All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னவளே நான் உன்னவனே- கதை திரி

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தலைப்பு - என்னவளே நான் உன்னவனே

நாயகன் - ரூத்ரரூபேந்தர்
பெயரை போலவே ரூத்ர தாண்டவம் ஆடுவதில் வல்லவன்


நாயகி - ரூபவிகாத்மிகா
கோபம் என்றால் என்ன விலை? எங்கு விற்கப்படும் ? என்று கேட்பவள்

இவர்கள் இருவருரையும் இணைப்பது?????

வேறென்ன காதல் தான்

எப்படி????????

ஆனானாபட்ட தெய்வங்களே காதலில் விழந்து அவ்அன்பை பெறவோ அல்லது பெற்ற பின்போ தன்னவளிடம் சரணடையும் போது இந்த ரூத்ரன் எம்மாத்திரம் என்று பார்க்கலாமா ???????!!!!!!!!!!!!!!......
 

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னவளே நான் உன்னவனே

டீஸர்-1


"அம்மா வேண்டாம்மா அம்மா வேண்டாம்மா என்னால் இதை பண்ண முடியாது அம்மா"– ரூபவிகாத்மிகா

"ஏய் ஒழுங்கு மாரியாதைய கல்யாணத்துக்கு தயாராகு இப்போ நீ சீக்கிரம் தயாராய் வரல நடக்கிறதே வேற சொல்லிட்டேன் ஆமா"-உமா

ரூபாவும் தாய் நிச்சயமாக அவள் சொல்வதை கேட்காவிட்டால் ஏதாவது செய்து விடுவாள் என்ற பயத்தில் தயாராகி கோவிலில் திருமணம் நடக்கும் இடத்திற்கு வந்து நின்றாள்.

ஆனால் அன்று பார்த்து யாரோ பெரிய பணக்காரர் தன் மகனின் பிறந்த நாளைக்காக கோவிலில் சிறப்புபூஜை அன்னதானம் எல்லாம் ஏற்பாடு செய்து இருந்ததால். கூட்டம் நிரம்பி வழிந்தது
கூட்டம் நெரிசலில் அவள் நின்று கொண்டு சுற்றும் முற்றும் தப்பிக்க ஏதாவது வழி உள்ளதா என்று பார்த்தால் ஆனால் அங்கு அவளை சுற்றி மட்டுமல்லாது கோவிலை சுற்றியும் ஆட்கள் நிறுத்தி வைக்க பட்டிருப்பதாக தன் தாய் கூறியது நல்ல வேளையாக நினைவு வந்து தொலைத்தது.

அதில் மனம் சோர்ந்து போனது ஆனாலும் மனதை தளர விடாமல் தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரிடம் தனக்கு உதவும்மாறு கண் மூடி கண்ணீர் மல்க கை கூப்பி வேண்டினாள்
அவள் அப்படி வேண்டிக் கொண்டிருக்கும் போதே அவள் கழுத்தில் ஏதோ ஊறுவது போல தோன்றியதால் கண் திறந்து பார்த்தாள்

பார்த்தவள் தன் முன் நின்றவனை கண்டது தான் தாமதம் கை நடுநடுங்க உடல் முழுவதும் வேர்வையில் சொட்ட கண்கள் சொருகி மயக்கத்தில் தள்ளாடவும் அவள் கழுத்தில் தாலி கட்டி சிறிது நேரத்திற்கு முன் அவளை தன்னவளாக மாற்றிக் கொண்டவன் அவள் நிலையை ஓரே பார்வையில் உணர்ந்து அவள் மயக்கத்தில் கீழே சரிவதற்கு முன் தன் கைகளில் தாக்கினான்

அப்போது அவன் கண்களில் இருந்த கனிவை கண்டு அங்கு இருந்ததில் அவனை நன்கு அறிந்திருந்த அனைவரும் அவனை ஆச்சரியமாகவும் உலகின் ஒன்பதாவது அதிசயமாகவும் பார்த்தனர் ஏன்னெனில் அவன் பெயருக்கு ஏற்றாற்போல் எப்போதும் இறுக்கமாக இருப்பவன் முகத்தில் கனிவுடன் கூடிய சிரிப்பை கண்டால் என்ன செய்வர் அவன்- ரூத்ரரூபேந்தர்
 
Top