ஹாய்.. பிரெண்ட்ஸ்..
தற்பொழுது ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கும் "கொஞ்சும் காதல்..!" கதையில் இருந்து சின்ன டீசர்..
வழக்கமான என் கதையில் இருந்தும் கதை ஹீரோக்களில் இருந்தும் கொஞ்சம் வித்தியாசமாக எழுதியிருக்கிறேன்.
தலைப்பிற்கு ஏற்ற மாதிரி.. கதை இருக்கிறதா என்று வாங்கி படித்துப் பார்த்து சொல்லுங்கள்..
#################
பந்து ஒன்று அவனது தோளின் மேல் பலமாக விழவும், இயல்பு போல் வலியில் நெளிய நினைத்தவன்.. காலையில் லாவண்யா சொல்லியது, நினைவு வரவும்.. மனதிற்குள் ‘ஆட்டிட்யுடு ப்ரதிவ்! ஆட்டிட்யுடு’ என்றுச் சொல்லிக் கொண்டு தோளில் விழுந்த தூசியைத் தட்டிவிடுபவன் போல்.. தட்டிவிட்டவாறு எழுந்தான். தனக்கு முன்னால் விழுந்த பந்தை கையில் எடுத்தவன்.. அதைத் தனக்கு மேல் தூக்கி வீசி.. அதை கால் முட்டியால் தட்டி மேலே எழுப்பி பின் கீழே வந்த பந்தைச் சற்று தொலைவில் நின்றிருந்தவர்கள் பக்கம் உதைத்தான். பின் எப்படி என்பது போல் கோர்ட்டை இழுத்துவிட்டுக் கொண்டு லாவண்யாவை பெருமையுடன் பார்த்தான்.
லாவண்யாவோ வாயில் இருகைகளையும் வைத்துக் கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னை ஆச்சரியமாக பார்க்கிறாள் என்று நினைத்த ப்ரதிவ் “யா..! இட்ஸ் மீ! சர்பரைஸ் பேக்கேஜ்” என்று இரு கைகளையும் பக்கவாட்டில் விரித்து தலையை ஆட்டினான்.
ஆனால் லாவண்யா வாயில் இருந்து கரங்களை எடுக்காமல் மறுப்பாக இடமும் வலமுமாக தலையசைத்தாள்.
அவளது கண்களில் இருந்த பாவனையைக் கண்ட ப்ரதிவ்விற்கு என்னமோ சரியில்லை என்றுத் தெரிந்தது. எனவே மெதுவாக “என்னாச்சு லாவண்யா..?” என்றுக் கேட்டான்.
லாவண்யா தன் கரங்களை வாயில் இருந்து எடுத்துவிட்டு “அந்த பால் அவங்களது இல்லை.. இதோ இங்கே நிற்கிறாரே.. இவரோடது! பால் விழுந்ததும் ஸாரி சொல்லி பால் வாங்க கையை நீட்டினார். ஆனால் நீ அதைக் கவனிக்காமல்.. அங்கே உதைத்து ஏறிஞ்சுட்டே..” என்றாள்.
அவள் சுட்டிக்காட்டிய பக்கம் பார்த்த ப்ரதிவ் எச்சிலை மெல்ல விழுங்கிக் கொண்டான். ஏனெனில் ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் திடக்காத்திரமான உடற்கட்டுடன் ஒற்றை புருவத்தை உயர்த்தியவாறு அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
####################
புத்தகங்கள் ஆர்டர் செய்ய.. இந்த லின்கில் செல்லுங்கள்..