Murugan Praveen
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"என் ஜீவன் உன்னிடத்தில்"
****************************************
அத்தியாயம் 1:
'மாலை பொழுதில் தேடிய ஏக்கங்கள்
உன் மடியினில் உறங்கிட வாய்க்குமோ?'
நாயகர்கள்: பிரவீன், அரவிந்த்
நாயகிகள்: பிரியா, அர்ச்சனா
வில்லன்/வில்லி: ஆதார்ஷ், சாருலேகா
வானில் அழகழகாய் காதல் பேசும் மேகக்கூட்டங்களின் நடுவில் காற்றோடு மோதிக்கொண்டு பறந்து செல்லும் விமானத்தின் உள்ளே கண் மூடியப்படியே தனது பழைய நினைவுகளை எண்ணலானான் பிரவீன்.
நான்கு வருடங்களுக்கு முன்பு….!
அதிகாலை பொழுதினிலே சமயலறையில் பரபரப்பாக வேலை வாங்கி கொண்டிருந்தார் ஆனந்தி.
வேகமா அவர்களை அவசரப்படுத்தி உடனடியாக கிடைத்த காபியை இரண்டு கோப்பைகளில் நிரப்பியப்படி அங்கிருந்து வெளியேறினார்.
முதலில் தன் கணவர் மகேஷிடம் வந்தவர், “என்னங்க! இந்த பொண்ணு இவ்ளோ நேரம் தூங்குறாளே என்னனு கொஞ்சம் சென்று பாருங்களேன்” என்றார்.
அதிகமாக செல்லம் கொடுத்து என் பொண்ண வீணாக்கி வச்சு இருக்கீங்க, என்று நொடித்து கொண்டே தன் கையில் இருக்கும் காபியை கணவரிடம் கொடுத்தார்.
மகேஷ் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் என்ஜினீயர். வாரத்தின் ஆறு நாட்கள் வேளையிலேயே மூழ்கி போகும் ஆள். ஞாயிறு மட்டும் மனைவிக்கு காதல் கணவனாக வீட்டிலேயே தங்கி விடுவார்.
மனைவி காபியை கொண்டு வந்து கொடுக்கவும், செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்தவர் மனைவி பக்கம் திரும்பி, காபியை வாங்கினார்.
வழக்கம் தவறாமல் தன் மகளுக்கு ஆதரவாக, “நம்ம அர்ச்சு நேத்து வெளிய போய்ட்டு லேட்டா தானே மா வந்தா கொஞ்ச நேரம் தூங்கட்டுமே, இன்றைக்கு ஞாயிறு விடுமுறையை தானே”?.
அது மட்டும் இல்லாமல் அவ சின்ன பெண் இப்ப தூங்காம எப்ப தூங்குவா? என்று கூற கணவரை முறைத்தபடி, அவ சின்ன பொண்ணா இன்னும் பாப்பா னு நெனப்பா கொஞ்ச நாள் ல காலேஜ் போக போறா. இப்படி தூங்கிட்டே இருந்தா எங்க இருந்து படிக்கறது? என்று புலம்பினார் ஆனந்தி.
இதை பார்த்து மகேஷுக்கோ மனதுக்குள் எப்பொழுதும் போல், என்னமோ நான் மட்டும் செல்லம் கொடுக்குற மாதிரி நடிக்குறா! என் பொண்ணு என் பொண்ணு என்று நான் எது பேசுனாலும் என்கிட்ட சண்டைக்கு வருவா, இன்னைக்கு இப்படி சொல்றா? என்று நினைத்தபடியே சிரிப்பை அடக்க முடியாமல் செய்தித்தாளை கொண்டு மறைத்தபடி சிரித்து கொண்டிருந்தார்.
என்ன கணவன் பதில் பேசவே காணும் என்று நினைத்தவர் சற்று எட்டி பார்க்கவும் கணவர் அடக்கமாட்டாமல் சிரிப்பதை பார்த்தவர்.
தான் நடிப்பதை கண்டு கொண்டாரோ? என்று நினைத்தவருக்கும் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது.
ஆமாம். அர்ச்சனா இந்த வீட்டில் மகாராணி அப்பா அம்மா இரண்டு பேருக்குமே செல்லம்.
இவர்கள் பேசி கொண்டிருந்தது கேட்டதோ? இல்லை நண்பனோடு வெளியில் செல்ல வேண்டும் என்ற ஆவலோ? அர்ச்சனாவும் எழுந்து அமர்ந்தாள்.
இரவு உறக்கம் சிறுது நேரம் என்றாலும் காலையில் உறங்கிய தூக்கம் கலையாமல் சோம்பல் முறித்து எழுந்தவள், தன் கைரேகையின் எண்ணிக்கையில் கண் விழித்து எழுந்தாள்.
நேரத்தை கவனித்தவள் 7 மணி என காட்டியதும் சற்று நிதானமாக குளிக்க கிளம்பினாள்.
சற்று நேர இடைவெளியில் வந்தவள் கண்ணாடியின் முன் வந்ததும் நின்ற தோரணையில் அந்த கண்ணாடிக்கே வெட்கம் வந்திருக்குமோ?
கண்ணாடியை பார்த்தப்படியே தலையை துவட்டியவள் செயற்கை தென்றலாய் வந்த குளிர்சாதனப்பெட்டி(AC)யின் காற்றிலே தன் தலைமுடியை நீண்டு விரித்து காய வைத்து பின் தலைவிரி கோலமாய் முடியை வாரிக்கொண்டு ஒரு விரலால் ஒரு பக்க முடியை விளக்கி கொண்டு வெள்ளை நிற துணியில் பொன் நிறத்தில் பூக்கள் வரைந்த சுடிதாரில் வீட்டுக்கேத்த மகாராணியாக வெளியில் வந்தால் அர்ச்சனா.
அது வரை கணவருடன் சண்டையிடுவது போல் பேசி கொண்டிருந்த ஆனந்தி மகளை கண்டதும் மெய்மறந்து போனார் என்பதே உண்மை.
சற்று அசந்து போனவர் மனம் தெளிந்து மகளை பார்த்து என் கண்ணே பட்டுடும் போலடா என நெட்டி முறித்து கொண்டார்.
இதை கேட்டுக்கொண்டே வந்த அர்ச்சனாவின் முகமோ வெட்கத்தை பிரதிபலித்தது. இருந்தாலும் அதை ரொம்ப நேரம் வெளி காட்டாது தனது கெத்தை விட்டு கொடுக்காமல், அன்னையிடம், “என்னமா காலையிலேயே அப்பா கூட ரொமான்ஸா”? என்று கேட்டதும், இப்பொது வெட்கம் கொள்வது அன்னையின் முறையாயிற்று.
ஏனெனில் தன் அன்னையும் தந்தையும் இப்படி அடிக்கடி சண்டையிடுவது போல் காதல் மொழியில் பேசுவது வாடிக்கையாய் நடப்பது. அதுவும் அர்ச்சனாவுக்கு ரொம்பவே பழகி போன ஒன்று.
தங்களுக்கு திருமணம் ஆனா இத்தனை வருடத்தில் ஒருநாளும் தன் காதலில் குறைவிலாது பார்த்து வரும் காதல் கணவரை கோபம் கொள்ள வைக்க, ஆனந்தி, தன்னால் முடிந்த வரை கோபம் கொண்டபடி நடிப்பார். ஆனால் மகேஷ் அவர் நடிப்பது தெரிந்து தன் சிரிப்பை கட்டுப்படுத்தி பார்ப்பார் ஆனால் சிறிது நேரத்தில் சிரித்துவிடுவார்.
இன்னைக்கு என்னக் கூறி சண்டை போடுவது என்று யோசித்து கொண்டு இருந்தவருக்கு மகள் நேற்று நேரம் கடந்து வந்ததைக் கண்டு கணவன் பொறுப்பில்லாமல் கண்டு கொள்ளாமல் விட்டதாக சண்டையிட நினைத்தார். அதுவும் இன்று பலிக்காமல் போனதை நினைத்து வெட்கத்துடன் கணவன் மீது சாய்ந்து கொண்டார்.
தன் மனைவி தோளில் சாயவும் ஆறுதலாக அணைத்து கொண்டார் அந்த காதல் கணவர். இதை பார்த்து கொண்டிருந்த அர்ச்சனாவோ அன்னை தந்தையின் அன்பில் உருகிப்போனாள்.
ஆதலால் பேச்சை மாற்றும் பொருட்டு இந்த காபி யாருக்கு எனக்கு தானே கொடுங்க என்க. இவர்கள் காதல் மொழி பேசுகையில் காபியும் ஆறிப்போனது.
இரும்மா இந்த காபி ஆறிவிட்டது.
நான் சுட செய்து தருகிறேன் என்று மறுபடியும் சமயலறையின் உள்ளே சென்று சூடு செய்து கொண்டு வந்தார், ஆனந்தி.
மகேஷ் மகளிடம், “எங்கம்மா காலையிலேயே வெளில போற சாப்பிட்டுட்டு போலாம்” என கூறினார்.
அதெல்லாம் வேணாம்ப்பா, நான் பிரவீன் கூட சாப்பிட்டுக்குறேன்.
சரிம்மா, “சாயங்காலம் மாப்பிள்ளையை வீட்டுக்கு வர சொன்னேன்” னு சொல்லுமா, என்று மகேஷ் கூற சரி என்றபடி வெளியேறினால் அர்ச்சனா.
பிரவீன் வேற யாரும் இல்ல மகேஷின் நண்பன் கணேஷ் மற்றும் மீரா இவர்களின் புதல்வன். அது மட்டுமில்ல அர்ச்சனா ஓட உயிர் நண்பன்.
மகள் வெளியில் செல்வதை பார்த்துக்கொண்டிருந்த மகேஷுக்கு அவர்களின் கடந்த காலமும் கணேஷுடன் ஏற்பட்ட நட்பும் நினைவுக்கு வந்தது.
சிறு வயதிலிருந்தே அர்ச்சனாவிற்கு பிரவீனை திருமணம் முடிக்க இரு வீட்டாரும் நினைத்திருந்த வேளையில், தங்கள் மக்களின் விருப்பமும் அதில் இருக்க வேண்டும் என்று அமைதி காத்தனர்.
இவர்கள் விரும்பினால் உடனே மணமுடிக்க காத்திருக்கும் நிலையில் தன் நட்பை காதலென உணர்வார்களா? அல்லது அவரவர் காதலில் விழுவார்களா?.
காபியை வேகமாக குடித்து முடித்த அர்ச்சனா நேராக பிரவீன் வீட்டுக்குள் நுழைந்தாள். உள்ளே சென்றதும் ஹாலில் அமர்ந்து செய்தித்தாளை படித்துக்கொண்டிருந்த கணேஷிடம் மாமா பிரவீன் எங்கே என்று கேட்டாளே தவிர, மறந்தும் அவரிடம் இருந்து பதிலை எதிர்பாராது அவனுடைய அறைக்கு வேகமா ஏறினாள், இதை அறியாத கணேஷ் அவன் மாடியில் தான் இருக்கான் என்று பதிலுரைத்தப்பின் திரும்பி பார்த்தவருக்கு அங்கு யாரும் இல்லை என்றதும், இவளிடம் மரியாதை எதிர்பார்த்தது என் தவறு தான் என்று தன் தலையில் அடித்து கொண்டார்.
பின் மீராவிற்கு தங்கள் மருமகள் வந்ததை கூறி காலை உணவை உடனே செய்யுமாறும் அர்ச்சனாவுக்கு பிடித்த மாதிரியும் சமைக்கும் மாதிரியும் கூறினார், கணேஷ்.
தங்கள் மருமகள் வந்திருப்பதாக கூறவும், ஆசையாக வெளியில் வந்த மீராவிற்கும் ஏமாற்றம் தான் மிச்சம்.
எங்கேங்க மருமகள் வந்திருப்பதாக சொன்னிங்க.
ஆனந்தி, அர்ச்சனா எங்க எனவும் வார்த்தையில் சொல்லாமல் மேல் இருப்பதாக கண்களை மட்டும் மேல் தூக்கி காட்டினார் கணேஷ்.
ஆனால் அதன் அர்த்தம் புரியாமல் எந்நேரமும் தன் கணவன் காதலிலேயே இருப்பவர், இப்பொழுதும் தன்னை சீண்டி பார்ப்பதாகவே அவர் எண்ணிக்கொண்டு, “காலையிலையே விளையாட்டா? கொஞ்ச நேரம் என்னை தனியா விட மாட்டிங்களா” னு செல்ல கோபம் கொண்டாள் மீரா.
எந்நேரமும் மாமன் நெனப்புதானா, மருமக மேல இருக்கா என்று சொன்னேன் எனவும்,
ஏன் இதை முன்னவே வாய் திறந்து கூறினால் என்ன என்று சிலுத்த படியே மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தார் ஆனந்தி.
அர்ச்சனா மாடிக்கு வருவதற்குள் பிரவீன் குளித்து முடித்து வெளியில் செல்ல தயாரானான். நீல நிற ஜீன்ஸ் அதுக்கு ஏற்றாற்போல் வெளீர் மஞ்சள் நிற சட்டையுடன் அதில் உள்ள பொத்தான்களை அணியாமல் அதன் உள்ளே வெள்ளை நிற டீ-ஷர்ட் வெளியில் தெரியும்படியும், கண்ணில் கூலிங் கிளாஸ் அணிந்தபடியும், விசிலடித்தப் படியே வெளியில் கிளம்பினான் பிரவீன்.
டேய் நண்பா செமையா இருக்காடா என் கண்ணே பட்டுடும் போல என்று தன் கையை மடக்கி நெட்டி முறித்தாள், அர்ச்சனா.
அவ்வளவு அழகாவா இருக்கேன் என்று நம்பமுடியாத பார்வை பார்த்தான் பிரவீன்.
பிரவீன் என்றும் அவனுக்கு பிடித்ததை செய்ய வேண்டும், அவன் ஆசைப்பட்டு எதுவும் கிடைக்காமல் போக கூடாது என்றும் ஆசைப்படுவாள் அர்ச்சனா. ஆதலாலே பிரவீன் வெளிதோற்றத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் அர்ச்சனா அவனை எங்கேயும் விட்டுத்தந்ததில்லை.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மீரா உள்ளே வந்தார்.
என்னமா மருமகளே நாங்கள் இருவர் கீழே இருப்பது உனக்கு ஞாபகம் இல்லையா? வந்ததும் உன் நண்பனை பார்க்க வந்துட்ட? என்று தன் ஆதங்கத்தை தெரிவிக்க.
என் செல்ல அத்தை இல்ல நீங்க சமைத்து கொண்டு இருப்பிங்க. இவன் தான் என்கூட நைட் சுத்திட்டு இருந்தானே அதான் எழுப்பி கூட்டிட்டு வரலாம் னு வந்தேன். அதுக்குள்ள என்னை இப்படி நெனச்சிட்டிங்களே என்று செல்லமாக முத்தம் வைத்தாள் அர்ச்சனா.
சரி சரி இரண்டு பெரும் கீழே வாங்க சாப்பிட்டுட்டு போலாம் என்றார்.
இவர்கள் சாப்பிட வரவும் தான் அந்த வீட்டில் இருக்கும் ஏஞ்செல்(அந்த வீட்டுல உள்ளவங்களுக்கு மட்டும் பிரவீன்-க்கு செல்ல ராட்சசி பிரபாக்ஷி சுருக்கமாக பிரபா எப்பொழுதும் பிரவீனை வீட்டில் மாட்டி விடுவதே குறியாக இருக்கும் அவன் அன்பு தங்கை) சத்தம் போட்டப்படியே வெளியில் வந்தாங்க.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறாள். இன்றைய விடுமுறைக்கு வெளியில் அவளையும் அழைத்து செல்ல வேண்டும் என்று அன்னையிடம் கூறியிருந்தாள், இப்போது அண்ணன் தன்னை வீட்டிலேயே விட்டு விட்டு செல்லவும் தான் இந்த ஆர்ப்பாட்டம்.
அம்மா அம்மா என்னையும் வெளியில் அழைத்து செல்ல தானே கூறினேன் இன்று அண்ணன் என்னை செல்கிறான். நீங்களும் ஏதும் சொல்லாமல் இருக்கீங்க என்று தன் அறிமுகத்தை தந்தாள், பிரபா.
சரி சீக்கிரம் சென்று, தயாராகி வா இப்படி தூங்கிக்கொண்டே இருந்தால், எப்படி செல்வது என்று அர்ச்சனா மொழிய பிரபா அர்ச்சனாவிடம் நன்றி சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றாள்.
பிரபா உள்ளே சென்றதும் பிரவீன் அர்ச்சனாவை முறைத்து பார்த்து கொண்டிருந்தான்.
பிரபா உள்ளே சென்றதும், இவ்வளவு நேரம் பிரவீன் தன்னை முறைப்பதை கண்டும் காணாதது இருந்தது போலும் இப்போதது தான் கண்டது போலும் என்னடா என்னையே பாசமா பார்ப்பது போல் உள்ளது என்று திரும்பினாள் அர்ச்சனா.
"ஏன்டி இப்ப அவள கூப்பிடுற? வந்தா என்ன சாகடிச்சுடுவா" என்று பிரவீன் புலம்ப.
"அதெல்லாம் நீ கவலை படாதே அவளை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று அர்ச்சனா சமாதானம் படுத்தினாள்.
"என்னவோ செய்" அவனும் விட்டுவிட்டான்.(விட்டு தானே ஆக வேண்டும்)
பதினைந்து நிமிட இடைவெளியில் வெளியில் வந்தாள், பிரபா. இந்த இடைவேளையில் அர்ச்சனாவும், ப்ரவீனும் சாப்பிட்டு முடிக்க சரியாக இருந்தது.
இவர்கள் சாப்பிட்டு முடித்ததை கவனித்தவள், தன் அன்னை சாப்பிட அழைக்கவும், அம்மா அண்ணனுக்கு நேரம் ஆயிட்டு சைட் அடிக்க, ஏற்கனவே நான் அவன் கூட போறேன் என்று என்மேல் கோவமா இருப்பான்; நான் வெளிலேயே சாப்பிட்டுக்குறேன் என்று வழக்கமாக மாட்டிவிடுவதை இன்றைக்கும் செய்து விட்டு வாங்க அண்ணா போகலாம் என்று பணிவாக அழைத்தாள், பிரபா.
தன்னை எப்பொழுதும் அன்னையிடம் கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் தங்கையை நினைத்து கோபம் வந்தாலும், தான் என்ன செய்ய நினைத்தாலும் அதை யூகமாய் கண்டுபிடிக்கும் தங்கையை நினைத்து பெருமை கொள்ளவும் தவறவில்லை.
ஆனால் அது தான் உண்மை என்று அவன் அன்னைக்கு தெரியாதே!.
மீரா, சற்று சந்தேகத்துடனே, "என்னடா பிரவீன் இவள் ஏதோ சொல்றா இவள் சொல்லுவது உண்மையா" என்க.
அவர் கூறிய உண்மையா என்று வார்த்தையின் அழுத்தத்தில் அவரும் தன்னை சந்தேகிப்பது உணர்ந்து, அம்மா, இந்த லூசு சொல்றத நம்பாதீங்க.
ஏய் ராட்சசி நீ பொறுமையாவே சாப்பிட்டுவிட்டு வா; நங்கள் காத்திருக்கிறோம் என்பதை சத்தமாக கூறியவன். என்னை கோர்த்துவிடாமல் இருக்கமாட்டியாடி என்று தங்கையின் காதில் மட்டும் விழும்படி கூறினான்.
அவன் பொறுமையாக கூறவும் பாவம் கொண்டது போல், "சரி பொழச்சிப்போ எனக்கு முன்னாடி பொறந்துட்ட”, என்று கூறி சலிப்புடன் உணவருந்த சென்றாள் பிரபா. பிரபா சென்றதும், எல்லாம் எந்நேரம் என்று, பிரவீன் அர்ச்சனா காதை கடித்தான்.
இவளை அழைக்காதே என்று கூறினேனே கேட்டியா இப்ப பாரு இங்கையே ஆரம்பிச்சுட்டா. இவளை கூட்டிட்டு போனா என்னவெல்லாம் செய்வாளோ? என்று கூறவும். அர்ச்சனா, "பிரவீன் அப்ப இன்னைக்கு எந்த கிறுக்குத்தனமும் பண்ணாம இரு" வாயை மூடி சிரிக்க ஆரம்பித்தாள்.
நட்பும் காதலும் தொடரும்....
************************************************************

**************************************************************************************