All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அமேசான் கதை லிங் மற்றும் கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... தோழமைகளே 👋👋.

என் முதல் கதை அமேசானில் உள்ளது. கதையை படித்து அதன் கருத்தை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...😍😍.

அமேசான் கதை லிங்.

1) என்னவள் அவள் தானோ!!!


மேலும் வரும் கதை லிங் இங்கே வரிசைப்படி பதிவிடப்படும் 😍😍.

( இப்போது ஒரு கதை மட்டுமே உள்ளது😍. இன்னும் போடுவேன் என்ற நம்பிக்கை தான் 😂😂😉😉)

நன்றி தோழமைகளே..😍😍
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... தோழமைகளே 👋👋

2. நெருப்பின் நிழல் அவன்! (Antihero story)

Sm site la nadantha Antihero competition story.

கதை இப்போது அமேசானில் உள்ளது. படிக்காதவர்கள் படித்து கொள்ளுங்கள் நட்புகளே...


Teaser

நெருப்பின் நிழல் அவன்!!



நண்பன் செய்த துரோகத்தில் தொடங்கும் கதை

தனிமனித பகையினால் வீழ்த்தப்பட்ட குடும்பம். அதில் தன் இளமையை தொலைத்த ஹீரோ, தன் குடும்பத்தை சிதைத்தவனை பலி வாங்கி இழந்த உறவை மீட்க நினைத்து ஊட்டி செல்வான்

தொலைத்த உறவை தேடி வந்தவன் தன் மனதை ஊட்டியில் தொலைத்து செல்வான்
##
கள்ளம் அறியா பெண்ணவள் தன் சிறுபிள்ளை செயலில் ஹீரோவின் பலி உணர்விற்கு தூபம் போட்டு அவன் வஞ்சனை வலையில் சிக்கி கொள்வாள். பலி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது போல் பெற்றவர் செய்த தவறுக்கு பெண்ணவள் துன்ப படுவாள்.

காரணம் புரியாமல் காயம் கொண்டு பறிதவிப்பவள் அக்காவின் திருமணத்திற்கு பிறகு தனிமையை உணர்வாள். தனிமையை விட கொடுமை வேறில்லை என காயம் செய்தவனுடனே தன் விழ்க்கையை திருமணத்தில் பினைத்து கொள்வாள்.

பகைக்கும் தனிமைக்கும் இடையே மெல்லிய கோடாய் காதல் வளர, பகைக்கான காரணம் தெரியவரும் போதும் மன்னவனின் மனதை அறிவாள்

தன் தவறு ஏதும் இல்லை என்று உணரும் பெண்ணவள் கோபம் கொள்வாளா? காதல் கொள்வா

ஈஸ்வரனின் காதல் அவன் தவறை உணர வைக்குமா

மங்கை அவனை ஏற்று கொள்வாளா

ஈஸ்வரன் இழந்த மனதை மீட்பானா இல்லை மீண்டும் தொலைப்பானா??

முடிவு என்னவோ!

கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நட்புக்களே 😍❤.


கதை லிங் 👇👇

Neruppin nizhal avan ( நெருப்பின் நிழல் அவன்) (Tamil Edition) Neruppin nizhal avan ( நெருப்பின் நிழல் அவன்) (Tamil Edition) eBook : Srisi, Ms.suba: Amazon.in: Kindle Store

படித்துவிட்டு ரேட்டிங் மற்றும் கருத்தை அங்கேயே பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே..😍😍.

அன்புடன்

சுபா ❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பட்டுஸ் 👋😍.

அடுத்த ஹேப்பி நியூஸோட வந்துட்டேன்.

இதோ நம்ம மித்ர வராகனும், இசை குட்டியும் இப்போது அமேசானில்.

எனது இரண்டாவது கதையான "சுடும் நிலவு நீயே" கதை இப்போது அமேசானில் உள்ளது.

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே 😍😍😍.

கதை லிங் 👇👇


அன்புடன்

சுபா ❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ் 👋😍

எனது நான்காவது கதையான "கால் முளைத்த தென்றல்" கதை இப்போது அமேசானில் உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே 😍😍

கதையின் சில வரிகள் குட்டி டீயாக 😍😍

டீ

தாரணியின் வீரா என்ற அழைப்பில் நண்பர்கள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டவர்கள், “மாமா... மச்சி...” என்று கிண்டலும், சீண்டலுமாக கத்த,
அவர்கள் அழைப்பில் தன் நிலை மீண்டு தலையில் அடித்துக் கொண்ட தாரணி, “மச்சி, நான் அப்பறமா பேசுறேன்... பை” என்றவள் அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்து இருந்தாள்.
விசாகனை பார்த்து மீண்டும், “வீரா...” என அழைத்தாள். விசாகன் திரும்பி பார்க்காமல் செல்லவும், “என்ன இவன் திரும்பவே மாட்டேங்குறான்...” என நினைத்தவளுக்கு அப்போது தான் அவன் பெயர் தெரியாததும், அவன் பெயர் வீரா இல்லை என்பதும் நினைவு வர,
“ஐயோ... இது வேறயா! இப்போ எப்படி கூப்பிட!” என நினைத்தவள், “யோவ் மில்ட்டரி! இங்க பாருயா...” என்றாள் சற்றே கோபமாக.
இப்போது விசாகன் பின்னால் திரும்பி பார்க்க, “ஐ... பாக்குறான்” என்று மகிழ்ந்தவள், “மில்ட்டரி இங்க மேல பாருங்க...” என்று தாரணி கத்த,
‘மில்ட்டரி’ என்ற அழைப்பில் சுற்று முற்று பார்த்துவிட்டு திரும்பி செல்லப்போன விசாகன் மீண்டும் கேட்ட சத்தத்தில் நிமிர்ந்து எதிரில் இருந்த வீட்டு மாடியை பார்க்க, “ஹாய்...” என்று காட்டியபடி கை அசைத்தாள் தாரணி.
அவளை புருவம் சுருக்கி கோபமாக பார்த்த விசாகன் ஒரு அலட்ச்சிய முக பாவத்துடன் திரும்பி செல்ல, “ஹேய் ஸ்டாப் மிஸ்டர்... நான் உங்களோட சண்டை போடனும். வெயிட் நான் சொல்றதை கேட்டுட்டு போ...” என்றாள் சத்தமாக.
இவள் சத்தத்தில் சிலர் விசாகனை திரும்பி பார்க்க, தாரணியை நிமிர்ந்து பார்த்து முறைத்தவன், “ஹேய்... அறிவு இல்லை உனக்கு பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி தான் தெரியாதவங்க கிட்ட பிகேவ் பண்ணுவாயா?” என்று விசாகனன் அதட்டலாக கேட்க,
“ஹலோ மிஸ்டர்! இது ஒன்னும் பப்ளிக் ப்ளேஸ் இல்லை... என் வீடு. என்னை யாரும் கேட்க முடியாது. அப்பறம் நீங்க தான் பப்ளிக் ப்ளேஸ்ல நின்னுட்டு ஒரு பொண்ணை திட்டிட்டு இருக்கிங்க...” என்று நக்கலாக கூற,
கோபத்தில் முகம் சிவக்க அவளை முறைத்த விசாகன், “இடியட்...” என திட்டிவிட்டு நகர்ந்து விட்டான்.
“ஹேய்... மேன் நில்லு. நான் உன்னோட சண்டை போடனும். யோவ் வீரா நில்லுனு சொல்றேன் இல்லை. மிஸ்டர் மில்ட்டரி...” என்று தாரணி கத்த கத்த, விசாகன் திரும்பியும் பார்க்காமல் அவன் ஜாகிங்கை தொடர்ந்தான்.
அவன் நிற்காமல் செல்வதை பார்த்த தாரணி, “எஸ்கேப் ஆக பாக்குறியா! விட மாட்டேன். என்னை ஒன் வீக்கா மெண்டல் டார்ச்சர் பண்ணிட்டு நீ ஹாயா ஜாகிங் வரியா... உனக்கு இருக்கு” என்று திட்டிக் கொண்டே அவசரமாக கீழே இறங்கி வந்தவள், பூங்காவை நோக்கி ஓடினாள்.
பூங்காவின் நுழை வாயில் அடுத்த தெருவில் இருக்க மூச்சை பிடித்து கொண்டு ஓடியவள் பூங்கா உள்ளே செல்ல போக, அவளை நிறுத்திய பூங்காவின் காவலாளி, “என்ட்ரி பாஸ்... குடுங்க...” என்றார்.
“என்ட்ரி பாஸா?! இது வேறையா...” என்று நொந்து கொண்டவள், “சார் நான் வாக் பண்ண வர்லை. தெரிஞ்சவர் ஒருத்தர் உள்ளே இருக்கார் அவரை பார்க்கனும்...” என்று கூற,
“அப்படினா அவர் வெளிய வரும்போது பாருங்க...” என்றவர் அவளை உள்ளே விட மறுத்து விட,
‘சொட்டை தலையா... உனக்கெல்லாம் எவன் வேலை குடுத்தான். நல்லா வந்து சேந்துருக்கான் பாரு...’ என்று அவரையும் மனதில் திட்டியவள் விசாகன் சென்ற பக்கம் பார்த்தாள்.
அவன் பார்வையில் தென்பட்டதும் மீண்டும், “மில்ட்டரி... வீரா...” என்று கத்த, தாரணி கத்தலில் மூளை சூடான விசாகன், கோபத்தில் தன் ஜாகிங்கை பாதியிலேயே நிறுத்திவிட்டு கிளம்பினான்.
தாரணி மேல் இருந்த கோபத்தில் பைக்கை உதைத்து கிளப்பியவன், விருட்டென்று சென்று விட, பின் கேட் வழியாக அவன் வெளியேறுவதை பார்த்த தாரணியும் கடுப்பில் தரையை உதைத்துவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டாள்.

***

ஆயுதங்களை பிடித்து பழகிய விசாகனின் கையால் சாதாரணமாக தொட்டாலே அழுத்தமாக இருக்கும். இதில் அவன் அழுத்தி வேறு பற்ற தாரணியின் கை விண்டு (உடைந்து) விடுவது போல் வலித்தது.
வலியில் முகம் சுளித்த தாரணி, “ஏது பார்த்தது இல்லையா! இது அப்பட்டமான பொய். எனக்கு ஒன்றும் வேண்டுதல் இல்லை தெரியாத உங்களை துறத்தி வந்து சண்டை பிடிக்க...” என்று கூற,
அவள் பேச்சில் புருவம் சுளித்த விசாகன், “உனக்கு என்னை முன்னாடியே தெரியுமா?” என்று கேட்டு அவள் கையை விட,
“ஏன் உங்களுக்கு தெரியாதா?” என்று தாரணி இடக்காக கேட்டாள்.
“இல்லை என்று தான் உங்கிட்ட கேக்குறேன்...” என்று விசாகன் கூறவும், “லாஸ்ட் வீக் தான் நான் உங்களை பார்த்தேன்...” என்று தாரணி சொல்லவுமே, விசாகன் அவள் பேச்சை காதில் வாங்காமல் அவளை கடந்து செல்ல,
“ஹலோ நான் பேசிட்டு இருக்கேன்... நீங்க பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்?!” என்று கோபமாக கேட்டபடி மீண்டும் சென்று தாரணி அவன் வழியை மறைக்க,
, “நீ சொல்ற பொய்யை கேட்க... எனக்கு நேரமும் இல்லை, இஷ்டமும் இல்லை என்று அர்த்தம்” என்று அழுத்தமாக கூற,
“எது பொய்?” என்றாள் தாரணியும் அழுத்தமாக.
“நான் லாஸ்ட் வீக் ஊருலயே இல்லை. அப்பறம் எப்படி உன்னை பார்த்து இருக்க முடியும்? நீ ஏதோ வம்பு பண்ண பிளான் பண்ணி வந்த மாதிரி இருக்கு?” என்று விசாகன் சொல்ல,
“ஆமா நீங்க என் மாமா, மச்சான்! உங்களை தேடி வந்து வம்பு பண்றேன். எனக்கு வேற வேலை இல்லை பாருங்க...” என்று நக்கலாக கூறியவள், “லாஸ்ட் வீக்னா போன சண்டே! அன்றைக்கு தானே நீங்க ஊருக்கு வந்திங்க?” என்று தாரணி கை கட்டி நின்று விசாகனை அழுத்தமாக பார்த்து கேட்க,
“ஆம்...” என்று தலை அசைத்த விசாகன் முகத்தில் குழப்பமே மிஞ்சி நின்றது. அவனுக்கு அன்று அவளை எங்கும் பார்த்த ஞாபகம் இல்லை. சொல்ல போனால் அவன் தாரணிக்கு செய்த உதவியையே முற்றிலும் மறந்து இருந்தான்.
அவனை பொருத்தவரை அது நினைவு வைத்து கொள்ளும் அளவு அவ்வளவு பெரிய செயல் இல்லை. அவனிடம் வந்து என்னை தெரியுமா என்று கேட்டால் அவனும் என்ன செய்வான்.
“அப்போ தான்... நான் காவடி எடுத்து போகும்போது ஹெல்ப் பண்றேன்னு என் புடவையை எடுத்து சொருகி விட்டிங்க...” என்றாள் சொருகியில் அழுத்தம் கொடுத்து.
அவள் சொன்னதும் தான் அவள் நினைவு வர, “அந்த முத்தி பழுத்த மேதாவி நீ தானா?” என்ற விசாகன், “உனக்கு மூளை இருக்கா? இல்லை வெளிய வரும்போது வீட்டுலயே கழட்டி வச்சிட்டு வந்திடுவாயா?” என்றான்.
தான் அவனை திட்ட வந்தால்? வந்த நேரத்தில் இருந்து அவன் தன்னை திட்டி கொண்டிருப்பதில் கொதித்த தாரணி, “ஏன் இல்லைனு சொன்னா கடன் வாங்கி தர போறிங்களா?” என்று கேட்டு மறைமுகமாக அவனுக்கு அறிவு இல்லை என்று கூற, அவளை முறைத்த விசாகன், “கடன் வாங்கி தந்தாலும் நீ எல்லாம் அதை யூஸ் பண்ற ஆள் இல்லை...” என்றான் அவனும் சூடாக.

இந்தியா கதை லிங் 👇👇


வெளிநாட்டு லிங் 👇👇


நன்றி ❤
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ் 👋😍

எனது ஐந்தாவது கதையான "மனம் கொய்தவள் நீதானே!" கதை இப்போது அமேசானில் உள்ளது டியர்ஸ். விருப்பம் உள்ளவர்கள் படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ் 😍

கதையின் சில வரிகள் குட்டி டீயாக 😍👇

டீ

"அம்மா... ஏன்மா! அவனை அந்த வேலை எல்லாம் செய்ய விடுற? இந்த வருச பரிட்சை அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்று உனக்கு தெரியும் தானே! மசாலா அரைக்கனும் என்றால் நீங்க போங்க... இல்லையா, அப்பாவை போக சொல்லுங்க. அவனை போக சொல்லாதிங்க. நான் எப்போ போன் பண்ணாலும், அங்க போயிருக்கான், இங்க போயிருக்கானு தான் சொல்றிங்க" என தனம் அவள் அம்மாவுடன் போனில் சண்டையிட்டு கொண்டிருக்க,
"படிக்கிறேன்..." என்று பேர் பண்ணி கொண்டு புத்தகத்தில் கவிழ்ந்து படுத்து தூங்கிய வைதீகா, தனம் சத்தத்தில் எழுந்து அவள் பேசியதை கேட்டவள், "உனக்கு பெரிய பரிட்சை வருதாடா காட்டு பூனை? இரு... பிள்ளையார் சாமி கூட சேர்ந்து... உனக்கு முட்டை மந்திரிச்சி வச்சி, உன்னை பெயில் ஆக வைக்குறேன்" என்று எட்டு வயதே ஆன வைதீகா கண்ணை உருட்டி சபதம் எடுத்தவள், கையில் இருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு, அடுத்த புத்தகத்தை எடுத்து விரித்து அதில் படுத்து விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்.
‘தூக்கம் முக்கியம் பிகிலு!’
அதே நேரம், 'நான் சொன்னதை செய்பவள்' என்று உணர்த்தினாள் வைதீகா.
சண்முகம் வேலை முடித்து அப்போது தான் வீட்டிற்குள் நுழைய, ஓடி வந்து அவர் முன்னால் நின்றவள், "அப்பா... வாப்பா போவோம்" என்றாள் மொட்டையாக‌ எங்கே என்று கூறாமல்.
மகளை தூக்கிய சண்முகம் சேரில் அமர்ந்து, அவளை மடியில் அமர்த்தி கொண்டவர், "எங்கடா பாப்பா போகனும்?" என்று கேட்க,
"பிள்ளையார் கோயில் போயி... மாமாக்கு பரிச்சைக்கு வேண்டிட்டு வருவோம்" என்றாள் கிள்ளை மொழியில். இப்போதெல்லாம் மற்றவர்கள் முன்‌ தீசனை காட்டு பூனை என்று சொல்ல மாட்டாள் அவர்கள் அட்வைசை கேட்க பிடிக்காமல்.
மகள் பேச்சில் மகிழ்ந்த சண்முகம், "ஏத்தா... தனம்! எப்பவும் எம் புள்ள உன் தம்பி கூட சண்டைக்கு போவா... உன் தம்பி குணத்து பக்கத்துல நிக்க கூட ஆக மாட்டானு... எம் புள்ளய வையுவியே... இப்ப பாரு! எம் புள்ள உன் தம்பிக்காக வேண்டிக்க போகுது" என்று பெருமை பொங்க கூறியவர்,
"வாடா... தங்கம். அப்பா கூட்டிட்டு போறேன்" என்று வைதீகாவை கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.
தன் பிள்ளை, தன் மச்சினன் தேர்வை நன்றாக எழுத, இந்த வயதிலேயே வேண்டி கொள்ள போவதை நினைத்து, ஏக பெருமை அவருக்கு.
அப்பா, மகள் இருவரும் கோவிலுக்கு சென்றதும், "அப்பா... நீ இங்கயே இரு. நான் போய் சாமிட்ட வேண்டிட்டு வரேன்‌. சரியா..." என்று கூறி நேக்காக சண்முகத்தை கோவில் வாசலிலேயே கழட்டி விட்டாள் அவள் அருமை மகள்.
"ஏன்... பாப்பா, அப்போ! அப்பா வர வேண்டாமா?" என்று சண்முகம் கேட்க,
"ஆமா... நான் சாமிட்ட சத்தமா வேண்டிப்பேன். வேண்டுதல் மத்தவங்களுக்கு தெரிஞ்சா பலிக்காது. அதனால, நீ இங்க இரு" என்று விட்டு வைதீகா மட்டும் உள்ளே சென்றாள்.
கோவில் உள்ளே சென்றதும் பிள்ளையார் முன்னால் சென்று நின்றவள், முதலிலேயே மூன்று தோப்புக்கரணம் போட்டு பிள்ளையாரை கரைக்ட் செய்துவிட்டு,
"பிள்ளையார் சாமி, நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். அந்த காட்டுபூனை பெரிய பரிச்சை எழுத போறானாம்! நீதான் அவனை பெயில் பண்ணி விடனும். அவன் பாஸ் ஆகிட்டா! தனம் என்னையும் படிக்க சொல்லுவா, அந்த காட்டு பூனையும் என்னை கடுப்பேத்துவான். நான் பாவம், அதனால நீ என்ன பண்ணு! அவனை பெயில் பண்ணி விட்டுடு. நான் உனக்கு பிடிச்ச கொழுக்கட்டை என் கையால செஞ்சி தரேன். சரியா?" என்று டீல் பேசினாள்.
அதுவரை அவள் வேண்டுதலை, 'சின்ன பெண் ஆசைப்பட்டு கேக்கிறாள், எப்படி அவள் மாமனை பெயில் ஆக்குவது!' என்று யோசித்த பிள்ளையார், வைதீகாவின், 'என் கையால் கொழுக்கட்டை செய்து தருகிறேன்' என்ற வார்த்தையில் தன் யோசனையை கைவிட்டு விட்டு, "விடு ஜூட்..." என்று அவரின் எலி வாகனத்தில் ஏறி ஊரை விட்டே பறந்து விட்டார்.
****

"காட்டு பூனை என்னை பாடா படுத்தவே கூட்டிட்டி வந்துருக்கான். நான் கேட்டேனா என்னை காலேஜ் சேர்த்து விட சொல்லி. எல்லாம் இந்த அப்பாவை சொல்லனும். இவன் கேட்டதும் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி, ஆட்டை பலி கொடுக்க அனுப்புன மாதிரி என்னை அனுப்பி விட்டுட்டு அது ஜாலியா இருக்குது" என்று வஞ்சனை இல்லாமல் அனைவரையும் திட்டு விட்டு, கடுப்புடனே குளித்து கிளம்பி காலேஜ் பேக்குடன் வெளியே வந்தாள்.
தீசனும் வேலைக்கு கிளம்பி காலை உணவுக்காக சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து இருக்க, அவன் அருகில் வந்து அமர்ந்த வைதீகா, "பேச்சி சாப்பிட என்ன செஞ்சிருக்க?" என்று கிச்சன் நோக்கி குரல் கொடுத்தாள்.
"வைதீ, பெரியவங்களை மரியாதையா பேச சொல்லி உனக்கு சொல்லி இருக்கேன். அது என்ன பழக்கம்?" என்று அருகில் இருந்த தீசன் அதட்ட,
"உனக்கு பிடிச்ச புட்டும், பழமும் இருக்கு. எடுத்து வச்சி சாப்பிடு வைதீ. நான் உனக்கு மதிய சாப்பாடு எடுத்து வைக்குறேன்" என்று பேச்சியும் உள்ளிருந்தே சத்தம் கொடுக்க, தீசன் சொன்னதைக் கண்டு கொள்ளாமல் பேச்சி சொன்னதை மட்டும் சிரந்தையாக கேட்ட வைதீகா சாப்பாடு எடுத்து வைத்து சாப்பிட்டாள்.
அதில் அவளை முறைத்த தீசனும், அதன் பிறகு எதுவும் சொல்லவில்லை. இருவரும் சாப்பிட்டு விட்டு பேச்சி, வீராவிடம் கூறிவிட்டு வைதீகாவின் கல்லூரிக்கு வந்தனர்.
காரில் வரும்போது படபடக்க தொடங்கிய வைதீகாவின் மனம் காலேஜ் வந்தும் பயம் மையம் கொண்டது. ஆனால் அதை வெளியே காட்டாமல் மறைத்துக் கொண்டாள்.
வைதீகாவை காலேஜில் விட்டதும் அவன் ஆஃபிஸ் செல்ல வேண்டும் என்பதால், காரை வெளியே விட்டு விட்டு வைதீகாவை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தான்.
காலேஜ் வாசலில் நின்று, ஐந்து மாடி கட்டிடமாக சில ஏக்கர்களை விழுங்கி கம்பீரமாக நின்ற கல்லூரியை வியந்து பார்த்த வைதீகாவிற்கு அடுத்த நிமிடம் அவள் இயல்பு குணம் தலை தூக்க, கையை தலைக்கு மேல் தூக்கி, "கடவுளே! என் தலைவி தன்மான சிங்கம்! தானை தலைவி! யாருக்கும் அஞ்சாத என் தலைவி கோவை சரளா வீரத்தை எனக்கும், என் தலைவி கிட்ட அடி வாங்க தைரியமும், தன்னம்பிக்கையும், பணிவும் உள்ள, என் சின்ன குரு வடிவேலு ஐயா பணிவும் உள்ள ஒரு வாத்தியாரையும் குடுத்துட்டனு வை, அவரை அடிச்சி இரண்டே நாள்ல இந்த காலேஜை விட்டு விடுதலை ஆகி ஊருக்கு வந்ததுருவேன். அப்படி வந்து மஞ்சோலை மண்ணுல காலை வச்சதும் உனக்கு பொங்கல் வைக்குறேன்" என்று வேண்டி கொள்ள, அவளை தாண்டி சென்றவர்கள், "பைதியாமா நீ!" என்று பார்த்து சென்றனர்.
அதில் அவளை கடுகடுவென்று பார்த்த தீசன், "என்னடி பண்ற‌!" என்று அடி குரலில் சீற,
"வீட்டுல இருந்து வரும்போது சாமி கும்பிட மறந்துட்டேன் காட்டுபூனை. அதான் சாமி கும்பிட்டேன். சரி வா..." என்று தீசனுடன் கல்லூரியினுள் செல்ல, "எல்லாரும் காலேஜ் நல்லபடியா கன்டின்யூ பண்ணனும்னு வேண்டுவாங்க. நீ மட்டும் தான் இரண்டே நாள்ல வீட்டுக்கு போனும்னு வேண்டுற. கொடுமை" என்று தீனரீசன் பகிரங்கமாக தலையில் அடித்துக் கொண்டான்.

***

இரவின் கரு நிற மேகங்கள் மெதுவாக கலைய தொடங்கிய அதிகாலை நேரம். மணி மூன்றரை ஆகி இருக்க தீசரிசனின் போனில் அலாரம் அடிக்க தொடங்கியது. அதன் முதல் ரிங்கிலேயே எழுந்து அதை அணைத்து வைத்த தீசன், எழுந்து வைதீகா அறைக்குச் சென்றான்.
வைதீகா வெக்கை தாங்க முடியாமல் போர்வையை எல்லாம் தூக்கி போட்டு விட்டு இரவு உடையுடன் தரையில் படுத்து நல்ல தூக்கத்தில் இருந்தாள்.
அவளை பார்த்து விட்டு தீசனின் கண்கள் அவள் அருகில் இருந்த அலாரத்தை பார்க்க, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
"இந்த வேலை எல்லாம் சரியா பண்ணுவியே" என்ற முணுமுணுப்புடன் இரண்டு நிமிட இடைவெளி விட்டு அதை செட் செய்த தீசன், கை கட்டி கொண்டு அருகிலேயே நின்று கொண்டான்.
அவன் செட் செய்த நேரத்திற்கு அதுவும் தவறாமல் கத்த, அதன் சத்தத்தில் அசைத்த வைதீகா, "இந்த காட்டு பூனை மாதிரியே இதுவும் காலையிலேயே கத்துது சை" என்று புலம்பலுடன் எழுந்தவள் அதனை அணைத்து விட்டு மீண்டும் படுக்க போக,
"வைதீ.." என்றான் தீசன் அதட்டலாக.
அப்போது தான் அவனை பார்த்த வைதீகா, "நேத்தே பாடம் எல்லாம் படிச்சி முடிச்சிட்டேன் மாமா. இப்போ தூங்குனா தான் பரிட்சை எழுத முடியும். இல்லைனா அங்க போய் தூக்கம் வரும் ப்ளீஸ்... நான் தூங்குறேனே..." என்று கெஞ்ச,
"ஒரு மணி நேரம் ரிவிஷன் பண்ணிட்டு அப்பறம் படு. இப்போ எழுந்து பிரஷ் பண்ணிட்டு வா.." என்ற தீசன் அவளை இழுத்துச் சென்று வாஷ்ரூம் அருகில் விட,
"கொடுமைகாரன். நான் உன்னை எல்லாம் கல்யாணம் பண்ண மாட்டேன் போ..." என்ற சிணுங்களுடன் வைதீகா செல்ல, இதழுக்குள் அடக்கப்பட்ட சிரிப்புடன் தீசனும் சென்று ஃப்ரெஷ் செய்து, அவளுக்கு டீ போட்டு எடுத்து வந்தான்.
***
‘கோளாறு... இதிலெல்லாம் ரொம்ப தெளிவு' முணுமுணுத்தவன், "மாமன் பசியோட வருவான்னு ஆசையா சமையல் எல்லாம் செய்யுற போல!” என கேட்ட தீனரீசன் கிச்சன் மேடையில் சென்று அமர,
"மாமன் கொழுப்பேடுத்து போனா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்! நான் எனக்கு பசிக்குதேன்னு சமைக்குறேன். உனக்கு வேணும்னா நைட் செஞ்ச சாப்பாடு இருக்கு போட்டு சாப்பிடு" என்ற வைதீகா அடுப்பை ஆஃப் செய்தாள்.
"நீ நைட் சாப்பிட்ட தானே! அப்பறம் என்ன இப்போ மேகி?" என தீனரீசன் கேட்க, "சாப்பிட்டேன் ஆனாலும் வீட்டுல சண்டை போட்டது பசிக்குது" என்றவள் மேகியை தட்டிற்கு மாற்றி டைனிங் டேபிளில் சென்று அமர, தீசனும் அவளுடன் சென்று அமர்ந்தவன், "அழுதியா?" என்றான் கலங்கி சிவந்திருந்த அவள் கண்களைப் பார்த்து.
ஒரு நிமிடம் அமைதி காத்த வைதீகா, "ம்... எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன் இல்ல அதான்.." என்று சொல்ல,
"எல்லாம் நீயா ஏற்படுத்திகிட்டது தானே! அப்பறம் ஏன் வருந்தம்!" என்றான் தீனரீசன்.
அதில் கோபமாக ஏதோ சொல்ல வந்த வைதீகா ஒரு நொடியில் தன்னை அடக்கி கொண்டவள், அவனை முறைத்துவிட்டு திரும்பி கொண்டாள்.
அதை தீனரீசனும் கவனித்தான். ஆனால் அதை பற்றி கேட்காமல், "கன்கிராட்ஸ்..." என அவளுக்கு கை கொடுக்க, அவனை புரியாமல் பார்த்த வைதீகா, "ஏன்..?" என்று கேட்க,
"இனிமேல் உனக்கு இந்த கஷ்டமே வேண்டாம். உனக்கு பிடிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்கோ" என்றான் அந்த பிடித்தத்தில் அழுத்தம் கொடுத்து. அதில் தீசனை திகைத்து பார்த்த வைதீகாவிற்கு கண்களில் கண்ணீர் இறங்கி விட, தலை குனிந்து கொண்டவள் தீனரீசன் கையுடன் தன் கையை இணைத்துக் கொண்டாள்.
அவள் கைப்பற்றி குலுக்கி விடுவித்த தீசன், "அடுத்த ஒரு மாசத்துல கல்யாணம் இல்லையா?" என்றான்.
விலுக்கென்று நிமிர்ந்த வைதீகா, "என்ன ஒரு மாசத்துலயா!" என்றாள் பதட்டமாக.
அவள் பதட்டத்தை ரசித்த தீனரீசன், "ஆமா பையனுக்கு தான் உன்னை பிடிச்சிருக்கே! ஜாதகத்துல வேற மூனு மாசம் தான் டைம் குடுத்திருக்காங்க. அப்பறம் ஏன் லேட் பண்ணிட்டு சீக்கிரம் பண்ண வேண்டியது தானே!" என்றான் எந்த பாதிப்பும் இல்லாதவனாக.
அதில் பதறிய வைதீகா என்ன பேசுகிறோம் என்று உணறாமலேயே, "ஜாதகத்தை எல்லாம் நம்ப வேண்டாம். அதெல்லாம் பொய் மெதுவாகவே பண்ணிக்கலாம்" என்றாள் பதட்டம் தணியாதவளாக.
"அப்பறம் நீ இப்படி பசிக்குற அளவுக்கு என்னை பற்றி பாயின்ட் பாயின்டா பேசுனது எல்லாம் வேஸ்டா போய்டுமே..." என்று தீசன் கூற, வைதீகாவிடம் பதில் இல்லை.
செய்து வைத்த மேகி தொண்டையில் சிக்க அமர்ந்து இருந்தவளை கனிவுடன் பார்த்த தீனரீசன், "சாப்பிடு பசிக்குது என்று தானே செஞ்ச!" என்றான்.
"ஆமா..." என்று தலை அசைத்து வேகமாக சாப்பிட்டு எழுந்த வைதீகா, "குட் ஃநைட்" என தீனரீசன் முகம் பார்க்காமல் சொல்லி செல்ல, அவள் கை பிடித்து தடுத்த தீனரீசன், அவள் கன்னம் தாங்கி, "இப்படி முகம் வீங்க அழற அளவுக்கு எதுவும் நடக்கலை. எதையும் நினைச்சி குழம்பிக்காம போய் படு" என அவள் கண்ணீர் துடைத்து விட்டவன், வைதீகா அவள் அறைக்குச் சென்ற பிறகே அவன் அறைக்குச் சென்றான்.

இந்தியா கதை லிங் 👇👇


வெளிநாட்டு லிங் 👇👇


அன்புடன்

சுபா ❤
 
Top