All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "சிதைக்காதே என்னுயிரே" கதை நீக்கப்பட்டு விட்டது. Sample ( உதாரணம்) அத்தியாயங்கள் மட்டுமே உள்ளது

Status
Not open for further replies.

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

”சிதைக்காதே என்னுயிரே" கதை இன்று மாலை முதல் ஆரம்பம் ஆகும்.

உங்கள் கருத்துகளை தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்❤❤
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1:

இன்று..

"பிரேக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.."

கோவையில் உள்ள வளர்ந்து வரும் மெக்கானிக்கல் ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரி..

இரண்டே தளம் கொண்ட கட்டிடம்.. கடந்த சில வருடங்களாக வேகமாக முன்னேறி வரும் நிறுவனம் அது..

அங்கு உள்ள ஒரு மெஷினில் குனிந்து வேலை செய்து கொண்டிருந்தான் கார்த்திகேயன்..

அந்த நிறுவனத்தின் மேனேஜர்..

அவன் மேனேஜர் என்று பெயர் தான், அங்கு கிட்டத்தட்ட முதலாளி போல் தான் அவன் வேலைகள் இருக்கும்..

அதாவது எல்லா வேலையும் அவனுக்கு தெரியும்..

எதுவாக இருந்தாலும் கூசாமல் தானே இறங்கி செய்து விடுவான்..

அத்தனை செய்பவனுக்கு அதற்கான மரியாதை சுத்தமாக கொடுக்கப்படுவதில்லையோ என அங்கிருந்த அனைவருக்குமே தோன்றும்..

ஆனால் அவனே எதையும் கண்டுகொள்ளாத போது, யார் என்ன சொல்ல முடியும்!

"கார்த்திக் சார் உங்களுக்கு போன்" என ஒருவன் வந்து குரல் கொடுக்க, செய்துகொண்டிருந்த வேலையை அப்போது தான் முடித்திருந்தவன்,

"இதோ வரேன்" என்று கூறிக்கொண்டே எழுந்தான்..

கையில் ஒட்டி இருந்த கறையை அங்கிருந்த ஒரு துணியில் துடைத்து கொண்டவன், "இனி பிரச்சனை வராது.. மெஷினை ரன் பண்ணுங்க.. நாளைக்குள் டெலிவரி கொடுக்கணும்.." என்றுவிட்டு தன் இருக்கை நோக்கி சென்றான்..

ஆபிஸ் போனிற்கு தான் அழைப்பு வந்திருந்தது..

அதை எடுத்தவன், "எஸ் கார்த்திகேயன் ஹியர்" என தொடங்க,

"திஸ் இஸ் பிரகாஷ்" என அந்த பக்கம் இருந்து பதில் வந்தது..

அந்த பக்கம் இருந்து வந்த பதிலில் கார்த்திக்கின் உடல் வெகுவாய் இறுகி போயிற்று..

"சொல்லு" என அவன் தொடங்க,

"ஹலோ மிஸ்டர் கார்த்திகேயன், நீங்க என்னிடம் வேலை பாக்கறீங்க.. நான் அந்த கம்பெனி எம்.டி.. நினைவிருக்கா? சொல்லுங்க சார் என்று சொல்லணும்.." நக்கல் குரலில் அந்த பக்கம் இருந்து பதில் வர, ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து வந்த கோபத்தை விழுங்கிக்கொண்டவன்,

"சொல்லுங்க சார்" என்றான் குரலில் எந்த உணர்வும் காட்டாமல்..

"தட்ஸ் பெட்டர்.. உடனே கிளம்பி வீட்டுக்கு போ.. இன்று சாதனாவை பொண்ணு பார்க்க வராங்க.. அங்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்.. பொண்ணு பார்த்துட்டு போகும் வரை உடன் இருந்து என்ன தேவையானாலும் செய்துகொடு.." என அவன் அழுத்தமாக கூற, இந்த பக்கம் கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக்கின் முகத்தில் அத்தனை ரௌத்திரம் தாண்டவமாடியது..

தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள பெரும்பாடு பட்டு போனான்..

கையில் இருந்த போனை சற்று தள்ளி வைத்துவிட்டு, கண்களை அழுந்த மூடி தன்னை கட்டுப்படுத்தி கொண்டவனின் ஒரு கை அவன் மேசையை அழுத்தமாக பற்றி இருந்தது..

அப்போது தான் யாரோ வைத்துவிட்டு சென்றிருந்த மெட்டீரியலில் இருந்த கூர்மையான பகுதி அவன் உள்ளங்கையை குத்திக்கொண்டிருக்க, அந்த வலியை உணர தோன்றாமல் தன்னை கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருந்தான் கார்த்திக்..

"ஹலோ இருக்கையா பா?" என மீண்டும் ஒலித்த நக்கல் குரலில் நினைவிற்கு மீண்டவன்,

"இங்க வேலை இருக்கு சார்" என்று மட்டும் கூறினான்..

"அதெல்லாம் மத்தவங்க பார்த்துப்பாங்க மிஸ்டர்.. நீங்க நான் சொன்னதை செய்யுங்க.. அதுக்கு தானே சம்பளம் வாங்கறீங்க.."

"நான் ஆபிஸ் வேலைக்கு தான் சம்பளம் வாங்கறேன்" அடக்கப்பட்ட கோபத்துடன் கார்த்திக் கூற,

"அதெல்லாம் எனக்கு தெரியாது.. நான் சொல்வதை செய்வதானால் இரு, இல்லை தாராளமா வேலையை விட்டு போகலாம்.."

பிரகாஷின் வார்த்தைகளை எதிர்பார்த்தே இருந்தவன் உடல், கையாலாகா கோபத்துடன் வெகுவாய் இறுகி போயிற்று..

தன் ஆறடிக்கு முழுதாய் இறுகி போய் நிமிர்ந்து நின்றவன், "போறேன்" என முடித்துவிட்டு போனை வைத்துவிட்டான்..

இந்த பக்கம் போனை வைத்த பிரகாஷின் முகத்திலும் இந்த நொடி பெரும் கோபமே நிறைந்திருந்தது..

போனை வைத்ததும் தான் கையை அந்த மெட்டீரியலில் இருந்தே எடுத்தான் கார்த்திக்..

உள்ளங்கை முழுவதும் கிழித்து வடிந்துகொண்டிருந்த ரத்தம் அவனுக்கு எந்த வலியையும் கொடுத்தது போல் தெரியவில்லை..

மாறாக அவன் முகம் இறுகியே தான் இருந்தது..

இந்த வேலை அவன் மிகவும் ஆசைப்பட்டு சேர்ந்தது..

எக்காரணம் கொண்டும் இதில் தன் ஆசையை அவன் விட்டு கொடுக்க மாட்டான்..

மெக்கானிக்கல் அவன் கனவுகண்டு படித்த படிப்பு.. அதை எதற்காகவும் விட்டுக்கொடுக்க அவன் துணிய மாட்டான்.. அது தான் மற்றவர்களுக்கு வசதியாக போயிற்று.

அவன் வேலையை விட மாட்டான் என்று தெரிந்தே தான் அனைவரும் ஆடுகின்றனர்..

அவனும் அவர்களுடன் சேர்ந்து அவர்கள் ஆட்டுவிக்கும்படி எல்லாம் ஆடி கொண்டிருக்கிறான்..

எல்லாம் ஒரே ஒரு காரணத்திற்காக.. அந்த காரணம் அவன் மனம் மட்டுமே அறிந்த ஒன்று..

வெளியில் மற்றவர்களை பொறுத்தவரை அவன் உணர்ச்சிகளற்ற கற்பாறை..

அவனும் அந்த முகத்தை மாற்றிக்கொள்ள முயற்சித்ததில்லை..

ஏனோ உணர்வுகளுடன் வாழ ஒரு கட்டத்திற்கு மேல் அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை போல்..

சில ஆழ்ந்த மூச்சுகள் எடுத்து தன்னை நிலைப்படுத்தி கொண்டு வெளியே வந்த கார்த்திக், "பாலா" என குரல் கொடுக்க, அவனுக்கு கீழ் வேலை செய்யும் அசிஸ்டன்ட் மேனேஜர் பாலா வந்து நின்றான்..

அவனிடம் வேகமாக அடுத்து செய்யவேண்டியதை கூறியவன், "ஏதாவது சந்தேகம் என்றால் போன் பண்ணுங்க" என்றுவிட்டு நகரப்போக, அவன் கூறியதை உன்னிப்பாக கவனித்து முடித்திருந்த பாலா அப்போது தான் அவன் கையை பார்த்தான்..

"சார் கையில் என்ன ஆச்சு?" என அவன் படபடப்புடன் கேட்க, கார்த்திக்கும் அப்போது தான் தன் கையை கவனித்தான்..

கையை ஒரு நொடி முகம் சுருங்க பார்த்தவன், "நத்திங்" என்றுவிட்டு தொடர்ந்து நடக்க தொடங்கி விட,

"சார் ஒரு நிமிஷம் நில்லுங்க ப்ளீஸ்" என்றுவிட்டு வேகமாக சென்ற பாலா, அடுத்த ஐந்தாவது நிமிடம் கையில் பர்ஸ்ட் எயிட் கிட்டுடன் வந்து நின்றான்..

"கையை காட்டுங்க சார்" என்றவன் தானே அவன் கையை இழுத்து கட்டும் போட்டு விட்டான்..

அவன் முடிக்கும் வரை அமைதியாக நின்ற கார்த்திக், "ஓகே தேங்க்ஸ்" என்றுவிட்டு வேகமாக வெளியேறிவிட்டான்..

தனது பைக்கை எடுத்துக்கொண்டு சாதனா வீடு நோக்கி பயணித்தவனுக்கு மனம் நிலைகொள்ளாமல் தவிக்க, அதை மிகவும் முயன்று கட்டுப்படுத்திக்கொண்டான்.

அவர்கள் வீட்டை அடைந்ததும் வாசலில் இருந்த காவலாளி கதவை திறந்துவிட, உள்ளே வந்து வண்டியை நிறுத்தியவன் கண்கள், அந்த வீட்டின் மேல் உணர்வுகளற்று ஒரு முறை படிந்து மீண்டது.

அதை வீடு என சொல்வதை விட பங்களா என்று கூறினால் சரியாக இருக்கும்..

அத்தனை பெரிய வீடு.. பணம் மரத்தில் காய்க்குமா என்ற பழமொழியை உண்மையாக்குவது போல் உயர்ந்து நின்றது அந்த வீடு..

பணம்.. அந்த ஒன்றால் தான் எத்தனை பிரச்சனை.. அளவுக்கதிகமாக பணத்தை கொடுக்கும் ஆண்டவன், மனிதனுக்கு அது நிரந்தரம் இல்லை என்றும் சொல்லி கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்குமே..!

"தம்பி.. நீங்க.." வாசலில் தன் நினைவிலேயே நின்றுவிட்டவன் திடீரென ஒலித்த தயக்கமான குரலில் நினைவுமீண்டு குரல் வந்த திசை நோக்கி திரும்பினான்..

அவன் திரும்பியதும், "உள்ளே வாங்க" என அவனுக்கு எதிரில் இருந்த பெண்மணி அழைக்க, அவரை தொடர்ந்து உள்ளே சென்றான் கார்த்திக்..

"உட்காருங்க" என அவர் சோபாவை காட்ட,

"இல்லை.. இன்று சா.. சா.. சாதனாவை பெண் பார்க்க வராங்கலாமே.. ஏதாவது உதவி தேவைப்பட்டா செய்ய சொல்லி பிரகாஷ் சார் சொன்னார்.." குரலில் எந்த உணர்வும் காட்டாமல் கார்த்திக் கூற,

அவர் தான், "பிரகாஷ்" என மகனை நினைத்து பல்லை கடித்தார்..

"இல்லை பா.." என அவர் இழுக்க,

"ஏதாவது வேலை இருக்கா?" என்றான் இந்த முறை கார்த்திக் அழுத்தமாக..

"இருக்கு" என அவனை போலவே அழுத்தமாக ஒரு பெண் குரல் ஒலிக்க, இப்போது இருவரும் அங்கு பார்த்தனர்..

"அதான் கேட்கிறார் இல்லையா மா.. ஏதாவது வேலை இருந்தால் சொல்வது தானே.. நல்லா செய்வார்.." பேசிக்கொண்டே வந்த சாதனாவின் கண்கள் அவன் மீது அழுத்தத்துடன் படிய, அவனும் அவளை தான் கொஞ்சமும் அழுத்தம் குறையாமல் பார்த்து கொண்டிருந்தான்..

"சாதனா நீ கொஞ்சம் சும்மா இரேன்" என சித்ரா திணற,

"நீ எதுக்கு மா இத்தனை திணறுகிறாய்? அதான் சார் செய்யறேன் என்று சொல்கிறார் இல்லையா.. கொஞ்சம் இருங்க சார்.. வரேன்.." என்றுவிட்டு உள்ளே சென்றவள் மீண்டும் வரும்போது கையில் ஒரு ப்ளவுஸ்ஸுடன் வந்தாள்..

"ஜாக்கெட்டிற்கு ஹூக் கட்ட வேண்டும்.. கட்டிக்கொடுங்க.." என அவள் அதை அவனிடம் நீட்ட, அவளது செயலில் ஒரு நொடி தன்னை மீறி, "ஏய்.." என கோபத்துடன் கத்திவிட்டான் கார்த்திக்..

அவனது சீறலான அடிக்குரலில் முதுகு தண்டு சில்லிட்டு போனாலும், சாதனாவும் ஒன்றும் குறைந்தவள் இல்லை என்பதால் முகத்தில் எதையும் காண்பித்துக்கொள்ளாமல் நின்றாள்..

எதுவும் ராசாபாசம் ஆகும் முன் சித்ரா தான் இடையில் புகுந்தார்..

"சாதனா எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.. ரொம்ப ஓவரா போகாதே.." என மகளிடம் இருந்து அவர் ஜாக்கெட்டை பிடுங்கி விட,

"இவர் தானே மா வேலை கேட்டார்.. கொடுத்தால் தப்பா..?" என்று முறுக்கிக்கொண்ட சாதனா,

"சரி விடுங்க.. வருகிறவர்களுக்கு ஸ்வீட் வாங்கனும் என்று சொல்லிக்கொண்டிருந்தீங்களே, அதையாவது வாங்கிட்டு வர சொல்லுங்க.." என மீண்டும் தொடங்க, இப்போது கார்த்திக்கும் நிதானத்திற்கு வந்திருந்தான்..

"என்ன வேணும் சொல்லுங்க? நான் வாங்கிட்டு வரேன்.." என அவனே கூற,

சித்ரா அப்போதும் பதில் கூற முடியாமல் தான் விழித்தார்..

அன்னையை ஒரு முறை பார்த்துவிட்டு திரும்பிய சாதனா, "அரை கிலோ ரசகுல்லா, கால் கிலோ மைசூர் பாகு, கொஞ்சம் ஜிலேபி, கொஞ்சம் குலோப் ஜாமுன் அப்புறம் காஜூ கத்திலி எல்லாம் வாங்கிக்கோங்க.. இன்னும் இரண்டு மணி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துடுவாங்க.. சீக்கிரம். போங்க.." என கூறியவள்,

"ஆ.. பணம் வேண்டும் இல்லையா.." என்று கூறிக்கொண்டே தன் பர்சில் இருந்து கத்தையாக பணத்தை எடுத்து அவன் கையில் திணிக்க, அதை வாங்கியவன் அதில் இருந்து அவள் கூறியதை வாங்க தேவைப்படும் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை அவள் கையிலேயே அழுத்தமாக திணித்துவிட்டு சென்றுவிட்டான்..

அங்கிருந்து நகரும் வரை அவன் முகத்தில் ஒட்டி இருந்த இறுக்கம் வெளியே வந்ததும் லேசாக தளர்ந்து, சிறு புன்னகையாக மாறி இருந்தது..

பின் தானே தலையாட்டி மனதை சமன் செய்துகொண்டு கிளம்பிவிட்டான்..

அவன் மீண்டும் வந்த போது ஹாலில் நந்தகுமார் அமர்ந்திருந்தார்.

அவரை பார்த்ததும் ஒருநொடி கார்த்திக் கோபத்துடன் நின்றுவிட, அவனை பார்த்து அவருக்கும் அதிர்ச்சி தான்.

"நீ இங்க...?" என கேட்டுக்கொண்டே அவர் எழுந்துகொள்ள,

"நமக்கு உதவ வந்திருக்கார்" என்று கூறிக்கொண்டே வந்தாள் சாதனா..

அவள் குரலில் அவர் அவள் புறம் திரும்ப, தந்தையை ஒரு முறை அழுத்தமாக பார்த்துவிட்டு அவனிடம் சென்று ஸ்வீட்டை வாங்கி கொண்டவள், "தேங்க்ஸ் சார்.. மாப்பிள்ளை வந்துட்டு போகும் வரை இங்க தான் இருக்கனும் சரியா.." என்று கேட்டுவைக்க, அவன் கண்களோ அவள் மீது தன்னை அறியாமல் ரசனையுடன் படிந்தது..

அழகிய டிசைனர் புடவை உடுத்தி, தலையை விரித்துவிட்டு தன் ஐந்தரை அடி உயரத்திற்கும் சந்தன நிறத்திற்கும் கம்பீரமும் அழகும் போட்டிபோட்டு கொண்டு இருப்பவளை பார்த்தால் யாருக்கும் ரசனை தோன்றி விடும்..

மற்றவர்களுக்கே தோன்றும் போது, அவனுக்கு சொல்லவா வேண்டும்!

தன் கண்களின் செயல் உணர்ந்து அதை நொடியில் கண்டித்தவன், "வேறு ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க" என்றுவிட்டு ஒரு பக்கம் சென்று போனை கையில் எடுத்துக்கொண்டு அமைதியாக நின்றுவிட்டான்..

அவன் நகர்ந்து சென்றதும், 'எப்போதும் கண்மொழிக்கும் வாய்மொழிக்கும் சம்பந்தமே இல்லாமல் சுற்றுவது' என மனதில் நொடித்துக்கொண்டு நகர்ந்துவிட்டாள் சாதனா..

சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டு ஆட்களும் வந்து சேர்ந்தனர்..

ஹாலிலேயே ஒரு பக்கம் கைகளை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து நின்றிருந்த கார்த்திக், முகத்தை கற்பாறையாக வைத்துக்கொண்டு நடப்பதை பார்த்து கொண்டிருந்தான்..

அவனை அறியாமல் சிவந்துவிட்டிருந்த கண்களும், அவன் அழுத்தமாக மடக்கி இருந்தது தாங்காமல் புஜங்கள் மோதி கிழிவதா வேண்டாமா என போட்டி போட்டுக்கொண்டிருந்த சட்டையும் தான் அவன் நிலையை உணர்த்திக்கொண்டிருந்தது..

வந்தவர்களை அவமதிக்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காக நந்தகுமார் அவர்களை வரவேற்று அமர வைத்து பேசிக்கொண்டிருந்தார்..

அவர் கண்கள் அடிக்கடி கார்த்திக் மீது படிந்து மீண்டு கொண்டிருந்தது..

சிறிது நேரத்தில், 'பெண்ணை பார்க்கலாமே' என வந்தவர்கள் கேட்க, சாதனாவை அழைத்தார் நந்தகுமார்..

அழகு தேவதையாக நடந்து வந்தவளை பார்த்த கார்த்திக்கின் கைகள் மேலும் இறுக, அதற்கு மேல் தாங்காமல் அவன் அணிந்திருந்த அரைக்கை சட்டை கிழிந்து விட்டது..

அவள் வந்து அமர்ந்ததும் மற்றவர்கள் சிறிது நேரம் ஏதோ பேச்சு கொடுக்க, மாப்பிள்ளை என்று வந்திருந்தவன் நேரடியாக விசயத்திற்கு வந்தான்..

"எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கு சாதனா.. உனக்கு சம்மதம் என்றால் சீக்கிரமே மேரேஜ் பண்ணிக்கலாம்.. நானும் நெக்ஸ்ட் மந்த் பாரின் கிளம்பனும்.. பிரகாஷ் சொல்லி இருப்பானே.." என அவன் நிறுத்த,

"சொன்னார்" என்று மட்டும் கூறிய சாதனா, வேறு எந்த பதிலும் கூறவில்லை..

வந்திருந்தது பிரகாஷின் நண்பன் தான்.. இப்போது பாரினில் இருக்கும் பிரகாஷுடைய தொழில் துறை நண்பன்.. அவனுக்கு சாதனா பற்றி எல்லாம் தெரியும்.. தெரிந்தே தான் சம்மதித்து அவன் வந்திருந்தான்..

என்ன சொல்லி மறுப்பது என புரியாமல் யோசித்துக்கொண்டிருந்தாள் சாதனா..

அது வரை மாப்பிள்ளைக்கு பொறுமை இல்லை போல், "ஹேய் ஐ ஹேவ் கிப்ட் பார் யு" என்றவன்,

"ப்ச் காரிலேயே வச்சுட்டேன்" என லேசாக தலையில் தட்டி கொண்டு சுற்றி பார்த்தான்..

அவன் கண்ணில் ஓரமாக நின்றிருந்த கார்த்திக் பட, அவனை பார்த்ததும் அங்கு வேலை செய்பவன் என்று தான் மாப்பிள்ளைக்கு தோன்றியது..

இத்தனை பெரிய வீட்டில் சாதாரண பேண்ட் ஷர்டில் அதிலும் லேசாக படிந்திருந்த கரியுடன் ஒருவன் நின்றிருந்தால், அப்படி தோன்றுவது நியாயம் தானே..

"ப்ளீஸ் எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?" என மரியாதையாகவே மாப்பிள்ளை அவனை அழைக்க, மிகவும் முயன்று சாதனா புறம் பார்வை போகாமல் தடுத்துக்கொண்டே அங்கு வந்தான் கார்த்திக்.

அவன் வந்ததும் தன் கார் சாவியை அவனிடம் கொடுத்த மாப்பிள்ளை, "காரில் ஒரு கிப்ட் பாக்ஸ் இருக்கு.. எடுத்துட்டு வர முடியுமா..?" என்று கேட்க, எதுவும் கூறாமல் அவன் நீட்டிய சாவியை வாங்கிக்கொண்டு நகர்ந்தான் கார்த்திக்..

அழகிய கிப்ட் பாக்ஸ் ஒன்றை எடுத்து வந்து அவன் கொடுக்க, அதை வாங்கி சாதனாவிடம் கொடுத்த மாப்பிள்ளை, "சின்ன கிப்ட் ஏஞ்சல்.." என்றான் அழகான புன்னகையுடன்.

மறுத்தால் நன்றாக இருக்காதே என்ற ஒரே காரணத்திற்காக அவள் அதை வாங்கிக்கொள்ள, "பிரித்து பார்க்கலாமே" என்றான் அவன் மீண்டும் சிரித்து..

அதில் எரிச்சல் மண்ட அவள் நிமிர, அவள் கண்களில் விழுந்தது என்னவோ அங்கு சற்று தள்ளி நின்ற கார்த்திக் தான்.

இத்தனை நடந்தும் எந்த உணர்வும் இல்லாமல் நிற்பவனை பார்க்க பார்க்க கோபம் தலைக்கேற, அவனை முறைத்துக்கொண்டே அந்த கிப்ட்டை பிரித்தாள் சாதனா..

அதில் மிக அழகான கிரிஸ்டலால் செய்யப்பட்ட இதயம் இருந்தது..

"பிடிச்சிருக்கா..?" என மாப்பிள்ளை கேட்க, அதற்கு மேல் பொறுமை இல்லாமல் வேகமாக எழுந்துவிட்டவள்,

"சாரி மிஸ்டர்.. தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கு இந்த பெண் பார்க்கும் விசயத்தில் கொஞ்சமும் உடன்பாடில்லை.. காலையில் பிரகாஷ் திடீரென சொன்னதில் உங்களுக்கு முன்னாடியே சொல்லமுடியாமல் போச்சு.. சோ.." என அவள் நாசுக்காக கூற, மாப்பிள்ளை புரியாமல் எழுந்தான் என்றால், அவனுடன் வந்த அவன் அன்னை கோபத்துடன் கத்த ஆரம்பித்துவிட்டார்..

"இந்த மாதிரி பெண் எல்லாம் வேண்டாம் என்று சொன்னேன் கேட்டாயா டா.. நீ தான் ப்ரண்ட் அது இதுனு கூட்டிட்டு வந்து எங்களை அவமானப்படுத்திட்ட.. எங்களுக்கு இதெல்லாம் தேவையா.. உன்னை எல்லாம் பெண் பார்க்க வந்தோம் பார்.. எங்களை சொல்லணும்.." என அவர் பாட்டிற்க்கு கத்திகொண்டே போக, மாப்பிள்ளை ஒருபக்கமும் நந்தகுமார் ஒரு பக்கமும் தான் அவரை சமாதான படுத்தினார்கள்..

சாதனாவோ அவர்கள் பேசிய வார்த்தையில் பெரும் கோபத்துடன் கார்த்திக்கை முறைத்துக்கொண்டு தான் நின்றாள்..

குனிந்திருந்த அவன் முகமும் லேசான வேதனையுடன் சுருங்கி இருந்தது..

பிரகாஷ் ஏற்பாடு என்றதும் தான் அவன் தைரியமாக வந்திருந்தான்..

நிச்சயம் இது போன்ற பேச்சுகளை அவனும் எதிர்பார்க்கவில்லை..

ஒருவாறு அவர்கள் ஏதேதோ கத்திக்கொண்டு கிளம்பி சென்றுவிட, அவனையே உறுத்துவிழித்துக்கொண்டு நின்றிருந்தவளுக்கு கோபம் ஏறி கொண்டே போனது..

உச்சக்கட்ட கோபத்தில் வேகவேகமாக மூச்சை இழுத்துவிட்டவள், ஒரு கட்டத்தில் கோபம் தாங்க முடியாமல் கையில் இருந்த கிப்ட்டை கார்த்திக் முகத்தை நோக்கி தூக்கி எரிந்துவிட்டாள்..

நல்ல கனமான கிரிஸ்டல் கிப்ட் முழு வேகத்துடன் நெற்றியில் வந்து மோதியதில், அவன் நெற்றி பிளந்து ரத்தமே வந்து விட்டது..

வலியில் ஒரு நொடி தன்னை அறியாமல், "ஆ.." என அவன் கத்திவிட, அவன் கத்துவதையும் மகள் செயலையும் கவனித்த சித்ரா,

"ஏய் என்ன டி பண்ணுற?" என்று கத்திகொண்டே வேகமாக கார்த்திக் அருகில் போக,

"என் வலியை விட இவனுக்கு ஒன்னும் அதிகம் வலித்துவிடாது.. விடுங்க.." என கத்திகொண்டே விறுவிறுவென சென்றுவிட்டாள் சாதனா..

செல்லும் அவளை இப்போதும் வெறுமையாக தான் கார்த்திக் பார்த்தான்..

சித்ரா தான், "ஐயோ தம்பி.. நிறைய ரத்தம் வருதே" என்று பதற, அடிபட்டிருந்த இடத்தில் தன் கர்சீப் வைத்து அழுத்தமாக அழுத்தி கொண்டவன்,

"ஒன்னும் இல்லை.. விடுங்க.. அவளை பார்த்துக்கோங்க.." என்றுவிட்டு நகரப்போக, எங்கிருந்தோ வந்த சிறு குழந்தையின் அழுகுரலில், வாசல் நோக்கி நடக்க தொடங்கி இருந்த அவன் கால்கள் ஒரு நொடி சுவிட்ச் போட்டது போல் நின்றுவிட்டது..

பின் என்ன நினைத்தானோ எதில் இருந்தோ தப்புவது போல் தன் முழு வேகத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டான்..

வாசலை கடக்கும் போது அங்கு வந்த நந்தகுமாரை கூட அவன் கவனிக்கவில்லை..

நெற்றியில் ரத்தம் வழிய செல்பவனை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டே உள்ளே வந்தவர், "என்ன ஆச்சு சித்ரா?" என்று கேட்க,

நடந்ததை அவரிடம் கூறியவர், "எல்லா கஷ்டமும் உங்க ஒருவரால்.." என அவரையும் முறைத்துவிட்டே உள்ளே சென்றார்..

மனைவி சென்றதும் அமைதியாக அமர்ந்துவிட்ட நந்தகுமாரும் காலம் கடந்து தன் தவறை நினைத்து வருந்திக்கொண்டு அமர்ந்திருந்தார்..

சாதனா வீட்டில் இருந்து கிளம்பிய கார்த்திக் மீண்டும் அலுவலகம் சென்று தன் வேலைகளை முடித்துக்கொண்டு தான் வீட்டிற்கு வந்தான்..

இரவு தன் அறையில் தனிமையில் கண்ணாடி முன் நின்றவன் கண்கள் அவன் முகத்திலும் கையிலும் இருந்த காயத்தை தான் ஆராய்ந்தது..

'ராட்சசி.. உன்னால் இன்று எனக்கு எத்தனை ரத்தக்காயம் பார்.. மனுஷனை நல்லா பழிவாங்குற டி..' என மெதுவாக கூறிக்கொண்டவன் உதடுகள் என்னவோ சிறு புன்னகையுடன் வளைந்து தான் இருந்தது..

அதே நேரம் இங்கு தன் அறையில் இருந்த சாதனா பிரகாஷிடம் தான் போனில் கத்திக்கொண்டிருந்தாள்..

"இதுவே கடைசி முறையா இருக்கட்டும் பிரகாஷ்.. இனி ஒரு முறை இது போல் யாரையாவது அனுப்பினால், நான் வீட்டை விட்டே போய் விடுவேன்.." என கோபத்துடன் அவள் கத்த,

"உன் நல்லதுக்கு தான் சாதனா மா செய்கிறேன்.. கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. உனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா?" மெதுவாக பிரகாஷ் கூற,

"நீ முதலில் உன் வாழ்க்கையை ஒழுங்கா பாரு டா.. உன்னை நம்பி இருக்கும் பெண்ணை காப்பாற்றும் வழியை பார்.. என் வாழ்க்கையை நீ வடிவமைக்க வேண்டாம்.. என் வாழ்வில் நான் ஆசைப்படுவது மட்டும் தான் நடக்கும்.." அழுத்தமாக சாதனா கூற,

"நீ ஆசைப்படுவதற்கும் ஒரு தகுதி இருக்க வேண்டாமா சாதனா?" என்றான் பிரகாஷ் சிறு எரிச்சலுடன்.

அவன் கூற்றில், "வாயை மூடு டா" என கோபத்துடன் கத்தியவள்,

"யாருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எனக்கும் தெரியும்.. நீ ஏதோ ரொம்ப நல்லவன் போல் பேசாதே பிரகாஷ்.." என கோபத்துடன் முடிக்க,

"நான் தெரியாமல் தானே.." என அவன் இழுக்க,

"இந்த கதையை என்னிடம் சொல்லாதே பிரகாஷ்.. இனி என் வாழ்க்கையில் நீ தலையிட்டால் நான் மனுசியாகவே இருக்க மாட்டேன்.. கலையை பார்த்துக்கோ.." கடைசி வார்த்தையை மட்டும் மென்மையாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள் சாதனா..

அமைதியாக தன் பெட்டில் அமர்ந்தவள் முகத்தில் கோபமா? வேதனையா? என்று கேட்டால் அவளுக்கே சரியாக தெரியவில்லை..

தொடரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2:

அன்று..

"எஸ்.பி இண்டஸ்ட்ரீஸ்" என்ற மிக பெரிய நிறுவனம் கம்பீரமாய் உயர்ந்து நின்றுகொண்டிருந்தது..

அதன் வாசல் பக்கம் இருந்த கார் பார்கிங்கில் ஒரு காருக்கு கீழே இருந்து வெளியே வந்தான் கௌஷிக்..

கறைபடிந்த சட்டையும், கறைபடிந்த பேண்ட்டும் அணிந்திருந்தவன் வெளியே வந்ததும் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று அந்த காரை அழுத்தமாக பார்த்தான்..

அவன் கண்களில் அத்தனை வெறி..

எதிரியை கொன்று எரித்துவிடும் வெறி அது..

கூர்தீட்டிய கத்தியாய் பளபளத்துக்கொண்டிருந்த கண்களுடன் சில நிமிடங்கள் அந்த காரையே வெறித்துக்கொண்டிருந்தவன், பின் அமைதியாக அந்த கட்டிடத்தை விட்டு வெளியே வந்துவிட்டான்..

அந்த அலுவலகத்தின் எதிரில் இருந்த டீ கடையில் வந்து ஒரு டீயை வாங்கி கையில் வைத்து கொண்டு அமர்ந்திருந்தவன் கண்கள் நொடிப்பொழுதும் விடாமல் அந்த காரையே தான் பார்த்துக்கொண்டிருந்தது.

அவன் பார்வைக்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்து இருந்தால் இந்த நேரத்திற்கு அந்த கார் பஸ்பமாகி இருக்கும்..

மிக பொறுமையாக டீயை குடித்துக்கொண்டே அவன் பார்த்துக்கொண்டிருக்க, அவனுக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது..

ஆம், அவன் எதிர்பார்த்தவன் அந்த காரில் ஏறாமல், ஒரு அழகான பெண் வந்து ஏறினாள்..

ஒரு நொடி கௌஷிக்கிற்கு ஒன்றும் புரியவில்லை..

அவன் நிதானித்து என்னவென்று உணரும் முன் அந்த பெண் காரை எடுத்துக்கொண்டு ரோட்டிற்கு சென்றுவிட, அதில் வெகுவாய் பதறிவிட்டவன், "ஓ ஷீட்" என தலையில் அடித்துக்கொண்டு டீக்கான பணத்தை வேகமாக கொடுத்துவிட்டு தன் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக கார் சென்ற திசையில் சென்றான்..

சிறிது தூரத்தில் அந்த கார் அவன் கண்ணில் பட்டுவிட்டது..

மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த காரை தன் முழுவேகத்துடன் அடைந்தான் கௌஷிக்.

கார் ஜன்னல்கள் அனைத்தும் பூட்டப்பட்டிருக்க, வண்டியை காருக்கு இணையாக ஓட்டி கொண்டே அந்த கார் கண்ணாடியை தட்டினான்..

அவன் தட்டியதை உணர்ந்து உள்ளிருந்து திரும்பி பார்த்த பெண் அவனை குழப்பத்துடன் பார்த்தாள்..

அவள் பார்ப்பதை உணர்ந்ததும் ஜன்னலை திறக்குமாறு அவன் செய்கை செய்ய, அவள் முகம் மேலும் குழப்பத்துடன் சுருங்கியது.

அவனை பார்த்தால் வெகு சாதாரண மெக்கானிக் போல் தான் இருந்தான்..

ஆனால் அவன் முகத்தில் இருந்த பதட்டமும், அழுத்தமும் அவன் ஒன்றும் சும்மா பெண்களை கிண்டல் செய்யும் ரகம் இல்லை என உள்ளே இருந்தவளுக்கு தோன்றிவிட, ஜன்னலை லேசாக இறக்கினாள் அவள்..

அவள் இறக்கியதும், "ப்ளீஸ் நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்க" என அவன் சத்தமாக கூற, அவளோ ஒன்றும் புரியாமல் விழித்தாள்..

"டென்ஷன் ஆகாதீங்க.. இந்த காரில் பிரேக் வொயர் கட்டாகி இருக்கு.. ஆக்ஸிலேட்டர் அமுக்கிடாதீங்க ப்ளீஸ்.." என அவசரமாக அவன் கூற, அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தவள் அப்போது தான் பிரேக்கை அழுத்திப்பார்த்தாள்..

அது உண்மையாகவே பிடிக்காமல் போக, பதட்டத்தில் என்ன செய்வதென்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அந்த நொடி அவன் கூறியதை கூட மறந்து அவள் என்ன செய்வது என்று புரியாமல் பிரேக்கை மீண்டும் அழுத்தி, டென்ஷனில் ஆக்சிலேட்டரையும் அழுத்தி விட, கார் வேகமாக முன்னால் சென்றது.

அதில் அவளை விட கௌஷிக் தான் படபடத்து போனான்..

"கடவுளே" என முணுமுணுத்துக்கொண்டே தன் வண்டியின் வேகத்தையும் கூட்டி மீண்டும் அவளை அடைந்தவன், "இங்க பாரு மா.. ப்ளீஸ் டென்ஷன் ஆகாதே.. நான் சொல்வதை செய்.. வண்டியை நிறுத்தி விடலாம்.. கொஞ்சம் பொறுமையா கேளு மா.. ப்ளீஸ்.." என அவன் கெஞ்ச, அவன் குரலில் ஒருவாறு தெளிந்தவளுக்கு அடுத்து என்னவென்றே புரியாததால் அமைதியாக அவன் சொல்வதை செய்ய முயன்றாள்..

அவள் தலையை மட்டும் உருட்ட, "முதலில் டபிள் இண்டிகேட்டர் போடு" என்று அவன் சத்தமாக கூற, அவளும் போட்டுவிட்டாள்..

"மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டி அடுத்த இடதுபக்க தெருவில் திருப்பிடு" என அவன் வேகமாக கூற, அவளும் அலைபாய்ந்த மனதை முயன்று கட்டுப்படுத்தி கொண்டு, அவன் கூறிய தெருவில் திருப்பினாள்..

இதுவரை மெயின் ரோட்டில் வந்துகொண்டிருந்ததால் இருவருமே பெரிதாக பயந்திருந்தனர்..

இப்போது அவள் திருப்பி இருந்த தெருவில் பெரிதாக வண்டிகள் செல்லாமல் அமைதியாக இருந்ததால், இப்போது தான் இருவரும் நிம்மதியாக மூச்சே விட்டு கொண்டனர்.

அதில் கௌஷிக்கிற்கு பெரும் நிம்மதியாக இருக்க, ஒரு ஆழ்ந்த மூச்செடுத்துக்கொண்டவன் தொடர்ந்து பேசினான்..

"வண்டியை முதல் கியரில் போட்டுவிட்டு கிளட்ச் ஆக்ஸிலேட்டர் இரண்டில் இருந்தும் காலை எடுத்து விடு மா.. ஸ்டியரிங் மட்டும் பார்த்துக்கோ.. கொஞ்ச தூரத்தில் தானாக வண்டி நின்றுவிடும்.. நான் கூடவே வரேன்.. பயப்படாமல் இரு.. சரியா.." மெதுவாக கௌஷிக் பேசிக்கொண்டே வர, அவன் ஆழமான குரலில் ஏதோ சக்தி இருந்தது போல், அவன் சொன்னதை அப்படியே செய்தவளுக்கு சற்று பயம் கூட தெளிந்து விட்டது போல் தான் இருந்தது..

சிறிது தூரத்தில் காரின் வேகம் முழுதாக மட்டுப்பட்டு அது ஊறுவது போல் ஓட தொடங்கிவிட, அவர்கள் நல்ல நேரமோ என்னவோ அதே ரோட்டில் ஒரு பக்கம் மணல் மேடு போல் இருந்தது..

அதை கவனித்த கௌஷிக், "அந்த மணல் மேடு நோக்கி காரை விடு மா.. நின்றுவிடும்.." என்று கூற, அவளும் லேசாக காரை அந்த மணல் மேட்டை நோக்கி மட்டும் திருப்பினாள்..

அதில் சென்று மோதியதுமே கார் எந்த சேதாரமும் இல்லாமல் நின்றுவிட்டது..

கார் நின்றதும் தான் இருவருக்கும் உயிரே வந்தது..

இத்தனை நேரம் உள்ளே இருந்த பெண் எப்படி ஓட்டினாளோ, கௌஷிக் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தான் வந்துகொண்டிருந்தான்.

அவன் பழிவெறியால் யாரோ ஒரு பெண்ணின் உயிர் போய் இருந்தால் நிச்சயம் அதை அவனால் தாங்க முடிந்திருக்காது..

ஒரு பெருமூச்சுடன் தானும் பைக்கை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு காரை நோக்கி வந்தவன் காரின் முன் சீட் அருகில், "ஒன்னும் இல்லையே மா?" என கேட்டுக்கொண்டே குனிய, அந்த பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை..

அதில் பதட்டத்துடன் கதவை திறந்து அவன் பார்க்க, அந்த பெண் மயங்கி விட்டிருந்தது தெரிந்தது..

முகம் எல்லாம் வியர்வை அரும்பி அவள் மயங்கி இருந்ததை பார்த்தவனுக்கு அதீத டென்ஷனில் வந்த மயக்கம் என பார்த்ததும் புரிந்துபோனது..

முகம் முழுவதும் அந்த பெண்ணுக்கு வியர்த்து விட்டிருந்ததை பார்த்தவனுக்கு பாவமாக இருக்க, தன் கர்சீப் எடுத்து மெதுவாக அவள் முகத்தில் இருந்த வியர்வையை ஒத்தி எடுத்தான் கௌஷிக்..

அவள் முகத்தை மென்மையாக துடைத்துக்கொண்டிருந்தவன் கண்கள் அவனறியாமல் அவள் முகத்தில் படிந்திருந்தது..

பால் போன்ற குழந்தை முகத்தில் அந்த மயக்கத்தில் கூட லேசான பதட்டம் ஒட்டி இருப்பது போல் இருந்தது..

'ப்ச் தேவை இல்லாமல் இந்த பெண்ணிற்கு கஷ்டம்.. இவள் ஏன் இந்த காரில் வந்தாள்..!' என யோசித்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை..

அவள் கூறினால் தானே உண்டு..

அவளை பிடித்து லேசாக அவன் உலுக்கி பார்க்க, அவளோ கண்ணே திறக்கவில்லை..

'பாவம் மிகவும் பயந்துவிட்டாள் போல்' என நினைத்துக்கொண்டவன் அடுத்து என்னவென்று யோசித்தான்..

சில நொடிகள் யோசித்தவனுக்கு நேரம் விரயமாவது கஷ்டமாக இருக்க, அடுத்த நொடி போன் எடுத்து தன் நண்பனுக்கு அழைத்து விட்டான் கௌஷிக்..

அவன் நண்பன் ஒருவன் ஆம்புலன்ஸ் ஓட்டி கொண்டிருக்கிறான்..

அவனுக்கு அழைத்தவன் ஒரு விபத்து நடந்துவிட்டது என்று மட்டும் கூறி அவனை வர சொன்னான்..

அவனுக்கும் கௌஷிக்கிற்கும் சில மாத பழக்கம் தான்.. தான் அழைத்தால் அவன் வருவானா என்ற யோசனையுடன் அவன் அழைக்க, அவன் நண்பனோ உடனடியாக வருவதாக கூறி இடத்தை மட்டும் கேட்டுக்கொண்டான்..

அடுத்த பதினைந்தாவது நிமிடம் ஆம்புலன்ஸுடன் அங்கு வந்து சேர்ந்த மகேஷ், "என்ன டா ஆச்சு?" என்று கேட்டுக்கொண்டே கௌஷிக்கிடம் வர,

"ஆச்சிடன்ட் மகேஷ்.. அடி எதுவும் இல்லை.. பயத்தில் மயங்கிட்டாங்க.. ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்.. இந்த காருக்கு வேறு நான் தான் பொறுப்பு.. நான் பாதி தூரம் ரிப்பேர் செய்து வைத்திருந்த காரை எடுத்துட்டு வந்துட்டாங்க.. கொஞ்சம் இந்த பெண்ணை ஹாஸ்பிடலில் சேர்த்து விடுகிறாயா.. நான் காரை சரி பண்ணி கொடுத்துட்டு வரேன்.." என கௌஷிக் கூற,

"சரி டா.. நான் பார்த்துக்கறேன்.. இதற்கு எதுக்கு உனக்கு இத்தனை தயக்கம்.. வா கொஞ்சம் உதவி பண்ணு.." பேசிக்கொண்டே அந்த பெண்ணை தூக்க அவன் குனிய,

"இரு டா.. நானே தூக்கறேன்.." என அவசரமாக கூறிவிட்டான் கௌஷிக்..

ஏனோ அவளை வேறு யாரும் தொடவிட அவன் மனம் இடம்கொடுக்கவில்லை..

அந்த நொடி ஏன் அந்த உணர்வு வந்தது என அவன் ஆராயவுமில்லை..

மயங்கி இருந்தவளை தூக்கி மகேஷ் கீழே வைத்திருந்த ஸ்ட்ரெக்சரில் படுக்க வைத்தவன், "பத்திரம் மகேஷ்.. ரொம்ப தேங்க்ஸ் டா.." என மனதார கூற,

"அட போடா.. சும்மா எப்போ பாரு சங்கடபட்டுக்கிட்டு, நன்றி எல்லாம் சொல்லிக்கிட்டு.. ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்யாம எதுக்கு மனுசங்கனு வாழறோம்.. போய் வேலையை பாரு.." என்று கூறிக்கொண்டே மகேஷ் சென்றுவிட, செல்லும் நண்பனை பார்த்துக்கொண்டிருந்த கௌஷிக்கின் முகம் இளகி விட்டது..

உலகில் நல்லவர்களும் இன்னும் சிலர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் போல் என நினைத்து கசப்பான புன்னகை கொண்டான் கௌஷிக்..

அவன் வாழ்வில் அவன் பல தீயவர்களை சமீபமாக தானே கடந்திருந்தான்..

அந்த கசப்பு தான் அவனிடம் மிச்சம் இருந்தது..

ஆம்புலன்ஸ் சென்றதும் அடுத்து தன்னை அழைத்து அந்த காரை சரி செய்ய சொன்ன ஆளுக்கே போன் செய்தான் கௌஷிக்..

அவன் போனை எடுத்ததும், "சார் நீங்க சொன்ன காரை பாதி சரிபார்த்து கொண்டிருக்கும் போதே ஒரு பொண்ணு அந்த காரை எடுத்துட்டு வந்துட்டாங்க.. பிரேக் இல்லாத கார் ஓட்டி அந்த பொண்ணு மயங்கிட்டாங்க.. இப்போ தான் அவங்களை ஹாஸ்பிடல் அனுப்பிவிட்டேன்.. காருக்கும் அந்த பொண்ணுக்கும் ஒன்னும் இல்லை.. காரை என்ன செய்ய.?" என்று கௌஷிக் கேட்க,

"ஒரு நிமிஷம் பா" என்றுவிட்டு அந்த பக்கம் போன் வைத்திருந்தவன் யாரிடமோ சென்று பேசினான்..

போனை மியுட்டில் போட்டுவிட்டான் போல், கௌஷிக்கிற்கு ஒன்றும் கேட்கவில்லை.

சிறிது நேரத்தில் மீண்டும் லைனில் வந்தவன், ஹாஸ்பிடல் பெயரை மட்டும் கேட்டுக்கொண்டு, "காரை நீயே சரி பண்ணி மீண்டும் ஆபிசில் விட்டுவிடு பா" என்றுவிட்டு வைத்துவிட்டான்..

கௌஷிக்கிற்கோ அந்த பெண் யாரென்று தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது.

இந்த காரில் அவளுக்கு என்ன வேலை என தெரிந்தே ஆக வேண்டுமென அவன் மூளை பரபரத்தது..

ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாதே.. முதலில் இந்த காரை சரி செய்து தொலைக்க வேண்டும்..

காரில் பிரேக் வொயரை பிடுங்கி விட்டதே அவன் தான்..

ஒருவன் உயிரை எடுப்பதற்காக செய்தான்.. அவனுக்கு ஆயுள் கெட்டி போல், பிழைத்துக்கொண்டான்..

'உன் உயிர் என் கையால் தாண்டா போகும்.. அப்படி எல்லாம் உன்னை விட்டுவிட மாட்டேன்' என எரிச்சலுடன் முணுமுணுத்துக்கொண்டவன் கண்கள் மீண்டும் ஒரு நொடி கொலைவெறியுடன் ஒளிர்ந்து அடங்கியது..

ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து தன் மனதை ஒருவாறு நிலைப்படுத்தியவன், அடுத்து ஆக வேண்டியதை கவனித்தான்..

அவன் மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்க்கும் ஒருவனுக்கு அழைத்து அந்த காரை சரி செய்வதற்கான டூல்ஸ்ஸை எடுத்து வர சொன்னவன், அடுத்த இரண்டு மணி நேரத்தில் காரை சரி செய்து அந்த ஆபிசில் விட்டுவிட்டு நண்பன் கூறிய மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்..

ஆனால் அங்கு அவனுக்கு காத்திருந்தது என்னவோ ஏமாற்றம் தான்..

மகேஷ் அனுமதித்த பெண் டிஸ்சார்ஜ் ஆகி சென்றிருக்க, அந்த பெண்ணை பற்றிய எந்த தகவலும் சொல்ல முடியாது என்று கூறிவிட்டனர்..

மகேஷும் வேறு பக்கம் சென்றிருக்க, மனதில் நிறைந்துவிட்ட உறுத்தலுடனே வீடு வந்து சேர்ந்தான் கௌஷிக்..

அவன் வீடு இருந்தது ஹௌசிங் போர்ட் போன்ற ஒரு அப்பார்ட்மென்டில் தான்..

நாலு நாலு தளத்துடன் நெருக்க நெருக்கமான கட்டிடங்கள் நிறைந்திருந்த பகுதி அது..

அதில் ஒரு கட்டிடத்தில் கிரௌண்ட் ப்ளோரில் தான் அவர்கள் வீடு இருந்தது..

வண்டியை தனது மெக்கானிக் ஷெட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்தான் கௌஷிக்..

மிகவும் சிறிய வீடு தான்..

ஒரு சிறு ஹால், நிற்க மட்டுமே இடம் இருப்பது போல் சமையல் அறை, ஒரு சிறிய படுக்கை அறை.. அவ்வளவு தான்..

ஒரே வசதியாக கீழ் தள வீடு என்பதால் பின்னால் கொஞ்சம் இடமும், அதை ஒட்டி பாத்ரூமும் இருக்கும்..

அவன் வீட்டிற்குள் நுழையும் போதே, "சாப்பிட வரியா கண்ணா?" என அவன் அன்னை புவனேஸ்வரி கேட்க,

"வரேன் மா.. எடுத்துவைங்க.." என்று விட்டு பின்னால் சென்றான் கௌஷிக்..

சிறிது நேரத்தில் ப்ரெஷ் ஆகி உடை மாற்றி கொண்டு ஒரு லுங்கி பனியனுடன் வந்து அவன் உண்ண அமர, அவனுக்கு உணவை பரிமாறினார் புவனேஸ்வரி..

அவன் சாப்பிட தொடங்கி இரண்டு நிமிடம் தான் இருக்கும்..

"அதற்குள் அண்ணா கஸ்டமர் வந்திருக்காங்க.." என அவன் மெக்கானிக் ஷெட்டில் விட்டுவிட்டு வந்த பொடியன் வந்து குரல் கொடுக்க,

"இருக்க சொல்லு ராஜா.. இதோ இரண்டு நிமிடத்தில் வரேன்.." என்ற கௌஷிக் அதற்கு மேல் பொறுமை இல்லாமல் வேகவேகமாக உணவை முடித்துக்கொண்டு எழுந்துவிட்டான்..

"கொஞ்சம் பொறுமையா போக கூடாதா கண்ணா?" மனம் கேட்காமல் புவனேஸ்வரி கேட்க,

"நாம் வரும் வரை காத்திருக்க மாட்டாங்க மா.. லேட் ஆகுதுன்னு போய்ட்டா வம்பில்லையா?" என கூறிக்கொண்டே அவன் மீண்டும் பழைய உடைக்கே மாற,

"இப்படி ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு பார்க்கும் நிலையா போச்சே கண்ணா!" என கண்கலங்கினார் புவனேஸ்வரி..

அவர் கலங்கியதும் ஒரு பெருமூச்சுடன் அவர் அருகில் வந்தவன், "அம்மா ப்ளீஸ் என்னை பலவீனமாக்காதீங்க.. உங்க பிள்ளை கையாலாகாதவன் கிடையாது.. வேறு வேலைக்கு முயற்சித்து கொண்டு தான் இருக்கேன்.. கிடைத்ததும் இங்கிருந்து போய் விடலாம்.. அதற்கு முன்.." பேசிக்கொண்டே வந்தவன் கடைசி வரியை கூறாமல் முகம் இறுக தனக்குள்ளேயே விழுங்கி கொண்டான்..

"இப்போதைக்கு பணம் வேண்டும் மா.. ஓடி தான் ஆகணும்.. நீங்க நிம்மதியா சாப்பிடுட்டு படுங்க.. எக்காரணம் கொண்டும் அழ கூடாது.." என அழுத்தமாக கூறி விட்டு வெளியேறி விட்டான் கௌஷிக்..

அவன் தனது ஷெட்டிற்கு வந்தபோது ரிப்பேர் என வந்திருந்த பைக்கை கையில் ஸ்பனருடன் அமர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தான் ராஜா..

அதை பார்த்ததும், "ராஜா.." என அடிக்குரலில் உறுமிக்கொண்டே வந்தவன்,

"உன்னை இதெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கேனா இல்லையா? அமைதியா உட்காரு.." என அவனிடம் அழுத்தமாக கூறிவிட்டு,

"என்ன பிரச்சனை சார்?" என்று கேட்டுக்கொண்டே வந்தவர் புறம் திரும்பியவன், சிறிது நேரத்தில் அதை சரி செய்தும் கொடுத்துவிட்டான்..

கௌஷிக் இப்போதைக்கு தன் வீட்டின் அருகிலேயே சிறு மெக்கானிக் ஷெட் வைத்திருந்தான்..

திடீரென எல்லாம் இழந்து தெருவில் நின்றவனுக்கு கை கொடுத்தது என்னவோ இந்த ஷெட் தான்..

அவனுக்கு இப்போது பணம் மிகவும் தேவைப்பட்டது..

இப்படிப்பட்ட நிலையில் எந்த நிறுவனத்திலும் வேலையும் கிடைக்காதது போல் செய்துவிட்டிருந்தனர்.

அதனால் தான் யார் கையையும் நம்பாமல் அவனே இறங்கி விட்டான்..

இதில் வரும் வருமானம் அவன் தேவைகளுக்கு மிக சரியாக இருந்தது..

குடும்பத்தையும், முக்கிய செலவுகளையும் பார்ப்பதையும் தாண்டி அவன் மனதில் புரையோடி போய் இருந்த பழி வெறி ஒரு புறம்..

அதை தீர்த்துக்கொள்ள தான் அவனும் முயற்சிக்கிறான்..

நினைத்ததை செய்து முடித்தால் தான் ஓரளவேனும் அவன் மனம் சமன் படும்..

அதற்கான வாய்ப்பிற்கு தான் காத்துக்கொண்டிருக்கிறான்.. அமையும் போது நிச்சயம் எதிரியை விட்டுவைக்க கூடாது என்ற வெறியுடன் இருந்தான்..

இந்த பழிவெறி அவன் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்க போவதை அவன் அப்போது அறியவில்லை..

தெரிந்திருந்தாலும் கவலை பட்டிருப்பானோ என்னவோ! கேள்விக்குறி தான்..

அன்று நள்ளிரவு வீட்டிற்கு வந்து படுத்தவன் கண்களை மூடிய அடுத்த நொடி அவன் கண் முன் காலையில் பார்த்த பெண் முகம் தான் வந்து நின்றது..

ஒரு நொடி திடுக்கிட்டு கண்விழித்துவிட்டான் கௌஷிக்..

'இது என்ன முட்டாள் தனம்! இருக்கும் நிலையில் இதெல்லாம் தேவையா?' என மனதை வேகமாக ஒரு அதட்டு போட்டுவிட்டு உறங்க தான் முயன்றான்..

எங்கே.. அவனால் முயற்சிக்க மட்டும் தான் முடிந்தது..

மனதில் பதிந்துவிட்ட முகம் நீங்காமல் ஆட்டம் காட்டி அவனை கொன்று எடுத்தது..

ஒருகட்டத்திற்கு மேல் ஒன்றும் முடியாமல் அந்த நினைவை துரத்தும் முயற்சியை விட்டுவிட்டு வந்த நினைவுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு கண்மூடி படுத்துவிட்டான்..

முதல் முதலாக சாதாரணமாக இருந்த அவள் முகம், பின் அவன் பிரேக் பிடிக்கவில்லை என்றதும் கலங்கி பயத்துடன் தவித்த முகம், அவன் வார்த்தைகளில் லேசாக தைரியம் வரப்பெற்ற முகம், இறுதியாக அவன் அருகில் பார்த்த மயங்கி இருந்த பால்முகம்..

மீண்டும் மீண்டும் கண் முன் தோன்றி படுத்திய அவள் முகத்தை வேறு வழி இல்லாமல் ரசித்துக்கொண்டே உறங்கி போனான் கௌஷிக்..

தொடரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 3:

இன்று..

கனடாவில் இருந்த ஒரு உயர்தர மருத்துவமனை..

விடிகாலை குளிரை உணராமல் எங்கோ வெறித்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தாள் கலையரசி..

நன்றாக உறங்கிக்கொண்டிருந்த பிரகாஷ் தற்செயலாக விழிப்பு தட்டி முழிக்க, அவன் கண்கள் தானாக தன்னவளை தேடி சென்றது..

விழித்து எழுந்து அமர்ந்திருந்தவளை பார்த்ததும் வேகமாக அவள் அருகில் எழுந்து வந்தவன், முதலில் அங்கிருந்த கனமான போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்டான்..

"கலை மா என்ன டா இது? இந்த நேரத்துக்கு எழுந்து அமர்ந்திருக்கிறாய்? தூக்கம் வரலையா?" என காற்றுக்கே வலிக்குமோ என்னும் குரலில் பிரகாஷ் கேட்க, அவளிடம் இருந்து சிறு மறுப்பான தலையசைப்பே பதிலாக கிடைத்தது..

அதுவே பெரிது..

இது போன்ற எதிர்வினைகளே அவள் சில நாட்களாக தான் கொடுக்க ஆரம்பித்திருக்கிறாள்..

அவளது சிறிய செயலிலேயே அவன் மனம் இளகி விட, அவளை அணைத்தவாறு அருகில் அமர்ந்துகொண்டவன், "என் கலைமாக்கு என்ன வேணும்? ஏன் தூக்கம் போச்சு?" என மீண்டும் மென்மையாக கேட்க, அவளோ தன்னையறியாமல் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

ஆனால் பதில் எதுவும் கூறவில்லை..

அவளை பிரகாஷ் நன்றாக தனக்குள் இறுக்கி கொள்ள, அவன் தோளில் சாய்ந்திருந்தவள் கண்களில் இருந்து மெதுவாக கண்ணீர் வர ஆரம்பித்தது..

முதலில் பிரகாஷ் அதை சரியாக கவனிக்கவில்லை..

சில நொடிகளில் தன் மார்பில் உணர்ந்த ஈரத்தில் மெதுவாக அவளை நிமிர்த்தி பார்த்தவன், அவள் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்ததும் துடித்துவிட்டான்..

"கலை மா என்ன அழுகை? இங்க பார்.. அழ கூடாது டா.. உன் பிரகாஷ் உன்னிடம் தான் இருக்கேன்.. பாரு டா.. அழ கூடாது மா.." என்று கூறிக்கொண்டே அவள் கண்களை அவன் துடைத்து விட,

"நீ.. நீ.. நீங்க..." என ஏதோ சொல்ல வந்தவளுக்கு என்ன சொல்லவேண்டும் என்று சரியாய் புரியாமல் போக, மீண்டும் அவனிடம் அமைதியாக சாய்ந்து கொண்டாள்..

அவள் சொல்லாவிட்டால் அவனுக்கு புரியாதா என்ன?

அவளை இந்த நிலைக்கு ஆளாக்கி வைத்ததே அவன் தானே!

எப்படி துள்ளி திரிந்த பெண், இப்படி புத்தி பேதலித்து போகும் அளவு அவன் காதலும், திமிரும் அவளை தள்ளிவிட்டதே!

'என்னை மன்னித்துவிடு டி கலை மா.. ஏதோ தெரியாமல் பண்ணிட்டேன்.. என்னை வெறுத்து ஒதுக்கிவிடாதே டி.. நீ இல்லாத வாழ்க்கையை நிச்சயம் என்னால் வாழ முடியாது டா..' மனதிற்குள்ளேயே தன்னவளிடம் பேசிகொண்டவன், எதையும் வெளியே கூறவில்லை..

அவளுக்கு தானாக தான் மனம் தெளிய வேண்டும் என்று மருத்துவர் கூறி இருந்தார்..

எதுவும் அவசரப்பட்டு நியாபகப்படுத்த முயன்றால் அவள் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என கூறி இருந்ததால், அவளை கண்ணாடி பாத்திரம் போன்று தான் அவன் கையாண்டான்..

ஒவ்வொரு நொடியும் மனம் குற்ற உணர்வில் தவித்தாலும், மன்னிப்பை கூட கேட்க முடியாத கொடுமையான தண்டனையை மனதிற்குள் அனுபவித்து கொண்டிருந்தான் பிரகாஷ்..

"கலை மா நாம பிரஷ் பண்ணுவோமா? நான் சூடா காபி வாங்கி தரேன்.. கொஞ்சம் குடிச்சுட்டு படுக்கறயா? நல்லா இருக்கும்" என மெதுவாக பிரகாஷ் கேட்க, அவளும் சம்மதமாக தலையாட்டினாள்..

அவளை மெதுவாக அழைத்து சென்று பல் தேய்க்க உதவியவன், கூறியது போலவே அவளுக்கு சூடாக காபி வாங்கி வந்து கொடுத்தான்.

அதை கொஞ்சம் கொஞ்சமாக அவள் குடிக்க அவள் செப்பு வாயை திறந்து மெதுமெதுவாக குடிக்கும் அழகை ரசித்துக்கொண்டே அமர்ந்திருந்தான் பிரகாஷ்..

அவள் குடித்து முடித்ததும் அவளை மீண்டும் தன் தோளில் சாய்த்துக்கொண்டு அவன் தட்டி கொடுக்க, அவளும் அவன் தோள் தந்த சுகத்தில் அமைதியாக தூங்கி போனாள்..

அவன் அவளை திருமணம் செய்து இங்கு அழைத்து வந்த போது, சுத்தமாக சுயநினைவில்லாமல் இருந்தவள், இங்கு வந்ததில் இருந்து சில மாதங்களாக கொடுக்கப்படும் தீவிரமான டிரீட்மென்ட்டால் தெளிந்து கொண்டே வந்தாள்..

முழுதாக தெளிந்தால் என்ன சொல்வாளோ? என அவனுக்கு பயமாக தான் இருந்தது..

ஆனால் அவன் சுயநலத்திற்காக அவளை புத்திசுவாதீனம் இல்லாமலே வைத்திருக்க முடியாதே!

ஏதோ அவனால் ஆனதாக இந்த நிலையில் தன் காதலை முழுதாக அவளுக்கு உணர்த்த போராடி கொண்டிருந்தான் பிரகாஷ்..

************************

அன்று காலையில் தன் சீட்டில் அமர்ந்து கார்த்திக் அமைதியாக வேலைபார்த்து கொண்டிருந்தான்..

திடீரென அங்கிருந்த அனைவரும் எழுந்து நிற்க, புருவ முடிச்சுடன் நிமிர்ந்து பார்த்தவன் கண்களில் அங்கு வேகமாக வந்து கொண்டிருந்த சாதனா விழுந்தாள்..

கால்வரை நீண்டிருந்த ஒரு ப்ராக் அணிந்து, விரித்து விட்டிருந்த முடி தோளில் விழுந்து விளையாட நடந்து வந்தவளை பார்த்தவன் கண்கள் ரசனையுடன் அவளை ஒரு முறை அளந்து, அடுத்த நொடி இறுகி போயிற்று..

'ராட்சசி.. இன்னிக்கு என்ன செய்ய காத்திருக்காளோ தெரியலையே!' என முணுமுணுத்து கொண்டவன் ஒரு தலை சிலுப்பலுடன் வேலையை தொடர்ந்தான்..

அவன் எதிர்பார்த்தது போலவே வந்த பதினைந்தாவது நிமிடம் அவனை அழைத்தாள் சாதனா..

அவன் உள்ளே நுழைந்த போது கம்பெனி ஜி.எம் சாதனா அறையில் இருந்து வெளியே சென்றான்..

அவனை பார்த்ததுமே அடுத்து என்ன நடக்க போகிறது என அவனுக்கு புரிந்து போயிற்று..

எப்போதும் போல் ஒரு ஆழ்ந்த மூச்சில் தன்னை சமண் செய்துகொண்டு உள்ளே சென்றான் கார்த்திக்..

அவன் வந்ததும் அது வரை சாதரணமாக அமர்ந்திருந்தவள் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள்..

அவனை வெறுப்பேற்றுகிறாளாம்!

உள்ளுக்குள் சிரிப்பு வந்தாலும் வெளியில் அமைதியாக நின்றான் கார்த்திக்..

"வேலை எல்லாம் எப்படி போகுது மேனேஜர் சார்?" குரலில் தெளிவாக தெரிந்த நக்கலுடன் சாதனா கேட்க,

"நல்லா போகுது மேம்" என்றான் கார்த்திக் அமைதியாக.

"ஓ.. இன்னிக்கு ஏதோ டிசைன் சப்மிட் பண்ணணுமாமே.. முடிச்சுடீங்களா..?"

"எஸ் மேம்.. இப்போ தான் பைனல் செக் பார்த்துட்டு இருந்தேன்.." பவ்யமாகவே அவன் பதில் கூற, அதுவே அவள் கோபத்தை தூண்டி விட்டது போல்,

"எனக்கு மெயில் பண்ணுங்க.. நான் செக் பண்ணனும்.." என அவனை கூர்மையாக பார்த்து கொண்டே சாதனா கூற,

"ஓகே" என்றுவிட்டு நகர்ந்தான் கார்த்திக்..

"ஹலோ.. அனுப்பிட்டு அங்கேயே உக்காந்துராதீங்க, நீங்களும் இங்க வரணும்.." பின்னால் ஒலித்த அவள் குரலில் மற்றொரு ஓகேவுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் கார்த்திக்..

அவளுக்கு டிசைனை அனுப்பி விட்டு, அவன் மீண்டும் அங்கு வந்து நிற்க, அதை திறந்து பார்த்தவளுக்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை..

ஏதோ கிட்னியை பாதியாக போட்டு அங்கங்கு ஏதோ நம்பர் எல்லாம் எழுதியதை போல் இருக்க, 'என்ன கண்றாவி இது.. டிசைன் என்றால் கார் மாதிரி கலர் கலரா எல்லாம் வரைய மாட்டானா!' என மனதில் நினைத்துக்கொண்டவள், முகத்தை முயன்று சாதாரணமாக வைத்துக்கொண்டாள்..

"இது என்ன டிசைன்?" என அவள் கெத்தாக கேட்க,

'இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை' என மனதில் நினைத்துக்கொண்டவன்,

"பிரேக் பேட் மேம்" என்றான்..

"அது தெரியுது.. இதெல்லாம் ஒரு டிசைன்னா? இப்படி டிசைன் போட்டால் வண்டி பிரேக் பிடிக்காமல் எங்காவது மோதி விடும்.." என நக்கலாக சாதனா கூற, அவள் கூற்றில் ஒரு நொடி கண்களை அழுந்த மூடி திறந்தவன், இப்போது அழுத்தமாக அவளை பார்த்தான்..

"என்ன தவறு என்று சொல்லுங்க மேம்.. சரி செய்து கொண்டு வரேன்" என பவ்யம் போல் அவன் கேட்க, அவளோ உள்ளுக்குள் திருதிருவென விழித்தாள்..

கம்ப்யூட்டர் படித்தவளிடம் பிரேக்கை பற்றி கேட்டால் அவளுக்கு என்ன தெரியும்..

அதை காண்பித்துக்கொண்டால் அவள் கோபம் என்ன ஆவது!

"இந்த இடத்தில் வளைந்திருப்பது தப்பு.." என குத்துமதிப்பாக ஒரு இடத்தை காட்டி அவள் கூற, அவனுக்கோ அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்துவிடும் போல் இருந்தது..

ஆனால் சிரித்தால் அவள் கொலைவெறி ஆகி விடுவாள் என்பதால், "சரியா தான் போட்டிருக்கேன் மேம்" என்றான் கார்த்திக் அப்போதும் அமர்தலாக.

"ஏய் எனக்கு தெரியாதா? இது தப்பு மேன்.. சரிபண்ணிட்டு வா.." என அவள் வேண்டுமென்றே கூற, இப்போது அவன் பொறுமையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது..

அவனும் எத்தனை நேரம் தான் அவள் செய்யும் கலாட்டாவை அமைதியாக சகிப்பது.

"எனக்கு என்ன தவறு என்று புரியலை மேம்.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.." அழுத்தமாக நின்று கொண்டு கார்த்திக் கேட்க, அவனை முறைத்துப்பார்த்தவளுக்கு என்ன சொல்வதென்று தான் புரியவில்லை..

'தவறையும் இவனே செய்து விட்டு, திமிராக நிற்பதை பார்!' என கோபம் தலைக்கேற,

"கெட் அவுட்" என்று கத்திவிட்டாள் சாதனா..

"நீங்க எதை சரி பண்ண வேண்டும் என்று சொல்லவே இல்லையே மேம்..?" என அவன் வேண்டுமென்றே மீண்டும் கேட்க, அவனை அழுத்தமாக பார்த்துக்கொண்டே எழுந்தவள்,

"இப்போ வெளியே போறியா? இல்லை இதை வச்சு உன் மண்டையை உடைக்கவா டா?" என கையில் பேப்பர் வெயிட்டை தூக்கி கொண்டே கேட்க,

அவனோ கொஞ்சமும் அசராமல், "உடைச்சுக்கோ" என்றான் நிமிர்வாக..

எப்போதும் போல் அவள் தான் பின்வாங்க வேண்டி இருந்தது..

"என்னை தோற்கடித்து பார்ப்பதில் உனக்கு அப்படி என்ன டா மகிழ்ச்சி?" பேப்பர் வெயிட்டை மீண்டும் டேபிளில் வைத்துக்கொண்டே அவள் கேட்க,

"அப்படியாவது உன் மனம் கொஞ்சம் ஆராதா என்ற நப்பாசை தான்.." என்றான் அவனும் இறுக்கமாக..

"வாய்ப்பில்லை டா.. இந்த பிறவியில் வாய்ப்பில்லை.. என் கண்முன் நிற்காமல் போய் தொலை.." கோபத்துடன் பேசிக்கொண்டிருந்தவள் குரல் கலங்கிவிட, அதற்கு மேல் அங்கு நின்று அவளை கலங்கடிக்க விரும்பாமல் வெளியே வந்துவிட்டான் கார்த்திக்..

தன் சீட்டில் வந்து அமர்ந்தவனுக்கு சிறிது நேரம் ஒன்றுமே ஓடவில்லை..

மனதில் எழுந்த பாரத்துடன் அப்படியே அமர்ந்துவிட்டான்..

சிறிது நேரத்தில் தானே தலையை சிலுப்பி கொண்டு வேலையை பார்க்க தொடங்கிவிட்டான்..

சாதனா நிலை இல்லாமல் தவித்தது சில நொடிகள் தான்..

அவள் மனமும் சற்று நேரத்தில் நிலைபட்டு விட்டது..

கண் மூடி அமர்ந்திருந்தவள் கண் முன் ஒரு காட்சி விரிந்தது..

அவள் உயிரானவன் அவளை விட்டுகொடுக்க மற்றவனுக்கு செய்த சத்தியம்..

அந்த காட்சி வந்ததுமே கோபம் மீண்டு விட, மீண்டும் கார்த்திக் மேசைக்கு போன் செய்தாள் சாதனா.

அவன் போனை எடுத்ததும், "எனக்கு ஜூஸ் வாங்கிட்டு வாங்க மேனேஜர் சார்" என நக்கலாக ஒலித்த அவள் குரலில் அவள் தன்னை பார்க்க வாய்ப்பில்லை என்று உறுதிசெய்து கொண்டு லேசாக தலையை கோதி சிரித்துக்கொண்டவன்,

"வரேன்" என குரலில் எதுவும் காட்டாமல் கூறிவிட்டு போனை வைத்தான்..

'தேவதையாய் இருந்து, ராட்சசி மீண்டு விட்டாள்.. அழகான ராட்சசி டி நீ..' என முணுமுணுத்து கொண்டே அவள் கேட்ட ஜூஸ்ஸை வாங்க சென்றான் கார்த்திக்..

அவளுக்கு பிடித்த ஆப்பிள் ஜூஸ் வாங்கிக்கொண்டு மீண்டும் அவள் அறைக்கு வந்தவன், "மேம் ஜூஸ்" என்று கூறிக்கொண்டே வைக்க அதை சாதரணமாக எடுத்து பார்த்தவளுக்கு, அதில் இருந்த ஆப்பிள் ஜூஸ்ஸை பார்த்ததும் முகம் சுருங்கி விட்டது..

"உன்னிடம் நான் ஆப்பிள் ஜூஸ் கேட்டேனா?" கோபத்துடன் அவள் கேட்க, அவனோ அவள் கோபம் உணர்ந்து அமைதியாக நின்றான்..

"பதில் பேசு மேன்.. ஜூஸ் கேட்டால் என்ன வேண்டுமென்று கேட்டுவிட்டு போகமாட்டாயா? உனக்கு எத்தனை திமிர் இருந்தால் நீயாக வாங்கி வருவாய்? இடியட்..." என கத்திகொண்டே எழுந்தவள், அடுத்த நொடி கொஞ்சமும் யோசிக்காமல் அந்த ஜூஸ்ஸை எடுத்து அவன் முகத்தில் கொட்டிவிட்டாள்..

அவள் திடீரென கொட்டிவிடுவாள் என எதிர்பார்க்காத கார்த்திக்கும், "ஏய் என்ன டி பண்ணுற?" என கோபத்தில் கத்திகொண்டே முகத்தை துடைத்துக்கொண்டு அவளை முறைக்க, அவளோ அப்போதும் கொஞ்சமும் இளகாமல் அவனை அழுத்தமாக பார்த்துக்கொண்டு நின்றாள்..

அவள் கண்களில் இருந்த அழுத்தத்தின் அர்த்தம் புரிந்து அவனும் தன்னை மீறி வந்த கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்துகொண்டான்..

அவள் மேசையில் இருந்த டிஸ்யுவை எடுத்து அமைதியாக முகத்தை துடைத்து கொண்டவன், "என்ன ஜூஸ் வேணும் சொல்லுங்க.. வாங்கிட்டு வரேன்.." என அமைதியாக கேட்க, இப்போது அவளுக்கு தான் ஒரு மாதிரி ஆகி விட்டது..

அவன் கோபத்தை கூட அவளால் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் இந்த அமைதி.

அது அவள் மனதை என்னவோ செய்ய, அதற்கு மேல் அவனிடம் வாக்குவாதம் செய்ய விரும்பாமல், "ஒன்றும் வேண்டாம்" என்றுவிட்டு அமர்ந்துவிட்டாள் சாதனா..

அவனும் அவள் மனம் உணர்ந்து அமைதியாக வெளியே வந்துவிட்டான்..

அங்கிருந்து நேராக ரெஸ்ட் ரூம் தான் வந்தான்..

முகத்தில் வேகமாக நீர் அடித்து முகத்தை அலம்பிக்கொண்டவன் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை பார்த்து கசப்புடன் புன்னகைத்து கொண்டான்..

தவறு என்று தெரிந்தே திமிருடனும் வீம்புடனும் அந்த தவறை செய்தவன் அவன்..

இன்று அதற்கான பலனையும் அதே வீம்புடன் ஏற்றுக்கொண்டு சுற்றுகிறான்..

எப்படியோ சாதனாவாது நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் இப்போது அவனுக்கு இருந்தது.

'உனக்கு நான் தகுதியானவன் இல்லை டி..' என நினைத்துக்கொண்டவன் மீண்டும் ஒரு முறை முகத்தை அலம்பி அதனுடன் தன் நினைவுகளையும் புதைத்துக்கொண்டு வெளியே வந்தான்..

அன்று மாலை வீட்டிற்கு வந்த சாதனா நேராக தன் அறைக்கு சென்று ப்ரெஷ் ஆகிவிட்டு தன் குழந்தையிடம் வந்து அமர்ந்துகொண்டாள்.

"செல்ல குட்டி பாட்டியை படுத்தாம சமத்தா இருந்தீங்களா? பாட்டி உங்களை நல்லா பார்த்துக்கிட்டாங்களா?" ஒரு மாதமே ஆன தன் மகள் அனுஷாவிடம் கேட்டுக்கொண்டே கையை காலை லேசாக ஆட்டிக்கொண்டிருந்த குழந்தை அருகில் அவள் அமர,

"அட டா முழிச்சுட்டாளா? தூங்குகிறாள் என்று தான் வெளியே போனேன்!" என கூறிக்கொண்டே வந்தார் சித்ரா..

"இப்போ தான் முழிச்சிருக்கா போல மா" என்றவள் குழந்தையை தூக்கி கொண்டு சுவர் பக்கம் திரும்பி அமர்ந்து குழந்தைக்கு பாலூட்ட தொடங்கினாள்.

அவளுக்கு பின்னால் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்ட சித்ரா, "இந்த குழந்தைக்காகவாது உன் முடிவை கொஞ்சம் மாற்றிக்கொள்ள கூடாதா சாதனா மா? அண்ணனுக்கும் தங்கைக்கும் ஏன் இத்தனை பிடிவாதம்?" மனம் கேட்காமல் சித்ரா புலம்ப, சாதனாவின் முகம் கோபத்துடன் இறுகி போயிற்று..

"மானம்கெட்டு போய் என்னால் யாருடனும் வாழ முடியாது மா.. ஒரு முறை செய்த தவறே போதும்.. அதுக்கே நிறைய பட்டுட்டேன்.. எனக்கு என் குழந்தை போதும் மா.." அழுத்தமாக அவளிடம் இருந்து பதில் வர,

"அப்புறம் எதுக்கு அந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கி போய் வந்து கொண்டிருக்கிறாய்?" மகளின் முரண்பாடான செயல்களில் ஒன்றும் புரியாமல் சித்ரா வினவ,

"அதற்கும் என் வாழ்க்கை மீண்டும் முன்புபோல் தொடங்கவும் எந்த சம்பந்தமும் இல்லை மா.. என் வாழ்க்கையை வைத்து விளையாண்டவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டாமா?" என்றாள் சாதனா அடக்கபட்ட கோபத்துடன்..

மென்மையே உருவான மகள் இன்று இத்தனை கோபத்துடன் இருப்பதை பார்த்தவர் எப்போதும் போல் தன்னையும் சேர்த்தே நொந்து கொண்டார் சித்ரா..

பிள்ளைகள் வாழ்க்கை கை மீறி போன பின் தானே அவர் விழித்துக்கொண்டார்..

"எல்லாரிடமும் தவறிருக்கு சாதனா மா.. எல்லாவற்றையும் சரி பண்ண முயற்சிக்காமல், ஒதுக்கினால் என்ன அர்த்தம் டா?"

"தவறு சரி பார்க்க இது மூளை சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை மா.. மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.. என்ன தான் காரணம் கூறிக்கொண்டாலும், மனம் சிலதை ஏற்காது மா.. விட்டுவிடுங்கள்.." அழுத்தமாக முடித்தவள், பால் குடித்துக்கொண்டே உறங்கிவிட்டிருந்த குழந்தையை தோளில் போட்டு தட்டி கொடுத்துவிட்டு, மீண்டும் கட்டிலில் விட்டாள்..

"எனக்கு பசிக்குது.. ஏதாவது சாப்பிடுட்டு வரேன்.. அனுவை பார்த்துக்கோங்க.." என்றுவிட்டு வேகமாக எழுந்து சென்றுவிட்ட மகளை பார்த்த சித்ராவின் மனம் வெகுவாய் வலித்தது..

பேச திராணியற்று தான் மகள் ஓடுகிறாள் என அவருக்கு புரியாமல் இருக்குமா என்ன!

எப்படி அனைத்தையும் மீண்டும் சரி செய்வது என்று தான் அவருக்கு புரியவில்லை..

தொடரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 4:

அன்று…

சாதனா தன் அறை பால்கனியில் நின்றிருந்த போது அவளை தேடி வந்தான் பிரகாஷ்..

"சாதனா மா நான் கிளம்பறேன்.. பார்த்து பத்திரமா இரு.. அன்று போல் பிரேக் பிடிக்காத கார் எல்லாம் எடுத்து ஓட்டி கொண்டிருக்காதே.." பாதி விளையாட்டும் பாதி சீரியஸ்ஸுமாக அவன் கூற,

"ப்ச் அண்ணா அது ஏதோ தெரியாமல் நடந்துவிட்டது.. இனி கவனமா இருக்கேன்.. நீயும் பார்த்து போய்ட்டு வா.. திரும்ப எப்போ வருவ?" என சாதனா கேட்க, அவன் முகம் ஒரு நொடி யோசனையுடன் சுருங்கியது..

"தெரியலை டா.. வரேன்.." என முடித்துக்கொண்டவன்,

"என்னுடன் கீழே வரை வா" என அவளையும் அழைத்துக்கொண்டே நடந்தான்..

இருவரும் கீழே வந்த போது அங்கு நந்தகுமார் சோபாவில் அமர்ந்திருந்தார்..

பிரகாஷை அழுத்தமாக பார்த்தவர், "பார்த்து போ பிரகாஷ்.. அங்க ஏதாவது ஹெல்ப் வேண்டும் என்றால் நம் ஆளுங்க யார் வேண்டுமென்று சொல்.. அனுப்பி வைக்கிறேன்.." என அவர் கூற,

"சரி பா" என்றான் பிரகாஷ்..

"உன் அம்மா எங்கே?"

"வந்துட்டே இருக்காங்க பா.. இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாக சொன்னாங்க"

அவன் பதிலில், "எப்போ பாரு கிளப், ப்ரண்ட்ஸ் என்று சுத்த வேண்டியது.. இதுவே வேலையா போச்சு.." என அவர் புலம்பி கொண்டிருக்கும் போதே சித்ரா வந்து சேர்ந்தார்..

வரும் போதே, "சாரி.. சாரி பிரகாஷ்.. மாதர்சங்க மீட்டிங்.. தவிர்த்துவிட்டு வரமுடியவில்லை.." என கூறிக்கொண்டே வர, நந்தகுமார் மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டார் என்றால், பிரகாஷோ மெலிதாக சிரித்துவைத்தான்..

இன்று பிரகாஷ் அவர்கள் அலுவலக விசயமாக வெளிநாடு செல்கிறான்.. இப்போது தான் அவன் முதல் முறை வெளிநாடு செல்வதால் அனைவரிடமும் கூறிக்கொண்டு கிளம்பினான்..

சித்ராவும் வந்ததும் அவரிடமும் கூறிக்கொண்டவன் அதற்கு மேல் நிற்காமல் கிளம்பி விட்டான்..

அவன் கிளம்பியதும் தன் அறைக்கு வந்த சாதனாவிற்கு மனதில் ஒரு நெடியவனின் உருவம் வந்து நின்றது..

அன்று அவளை காப்பாற்றியவன்..

ஆம், அன்று கௌஷிக் காப்பாற்றியது சாதனாவை தான்..

மருத்துவமனையில் அவளை சேர்த்த சில நிமிடங்களிலேயே அவள் கண்விழித்துவிட்டாள்...

அதே நேரம் அங்கு பிரகாஷும் வந்துவிட அவள் டீடெயில்ஸ் யாரிடமும் சொல்ல வேண்டாம் என சாதரணமாக கூறி அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான் பிரகாஷ்..

சாதனாவிற்கோ தன்னை காப்பாற்றியவனுக்கு ஒரு நன்றி கூட கூறவில்லையே என உறுத்தி கொண்டே இருந்தது..

அன்று காரை ரிப்பேர் பார்க்க வந்தது யாரென பிரகாஷிடம் கூட கேட்டுப்பார்த்தாள்..

அவனோ, "யாரோ லோக்கல் மெக்கானிக் டா.. அதையெல்லாமா நான் பார்த்துக்கொண்டு இருக்க முடியும்!" என தோளை குலுக்கிவிட்டு சென்றுவிட்டான்..

அவளும் அன்றில் இருந்து அவனை எங்காவது பார்த்தால் நன்றி கூறிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே தான் இருந்தாள்..

அவன் கண்ணில் தட்டுப்படும் வழியை தான் காணவில்லை..

மிக அழகாய், நேர்த்தியாய் ஒரு மிக பெரிய விபத்தை தடுத்து அவள் உயிரை காப்பாற்றி இருக்கிறான்..

அவனது ஆழமான குரலும், அதில் இருந்த பதட்டமும் அவளால் மறக்கவே முடியாமல் போனது..

பிரகாஷ் கிளம்பி சென்று ஒருவாரம் ஓடி இருந்த நிலையில், அன்று காலை தன் தோழியின் பிறந்தநாள் ட்ரீட்டிற்கு கிளம்பி வந்துகொண்டிருந்தாள் சாதனா..

வரும் வழியில் அவள் எப்போதும் செல்லும் கோவிலில் வண்டியை நிறுத்தியவள், வேகமாக ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு போவோம் என்ற நினைவுடன் உள்ளே வர, அங்கிருந்த கடவுளோ அவள் வேண்டுவதை முன்பே அறிந்தவர் போல் அவள் வேண்டுதலுக்கான விடையை அங்கேயே வைத்திருந்தார்..

நேராக சுவாமி சன்னதிக்கு வந்தவள், அங்கு கூட்டமாக இருக்கவும் ஒரு பக்கம் நின்று எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தாள்..

அப்போது அனைவருக்கும் தீர்த்தம் கொடுத்துகொண்டு வந்த பூசாரி, சாதனாவை பார்த்ததும், "நல்லா இருக்கையா மா?" என்று கேட்க,

"இருக்கேன் மாமா.." என்றாள் சாதனா சிரித்துக்கொண்டே.

அவள் எப்போதும் வரும் கோவில் என்பதால், அவர் அவளுக்கு நல்ல பழக்கம்..

"ஒரு சின்ன உதவி செய்கிறாயா சாதனா மா?" என அவர் கேட்க,

"சொல்லுங்க மாமா" என்றாள் அவள்..

"ஒரு நிமிஷம் மா" என்றுவிட்டு உள்ளே சென்றவர் கையில் வேறு தீர்த்த சொம்புடன் வந்தார்..

"இதை அங்க உட்காந்திருக்கும் பையனிடம் கொடு மா.. உபவாசம் இருந்து நூத்தியெட்டு முறை அங்கப்ரதக்ஷணம் செய்துவிட்டு வந்து உட்காந்திருக்கான் பாவம்.. என்னால் இந்த கூட்டத்தை விட்டுவிட்டு போகமுடியலை.. கொஞ்சம் கொடுக்கிறாயா..?"

"கண்டிப்பா தரேன் மாமா.. நீங்க இங்க பாருங்க.." என்றுவிட்டு அவர் நீட்டிய சொம்பை வாங்கி கொண்டு அவர் கைகாட்டிய இடம் நோக்கி திரும்பியவள் கண்களில் விழுந்தது என்னவோ ஒருவனின் உறுதியான முதுகு தான்..

வேண்டுதல் முடிந்து இப்போது தான் சட்டை போட்டிருந்தான் போல், அதுவும் ஈரத்துடன் தான் இருந்தது..

மெதுவாக நடந்து வந்தவள் அவனுக்கு முன்னால் வந்து அவனை பார்க்க, கண்களை மூடி சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தவனை பார்த்தவளுக்கு பெரும் ஆச்சர்யம்..

"அட மெக்கானிக்" என அவள் சத்தமாகவே கத்திவிட, அவள் குரலில் திடுக்கிட்டு கண்விழித்தான் கௌஷிக்..

அவளை பார்த்ததும் அவனுக்கும் ஆச்சர்யம் தான்..

அவன் முகம் சுருங்க அவளை பார்த்துக்கொண்டிருக்க, அவளுக்கோ அப்போது தான் பூசாரி சொன்னது நினைவு வந்தது..

"அச்சோ பரிகாரம் செஞ்சுட்டு உட்காந்திருக்கீங்க என்று சொன்னாரே.. இதை முதலில் குடிங்க.." என அவள் கையில் இருந்த தண்ணீரை அவனிடம் நீட்ட,

"தேங்க்ஸ்" என சிறு புன்னகையுடன் கூறிக்கொண்டே அதை வாங்கிகொண்டவன், அதை முழுதாக ஒரே முறையில் குடித்து முடித்து விட்டான்..

அவனை பார்த்துகொண்டே அவனுக்கு சற்று இடைவெளி விட்டு அமர்ந்துகொண்ட சாதனா, "நூத்தியெட்டு முறை அங்கப்ரதக்ஷணம் பண்ணினீங்களா? உடம்பெல்லாம் வலிக்காதா? கஷ்டமா இருக்கும் இல்லையா?" உண்மையான வருத்தத்துடன் அவள் கேட்க, அவள் கேள்வியில் மெலிதாக புன்னகைத்தவன்,

"உடம்பை வருத்தி வேண்டுதல் செய்தாலாவது நாம் கேட்பதை கடவுள் கொடுத்துவிட மாட்டாரா என்ற ஆசை தான் மா.. ஆமாம் உனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே..? அன்று நான் ஹாஸ்பிடல் வந்த போது நீ போய்ட்டதா சொன்னாங்க.." என்று கேட்க,

"ஒன்னும் இல்லையே.. ரொம்ப நல்லா இருக்கேன்.." என சிரித்துக்கொண்டே கூறியவள்,

"உங்க பேர் என்ன? நீங்க எங்க இருக்கீங்க? உங்களுக்கு நன்றி சொல்லலாம் என்று தேடினால் உங்களை பற்றி ஒன்னுமே தெரியலை.." முகத்தை சுருக்கி அவள் குறை கூறிய அழகை தன்னை அறியாமல் ரசித்தவன்,

"ஏன் மா நான் என்ன வி.ஐ.பியா விசாரித்தவுடன் தெரிய, சாதா மெக்கானிக்.. என் பெயர் கௌஷிக்.. இங்கு தான் பக்கத்தில் ஒரு சின்ன மெக்கானிக் ஷெட் வச்சிருக்கேன்.." என்றவன் தனது முகவரியும் சேர்த்தே கூறினான்..

அனைத்தையும் சிரத்தையுடன் கேட்டுக்கொண்டவள், "நான் சாதனா" என்று கூற,

"என்னிடம் மட்டும் ஜாதகத்தையே கேட்டுக்கொண்டு, உன் பெயரை மட்டும் சொல்கிறாயா? விவரம் தான்.." என்றான் கௌஷிக் சிரித்துக்கொண்டே..

"ச்ச ச்ச அதெல்லாம் ஒன்னும் இல்லை மெக்கானிக்.." என அவள் தொடங்க,

"அடபாவமே..! எனக்கு பெயர் இருக்கு மா.." என்றான் கௌஷிக் மேலும் சிரித்து..

"எனக்கு இப்படி நினைச்சு நினைச்சே பழகிப்போச்சு.. உங்களுக்கு பிடிக்கலையா..?" யோசனையுடன் அவள் கேட்க, அவனுக்கு ஏனோ அவள் செயல் அனைத்தும் சிரிப்பு தான் வந்தது..

"உன் இஷ்டம் போல் கூப்பிடு" என அவன் முடித்துவிட,

"தேங்க்ஸ் மெக்கானிக்" என ஆர்பரித்துக்கொண்டே கூறியவள், அடுத்து தன்னை பற்றி கூற வாயை திறந்த போது, அவள் போன் அடித்தது..

அதை எடுத்தவள் பேச தொடங்கியதுமே குதித்து கொண்டு எழுந்துவிட்டாள்..

"ஐயோ போய்டாதீங்க டி.. இதோ வந்துட்டேன்.." என பரபரவென கூறிவிட்டு போனை வைத்தவள்,

"நான் உடனே போகணும் மெக்கானிக்.. இல்லாட்டி என்னை விட்டுவிட்டு ஹோட்டலுக்கு போறாங்களாம்.. சாப்பாடு முக்கியம் இல்லையா.. சோ மீதியை அடுத்தமுறை பேசுவோம்.." என்றவள் பேசிக்கொண்டே வேகமாக ஏதோ தேடினாள்..

அவன் பாக்கெட்டில் இருந்த போன் அவள் கண்ணில் தட்டுப்பட, அதை எடுத்து தன் போனுக்கு ஒரு ரிங் கொடுத்தவள், மீண்டும் அந்த போனில் ஏதோ செய்துவிட்டு அவனிடம் போனை நீட்டினாள்.

"உன் நம்பர் நோட் பண்ணிக்கிட்டேன்.. என் நம்பர் டெலீட் பண்ணிட்டேன்.. உன்னை பற்றி ஒன்னும் தெரியாது இல்லையா! நீ நல்ல பையனா இருந்தா தரேன்.. ஓகே வா..?" என வேகமாக கூறியவள், ஒரு நொடி புருவம் சுருங்க யோசித்து,

"பையன் இல்லை, நீ பெரியவனா தான் இருப்பாய் இல்லையா! ரொம்ப பெருசா வளர்ந்திருக்கிறாயே.. ஓகே பை.." என்றுவிட்டு அவனிடம் எந்த பதிலும் கூறாமல் ஓடிவிட்டாள் சாதனா..

அவள் ஓட தொடங்கியதும் தான் சுயநினைவிற்கே மீண்டவன், "ஹேய் சாதனா ஒரே ஒரு நிமிஷம் நில்லு" என்று வேகமாக கூற, அவன் குரலில் நின்று அவனை திரும்பி பார்த்தாள் சாதனா..

அவள் நின்றதும் தனக்கு அருகில் இருந்த பையை எடுத்துக்கொண்டு அவளிடம் வந்தவன், "இது கடவுளுக்கு இல்லை வேறு பெரியவர்களுக்கு கொடுக்கலாம் என்று வாங்கிய புடவை.. இப்போ உன்னிடம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.. ஒரு நல்ல விஷயத்திற்காக வேண்டிக்கொண்டது.. வாங்கி கொள்கிறாயா?"

அவள் ஏற்றுக்கொள்வாளோ மாட்டாளோ என்ற குழப்பத்துடன் கேட்டவனுக்கு, ஏனோ அந்த புடவையை அவள் ஏற்றுக்கொண்டு விட்டால் நன்றாக இருக்குமே என மனம் அடித்துக்கொண்டது..

அவன் நீட்டிய பையை வாங்கி லேசாக பிரித்துப்பார்த்தவள், "ம்ம் பட்டு டிசைன்.. அழகா தான் இருக்கு.. நானே வச்சுக்கறேன் மெக்கானிக்.. லேட் ஆச்சு.. பை.. பை.." என மீண்டும் கூறிக்கொண்டே வேகமாக நகர்ந்துவிட்டாள்..

படபடவென மழைபெய்து ஓய்ந்தது போல் இருந்தது.. அவள் பேசிவிட்டு போனதில் அத்தனை நேரம் பிடித்துவைத்திருந்த மூச்சை ஆசுவாசமாக வெளியே விட்டான் கௌஷிக்..

'பொறுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பாள் போல்' என நினைத்து தலையாட்டி சிரித்துக்கொண்டவனுக்கு அவளது இந்த துறுதுறுப்பு பிடித்து தான் இருந்தது.

இருபத்தியெட்டு வயதான அவனை பார்த்து அவள் பையன் என்றதும் அவனுக்கே ஒரு நொடி அதிர்ச்சியாக தான் இருந்தது..

பின் அவளே அதை திருத்திக்கொண்டதை பார்த்தவனுக்கு மேலும் சிரிப்பு தான்..

சில நாட்களாக கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து வந்தவனுக்கு அவள் பேச்சும், சிரிப்பும், நெருப்பில் எரிந்து கொண்டிருந்தவனுக்கு லேசாக குளிர் நீர் அடித்தது போல் இதமாக இருந்தது..


சிறிது நேரம் அங்கேயே நின்று அவள் சென்ற திசையை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு மனதில் ஏதோ இனம் புரியா இதமான உணர்வு பரவ, அதை சிறு புன்னகையுடன் ஏற்றுக்கொண்டே கிளம்பினான் கௌஷிக்..

வீட்டிற்கு வந்து ப்ரெஷ் ஆகிவிட்டு தன் மெக்கானிக் ஷெட் சென்று வேலையை தொடர்ந்தவன் முகத்தில் இருந்த புன்னகை வாடவேயில்லை..

அன்று மாலை எப்போதும் போல் பாட புத்தகத்துடன் அவனிடம் வந்த ராஜா கூட ஆர்வம் தாங்காமல் அவன் மாற்றம் பற்றி கேட்டுவிட்டான்..

எப்போதும் முகத்தில் இருக்கும் கடுகடுப்பு இல்லாமல் இளநகையுடனே அவன் அன்று பாடத்தை சொல்லி கொடுக்க, "உனக்கு இன்னிக்கு என்ன ஆச்சு ண்ணா?" என்றான் சிறியவன் ஆர்வம் தாங்காமல்..

அவன் கேள்வியில் ஒன்றும் புரியாமல் விழித்த கௌஷிக், "என்ன டா?" என்று கேட்க,

"உன் முகத்தில் எப்போதும் இருக்கும் அய்யனாரை காணுமே ண்ணா.. இன்னிக்கு அய்யனார் போய் கிருஷ்ணர் வந்த மாதிரி இருக்கே.. என்ன நடந்தது?" கிண்டலாக சிறியவன் கேட்க, அவன் கேள்வியில் கௌஷிக் கண் முன் சாதனாவின் முகம் தான் வந்தது..

அதில் மேலும் உதடுகள் விரிவேன் என்று அடம்பிடிக்க, அதை முயன்று கட்டுக்குள் கொண்டுவந்தவன், "சும்மா ஏதாவது உளறாதே டா" என லேசாக தலை கோதி கொண்டே கூற,

"அண்ணா இது வெட்கமா! ஐயோ எனக்கு ஹார்ட் அட்டாக் வருதே.." அவன் நெஞ்சை பிடித்துக்கொள்ள,

"டேய் நிஜமாவே அடிவாங்குவாய்.. நாளைக்கு எக்ஸாம் இருக்கு, நினைவில்லையா.. ஒழுங்கா படி.. புரியாததை கேளு, சொல்லி தரேன்.." என்று அவன் அழுத்தமாக கூற, அதற்கு மேல் வம்பு பேசாமல் ராஜாவும் படிக்க ஆரம்பித்துவிட்டான்..

ராஜா மகேஷின் தம்பி.. அவர்களுக்கு அன்னை மட்டும் தான்.

மகேஷ் ஆம்புலன்ஸ் ஓட்ட, அவர் கூலி வேலை செய்கிறார்.

அவர் குடும்பமே ராஜா படிப்பை நம்பி தான் இருக்கிறது..

இங்கு வந்த புதிலில் கௌஷிக்கிற்கு முதல் முதலாக கிடைத்தது மகேஷின் நட்பு தான்..

அவன் நிலை உணர்ந்து ராஜாவிற்கு தான் படிப்பு சொல்லி கொடுப்பதாக வாக்களித்து அதை செய்து கொண்டும் இருந்தான் கௌஷிக்..

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ராஜாவும் அடுத்த வருடம் பொது தேர்வு என்பதால் தீவிரமாக படித்துக்கொண்டிருந்தான்..

கௌஷிக், ராஜாவிற்கு எதுவும் எதிர்பார்க்காமல் படிப்பு சொல்லி கொடுப்பதால் மகேஷிற்கு எப்போதும் அவன் மீது தனி மரியாதை உண்டு..

அதே நேரம் ராஜாவும் அவனுக்கு எதாவது உதவி கொண்டே, வேலையும் கற்றுக்கொள்வான்..

கௌஷிக்கிற்கு இங்கு குடி வந்த புதிலில் அவன் படிப்பு சொல்லி கொடுக்கிறேன் என்று கூறிய போது, 'அவன் என்ன படித்திருக்கிறான்?" என்று கேட்ட மகேஷிற்கு கௌஷிக் பதில் பெரும் அதிர்ச்சி தான்..

கௌஷிக் பி.ஈ மெக்கானிக்கல் படித்திருந்தான்..

"இத்தனை படித்துவிட்டு ஏன் டா இப்படி?" என அதிர்ச்சியுடன் மகேஷ் கேட்டபோது,

"என் நிலை அப்படி மகேஷ்.. இப்போதைக்கு எனக்கு யாரும் வேலை தர தயாராக இல்லை.. ஏதாவது வேலை கிடைக்கும் வரை சமாளிக்க வேண்டும் இல்லையா.." இறுகிப்போன குரலில் இந்த பதில் மட்டும் தான் கௌஷிக்கிடம் இருந்து அவனுக்கு கிடைத்தது..

தொடர்ந்து வந்த நாட்களில் கௌஷிக் பல முறை சாதனாவை பற்றி நினைத்துக்கொண்டிருந்தான்..

ஆனால் அன்று அவன் தொலைபேசி எண் குறித்துக்கொண்டு போனவள் அதற்கு பின் அழைக்காததால், அவன் அவளை பற்றி தெரிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை..

அவனுக்கு நேரமும் இருக்கவில்லை..

ஆனால் அவன் மனம்கவர்ந்தவளோ நேரிலேயே வந்து நின்றாள்..

அவன் சொன்ன முகவரியை வைத்து ஒருநாள் மதியம் அவன் மெக்கானிக் ஷெட் தேடி வந்துவிட்டாள் சாதனா..

அவள் வந்த போது அங்கு ராஜா தான் இருந்தான்..

எப்போதும் போல் படித்துக்கொண்டிருந்தவன் அவளை பார்த்ததும் எழுந்து வந்து, "என்ன பிரச்சனை கா?" என்று கேட்க,

"உங்க முதலாளி எங்க?" என்றாள் சாதனா நேரடியாக..

"அவர் வெளியே போய் இருக்கார் கா.. எனக்கு ஓரளவு தெரியும்.. சின்ன பிரச்சனை என்றால் நானே பார்த்துவிடுவேன் கா.." என அவன் கூற,

"வண்டியில் ஒன்னும் பிரச்சனை இல்லை தம்பி.. கௌஷிக் என் ப்ரண்ட்.. அதான் பார்க்க வந்தேன்.." என்றவள்,

"அவன் எப்போ வருவான்?" என்று கேட்க, அவனுக்கு கொஞ்சம் பெரியவள் போல் தோற்றமளிப்பவள் கௌஷிக்கை இத்தனை உரிமையுடன் கேட்டதை ஆச்சர்யத்துடன் பார்த்த ராஜா,

"உட்காருங்க கா.. போய் ரொம்ப நேரம் ஆச்சு.. அவர் வரும் நேரம் தான்.." என்று கூறிக்கொண்டே அங்கிருந்த ஸ்டூலை காட்ட, அந்த ஷெட்டை பார்த்துக்கொண்டே அங்கு அமர்ந்தாள் சாதனா..

"ஏதாவது குடிக்கறீங்களா கா?"

"ஒன்னும் வேண்டாம் பா.. நீ யாரு? அவன் தம்பியா?" என தானே யூகித்து கேட்டாள் சாதனா..

"இல்லை கா.. நான் அவர் ப்ரண்ட் தம்பி.. அண்ணா எனக்கு படிப்பு சொல்லி கொடுப்பார்.." என்றவன் நிறுத்தாமல் தொடர்ந்து கௌஷிக்கின் அருமை பெருமைகளை அளந்து விட, அதெல்லாம் கேட்க அவளுக்கு கொஞ்சமும் சலித்தது போல் தெரியவில்லை.

வெகு சுவாரஸ்யத்துடன் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள்..

சிறிது நேரத்தில் வந்துவிட்ட கௌஷிக் முதலில் அங்கு ஒருத்தி அமர்ந்திருந்ததையே கவனிக்கவில்லை..

ஏதோ யோசனையுடன் வந்தவன் நேராக உள்ளே சென்று சட்டையை மாற்றுவதற்காக கழட்ட, "ஐயோ இங்கேயேவா டிரஸ் மாத்துவாங்க!" என்ற பதட்டமான குரலில் தான் வேகமாக திரும்பினான்.

அவளை பார்த்தவன் முகம் அப்போதைக்கு யோசனையுடன் மட்டும் தான் சுருங்கியது.

அவளை ரசிக்கும் மனநிலையில் அவன் இருக்கவில்லை..

"நீ இங்க என்ன பண்ணுற?" என சாதாரணமாக அவன் கேட்க,

"என்ன மெக்கானிக் இப்படி புசுக்குனு கேட்டுடீங்க! என்னை பார்த்ததும் ஆச்சர்யத்துடன் பார்ப்பீங்க, சிரிப்பீங்க என்றெல்லாம் கனவு கண்டு கொண்டு வந்தேனே! இப்படி பல்ப் கொடுத்துடீங்களே!" என்று புலம்பி கொண்டே அவள் எழுந்துகொள்ள,

"உன் வண்டியில் ஏதாவது பிரச்சனையா?" என்றான் கௌஷிக் எந்த உணர்வுமற்று..

"இல்லையே" என சாதாரணமாக அவள் தோளை குலுக்க,

"அப்புறம் இங்க என்ன வேலை?" என்றான் அவன் புருவ முடிச்சுடன்..

"சும்மா உன்னை பார்க்கலாம்னு தான் வந்தேன் மெக்கானிக்.. ஏன் இத்தனை முறுக்கிக்கற..!" அவன் பேசிய லட்சணத்தில் சிறு கோபத்துடன் அவள் கேட்க,

"ப்ச் உன்னிடம் பேசும் மனநிலையில் நான் இல்லை சாதனா.. அவுட் ப்ளீஸ்.." என்று கூறிக்கொண்டே அவன் திரும்பி விட,

"யோவ் மெக்கானிக் இப்போ எதுக்கு ஓவரா பண்ணுற?" என தானும் கோபத்துடன் கத்திவிட்டாள் சாதனா..

பின்னே இதுவரை பார்த்தபோதெல்லாம் மென்மையான சிரிப்புடனும் புன்னகையுடனும் மட்டுமே பேசி அவள் மனதை கவர்ந்திருந்தவன், திடீரென இப்படி பேசினால் அவளும் என்ன செய்வாள்!

அவள் கத்தியதில் தானும் கண்கள் சிவக்க திரும்பியவன், "ஏய் உனக்கு ஒரு முறை சொன்னால் புரியாதா? ஜஸ்ட் கெட் அவுட்.." என சீறலாக கூற,

"போடா லூசு மெக்கானிக்" என அப்போதும் அவனை திட்டிக்கொண்டே கிளம்பிவிட்டாள் சாதனா..

அதற்கு மேல் அங்கு நிற்க அவளுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது..

இரண்டே முறை பார்த்த ஒருவனை பார்க்க வந்தது அவள் தவறு..

வண்டியை ஓட்டிக்கொண்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தவள் மனதில் கோபமும் வருத்தமும் சம விகிதத்தில் இருந்தது..

கடந்த இரண்டு முறை பார்த்ததிலேயே அவள் மனதில் அவன் ஏதோ சலனத்தை ஏற்படுத்தி விட்டிருந்தான்..

தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ணி விட கூடிய பணக்காரர்களில் ஒருவரான நந்தகுமாரின் மகள் அவள்.. எத்தனையோ பேர் அவளிடம் காதலை சொல்லி இருக்கிறார்கள்.. ஒருத்தரிடமும் அவள் மனம் சாய்ந்ததில்லை..

இவனோ சாதா மெக்கானிக்.. அவளுக்கு நன்றாக தெரியும்..

ஆனால் அவளுக்கு அவனை தானே பிடித்து தொலைத்தது.

முதலில் அவள் உயிரை காப்பாற்றிய போதே அவள் மனதில் பதிந்துவிட்டவன், அடுத்த முறை பார்த்த போது அழுத்தமாகவே ஒட்டிக்கொண்டான்..

இப்படி எல்லாம் ஒரு மூன்றாம் மனிதனை பற்றி யோசிக்க கூடாது என அவளும் இத்தனை நாள் மனதை கட்டுப்படுத்தி பார்த்தாள்..

அன்று ஏனோ அவனை பார்த்தே ஆக வேண்டும் என மனம் அடம்பிடித்ததால் வேறு வழி இல்லாமல் தான் வந்துவிட்டாள்..

காதல் என்பதற்கு எந்த காரணமும் தேவைப்படுவதில்லை போல்.. அவளுக்கு சம்பந்தமே இல்லாத ஒருவன் மீது அவளுக்கு காதல் வந்து தொலைத்திருந்தது.

அதை முழுதாக உணர கூட இல்லாத நிலையில் இன்றைய அவன் செயல் அவள் மனதை பெரிதாக பாதித்து விட்டிருந்தது.

கோபமும் அழுகையும் மாறி மாறி வர, கண்களை அழுத்தமாக துடைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தாள் சாதனா..

இங்கோ சாதனாவிடம் முதலில் கத்தி அனுப்பி விட்ட கௌஷிக் சில மணி நேரம் அவளை பற்றி யோசிக்கவே இல்லை.. மருத்துவமனையில் இருந்து வந்திருந்தவன் மனம் அந்த பாதிப்பில் இருந்து வெளியே வரவே சில மணி நேரம் ஆனது..

அவன் காயம் அத்தகையது..

ஆனால் மனம் கொஞ்சம் சமண்பட்டதும் அவனுக்கு சாதனா நியாபகம் தான் வந்தது..

தன்னை ஆசையாக பார்க்க வந்த சிறு பெண்ணை காரணமே இல்லாமல் திட்டி அனுப்பி இருக்கிறோம் என ஒருவாறு மூளைக்கு உரைக்க, 'ச்சை என்ன டா பண்ணி வச்சிருக்க?' என தன்னையே நொந்துகொண்டான் கௌஷிக்..

அவளிடம் மன்னிப்பு கேட்கலாம் என்றால் கூட, அவள் பெயரை தவிர அவனுக்கு ஒன்றும் தெரியாதே!

முதலில் சாதாரணமாக எழுந்த குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து பூதாகரமாக கண்முன் நின்று அவன் மனம் அவள் பால் சாய்ந்துவிட்டதை அவனுக்கு உணர்த்தியது..

நாட்கள் நகர நகர எப்படியேனும் அவளை ஒரு முறை பார்த்து மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் என அவன் ஒவ்வொரு அணுவும் துடிக்க ஆரம்பித்துவிட்டது..

இருவரும் தங்கள் இணையை நினைத்தே பொழுதை கடத்த, ஒருவாறு அவர்கள் சந்தித்துக்கொள்ளும் நாளும் வந்து சேர்ந்தது..

தொடரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 5:

இன்று…

காலையில் இருந்தே அலுவலகம் சற்று பரபரப்புடன் தான் இருந்தது..

அன்று ஜி.எம்முடன் முக்கிய மீட்டிங் என்பதால் அனைவரும் அவர் என்ன கேட்பாரோ என்ற பயத்துடன் அனைத்தையும் தயார் செய்துகொண்டிருந்தனர்..

அங்கு எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தது கார்த்திக் மட்டும் தான்..

அவன் வேலைகள் எல்லாவற்றையும் அவன் எப்போதும் ஒழுங்காக தான் செய்வது..

அவனிடம் அனைத்து டாக்குமெண்ட்டும் எப்போதுமே தயாராக தான் இருக்கும்.

அமைதியாக வேலை செய்துகொண்டிருந்தவன் அருகில் வந்து அமர்ந்த பாலா, "எல்லாம் ஓகே வா சார்? ஏதாவது மாற்ற வேண்டுமா? கொஞ்சம் டென்ஷனா இருக்கே சார்" என்று கூற, அவனை லேசாக முகம் சுருங்க திரும்பி பார்த்த கார்த்திக்,

"ஏதாவது வேலை தவறா செய்து வைத்திருக்கிறாயா என்ன?" என யோசனையுடன் கேட்க,

"ஐயோ இல்ல சார்" என்று பதறி விட்டான் பாலா..

"தென் வாட்.. இதில் பயப்பட என்ன இருக்கு.. ஒழுங்கா வேலை செய்தாலே போதுமானது.. மீட்டிங்க்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கே, அது வரை வேலையை பார்.." என்றுவிட்டு அவன் திரும்ப, அவன் வார்த்தைகளில் இருந்த உண்மை உணர்ந்து பாலாவும் அமைதியாக சென்றுவிட்டான்..

ஆனால் அரை மணி சென்று தொடங்கிய மீட்டிங்கில் யாருமே எதிர்பார்க்காத விதமாக ஜி.எம் கார்த்திக்கை தான் வெகுவாக வம்பிழுத்தார்..

"உங்க டாக்குமெண்ட்ஸ் கொடுங்க கார்த்திக்" என வந்ததுமே அவர் கேட்க, அவனும் தனது வேலை சம்பந்தப்பட்ட கோப்பை எடுத்து நீட்டினான்.

சாதனாவும் அங்கு தான் இருந்தாள்.

முக்கியமான மீட் என்பதால் அவளும் இருந்தால் நன்றாக இருக்கும் என ஜி.எம் தான் வரச்சொல்லி இருந்தார்..

கார்த்திக் கொடுத்த கோப்பை சில நொடிகள் அத்துக்கு புரட்டி பார்த்தவர், "ம்ம் இதற்கு தான் இந்த மீட்டிங்கே முக்கியமா அரேஞ் பண்ணினேன்.. இந்த கஸ்டமர் ப்ராடக்ட் ஆர்டர் செய்து ஆறு மாதம் ஆகி விட்டது.. அவர்கள் கேட்ட டேட் தாண்டி இரண்டு மாதம் ஆச்சு.. இன்னும் நம் சைடில் இருந்து டெலிவரி போகலை.. அங்கிருந்து எனக்கு ஒரே பிரஷர்.. இது உங்கள் பொறுப்பு தானே கார்த்திக்.. வேலை தான் செய்யறீங்களா இல்லை இங்கு வந்து தூங்கிட்டு போறீங்களா?" எடுத்த எடுப்பில் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் ஜி.எம் தொடங்க, ஒரு நொடி கார்த்திக்கின் முகம் யோசனையுடன் சுருங்கி விரிந்தது..

"சார் இந்த லைனில் எதிர்பாராதவிதமா பிரச்சனை வந்துவிட்டது.. அதை சரிபண்ணவே லேட் ஆகிடுச்சு.. அதான் ப்ராடக்ட் டெலிவரி லேட்.. எல்லாமே நான் தினமும் மெயில் பண்ணிட்டு தானே இருக்கேன்.. கஸ்டமரிடம் அப்பாலஜி சொல்லி டைம் கேட்டிருக்கேன்.." நிதானமாக கார்த்திக் கூறிமுடிக்க,

"எனக்கு கிளாஸ் எடுக்காதீங்க கார்த்திக்.. இந்த விளக்கம் எல்லாம் எனக்கு தெரியாதா! தாமதமானால் அப்படியே விட்டுவிடுவதா? ராப்பகலா இருந்து முடிக்க வேண்டாமா? முடிந்தவரை சொன்ன நேரத்தில் டெலிவரி கொடுக்க முயற்சி பண்ணி இருக்க வேண்டாமா? கூலா உட்கார்ந்து காரணம் சொல்லிட்டு இருக்கீங்க!"

ஜி.எம்மின் பேச்சில் கார்த்திக்கின் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டு வந்தது..

அவர் வேலை நடக்க வேண்டும் என்று பேசுவது போலவே தெரியவில்லை.. வேண்டுமென்றே கார்த்திக்கை வம்பிழுக்க வேண்டும் என்றே பேசுகிறார் என கார்த்திக் உட்பட அனைவருக்குமே புரிந்தது.

அது தான் உண்மையும் கூட..

அந்த ஜி.எம் இங்கு வேலைக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது..

அதாவது சாதனா இந்த நிறுவனத்தை வாங்கிய பின் சேர்ந்தவர்..

அவரும் சேர்ந்ததில் இருந்தே பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார், இங்கு ஜி.எம் என்ற பெயரில் இருக்கும் அவருக்கு கிடைக்கும் மரியாதையை விட, கார்த்திக்கிற்கு தான் அனைவரும் அதிக மரியாதை கொடுத்தனர்..

அவர் என்ன தான் அப்ரூவ் செய்தாலும், அனைத்தையும் கார்த்திக்கிடமும் காட்டி ஒரு முறை அனைவரும் சரி பார்த்து கொள்வது அவர் கோபத்தையும் பொறாமையையும் ஏகத்துக்கும் கிளறி விட்டிருந்தது.

அனைத்தையும் விட மிக முக்கியமாக எதனாலோ சாதனாவிற்கு கார்த்திக்கை பிடிக்கவில்லை என்றும் கணித்திருந்தவர், அதை உபயோகப்படுத்திக்கொள்ள தான் சாதனாவையும் வைத்துக்கொண்டே வேண்டுமென்றே அவனிடம் தப்பு கண்டு பிடித்துக்கொண்டிருந்தார்..

அவர் மனதை ஓரளவு கார்த்திக் கணித்து விட்டான்.

அதில் மனதில் எழுந்த எரிச்சலை முயன்று கட்டுப்படுத்திக்கொண்டவன், "சார் ராப்பகலாக நான் மட்டும் உட்கார்ந்திருந்தால் வேலை நடக்காது.. மற்ற வேலையாட்களும் இருக்க வேண்டும் இல்லையா.. என்னால் முடிந்தவரை வேகமாக தான் செய்துகொண்டிருக்கிறேன்.. வேலைக்காக இரவு பகலாக இருப்பதில் எனக்கு எப்போதும் பிரச்சனையும் இருந்ததில்லை.." நிறுத்தி நிதானமாக கார்த்திக் பதில் கூறுவது போல் தான் இருந்தது

ஆனால் அவன் குரலில் ஒரு அடக்கப்பட்ட கோபமும், இதற்கு மேல் பொய் சொல்ல கூடாது என்ற எச்சரிக்கையும் இருந்தது..

அங்கு அது புரிந்த ஒரே ஆள் சாதனா தான்..

'ஆஹா ஆட்டம் களை கட்டும் போலவே' என்று நினைத்துக்கொண்டவள் நடப்பதை சுவாரஸ்யத்துடன் கவனிக்க ஆரம்பித்தாள்.

"கொஞ்சமாவது மேனேஜர் மாதிரி பேசுங்க கார்த்திக்.. சின்ன குழந்தை போல் சாக்கு சொல்லுறீங்க..!" அவன் சொன்னதில் இருந்த நியாயத்தை ஒத்துக்கொள்ள மனம் இல்லாமல் கோபத்துடன் ஜி.எம் பேச,

"எக்ஸ்கியுஸ் மீ.." என்று அழுத்தமாக கூறிக்கொண்டே எழுந்துவிட்டான் கார்த்திக்..

"யார் சின்ன குழந்தை போல் பேசுவது? நானா? நீங்களா? இருக்கும் நிலையை தெளிவா சொல்லிட்டேன்.. அதில் ஏதாவது மாற்றம் இருந்தால் மட்டும் சொல்லுங்க.. தேவை இல்லாமல் பேச வேண்டாம்.." நிமிர்ந்து நின்று ஜி.எம்மை நேரடியாக பார்த்து கார்த்திக் கூற, அவரும் ஒரு நொடி தடுமாறி தான் போனார்..

ஆனால் கோபம் யாரை விட்டது!

"என்ன கார்த்திக் மீட்டிங்கில் வச்சு கொஞ்சம் கூட டீசென்சி இல்லாமல் பிஹேவ் பண்ணிட்டு இருக்கீங்க! ஒரு ஜி.எம்மிடம் இப்படி தான் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் பதில் சொல்லுவீங்களா?" அவர் கோபத்துடன் பேசியதில் கார்த்திக்கின் மொத்த பொறுமையும் பறந்து விட்டது..

"வாட் த ஹெல்.. இங்கு வேலை பற்றி பேச வந்தோமா? இல்லை என் டீசென்சி லெவெல் செக் பண்ண வந்தோமா? ஒர்க் பிரச்சனை மட்டும் பேசுங்க சார்.. அதை சொல்ல வழி இல்லை என்றதும் ஏதோ சப்பைக்கட்டு கட்டிட்டு இருக்கீங்க.." வெகு நக்கலுடன் கார்த்திக் முடித்ததில் அவர் பொறுமையும் போய் விட,

"மைண்ட் யுவர் வார்ட்ஸ் கார்த்திக்.. நான் நினைத்தால் இந்த நொடி உன்னை டிஸ்மிஸ் பண்ணிடுவேன்.." என கத்திவிட்டார்..

"தாராளமா பண்ணுங்க.. எதற்காகவும் தேவையில்லாமல் நானும் காலில் விழ மாட்டேன்.."

இருவரும் எதிர் எதிர் துருவங்களாக சிலிர்த்துக்கொண்டு நின்றுவிட, கார்த்திக்கை ஒரு பெருமூச்சுடன் பார்த்துக்கொண்டே சாதனா எழுந்தாள்..

இதற்கு மேலும் அவர்களை விட்டால் அங்கு அவள் அமர்ந்திருப்பதற்கே மரியாதை இருக்காதே.

"ஷட் அப்" என சத்தமாக அவள் கத்த, இரு ஆண்களுமே அவள் குரலில் அவள் புறம் திரும்பினர்..

"இது ஆபிஸ்.. ரெண்டு பேருக்கும் நினைவிருக்கா இல்லையா?" என அவள் சீறலாக கேட்க, இருவரும் அவள் குரலில் சற்று அமைதி அடைந்தனர்.

"மிஸ்டர் கார்த்திக் கொஞ்சம் அமைதியாக உட்காருங்க.. ஜி.எம் கேட்டால் ஒன்றுக்கு இரண்டு முறை ஒரே பதிலை சொன்னால் நீங்க ஒன்னும் குறைஞ்சுட மாட்டீங்க.. அண்ட் ஜி.எம் சார் ப்ராஜெக்ட் நானும் பாலோ பண்ணிட்டு தான் இருக்கேன்.. சரியான காரணம் இருந்ததால் தான் லேட் ஆகியிருக்கு.. கொஞ்சம் சீக்கிரம் செய்ய சொல்வது சரி தான்.. பட் சொல்லும் முறை இது இல்லை.." என ஜி.எம்மிடமும் கூறியவள்,

"சீக்கிரம் முடிக்க பாருங்க கார்த்திக்.. நவ் எல்லாரும் போங்க.." என அவள் முடித்துவிட, எம்.டி அவள் பேசிய பின் மறுப்பேச்சு ஏது!

அனைவரும் கலைந்து சென்றுவிட, நகரப்போன ஜி.எம்மை மட்டும், "நீங்க இருங்க சார்" என்று நிறுத்தி வைத்தாள் சாதனா..

அனைவரும் சென்றுவிட்டனர் என உறுதிசெய்து கொண்டு நிதானமாக ஜி.எம் புறம் திரும்பியவள், "இது பொறாமை படும் இடம் இல்லை மிஸ்டர்.. நன்றாக வேலை செய்தால், உங்கள் இடத்திற்கு நீங்க அவரை தட்டிக்கொடுத்து முன்னேற்ற வேண்டும்.. அசிங்கமா பொறாமைபட்டு பழி போட கூடாது.." நிதானமாக கைகளை கட்டிக்கொண்டு சாதனா கூற, ஜி.எம் தான் திகைத்து விழித்தார்..

இத்தனை நேரம் ஏதோ அவருக்கு சாதகமாக இருப்பது போல் பேசிவிட்டு, இப்போது அவர் மனதை அவள் தெளிவாக கூறியதில், திகைப்பில் அவருக்கு வார்த்தைகளே வரவில்லை..

"மற்றவர்கள் முன்னாடி உங்களை அசிங்கப்படுத்த வேண்டாம் என்ற ஒரே காரணத்திற்காக தான் அமைதியாக இருந்தேன்.. இதுவே கடைசியா இருக்கட்டும்.. இல்லையென்றால் நீங்க என்ன கார்த்திக்கை வேலையை விட்டு தூக்குவது, நான் உங்களை தூக்கிடுவேன் ஜாக்கிரதை.." என அழுத்தமாக கூறிவிட்டு அவள் பதிலுக்காக அவர் முகத்தை பார்க்க,

"சாரி மேம்" என மெதுவாக முணுமுணுத்தார் ஜி.எம்..

இப்போது அவர் ஏதாவது மறுத்து பேசினால் தன் வேலை போய் விடும் என அவருக்கு புரிந்திருந்தது.

அவர் மன்னிப்பிற்கு எந்த பதிலும் கூறாமல் அவள் வெளியே சென்றுவிட, இதற்கு மேல் இப்படி மாட்டிக்கொள்ள கூடாது என்ற நினைவுடன் ஜி.எம்மும் அங்கிருந்து நகர்ந்தார்..

தன் அறைக்கு வந்து அமர்ந்த சாதனா அங்கிருந்து கார்த்திக் சீட்டை பார்க்க, அவனை அங்கு காணவில்லை.

அவன் வருவான் என சிறிது நேரம் பொறுத்து பார்த்தவளுக்கு அவன் வரும் வழி தெரியாததால், தானே எழுந்து வந்து அவனை தேடினாள்..

மெதுவாக மற்ற இடங்களையும் சேர்த்து அளந்து கொண்டே வந்தவளுக்கு, கார்த்திக் ஒரு பக்கம் தனியாக நிற்பது தெரிந்தது..

அவனே பின் புறம் மற்றவர்கள் பார்வையில் படாதவாறு ஒதுங்கி தான் நின்றிருந்தான்..

அவளே அவனை தேடிவந்ததால் தான் கண்டுபிடிக்க முடிந்தது.

மெதுவாக அவன் இருந்த பக்கம் சென்றவள், "என்ன சார் கோபத்தை கட்டுப்படுத்தும் படலமா?" என நக்கலாக கேட்க, அவள் குரலில் ஒரு பெருமூச்சுடன் திரும்பியவன் எதுவும் பதில் கூறாமல் நிற்க,

"இத்தனை கோபம் உடம்புக்கு ஆகாது சார்.. கொஞ்சம் குறைத்துக்கொள்வது தானே.. வேலை போனால் புவாவுக்கு என்ன பண்ணுவீங்க?"

அவனை வெறுப்பேற்றவேண்டும் என்றே அவள் கேட்க, அது அவனுக்கும் புரிந்தது.

ஆனால் ஏனோ எப்போதும் இருக்கும் பொறுமை அன்று அவனுக்கு இருக்கவில்லை.

"எனக்கு வேலை போனால் நான் பிச்சை எடுக்கறேன்.. உனக்கு என்ன டி! உன் வேலையை பார்த்துட்டு போ.." என்று கத்திவிட்டு வேகமாக சென்றுவிட்டான்..

அவன் குரலும், அதில் தெரிந்த அலட்சியத்திலும் ஒரு நொடி திகைத்து நின்றுவிட்ட சாதனா, பின் தானும் சுதாரித்து தன் அறைக்கு வந்தாள்.

'என்னிடம் கத்துகிறாயா! இன்று உன்னை சுத்த விடறேன் பாரு டா' என மனதில் கருவிக்கொண்டவள், மதிய உணவு வேலை போது அவனை அழைத்தாள்..

அதற்குள் தன் கோபம் மறந்து வேலையில் மூழ்கி இருந்த கார்த்திக், வேலை தடைபட்ட எரிச்சலுடன் தான் எழுந்து வந்தான்..

"எனக்கு லன்ச் வாங்கிட்டு வா" என்றவள் அங்கிருந்து வெகு தூரம் தள்ளி இருக்கும் ஹோட்டலை கூறி அங்கு தான் உணவு வேண்டும் என அழுத்தமாக கூற,

"மேடம் அங்க போகவே ஒன் ஹவர் ஆகும்" என்றான் கார்த்திக் பல்லை கடித்துக்கொண்டே..

"அப்படியா எனக்கு தெரியவே தெரியாது பாரேன்!" என நக்கலாக கூறியவள்,

"போ மேன்" என கொஞ்சமும் நக்கல் குறையாமல் முடிக்க,

இவளிடம் மறுத்து பிரயோஜனம் இல்லை என்பதால் அவள் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு நகர்ந்தான் கார்த்திக்..

மனதில் இருந்த கோபத்தில் மொத்தம் இரண்டுமணி நேரம் ஆகி இருக்க வேண்டிய வேலையை, ஒன்றரைமணி நேரத்தில் முடித்துக்கொண்டு வந்து நின்றான்..

அவன் உணவை வைத்ததும் வெயிலில் காய்ந்து போய் வந்திருந்தவன் முகத்தை பார்த்து நெகிழ்ந்த மனதை எரிச்சலுடன் கட்டுப்படுத்திக்கொண்டவள், "போய் சாப்பிட்டுட்டு வேலையை பாருங்க" என்று முடித்துவிட,

அவனோ எந்த பதிலும் கூறாமல் நேராக தன் சீட்டிற்கு தான் வந்தான்..

ஏற்கனவே விரயமாகி இருந்த நேரத்திற்கு ஈடாக தன் மதிய உணவை தியாகம் செய்துவிட்டு அவன் வேலையை தொடர, அவன் இப்படி தான் செய்வானோ என்ற சந்தேகத்துடன் அவனை பார்த்து கொண்டே பார்ஸலை பிரித்தவளுக்கு அவன் தன் சீட்டில் அமரவும் உறுதியாகிவிட்டது..

'என்னை இம்சை பண்ணவே பிறவி எடுத்திருப்பான் போல்' என முனகி கொண்டவளுக்கு, அவன் வயிற்றை காய போட மனம் வரவில்லை..

இளகிய மனதை கட்டுப்படுத்த முடியாமல் எரிச்சலுடன் தலையை சிலுப்பிக்கொண்டே மீண்டும் அவனுக்கு அழைத்து, தன் அறைக்கு வர சொன்னாள் சாதனா..

இந்த முறை வந்து நின்றவன் முகம் வெளிப்படையாகவே எரிச்சலை காட்டியது..

ஏற்கனவே பசி வேறு.. இதில் அவள் வேறு படுத்தினால் அவன் பொறுமை போகாமல் என்ன செய்யும்!

அவளும் அது புரிந்து தானே அழைத்திருந்தாள்..

"என்ன மேன் புட் வாங்கிட்டு வந்திருக்க? கொஞ்சம் கூட உப்பே இல்லை" என அவள் குற்றப்பத்திரிகை வாசிக்க, அவளை ஏகத்துக்கும் முறைத்தான் கார்த்திக்..

"இதை அந்த ஹோட்டல் செப்பிடம் தான் கேட்கணும் மேடம்.. நீங்க தானே அங்க தான் வேண்டும் என்று குறிப்பா வேறு சொன்னீங்க.." அடக்கம் போல் அவன் கூறிவைக்க,

"ஓ அத்தனை தூரம் நான் அனுப்பிய கோபத்தில் வேண்டுமென்றே உப்பை கம்மியா போட சொல்லி வாங்கி வந்தாயா?" என்றாள் அவளும் விடாமல்..

"எனக்கு வேலை இருக்கு மேடம்.."

உன்னிடம் வெட்டி பேச்சு பேச நேரமில்லை என அவன் குறிப்புடன் உணர்த்த, "அதெல்லாம் எனக்கு தெரியாது.. நல்லா இல்லாத சாப்பாடு வாங்கி வந்ததுக்கு உனக்கு பனிஷ்மென்ட் இருக்கு" என்ற அழுத்தமான அவள் வார்த்தையில்,

'போச்சு அடுத்து என்ன வேலை வைக்க போகிறாளோ!' என்று அவன் திகைத்து விழிக்க, அவளோ தனக்கு முன் இருந்த உணவை அதில் இருந்த ஒரு பேப்பர் தட்டில் பாதிக்கு மேல் எடுத்துவைத்தவள்,

"இதை நீயும் சாப்பிடு.. அதான் பனிஷ்மென்ட்.." என குரலில் எந்த உணர்வும் காட்டாமல் கூறிவிட்டு தான் உண்ண தொடங்கி விட, அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் கார்த்திக்..

நிச்சயம் அவன் இதை அவளிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை..

அவள் இருக்கும் கோபத்திற்கு இரண்டு அறை விட்டிருந்தால் கூட அவன் ஆச்சர்யப்பட்டிருக்க மாட்டான்..

ஆனால் இந்த அக்கறை.. இது அவளுக்கு நல்லதில்லையே..!

அவன் தன் யோசனையிலேயே நின்று விட, "சாப்பிடு மேன்" என்றாள் சாதனா சத்தமாக..

அவள் குரலில் ஒருவாறு நினைவிற்கு மீண்டவன், "இல்லை.. எனக்கு வேண்டாம்.. வேலை இருக்கு" என மிகவும் முயன்று சாதா குரலில் கூறிவிட்டு திரும்ப,

"ஹலோ நான் ஒன்னும் உனக்கு விருந்து வைக்கவில்லை.. இது பனிஷ்மென்ட்.. பண்ணி தான் ஆகணும்.." என்றாள் சாதனா அழுத்தமாக..

அவள் வெளியில் என்ன சொல்லி கொண்டால் என்ன, அவள் மனம் அவன் அறியாததா!

ஆனால் இன்னமும் அவன் மீதான அவள் உணர்வுகள் மிச்சமிருப்பது அவனுக்கு பெரும் ஆச்சர்யம் தான்!

அதற்கு மேல் வாக்குவாதம் செய்யாமல் அமைதியாக அமர்ந்து உண்டவனுக்கு, அவள் கூறுவதெல்லாம் பொய் தான் என உணவில் இருந்த சரியான சுவை உணர்த்தியது..

அவன் வேகமாக உண்டு முடித்து விட்டு எழுந்துவிட, அவளோ பொறுமையாக இன்னும் கொரித்துக்கொண்டிருந்தாள்..

சாதனா எப்போதுமே உணவை மெதுவாக தான் சாப்பிடுவது.. அது அவனுக்கு நன்றாகவே தெரியுமே.. அதற்காக அவள் வாங்கிய திட்டும்..

மனதில் தோன்றிய எண்ணத்தையும், அதன் விளைவாய் தோன்றிய வலியையும் முயன்று விழுங்கி கொண்டவன், "தேங்க்ஸ்" என மனம் கேட்காமல் கூறிவிட்டே சென்றான்..

அவன் கூற்றில் அவன் தன்னை கண்டுகொண்டதை புரிந்துகொண்டவளுக்கு, தன் மீதே கோபம் தான் வந்தது.

என்ன செய்ய அவள் மனம் கேட்டுத்தொலைய மாட்டேன் என்கிறதே!

அதற்கு பின் அன்று நள்ளிரவு வரை இருந்து வேலையை முடித்தபோது கூட கார்த்திக்கிற்கு அலுப்பே தெரியவில்லை..

'என் செல்ல ராட்சசி.. சாரி டி.. நீ என் மேல் கோபத்தில் இருக்கிறாய்.. மறந்துவிடாதே டா..' என தன்னவளிடம் மனதளவில் பேசிக்கொண்டே வேலையை முடித்தான் கார்த்திக்..

தொடரும்..

 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 6:

அன்று..

சாதனாவை எப்படி பார்ப்பது என்ற யோசனையுடனேயே இருந்த கௌஷிக்கிற்கு அவள் கோவிலுக்கு வந்தது நினைவு வந்தது.

அந்த எண்ணம் வந்த அடுத்த நொடி கோவில் நோக்கி கிளம்பி விட்டான்..

அங்கிருந்த பூசாரியிடம், "சாதனா எப்போது வருவாள்?" என்று அவன் கேட்க, அவரோ அவனை ஒருமாதிரி பார்த்து,

"நீ ஏன் தம்பி அதை கேட்கிறாய்?" என்றார் சந்தேகத்துடன்..

"அச்சோ தப்பா நினைக்காதீங்க.. அவளை எனக்கு முன்பே தெரியும்.. நம்பர் எல்லாம் வாங்கிகொள்ளவில்லை.. அதான் கோவிலில் பார்த்து பேசலாம் என்று கேட்டேன்.. நிச்சயம் எந்த தவறான எண்ணத்திலும் கேட்கவில்லை.." என அவன் அழுத்தமாக கூற, அவரும் அவன் கூறியதை நம்பினார்..

எதற்காகவோ அத்தனை சிரத்தை எடுத்து வேண்டுதல் செய்பவன் தவறானவனாக இருக்க வாய்ப்பில்லை என்றதோடு, அவனை பார்த்தாலும் பெண்களிடம் வம்புசெய்பவன் போல் அவருக்கு தோன்றவில்லை..

"வெள்ளிக்கிழமை சில சமயம் வருவா பா.. வாராவாரம் வருவாள் என்று சொல்லிவிட முடியாது.." என அவர் முடித்துக்கொள்ள,

"தேங்க்ஸ்" என்றுவிட்டு கிளம்பிவிட்டான் கௌஷிக்..

அடுத்து வந்த வெள்ளி அன்று காலையிலேயே கோவிலுக்கு வந்தவன், ஒரு பக்கம் வாசல் தெரிவது போல் நின்றுகொண்டு சாதனா வருகிறாளா என பார்த்துக்கொண்டிருக்க, அவன் நல்ல நேரமோ என்னவோ அவளும் அன்று கோவிலுக்கு வந்தாள்..

வந்தவள் நேராக சென்று சாமியை கும்பிட்டுவிட்டு தன் வழக்கம் போல் பூசாரியிடம் சில நிமிடங்கள் சிரித்து பேசிவிட்டு கிளம்ப போக, அவள் மீண்டும் வந்த போது அவளை வழி மறித்து நின்றான் கௌஷிக்..

அத்தனை நேரம் சாதாரணமாக வந்து கொண்டிருந்தவள் அவனை பார்த்ததும் முகம் இறுக அவனை முறைத்துவிட்டு கடந்து போக முயற்சிக்க, மீண்டும் அவளை மறைத்து நின்றவன், "ப்ளீஸ் ப்ளீஸ் சாதனா மா, ஒரு இரண்டே இரண்டு நிமிடம் பேசணும்.. பொது இடம், கொஞ்சம் தள்ளி நின்னு பேசுவோம்.. ப்ளீஸ்.." முகம் சுருங்க பல ப்ளீஸ் போட்டு அவன் கேட்டதிலேயே அவள் கோபம் முற்றிலுமாக குறைந்து விட்டது..

அது தான் அவள் குணம்.

கோபத்தை எல்லாம் சுத்தமாக பிடித்து வைத்துக்கொள்ள தெரியாத பெண்..

ஆனால் ஏனோ அவனிடம் மட்டும் உடனடியாக தன் மனமாற்றத்தை காண்பித்து கொள்ள அவளுக்கு இஷ்டமில்லை.. இறுக்கமான முகத்துடனே அவனை தொடர்ந்தாள்..

ஒரு தூண் அருகில் வந்து நின்றதும் முதலில் கௌஷிக் தான் பேசினான்..

"ரியலி சாரி மா.. அன்று வேறு ஒரு டென்ஷனில் இருந்தேன்.. அதான் உன்னிடம் அப்படி பேசிட்டேன்.. ப்ச் தப்பு தான்.. சாரி ப்ளீஸ்.." மனதார மன்னிப்பு கேட்டவனுக்கு ஏனோ அவள் மன்னித்துவிட வேண்டும் என மனம் முழுவதும் அடித்துக்கொண்டது..

ஆனால் அத்தனை சுலபத்தில் மன்னித்துவிட்டால் அவள் சாதனா இல்லையே!

"பரவாயில்லை உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்! உங்களை தேடி வந்தது என் தவறு தான்.. இனி அந்த முட்டாள்தனத்தை செய்ய மாட்டேன்.. அண்ட் அன்று என்னை காப்பாற்றியதற்கு தேங்க்ஸ்.. பை.." பேசிவிட்டு அவள் பாட்டிற்கு நகர போக,

"ஹேய் சனா நில்லு" என அவள் கையை பிடித்து நிறுத்தினான் கௌஷிக்..

அவன் பிடித்திருந்த கையை அவள் அழுத்தமாக பார்க்க, அவள் பார்வை உணர்ந்து தன் கையை விலக்கி கொண்டவன், "அதான் சாரி சொல்கிறேனே சனா மா.. ஏன் இப்படி பேசுகிறாய்? கேட்கவே கஷ்டமா இருக்கு.. எப்போதும் போல் பேசு ப்ளீஸ்.. இனி உன்னிடம் கோபமே பட மாட்டேன்.. ஐ பிராமிஸ்.."

இந்த சத்தியத்தை என்றுமே தன்னால் காப்பாற்ற முடியாது என அவனுக்கு அப்போது தெரியவில்லை பாவம்!

அந்த நொடி அவள் தன்னை மன்னித்து முன்பு போல் பேசினால் போதும் என்று தான் அவனுக்கு இருந்தது.

அவளது குறும்புத்தனம் தான் அவனுக்குள் மடிந்துவிட்டிருந்த இதயத்தை லேசாக உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருந்தது.

அந்த அன்பு வேண்டும் என்று அடம் பிடித்த மனதை சமாளிக்க முடியாமல் தான் அவளிடம் கெஞ்சி கொண்டிருந்தான்.

"இல்லை உங்களிடம் அப்படி பேசியது தான் என் தவறு.. இனி என்னிடம் பேசாதீங்க.. குட் பை.." என்றுவிட்டு அவன் மீண்டும் அழைக்க இடம் கொடுக்காமல் வேகமாக நகர்ந்து விட்டாள் சாதனா..

வாசலில் வந்து தன் வண்டியை எடுத்தவள் அதை ஸ்டார்ட் செய்து ஓரக்கண்ணால் உள்ளே பார்க்க, கௌஷிக் தலையை கோதி கொண்டு தூணில் சாய்ந்து நின்றிருப்பது தெரிந்தது..

'பாதி தூணுக்கு வளர்ந்து வைத்திருக்கிறாயே டா.. அத்தனை சுலபமா நான் சமாதானம் ஆகிடுவேனா என்ன..! முதலில் என் மனம் தெளியட்டும், அப்புறம் உன்னிடம் வரேன்' என நினைத்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பி விட்டாள் சாதனா..

அவள் வீட்டிற்குள் நுழைந்த போது அதிசயமாக அந்த நேரத்தில் நந்தகுமார் வீட்டில் இருந்தார்.

"என்ன பா உலக அதிசயம் எல்லாம் நடக்குது! வெளியில் மழை வெள்ளம் இல்லையா என்ன?" என கேட்டுக்கொண்டே அவள் தந்தை அருகில் அமர,

"வாயாடி.. நீ வெளியில் இருந்து தானே வருகிறாய்.. நனைந்தது போல் தெரியவில்லையே..” என தானும் மகளை கிண்டல் செய்தார் நந்தகுமார்..

"என்னை கூட வீட்டில் பார்த்துவிடலாம், உன் அம்மாவை பார்க்க முடியாது போல்" என அவர் சலித்துக்கொள்ள,

"உங்களுக்கு பிசினஸ் போல் அவங்களுக்கு ப்ரண்ட்ஸ் பா.. விடுங்க ஜாலியா இருக்கட்டும்.." என்றவள்,

"ஓகே பா நான் என் ரூமுக்கு போறேன்" என்றுவிட்டு எழுந்துவிட்டாள்..

இது தான் அவர்கள் வீடு.. நந்தகுமார் ஒரு பக்கம் பிசினஸ் பிசினஸ் என்று சுற்ற, சித்ராவும் கிளப் ப்ரண்ட்ஸ் என்று போய் விடுவார்..

சிறியவர்கள் இருவருமே அதை பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை..

அவர்கள் வேலையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்..

அளவுக்கதிகமாக பணம் இருந்த இடத்தில் சொந்தத்திற்கு மதிப்பு தேவைப்படவில்லை போல்..!

சாதனாவிற்கு கௌஷிக்கை பிடித்துபோனதற்கு இது கூட காரணமாக இருக்கலாம்.

முதல் முறை பார்த்த போதே எந்த அலட்சியமும் இல்லாமல் அவன் காட்டிய அதீத அக்கறையும், அவளுக்கான அவன் பதட்டமும் தான் அவள் மனதில் பதிந்து விட்டது போல்..!

தன் அறைக்கு வந்தவள் பால்கனியில் இருந்த கூடை ஊஞ்சலில் வந்து அமர்ந்துகொண்டு கௌஷிக் பற்றி தான் யோசித்து கொண்டிருந்தாள்..

அவன் பேசவில்லை என்றதும் சுருங்கி போய் இருந்த மனம், இன்று அவன் கேட்ட ஒற்றை மன்னிப்பில் அவன் காலில் விழ தயாரானதில் அந்த நொடி தன் மனம் அவனிடம் சரணடைந்துவிட்டது என அவளுக்கு புரிந்து போயிற்று..

மனம் புரிந்த நொடி முகம் தானாக புன்னகை பூசி கொள்ள, 'அட மெக்கானிக் என்னை இப்படி ஆக்கிவிட்டாயே! அந்த அழுக்கு சட்டைக்குள் என்ன மாயம் வைத்திருக்கிறாயோ தெரியவில்லையே!' என்ற நினைவுடன் தனக்குள்ளேயே சிரித்து கொண்டாள்..

என்ன தான் மனம் அவன் பால் சாய்ந்துவிட்டாலும், அவனிடம் உடனடியாக பேச அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

எந்த முடிவும் உடனடியாக எடுக்க விரும்பாததால் சிறிது நேரம் தீவிரமாக யோசித்து ஒரு தீர்வு கண்டாள்..

மீண்டும் ஒரு முறை அவன் வந்து பேசினால் தன் மனதின் காதலை முழுதாக ஏற்றுக்கொள்வது, இல்லை என்றால் அப்படியே மறக்க முயற்சித்துவிட வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்து கொண்டாள் சாதனா..

அது தான் அவள் குணம்.. குறும்புதனம், தன்மானம், பிடிவாதம், எதையும் இலகுவாய் எடுத்துக்கொள்வது என பல உணர்வுகள் கலந்த கலவை அவள்..

அத்தனை சுலபமாக கணித்துவிட முடியாத புதிர் பெண்.. கிடைப்பதற்கரிய வைரம்..

அவள் வாழ்க்கை புயலில் சிக்க தயாராகி கொண்டிருந்தது..

அவள் குணம் அதில் இருந்து அவளை மீட்டெடுக்குமா? இல்லை புயலின் வேகம் தாங்காமல் அமிழ்ந்து போவாளா? விதியின் விளையாட்டை கண்டவர் யார்!

அவள் வாழ்க்கையையே புரட்டி போட்ட விதியின் திருவிளையாடலால் மீண்டும் கௌஷிக் அவளை சந்தித்தான்..

அந்த சந்திப்பின் வினை இருவர் வாழ்வையும் புரட்டிப்போட போவது தெரிந்திருந்தால் குறைந்தது கௌஷிக்கேனும் மீண்டும் அவளை பார்க்கும் முயற்சியை விட்டிருப்பானோ என்னவோ!

எதிர்காலத்தை கணிக்கும் திறன் இல்லாததால் அவர்கள் அடுத்த சந்திப்பும் நடந்தது..

**************

அடுத்த இரண்டு வாரமும் சாதனா கோவிலுக்கு செல்லவில்லை..

கௌஷிக் தான் ஒரேடியாக தவித்து போனான்..

அந்த தவிப்பிற்கு காரணம் அவனுக்கும் புரிந்தது தான்.. ஆனால் ஏற்றுக்கொள்ள தான் மனம் வரவில்லை.

காதல் என்னும் வார்த்தையை யோசிக்க தொடங்கும் போதே, 'இருக்கும் நிலைக்கு இது தேவைதானா!' என அவன் மனமே பெரும் அதட்டலாக போட்டு அவனை அடக்கி விடும்..

ஆனால் குறைந்தது அவள் நட்பாவது அவனுக்கு வேண்டும் போல் இருந்தது..

நட்பு என்னும் வட்டத்திற்குள்ளேயே இரண்டு வார்த்தை பேசினால் போதும் என்று தான் அவன் நினைத்தான்.

அன்று நடு ரோட்டில் நின்றிருந்த ஒருவர் வண்டியை சென்று சரி செய்து கொடுத்துவிட்டு தன் பைக்கில் திரும்பி கொண்டிருந்தவன் கண்களில் சிக்னலில் ஒரு காரை ஓட்டிக்கொண்டு அமர்ந்திருந்த சாதனா விழுந்தாள்.

அவன் அவளை கவனித்த நொடி சிக்னல் வேறு மாறிவிட, அவனால் அவளை அழைக்க முடியாமல் போனது..

காரை கிளப்பி கொண்டு போனவளை வேகமாக தொடர்ந்தவன், முதல் முறை போலவே அவள் ஜன்னல் கதவை தட்ட, அன்று போலவே அவனை பார்த்ததும் முதல் வேலையாக வண்டி வேகத்தை குறைத்து பிரேக்கை தான் சாதனா சோதித்தாள்.

அது ஒழுங்காக வேலை செய்யவும் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அவள் திரும்ப, அவள் செயலில் உதட்டில் உறைந்துவிட்ட புன்னகையுடன் அவளை பார்த்தவன், முகத்தை சுருக்கி ஒரு கையால் காதை பிடித்து கொண்டு 'சாரி’ என வாயசைத்தான்..

வண்டியை ஓட்டிக்கொண்டே அவன் அவளை பார்த்துக்கொண்டிருந்ததில் அவளுக்கு மனம் பதறிவிட, வேகமாக கண்ணாடியை இறக்கியவள், "ஓரமா நிறுத்திட்டு வா" என்றுவிட்டு அங்கிருந்த ஒரு மரத்தடியில் தானும் காரை நிறுத்திவிட்டாள்..

அவளை தாண்டி சென்று வண்டியை நிறுத்திவிட்டு அவளிடம் வந்தவன், "என்ன மா நடு ரோட்டில் சர்க்கஸ் செய்தால் தான் பேசுவாயா?" என உதடு துடிக்க கேட்டுக்கொண்டே வர,

"நான் எங்கே உன்னிடம் பேசினேன்?" என முறுக்கிக்கொண்டாள் சாதனா..

"அடப்பாவி.. சனா மா நான் பாவம் டா.. மீண்டும் ஒரு முறை வண்டி ஓட்டி எல்லாம் சாரி கேட்க முடியாது.. ப்ளீஸ் விட்டுவிடேன்" என அவன் சிரித்துக்கொண்டே சாரி கேட்ட அழகில் அவள் மனம் மயங்கி தான் போனது.

இவனிடம் அப்படி என்ன இருக்கிறது என தன் மனம் அவனை பார்த்ததுமே மயங்குகிறது என்று யோசித்துக்கொண்டே அவனை பார்த்தவளுக்கு காரணம் புரிந்தது..

சாதா மெக்கானிக் என்று அவள் சினிமாக்களில் பார்த்த அடையாளங்களுக்கு வெகுவாய் மாறுபட்டிருந்தான் கௌஷிக்..

வேலை செய்யும் போது மட்டும் தான் கொஞ்சம் கறை படிந்த சட்டை எல்லாம் அணிகிறான்..

மற்றபடி வெளியே செல்லும் நேரங்களில் சாதாரண பேண்ட் சட்டையாக இருந்தாலும், வெகு நேர்த்தியுடன் இருக்கும் அவன் உடை..

பனைமரம் போல் வளர்ந்திருந்தவன் உழைப்பாலோ என்னவோ, வெகுவாய் இறுகி போய் இருந்த உடலுடன் முழு கம்பீரத்துடன் இருந்தான்.

"நீ பேசாமல் மாடலிங் செய்ய போகலாம் டா மெக்கானிக்" என்று அவள் கூற, அவள் கூற்றை ஒன்றும் தவறாக எடுத்துக்கொள்ளாமல் சிரிப்புடன் அவளை பார்த்தவன்,

"போகலாம் தான்.. யாரும் கூப்பிட காணுமே.. ஒரு விளம்பரத்திற்கு ஒரு கோடி கொடுத்தால் கூட போதும், அதற்கு மேல் நான் பேராசை எல்லாம் பட மாட்டேன் மா.." கையை விரித்து அவன் கூற,

"நீ என்னை விட லொள்ளு பிடிச்சவனா இருக்க டா.. அதை உணர்ந்து தான் எனக்கு உன்னை பிடித்துவிட்டது போல்.." பட்டென சாதனா கூறிவிட, அவள் எந்த அர்த்தத்தில் சொல்கிறாள் என்று புரியாமல் விழித்தான் கௌஷிக்..

அவன் விழித்ததை பார்த்து தனக்குள் சிரித்து கொண்டவள், "ரொம்ப யோசிக்காதே மெக்கானிக்.. நீ ஏதாவது இருக்க கூடாது என்று பயந்தால், அதே அர்த்தத்தில் தான் நான் சொல்கிறேன்.. எஸ் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு டா.." என தெளிவாகவே சாதனா கூற, கௌஷிக்கிற்கோ சுத்தமாக வார்த்தைகளே வரவில்லை..

காதலிக்கும் நிலையிலா அவன் இருக்கிறான்!

அது போல் யோசிக்க கூடாது என அவன் திணறி கொண்டிருக்க, அவளோ எத்தனை சுலபமாக கூறிவிட்டாள்.

அவளை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு நின்றவன் கண்கள் அவள் காரின் மீது படிய, அப்போது தான் அவனது முதல் கேள்விக்கே இன்னும் அவளிடம் இருந்து விடை கிடைக்கவில்லை என்றே அவனுக்கு நினைவு வந்தது..

"இதோ பார் சனா, எனக்கு உன் பெயர் சாதனா என்பதை தவிர உன்னை பற்றி எதுவுமே தெரியாது.. நான் எப்படி காதல் பற்றி யோசிப்பது..?" அவளை கூர்மையாக பார்த்து கொண்டே அவன் கேள்வியுடன் நிறுத்த,

'ம்ம் நியாயமான கேள்வி தான்' என நினைத்துக்கொண்டாள் சாதனா..

ஆனால் பதில் கூற தான் அவளுக்கு யோசனையாக இருந்தது.

அவள் செல்வநிலை தெரிந்து அதை வைத்து அவன் காதல் இல்லை என்று கூறினால், நிச்சயம் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அந்த பணத்திற்கு இது வரை அவள் வாழ்வில் அவளே பெரிதாக மதிப்பளித்திராத போது, அது அவள் வாழ்க்கையை முடிவு செய்வதை அவள் சுத்தமாக விரும்பவில்லை..

"என் குடும்பம் பற்றி எல்லாம் தெரிந்து ஆராய்ந்து வந்தால் அது காதல் இல்லை மெக்கானிக்.. உனக்கு தெரிந்த சனா மேல் காதல் இருக்கிறதா என்று மட்டும் யோசி.. அதற்கு நீ பதில் கூறிய பின் நானே என்னை பற்றி எல்லாம் சொல்கிறேன்.." என்றவள் பேசிக்கொண்டே தன் போனில் இருந்து அவன் நம்பருக்கு கால் செய்தாள்..

"இனி என் நம்பர் உன்னிடம் இருக்கலாம், தப்பில்லை.. நோட் பண்ணிக்கோ.. காதல் வந்தால் சொல்லி அனுப்பு மன்னவா, எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுவேன்.." நாடக பாணியில் கூறி கண்ணடித்தவள்,

"பை மெக்கானிக்" என்றுவிட்டு சென்றுவிட, அவன் தான் எந்த பதிலும் கூறாமல் குழப்பத்துடனே நின்றிருந்தான்..

இப்போது அவன் மனம் காதலை பற்றி எல்லாம் யோசிக்கவில்லை..

அவன் மனம் முழுவதும் அவள் ஏன் அந்த காரில் வந்தாள் என்ற எண்ணத்திலேயே தான் உழன்று கொண்டிருந்தது..

இடையில் இருந்த டென்ஷனில் அதை பற்றி மறந்தே விட்டிருந்தவனுக்கு, இப்போது மீண்டும் அனைத்தும் நினைவு வந்து விட மனதில் இருந்த இளக்கம் எல்லாம் மறைந்து அவன் முகம் பெரும் கோபத்துடன் இறுகிவிட்டது..

சாதனா சென்ற பின்பும் சிறிது நேரம் தன் யோசனையுடன் அங்கு நின்றிருந்த கௌஷிக், ஒரு முடிவுடன் அங்கிருந்து நகர்ந்தான்..

அவன் நேராக சென்றது எஸ்.பி இண்டஸ்ட்ரீஸ் நோக்கி தான்..

செல்லும் வரை யோசித்துக்கொண்டே சென்றவன், அங்கிருந்த வாட்ச்மேனிடம் இருந்தே விஷயத்தை கரந்தான்.

முதலில் சாதாரணமாக அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே வந்தவன், மெதுவாக தனக்கு தேவையானதை கேட்டான்...

"ஒரு முறை இந்த ஆபிசில் கார் ரிப்பேர் பண்ண என் ப்ரண்ட் வந்திருந்தான் அண்ணா.. அன்னிக்கு பாதி ரிப்பேர் பண்ணின காரை ஒரு பொண்ணு எடுத்துட்டு போயிருச்சாமே ண்ணா.. நல்லவேளையா ஒன்னும் பிரச்சனை ஆகவில்லையாம்.. அந்த பொண்ணு இந்த ஆபிசில் இருக்கிறவங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்ட பெண்ணா இருக்குமோ?" சாதாரணம் போல் கௌஷிக் கேட்க, அவரும் பதில் கூறி விட்டார்..

முதல் முறை வந்த போது அவன் கொலைவெறியுடன் வந்திருந்ததால், தன் முகத்தை அதிகம் யாருக்கும் காட்டாமல் இருந்தான்.. அதுதான் இப்போது வசதியா போயிற்று..

"சாதனா பிள்ளையை கேட்கறீங்களா தம்பி, அது இந்த கம்பெனி முதலாளி பா.. பிரகாஷ் தம்பியோட தங்கச்சி சாதனா மா.." என அவர் பாட்டிற்கு கூற, கௌஷிக்கிற்கோ ஒரு நொடி உள்ளுக்குள் சர்வமும் ஆட்டம் கண்டுவிட்டது..

"நா.. நான் கேள்விப்பட்டதே இல்லையே.." மிகவும் முயன்று வரவழைக்கப்பட்ட சாதாரண குரலில் கௌஷிக் கேட்க,

"அந்த பொண்ணு மூணு வருசமா படிக்க வெளிநாடு போய் இருந்துச்சு பா.. இப்போ சமீபமா தான் வந்தது.." என்ற அவர் கூற்றில் அவனுக்கு பல விஷயங்கள் புரிந்தது..

அவள் இங்கு இல்லாமல் இருந்ததால் தான் அவளை பற்றி அவன் கேள்விப்படாமல் இருந்து இருக்கிறான்..

அதற்கு மேல் மனம் முழுவதும் வெகுவாய் இறுகி விட, வெகு சிரமப்பட்டு அவரிடம் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு நகர்ந்தான் கௌஷிக்..

வண்டியை எடுத்துக்கொண்டு வந்தவன் வீட்டிற்கு வந்ததும், "என்ன கண்ணா இந்த நேரத்திற்கு வீட்டிற்க்கு வந்திருக்கிறாய்?" என்று கேட்ட அன்னைக்கு எந்த பதிலும் கூறாமல் தன் அறைக்குள் சென்று வேகமாக கதைவடைத்து கொண்டான்..

இறுகி விட்ட முகத்துடனும், கோபத்தில் செக்கசெவேல் என சிவந்திருந்த கண்களுடனும் கூண்டு புலியாய் அந்த சிறிய அறையை அளந்து கொண்டிருந்தவன் மனம் முழுவதும் அந்த நிமிடம் மண்டி கிடந்தது வெறி வெறி வெறி மட்டும் தான்..

அதுவும் சாதா வெறி அல்ல, கொலைவெறி..

தன் குடும்பத்தை தெருவில் நிறுத்தியவர்கள் குடும்பத்தை எப்படியேனும் பழி தீர்த்துவிட வேண்டும் என்ற வெறி..

அவனை ஒழிக்க நினைத்த ஒருவனுக்கு அழிவின் வலியை காட்டாவிட்டால் அவன் ஆண் மகன் என அந்த குடும்பத்தில் இருந்து என்ன பிரயோஜனம்..

அந்த நொடி அவன் முகத்தில் அத்தனை ரௌத்திரம் தாண்டவமாடி கொண்டிருந்தது.

இது வரை அவன் யாரிடமும் காட்டாத முகம் அது..

அவன் எத்தனை கோபத்தையும் மன பாரத்தையும் சுமந்து கொண்டு சுற்றுகிறான் என அறிந்தது என்னவோ அந்த நாலு சுவர் மட்டும் தான்..

அந்த நொடி பெண்ணவள் மீது ஏற்பட்டிருந்த காதலை கூட அவன் மறந்துவிட்டிருந்தான்..

பழி வெறி முன் காதல் மனம் சுலபமாக அடிபட்டு போனது..

வேட்டையாட தயாராக நின்றவனுக்கு எதிரில் இருந்தது அழகிய மான் என்று புரியாமல் போனதோ!

மனம் முழுவதையும் கோபம் மறைத்துவிட, பல மணி நேரம் நடந்து ஓய்ந்தவன், இறுதியாக இறுகிவிட்ட முகத்துடன் மொத்தமாக சாதனாவை கொன்றுவிடும் எண்ணத்திற்கு வந்திருந்தான்..

தொடரும்..

 
Status
Not open for further replies.
Top