All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் இரகசியம் நீ..!! 's comment thread

Durga riya

Active member
Superb sis.....திவிக்கு அவளை புரிந்து கொள்ளும் தந்தை ரங்கராஜன்,பானுமதி,அன்பான அண்ணன் செந்தில்,மாலதி,அபி என அழகிய கூடு..அன்பிற்காக கதிரவன் ஏங்கிய பகுதிகளை அழகாக எழுதியுள்ளீர்கள்..கதிர், திவியின் காதல் ரசிக்க வைத்தது..கதிரின் சிக்ஸ் பேக் பற்றி திவி பேசியது வாய்விட்டு சிரிக்க வைத்தது.ராகவனிடம் அண்ணாதானே என கதிர் கேட்கும்போது கண்கள் ஈரமாகின.மகேஷ்வரி,ஆர்த்தி,நிவேதா, நல்ல கதாபாத்திரங்களே...,விஜய் க்கு ஏற்பட்ட காதல் தோல்வியே சண்முகத்தின் வேதனையை அவனுக்கு புரியவைத்தது..கடைசியில் கதிர் அது தோல்வியே அல்ல என விஜயை மாற்றி யோசிக்க வைத்துவிட்டான்..சசி போன்ற தோழி இருப்பதற்கு இல்லாமலே இருக்கலாம்..சுந்தர மூர்த்தி,சத்தியமூர்த்தி கௌரவத்தை பெரிதாய் நினைத்து செய்த மனித தன்மையற்ற செயலுக்கு சரியான தண்டனை தான்.மாதவனிற்கு கை போனதிற்கு பதில் மூர்த்தி சகோக்களுக்கு போயிருக்கலாம்.தன் தாய் வசந்தியின் உயிர் துறந்த வீட்டில் வாழவேண்டாம் என கதிர் முடிவெடுத்தது சரியே... :love::love::love::love:
 

Chitrasaraswathi

Well-known member
ராஜி அன்புவின் என் இரகசியம் எனது பார்வையில். குன்னத்தூர் ஜமீன் கதிரவன், நாயகி திவ்யா அவன் அவளைக் காப்பாற்றியதை உணராமல் அவனை பொது இடத்தில் அறைந்ததால் அவன் கோபப்பட்டு அவனின் காதலி என்று அவன் கோவிலில் ஊர்மக்கள் முன்பாக சொல்கிறான். அதனால் திவ்யாவின் திருமணம் தடைபடுபவதாலும் ஊரில் பலரின் ஏளனத்திற்கு ஆளாவதால் ஊரைவிட்டுச் செல்ல திவ்யாவின் குடும்பம் முடிவெடுக்கிறது. இருவரும் உண்மையில் காதலர்களா . கதிரவனின் குடும்பத்தில் அவனின் நிலை என பல மர்மங்களை விறுவிறுப்பான கதையாக முதல் கதையை கொடுத்திருக்கிறார் ராஜிஅன்பு. படிக்க தொடங்கினால் முடித்து வைக்கும் அளவு விறுவிறுப்பான கதையாக எழுதியுள்ளார். உண்மையில் சொல்வது என்றால் முதல் கதையை காதல் கலந்த த்ரில்லர் கதையாக அருமையாக தந்திருக்கிறார். ஆனால் இப்பொழுது இந்தக் கதையை எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யாமல் இருக்க முடியாது.
 

Yasmine

Bronze Winner
ஆரம்பம் முதலே கதை சிறப்பாக நகர்க்கிறது... அருமையான கதை ... வாழ்த்துக்கள் டா முதல் கதையே இத்தனை சிறப்பாக முடித்ததர்க்கு
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரகசியம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. கதை ரொம்ப நல்லா இருந்தது.
மிக்க நன்றிகள்💜🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான கதை. 😍
கதிரவன் ஆரம்பத்தில் முரடனாக சித்தரிக்கப்பட்டாலும் போக போக ஆகர்ஷிக்கிறான். 😍❤

திவ்யாவை அவன் கையாளும் முறை... தன் காதலை எடுத்துறைக்கும் தருணம் எல்லாம் ரசனைக்குரியது.
அவனது பிறப்பின் ரகசியம் வேதனைக்குரியது.😢 தன் தந்தையுடன் சேரும் தருணங்கள் எல்லாம் நெகிழ்ச்சியை வரவைக்கிறது. 😍

திவ்யா அவளது அசட்டு தைரியம் 👌🏻👌🏻🤣🤣
சிங்கத்தின் பிடரிமுடியை பிடிக்க அதன் கோட்டைக்குள்ளேயே நுழைந்தது எல்லாம் மாஸ்..
கதிரவனின் stress busterம் இவளே... energy boosterம் இவளே.. 😍👌🏻

மூர்த்தி ப்ரதர்ஸ்... 😡😡😡 இவர்களின் முடிவு அருமை.

கதிரவனின் climax அதிரடி நடவடிக்கைகள் தான் highlighted. 💥💥💥


அருமையான கதை. முதல் கதை என்று நீங்கள் கூறி தான் தெரிந்து கொண்டேன்... அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. 😍😍😍
மிக்க நன்றிகள்...

என் முதல் ஹீரோ..😁😁😁
 
Top