அம்மு அழகன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow sema reviewமிகவும் அருமையான பதிவு sis அருந்ததி பகல் கனவு காண்கிறாளா துரியோதனன் நீதான் பகல் கனவு கண்டுட்டு இருக்க அவள் சொல்வதைத்தான் கண்டிப்பா செய்து காட்டுவாள் ஆனால் நீ மனிதனாய் மாறும்போது அருந்ததி உன்கூட இருக்கமாட்டாள் அதாவது நினைவுகளை இழந்து முற்றிலும் கோமா நிலைக்கு போய்விடுவாள் அப்போ நீ கத்தி கதறினாலும் வரமாட்டாள் அவள் உன்னை நல்லா காக்கவச்சுட்டு தான் உன்கூட சேர்வா உன்னோட குழந்தைகளை பார்க்காமல் உன்னையும் விட்டுட்டு போய்விடுவாளா வாய்பே இல்லை ராசா நீ இப்போ அவளை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்தி அழவைக்கிறாயோ அதைவிட உனக்கு இரண்டு மடங்கு தண்டனை காத்துட்டு இருக்கு நீயும் அழுவே அருந்ததியை விட இரண்டு மடங்காய்
அருந்ததியின் தாத்தா தான் வந்துட்டாங்கனு நினைத்து துரியோதனன் அனுசரணையாக பேசியதில் ராஜாராம் கிழவனுக்கு அப்படியே உச்சி குளிர்ந்துபோச்சு இந்த ராஜாராம் கிழவன் துரியோதனன் அவ்ளோ சொல்லியும் வீட்டுக்குள் வந்துட்டான் அருந்ததியின் தாத்தா பாட்டி ரெண்டு பேரும் இறந்தது துரியோதனனுக்கு தெரியாது வந்ததும் இல்லாமல் அருந்ததியை பற்றி எவ்ளோ தரக்குறைவாக பேசுறான் வார்த்தைக்கு வார்த்தை வேலைக்காரியாக கூட இருக்க தகுதி இல்லாதவள் என்று எப்படி பேசுறான் அருந்ததிக்கு தெரிந்துவிட்டது இந்த கிழட்டுகள் தான் துரியோதனை இவ்ளோ கொடூரமா வளர்த்து இருக்காங்கனு இந்த செத்துப்போற வயசில் கிழவனுக்கு இன்னொரு கல்யாணம் கேக்குதா கிழட்டு முண்டம் உன் பொண்டாட்டி சிந்து உனக்கு சொத்தில் பங்கு இல்லைன்னு தெரிந்ததும் உஷாரா அவளோட முதல் புருஷனோட போய்சேர்ந்துட்டாள் பணப்பேய் உனக்கு அனுஷியாவோட அத்தையை கல்யாணம் கட்டணும்னு ஆசையா எவ்ளோ கிரிமினல் நீ கிழவா உன்னோட சந்தோஷம் தான் பெரிது நீ குடிக்கிறதுக்கும் கூத்தடிக்கிறதுக்கும் உனக்கு சொத்து வேணும் அதுக்கு இந்த அனுஷியா வீட்டாரை ஒத்துக்கவச்சு என்ன ஒரு கேவலமான பிளான் இப்போகூட அனுஷியா ரெடியா இருக்காளா துரியோதனனை கல்யாணம் பண்ண உனக்கு பேத்தி முறையாகும் அருந்ததியை உனக்கு கொடுக்கணுமா இந்த வயசில் உனக்கு பொண்ணு கேக்குதா கீழ்த்தரமான கிழவன் அருந்ததி இவ்ளோ நேரம் பேசினதை கூட பொறுத்துகிட்டாள் ஆனால் கிழவன் பேத்தி முறையாகும் தன்னை இப்படி பேசியதில் வெகுண்டெழுந்து விட்டாலே கிழவனுக்கு ஒரு அறை சூப்பர் சூப்பர் அப்பவும் கிழவன் அடங்காமல் அவளின் முடியை பிடித்து இவன் இச்சையை தீர்த்துக்கணும்னு நினைக்கிறான் துரியோதனன் விடுவானா கிழவனுக்கு தோட்டாவை பரிசாக கொடுத்துவிட்டான் சூப்பர் சூப்பர் பழி வாங்கணும் அருந்ததியை கொடுமை படுத்தனும் இதெல்லாம் துரியோதனனை தவிர வேறு யாரும் செய்ய கூடாது துரியோதனனே சொல்லிவிட்டான் அவனோட பெற்றோரின் ரத்தம் ஓடுவதால் அவன் உடம்பிலும் ஓடுவதால் பொண்ணுங்ககிட்ட இவ்ளோ கீழ்த்தரமா செயலை செய்ததில்லை அது ஒன்னு தான் உன்கிட்ட ஓகேவான விஷயம் இந்த விஷயத்தில் உன் பெற்றோரின் கெளரவத்தை காப்பாற்றிவிட்டான் அருந்ததியை கண்டிப்பா துரியோதனன் பழிவாங்கதான் கல்யாணம் பண்ணிருக்கிறான் அதில் துளிகூட சந்தேகம் இல்லை அருந்ததிக்கு தன் பாவா தனக்காக பேசியதில் உள்ளம் குளிர்ந்துவிட்டது அவன் என் இப்படி மிருகத்தனமான நடந்துக்கிறான் என்று தெள்ளத்தெளிவாக புரிந்துவிட்டது அவள் துரியோதனனின் பார்வை பறிபோனதுக்கு தான் காரணமானதை நினைத்து அவளுக்கு மிகவும் வருத்தம் எப்படியாவாது தன் பாவாவை தன் வழிக்கு கொண்டுவரணும்னு தீவிர முயற்சியில் இறங்கப்போகிறாள் வெற்றி கிட்டியது ஆனால் அதை பார்க்கத்தான் அவள் நினைவில்லாமல் இருக்கப்போகிறாள்
இனிமே கிழவனை வீட்டு பக்கம் வரவிடமாட்டான் துரியோதனன் அருந்ததி தன் பாவாகிட்ட தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறாள் ஆனால் துரியோதனன் அவளை அடித்துவிட்டு அவன் பாட்டுக்கு போனால் அருந்ததி அவனுக்கு லிப்லாக் பண்ணிட்டாள் சூப்பர் சூப்பர் சும்மா விடுவாளா "நீங்கள் என்னை உடம்பால் காயப்படுத்தினால் நான் உங்களை உணர்வுகளால் காயப்படுத்துவேன்" இது அருமையான பாயிண்ட் அருந்ததி அவன் மேலும் எதுவும் சொல்லும் முன் அந்த இடத்தை காலிபண்ணிவிட்டாள்
துரியோதனன் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றுவிட்டான் அவனும் தன் மனைவியின் செயலில் தன்னை மறந்து ரசிக்கிறான் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் அரக்கனா மாறிடுவான்
இங்கே பூஜாவின் பெற்றோர் தங்கள் மகளை கொலை செய்து இருக்காங்கனு கம்பளைண்ட் கொடுத்து இருக்காங்க துரியோதனன் மேல தான் கம்பளைண்ட் கொடுத்து இருக்காங்கன்னு நினைக்கிறேன் உனக்கே தெரியாமல் உனக்கு பின்னால் சதிவலை பின்னப்பட்டுவிட்டது இதில் இருந்து உன்னை அருந்ததியால் மட்டுமே காப்பாற்ற முடியும் இனி என்ன நடக்கபோகுது ரொம்ப ஆர்வமாய் இருக்கு அடுத்த பதிவை எப்போ படிப்போம்னு இருக்கு கதை ரொம்ப ரொம்பவே சுவாரஸ்யமாக போகுது sis