anitha1984
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi anitha sis...my comments on your novel :
1) ரெண்டு நாளா கேப் விடாம படிச்சு என்னோட கண்ணு வலிச்சு போச்சு நீங்க தான் காரணம்(((ப்ரேக் எடுத்து படிக்கலாம் அப்படினா நாவல் கேரக்டர்கள் எல்லாம் என்னோட மண்டைகுள்ள போய் இருந்துகிட்டாங்க கனவுல கூட விடலை )))
2. அம்மாடியோவ் எவளோ பெரிய கதை. . எப்படி சிஸ் இவளோ நெறைய யோசிச்சிங்க....
3.என்னடா இவளோ கிளை கதைகள் வருதேனு இருந்தேன் ஆனா ஒவ்வோர் கேரக்டர் க்கும் அவளோ தெளிவா ரோல் தந்துற்கீங்க....
4.காதல் தவிர்த்து அனைவரும எடுதது இருக்கும் சமூக பொறுப்பு அவளோ அருமை ஸிஸ்... எவளோ நெறய தகவல்கள் தந்துற்கீங்க... கிரேட் ஓர்க் ஸிஸ்
5.விஜய் மட்டும் தான் ஹீரோ நு நான் ஃபர்ஸ்ட எபிலயே ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டேன்....நடுல அவன் தான் ஹீரோ வா நு உறுதி படுத்திகிட்டு தான் கதையே படிச்சேன்...இருந்தும் கடைசி அத்தியாயம் வரை விஜய் தான் ஹீரோ வா நு யோசிக்க வச்சுற்கீங்க..அப்படியே பரபரப்பா கதையை கொண்டு போய்ருக்கீங்க..
6.the way u potrayed feminism was awesome....ex : sivahami Patti அவங்க கம்பீரம் அவளோ கெத்து ..எது நாலும் நாம் வாழ்ந்து காட்டுறதுல தான் இருக்கு நு புரிந்தது...
7. லவ் என்ற வார்த்தையை எப்படி எப்படியோ எடுத்து போற வகையில் நீங்க அதோட purity காட்டிர்கீங்க..
8. உங்களோட ஒவ்வோர் சமூக சிந்தனை தகவல்கள் எல்லாம் மிக அருமை
9.நாவல் படிச்ச ஃபீல் விட படம் பார்த்த எபெக்ட் தான் இருக்கு உங்க நாவல் படிசசப்ப..
10.எப்படி சிஸ் இவளோ பெரிய கதை டைப் பண்ணீங்க..கை வலிக்கலயா???
Great work sis keep rocking
ஹாய் டியர் ஸ்ரீஷா
ரொம்ப சாரி டியர்.கொஞ்சம் மகளின் ஸ்கூல் வேலையில் பிஸியா இருந்துட்டேன் .ரெண்டு வாரமாய் சைட் பக்கம் வரலை .அதான் உங்க கமெண்ட்க்கு ரிப்ளை உடனே கொடுக்க முடியலை .மன்னிச்சு டியர் .
ரொம்ப தேங்க்ஸ் .இந்த கதை எட்டு மாசம் தொடர்ந்து எழுதியது .மொத்தம் 980 பக்கம் .உங்களை மாதிரி நட்பூக்களின் ஆதரவூ தான் தொய்வு இல்லாமல் எழுத உதவியது என்றால் மிகையல்ல .முடிச்சு சில மாதங்கள் ஆனா பிறகும் இது போன்ற பாராட்டுக்கள் பார்க்கும் போது கண்கள் கலங்குவதை தடுக்க முடியவில்லை .
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கண்ணா .ரெண்டு கதைகள்-"என்ன தவம் செய்தேன் ","காஞ்சி தலைவன் " முடித்து விட்டு மூன்றாவது கதை "ஊரு விட்டு ஊரு வந்து "ஆரம்பிக்க போகிறேன் என்பது இந்த ஊக்கத்தின் விளைவே .
இங்கு சொல்லப்பட்ட கதை சில உண்மை தகவல்களின் அடிப்படையாக கொண்டது .அதனால் சொல்வது எனக்கு சுலபமாய் இருந்தது .உங்களுக்கு பிடித்து இருந்ததில் அதுவும் உங்களின் பொன்னான ரெண்டு நாட்களை எனக்காக செலவிட்டதை கண்டு நன்றி என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே என்னிடம் இருக்கிறது .படித்து விட்டு போகாமல் என்னையும் மதித்து கமெண்ட் போட்டதற்கு நன்றி தோழி .
keep இன் டச்
டேக் கேர் டியர்
யுவர் ஹனி