அம்மு அழகன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you so muchவெல்கம் sis மிகவும் அருமையான பதிவு அருந்ததியை பார்த்து துரியோதனன் எப்படியெல்லாம் பேசுறான் அருந்ததி சொல்லிய இந்த அருந்ததியை தவிர துரியோதனை யாராலும் நெருங்கமுடியாது இது உண்மையில் சரியான வார்த்தை
அதற்கு துரியோதனன் என்கிட்ட படப்போகும் பாட்டுக்கு அந்த கடவுள் கூட உனக்கு துணைக்கு வரமாட்டார் அதே மாதிரி நீ கஷ்டத்தில் மாட்டி இருக்கும்போது நான் கண்டிப்பா உனக்கு உதவிக்கு வரமாட்டேன் என் கண்களை பறித்த உனக்கு தண்டனை இரண்டு மடங்காக திருப்பிகொடுப்பேன் என்று சொல்ல அருந்ததி புன்னகையோடு துரியோதனனுக்கு சாப்பாடு பரிமாறுகிறாள்
துரியோதனனுக்கு அருந்ததி கொடுத்த பதிலடி கரெக்ட் தான் ஆனால் அதில் பூஜாவை அருந்ததி அப்பாவி பொண்ணுன்னு சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது அவள் எவ்ளோ பெரிய தில்லாலங்கடி என்று உனக்கு தெரியவில்லை துரியோதனனுக்கு அருந்ததி நீங்கள் செய்த கொலைக்கு உங்களை போலீசில் பிடித்துக்கொடுக்க நினைத்தேன் ஆனால் நீங்கள் செய்த குற்றத்தை நினைத்து வருத்தப்படமாடீங்க அது என்னவோ உண்மையான வாஸ்தவமான பேச்சு
நீங்க அநியாயமாய் ஒரு பெண்ணை கொலைபண்ணியதால் அவளுடைய பெற்றோர் மகளின்றி தவியாய் தவிக்கிறார்கள் அது உங்களுக்கு புரியவில்லை இந்த உலகத்தில் மனிதன் எந்த உறுப்பு போனாலும் பிழைத்துவிடுவான் ஆனால் கண்கள் போனால் எந்த ஒரு பொருளையும் பார்க்கமுடியாது ஏன் என்னைக்கூட நீங்க பார்க்கமுடியாது அதனால் தான் உங்கள் கண்களை உங்ககிட்ட இருந்து பறித்துவிட்டேன் அதற்காக நான் வருத்தப்படமாட்டேன் மண்டபத்தில் நீங்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணி இருக்கலாம் கொலைகூட பண்ணி இருப்பீங்க என்னையும் என்னவேண்டுமானாலும் செய்து இருப்பீர்கள் நான் உங்களை கல்யாணம் பண்ணியதே உங்களை உங்கள் தப்பை திருத்தத்தான் நீங்கள் தண்டனை அனுபவிக்கும் போது என்னால் அதை பார்க்கமுடியாமல் போகணும் அதை தாங்கிக்கொள்கிற சக்தி அவளுக்கு இல்லை அதைத்தான் நாசுக்காக சொல்லிவிட்டாள் ஆனால் அதுதான் உண்மையாக போகுதா ரெண்டு பேரும் பயங்கரமான இக்கட்டில் மாட்டிகிட்டு விழிக்கப்போகிறார்கள் துரியோதனன் நல்லவன் தான் ஒத்துக்கொள்கிறேன் எதற்காக இந்த கெட்டவன் வேடம் அதுவும் அருந்ததிகிட்ட ஒன்னும் புரியவில்லை
பூஜாவை பற்றிய உண்மை தெரிந்தால் அதை தாங்கக்கூடிய சக்தி அருந்ததிக்கு இருக்கா ரொம்ப யோகியமானவள் ரொம்ப நல்லவள் அப்படி இப்படின்னு சான்றிதழ் கொடுக்கிறாய் அதற்கெல்லாம் அவளுக்கு தகுதி இல்லை நீ வீணாய் துரியோதனின் கோபத்தை கிளறிக்கொண்டு இருக்க இவ்ளோ பேசியும் துரியோதனன் மறுவார்த்தை பேசாமல் புன்னகைத்துவிட்டு அவளை அப்படியே நீச்சல்குளத்திற்கு போய் அப்படியே தள்ளிவிட்டுட்டான் டேய் ஏன்டா இவ்ளோ நேரம் அவள் அட்வைஸை பொழிந்ததுக்கு தண்டனை கொடுத்துவிட்டான் ஏன்டா இப்படி பழிவெறி பிடித்து அலையுற பாவம் அருந்ததி