இல்லை நாள நான் வாங்கி வச்சி இருந்தேன் இந்தாமா என்றார்.
அண்ணா இந்த letter இருந்தாதான் நான் நாளைமறுநாள் வேலையில் சேர முடியும் அண்ணா இந்த உதவிய நான் மறக்க மாட்டேன் ரொம்ப நன்றி அண்ணா என்றால், அட பறவாலமா இதற்கு எல்லாம் நன்றினு மிக பெரிய வார்த்தை சொல்லிகிட்டு, இன்று வரை என் குடும்பம் சந்தேஷாமாவும், நிம்மதியாவும் இருக்க காரணம் நம்ம ஐயாவும், அம்மாவும் தானமா, அவங்க வாரிசு நீ எப்பவும் சந்தேஷாமா இருக்கனும்மா நான் வரேன், அவங்க பார்த்தா அவ்வளவுதான் நீ போ மா என்றார், (பேகும் அவளை பார்த்ததவர் கண்களில் அவ்வளவு வேதனை ) பின்பு பெரும்மூச்சை விட்டுவிட்டு வேறு வேலையை பார்க்கச்சென்றார்.
அவரிடம் பேசிவிட்டு உள்ளே சென்ற பேதை சித்தி சஞ்சனாவிடம் இருந்து அழைப்பு வந்தது அதை எடுத்ததும் அவள் சித்தி நித்தியாவை சாப்டியாடா என்றார், அதற்கு சிரித்து விட்டு நான் சாப்பிட்டுவிட்டேன் சித்தி நீ சாப்டியா என்றால், ஆச்சிடா அப்றம் ஒரு முக்கியமான விஷயம் நம்ம மஞ்சுக்கு திருமணத் தேதி குறித்துவிட்டாங்க டா, மாப்பிள்ளை நம்ம சஞ்சீவ் தாண்டா ரொம்ப நல்ல பையன் இல்ல கண்டிப்பா நீவருவதான, பாக்கலாம் சித்தி அவங்க கூப்பிட்டா நான் வருகிறேன் இல்லை நான் எப்படி வர முடியும், என்ன மதித்து கூப்பிட்டா நா வருவேன் நீ கவலைப்படாதே சித்தி சித்தா எப்போ வருவது எனக்கு அவரை பாக்கனும்பேல் இருக்கு சித்தி சீக்கிரமா வர சொல்லு சித்தி, குட்டீஸ் எங்க சித்தி சத்தத்தையே காணம் என்றால். அதற்கு சஞ்சனா சிரித்துக்கொண்டே அவங்க தூங்கராங்கடா ரொம்ப நேரம் டையர்டுல தூங்கிடாங்கடா, சரி நீயும் போய் தூங்கிடாங்கடா என்றார்.
அவள் எதிர் வீட்டில் எல்லாரும் சஞ்சீவ் மற்றும் மஞ்சு திருமணத்திற்காக சக்திவேல் மற்றும் அரூபன் வரவுக்காக காத்திருந்தனர். தேதி குறிப்பிட்ட பிறகு மஞ்சுக்கு வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுப்பவில்லை, அவளை அவள் அன்னை மற்றும் லட்சுமியின் கவனிப்பில் இருந்ததால், இந்த வார வெள்ளிக்கிழமையில் மஞ்சுக்கு பூவைப்பதர்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுக்கொண்டு இருந்தது.
அவரகு சஞ்சீவ் தன் வருங்கால மனைவி மற்றும் தன் தாய், தந்தைக்கும் புது துணி மற்றும் ஆபரணங்களை வாங்கினான் (அதுவும் அவன் தன் உழைப்பில் வந்த சொந்த பணத்தில் வாங்கினான்). அதை தன் பெற்றோர்களிடம் தந்துவிட்டு ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு மஞ்சுவிடம் phoneல் பேசிகொண்டு இருந்தான்.
அங்கு பொள்ளாச்சியில் விஷ்வா குடும்பத்தினர் அனைவரும் அந்த வீட்டில் (மாளிகையில்) ஏற்ற மெட்டு மாடியில் தான் இரவு உணவை உணணவோண்டும் இல்லை என்றால் உண்ணமாட்டேன் என்றுதன் ரகளையை ஆரம்பித்து விட்டார். அவன் பாட்டி தமயந்தி, அவர் கூறியதை கேட்ட அனைவருக்கு சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தனர்( ஏன்எனில் அவரால் பசியை பொருத்துக்கொள்ள முடியாது).
அவர் கூறியது பேசவே அனைவரும் மாடியில் சென்று உணவினை சாப்பிட்டார், பின் அந்த வாரத்தில் நடந்ததை பற்றி பேசி சிரித்து மகிழ்ந்தனர்.
அதிலும் வீட்டின் கடைகுட்டிகளின் உற்சாகம் அவர்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை அப்பட்டமாக தெரிந்தது, அதிலும் பாட்டி மற்றும் பேத்திகளுக்கு இடையே யார் அழகி என்ற கேட்டுத்தான் அது.
விஷ்வா தன் அத்தையின் மடியில் பிடித்துக்கொண்டு அவர்களின் பேட்டியை ரசித்துக்கொண்டு இருந்தான். பின் அனைவரும் போட்டிமுடிந்து தாங்க சென்றனர்.
தேவராயபுத்தில் தன் இல்லத்தில் தேவகி தன் தமையனிடம் வாக்குவாதம் நடந்தது, நீ மட்டுந்தா பெரிய அட்வகேட் ஆ இருந்தா நாங்க எல்லாம் பெரிய வடிவமைப்பாளராக ஆக பேரவங்கடா அப்ப நீ உன் முகத்தை எங்குகொண்டுபேய் வெப்ப உன்னை அப்ப பாத்துக்கரேன். இப்பே நான் போய் படுக்கரேன் நாளைக்கு பாக்கலாம் என்று சென்றுவிட்டால்.
நளனுக்கு இன்னும் தன் தங்கைகள் interviewக்கு எங்குசென்றனர் என்றும், அதே போல் அவள் தமையன் வேலை செய்யும் company nameமும் அவர்களுக்கும் தெரியாது.
அங்கு இருந்து தான் விதி தன் விளையாட்டை ஆரம்பித்து.
பந்தம் தொடரும்...........
Last edited: